ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்{02.12.2012-21.6.2013 வரை}

0

காயத்ரி பாலசுப்ரமணியன்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்{02.12.2012-21.6.2013 வரை}

ஜோதிட உலகில் சர்ப்ப கிரகங்கள் அல்லது நிழல்  கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு. கேது ஆகிய இரண்டு கிரகங்களும், மனிதனை ஆட்டிப்படைப்பதில் வல்லவர்கள். ஒரு மனிதனின் திறமையையும் சக்தியையும் மறைப்பது அல்லது அவனை உச்சத்திற்கு கொண்டு செல்லும்   ராகுவும் கேதுவும், தான் எந்த கிரகத்தோடு சேர்கின்றார்களோ, அல்லது  எந்தெந்த கிரகங்களால்  பார்க்கப்படுகிறார்களோ அதற்குத் தகுந்தாற்போல் பலன்களைத் தருவார்கள்.   

இந்த ராகு கேது பெயர்ச்சி் மூலம் ரிஷபம், சிம்மம்,விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகள்   சிறப்பான  பலன்கள்  பெறும் . மற்ற் ராசியைச் சேர்ந்தவர்கள், எதிலும் கவனமாக இருப்பதுடன், முறையான தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால், துன்பங்களின் தாக்கம் குறையும்.

நிகழும் நந்தன வருடம் கார்த்திகை மாதம் 17ம் நாள் (2.12.2012) ஞாயிற்றுக் கிழமை, புனர்பூசம் நட்சத்திரம்,  காலை மணி 10.51க்கு க்கு விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் துலாம் ராசியில்  ராகுபகவானும் கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில்  மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள்.

