Blog

  • 2014 நவம்பரில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திரத்தில் புதிய இரண்டு பரமாணுக்கள் கண்டுபிடிப்பு

    Two new subatomic discovered

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=dWlNdGaZ0YE

    http://www.dailymail.co.uk/sciencetech/article-2842299/Cern-scientists-discover-two-new-particles-smashing-protons-shed-new-light-universe.html#v-1315707993001

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    அணுக்கருத் தொடரியக்கம் புரிந்து
    அணுசக்தி வெளியானது போல்,
    உயிரியல் விஞ்ஞானத்தில்
    முதன்முதல் டியென்ஏ
    மூலச் சங்கிலி வடித்தது போல்
    அகில தேச விஞ்ஞானிகள் இயக்கும்
    செர்ன் விரைவாக்கி யந்திரம்
    பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய்
    அரங்கேற்றிச் சோதிக்கும் !
    கடவுள் துகள் ஹிக்ஸ் போஸான்
    தடம் கண்டதை
    உறுதிப் படுத்தினர் .
    ஒளிவேகத்தை ஒட்டிய விரைவில்
    எதிர் எதிரே விரைவாக்கியில்
    இரு புரோட்டான்கள் மோதி
    பெருந் துகளாய் மாறிய விந்தை !
    பூஜியச் சுழற்சி ஹிக்ஸ் போஸான்
    பரமாணுவுக்கு நிறை அளிப்பது
    கடவுள் துகளே !
    புதிய பரமாணுத் துகள் இரண்டு
    உதித்தன செர்னில் !
    இரு குவார்க்கு இரு எதிர்க் குவார்க்குடன்
    உருவான பரமாணுத் துகள்
    கண்டு பிடிக்கும் !
    பராமணு வயிற்றில் அடைகாத்து
    வெடித்துப் பொரிக்கும்
    குஞ்சுகள் !
    குளுவான்கள் ! குவார்க்குகள் !
    லிப்டான்கள் !
    ஃபெர்மி யான் !  ஹிக்ஸ் போஸான் !
    பிரபஞ்ச  செங்கற்கள் !

    +++++++

     

    Particle Zoo -1

    துகள் பௌதிக விஞ்ஞானத்தில் தினமும் புதியவை கண்டுபிடிக்கப் படுவதில்லை.  அதனால் புதிய துகள் கண்டுபிடிப்பு என்பது ஓர் அற்புத பரபரப்பு நிகழ்ச்சியாகக் கருதப் படுகிறது.   கனேடிய துகள் விஞ்ஞானிகள் லூயிஸ், ஒலோசின் ஆகியோர் முன்யூகித்த அந்த இரண்டு பரமாணுக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தது நான் எதிர்பார்த்த ஓர் நிகழ்ச்சி.

    ஸ்டீஃபன் பிளஸ்க் [துகள் பௌதிக விஞ்ஞானி,  நியூயார்க் சிரக்குயூஸ் பல்கலைக் கழகம்]

     

    செர்ன் விரைவாக்கியில் புதிய இரண்டு பரமாணுக்கள் கண்டுபிடிப்பு

    2014 நவம்பர் 20 ஆம் தேதி பௌதிக விஞ்ஞான இதழ்கள் அறிவிப்பின்படி புதிய இரண்டு பரமாணுக்கள் செர்ன் விரைவாக்கி யந்திரத்தின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டதாக அறியப்படுகிறது.  அந்த பரமாணுக்கள் இரண்டும் பாரியான்கள் [Baryons] எனப்படும் வகையைச் சேர்ந்தவை.  அவை நாமறிந்த புரோட்டான்களை விட ஆறு மடங்கு நிறையாகக் கனத்தவை.  அவற்றின் இருப்பைப் பற்றி ஏற்கனவே 2009 இல் இரு கனேடிய துகள் பௌதிக விஞ்ஞானிகள், ரான்டி லூயிஸ், ரிச்செர்டு ஒலோசியன்  [Particle Physicists, Randy Lewis & Richard Woloshyn] என்போர் முன்னறிவித் துள்ளார்கள்.  அந்தப் பரமாணுக்கள் பாரியான் [Xi_b’ and Xi_b*] வகை என்று குறிப்பிடப் படுகின்றன.   ஒவ்வோர் பாரியானிலும் மூன்று குவார்க்ஸ் [Each Baryon has 3 Quarks] என்னும்  அடிப்படைப் பரமாணுத் துகள்கள் உள்ளன.  நாம் அறிந்த அணுவின் உட்கருவில் உள்ள  புரோட்டான்களும், நியூட்ரான்களும் பாரியான்கள் வகையைச் சேர்ந்தவை.  அந்த பரமாணுக்கள் இரண்டும், வெவ்வேறு நிறை கொண்டிருந்தாலும், குறைந்த ஆயுள் உடையவை. நிலையற்றவை.   அவை உடைந்து ஐந்து சிறிய துணுக்குகளாகப் பிளவு படுகின்றன.

