நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்: 4
இன்னம்பூரான்
1 + 1 = 3!
இந்த தலைப்பில் நான் ஒரு வருடத்துக்கு முன்னால் துவக்கிய அறிமுகக்கட்டுரையை ஆயிரத்துக்கு மேலான வாசகர்கள் படித்திருப்பதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. அடுத்து வந்த நீரிழிவு நோயை பற்றிய கட்டுரைக்கு அந்த வரவேற்பு தென்படவில்லை. சமீபத்தில் வலி நிவாரணத்தைப் பற்றி திருமதி. தேமொழி எழுதிய கட்டுரை பல நல்ல செய்திகளை அளித்தது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ள மருத்துவ விழிப்புணர்ச்சி, சமூகத்தில் பகிர்வுகள், ஆதாரமுள்ள இணைய தளங்கள் ஆகியவை நமக்கு உதவும் என்ற அடிப்படையில், இருவரும் இணைந்து எழுதத் தொடங்கியுள்ளோம். சில இதழியல் கோட்பாட்டுக்கு உட்பட்டு, அது ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.3: சஞ்சீவினி’என்ற தலைப்பில் இங்கே https://www.vallamai.com/paragraphs/29306/
டிசம்பர் 3, 2012 அன்று மறு பகிர்வு என்ற பகுதியில் பிரசுரம் ஆகியிருக்கிறது.படித்து பயன் பெறுக. எமக்கும் சொல்லுக. ஆர்வம் கூடும்.
ஒத்த சமுதாய நோக்கு உடைய இருவர் இணைந்து பணி செய்தால் 1+1=3.
உலகெங்கும் சாதிமத பேதமில்லாமல் கொண்டாடப்படும் புத்தாண்டு விழா நெருங்குகிறது. வாசகர்களுக்கு எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
(தொடரும்)
இன்னம்பூரான்
03 12 2012
படத்துக்கு நன்றி: http://coe.jmu.edu/LearningToolbox/images/oswald5.gif