Blog

  • என்னை அழ வைத்த குறும்படம்

     

    கவிநயா

    நம் தாய் மொழி பற்றி அடிமனசில் கனன்று கொண்டிருந்த கவலையை சமீபத்தில் பார்த்த ஒரு குறும்படம் நன்றாக விசிறி விட்டு விட்டது. எதிர்காலம் கண் முன்னே காட்சிகளாக விரிய விரிய, அதில் உள்ள உண்மையும் நிதர்சனமும் நெஞ்சில் அறைகிறது. நமக்குத் தேவையான விழிப்புணர்வை இந்தப் படம் சரியான சமயத்தில் தந்திருப்பதாகத் தோன்றுகிறது.

    நம் தமிழ் மொழியின் சிறப்பு எத்தகையது? காஞ்சி மஹா சுவாமிகளின் திருவாய் மொழி மூலமாகக் கேட்போம்…

    காஞ்சிப் பெரியவர் ஒரு முறை கி.வா.ஜ. விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார். மேலும், “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம். அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!”, என்றார்.

    கி.வா.ஜ. அவர்கள் அடக்கமாக, “பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்”, என்றார்.

    “எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும் அழகு, இனிமை, இவற்றைக் குறிப்பதாகவே இருக்கும். மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ், இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை.  ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடம் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா?” என்றார்.

    உடனே கி.வா.ஜ. அவர்கள், “இதை விடப் பொருத்தமாகச் சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்”, என்றாராம். (எஸ். கணேச சர்மா அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து தட்டச்சிய வரகூரான் நாராயணன் அவர்களுக்கு நன்றி)

    பலப் பல மொழிகளிலும் வல்லமை பெற்றிருந்த பாரதி, “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றுதான் சொன்னானேயன்றி, “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்று சொல்லவே இல்லை! (அதே தவறான புரிதலில்தான் நானும் இருந்தேன் என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்கிறேன்). நம் பாரதி, நம் தமிழ் மொழியின் பெருமைகளைத்தான் விண்டு விண்டு வைக்கிறான்! மேலும், யாரோ ஒருவர் தமிழ் இனிச் சாகும் என்று சொன்னதைப் பொறுக்க முடியாமல், அந்த நிலை வராதிருக்க என்ன செய்ய வேண்டுமென்றுதான் இங்கே சொல்கிறான், பாரதி. முழுக் கவிதையும் கீழே இருக்கிறது, கவனமாகப் படித்தால் உங்களுக்கும் புரியும். (நன்றி: http://kiruthikan.blogspot.com/2009/06/blog-post_5671.html)

    ஆதிசிவன் பெற்று விட்டான் – என்னை
    ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
    வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். (1)
     
    மூன்று குலத் தமிழ் மன்னர் – என்னை
    மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்;
    ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
    ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். (2)
     
    கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்ல
    காற்றையும் வான் வெளியையும் சேர்த்துத்
    தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் – பல
    தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். (3)
     
    சாத்திரங் கள்பல தந்தார் – இந்தத்
    தரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
    நேத்திரங் கெட்டவன் காலன் – தன்முன்
    நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். (4)
     
    நன்றென்றுந் தீதென்றும் பாரான் – முன்
    நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
    சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் – வையச்
    சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். (5)

     
    கன்னிப் பருவத்தில் அந்நாள் – என்றன்  
    காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்  
    என்னென்ன வோபெயருண்டு – பின்னர்  
    யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர். (6)  
     
    தந்தை அருள்வலி யாலும் – முன்பு  
    சான்ற புலவர் தவவலி யாலும்  
    இந்தக் கணமட்டும் காலன் – என்னை  
    ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான் (7)  
     
    இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி  
    ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!  
    கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு  
    கூறத் தகாதவன் கூறினன் கண்டீர் (8)  
     
    ‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச  
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;  
    மெத்த வளருது மேற்கே – அந்த  
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை (9)  
     
    சொல்லவும் கூடுவதில்லை – அவை  
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை  
    மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த  
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்’ (10)
     
    என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!  
    இந்த வசையெனக் கெய்திடலாமோ?  
    சென்றிடு வீர் எட்டுத் திக்கும் – கலைச்
    செல்வங்கள் யாவுங்கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! (11)  
     
    தந்தை அருள் வலியாலும் – இன்று  
    சார்ந்த புலவர் தவ வலியாலும்  
    இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்  
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். (12)

    நீங்களும் மணி ராம் என்பவர் இயக்கிய “தமிழ் இனி…” என்ற இந்தப் படத்தைப் பாருங்களேன்… அவரும் கடைசியாக பாரதியின் கவிதையைத் தவறாக mislead பண்ணும் வகையில்தான் சேர்த்திருக்கிறார் என்றாலும், சரியான நேரத்தில் விழிப்புணர்வு தரும் இந்தக் குறும்படத்தைத் தந்தமைக்கு அவருக்கு நன்றி.

    இனியேனும் நாமும் தமிழில் பேசி, நம் சந்ததியினரையும் தமிழில் பேச ஊக்குவிப்போமா? பாரதி சொன்னவற்றை மனதில் கொள்வோமா?

     
    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். என் அன்னைத் தமிழோடு!

     

    அன்புடன்

    கவிநயா

     

    பி.கு: இந்தப் பதிவில் படத்திற்கான சுட்டியையும் இணைத்திருந்தேன்; ஆனால் அது you tube-ல் இருந்து நீக்கப் பட்டு விட்டதாகத் தெரிகிறது. மன்னிக்கவும்.

     

     

    Share
  • ரத்தப் பிச்சை

     

    முகில் தினகரன்

    அந்த ஆஸ்பத்திரி வராண்டாவில் திரும்பிய திசையெல்லாம் கரை வேட்டி மனிதர்கள் குவிந்திருந்தனர். கல்லூரியில் படிக்கும் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகன் பைக் விபத்தில் ஏகமாய் அடிபட்டு எமர்ஜென்ஸியில் உயிருக்குப் போராடியபடி கிடக்க அவனது அரிய வகை ரத்தம் தேடி கட்சித் தொண்டர்கள் நாலாத்திசையிலும் அலையோ அலையென்று அலைந்து கொண்டிருந்தார்.

    ‘த பாருங்கப்பா…எம்.எல்.ஏ.வர்றதுக்கு எப்படியும் மதியம் ஆய்டும்…அதுக்குள்ளார எப்படியாவது ரத்தம் ஏற்பாடு பண்ணியாகணும்!” சற்று சீனியரான ஒரு கறை வேட்டி சொல்ல

    ‘ப்ச்…பசங்க காத்தால இருந்தே அதுக்காகத்தான் அலைஞ்சிட்டிருக்காங்க…கெடைக்கவே மாட்டேங்குது!”

    திடீரென்று கூட்டத்தில் சலசலப்பு.

    ‘என்னடாது…தலைவர் இப்பவே வந்துட்டாரா?” கேட்டபடி சீனியர் கரை வேட்டி திரும்ப

    எங்கிருந்தோ ஓடி வந்த ஒருவன் ‘அண்ணே….அதே குரூப் ரத்தத்தோட ஒரு ஆள் வந்திருக்கான்..தம்பிக்கு ரத்தம் தரச் சம்மதம்னு சொல்லுறான்!…ஆனா….”

    ‘என்னடா ஆனா?…பணம் கிணம் நெறைய எதிர் பார்க்கறானா?”

    ‘அதில்லைண்ணே….அவனைப் பார்த்தா ஆள் பரதேசி மாதிரி இருக்கான்…அவன் போய் நம்ம தலைவர் பையனுக்கு…..ஜீரணிக்க முடியலைண்ணே!”

    அப்போது அங்கு வந்த மூத்த டாக்டர் ‘இங்க பாருங்கப்பா…வீ ஆர் டாக்டர்ஸ்…எங்களுக்கு உயிரைக் காப்பாத்தணும்கற கடமையிருக்கு….அதனால…நீங்க ‘யெஸ்…ஆர்  நோ” சொல்லுற வரைக்கெல்லாம் நாங்க காத்திட்டிருக்க வேண்டிய அவசியமில்லை…பேஷண்ட் கன்டிஷன் ரொம்ப சீரியஸாகிட்டிருக்கு!…ஸோ…நாங்க வந்திருக்கற அந்த நபரைச் செக் பண்ணப் போறோம்….ரத்தம் ஓ.கே.ன்னா…இம்மீடியட்டா ஆபரேஷனை ஸ்டார்ட் பண்ணப் போறோம்!”

     

    கண்டிப்புடன் சொல்லி விட்டு நகர்ந்தார் டாக்டர்.  கரை வேட்டிகள் குழப்பத்தில் செய்வதறியாது நின்றன.

     

    ‘ரத்தம் பொருந்திடுச்சாம்….ஆபரேஷன் ஆரம்பிச்சிட்டாங்க!”

     

    ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ‘ஆபரேஷன் சக்ஸஸ்…பையன் பொழைச்சிட்டான்” என்கிற தகவல் அங்கிருந்தோரையெல்லாம் மகிழ்ச்சி வௌ;ளத்தில் ஆழ்த்திய போது எம்.எல்.ஏ.வந்து சேர்ந்தார்.

    வந்தவுடன் பிரத்யேக அனுமதி பெற்று தான் மட்டும் சென்று மகனைப் பார்த்து விட்டுத் திரும்பினார்.  நடந்தவற்றை டாக்டர் வாயிலாகவும் கட்சித் தொண்டர்கள் மூலமாகவும் தெரிந்து கொண்ட எம்.எல்.ஏ. ‘எங்கே அந்த மனிதர்?…நான் அவரை உடனே பார்க்க வேண்டும்!…என் மகனின் உயிரைக் காப்பாற்றிய அந்த மாமனிதரைப் பார்த்து ஏதாவது செய்யணும்!…என் குலக் கொழுந்தைக் காலனிடமிருந்து மீட்ட அந்தக் கோமகனுக்கு கோவில் கட்டா விட்டாலும்…கோமேதகத்தைக் கொட்டிக் கொடுக்கா விட்டாலும் குன்றி மணியளவு நன்றி காட்ட ஏதாவது செய்தாகணும்!” அரசியல்வாதி என்பதைத் தன் பேச்சில் அவர் நிரூபித்தார்.

    ‘அய்யா…அதோ அந்த மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்திட்டிருக்கார் பாருங்க?…அவர்தான்!’ சீனியர் கரை வேட்டி தன் சின்ஸியாரிட்டியைக் காட்டியது.

    ‘அடப்பாவிகளா…உதிரம் தந்து உதவிய உத்தமரை உதாசீனப்படுத்தி உச்சி வெயிலில் உட்கார வைத்து விட்டீர்களே இது நியாயமா?” கேட்டபடியே அந்த மரத்தடிக்கு விரைந்து அந்த மனிதரை நெருங்கி அவர் முகத்தைப் பார்த்த எம்.எல்.ஏ.வின் முகம் சட்டென்று மாறியது.

     

    ‘நீ…நீ…உன்னைய இதுக்கு முன்னாடி எங்கியோ பார்த்திருக்கேனே!”

     

    ‘என்ன எம்.எல்.ஏ.அதுக்குள்ளார மறந்திட்டியா?…சாலையோரமா நடந்து பள்ளிக்கூடம் போய்க்கிட்டிருந்த என் பத்து வயது மகனை வேகமா பைக்குல வந்து உன் மகன் இடிச்சுக் கொன்னப்ப….என்கிட்ட ‘கேசெல்லாம் வேண்டாம்…ஆயிரம் தர்றேன்…லட்சம் தர்றேன்”னு பேரம் பேசினியே?…மறந்திட்டியா?”

     

    தன் கட்சித் தொண்டர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த பொது மக்கள் எதிரில் அந்த மனிதர் அப்படிப் பேசியதில் கோபமுற்ற எம்.எல்.ஏ. ‘என்னப்பா வம்பு பண்ணணும்னு வந்திருக்கியா?”

     

    ‘ம்ஹூம்….பிச்சை போட வந்தேன்…போட்டுட்டேன்…கௌம்பறேன்”

     

    அவன் பேச்சு புரியாத எம்.எல்.ஏ. அவனை ஊடுருவிப் பார;க்க,

     

    ‘என் மகனைக் கொன்ன பயலுக்கு ரத்தப் பிச்சை போட வந்தேன்…போட்டுட்டேன்”

     

    கரை வேட்டிகள் கோரஸாய் ‘டா….ய்!” எனக் கத்த

    ‘ச்சூ….கத்தாதீங்கய்யா….இனிமே உங்க தலைவரு பையன் வாழுற வாழ்க்கையே நான் போட்ட பிச்சைதான்…இது போதும்…காலம் பூராவும் உங்க எம்.எல்.ஏ. நொந்து சாக…”

    சொல்லிவிட்டு நகர்ந்தவனை அவமானமாய்ப் பார்த்தார் எம்.எல்.ஏ.

    (முற்றும்)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

     

    திவாகர்

    உலகில் மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்று எத்தனையோ பேர் எத்தனையோ முறை சொல்லிவிட்டுச் சென்றாலும் சமூகம் மட்டும் அந்த வார்த்தைகளை ஏற்க மறுப்பது ஏன் என்று எனக்கு எப்போதும் புரியவில்லை. ஒவ்வொரு கால கட்டத்திலும் எத்தனையோ சம்பிரதாயங்கள் தோன்றி நிலைத்து மறைந்து போகும் வாழ்க்கையில் நாம் இன்னமும் சில வேண்டாத பழக்கங்களை, சம்பிராதயம் எனும் பெயரில் கைவிடாமல் கையோடு வைத்திருப்பதும், அதனால் ஒரு கொடுமையான மனத் திருப்தியடைவதும் மிகவும் விநோதமான செயலாகத்தான் இருக்கிறது.. அவற்றில் ஒன்றுதான் இந்த கைம்பெண்ணுக்கு அவள் கணவன் மரணத்தோடு இழைக்கப்படும் அநீதி.

    கணவன் இறந்த பத்தாம் நாள் கைவளை ஒடித்தல், தாலியறுப்பது, குங்குமப் பொட்டழிப்பது போன்ற தீய பழக்கங்கள் நகர வாழ்க்கையில் தற்சமய சூழ்நிலையில் காண்பது அரிது என்றாலும் குக்கிராமங்களிலும், சிறிய, பெரிய ஊர்களிலும் இந்த வழக்கம் இன்னமும் இருப்பதைக் கேள்விப்படும்போதெலாம் மனம் அந்த மரணித்தவனுக்காக அனுதாபப்படுவதை விட அவன் மனைவிக்காக பரிதவிக்கிறது. கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் இப்படி நிர்ப்பந்திப்பதில் மூத்த பெண்ணினத்தோர்தான் அதிகம் என்ற உண்மை மேலும் நம்மைச் சுடுகிறது. இப்படிப்பட்ட வழக்கங்கள் நாடு முழுவதும் சட்டம் போட்டு தடை செய்யப்படவேண்டும். மனிதன் மனம் மாறினால்தான் உண்டு என்று சொல்வதை விட சட்டம் என்பது செயல்படுத்தும்போது இவை கண்டிக்கப்படுவதோடு தண்டிக்கப்படுபவை என்று மகாஜனங்களுக்குப் புரிந்தால் நிச்சயம் இதற்காகப் பயப்படுவார்கள் என்ற உண்மையும் புரியும்.

    பெண்கள் இடுகாடு வரை சென்று தகனமிடும் செயலை சென்னையில் (பெசண்ட் நகர்) என் தந்தையார் இறந்தபோது கண்டதுண்டு. சுடுகாட்டில் யாரும் இதை ஆச்சரியமாகப் பார்க்காமல் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்கள். ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் பெண் வாரிசும் இதைச் செய்யலாம் என்ற மனப்பாங்கு நகரமக்களிடையே வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது. நகர வாழ்க்கையில் சில நல்லவைகளும் இருக்கின்றன, அதே சமயம் இது நகரத்துப் போக்கு என்று புறந்தள்ளாமல் எல்லா இடங்களிலும் மக்கள் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களுக்காக காலத்தின் தேவைக்கேற்றவாறு நாம் மாறாவிட்டால் எப்போது மாறப்போகிறோம்..

    இந்த  சமூக வேறுபாட்டை முன்னிறுத்தி நல்லதொரு கவிதையை வல்லமை குழுவில் பகிர்ந்துள்ளார் கவிஞர் வித்யாசாகர்.

    ஒவ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள்
    எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய்
    வந்துவிழுந்தது அவரின் மரணம்..

    மரணம்; பெரிய மரணம்
    இல்லாதுப் போவது மரணமா?
    பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர்
    அவர்களென்ன பிணமா?

    பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள்
    அவரின் மரணத்திற்குப் பின் அவளின்
    பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும்
    மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் ?

