மறவன்புலவு க. சச்சிதானந்தன்
2045 ஆவணி 13, 14, 15 (2014 ஆகத்து 29, 30, 31)
ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்பிப் பங்குபற்ற விரும்புவோர்
இணைப்பில் படங்களாக உள்ள அறிவித்தல் பார்க்க
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
2045 ஆவணி 13, 14, 15 (2014 ஆகத்து 29, 30, 31)
ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்பிப் பங்குபற்ற விரும்புவோர்
இணைப்பில் படங்களாக உள்ள அறிவித்தல் பார்க்க

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
அணுத் தொடரியக்கம் புரிந்து
அணுசக்தி வெளியாக்கியது போல்,
உயிரியல் விஞ்ஞானத்தில்
முதன்முதல் டியென்ஏ
மூலச் சங்கிலி வடித்தது போல்
அகில நாட்டு விஞ்ஞானிகள் இயக்கும்
செர்ன் விரைவாக்கி யந்திரம்
பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய்
அரங்கேற்றி உருவாக்கும் !
கடவுள் துகள்
தடத்தைக் கண்டதாய்
உறுதிப் படுத்தினர் .
ஒளிவேகத்தை ஒட்டிய விரைவில்
எதிர் எதிரே
இரு புரோட்டான்கள் மோதி
பெருந் துகளாய் மாறிய விந்தை !
பூஜியச் சுழற்சி ஹிக்ஸ் போஸான்
பரமாணுக்கு நிறை அளிப்பது
கடவுள் துகளே !
புதிய பரமாணுத் துகளொன்று
உதித்தது செர்னில் !
இரு குவார்க்கு இரு எதிர்க் குவார்க்குடன்
உருவான பரமாணுத் துகள்
கண்டு பிடிக்கும் !
பராமணு வயிற்றில் அடைகாத்து
வெடித்துப் பொரிக்கும்
குஞ்சுகள் !
குளுவான்கள் ! குவார்க்குகள் !
லிப்டான்கள் !
ஃபெர்மி யான் ! ஹிக்ஸ் போஸான் !
பிரபஞ்ச செங்கற்கள் !
+++++++
புதிரான பரமாணுத் துகள்போல் தோன்றி ஓர் உறுதியான நிலையில் இருக்கும் காட்சியை ஐயமறக் கண்டோம். துகள் போலிருந்த அந்தப் பரமாணுவில் இரு குவார்க்கும், இரு எதிர்க் குவார்க்கும் [Two Quarks & Two Anti-Quarks] உள்ளிருந்தன. இந்த அரிய கண்டுபிடிப்பு வழக்கமான குவார்க் மாடலை [Traditional Quark Model] ஒத்திருக்க வில்லை. அந்தத் துகள் பௌதிக விஞ்ஞானத்தில் ஓர் உறுதியான ஈடுபாட்டுடன் உலவப் புதியதோர் கண்ணோட்டத்தை எங்களுக்குக் கொடுக்கலாம்.
தாமஸ் ஸ்குவார்னிக்கி விஞ்ஞான வெளியீட்டு ஆய்வாளர்.
“செர்ன் பூத விரைவாக்கி யந்திரத்தில் கிடைத்த பில்லியன் கணக்கான புரோட்டான்-புரோட்டான் மோதல் கணித விளைவுகளை [LHC Proton-Proton Collision Data] ஆராய்ந்த செர்ன் விஞ்ஞானிகள் “ஹிக்ஸ் போஸான்” புதுத் துகள் இருப்பதை [99.99%] உறுதிப் படுத்தியுள்ளார். அதன் கண்டு பிடிப்பு நேர் போக்குத் துகள் பௌதிக விதிக்கு [Mainstream Particle Physics Priciples] ஏறக்குறைய ஏற்புடையதாய் உள்ளது.”
டேவிட் சார்ல்டன், [CERN LHC ATLAS Team] [மார்ச் 14, 2013]
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
புதிய பௌதிகம் உருவாக்கும் புது அணுக்கருத் துகள் கண்டுபிடிப்பு
2014 ஏப்ரல் 16 ஆம் தேதி அமெரிக்காவின் சிரக்கூஸ் பல்கலைக் கழகத்தின் [Syracuse University] பௌதிக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதுவிதப் பரமாணுவை செர்ன் அணு உடைப்பி யந்திரத்தின் மூலம் கண்டு பிடித்தாக வெளியிட்டுள்ளார்கள். 2012 ஆண்டில் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட “கடவுள் துகள்” எனப்படும் “ஹிக்ஸ் போஸானுக்குப் பிறகு ஒரு சிறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது செர்ன் பூதப் பரமாணு மோதல் நளினச் சாதனத்தின் ஒரு பகுதிக் குழுமுயற்சியாகக் கருதப்படுகிறது. [CERN Large Hadron Collider Beauty Collaboration]. இந்தக் கண்டுபிடிப்பு பன்முக நாட்டு ஆய்வுத் திட்டத்தின் ஒரு விளைவு. இக்குழு புதிய குவாண்டம் விசை களையும், [Quantum Forces] துகளையும் ஆய்வு செய்யும். இந்த முயற்சி உறுதியான முறையில் ஐயப்பாடு இல்லாமல் நிரூபணம் செய்யப் பட்டுள்ளது. குழுத் தலைவர் தாமஸ் ஸ்குவார்னிக் தான் கண்டுபிடித்த பரமாணுத் துகளில் இரு குவார்க்குகளும், இரு எதிர் குவார்க்கும் உள்ளதாக கூறினார். பல்லாண்டுகளாக அந்தத் துகள் இருப்பை ஊகித்தாலும், அதன் இருப்பு இப்போதுதான் ஐயப்பாடு இல்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

“2012 ஜூலை மாதத்தில் கிடைத்த முன்னோடி மோதல் விளைவுகள் முக்கியமானவை. காரணம் அவை “ஹிக்ஸ் போஸான்” கடவுள் துகளைத் தான் ஆய்ந்து வருகிறோம் என்றெனக்குத் தெளிவாய்க் காட்டின. ஆயினும் அது எந்த வகையான ஹிக்ஸ் போஸான் என்று தீர்மானமாக அறிய இன்னும் நெடுங்காலம் ஆகும்.”
ஜோ இன்காண்டிலா [Physicist Spokeperson, CERN Compact Muon Solenoid Team (CMS)]
“கண்டுபிடித்த “ஹிக்ஸ் போஸான்” எந்த வகையைச் சேர்ந்த துகளென்று அறிய, துகள் பௌதிகத்தில் ஐயத்துக்கு அப்பால் முழுமையான ஆய்வு செய்யப் பட வேண்டும். ஆயினும், பூஜியச் சுழற்சி [Zero Spin] உறுதி யாக்கப் பட்டதால், இந்தக் கண்டுபிடிப்பு புத்துணர்ச்சி உண்டாக்குகிறது ! பூஜியச் சுழற்சி கொண்ட முதல் அடிப்படைத் துகளே ஹிக்ஸ் போஸானா கத்தான் இருக்க வேண்டும்.”
டாக்டர் வைட்பெர்க் [CERN Particle Physics Scientist]

கடவுள் துகள் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு உறுதி செய்யப் பட்டது
2012 ஜூலையில் பூதச் செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் விஞ்ஞானிகள் தடம் மட்டும் கண்ட கடவுள் துகள் எனப்படும் “ஹிக்ஸ் போஸான்” இப்போது [2013 மார்ச் 14] விஞ்ஞானிகளால் ஏறக்குறைய [99.99%] உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதுத் துகள்தான் நமது பிரபஞ்சத்தின் தோற்றத்தின் மூலச் செங்கல் என்று கருதப்பட்டு அது இருப்பதாய் 1964 இல் பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவரால் அனுமானிக்கப் பட்டது. காணப்படாத இந்த கடவுள் துகளைக் கண்டுபிடிக்க உலக விஞ்ஞானிகள் 10 பில்லியன் டாலர் செலவில் 27 கி.மீ. நீளமான [16 மைல்] செர்ன் விரவாக்கியைக் கட்டியமைக்க வேண்டியதாயிற்று ! இந்த விஞ்ஞானத் தேடல் கடந்த 25 ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்விதம் அசுர சாதனை செய்து விஞ்ஞானிகள் தாம் தேடிய கடவுள் துகளை உருவாக்கிப் படமெடுத்து உறுதிப்படுத்தியது பெரிய நிதிச் செலவையும் நேரச் செலவையும் நேர்மைச் செலவாக்குகிறது ! இப்போது செர்ன் நிறுத்தம் செய்யப் பட்டு இரண்டு வருடம் பராமறிப்புப் பணிகள் நடக்கும். அதற்குப் பிறகு செர்ன் விரைவாக்கி இருமடங்கு மிகையான ஆற்றலில் [14 TeV] 2015 இல் மீண்டும் இயங்கி ஐந்து வகை ஹிக்ஸ் போஸான்களை ஆக்கி ஆழ்ந்த ஆராய்ச்சிகள் செய்யும்.
ஹிக்ஸ் போஸான் ஓர் அடிப்படைத் துகள் ! மிகக் கனமானது ! சீக்கிரம் உடைந்து சிறு துகளாவது ! காலக்ஸிகள், சூரியன்கள், அண்டக்கோள்கள், கருந்துளை, கரும்பிண்டம், உயிரினங்கள், போன்ற பிரபஞ்சப் படைப்புகள் அனைத்துக்கும் “மூலச் செங்கல்” என்று கருதப்படுவது. அதன் இருப்பு அனுமானமும், கண்டுபிடிப்பு உறுதிப்பாடும், பிரபஞ்சத் தோற்றப் பெரு வெடிப்பு நியதியைப் பூர்த்தி செய்து வலுப்படுத்துகிறது. “பூஜிய சுழற்சி” [Zero Spin] இருப்பதாய் நிரூபணமான இந்த ஹிக்ஸ் போஸான் இல்லாமல் போனால் “துகள் பௌதிகத்தின் நேர்த்தி மாதிரி நிலைப்பாடு” [Standard Model of Particle Physics] பிரபஞ்சத்தில் நிகழும் இயக்கங்களுக்கு விளக்கம் தர முடியாமல் போகும். அது இல்லாமல் ஈர்ப்பியல் விசையை விளக்கும் ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதிக்கு உடன்பாடு ஏற்படாது.
1969 இல் சந்திரனுக்குக் குறிப் பயணம் செய்த மகத்தான மனித முயற்சி போல் ஹிக்ஸ் போஸான் துகளைத் தேடிச் சென்றதும் உலக மாந்தர் கவனத்தைக் கவர்ந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்பொல்லோ விண்வெளிக் குறிப் பணிகள் பொதுமக்களை விஞ்ஞானத் தேடல் கண்டுபிடிப்புகளில் ஈர்த்தன. அடுத்த பிறவி விஞ்ஞானிகளுக்கும் புத்துணர்ச்சி ஊட்டி ஆர்வத்தைத் தூண்ட இந்தக் கடவுள் துகள் கண்டுபிடிப்பு நீடித்துச் செல்லும்.
பேராசிரியர் பீட்டர் நைட் (Professor Peter Knight, President of Institute of Physics, UK. )
ஹிக்ஸ் போஸான் துகள் கண்டுபிடிப்பு உயிரியல் விஞ்ஞானத்தில் “டி யென் ஏ” (DNA) மூலவி கண்டுபிடிப்புக்கு ஒப்பாகும். இது டியென்ஏ கண்டுபிடிப்பின் ஒரு பௌதிக வடிவம். நமது பிரபஞ்ச அமைப்புப் பின்னல் நாரைப் (Fabric of the Universe) புரிந்து கொள்ளும் முயற்சியின் போக்கில் புது தீரச் செயலுக்கு ஒரு பாதை உண்டாக்கும்.
பேராசிரியர் பீட்டர் நைட்.
கடவுள் துகள் கண்டுபிடிப்பு ஒரு மகத்தான சாதனை. 15 ஆண்டுகள் அகில நாடுகளின் கூட்டுறவில் மாபெரும் பரமாணு உடைப்பியைக் (Large Hadron Collider) கட்டி அமைத்ததின் பயனைப் பெற முடிந்தது. இந்த அறிவிப்பானது “துகள் பௌதிகத்தின்” நிலைத்துவ மாடல் (Standard Model of Particle Physics.) ஏற்பு உடையது என்பதை உறுதிப் படுத்தி உள்ளது.
பேராசிரியர் பீட்டர் நைட்.
“உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”
ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)
“செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”
ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)
“இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி வி¨சையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.
டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)

“பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ந்து பில்லியன்த் தசம விநாடியில் (Billionth of a Second after the Big Bang) தோன்றிய திரைக் காட்சியைக் கண்டு விட்டோம். இந்தப் புதிய கட்டம் “முதல் பௌதிகம்” என்று பெயர் அளிக்கப் படுகிறது ! இவற்றைப் போல் இன்னும் ஈராண்டுகள் செய்யப் போகும் பல பில்லியன் புரோட்டான் மோதல்களின் துவக்கக் கட்டம் இது.”
ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist)
“இது உலகத் தோற்றத்தைக் கூறும் முதற்பிரிவு (Genesis Chapter -1) விளக்கம் நோக்கி மனிதர் வைக்கும் மாபெரும் கால்தடம் ! செர்ன் உடைப்பி பிரபஞ்சத் தோற்றப் படைப்பு யந்திரம் (Genesis Machine) ! பிரபஞ்ச வரலற்றின் மாபெரும் மகத்தான காட்சியை மீண்டும் திரையிட்டுக் காட்ட செர்ன் உதவுகிறது ! புதிரான இந்த நுண்துகள்களின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் நாம் யாரென்னும் கருத்தை மாற்றி விடலாம் !”
