இலக்கியம்கவிதைகள்

அன்ன தாதா சுகீ பவ

 

 சு. கோதண்டராமன்

வயிறு முட்டப் பாலை அருந்தி

வாயை விலக்கித் தாய்முகம் பார்த்து

இனிய வாயை இதமாய்த் திறந்து

கனிவும் மகிழ்வும் கண்களில் காட்டி

சின்னக் குழந்தை சிரிப்பதன் பொருள் என்

அன்னம் இட்டவர் நலமுடன் வாழ்க

 

ஏதும் இல்லா ஏழை மெலிந்து

காதம் நடந்து வேற்றூர் நண்ணி

வருத்தும் பசியினால் வயிறு சுருங்கி

அறத்திடு பிச்சை இரந்து பெற்றது

உப்பும் நீரில் ஊறிய சோறும்

தொப்பை குளிரத் தொலைந்தது துன்பம்.

உண்டபின் ஈந்தவன் முகத்தினை நோக்கி

கண்களில் நன்றிக் கண்ணீர் துளிர்க்க

சொன்ன செய்தி எதுவெனக் கேளீர்

அன்னம் இட்டவர் நலமுடன் வாழ்க.

 

படத்திற்கு நன்றி

http://www.melaniecooks.com/how-to-cook-perfect-rice-in-rice-cooker/283/

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க