    உடன்கட்டையை மட்டும் உதறிவிட்டு
    இன்னும் உயிரோடு கொல்லும் விதவைக் கோலத்தை
    பூணும் இரவொன்று உண்டு; அது ஒரு கொடூர இரவு

    கணவன் போனதற்கு நிகராக
    பூவும் பொட்டும் போகும் கணம்
    இன்னொரு மரணமென்று எண்ணி
    அவளுக்காக நானுமழுதேன்;

    என் கண்ணீரும்
    அவளின் கண்ணீரும் இன்றில்லாவிட்டாலென்ன
    நாளையேனும் இச்சமூகத்தைச் சுடும்;

    சுடட்டும் சுடட்டும்
    சுட்டப்பின் தாலியறுப்பதை நிறுத்திக்கொள்ளட்டும் இச்சமூகம்

    அதன்பின் –
    விதவையில்லா மண்ணில் நடக்கும் அவள்
    அவளுக்கு வேண்டாமெனில் அவளாகவே அன்று
    பொட்டினைக் கலைத்துக்கொள்வாள்..
    பூவை அறுத்துக்கொள்வாள்..
    உயிரைக் கூட விட்டுமாய்ப்பாள்,

    அது; அவளது உரிமை!!

    கவிஞர் வித்யாசாகர் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு வெ. சா அவர்களின் நினைவுச் சுவட்டில் http://www.vallamai.com/paragraphs/29089/  ‘அறுபது ரூபாய் படுத்திய பாடு’ படித்ததில் நான் ரசித்த இந்த வரிகள்..

    சுற்றியிருந்த ஜன்னல்கள் எத்தனையோ அத்தனையையும்  திறந்தால் அது காட்டும் உலகம் தேடுபவர்களுக்கு மாத்திரமே காட்சி தரும் ஒன்றாக இருந்தது. அந்த ஜன்னல்கள் எதையும் திறக்காது, ஜன்னல்களையோ மூடியிருக்கும் அதன் கதவுகளையோ காணாது, தன் இருந்த அறைக்குள் தனக்குப் பழக்கமான பாளையங்கோட்டையையோ, மன்னார்குடியையோ விருத்தாசலத்தையோ உருவாக்கி அதனுள் தம் ஆயுளைக் கழித்த பெருந்தகைகள

    Share
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்: 4

     

    இன்னம்பூரான்

    1 + 1 = 3!

    இந்த தலைப்பில் நான் ஒரு வருடத்துக்கு முன்னால் துவக்கிய அறிமுகக்கட்டுரையை ஆயிரத்துக்கு மேலான வாசகர்கள் படித்திருப்பதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. அடுத்து வந்த நீரிழிவு நோயை பற்றிய கட்டுரைக்கு அந்த வரவேற்பு தென்படவில்லை. சமீபத்தில் வலி நிவாரணத்தைப் பற்றி திருமதி. தேமொழி எழுதிய கட்டுரை பல நல்ல செய்திகளை அளித்தது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ள மருத்துவ விழிப்புணர்ச்சி, சமூகத்தில் பகிர்வுகள், ஆதாரமுள்ள இணைய தளங்கள் ஆகியவை நமக்கு உதவும் என்ற அடிப்படையில், இருவரும் இணைந்து எழுதத் தொடங்கியுள்ளோம். சில இதழியல் கோட்பாட்டுக்கு உட்பட்டு, அது ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.3: சஞ்சீவினி’என்ற தலைப்பில் இங்கே http://www.vallamai.com/paragraphs/29306/

     டிசம்பர் 3, 2012 அன்று மறு பகிர்வு என்ற பகுதியில் பிரசுரம் ஆகியிருக்கிறது.படித்து பயன் பெறுக. எமக்கும் சொல்லுக. ஆர்வம் கூடும்.

    ஒத்த சமுதாய நோக்கு உடைய இருவர் இணைந்து பணி செய்தால் 1+1=3.

    உலகெங்கும் சாதிமத பேதமில்லாமல் கொண்டாடப்படும் புத்தாண்டு விழா நெருங்குகிறது. வாசகர்களுக்கு எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    (தொடரும்)
    இன்னம்பூரான்
    03 12 2012

    படத்துக்கு நன்றி: http://coe.jmu.edu/LearningToolbox/images/oswald5.gif

    Share
  • வார ராசி பலன்கள்:03.12.2012-09.12.2012.

     

     

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: பணம் கொடுக்கல்-வாங்கல் எதுவாக இருந்தாலும், வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்து வந்தால் எந்தத் தொல்லையும் இராது. பெண்கள் எந்த சூழலிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படும் வாரம்  இது. சிறிய அளவில் பண முதலீடு செய்பவர்கள் புதிய முதலீடுகளில் கவனமாய் இருப்பது அவசியம். மாணவர்கள்  உடனிருந்து தொல்லை தருபவர்களிடமிருந்து விலகி இருப்பது புத்திசாலித் தனம்.  பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு திறமைக்கும், நேர்மைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். வரை பொறுமையாய் இருப்பது நல்லது 
       
      ரிஷபம்:  தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கு,உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையே  என்ற குறை இருக்கும். வியாபார விஷயமாக வெளியூர் செல்லும் வியாபாரிகள் புதிய உணவு வகைகளை விலக்குவது நலம். பெண்கள் செலவுகளில் சிக்கனமாக இருப்பது புத்திசாலித் தனமாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நலம் சுமாராக இருக்கும். இருந்தாலும் பித்தம் போன்ற  உபாதைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம்.   பொது வாழ்வில் இருப்பவர்கள் பணியில் சிரத்தை எடுத்து செய்தால், வேண்டிய வேண்டிய பலனோடு  எதிர்பார்த்த  பாராட்டும், புகழும்  தானே வந்து  சேரும்
    மிதுனம்:   இந்த வாரம்  கலைஞர்கள்   மேற்கொள்ளும் வெளியூர் பயணம் மூலம் பெறும் பலன்கள் சொற்பமாக இருப்பதால், திறமையை முழு அளவில் பயன்படுத்தி தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வது அவசியம். வியாபாரிகள் இறங்கும் புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த அளவில் விஷயங்கள் அமையாமல்,  சிற்சில பின்னடைவுகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே திட்டங்கள் நிறைவேறும் வரை பொறுமையாகசெயல்படுவது அவசியம்.. பொதுவாக இந்த வாரம் மாணவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.     பெண்கள் பண விவகாரங்களில் விழிப்புடன் இருந்தால், அமைதியாக வேலைகளில் ஈடுபட முடியும்.

    கடகம்: முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள்   அவ்வப்போது  வழக்குகளின் போக்கை கவனித்து வருவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள்  உடன்  இருப்பவர்களோடு அனுசரித்து நடந்து கொண்டால், உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் ஓரளவு கிடைக்கும்.   லாபத்தைப்பெற வியாபாரிகளும் பணியாளர்களோடு  சேர்ந்து  உழைக்க வேண்டியது இருக்கும் . வேலையில் இருப்பவர்கள் புதிய இலாக்காவிற்கு மாறும் வாய்ப்பிருப்பதால் வேலைப்  பளு அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள எடுக்கும் முயற்சிக்குத் தக்க பலனிருக்கும்   கலைஞர்கள்   சக கலைஞர்களிடம் தங்கள் கோப தாபத்தைக் கொட்ட வேண்டாம்.

     சிம்மம்: பணியில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் கடன்தொகை கைக்கு வந்து சேர்வதோடு .  மேலதிகாரிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும்  தானே  மறையும்.  பெண்களுக்கு உறவினர்கள் மூலம்  நற்பலன்கள் கிடைக்கும்    சுய  தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது வரை இருந்த நெருக்கடிகள் விலகி நிறைவான வாழ்க்கையும், கையில் சரளமான பணப் புழக்கமும் இருக்கும்   பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு  தேவையில்லாத அலைச்சல்களும், மன சங்கடங்களும் தோன்றி மறையும். வயதானவர்கள் தங்கள்  உடல் ஆராக்கிய வகையில் கவனம் செலுத்துவது அவசியம்.

    கன்னி.  பணியில்  இருந்து கொண்டே புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு , இந்த வாரம் அனுகூலமான  தகவல் வந்து சேரும்.   பெண்கள் இல்லத்தில் அவ்வப்போது தோன்றும்  சிறிய பிரச்னைகளை, பெரிதாக வளரவிடாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் கீழ் பணி புரிபவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்  .  தாங்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைப்பதால், மாணவர்கள் புதுத் தெம்புடன் திகழ்வார்கள்.  கலைஞர்கள்  உழைப்புக்குத் தரும் முக்கியத்துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும்.

      துலாம்; : மாணவர்கள் கவனச் சிதறலுக்கு இடம் கொடுக்காமலிருப்பது நல்லது. வெளி இடங்களில் கவனமாக நடந்து கொள்வதன்  மூலம் கலைஞர்கள் அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்  பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளைத் தருவதைத் தவிர்த்தால், சஞ்சலம், வீண் சங்கடம் ஆகியவற்றிலிருந்து ஓரளவு தப்பி விடலாம்.  . சிறு தொழில் புரிபவர்கள் ஏமாற்றங்களைக் கண்டு சலிப்படையாமல், உங்கள் முழு சக்தியையும் உழைப்பில் போட்டால், வெற்றியோடு, வேண்டிய லாபமும் வந்து சேரும் . பெண்கள் குடும்ப அமைதிக்காக முயற்சி எடுத்தாலும் அவ்வப்போது சலசலப்பு தலைகாட்டும்.

     விருச்சிகம்; பெண்கள் எப்போழுதும் பொறுமை என்னும் தாரக மந்திரத்தை கடை பிடித்தால், சிறப்பான பலன்களை பெறலாம்: புதிதாய் வேலையில் சேர்ந்தவர்கள் தவறுகள் நேராதவாறு கவனமாய் செயலாற்றுங்கள்.  இந்த வாரம் கலைஞர்களுக்கு  புதிய வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும் வாய்ப்பிருப்பதால், செலவுகளில் சிக்கனமாக இருப்பது அவசியம். . வியாபாரிகள் இது வரை சந்தித்த மன உளைச்சல், நெருக்கடியான சூழ்நிலை ஆகியவை மாறி இணக்கமான சூழல் உருவாக தொழிலாளர்கள்  பக்கபலமாக இருப்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தி சாதனை படைப்பார்கள்.

    தனுசு: பொருளாதார இறக்கம் என்பது படிப்படியாக குறைந்து விடுவதால், வியாபாரிகள் விரும்பியவாறு விரிவாக்கப் பணிகளை செய்து மகிழும் வாய்ப்பு கிட்டும்.  இந்த வாரம் மாணவர்கள் அரசு அளிக்கும்  சலுகைகளை  பெற்றுக் கொள்வதில் இருந்த குழப்பமும், பிரச்னைகளும் தீர்ந்து விடும்  வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்ள கலைஞர்களுக்கு உழைப்பு கை கொடுக்கும்.   வேலையில் இருப்பவர்கள் பணிகளைத் திருத்தமாகச் செய்வதால் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இருந்த போதிலும் கர்வம் தலைக்கேறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் .  பெண்களுக்கு  மனம் மகிழும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு  மகிழும் வாய்ப்பு  வந்து சேரும்.

    மகரம்: முதியவர்களுக்கு தெய்வீக யாத்திரை செல்வதற்கான வாய்ப்பு கூடி வரும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமைய பிள்ளைகள் உதவி செய்வார்கள்.     தேவையற்ற இடமாற்றம் வேலையில் இருப்பவர்களின் அமைதியை கெடுக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் .  மற்றவரை நம்பி ஒப்படைத்த வேலைகளை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் சூழல் நிலவும். எனவே முக்கியமான பணிகளில் உங்களின் நேரடி கவனத்தை வைப்பது நல்லது. .  மாணவர்கள்  நல்லவர்கள் போல் ந்டிப்பவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம் . . வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியோடு இருந்தால், பணம் முடங்காமலிருக்கும்.

    கும்பம் இந்த வாரம்  மாணவர்களுக்கு  புதிய நட்பு, இனிமையான நிகழ்ச்சி, என்று பொழுது போகும்.  பிள்ளைகள் பெற்றோரின் குணமறிந்து இணக்கமாக நடந்து கொள்வார்கள்.   பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு  பல நேரங்களில் உழைப்பு அதிகமாகவும், அதற்கான பலன் குறைவாகவும் இருக்கும்  .  : கலைஞர்கள் எந்த சூழலிலும் அமைதிக் குறைவு, பதற்றம் ஆகியவை ஏற்பட இடம் கொடாமல் விழிப்பாய் இருப்பது அவசியம் .  வியாபாரிகள் அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்கள் ,இயல்பு வாழ்க்கையோடு மோதாமல் பார்த்துக் கொள்வது புத்திசாலித் தனம். குடும்ப விவகாரங்களில்  பெண்கள் பிறரை நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். 

     மீனம்: மாணவர்கள் வாகனங்களின்  பராமரிப்பில், கவனமாக இருந்தால் வீண் செலவை குறைத்து  விடலாம். பொது வாழ்வில் இருபவர்கள்   தேவையற்ற இடங்களில் வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல் வேண்டும் . கலைஞர்கள் தங்கள்  பொருளாதார தேவைகளை சமாளிக்க கடன்பட நேரலாம்.  உயர் பதவியில் உள்ளவர்கள் பொறுப்புடன் கடமையற்றினால், அவப்பெயருக்கு ஆளாகாமல் தப்ப  முடியும் பண விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், . வியாபாரிகளின் கடன் தொல்லையும் கணிசமாகக் குறையும்.  உடல் நலத்தை நன்றாக பராமரித்தால்,பெண்களின்  உற்சாகம் குறையாமலிருக்கும் . 

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு

     

     

                       (NASA’s Messenger Space Probe Finds Large Ice Deposits in Mercury’s Polar Regions) 


                             சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     


    பரிதியை மிக நெருங்கி அனலில் சுற்றும்
    சிறிய அகக்கோள் புதக்கோள் !
    நாசா முதலில் அனுப்பிய மாரினர்
    விண்ணுளவி
    புதன் கோளைச் சுற்றி வந்து
    ஒரு புறத்தை ஆராயும் !
    நாசாவின் இரண்டாம்
    விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர்
    புதன் கோளை
    இரு புறமும் சுற்றி
    முழுத் தகவல் அனுப்புகிறது
    இப்போது.
    பரிதி சுட்டுப் பொசுக்கும்
    கரிக்கோள் சிறிய புதக் கோள் !
    பாறைக் குழி மேடுகள்
    பற்பல நிரம்பியது !
    உட்கரு உருகித் திரண்டு
    உறைந்து போன
    ஒரு பெரும் இரும்புக் குண்டு !
    வெப்பமும் குளிரும்
    மாறி மாறிப் பாதிக்கும்
    பாறைக் கோள் !
    ஜிலேபி இடுவது போல் புதன்
    பரிதியைச் சுற்றி வரும் !
    துருவப் பகுதிகளில்
    பெரும் பனிப் பாறை இருப்பதைக்
    கண்டுபிடித் துள்ளது
    விண்ணுளவி !

    +++++++++++++

     

    Water ice Discovery in Mercury

     

    சூரிய மண்டலத்திலே பரிதியை மிக நெருங்கிச் சுற்றும் புதன் கோள் வழக்கப்படிச் சொல்லப் போனால் சொற்ப அளவில்தான் இதுவரை ஆராயப் பட்டுள்ளது.    புதன் கோள் தளத்தில் எல்லாக் கோள்களையும் விட மித மிஞ்சிய வெப்ப நிலை நிலவி வருகிறது.   துருவப் பகுதியில் உள்ள ஒற்றை ஆழக் குழியில் [Crater] அனல் அடுப்பு போல் 260 C [500 F]  உஷ்ணம் நிலை கொதிக்கும் போது, அண்டை விளிம்பு குளிர்ந்து போய், நீர் வெள்ளத்தைப் பனியாக்கிப் பல பில்லியன் ஆண்டுகளாகச் சேமித்திருக்கிறது.

    இவ்வித இயற்கையான குளிராக்கிகள் [Natural Freezers] பரிதி ஒளி படாத மங்கலான துருவக் குழிகளின் விளிம்பு நிழல் பகுதிகளில் நிலைத்துள்ளன.   இந்த நீர்ப்பனிப் பாறைகளை புதன் கோளை விடக் கருத்த ஏதோ ஒருவிதத்தில் தோன்றிய ஆர்கானிக் கவசம் ஒன்று மூடி நீர்ப்பனி உருகாமல் பாதுகாத்து வருகிறது.   புதன் தளத்தின் சில பகுதிகள் மிகவும் சூடாகி நீர்ப்பனி உண்டாக வில்லை ஆயினும், பூமியில் உள்ள ரேடார்கள் இப்பகுதிகளிலிருந்து எழும் ஒளிமிகுந்த பிரதிபலிப்புகள்  உள்ளதை முன்பே காட்டியுள்ளன.

    டேவிட் பெய்ஜ்  [University of California LA, Professional Ice Finder & Lead Author of the Science Paper] [November 29, 2012]


    “பரிதிக்கு மிக நெருங்கிய புதன் கோளை நோக்கிச் சென்ற நாசா விண்ணுளவி சிறிய பாறை அண்டத்தை அண்டிச் சுற்றும் முன்பே முக்கியத் தகவல் பலவற்றை அனுப்பி யுள்ளது.  இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் நினைத்திருந்தது போல் இப்போது இல்லை புதன் கோள்.  மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவி பெருங்குழிப் பீடங்களையும், கடந்த கால எரிமலைத் தடங்களையும் வியப்பூட்டும் காட்சிகளாய்க் காட்டியுள்ளது.”

