சீதா கல்யாண வைபோகமே
சீதா கல்யாண வைபோகமே
ராம கல்யாண வைபோகமே
ராமன் வரும்வரை காத்திருந்தாள்
வைதேகி மனமுவந்து வார்த்திருந்தாள்
சனகனின் மாளிகையில் கனவுடனே
கனக மலரென்று பூத்திருந்தாள்()
நீலவானம் வந்து நிமிர்ந்து நடைகொடுக்க
கோலநீள் விழிகள் கதிரின் ஒளிகொடுக்க
கண்டதும் நெஞ்சமும் ஏனோ பறிகொடுக்க
துண்டென ஈசன்வில் உடைத்து உயிர்கொடுக்க()
வில்லென வளர்த்த புருவங்கள் வியக்க
நில்லெனச் சொல்லுமுன் மாலைகள் தொடுக்க
கல்லையும் பெண்ணாக்கும் கால்களில் பணிக்க
முல்லையாய் ஜானகி முறுவல் கொடுத்தாள்()
காத்திருக்கும் வரையும் காலம் இனிக்கும்
காத்திருக்கும் வரைக்கும் காதல் வளர்க்கும்
காத்திருக்கும் கலையும் மாலைகொடுக்கும்
காத்திருக்கும் கனவும் நனவாய் விழிக்கும் ()