மிஸியோ காக்கு, பௌதிக மேதை (Michio Kaku, New York)
“மேற்கட்ட செர்ன் சோதனையில் விரைந்து பாயப் போகும் எதிர் எதிர் ஒளிக்கற்றைகள் நேரிணைப்பு (Alignment of Beams) செய்யப் படவேண்டும். அது நிபுணருக்குப் பெரும் சவாலானது. அட்லாண்டிக் கடலின் அகண்ட இருபுறக் கரைகளி லிருந்து இரண்டு எதிர், எதிர் ஊசிகளை அனுப்பிக் கடல் நடுமையத்தில் அவற்றை மோத வைக்கும் சவாலைப் போலாகும்,”
ஸ்டீவ் மையர்ஸ் (Steve Myers, Director of CERN Accelerators & Technology)
“இந்தப் புதிய ஹிக்ஸ் போஸான் தேடல் விளைவுகள் டெவடிரான் விரைவாக்கியில் கிடைத்த ஏராளமான தகவல் இலக்கத்தாலும் (Tevatron Collision Data) அநேகப் பட்டப் படிப்பு நிபுணர் வடித்த கூரியக் கணித விதிகளாலும் (Smart Search Algorithms) கிடைத்தவை.”
ராபர்ட் ரோஸர் (Fermilab Co-Spokeperson, CDF & DZero Analysis Groups)
“ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியின் (Tevatron Collider) உற்பத்தியைத் தூண்டி உன்னத நிலைக்கு ஆய்வுகள் உயர்ந்துள்ளன. டெவடிரான் உடைப்பியின் சிறந்த சோதனை விளைவுகளுக்கு நாங்கள் நன்றி செலுத்து கிறோம். உலக நாடுகளின் CDF & DZero சோதனை ஆய்வுக் கூட்டாள விஞ்ஞானிகள் சாதித்த விளைவுகள் துடிப்புணர்ச்சி உண்டாக்குபவை. அவை ஹிக்கிஸ் போஸான் தேடல் ஆராய்ச்சியில் மகத்தான முன்னேற்றைக் காட்டியுள்ளன.”
டெனிஸ் கோவர், (Dept of Energy Associate Director of Science for High Energy Physics)
“உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”
ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)
“செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”
ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)
“இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி விசையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.
டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)
செர்ன் விரைவாக்கி யந்திரம் உண்டாக்கிய புரட்சிகரமான மூலத்துகள் ஹிக்ஸ் போஸான்
சுமார் பதினாங்கு பில்லியன் ஆண்டுகட்கு முன்பு நேர்ந்ததாகக் கணிக்கும் பிரபஞ்சப் பெருவெடித் தோற்றத்தில் முதன்முதல் உதித்ததாக யூகிக்கபட்ட “ஹிக்ஸ் போஸானைப்” போன்ற ஒரு துகளைச் செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் புரோட்டான்களை மோத விட்டுக் கண்டுபிடித்திருப்பதாக பிரிட்டிஷ் துகள் பௌதிக விஞ்ஞானிகள் 2012 ஜூலை 5 ஆம் தேதி அறிவிப்பு செய்து ஒரு பரபரப்பை உண்டுபண்ணினார். அந்தத் துகளின் பெயர் : ஹிக்ஸ் போஸான் (Higgs Boson). அந்த அற்புதத் துகளை வடிவாக்கிய விரைவாக்கி யந்திரம் செர்ன் அல்லது “பரமாணு பெரு உடைப்பு யந்திரம்” (CERN or Large Hadron Collider) என்பது. கண்டுபிடித்த புதிய துகள், ஹிக்ஸ் போஸானின் பண்பாடுகள் கொண்டதற்கு மெய்யான சான்றுகள் கிடைத்துள்ளதாயினும் இந்தக் கண்டுபிடிப்பு ஆரம்ப நிலை செர்ன் ஆய்வு விளைவுகளை வைத்தே இப்போது அறிவிப்பு செய்யப் பட்டிருக்கிறது. கடவுள் துகளின் உறுதிப்பாடு பூரணமாக இன்னும் ஏராளமான விளைவுப் பதிவுகள் ஆராயப்பட நீண்ட காலம் ஆகலாம். புதுத் துகள் எந்த விதமான வடிவம் எடுத்தாலும் சரி, இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு அணுப் பிண்டத்தின் அடிப்படை அமைப்பு (Fundamental Structure of Matter) பற்றிய நமது பழைய அறிவு பேரளவில் உயர்ந்து முன்னேறப் போகிறது.
2012 ஜூலை ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த செர்ன் விரைவாக்கி ஆய்வு நிபுணர் நடத்திய “துகள் பௌதிகப் பேரவையில்” (Major Particle Physics Conference) பிரிட்டிஷ் துகள் விஞ்ஞானிகள் இந்த அரிய கண்டுபிடிப்பை முதன்முதல் வெளியிட்டனர். நீண்ட காலம் எதிர்பார்த்த ஹிக்ஸ் போஸான் துகள் உண்டாக்கிய செர்ன் அட்லாஸ், சி யெம் எஸ் சோதனைக் கருவி விளைவுகளை (ATLAS, CMS Experiments) அறிவித்தார். இரண்டு சோதனைக் கருவிகளின் விளவு களும் 125 –126 GeV (Gega Electron Volt Energy) கெகா எலக்டிரான் ஓல்ட் சக்தியுள்ள துகளை உருவாக்கின. இந்த அறிவிப்பு முன்னோடி விளைவுகளை (Preliminary Results) வைத்துச் செய்யப் பட்டது. ஆனால் பூரண உறுதி அளிப்பதற்கு இன்னும் ஆராயப் பட வேண்டிய சோதனை விளைவுகள் ஏராளமாய் உள்ளன. விஞ்ஞானிகள் ஆயினும் ஹிக்ஸ் போஸான் பண்பாடு உள்ள ஓர் புதுத் துகளை நிச்சயம் செர்ன் விரைவாக்கி உண்டாக்கிய விட்டதாக உறுதியாக அறிவித்தார்கள். 2012 ஜூலை மாதக் கடைசியில் அனைத்து விளைவுகளும் ஆய்வு செய்யப் பட்டு முடிவான அறிவிப்பு செய்யப்படும் என்பது தெரிகிறது.
ஹிக்ஸ் போஸான் மூலத்துகள் கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் என்ன ?
இரண்டாம் உலகப் போரின் போது 1945 இல் நூற்றுக்கணக்கான அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் சோதனைத் தளத்தில் அணுவைப் பிளந்து தொடரியக்கத்தைக் கட்டுப் படுத்தி அணுசக்தியின் பேராற்றலை முதன்முதல் வெளிப்படுத்திய நிகழ்ச்சி, நூற்றுக் கணக்கான உலக விஞ்ஞானிகள் ஐரோப்பிய செர்ன் விரைவாக்கியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து பிரபஞ்ச தோற்றத்தின் கடவுள் துகளை உருவாக்கிக் கண்டுபிடித்ததற்கு நிகராகும். இப்போது செர்ன் விஞ்ஞானி களின் குறிக்கோள் என்ன ? கண்டுபிடித்த ஹிக்ஸ் போஸான் துகளின் துல்லிய இயற்கைப் பண்புகளை ஆழ்ந்து அறிவது, அதனால் இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி விளக்கமாக அறிவது போன்ற புதிய விபரங்களே. அவ்விதம் பெற்ற துகளின் பண்பாடுகள் துகள் பௌதிகத்தில் இறுதியாக நிலைத்துவ மாடலில் நிரப்பப் பட வேண்டிய உட்கூறா (Missing Ingredient in the Standard Model of Particle Physics) என்பது தெளிவாக்கப் படும். அல்லது ஹிக்ஸ் போஸான் துகள் புரட்சி உண்டாக்கப் போகும் ஒரு புது அதிசயமா என்பது அறியப் படும்.
துகள் பௌதிகத்தின் நிலைத்துவ மாடல் என்ன சொல்கிறது ? நாம் தோன்றக் காரணமான மூலாதார துகள்கள், பிரபஞ்சத்தில் காணப்படும் அண்ட பிண்டங்கள் உண்டாக உதவிய அடைப்படைத் துகள்கள், அவற்றுடன் பின்னிப் பிணைந்து இயக்கி வரும் அகில விசைகள் (Forces of the Universe) ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது. பிரபஞ்சத்தில் அண்ட பிண்டங்களின் இருப்பு மொத்தத்தில் 4% மட்டுமே. தற்போது கண்டுபிடிக்கப் பட்ட கடவுள் துகள் 96% மர்மாக இருக்கும் பிரபஞ்ச மீதிப் புதிரை விடுவிக்க ஒரு பாலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஹிக்ஸ் போஸான் பற்றிய ஆணித்தரமான விளக்கம் வெளிவர இன்னும் செர்ன் சோதனை விளைவுகளை ஆராய நீண்ட காலம் ஆகும் என்று அறியப் படுகிறது.
ஹிக்ஸ் போஸானை முன்மொழிந்த பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ்
கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் அதை ஊகித்து விளக்கிய பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் பெயரைக் கொண்டது. 1964 இல் அவர் ராபர்ட் பிரௌட், பிரான்காய் எங்லெர்ட், டாம் கிப்பிள், ஹேகன், ஜெரால்டு குரல்னிக் ஆகியோரின் கருத்துக்களுடன் மூன்று வெளியீடுகள் வெளியிட்டார். அந்தக் கோட்பாடு ஹிக்ஸ் தளம், போஸான் சார்ந்த ஹிக்ஸ் யந்தரவியல் (Higgs Mechanism Related to Higgs Field & Boson) என்று அழைக்கப் பட்டது. ஹிக்ஸ் போஸான் ஒரு கனமான துகள் ஆனதால், அது செர்ன் விரைவாக்கியில் உருவானதும் உடனே சிதைந்து வேறு சிறு பரமாணுக்களாய் மாறுகிறது (It decays almost immediately into two jets of hadrons and two electrons, visible as lines.) ஹிக்ஸ் போஸான் தேடல் செர்ன் விரைவாக்கியில் 2010 ஆண்டின் ஆரம்ப காலத்தில் துவங்கி, அமெரிக்காவின் ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் விரை வாக்கியில் 2011 ஆம் ஆண்டில் அது மூடுவது வரை ஆய்வு செய்யப் பட்டது.
பரமாணுகளுக்கு நிறை தருவது (Mass) இந்த ஹிக்ஸ் போஸான். ஹிக்ஸ் தளத்தின் ஈடுபாடே (Higgs Field Interaction) அடிப்படைத் துகள்களுக்கு நிறை கொடுக்க ஏதுவாகிறது. ஓர் அண்டத்தின் ஈர்ப்பு விசையே அதன் மீதுள்ள பொருளுக்கு எடை கொடுப்பது போல் அதைக் கருதலாம். ஈர்ப்பு விசை பூஜியமானால் பொருளுக்கும் எடை இல்லாது போகும். ஹிக்ஸ் துகள் ஒரு போஸான் துகள். அடிப்படைத் துகள் சில இந்திய விஞ்ஞானி சத்தியேந்தர நாத் போஸ் பெயரைத் தாங்கி உள்ளன. அவர் ஐன்ஸ்டைன் காலத்தில் அவருடன் விஞ்ஞானப் பணி செய்தவர். போஸன் துகள் ஒரு தனிப் பண்பு கொண்டது. அது அதைப் போன்று ஒத்திருக்கும் பற்பல துகள்களை ஒரே இடத்தில், ஒரே குவாண்டம் நிலையில் (Quantum State) வைத்திருக்க அனுமதிக்கும். மேலும் நிலைத்துவ மாடல் விதிப்படி ஹிக்ஸ் போஸானுக்கு சுழற்சி இல்லை, நேர், எதிர் மின்னேற்றங்கள் கிடையா. நிற ஏற்றமும் இல்லை. (No Intrinic Spin, No Electrical Charge, No Color Charge).
பூர்வீக மூலத் துகள் தேடலில் நெருங்கிச் சென்ற முதல் விரைவாக்கி யந்திரம்
வெகு விரைவில் உலகப் பெரும் விரைவாக்கி புதிய அடிப்படைத் துகளைக் கண்டுபிடிக்கத் துவங்கும் நிலைக்கு வந்து விட்டதென்று ஒரு பெரும் செர்ன் விஞ்ஞானி அறிவித்தார். செர்ன் யந்திரத்தின் சமீபத்திய இயக்க முன்னேற்றம் தொடர்ந்தால், விஞ்ஞானிகள் இவ்வாண்டு வேனிற் கால முடிவுக்குள் துகள் பௌதிகத்தில் (Particle Physics) புதியதோர் திருப்பத்தை உண்டாக்குவார் என்று தெரிந்தது. அவற்றுள் முதலில் கண்டுபிடிக்கப்பட இருப்பவை ஏற்கனவே உள்ளதாக ஊகிக்கபட்ட இரண்டு போஸான் துகள்கள் (Boson Particles). பத்து பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப் பட்டு ஆரம்பத்தில் ஹீலியம் கசிந்து பழுதுகள் நீக்கப் பட்டு முதன்முதல் 2009 நவம்பரில் செர்ன் விரைவாக்கி யந்திரம் செம்மையாக இயங்க ஆரம்பித்து பல பில்லியன் மோதல்களை உண்டாக்கி விட்டது. பிரென்ச்-சுவிஸ் எல்லையில் ஜெனிவாவுக்கு அருகில் 27 கி.மீ. விட்டமுள்ள வட்ட அடித்தளத்தில் இயங்கி வருகிறது செர்ன் விரைவாக்கி யந்திரம். அந்த உலகப் பெரும் விரைவாக்கி அணுவின் அடிப்படைத் துகள் “ஹிக்ஸ் போஸான்” என்பதை 1000 GeV (Gega-electron Volt) மின்னாற்றலில் காணலாம் என்று விஞ்ஞானிகளால் ஊகிக்கப் பட்டது.