    ஷான் சாலமன் (பிரதம ஆய்வாளர், நாசா மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிக் குறிப்பணி) (ஆகஸ்டு 15, 2010)

    “பரிதிக் கோளின் மிக நெருங்கிய அகக் கோளை ஆராயும் முயற்சியில் அப்பாலுள்ள மற்ற கனத்த கோள்களோடு மாறுபடும் வேறுபாடுகளை நாங்கள் அறிந்து கொள்வோம்.  குறிப்பாக அகக் கோள் புதனைத் தேடும் ஆராய்ச்சி யில் நமது புவிக்கோளைப் பற்றிப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.”

    ஷான் சாலமன் (பிரதம ஆய்வாளர், நாசா மெஸ்ஸெஞ்சர்)

    “நாசாவின் முதல் விண்கப்பல் மாரினர் -10 போல் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் புதன் கோளை நாங்கள் விரைவில் நெருங்கிச் சுற்றியிருக்க முடியும்.  ஆனால் மாரினர் சென்ற அத்துணை வேகத்தில் நாங்கள் புதன் கோள் ஈர்ப்பு விசையில் மெஸ்ஸெஞ்சரை இறங்க வைத்துச் சுற்றி வர இயலாது.  புதன் கோளை நெருங்கும் போது மிக மெதுவாகச் சென்றால்தான் விண்ணுளவி புதன் ஈர்ப்பு விசையில் இறங்க (Spacecraft Orbital Insertion) ஏதுவாகும்.”

    ஷான் சாலமன் (பிரதம ஆய்வாளர், நாசா மெஸ்ஸெஞ்சர்)


    புதன் கோளில் நீர்ப்பனி பேரளவில் இருப்பது முதன்முதல் உறுதி செய்யப் பட்டுள்ளது

    2012 நம்பர் 29 ஆம் தேதி “விஞ்ஞான இதழில்” [Science Journal] வெளியான நாசாவின்  மெஸ்ஸஞ்சர் விண்ணுளவியின் [NASA’s Messenger Space Probe] மூன்று ஆராய்ச்சி வெளியீடுகளில் ஒன்று,  புதன் கோளில் நீர்ப்பனி இருப்பதாய் நிலவி வந்த ஐயப்பாட்டு நிலை மாறி, உறுதியாக உள்ளதென நிரூபிக்கப் பட்ட தகவலை அறிவித்தது.   பல்வேறு தனிப்பட்ட ஆதாரங்களிலிருந்து,  பரிதி அனல் அடிக்கும் புதன் கோளின் துருவப் பகுதிகளில் பேரளவு நீர்ப்பனிப் பாறைகள் இருப்பது தெரிய வருகிறது.  வட துருவப் பகுதிகளில் பரிதி கனல் தாக்காத நிழற் தளங்களில் நீர்ப்பனிகளைக் கருப்புப் படிவுகள் [Dark Deposits] மூடியுள்ளதாகக் காணப்படுகிறது.

    காலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆய்வாளர்கள், நாசா விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர் அனுப்பிய தகவலைச் சேமித்து, சூரிய மண்டலத்தின் அகக் கோள் புதனின்  மித மிஞ்சியக் குளிர்த் தளங்களை முதன் முதல் வெப்ப நிலை மாடல் [Thermal Model of Mercury] மூலம் தயாரித்து, அந்த தரைகள் மேலோ அல்லது கீழோ நீர்ப்பனி காணப் படுவதைக் குறிப்பிட்டனர்.   அவர்கள் அவ்விதம் கண்ட கருமைப் படிவுகள் ஒருவித ஆர்கானிப் பொருட்கள் என்று கூறுகிறார்.  பல மில்லியன் ஆண்டுகளாய் நீர் செழித்த வால்மீன்களும், முரண் கோள்களும் [ Water-Rich Comets & Asteroids ]  பன்முறைத் தாக்கி, அவற்றி லிருந்து நீரும், ஆர்கானிக் பொருட்களும் விழுந்து படிந்திருக்க வேண்டும் என்று கருதப் படுகிறது.

     

    Water ice Discovery -1

    1990 ஆண்டு ஆரம்ப காலத்தில் பூமியில் உள்ள ரேடார் மூலம் ஆராய்ந்ததில் புதன் கோளின் துருவப் பகுதிகளில் வழக்கமின்றிப் பளபளப்பான ஒளிமிக்கப் பளிங்குகள் இருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் பெரிதும் வியப்படைந்தனர்.   அவை ஒருவேளை நீர்ப் பளிங்காக இருக்கலாம் என்று ஐயுற்றனர்.   புதன் கோள் தளத்தில் எல்லாக் கோள்களையும் விட மித மிஞ்சிய வெப்ப நிலை நிலவி வருகிறது.   துருவப் பகுதியில் உள்ள ஒற்றை ஆழக் குழியில் [Crater] அனல் அடுப்பு போல் 260 C [500 F]  உஷ்ணம் நிலை கொதிக்கும் போது, அண்டை விளிம்பு குளிர்ந்து போய், நீர் வெள்ளத்தைப் பனியாக்கிப் பல பில்லியன் ஆண்டுகளாகச் சேமித்திருக்கிறது.

    இவ்வித இயற்கையான குளிராக்கிகள் [Natural Freezers] பரிதி ஒளி படாத மங்கலான துருவக் குழிகளின் விளிம்பு நிழல் பகுதிகளில் நிலைத்துள்ளன.   இந்த நீர்ப்பனிப் பாறைகளை புதன் கோளை விடக் கருத்த ஏதோ ஒருவிதத்தில் தோன்றிய ஆர்கானிக் கவசம் ஒன்று மூடி, நீர்ப்பனி உருகாமல் பாதுகாத்து வருகிறது.   புதன் தளத்தின் சில பகுதிகள் மிகவும் சூடாகி நீர்ப்பனி உண்டாக வில்லை ஆயினும், பூமியில் உள்ள ரேடார்கள் இப்பகுதிகளிலிருந்து எழும் ஒளிமிகுந்த பிரதிபலிப்புகள்  உள்ளதை முன்பே காட்டியுள்ளன.

    முதன்முதல் புதன் கோளை இருபுறமும் சுற்றிய நாசா விண்ணுளவி

    2011 மார்ச் 17 ஆம் தேதி நாசாவின் விண்ணுளவி ‘மெஸ்ஸெஞ்சர்’ ஆறரை ஆண்டுகள் பயணம் செய்து பரிதியை மிக நெருங்கிச் சுற்றி வரும் புதனை நீள்வட்டத்தில் வட்டமிட ஆரம்பித்தது.  பரிதிக் குடும்பத்திலே மிகச் சிறிய புதக்கோள் பரிதிக்கு மிக நெருங்கிச் சுற்றுவதால் தள உஷ்ணம் சூடேறி ஈயத்தைக் கூட உருக்கிவிடத் தீவிரம் உள்ளது. பரிதியின் அத்தகையக் கடும் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிக்குப் போதிய வெப்பக் கவசம் இணைக்கப் பட்டுள்ளது.  மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிதான் முதன்முதல் புதன் கோளை இருபுறமும் ஆராயச் சுற்றி வருகிறது.  1974-1975 இல் நாசா அனுப்பிய மாரினர் -10 (Mariner -10) விண்கப்பல் வெள்ளிக் கோளைச் சுற்றிப் பிறகு புதக் கோளையும் ஒருபுறம் சுற்றிப் படம் எடுத்து விபரங்க ளையும் பூமிக்கு அனுப்பியது.  தற்போது இருபுறமும் சுற்றி வரும் மெஸ்ஸெஞ்சர் ஏழாண்டுக்கு முன்பு 2004 ஆகஸ்டு 3 ஆம் தேதி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவு முனையிலிருந்து ஏவப்பட்டது.  மெஸ்ஸெஞ்சர் புதனை மிகவும் நெருங்கி 200 கி.மீ (124 மைல்) உயரத்தில் சுற்றப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்ணுளவியின் சுற்று நீள்வட்டக் குற்றாரம் : 200 கி.மீடர் (124 மைல்), நீளாரம் : 15,000 கி.மீடர் (9000 மைல்).

    மெஸ்ஸெஞ்சர் (MESSENGER) என்பதின் விரிவான விளக்கம் புதக்கோள் மேற்தளம், சூழ்வெளி, பூதளவியல் தொகுப்பு (MErcury Surface Space ENvironment GEochemistry & Ranging) என்ப தாகும்.  நாசா விண்ணுளவியின் நிறை : 485 கி.கிராம் (1070 பவுண்டு).  446 மில்லியன் டாலர் மதிப்புள்ள விண்ணுளவி யின் பரிமாணம் : (1.85 மீடர் உயரம், 1.42 மீடர் அகலம், 1.27 மீடர் ஆழம்) (6 அடி உயரம், 4.5 அடி அகலம், 4 அடி ஆழம்).  விண்ணுளவி 608 கி.கிராம் (1340 பவுண்டு) எரிசக்தி திரவம், அழுத்தம் உண்டாகப் போதிய ஹீலியம் ஆகியவற்றைத் தூக்கிச் செல்லும் திறமுள்ளது.  திசை நோக்கி விண்ணுளவியைத் திருப்பு வதற்கு நான்கு பெரிய உந்து ராக்கெட்டு களும், நான்கு சிறிய உந்து ராக்கெட்டுகளும் இணைக்கப் பட்டுள்ளன.  புதக் கோளின் இராசாயனக் கலவைகள், பூதளவியல், காந்தவியல் பண்பாடுகளைத் துல்லியமாகப் பதிவு செய்ய மெஸ்ஸெஞ்சர் அனுப்பப் பட்டுள்ளது.  ஏவப்பட்ட பிறகு மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவி மூன்று முறை ஈர்ப்பு விசை வீச்சில் (ஜனவரி 2008 இல் பூமிச் சுற்று வீச்சு, அக்டோபர் 2008 இல் வெள்ளிக் கோள் சுற்று வீச்சு, செப்டம்பர் 2009 இல் புதக் கோள் சுற்று வீச்சு) உந்தப் பட்டு இறுதியில் வேகம் மிதமாக்கப் பட்டு 2011 மார்ச் 18 இல் புதக்கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதை நீள்வட்டத்தில் சுற்ற ஆரம்பித்தது.  புதன் கோளை மெஸ்ஸெஞ்சர் குறைந்தது ஓராண்டுக்கு 730 முறை சுற்றிவந்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.  எரிசக்தி திரவம் விண்ணுளவி ஓராண்டுக்கு மேல் பணி புரிய போதிய அளவு உள்ளது.

    மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவி ஏவியதின் முக்கியக் குறிப்பணிகள்

    புதன் கோள் நமது நிலவை விடச் சிறிது பெரியது.  அதன் விட்டம் : 4800 கி.மீடர் (2980 மைல்).  அதன் உட்கரு உருகி உறைந்து போன ஒரு பெரும் இரும்புக் குண்டு.  பூமியைப் போல் வாயு மண்டலம் இல்லாத புதக் கோளில் புலப்படாத ஒரு மெல்லிய வாயுச் சூழ்வெளி (Exosphere) சுற்றியுள்ளது.  அந்த அரங்கில் பரிதியிலிருந்து வெளி யேறும் அணுக்களும், அயான்களும் உலவி வருகின்றன.  புதன் தளத்திலிருந்தும் இராசாயன மூலகங் களும் உதறப்பட்டு எழுகின்றன.  சோடியம், பொட்டாசியம் போன்ற கன மூலகங்கள் புதன் மேற்தளத்தின் அருகே தவழ்கின்றன.  அவற்றைப் பரிதியின் ஒளித்துகள்கள் (Solar Photons) விண்வெளிக்குத் தள்ளுகின்றன.

     

    1.  புதக் கோளின் தளப் பொருட்களைத் (Surface Composition) துல்லியமாக அறிவது.

    2.  புதக் கோளின் பூதளவியல் வரலாற்றை (Geological History) வரையறை செய்வது.

    3.  புதக் கோளின் காந்தக் களத்தின் துல்லிய பலத்தையும் (Precise Strength of the Magnetic Field) அது தள உயரத்தின் ஏற்ற இறக்கத்தினால் மாறுவதையும் அறிவது.

    4.  புதக் கோளின் திசைப் பிறழ்ச்சியை (Mercury’s Libration) அளந்து உட்கருவின் திரவ வெளிக்கரு இருப்பை அறிவதற்கு ஆராய்ச்சி செய்வது.

    5.  புதக் கோள் துருவங்களில் உள்ள வானலை எதிரொலிப்பு பொருட்களின் (Radar Reflective Materials) பண்பாடுகளைத் தீர்மானிப்பது.

    6.  ஆவியாகும் முக்கிய கனிமங்களையும் (Volatile Species) அவற்றின் மூலச் சுரப்பிகளையும், படிவுகளையும் புதக்கோள் வாயுச் சூழ்வெளியில் (Exosphere) இருப்பதை ஆராய்வது.

     


    பரிதிக்கு அருகில் கடும் வெப்ப விண்வெளியில் சுற்றி வரும் புதன் கோள்!

    ரோமானியக் கடவுளின் தூதர் மெர்குரி [Mercury, Messenger of God] பெயரைக் கொண்டு முதற்கோள் புதனின் பெயர் மெர்குரி [Mercury] என்று வைக்கப் பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் பிறை வெள்ளியை [Venus] முதலில் கண்ட இத்தாலிய வானியல் மேதை காலிலியோ, புதனும் அவ்வாறே பிறை வடிவில் இருப்பதைத் தொலை நோக்கியில் பார்த்து, இரண்டும் பரிதியைச் சுற்றி வருகின்றனவா என்று ஆராய்ந்தார். அதை உறுதிப் படுத்த புதன், வெள்ளி ஆகியவற்றின் பிறைகளைத் தொடர்ந்து பதிவு செய்து, பூமியின் நிலவைப் போல் பாதி நகர்ச்சியில் பிறை பெரிதாவதையும், அடுத்த பாதி நகர்ச்சியில் பிறை சிறிதாவதையும் கண்டு பிடித்து, புதன் வெள்ளி இரண்டும் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்று நிரூபித்துக் காட்டினார். சூரியனும் மற்ற கோள்களும் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்று கூறிய, கிரேக்க ஞானிகள் அரிஸ்டாடில் [Aristotle] டாலமி [Ptolemy] ஆகியோரின் கொள்கை பிழையான தென்று எடுத்துக் காட்ட, காலிலியோவுக்கு வெள்ளி புதன் ஆகிய கோள்களின் பிறை வளர்ச்சியும், பிறைத் தளர்ச்சியும் சான்றாய் அமைந்தன!

    பூமியிலிருந்து தொலை நோக்கி மூலம் பார்த்தால், சூரிய உதயத்திற்கு ஒன்றை மணி நேரத்திற்குப் முன்பு எழுந்து, சூரிய மறைவுக்கு ஒன்றை மணி நேரத்திற்குப் பின்பு புதன் தெரியாமல் போகிறது. சுக்கிரனும் காலையில் அதுபோல் விடி வெள்ளியாகவும், மாலையில் அந்தி வெள்ளியாகவும் ஒளி வீசுகிறது! காலை நேரத்தில் பரிதிக்குக் கிழக்குக் கோடித் திசையில் [Greatest Eastern Elongation], அடுத்து மாலை நேரத்தில் மேற்குக் கோடித் திசையில் [Greatest Western Elongation] மட்டுமே புதனைக் காண முடியும். அதாவது, புதன் கோளைப் பூமியி லிருந்து 28 டிகிரி கோணத்தில் பரிதிக்கு இருபுறமும் காண முடியுமே தவிர, மற்ற வீதி நகர்ச்சியில் அது சூரியனின் பேரொளி வெள்ளத்தில் மூழ்கிப் போகிறது.

    சுக்கிரனைப் [Venus] போல், புதனுக்கும் துணைக் கோள் எதுவும் இல்லை. சூரிய மண்டலத்தில் மற்ற எல்லாக் கோள்களுக்கும் [பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுடோ] ஒன்று அல்லது மேற்பட்ட துணைக் கோள்கள் உள்ளன! கரடு முரடான துளைகள் நிறைந்த கரும் பாறை களைப் புதன் கொண்டிருப்பதால், அது பரிதியின் ஒளியை எதிரொ ளிக்கும் திறம் [Albedo = 0.06] மிகவும் குறைந்தது. பூமியைப் போல் பாதுகாப்பு வாயு மண்டலம் எதுவும் புதனில் இல்லாததால், சூரியனின் உக்கிர வெப்பம் முழுவதும் அதன் வரண்ட குழிகளையும், உச்சி மலைகளையும் சுட்டுக் கரிய வைக்கிறது.


