என் உருவம்
பழகிடத் தோழியும்
யாரிடமும் பழகாத மனைவியும்…
சம்பாதித்த அண்ணனும்
சமமாக சொத்து பிரிக்கும் நியாயமும்…
கேளாமல் உதவிடும் நண்பனும்
கேட்டாலும் உதவ மறுக்க நல்ல காரணங்களும்…
சேஷ்டை செய்யும் பையனும்
அதைத் தாங்கிக்கொள்ளும் அவன் நண்பனும்…
மனம்நிறையும் மாற்றான் விருந்தும்
மறுதலிக்கும் உற்றான் வருகையும்….
சோம்பித் திரியும் நாட்களும்
செல்வம் கொழிக்கும் வாழ்க்கையும்…
உள்ளொன்று புறமொன்றென
மாறி நிற்கும் என் உருவம்….
சாதாரணன் போல வந்தான் -ஏதும் ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான் வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில் சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)….10-3-2009
உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய் விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக் கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)….10-3-2009
பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே விதி மதி வினை என்ற விவகாரமாகும் நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)….10-3-2009
புதிரான பூலோகக் கல்லை -நீ பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)….11-3-2009
பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி கொண்டதோர் கோலமே காட்சி -அதை உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)….11-3-2009
இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை என்பது நூறு ஆண்டுகளாக நடந்துகொண்டிருப்பது. ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளிலிருந்து அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வருகிறது. மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கா எப்போதும் இஸ்ரேலுக்குச் சாதகமாகவே நடந்து வந்திருக்கிறது.
பைபிள் காலத்தில் இப்போதைய சிரியா, லெபனான், ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீன நாடாக உருவாகப் போவதாக பாலஸ்தீனர்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் வெஸ்ட் பேங்க், காஸா இடங்களையும் சேர்த்து பாலஸ்தீனம் என்று அழைத்தார்கள். இப்போது மத்திய தரைக் கடலின் கிழக்குப் பகுதிக்கும் ஜோர்டான் நதியின் மேற்குக்கரைப் பகுதிக்கும் இடையேயான இடம் பாலஸ்தீனம் என்றும் அது தங்கள் மூதாதையர் மூவாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தவந்த இடம் என்றும் அதனால் தங்களுக்கு அதில் முழுப் பாத்தியதையும் இருக்கிறது என்று கூறிக்கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து வெளியிலிருந்து வந்த யூதர்கள் அங்கு ஏற்கனவே மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையைத் தங்கள் வசதிக்காக மறந்துவிட்டுக் குடியேறிக்கொண்டே இருந்தார்கள். அப்போது வளம் மிகுந்த நாடான அமெரிக்காவில் ஏற்கனவே குடியேறி பல யூதர்கள் பெரும் செல்வந்தர்களாக விளங்கினார்கள். இவர்களின் பண உதவியாலும் ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்கள் தங்களோடு கொண்டுவந்த தொழிநுட்ப அறிவாலும் ஏற்கனவே பாலஸ்தீனத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களின் நிலங்களை வாங்கிப்போட்டு அந்த நிலங்களில் அமோக விளைச்சலை உண்டுபண்ணினர். இந்த நிலங்களில் யூதர்களை மட்டுமே வேலைக்கு வைத்துக்கொண்டனர். இதனால் அரேபியர்கள் தங்கள் நிலங்களை இழந்ததோடல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்தனர். இதனால் பலர் அரேபியர்கள் கொதித்தெழுந்தனர். இதனால் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே நிறைய மோதல்கள் நடந்தன.
1922-லிருந்து பாலஸ்தீனம் பிரிட்டிஷ் நியமனத்தின் (British Mandate) கீழ் இருந்து வந்தது. பிரிட்டனும் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே நடந்த மோதல்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் பல முயற்சிகளுக்குப் பிறகு பாலஸ்தீன நிர்வாகத்தை இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நாடுகளிடையே ஏற்படும் சச்சரவுகளைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட ஐ.நா.விடம் ஒப்படைத்துவிட்டு பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியது. ஐ.நா.வும் வெளியிலிருந்து வந்த யூதர்கள், தங்கள் மூதாதையர்களுக்கும் பாலஸ்தீனத்திற்கும் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னால் இருந்த சம்பந்தத்தைக் காட்டி பாலஸ்தீனத்தில் பங்கு கேட்பது சரியல்ல என்று யூதர்களுக்கு அறிவுறுத்தவில்லை. சமரசம் செய்வதாக நினைத்து பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் கொடுத்தது. வெளியிலிருந்து வந்த யூதர்கள் தங்கள் மூதாதையர் வாழ்ந்த தங்களுடைய புண்ணிய தலத்தில் தங்களுக்கு ஒரு தனி நாடு அமைக்கும் உரிமை கிடைத்தது என்று மகிழ்ந்துபோய் அந்தப் பிரிவினையை ஒத்துக்கொண்டனர். அரேபியர்களோ தங்கள் நாட்டை வெளியிலிருந்து வந்த, வரும் யூதர்களோடு எப்படிப் பகிர்ந்துகொள்வது என்று கோபமடைந்து தங்கள் ஆயுத பலத்தால் எப்படியும் தங்கள் நாட்டை யூதர்களிமிருந்து திரும்பப் பெற்றுவிடுவது என்று தீர்மானித்து காரியத்தில் இறங்கினர். அவர்களுடைய படைபலத்தை விட அமெரிக்க யூதர்கள் கொடுத்த பண உதவியால் இப்போது யூதர்களின் படைபலம் அதிக அளவு உயர்ந்துள்ளது என்பதை அவர்கள் உணரவில்லை. பல முறை யூதர்களோடு மோதியும் பலன் இல்லை. முழு நாடும் தங்களுக்கு வேண்டும் என்று அரேபியர்கள் வீம்பிக்கொண்டிருக்க, யூதர்கள் மிகவும் தந்திரமாக இஸ்ரேல் என்ற நாட்டை தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்டதோடு ஐ.நா. அரேபியர்களுக்குக் கொடுத்த இடங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இஸ்ரேலைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையாதலால் இஸ்ரேல் தன்னிச்சையாகப் பாலஸ்தீனத்தில் இடங்களைப் பிடித்துக்கொள்ளும் தன் பேராசையைத் தொடர்ந்து வருகிறது.