    நியூயார்க்கு மாநில சிரக்கியூஸ் பல்கலைக் கழகத்தின் துகள் பௌதிக விஞ்ஞானி, ஸ்டீஃபன் பிளஸ்க் என்பரும் & பாரிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாத்யூ சார்லஸ் என்பவரும் இணைந்து செர்ன் பூத விரைவாக்கி யின் விளைவுத் தகவல்களை ஆராய்ந்து செய்த கண்டுபிடிப்பாகும்.   செர்ன் விரைவாக்கி ஏறக்குறைய 750 உலக விஞ்ஞானிகள் கூடி உழைக்கும் ஓர் ஆராய்ச்சி மையம்.

     

    Fig 1 CERN Ready to Smash Protons

     

    புதிரான பரமாணுத் துகள்போல் தோன்றி ஓர் உறுதியான நிலையில் இருக்கும் காட்சியை ஐயமறக் கண்டோம்.   துகள் போலிருந்த அந்தப் பரமாணுவில் இரு குவார்க்கும், இரு எதிர்க் குவார்க்கும் [Two Quarks & Two Anti-Quarks]  உள்ளிருந்தன.   இந்த அரிய கண்டுபிடிப்பு வழக்கமான குவார்க் மாடலை [Traditional Quark Model] ஒத்திருக்க வில்லை.   அந்தத் துகள் பௌதிக விஞ்ஞானத்தில் ஓர் உறுதியான ஈடுபாட்டுடன் உலவப் புதியதோர் கண்ணோட்டத்தை எங்களுக்குக் கொடுக்கலாம்.

    தாமஸ் ஸ்குவார்னிக்கி விஞ்ஞான வெளியீட்டு ஆய்வாளர்.

    “செர்ன் பூத விரைவாக்கி யந்திரத்தில் கிடைத்த பில்லியன் கணக்கான புரோட்டான்-புரோட்டான் மோதல் கணித விளைவுகளை [LHC Proton-Proton Collision Data]  ஆராய்ந்த செர்ன் விஞ்ஞானிகள் “ஹிக்ஸ் போஸான்” புதுத் துகள் இருப்பதை [99.99%] உறுதிப் படுத்தியுள்ளார்.   அதன் கண்டுபிடிப்பு நேர் போக்குத் துகள் பௌதிக விதிக்கு [Mainstream Particle Physics Priciples] ஏறக்குறைய ஏற்புடையதாய் உள்ளது.”

    டேவிட் சார்ல்டன், [CERN LHC ATLAS Team] [மார்ச் 14, 2013]

     Higgs boson Discovery

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=b4E34t9Nyn8

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2xnsMGNicho

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=K1cU8dATFkE

     http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rcZboT9Jer8

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vGWSttur878

     http://www.youtube.com/watch?feature=player_embedded&v=l6H7-GKCDBQ 

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=EGHZA4Y382w

     

    New Physics

    புதிய பௌதிகம் உருவாக்கும் புது அணுக்கருத் துகள் கண்டுபிடிப்பு

    2014 ஏப்ரல் 16 ஆம் தேதி அமெரிக்காவின் சிரக்கூஸ் பல்கலைக் கழகத்தின் [Syracuse University] பௌதிக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதுவிதப் பரமாணுவை செர்ன் அணு உடைப்பி யந்திரத்தின் மூலம் கண்டு பிடித்தாக வெளியிட்டுள்ளார்கள்.   2012 ஆண்டில் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட “கடவுள் துகள்” எனப்படும் “ஹிக்ஸ் போஸானுக்குப் பிறகு ஒரு சிறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இது  செர்ன் பூதப் பரமாணு மோதல் நளினச் சாதனத்தின் ஒரு பகுதிக் குழுமுயற்சியாகக் கருதப்படுகிறது. [CERN Large Hadron Collider Beauty Collaboration].   இந்தக் கண்டுபிடிப்பு பன்முக நாட்டு ஆய்வுத் திட்டத்தின் ஒரு விளைவு.  இக்குழு புதிய குவாண்டம் விசைகளையும், [Quantum Forces] துகளையும் ஆய்வு செய்யும்.  இந்த முயற்சி உறுதியான முறையில் ஐயப்பாடு இல்லாமல் நிரூபணம் செய்யப் பட்டுள்ளது.  குழுத் தலைவர் தாமஸ் ஸ்குவார்னிக் தான் கண்டுபிடித்த பரமாணுத் துகளில் இரு குவார்க்குகளும், இரு எதிர் குவார்க்கும் உள்ளதாக கூறினார்.   பல்லாண்டுகளாக அந்தத் துகள் இருப்பை ஊகித்தாலும், அதன் இருப்பு இப்போதுதான் ஐயப்பாடு இல்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

     

    “2012 ஜூலை மாதத்தில் கிடைத்த முன்னோடி மோதல் விளைவுகள் முக்கியமானவை.  காரணம் அவை “ஹிக்ஸ் போஸான்” கடவுள் துகளைத்தான் ஆய்ந்து வருகிறோம் என்றெனக்குத் தெளிவாய்க் காட்டின.    ஆயினும் அது எந்த வகையான ஹிக்ஸ் போஸான் என்று தீர்மானமாக அறிய இன்னும் நெடுங்காலம் ஆகும்.”