    பரிதி குடும்பத்தின் முதற்கோள் புதனின் தனிச்சிறப்புப் பண்பாடுகள்

    உருவத்தில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட ஓர் வடிவைப் பெற்றது புதன். அதன் விட்டம் 3030 மைல். சந்திரனைப் போல் புதனும் கரடு முரடான குழிகள் [Craters] நிறைந்து, வாயு மண்டலம் எதுவும் இல்லாத ஏறக் குறைய சூன்யமான [Vacuum] சூழ்நிலையைக் கொண்டது.  புதன் சுக்கிரனைப் [Venus] போல் மித மிஞ்சிய சூடான [480 டிகிரி C] கோளாக இல்லா விட்டாலும், உஷ்ணம் அதிக அளவில் -180 டிகிரி C முதல் +430 டிகிரி C வரை ஏறி இறங்கி, கடும் வெப்பமும் குளிரும் ஊஞ்சல் ஆடும் ஒரு கோள். அதன் ஈர்ப்புச் சக்தி மிகவும் வலிமை அற்றது! பூமியின் ஈர்ப்பு விசை 1 என்று வைத்துக் கொண்டால், புதனின் ஈர்ப்பு விசை 0.38 தசம அளவு! அதாவது பூமியில் 100 பவுண்டு எடையுள்ள ஒரு பண்டம், புதனில் 38 பவுண்டு எடைதான் காட்டும்!  சூரிய ஒளிமயத்தில் பரிதியை மிகவும் நெருங்கிச் சுற்றி வருவதால், புதனைத் தொலை நோக்கி மூலம் காண்பது, மிகவும் கடினம். பரிதிக்குச் சுமார் 28 மில்லியன் மைல் தூரத்தில் நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit] 88 நாட்களுக்கு ஒரு முறைப் பரிதியைச் சுற்றி வருகிறது.

     

    நாம் வாழும் பூமி பரிதிக்கு அப்பால் 93 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது! எல்லாக் கோள்களையும் விடப் பரிதியை வெகு விரைவில், மணிக்கு 100,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது, புதன்! வானலைத் தட்டு [Radar] மூலம் புதனின் கதிரலைகளை ஆராய்ந்ததில், அது தன்னைத் தானே 59 நாட்களில் சுற்றிக் கொள்வது அறியப் பட்டது. பூமிக்கும் பரிதிக்கும் இடையே சுற்றி வரும் சுக்கிரன், சந்திரனைப் போன்று, புதனும் அதனுடைய 88 நாள் பயணத்தில், சூரிய ஒளியில் பிறை வடிவைக் [Crescent Phases] காட்டி, பிறை வளர்ச்சியும், பிறைத் தளர்ச்சியும் பெற்று வருகிறது.  ஒளிநிறப் பட்டை ஆய்வில் [Spectroscopic Analysis] புதன் கோளத்தில் மிகவும் நலிந்த சூழக [Atmosphere] மண்டலமும், அதில் சோடியம், பொட்டாசியம் இருப்பதாக அறியப் பட்டது. அவற்றின் அணுக்கள் தரைப் பரப்பிலிருந்துதான் கிளம்பி யிருக்க வேண்டும்.

    ஒரு நூற்றாண்டில் 15 தடவை புதன், பூமிக்கும் பரிதிக்கும் இடையே குறுக்கீடு [Transit] செய்கிறது.  அப்பொது பூமி, புதன், பரிதி மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமையும்!  அந்தச் சமயத்தில் புதன் கோள் ஒரு கரும் புள்ளியாக, பிரம்மாண்டமான பரிதியின் வட்ட முகத்தில் பொட்டு போல் தெரிகிறது. 1677 இல் முதல் புதன் குறுக்கீடு காணப்பட்டுப் பதிவாகி யுள்ளது. அதற்குப் பின்பு இதுவரை 44 புதன் குறுக்கீடுகள் தொடர்ந்து காணப்பட்டுப் பதிவாகி ஆராயப் பட்டுள்ளன.

    நாசா புதனுக்கு முதலில் ஏவிய விண்கப்பல் மாரினர்-10

    நாசா 1973 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி ஏவிய, விண்வெளிக் கப்பல் மாரினர்-10 [Mariner-10] சுக்கிரனை [Venus] முதலில் ஆராய்ந்து படமெடுத்து, அடுத்து 1974 பிப்ரவரி 5 ஆம் தேதி புதன் கோளை நெருங்கி 197 மைல் அருகே பறந்து ஒரு புறத்தை மட்டும் படமெடுத்தது.  நாசா சுக்கிரனின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி, விண் கப்பலின் போக்கைக் கட்டுப் படுத்தி, புதனைக் குறிவைத்தது.

     

     

    அம்முயற்சி வெற்றி அடைந்து, ஆறு மாத இடை வெளிகளில் அடுத்து, அடுத்து மாரினர்-10 மூன்று முறைப் புதனைக் கடந்து, தொடர்ந்து புதுப் புது விபரங்களைப் பூமிக்கு அனுப்பியது. மாரினர்-10 புதனின் தளப் பகுதிகளை முதன் முதல் படமெடுத்து அனுப்பவும், எதிர்பாராதவாறு ஒரு பெரும் காந்தக் களத்தைக் கண்டு பிடிக்கவும் ஏதுவானது. புத மண்டலம் காந்த சக்தி கொண்டுள்ளதற்கு, அதன் உட்கருவில் இரும்புக் கோளம் இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது. பூமியின் சந்திரனைப் போல் மேல் தளத்தில் பாறைக் குழிகள் நிரம்பி இருந்தாலும், புதன் தனித்துவம் பெற்றுச் சிறிதளவு காந்த சக்தி கொண்டுள்ளது.  சந்திரனில் காந்த மண்டலமும் இல்லை! இரும்புள்ள உட்கருவும் இல்லை! புதன் தளத்தில் கோபுரம் போன்ற செங்குத்தான மலைகள், தாழ்ந்த பள்ளங்கள் ஏராளமாய் இருக்கின்றன. ஆனால் பூமியின் சந்திரனில் புதனைப் போல் செங்குத்தான மலைகள் இல்லை. புதன் கோளில் வாயு அழுத்தம் இல்லை! பிராணவாயு, நைடிரஜன் எதுவும் கிடையாது! நீரில்லை ! புதனும் பூமியின் நிலவைப் போலவே எந்த வித உயிரினமும் வாழ வழி இல்லாத ஓர் செத்த அண்டமே [Dead Planet]!

     

     

    செவ்வாய், சுக்கிரன் கோள்களைப் போல், புதனும் கடும் வெப்பம், குளிர்ச் சூழ்நிலை கொண்டு யாரையும் வரவேற்காத வரண்ட பாறை நிலமே! வாயு மண்டலத்தில் இம்மி யளவு ஆர்கான் [Argon], நியான் [Neon], ஹீலியம் [Helium] மிகச் சிறிய அழுத்தத்தில் சூழ்ந்துள்ளது! அப்பாறை நிலம் எங்கும் விண்கற்கள் விழுந்து விழுந்து பெருங் குழிகள் ஏற்பட்டுள்ளதை மாரினர்-10 எடுத்துக் காட்டியது.  மாரினர்-10 ஆய்வுச்சிமிழ் புதனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தியில் நூற்றில் ஒரு பங்களவு இருப்பதாகக் கண்டது. புதன் பரிதியை இருமுறைச் சுற்றிவரும் காலத்திற்குள் [88 நாட்கள்], அது தன்னைத் தானே தன்னச்சில் மூன்று முறைச் சுழல்கிறது. 1991 இல் பூமியிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த வானலைத் தொலைநோக்கி [Radio Telescope] மூலம் பார்த்ததில் புதன் கோளின் துருவக் களங்களில் பனிக்கட்டி அடுக்குகள் மேவி இருப்பதைக் காட்டியது.  ஆனால் அந்தப் பகுதிகளில் மாரினர்-10 ஆய்வுச்சிமிழ், 1974 இல் பயணம் செய்ய முடியவில்லை!

     

    பூமியின் வட துருவத்திற்கு மேல் உயரத்திலிருந்து பார்த்தால், சூரிய குடும்பத்தில் புளுடோவைத் தவிர, மற்ற எல்லாக் கோள்களும் [புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்] ஏறக் குறைய ஒரே மட்ட வீதிகளில் எதிர்க்-கடிகார [Counter-Clockwise] சுழற்சியில் சூரியனைச் சீராய்ச் சுற்றி வருகின்றன. கடவுளின் மகத்தான படைப்புக்கு, பிரம்மாண்டமான பிரபஞ்ச அண்டங்களின் ஒழுங்கு இயக்க நியதி ஓர் அரிய எடுத்துக் காட்டு! 1973 இல் வெள்ளி, புதன் இரண்டு கோள்களை ஒரே பயணத்தில் ஆய்வு செய்த மாரினர்-10 இன் பொறி நுணுக்கப் போக்கைப் பயன்படுத்தி, நாசா [NASA] விஞ்ஞானிகள் அடுத்து ஒரே விண்வெளிப் பயணத்தில், பரிதியின் புற வெளியில் சுற்றி வரும் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களை ஆராயும் திறமுடைய வாயேஜர்-2 [Voyager-2] ஆய்வுச்சிமிழைத் தயாரித்து 1977 ஆகஸ்டு 20 இல் அனுப்பி வெற்றி பெற்றது, ஒரு மாபெரும் விஞ்ஞானப் பொறியியல் சாதனை!  2014 ஆண்டில் ஈசாவும், ஜாக்ஸாவும் இணைந்து (ESA & JAXA) (European Space Agensy & Japanese Space Agency) புதன் கோளுக்கு விண்ணுளவி அனுப்பப் போவதாக அறியப் படுகிறது.

     

    (தொடரும்)

    +++++++++++++++++++++++

    தகவல் :

    Picture Credit : NASA,

    1.  National Geographic Picture Atlas of Our Universe (1986)

    2.  Astronomy Today Chaisson & McMillan (1999)

    3.  Reader’s Digest – The Universe & How We See It  By : Giles Sparrow (2001)

    4.  Universe By : Roger Freedman & William Kaifmann III (6th Edition) (2002)

    5.  BBC News :  Messenger Spacecraft to Go Back to Mercury (June 11, 2001)

    6.  BBC News : NASA Set to Revisit Mercury (July 16, 2004)

    7.  NASA’s Messenger to Fly By Mercury During Retrograde (September 15, 2009)

    8.   Spacecom- Whole New Mercury Promised By NASA Spacecraft (Messenger) (August 15, 2010)

    9.   BBC News – Messenger Probe Enters Mercury Orbit By Jonathan Amos (March 17, 2011)

    10.  Daily Galaxy : The Extreme Planet : Messenger Spacecraft Swings into Orbit Around (Planet) Mercury Today.  March 11, 2011

    11. CU-Boulder Space Scientists Ready for Orbital Insertion 0f (Messenger), Mercury Spacecraft. (March 17, 2011)

    12.  Wikipedia “Messenger” Spacecraft (August 9, 2011)

    13.  Science Blog : http://scienceblog.com/58136/researchers-find-evidence-for-water-ice-deposits-and-organic-material-on-mercury/  [November 29, 2012]

    14.  Large Ice Deposits Found on Planet Mercury Nearest the Sun [November 29, 2012]

    15. Spacecraft Messenger Finds New Evidence for Water on the Plant Mercury [November 30, 2012]

     

    ++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) (December 1, 2012)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.3

     

    சஞ்சீவினி

     

    இன்னம்பூரான் & தேமொழி

    ஒரு வருடம் முன்னால் இன்னம்பூரான் ‘வல்லமை’யில் எழுதிய இந்தத் தொடரின் முதல் பகுதியை 1640 வாசகர்கள் படித்திருக்கிறார்கள், இன்னும் சிலர் படித்து வருகிறார்கள் என்பதும், அடுத்த பகுதியும் வாசிக்கப்படுகிறது என்ற குறிப்பும், தேமொழியின் ‘வலி நிவாரணி வேலை செய்யும் விதம்’ என்ற கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களும், இந்த தொடருக்கு சஞ்சீவினி மூலிகையாக வருகை புரிந்து, அதை உயிர்ப்பததற்கு நன்றி.  வாசகர்களுக்கு நன்றி நவிலவேண்டும்; தலைப்பை ‘சஞ்சீவினி’ என்று மாற்றியமைத்து, அதை செய்தோம். 

    முன்பகுதிகளின் ரத்னசுருக்கம்:

    நோயாளிகளின் அணுகுமுறையை முன்னிறுத்தி அமையும் என்று இந்த தொடரை அறிமுகம் செய்தார், ‘வல்லமை’ ஆசிரியர். முதல் கட்டுரை சர்வ கலா வல்லமை பொருந்திய நீரழிவு நோயை பற்றிய அறிமுகம். ” நீங்கள் தான் உங்களுக்கு முதல் டாக்டர் ” என்ற படிப்பினையின் மகாத்மியத்தை உணர்த்தியது. மிதமான சத்து உணவு, உடற்பயிற்சி, நேரம் தவறாத மருந்து என்ற நீரழியா வேதம் ஓதியது. அடுத்த பகுதி ‘ஒரு அரசு மருத்துவமனையுடன் உரிமையுடன் உறவு வைத்துக்கொள்வது’ பற்றி குறிப்பால் உணர்த்தியது. இங்கிலாந்தின் இலவச மருத்துவ சேவையின் பின்னணியையும், ஆதாரமுள்ள அறிவுரைகள் இலவசமாக கிடைப்பதையும் கூறியது. அங்குள்ள டாக்டரிடம் இது பற்றி பிரஸ்தாபித்த போது, அவர் இந்த முயற்சியை வரவேற்றார். ‘நாங்கள் டாக்டரல்ல.’, ‘டாக்டரிடம் ஆலோசனை பெற இவை உதவலாம். இவற்றை படித்து உரிய நேரத்தில் டாக்டரிடம் போவதைத் தவிர்க்கக்கூடாது’ என்பதை விளக்கி விடுங்கள் என்றார். [Disclaimer ஐ படிக்கவும்.] PCO (patient complaining of) + HPC (history of the present complaint) + PMH (previous medical history).” என்ற மும்மந்திரங்களின் மர்மமும் அறிந்தோம். வலி என்ற சொல் அந்தாதியாக அமைந்து விட, தேமொழி வலி நிவாரணிகள் வேலை செய்யும் விதத்தை விளக்கினார். இன்னம்பூரானின் ‘அபாய சங்கு’ இருவரும் இணைந்து ‘சஞ்சீவினி’ மருத்துவத் தொடரை பரிபாலனம் செய்யவேண்டும் என்று அன்புகட்டளை விடுத்தது. இணைந்து வருகிறோம். கருத்து, வினா, ஆலோசனை, பின்னூட்டங்கள், தனி மடல்கள் எல்லாம் நல்வரவு ஆகுக. நீரழிவு நோய், மன அழுத்தம் ஆகிவற்றை பற்றி பிறகு எழுதுகிறோம். 

    இந்த பகுதியில் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் வாழ்வியலை எவ்வாறு சிறப்புற செய்யும் என்பதை பற்றிய ஒரு நூலின் சுருக்கம். மேலதிக விவரங்கள், உங்கள் வினாக்களை பொருத்து அமையும். சில அமெரிக்க மருத்துவ ஆலோசனைகளும் இடம் பெறுவது நலன் தரும். தெளிவு முக்கியம். அதனால், இனி அவரவர் பெயரில்:

    இன்னம்பூரான்:

    சோம்பலை முறியடிப்பது எளிது. சில அன்றாட வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அடிக்கடி நடை, படி ஏறுவது, கடைக்கு நடந்து போவது, அதிக நேரம் அமர்ந்து இருப்பதைக் குறைத்து விடுவது, நண்பர்களுடன் பழகுவது என்று ஆரம்பியுங்கள். அதை வழக்கமாக செய்யுங்கள்.

    ஏன் இப்படி? சோம்பல் (physical inactivity) உடல் வலிமையை தளர்த்தி விடும். விரைவில் உயிரை மாய்த்து விடும். இதய நோய்க்கு (coronary heart disease: chd) இந்த சோம்பல் தான் வித்திடுகிறது. இது வளர்ந்த நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலும் கண்டெடுத்த உண்மை. சுறுசுறுப்பு ஆசாமிகளை விட சோம்பேறிகளுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

    அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், இதய நோய்/இரத்த அழுத்த நோய்/ டைப் 2 நீரழிவு நோய்/பெருங்குடல் புற்றுநோய்/பருமன்/ ஞாபக மறதி ஆகியவற்றின் தாக்கம் குறையும்.

    அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், மேற்படி வியாதிகளை தடுக்கக்கூட முடியலாம்; மேலும் எலும்பு வியாதிகள் எளிதில் அணுகா. 

    அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், மூட்டு அசைவும், திறனும் அதிகரிக்கும்.

    அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், சக்தி கூடும்; மன அழுத்தம் குறையும்; இளைப்பாறுதல் இனிமையாக அமையும்; உறக்கம் நன்றாக வரும்; களைப்பு தீரும்; ஏகாக்ரஹசக்தியுடன் இயங்கலாம். வாழ்க்கையின் சுவை கூடும். வேறு என்ன வேண்டும், பராபரமே! 

    மேலும் சொல்ல நிறைய இருக்கிறது. அவை வினா-விடை பகுதியில் இருப்பதால், கேட்க, கேட்க பதில் வரும். அதற்கு முன், கட்டுரை முடிவில் கொடுக்கப்பட்ட உசாத்துணைகளை படியுங்கள். மற்றவர்களிடம் அது பற்றி பேசுங்கள். சுறுசுறுப்புக்கு சுறுசுறுப்பு ஆச்சு. நாலு பேருக்கு நல்ல விஷயம் சொன்னதாகவும் ஆச்சு. கேள்விக்கணை தொடுக்கவும் வசதியாச்சு.

    நன்றி.

    *

    தேமொழி:

    உடல் நலம் பேணிக் காப்பதற்கு  நம் தமிழர்களுக்கு காலம் காலமாகத்  தகுந்த அறிவுரைகள் கிடைத்துள்ளன.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் வழங்கிய திருக்குறளிற்கு மேல் நாம் ஆதாரம் தேடத் தேவையில்லை.  “மருந்து” என்று ஒரு அதிகாரமே அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வள்ளுவரால்.