தன் சொந்த நன்மைக்காகவும் அமெரிக்கா வாழ் யூதர்கள் கொடுத்த நிர்ப்பந்தித்தினாலும் அமெரிக்கா 1967-க்குப் பிறகு இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் நிறைய அதிகாரம் வகிக்கும் அமெரிக்க யூதர்கள். அமெரிக்க யூதர்களிடம்தான் அமெரிக்காவின் பெரிய வங்கிகள் இருக்கின்றன. ஹாலிவுட் முழுவதும் இவர்களின் கைகளில்தான். எல்லாவற்றிற்கும் மேலாக பத்திரிக்கைகள், ஊடகங்கள் எல்லாம் இவர்களின் அதிகாரத்திற்குள்தான். அமெரிக்க மக்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அமெரிக்கா வாழ் யூதர்களால் திசை திருப்ப முடிகிறது.
இதற்கும் மேலாக இரண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இவர்களின் பாக்கெட்டிற்குள். வித்தியாசமான அரசியல், பொருளாதாரக் கொள்கைகளையுடைய இரண்டு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் இஸ்ரேலைப் பொறுத்த வரை ஒரே மாதிரியான கொள்கைகளைத்தான் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இவர்களுடைய தேர்தல் நிதி பெருமளவு யூதர்களிடமிருந்து வருகிறது. யூதர்களைப் பகைத்துக்கொண்டு யாரும் அமெரிக்க ஜனாதிபதியாகவோ அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராகவோ வர முடியாது. இதனால்தான் தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர்கள் எல்லோரும் இஸ்ரேலுக்குப் பக்கபலமாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள். இஸ்ரேலை எதிர்த்து ஒரு வார்த்தை சொன்னாலும் அமெரிக்க அரசியலில் குப்பை கொட்ட முடியாது என்பது ஒபாமா உட்பட எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரிந்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பாலஸ்தீனர்களின் மீது தனக்கிருந்த பச்சாதாபத்தைப் பற்றிக் கூறிய ஒபாமா, ஜனாதிபதி ஆன பிறகு அதை அறவே மறந்துவிட்டார். அமெரிக்க அரசு கூறும் எந்த அறிவுரையையும் இஸ்ரேல் செவிமடுப்பதாக இல்லை. அதனால் ஒபாமாவும் அறிவுரை கொடுப்பதை விட்டுவிட்டு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நடுவே நடக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையில் அவருடைய வெளியுறவு அமைச்சர் கெரிக்கு கொஞ்சம் அதிகமாகவே சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.
பல தசாப்தங்களாக நடந்துவரும் இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல அமெரிக்க ஜனாதிபதிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். கார்ட்டர் தவிர மற்ற எந்த அமெரிக்க ஜனாதிபதிக்கும் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றிக் கவலையில்லை. மேலும் இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்து மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் என்பதை விட எப்படியாவது பேச்சுவார்த்தைகள் முடிந்து – இன்னும் கொஞ்சம் அநீதி பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்டாலும் – அவற்றை முடித்த அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயர் சரித்திரத்தில் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் நோக்கம்.
இஸ்ரேலுக்குச் சாதகமாகவே பேசிக்கொண்டிருக்கும் எல்லா அமெரிக்க மத்தியஸ்தர்களையும் போல் இப்போது பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு வரும் கெரியும் எப்படியாவது பாலஸ்தீன அத்தாரிட்டியின் தலைவர் அப்பாஸை வளைத்துப் போட்டுவிடலாம் என்று நினைக்கிறார். எப்படியாவது அவரை ஏதாவது ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். பாலஸ்தீனத் தலைவர்கள் முன்னால் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை இப்போது அப்பாஸ் மறுக்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வேறு. பாவம் அப்பாஸ் அமெரிக்கா கொடுக்கும் நிர்ப்பந்த பிடியில் சிக்கித் தவிக்கிறார். அப்பாஸுக்கு இவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் இஸ்ரேல் மீதும் அமெரிக்காவுக்கு உள்ளுக்குள் கோபம் இருக்கும் போலும். ஏப்ரல் நான்காம் தேதி அல்ஜீரியாவுக்கும் மொரோக்கோவுக்கும் விஜயம் செய்த கெர்ரி நேற்று அல்ஜீரியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அவரைப் பார்க்க வந்திருந்த தூதரக ஊழியர்களிடமும் அவர்களுடைய குடும்பத்தாரிடமும் தான் தாமதமாக வந்ததற்கும் அவர்களைக் காக்க வைத்ததற்கும் வருத்தம் தெரிவித்துவிட்டு ‘நான் இங்கு வருவதற்கு முன் போனில் பேசிக்கொண்டிருந்தேன். என்னோடு பேசிக்கொண்டிருந்தவருக்கு நான் பேச்சை முடித்துவிட்டேன் என்பதை புரிய வைப்பதற்கு மிகவு கஷ்டமாகப் போய்விட்டது’ என்று கூறியிருக்கிறார். இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹுவைத்தான் பேச்சை நீட்டித்தார் என்று மறைமுகமாகக் குறை கூறியிருக்கிறார். நேத்தன்யாஹுவிடம் இதை நேரிடையாகச் சொல்லத் தைரியம் இல்லை. பாவம் அமெரிக்கா, அமெரிக்காவின் உதவியாலும் அமெரிக்கா வாழ் யூதர்கள் செய்யும் உதவியாலும் இன்று மத்திய கிழக்கில் இராணுவ பலத்தில் பூதாகாரமாக வளர்ந்திருக்கும் இஸ்ரேலுக்கு (மத்திய கிழக்கில் இஸ்ரேலிடம் மட்டும்தான் அணு ஆயுதங்கள் இருக்கின்றன) அமெரிக்கா பயப்பட வேண்டியிருக்கிறது. இது காலத்தின் கோலமா அல்லது அமெரிக்கா இஸ்ரேலுக்குக் கொடுத்திருக்கும் /கொடுக்கும் அதிக சலுகையா?
வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..
எம்.ரிஷான் ஷெரீப் இணையத் தமிழ் வாசகர்களை தொடர்ந்து தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வருபவர்.
இலங்கையின் மாவனல்லையைச் சேர்ந்த எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள் கவிஞர் என்ற வகையில் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், ‘வீழ்தலின் நிழல்’ என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தாலும், அவரைக் கவிஞர் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் நம்மால் அடக்க இயலாது. இத்தமிழ் எழுத்தாளர் ஒரு கவிஞர் மட்டுமின்றி ஒரு சிறந்த ஊடகவியலாளரும் ஆவார்.
எம்.ரிஷான் ஷெரீப் தனது படைப்பாற்றலை கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, புகைப்படம், ஓவியம், எனப் பல துறைகளின் வழியாகவும் வெளிப்படுத்தி வருபவர். இதுவரை இவரது படைப்புகள் இலங்கையிலிருந்து வெளிவரும் இதழ்கள், தமிழகத்தின் பிரபலமான இதழ்கள், மற்றும் மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளின் பத்திரிக்கைகள், இணைய இதழ்கள் எனப் பலவற்றிலும் வெளிவந்துள்ளன. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இவரது மொழிபெயர்ப்பு நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருதும் கிடைத்துள்ளது.
இவரது பலதுறை பங்களிப்புகளின் அடிப்படையாக உள்ள ஓர் இழை சமுதாய அக்கறை என்பதாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் வல்லமையில் நூலறிமுகக் கட்டுரைக்காக இவர் தேர்ந்தெடுத்த நூல் அன்றைய இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக பலியிடப்பட்ட மக்களைப்பற்றிய ‘சயாம் – மரண ரயில் பாதை’யைப் பற்றி இருந்தது என்றால், இவர் எழுதும் செய்தி விமர்சனக் கட்டுரை பள்ளியில் அவமானப்படுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததற்கு பள்ளி நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில் அமைந்தது. இவையாவும் வல்லமை வாசகர்களுடன் ரிஷான் ஷெரீப் முன்னர் பகிர்ந்து கொண்டவையே.
ஆனால் இவ்வாரம் ரிஷான் ஷெரீப் மீண்டும் அவரது வழக்கமான கவிஞர் என்ற கோணத்தில் தன்னை இருத்திக் கொண்டு இரு சிறப்புமிகு கவிதையை வல்லமை வாசகர்களுக்கு வழங்கியுள்ளார். “பனிபடர்ந்த இரவின் காலம் எனது கைவிரல்களை ஒற்றியொற்றி உன் நேசத்தைச் சொல்லிற்று” என்று மனதிற்கு இதம் தரும் சூழலில் அறிமுகமாகி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட தோழமை ஒன்று தன்னை விட்டு விலகித் தொலைதூரம் சென்றுவிட்ட சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘நுழைதல்’, ‘விலகல்’ என்ற இரு கவிதைகள் மூலம் உறவை இழந்த பின்னர் மனதில் தோன்றும் வெறுமை உணர்வை அருமையாக வடித்துக் கொடுத்துள்ளார். ஒரு சில வரிகள் கீழே….
எல்லாம் கடந்துவிட்டன நேற்றிருந்த மேகத்தைப் போல இக் கணத்து நதி நீர் போல உனது பயணங்கள் முடிவற்றன எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது பாளங்களாய்க் கனன்றெரிந்து உன் வாழ்வின் கதைகள் பேசிற்று உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட தெப்பமென நனைந்தேன்
பட்ட மரத்தின் அடிப்பாகத்தில் புற்றெழுப்பும் கரையான்களைக் கொத்த வரும் சாம்பல்குருவிகளை பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும் வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய் நாம் கதைத்தபடியே நடந்து கடந்த எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின விடிகாலையில் அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள் தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை உன்னைப் போலவே
இவ்வாறு ஈழத்தமிழர் ஒருவர் பிரிவுத் துயரக் கவிதை வடிக்கும் பொழுது, அந்த உறவு பிரிந்து சென்றுவிட்ட காரணம் புலம் பெயரவேண்டிய கட்டாயச் சூழலோ என்றும் தோன்றுகிறது. இவர் வெளிப்படுத்தும் ஏக்கம் உண்மையில் எத்தனை மக்களின் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதோ என்ற கலக்கத்தையும் ஏற்படுத்தும் கவிதை வரிகள் இவை.
இது போன்ற உணர்வு மிகுந்த இவரது கவிதை வரிகளைப் படிக்கும் பொழுது, ரிஷான் ஷெரீப் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒரு சமுதாய அக்கறை கொண்ட துடிப்புமிக்க இளைஞர் ஒருவர், வருங்கால உலகம் பற்றி நினைக்கும் பொழுது நமக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிபவர் என்ற எண்ணமே. இவ்வாறு தனது எழுத்துப் பணியின் மூலம் இக்கால இளைஞர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழும் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
மாங்காட்டு மறையோன் தென்னனை வாழ்த்திய வண்ணம் இளமரக் காவில் புகுதல்
அம்மண்டபத்தில் ஒரு மறையோனும் இருந்தான். அவன் பாண்டியர்களின் பெருமைகளை இங்ஙனம் பேசினான்.
“வாழ்க எம் மன்னன்! மன்னர் பெருந்தகையாளன்! பல்லாண்டு காலம் இவ்வுலகை அவனே காத்து நிற்பானாக! அவன், தன் பெருமை பிற மன்னர்களுக்குப் புலப்படும்படி அவர்களைத் தம் காலடியில் பணிந்திட வைத்தவன். அவன் தன் வடிவேலைக் கடல்மீது எய்திட அதனைத் தாங்காத கடலானது பஃறுளி ஆற்றோடு சேர்த்துக் குமரிமலை அடுக்குகளையும் விழுங்கியது.
வடக்குத் திசையிலுள்ள கங்கையையும் இமயத்தையும் கைப்பற்றிய அம்மன்னன், தென் திசை முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆண்டவனுமாவான். அவன் வாழ்வாங்கு வாழ்வானாக!