    ஜோ இன்காண்டிலா  [Physicist Spokeperson, CERN Compact Muon Solenoid Team (CMS)]

    “கண்டுபிடித்த “ஹிக்ஸ் போஸான்” எந்த வகையைச் சேர்ந்த துகளென்று அறிய, துகள் பௌதிகத்தில் ஐயத்துக்கு அப்பால் முழுமையான ஆய்வு செய்யப் பட வேண்டும்.   ஆயினும், பூஜியச் சுழற்சி [Zero Spin] உறுதியாக்கப் பட்டதால், இந்தக் கண்டுபிடிப்பு புத்துணர்ச்சி உண்டாக்குகிறது !   பூஜியச் சுழற்சி கொண்ட முதல் அடிப்படைத் துகளே ஹிக்ஸ் போஸானாகத்தான் இருக்க வேண்டும்.”

    டாக்டர் வைட்பெர்க் [CERN Particle Physics Scientist]

    கடவுள் துகள் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு உறுதி செய்யப் பட்டது

    2012 ஜூலையில் பூதச் செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் விஞ்ஞானிகள் தடம் மட்டும் கண்ட கடவுள் துகள் எனப்படும் “ஹிக்ஸ் போஸான்” இப்போது [2013 மார்ச் 14]  விஞ்ஞானிகளால் ஏறக்குறைய [99.99%] உறுதி செய்யப்பட்டிருக்கிறது.   இந்த புதுத் துகள்தான் நமது பிரபஞ்சத்தின் தோற்றத்தின் மூலச் செங்கல் என்று கருதப்பட்டு அது இருப்பதாய் 1964 இல்  பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவரால் அனுமானிக்கப் பட்டது.   காணப்படாத இந்த கடவுள் துகளைக் கண்டுபிடிக்க  உலக விஞ்ஞானிகள் 10 பில்லியன் டாலர் செலவில் 27 கி.மீ. நீளமான [16 மைல்] செர்ன் விரவாக்கியைக் கட்டியமைக்க வேண்டியதாயிற்று !  இந்த விஞ்ஞானத் தேடல் கடந்த 25 ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடந்து வருகிறது.   அவ்விதம் அசுர சாதனை செய்து விஞ்ஞானிகள் தாம் தேடிய கடவுள் துகளை உருவாக்கிப் படமெடுத்து உறுதிப்படுத்தியது பெரிய நிதிச் செலவையும் நேரச் செலவையும் நேர்மைச் செலவாக்குகிறது !  இப்போது செர்ன் நிறுத்தம் செய்யப் பட்டு இரண்டு வருடம் பராமறிப்புப் பணிகள் நடக்கும்.  அதற்குப் பிறகு செர்ன் விரைவாக்கி இருமடங்கு மிகையான ஆற்றலில் [14 TeV] 2015 இல் மீண்டும் இயங்கி ஐந்து வகை ஹிக்ஸ் போஸான்களை ஆக்கி  ஆழ்ந்த ஆராய்ச்சிகள் செய்யும்.

    ஹிக்ஸ் போஸான் ஓர் அடிப்படைத் துகள் !  மிகக் கனமானது !  சீக்கிரம் உடைந்து சிறு துகளாவது !  காலக்ஸிகள், சூரியன்கள், அண்டக்கோள்கள், கருந்துளை, கரும்பிண்டம், உயிரினங்கள்,  போன்ற பிரபஞ்சப் படைப்புகள் அனைத்துக்கும் “மூலச் செங்கல்” என்று கருதப்படுவது.  அதன் இருப்பு அனுமானமும், கண்டுபிடிப்பு உறுதிப்பாடும், பிரபஞ்சத் தோற்றப் பெருவெடிப்பு நியதியைப் பூர்த்தி செய்து வலுப்படுத்துகிறது.  “பூஜிய சுழற்சி” [Zero Spin] இருப்பதாய் நிரூபணமான இந்த ஹிக்ஸ் போஸான் இல்லாமல் போனால் “துகள் பௌதிகத்தின் நேர்த்தி மாதிரி நிலைப்பாடு”  [Standard Model of Particle Physics] பிரபஞ்சத்தில் நிகழும் இயக்கங்களுக்கு விளக்கம் தர முடியாமல் போகும்.   அது இல்லாமல் ஈர்ப்பியல் விசையை விளக்கும் ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதிக்கு உடன்பாடு ஏற்படாது.