மேஷம்: ராகு உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார் கேது உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால் மாணவர்கள், திறமைகள் வெளிப்படும்வரை சற்று பொறுமை காப்பது நல்லது. குடும்பத்தில், வீண் விவாதம், மன உளைச்சல்கள் வந்து விலகும். எனவே பெண்கள் எந்த பிரச்னையையும் அமைதியான முறையில் கையாளவும். பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமான  விஷயத்தில்  சிந்தித்து  முடிவெடுத்தால், சிறப்பான பலனைப்பெறலாம். கணினித் துறையினருக்கு வேலை அதிகரித்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கலைத் துறையினர், போராடி வெற்றி பெறுவர். வியாபாரிகள், அரசுக்கான வரிகளை முறையாக செலுத்திவிடுவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவ்ர்கள், கடின உழைப்பால்  தங்கள் இலக்கை அடைவர். .
பரிகாரம்:  தினமும்,ஆனை முகத்தானை வழிபட்டு வரவும்.   
ரிஷபம்: ராகு உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார்.. கேது உங்கள் ராசியிலிருந்து 12-ம் இடத்தில் வந்து அமர்கிறார். மாணவர்களின் தாழ்வுமனப்பான்மை நீங்கி, அவர்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிட்டும். வியாபாரிகளுக்கு, . வேற்றுமொழிக்காரர்களாலும், , வெளிநாட்டிலிருப்பவர்களாலும்  ஆதாயம் உண்டு. பணியில் உள்ளவர்கள், பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிப்பார்கள் .  பொது வாழ்வில் உள்ள்ளவர்களுக்கு,  அரைகுறையாக நின்றுபோன வேலைகளை விரைந்து முடிக்க, நல்ல ஒத்துழைப்பு கிட்டும்.  கர்ப்பிணிப்பெண்கள், எண்ணெய் மற்றும் வாயுப் பதார்த்தங்களை தவிர்த்துவிடுதல் நல்லது. பொறுப்பில் உள்ளவர்கள்,  ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், வேலைகள் தேங்காமல் இருக்கும். கலைஞர்கள், தங்கள் பணியில், அலட்சியப்போக்கைக் தவிர்த்தால், எதிலும் நல்ல பெயர்தான்!
மிதுனம்: ராகு உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டிற்கும், கேது 11-ம் வீட்டிற்கும் அடியெடுத்து வைக்கிறார்கள். .தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொது வாழ்வில் உள்ளவர்கள், சுற்றியுள்ளவர்களின் பலம்- பலவீனம் அறிந்து செயல்படுங்கள்.  கலைஞர்களுக்கு, சொந்த  ஊரில் செல்வாக்கு உயரும். பணியில் உள்ளவர்களுக்கு, உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வரை பொறுமையாக இருப்பதே புத்தி சாலித் தனம். மாணவர்கள் உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல நேரிடலாம்.  பெண்கள் உறவுகளிடம்  கனிவாகப் பேசி காரியம் சாதிக்க இது ஏற்ற காலம். வியாபாரிகளுக்கு,  வழக்கு நெருக்கடிகள் நீங்கும்.  அத்துடன் சொந்த தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .  சுய தொழில் புரிபவர்களுக்கு அரசு கெடுபிடிகள் தளரும்.
பரிகாரம்: பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலை புதன் கிழமைகளில் வழிபட்டு வரவும்.
கடகம்: ராகு, உங்கள் ராசிக்கு 4-வது வீட்டிலும், கேது 10-வது வீட்டிலும்  வந்து அமர்கிறார்கள்.   மாணவர்கள் புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். பணியில் உள்ள  சிலர், வேலையின் பொருட்டு, எதிர்பாராமல் வீடு மாற வேண்டியது வரும். பெண்கள் சிக்கனமாக இருந்தால்தான், குடும்ப செலவுகள் கட்டுப்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் போது, வியாபாரிகள், . பங்குதாரர்களிடம் எசரிக்கையாக இருந்தால், லாபத்தில்தொய்வு ஏதுமிராது. கலைத் துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும். ஆயினும் அதற்கு உழைப்பும், சீரான திட்டமிடலும் தேவை.  எதிலும் ஒரு பதற்றம் இருக்கும் சூழலிருப்பதால், பொது வாழ்வில் உள்ளவர்கள், வீண் வேலைகளில் ஈடுபட வேண்டாம்.   சிறு தொழில் புரிபவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவுகள் வந்து சேரும்.
பரிகாரம்:கருமாரியம்மனை தொழுது வர, கவலைகள் யாவும் நீங்கும்.