சந்திரகுலத் தோன்றலாகிய பாண்டியர் மரபு சிறக்க ஆயிரம் சிவந்த கண்களையுடைய இந்திரன் பூட்டிய வலிமைமிக்க ஆரத்தைத் தன் மார்பில் அணிந்து வாழ்ந்து வந்தான். அப்பாண்டிய மன்னன் வாழ்வானாக!
முதல்வனாகிய இந்திரன் தன் தலையில் சூடிய முடியில் இருந்த கிம்புரியை உடைத்தவன்.. அவனது நாட்டில் சிலகாலம் இடி கொண்ட மேகங்கள் மழை பொழிவிக்காது பொய்த்தன. அவ்வேளையில், மேகக்கூட்டத்தை விலங்கிட்டு அழைத்துவந்து பெருமழை பொழியச்செய்து விளைநிலங்களை விளையச் செய்தவன் அவன். உக்கிரகுமாரபாண்டியன்.. அவனது புகழ் வாழ்வதாக!”
இங்ஙனம் குற்றமற்ற பெருமை வாய்ந்த பாண்டியர் மரபினை வாழ்த்திக் கொண்டிருந்தனன் மறையோன்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 31
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html
ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறத்தில் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் அமைந்திருந்தது அந்த அப்பார்ட்மெண்ட். பெருநகரங்களைப் போலவே இப்போதெல்லாம் குடியிருப்புகள் பெருகிவிட்டிருக்கும் சிறிய நகரங்களில் இதுவும் ஒன்று.
நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை தாண்டித்தான் அந்த குடியிருப்புக்கு சென்றாக வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தை ஒட்டி ஒரு பெரிய கல்கிடங்கு இருக்கும். சிறு வயதில் அந்தக் கல்கிடங்கில் மீன் பிடிக்க தூண்டிலோடு அப்பாவுடன் சைக்கிளில் போன நினைவுகள் வந்தது.
இப்போது கல்கிடங்கே இல்லை. அத்தனை பெரிய கல்கிடங்கை எப்படி மூடி சமன்படுத்தி கட்டிடம் கட்டியிருக்கிறார்கள் என்ற நினைப்பே ஆயாசத்தை தந்தது. அந்தக் கட்டிடம் கல்கிடங்கு தண்ணீருக்கும் அதில் வாழ்ந்த ஜீவராசிகளுக்கும் உயிரோடு கட்டப்பட்ட சமாதியாகவே தெரிந்தது.
ஊருக்கு நடுவில் அடுக்கி வைத்த தீப்பெட்டிகளாய் நெருக்கியடித்துக் கிடந்த தெருக்களுக்குள் 28 வருடங்களாய் குடியிருந்த அம்மா இந்த ஒதுக்குப்புற குடியிருப்பில் எப்படி இருக்கப் போகிறாள் என்ற கவலை புதிதாய் முளைத்தது. பக்கத்து வீட்டில் அடுப்பெரிகிறதா இல்லையா என்பதைக் கூட குறிப்பாலுணர்ந்து ”என்னக்கா இன்னைக்கு சோறாக்கலையா” என்று கேட்கக்கூடிய அன்பான மனிதர்கள் நிறைந்த இடத்தை எப்படி ஈடு செய்யப் போகிறது ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி கேட் போடப்பட்டிருக்கும் இந்த அப்பார்ட்மெண்ட்?
அம்மா…….முப்பது வருடங்களாய் ஒரு மிகச் சிறந்த மனிதரோடு வாழ்க்கை நடத்தியவள் இதுவரை கழுத்தில் காதில் மூக்கில் ஏன் மஞ்சள் கயிற்றுத் தாலியில் கூடப் பொட்டு தங்கத்தைப் பார்க்காதவள். தங்கமனைத்தும் மனிதனாய் உருவெடுத்தது போல் வாய்த்த கணவரின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கு போட்டுக் கொண்டவள்.
அப்பா மாரடைப்பால் இறந்த பின் வந்த அடுத்த மூன்று வருடங்களில் பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் கடனையெல்லாம் அடைத்து விட்டு கையிருப்பாய் இப்போது நகைகளும் பணமும் வசதி வாய்ப்புகளும் வந்த பின்னும் கூட பகட்டை வெளிக்காட்டிக் கொள்ளாதவள். மகன்கள் ஆசையாய் செய்து தந்த தங்கச் சங்கிலியைக் கூட அணிய மறுத்து மகளின் திருமணத்தில் தான் அணிவேன் என்று பிடிவாதத்தோடு இருப்பவள்.அப்பாவின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாய் இருப்பது இப்போதிருக்கும் இந்த வீடும் தான்.
வீட்டு வாசலில் அம்மா ஆசையோடு வளர்த்த வாத நாராயணன் மரம் இப்போது தான் பூத்துக் குலுங்கி ஒன்றிரண்டாய் காய்க்கவும் தொடங்கியிருக்கிறது. நகராட்சி தெருக்களில் எல்லாம் இப்போது தரைகளில் பேவர் ப்ளாக் கற்கள் பதிக்கப்பட்ட பின்னும் இரண்டு கற்களை வாசற்படியோரம் நெம்பி எடுத்து அதில் நட்டு வளர்த்த மரம் இது. மரத்தையொட்டியிருக்கும் ஒரு சின்ன தொட்டியில் சங்குப்பூவும் பூத்துக் கிடக்கும். அதற்கடுத்தாற் போல ஒரு கற்றாழைச்செடி, தக்காளி, மிளகாய்……
இந்தப் புதிய அப்பார்ட்மெண்ட்டில் மொத்தம் பன்னிரண்டு வீடுகள். கீழ்த் தளத்தில் இடது பக்கம் மூன்றும் வலது பக்கம் மூன்றும் நடுவில் விஸ்தாரமான மாடிப் படிக்கட்டுகளோடு முதல் மாடியிலும் அதே வரிசையில் ஆறு வீடுகளுமாய் அழகாய் இருக்கிறது. இரண்டு கெஸ்ட் ரூம்களோடு கூடிய அகலமான மொட்டை மாடி துணி காயப் போடும் கம்பிகளோடு வரவேற்கத் தயாராய் காத்துக் கிடக்கிறது.
