Blog

  • சீதா கல்யாண வைபோகமே

    சீதா கல்யாண வைபோகமே
    ராம கல்யாண வைபோகமே
    ராமன் வரும்வரை காத்திருந்தாள்
    வைதேகி மனமுவந்து வார்த்திருந்தாள்
    சனகனின் மாளிகையில் கனவுடனே
    கனக மலரென்று பூத்திருந்தாள்()

    நீலவானம் வந்து நிமிர்ந்து நடைகொடுக்க‌
    கோலநீள் விழிகள் கதிரின் ஒளிகொடுக்க‌
    கண்டதும் நெஞ்சமும் ஏனோ பறிகொடுக்க‌
    துண்டென ஈசன்வில் உடைத்து உயிர்கொடுக்க()
    வில்லென வளர்த்த புருவங்கள் வியக்க‌
    நில்லெனச் சொல்லுமுன் மாலைகள் தொடுக்க‌
    கல்லையும் பெண்ணாக்கும் கால்களில் பணிக்க‌
    முல்லையாய் ஜானகி முறுவல் கொடுத்தாள்()
    காத்திருக்கும் வரையும் காலம் இனிக்கும்
    காத்திருக்கும் வரைக்கும் காதல் வளர்க்கும்
    காத்திருக்கும் கலையும் மாலைகொடுக்கும்
    காத்திருக்கும் கனவும் நனவாய் விழிக்கும் ()

    Share
  • அரிசிச் சோறு!..

    நிர்மலா ராகவன்

    அம்மா அழைத்தது தனலட்சுமியின் செவிகளில் விழவில்லை. அவ்வளவு தூரம் தொலைகாட்சியில் மூழ்கியிருந்தாள்.

    “சாப்பிட வா, தனம்!” மீண்டும் அம்மா அழைத்தாள், சற்று உரக்க.

    இப்போது தனலட்சுமிக்குக் கேட்டது. ஆனாலும், காதில் விழாததுபோல் நடித்தாள்.

    `எப்போதும் அரிசிச் சோறுதான். ஒரு சப்பாத்தி, பூரி என்று ஏதாவது மாறுதல் உண்டா? கேட்டால், தோள்வலி என்பார்கள் இந்த அம்மா!` என்று க்குள் அலுத்துக்கொண்டாள்.

    சமையலறையிலிருந்து அம்மா வெளிப்பட்டாள். சாய்வு நாற்காலியில், சரிந்து விழாதகுறையாக அமர்ந்துகொண்டிருந்த மகளைப் பார்த்ததும் ஆத்திரம் உண்டாயிற்று. அந்த நாற்காலி தனலட்சுமியின் தாத்தாவுடையது. அவர் போய்விட்டார். ஆனால், நாற்காலி இருந்தது, தனலட்சுமியின் ஏகபோக உரிமையாக.

    “கரடியாகக் கத்தினேனே! காது செவிடாகிவிட்டதா?” என்று இரைந்தாள்.

    “எனக்குப் பசிக்கவில்லை,” என்றாள் மகள், தாயின் முகத்தைப் பாராமலேயே.

    அவள் மறுத்த காரணம் அம்மாவுக்கும் தெரியும். வருத்தத்துடன் உள்ளே சென்றாள்.

    திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறந்த மகள் என்று அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்ததன் விளைவு.

    பெரியவர்களின் பேச்சை அச்சிறுமி கேட்பதற்குப் பதில், அவள் போக்கிற்கு விடவேண்டியதாகி விட்டது.

    தன் வயதொத்தவர்களையும் அதிகாரம் செய்ததால், அவளுடன் யாரும் பழகப் பிரியப்படவில்லை. தமது வேலை முடிந்து, சீருடை அணிந்த அப்பா விடு திரும்பினார். மகிழுந்து ஓட்டும் உத்தியோகம் அவருக்கு.

    “சாப்பிட்டு விட்டாயா, தனம்?” என்றார் அன்புடன்.

    “உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன், அப்பா!” இன்னொரு பொய்.

    சாப்பிடும்போது, “உன்னைப் பார்த்தால், பதினோறு வயதுப் பெண் மாதிரியாகவா இருக்கிறது! ஒரே ஆண்டு நிறைந்த குழந்தைகூட உன்னைவிட அதிகமாகச் சாப்பிடும். அது போகட்டும், ஒரு நாளைக்கு எட்டு கோப்பை தண்ணீராவது பருக வேண்டுமாம். பலமுறை சொல்லி இருக்கிறேனே! அதையாவது செய்கிறாயா?” என்றார் சற்றுக் கடுமையாக.

    தனலட்சுமி தன்னுடைய ஆயுதத்தை வீசினாள்.

    தந்தையைப் பார்த்து வசீகரமாகச் சிரித்தாள். தலையை ஆட்டிவைத்தாள். அவ்வளவுதான். அவர் மனம் இளகிவிட்டது. இடது கையால் அவளுடைய முதுகை வருடினார்.

    “நாளையிலிருந்து ஒரு வாரம் பள்ளி விடுமுறைதானே! உன்னை வெளியூர் அழைத்துப் போகப் போகிறேன்,” என்று அப்பா ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார்.

    அவள் ஓயாமல் தொலைகாட்சி பார்த்ததால், சிறு வயதிலேயே மூக்குக்கண்ணாடி அணிய வேண்டி வந்துவிட்டது. காற்றோட்டமான வெளியில் ஓடி விளையாடாததாலும் கண் கெடும் என்று கண் மருத்துவர் கூறியிருந்தார். நேராக அமராது, சாய்ந்தே உட்காருவது பழக்கமாகிவிட்டதால், முதுகுவேறு கூனியிருந்தது. எல்லாவற்றையும் யோசித்துதான் அப்பா அந்த முடிவை எடுத்திருந்தார்.

    “இப்பொழுது எதற்கு அநாவசியமான செலவு?” என்று அம்மா ஆட்சேபித்தாள்.

    சற்றே பயந்து, “அம்மாவையும் அழைத்துப் போகலாம் அப்பா!” என்று சிபாரிசு செய்தாள் தனலட்சுமி.
    அப்பா சிரித்தார்.

    கடந்த முறை பினாங்கிற்குச் சென்றபோது, புதிய சட்டை, வளையல், மாலை எல்லாம் வாங்கிக் கொடுத்தாரே, அப்பா! இம்முறையும் ஏதாவது வாங்காமலா போய்விடுவார் என்றெல்லாம் இரவு நெடுநேரம்வரை, இதழ்கள் புன்னகையால் விரிய, யோசித்துக் கொண்டிருந்தாலும், மறுநாள் அதிகாலையிலேயே எழுந்திருந்தாள் தனலட்சுமி.

    வழக்கம்போல் அவளை எழுப்ப வந்த அம்மாவிற்கு அதிசயமாக இருந்தது.

    “காலை வணக்கம், அம்மா!” என்று தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சினாள் மகள். வெளியூர் போனால், பள்ளிக்கூடம் போக வேண்டியதில்லை. அதனால் வீட்டுப் பாடமும் கிடையாது. அது மட்டுமா, `வெங்காயம் அரிந்து கொடு, சிறிய பாத்திரங்களைக் கழுவு,` என்று அம்மா வேலை ஏவ மாட்டார்கள். ஏனெனில், சாப்பாடு எல்லாம் கடைகளில்தானே!

    பினாங்கைத் தாண்டிப் போனார்கள். தனலட்சுமிக்கு ஆர்வம் தாங்கவில்லை.

    அவள் கேளாத கேள்விக்கு அப்பா பதிலளித்தார். “நம் நாட்டின் வடக்குக்கோடியில் இருக்கும் மாநிலத்தை நீ பார்த்ததே இல்லையே!”

    “கெடாவா!” வாயைப் பிளந்தாள் மகள்.

    வழியெங்கிலும் பசுமையான வயல்கள். “கொஞ்சம் நிறுத்துகிறீர்களா அப்பா?” என்று கெஞ்சலும், கொஞ்சலுமாகக் கேட்டாள் தனலட்சுமி.

    மறு பேச்சின்றி, அவள் சொல்படி நடந்தார் அப்பா.

    “அம்மா! வயலில் அந்த தாத்தா என்னம்மா செய்துகொண்டிருக்கிறார்?”

    இதற்கு அப்பாவே பதிலளித்தார். “நீயே போய் கேளு, தனம்!”

    அவள் தயங்கியதும், தானும் இறங்கினார்.

    வயலில் கணுக்காலுக்குமேல் இருந்த நீரில் ஒரு முதியவர் நின்றிருந்தார். அவரது இடக்கையில் கத்தை கத்தையாக ஏதோ பயிர். ஓரடி உயரம் இருக்கலாம் என்று ஊகித்தாள் தனலட்சுமி. முதலில் அவருக்கு வணக்கம் தெரிவித்தாள். பள்ளியில் கற்ற நற்பழக்கம் அது. “இது என்ன செடி, தாத்தா?” என்று கேட்ட சிறுமியைப் பார்த்துச் சிரித்தார் அவர்.
    “நீ தினமும் சாப்பிடுகிற சோறு எதிலேயிருந்து வருகிறது?” என்று எதிர்க் கேள்வி கேட்டார்.
    தனலட்சுமிக்குப் புரிந்தது. “ஓ! நெற்பயிரா?”

    “ஆமாம். நான் நாற்று நடுகிறேன்,” என்றபடி, ஒரு சிறிய கத்தையை அப்படியே நீரில் வைத்தார். அது சாயாமல், அல்லது ஓடாமல் அதே இடத்தில் நின்றது தனலட்சுமிக்கு ஆச்சரியத்தை விளைவித்தது.

    “நம் நாட்டில வெப்பம் அதிகம். இல்லையா? அதனால் அரிசிச் சோறுதான் உகந்தது. அதிக சக்தி கொடுக்கும்,” என்று அன்புடன் விளக்கியவரிடம், “சப்பாத்தி?” என்று வினவினாள்.

    முதியவர் சிரித்தார். “அது கோதுமைப் பண்டம். அதிலும் வெப்பம்தான். ஆகையால், குளிர்ச்சியான நாடுகளில் அதைச் சாப்பிடுவார்கள்”.

    திரும்பப் போகும் வழியில், “அந்த தாத்தாவின் முதுகு ஏன் அப்படி வளைந்திருக்கிறது?” என்று மெல்லக் கேட்டாள் தனலட்சுமி.

    “நீயும், நானும், நம்மைப் போன்ற பலரும் சாப்பிடுவதற்காக அவர் கடும் வெயிலில் எப்படி உழைக்கிறார், பார்! அதிக நேரம் குனிந்தே வேலை செய்வதால், முதுகுத் தண்டு வளைந்துவிட்டது,” என்று விளக்கினார்.

    “பாவம்!” என்ற தனலட்சுமிக்கு ஏதோ உறைத்தது. தன் முதுகும் வளைந்திருக்கிறது என்று ஆசிரியை தினமும் குறைகூறுகிறார். முதுகில் தட்டி, “நிமிர்,” என்று மிரட்டுகிறார். தான் அப்படி என்ன வேலை செய்து கிழிக்கிறோம்!

    வீடு திரும்பியதும், ஒரு கனமான புத்தகத்தைத் தலையில் வைத்துக்கொண்டு, நடந்து பழக வேண்டும். அது விழாமல் இருக்கவென நிமிர்ந்து நடந்தால், நாளடைவில் முதுகு நேராகிவிடும் என்று ஆசிரியை அறிவுறுத்தவில்லை?

    அன்றிரவும் வீட்டில் அம்மா அரிசிச் சோறுதான் சமைத்திருந்தாள்.

    சாப்பிடுகையில், வயலில் பார்த்த தாத்தாவின் முதுகே தனலட்சுமியின் நினைவில் நின்றது.

    ஒரு பருக்கைகூட விடாது உண்ட மகளை ஆச்சரியத்துடன் பார்த்தாள் தாய்.

    Share
  • நிலவு ஒரு பெண்ணாகி…

    கவிஞர் காவிரி மைந்தன்

    உலகம் சுற்றும் வாலிபன் என்கிற வெற்றிச் சித்திரத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் படு சூப்பர்! கவிஞர் வாலியின் கைவண்ணம் மின்னும் பாடல்கள் தாராளம்!  மெல்லிசை மன்னரின் ஈடிலா இசையில் அன்றும் இன்றும் என்றும் கேட்டு மகிழத் தக்க ரகம்!  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய வண்ணப்படம் இதன் வெற்றிக்குப் பாடல்களே பெரிதும் காரணமாய் விளங்கின.  கவியரசு கண்ணதாசன் அவர்களும் – கவிஞர் வாலி அவர்களும் எழுதியிருக்கும் சொல்லோவியங்கள் சுகமானவை!

     

    காதல் பாடல்களில் இரண்டு விதங்கள்.  ஒன்று காதலனும் காதலியும் இணைந்து பாடுபவை.  மற்றொன்று காதலனோ அல்லது காதலியோ தனித்துப் பாடுபவை.  இவ்வகையில் இரண்டாம் ரகத்தில் பாடல் தேவைப்பட இரண்டு கவிஞர்களும் அள்ளி வழங்கிய முத்துச் சரங்கள் – மோகனப் புன்னகைகள் – மக்கள் திலகத்திற்கு பிடித்துப் போக இதற்காகவே இரண்டு பாடல்களையும் திரையில் இடம் பெறச் செய்தார்.

     

    அவளொரு நவரச நாடகம் – கவியரசு கண்ணதாசன்

     

    நிலவு ஒரு பெண்ணாகி –  கவிஞர் வாலி

     

    ஒவ்வொரு முறை எழுதப்படும்போதும் கவிஞனுக்குள்ளே ஒரு கருத்துப் பிரசவம் நடைபெறுகிறது.  அவனது கவியாற்றல், கற்பனை வளம், இயற்கையில் பெய்யும் மழையாய் முதலில் இதயத்தில் உருவாகி சொற்களின் வடிவில் வெளிப்படுகிற விந்தை – கவிதை.இந்த சுகானுபவம் கவிஞர்களுக்கே சொந்தம்!!

     

     

     

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ 

     

     

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
    நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
    மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
    மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ

    புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
    பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
    குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
    தேன் சுவையை தான் குழைத்து
    கொடுத்ததெல்லாம் இவள் தானோ

    பவளமென விரல் நகமும்
    பசும் தளிர் போல் வளைகரமும்
    தேன் கனிகள் இரு புறமும்
    தாங்கி வரும் பூங்கொடியோ
    ஆழ்கடலின் சங்காக நீழ்க்கழுத்து அமைந்தவளோ
    யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

    செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
    பொன்பதத்தில் வார்த்துவைத்த
    பெண்ணுடலை என்னவென்பேன்
    மடல்வாழை தொடை இருக்க
    மச்சம் ஒன்று அதில் இருக்க
    படைத்தவனின் திறமை எல்லாம்
    முழுமை பெற்ற அழகி என்பேன்

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ……….

     
    http://www.youtube.com/watch?v=F6u_Lsg-Wy8
    http://www.youtube.com/watch?v=F6u_Lsg-Wy8

     

    மாற்றுக் குறையாத தங்கம் என்று சொல்வதா  

     

    மனதை வருடும் இன்பத் தேன் பாடலாஆண்டுகள் பல ஓடிவிட்டபோதும் – நம் நெஞ்சில் பதிந்திருக்கும்  பாடல் அல்லவாஎழுதப்பட்ட இப்பாடல் வரிகளை வாசிப்பதுகூட சுகம்தானே இனிய குரலெடுத்து குழைந்து தரும் டி.எம்.சௌந்தரராஜன்!! வடிவம் மாறாத கவிதை தவழ்ந்து வருகின்ற அழகில் – இதுவரை இப்பாடலில் மயங்காத நெஞ்சங்கள் எங்கே?வாலி எழுதிய பாடல்களில் – இது ஒரு அழகியலின் பால் பதிவு!!

    உங்கள் அரும் கருத்துக்களை அள்ளி வழங்குங்கள்!!

    அன்புடன்..

    காவிரிமைந்தன்

    Share
  • Feather, Oh Feathers!!

     

    Pavala Sankari

    s 1476587
    Feathers, cute little peacock feathers
    Bright and beautiful with multicolours
    Brushing smoothly with rosy petals
    Transcends through the flowery heart
    Brings the cool breeze to float within
    Carrys angel’s blessings to have light heart!

    Rolling pearls on the cheeks
    I know not what they mean
    Rise in the heart, and roll from the eyes,
    In looking on the fresh rosy fields,
    And recalling of the past days,
    By playing with the teddy toys!!

    Cool as the blossom of jasmine
    That brings the scented breeze
    That sinks with all my lovely days
    So sad, so smart , so sweet so cute
    The days that are no more
    Oh sad, and strange as in sunken childhood

    Nosegays! oh make me wake up
    Heaven – flowers glitters as golden
    Twinkling stars of floating eyes
    Circling around the holy childhood
    Softly, oh softly ringing melody bells
    Angel’s rhythm pings the peace at ease!!

