திருமால் திருப்புகழ்…. (49)
கிரேசி மோகன்
வடுவூர் ராமர்
————————–
தனனா தனதான தனனா தனதான
தனனா தனதான -தனதான….
—————————————————————————————————————–
ஒருநாள் இசைபாடும், மறுநாள் வசைபாடும்
அதனால் மதியீனம் -அறிவாயே
நதிபோல் மதிமூலம் அறிவோர் மனமேளும்
அறிவால் அறியாமை -இருள்போகும்
அருணா சலஈசர் அகமாய் உருவாகி
குருவாய் ரமணேசர் -உபதேசம்
பெறநான் சமுசார கடல்சூழ் புவிசேரா
பிறவா வரம்காண -அருள்வாயே
மறைநான் கருள்ஓமின் பொருளோ தபிதாவின்
மடிசேர் மகனான -குமரேசன்
குறமா துடனானை மயிலே றவுலாவும்
திருவே ரகவேலன் -முறைமாம
திருஜா னகிசேடர் இளையோன் வரகானில்
மறுதாய் பணியாக -திரிவோனே
அனுமான் எஜமான அவதா ரசொரூப
வடுவூர் சிலைராம -பெருமாளே
——————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://periyathiruvadi.blogspot.in/2012/02/blog-post_10.html