முதல் மாடியில் படிக்கட்டு முடியுமிடத்தில் வலது பக்கம் திரும்பியவுடன் முதல் வீடு எங்களுடையது. வீட்டினுள்ளே நுழைந்ததும் சின்னதாய் ஒரு இடம். காலணிகள் வைக்கும் இடம் போக இரண்டு பேர் தாராளமாய் படுத்து தூங்கும் அளவு இருந்தது. அதைத் தாண்டியதும் பெரிய ஹால், இடது பக்கம் சமையலறை நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்திருந்தது. இரண்டு படுக்கையறைகளோடு ஒரு அட்டாச்டு டாய்லட் பாத்ரூம். எல்லா அறைகளிலும் தேவையான அளவுக்கு அடுக்குகள்… பளிச்சிடும் டைல்ஸ் தரையுமாய் வீடு வெகு அம்சமாய் இருந்தது.
வசதியான வீட்டுக்குக் குடி போகும் போது கார் வாங்கப் போவதாய் தம்பி சொல்லியிருந்தது பார்க்கிங் பகுதியைக் கடக்கும் போது அம்மாவுக்கு ஞாபகம் வந்திருக்கும் போல….”வண்டி வாங்கினா இங்க நிறுத்திக்கலாம்ல”ன்னு ஒரு இடத்தைக் காட்டிப் பெரிதாய் புன்னகைத்தாள்.
”ம்மா இங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் இல்ல…நீங்க இருந்துக்குவீங்களா? நம்ம தெரு மாதிரி இல்ல….பேச்சுத் துணைக்கு ஆள் இருக்க மாட்டாங்க. எதிர்ல பார்த்தா வெறுமனே சிரிக்கக் கூட கொஞ்சம் நாள் ஆகும். இதெல்லாம் பரவால்லயா உங்களுக்கு?”
“நான் என்ன இப்ப எனக்காகவா இங்க வரேன். பசங்க எல்லாரும் வளர்ந்துட்டீங்க. வீட்டுல நல்ல நாள் விசேஷம்னா கொஞ்சம் வசதியோட இருக்க வீட்டுல இருந்தாத்தான நமக்கும் நல்லா இருக்கும். இப்ப இருக்க வீட்டுல பழைய சாமான்கள்லாம் இருக்கட்டும். எப்போ வேணும்னாலும் திரும்பி வந்து இருந்துக்கலாம்ல.”
“அந்த வீட்டுல இப்ப இருக்க சங்குப்பூ, தக்காளி, பச்சை மிளகாய், கத்தாழ , வாதாம் மரமெல்லாம் இங்க வைக்க முடியாது”
“செடி வைக்கணும்ன்னா வீட்டுக்குள்ளேயே வளர்க்குறாங்களே…அது மாதிரி வாங்கிக்குவோம்…என்ன ஒண்ணு அந்த வீட்ல இருக்க செடியெல்லாம் பார்த்துக்க தான் ஆளிருக்க மாட்டாங்கல்ல. ஒவ்வொண்ணும் பிள்ள மாதிரி வளர்த்தது. மத்தபடி எனக்கு பிரச்சனை இல்ல. உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கில்ல….அப்புறம் என்ன. நான் இருந்துக்குவேன்டி”
“ம்ம்…..”
பூரண சுதந்திரத்தோடு தரையில் வளரும் செடி கொடி மரங்கள் இப்போதெல்லாம் நிறையவே மாற்றங்களுக்குட்பட்டு வீடுகளுக்குள்ளேயே வளர்க்கப்படுவது போலத்தான் இன்றைய மனிதர்களும் போல. வசதிகள் இருப்பது மட்டுமே வீடாகிப் போவதில்லை….வாழ்வதற்கு உகந்ததே வீடாக இருக்கிறது. வெறும் கட்டடங்களையே வாழுமிடமாக மாற்ற அம்மா போன்ற மனிதர்களால் மட்டுமே முடிகிறது. தரையில் வளர்ந்தாலும் மரமாய் நிழல் தந்தும் , வீட்டுக்குள் வைத்தாலும் பார்வைக்கு அழகாய் இருக்குமிடத்தை வைத்திடும் அம்மா போன்ற “குரோட்டன்ஸ் மனிதர்கள்”..மட்டுமே வாழ்தலை சாத்தியமாக்கி வருகிறார்கள்…
வியத்தகு நிகழ்வொன்று தமிழகத்தில் நிகழ்ந்தது. அதுவும் திரைப்பாடல் ஒன்றில் எழுதிய வரிகள் மக்களின் பிரார்த்தனை கீதமாக முழங்க ஒரு தலைவனின் உயிருக்காக ஜாதி, மதங்கள் கடந்து மக்கள் ஒருமித்த வகையில் கடவுளிடம் கருணை மனு போட்டனர். இதுவெல்லாம் சாத்தியமா என்று எண்ணிப்பார்த்தால் வாய்ப்பில்லை என்பதுவே அனைவரின் பதிலாகும். ஆனால், நடந்தது தமிழ் நாட்டில்.. ஏழைகளின் பங்காளன், தாய்மார்களின் தலைமகன், எங்கவீட்டுப் பிள்ளை, வாத்தியார்.. மக்கள் திலகம்., பொன்மனச்செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் புகழினை எட்டியதோடு.. மட்டுமின்றி மக்கள் நெஞ்சிலும் நிலைத்து வாழ்கின்ற பேறு பெற்ற எம்.ஜி.ஆர். அவர்கள் – திரைத் துறையில் தனக்கென்று தனியிடம் பெற்று திகழ்ந்ததோடு.. அரசியலிலும் ஈடுபட்டு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவனாக உயர்ந்து – முதல் அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் பதவி வகித்தமை உலக வரலாற்றில் ஒரு சகாப்தம்.