 சிம்மம்: ராகுவின் பலன்கள்: ராகு பகவான்,  உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வந்து அமரும் ராகு,  எதிலும் வெற்றியைத் தருவார். கேது 9-ம் இடத்தில். மாணவர்கள், தேவையற்ற அவசரத்தைத் தவிர்த்தால்,  வீண் தொல்லைகள் உண்டாகாது. புதிய பொறுப்புகள் வந்தாலும், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு,  வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும்.  கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைக்கும்  சூழலிருப்ப தால், வியாபாரிகள் தேவைக்கேற்றவாறு, வேண்டிய  பொருட்களை மட்டும்  வாங்கிக் கொள்ளவும்.  கலைஞர்கள் வேண்டாத பழக்கங் களை மூட்டை கட்டிவைத்து விட்டாநிம்மதி காணலாம்.  வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கலாம். எனவே பெண்கள் பேச்சில் கவனமாக இருக்கவும்.சுய தொழில் புரிபவர்களுக்கு, பழைய பாக்கிகள் வசூலாகும்.
பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை துர்க்கைக்கு செவ்வரளி மலரால் அர்ச்சனை  செய்து வரவும்.
 கன்னி:  ராகு பகவான் உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டிற்கும்,  கேது பகவான் 8-ம் வீட்டிற்கும் செல்கிறார்கள். மாணவர்களுக்கு வீண்  செலவுகள் கூடும். ப்ணியில் உள்ளவர்கள், எவ்வளவுதான் பாடுபட்டாலும், வேலைகள் தடைப்பட்டு, பின் முடியும்.  பேச்சில் கவனம் தேவை என்பதை பெண்கள் நினைவில் கொள்வதே நல்லது. . கலைஞர்கள் புது நண்பர்களிடம் அளவாகப் பழகி வரவும். பொறுப்பில் இருப்பவர்கள், முன்கோபத்தைத் தவிர்த்தால், எதிலும் சுணக்கம் தலைகாட்டாமலிருக்கும். வீண் சந்தேகத்தால், வியாபாரிகளுக்கு, வியாபார வட்டத்தில், சில தொல்லைகள்,  அவ்வப்போது வந்து போகும். சுய தொழில் புரிபவர்கள், மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம்.  பணியில் உள்ளவர்கள், நிலம், வீடு வாங்குவதில் தகுந்த கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: காரியத் தடை விலக, ந்ந்தி பகவானை ஆராதனை செய்து வரவும்.   
துலாம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கும், கேது பகவான் 7-ம் இடத்திற்கும் மாறுகிறார்கள்.  வியாபாரிகள்,  அதிக வட்டிக்கு கடன் வாங் கும் சூழலுக்குத் தள்ளப்படலாம் மாணவர்களுக்கு,  வேண்டாத சலிப்பு வந்து போகும்.மணமான  பெண்களுக்கு,மருத்துவச் செலவுகளுக்குப் பின்,  குழந்தை பாக்கியம் உண்டாகும்.   சொத்துப் பிரச்னையைத் தீர்க்க வேண்டிய  வழி கிடைக்கும் வரையில், பொது வாழ்வில் உள்ளவர்கள் பக்குவமாக நடத்தலே நல்லது. பொறுப்பில் உள்ளவர்கள்,  இடம் அறிந்து பேசும் கலையைக் கையாண்டு வந்தால்,  வீண் தொல்லைகளை கட்டுக்குள் வைக்கலாம் .  உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் உரிமைகளும், சலுகைகளும்  கிடைக்க, சற்றே போராட வேண்டியிருக்கும். கலைஞர்கள் வேலைக்கு உரிய மரியாதயை அளித்தால் எதிலும் நன்மைதான்!
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில், உங்கள் ராசிநாதனான சுக்ரனை வலம் வர, துன்பங்கள் யாவும் தீரும்.
விருச்சிகம்:ராகு உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டிற்கும், கேது 6-ம் வீட்டிற்கும் போகிறார்கள்.  மாணவர்கள் எதிர்பார்த்த பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு, மறைமுக எதிர்ப்புகள் விலகும் . வீடு- மனை வாங்குவது, விற்பது ஆகிய இரண்டும், பெண்கள் விரும்பியது போல், லாபமாக முடியும் . வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். என்றலும், போட்டியாளர்களை வெல்ல, வியாபாரிகள் வேண்டிய வழிமுறைகள் பின்பற்றவும். . கலைஞர்கள் சிறு பிரச்னைகளை அனுபவ அறிவால் தீர்த்து, வரவைத் தக்க வைத்துக் கொள்வார்கள். பொது வாழ்வில் உள்ளவர்களை  கௌரவ பதவிகள் தேடி வரும் . வெளிநாட்டில் இருப்பவர்கள் உடன் இருப்பவர்களால், ஆதாயம் அடைவார்கள்.