     

    Image Courtesy

    http://hdw.eweb4.com/out/754921.html

    Share
  • வார ராசி பலன் 23-12-2013-29-12-2013

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்:கலைஞர்கள் தேடி வரும் வாய்ப்புகளை தங்கள் வளர்ச்சிக்கு அடித்தளமாக மற்றிக் கொள்வதன் மூலம் அதிக நன்மைகளை அடையலாம். வேலைக்குப் போகும் பெண்கள் அலுவலகம், இல்லம் இரண்டிடத்திலும் உள்ளபணி சுமையை சமாளித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகள் பணத்தைக் கையாளும் போது ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்தபின் பட்டுவாடா செய்தால் பணக் கஷ்டம், மனக் .கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருந்தால் இழப்புகளும் நஷ்டங்களும் குறையும்.
    ரிஷபம்: மாணவர்கள் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றினால் வெற்றி என்னும் இலக்கை அடைவது என்பது உறுதியாகும். வியாபாரிகள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மன நிம்மதியோடு வேலைகளில் ஈடுபடலாம். இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் தேவையில்லாத இடங்களிலும், நேரங்களிலும் உங்கள் விறுப்பு, வெறுப்புகளை வெளியே கொட்டாதீர்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்து சம்பந்தமாகவும் மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் பணம் தண்ணீராய் செலவழிந்தாலும் கிடைக்கும் பலன் சொற்பமே.
    மிதுனம்: பணியில் இருப்பவர்கள் முக்கிய பொறுப்புள்ளவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் நன்மதிப்போடு வேண்டிய சலுகைகளையும் பெறலாம்.பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கு உதவும் நல்ல இதயங்களை புண்படுத்தாமல் இதமாக நடப்பது புத்திசாலித் தனம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளை குறித்து, அதன்படி செயலாற்றினால், பணம் ,லாபம் இரண்டும் முடங்காமலிருக்கும். இந்த வாரம் தாய் வழி சொந்தங்களின் வழி ஆதரவால், தடைப்பட்ட காரியங்கள் தாமதமின்றி நல்ல விதமாக நடக்கும்.
    கடகம்: கலைஞர்களுக்கு இந்த வாரம் பயணங்கள் அதிகரிக்கும். வாய்ப்பிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்படுங்கள் . ஓய்வுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய நேரத்தை ஒதுக்க முடியும். பணியில் இருப்பவர்கள் சச்சரவு கை ஓங்கும் நேரங்களில் மௌனத்தை மேற்கொண்டால், அல்லல்கள் அருகே வராது. பங்குச் சந்தை மற்றும் புதிய முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடும் வியாபாரிகளுக்கு லாபம் சீராக வந்து கொண்டிருக்கும். மாணவர்களும், கலைஞர்களும் பேச்சைக் குறைத்து, செயலில் தீவிரம் காட்டும் அளவிற்கு ஏற்ப முன்னேற்றம் இருக்கும்.
    சிம்மம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் பிரச்னைகளைக் கையாளும் போது பதற்றமின்றி செயல்பட்டால் பாதி பிரச்னைகள் குறையும். பெண்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும். வசதி வாய்ப்புகளுடன் உங்கள் கௌரவமும் உயருவதால், கலைஞர்கள் புத்துணர்ச்சியுடன் வலம் வருவார்கள். ஆரோக்கியம் பொலிவுடன் விளங்க, முதியவர்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடை பிடிப்பது நல்லது. இக்கட்டான சூழ்நிலைகளையும் தாண்டி முன்னேற முடியும் என்ற எண்ணமே பொது வாழ்வில் இருப்பவர்களை முன்னேற்றத்தை நோக்கி உந்தித் தள்ளும். மாணவர்கள் வதந்திகளை நம்பி முடிவெடுக்காதீர்கள்.
    கன்னி: மாணவர்கள் தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல்பாடு-இரண்டையும் மேற்கொள்வதன் மூலம் உயர்வான நிலைக்கு செல்லலாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகா மலிருக்கும். இந்த வாரம் பணியாளர்களிடையே அதிருப்தியான சூழல் நிலவும். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் எதிலும் கவனமாய் இருப்பது அவசியம். சுய தொழில் புரிபவ ர்கள் கேட்டிருந்த கடன் உதவி, சிறிது மந்த கதியில் உங்கள் இடம் தேடி வரலாம். பெண்கள் கவனிக்காமல் விட்ட ஆரோக்கிய நலிவு, பணியில் சில தடைகளை ஏற்படு த்தக் கூடும்.
    துலாம்: சொந்த பந்தங்களின் வரவு மகிழ்ச்சிக்கு இந்த வாரம் அடித்தளமாய் அமையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பேச்சில் கடுமை கூடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.தள்ளிப் போடப்பட்டிருந்த காரியங்கள் உடன் முடியும். கலைஞர் களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களை நல்லதை சிலர் தடுக்க முயல்வார்கள். எனவே திறமையோடு புத்திசாலித் தனத்தையும் இணைத்துக் கொள்வது நல்லது. பெண்கள் மூத்தவரிடம் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்க நீங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாய் இருப்பார்கள். வியாபாரிகளுக்கு லாபம் வரும் வழிகள் மேலும் உயரும்.
    விருச்சிகம்: இந்த வாரம் வியாபாரிகளின் முன்னேற்றத்தில் இருந்த தேக்க நிலை மாறி பரபரப்புடன் செயல்படுவார்கள்.உறவுகளின் மீது பெண்கள் வீண் சந்தேகங்களை வளர்த்துக் கொண்டு அவதிப் பட வேண்டாம். கலைஞர்கள் வேண்டிய உழைப்பை நல்கினால், இது வரை எட்டாக் கனியாய் இருந்தவாய்ப்புக்கள் உங்கள் கரங்களுக்கு வந்து சேரும். உபத்திரவம் தந்தவர்கள், விலகி விடுவதால் பொது வாழ்வில் இருப்பவர்களின் செயலாற்றல் மேலும் சிறப்பாக இருக்கும். பணி புரியும் இடங்களில் வீண் பகை வளராதிருக்க, உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்து உரையாடுங்கள்.
    தனுசு: பெண்கள் இந்த வாரம் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், பணமுடை, மன உளைச்சல் இரண்டும் ஏற்படாது. எதிரிகள் வியாபாரிகளின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும் வாய்ப்பு உண்டு.கூட்டாக செயல்படும் போது மாணவர்கள் காட்டும் சொல்சிக்கனம் பிரச்னைகளை பெரிதாகாமல் தடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தவறான வழிகாட்டலுக்கு தலையசைக்காமல் இருந்தால், நிலையான நன்மைகள் உங்களை நெருங்கி வரும். முதியோர்களுக்கு பல் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். எனவே குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.
    மகரம்: சுய தொழில் புரிபவர்கள் ஏனோதானோவென்று செயல்படாமல், சீராகத் திட்டமிடுங்கள். காரிய பலிதம் கட்டாயம் உண்டு. வியாபாரிகள் ,சரக்கு போக்கு வரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். சக கலைஞர்களிடையே, கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பிருப்பதால், பிறருக்கு ஆலோசனை வழங்குமுன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். பெண்கள் பணம் செலவழிப்பதில் கணக்காய் இருப்பதன் மூலம் கடன் தொல்லை ஏறாமல் பார்த்துக் கொள்ளலாம். இனிமையான வாக்கு மூலம் மாணவர்கள் இரட்டிப்பான நன்மை பெறலாம்.
    கும்பம்: பெண்கள் பதற்றத்திற்கு இடம் தராமல், பணிவான முறையில் உரையாடினால், குடும்பத்தில் அமைதி நிலவும். கலைஞர்கள் தீய சகவாசம், வேளை தவறிய உணவு, வீண் செலவு, ஆகிய அனைத்தையும் தவிர்த்து சீரான வழியில் சென்றால், சிக்கல்கள் ஏதும் உருவாகாது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், நல்ல பெயரும்,நல்ல மதிப்பெண்ணும் கட்டாயம் கிடைக்கும்.வியாபாரிகள் மற்றவர்களை நம்பி வேலைகளை ஒப்படைத்து விட்டு அல்லல் படாதீர்கள். தன் கையே தனக்கு உதவி என்று பணி புரிந்தால், பணிகளும், வர வேண்டிய பண வரவும் தேங்காது.
    மீனம்: வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் பெற, வியாபாரிகள் அவ்வப்போது தேவையான புதுமைகளை புகுத்தினால் நல்ல பலன்களை அடையலாம். பெண்கள் அடிக்கடி இல்லத்தில் பயன்படுத்தும் மின் சாதனங்களை நல்ல முறையில் பராமரித்து வந்தால், வீண் செலவுகள் கணிசமாக குறையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கோப தாபங்கள் வார்த்தைகளில் பிரதிபலிக்காமலிருந்தால்,நீங்கள் நினைத்தபடி உதவிகள் பெறுவது எளி தாகும். பணியில் இருப்பவர்கள் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு சிபாரிசு செய்வதை தவிர்த்து விட்டால், வீண் தலைவலி உங்கள் அருகே வராமலிருக்கும்.

    Share
  • சைனா அனுப்பிய முதல் சந்திரத் தளவூர்தி நிலவில் தடம் வைத்து உளவு செய்கிறது.

     

    Chinese Moon Rover 2013

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     http://www.space.com/23792-china-moon-probe-off-and-flying-video.html

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aYwAdHJjiAY

     

    சைனாவின் இரண்டாம்
    விண்ணுளவி
    சந்திரனைச் சுற்றியது !
    மூன்றாம் ஏவுகணை
    முதலாக நிலவில் இறக்கிய தோர்
    தள உளவி !
    அதிலிருந்து  நகர்ந்திடும் தளவூர்தி  !
    ஆசிய முன்னோடியாய்ச்
    சைனாவின் இரு தீரர்
    அண்டவெளிப் பயணம் செய்ய
    விண்வெளியில் நீந்தி
    வெற்றி மாலை சூடி
    மண்மீது கால் வைத்தார்
    மறுபடியும் !
    அமெரிக்காவின்
    விண்வெளி வீரர்கள் போல்
    விண்சிமிழில் ஏறி
    வெண்ணிலவில் தடம் வைக்க
    முன்னோடிப் பயிற்சிகள்  !
    நிலவைச் சுற்றி வர
    மனிதரிலா விண்ணுளவி மூன்றை
    அனுப்பியது சைனா !
    இன்னும்
    பனிரெண்டு ஆண்டுகளில்
    சாதனை யாகச் சைனத் தீரர்
    பாதம் பதிப்பர்
    நிலவின் களத்திலே
    நீல் ஆர்ம்ஸ் டிராங் போல !

    ++++++++++++++++++++

    Yutu is moving

    First Lunar image 2013

    “ராக்கெட் என்ன ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவிட முடியாது.”

    மா சேதுங் (1957) – சைனாவின் விடுதலைப் பிதா (Mao Tse-Tung, China Liberator) (1893-1976)

    “சைனா தேசத்தின் நிலவுத் தேடல் திட்டங்கள் ரஷ்ய, அமெரிக்கச் சாதனைகளுக்கு 40 ஆண்டுகள் பிந்தி இருப்பினும், மனித இனத்தின் விண்வெளித் தேடலில் அந்த முயற்சிகள் தேசப் பொறுப்புக்கு தேவையானவை.”

    கியான் வைபிங் (சைனாவின் இரண்டாம் விண்ணுளவி பிரதம டிசைனர்)

    Chinese Moon Rover

    “பூமியில் உள்ள எரிசக்தி ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது.  இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3.  உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.”  [கதிரியக்கம் அற்ற அணுப்பிணைவு மின்சக்தி உலைக்கு [Fusion Power Reactor] எரிக்கருவாக ஹீலியம்-3 மூலக்கூறு பயன்படுகிறது.]

    ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) Head of First Phase of Lunar Exploration

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் வேண்டும்.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு ஏராளமாய்க் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

    Launch and Landing

    ஆசிய முதல் சாதனையாக நிலவில் இறங்கிய சைனாவின் சந்திரத் தளவூர்தி

    2013 ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சைன விண்கப்பல் செங்கி-3 [Chang’e -3]  சந்திரனை நோக்கிப் பயணம் செய்து, நிலவில் தளவுளவியை மெதுவாய் இறங்கித் தடம் வைத்தது.  பிறகு அந்த நிலைத்த சாதனத்திலிருந்து, நகரும் ஆறு சக்கர தளவூர்தி ஒன்று கிளம்பி உளவ ஆரம்பித்தது.   அது முதன்முதல் சைனா செய்த  ஆசிய தீரச் சாதனையாக உலக நாடுகள் கருதுகின்றன.   இந்த அரிய சாதனையைப் புரிந்த முதலிரண்டு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யாவுக்குப் பிறகு, 37 ஆண்டுகள் கழிந்து சைனா வெற்றிகரமாகச் செய்த மூன்றாவது நாடாக உலகுக்குக் காட்டியுள்ளது.  இந்த விண்வெளித் தேரைச் [Chang’e -3, செங்கி -3] சுமந்து நிலவை நோக்கிப் பயணம் செய்ய வைத்தது  சைன ஏவுகணை  மார்ச் -3பி [March -3B].   ஏவு கணை ஏவி 12 நாட்கள் கழித்து,  விண்ணூர்தி சந்திர தளத்தில் இறங்கியது.  பத்தாண்டு முன்பு முதன்முறையாகச் சைனா தன் விண்வெளித் தீரரை அண்டவெளியில் நீந்தச் செய்து பெயர் பெற்ற பிறகு இந்த அரிய சாதனையை வெகு சிறப்பாகப் புரிந்துள்ளது.   சைனா 2020 ஆண்டுக்குள் தன் விண்வெளித் தீரர் நிலவில் கால் வைக்கும் எதிர்காலத்  திட்டத்திற்கு இந்த வெற்றி அடிகோலி யுள்ளது.

    Land Prints on the Moon

    சைனாவின் சந்திரத் தளவுளவியும், தளவூர்தியும் வந்திறங்கிய பகுதி, 250 மைல் [400 கி.மீ.] அகலமான ஒரு மட்டத் தளப்பகுதி.   அதன் லாட்டின் பெயர் :  ஸைனஸ் இரிடம் [Latin Name, Sinus Iridum].  அதன் பொருள் : வானவில் வளைகுடா [Bay of Rainbows].  சைனத் தளவுளவி, தளவூர்தி இரண்டும் ஒன்றை ஒன்றைப் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பின.  தளவுளவி நிலவில் ஓராண்டு ஆய்வு செய்யும்.  தளவூர்தி மூன்று மாதங்கள் நகர்ந்து சென்று நிலவில் பணிபுரியும்.  தளவூர்தியின் நகர்ச்சி வேகம் :  மணிக்கு 200 மீ. தூரம் [660 அடி] பயணம் செய்யும்.  30 டிகிரிச் சரிவுத் தளத்தில் ஏறி இறங்க முடியும் தகுதியுள்ளது.

    செங்கி -3 குறிப்பணிப் பெயர் சந்திரத் தேவதைக்கு இடப்பட்ட சைன இதிகாசப் பெயர். அதுபோல் தளவூர்தியின் பெயர் :  யூடூ அல்லது . எளிய முயல் [Yutu or Jade Rabbit] . சைனா அனுப்பியுள்ள செங்கி -3  ஆறு சக்கரத் தளவூர்தி கடைசியில் சென்ற ரஷ்ய தளவூர்தியை விட மேம்பட்டது.   சைனத் தளவூர்தியில் முற்போக்கான தள ஊடுருவு ரேடார் [Ground Penetrating Radar] உள்ளது.   அது நிலவின் மண்ணையும், மேற் தட்டையும் ஆராயும் தகுதியுடையது.  யூடூ முயலின் எடை 120 கி.கி. [260 பவுண்டு] .  யூடூ தேரை இயக்குவது சூரிய மின்சக்தி தரும் தட்டுகள்.  அதனுள் புளுடோனியம் -238 கதிரியக்க மூலகம் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.   அதன் வெப்பம் தளவூர்தியை இரவுக் குளிரில் சூடாக வைத்திருக்க  உதவும்.

    Yutu Rover

    சந்திரனை நோக்கிச் சைனா ஏவும் இரண்டாவது விண்ணுளவி

    2010 அக்டோபர் முதல் தேதி ஸிசாங் துணைக்கோள் ஏவு தளத்திலிருந்து (Xichang Satellite Launch Centre – XSLC) சைனாவின் “செங்கி -2” (Chang’e -2) என்னும் தனது இரண்டாவது விண்ணுளவியைச் சந்திரனை நோக்கி “நீண்ட மார்ச் CZ-3C” (Long-March CZ-3C) ராக்கெட்டில் ஏவியுள்ளது.செ​ங்கி -2 மிகத் தணிவாக 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் 6 மாதங்கள் நிலவைச் சுற்றிவந்து தள ஆராய்ச்சிகள் நடத்தும்.  முதலில் ஏவிய சந்திர விண்ணுளவி “செ​ங்கி -1” 2007 அக்டோபரில் பயணத்தைத் துவக்கி 16 மாதங்கள் நிலவைச் சுற்றி முடிவில் தளத்தில் விழுந்து நொறுங்கியது.  வடிவத்தில் சாங்கி-2 முதலில் பயணம் செய்தசெங்கி -1 விண்ணுளவியைப் போன்றதே !செ​ங்கி -1 நிலவை 120 மைல் (200 கி..மீ) உயரத்தில் சுற்றி வந்தது.

     ​செ​ங்கி -2 இன் முக்கியப் பணி : நிலவிலும் நிலவுக்கு அப்பாலும் சென்று புதிய விண்வெளிப் பயண நுணுக்கங்களைச் சோதிப்பது.  அடுத்து வரப் போகும் செ​ங்கி -3 & செ​ங்கி -4 விண்ணுளவிகள் இறக்கும் தளவூர்திகள் ஊர்ந்து நகரும் இடங்களைத் தீர்மானிப்பது.  தளங்களின் படங்களை புதிய காமிராக்கள் மூலம் கூர்ந்து விளக்கமாகக் காண்பது.  தற்போது
    ​செ​ங்கி-2 சந்திரனை நெருங்கி 60 மைல் (100 கி.மீ.) உயரத்தில் அதனைச் சுற்ற ஆரம்பிக்கும்.  குறிப்பணித் திட்டப்படி சில தினங்களில் விண்ணுளவி மிகத் தணிவான 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் சுற்றத் துவங்கிச் சந்திர தளத்தைக் கூர்ந்து உளவு செய்யும். இந்தியாவும், சைனாவும் 21 ஆம் நூற்றாண்டில் நிலவை நோக்கித் தேடிப் போவதின் உள் நோக்கம் ஹீலியம் -3 எரிசக்தியே. “பூமியில் உள்ள ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது.  இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3.  உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.” என்று ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) (Head of First Phase of Lunar Exploration) கூறுகிறார்.  அணுப் பிணைவு முறையில் மின்சக்தி உண்டாக்கினால் அமெரிக்காவுக்கு ஓராண்டுத் தேவை 25 டன் ஹீலியம் -3 !  அதாவது பல்லாயிரம் ஆண்டு உலக எரிசக்தி தேவையை நிலவின் ஹீலியம் -3 வாயு பூர்த்தி செய்ய முடியும்.