    Fig 1H God's Particle Higgs Boson

    1969 இல் சந்திரனுக்குக் குறிப் பயணம் செய்த மகத்தான மனித முயற்சி போல் ஹிக்ஸ் போஸான் துகளைத் தேடிச் சென்றதும் உலக மாந்தர் கவனத்தைக் கவர்ந்தது.   நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்பொல்லோ விண்வெளிக் குறிப் பணிகள்  பொதுமக்களை  விஞ்ஞானத் தேடல் கண்டுபிடிப்புகளில் ஈர்த்தன.   அடுத்த பிறவி விஞ்ஞானிகளுக்கும் புத்துணர்ச்சி ஊட்டி ஆர்வத்தைத் தூண்ட இந்தக் கடவுள் துகள் கண்டுபிடிப்பு நீடித்துச் செல்லும்.

    பேராசிரியர் பீட்டர் நைட் (Professor Peter Knight, President of Institute of Physics, UK. )

    ஹிக்ஸ் போஸான் துகள் கண்டுபிடிப்பு உயிரியல் விஞ்ஞானத்தில் “டி யென் ஏ” (DNA) மூலவி கண்டுபிடிப்புக்கு ஒப்பாகும்.  இது  டியென்ஏ  கண்டுபிடிப்பின் ஒரு பௌதிக வடிவம்.   நமது பிரபஞ்ச அமைப்புப் பின்னல் நாரைப் (Fabric of the Universe) புரிந்து கொள்ளும் முயற்சியின் போக்கில் புது தீரச் செயலுக்கு ஒரு பாதை உண்டாக்கும்.

    பேராசிரியர் பீட்டர் நைட்.

    கடவுள் துகள் கண்டுபிடிப்பு ஒரு மகத்தான சாதனை.   15 ஆண்டுகள் அகில நாடுகளின் கூட்டுறவில் மாபெரும் பரமாணு உடைப்பியைக் (Large Hadron Collider) கட்டி அமைத்ததின் பயனைப் பெற முடிந்தது.   இந்த அறிவிப்பானது  “துகள் பௌதிகத்தின்” நிலைத்துவ மாடல் (Standard Model of Particle Physics.) ஏற்பு உடையது என்பதை உறுதிப் படுத்தி உள்ளது.

    பேராசிரியர் பீட்டர் நைட்.

    “உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”

    ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)

    “செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”

    ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)

    “இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி வி¨சையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.

    டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)


    “பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ந்து பில்லியன்த் தசம விநாடியில் (Billionth of a Second after the Big Bang) தோன்றிய திரைக் காட்சியைக் கண்டு விட்டோம். இந்தப் புதிய கட்டம் “முதல் பௌதிகம்” என்று பெயர் அளிக்கப் படுகிறது ! இவற்றைப் போல் இன்னும் ஈராண்டுகள் செய்யப் போகும் பல பில்லியன் புரோட்டான் மோதல்களின் துவக்கக் கட்டம் இது.”

    ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist)

    “இது உலகத் தோற்றத்தைக் கூறும் முதற்பிரிவு (Genesis Chapter -1) விளக்கம் நோக்கி மனிதர் வைக்கும் மாபெரும் கால்தடம் ! செர்ன் உடைப்பி பிரபஞ்சத் தோற்றப் படைப்பு யந்திரம் (Genesis Machine) ! பிரபஞ்ச வரலற்றின் மாபெரும் மகத்தான காட்சியை மீண்டும் திரையிட்டுக் காட்ட செர்ன் உதவுகிறது ! புதிரான இந்த நுண்துகள்களின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் நாம் யாரென்னும் கருத்தை மாற்றி விடலாம் !”

    மிஸியோ காக்கு, பௌதிக மேதை (Michio Kaku, New York)

    “மேற்கட்ட செர்ன் சோதனையில் விரைந்து பாயப் போகும் எதிர் எதிர் ஒளிக்கற்றைகள் நேரிணைப்பு (Alignment of Beams) செய்யப் படவேண்டும். அது நிபுணருக்குப் பெரும் சவாலானது. அட்லாண்டிக் கடலின் அகண்ட இருபுறக் கரைகளி லிருந்து இரண்டு எதிர், எதிர் ஊசிகளை அனுப்பிக் கடல் நடுமையத்தில் அவற்றை மோத வைக்கும் சவாலைப் போலாகும்,”

    ஸ்டீவ் மையர்ஸ் (Steve Myers, Director of CERN Accelerators & Technology)

    jay

    “இந்தப் புதிய ஹிக்ஸ் போஸான் தேடல் விளைவுகள் டெவடிரான் விரைவாக்கியில் கிடைத்த ஏராளமான தகவல் இலக்கத்தாலும் (Tevatron Collision Data) அநேகப் பட்டப் படிப்பு நிபுணர் வடித்த கூரியக் கணித விதிகளாலும் (Smart Search Algorithms) கிடைத்தவை.”

    ராபர்ட் ரோஸர் (Fermilab Co-Spokeperson, CDF & DZero Analysis Groups)


    “ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியின் (Tevatron Collider) உற்பத்தியைத் தூண்டி உன்னத நிலைக்கு ஆய்வுகள் உயர்ந்துள்ளன.  டெவடிரான் உடைப்பியின் சிறந்த சோதனை விளைவுகளுக்கு நாங்கள் நன்றி செலுத்து கிறோம்.  உலக நாடுகளின் CDF & DZero சோதனை ஆய்வுக் கூட்டாள விஞ்ஞானிகள் சாதித்த விளைவுகள் துடிப்புணர்ச்சி உண்டாக்குபவை.  அவை ஹிக்கிஸ் போஸான் தேடல் ஆராய்ச்சியில் மகத்தான முன்னேற்றைக் காட்டியுள்ளன.”