புரோட்டான் நிறையைப் போல் ஆயிரம் மடங்கு பெரிதானது ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்னும் ஊகிப்பு அடிப்படைத் துகள். இந்த நிறை அளவீட்டில் முதலில் உதிக்கும் புதிய துகள்கள் ‘பிரதம W போஸான்கள்’ & ‘பிரதம Z போஸான்கள்’ (W Prime Bosons & Z Prime Bosons). இவை இரண்டும் கனமான போஸான்கள்.. மெலிந்த போஸான்கள் எனப்படும் ‘W போஸான்கள்’ & ‘Z போஸான்கள்’ (W Bosons & Z Bosons) நலிந்த இயக்கப்பாடுகளுக்குப் (Weak Interactions OR Weaker Nuclear Force) பொறுப் பானவை. நான்கு அடிப்படை இயக்கப்பாடுகள் : ஈர்ப்பியல் சக்தி, மின்காந்த சக்தி, வலுத்த அணுக்கருச் சக்தி, நலிந்த அணுக்கருச் சக்தி. (Four Fundamental Interactions of Nature: Gravitation, Electromagnetism, Strong Nuclear Force & Weaker Nuclear Force).
1980 இல் W போஸான் & Z போஸான் ஆகிய இரண்டும் 100 GeV (Gega-Electron Volt) சக்தியில் பழைய செர்ன் விரைவாக்கியில் கண்டுபிடிக்கப் பட்டன. நிறை மிகையான துகள்களைப் பதிவு செய்ய அதிக சக்தி வாய்ந்த தற்போதுள்ள விரைவாக்கி யந்திரம் செர்ன் போல அமைக்க வேண்டிய தாயிற்று. ஒரு சில மாதங்களில் செர்னில் 1000 GeV மின்னாற்றல் உண்டாக்க முடியும் என்று ஆக்ஸ்·போர்டு பல்கலைக் கழகத்தின் துகள் பௌதிகவாதி டாக்டர் டோனி வைட்பர்க் கூறுகிறார். செர்ன் விரைவாக்கி யில் இவ்வாண்டும், அடுத்த ஆண்டும் 3.5 TeV (Tetra- Electron Volt) மின்னாற்றலில் கணை மோதல்கள் நடத்தப் படும். செர்ன் பொறியியல் நிபுணர் படிப்படியாக மின்னாற்றலை மிகையாக்கி வருவார். 18 முதல் 24 மாதங்கள் நீடிக்கப் போகும் பில்லியன் கணக்கான செர்ன் விரைவாக்க மோதல் களின் விளைவுகளை ஆராய்வதற்குச் சில ஆண்டுகள் கூட ஆகலாம் ! கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மோதல்களின் எண்ணிக்கை (10^27) (10 to the power 27). இப்போது எண்ணிக்கை (10^29). இந்த வாரத் திட்டம் (ஜூன்–ஜூலை) மோதல்கள் எண்ணிக்கை : (10^30). செர்ன் விஞ்ஞானி களின் குறிக்கோள் திட்ட எண்ணிக்கை : (10^34) மோதல்கள். இதுவரைப் புரோட்டான் வேகத்தை ஒளி வேகத்துக்கு ஒட்டி (99.99% ஒளிவேகம்) சக்தி ஆற்றலை 7 TeV அளவு உயர்த்தி உள்ளார். முடிவான குறிக்கோள் திட்ட ஆற்றல் : 14 TeV. செர்ன் விரைவாக்கியின் முழுத் தகுதிச் சக்தியில் விநாடிக்கு 600 மில்லியன் மோதல்கள் நிகழும். அப்போது டிரில்லியன் கணக்கில் புரோட்டான்கள் விரைவாக்கி வட்டக் குழலில் விநாடிக்கு 11245 தடவை சுற்றிவரும் !
விரைவாக்கியில் பெரு வெடிப்பு இயக்கம் நுண்துகள் உளவும் கருவிகள்
ஆறு முக்கிய கருவிகளின் பெயர்கள் இவை: (CMS, Atlas, Alice, LHCb, Totem & LHCf) அவை புரியும் பணிகள் என்ன ?
1. அட்லாஸ் உளவி (ATLAS Detector – A Toroidal LHC Apparatus) : 150 அடி (46 மீடர்) நீளமுள்ள இந்தக் கருவி எல்லாவற்றிலும் பெரியது. இரண்டு கருவிகள் உள்ளன. அவை பிண்ட ஆரம்பத்தைக் காணும். புதிய பௌதிகம், பிறப் பரிமாணம் (Extra Dimension) காணும்.
2. CMS Detectors (Compact Muon Solenoid) : இதுதான் ஹிக்கிஸ் போஸான்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் கருவி. கரும்பிண்டத்தின் இயற்கைப் பண்பாடையும் உளவும். இது பன்முக உளவுக்குக் கருவி (Multi-Purpose Detector)
3. ALICE (A Large Ion Collider Experiment) : இது திரவப் பிண்டத்தைக் கண்டுபிடிக்கும்.
(Liquid form of Matter called Quark-Gluon Plasma that existed shortly after the Big Bang)
4. LHCb (Large Hadron Collider Beauty) : பெரு வெடிப்பில் தோன்றிச் சரிபாதி இருக்கும் பிண்டம், எதிர்ப்பிண்டம் (Matter & Anti-Matter) ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது. இழந்து போன எதிர்ப்பிண்டத்துக்கு என்னவாயிற்று என்று உளவு செய்யும்.
5. LHCf (Large Hadron Collider Forward) விண்வெளியில் இயற்கையாக உண்டாகும் மின்னேற்றத் துகள்கள், அகிலக் கதிர்கள் (Charged Particles & Cosmic Rays) போலி இருப்பை ஏற்படுத்தும்.
6. Totem இது புரோட்டான்கள் எவ்விதம் சிதறும் என்று கண்டு அவற்றின் நிறையை அளக்கும்.
செர்ன் விரைவாக்கி என்ன முடிவுகளைக் கண்டுள்ளது ?
செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சத்தின் புதிர்களை விடுவிக்கும் நிலைக்கு நெருங்கி விட்டது என்று ஆங்கு பணி செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார். நுண்துகளுக்கு நிறை எதனால் ஏற்படுகிறது ? கடவுளின் துகள் எனப்படும் ‘ஹிக்ஸ் போஸான்’ நுண்துகளுக்கு நிறை அளிப்பது என்று முன்பே யூகிக்க பட்டதுதான். இப்போது செர்ன் விநாடிக்கு 10,000 மோதல் களை உண்டாக்குகிறது என்று பௌதிக விஞ்ஞானி ஆன்ரி கொலூட்வின் (Anderi Golutvin) குறிப்பிடுகிறார். விநாடிக்கு எத்தனை அளவு மோதல்கள் மிகையாகுமோ அத்தனை அளவு நெருக்கத்தில் “உச்ச சீரமைப்பு”, “பிண்டம்”, “ஹிக்ஸ் போஸான்” (Supersymmetry, Dark Matter, Higgs Boson) ஆகியவற்றை அடைகிறோம் என்று பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார். “செர்ன் விரைவாக்கியின் கருவி (LHCb) எதிர்ப் பிண்டத்தின் (Anti-Matter) இயற்கைப் பண்பாட்டை நுட்பமாய் நோக்கும். அதே கருவி சமீபத்தில் முதன்முதலாக “நளினி” “விபரீத அழகி” என்னும் இரண்டு பரமாணுக் களைக் (Sub-atomic Particles, Called : Charm & Strange Beauty) கண்டு பிடித்துள்ளது. “விபரீத அழகி” நுண்துகளை முதன்முதல் கண்டுபிடித்த எனது குழுவினர் பேருவகை அடைந்தனர்.
இயல் பிண்டத்தைப் (Normal Matter) போலின்றி மாறாக இயங்கும் எதிர்ப் பிண்டத்தை (Anti-Matter) அறிய நாங்கள் இந்த நுண்துகளை பயன்படுத்து வோம். ‘விபரீத அழகி’ நுண்துகளைப் பற்றி வேறு யாரும் அறியார். அதுவே செர்ன் விரைவாக்கி யந்திரத்தின் தனித்துவத்தைக் காட்டுகிறது.” என்று லிவர்பூல் பல்கலைக் கழக ஆய்வாளர், டாக்டர் தாரா ஸியர்ஸ் கூறினார். செர்ன் விரைவாக்கியின் சக்தியும், இயக்கமும் தயாராகி “ஹிக்ஸ் போஸான்” நுண்துகளைக் கண்டுபிடிக்க 2011 ஆண்டு ஆரம்ப மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டர் வைட்பர்க் கூறுகிறார்.
அணுகருவுக்குள் இருக்கும் புரோட்டான் மிகவும் சிக்கலான துகள். அதனுள் குவார்க்குகள், குளுவான் உள்ளன. இந்த வார முடிவில் விஞ்ஞானிகள் முதன்முதல் எதிர் எதிர் வரும் முத்திரட்சி உள்ள இரு புரோட்டான் கற்றைகளை (Two Beams Consisting Three Bunches of Protons) செர்ன் விரைவாக்கியில் மோத விட்டார். முதல் முறையாக செர்ன் படைப்புத் திறனில் இயங்கி இயல் அடர்த்தியில் (Normal Intensity) இம்மூன்று திரட்சிகளும் இருந்தன. ஆதாவது ஒவ்வொரு திரட்சியிலும் 100 பில்லியன் புரோட்டான்கள் உச்ச அளவில் ஏவப்பட்டன.
இப்போது பாதி அளவுத் தீவிரத் திறனில்தான் (7 TeV) செர்ன் இயங்கி யுள்ளது. ஒவ்வொரு கற்றையும் முழுத் திறமையில் (14 TeV) இயங்க 2014 ஆண்டில்தான் முடிவான சோதனையாக இருக்கும். முடிவான குறிக்கோள் திட்டம் 2808 திரட்சிகளை ஒரு கற்றைக்குள் உண்டாக்குவது. அது 2016 ஆண்டில்தான் நிகழும் என்று நம்பப் படுகிறது. புரோட்டான்கள் ஓடிச் சென்று மோதிக் கொள்ளும் வட்ட வளைக் குழலில் நான்கு பெரிய சோதனை நிகழ்த்திப் பிரபஞ்ச மர்மத்தின் புதிய பௌதிகப் படிக்க நான்கு கருவிகள் [Compact Muon Solenoid (CMS), (Atlas, Alice, LHCb] அமைக்கப் பட்டுள்ளன. இந்தக் கருவிகளின் விளைவுகளை ஆராயும் தலைமைத் திட்ட விஞ்ஞானி : டாக்டர் கொலூட்வின். கற்றையில் திரட்சிகள் கூடும் போது விஞ்ஞானிகள் ஒரு சிறு கருந்துளை (Mini Black Hole) தோன்று வதை எதிர்பார்க்க லாம் ! “செர்ன் விரைவாக்கியில் கருந்துளைகளை நாங்கள் படைக்க முடிந்தால் அது பேருவகை அளிக்கும் எங்களுக்கு”, என்று பௌதிகப் பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார்.
ஐரோப்பாவில் உலகப் பெரும் செர்ன் விரைவாக்கியிலும் புரோட்டான் கணைகளை ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் மோத விட்டு விஞ்ஞானிகள் இதே “ஹிக்ஸ் போஸானைக்” காணத்தான் துடித்துக் கொண்டிருக்கிறார். ஃபெர்மி ஆய்வக விஞ்ஞானிகள் “எளிய நிறை ஹிக்ஸ் போஸானை” முதன்முதலில் கண்டு விட்டார் என்னும் செய்தி செர்ன் விஞ்ஞானிகளுக்கு ஓர் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் !
ஆனால் ஃபெர்மி ஆய்வகம் தனது புதுக் கண்டுபிடிப்புப் பற்றி வெளிப்படை யாக எந்த அறிவிப்பும் இதுவரைச் செய்ய வில்லை. எளிய நிறை ஹிக்ஸ் போஸானை ஃபெர்மி விஞ்ஞானிகள் டெவடிரான் விரைவாக்கிச் சோதனையில் உற்பத்தி செய்ததை மட்டும் மறுக்க வில்லை. ஆனால் ஹிக்ஸ் போஸான் உற்பத்திச் சோதனையில் தாமொரு முன்னேற்றைப் புரிந்துள்ளதாக அறிவித்தார். அதாவது 50-50 வாய்ப்பு முறையில் இந்த ஆண்டு (2010) முடிவுக்குள் அல்லது 2011 ஆண்டு துவக்கத்துக்குள் ஹிக்ஸ் போஸான் இருப்பை அழுத்தமாக வெளியிடத் தகுந்த அளவு தகவல் சான்றுகளோடு வருவோம் என்று அறிவித்தனர்.
ஃபெர்மி ஆய்வக டெவடிரான் உடைப்பியின் மகத்தான சாதனைகள்
1983 இல் சிகாகோ அருகில் (Batavia, Illinois, USA) 120 மில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப் பட்ட டெவடிரான் விரைவாக்கி (1994-1999) இல் 290 மில்லியன் டாலர் நிதிச் செலவில் அடுத்தடுத்து மேம்படுத்தப் பட்டது. 1995 இல் அதன் நிபுணர்கள் (CDF & DZero Experiment Collaborators) முதன்முதல் “மேல் குவார்க்” (Top Quark) அடிப்படைத் துகளை உற்பத்தி செய்து கண்டுபிடித்தார் ! அடுத்து 2007 இல் மேல் குவார்க்கின் நிறையை 1% துல்லிமத்தில் அளந்தார். 2006 ஆம் ஆண்டில் இருவித “சிக்மா பரியானைக்” (Two Types of Sigma Baryon) கண்டுபிடித்தார். 2007 ஆம் ஆண்டில் செய்த சோதனையில் (DZero Experiment) புதுவித பரியான் (Xi Baryon) ஒன்றைக் கண்டுபிடித்தார். 2008 இல் அதே சோதனையில் மீண்டும் வேறு வித பாரியானைக் (Double Strange Omega Baryon) கண்டுபிடித்தார்.