    Yutu Moon Rover

    இரண்டாம் நிலவுப் பயணத் திட்டத்தின் வேறுபாடுகள்

    துணைக்கோளைத் தூக்கிச் சென்ற ராக்கெட், விண்ணுளவியை “நிலவைச் சுற்றும் மாற்றுப் பாதையில்” (Trans-Lunar Orbit) விட்டதும் அதன் சூரியத் தட்டுகள் விரிந்து மின்சக்தியை அளித்தன.  பூமியைச் சுற்றும் அப்பாதையின் மிகை நீளம் (Apogee) : 230,000 மைல் (380,000 கி.மீ.)  குறு நீளம் (Perigee) 120 மைல் (200 கி.மீ.)  இந்தப் பாதையில் விண்ணுளவி சென்று 5 நாட்களில் நிலவை அண்டிச் சுற்ற முடியும்.  முதலில் நிலவுக்குப் பயணம் செய்த சாங்கி -1 நிலவை நெருங்க 12 நாட்கள் எடுத்தன.  சாங்கி -2 காமிராவின் கூர்மை நோக்குத் திறன் : 33 அடி (10 மீடர்).  சாங்கி -1 கூர்மை நோக்குத் திறன் : 400 அடி (120 மீடர்).  180 அடி (54 மீடர்) உயரமுள்ள ராக்கெட் 345 டன் தூக்கு எடைத் தகுதி உள்ளது.  ராக்கெட் சுற்றுப் பாதையில் இடும் எடைத் தகுதி : 4 டன். விண்ணுளவியின் எடை : 2.5 டன்.  விண்ணுளவிக்கு இட்ட பெயரான “செங்கி” என்பது சைனாவின் இதிகாச நிலவுக் கடவுள் !

    சைனாவின் இரண்டாம் விண்ணுளவி வெண்ணிலவை 6 மாதங்கள் சுற்றி 2013 இல் ஏவப் போகும் சாங்கி -3 ஒரு தளவுளவியோடு இறங்கப் போவதற்கு வேண்டிய தகவலைச் சேமிக்கும்.  “சைனா வின் சாங்கி -2 துணைக்கோள் சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கும் பொறி நுணுக்கத்தையும், சந்திரனுக்கு அப்பால் செல்லும் பயண அனுபவத்தையும் பெற முனையும்,  விண்ணுளவி விரைவாய்ச் செல்லும் ! நிலவை மிகவும் நெருங்கி தணிவுப் பாதையில் சுற்றிவந்து தெளிவாக ஆராயும்.” என்று சைனாவின் சந்திரச் சுற்றியின் பிரதம டிசைன் அதிபர், உவு வைரன் (Wu Weiren, Chief Designer, China’s Lunar Orbiter Project) கூறினார்.  இந்த இரண்டாம் சாங்கி நிலவுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு சுமார் 134 மில்லியன் டாலர் (2010 சைன நாணய மதிப்பு 900 மில்லியன் யுவான்).

    இதுவரைச் சைனா சாதித்த விண்வெளிச் சாதனைகள்

    1957 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஸ்புட்னிக் விண்சிமிழை அண்டவெளியில் முதன் முதல் ஏவி உலகத்தாரைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது.  அது முதல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் விண்வெளிச் சாதனைப் போட்டிகள் அடுத்தடுத்துத் தொடுத்தன.  அமெரிக் காவின் முதல் துணைக்கோள் 1958 இல் விண்வெளியில் ஏவப்பட்டது ! இரண்டு வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன !  1969 ஆண்டு ஜூலை 20 இல் அமெரிக்க விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் வெண்ணிலவில் தடம் வைத்து 20 ஆம் நூற்றாண்டின் அற்புதச் சாதனையாகச் செய்து காட்டினார். அதற்குப் பிறகு 1972 வரை 5 முறை சென்று அமெரிக்க விண்வெளி வீரர் நிலவில் நடந்து தளவூர்தியிலும் சென்று தகவல் சேமித்தார்.

    அண்டவெளித் தேடலில் ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்கீட்டுக்குப் பிறகுச் சைனா வெகு தாமதமாக முனைந்து விண்வெளிப் பயணங்களைத் துவங்கியது.  1958 ஆம் ஆண்டில் சைனா தனது விண்வெளி ஏவுகணைத் தளத்தைக் கோபி பாலை வனத்தில் நிறுவியது.  சைனா முதல் துணைக்கோளை அண்டவெளியில் வெற்றிகர மாக 1970 இல் ஏவியது.  1990-2002 ஆண்டுகளில் சைனா “செங்கி I, II, III & IV” (Chang’e -1, 2, 3, & 4) விண்சிமிழ் பொறித்துறை நுணுக்க விருத்தியை (Shenzhou I to IV Spacecraft Developments) மேற்கொண்டிருந்தது.

    2003 அக்டோபரில் சைனா முதல் மனித விண்சிமிழ்ப் பயணக் குறிப்பணியை (Manned Space Mission) மேற்கொண்டு செங்சோவ் -5 மூலம் (Shenzhou V) வெற்றிகரமாகச் செய்து உலகை வியக்க வைத்தது !  இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் செங்சோவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி செங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது !  2008 செப்டம்பரில் மூவர் அமர்ந்த விண்சிமிழை முதன்முதல் ஏவி சைன விண்வெளி விமானி அண்டவெளியில் 20 நிமிடங்கள் நீச்சல் புரிந்தது ஆசியா வின் முதல் விண்வெளி மைல் கல்லாக ஓங்கி நிற்கிறது.

    விண்வெளி நிலையம் அமைக்கச் சைனாவின் திட்டம்

    1998 இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கண்காணித்துப் பராமரித்து வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தை (International Space Station) அமைத்துப் பூஜிய ஈர்ப்பு விசையில் புரளும் விண்வெளி விமானிகளை நீண்டகாலப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றன.  அதன் முக்கிய நோக்கம் 2020 ஆண்டுகளில் விண்வெளி விமானிகள் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்யும் திட்டங்கள் உருவாகி வருகின்றன.  அதற்கு விண்வெளி விமானிகள் போய் மீளக் குறைந்தது 12 அல்லது 16 மாதங்கள் நீடிக்கலாம்.  சைனா தனது நீண்டகால விண்வெளிப் பயிற்சிக்குத் தனியா கவே ஒரு விண்வெளி நிலையத்தை (China Space Station) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.  அதன் “டியான்காங் -1 (Tiangong -1 Space Module) முதலரங்குச் சட்டத்தைச் சைனா 2011 ஆண்டில் ஏவ முடிவு செய்திருக்கிறது. டியான்காங் என்றால் “தெய்வீக அரண்மனை” (Tiangong = Heavenly Palace) என்று அர்த்தம்.  அதன் எடை 8.5 டன் இருக்கும்.  அந்த சுற்றும் அரண்மனையில் விவெளி விமானிகள் பூஜிய ஈர்ப்பு விசையில் நீண்ட காலப் பயிற்சியில் ஈடுபடுவார்.  சைன விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வரும் போது அதன் செங்சோவ் -8 (Shenzhov -8) விண்கப்பல் இணைப்பு / அவிழ்ப்புப் (Docking) பணிகளில் பயிற்சி செய்யும். செங்சோவ் என்றால் “தெய்வீகக் கப்பல்” (Divine Vessel) என்று பொருள் ! செங்சோவ் -9 & -10 விண்கப்பலில் இரண்டு அல்லது மூன்று விமானிகள் பயணம் செய்து புதுப் பயணிகள் நுழையவும், பழைய பயணிகள் மீளவும் திட்டங்கள் தயாராகி யுள்ளன.

    ஆசிய நாடுகள் மறைமுகமாகச் செய்யும் அண்டவெளிப் பந்தயம் !

    இந்தியா ஏவிய முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 இல் 300 மைல் உயரத்தில் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறைச் சுற்றியது.  சந்திரனைச் சுற்றப் போகும் இந்தியாவின் முதல் பேரிச்சைத் திட்டம் 2008 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற சந்திராயன் -1 விண்சிமிழ்ச் (Chandrayaan-1) சோதனைகள் நடைபெற்றன.  அப்பயணத்தில் சந்திராயன் -1 விண்சிமிழ் நிலவுக்கு வெகு அருகில் நீள்வட்டச் சுற்றுவீதியில் சுற்றி வந்து உளவுகள் செய்தது !  அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை  சந்திர தளத்தில் இறக்கியது !  அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008  நாணய மதிப்பு) என்று தெரிகிறது !  2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது.  2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது !  இறுதியில் 2005 இல் ஜப்பான் அனுப்பிய முதல் துணைக்கோள் வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றியது.

    அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் மேம்பட்ட விண்வெளித் தேடல்களில் போட்டி இட்டுக் கொண்டுள்ள போது ஆசியாவில் சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் அண்டவெளிப் பந்தயங்களை மேற்கொண்டிருக் கின்றன.  இப்போது சைனா முதல் விண்வெளி நீச்சலைப் புரிந்து ஆசியாவில் தனது முற்போக்கு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் வல்லமையைக் காட்டியுள்ளது !

    2017 ஆண்டுக்குள் சைனா நிலவுத் தள மண் மாதிரியை எடுத்து பூமிக்கு மீளும் திட்டத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறது.  இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சைனா தனது பேரிச்சைத் திட்டமான நிலவுத் தளத்தைத் தொடும் மனிதப் பயணத்தை அமெரிக்கா வைப் போல் நிறைவேற்ற முற்பட்டுள்ளது.  அதே காலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்கள் செவ்வாய்த் தளத்தில் தடம்வைக்கப் பயணம் செய்து அதைச் சுற்றி வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது !  ஆசியாவின் மகத்தான விண்வெளி வெற்றியின் போது முரண்பட்ட வாசகம் என்ன வென்றால் சைனாவின் விடுதலைப் பிதா மா சேதுங், “ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவ முடியாது” என்று இகழ்ச்சியாகக் கூறியது !

    சைனாவின் விண்வெளி ராக்கெட் நுணுக்கத் தேர்ச்சி

    1956 இல் சைனா தனது முதல் ராக்கெட் ஏவுகணை ஆய்வுக் கூடத்தை நிறுவியது.  அடுத்து ரஷ்ய உதவியில் சாங்செங் [Changzheng (CZ)] முதல் ராக்கெட்டைச் செய்து முடித்தது.  1970 இல் சைனா தனது முதல் துணைக்கோளை அனுப்பிப் பூமியைச் சுற்ற வைத்து, அவ்விதம் செய்த ஐந்தாம் உலக நாடாகப் போற்றப் பட்டது.  1992 இல் மனிதன் இயக்கும் துணைக்கோளை ஏவி ரகசியமாய்ச் செய்தது.  1995 இல் ஏவும் போது CZ–2E ராக்கெட் ஒன்று வெடித்து 6 பேர் உயிழந்தனர்.  1999 நவம்பர் 20 இல் செங்ஸோவ் துணைக்கோள் ஒன்று ஏவப்பட்டு 14 தடவை சுற்றி வந்து பிரச்சனையில் பூமிக்கு மீண்டது !  2002 ஆம் ஆண்டில் செங்சோவ் -3 ஏவப் பட்டு 108 சுற்றுகள் செய்த பிறகு பூமிக்கு மீண்டது.  அதே ஆண்டு டிசம்பர் 29 இல் செங்ஸோவ் -4 ஏவப்பட்டு 2003 ஜனவரி 4 இல் திரும்பியது.  2003 அக்டோபர் 15 இல் செங்ஸோவ் -5 மனிதனோடு முதன்முதல் அனுப்பப் பட்டு 14 முறை பூமியை சுற்றி மீண்டது.  அடுத்து 2007 இல் சாங்கி-1 முதன்முதல் நிலவுக்குப் பயணம் செய்து சந்திர தளத்தின் தெளிவான படங்களை அனுப்பியது.  2008 இல் சைனாவின் விண்வெளி விமானிகள் அண்ட வெளி நீச்சலைப் புரிந்தனர்.  2010 அக்டோர் முதல் தேதி சாங்கி -2 சந்திரனை நோக்கிச் சென்று அதன் புவியீர்ப்பில் நுழைந்தது.  ஆசிய நாடுகள் சைனா, ஜப்பான், இந்தியா மூன்றுக்குள்ளும் விண்வெளித் தேடலில் ஓர் மறைமுகப் பந்தயம் உருவாகி வருவதில் பயன் அடையப் போவது ஆசிய மக்களே !

    (தொடரும்)

    தகவல்:

    Picture Credits:  Boston Globe, Christiamn Monitor, Xinhua News Agency & China Daily Reporter, BBC News, The Hindu.

    1. BBC News – Chinese Astronaut Walks in Space [Sep 27, 2008]
    2. BBC News – China Puts its First Man in Space [Sep 27, 2008]
    3. BBC News – China Astronauts Blast into Space [Sep 27, 2008]
    4. BBC News – Timeline Space Flights of the World Countries (2005)
    5. BBC News What’s Driving China Space Efforts By : Paul Rincon [Sep 27, 2008]
    6. BBC News – China Could Reach Moon By 2020 By : Paul Rincon [Sep 27, 2008]
    7. BBC News – China Spacecraft Returns to Earth [Sep 27, 2008]
    8. Boston Globe : China Stokes National Pride with Celebrated First Spacewalk – Maneuver Tests Nation’s Mastry of Technology, By : Barbara Demick  [Sep 28, 2008]
    9. Christian Monitors – China First Spacewalk : No Cold-War Race This Time By : Peter Spootts [Sep 25, 2008]
    10. The Times of India – India Space Program Will Put Rover on Moon [Sep 19, 2008]
    11. Christian Monitor – India Launched its First Satelite (Jan 11, 2007)
    12 The Economic Times – Chandrayaan All Set for Moon Mission (Sep 26, 2008]
    13. Asiaone – Singapore Firm Offers – Chinese Astronaut Completes Nation’s First Space Walk
    [Oct 1, 2008]
    14. China Daily Reporter – Shenzhou VII Spacecraft Lauched fir First Spacewalk By : Hu Yinan [Oct 1, 2008]
    14 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810021&format=html
    அண்டவெளியில் நீந்திய சைனாவின் முதல் விண்வெளித் தீரர் !
    14 (b) http://jayabarathan.wordpress.com/2010/09/10/chandrayaan-2/ (இந்தியாவின் இரண்டாம் நிலவுப் பயணம்)
    15 Xinhua News Agency – Lunar Orbiter a Milestone for Space Agency (October 2007)
    16 The Hindu -Facts & Figures about China’s Second Lunar Probe Chang’e -2 (Oct 1, 2010)
    17 China Launches Second Lunar Probe – Xinhua News Agency (Oct 2, 2010)
    18 Daily Galaxy : China Launches Second Moon Mission (October 3, 2010)
    19 Four Chinese Lunar Launders Mooted – By : Morris Jones, Australia (Oct 6, 2010)
    20 China’s Chang’e-2 Heads for Moon – Xinhua News Agency (October 4, 2010)
    21 Beijing Chinese Space Centre- Xinhua News Agency – Lunar Probe & Space Exploration is Chaina’s Duty to Mankind (October 7, 2010)

    22.  http://www.spacedaily.com/reports/Chinas_triple_jump_progress_in_lunar_probes_999.html  [December 1, 2013]

    23.  http://www.moondaily.com/reports/Silent_Orbit_for_Chinas_Moon_Lander_999.html  [December 9, 2013]

    24.  http://www.moondaily.com  [December 20, 2013]

    25.  http://www.space.com/23855-how-china-change3-moon-rover-works-infographic.html  [December 6, 2013]

    26.  http://www.space.com/23968-china-moon-rover-historic-lunar-landing.html   [December 14, 2013]

    27.   http://www.spacedaily.com/reports/Chinas_first_lunar_rover_lands_on_moon_State_TV_999.html [December 14, 2013]

    28.  http://news.yahoo.com/china-39-39-jade-rabbit-39-lunar-rover-220110008.html   [December 16, 2013]

    29.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/12/chinas-1st-moon-rover-begins-its-exploration-and-search-for-rare-resources.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheDailyGalaxyNewsFromPlanetEarthBeyond+%28The+Daily+Galaxy+–Great+Discoveries+Channel%3A+Sci%2C+Space%2C+Tech.%29 [December 19, 2013]

    30.  http://news.malaysia.msn.com/top-stories/chinas-jade-rabbit-lunar-rover-deployed-on-moon-xinhua-6  [december 14, 2013]

    31.  http://www.bbc.co.uk/news/world-asia-25393826  [December 15, 2013]

    32.  https://en.wikipedia.org/wiki/Chinese_space_program  [December 17, 2013]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [December 21, 2013]

    http://jayabarathan.wordpress.com/

    Searching for Innovation? Learn how IBM is transforming businesses with Big Data and the cloud.
    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அகிலப் பிண்டத்தின் அடிப்படை மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் !