    டெனிஸ் கோவர், (Dept of Energy Associate Director of Science for High Energy Physics)

    “உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”

    ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)

    “செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists).  இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”

    ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)

    “இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது.  அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும்.  மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி விசையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.

    டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)

     

     

    செர்ன் விரைவாக்கி யந்திரம் உண்டாக்கிய புரட்சிகரமான மூலத்துகள் ஹிக்ஸ் போஸான்

    சுமார் பதினாங்கு பில்லியன் ஆண்டுகட்கு முன்பு  நேர்ந்ததாகக் கணிக்கும் பிரபஞ்சப் பெருவெடித் தோற்றத்தில் முதன்முதல் உதித்ததாக யூகிக்கபட்ட “ஹிக்ஸ் போஸானைப்”  போன்ற ஒரு துகளைச் செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் புரோட்டான்களை மோத விட்டுக் கண்டுபிடித்திருப்பதாக பிரிட்டிஷ்  துகள் பௌதிக விஞ்ஞானிகள் 2012 ஜூலை 5 ஆம் தேதி  அறிவிப்பு செய்து ஒரு பரபரப்பை உண்டு பண்ணினார்.    அந்தத் துகளின் பெயர் :  ஹிக்ஸ் போஸான் (Higgs Boson).    அந்த அற்புதத் துகளை வடிவாக்கிய விரைவாக்கி யந்திரம் செர்ன் அல்லது  “பரமாணு பெரு உடைப்பு யந்திரம்” (CERN or Large Hadron Collider) என்பது.    கண்டு பிடித்த புதிய துகள், ஹிக்ஸ் போஸானின் பண்பாடுகள் கொண்டதற்கு மெய்யான சான்றுகள் கிடைத்துள்ள தாயினும் இந்தக் கண்டுபிடிப்பு ஆரம்ப நிலை செர்ன் ஆய்வு விளைவுகளை வைத்தே இப்போது அறிவிப்பு செய்யப் பட்டிருக்கிறது.   கடவுள் துகளின் உறுதிப்பாடு பூரணமாக இன்னும் ஏராளமான விளைவுப் பதிவுகள் ஆராயப்பட நீண்ட காலம் ஆகலாம்.   புதுத் துகள் எந்த விதமான வடிவம் எடுத்தாலும் சரி, இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு அணுப் பிண்டத்தின் அடிப்படை அமைப்பு (Fundamental Structure of Matter) பற்றிய நமது பழைய அறிவு பேரளவில் உயர்ந்து முன்னேறப் போகிறது.

    2012 ஜூலை ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த செர்ன் விரைவாக்கி ஆய்வு நிபுணர் நடத்திய “துகள் பௌதிகப் பேரவையில்” (Major Particle Physics Conference) பிரிட்டிஷ் துகள் விஞ்ஞானிகள் இந்த அரிய கண்டுபிடிப்பை முதன்முதல் வெளியிட்டனர்.  நீண்ட காலம் எதிர்பார்த்த ஹிக்ஸ் போஸான் துகள்  உண்டாக்கிய செர்ன் அட்லாஸ், சி யெம் எஸ் சோதனைக் கருவி விளைவுகளை (ATLAS, CMS Experiments)  அறிவித்தார்.   இரண்டு சோதனைக் கருவிகளின் விளவு களும் 125 –126 GeV (Gega Electron Volt Energy) கெகா எலக்டிரான் ஓல்ட் சக்தியுள்ள துகளை உருவாக்கின.  இந்த அறிவிப்பு முன்னோடி விளைவுகளை (Preliminary Results) வைத்துச் செய்யப் பட்டது.   ஆனால் பூரண உறுதி அளிப்பதற்கு இன்னும் ஆராயப் பட வேண்டிய சோதனை விளைவுகள் ஏராளமாய் உள்ளன.   விஞ்ஞானிகள் ஆயினும் ஹிக்ஸ் போஸான் பண்பாடு உள்ள ஓர் புதுத் துகளை நிச்சயம் செர்ன் விரைவாக்கி உண்டாக்கிய விட்டதாக உறுதியாக அறிவித்தார்கள்.  2012 ஜூலை மாதக் கடைசியில் அனைத்து விளைவுகளும் ஆய்வு செய்யப் பட்டு முடிவான அறிவிப்பு செய்யப்படும் என்பது தெரிகிறது.

     

     

    ஹிக்ஸ் போஸான் மூலத்துகள் கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் என்ன ?