எம்.ஜி.ஆர். அவர்களின் 100வது திரைப்படம் ஒளிவிளக்கு.. பாத்திரப்படி கள்வனாக இருந்தாலும் – ஏழைகளுக்கு உதவுகின்றவராக – ஊரில் பரவிய கடும் நோயின் காரணமாய்.. அனைத்து மக்களும் ஊரைவிட்டு ஓடிடும்போது.. உடல்நிலை குன்றிய நிலையில் உள்ள ஒரு விதவையை மட்டும் வெறுத்து ஒதுக்கி.. அவ்வீட்டிலேயே விட்டுச்செல்லும் காட்சியில் கள்வனாக அவ்வீட்டில் திருடவந்த கதாநாயகன் அவளைக் காப்பாற்றி புகலிடம் கொடுக்கிறான்.
பின்னர் ஒரு கட்டத்தில் ஏழைக்குடிசைகள் தீக்கிரையாகையில் – ஒரு குழந்தையைக் காப்பாற்றிடும்போது தன் உடல் முழுவதும் தீயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் உணர்வுமிகுந்த கட்டத்தில் .. அவனால் பயன்பெற்ற அனைத்து மக்களும் ஒருமித்த குரலில் அவனது உயிருக்காக கடவுளிடம் வேண்டுவதை காட்சியமைப்பு.. தனக்கு பாதுகாப்பு தந்து காத்த அந்த நாயகனை எமனின் பிடியிலிருந்து காப்பதற்காக அந்த நாயகி பாடுகின்ற பாடல். வாலி அவர்களின் இந்த வரிகள் தமிழகத்தின் ஒரு வரலாற்றுப் பதிவன்றி வேறென்ன?
வார்த்தைகளை கவிஞர் வாலி அவர்கள் வரைந்தெடுத்தபோது ஒவ்வொரு வரியும்.. ஒவ்வொரு வார்த்தையும் என்னை எடுத்துக் கொள்.. என்னை எடுத்துக் கொள் என்று சொல்லியதோ.. உள்ளம் உருக.. மெல்லிசை மன்னர் அமைத்த இசையில் இது வெறும் பாடல் அல்ல.. பி. சுசீலாவின் குரலில் இழையோடும் சோகம்.. நம் இதயங்களை நனைக்கிறதே!
பிற்கால வரலாற்றின் முன்பதிவு என்பதை சூசகமாய் சொல்லி வைத்தாரோ?
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா
மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: பொது வாழ்வில் இருப்போர்கள், வீண் வதந்திகளை நம்பி செயலில் இறங்காமலிருந்தால், உங்களின் உயர்வு சீராக இருக்கும். கலைஞர்களுக்கு உங்கள் திறமைகளை மிளிரச் செய்யும் வாய்ப்புக்கள் பல தேடி வரும். அதனை நல்ல முறையில் பயன்படுத்துவது உங்கள் கையில்தான் உள்ளது! மாணவர்கள் புதிய இடங்களில் பழக்கமில்லாதவர்களிடம் அதிகம் ஒட்டி உறவாட வேண்டாம். பெண்கள் குடும்ப விஷ யங்களில் கோப தாபத்தை கட்டுக்குள் வைத்தால், எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடலாம்! சிறிய சச்சரவுகளை பெரிதாக்காதவாறு சமாதானமாக நடந்துகொள்ளுங்கள். அலுவலகச்சூழலில் இருக்கும் இறுக்கமும் தானே விலகி விடும். வியாபாரிகள் எதிலும் நேர்மைக்கு இடம் கொடுக்க, வெற்றியோடு நல்மதிப்பும் உங்களுக்கே!
ரிஷபம்: வியாபார வாய்ப்புக்களில், சில சந்தர்ப்பங்களில், கைக்கெட்டிய பொருள் வாய்க்கெட்டவில்லை என்ற நிலை நேரிடும். எனினும் விடாமுயற்சியால் விரும்பியதை அடைந்து விடுவீர்கள். பெண்கள் உழைப்பிற்கு நேரம் ஒதுக்குவதை போல, ஆரோக் கியத்திற்கும் நேரம் ஒதுக்கினால், மருத்துவச்செலவுகள் கணிசமாக குறையும். வரவும் செலவும் சமமாக இருப்பதால், சேமிப்பு என்பது பெயரளவில்தான் இருக்கும். தம்பதிகள் மன வேற்றுமைகள் நீங்க மனம் விட்டுப் பேசுங்கள். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலர்ந்து விடும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், அதிக ஆசை யினால் அதிக பணம் முடங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஞாபக மறதியால் வரும் சிக்கல் களைத் தவிர்க்க, எதையும் உடனுக்குடன் குறித்து வைப்பது நல்லது.
மிதுனம்: குடும்பத்தில் இருந்த பனிப்போர் விலகுவதால் மீண்டும் மகிழ்ச்சியும், கலப்பும் மலரும் இந்த வாரம் பணியில் இருப்பவர்களின் செல்வாக்கோடு, வேலைப்பளுவும் உயரும். சுய தொழில் புரிபவர்கள் செய்யும் பொருளாதார முயற்சிகள் வெற்றி பெற தகுந்த படி திட்டம் இட்டு வேலை செய்வது அவசியம். வெளி வட்டாரத்தில் கவனமாக இல்லை என்றால், மாணவர்கள் வேண்டாத தொல்லைகளினால் மனவேதனை அடையலாம். கலைஞர்கள் , சுறுசுறுப்பாக செயல்பட்டால், எடுத்த காரியம் நினைத்ததது போல் முடியும், வியாபாரிகள் வாகன சம்பந்தமாக தேவையற்ற செலவுகளை சமாளிக்க வேண்டி வரும்.
கடகம்: பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவைகள் உங்களின் விருப்படியே நடைபெறும் . வீண் செலவுகளைக் குறைப்பதில் சற்று கவனமாக இருங்கள். சேமி ப்பதற்கான வழி வகைகள் மேலும் அதிகரிக்கும். வியாபாரிகளும், தொழிலதி பர்களும், பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல் பட்டால், லாப த்தின் வரவில் குறைவிராது. பணி புரியும் இடங்களில் முரண்பட்ட கருத்துள்ளவர்களு டன் மோதுதலைத் தவிர்க்கவும். பெண்கள் கணவன் வழி உறவினர்களின் கோரிக்கைக ளை நிறைவேற்றுவதற்கு முதலிடம் கொடுத்து விடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்!