     
     

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    அற்பச் சிறு நியூடிரினோ அகிலத்தின்
    சிற்பச் செங்கல் !
    அண்டத்தைத் துளைத்திடும்
    நுண்ணணு !
    அகிலப் பெரு வெடிப்பில்
    உதிர்ந்த கோடான கோடி
    அக்கினிப் பூக்கள் !
    சுயவொளிப் பரிதிகளின்
    வயிற்றில் உண்டானவை !
    வலை போட்டுப் பிடிக்க முடியாத
    வையகக் குஞ்சுகள் !
    ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் !
    கண்ணுக்கும் தெரியா !
    கருவிக்கும் புரியா !
    எதனுடனும் இணையா !
    முன்னூறுக்கு மேற்பட்ட
    நுண்ணணுக்கள்
    விண்வெளியில் விளையாடும் !
    பிரபஞ்சத்தின்
    சீரமைப்பு முரணுக்குக்
    காரணம்
    நியூடிரி னோவா ?
    கருமைப் பிண்டத்தின் அடிப்படைக்
    கருச் சிசுவா ?

    ++++++++++++++++

    “அதனுடைய திணிவு நிறை எலெக்டிரானை விட மிகச் சிறியது ! ஃபெர்மி அந்த நுண்ணணுவுக்கு “நியூடிரினோ” என்று பெயரிட்டார் ! அவற்றின் சுழற்சி 1/2 (Spin 1/2) என்று இருக்கலாம் என்பது எனது யூகம். அவை மற்ற பிண்டத் துகளுடனும், ஒளித்திரளுடனும் இணைப்பாடு இல்லை. (No Interactions with Matter or Photons)”

    நோபெல் பரிசு விஞ்ஞானி : உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) (1930)

    “இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன்களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூடிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன்களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூடிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல்வாதிகள் (Cosmologists)  நியூடிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.”

    ஜான் லேனர்டு விஞ்ஞானி ஹவாயி பல்ககைக் கழகம்

     

    புதிரான கருமைச் சக்தியின் மர்மான நுண்ணணுக்கள் !

    பிரமாண்டமான பிரபஞ்சத்தில் முக்கால் திணிவுப் பகுதியான கருமைச் சக்தி (Dark Energy) மனிதக் கண்ணுக்குப் புலப்படாமலும் என்னவென்று விளக்க முடியாமலும் “அகிலப் புதிராக” (Heavenly Mystery) இன்னும் இருந்து வருகிறது ! அதைப் போன்று அடுத்து மர்மமானது பிரபஞ்சத்தின் கால் பகுதியாக இருக்கும் “கருமைப் பிண்டம்” (Dark Matter) ! புதிருக்குள் புதிரான நியூடிரினோ துகள்கள் பிரபஞ்சப் பிண்டத்தின் மூலத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்க உதவலாம் ! அகிலவெளிப் புதிர்களை ஆழ்ந்து ஆராய விஞ்ஞானிகள் நுண்ணணு விரைவாக்கிகள் (Particle Accelerators), தொலைநோக்கிகள், துணைக்கோள்கள் ஆகியவற்றைத் தற்போது பயன்படுத்தி வருகிறார். சில உயர்ச் சீரமைப்பு நுண்ணணுக்கள் (Super Symmetric Particles) மிகப் பலவீனமாக உடனியங்கும் துகள்களின் பிரதானக் குடிகள் (Prime Candidates for the very weakly interacting Particles) என்று ஜப்பானிய விஞ்ஞானி முராயமா கருதுகிறார். விரைவாக்கிகள் நுண்ணணுக்கள் எவ்விதம் தம்முள் உடனியங்குகின்றன என்று உளவவும், அவற்றின் திணிவு நிறையை (Mass) அளக்கவும் உதவு கின்றன. அம்முறையில் “நியூடிரினோ பௌதிகம்” (Neutrino Particle Physics) ஓர் மகத்தான இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது ! 1995 ஆம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் தேசீய ஆய்வகத்தில் நியூடிரினோவின் திணிவு நிறையை 5 eV (5 Electron Volt) (Mass of Neutrino is 1/100,000 of the Mass of Electron) என்று கண்டுபிடித்தது விண்வெளித் தேடலில் முக்கியத்துவம் பெறுகிறது !

     

    பிரபஞ்சப் பெரு வெடிப்பிலிருந்து கோடானகோடி நியூடிரினோ நுண்ணணுக்கள் சிதறி விண்வெளி எங்கும் பில்லியன் ஆண்டுகளாய்ப் பொழிந்து வந்துள்ளன. சூரியனைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் நியூடிரினோக்களை உற்பத்தி செய்கின்றன. வெடித்துச் சிதையும் சூப்பர்நோவாக்கள் நியூடிரினோக்களை வெளியாக்கி வருகின்றன ! எலெக்டிரானுக்கும் சிறிதான நியூடிரினோவுக்கு முதலில் நிறையில்லை என்றுதான் விஞ்ஞானிகள் கருதி வந்தனர். மேலும் நியூடிரினோ எலெக்டிரான் நியூடிரினோ, மியூவான் நியூடிரினோ, டௌ நியூடிரினோ (Electron Neutrino, Muon Neutrino & Tau Neutrino) என்று மூன்று வகையில் மிகச் சிறிதாக இருப்பதாலும், அவற்றைப் பிடித்துப் பரிமாணம், பண்பாடுகளைக் காண முடியாது. நியூடிரினோவின் நிறையை விரைவாக்கிகளில் கணிக்க முடியாது. கனடாவில் பூமிக்கடியில் பல மைல் ஆழத்தில் இருக்கும் ஸட்பரி சுரங்கத்தில் அமைக்கப் பட்டுள்ள “ஸட்பரி நியூடிரினோ நோக்ககத்தில்” (Sudbury Neutrino Observatory SNO) பரிதியின் நியூடிரினோக்களைக் கனநீரில் பிடித்துப் பண்பாடுகளைக் காண முடிகிறது. அதுபோல் ஜப்பானில் நியூடிரினோவை நோக்க “உயர் காமியோகந்தே” (Super_Kamiokande) என்னும் பிரமாண்டமான விஞ்ஞானச் சாதனம் ஒன்று உள்ளது !

     

    நியூடிரினோவைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் !

    13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிரபஞ்சத்தில் நியூடிரினோப் பொழிவுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பிரபஞ்சம் கனலில் கொதித்து விரிந்து, விரிந்து மெதுவாகக் குளிர்ந்து அகிலப் பின்புலக் கதிர்வீச்சு (Cosmic Background Radiation) உஷ்ணம் தற்போது 1.9 டிகிரி கெல்வின் (-217 டிகிரி செல்ஸியஸ்) ஆக உள்ளது. ஆனால் நியூடிரினோவின் இருப்பு முதன்முதலில் 1930 ஆம் ஆண்டில் ஆஸ்டிரிய விஞ்ஞானி உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) [1900-1958] என்பரால் அறிமுகமானது. அணுக்கருப் பீட்டாத் தேய்வில் சக்தியின் அழிவின்மை கோட்பாட்டை விளக்க வரும் போது புதுத் துகள் ஒன்றின் நிழல்தடம் அவருக்குத் தெரிந்தது. அதன் நிறை எலெக்டிரான் நிறையை விடக் குறைவானது ! அதற்கு எந்த மின்னேற்றமும் இல்லை (No Electrical Charge) ! ஏறக்குறைய புலப்படாத நுண்துகள் (Almost Invisible Particle) ! மற்ற துகள்களுடன் உடன்சேர்ப்பில்லை (No Interaction with Other Particles). இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi) (1901-1954) அந்தத் துகளுக்கு “நியூடிரினோ” (Little Neutral One) என்று பெயரிட்டார். ஆனால் 1956 இல் ஃபிரெடிரிக் ரையின்ஸ் & கிளைடு கோவன் (Fred Reines & Clyde Cowan) இருவரும் முதன்முதலில் அணு உலையில் நியூடிரினோ உடனியக்கங்களை நிகழ்த்திக் காட்டினர். நியூடிரினோவின் நிறை எலெக்டிரான் நிறையை விடச் சிறியது என்று 1933 இல் எடுத்துக் காட்டியவர் எஃப். பெர்ரின் (F. Perrin). 1934 இல் ஹான்ஸ் பெத்தே & ரூடால்ஃப் பையர்ஸ் (Hans Bethe & Rudolf Peiers) இருவரும் நியூடிரினோவின் “குறுக்குப் பரப்பு” (Cross Section means Probability of Interaction) எலெக்டிரானின் குறுக்குப் பரப்பை விட மில்லியன் மடங்கு சிறியது என்று நிரூபித்தனர்.

    அகிலக் கதிர்கள், சூரியன் போன்ற சுயவொளி விண்மீன்கள், அணு உலைகள், பூமிக்குள் நிகழும் கதிரியக்கத் தேய்வுகள் (Cosmic Rays, Sun Like Stars & Nuclear Reactors, Radioactive Decay within the Earth) ஆகிய நான்கு முறைகளையும் சேர்த்துப் பல்வேறு முறைகளில் மூன்றுவித நியூடிரினோக்களும் உண்டாக்கப் படுகின்றன ! வலுவில்லாத நுண்ணணு நியூடிரினோ விழுங்கப் படாமல் 600 டிரில்லியன் மைல் (மில்லியன் மில்லியன் மைல்) தடிப்புள்ள ஈயத்தைக் கூட ஊடுருவும் வல்லமை பெற்றது ! பரிதியிலிருந்து வினாடிக்குச் சுமார் 10 மில்லியன் நியூடிரினோக்கள் வெளியாகி ஒளிவேகத்தில் நம்மை ஊடுருவிச் செல்கின்றன ! எந்தப் பிண்டத் துகளுடன் இணையாத நியூடிரினோ அண்டக் கோள்களைத் துளைத்துச் செல்பவை ! சூரியன், சந்திரன், பூமி அனைத்தையும் ஊடுருவிச் செல்பவை ! சூரியன் மட்டும் ஒவ்வொரு வினாடியும் 200 டிரில்லியன், டிரில்லியன், டிரில்லியன் நியூடிரினோக் களை உற்பத்தி செய்கிறது ! வெடித்துச் சிதையும் ஒரு சூப்பர்நோவா சூரியனை விட 1000 மடங்கு மிகையான நியூடிரினோக்களை வெளி யாக்கும் ! சுமார் 65 பில்லியன் நியூடிரினோக்கள் பரிதியிலிருந்து ஒவ்வொரு வினாடியும் 1 சதுர மீடர் பூமியின் சதுரத்தில் பாய்ந்து விழுகின்றன !

    கனடாவின் ஸட்பரி நியூரினோ நோக்ககம் (SNO)

    அமெரிக்காவின் புருக்ஹேவன் தேசீய ஆய்வகத்தின் கூட்டுறவுடன் அண்டாரியோ, கனடாவில் ஸட்பரி நியூடிரினோ நோக்ககம் (SNO) 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 1999 அக்டோபர் முதல் இயங்கத் துவங்கியது. அந்த ஆய்வகம் 6800 அடி ஆழத்தில் குடையப்பட்ட ஒரு சுரங்கத்தில் (Sudbury, Ontario Creighton Mine) அமைக்கப் பட்டுள்ளது. உளவும் பிளாஸ்டிக் கலத்தில் சுமார் 1000 டன் பூரணத் தூயக் கனநீர் (1000 Ton Ultra Pure Heavywater in Acrylic Plastic Container) கொண்டது. அந்த பூதக் கலமானது 7000 டன் தூய சாதா நீர் சுற்றியுள்ள கவசப் பானையில் வைக்கப் பட்டுள்ளது. அதில் பயன்படும் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள 1000 டன் கனநீரைக் கனடா வாடகைக்குக் கொடுத்துள்ளது. அந்த சாதா நீர்ப் பானையில் 9500 அடுக்குப் படம் நோக்குக் கருவிகள் மூலம் (Photomultiplier Tubes PMT) நியூடிரினோக்கள் கனநீரில் உண்டாக்கும் நீல நிறச் “செராங்கோவ் கதிர்வீச்சைப்” (Blue Glow – Cerenkov Radiation) படம் எடுக்கலாம்.

    அறியப்படாத சில வித நியூடிரினோக்கள் கருமைப் பிண்டத்துக்கு மூலமாகுமா ?

    பரிதியைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் அணுப்பிணைவு சக்தியில் கனல் வீசினாலும் நியூடிரினோ நுண்ணணு எவ்விதம் வெளியாகிறது என்பது அறியப்படாமல் பிரபஞ்சப் புதிராகவே இருந்து வருகிறது ! வானியல் விஞ்ஞானிகள் கண்ணுக்குப் புலப்படும் ஒளிமயத்தைத் தவிர பிரபஞ்சத்தில் இன்னும் ஏராளமான பிண்டம் (Matter) இருப்பதாகக் கணிக்கிறார்கள். ஏனெனில் காலாக்ஸி ஒளிமந்தைகளை ஏதோ கண்ணுக்குத் தெரியாத பிண்டங்களின் கவர்ச்சி நகர்த்திச் செல்கிறது. அந்தப் பிண்டம் ஒளியைத் தடுத்து மறைப்பதில்லை ! மேலும் அந்தப் பிண்டம் ஒளியை உமிழ்வதுமில்லை ! ஆகவேதான் கண்ணுக்குத் தெரியாத அந்தப் பிண்டம் “கருமைப் பிண்டம்” (Dark Energy) என்று அழைக்கப் படுகிறது !

    இப்போது விஞ்ஞானிகள் மனதில் எழும் வினாக்கள் இவைதான் ! இதுவரை அறியப்படாத சில வித நியூடிரினோக்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கணிக்கப் பட்ட கருமைப் பிண்டத்துக்கு அடிப்படை ஆகுமா ? இன்னும் புலப்படாமல் இருக்கும் புதிய நியூடிரினோக்கள் பிரபஞ்ச வெளியில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கக் காத்துக் கொண்டுள்ளனவா ? அந்தக் கேள்விகளுக்கு “ஆம்” என்று பதில் அளிப்பவர் : ஹவாயி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் லேனர்டு (John Learned) என்னும் வானியல் விஞ்ஞானி ! “இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன்களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூடிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன் களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூடிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல் வாதிகள் (Cosmologists).” நியூடிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.” என்று கூறுகிறார் ஜான் லேனர்டு.

    பிரபஞ்சத்தில் பேரளவு பிண்டம் எவ்விதம் ஆதியில் உண்டானது ? நியூடிரினோக்களைத் தவிர்த்துக் கருமைப் பிண்டத்தில் இன்னும் புலப்படாமல் இருக்கும் நுண்ணணுக்கள் பங்கேற்றிருக்கலாம் ! பிண்டம் எப்படித் தோன்றியது என்று அவை விஞ்ஞானிகளுக்குப் புதிய பாடத்தைப் போதிக்கலாம் ! பிரபஞ்சப் பெருவெடிப்பு நேர்ந்த போது பிண்டமும், எதிரிப் பிண்டமும் (Matter & Antimatter like Electron & Positron) சமப் பரிமாணத்தில் படைக்கப் பட்டிருக்க வேண்டும் ! ஆனால் பிண்டமும் எதிர்ப் பிண்டமும் சேரும் போது அவை இணைந்து அழிகின்றன ! அப்படிச் சம அளவில் படைக்கப் பட்டிருந்தால் அவை அழிந்து வெறும் கதிர்வீச்சு மட்டும் (Radiation Energy) பிரபஞ்சத்தில் நிரம்பி யிருக்கும் ! ஏராளமாக ஏன் பிரபஞ்சத்தில் பேரளவு ஈர்ப்பாற்றல் கொண்ட பிண்டம் கொட்டிக் கிடக்கிறது ? ஒரு வேளை நியூடிரினோக்கள் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலச் “சீரமைப்பு முரணுக்குப்” (Early Asymmetry of the Universe) பங்கேற்றி யிருக்கலாம் ! அது மெய்யானால் நமது உயிர் வாழ்வுக்கும் நியூடிரினோக்களே மூல காரணமாக இருக்கும் !

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Do Neutrios Hold Secrets to the Cosmos ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 South Pole Neutrino Detector Could Yield Evidences of String Theory (www.physorg.com/)
    20 Where Cosmology & Particle Physics Meet By : Paul Preuss – Science@berkeley Lab (Jan 30, 2006)
    21 Fermi Lab – MINOS Experiment Sheds Light on Mystery of Neutrino Disappearance (Mar 30, 2006)
    22 The Birth of Neutrinos (1930-1934)
    23 What is a Neutrino By : Dave Casper
    23 Dept of Energy USA, Solar Neutrinos & Sudbury (Canada) Neutrino Observatory (SNO) By : Richard Halm, Minfang Yeh, Keith Rowley, Zheng Chang & Alexander Garnov (July 27, 2004)

    24.  http://en.wikipedia.org/wiki/Neutrino  [December 3, 2013]

    ******************
    jayabarathans@gmail.com [December 3, 2013]  [R-1]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • தமிழர்களின் மொழிக்கொள்கை – ஒரு பார்வை

    தேமொழி

     

    மொழியினைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்டக்  கருத்துண்டு.

    நமது தமிழ்மொழியைப் பொறுத்தவரை, தனது தாய்மொழி தமிழின் மீது பற்று கொண்டிருப்பவர்கள் உள்ளனர்.  இவர்கள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்கள். தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்ததல்ல என்ற கருத்தினை இறுகப் பற்றிக்கொண்டு பிறமொழி பேசுபவர்களை  எதிர்க்கும் மொழி வெறியர்களும் நம்மில் உண்டு. இவ்வகையில் கண்மூடித்தனமாக மொழியின் மீது ஈர்ப்பு கொண்டவர்களில் பலருக்கு மிஞ்சிப் போனால் மூன்று அல்லது நான்கு மொழிகள் தெரிந்திருக்கலாம்.  தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்தல்ல என்று கருதும் இவர்களது முடிவு பற்பல மொழிகளையும் ஒப்பிட்டு ஆராயும் மொழியியல் வல்லுனர்களைப் போல ஆராய்ந்து கொண்ட முடிவாக இருத்தல் அரிது.