தனுசு: ராகு, 11-க்கும், கேது 5-ம் வீட்டிற்கும் பெயர்கிறார்கள். பெண்கள்,  தன்னம்பிக்கையையும் செயல்படுவார்கள். மாணவர்கள்,  சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பார்கள். கலைஞர்கள், கெட்டவர்களிடமிருந்து விலகினால், அதிக நன்மை பெறலாம். வேலைக் காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும்.  வியாபாரிகள்,  போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு புது யுக்திகளைக் கையாண்டு, லாபம் பெறுவார்கள்.  பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு, உயர்மட்டத்தில், இருந்த மோதல்கள் விலகும். முதியவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். சுய தொழில் புரிபவர்கள் எதிர்பர்த்த,  வசதியும், நிம்மதியும் கிட்டும் . கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த பனிப்போர் நீங்கும்.
மகரம்:ராகு உங்கள் ராசிக்கு 10-வது வீட்டிலும், கேது 4-வது இடத்திலும் நிற்கிறார்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு, அலைச்சல் அதிகரித்தாலும்,  புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் அமைதி தொடர, பெண்கள், புத்திசாலித் தனமாக வேலை செய்யவும்.   பணியில் இருப்பவர்களுக்கு, உத்தியோகத்தில் ஏற்படும்இடமாற்றத்தால்,  வேலைச்சுமை  கூடும். . மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். வியாபாரிகள்,  கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொறுப்பில் உள்ளவர்களுக்கு,  முக்கிய ஆவணங்களைக் கையாளும்போது கவனம் தேவை. கலைஞர்கள், தங்கள் திறமைகளை பட்டை தீட்டிக் கொண்டால்,   புது வாய்ப்புகள் தானே வந்து சேரும்.
பரிகாரம்: நாக முத்து மாரியம்மனுக்கு நெய் விளக்கேற்றி வரவும்.
கும்பம்: ராகு  உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டிலும்,கேது 3-ம் வீட்டிற்கும் மாறுகிறார்கள்.மாணவர்களுக்கு,  செயல்களை எளிதில் முடிக்கும் திறன் பெருகும். பெண்கள், உடம்பில் இரும்புச்சத்து குறையாதிருக்க, சத்தான உணவு வகைகளை உண்டு வரவும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், இயந்திரங்களை இயக்குகையில், கவனமாக இருக்கவும். வியாபார  வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும் வாய்ப்பி ருப்பதால், வியாபாரிகள், . முக்கிய வேலையை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சுய தொழில் புரிபவர்கள், எந்த விஷயத்தையும் போராடி முடிப்பார்கள். கலைத் துறையினரின் சம்பளப் பாக்கி கைக்கு வந்துசேர்ந்தாலும், செலவுகளில் சிக்கனமாக இருப்பதே நல்லது. பணியில் இருப்பவர்கள், அரசு கோப்புக்களை கவனமாக கையாளவும்.
பரிகாரம்: அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் மரத்தை சுற்றிவர, எதிலும் வெற்றி வந்து சேரும்.
 மீனம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு,  எட்டிலும், கேது இரண்டிலும் நிற்கிறார்கள். கேளிக்கையைத் தவிர்த்து,  மாணவர்கள் உயர் கல்வியில் கவனம் செலுத்தவும். கர்ப்பிணிப் பெண்களுக்கு, உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தூக்கமின்மை, மன உளைச்சல் ஆகியவை தலை காட்டாமலிருக்க, கலைஞர்கள் திட்டமிட்டு வேலை செய்யவும்.   பொது வாழ்வில் உள்ளவர்கள், எதிலும்  அவசர முடிவைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள், நயமாகப் பேசி பாக்கியை வசூல் செய்வதுதான் புத்திசாலித் தனம். முதியவர்களுக்கு பல்வலி, கண் எரிச்சல் போன்றவை வந்து நீங்கும். அடுத்தவருக்கு உதவுவதில் கவனமக இருந்தால், பணியில் உள்ளவர் களுக்கு, வீண்  பிரச்னைகள் வராமலிருக்கும்.
பரிகாரம்: பாம்புப்புற்றுக்குமுன் விளக்கேற்றி வர, பிரச்னைகளின் தாக்கம் குறையும்.  

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன்,B.Sc, PG, Dip. in journalism,  ஜோதிடர், சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், எண் 43, தரைதளம், தேவராஜ் நகர், இரண்டாவது பிரதான சாலை, சோளிங்க நல்லூர், சென்னை-600119. செல்: 99432-22022. 98946-66048. மின்னஞ்சல்: astrogayathri@gmail.com
 

படத்துக்கு நன்றி

http://4.bp.blogspot.com/-KW5EEYWJBNQ/Tct3MhpIHRI/AAAAAAAAFoU/DCDu7K8FmEM/s1600/Rahu+Ketu+2.gif

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.