சிம்மம்: பெண்கள் எந்த நல்ல விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். கிடைக்கும் பலனும், மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். நண்பர்களின் சந்தோஷத்திற்காக அதிக பணம் செலவழித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! வியாபார விரிவாக்க விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் மீண்டும் குடும்பத்தில் இணைவதால், மகிழ்ச்சிப் பூ மீண்டும் மலர்ந்து விடும். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைக் குறைத்துக் கொண்டால், ஆரோக்கியம் சீராகத் திகழும்.
கன்னி: பிறரிடம் உள்ள குறைகளை விடுத்து, நிறைகளை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள். நேசம் பாராட்டி உதவுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது சிந்தனையை சிதற விடாமலிருப்பது நல்லது. வரும் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பவரிடம் கலைஞர்கள் உஷாராக இருந்தால், உங்கள் திறமைகளை பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியும். அலுவலக அளவில் பொதுப் பிரச்னைகளுக்காக, நண்பர்கள் சிலரின் நட்பை முறித்துக் கொள்ள நேரிடும். முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை சற்று அதிகரிக்கலாம். எனவே கவனமாக செயல்படுவது அவசியம்.
துலாம்: வியாபாரிகளுக்கு முன்பிருந்த சுணக்கமான நிலை என்பது மறைந்து இணக்கமான சூழல் நிலவும். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் பார்த்துக் கொள்ளவும். மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்திருப்பவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், பணியில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் நடவடிக் கைகளில் தென்படும் மாறுதல்களை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உங்களை புரிந்து கொள்வார்கள்.
விருச்சிகம்: இயன்ற வரை வீண் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். வரவுக்குள் செலவுகள் அடங்கிவிடும். காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் பெண்களுக்கு வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். போட்டிகள் மூலம் உங்கள் திறமை வெளி படும் வரை கலைஞர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. வியாபாரிகள் ஆரோக் யமான போட்டி மூலம் வாடிக்கையாளர்களின் வரவைத் தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்புடன் திகழலாம். சொத்து விஷயங்களில் உங்களின் நேரடி கவனம் தேவை.
தனுசு: புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், கூட்டுத் தொழிலில் இருக்கும் பிரச்னைகள் தீரும். பொருளாதார சிரமங்கள் குறைவதால், பெண்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். இல்லத்தில்,கோபத்தைக் குறையுங்கள். பிரச்னைகளின் தாக்கமும் தானே குறைந்து விடும். சக மாணவர்களின் மனோபாவத்திற்கேற்றவாறு , உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொண்டால், கல்வி தொடர்பான வேலைகள் கடகடவென்று முடிந்து விடும். கடும் பணியில் உள்ளவர்கள் உழைப்பில் சலிப்பு சேராமல், பம்பரமாய் சுழல, சத்தான உணவு வகைகள் சாப்பிடுவது நல்லது. இது நாள் வரை எட்டியும், தட்டியும் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கலைஞர்களை நாடி வரும்.
மகரம்: வாழ்க்கைத் துணையுடன் இணக்கமாக இருக்கும் தம்பதிகளுக்கு வாழ்வு இனிக்கும். மாணவர்கள் கல்லூரி விழா, போட்டிகள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள்.சில நேரங்களில் உடன் பணி புரிபவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல் படுவர். முக்கிய பொறுப்புக்களை ஏற்றுள்ளவர்கள் பதவிக்குரிய அதிகாரம் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நினைத்ததைவிட நல்ல பலன் நிறையவே கிடைக்கும். வியாபாரிகள் நிர்ப்பந்தத்தின் பேரில் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களோடு கூட்டு முயற்சியில் இறங்க வேண்டாம்.சிறு உடல் உபாதைகளால், பெண்கள் அவதிப்பட நேரிடும்.
கும்பம்: மாணவர்கள் மன தைரியம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிட்டும்.பணியில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களுடன் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றிய அலசலைத் தவிர்ப்பது .சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறாமைக்காரர்களின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் உங்கள் ஆதரவை பலப்படுத்தினால் வெற்றி உறுதி. கலைஞர்களுக்கு தட்டிச் சென்ற வாய்ப்புகள் திறமையின் அடிப்படையில் மீண்டும் உங்கள் வசமாகும். இந்த வாரம் பெண்களின் நிதி நிலையில் சிறிது அதிருப்தி இருந்தாலும், குடும்பச்செலவுகள் தடையின்றி நடக்கும்.
மீனம்: நிலுவையில் உள்ள பாக்கியெல்லாம் வசூலாகி விடுவதால், புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் இறங்குவீர்கள். பொதுவாழ்வில் இயங்கி கொண்டிருப்பவர்கள் தம்மு டைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், உங்கள் பணிகளில் எவரும் பழுது சொல்ல முடியாது. மாணவர்கள் புதிய சூழலில் வீண் வம்பு தும்புக்கு வேலை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அதிக உரி மைஎடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகிவருவது நல்லது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெற, சில நெருக்கடிகளை தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும் .எனவே நிதானமாக செயல்படுவது அவசியம்.
அன்று அதிகாலை ஒரு முழுநாள் தேர்வுக்காக லூவன் நகரிலிருந்து ப்ரசல்சு நகரம் செல்ல வேண்டியிருந்தது.
லூவன் எகானோம் டாக்சி நிறுவனம், சொன்னதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வண்டி அனுப்பி இருந்தார்கள். பென்சு காரில் ஏறி அமர்ந்தவுடன் கோனிங்கு போடெவெய்ன்லான் நெடுஞ்சாலையில் காரை விரட்டினார் என் சாரதி.
‘ஹுய மார்ஹன்’ என்பதற்குப் பதிலாக ‘குட் மார்னிங்’ என்று கூறிய பாங்கும், அவரது உருவ அமைப்பும் அவர் நிச்சயம் ஃபிளம்மியர் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது.
“ஆர் யூ ஃப்ரம் போலன்ட்?” என்று கேட்டேன்.
