இலக்கியம்கவிதைகள்

பாவம்…படைத்தவன்!

-செண்பக ஜெகதீசன்

maskman1

வருடங்கள்

வந்து போகின்றன..

 

நரி

நரியாகத்தான் இருக்கிறது,

மான் மானாகத்தான்,

மற்ற மிருகங்களும் அப்படித்தான்!

மாற்றமில்லை

முகத்திலும் குணத்திலும்…

 

மாறிவிட்டானே மனிதன்!

காட்டுவதேயில்லை உண்மை முகத்தை,

கட்டிக்கொண்டு அலைகிறான்

முகமூடிகளை…

 

அதனால்,

கண்டுகொள்ள முடியவில்லை

குணத்தையும்…

 

பாவம்,

படைத்த முகம் நினைவிலில்லை

படைத்தவனுக்கே…!

 

Print Friendly, PDF & Email
Share

Comments (3)

 1. Avatar

  முகமூடி என சொல்லாமல் முகமூடிகள்  என சொன்னதில் தான் கவிதையே வலுக்கிறது.பாராட்டுக்கள்.

 2. Avatar

  கருத்துரை வழங்கிப் பாராட்டிய திருவாளர் அமீர் அவர்களுக்கு
  மிக்க நன்றி…!

 3. Avatar

  மாற்றி கொண்டும் வருகிறான் 
  முகமூடிகளை…..

  பரிதாப‌க்காரர்   படைத்தவன் மட்டுமல்ல‌
  பார்ப்பவனும் தான்
  படைத்தவன் ஆண்டவன் மட்டுமல்ல‌
  அவனை  ஈனறவரும்தான்
   சீண்ட வைக்கும் நல்ல பகிர்வு 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க