     

    “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

    வாய்நாடி வாய்ப்பச் செயல்.”

    இக்குறளைப் படிக்காத தமிழ் மாணவர்கள் இருக்க வாயிப்பில்லை.  

     

    “நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்”, என்று இக் குறளுக்குப் பொருள் உரைக்கிறார் மு. வரதராசனார். 

     

    “நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.”

    “மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.”

    “மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.”

     

    இவ்வாறாக  ஒரு நான்கு குறள்களில் மருத்துவம் பற்றி பொதுவில் குறிப்பிட்ட வள்ளுவம், மருந்து அதிகாரத்தின் மற்ற ஆறு குறள்களில் முக்கியத்துவம் அளித்திருப்பதோ நம் உணவுப் பழக்கத்திற்கு.

     

    “முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.”

    “முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.”

    “முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.”

    “மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.”

    “குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.”

    “பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டு விடும்.”

    (~மற்ற பொருளுரைகளும் மு. வரதராசனார் வழங்கியவையே)

     

    இதிலிருந்து   மருத்துவமும் பத்தியமும் இணைந்து செயல் படுபவை என்பது உணர்த்தப்படுகிறது.  அத்துடன், வரும்முன் காப்பதின் அவசியத்தை உணர்த்தும் முகமாக, உட்கொள்ளும் உணவில் கடைபிடிக்க வேண்டிய இன்றியமையாமையை உணர்த்த அதிக குறள்கள் அதற்காக  ஒதுக்கப்பட்டுள்ளது. இச்செயலினால் உணவுக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவமும் நன்கு உணர்த்தப் படுகிறது.   

     

    நம் நலனினில் அதிக அக்கறை கொள்ள வேண்டியவர்கள் நாம்தான்.  சிறந்த சுகாதார வழிகளைக் கடைப்பிடித்தும், ஆரோக்கியமான உணவுகளை உண்டும் நம் நலம் பேணிக்காப்போம்.  உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அதனை மருத்துவரிடம் விளக்குவதற்கு உதவும் வகையில் மேலும் பல தகவல்களைத் தேடி அறிந்து கொள்வது நம் கடமை என்பதை நினைவில் கொள்வோம். அதற்கு வகை செய்யும் வகையில் இணையத்திலும் பல தளங்கள் சுகாதாரத் துறை வல்லுனர்ககளின் அறிவுரைகளை தொகுத்து வழங்குகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கவைகள் பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

    நன்றி.

     

    (தொடரும்)

    இன்னம்பூரான் & தேமொழி

    கவனம்: 

    நாங்கள் டாக்டர்கள் அல்ல. நட்புரிமையுடன், பொறுப்புணர்ச்சியுடன்,ஆதாரங்களை தமிழில் விளக்கி, அவற்றை சுட்டிக்காண்பித்து அறிமுகம் தரும் சுகாதாரம் பற்றிய தொடர் இது, டாக்டரிடம் ஆலோசனை பெற இவை உதவலாம்.  இவற்றை படித்து உரிய நேரத்தில் டாக்டரிடம் போவதைத் தவிர்க்கக்கூடாது.  அவரவர் மருத்துவம், சிகிச்சை, நிவாரணம் ஆகியவற்றை நாடும் செயல்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.

    இன்னம்பூரான் & தேமொழி

    உசாத்துணை: 

    உசாத்துணை: 

    www.bhf.org.uk

    www.bhf.org.uk/heartmatters

    www.wfh.naturalengland.org.uk

    www.sustrans.org.uk

    www.webmd.com

    www.medicinenet.com

    www.mayoclinic.com

    www.emedicinehealth.com

    www.nlm.nih.gov/medlineplus

     

     

    சித்திரத்துக்கு நன்றி: http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2009/01.06.09/suchamam.jpg

     

     

     Tags: சஞ்சீவினி, இன்னம்பூரான், தேமொழி, வாழ்வு, செல்வம், டாக்டர்

    Share
  • HEALTHY BODY MAKES HEALTHY MIND (13)

     

    Sangeetha

     

                                         13. GINGER

     

    Whether in tea, ginger ale or eaten with food, ginger has been used to treat nausea, indigestion and diarrhea for thousands of years. In addition to its traditional use as a digestive aid, ginger is a good source of some vitamins and minerals that are essential to men’s health. Potentially helping to prevent colorectal cancer, heart disease and diabetes, ginger can play a vital role in ensuring that men live long, healthy lives.

     

     


     

    Ginger Benefits for Weight Loss

     

    • Ginger increases the PH value of stomach acids, thus reducing the rates of gastric secretions and accelerating the activity of the enzymes necessary for digestion. Ginger reduces the feeling of vomiting and nausea by directly acting on the stomach, rather than impeding nausea in the brain. Ginger also triggers metabolism which helps in burning the fat.
    • Assimilating ginger in tea form or using it as an addition in the form of a culinary spice in various dishes can restrict fat accumulation in your body.
    • Ginger produces heat in the body and dilates blood vessels just like Cayenne pepper, garlic or mustard. Low fat dairy products, avocado or citrus fruit make healthy foods to eat with ginger root tea.
    • Ginger reduces Triglyceride and Cholesterol levels and thus helps in improving cardiovascular health. It elevates the levels of high density Lipo-proteins and lowers the risks of stroke and heart attack by improving the blood circulation.

    • Ginger Tea

      Sipping ginger tea can help calm an upset stomach, as well as ease congestion when you’ve got a cold.Ginger tea has a spicy, invigorating taste. It’s used as a home remedy for indigestion, nausea, and to ward off colds, flu, and sore throats.

      Ginger tea is very easy to make. Here is a recipe for you to try.

    • Ginger Tea Recipe

    • water, 4 cups
    • 2-inch piece of fresh ginger root
    • optional: honey and lemon slice
    • milk(if needed)

      Peel the ginger root and slice it into thin slices. Bring the water to a boil in a saucepan. Once it is boiling, add the ginger. Cover it and reduce to a simmer for 15-20 minutes. If needed boil the milk seperately and mix with it.Strain the tea. Add honey and lemon to taste.But i like to have it with sugar.

    Share
  • ரிஷி கர்பம்

    தமிழ்த்தேனீ-

     

    அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சரவணபவன் ஹோட்டலில் எதிர் மேஜையில் உட்கார்ந்து   மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல்   எதிரொலி கேட்கும் அளவுக்கு உரக்க சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர் அந்த நான்கு பெண்மணிகளும். அவர்கள் உட்கார்ந்திருந்த மேஜையில்  பலவிதமான அறுசுவை உணவுகள் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. 

    ஹோட்டல் பணியாளர் பவ்வியமாய் குனிந்து அவர்களுக்கு வேறெதுவும் வேணுமா என்று கேட்டுவிட்டு நகர்ந்தார். அது எப்பிடி இவங்க மட்டும் மட்டும் எந்த நாட்டிலே சாப்பிட்டாலும் ஒரே விதமான தரமான சுவையான உணவு வகைகளை கொடுக்கிறாங்க  என்று பேசிக்கொண்டே  அனுபவித்து சாப்பிட்டுக்கொண்டே ஆரவாரமாய்  நகைச்சுவையாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் அந்த நால்வரும். திடீர் திடீரென்று சுழன்று அடிக்கும் கடற்காற்றைப் போல அவ்வப்போது  அவர்களின் சிரிப்பொலி அந்த இடத்தையே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. 

    அவர்கள் பின்னால்  அமைதியாய் உட்கார்ந்திருந்த  ஒரு அமெரிக்கக் குடும்பம் இவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் இவர்களின் ஆரவாரமான கலகலப்பான சிரிப்பால் கவரப்பட்டு  அவர்களும் இவர்களை ரசித்து  மென்மையாக புனிசிரிப்புடன் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். 

    பக்கத்து மேஜையில் இருந்து சாரதா வெகுநேரமாக இவர்களையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஒரு நிமிஷம் இருங்க இதோ வரேன் ,  அவங்ககிட்ட     கேட்டுட்டு வரேன் என்று கணவர் சதாசிவத்திடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். 

    சதாசிவம்  வேணாம்மா  நமக்கெதுக்கு,  அவங்க ஏதோ ஜாலியா இருக்காங்க. அதிலே தலையிட நாம யாரு , வேணாம் போகாதே என்று  சொல்லிக் கொண்டே இருந்தார் . சாரதா அதையெல்லாம் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் அந்த மேஜையின் முன் போய் நின்றாள். 

    சதாசிவம்  பயந்த பார்வையுடன் பதைபதைப்புடன் உட்கார்ந்திருந்தார்.  யாரா இருந்தாலும் அதைப் பத்திக் கவலைப்படாமல்  மனசிலே என்ன கேக்கணும்னு  தோணுதோ அதைக் கேட்டுவிடும் குணம் அவளுக்கு.  அதைப் பற்றி சதாசிவத்துக்குத் தெரியும் , சொன்னாலும்  கேட்க மாட்டாள். என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்துபோய் அவர்களையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்  அவர். 

    வெளிநாட்டுக்கு வந்திருக்கோம் ,இங்க வந்தும் இதெல்லாம் தேவையா என்று அவருக்கு கோவமாய் வந்தாலும் , ஓரளவுக்கு மேல் அடக்கினால் உணர்ச்சி வசப்பட்டு நீங்க  சும்மா இருங்க  என்று ஒரு சொல்லில் அடக்கிவிடுவாள். இங்கே எல்லார் முன்னிலையிலும் மானம் போகும். அதற்கு பயந்து  வெற்றுப் பார்வையுடன் உட்கார்ந்திருந்தார் அவர். 

    சாரதா அவர்கள் மேஜையின் முன்னால் சென்று அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிரித்துக் கொண்டே இருந்தவர்கள் சாரதாவின் அருகாமையை உணர்ந்து அவளை ஏறிட்டனர். 

    சாரதா ஏதோ கேட்பதும் அவர்கள் அதற்கு பதில் சொல்வதும் சுற்றி இருந்தவர்கள் பேசும் சத்தத்தில் சதாசிவத்துக்கு காதில் விழவில்லை. 

    திடீரென்று அந்த நான்கு பெண்மணிகளில் ஒருவர் இவரை நோக்கி ஒரு நிமிடம் இங்கே வர முடியுமா என்று அழைப்பது தெரிந்தது.  சரி நாம் எதிர் பார்த்தது நடந்து போச்சு என்று உணர்ந்து பலி ஆடு போல் அவர்கள் மேஜையை நோக்கி நகர்ந்து அவர்கள் அருகே சென்றார் , இங்க உக்காருங்க  என்று  பக்கத்தில் காலியாய் இருந்த நாற்காலியை காட்டி அவரையும் உட்காரச் சொன்னாள் சாரதா. அவள். உட்கார்ந்தார் சதாசிவம். 

    அந்த நான்கு பெண்மணிகளில் மூத்தவளாகத் தெரிந்த பெண்மணி நீங்க இந்தியாவிலேருந்து வந்திருக்கீங்களா நெனைச்சோம்  இவங்க இங்கே வந்து எங்களைக் கேக்கும் போதே நெனைச்சோம் என்றாள். அந்தக் குரலில் இருப்பது இளக்காரமா,ஏளனமா இல்லை கோபமா என்று புரியாமல் மன்னிக்கணும் நான் அப்பவே சொன்னேன், இதெல்லாம் கேக்காதே அதெல்லாம் அவங்க தனி விஷயம்னு இவ கேக்கலை என்றார் பரிதாபமாய். 

    அது எப்பிடி முடியும், நம்ம கண்ணுலே படும்போது கேட்டுத்தானே ஆகணும் இதிலென்ன தப்பு ஒருத்தருக்கு  ஒருத்தர் கேட்டுக்கறதுதானே , நாமெல்லாம் ஒரே நாடு.  என்ன இருந்தாலும்  வெளிநாட்டுலே இருக்கும்போது நம்ம நாட்டு மக்களைப் பார்த்தா  ஒரு சந்தோஷம் என்றாள்  சாரதா . 

    ஆமாம் நாங்களும்  இந்தியாவிலேருந்துதான் வந்திருக்கோம்,  சென்னையிலே எங்க வீடு என்று பதில் கூறினாலும் மனதுக்குள் போச்சு எல்லாம் போச்சு நம்ப நட்டோட மானத்தையே வாங்கிட்டா இவ என்னும் எரிச்சல் மனதுக்குள் மண்டினாலும் வெளியே அதைக் காண்பித்துக் கொள்ளாமல் லேசான புன்னகையுடன் ,  நீங்க இதெல்லாம் ஒண்ணும் பெரிசா எடுத்துக்காதீங்க இவ என்னோட வொய்ஃப். மனசிலே எதையும் வெச்சிக்க மாட்டா என்றார்  சாரதாவை விட்டுக்கொடுக்காத பாணியில். 

    சார் நாங்க நாங்களும்  இந்தியாவிலேருந்துதான் வந்திருக்கோம், நம்ம கல்ச்சர் இருக்கே அதை யாராலேயும்  மாத்த முடியாது. எந்த நாட்டுக்கு போனாலும் நாம மட்டும் நம்ம பழக்க வழக்கத்தை மாத்திக்காம அப்பிடியே இருப்போம். 

    சதாசிவம் ஒரு அசட்டுப் புன்னகையுடன்  ஆமா  என்றார் பலகீனமான குரலில்.   உங்க வொய்ஃப் என்ன கேட்டாங்க தெரியுமோ என்று கேட்டுவிட்டு நிறுத்தினாள் அந்தப் பெண்மணி ,  சதாசிவம் இல்லே அங்கே தூரத்தில  இருந்தேனா காதுலே விழலே என்றார் பரிதாபமாய். 

    கடல் கடந்து இவ்ளோ தூரம் வந்தும் உங்க வொய்ஃப் அப்பிடியே இருக்காங்க, ஒரு வகையிலே பாத்தா அது நல்லதுதான்னு தோணறது என்றாள்.   

    இந்தப் பட்டுப் புடவை இந்த நாட்டிலே கிடைக்கறதான்னு கேக்கறாங்க.? 

    இல்லே இந்தியாவிலே சென்னையிலே  நல்லி சில்க்கிலே எடுத்தேன்னு சொன்னேன், அதிலே ஒரு விஷயம் ரொம்ப முக்கியம். நல்லி சில்க்லே இந்த டிசைன் புடவையை எடுக்கும் போதே அந்தக் கடைக்காரர் சொன்னார் ,இந்தப் புடவையைக் கட்டுங்க பாக்கறவங்க எல்லாரும் எங்கே எடுத்தீங்கன்னு கேப்பாங்க, அப்பிடிக் கேக்கலேன்னா அவர் பேரையே மாத்தி வெச்சிக்கறேன்னு சொன்னார். நல்ல வேளை அவர் பேரை மாத்தி வெச்சிக்க அவசியமில்லாம செஞ்சிட்டாங்க உங்க வொய்ஃப் சாரதா . 

    நல்ல ரசனையான  பார்வைங்க உங்க வொய்ஃபுக்கு !அதெப்பிடிங்க  இவங்க இதைக் கவனிச்சிட்டு அதே மாதிரி வந்து கேக்கறாங்க. எனக்கு பெருமையா இருக்கு என்றாள் அந்தப் பெண்மணி. என்ன இருந்தாலும் நாம உடுத்தற ஆடையை ,அல்லது நகையைப் பாத்துட்டு அடுத்தவங்க வந்து பாராட்டினாத்தானே நாம் இவ்ளோ வெலை குடுத்து வாங்கினதுக்கு பலன் கிடைக்கும். உங்க வொய்ஃபுக்கு  தேங்க்ஸ் சொல்லணும் என்றாள் அந்தப் பெண்மணி. 

    சதாசிவத்துக்கு ஒரு நொடியில் உலகமே தலைகீழாய் மாறியது போன்ற ஒரு திகைப்பு. ஆமாம் ஆமாம் எங்கிட்டே சொல்லிகிட்டே இருந்தா, உங்க புடவையைக் காட்டி எவ்லோ நல்லா இருக்கு பாருங்க ன்னு. 

    அப்போ இந்தப் புடவை நல்லா இருக்குன்னு சொல்லுங்க என்றாள் அந்தப் பெண்மணி பெருமையுடன். சதாசிவம் ரொம்ப நல்லா இருக்கு அதுவும் உங்களுக்கு பொருத்தமாய் இருக்கு என்றார். சாரதா கண்களாலேயே  போதும் அசடு வழியாதீங்க  என்று உணர்த்தினாள். 

    அதுக்குதான் உங்களைக் கூப்பிட்டோம், முதல்லே இந்தியா போனவுடனே உங்க வொய்ஃபுக்கு இந்தப் புடவையை வாங்கிக் குடுங்க. அவங்களுக்கு  ரொம்ப பிடிக்கும்  இந்தப் புடவை, புடவை மட்டுமில்லேங்க உங்களையும்தான்  என்று கூறிவிட்டு அந்தப் பெண்மணியுடன் வந்திருந்த மற்ற பெண்களைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு உரக்க சிரித்தனர் மீண்டும் சரவணபவனே அதிர்ந்தது. சதாசிவமும் உரக்கச் சிரித்தார். 