    இரண்டாம் உலகப் போரின் போது 1945 இல் நூற்றுக்கணக்கான அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் சோதனைத் தளத்தில் அணுவைப் பிளந்து தொடரியக்கத்தைக் கட்டுப் படுத்தி அணுசக்தியின் பேராற்றலை முதன்முதல் வெளிப்படுத்திய நிகழ்ச்சி, நூற்றுக் கணக்கான உலக விஞ்ஞானிகள் ஐரோப்பிய செர்ன் விரைவாக்கியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து பிரபஞ்ச தோற்றத்தின் கடவுள் துகளை உருவாக்கிக் கண்டுபிடித்ததற்கு நிகராகும்.   இப்போது செர்ன் விஞ்ஞானிகளின் குறிக்கோள் என்ன ?   கண்டுபிடித்த ஹிக்ஸ் போஸான் துகளின் துல்லிய இயற்கைப் பண்புகளை ஆழ்ந்து அறிவது,  அதனால் இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி விளக்கமாக அறிவது போன்ற புதிய விபரங்களே.   அவ்விதம் பெற்ற துகளின் பண்பாடுகள் துகள் பௌதிகத்தில் இறுதியாக நிலைத்துவ மாடலில் நிரப்பப் பட வேண்டிய உட்கூறா (Missing Ingredient in the Standard Model of Particle Physics) என்பது தெளிவாக்கப் படும்.    அல்லது ஹிக்ஸ் போஸான் துகள் புரட்சி உண்டாக்கப் போகும் ஒரு புது அதிசயமா என்பது அறியப் படும்.

    துகள் பௌதிகத்தின் நிலைத்துவ மாடல் என்ன சொல்கிறது ?   நாம் தோன்றக் காரணமான மூலாதார துகள்கள், பிரபஞ்சத்தில் காணப்படும் அண்ட பிண்டங்கள் உண்டாக உதவிய அடைப்படைத் துகள்கள்,  அவற்றுடன் பின்னிப் பிணைந்து இயக்கி வரும் அகில விசைகள் (Forces of the Universe) ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது.    பிரபஞ்சத்தில் அண்ட பிண்டங்களின் இருப்பு  மொத்தத்தில் 4%  மட்டுமே.   தற்போது கண்டுபிடிக்கப் பட்ட கடவுள் துகள் 96% மர்மாக இருக்கும் பிரபஞ்ச மீதிப் புதிரை விடுவிக்க ஒரு பாலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   ஹிக்ஸ் போஸான் பற்றிய ஆணித்தரமான விளக்கம்  வெளிவர இன்னும் செர்ன் சோதனை விளைவுகளை ஆராய நீண்ட காலம் ஆகும் என்று அறியப் படுகிறது.

     

    ஹிக்ஸ் போஸானை முன்மொழிந்த பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ்

    கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் அதை ஊகித்து விளக்கிய பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் பெயரைக் கொண்டது.  1964 இல் அவர் ராபர்ட் பிரௌட், பிரான்காய் எங்லெர்ட், டாம் கிப்பிள், ஹேகன், ஜெரால்டு குரல்னிக் ஆகியோரின் கருத்துக்களுடன் மூன்று வெளியீடுகள் வெளியிட்டார்.   அந்தக் கோட்பாடு ஹிக்ஸ் தளம், போஸான் சார்ந்த ஹிக்ஸ் யந்தரவியல் (Higgs Mechanism Related to Higgs Field & Boson) என்று அழைக்கப் பட்டது.    ஹிக்ஸ் போஸான் ஒரு கனமான துகள் ஆனதால், அது செர்ன் விரைவாக்கியில் உருவானதும் உடனே சிதைந்து வேறு சிறு பரமாணுக்களாய் மாறுகிறது (It decays almost immediately into two jets of hadrons and two electrons, visible as lines.)   ஹிக்ஸ் போஸான் தேடல் செர்ன் விரைவாக்கியில் 2010 ஆண்டின் ஆரம்ப காலத்தில் துவங்கி,  அமெரிக்காவின் ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் விரைவாக்கியில்  2011 ஆம் ஆண்டில் அது மூடுவது வரை ஆய்வு செய்யப் பட்டது.

    பரமாணுகளுக்கு நிறை தருவது (Mass) இந்த ஹிக்ஸ் போஸான்.  ஹிக்ஸ் தளத்தின் ஈடுபாடே  (Higgs Field Interaction) அடிப்படைத் துகள்களுக்கு நிறை கொடுக்க ஏதுவாகிறது.   ஓர் அண்டத்தின் ஈர்ப்பு விசையே  அதன் மீதுள்ள பொருளுக்கு எடை கொடுப்பது போல் அதைக் கருதலாம்.   ஈர்ப்பு விசை பூஜியமானால் பொருளுக்கும் எடை இல்லாது போகும்.  ஹிக்ஸ் துகள் ஒரு போஸான் துகள்.   அடிப்படைத் துகள் சில இந்திய விஞ்ஞானி சத்தியேந்தர  நாத் போஸ் பெயரைத் தாங்கி  உள்ளன.   அவர் ஐன்ஸ்டைன் காலத்தில் அவருடன் விஞ்ஞானப் பணி செய்தவர்.   போஸன் துகள் ஒரு தனிப் பண்பு கொண்டது.  அது அதைப் போன்று ஒத்திருக்கும் பற்பல துகள்களை ஒரே இடத்தில், ஒரே குவாண்டம் நிலையில் (Quantum State)  வைத்திருக்க அனுமதிக்கும்.   மேலும் நிலைத்துவ மாடல் விதிப்படி ஹிக்ஸ் போஸானுக்கு சுழற்சி இல்லை, நேர், எதிர் மின்னேற்றங்கள் கிடையா.   நிற ஏற்றமும் இல்லை.  (No Intrinic Spin, No Electrical Charge, No Color Charge).