    அதுபோலவே நடைமுறை வாழ்க்கைக்காக, சூழ்நிலையின் கட்டாயத்தினால் பிறமொழிகளைக் கற்றுப் பேசுபவர்கள்  நம்மில் உள்ளனர். இது காலத்தின் கட்டாயம் என்பதால் இதனைக் குறை சொல்வதற்கில்லை.  பிறமொழிகளைக் கற்கும் ஆர்வத்தில் எந்தவிதக் கட்டாயமும் இல்லாமலே பிற மொழிகளைக் கற்று, அந்த மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டவரைவிட மொழிக்குத் தனது பங்களிப்பை வழங்கிச் சென்றவர்களும், செல்பவர்களும் உண்டு. இத்தகையவர்கள் கிடைப்பது அந்த மொழி பெற்ற பேறு.  அத்துடன் இப்பிரிவினரைக் காண்பதும் அரிது.

    பல அந்நியமொழியினரால் நம் தமிழுக்கும் அந்த பேறு கிடைத்திருக்கிறது. அவ்வாறு அந்நிய மொழியினர்  தமிழ் கற்க நேர்ந்ததன் நோக்கம் சுயநலமாக (தனது மதத்தினைப் பரப்புதல் போன்ற காரணங்கள் என்பதாக) இருந்தாலும் தங்கள் பங்களிப்புகளின் மூலம் தமிழ் மொழியின் மேன்மையை உலகிற்கு வெளிபடுத்திச் சென்றுள்ளார்கள். இவரிலும் வேறுபட்டு, அயல்நாட்டின் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சியாளர்களாக இருப்போர், எந்தவிதக் கட்டாயமும் இன்றியே தமிழறிந்து பேசவும் எழுதவும் விரும்பி தமிழுக்கு தங்கள் பங்களிப்பைச் செய்தார்கள், செய்து வருகிறார்கள். சமீபத்தில் சீனப்பெண்மணி ஒருவர் தமிழ் நூலும் வெளியிட்டுள்ளார்.

    Zhao Jiang, the director of China’s only Tamil radio station, has written a book in Tamil, possibly the first of its kind by a Chinese author, to provide an introduction into China’s historical and cultural attractions. Photo: Ananth Krishnan. The Hindu.

    மேற்கூறிய எந்த ஒரு பிரிவினராலும் தமிழ் வளர்ச்சிக்கு எக்காலத்திலும்  தடை ஏற்படப் போவதில்லை.  வளர்ச்சிக்குத் தடங்கலை ஏற்படுத்தும்  பணியைச் செய்பவர்கள்  யாவர் என ஆராய்ந்தால், தமிழராகப் பிறந்த பின்னரும் உடனிருக்கும் தமிழரிடம் தான் வசிக்கும் தமிழகத்திலேயே தமிழில் பேசவிரும்பாமல் ஆங்கிலத்தில் உரையாடுபவர்கள்; தனது தாய் மொழியில் பிற மொழிக் கலப்பின்றிப் பேச விரும்பும் சக தமிழர்களை எள்ளி நகையாடுபவர்கள்; தமிழ் மொழியில் பெயர்ப்பலகைகள் வைக்க, தமிழில் திரைப்படங்களுக்குப் பெயர் சூட்ட, தனது குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிட என அரசு தலையிட்டு வேண்டுகோள் விடுக்கவும், ஊக்கப்படுதவும் வேண்டிய நிலையில் தமிழைப் புறக்கணிப்பவர்கள் என்பது தெரிய வரும். இவர்கள் போன்ற குலத்தைக் கெடுக்கும் கோடாலிக் காம்புகளே இடையூறாக இருப்பவர்கள்.

    சென்ற மாதம் (நவம்பர் 2013)  வெளியிடப்பட்ட “செம்மொழி தமிழ்க் குறும்படம்:  தமிழ்ப் பேசுவோம் தமிழர்களிடம் தமிழில் மட்டும் பேசுவோம்”(http://youtu.be/ebmajdLYtT8) என்ற கருத்தின் அடிப்படையில் தமிழர்களிடம்  உள்ள இந்த வருத்தத்திற்குரிய நிலைபாட்டினைப்  படம் பிடித்துக் காட்டியுள்ளது.  திரைக்கதையின் நாயகன் தமிழில் பேச விரும்புவதால் என்னென்ன இடர்களை எதிர் கொள்கிறார், எவ்வாறு கேலி செய்யப்படுகிறார் என்பதே படத்தின் மையக்கருத்து.  பிற மொழியினரிடம் இல்லாத இந்த மயக்கம் (தனது மொழியினருடன் தனது மொழியில் பேச விரும்பாதது)  மனிதர்களின் இயல்புக்கு எதிராகவேப் படுகிறது.  இவ்வாறு பாசாங்கு செய்வது தமிழர்களினால் இன்னமும் அடிமை மனப்பாங்கிலிருந்து விடுபட முடியாததின் எதிரொலியாகவேத் தோன்றுகிறது.

    இவ்வாறு தேவையற்று தமிழர்கள் அயல்மொழிகளில் பேசும் செயலுக்குச் சற்றும் குறைந்ததல்ல தமிழகத்திலேயே தமிழில் பெயர்பலகைகளை வைக்காது புறக்கணிப்பது.  இந்த சீரழிவைப் பிற மொழியினருடன் ஒப்பிட்டால் தமிழர்களின் குணக்கேடு அதிர்ச்சி தரும் அளவிற்குத் தெளிவாகப் புரியும்.

     

    வடநாட்டுப் பயணக் கட்டுரை ஒன்றில் தோன்றும் புகைப்படங்கள் அம்மாநில மக்களிடம் தமிழர்களுக்கு முற்றிலும் நேர்மாறான மனப்பான்மை இருப்பதைக் காட்டுகிறது. பிறமொழியினர், பிற நாட்டினார் வருகை தரும் சுற்றுலாப் பொதுவிடங்களில் மற்ற மொழியினர் பற்றிய பொதுநலக் கருத்தோ, அக்கறையோ அம்மாநில மக்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.  பல மொழி கொண்ட இந்தியர் அனைவரும் அங்கு சென்றால் அவ்விடத்தைப் பற்றியச்  செய்திகளைப்  புரிந்து கொள்ள வழியில்லாது தங்கள் மாநில மொழியில் மட்டுமே அறிவிப்பு/செய்திப் பலகைகள் வைத்துள்ளனர்.  ஆங்கிலம்  என்ற பொது மொழியைப் படித்து தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ள பிற மொழி பேசும் இந்தியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக அவர்கள் மதிப்பது இதன் மூலம் தெளிவு படுத்தப் படுகிறது.

    கான்பூரில் இருந்து கிட்டத்தட்டப் பதினைந்து மைல் தொலைவில் பிட்டூர் உள்ளது. அங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளின் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அறிவிப்புப் பலகையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை மொழி புரியாதவர்களுக்காக அக்கட்டுரையின் ஆசிரியர் நமக்கு மொழி பெயர்த்து வழங்கியுள்ளார் (நன்றி: வல்லமையாளர் திருமதி. கீதா சாம்பசிவம்)

    DSC02757bittur (1)

    https://groups.google.com/group/mintamil/attach/a4ab36380ea0f609/DSC02757bittur.JPG?part=4&authuser=0

    மேல் காணும் அறிவிப்புப் பலகையின் வாசகங்கள்

    புராதன காலத்தில் ப்ரஹ்மவர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தான் மஹரிஷி வால்மிகி அவர்கள் ராமாயண மஹாகாவ்யத்தை எழுதினதாகச் சொல்லப்படுகிறது.  அவருடைய ஆசிரமும் இங்கேயே அமைந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.  மேலும் ஶ்ரீராமனால் கைவிடப்பட்ட அவருடைய பத்தினி சீதா தேவிக்கு வால்மீகி இங்கே தான் அடைக்கலம் கொடுத்தார்.  சீதையின் இரு புத்திரர்களான லவனுக்கும், குசனுக்கும் இங்கே தான் வித்யாரம்பம் நடந்ததோடு இங்கேயே அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தனர்.  அவர்கள் இருவரும் இந்த க்ஷேத்திரத்தில் தான் ஶ்ரீராமனுடைய அஷ்வமேத யாகக் குதிரையைப் பிடித்து அடக்கினார்கள்.  இங்கே தான் மஹரிஷி வால்மீகியின் மூலம் தந்தை மற்றும் புத்திரர்களுடைய முதல் சந்திப்பு நடந்தது.

    DSC02741ashramval (2)

    https://groups.google.com/group/mintamil/attach/a4ab36380ea0f609/DSC02741ashramval.JPG?part=7&authuser=0

    ஆசிரமத்தின் உள்ளே உள்ள மற்றொரு  அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள்.

    ஶ்ரீராமசந்திர மூர்த்தியின் ஆக்ஞையின்படி ஶ்ரீலக்ஷ்மணன் சீதையை இங்கே தான் விட்டுச் சென்றான். இந்த ஆசிரமத்தின் உள்ளே தான் சீதா மாதாவின் குடிசை இருந்தது.  இங்கே தான் லவனும், குசனும் பிறந்தனர். ஶ்ரீராமரின் அஷ்வமேத யக்ஞத்திற்காக விடப்பட்ட அஷ்வக் குதிரையை இந்த க்ஷேத்திரத்தில் தான் லவனும், குசனும் பிடித்து வைத்தனர்.  இங்கே தான் சீதை அருகே இருக்கையிலேயே ஹநுமானை லவனும் குசனும் பிடித்துக் கட்டிப் போட்டு ஆசிரமத்துக்குள் கொண்டு வந்தனர்.  உள்ளே உள்ள கோயிலில் சீதாதேவி, லவன், குசன், மேலும் புராதனமான தக்ஷிணமுக ஆஞ்சநேயரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

    புராதன சித்த பீடம், ஜீர்ணோத்தாரணம் ஆன வருடம் 1999 ஆம் ஆண்டு.

    DSC02762வால்மீகிசந் (1)

    https://groups.google.com/group/mintamil/attach/c16e10f221c07152/DSC02762%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D.JPG?part=6&authuser=0

    மேலும் ஒரு மொழிபெயர்ப்பு:

    வால்மீகிக்கு ஞானம் கிடைத்த இடம் இதுவெனவும், இங்கே தான் ராமாயணத்தை எழுதினார் எனவும் குறிக்கும் அறிவிப்புப் பலகை.

     

    இந்த வடஇந்திய மாநிலத்தவராது தங்கள் நாட்டில், தங்கள் மாநிலத்தில் இவ்வாறு தங்கள் மொழியை மதித்து தங்கள் மொழிப்பற்றைக் காண்பிக்கிறார்கள்.  இவர்களையும் மொழிப்பற்றில் எங்கேயோ பின்தள்ளிவிட்டார்கள் அமெரிக்கா வாழ் சீனமொழி மக்கள்.  சீனர்கள் தங்களது தாய் மொழியில் மட்டுமே தங்களது வணிக நிறுவனங்ககளின், கடைகளின்  பெயர்ப்பலகைகளை வைப்பதைக் கண்டித்து, சீன மொழியுடன் ஆங்கிலத்திலும்  பெயர்ப்பலகை வைக்கச் சொல்லி சட்டம் இயற்ற விரும்பிய அமெரிக்க மாநகராட்சியை அந்த எண்ணத்தைக் கைவிட வைத்துவிட்டார்கள் இந்த சீனமொழி பேசும் மக்கள்.

    A bookstore in the Garfield Lincoln Plaza in Monterey Park has no English signage. The City Council recently tabled an ordinance seeking to require “Latin lettering” on all business signs. (Lawrence K. Ho / Los Angeles Times / July 31, 2013)

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ் நகருக்கு அருகில் இருப்பது மாண்ட்டரே பார்க் என்ற ஒரு நகரம். அங்கு வசிப்போரில் 70 விழுக்காட்டினர் ஆசியாவில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் அல்லது அவ்வாறு வந்தவர்களின் வழித் தோன்றல்கள். பெரும்பான்மையோருக்கு சீனமொழியே  தாய்மொழி.  ஒருசிலர் இவர்களின் வணிக வளாகங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் தங்களது சீன மொழியில் மட்டுமே கடைப் பெயர்களை எழுதி வைத்துள்ளனர்.  துளியும் ஆங்கிலம் என்பது கிடையாது.  நகரின் ஆட்சியாளர்களுக்கு இச்செயல் பாதுகாப்பைப் பற்றியக் கவலையைத் தந்துள்ளது.  ஓர் அவசர காலத்தில் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், அவசரகால விரைவு ஊர்திகள் போன்றவற்றின் சேவை தேவைப்படுமானால் நகர் ஊழியர்களால் அங்குள்ள பெயர்ப்பலகைகளைப் படிக்க முடியாது போகலாம்.  எனவே, உயிரிழப்புகள் ஏற்படும் சமயத்தில் உதவி செய்வதற்கு அமெரிக்கர்களுக்குப் புரியாத மொழி தாங்கிய பெயர்பலகைகள் இடையூறாக இருக்கக் கூடிய சூழ்நிலையை எண்ணினர் நகராட்சி மன்றத்தினர். பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என்ற நியாயமான சட்டத்தை வரையறுத்தனர்.

    ஆனால் அப்பகுதி சீன மக்கள் கொதிப்படைந்து, இது சிறுபான்மையினர் மீது நிகழ்த்தும் அடக்குமுறை என எதிர்ப்புத் தெரிவித்தனர். சிறுபான்மையினரின் மேல் நிகழ்த்தும் உரிமைமீறல் செயல் என்ற எதிர்ப்பு தோன்றியவுடன் நகராட்சி மீண்டும் கூடித் தற்பொழுது ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற சட்டத்தை சிறிது காலத்திற்குத் தள்ளிவைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளது. அதற்குப் பதிலாக  பல மொழிகளும்  புழங்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு வணிகர்கள் எவ்வாறு உதவுவது என்று விளக்கும் அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளது மாண்ட்டரே பார்க் நகராட்சி.

    பலமொழிகள்  புழங்கும் இடங்களில், அனைவருக்கும் உதவும் வகையில் அப்பகுதி மொழிகளிலும் பெயர்ப்பலகை வைக்கவேண்டும் என்ற பொது அறிவு மக்களுக்கிருப்பது அவசியம் என்ற கருத்தினை நகராட்சி உறுப்பினர் ஒருவர் தெரவித்துள்ளார். சட்டம் போட்டுப் பெயர்ப்பலகையின் இருமொழித் தேவையை  நிறைவற்றுவது சிறந்த முறையாக இருந்தாலும், அவ்வாறு செய்வது ஓரினத்தின் மீது நிகழ்த்தும் அடக்குமுறை எனத் திசை திருப்பப்பட்டு  நகரின் அமைதிக்கு ஊறு ஏற்படுவதைத்  தவிர்க்கும் நோக்கிலேயே சட்ட நடவடிக்கையை எடுக்காமல் நகராட்சி பின்வாங்கியுள்ளது.

     

    இவ்வாறு ஓர் அயல்நாட்டில் வாழும் சீனர்கள் அயல்நாட்டிலும் தங்கள் மொழியில் பெயர்ப் பலகைகள் வைப்பதும், பலமொழி மக்கள் வாழும் இந்தியாவின் வடமாநிலங்கள் பிறமொழிகளைப் புறக்கணித்து தங்கள் மொழியில் மட்டும் அறிவிப்புப் பலகைகள் வைப்பதும் அவர்களது மொழியின்மீது அவர்களுக்குள்ள அன்பினைக் காட்டுகிறது.  ஆனால் தமிழர்களுக்கு ஏனோ தமிழ்நாட்டிலேயே தமிழில் பெயர்ப் பலகைகளை வைப்பது அவமானத்திற்குரிய செயலாகப்படுகிறது.  நம்மில் பலருக்கு பிறமொழிக்குத் தேவை இருந்தும் இவ்வாறு இம்மக்கள்  தங்கள் மொழிகளில் மட்டுமே பெயர்ப் பலகைகள் வைப்பது மொழிவெறியின் பால் அடங்குவதாகத் தோன்றவேத் தோன்றாது. அது அவர்களின் மொழிப்பற்று என விட்டுத் தள்ளுவோம். ஆனால் பிறமொழிக் கலப்பின்றி தமிழ் பேச விரும்பும் தமிழர்களை  மொழி வெறியர்கள் என்றப் பட்டம் சூட்டி இகழ்வதை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே வாடிக்கையாகச் செய்து வருகிறார்கள் என்பதை இங்கு கவனத்திற்குக் கொண்டு வரவேண்டியது அவசியமாகிறது.

    இதுவரைக் குறிப்பிட்ட தாய்மொழித் தமிழை வெறுக்கும் தமிழர்களோ, கான்பூர் மக்களோ, சீன மக்களோ முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றைத் தவறவிட்டிருக்கிறார்கள்.  மொழி என்பது ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ள மனிதகுலத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி.  அதைத் தேவையறிந்து சரியான முறையில், சரியான இடத்தில் பயன்படுத்தினால்தான் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.  மொழி என்பது தன்மானப் பிரச்சனை அல்ல. மொழி என்பது கெளரவப் பிரச்சனை அல்ல.  மொழி என்பது உரிமைப் பிரச்னையும் அல்ல.