    அந்த அமெரிக்கக் குடும்பம் ஹாய் ,ஹலோ  வீ  எஞ்சாய்ட் யுவர் ஹாப்பினஸ், .ஆல்தி பெஸ்ட் பை  என்று கூறிவிட்டு புன்சிரிப்புடன் இவர்களைக் கடந்து வெளியே சென்றனர். 

    சதாசிவமும் ஹாய் ஹலோ,  யெஸ் அஃப்கோர்ஸ்  ஐ யேம் ஆல்ஸோ எஞ்சாயிங்   பை பை  என்றார் நிம்மதியுடன். 

                                                                                                 சுபம்

    Share
  • அன்ன தாதா சுகீ பவ

     

     சு. கோதண்டராமன்

    வயிறு முட்டப் பாலை அருந்தி

    வாயை விலக்கித் தாய்முகம் பார்த்து

    இனிய வாயை இதமாய்த் திறந்து

    கனிவும் மகிழ்வும் கண்களில் காட்டி

    சின்னக் குழந்தை சிரிப்பதன் பொருள் என்

    அன்னம் இட்டவர் நலமுடன் வாழ்க

     

    ஏதும் இல்லா ஏழை மெலிந்து

    காதம் நடந்து வேற்றூர் நண்ணி

    வருத்தும் பசியினால் வயிறு சுருங்கி

    அறத்திடு பிச்சை இரந்து பெற்றது

    உப்பும் நீரில் ஊறிய சோறும்

    தொப்பை குளிரத் தொலைந்தது துன்பம்.

    உண்டபின் ஈந்தவன் முகத்தினை நோக்கி

    கண்களில் நன்றிக் கண்ணீர் துளிர்க்க

    சொன்ன செய்தி எதுவெனக் கேளீர்

    அன்னம் இட்டவர் நலமுடன் வாழ்க.

     

    படத்திற்கு நன்றி

    http://www.melaniecooks.com/how-to-cook-perfect-rice-in-rice-cooker/283/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 48 (03.12.12)

     

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை


     
     
    வைகறையில் கடற்கரைக் காட்சி
     
     
    இடிக்கப்பட்டுச் சலிக்காத
    மாவினைப் போல
    நுண்மையாக விளங்கியது
    கடற்கரை மணற்பரப்பு.
     
    அவ்விடத்தில் வெண்சிறு கடுகு
    இட்டாலும் கூட
    கண்ணுக்குப் புலப்படும்படி
    பரவியிருந்தது வெளிச்சம்.
     
     
    நீர் மிகுந்த பரப்பதனில்
    தாமரையை வேலியாகக் கொண்ட
    அழகிய மருதநிலம்போல்,
    அழகுறத் தோன்றும்
    தாழையை வேலியாக உடைய
    நெய்தல் நிலத்தில்
    கானலின் மருங்கில்
    கோவலனுடன் வந்த மாதவி
    தனது தோழியர் கூட்டத்துடன்
    விளையாடி மகிழ்ந்தனள்.
     
     
     
    நகரமக்கள் கடற்கரையில் களித்திருக்கும் காட்சி
     
     
    நிரைநிரையாகக் குவித்த
    குற்றமற்ற காட்சியையுடைய
    மலைதரும் பல பொருட்களும்…
    கடல்தரும் பல பொருட்களும்…
    இவ்வளம் கொழிக்கும்
    மரக்கலங்கள் அசைகின்ற கடற்கரை.
     
     
    ஆங்கே,
    சோலைகள் சூழ்ந்த இடத்தில்
    அரசிளங்குமாரரும்
    அவர்தம் உரிமை மகளிரும்
    வணிக குமாரரும்
    அவர்தம் பல்வேறு வகைப்பட்ட
    காமக்கிழத்தியரும்,
    ஆடல் மகளிரும்
    பாடல் மகளிரும்
    கூட்டம் கூட்டமாகத் தங்கியிருந்தனர்.
    அவர்களைச் சூழ்ந்திருந்தன
    திரைச்சீலைகள்.
     
     
    அக்காட்சியானது,
    விண்ணை எட்டும் புகழினையுடைய
    கரிகால் வளவன் தானும்
    புதுப்புனல் விழவு கொண்டாடும்
    தலைநாள் அதனை ஒத்திருந்தது.
     
     
    வேறு வேறு கோலங்களுடனூம்
    வேறு வேறு ஆரவாரங்களுடனும்
    விழாக்காணும் களம் போல
    அப்பூம்புனல்துறை சிறப்புற்றுப் பொலிந்தது.
     
     
    கடலின் கரையைக்
    குத்தியெடுத்துப் பெயர்த்து வந்து
    கடலதனுடன் கலக்கும்
    காவிரியாற்றின் புகார் முகமெங்கும்
    சிறிது கூட இடமின்றி
    நால்வகை வருணத்தவரின்
    அடங்காத ஆரவாரம்
    ஒருங்கு கூடி
    ஓர் ஒத்த ஓசையாய்
    ஒலித்துக் கொண்டிருந்தது.
     

    அடிப்படையாய் அமைந்த சில்ப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 146 – 150
     
     
    அடிப்படையாய் அமைந்த சில்ப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 151 – 165
     

    படத்துக்கு நன்றி:
    http://www.colourlovers.com/group/Artist_Palette_Challenge/conversations/10646/APC_16_Raja_Ravi_Varma

     

    Share
  • தளபதி .. ! என் தளபதி ..!

     

                                                                                                   மூலம் : வால்ட் விட்மன்
                                                                                                                    (1819-1892)
                                                                                                             (புல்லின் இலைகள்)

                                                                                    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா



    ஓ காப்டன் ! என் காப்டன் !
    ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் !
    கப்பல் தளங்கள் தப்பின சூறா வளியை !
    தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு !
    அருகில் துறைமுகம், ஆலய மணி ஓசை !
    வெற்றி கொண்டா டுவர் மக்கள் எல்லாம் !
    ஓ நெஞ்சே ! நெஞ்சே ! நெஞ்சே !
    ஓடுது பார் செந்நிறத் துளிகள் !
    கப்பல் தளத்தில் கவிழ்ந்து கிடக்கிறார்
    காப்டன் மரித்து சில்லிட்டுப் போய் !

     

    ஓ காப்டன் ! என் காப்டன் !
    எழுந்து நின்று மணி ஓசை கேட்பாய் !
    எழுவாய் ! கொடி பறக்கும் உனக்காய் !
    சங்க நாதம் முழங்கும் உனக்காய் !
    தோரணம், மலர் வளையம் உனக்காய் !
    காத்திருக்கும் கூட்டம் கடற் கரையில் !
    அழைப்பது மக்கள் உன்னைத் தான் !
    ஆர்வமாய்த் திரும்பும் அவரது முகங்கள் !
    உன் தலைக் கடியில் என் கரங்கள் !
    இங்கு பாரீர் காப்டன் ! என்னரும் பிதாவே !
    கனவு போல் காட்சி கப்பல் தளத்தில் !
    சில்லிட்டுக் கிடக்கிறீர் செத்த உடலாய் !

     

    மௌன மாகி விட்டார் என் காப்டன் !
    வெளுத்த இதழ்கள் ! முடங்கிய உடல் !
    பிதா என் கைத் தொடுகை உணர வில்லை !
    இதயத் துடிப்பில்லை ! எழுதிய உயில் இல்லை !
    பாதுகாப்பு நங்கூரம் கப்ப லுக்கு ! பயணம் முடிந்தது !
    பயங்கரப் பயணத்தில் குறிக்கோள் வென்றது !
    கொண்டாடும் கடற்கரை ! ஆலய மணி ஓசை !
    தடுமாற்றம் துக்கம் என் கப்பல் தளத்தில் !
    சில்லிட்டு கிடக்கிறார் விழுந்தென் காப்டன்
    செத்த உடலாய்க் கப்பல் தளத்தில் !

    ++++++++++

     

    Abraham Lincoln -1

    (ஆப்ரஹாம் லிங்கன் மரணத்தைப் பற்றி வால்ட் விட்மன்)

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 29, 2012)] [R-1]

     

     

    Share
  • விதி செய்வோம்

     

    முகில் தினகரன்

    ‘அய்யோ…என்னால முடியலையே…ப்ளீஸ்….என்னை வெளிய விடுங்க…நான் எங்காவது போயிடறேன்….இப்படி என்னைய அடைச்சு வெச்சுக் கொல்லறீங்களே…என்னால முடியலை…என்னால முடியலை…அய்யோ!” விஸ்வத்தின் ஆக்ரோஷமான அடித் தொண்டை அலறலில் அறைக்கு வெளியே ஷோபாவில் அமர்ந்திருந்த கீர்த்தனா நடுநடுங்கிப் போனாள்.

    திடீரென்று விஸ்வம் அறைக்கதவை உடைத்து விடுவதைப் போல் பிசாசுத்தனமாய்த் தட்ட

    ‘கடவுளே…நான் என்ன பண்ணுவேன்?…இந்த நேரம் பார்த்து அம்மாவும் அப்பாவும் வெளிய போயிட்டாங்களே!…இவனோட ஆவேசத்தைப் பார்த்தா கதவையே உடைத்தெடுத்து விடுவான் போலல்லவா இருக்கு!”

    போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிப் போன தங்கள் மகன் விஸ்வத்தை டாக்டரின் அறிவுரைப்படி சிகிச்சைக்காக அறைக்குள் அடைத்து வைத்து விட்டு அதற்குக் காவலாய் தங்கள் மகள் கீர்த்தனாவை அமர வைத்து விட்டு டாக்டரைச் சந்தித்து வரச் சென்றிருந்தனர் அவனது பெற்றோர்.

    ‘ஏய்…கீர்த்தனா!…ப்ளீஸ்…கதவைத் திறந்து விடுடி…ப்ளீஸ்….ப்ளீஸ்…!” தங்கையிடம் ஒரு பிச்சைக்காரனைப் போல் கெஞ்சினான்.

    சில நிமிடங்களிலேயே அந்தக் கெஞ்சல் அழுகையாக மாறியது.

    மெல்ல எழுந்து வந்து அவன் இருந்த அறையின் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தாள் கீர;த்தனா. தரையில் அமர்ந்து சிறு குழந்தையைப் போல் கையைக் காலை உதறிக் கொண்டு அண்ணன் அழுவதைப் பார்த்து பரிதாபப் பட்டது அந்தத் தங்கையின் மனசு.  ‘கடவுளே…நீதான் இவனைக் காப்பாத்தனும்….அந்தப் பாழும் போதைப் பழக்கத்திலிருந்து நீதான் இவனை மீட்டுத் தரணும்!”

    ஜன்னலில் தெரிந்த தங்கையின் முகத்தைப் பார்த்ததும் அவன் அதிகமாய் அழ கீர்த்தனாவிற்கும் அழுகை தானாகவே வந்தது.  தனக்காக அவள் கண்ணீர் சிந்துவதைக் கண்ட விஸ்வம் மெல்ல தன் கோரிக்கையை நாசூக்காக வைத்தான்.

    ‘கீர்த்தனா…ப்ளீஸ்….எனக்கொரு ஹெல்ப் பண்ணுவியா?” அவன் அழுதவாறே கேட்க

    ‘ம்…சொல்லுண்ணா”

    ‘அம்பது ரூபா எடுத்துக்கோ…நேரா பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துல இருக்கற பெட்டிக்கடைக்குப் போ….அங்க…கடைல இஸ்மாயில்னு ஒருத்தன் இருப்பான்…அவன்கிட்ட என் பேரைச் சொல்லி அம்பது ரூபாயைக் கொடு….அவன் ஒரு பொட்டலம் தருவான் …அதை வாங்கிட்டு வந்து என் கிட்டக் குடு…சரியா?”

    அவள் யோசனையாய்ப் பார்க்க சட்டென்று அவள் கைகளைப் பிடித்து கெஞ்சலானான் அவன்.

    அவனது அந்தச் செயலில் மனமுருகிப் போன கீர்த்தனா உடனே புறப்பட்டாள்.

    தங்கை வருவாள்…தனக்குப் பொட்டலம் தருவாள்….என்கிற எதிர்பார்;ப்புடன் ஜன்னலையே பார்;த்தபடி அறைக்குள் அமர்;ந்திருந்த விஸ்வம் தலைவிரி கோலமாய் கத்தியபடி ஓடி வந்த தங்கையைப் பார்த்து அதிர்ச்சியானான்.

    ‘அய்யோ….அண்ணா….அண்ணா…” கத்தியவாறே ஷோபாவில் குப்புற விழுந்து குலுங்கியவளை ஏதும் புரியாமல் பார்த்தபடி நின்றான் விஸ்வம்.

          அப்போது அவசர அவசரமாய் வீட்டிற்குள் நுழைந்த அவனது தாய் நேரே அந்த ஜன்னலுக்கு வந்து ‘அடப்பாவி…நீயெல்லாம் ஒரு மனுசனா?….நீ கெட்டுத் தொலைஞ்சது போதாதுன்னு கூடப் பொறந்தவளையும் கெட்டுப் போக வெச்சிட்டியேடா”

    பின்னாடியே வந்த அவனது தந்தை ‘ஏண்டா அறிவு கெட்டவனே….அந்த மாதிரி எடத்துக்கெல்லாம் வயசுப் பொண்ணை யாராச்சும் அனுப்புவாங்களாடா?…நீ என்னோட போதைக்காக உன் தங்கச்சிய அனுப்பினே…அவன் தன்னோட போதைக்காக அவளையே எடுத்துக்கிட்டான்!…அய்யோ…ஆண்டவா…இந்தக் கர்மத்தையெல்லாம் பார்க்கவா என்னை இன்னும் உசுரோட வெச்சிருக்கே?” மேலே பார்த்துக் கூவினார்.

    அப்போதுதான் தன் தவறு விஸ்வத்திற்கு உறைத்தது. ‘அடப்பாவமே…இஸ்மாயிலும்…அவனோட ஆட்களும் ரொம்ப ரொம்ப மோசமானவங்களாச்சே….அவங்க கைல என் தங்கைய நானே வாரிக் குடுத்துட்டேனே…!  ச்சை…என்னோட இந்தப் பழக்கத்தினால குடும்பத்துல மத்தவங்களுக்கு எத்தனை பிரச்சினை…எத்தனை வேதனை…எத்தனை கவலை!  இப்படியொரு பேரிழப்பு ஏற்பட்ட பிறகும் எனக்கு அந்தப் பழக்கம் தேவைதானா?”

    மூலையில் அமர்;ந்து தீர;க்கமாய் யோசித்தவன் திடீரென்னு ஞானோதயம் ஏற்பட்டது போல் ‘விருட்‘டென எழுந்து ஜன்னலுக்கு வந்து ‘அம்மா….கதவைத் திறங்க” என்றான்.

    சற்று வித்தியாசமாக ஒலித்த அந்தக் குரலிலிருந்த கம்பீரமும் பொறுப்புணர்வும் அவன் தாயின் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த அவள் கணவனைப் பார்த்தாள்.

    அவர் ‘சரி‘யெனத் தலையாட்ட கதவைத் திறந்து விட்டாள்.

    வெளியே வந்த விஸ்வம் நேரே தங்கையிடம் சென்று அவள் தோளைத் தொட்டு ‘என்னை மன்னிச்சுடு கீர்த்தனா…என்னாலதான்…என்னோட போதைப் பழக்கத்தினாலதான் உனக்கு இப்படியொரு களங்கம் ஏற்பட்டிடுச்சு…இப்பவே போய் அவனுகளை…..” பற்களை ‘நற…நற‘வென்றுகடித்தபடி வேகமாய் எழுந்தவனை அடக்கினாள் அவனுடைய தாய்.

    ‘டேய்…டேய்…கொஞ்சம் பொறுமையாய் இருடா…நீ மறுபடியும் அங்க போய்…அவனுகளோட சண்டை போட்டு இந்த விஷயத்தைப் பெரிசாக்கினா…பாதிப்பு அவனுகளுக்கில்லை…நம்ம பொண்ணுக்குத்தான்..!…வேண்டாம்…இதை இத்தோட விட்டுடு…!…அவ விதிப்படி ஆகிறது ஆகட்டும்!…” சொல்லியவாறே கீh;த்தனாவின் கையிலிருந்த பொட்டலத்தை வாங்கி விஸ்வத்திடம் நீட்டி ‘இந்தா உன் தேவை இதுதானே?..வாங்கிக்கோ…நீயாவது சந்தோஷமா…உன்னிஷ்டப்படி இரு” என்றாள்.

    அந்தப் பொட்டலத்தை ‘வெடுக்‘கென்று வாங்கிய விஸ்வம் ஏதோ தொடக் கூடாத ஒரு பொருளைத் தொட்டு விட்டது போல துhர எறிந்து விட்டு ‘இல்லைம்மா…இனிமே இந்தச் சனியனைத் தொடவே மாட்டேன்மா!…என் தங்கையோட வாழ்க்கையே சீரழியக் காரணமாயிருந்த இந்தப் பழக்கத்தை நான் இன்னையோட விட்டுட்டேன்மா…” ஆணித்தரமாய்ச் சொன்னான்.

    அவன் கண்களில் அவன் உறுதியின் தீவிரம் நிமிர்ந்து நின்றது.

    தாங்கள் நடத்திய நாடகத்தின் முடிவு ”சுபம்” என்றானதில் உள்ளுர மகிழ்ந்தன மூன்று உள்ளங்கள்.