     

    Dark Matter in the Universe

    பூர்வீக மூலத் துகள் தேடலில் நெருங்கிச் சென்ற முதல் விரைவாக்கி யந்திரம்

    வெகு விரைவில் உலகப் பெரும் விரைவாக்கி புதிய அடிப்படைத் துகளைக் கண்டுபிடிக்கத் துவங்கும் நிலைக்கு வந்து விட்டதென்று ஒரு பெரும் செர்ன் விஞ்ஞானி அறிவித்தார். செர்ன் யந்திரத்தின் சமீபத்திய இயக்க முன்னேற்றம் தொடர்ந்தால், விஞ்ஞானிகள் இவ்வாண்டு வேனிற் கால முடிவுக்குள் துகள் பௌதிகத்தில் (Particle Physics) புதியதோர் திருப்பத்தை உண்டாக்குவார் என்று தெரிந்தது. அவற்றுள் முதலில் கண்டுபிடிக்கப்பட இருப்பவை ஏற்கனவே உள்ளதாக ஊகிக்கபட்ட இரண்டு போஸான் துகள்கள் (Boson Particles). பத்து பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப் பட்டு ஆரம்பத்தில் ஹீலியம் கசிந்து பழுதுகள் நீக்கப் பட்டு முதன்முதல் 2009 நவம்பரில் செர்ன் விரைவாக்கி யந்திரம் செம்மையாக இயங்க ஆரம்பித்து பல பில்லியன் மோதல்களை உண்டாக்கி விட்டது. பிரென்ச்-சுவிஸ் எல்லையில் ஜெனிவாவுக்கு அருகில் 27 கி.மீ. விட்டமுள்ள வட்ட அடித்தளத்தில் இயங்கி வருகிறது செர்ன் விரைவாக்கி யந்திரம். அந்த உலகப் பெரும் விரைவாக்கி அணுவின் அடிப்படைத் துகள் “ஹிக்ஸ் போஸான்” என்பதை 1000 GeV (Gega-electron Volt) மின்னாற்றலில் காணலாம் என்று விஞ்ஞானிகளால் ஊகிக்கப் பட்டது.

    புரோட்டான் நிறையைப் போல் ஆயிரம் மடங்கு பெரிதானது ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்னும் ஊகிப்பு அடிப்படைத் துகள். இந்த நிறை அளவீட்டில் முதலில் உதிக்கும் புதிய துகள்கள் ‘பிரதம W போஸான்கள்’ & ‘பிரதம Z போஸான்கள்’ (W Prime Bosons & Z Prime Bosons). இவை இரண்டும் கனமான போஸான்கள்.. மெலிந்த போஸான்கள் எனப்படும் ‘W போஸான்கள்’ & ‘Z போஸான்கள்’ (W Bosons & Z Bosons) நலிந்த இயக்கப்பாடுகளுக்குப் (Weak Interactions OR Weaker Nuclear Force) பொறுப் பானவை. நான்கு அடிப்படை இயக்கப்பாடுகள் : ஈர்ப்பியல் சக்தி, மின்காந்த சக்தி, வலுத்த அணுக்கருச் சக்தி, நலிந்த அணுக்கருச் சக்தி. (Four Fundamental Interactions of Nature: Gravitation, Electromagnetism, Strong Nuclear Force & Weaker Nuclear Force).