அமெரிக்க எரிசக்தித் துறையகத்தைச் சேர்ந்த ஃபெர்மி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் (US Dept of Energy, Fermilab Scientists) செய்த இரண்டு புரோட்டான் உடைப்புச் சோதனைகளில் (CDF & DZero Collider Experiments) கீழ்க்காணும் விளைவுகள் நிகழ்ந்தன. இந்தச் சோதனைகள் 158 முதல் 175 GeV/C2 வரை நிறையுள்ள ஹிக்ஸ் போஸான் துகள்களைத் தவிர்த்து விட்டன. துகள் பௌதிக நிலவர மாதிரிப்படி (Standard Model of Particle Physics) ஹிக்ஸ் போஸானின் நிறை 114 முதல் 185 GeV/C2 முடிய இடைப்பட்டு இருக்க வேண்டும். (ஒப்பீடாகச் சொல்லப் போனால் நிறை 100 GeV/C2 அளவு என்பது 107 மடங்கு புரோட்டான் நிறைக்குச் சமமாகும்). இந்த விஞ்ஞான விளைவுகள் யாவும் ஜூலை 22-28, 2010 தேதிகளில் பாரிசில் நடந்த அகில நாட்டு உயர் சக்திப் பௌதிகப் பேரவையில் (International Conference on High Energy Physics (ICHEP-2010) விவாதிக்கப் பட்டன. அப்போது இத்தாலிய விஞ்ஞானி எழுதிய ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு வதந்தி பொய்யானது என்று கூறப்பட்டது !
வியக்கத் தக்க முறையில் பூமியில் ஏற்படும் பூகம்பங்களை உளவி எச்சரிக்கை செய்துள்ளது டெவடிரான் விரைவாக்கி ! அதனுடைய அடித்தளக் காந்தங்கள் மிக்கக் கூர்மையானவை. ஆயிரக் கணக்கான மைல் தூரத்தில் மிகச் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதை உணர்ந்தறியும் வல்லமை படைத்தவை டெவடிரான் மின் காந்தங்கள் ! 2004 இல் இந்து மாக்கடலில் எழுந்த அசுரப் பூகம்பத்தையும், சுனாமியையும் உளவி அறிந்தது. மறுபடியும் சுமாத்ராவில் 2005 இல் நேர்ந்த கடல் பூகம்பம், 2007 இல் நியூ ஸீலாந்தில் கிஸ்போர்ன் நிலநடுக்கம் (Gisborne Earthquake), 2010 ஹெய்தி பூகம்பம், 2010 சில்லியின் நிலநடுக்கம் ஆகியவற்றை டெவடிரான் கண்டுபிடித்து அறிவித்தது.
ஃபெர்மி ஆய்வகத்தின் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு
இத்தாலிய விஞ்ஞானி பேராசிரியர் தாமஸோ தோரிகோ சொல்லிய தகவலை நம்பினால் அது “முச்சிக்மா முத்திரையாக” (Three Sigma Signature) எடுத்துக் கொள்ளப்படலாம். அதன் அர்த்தம் என்ன வென்றால் புள்ளி விபரப்படி 99.7% அந்தக் கூற்று மெய்யானது என்பதே. உலகக் கண்கள் ஐரோப்பாவின் செர்ன் பரமாணு உடைப்பி மீது விழுவதால், அதுதான் ஹிக்ஸ் போஸானை முதலில் கண்டுபிடிக்கும் என்னும் கருத்து இப்போது மாறி விட்டது. கடந்த 27 ஆண்டு களாக (1983-2010) அடுத்தடுத்து சிகாகோ டெவடிரான் செம்மையாக்கப் பட்டு மேன்மைப் படுத்தப் பட்டுள்ளது. ஃபெர்மி ஆய்வகம் டெவடிரான் விரைவாக்கி மூலம் ஒரு குவார்க்கையும், நான்கு வித பாரியான்களை இதுவரை உற்பத்தி செய்து நிரூபித்துள்ளது. எளிய ஹிக்ஸ் போஸான் ஒன்றை முதன் முதலில் உற்பத்தி செய்து காட்டி, ஃபெர்மி ஆய்வகம் அற்புதக் “கடவுள் துகளைக்” காணும் காலம் நெருங்கியது என்பதே இந்த இத்தாலிய விஞ்ஞானியின் தகவலுக்கு உறுதி அளிக்கிறது. ஹிக்ஸ் போஸான் துகளே கடைசித் துகளாக துகள் பௌதிகத்தின் நிலவர மாடலாகக் (The Standard Model of Particle Physics) கருதப் படுகிறது. கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டதால், நிலவர மாடல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி இல்லாவிட்டால் பழைய துகள் நியதிகள் மீளாய்வு செய்யப் படவேண்டும். 2012 ஜுலை 6 ஆம் தேதி செர்ன் விரைவாக்கி துகள் விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸான் போன்ற ஒரு கனத்துகளைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து இருக்கிறார். இது ஆரம்ப நிலை விளைவின் முடிவு மட்டுமே. இன்னும் ஏராளமான செர்ன் விரைவாக்கியின் சோதனை விளைவுகள் ஆராயப் பட வேண்டும். கண்டுபிடித்த துவக்க நிலை கடவுள் துகளின் தடத்தை வைத்து, அது ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்று துகள் விஞ்ஞானிகள் அழுத்தமாக நம்புகிறார்.
(தொடரும்)
++++++++++++++++++++++++
தகவல்:
Picture Credits: Fermilab, Chicago, USA, CERN, Geneva Websites.,
1 CERN Large Hadron Collider – Particle Physics – A Giant Takes on Physics’ Biggest Question By : The New York Times (May 15, 2007)
2 CERN Fires up the New Atom Smasher to Near Big Bang By : Alexander Higgins [Sep 7, 2008]
3 World’s Largest Atom Smasher (CERN) Completion [March 26, 2008]
4. Time Magazine Report – The Moment [September 10, 2008] Geneva [Sep 22, 2008]
5 CERN Atom Smasher – Latest Wikipedia Report.
6 BBC News What Happened to the Big Bang Machine (Sep 20, 2008)
7 BBC News LHC Gets Colder than Deep Space By Paul Rincon (Oct 16, 2009)
8 BBC News Particle Beams Injected into LHC (Oct 26, 2009)
9 Rebirth of the LHC : The Search for the God Particle Resumes (Nov 2, 2009)
10 Second Chance of Large Hadron Collider To Deliver Universe’s Secrets By : Robin McKie, Geneva (Nov 1, 2009)
11. http://jayabarathan.
12 http://jayabarathan.
13 http://jayabarathan.
14 http://jayabarathan.
14(a) http://jayabarathan.
14(b) http://jayabarathan.
14(c) http://jayabarathan.
15 BBC News LHC High Energy Results Published By Jason Palmer (Feb 9, 2010)
16 BBC News : LHC Smashes Energy Record Again (March 19, 2010)
17 BBC News : God Particle Hunt Set to Start By Paul Rincon (March 23, 2010)
18 http://en.wikipedia.org/
19 BBC News : The Science of LHC By Paul Ricncon (Nov 20, 2009)
20 BBC News : Collider Sees High-Energy Success (March 30, 2010)
21 Large Hydron Atom Smasher Reaches Near Speed of Light (Daily Galaxy) March 31, 2010
22 Deep Thought – The Large Hadron Collider Could Prove the Existence of a Parallel Universe (Daily Galaxy 2009 Top Story) Jan 6, 2010
23 Atom Smasher Will Keep Revealing “The Beginning” (CTV News, Canada) March 30, 2010
24. Why the Large Hadron Collider (LHC) ? A Few Unanswered Questions
25. What Will the Large Hadron Collider (LHC) Reveal ? By : Steve Giddings Los Angeles Times(January 7, 2010)
26. Will the LHC Solve the Mystery of the Great Attractor ? By Casey Kazan, Daily Galaxy (Jan 11, 2010)
27 ABC News – Atom Smasher Closer to Big Bang By : Rachael Brown (March 31, 2010)
28 BBC News : LHC Particle Search Nearing By : Paul Rincon (May 17, 2010)
29 Space Daily – World’s Biggest Atom Smasher Gains Pace : CERN By : Staff Writers (June 28, 2010)
30 BBC News : LHC Smashes Beam Collision Record By Katia Moskvitch (June 28, 2010)
31 Telegraph, New Scientist – The Tevatron Accelerator – Competition with Large Hadron Collider Heats Up By Clay Dillow (July 12, 2010)
32 Fermilab Web / Space Daily Fermilab Experiments Narrow Allowed Mass Range for Higgs Boson (July 26, 2010)
32 (a) http://www.thinnai.com/
33. Wikipedia The Tevatron Collider, Fermilab (August 3, 2010)
34 New Scientist Magazine ” Who Will Find the God Particle First ?” (Will an old Faithful Find the Higgs ?) By : Rachel Coutland (July 24, 2010)
35. http://jayabarathan.
36. http://jayabarathan.
37 Daily Galaxy : News of the Century ? CERN to Announce its Findings on Higgs Boson Tomorrow (July 3, 2012)
38. Time & Space : CERN Experiments Observe Particle Consistent with Long-Sought Higgs Boson (July 5, 2012)
39. Time & Space : A New particle has been Discovered- Chances are, it is the Higgs Boson(July 5, 2012)
40. Time & Space : Higgs Boson Hunters Declare Victory – as Significant as DNA Discovery (July 5, 2012)
41. http://www.bbc.co.uk/
42. http://www.bbc.co.uk/news/
43. CERN: LHC Data Confirms Particle is “God Particle”, But the Devil is in the Details [March 14, 2013]
44 Daily Galaxy : LHC Data confirms Higgs Boson [March 14, 2013]
45. http://en.wikipedia.org/
46. Daily Tech CERN: LHC Data Confirms Particle is “God Particle”, But the Devil is in the Details [March 14, 2013]
47. http://rt.com/news/higgs-
48. [ http://www.youtube.com/
49. http://www.popsci.com/
50. http://www.haaretz.com/life/
******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) (May 8, 2014)


ஈசனார் மீனாள் இணைந்த திருமணத்தை
பூசலா நாயனார் போலவே -யோசனையில்
கண்டு களித்ததை கூறிடக் கற்பகத்தின்
குண்டு குமாரனே காப்பு….(1)….
———————————————————-
கல்யாணக் கதை கதையாம் காரணமாம்
—————————————————-
சென்றமுறை பார்வதி சம்பு திருமணத்(து)
அன்றமர்ந்தான் தெற்கில் அகத்தியன் -குன்றென
மீண்டுமவன் காண மதுரையில் மீனாட்சி
ஆண்டவன் கல்யாணம் ஆம்….(2)….
பெண்வீட்டார் – பிள்ளை வீட்டார் அறிமுகம்
———————————————————–
மண்சுமந்தோன் பிட்டுக்கு மாப்பிள்ளை, மைத்துனனோ
மண்சுமந்த வாயன், மணமகளோ -மண்புகுந்த
மேனாள் இமவான் மகளான மாதங்கி
மீனாளாய் வந்த மலைப்பூ….(3)….
நிச்சயதார்த்தம்
———————
சித்திரைத் திங்களில் சித்திறை சொக்கனுக்கு
இத்தரை வந்த, இமவானின் -புத்திரியை,
தத்தாய் மலயத் துவசன் வளர்த்தவளை,
முத்தண்ணா செய்தார் மணம்….(4)….
கல்யாணப் பத்திரிகை
——————————–
சித்திரைத் திங்கள் சனிக்கிழமை அன்றுபகல்
இத்தரையில் மீன இலக்கினத்தில் -பத்தரைக்கு
பின்னாலே மீனாளை அண்ணா மஹாவிஷ்ணு
கன்னிகா தானம்சொக் கர்க்கு….(5)….
கல்யாணச் சத்திரம்
————————-
அத்தனைபேர் வந்ததால், ஆலவாயில் தங்கிட
சத்திரம் இல்லாமல் சம்புமையாள் -கைத்தலம்
பற்றுவதை மச்சான் பெருமாள் தமுக்கத்தின்
வெற்றிடத்தில் வைத்தான்பார் விஷ்ணு….(6)….
சீர் வரிசை
————–
பிள்ளைக்கு சீராகப் பொன்னில் திருவோடும்
வெள்ளி முலாமிட்ட வெண்ணீறும் -கொள்ளியிடும்
குச்சிக்குப் பூணிட்டு காளைக்கு லாடமிட்டார்
மச்சினர் மல்லாந்த மால்….(7)….
வரதட்சிணை
—————
குவளைக்குள் பிச்சைக்கூழ் கொள்வோன் கறாராய்
அவலுக்(கு) அளித்தேழை ஆன -குவளைக்கண்
மாலோனை முன்ஜாமீன் மன்றாடி கேட்பதற்குள்
பாலாழிக் கண்ணஅம் பேல்….(8)….
ஜான்வாசம்
————–
சித்திரை வீதியில் ஜான்வாசம், கொட்டாவி
நித்திரை மைத்துனர் நீட்டிவிட -பித்தனமர்
அக்காளை அஞ்சி அலங்காநல் லூர்சென்று
உட்கார ஊர்வலத்திற்க்(கு) ஓய்வு….(9)….