     

    (முற்றும்)

     

    Share
  • ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்{02.12.2012-21.6.2013 வரை}

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்{02.12.2012-21.6.2013 வரை}

    ஜோதிட உலகில் சர்ப்ப கிரகங்கள் அல்லது நிழல்  கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு. கேது ஆகிய இரண்டு கிரகங்களும், மனிதனை ஆட்டிப்படைப்பதில் வல்லவர்கள். ஒரு மனிதனின் திறமையையும் சக்தியையும் மறைப்பது அல்லது அவனை உச்சத்திற்கு கொண்டு செல்லும்   ராகுவும் கேதுவும், தான் எந்த கிரகத்தோடு சேர்கின்றார்களோ, அல்லது  எந்தெந்த கிரகங்களால்  பார்க்கப்படுகிறார்களோ அதற்குத் தகுந்தாற்போல் பலன்களைத் தருவார்கள்.   

    இந்த ராகு கேது பெயர்ச்சி் மூலம் ரிஷபம், சிம்மம்,விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகள்   சிறப்பான  பலன்கள்  பெறும் . மற்ற் ராசியைச் சேர்ந்தவர்கள், எதிலும் கவனமாக இருப்பதுடன், முறையான தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால், துன்பங்களின் தாக்கம் குறையும்.

    நிகழும் நந்தன வருடம் கார்த்திகை மாதம் 17ம் நாள் (2.12.2012) ஞாயிற்றுக் கிழமை, புனர்பூசம் நட்சத்திரம்,  காலை மணி 10.51க்கு க்கு விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் துலாம் ராசியில்  ராகுபகவானும் கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில்  மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள்.

    மேஷம்: ராகு உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார் கேது உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால் மாணவர்கள், திறமைகள் வெளிப்படும்வரை சற்று பொறுமை காப்பது நல்லது. குடும்பத்தில், வீண் விவாதம், மன உளைச்சல்கள் வந்து விலகும். எனவே பெண்கள் எந்த பிரச்னையையும் அமைதியான முறையில் கையாளவும். பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமான  விஷயத்தில்  சிந்தித்து  முடிவெடுத்தால், சிறப்பான பலனைப்பெறலாம். கணினித் துறையினருக்கு வேலை அதிகரித்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கலைத் துறையினர், போராடி வெற்றி பெறுவர். வியாபாரிகள், அரசுக்கான வரிகளை முறையாக செலுத்திவிடுவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவ்ர்கள், கடின உழைப்பால்  தங்கள் இலக்கை அடைவர். .
    பரிகாரம்:  தினமும்,ஆனை முகத்தானை வழிபட்டு வரவும்.   
    ரிஷபம்: ராகு உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார்.. கேது உங்கள் ராசியிலிருந்து 12-ம் இடத்தில் வந்து அமர்கிறார். மாணவர்களின் தாழ்வுமனப்பான்மை நீங்கி, அவர்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிட்டும். வியாபாரிகளுக்கு, . வேற்றுமொழிக்காரர்களாலும், , வெளிநாட்டிலிருப்பவர்களாலும்  ஆதாயம் உண்டு. பணியில் உள்ளவர்கள், பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிப்பார்கள் .  பொது வாழ்வில் உள்ள்ளவர்களுக்கு,  அரைகுறையாக நின்றுபோன வேலைகளை விரைந்து முடிக்க, நல்ல ஒத்துழைப்பு கிட்டும்.  கர்ப்பிணிப்பெண்கள், எண்ணெய் மற்றும் வாயுப் பதார்த்தங்களை தவிர்த்துவிடுதல் நல்லது. பொறுப்பில் உள்ளவர்கள்,  ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், வேலைகள் தேங்காமல் இருக்கும். கலைஞர்கள், தங்கள் பணியில், அலட்சியப்போக்கைக் தவிர்த்தால், எதிலும் நல்ல பெயர்தான்!
    மிதுனம்: ராகு உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டிற்கும், கேது 11-ம் வீட்டிற்கும் அடியெடுத்து வைக்கிறார்கள். .தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொது வாழ்வில் உள்ளவர்கள், சுற்றியுள்ளவர்களின் பலம்- பலவீனம் அறிந்து செயல்படுங்கள்.  கலைஞர்களுக்கு, சொந்த  ஊரில் செல்வாக்கு உயரும். பணியில் உள்ளவர்களுக்கு, உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வரை பொறுமையாக இருப்பதே புத்தி சாலித் தனம். மாணவர்கள் உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல நேரிடலாம்.  பெண்கள் உறவுகளிடம்  கனிவாகப் பேசி காரியம் சாதிக்க இது ஏற்ற காலம். வியாபாரிகளுக்கு,  வழக்கு நெருக்கடிகள் நீங்கும்.  அத்துடன் சொந்த தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .  சுய தொழில் புரிபவர்களுக்கு அரசு கெடுபிடிகள் தளரும்.
    பரிகாரம்: பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலை புதன் கிழமைகளில் வழிபட்டு வரவும்.
    கடகம்: ராகு, உங்கள் ராசிக்கு 4-வது வீட்டிலும், கேது 10-வது வீட்டிலும்  வந்து அமர்கிறார்கள்.   மாணவர்கள் புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். பணியில் உள்ள  சிலர், வேலையின் பொருட்டு, எதிர்பாராமல் வீடு மாற வேண்டியது வரும். பெண்கள் சிக்கனமாக இருந்தால்தான், குடும்ப செலவுகள் கட்டுப்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் போது, வியாபாரிகள், . பங்குதாரர்களிடம் எசரிக்கையாக இருந்தால், லாபத்தில்தொய்வு ஏதுமிராது. கலைத் துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும். ஆயினும் அதற்கு உழைப்பும், சீரான திட்டமிடலும் தேவை.  எதிலும் ஒரு பதற்றம் இருக்கும் சூழலிருப்பதால், பொது வாழ்வில் உள்ளவர்கள், வீண் வேலைகளில் ஈடுபட வேண்டாம்.   சிறு தொழில் புரிபவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவுகள் வந்து சேரும்.
    பரிகாரம்:கருமாரியம்மனை தொழுது வர, கவலைகள் யாவும் நீங்கும்.
     சிம்மம்: ராகுவின் பலன்கள்: ராகு பகவான்,  உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வந்து அமரும் ராகு,  எதிலும் வெற்றியைத் தருவார். கேது 9-ம் இடத்தில். மாணவர்கள், தேவையற்ற அவசரத்தைத் தவிர்த்தால்,  வீண் தொல்லைகள் உண்டாகாது. புதிய பொறுப்புகள் வந்தாலும், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு,  வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும்.  கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைக்கும்  சூழலிருப்ப தால், வியாபாரிகள் தேவைக்கேற்றவாறு, வேண்டிய  பொருட்களை மட்டும்  வாங்கிக் கொள்ளவும்.  கலைஞர்கள் வேண்டாத பழக்கங் களை மூட்டை கட்டிவைத்து விட்டாநிம்மதி காணலாம்.  வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கலாம். எனவே பெண்கள் பேச்சில் கவனமாக இருக்கவும்.சுய தொழில் புரிபவர்களுக்கு, பழைய பாக்கிகள் வசூலாகும்.
    பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை துர்க்கைக்கு செவ்வரளி மலரால் அர்ச்சனை  செய்து வரவும்.
     கன்னி:  ராகு பகவான் உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டிற்கும்,  கேது பகவான் 8-ம் வீட்டிற்கும் செல்கிறார்கள். மாணவர்களுக்கு வீண்  செலவுகள் கூடும். ப்ணியில் உள்ளவர்கள், எவ்வளவுதான் பாடுபட்டாலும், வேலைகள் தடைப்பட்டு, பின் முடியும்.  பேச்சில் கவனம் தேவை என்பதை பெண்கள் நினைவில் கொள்வதே நல்லது. . கலைஞர்கள் புது நண்பர்களிடம் அளவாகப் பழகி வரவும். பொறுப்பில் இருப்பவர்கள், முன்கோபத்தைத் தவிர்த்தால், எதிலும் சுணக்கம் தலைகாட்டாமலிருக்கும். வீண் சந்தேகத்தால், வியாபாரிகளுக்கு, வியாபார வட்டத்தில், சில தொல்லைகள்,  அவ்வப்போது வந்து போகும். சுய தொழில் புரிபவர்கள், மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம்.  பணியில் உள்ளவர்கள், நிலம், வீடு வாங்குவதில் தகுந்த கவனம் செலுத்தவும்.
    பரிகாரம்: காரியத் தடை விலக, ந்ந்தி பகவானை ஆராதனை செய்து வரவும்.   
    துலாம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கும், கேது பகவான் 7-ம் இடத்திற்கும் மாறுகிறார்கள்.  வியாபாரிகள்,  அதிக வட்டிக்கு கடன் வாங் கும் சூழலுக்குத் தள்ளப்படலாம் மாணவர்களுக்கு,  வேண்டாத சலிப்பு வந்து போகும்.மணமான  பெண்களுக்கு,மருத்துவச் செலவுகளுக்குப் பின்,  குழந்தை பாக்கியம் உண்டாகும்.   சொத்துப் பிரச்னையைத் தீர்க்க வேண்டிய  வழி கிடைக்கும் வரையில், பொது வாழ்வில் உள்ளவர்கள் பக்குவமாக நடத்தலே நல்லது. பொறுப்பில் உள்ளவர்கள்,  இடம் அறிந்து பேசும் கலையைக் கையாண்டு வந்தால்,  வீண் தொல்லைகளை கட்டுக்குள் வைக்கலாம் .  உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் உரிமைகளும், சலுகைகளும்  கிடைக்க, சற்றே போராட வேண்டியிருக்கும். கலைஞர்கள் வேலைக்கு உரிய மரியாதயை அளித்தால் எதிலும் நன்மைதான்!
    பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில், உங்கள் ராசிநாதனான சுக்ரனை வலம் வர, துன்பங்கள் யாவும் தீரும்.
    விருச்சிகம்:ராகு உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டிற்கும், கேது 6-ம் வீட்டிற்கும் போகிறார்கள்.  மாணவர்கள் எதிர்பார்த்த பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு, மறைமுக எதிர்ப்புகள் விலகும் . வீடு- மனை வாங்குவது, விற்பது ஆகிய இரண்டும், பெண்கள் விரும்பியது போல், லாபமாக முடியும் . வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். என்றலும், போட்டியாளர்களை வெல்ல, வியாபாரிகள் வேண்டிய வழிமுறைகள் பின்பற்றவும். . கலைஞர்கள் சிறு பிரச்னைகளை அனுபவ அறிவால் தீர்த்து, வரவைத் தக்க வைத்துக் கொள்வார்கள். பொது வாழ்வில் உள்ளவர்களை  கௌரவ பதவிகள் தேடி வரும் . வெளிநாட்டில் இருப்பவர்கள் உடன் இருப்பவர்களால், ஆதாயம் அடைவார்கள்.
    தனுசு: ராகு, 11-க்கும், கேது 5-ம் வீட்டிற்கும் பெயர்கிறார்கள். பெண்கள்,  தன்னம்பிக்கையையும் செயல்படுவார்கள். மாணவர்கள்,  சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பார்கள். கலைஞர்கள், கெட்டவர்களிடமிருந்து விலகினால், அதிக நன்மை பெறலாம். வேலைக் காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும்.  வியாபாரிகள்,  போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு புது யுக்திகளைக் கையாண்டு, லாபம் பெறுவார்கள்.  பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு, உயர்மட்டத்தில், இருந்த மோதல்கள் விலகும். முதியவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். சுய தொழில் புரிபவர்கள் எதிர்பர்த்த,  வசதியும், நிம்மதியும் கிட்டும் . கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த பனிப்போர் நீங்கும்.
    மகரம்:ராகு உங்கள் ராசிக்கு 10-வது வீட்டிலும், கேது 4-வது இடத்திலும் நிற்கிறார்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு, அலைச்சல் அதிகரித்தாலும்,  புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் அமைதி தொடர, பெண்கள், புத்திசாலித் தனமாக வேலை செய்யவும்.   பணியில் இருப்பவர்களுக்கு, உத்தியோகத்தில் ஏற்படும்இடமாற்றத்தால்,  வேலைச்சுமை  கூடும். . மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். வியாபாரிகள்,  கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொறுப்பில் உள்ளவர்களுக்கு,  முக்கிய ஆவணங்களைக் கையாளும்போது கவனம் தேவை. கலைஞர்கள், தங்கள் திறமைகளை பட்டை தீட்டிக் கொண்டால்,   புது வாய்ப்புகள் தானே வந்து சேரும்.
    பரிகாரம்: நாக முத்து மாரியம்மனுக்கு நெய் விளக்கேற்றி வரவும்.
    கும்பம்: ராகு  உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டிலும்,கேது 3-ம் வீட்டிற்கும் மாறுகிறார்கள்.மாணவர்களுக்கு,  செயல்களை எளிதில் முடிக்கும் திறன் பெருகும். பெண்கள், உடம்பில் இரும்புச்சத்து குறையாதிருக்க, சத்தான உணவு வகைகளை உண்டு வரவும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், இயந்திரங்களை இயக்குகையில், கவனமாக இருக்கவும். வியாபார  வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும் வாய்ப்பி ருப்பதால், வியாபாரிகள், . முக்கிய வேலையை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சுய தொழில் புரிபவர்கள், எந்த விஷயத்தையும் போராடி முடிப்பார்கள். கலைத் துறையினரின் சம்பளப் பாக்கி கைக்கு வந்துசேர்ந்தாலும், செலவுகளில் சிக்கனமாக இருப்பதே நல்லது. பணியில் இருப்பவர்கள், அரசு கோப்புக்களை கவனமாக கையாளவும்.
    பரிகாரம்: அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் மரத்தை சுற்றிவர, எதிலும் வெற்றி வந்து சேரும்.
     மீனம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு,  எட்டிலும், கேது இரண்டிலும் நிற்கிறார்கள். கேளிக்கையைத் தவிர்த்து,  மாணவர்கள் உயர் கல்வியில் கவனம் செலுத்தவும். கர்ப்பிணிப் பெண்களுக்கு, உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தூக்கமின்மை, மன உளைச்சல் ஆகியவை தலை காட்டாமலிருக்க, கலைஞர்கள் திட்டமிட்டு வேலை செய்யவும்.   பொது வாழ்வில் உள்ளவர்கள், எதிலும்  அவசர முடிவைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள், நயமாகப் பேசி பாக்கியை வசூல் செய்வதுதான் புத்திசாலித் தனம். முதியவர்களுக்கு பல்வலி, கண் எரிச்சல் போன்றவை வந்து நீங்கும். அடுத்தவருக்கு உதவுவதில் கவனமக இருந்தால், பணியில் உள்ளவர் களுக்கு, வீண்  பிரச்னைகள் வராமலிருக்கும்.
    பரிகாரம்: பாம்புப்புற்றுக்குமுன் விளக்கேற்றி வர, பிரச்னைகளின் தாக்கம் குறையும்.  

    திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன்,B.Sc, PG, Dip. in journalism,  ஜோதிடர், சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், எண் 43, தரைதளம், தேவராஜ் நகர், இரண்டாவது பிரதான சாலை, சோளிங்க நல்லூர், சென்னை-600119. செல்: 99432-22022. 98946-66048. மின்னஞ்சல்: astrogayathri@gmail.com
     

    படத்துக்கு நன்றி

    http://4.bp.blogspot.com/-KW5EEYWJBNQ/Tct3MhpIHRI/AAAAAAAAFoU/DCDu7K8FmEM/s1600/Rahu+Ketu+2.gif

    Share
  • வைரக்கீரிடம்

     

    திவாகர்

    இளவரசி எழிலினியின் கனவு நினைவாக நிறைவேறும் காலம் கனிந்து வருவதைக் கண்ணாரக் கண்டாள்.

    ஆகா.. மகாராஜா கூடிய விரைவில் மண்டையைப் போட்டுவிடுவாரென்று முதன் முதலாக அவள் நெஞ்சிலே தோன்றியது… இது நடக்காது என்றல்லவா இத்தனை நாள் நினைத்திருந்தோம்.. இது கனவாக இருக்கப் போகிறதா என்று எத்தனையோ முறை குழப்பத்தில் கிடந்தோமே.. இப்போதைக்கு இந்த மகாராணி என்கிற பட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவள் இழந்துகொண்டே இருந்தது கூட வாஸ்தவம்தான். ஆனால் அவள் நம்பிக்கை வீண் போகவில்லை என்றுதான் அவள் உள்மனது சொல்லியது. நன்றாக இளமை உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருந்த மகாராஜா தன் கடை மூச்சு எப்போது விடலாம் என்றுதான் கடந்த இரண்டு நாட்களாக படுத்துக் கிடந்ததாக அவள் மனதுக்குப் பட்டது. முதல்நாளே மருத்துவர்கள் நம்பிக்கையில்லாமல் முகத்தை மிகக் கோரமாக காண்பித்துக் கொண்டிருந்தது எழிலினியை மேலும் மகிழ்ச்சியில் மூழ்கடித்தது.  எப்போது அந்தத் தருணமோ.