    இக்கருத்தை தெளிவுறுத்த மேலும் பல விளக்கங்களும் கொடுக்கலாம்.  அமெரிக்காவின் சோசியல் செக்யூரிட்டி என்ற சமூகப்பாதுகாப்பிற்கான நலத்திட்டத்தின் அடையாள எண் அனைவருக்கும் இருப்பது அவசியம். பணிபுரிய, வண்டி ஓட்ட, வரிகட்ட எங்கும் எதிலும் இந்த எண்ணின் தேவை இன்றியமையாதது. இந்த எண்ணைப் பெற அது வழங்கப்படும் அலுவலத்திற்குச்  சென்று விண்ணப்பம் கேட்ட பொழுது, அங்கு பணிபுரியும் ஊழியர் எனது தோலின் பழுப்பு நிறத்தைக் கண்டு அவராகவே நான் ஒரு ஸ்பானிஷ் மொழி பேசும் ஹிஸ்பானிக் இனத்தவள் எனக் கருதி ஸ்பானிஷ் மொழியில் உள்ள விண்ணப்பம் கொடுத்தார்.  பிறகு ஆங்கில விண்ணப்பத்தைக் கோரி பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியிருந்தது.  இதனால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் பிறமொழியினருக்கும் உதவ வேண்டும் என்ற கொள்கையினைக் கொண்டிருப்பது வெளிப்படுகிறது.

     

    CA DMV

     

    கலிஃபோர்னியா மாநிலத்தின் ஓட்டுனர் உரிமம் பெற விரும்பும் பலமொழியினருக்கும் உதவ விரும்பி அம்மாநில அரசு ஓட்டுனர் விதிகளைக்கற்கப் பலமொழிகளிலும்  விதிமுறைகளை விளக்கும்  பயிற்சிப்  பாடங்களை உருவாக்குகிறது.  இவ்வாறே வாக்காளர் விண்ணப்பத்திலும் பலமொழியினருக்கும் உதவ, அவர்கள் மொழியில் உரையாடி உதவிபெற அம்மொழியினருக்கான தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அலுவலங்கள் என்றுமட்டுமல்ல, பிறமொழி பேசுவோருக்குத் தேவை என்றால் உதவப் பல பொதுச்சேவை செய்யும் நிறுவனங்களும் மொழிபெயர்ப்பாளர்களை தங்களது சொந்த செலவில் ஏற்பாடு செய்து உதவுவதற்கானத் தயார் நிலையிலேயே உள்ளன.

    2013-12-18 07.56.32

    மருத்துவ மனைகளும் இந்த உதவியைச் செய்யத் தவறுவதில்லை. மருத்துவமனைகளில் பலமொழிகளிலும் எழுதப்பட்ட ‘உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவை எனில் உங்கள் மொழியினைச் சுட்டுங்கள், நாங்கள்  ஏற்பாடு செய்வோம்’ என்ற அறிவிப்புப் பலகைகளைக் காணலாம்.  படத்தில் காணப்படும் இந்த அறிவிப்பு ஒரு மருத்துவமனையின் வரவேற்பறையில் இருந்த அறிவிப்புதான்.

    2011-07-28 10.04.34

     

    மொழியின் தோற்றத்தின் காரணமும், பயன்படுத்துவதின் நிமித்தமும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்வதற்கென்ற அடிப்படை உண்மையைக் கருத்தில் கொண்டு தேவைக்கும் இடத்திற்கும் தக்கவாறு அதற்கான நடவடிக்கைகளை மட்டும் முன்னிறுத்துவோம்.  மொழிவெறியையும் இனப்பேதத்தையும் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளைக் கைவிடுவோம். தாய்மொழி தமிழில் பேசுவதில் அவமானமுமில்லை, நம்முடன் வாழ்க்கையில் பங்கு கொள்ளும் பிறமொழியினருக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுப்பதில் எந்தத் தவறுமில்லை.  தமிழரைத் தவிர பிறர் தங்கள் மொழியினைப் புறக்கணிக்கத் தயாரில்லை என்பதைக் கண்டபிறகாவது தமிழர்கள் தாய்மொழியைப் புறக்கணிக்காது, பிறமொழி மயக்கத்தில் இருந்து விடுபடுவது தமிழுக்கு செய்யும்  உதவியாக இருக்கும்.

    வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

     

     

     

    ஆதாரம்:
    Monterey Park drops plan for English signs amid community outcry, By Frank Shyong Los Angeles Times, December 5, 2013
    http://www.latimes.com/local/lanow/la-me-ln-monterey-park-table-signs-20131205,0,6370878.story#ixzz2nipUy9WP

    எல்லாருக்கும் வணக்கம்! கீதா சாம்பசிவம்
    https://groups.google.com/d/msg/mintamil/I-MqBqbTzPw/htPkiiI9qhEJ

    China’s first Tamil author looks to build bridges, January 18, 2013, The Hindu
    http://www.thehindu.com/news/international/chinas-first-tamil-author-looks-to-build-bridges/article4316604.ece

     

    காணொளி:
    செம்மொழி – தமிழ்க் குறும்படம்

    படம் உதவி:
    http://www.trbimg.com/img-52a10a89/turbine/la-me-ln-monterey-park-table-signs-20131205-001/600

    http://www.thehindu.com/news/international/chinas-first-tamil-author-looks-to-build-bridges/article4316604.ece

    https://groups.google.com/d/msg/mintamil/I-MqBqbTzPw/htPkiiI9qhEJ

     

    Share
  • சீதாயணம் நாடகம் -12

     

    படக்கதை -12

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -12

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு :  வையவன்

    ஓவியம் :  ஓவித்தமிழ்

    jeya1

     

     jeya2

    **********

    தகவல்

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/

    ​  [நெஞ்சின் அலைகள்]​

     

     

    ​8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

     

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • உணவை வீணாக்கும் அமெரிக்கர்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    எல்லாப் பொருள்களையும் வீணாக்குவதில் அமெரிக்கர்கள் வல்லவர்கள்.  அதிலும் உணவுப் பதார்த்தங்களை வீணாக்குவதில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது.  அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் எல்லாக் காய்கறிகளும் பழங்களும் விளைவதில்லை.  அந்தந்த இடங்களில் விளையும் பொருள்களை வாங்குங்கள் என்று அவ்வப்போது விளம்பரங்கள் வந்தாலும் ஒரு இடத்தில் விளையும் பொருள்களை நாடு முழுவதும் அனுப்புவது அமெரிக்காவில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று.  இந்தியாவில் அப்படியில்லை.  தென் தமிழ்நாட்டில் விளையும் காய்கறிகள் கூட கர்நாடகாவில் உள்ள மைசூரில் கிடைப்பதில்லை.  காய்கறிகளையும் பழங்களையும் தூர இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் பண விரயமும் பொருள் விரயமும் நிறைய ஏற்படும்.  அதனால் இந்தியாவில் அப்படிச் செய்வதற்கு நமக்குக் கட்டுப்படியாகாது.  ஆனால் அமெரிக்காவில் அதைப் பற்றி எல்லாம் யார் கவலைப்படுகிறார்கள்? வருஷம் முழுவதும் எல்லாக் காய்கறிகளும் பழங்களும் கிடைத்துக்கொண்டிருக்கும்.  சீசனுக்குத் தகுந்தபடி விலையில் கொஞ்சம் மாற்றம் இருக்கும்.  அவ்வளவே.  இப்படிக் கொண்டு செல்வதில் நிறைய வீணாகின்றன என்கிறார்கள்.  இதில் ஆரம்பித்து அவற்றைச் சேமிப்பது, பின் வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்கித் தங்கள் குளிர்பெட்டியில் சேமிப்பது, பின் அவற்றைச் சமைப்பது என்று பல நிலைகளில் அவை வீணாவது தொடர்கிறது.  அது போதாது என்று சமைத்த உணவை வீணாக்குவதிலும் அமெரிக்கர்கள் வல்லவர்கள்.

    டிசம்பர் மாதம் பிறந்துவிட்டால் எங்கு பார்த்தாலும் பார்ட்டிகள்.  ஏன் அதற்கு முன்பே நவம்பரிலேயே நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கும் வழக்கத்தை விட அதிகமாக உண்ணும் பழக்கம் ஆரம்பித்துவிடுகிறது.  டிசம்பரில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் பார்ட்டிகள் நடக்கும்.  பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், டிபார்ட்மெண்ட் கடைகள், அடுக்குமாடிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் என்று எங்கும் பார்ட்டிகள்.  எல்லா நிறுவனங்களும் தங்களிடம் வேலைபார்ப்பவர்களுக்கு இப்படிக் கிறிஸ்துமஸையொட்டிபார்ட்டி கொடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது.  இதற்கு மேல் அந்தந்த டிப்பார்ட்மெண்ட மேனேஜர்கள் தங்களுக்குக் கீழ் வேலைபார்ப்பவர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் வழக்கமும் இருக்கிறது.

    அமெரிக்காவில் நிறைய வளம் இருக்கிறது.  உலகின் பல மூலைகளிலுமிருந்து மனிதர்கள் அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்கள்.  அதனால் பல வகை உணவுகள் கிடைக்கின்றன.  அவற்றை அமெரிக்கர்கள் உண்டுமகிழ்வதில் தவறேதுமில்லை.  ஆனால் அம்மாதிரி பார்ட்டிகளில் வீணாக்கப்படும் உணவின் அளவைப் பார்க்கும்போதுதான் நெஞ்சம் பதறுகிறது.

    டிசம்பர் மாதம் ஒவ்வொரு வெள்ளியன்றும் அவரவர்கள் வசதிக்கேற்றவாறு ஏதாவது ஒரு வெள்ளியில் மாலை ஆறு மணிக்கு இந்த வகைப் பார்ட்டிகளை நடத்துவார்கள்.  நாங்கள் வசிக்கும் எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பிலும் ஒவ்வொரு வருடமும் பார்ட்டி நடத்துவார்கள்.  கிறிஸ்துமஸை ஒட்டி பல வாடகைதாரர்கள் வெளியூர்களுக்குச் சென்றுவிடுவதால் டிசம்பர் மாத முதல் வெள்ளியன்றே பார்ட்டி கொடுக்கும் வழக்கம் இங்கு இருக்கிறது.  பல வகை சாண்ட்விச்சுகள்,பாலாடைக்கட்டிகள்,(cheese),சாலட்கள், கார பிஸ்கட்டுகள், இனிப்பு பிஸ்கட்டுகள், கேக்குகள் என்று பல வகையான அயிட்டங்கள் இருக்கும்.  அசைவர்களுக்கென்று தனியாகச் சில அயிட்டங்கள் இருக்கும்.

    பார்ட்டி நடக்கும் இடத்திற்குள் நுழைந்தவுடனேயே என் கண்களில் படும் எனக்குப் பிடிக்காத விஷயம் உணவுகளைப் பரிமாறிக்கொள்ள வசதியாக வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தட்டுகள், கரண்டிகள், முள்கரண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் தம்ளர்கள்.  ஒருவர் இவற்றில் எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.  அதற்கு மேல் காகித நாப்கின்கள்.  ஒரு பிளேட்டை எடுத்து உபயோகித்துவிட்டு இன்னும் கொஞ்சம் உணவு வேண்டுமானால் இன்னொரு பிளேட்டை எடுத்துக்கொள்வார்கள்.  அதே பிளேட்டை மறுபடி எடுத்துச் சென்றால் உணவைப் பரிமாறிக்கொள்ளும்போது எப்படியாவது இவர்கள் பிளேட்டில் உள்ள எச்சில் உணவு – அதாவது அதில் கிருமிகள் இருக்கலாம் என்பதால் – பொதுவாக உள்ள உணவில்சேர்ந்துவிட வாய்ப்பு இருப்பதால் இந்த ஏற்பாடாம்!  அதன் பிறகு இனிப்பு வகைகளை எடுத்துக்கொள்ள சிறிய பிளாஸ்டிக் தட்டுகள். எல்லோரும் வயிறார உண்டு முடித்த பிறகு குப்பைக் கூடை பிளாஸ்டிக்தட்டுகள் வகையறாக்களோடு  நிறைந்திருக்கும்.  இத்தனை பிளாஸ்டிக் தட்டுகளும் தம்ளர்களும் குப்பைகளைப் போடும் புதைகுழிகளில் போய்ச் சேரும்.   இவை மக்காத குப்பைகள் என்பதால் ஆண்டுக் கணக்காக அங்கேயே இருந்து சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயம் உண்டு.

    தட்டுகளில் பரிமாறிக்கொண்ட உணவுகளை எல்லாம் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் நினைப்பதில்லை.  (இந்தியாவிலேயே பலர் அப்படி நினைப்பதில்லை.  அப்புறம் வளம் கொழிக்கும் அமெரிக்காவைப் பற்றி என்ன சொல்வது?)  முடிக்க விரும்பியதை மட்டும் முடித்துவிட்டு மீதியை அப்படியே கீழே போடுவார்கள்.

    இம்மாதிரி பார்ட்டிகளில் சில அயிட்டங்களாவது மிஞ்சிவிடும்.  அவற்றைத் தங்கள் வீட்டிற்கு எடுத்துப் போக பல அமெரிக்கர்கள் விரும்புவதில்லை.  இந்தியாவில் என்றால் அங்கு வேலைபார்க்கும் ஏழைகள் அவற்றை எடுத்துச் செல்வார்கள்.  ஏனெனில் அவர்களால் உணவுகளை எளிதில் வாங்க முடியாது.  அமெரிக்காவில் பார்ட்டிகளில் பரிமாறப்படும் உணவுகளை வாங்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை.  தங்களுக்குப் பிடித்த அயிட்டம் என்று ஏதாவது இருந்தாலொழிய மற்றவற்றை எடுத்துச் செல்ல மாட்டார்கள்.  உணவு தயாரித்து இம்மாதிரி பார்ட்டிகளுக்குக் கொடுப்பதற்கென்று சில கம்பெனிகள் இருக்கின்றன.  அந்தக் கம்பெனி ஆட்கள் உணவுகளைக் கொண்டுவந்து மேஜைகளில் பரப்பிவிட்டுப் பின் கடைசியாக பரிமாறிய பாத்திரங்களை எடுத்துச் செல்வார்கள்.  என்ன மிஞ்சியிருந்தாலும் அவற்றை அப்படியே குப்பையில் கொட்டிவிடுவார்கள்.  விருந்திற்கு வந்தவர்களும் ஒரு முறை சாப்பிட்டதை மறு முறை வீட்டிற்கு எடுத்துப் போய்ச் சாப்பிட விரும்ப மாட்டார்கள்.  இவ்வளவு வீணாகிறதே, அதில் கொஞ்சமாவது வீணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டாமா என்று ஒருவரும் நினைப்பதில்லை.  என்னால் முடிந்த அளவு நான் வீட்டிற்கு எடுத்து வருவதுண்டு.  அதை குளிர்பெட்டியில் வைத்து இரண்டு நாட்கள் சாப்பிட்டால் என்ன குறைந்துவிடும்?

    இத்தனை உணவுப் பொருள்கள் வீணாகின்றனவே, இதை என்னால் சகிக்க முடியவில்லையே, நான் பார்ட்டிக்கே வந்திருக்கக் கூடாதோ?  அப்படி வந்திருக்காவிட்டால் இதையெல்லாம் பார்த்திருக்கத் தேவையில்லையே என்று என் கணவரிடம் ஆதங்கப்பட்டேன்.  அமெரிக்காவில் இப்படி உணவுகள் வீணாக்கப்படுவதை நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருந்தபோதே இந்தியாவில் இம்மாதிரி பார்ட்டிகளில் மிஞ்சியதை சாப்பிடுவதற்காக எத்தனை ஏழைகள் காத்திருப்பார்கள் என்ற வேதனை தரும் நினைவும் கூடவே வந்தது.  இப்படி மிஞ்சிய உணவைச் சாப்பிடுவதற்கு ஆட்கள் இல்லாமல் இருப்பது உணவை வீணாக்குவதை விட மேல் அல்லவா என்ற நினைப்பும் எனக்கு ஏற்பட்டது.  இவை இரண்டும் ஒன்றாக இருப்பதற்குச் சாத்தியமே இல்லையா?.

    Share
  • ராமன் வரும் வரை காத்திரு……

    ராமஸ்வாமி ஸம்பத்   

    முன்னுரை

    அன்றாட வாழ்க்கையில் நமக்குப் பிடிக்காத விஷயம் ஒன்று உண்டென்றால் அது காத்திருப்பதே. ஒருவருக்காகவோ அல்லது ஒரு நிகழ்விற்காகக் நாம் காத்திருக்கும்போது காலம் விரயம் ஆவதுபோல் தோன்றுவது சகஜமான ஒரு அனுபவம். காதலனுக்காகக் காத்திருக்கும் காதலி, கணவன் வரவை  வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் மனைவி, பிள்ளை இன்னும் பள்ளியிலிருந்து வரவில்லையே என்று ஏங்கும் அன்னை, பேருந்தினையோ ரயில் வண்டியையோ எதிர்பார்க்கும் பயணி, அரசாங்க அலுவலகத்தில் ஒரு சான்றிதழுக்காக தவிக்கும் ஒரு சாதாரண மனிதன், மருத்துவ மனையில் வைத்தியருக்காகத் தவமிருக்கும் நோயாளி, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெரும் கோயிலில் இறைவன் தரிசனத்திற்குக் காத்த்திருக்கும் பக்தன் – இவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு ‘க்ஷணம் க்ஷணம் நிரீக்ஷணம்’  தான். ஆவலோடு ஆரம்பிக்கும் காத்திருப்பு சடுதியில் சலிப்பாகவும் பின்னர் எரிச்சலாக மாறுவதும் இயற்கையே. மொத்தத்தில் காத்திருப்பது என்பது வேதனையே. அப்படிப்பட்ட அனுபவம் ஒன்று அடியேனின் இக்குருந்தொடருக்கு அடிகோலியிருக்கிறது.

    ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன்  ஒரு நாள், ஆந்திராவில் உள்ள குண்டூர் நகரத்தின் அருகாமையில் அமைந்திருக்கும் ஸ்ரீ காளி வனாஸ்ரமத்தில் அடியேன் குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஹனுமத் காளி வரபிரஸாத பாபுஜி மஹராஜ் அவர்களைக் காண விஜயவாடாவிலிருந்து நானும் என் உற்ற நண்பன் சிரஞ்ஜீவியும் சென்றிருந்தோம். ஆஸ்ரமத்தின் மாலை பிரார்த்தனையில் கலந்து கொண்டபின் குருமஹராஜ் அவர்களுக்கு நாங்கள் வந்திருக்கும் செய்தியைத் தெரியப்படித்து விட்டு, அவர் அறையின் வெளியே அழைப்புக்காகக் காத்திருந்தோம்.

    சற்று நேரத்திற்குப் பின், சிஷ்யர் ஒருவர் வந்து, “குருமஹராஜ் முதலில் உங்களை உணவு அருந்துமாறு பணிக்கிறார்; பின்னர் சந்திக்கலாம் என சொல்லச் சொன்னார்” என்றார்.

    எட்டு மணி அளவில் இரவு உணவு முடிந்து, நாங்கள் இருவரும் தியான மந்திரத்தில் காத்திருந்தோம். காலம் கடந்து இரவு பதினொன்று மணியை எட்டியது. ஸத்குருவிடமிருந்து எங்களைச் சந்திப்பது பற்றி ஒரு தகவலும் இல்லை. நள்ளிரவு நெருங்கிய அளவில், எங்களுக்கு குருநாதரைச் சந்திக்க முடியுமா என்ற ஐயம் ஏற்பட்டது. ‘சரி, இன்னொரு நாள் வரலாம்’ என நினைத்தாலும், அவர் உத்தரவு இல்லாமல் அவ்விடத்தைவிட்டு அகல எங்கள் மனம் ஒப்பவில்லை.

    திடீரென்று, “உங்களை வெகு நேரம் காக்க வைத்துவிட்டேனா?” என்ற குருநாதரின் இனிமையான குரல் கேட்டது. பாபுஜி மஹராஜ் தியான மந்திரத்தில் அப்போதுதான் நுழைந்து கொண்டிருந்தார்.

    “உங்கள் நேரம் விலை மதிப்பற்றதல்லவா? மன்னிக்கவும். என்ன செய்வது? எனக்கும் சில அனுஷ்டானங்கள் இருக்கின்றன அல்லவா? அதனால்தான் தாமதம். ஒரு வேடிக்கை பார்த்தீர்களா? அமைச்சர்களையும் பெரும் பதவியில் உள்ளவர்களையும் காண மணிக்கணக்கில் காத்திருக்கும்போது நமக்கு அலுப்பு தட்டுவதில்லை. ஆனால் ஏழுமலையான் தரிசனத்திற்குக் காத்திருக்கும்போது மட்டும் நமக்கு ‘போர்’ அடிக்கிறது” என்று குருநாதர் சொன்னதும், எங்களுக்குச் சற்று வெட்கமாக இருந்தது. வதனத்தில் குறுநகையோட எங்கள் அருகில் வந்து பரிவுடன் ஆசீர்வதித்து, “உங்களுக்கு வசிஷ்ட மாமுனிவர் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்” என்றார். ஸத்குரு மஹராஜ் கதை சொல்கிறார் என்றால் அதில் நமக்கு அவசியம் தெரிய வேண்டிய ஒரு மாபெரும் உண்மை பொதிந்திருக்கும். அவர் மெல்லத் தொடர்ந்தார்….

    ஒரு சமயம் வசிஷ்டர் தன் மானசீகத் தந்தையான பிரமதேவரிடம் சென்று, ‘ஐயனே! தங்கள் ஆணைப்படி சூரிய வம்சத்தோன்றலான இக்ஷ்வாகு மன்னன் முதல் ககுஸ்தன், மாந்தாதா, முசுகுந்தன், திரிசங்கு, ஹரிச்சந்திரன், சகரன், பகீரதன், அம்பரீஷன், ருதுபர்ணன், திலீபன் உள்ளிட்ட அறுபதிற்கும் மேற்பட்ட அயோத்தி அரசர்களுக்கு ஆசானாக செயல் புரிந்துவிட்டேன். புத்திர பாக்கியம் இல்லாத திலீபனும் என் ஆசிரம பசு காமதேனுவின் கன்றான நந்தினிக்கு ஒரு மண்டலம் பணிவிடை செய்து சாபம் நீங்கி ரகு என்னும் உத்தம புத்திரனுக்கு தந்தையாகும் பாக்கியம் பெற்றுவிட்டான். இத்துடன் என் கடமை முடிந்து விட்டது என நினைக்கிறேன். எனக்கும் இப்புவி வாழ்க்கை அலுத்து விட்டது. தயவு செய்து என்னை தங்கள் சத்தியலோகத்திற்குத் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்” என்றார்.

    பிரமதேவரின் முகத்தில் ஒரு இளநகை ஓடியது. “மைந்தா, ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை என்று சொல்வார்கள். உன் விஷயத்தில் அது உண்மை போலும். உனக்காகக் காத்திருக்கும் ஒரு கிடைத்தற்கரிய மாபெரும் பேறு பற்றி உனக்குத் தெரியவில்லை. ஆதலால் அந்தப் பேறினை எதிர்நோக்கி ரகுவம்சத்தில் வரப்போகும் இன்னும் சில தலைமுறைகளுக்கு நீ ஆசானகத் திகழவேண்டும்” என்றார்.

    “அப்படி என்ன பெரும் பேறு தந்தையே?”

    “உன் ஆணைப்படி விரதம் இருந்த திலீபனுக்குப் பிறந்த ரகுவின் குலத்தில் ஆதிவிஷ்ணுவே அவதரித்து உன்னால் ‘ராமன்’ எனும் பெயர் சூட்டப்பட்டு உனக்கு சீடனாக அமையப் போகும் நல்வாய்ப்பினை கைவிடலாமா?”

    “திருமால் எனக்கு சீடனா? அந்த சர்வக்ஞனுக்கு நான் ஆசானா? இது என்ன கொடுமை பிரபூ?”

    ”ஆம், இது திருமாலின் லீலா வினோதம். தான் எடுக்கப்போகும் மானிட அவதாரத்தில் உன்னைப் பெருமை படுத்த அவர் நிர்ணயித்துள்ளார். பூலோகத்தில் உன் கடமை இன்னும் முடியவில்லை. ஆகவே, ராமன் வரும் வரை காத்திரு”…..

    இவ்வாறு வசிஷ்டரின் கதையைக் கூறிமுடித்த குரு மஹராஜ், ”பிரமதேவன் ஆணைப்படி வசிஷ்டர் ராமன் வரும் வரை காத்திருந்தார். ரகுவிற்கு அஜன் பிறந்தான்.  அஜனுக்கு தசரதன் மைந்தனான். மக்கட்பேறு இல்லாத தசரதனுக்கு புத்திர காமேஷ்டி யாகத்தின் மூலம் ராமன் மற்றும் பரதன், லக்ஷ்மணன், சத்ருக்கினன் புதல்வர்களாக வாய்த்தனர். அந்நால்வரும் வசிஷ்டருக்கு சீடர்களாயினர். பல்லாண்டுகளாக ராமன் வரும் வரை காத்திருந்த அவர்தம் பெருமைதான் என்னே!  எப்பொழுதும், இறைவனைக் குறித்தோ ஆன்மீக விஷயத்திலோ காத்திருப்பதைப்பற்றி சலிப்பு தட்டக்கூடாது. ஏனெனில் அதுவும் ஒருவகையில் தவமே. வெகு காலம் காத்திருந்து அதன் முடிவில் ஒருவன் அடையும் ஆனந்தம் அளவிடர்க்கரியது” என்று எங்கள் உள்ளத்தில் ஏற்பட்ட தவறான எண்ணத்தை நீக்கினார் ஸத்குருநாதர்.

    மோதிரக்கையால் குட்டுபட்ட எங்களுக்கு அதன் பின் ஒரு மணி நேரம் தன் ஆணிமுத்து போன்ற நல்லுரையை நல்கி, “நேரம் ஆகிவிட்டதே என்று கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நெடுஞ்சாலையில் ஒரு ‘லாரி’  காத்திருக்கிறது. அதில் ஏறி நீங்கள் சுகமாகப் பயணிக்கலாம்” என்று கூறி விடை கொடுத்தார். அவர் சொன்னது போல எங்களுக்காக விஜயவாடா செல்லும் ‘லாரி’ ஒன்று ஆசிரமத்தின் அருகே காத்திருந்தது.

    செல்லும் வழியில் பாபுஜி மஹராஜ் சொன்ன வசிஷ்டரின் கதையைப்பற்றி விவாதித்தவாறு நாங்கள் விஜயவாடா சேர்ந்தோம்.

    வீடு திரும்பிய என்னுள் எண்ண அலைகள் மோதியவாறு இருந்தன…..

    ’வசிஷ்டர் மட்டுமா ராமன் வருகைக்குக் காத்திருந்தார்? ராமாயண காவியத்தில் எத்தனை பேர் அவ்வண்ணலின் வருகைக்காகவும் ராம காரியத்திற்குத் துணைபோவதற்கும் காத்திருந்தனர்? உண்மையில் ஆதிகவி வால்மீகி இயற்றிய காவியமே அத்தகைய காத்திருப்போர் கதைகளின் தொகுப்பே அல்லவா…?’

    அதனைச் சற்று அசை போடுவோமா?

    (​தொடரும்)

    Share
  • தாயில்லாமல் நானில்லை – கவிஞர் ஆலங்குடி சோமு

    கவிஞர் ஆலங்குடி சோமு

     

    தாயில்லாமல் நானில்லை

     

    பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் எனும் தலைப்பில் வெள்ளி தோறும் வருகின்ற இந்தத் தொடரில் …  பல்வேறு பாடலாசிரியர்களின் பாடல்கள் இடம் பெறவிருக்கின்றன.  சென்ற வாரம் புலவர் புலமைப்பித்தன்.  இந்த  வாரம்  கவிஞர் ஆலங்குடி சோமு.

    தாயின் காலடியில் உள்ளதடா சொர்க்கம் என்று நபிகள் நாயகம் கூறுகிறார்.  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறது நன்னெறி! தாய் எந்த உயிருக்கும் ஆதாரமானவள்!  தாயை வணங்குதல் தரணியில் சிறந்ததென சான்றோர் முதலாய் சரித்திரம் சொல்லும்!  தாய்க்கு ஈடாக இவ்வுலகில் ஏதும் கிடையாது என்பதும் யாவரும் அறிந்ததே!

    அன்பு, கருணை, பரிவு, பாசம் இவைகளின் மொத்தப்படைப்பு தாய்மை!  ‘அவள் அன்னை மட்டுமல்ல!  வாழ்வின் ஆதாரம்!  கடவுள் ஒவ்வொரு உயிருடனும் இணைந்திருக்க இயலாத காரணத்தால் ‘தாயை’ படைத்தான் இறைவன் என்பார்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தாயன்பு மிக்கவராய் வாழ்ந்தார் என்பது மட்டுமின்றி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ‘தாய்’ என்கிற உறவுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளித்து தனது கோடான கோடி ரசிகர்களின் இதயங்களிலெல்லாம் தாய் மீது பாசம் மேலிட காரணமானார் என்பதுவும் மிகையில்லை!

    எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அடிமைப் பெண், கே. சங்கர் இயக்கத்தில் வெற்றிப் படைப்பாக வரலாற்றுப் பின்னணியில் வரையப்பட்ட கதை, திரைக்கதையில் முதல் பாடல் தாயைப் பற்றி அமைய வேண்டுமென எண்ணி பல்வேறு பாடலாசிரியர்களை வரவழைத்து எழுதிப்பெற்றார். வரையப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் வழக்கம்போலவே அதற்கான பணத்தை அள்ளித்தந்தார். ஆனாலும் தான் திருப்தியடைகிற அளவு பாடல் வரப்பெறாமல் மேலும் மேலும் கவிஞர்களை எழுத வைத்தார்.  40 பாடல்கள் எழுதப்பெற்ற பின் 41வது பாடலாக கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதிய இப்பாடல் வரிகளில் ஒரு தெய்வ தரிசனம் கண்டார்.  அதையே படத்தில் இடம் பெறச் செய்தார்.

    தாயில்லாமல் நான் இல்லை
    தானேஎவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள் (தாயில்லாமல்)

    • ·       
      ஜீவநதியாய் வருவாள்
      என்தாகம் தீர்த்து மகிழ்வாள்
      தவறினை பொறுப்பாள்
      தர்மத்தை வளர்ப்பாள்
      தரணியிலே வளம் சேர்த்திடுவாள் (தாயில்லாமல்)

    தூயநிலமாய் கிடப்பாள்
    தன்தோளில் என்னைசுமப்பாள்
    தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
    தாய்மையிலேமனம்கனிந்திடுவாள் (தாயில்லாமல்)

    மேகவீதியில் நடப்பாள்
    உயிர்மூச்சினிலே கலந்திருப்பாள்
    மலைமுடி தொடுவாள்
    மலர்மணம் தருவாள்
    மங்கலவாழ்வுக்கு துணைஇருப்பாள்
    மலர்மணம்தருவாள் (தாயில்லாமல்)

    ஆதிஅந்தமும் அவள்தான்
    நம்மை ஆளும் நீதியும் அவள்தான்
    அகந்தையை அழிப்பாள் ஆற்றலைகொடுப்பாள்
    அவள்தான் அன்னை மகாசக்தி(தாயில்லாமல்)

    அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
    தானே எவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள்
    தாயில்லாமல் நான்இல்லை

     

    திரைக்கதையின்படிதன்னைப் பெற்ற தாயை முதன் முறையாகப் பார்க்கச் செல்லும் காட்சி!  அத் தாயின் காலில் அடிமை விலங்கு பிணைக்கப்பட்டிருக்கிறது!  அதை அகற்றும் முயற்சியில் தனயன் ஈடுபடதாயோ.. இந்த நாட்டில் எத்தனையோ பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு அவர்களின் கால்களில் அடிமை விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது.. அவைகளை எல்லாம் அகற்றிவிட்டு கடைசியாக உன் அன்னையின் விலங்கை அகற்ற வா மகனே.. என்று ஆணையிடுகிறார்.

    அம்மாவின் காலடியில் ஆசிபெற்று மகன் தன் கடமையாற்றப் புறப்படுகிற உணர்ச்சிகரமான கட்டம்உயிரூட்டும் பாடல் வரிகள் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஓங்கார நாதத்துடன் பாடிட டி.எம்.செளந்திரராஜன்

    திரையில் ஐந்து வடிவங்களாய் தோன்றும் எங்கள் எம்.ஜி.ஆர்.. அங்கே அன்னையின் முகம் விண்ணில் தோன்றி வாழ்த்துச் சொல்ல.. தாயைப் போற்றி.. அவள் சக்தியை எடுத்துரைக்க.. இந்த ஒற்றைப்பாடலுக்கு சக்தி உண்டு என்று எந்த சபையிலும் என்னால் கூற முடியும்!

    எம்.ஜி.ஆர் பாடல்களில் இந்தப்பாடல்.. தாய்க்காக தனயன் முழக்கும் ராஜபாட்டை!

    எம்.ஜி.ஆர்  தாய் பற்றி எடுத்துக்கூறிய எத்தனையோ சிகரங்களில் இப்பாடல் நிச்சயம் ஒரு இமயம்!

    http://www.youtube.com/watch?v=2K096xYEtsY

     

    மேற்கண்ட பாடல் பற்றிய தங்கள் உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கிறேன்.  இன்னும் இன்னும் இனிய பல தகவல்களோடு உங்கள் வாசலில்  காத்திருப்பேன்.

     

     

    அன்புடன்..

    காவிரிமைந்தன்

    Thai Illamal Naan Illai HD Song
    Share
  • வாழ்க்கை நலம் – 40

    குன்றக்குடி அடிகள்

    40. ஒப்புரவு வாழ்க்கை

     

    சமுதாய அமைப்பில் ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். ஆதலால், ஒவ்வொருவரும் பிறிதொருவருக்குச் சமுதாயத்தில் பலருக்குக் கடமைப்பட்டிருக்கின்றனர். இந்தக் கடமைப்பாட்டினை அறிந்து கொண்டு ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் இசைந்து கூடி நட்புறவுப் பாங்கில் வாழ்தல் வேண்டும்.

    தம்தம் நிலையை வற்புறுத்தாமல் மற்றவர்கள் நிலையறிந்து அவர்களுடன் கூடி வாழ்தல் ஒத்தறிந்து வாழ்தல். பூத பௌதிக மாற்றங்களால் உடல் நலம் கேடுறாது பார்த்துக் கொள்வதுபோல நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை நமது உணர்வு, ஒழுங்கு, ஒழுக்கங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் மற்றவர்களுடைய நலனுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் வாழ்தல் ஒத்தறிந்து வாழும் வாழ்க்கை; ஒப்புரவு வாழ்க்கை, தீமை பயக்கும் வாயில்களை அடைத்துவிடும். நல்வாழ்க்கைக்குரிய இயல்புகளை குணங்களைத் தந்து ஊக்குவிக்கும்.

    ஊருணி, ஊராருக்கு உண்ணும் தண்ணீர் தருவதால் “ஊருணி” என்று பெயர் பெற்றது. ஊரார் ஊருணித் தண்ணீரை அள்ளிக் குடிப்பதால் “ஊருணி” என்று புகழ் பெற்றது.