கண்ணூஞ்சல்
—————–
கண்ணூஞ்சல் ஆடினர் பெண்ணும்மாப் பிள்ளையும்
விண்ணூறும் தேவர்கள் வீசிட -மண்ணூறும்
மக்களண் ணாந்துமண மக்களைக் காட்டியிட்டார்
கக்கமுறை சேய்களுக்குக் கூழ்….(10)….
மாப்பிளைக் கண்ணுக்கு மையிடுதல்
———————————————-
மாப்பிள்ளை கண்ணுக்கு மையிட்டோர் கைகளில்
தீப்புண் தகிக்க தவித்தனர் -கூப்பிட்ட
மைத்துனர் மாலன் மருத்துவனால் பச்சிலையை
வைத்தணைத்தார் நெற்றிக்கண் வீச்சு….(11)….
காசியாத்திரை-மாப்பிள்ளைத் தோழன்
———————————————-
யாப்பில்லை என்றாலும் ஏழை தருமிக்கு
மாப்பிள்ளைத் தோழன் மரியாதை -கூப்பிட்டு
காசியாத்தி ரைக்கு குடைவிசிறி தந்தனன்
ஈசன் விளையாடல் இது….(12)….
சிவகாசி யாத்திரை செல்லல் தடுக்க
விவகா ரமானமச்சான் விஷ்ணு -சிவகேசம்
மேலமர்ந்த கங்கையை மொண்டு தரையிலிட
ஆலவாய் காசிநகர் ஆச்சு….(13)….
சம்பந்தி சண்டை
———————
சொக்கன்கல் யாணத்தில் சம்மந்தி சண்டையிட
விக்கினமாய் யாரும் வராததால் -சக்களத்தி
கங்கை குதித்திறங்க செங்கண்மால் தம்பதிக்கு
தன்கையில் ஏந்தித் தெளிப்பு….(14)….
மாப்பிள்ளை-முறுக்கு
————————-
குனித்த தலையாய், குதிகால் நடையாய்
பனித்த விழியாய் பயந்து -தனித்திருந்து
புக்ககக் கூடலில் பூனையாய் வால்சுருட்டி
முக்கண்ணன் சொக்கன் முழிப்பு….(15)….
மீனாளைப் பார்த்து மதுரை மயங்கியதில்
மானாளை முற்றும் மறந்தது -தூணாளும்
ஆய்ப்பிள்ளை மச்சான் அநுதா பமாயளிக்க
மாப்பிள்ளை வாயில் முறுக்கு….(16)….
கன்னிகாதானம்
——————-
தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுற
பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
சேக்கிழார் சாமி சபைக்கு….(17)….
பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
அள்ளிவந்தார் சேலை அலைந்து….(18)….
கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
முடிந்தான் அரன்முடிச்சு மூன்று….(19)….
அம்மி மிதித்தேறி அருந்ததி பார்த்தல்
————————————————
சொக்கனுடம் மீனாட்சி அக்கினியைச் சுற்றிவரல்
வக்கணையாய்க் காண வசிட்டனுடன் -அக்கணம்
அம்மிமிதித்(து) ஏறி அருந்ததி பார்த்தனள்
விம்மிஆ னந்தநீர் விட்டு….(20)….
கல்யாணத்திற்கு வந்த VIP பிள்ளைகள்
————————————————
கல்யானைக்(கு) அன்றுயிர் கொள்ளவைத்த சொக்கனைக்
கல்யாணம் கொள்கிறாள் கன்னிமீனாள் -தொல்யானைப்
பிள்ளையும் வேலனும் பார்த்ததால் பெற்றோர்க்கு
இல்லையொண் ணாத இனிப்பு….(21)….
கல்யாணச் சாப்பாடு
—————————-
உண்ட பெருவிருந்தால் குண்டோ தரன்கொண்ட
தொண்டை அடைத்திடும் தாகத்தைக் -கண்டசிவன்
கைவை எனச்சொல்லக் கைமாற்றி வைத்தவன்முன்
வைகை விரைந்தாள் வளைந்து….(22)….
மொய் எழுதுதல்
——————–
மாப்பிள்ளை சொக்கன் மணமகள் மீனாளைக்
காப்பிட்டுக் கொள்கிறார் கல்யாணம் -சாப்பிட்டு
மொய்யெழுது வோர்க்குமச்சான் மாலோலன் தாம்பூலப்
பையேந்தி நிற்பார் பணிந்து….(23)….
நலங்கு
———
விடக்கண்டன் சொக்கன் விடாக்கண்டன் ஆகி
விடமறுத்தான் தேங்காய் நலங்கில் -படபடத்த
கெண்டை விழிமீனாள் கோபிக்க அஞ்சியரன்
அண்டத்துக் கோளை அளிப்பு….(24)….
மாலை வரவேற்பு
——————–
மச்சினன் வேண்டியதால் மாலை வரவேற்பில்
அச்சிவன் தாண்டவம் ஆடிட -உச்சத்தில்
ஓடிவந்து மீனாள் ஒயிலாக சேர்ந்துகொள்ள
கூடலுக்குக் கூடுதல் கூத்து….(25)….
சாந்தி முகூர்த்தம்
———————–
முதலிரவில் மீனாள் கதவடைத்துச் சொன்னாள்
மதுரைவாழ் மக்களின் மாண்பு –
பதவிசாய் நாகரீகப் பண்பு -பொதுவிடத்தில்
மாட்டோடும் ஓட்டோடும் மானத்தை வாங்காதீர்
வீட்டோட மாப்பிள்ளை வாள்….(26)….
இச்சென்று முத்தமிட ஈசன் நெருங்கிட
நச்சென்று நாகம் நெளிந்தது -அச்சச்சோ
என்றலறி மீனாள் எகிறி குதித்தோட
அன்றுசிவ ராத்திரி ஆச்சு….(27)….
பாலிகை கரைப்பு
———————–
மாளிகை மீனாள் மயானனை ஏற்றிட
பாலிகையை பெண்கள் பகிஷ்கரிப்பு -நாலுகை
மைத்துனன் வைகையில் மோகினியாய் தானியத்தைக்
கைத்தலம் ஏந்திக் கரைப்பு….(28)….
கட்டுச் சாதக் கூடை
—————————
கழுத்தரவம் தன்னை கடாசி எறிந்தான்
அழுத்தியுமை யாளை அணைக்க -பழித்தனர்
கட்டு விரியன்கள் கட்டிக் குலாவிடும்
கட்டுச்சா தக்கூடை கண்டு….(29)….
மலயத்துவசன் பிரிவோபசாரம்
—————————————
கலையத் துவங்கினர் கல்யாணம் கண்டோர்
அலையில் படுத்தான் அரிமால் -மலயத்
துவசன் வளர்ப்பை தழுவிப் பகர்ந்தான்
கவசமே கூடலைக் கா….(30)….
சிவசிவ என்று சிரத்தில் மலையத்
துவசனார் குட்டித் தொழுது -அவசரமாய்
கெஞ்சினார் ”நஞ்சுண்டா மிஞ்சினாலும் மீனாளை
நெஞ்சில் அமிழ்தாய் நிறுத்து”….(31)….
கோயிலுக்குல் புகுதல்
—————————-
சித்தரின் சன்னிதியில் சொக்கனும் மீனாளும்
சுத்திவந்து தம்பதியாய் சேவித்து -தத்தம்
கருவறைக்குள் செல்வதைக் கண்ட மதுரை
அரஹர சம்போவென்(று) ஆர்ப்பு….(32)….
பல ஸ்ருதி
————-
மாதரசி மீனாள் மஹாதே வனைமணந்த
போதரிசி வாழ்த்தைப் பொழிந்தோர்க்கும் -காதுருசி
கொண்டதைக் கேட்டோர்க்கும் கேட்டதை சொன்னோர்க்கும்
விண்டதெலாம் வாணியவள் வாக்கு….(33)….கிரேசி மோகன்….
———————————————————————————————————————————
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்….
————————————————

’’கண்ணன் அந்தாதி’’
———————————————

உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
விண்டுரைத்த போதும் விசுவமே -கண்டுகொண்டேன்
மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
வித்தை பழகும் விதம்….(6)
விதவிதப் பூவாய் விதவையின் கூந்தற்
பதவி பெறுவதென்ன பேறா! -புதுப்புது
மேனியும், நோயும் ,மரணமும் நாடகம்
தூணிலொளிந் தோன்கண் துடைப்பு….(7)
துடைப்பங் கழியைத் துணிப்பட்டால் மூடிப்
படைத்தாய் பிறவிப் பிணியை -இடைப்பையா
தீராவுன் ஆட்டத்தில் தோள்கொடுக்கும் தோழனெனை
பாரா திருப்பதேன் பகர்….(8)
பகர்தல், பரிகசித்தல்,பீற்றல்,புலம்பல்
இகழ்தல் எனவாச்(சு) வாழ்க்கை -உகிரால்
இரணியனைக் கொன்றன்(று) இருதோ(ள்) அணிந்த
நரஹரியே மோனத்தூ ணாக்கு….(9)
நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற
போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில்
இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த
இடப்பயல் தாளே இருப்பு….(10)
——————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2013_05_01_archive.html
பவள சங்கரி
அன்பு நண்பர்களே,
வணக்கம். இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடித இலக்கியப் போட்டியின் முடிவுகள். தன்னுடைய இடையறாத பணிகளுக்கிடையேயும் திரு. இசைக்கவி இரமணன் அவர்கள் போட்டியின் முடிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு நம் வல்லமையின் மனமார்ந்த நன்றி உரித்தாகுக. போட்டியை அறிவித்த தேமொழி அவர்களுக்கும், உற்சாகமாகக் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். நாம் ஏற்கனவே அறிவித்திருந்திருந்த முதல் மூன்று பரிசுகள் மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகளுடன், திரு இரமணன் அவர்கள் மேலும் ஆறு பேர்களுக்கு தலா ரூ. 200 வீதம் ஆறுதல் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்கள். பரிசு பெற்றவர்கள் தங்கள் உள்நாட்டு முகவரிகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்படும்.
இதோ திரு இரமணன் அவர்களின் போட்டி முடிவுகள் :
இசைக்கவி இரமணன்
உலகம் அழகானது. ஆனால், வாழ்க்கைக்கு அதனளவில் அழகேதும் கிடையாது. வைக்கோலைத் தின்று வெந்நீர் குடிக்கும் சுவாரசியமே உள்ள இந்த வாழ்க்கையில், பிறந்த கணத்திற்கு முன்பிருந்தே உயிரின் பிடரியை மரணம் கவ்விக் கிடக்கும் இந்தக் கணநேரக் கூத்தில் என்ன அழகு இருக்க முடியும்?
வாழ்க்கை வேறு, வாழுதல் வேறு. நன்கு வாழுவதன் மூலமே ஒன்றுமற்ற வாழ்க்கை ஒளிபொருந்தியதாக மாறுகின்றது. அதுதான் வாழ்வாங்கு வாழுதல். அதற்கு இரண்டு அம்சங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று, நேயம். இன்னொன்று கலை.
நேயம், மனிதனை மனிதனாக்குகிறது. கலை, மனிதனுக்கும் இறைவனுக்கும் பாலம் போடுகிறது. வாழ்க்கை, காட்டாறாக இருந்தாலும், பாலத்திலிருந்து பார்க்கும்போது நமக்குப் பதற்றமில்லை. கலை, எல்லாவற்றையும் படைத்து இயக்கும் பரமசக்தியிடமிருந்தே வருகிறது. அந்தப் பரம்பொருள், மனிதனில் தன்னை நேயம் என்றே பதிவு செய்துகொண்டுள்ளது.
சேதி சொல்லும் இயற்கை, நியதி காட்டும் கோள்கள், பாதி சொல்லும் உயிரினங்கள், பாடம் சொல்லும் வாழ்க்கை, இவையே கலைகள் விளங்கும் தளங்கள். இயற்கையிலும் வாழ்க்கையிலும் ஏற்கனவே தென்படுவதை, நேயமென்னும் தூரிகை ஏந்தி ஓவியன் சித்திரம் தீட்டுகிறான். கவிஞன் கவிதை பாடுகிறான். இன்னொருவன் கல்லை தெய்வமாக்கிக் காட்டுகிறான்.
கலைகளில் கடிதமும் அடக்கம் என்பது உண்மை. பேசும் சொல்லும், பதியும் எழுத்தும் கலை வயப்படுவது இயல்புதானே? கலை மிளிரும் எழுத்தே இலக்கியம். எனவேதான், வல்லமைக் குழுமத்தார், ஒரு கடித இலக்கியப் போட்டியை அறிவித்தார்கள். வந்து குவிந்தன கடிதங்கள். வம்பாய், என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். எதையும் தட்டிக் கொடுப்பவன் எதைத் தட்டிப் பார்த்து எப்படித் தெரிந்து எதனை எடுப்பான்?
ஆனால், வந்து சேர்ந்த கடிதங்கள் எல்லாம் சுசீந்திரத்துத் தூண்கள் போலானதால், தட்டி மகிழ்ந்தேன். அவற்றை, நான் நன்று, மிக நன்று, மிக மிக நன்று என்றே வகைப்படுத்த முடிந்தது.
அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று பற்பலரும் பலவித வண்ணம் காட்டியிருக்கிறார்கள். முதலில், அவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரி, எந்த அடிப்படையில் நான் பரிசுகளுக்கு உரியவை இன்னின்னவை என்று தேர்ந்தெடுத்தேன்?
இவ்வளவு சொன்னால் போதும் என்று தோன்றுகின்றது.
எப்படி இருப்பினும், என்னுடைய தேர்ந்தெடுப்பு என்னுடைய ரசனை, புரிதல், அறிவு இவற்றிற்கேற்பத்தான் இருக்குமே அன்றி, இதுதான் சரியான முடிவு என்பதாக இருக்க முடியாது. ஏனெனில், நான் சராசரிக்கும் குறைவான சாதாரண மனிதன்.