    எத்தனை அழகான நாடு, மரகதமலைத் தேசம் என்றாலே எத்தனையோ நாடுகள் நினைத்த மாத்திரத்தில் பொறாமை படுமே.. எத்தனை செல்வ வளம், ஆனாலும் எல்லோரும் தோழர்களே என்பதால் இந்த நாடு நடுநிலையாக இருப்பதை அந்த எல்லோருமே விரும்புகிறார்களே, இப்படிப்பட்ட நாட்டுக்கு இன்னமும் பட்டத்து இளவரசியாகத்தான் தான் இருப்பதா.. நினைக்க நினைக்க எழிலினியின் மனம் வெதும்பியது.

    மகாராணியின் கிரீடத்து  வைர ஜொலிப்பு ஒன்றே போதுமே.. பளீரென ஒளி பட்டு பார்ப்பவரையெல்லாம் பரவசமாக்கி, ஆஹா.. எத்தனை அழகானது.. உலகத்திலேயே உயர்ந்த வகை வைரக் கற்களால் பதிக்கப்பட்ட கிரீடத்தின் மேல் பகுதியில் நீலமும், கீழ்பகுதியில் பச்சை மரகதமும் பதித்து நடுவில் மாணிக்கக் கல்லும் சேரும்போது அதன் ஒளி வீச்சு எல்லோரையும் கொள்ளை கொள்ளுமே.. ஆஹா.. ஒருநாள்..ஒருநாளாவது.. அதை அணிந்துகொள்ளும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லையே.. நான் ஆசைப்பட்டது எனக்கு வேண்டாதது இல்லையே.. எனக்குச் சொந்தமானதுதானே.. நியாய தர்மங்கள் படித்த அறிஞர்கள் சொன்னதுதானே.. ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் நான் அணிந்துகொண்டே தீரவேண்டியதுதானே.. அந்த நாள் எப்போது வரும்.. அல்லது வரவே வராதா.. இந்தக் கிழவி போட்டுக்கொண்டு வந்தாலே இத்தனை களை தருகிறதே.. தான் அணிந்து வரும்போது ஆகாயத் தேவதை வருவது போல தோற்றம் தராதா என்ன?

    அதைத் தான் தரிக்கும்  வாய்ப்பு இதுவரை நழுவிக்கொண்டே  போய்கொண்டிருக்கிறது.. இந்தக் கிரீடத்தைத்  தன் தலையில் பார்க்கும்போதெல்லாம் இந்த மருமகளுக்குதான் எத்தனை பொறாமை என்று இந்த மகாராணி கேவலமாக தனியே அந்தக் கிழத்தோழிகளிடம் சொல்லிக் கொள்வதும் அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இதற்கெல்லாம் ஒரு வரம்பு வேண்டாமா.. ஆசைப்படுவது யார், தன் சொந்த மருமகள்தானே.. அடுத்த பட்டத்துக்கு உரியவள்தானே.. இவளுக்கு உரிமை இல்லையா என்ன.. கடவுளே.. இதையெல்லாம் இவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது.. ’நீ இதுவரை அனுபவித்தது போதும்…. இனிமேலும் அனுபவிக்க ஆசைப்படுவதும் பாவம்’ என்று எப்படி புரியவைப்பது..

    சென்றமுறை கூட தனிமையில்  இருக்கும்போது தன் கணவனான பட்டத்து இளவரசரிடம் கண்டிப்பாகச் சொல்லி இருந்தாள். ’உங்கள் தந்தையிடம் நீங்களே சொல்லும் விதத்தில் எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கும் வயது ஏறிக்கொண்டே இருக்கிறது. அதனால் கிழம் ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும்.. போதும் அவர் இதுவரை ஆண்டது..’.

    இப்படிச் சொன்னவுடன் கணவன் கிண்டலாகச் சிரித்துக் கொண்டே சொன்னது இன்னமும் நினைவில் இருந்தது.. ”நேற்றுதான் இதை என் தம்பிகளிடமே கேட்டேன். இன்னும் எத்தனை நாள்தான் அப்பா இப்படியே இருப்பார்? மகாராசாவின் சிம்மாசனத்தில் அமர எப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்றேன்.. அதற்கு என் பெரிய தம்பி என்ன பதில் சொன்னான் தெரியுமா?”

    எழிலினிக்கு தன் மைத்துனர்களைப் பற்றி நன்றாகவே தெரியும்.. எல்லோருமே சுயநலக்காரர்கள்தான்.. இருந்தாலும் கணவனைக் கேட்டு வைத்தாள். “என்ன சொன்னான்?”

    ‘அண்ணா! கனவு காண்பதை முதலில் விட்டுவிடு.. அப்பா சிம்மாசனத்தை விட்டுக் கொடுப்பாரா?.. அவருக்கு ஆயுசு மகா கெட்டி.. பூரண ஆயுசு ’வேத நூல் பிராயம் நூறு.. மனுசர்தாம் புகுவார் எனினும்’ என்று ஒரு ஆழ்வார் பாடியிருக்கிறார். அதனால் சொல்கிறேன்.. அப்பாவாவது மேலே போவதாவது.. ஹூம்..’

    நடந்ததை வெறுப்போடு சொன்ன தன் கணவனை வருத்தமாகத்தான் பார்த்தாள் எழிலினி. அவனைச் சொல்லிக் குற்றமில்லை. தனக்கு வாரிசு உருவாக வாய்ப்பில்லை என்று மருத்துவர்களிடம் அறிந்ததிலிருந்து கொஞ்சம் வாழ்க்கையை வெறுத்து விட்டானென்று அவளுக்குத் தெரியாதா என்ன.. இந்தத் தம்பிகளும் இந்த விஷயம் தெரிந்து அண்ணனுக்குப் பிறகு எப்போதாவது தனக்கும் ஆட்சி கிடைக்கும் என்ற பேராசையோடு இருப்பதும், அதற்கு ஆலாய்ப் பறப்பதும் தெரியும்.. இது எந்த நாட்டிலும் சகஜமாக இருப்பது.. அதனாலென்ன.. மூத்த இளவரசன் அப்பா இருக்கையிலே ஆட்சிப் பொறுப்பேற்பதில் ஒரு தவறும் இல்லையே.. எத்தனை நாள் இப்படியே தனக்கு வாரிசு வராதே என்ற கவலையில் மூழ்கி, மற்றவர்களையும் வெறுப்பேற்றுவது.. இளவரசனுக்கு வேண்டுமானால் ஆட்சிப் பொறுப்பேற்க மனம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் மனைவியான தனக்கு அந்தப் பொறுப்பேற்று மகாராணி என்கிற பட்டத்துக்கு ஆளாக பரிபூரண உரிமை உண்டே.. வைரக் கிரீடத்தின் ஒளிபாய்ச்ச மாபெரும் சபை நடுவே தான் நடந்து செல்வது எப்போது.. தன் கணவருக்காவது தன் மனைவியை வைரக்கிரீடம் அணிவித்துப் பார்க்க ஆசை எழ வேண்டாமா? இளவரசனுக்கு தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொறுப்பு வேண்டாமா.. வாரிசு தனக்கு இல்லை என்பதில் அவளுக்கும் ஏகப்பட்ட வருத்தம் இருந்தாலும், தனக்கே உரிமையான கிரீடத்தின் மகிமையை அனுபவிக்காமல் தடுக்கும் உரிமை தன் கணவனுக்குக் கூட இல்லை..

    அப்போதுதான் அந்த செவிக்கினிய  செய்தி வந்தது. மகாராஜா தன்னை ஒருமுறை மிக அவசரமாக பார்க்க விரும்புவதாக தாதிப்பெண் சொல்லியதும் விஷயம் தெளிந்து தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டுதான் எழிலினி கிளம்பினாள். கடைசியாக ஒருமுறை பார்க்க விரும்புகிறார்.. பார்க்கட்டும் பார்க்கட்டும், எத்தனைதான் உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள முடியுமா.. கூடாதுதான்.. சோகத்தைத் தன் முகத்தில் வேண்டுமென்றே ஏராளமாகத் தேக்கி வைத்துக் கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தாள்.

    மகாராஜாவின் நிலைமைதான் சரியில்லையே.. ஆனால் இந்த மகாராணி, சந்தர்ப்பம் தெரிந்து செயல்படவேண்டாமோ.. கணவன் சாகக்கிடக்கும்போதும் அங்கே தன் தலையில் வைரக்கிரீடம் ஒளிபாய்ச்ச வேண்டுமென்றே அதை தன் நெற்றியில் இன்னமும் சற்று தூக்கி வைத்தாற்போல தன் கையால் சரி செய்து கொண்டு, யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற வகையில் இருக்கிறாளே.. ஆனால் முகத்தை மட்டும் உம்’மென்று வைத்துக் கொண்டு நடிக்க மட்டும் நன்றாகவேத் தெரியும்..

    எழிலினிக்கு எரிச்சல்தான் வந்தது. ’இப்போது, அதுவும் இந்த சோகமான வேளையில் இது தேவைதானா.. சமயசந்தர்ப்பம் என்பது கிடையவே கிடையாதா.. இங்கு என்ன சபையா நடக்கிறது.. நாட்டியம், நாடகக் காட்சிகள், புலவர் மேடை என சந்தோஷக் களையிலா நாம் இருக்கிறோம்.. மகாராஜா பாவம்.. அவர் கடைசிக் காலத்தில் எல்லோரையும் பார்க்க நினைக்கிறாரே என்ற ஒரு இங்கித ஞானம் வேண்டாமோ.. இவளெல்லாம் மகாராணியாம்.. ஆனால் இவளைப் போல நாம் நம்மைக் காட்டிக் கொள்ளக் கூடாது..

    நினைத்த மாத்திரத்தில் தனக்கு வந்த கண்ணீரை முகத்தில் தேக்க வைத்துக் கொண்டே மகாராஜாவின் அருகில் நின்றாள் எழிலினி. தன்னைப் பார்த்ததும் மகாராஜாவின் முகத்தில் கருணை பொங்கி வழியத் துவங்கியதையும் கண்டாள். அது அவர் குரலிலும் தெரிந்தது. மகாராணியிடம் பேசுவது போலப் பேசினாலும் பார்வை தன் மீதே இருந்ததும் புரிந்ததால் சோகத்தை இன்னமும் ஏராளமாகக் காண்பித்தாள். தேவைப்பட்ட நேரத்தில் ஊற்றெடுப்பது போல கண்ணீர் கொஞ்சம் பெருகி அது கீழேயும் சிந்தியது. மன்னர் உருகித்தான் போய்விட்டார்.

    “பார்த்தாயா மகாராணி உன் மருமகளை.. இவளுக்குக் கூட என் மீது எவ்வளவு பாசம்.. இந்தச் சின்னப் பெண்ணின் மனநிலை கூட உனக்குப் புரியவில்லையே..”

    தலைகுனிந்து நின்ற மருமகளை மகாராஜா இன்னமும் அருகே வரச்சொன்னார். “இளவரசி, உன்னிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது.. மருத்துவர் இப்போதுதான் சொல்லிவிட்டுப் போனார்..”

    புரிந்துவிட்டது அவளுக்கு. முகத்தில் இன்னமும் சோகம் கூட்டினாள். அதனால் கண்ணீரும் கூடியது. ஆனால் எதுவும் பேசவில்லை. ஆனால் அடுத்துப் பேசிய மகாராஜாவின் பேச்சு  அவள் தலையில் இடியாக இறங்கியது.

    “அழாதே மகளே! காலையில் வைத்தியர் நன்றாகப் பரீட்சித்து விட்டாரம்மா.. நீ எந்தவித கவலையும் படவேண்டாம். என் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லையாம். இன்னும் ஒரு மாத காலத்தில் பழையபடி உற்சாகத்தோடு என்னால் நடமாடமுடியுமாம்.. என் இதயம் எதையும் தாங்கும் மிகப் பலமான இதயமாம்”

    இப்போது எழிலினி முகத்தில்  உண்மையான சோகம் படரத் துவங்கியது. அதைக் கவனியாமல் அரசர் பேசினார்.

    “ஆனால் பார் மகளே.. எனக்கு இனியும் ஆட்சி செய்வதில்  அர்த்தமில்லை என்பதாகத்தான்  படுகிறது.. இந்த மகாராணியிடம் அப்படிச் சொன்னதும் அவளுக்குக் கோபம் வருகிறது. நீயாவது  நல்ல முறையில் எடுத்துச்  சொல்லி என் தலையின் பாரத்தை  இறக்கி வை மகளே!”

    இளவரசியின் உள் உணர்ச்சிகள் சட்டென மாறின. அந்த ஆனந்த உணர்ச்சியால் முகம் முழுவதும் மலரத் துடித்தாலும் தன்னை அடக்கிக் கொண்டாள். மகாராஜாவின் பாரம் இறக்கிவைப்பதை விட, மகாராணியின் தலைக்கனம் குறைய அருமையான வாய்ப்பு. மேலாகக் கவலையுடன் அவரைப் பார்த்துச் சொன்னாள். “மகாராஜா, நல்ல செய்திதானே.. உங்களை மறுபடி பழைய நிலையில் பார்ப்பதே எங்களுக்கு விருப்பம். மகாராணியார் சொன்னதிலும் எந்தத் தவறும் இல்லை..”

    மன்னர் முகத்தில் கோபம்  வெளிப்படையாக வந்தது.. மகாராணியைப்  பார்த்து அந்தக் கோபத்தைக்  காண்பித்தார்.

    “கேட்டாயா ராணி!.. உன்னை விட  உன் மருமகள் எவ்வளவோ மேல்.. உனக்கு அந்த வைரக் கிரீடப் பைத்தியம் இன்னமும் விடவில்லை. மகாராணி என்ற கர்வம் உனக்கு அதிகம்.. ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்.. நான் மகாராஜாவாக இருப்பதால்தான் நீ மகாராணியாக உரிமை பெறுகின்றாய்.. நான் அந்தப் பதவியில் போடும் கடைசி ஆணை இதுதான்.. முதலில் அந்தக் கிரீடத்தைக் கழட்டித் தூரப் போடு, அல்லது இன்றிரவே உன் மருமகளிடம் கொடுத்து விடு.. நான் தீர்மானித்து விட்டேன்.. நாளையே சபையில் இளவரசருக்கு முடிசூடப்படும். இவள்தான் அடுத்த மகாராணி!..

    கோபமாக வந்தாலும் தீர்மானமாக வந்த மன்னரின் பதில் எழிலினிக்கு மிக மிகப் பிடித்திருந்தது.. மகாராஜா சற்று ஆவேசமாகப் பேசி ஆணையிட்டதால் களைத்துப் போய் சற்றே கண்ணை மூடிப் படுத்தார். ஆனாலும் மன்னரின் இந்த முடிவுதான் மகாராணியின் கோப முகத்துக்குக் காரணம் என்பதும் தெரிந்தாலும் சோகத்தை முகத்தில் வைத்துக் கொண்டே வெளியேறினாள். அப்படி வெளியேறும்போது வேண்டுமென்றே ஒரு குறும்புப்பார்வையால் மகாராணியையும் அவள் வைரக்கீரீடத்தையும் ஒரு பார்வை பார்த்து விட்டு மன்னர் பார்க்காத வகையில் ஒரு புன்னகையும் வீசி விட்டுதான் சென்றாள். தன் பார்வையும் மகிழ்ச்சியும், மன்னரின் கடைசி ஆணையும் மகாராணியை மேலும் வெறுப்பேற்றும் என்றாலும் அவள் மனம் குதூகலத்தில் ஆழ்ந்து போய் விட்டது.

    அந்த மகிழ்ச்சிக் கொஞ்சமும்  குறையாமல் இளவரசனை ஓடிப்போய் இறுகக் கட்டிக் கொண்டாள். ’கேட்டீர்களா இளவரசே.. இல்லையில்லை, என் இனிய மகராசா.. ஆமாம்.. இனி நீங்கள்தான் மகாராஜா, மரகதமலை மகாராஜா, நான் மகாராணி! ஆகா.. உங்கள் தந்தை பிழைத்தாலும் உங்களைத்தான் நாளைக்கு மகாராஜாவாக ஆக்க முடிவு செய்துவிட்டார்.. எத்தனை நாள் கனவு.. இன்று நிறைவேறிவிட்டது.. இன்றிரவே என் கைக்கு வந்துவிடும்.. அந்த வைரக் கிரீடம் இனி என் தலையில்தான்…” என்று இறுகக் கட்டிக் கொண்டே அவனை விடுவித்தபோதுதான் கவனித்தாள். இளவரசன் தலை தொங்கி அவள் தோளிலேயே விழுந்தது.

    உடனடியாக தருவிக்கப்பட்ட மருத்துவர்  அவனைப் படுக்க வைத்துச் சோதித்தார். “இளவரசருக்கு ஏற்கனவே இதயம் பலவீனமம்மா.. எதையாவது அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னீர்களோ.. இப்படி ஆகிவிட்டதே.. இனி பிழைக்க வைக்க முடியாதம்மா.. என்ன ஒரு சோகம்.. தந்தைக்கு !”

    செய்தி கேட்டதும் அனைவரும் இளவரசனைப் பார்க்க விரைந்தனர். மகாராணியும் தன் வைரக்கிரீடம் எங்கும் ஒளி பாய்ச்ச கண்ணீருடன் ஓடோடி வந்தாள்..

     

    Share