    பல ஊருணிகளில் ஊற்று வளம் இருப்பதில்லை. அதுபோல் அறிவுடையானிடம் செல்வம் இருப்பின் அச்செல்வம் ஊராருக்குப் பயன்படும். ஆயினும் அறிவறிந்த ஆளுமை இன்மையால் செல்வம் அவனிடம் ஊற்றுப் போலப் பெருகி வளராது. இருக்கும் வரையில் கொடுப்பான். பின் அவனும் ஓர் இரவலனாகி விடுவான். அதனால்தான் நம் நாட்டில் வாழ்ந்த புலவர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள் போலும்!

    ஊருணியை ஊர் பயன்படுத்தாது போனால் மேலும் ஊருணி கெடும். அதுபோல அறிவுடையோனின் செல்வம் வழங்கப் பெறாது போனால் அழிந்து போகும். ஆதலால், ஊருணி நீரைப் போல இழந்து போகாமல் மேலும் செல்வ வளம் பெற உழைப்பு வேண்டும். அறிவறிந்த ஆள்வினைதான் செல்வத்தை வளர்க்கும்; பாதுகாக்கும்! மற்றவர்க்கு வழங்கி வாழ்வதில் உலகந்த்ழீஇய புகழ் கிடைக்கும்.

    இந்த உலகத்தில் எல்லாரும் உண்டு உடுத்து மகிழ்ந்து வாழ இயலும். ஆனால் நம் ஒவ்வொருடைய பேராசையின் காரணமாக இருந்து வரும் இல்லாத நிலை ஏன்? பேராசைதான் காரணம்! பேராசை இழப்பில்தான் மகிழ்ச்சி தொடங்குகிறது. ஆதலால், எல்லாரும் வாழ உரிமை உடையவர்கள் என்ற கருத்து முதலில் ஏற்கப் பெறுதல் வேண்டும்.  பாவேந்தன் பாரதிதாசன் சொன்ன,

    “உலகன் உண்ண உண்! உடுத்த உடுத்து!”
    என்ற பெருநெறியே, ஒப்புரவு நெறி!

    இந்த ஒப்புரவு நெறி சார்ந்த வாழ்க்கைக்கு ஈடாக ஒரு வாழ்க்கை நெறி இந்த உலகத்திலும் இல்லை! தேவர் உலகத்திலும் இல்லை! ஆம்! ஒருவரை ஒருவர் சார்ந்தும் இணைந்தும் உறவு கொண்டாடி வாழ்தலே ஒப்புரவு வாழ்க்கை!

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…88

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் உங்கள் முன்னே அடுத்த மடலுடன் .

    “எதிர்பார்ப்புகள்” மிகவும் இலகுவான, சுலமாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு வார்த்தை. ஆனால் அதனுள் அடங்கி இருக்கும் அர்த்தங்களோ ஆயிரமாயிரம் !

    ஒரு வார்த்தையாக அதனுள் அடங்கி இருக்கும் அர்த்தங்களின் வாயிலாக அந்தச் சொல் காலத்துக்கு காலம் ஒரே தொனியில் அதை உச்சரிப்போரின் உதடுகளில் இருந்து ஒலித்தாலும் காலத்தின் மாற்றத்தின் வடுக்கள் அந்த வார்த்தையில் ஒட்டிக் கொள்ளாமல் இருந்து விடவில்லை.

    ஆமாம் காலத்தின் மாற்றத்தினோடு எதிர்பார்ப்புகளின் அர்த்தமும் அதன் ஆழமும் மாறிக்கொண்டேதான் போகின்றது.

    இந்த மாற்றம் எமது சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிகளை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லப் போகின்றதா? இல்லை கலாச்சார சீரழிவுக்குள் எம்மை இட்டுச் செல்லப் போகின்றதா? என்பது ஒரு கேள்விக்குறியே !

    இல்லை இதுவெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அத்தகைய காலத்தின் தேவைகளுக்கேற்ப அந்தந்த இளம் தலைமுறைகளினால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் இதை ஒரு பெரிய விடயமாகத் தூக்கிப் பிடிப்பதே தவறு எனும் வாதமும் ஓரங்களில் ஒலிக்கத்தான் செய்கிறது.

    எது எப்படி இருப்பினும் வாழும் காலத்தில் எமது வாழ்க்கையில் மாற்றத்தை இவ்விளம் தலைமுறைகளின் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்துமாகின் அதனைப் பற்றிய ஒரு அலசல் தேவைப்படுவது யதார்த்தமே !

    அரசாங்களின் கடன்கள், அவ்வரசாங்கங்கள் தங்கள் நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல வடிவங்களில் முதன்நிலைப்படுத்தப்ப்பட்டு அந்நாட்டு நிதிநிலைமைகளை நிர்ணயிக்கின்றன.

    சிலநாட்களின் முன்னால் நான் எனது ஆபிஸிக்கு காலையில் சென்று கொண்டிருக்கும் போது அக்கார் வானொலியில் வந்த ஒரு விளம்பரத்தை செவிமடுக்கும் போது உள்ளத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளின் வழியாகவே இம்மடல் வந்து விழுகிறது.

    ஆமாம் மக்களின் தேவைக்காக உடனடியாக கடன் கொடுப்போம். அக்கடனைப் பெறுவது எவ்வளவு இலகுவானது என்பதைப் பற்றி அனைவரையும் கவரும் வண்ணம் அழகாக ஒரு விளம்பரம் அவ்வானொலியில் அந்நிறுவனத்தினால் நிகழ்த்தப்பட்டது.

    அப்போதுதான் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கையில் இது எத்த்ஹ்ஹ்ஹ்ஹ்ஹனை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பது புரிந்தது.

    வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் பெறுவதை ஓரளவு ஏற்றுக் கொள்கிறோம் என்றாலும் கூட அலங்காரமான் பொருட்களுக்காக நவீன வசதிகளுக்காக இன்றைய சந்தையில் இளம் தலைமுறையைக் கவரும் வகையில் காணப்படும் பொருட்களுக்காக இக் கடனைப் பெற்றுத் தம்மை மீளா வறுமையில் ஆழ்த்தும் பலரைப் பற்றிய செய்திகளை அன்றாடம் ஊடகங்களின் வாயிலாகக் கேள்வியுறுகிறோம்.

    தெருவிலே காணும் பல இளய தலைமுறையின் கைகளிலே கைக்கணணி, நவீன கைத்தொலைபேசி, நவீன ஒலிபரப்பு சாதனங்கள் என பலதரப்பட்ட சாதனக்களைக் கண்ணுறுகிறோம்.

    இவைகள் ஏதோ மிகவும் மலிவு விலையில் விற்கப்படுபவை அல்ல அதைக் கையாளும் இளைஞர்கள் அனைவரும் அதனை வாங்கக்கூடிய அளவிற்கு செல்வத்தில் திளைப்பவர்களும் இல்லை.

    பின் எவ்வாறு இவ்வளவு இலகுவாக இவை அவர்களின் கைகளை வந்தடைகின்றன. ஒன்று அவர்களது பெற்றோர் அவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமது தகுதிக்கு மீறிய வகையில் கடன்களைப் பெற்று அவர்களது ஆசைகளை நிறைவேற்றுகிறார்கள் அன்றி அவ்விளைஞர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் இப்பொருள்களை அடைந்து கொள்கிறார்கள்.

    அவர்களின் கைகளில் இத்தகைய நவீன பொருட்கள் தவழ் வேண்டும் என்பது அவர்களுடௌய வட்டத்தின் எதிர்பார்ப்பாக இன்றைய காலகட்டத்தில் இருப்பதே மிகவும் கவலைக்குரிய விடயமாகிறது.

    அது மட்டுமின்றி அதைப் பெற்றுக் கொடுப்பதற்கான வசதியற்றவர்களுக்கு அவர்களின் தகுதியைக் கூட ஆராயாமல் அளவிற்கு அதிகமான வட்டியுடன் கடன் கொடுப்பதற்கு அவ்வானொலி விளம்பரதாரர்களைப் போன்ற நிறுவனங்கள் தயாராக இருப்பது அதைவிடக் கொடுமையான செயல்.

    அன்றைய காலங்களிலும் மக்களிடம் எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தன ஆனால் அவ்வெதிர்பார்ப்புகளை அடைவதற்கு அவர்கள் திட்டம் தீட்டி அதற்கான வசதியைப் பெற்றுக் கொள்வதற்காக நியாயமாக உழைத்தார்கள். அதனால் தமது எதிர்பார்ப்புகளை அடைந்ததும் அதற்கான உரிய மதிப்பை அளித்தார்கள்.

    ஆனால் இன்றைய நிலை . . . . .

    எதிர்பார்ப்பவைகளை எதுவித பிரயத்தனமும் இல்லாமல் நினைத்த மாத்திரத்தில் அடைந்து விட வேண்டுமென்னும் பேராசையால் உந்தப்பட்டு இருக்கும் ஒரு தலைமுறையாக காலத்தின் மாற்றம் இன்றைய இளம்தலைமுறையை உருவாக்கி விட்டதோ என்று அச்சப்பட வேண்டி உள்ளது.?

    தேவைகளின் வித்தியாசங்கள், புரியப்படாமலே ஒரு சந்ததி உருவாகிறதோ? எதற்கும் விதிவிலக்குகள் உண்டு அதேபோல தமது தேவைகளுக்காக நியாய எல்லைகளுக்குள் உழைக்கும் உத்தமான இளம் தலைமுறைகளும் உள்ளனர் எனபதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றே .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் – 3

    மேகலா இராமமூர்த்தி

    இல்லோர் செம்மல்

    பொதுவாக மனமிருப்போரிடம் பணமிருப்பதில்லை; பணமிருப்போரிடம் மனமிருப்பதில்லை என்று கூறுவர்; அதனைப் பொய்யாக்கிவிடுகின்றது கோவலனிடம் காணப்படுகின்ற அருளுள்ளம்! பணமும், குணமும் நிறைந்த பண்பாளனாகவே சிலப்பதிகாரத்தில் அவன் அடையாளப்படுத்தப்படுகின்றான்.

    புகார் நகரில் நடைபெற்ற மற்றுமோர் நிகழ்வு கோவலனின் பத்தரை மாற்றுப் பொன் மனத்தைப் பளிச்செனக் காட்டுவதாய் அமைந்துள்ளது; அதனையும் காண்போமா?

    புகார் நகரத்தில் வாழ்ந்துவந்த கற்பிற் சிறந்த பெண்ணொருத்தி அவப்பெயர் எய்துவதற்கு ஏதுவாக, அறிவற்ற கீழ்மகன் ஒருவன் அப்பெண்ணின் ஒழுக்கத்தைப் பற்றி அவள் கணவனிடம் பொய்ப்பழி கூறுகின்றான். அதுகண்டு, புகார் நகரின்கண் தீயோரை அழிப்பதற்காகவே வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் பெரிய பூதமானது அக்கீழ்மகனைத் தன் கையிலுள்ள பாசக்கயிற்றால் கட்டியது. அவன் அச்சம் கொண்டு அரற்றினான்; அழுதான்; ஒன்றும் பயனில்லை. அவனுடைய தாய் தன் மகன் பூதத்திடம் மாட்டிக்கொண்டு உயிர்விடப் போகிறானே என்று அஞ்சிக் கண்ணீர் பெருக்கினாள். அப்போதும் பூதம் அக்கொடியோனை விடவில்லை.

    இந்நிகழ்வினை அறிந்த கோவலன் அவ்விடத்திற்கு விரைந்து வருகின்றான். பூதத்தின் கையிலிருந்த பாசக்கயிற்றினையும், அதில் மாட்டிக் கொண்டு உயிர்விடும் தறுவாயில் இருந்த மனிதனையும் காண்கின்றான்; உள்ளம் உருகுகின்றான். சற்றும் தாமதியாது அப்பூதத்தின் கையில் இருந்த பாசக்கயிற்றில் தன்னை வலியச் சென்று மாட்டிக்கொண்டு, ’தீயோரை அழிக்கும் நல்ல பூதமே! என்னுயிரை எடுத்துக்கொள்! இம்மனிதனை உயிரோடு விட்டுவிடு!’ என்று மன்றாடுகின்றான். பிறர் துன்பம் கண்டு பொறாத எத்தகைய உயர்ந்த உள்ளம் கோவலனுடையது!!

    ஆயினும் தன் கொள்கையில் சிறிதும் தளராத அப்பூதமோ, ’கோவலா! நீ கேட்டுக்கொண்டபடி என்னால் செய்ய இயலாது; தீயவன் ஒருவன் செய்த தவற்றுக்காக நல்லவன் ஒருவனுடைய உயிரை நான் எடுத்துக்கொள்வேனானால் எனக்கு நற்கதி கிடைக்காது(!). ஆகவே அத்தகைய தவற்றினை நான் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டுக் கோவலன் கண்ணெதிரிலேயே அக்கீழ்மகனைப் புடைத்து உண்டது. கோவலன் பூதத்திடம் வைத்த வேண்டுகோளையும் அதனை மறுத்து அப்பூதம் கோவலனிடம் கூறிய மறுமொழியையும் நாமும் சற்றுச் செவிமடுப்போமா?

    ”………………………………………………………………………………………………………………..

    கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி

    என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென
    நன்னெடும் பூதம் நல்கா தாகி
    நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
    பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை
    ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப….” (அடைக்கலக் காதை: 81-86)

     Picture1

    சிறிதுநேரம் செய்வதறியாது திகைத்துநின்ற கோவலன் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டு, அங்கே அழுதவண்ணம் நின்றுகொண்டிருந்த, பூதத்தால் கொல்லப்பட்ட அம்மனிதனின் தாயை அழைத்துக்கொண்டு அவள் இல்லம் செல்கின்றான். மகனை இழந்த தாய்க்குத் தானே மகனாகி அத்தாயையும், அவளுடைய இதர சுற்றத்தினரையும் பசிப்பிணியிலிருந்து விடுவித்து, அவர்கள் சிறப்பாக வாழும் வகையில் செல்வத்தையும் ஏராளமாக வாரி வழங்கி வறியோரின் தலைவனாக – ’இல்லோர் செம்மலாக’த் திகழ்ந்து பலகாலம் அவர்களைக் காத்து நிற்கின்றான்.

    அழிதரு முள்ளத்து அவளொடும் போந்தவன்
    சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
    பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்
    பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” (அடைக்கலக் காதை: 87-90) என்கிறார் அடிகள்.

    இவ்வாறு, தன் நண்பன் கோவலனின் அற்புதக் குணங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிடும் மாடலன் தொடர்ந்து, ‘அறிவில் முதிர்ந்தவனே! நானறிந்த வகையில் இப்பிறவியில் நீ செய்தவையெல்லாம் நற்செயல்களேயன்றி வேறொன்றுமில்லையே!! அவ்வாறிருக்கத் திருமகளை ஒத்த மாணிக்கத் தளிரான கண்ணகியுடன் நீ தனியே மதுரை நோக்கிப் புறப்பட்டது முற்பிறவியில் செய்த தீவினைப் பயனோ? என்று வருந்திப் புலம்புகின்றான்.

    இதோ அவ்வரிகள்…

    இம்மைச் செய்தன யானறி நல்வினை
    உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
    திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
    விருத்தகோ பால நீயென வினவ….” (அடைக்கலக் காதை: 91-94)

    அடைக்கலக் காதையில் மாடலனால் வியந்து பேசப்படும் கோவலனின் நற்பண்புகள், உயர்ந்த கொள்கைகள், எளியோர்மீது அவன் காட்டும் அளவிறந்த கருணை ஆகியவை கோவலன் மீதான நம் மதிப்பீட்டையே முழுவதும் மாற்றிவிடுவதாக அமைந்துவிடுகின்றது அல்லவா!

    கோவலனின் இனிய குணங்களை எடுத்தியம்ப இளங்கோவடிகள் பயன்படுத்தியுள்ள ‘கருணை மறவன்’, ’செல்லாச் செல்வன்’, ’இல்லோர் செம்மல்’ போன்ற அற்புதமான சொல்லாட்சிகள் அடிகளின் தமிழ்ப் புலமையை உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெளிவாய்ப் புலப்படுத்தி நம்மை மகிழ்விக்கின்றன.

    முடிவாக, சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவனான கோவலனின் குணங்கள், குறைகள் இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் குறைகளினும் அவனுடைய நற்குணங்களே விஞ்சி நிற்கின்றன என்பது மேற்கூறிய நிகழ்வுகள் வாயிலாகப் பெறப்படுகின்றது. அருளாட்சி செய்கின்ற அக்கோமகனின் மறுபக்கம் நம் நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி அதுகாறும் அவன் செய்திருந்த தவறுகளையும் மறக்கச் செய்து தொழத்தக்க ஒருவனாகவே அவனை எண்ணச்செய்துவிடுகின்றது.

    காப்பியக் கதையோட்டத்தின் சுவைகெடா வண்ணம் விறுவிறுப்பாக ஒவ்வொரு காட்சியையும் மிகச் சாதுரியமாகச் செதுக்கியிருக்கும் ’கவிச்சிற்பி’ இளங்கோ, கோவலனின் கருணையுள்ளத்தை, வள்ளல் குணத்தைச் சரியான தருணத்தில் வெளிப்படுத்தி உண்மையான காவியத் தலைவனாக அவனை உயர்த்திக்காட்டியுள்ள பாங்கு மிகுந்த பாராட்டுக்குரியதுதான் இல்லையா?

    கருணை மறவனையும், காப்பிய ஆசிரியரையும் வாழ்த்தி விடைபெறுவோம்!!

    (முற்றும்)

    Share