முதற்பரிசு:
கவாகம்ஸ்
கடிதத்தின் இறுதியில்தான் அது ஒருவர் தனக்கே எழுதிக்கொண்ட கடிதம் என்பது விளங்குகிறது. ஓர் அறிவியல் புனைவும், ஆழமான காதலும் கலந்து மிகவும் விறுவிறுப்பாகவும் மிளிர்கின்றது இந்தக் கடிதம். கொஞ்சம் கூட சுருதி விலகாத பாடல் போன்று இருக்கின்றது.
இரண்டாம் பரிசு:
மாதவன் இளங்கோ
இது தனது ரசிகைக்கு ஓர் ஓவியர் எழுதிய கடிதம். இந்தக் கோணமே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஒரு கலைஞனின் மனம், அவனுடைய படைப்பைக் காட்டிலும் எத்தனை நுண்மையானது, பரிசைக் காட்டிலும் அவன் எப்படி ரசனையைத்தான் நம்பி வாழ்கிறான் என்பதெல்லாம் இந்தக் கடிதம் சிறப்பாக உணர்த்துகின்றது.
மூன்றாம் பரிசு :
ரஞ்சனி நாராயணன்
அம்மாவுக்கு மகன் எழுதிய கடிதம். நெஞ்சைத் தொட்டது.
ஆறுதல் பரிசுகள்:
திரு. இரமணன் அவர்கள் வழங்கும் சிறப்புப் பரிசு ரூ. 200 பெறுபவர்கள்
எழுதுகோலை எடுக்கும் முன்பே, இதயத்தைத் திறந்துவிடுவோம்! அன்பு காட்டும் வழியில் வந்து விழட்டும் சொற்கள்!
அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
வாய்ப்பளித்த வல்லமைக்கு வணக்கம் கலந்த நன்றி.
அன்புடன்,
ரமணன்
இந்தப் போட்டியை அறிவித்த தேமொழிக்கும் தேர்ந்தெடுத்துக் கொடுத்த திரு ரமணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்
— சு.கோதண்டராமன்
அரவிந்தர் எழுதிய வேதத்தின் ரகசியம்
அரவிந்தர், வேதத்தின் ரகசியம் என்ற நூலில் வேதம் முழுவதும் மனவியல் குறியீடுகளைக் கொண்டது என்று சொல்லி அதற்கேற்ப சில மந்திரங்களை மொழி பெயர்த்துக் காட்டினார். அக்னி என்பது ஞான சக்தி, தெய்விகமான அறிவுத் துணிவு (illuminated divine will). இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி (pure illuminated intelligence). பசு என்பது ஞான ஒளி என்று பொருள் கொள்ள வேண்டும் என்றார். அவரது சீடர்கள் அவர் வழி நின்று ரிக் வேதம் முழுவதற்கும் உரை எழுதியுள்ளனர். ஓரிரு மந்திரங்களில் அவரது குறியீடுகள் பொருத்தமாக உள்ளன என்பது உண்மை என்றாலும் எல்லா இடங்களிலும் அக் குறியீடுகள் பொருந்த வில்லை. மேலும் ஞான சக்தி, விஞ்ஞான சக்தி என்பவை பாமரர்களுக்குப் புரிவதில்லை.
சொற்களுக்குப் பொருள் காண்பதில் அபிதா (நேர்ப் பொருள்), லக்ஷணா (உருவகப் பொருள்) என இரு வகை உண்டு. ஒரு உதாரணம் பார்ப்போம்.
எங்கள் வீட்டு நாய் குரைப்பதே இல்லை. யாரேனும் வந்தால் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொள்ளும். இந்த வாக்கியத்தில் நாய் என்பது எல்லோருக்கும் தெரிந்த அந்த நாலு கால் பிராணியைத் தான் குறிக்கும். இது அபிதா-நேர்ப்பொருள்.
ஐயா, நீங்கள் செய்த உதவியை மறக்க மாட்டேன். என்றும் உங்கள் காலடியில் நாயாக இருப்பேன். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு நேர்ப் பொருள் பொருந்தாது. இங்கு அதற்கு நன்றி உடையவன் என்பது பொருள். இது லக்ஷணா எனப்படும்.
லக்ஷணாவில் ஒரு சொல்லுக்கு ஒரு உருவகப் பொருள் தான் என்ற கட்டுப்பாடு கிடையாது. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனியுங்கள்.
ஊரைச் சுற்றி வெள்ளம். வெளி உலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. நூறு பேர் ஒரு மேடான இடத்தில் கூடி நின்றனர். எல்லோருக்கும் பசி. உணவுக்கு வழி இல்லை. அப்பொழுது ஒரு ஹெலிகாப்டர் வந்தது. இருபது உணவுப் பொட்டலங்களைப் போட்டு விட்டுப் போய் விட்டது. அவ்வளவு தான். மனிதர்கள் நாய்கள் ஆயினர். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு தந்நலமே பெரிதாகக் கருதிச் சண்டை போடுபவர் என்று பொருள்.
வீட்டில் எல்லோரும் அவரவர் வேலையாக வெளியில் போய்விட்டார்கள். நான் தான் இங்கு நாயாக காவல் காத்துக் கொண்டிருக்கிறேன். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு காவல் காப்பவர் என்று பொருள்.
வேலை தேடி நாயாக அலைகிறான். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்குப் பயனின்றி அலைபவர் என்பது பொருள்.
இப்படி வேதத்திலும் ஒரு சொல்லுக்குப் பல உருவகப் பொருள்கள் உள்ளன. அரவிந்தரின் சீடர்களின் உரை இந்த வேறுபாட்டைக் கணக்கில் கொள்ளாமல் எல்லாவற்றிற்கும், அபிதாவாக வரும் இடங்களில் கூட, ஒரே உருவகப் பொருளைக் கூறுகிறது.
பசு என்பதற்கு ஒளிக் கிரணம் என்பது ஒரு உருவகப் பொருள். இந்த அரசன் எனக்கு 100 பசுக்களைக் கொடுத்தான் என்று வரும் இடத்தில் 100 ஒளிக் கிரணங்களைக் கொடுத்தான் என்று பொருள் சொல்வது எவ்வளவு பொருத்தமில்லாமல் இருக்கிறது என்பது பார்த்தாலே தெரியும்.
மேலும், லக்ஷணாவில் சொல்லுக்கும் உருவகப் பொருளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க வேண்டும். அரவிந்தர் பசுவை ஞான ஒளி என்றும், நெய்யை அறிவுத் தெளிவு என்றும் பொருள் கொள்கிறார். எப்படித் தொடர்பு படுத்துகிறார் என்பது விளக்கப்படவில்லை.
******** ************************************ ******************************** *********
வேத மொழியோ வழக்கிழந்தது. இலக்கணமும் மாறுபடுகிறது. இடைச் செருகல்களும் பல உள்ளன. மந்திரங்களில் பல விடை தெரியாத புதிர்களாக உள்ளன. நமக்குக் கிடைக்கும் பழமையான ஒரே உரையோ ஒரு சார்பு உடையது. பிற்கால உரைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறை. இவ்வாறு, வேதத்திற்குப் பொருள் பார்க்க முனையும் போது சந்திக்க நேரும் சங்கடங்கள் பல. இத்தனை காலம் இத்தனை பேர் முயன்று பார்த்து இயலாத காரியம் என்று கை விட்டு மூலத்தை மட்டும் அதன் ஒலி வடிவில் காப்பாற்றி வந்தால் போதும் என்று முடிவு கட்டி விட்ட நிலையில் பாமரன் மட்டும் என்ன சாதிக்க முடியும்?
எல்லா உரைகளும் ஒவ்வொரு சார்பு உடையது என்றாலும் இருப்பவற்றுள் சாயணர் உரை தான் பழமையானதும் முழுமையானதும் ஆன உரை என்பதால் அதைப் பிரதானமாகக் கொண்டு, அதனுடைய குறைகளைக் கூடியவரை களைந்து பொருள் காண முயன்றான் பாமரன்.
வேதத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் உண்டு. அவற்றில் ஒன்று பிரதானமானதாக இருக்கும், மிகுதியாகப் பயன்படுத்தப்படும். சில இடங்களில் பொருள் மாறுபடும். பிரதானமான பொருளை விட்டு ஓரிடத்தில் சிறப்பான பொருள் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். வழக்கமான பொருள் இந்த இடத்தில் பொருந்துமா? பொருந்தாது என்றால் வேறு எந்தப் பொருள் பொருந்தும்? அந்தப் புதுப் பொருளைப் பயன்படுத்த வேதத்தில் முன் உதாரணங்கள் உண்டா? என்பனவற்றை ஆராய வேண்டும். வேதச் சொல்லின் பல விதமான பொருள்கள் கூடியவரை வேதத்திலேயே தேடப்பட வேண்டும். பிற்கால நூல்களில் வழங்கும் பொருளை வேதத்தில் நுழைப்பது தவறு. இந்தக் கொள்கைகளின் அடிப்படையிலான வழிமுறையே இந்நூலில் பின்பற்றப்பட்டிருக்கிறது.
உதாரணமாக, அசுரர் என்ற சொல்லுக்குப் பல வகையான பொருள்கள் சாயணரால் தரப்பட்டுள்ளன. அவற்றில் வலிமையானவர் என்ற பொருள் பிரதானமானதாக இருக்கிறது. சாயணர் சில இடங்களில் ராட்சசர் என்றும் யாகங்களை அழிப்பவர் என்றும், சில இடங்களில் நேர் மாறாக, அசுரர்களை அழிப்பவர் என்றும் பொருள் கூறுகிறார். அந்த இடங்களிலும் வலிமையானவர் என்ற பொருளே பொருத்தமாக இருக்கும் போது புதிய பொருள் காண அவசியமே இல்லை. தேவை இல்லாமல் யாகச் சார்பு திணிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அசுரர் பற்றி எழுதப்பட்டுள்ள அத்தியாயத்தில் இதைக் காணலாம்.
இதுவரையில் நாம் பார்த்தது முன்னுரை தான். இவ்வளவு நீண்ட முன்னுரை அவசியம் தானா?
வேதத்தின் பேரளவையும், அதைப் படிப்பதில் உள்ள சங்கடங்களையும் எடுத்துக் காட்டி, இத்தனைக்கும் நடுவில், ஒருவன் படித்துப் புரிந்து கொள்ளக் கூடியது மிக மிகச் சொற்பமானது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து விட்டு வேதத்தில் இருப்பது இவ்வளவு தான் என்று யாரும் முடிவு கட்டக் கூடாது என்பதற்குத் தான் இவ்வளவு நீண்ட முன்னுரை அவசியமாயிற்று. வேதத்தில் என்ன இருக்கிறது என்ற விவரம் இனி வர இருக்கிறது. தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்வோம்.
படம் உதவி: www.hinduhistory.info – http://www.skjainastro.com/VedicAstrology.JPG
– கே.எஸ்.சுதாகர்
தமிழ்மொழியின் காலத்துக்கு சாட்சியாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் (கிறிஸ்துவுக்கு முன் 31 ஆண்டு) போன்ற நூல்கள் உள்ளன.
|பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள|
– சிலப்பதிகாரம் (மதுரைக்காண்டம்)
இந்தப்பாடலின் மூலம் இன்றைய கன்னியாகுமரிக்குத் தெற்கே பஃ றுளி ஆறும், பல மலைத்தொடர்களும், குமரிமலையும் கடலில் மூழ்கியது உறுதியாகின்றது. இங்கேதான் பாண்டியர் தலைநகரான மதுரை (இன்றிருக்கும் மதுரை வேறு) இருந்துள்ளது. இங்கேதான் முதற்சங்கம் இருந்தது. இந்த மதுரையும் கடற்கோளால் அழிந்தபின், கிழக்குக் கரையோரத்தில் இருந்த கபாடபுரம் பாண்டியரின் தலைநகராகியது. இங்கு இடைச்சங்கம் (இரண்டாம் தமிழ்ச்சங்கம்) உருவானது. இலக்கியங்கள் தோன்றின. பின்னர் இதுவும் அழிந்தபின்னர் கடலே இல்லாத வைகை நதிக்கரை மதுரை பாண்டியரின் தலைநகராகியது. கடைச்சங்கம் நிறுவப்பட்டது.
இந்துமாகடலை ஆய்வு செய்த ரஷ்யவிஞ்ஞானிகள் (Prof Bezrucov) வெளியிட்ட அறிக்கையில் ஆதிமனிதனின் பிறப்பிடமாகக் குமரிக்கண்டம் (Lemuria) இருக்கலாம் என்கின்றனர். Ice Age காலத்தில் கடல்மட்டம் 500 – 600 அடி தாழ்ந்திருந்தன. அப்போது ஜாவா, சுமாத்ரா ஆகிய நிலப்பரப்புகளும் நியூகினித்தீவுகளும் அவுஸ்திரேலியாவின் வடபகுதி நிலப்பரப்புகளும் மெல்லிய அளவில் இணைந்திருந்தன.

உலகின் தொன்மையான தமிழினத்திற்கும், அவுஸ்திரேலிய அபரிஜினல் இனத்திற்குமிடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அபரிஜினல் இனமக்களின் மொழி, கலாசாரம், பண்பாடு என்பவற்றுடன் உருவ அமைப்பும்கூட தமிழரோடு ஒப்புவமையாக உள்ளது. இந்தியாவின் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியபோது அங்கிருந்த தமிழினமக்கள் கிழக்கே அவுஸ்திரேலியாவிற்கும், மேற்கே ஆப்பிரிக்காவிற்கும் பரவினார்கள் என்பது செய்தி.