“இல்லை, ரஷ்யா!” என்று கூறியவர், “தாங்கள் பாகிஸ்தானியா?” என்றார்.
“எப்படி இருவருமே ‘சரியாக’ தவறாகக் கேட்கிறோம்?” என்று நினைத்துக்கொண்டே, “இல்லை, இந்தியன்!” என்றேன்.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, “தாங்கள் ரஷ்யா சென்றதுண்டா?” என்று கேட்டார்.
“இல்லை, நண்பரே. ஆனால், நானும் என் பள்ளி நண்பனும் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்பட்டதுண்டு.” என்றேன்.
அவர் புன்னகைத்தார். நான் தொடர்ந்து, “நீங்கள் ‘தாய்’ (தி மதர்) நாவலைப் படித்ததுண்டா?” என்று கேட்டேன்.
அவர் மிகுந்த ஆச்சர்யத்துடன், “உங்களுக்கு மதர் நாவலைப் பற்றி எப்படித் தெரியும்?” கேட்டார்.
“மாக்சிம் கோர்கி என் அபிமான எழுத்தாளர்!” என்றேன்.
பரவசத்தோடு, “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு எந்த கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும்?” என்று கேட்டார்.
“அந்தத் தாய் – பெலகேயா நீலவ்னா!” என்றேன்.
“எனக்கு பாவெல்!” என்றார்.
தாய் பற்றிய சிலமணித்துளி உரையாடலில் இலக்கை சென்றடைந்தோம்.
“என் பெயர் ‘ப்ரமான் சூபியங்க’ (Roman Zubenko)” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, என் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, என் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு, “மாலையும் நானே வர விரும்புகிறேன்!” என்று கூறிவிட்டு சென்றார். மாலையும் வந்தார். மீண்டும் பேசினோம். பேச்சு தாய், மாக்சிம் கோர்கி, ஆன்டன் செக்கோவ், ரஷ்யா, இந்தியா என்று சுற்றிவந்தது. இதோ, இன்று, இதை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில் கூட ஜி-டாக்கில் ஆன்லைனில் இருக்கிறார்.
மறக்க முடியாத நாள்! மறக்க முடியாத மனிதர்!
“மொழி இனத்தை இணைக்கிறது. இலக்கியம் உலகையே இணைக்கிறது.”
பெண்ணாறலை வீசும் காவேரி தன்னால்வளர் சோலை பூவாசம் முன்னேவரும் சோழ மாகாணம் -அதில்மேயும், உண்ணாமுலை மாதர் சீராட அம்மாயென ஓடும் சேயாகும், மன்னார்குடி ராஜ கோபால -பெருமாளே….
பெருமதிப்பிற்குரிய, திரு ராகுல் காந்தி, திரு நரேந்திர மோடி, திரு அரவிந்த் கேஜரிவால் அவர்களே,
ஆளும் கட்சியின் உதவித் தலைவரும், கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பவரான தாங்கள் பல ஆண்டுகளாக அமேதி தொகுதியின் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியாக இருந்து வருகிறீர்கள். தேர்தல் நெருங்கி வருகின்ற இந்நாள் வரை உங்கள் தொகுதிக்காகவோ அல்லது இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவோ தாங்கள் செய்துள்ள சாதனைகள் என்று ஏதாவது இதுவரை வெளியிட்டிருக்கிறீர்களா? பாராளுமன்றத்தில் அதைப்பற்றி ஏதாவது பேசியிருக்கிறீர்களா? அடுத்த ஐந்தாண்டிற்கு உங்களுடைய கட்சி ஆளும் கட்சியாகப் பொறுப்பேற்கும்போது இதையெல்லாம் நாங்கள் செய்யப் போகிறோம் என்று இதுவரை நீங்கள் எதையும் கூறவில்லையே?
குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதல்வரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளருமாகிய திரு மோடி அவர்களே, தங்களுடைய ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்களின்படி குஜராத் மாநிலம் பதினாறாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமுதாய வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி இவைகளைக் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இது. உங்களுடைய் இத்தனைஆண்டுகால ஆட்சியில் உங்களுடைய மாநிலத்தை 16 வது இடத்தில் வைத்துள்ள தாங்கள் நம் இந்தியாவை எப்படி முதல் இடத்திற்குக் கொண்டுவரப் போகிறீர்கள்? தேர்தல் அறிக்கைகளே ஒரு சடங்காக மாறிவிட்ட இன்றைய நிலையில் நாட்டினுடைய வளர்ச்சிக்காகத் தாங்கள் அளிக்கக்கூடிய ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் என்று தெளிவாகத் தங்களால் ஏதும் அறிவிக்கப்படவில்லையே? இதற்கு என்ன காரணம்?
முன்னாள் தில்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமாகியத் தாங்கள் பல வகையில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டிருந்தாலும், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை 48 நாட்களில் உதறித் தள்ளியது சரியா? தங்களுக்கு பாரதப் பிரதமர் ஆகும் வாய்ப்பை மக்கள் அளித்தால் இதையும் தாங்கள் பாதியிலேயே விட்டுச் செல்ல மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் ? ஒரு சிறந்த நிர்வாகியாக, பிரச்சனைகளை எதிர்கொண்டு நிலைத்து நின்று ஆட்சி செய்யாமல் நீங்கள் பதவியை விட்டு விலகியது சரியா?
பாரதப் பிரதமர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தல் களத்தில் பணியாற்றும் தங்கள் மூவரிடமும் மக்கள் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்.
தங்கள் செயல்பாடுகள் மற்றும் தங்கள் நலத் திட்டங்களை முன்வைத்து அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளர்கள் தொலைத் தொடர்பு ஊடகங்கள் மூலமாக நேரடி விவாதம் நடத்துவது போன்று ஏன் நம் நாட்டிலும் நடத்தக்கூடாது? இது போன்ற விவாதங்களை தாங்கள் நேரடியாக நடத்துவதன் மூலமாக மக்கள் சிறந்த நிர்வாகிகளை நம் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாக அது அமையக்கூடும் அல்லவா? நாங்கள் இதை எதிர்பார்க்கலாமா?