அவுஸ்திரேலியாவில் இப்போதும் கூட களரி ஆட்டம் எனப்படும் நடனம் உள்ளது. பழங்குடிகள் பலவகையான நடனங்களை ஆடுகின்றார்கள். நெற்றியிலே ஒரு கண்ணை வரைந்து கொண்டு, இவர்கள் ஆடும் அந்த ஆட்டத்திற்கு ‘சிவா நடனம்’ (Shiva Dance) என்று பெயர். உடல் எங்கும் மூன்று கோடுகளாக வெள்ளை வர்ணத்தைப் பூசிக்கொள்கின்றார்கள். நெற்றியிலே மாத்திரம் கிடையாகப் பூசிக்கொள்கின்றனர். Spencer, Killan என்பவர்கள் எழுதியுள்ள The Native Tribes of Central Australia (Dover Publications, Inc., New York, 1968) என்ற புத்தகத்தில் இதற்கானபுகைப்படங்கள் ஆதாரமாக (படங்கள் 128, 129 / பக்கங்கள் 621, 622) உள்ளன.
பண்டைய தமிழர்கள் ஓடித் தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கு ‘வளரி’ என்ற ஆயுதத்தைப் பாவித்தார்கள். சங்க கால இலக்கியமாகிய புறநானூற்றுப் பாடலில் (பாடல் எண் 233) வரும் ‘திகிரி’ என்னும் பதம் இந்த ‘வளரி’யையே குறிக்கின்றது.
பாடல் எண். 233 – பொய்யாய்ப் போக!
பாடியவர் : வெள்ளெருக்கிலையார்
” பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!”
என்று செல்கின்றது அந்தப்பாடல்.
‘வளைதடி’ என்று தமிழில் சொல்லப்படும் இந்த ‘வளரி’ என்ற ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. இந்த வளரியைப் போன்று அவுஸ்திரேலியா ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம் ‘பூமராங்’ (boomerang) ஆகும். எனவே இந்த ஆயுதம் தமிழருக்கும் அவுஸ்திரேலியா ஆதிவாசிகளுக்கும் பொதுவானதாகின்றது. இது ஒருமுனை கனமாகவும் மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறை வடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படுகிறது. இதை ஆதிவாசிகள் ஒரு இலக்கை நோக்கி எறிவார்கள். இலக்கு தவறும் பட்சத்தில் அந்த பூமராங் எறிந்தவரின் கைகளுக்குத் திரும்பி வந்து விடும். இதை ஆதிவாசிகள் வேட்டையாடுவதற்கு உபயோகித்தார்கள்.
மத்திய அவுஸ்திரேலியாவில் இருந்த பழங்குடிகளின் பரம்பலைக் கீழேயுள்ள படத்தில் காணலாம். இந்த இனத்தின் பெயர்களாக (Tribes Names) – வாகை (Waagai), சிங்காலி (Chingali), இளம்பிறை (Ilpirra), வால்பாறை (Walpari), அருந்தா (Aruntha) போன்ற பெயர்கள் இருப்பதைக் காணலாம். Alice Springs போன்ற இடங்களில், சிறுசிறு குழுக்களாக பரந்தளவில் ‘அருந்தா’ இனக்குழுவினர் உள்ளனர். மேலும் இவர்கள் விலங்குகள், மரங்களின் பெயர்களைக் கொண்டும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஏமு மனிதன் (Emu man), கங்காரு மனிதர்கள் (Kangaroo men), பிளம் மர மக்கள் (‘Plum tree’ people) போன்றவறை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பழங்குடி மக்களின் பெரும்பாலான உரையாடல்களில் தமிழின் உச்சரிப்பைக் காணலாம். ‘Ten Canoes’ என்ற அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அபரிஜினல் மக்களைப் பற்றிய படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம். அவர்கள் பாவிக்கும் சில சொற்களிற்கும் தமிழ்ச் சொற்களுக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம் ( * பின்னிணைப்பு 1 ).
சிட்னியில் ‘விண்மலே’, ‘காக்காடு’ என இரு இடங்கள் இருக்கின்றன. ஆகாயமும் (விண்) மலையும் ஒட்டி நிற்பதைப் போல இருக்கும் அந்த அற்புதமான இடத்திற்கு winmalle (விண்மலை) என்று பெயர். ‘கா’ என்றால் சோலை, காடு என்றால் வனம். உண்மையிலே சோலைவனம் போல ஏராளமானவர்களைக் கவர்ந்திழுக்கும் அந்த இடத்திற்கு kakadu என்று பெயர் வழங்குகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் மதுர (Madura) என்று இன்னொரு இடம் இருக்கின்றது. இன்னொரு ஆதிவாசி இனம் அதிகம் பாவிக்கும் சொற்றொடர் ‘பூனங்கா யிங்கவா’. அதன் அர்த்தம் ‘பெண்ணே இங்கே வா’. ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதியே அவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்.

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனிதர்கள் தெற்குப்பக்க கடற்கரை வழியாக வந்து இந்தியாவினூடாக அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கக்கூடும் என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகின்றது. இந்தக்கருத்தை இந்தியாவிலுள்ள Dr Raghavendra Rao என்பவருடைய ஆய்வு உறுதி செய்கின்றது. இவரது குழுவின் மனிதவர்க்கசாஸ்திர ஆய்வின்படி (Anthropological Survey), திராவிடப்பழங்குடிமக்களிற்கும் தற்போதைய அபரிஜினல் இனத்தவருக்கும் பொதுவான DNA மரபணு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவர்களின் கருத்துப்படி 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் அபோர்ஜினமக்கள் தென்னிந்தியா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்து குடியேறியதாகவும், தற்போதைய அபரிஜினமக்களுக்கும் இந்தியக்குடிமக்களுக்கும் பொதுவான முன்னோர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்.
1974 இல் Mungo Lake (NSW) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்றினை ஆராய்ந்தபோது அது இந்தியப்பழங்குடியினரின் சாயலை ஒத்திருந்ததாக விஞ்ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள்.
* பின்னிணைப்பு 1
Macquarie (Aboriginal words) என்ற புத்தகத்தில் உள்ளபடி,
Father – papa (Tor/17.2), paapaa(Ngi/2.2) – அப்பா Pg 622
Mother – Ama (Tor/17.2) – அம்மா Pg 660
Fire – thum (Wik/16.6) Pg 624
Hill – Muli (Bun/1.7) மலை Pg 640
Jaw – thakal (Ngi/2.1) தாடை Pg 646
Leg – kar (Wem/6.1) கால் Pg 650
Moon – pira (Diy/11.8) பிறை Pg 659
Nose – Muruh (Bun/1.1) மூக்கு Pg 665
Old Woman – aka (Tor/17.3) அக்கா Pg 666
Person – arelhe (Arr/13.3) ஆள் Pg 671
Thirsty – yarka (Paa/3.2) தாக Pg 705
Sky – alkere (Arr/13.8) ஆகாயம், karkanya (Paa/3.8) ககனம் Pg 690
Stone – karnu (paa/3.7), karul (Ngi/2.7) கல் Pg 698
Tree – madhan (Wir/5.14) மரம் Pg 709
Tease – ngaiyandi (Kau/8.27) நையாண்டி Pg 703
You – nhii, nhe (Dat/12.33) நீ Pg 723
Before – muna (Kau/8.25) முன்பு Pg 588
Come – wara (wem/6.17), wapa (Paa/3.17) வா Pg 605
Wind – yartu (Paa/3.8) காற்று Pg 720
Face – mulha (Diy/7.1) முகம் Pg 621
பின்னிணைப்பு 2
Arr – Arrernte – Aruntha (Central Australia)
Bun – Bundjahing (NSW)
Dat – Datiwuy (Northern Territory)
Diy – Diyari (South Australia)
Kau – Kaurna (South Australia)
Ngi – Ngiyampaa (NSW)
Paa – Paakantyi (NSW)
Tor – Torres Strait Creole (Queensland)
Wem – Wembawemba (Victoria)
Wik – Wik – Mungkan (Queensland)
Wir – Wiradjuri (NSW)
References
1. Aboriginal Australia – Robyn Hodge
2. Macquarie (Aboriginal words) – A dictionary of words from Australian Aboriginals & Torres Strait Islander- Nick Thieberger
& William Mcgregor
3. The Native Tribes of Central Australia – Baldwin Spencer and Francis James Gillen, Dover Publications, Inc., New York,
1968 ( Originally published by Macmillan & Co. Ltd, London in 1899)
4. வியக்க வைக்கும் தமிழர் அறிவியல் – மாத்தளை சோமு
5. ABC article ‘DNA confirms coastal trek to Australia’ by Nicky Phillips – 24.07.2009
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
உள்ளத்தினுள்ளே ஆயிரம் கேள்விகள், அவையனைத்தும் உதட்டின் வழியே வெளியே வந்தால் உறவின் அர்த்தங்களே மாறிப் போய்விடும்.
நாளை என்றொருநாள் இல்லாமல் போய்விடுமோ எனும் ஆதங்கத்தில் ஒவ்வொரு நாளையையும் முழுதாக வாழ்ந்து அனுபவித்து விட வேண்டும் எனும் அவாவின் உந்தலினால் வாழ்வது போன்று கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்.
மனிதனை மனிதனாகப் பார்க்காமல் இலாப நட்ட கணக்கோடு அளந்து பார்க்கும் ஒரு அவலநிலைக்கு இன்றைய மக்கள் சிலரின் பேராசைகள் அல்லாடிக் கொண்டிருக்கின்றன.
ஒரு மனிதன் உயிரோடிருப்பதால் என்ன இலாபம்? இறப்பதால் என்ன இலாபம் என்னும் அளவிற்கு வரவு செலவுக் கணக்குகள் பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்படும் கொள்கைகளும் அதன் வழி தீட்டப்படும் திட்டங்களுமே சுபிட்சமான நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடும் எனும் வாதத்தோடு அரசியல் கட்சிகள் அதுவும் குறிப்பாக அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் தமது விளக்கங்களை முன் வைக்கின்றன.
தொலைநோக்கான பார்வை இருக்க வேண்டியது அவசியமே ! அதன் வழி தீர்க்கமான திட்டங்களும் தீட்டப்பட வேண்டியதும் அவசியமே! ஆனால் அவைகளை நிறைவேற்ற தற்போதைய வாழ்க்கை வசதிகளில் எவற்றைத் தியாகிக்க வேண்டியுள்ளது என்பதே முக்கியமான விடயமாகிறது.
வாழ்க்கை வசதிகள் என்று நான் குறிப்பிடும் போது ஆடம்பரமான வசதிகளைக் குறிப்பிடவில்லை, அத்தியாவசியமான தேவைகளையே குறிப்பிடுகிறேன்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதர சேவையின் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
உலகிற்கே எடுத்துக்காட்டாக உள்ள இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை இத்தகைய நிலை அடையக் காரணம் யாதென்ற கேள்வி அனைத்து மக்களின் மனதிலும் முன்னனி அரசியல் அவதானிகளின் மத்தியிலும் எழுந்த வண்ணமே உள்ளது.
வைத்திய சேவையைப் பெறுமிடத்தில் மக்களுக்கு அச்சேவை இலவசமாக இருக்க வேண்டும் எனும் அடிப்படை தத்துவத்தை மையமாக வைத்தே சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் முன்னதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை ஆரம்பிக்கப் பட்டது.
அது ஆரம்பிக்கப்பட்ட காலத்திற்கும், இன்றைய காலக்கட்டத்திற்கும் பெரிய வித்தியாசமுண்டு. அன்றைய சமூக கட்டமைப்பும், இன்றைய சமூக கட்டமைப்பும் முற்றிலும் வேறுபட்டதாக அமைந்துள்ளது.
அன்றைய சராசரி மனிதனின் வாழ்வு 60 ஆகக் கணிக்கப்பட்டது. ஆனால், இன்றைய இங்கிலாந்திலோ 90 வயது வரை வாழும் மனிதர்களின் தொகை அதிகரித்துள்ளது.
வருமானவரி செலுத்துபவர்களும், தேசிய சுகாதர சேவைக்கான நியமனக் கட்டணத்தை வரிமூலம் செலுத்துவோர்களும், அவற்றை செலுத்தாத வேலைஅற்றோர் பட்டியலில் இருப்பவர்களை பராமரிக்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு இன்றைய அதிகரிக்கப்பட்ட ஜரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குள் நுழையும் மக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமற்ற நிலையில் அவர்களுக்கான் வைத்திய சேவையை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இங்கிலாந்து தள்ளப்பட்டிருக்கிறது.
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பார்கள். அதுபோல பொருளாதார நிலை இடம்கொடுக்காத நிலையில் இதே சேவையை இலவசமாக இன்னும் எத்தனை காலத்திற்கு அரசாங்கத்தினால் வழங்க முடியும் எனும் கேள்வியே இன்றைய காலக்கட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
தேவைகள் பெருகப் பெருக அப்பெருக்கத்திற்கு நிகராக அச்சேவைய வழங்கக்கூடிய பொருளாதாரம் இல்லாவிட்டால் வழங்கப்படும் சேவைகளின் தரம் குன்றிப் போகிறது.
இதுவே இன்று நாம் கண்கூடாகப் பார்க்கும் யதார்த்த நிலையாகிறது.
மிகவும் அத்தியாவசியமான இக்கேள்விகளுக்கு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் எந்தக் கட்சி தமது திட்டங்களை தகுந்தவாறு முன்வைக்கிறதோ அக்கட்சியே அடுத்த வருடம் நடக்கும் பொதுத்தேர்தலில் அரசமைக்கும் அங்கீகாரத்தைப் பெறும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து.
இவ்வொரு வருட காலத்தில் ஏற்படும் பல மாற்றங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
படம் உதவி: http://www3.gehealthcare.com/en/Services/Equipment_Financing – http://www3.gehealthcare.com/en/Services/~/media/Images/Services/Equipment%20Financing/Servcices-HFS-Equipment-Financing.jpg?mw=482
இவள் பாரதி
’குட்டியைப் பிடி’ என்றதும்
வேகமாக எட்டெடுத்து வைத்து
அறைக்குள் ஓடி எட்டிப் பார்க்கிறாய்..
தள்ளிய முன்வயிறும்
குட்டி உருவமுமாய்
மீண்டும் தத்தி தத்தி நடந்து
பொத்தென்று விழுந்து
மீண்டும் எழுந்து
குடுகுடுவென நடக்கிறாய்..
உன்னை ரசித்து ரசித்து
பூரிக்கிறேன்..
என்னிடம் செலவாகாமலிருந்த
நேற்றைய கண்ணீர்த்துளியொன்று
இப்போது புன்னகையாக மாறி
சேமிக்கப்படுகிறது
———————————
அலுவலகம் செல்ல
கையசைத்து விடைபெறும்போது
குரலுயர்த்தியழுது
தெருவையே கூட்டிவிடுகிறாய்
சிறிது நேரத்தில்
உன் கவனம் திசைமாறி
விளையாட்டில் செல்ல
அதையே நினைத்து
கலங்கியிருந்தேன்
செல்லும் வழியெங்கும்
அலுவலகம் வந்த பின்னும்
————————————-
-செண்பக ஜெகதீசன்
வருடங்கள்
வந்து போகின்றன..
நரி
நரியாகத்தான் இருக்கிறது,
மான் மானாகத்தான்,
மற்ற மிருகங்களும் அப்படித்தான்!
மாற்றமில்லை
முகத்திலும் குணத்திலும்…
மாறிவிட்டானே மனிதன்!
காட்டுவதேயில்லை உண்மை முகத்தை,
கட்டிக்கொண்டு அலைகிறான்
முகமூடிகளை…
அதனால்,
கண்டுகொள்ள முடியவில்லை
குணத்தையும்…
பாவம்,
படைத்த முகம் நினைவிலில்லை
படைத்தவனுக்கே…!
-பத்மநாபபுரம் அரவிந்தன்
கையில் விலையுயர்ந்த
கரடி பொம்மை வைத்து
ஏ.சி. காரில் அம்மா மடியில்
அமர்ந்து சிக்னலில்
தெரு நோக்கும் குழந்தைத்
தாயிடம் அழுது அடம் பிடிக்கிறது
பிச்சைக்காரியின்
குழந்தையின் கையிலிருக்கும்
மரப்பாச்சி வேண்டுமென்று…
கரடி பொம்மையைச்
சிறிது வெறித்துவிட்டுத்
தலை திருப்பித்
தனது மரப்பாச்சிக்கு
முத்தம் கொடுத்துச் சிரிக்கிறது
பிச்சைக்காரியின் குழந்தை…
எலிஸபெத் பிரௌனிங்
(1806-1861)
காதல் நாற்பது (5)
காதற் கனலை மிதிக்காதே!
மூலம்: எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
கனத்துப் போன என்னிதயத்தை
மரணத் துயரில் தாங்கி
நடமாடுகிறேன்!
முன்னொரு காலத்தில் அவ்விதம்
மரண மதச் சடங்கில்
கிரேக்கப் பெண் எலெக்டிரா(*)
தூக்கிப் போனாள்,
இறந்த தந்தையின்
எரிசாம்பற் கலசத்தை!
உந்தன் கண்களுக்குள் உற்று நோக்கி
உன்னிரு பாதங்கள் மீது,
குப்புறத் தட்டினேன்
எரி சாம்பலை!
ஏறிட்டுப் பார் என்னை!
எவ்விதக்
கோரத் துயர்க் குவியல்
எனக்குள்
பதுங்கி யுள்ள தென!
எரித்த கருஞ் சாம்பல் ஊடே
செங்கதிர்ப் பொறிகள்
மங்கலாய்
எழுந்திடும் தெரியுமா?
என்மேல் உள்ள வெறுப்பில்
உனது கால்கள் அக்கொடும்
கனல் மீது மிதித்து,
முழுவதும்
இருளாகி விட்டால்
ஒரு வேளை
அதுவும் எனக்கு நல்ல தாகலாம்!
அப்படி யின்றிக்
காற்றடித்து அணைக்கு மென
என்னருகே நீ காத்திருந்தால்
எரி சாம்பல் தூசிக்
கிரீடமாய்ப் படியும் உன்
சிரம் மீது!
என்னினிய காதலனே !
அவ்விதம் நீ
கவசமிட்டுக் கொள்ள லாமா,
தவிர்த் தென்னை?
தீக்கனல் பொறி எவையும்
தோலுக்குக் கீழிருக்கும்
உரோமத்தைக் கரித்துத்
துண்டிக்க மாட்டா!
தூரமாய் நில்!
விலகிப் போ
வெகு தொலைவில் !
+++++++++++
In Greek mythology (Trojan War) Electra was daughter of Agamemnon and Clytemnestra. Electra was absent from Mycenae when her father, King Agamemnon, returned from the Trojan War and was murdered by Aegisthus, Clytemnestra’s lover, and/or by Clytemnestra herself. Aegisthus and Clytemnestra also killed Cassandra, Agamemnon’s war prize, a prophet priestess of Troy. Eight years later Electra was brought from Athens with her brother, Orestes). According to Pindar, Orestes was saved by his old nurse or by Electra, and was taken to Phanote on Mount Parnassus, where King Strophius took charge of him. In his twentieth year, Orestes was ordered by the Delphic oracle. to return home and avenge his father’s death. According to Aeschylus, he met Electra before the tomb of Agamemnon, where both had gone to perform rites to the dead.
********************
I lift my heavy heart up solemnly,
As once Electra her sepulchral urn,
And, looking in thine eyes, I overturn
The ashes at thy feet. Behold and see
What a great heap of grief lay hid in me,
And how the red wild sparkles dimly burn
Through the ashen greyness. If thy foot in scorn
Could tread them out to darkness utterly,
It might be well perhaps. But if instead
Thou wait beside me for the wind to blow
The grey dust up, . . . those laurels on thine head,
O my Beloved, will not shield thee so,
That none of all the fires shall scorch and shred
The hair beneath. Stand farther off then! Go.
++++++++++++++++
குன்றக்குடி அடிகள்
59. அறிவு
அறிவு, மானுட வாழ்க்கையை இயக்கும் ஒரு சிறந்த கருவி. இன்று பலர் கருதுவது போல அறிவு என்பது தகவல்கள் அல்ல. செய்திகள் அல்ல. அறிவு ஒரு கருவி(instrument) துன்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கருவி. செவி வழிக்கேட்கும் செய்திகளை, அவற்றில் உள்ள நன்மை, தீமைகளை ஆய்வு செய்வது அறிவு. ஏற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகளை மட்டும் ஏற்பது அறிவுடைமை.
அதுபோல, இந்த உலகில் உள்ள பொருள்களைச் சார்ந்தது தான் வாழ்க்கை. சில பொருள்கள் நல்லன போலத் தோன்றும்! ஆயினும் தீமையே பயக்கும்!
காட்சியில் வேறாகவும் அனுபவத்தில் வேறாகவும் காணப்படும் பொருள்களின் தன்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்ளுதலே அறிவுடைமை. அறிவு பல்வகைப் பிரிவாக வளர்ந்து இந்த உலகின் துறைகள் அனைத்தையும் செழிக்கச் செய்கின்றது. இது பகுத்தறிவு முதன்மையானது.
பகுத்தறிவு மாந்தர் அனைவருக்கும் உரியது. ஆனால், பலர் பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை. அறிவு வளர்ந்தே ஞானம் தருகிறது. ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கைக்கு அறிவே மூலதனம். இந்த உலகில் பெறக்கூடிய பேறுகள் யாவற்றிலும் சிறந்தது அறிவுடமையேயாம். அறிவுடையார் எல்லாச் செல்வங்களும் உடையவர்.
“அறிவுடையார் எல்லாம் உடையார்” என்றது திருக்குறள். அறிவு கல்வியால் பெற இயலும்! ஆனால், கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையராவர் என்று எண்ணற்க. கற்றவர்களிலும் அறிவில்லாதவர் உண்டு. கற்ற கல்வி, கருத்து வாழ்க்கையில் சோதனைப்படுத்தப் படும் பொழுது தான் அறிவு உருவாகிறது. அறிவு – பகுத்தறிவே இந்த உலகைப் புரிந்து கொள்ளவும் இந்த உலகில் சிறப்புற வாழ்ந்திடவும் துணை செய்கிறது.
அறிவு, முற்காப்புக் கருவியாகவும் தொழிற்படுகிறது. அதாவது, துன்பம் வந்து தாக்காமல் நெறியில் உய்த்துச் செலுத்துவது அறிவு. இனி எதிர்வரும் காலத்திலும் துன்பம் வந்தணையாமல் காப்பதும் அறிவுதான்! வாழ்க்கை ஒரு அரியகொடை; வைப்பு; இந்த வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்புற்றிட அறிவு தேவை. அறிவு காட்டும் வழியில் வாழ்தலே வாழ்வு. “மேலான சக்தி” களை நம்புவதில் பயனில்லை.
அறிவு ஒரு போதும் தீமை செய்யாது. அறிவுக்குக் கொடுக்கும் விலை சிறந்த மூலதனம். அறிவுடையார்கள் பலவீனர்களாக இருக்க மாட்டார்கள். அதனால், சூழ்நிலைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள். சூழ்நிலைகளைக் கடந்தும் சூழ்நிலைகளை உண்டாக்கிக் கொண்டும் வளரும் தன்மை அறிவுடையவர்களுக்கு உண்டு.
இயற்கை அறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது நூலறிவு. நூலறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது ஆய்வியல் சார்ந்த அறிவு. ஆராய்ந்து அறிந்த, அறிவுக்குப் பெயர் நுண்ணறிவு. நுண்ணறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது பட்டறிவு. இங்ஙனம் வாழ்க்கையின் வாயில்கள் தோறும் வளர்ந்து செழுமைப்படுவது அறிவு.
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
மின்பதிப்பாக்க உதவி: தேமொழி
கவிஞர் காவிரி மைந்தன்
மா என்பார் பலா என்பார் வாழை என்பார்.. இவை அத்தனைக்கும் சவால் விடும் இக்கனிகள் எக்கனியோ என்று முன்பொரு நாள் எழுதிய தொடர் நினைவுக்குள் வரவைக்கிற பாடலிது!
பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் கதையின் நாயகி மட்டுமே கனவு காண.. கவித்துவத் தென்றல் பாடுகிறது! அசைவுகள் இனிமை சேர்க்கின்றன! குரலின் வளத்தால் குற்றலாத் தென்றலில் நடைபோடும் சுகம் கேட்கின்ற நமக்குக் கிடைத்துவிடுகிறது! புலவர் புலமைப்பித்தனின் விரல்களிலென்ன மூன்றாம் தமிழ் மூச்சுவிடுகிறதா? பிறகென்ன சொர்க்கத்தின் திறப்புவிழா நடக்கிறதே!!
இளமையின் சீதனங்கள் இன்பப் பாற்குடங்கள்! பருவத்தின் மோகம் காட்டி பல்லவி பாடுவதென்ன? உன்னிடம் நான் என்றால் என்னிடம் நீயென்னும் உரிமையில் பரிமாறும் இன்பக் கோலமென்ன? வண்ணங்கள் வாய்திறந்து வரவேற்கும் ராஜாங்கம் கனவுகளாய் கூடுவதென்ன?
கைபட்டு, மெய்பட்டு மேனி சிலிர்ப்பதென்ன? காதலின் மழைதன்னில் கவிதையும் நனைவதென்ன? மென்மையத் தந்திடும் பெண்மையின் மோகனம் கண்களில் காட்டுவதென்ன? சுகராகங்கள் தரும் நாதங்கள் தினம் இன்பம் சேர்க்கின்றன!
கே.ஜே.யேசுதாஸ் பி.சுசீலா குரல்களில் கொள்ளையின்பம் தவழும் தமிழ் கொட்டிக்கிடக்கும் அழகை எண்ணி எண்ணிச் சுவைக்க.. இதயங்கள் அங்கே மிதக்க.. காதல் நீலாம்பரி நம்மை இன்பக்கரை சேர்க்க வருகிறது!
http://www.youtube.com/watch?v=lwJN0EnetUg
சொர்க்கத்தின் திறப்பு விழா …
சொர்க்கத்தின் திறப்பு விழா
இங்கு சொக்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
(இன்று சொக்கத்தின் )
மேகம் அசைந்தும் தவழ்ந்தும் விளையாடும் வானத்திலே
ஆடை கலைந்தும் சரிந்தும் உறவாடும் நேரத்திலே
தூங்காமல் நின்றேங்கும் மலர் விழிகள்
இன்பம் தாங்காமல் தள்ளாடும் இளங்கிளிகள்
உயிரோடு உயிராய் ஒன்றாகி நிற்கும்
உள்ளங்கள் பேசட்டும் புது மொழிகள்
புது மொழிகள் புது மொழிகள்
(சொர்க்கத்தின் திறப்பு விழா )
பூவை திறந்தும் நுழைந்தும் ஒரு வண்டு பாடியது
தேனில் நனைந்தும் குளிர்ந்தும் மலர் காற்றில் ஆடியது
இளவேனில் காலத்தில் திருமணமோ
இனி எப்போதும் வாராத நறுமனமோ
பூவென்ன பூவோ வண்டேன்ன வண்டோ
சொல்லாமல் சொல்கின்ற கதை எதுவோ
கதை இதுவோ ?கதை இதுவோ ?
(சொர்க்கத்தின் திறப்பு விழா )