    1980 இல் W போஸான் & Z போஸான் ஆகிய இரண்டும் 100 GeV (Gega-Electron Volt) சக்தியில் பழைய செர்ன் விரைவாக்கியில் கண்டுபிடிக்கப்பட்டன. நிறை மிகையான துகள்களைப் பதிவு செய்ய அதிக சக்தி வாய்ந்த தற்போதுள்ள விரைவாக்கி யந்திரம் செர்ன் போல அமைக்க வேண்டியதாயிற்று. ஒரு சில மாதங்களில் செர்னில் 1000 GeV மின்னாற்றல் உண்டாக்க முடியும் என்று ஆக்ஸ்·போர்டு பல்கலைக் கழகத்தின் துகள் பௌதிகவாதி டாக்டர் டோனி வைட்பர்க் கூறுகிறார். செர்ன் விரைவாக்கியில் இவ்வாண்டும், அடுத்த ஆண்டும் 3.5 TeV (Tetra- Electron Volt) மின்னாற்றலில் கணை மோதல்கள் நடத்தப் படும். செர்ன் பொறியியல் நிபுணர் படிப்படியாக மின்னாற்றலை மிகையாக்கி வருவார். 18 முதல் 24 மாதங்கள் நீடிக்கப் போகும் பில்லியன் கணக்கான செர்ன் விரைவாக்க மோதல் களின் விளைவுகளை ஆராய்வதற்குச் சில ஆண்டுகள் கூட ஆகலாம் ! கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மோதல்களின் எண்ணிக்கை (10^27) (10 to the power 27). இப்போது எண்ணிக்கை (10^29). இந்த வாரத் திட்டம் (ஜூன்–ஜூலை) மோதல்கள் எண்ணிக்கை : (10^30). செர்ன் விஞ்ஞானி களின் குறிக்கோள் திட்ட எண்ணிக்கை : (10^34) மோதல்கள். இதுவரைப் புரோட்டான் வேகத்தை ஒளி வேகத்துக்கு ஒட்டி (99.99% ஒளிவேகம்) சக்தி ஆற்றலை 7 TeV அளவு உயர்த்தி உள்ளார். முடிவான குறிக்கோள் திட்ட ஆற்றல் : 14 TeV. செர்ன் விரைவாக்கியின் முழுத் தகுதிச் சக்தியில் விநாடிக்கு 600 மில்லியன் மோதல்கள் நிகழும். அப்போது டிரில்லியன் கணக்கில் புரோட்டான்கள் விரைவாக்கி வட்டக் குழலில் விநாடிக்கு 11245 தடவை சுற்றிவரும் !

     

    விரைவாக்கியில் பெரு வெடிப்பு இயக்கம் நுண்துகள் உளவும் கருவிகள்

    ஆறு முக்கிய கருவிகளின் பெயர்கள் இவை: (CMS, Atlas, Alice, LHCb, Totem & LHCf) அவை புரியும் பணிகள் என்ன ?

    1. அட்லாஸ் உளவி (ATLAS Detector – A Toroidal LHC Apparatus) : 150 அடி (46 மீடர்) நீளமுள்ள இந்தக் கருவி எல்லாவற்றிலும் பெரியது. இரண்டு கருவிகள் உள்ளன. அவை பிண்ட ஆரம்பத்தைக் காணும். புதிய பௌதிகம், பிறப் பரிமாணம் (Extra Dimension) காணும்.

    2. CMS Detectors (Compact Muon Solenoid) : இதுதான் ஹிக்கிஸ் போஸான்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் கருவி. கரும்பிண்டத்தின் இயற்கைப் பண்பாடையும் உளவும். இது பன்முக உளவுக்குக் கருவி (Multi-Purpose Detector)

    Higgs boson Established

    3. ALICE (A Large Ion Collider Experiment) : இது திரவப் பிண்டத்தைக் கண்டுபிடிக்கும்.
    (Liquid form of Matter called Quark-Gluon Plasma that existed shortly after the Big Bang)

    4. LHCb (Large Hadron Collider Beauty) : பெரு வெடிப்பில் தோன்றிச் சரிபாதி இருக்கும் பிண்டம், எதிர்ப்பிண்டம் (Matter & Anti-Matter) ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது. இழந்து போன எதிர்ப்பிண்டத்துக்கு என்னவாயிற்று என்று உளவு செய்யும்.

    5. LHCf (Large Hadron Collider Forward) விண்வெளியில் இயற்கையாக உண்டாகும் மின்னேற்றத் துகள்கள், அகிலக் கதிர்கள் (Charged Particles & Cosmic Rays) போலி இருப்பை ஏற்படுத்தும்.

    6. Totem இது புரோட்டான்கள் எவ்விதம் சிதறும் என்று கண்டு அவற்றின் நிறையை அளக்கும்.

     

    செர்ன் விரைவாக்கி என்ன முடிவுகளைக் கண்டுள்ளது ?

    செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சத்தின் புதிர்களை விடுவிக்கும் நிலைக்கு நெருங்கி விட்டது என்று ஆங்கு பணி செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார். நுண்துகளுக்கு நிறை எதனால் ஏற்படுகிறது ? கடவுளின் துகள் எனப்படும் ‘ஹிக்ஸ் போஸான்’ நுண்துகளுக்கு நிறை அளிப்பது என்று முன்பே யூகிக்க பட்டதுதான். இப்போது செர்ன் விநாடிக்கு 10,000 மோதல்களை உண்டாக்குகிறது என்று பௌதிக விஞ்ஞானி ஆன்ரி கொலூட்வின் (Anderi Golutvin) குறிப்பிடுகிறார். விநாடிக்கு எத்தனை அளவு மோதல்கள் மிகையாகுமோ அத்தனை அளவு நெருக்கத்தில் “உச்ச சீரமைப்பு”, “பிண்டம்”, “ஹிக்ஸ் போஸான்” (Supersymmetry, Dark Matter, Higgs Boson) ஆகியவற்றை அடைகிறோம் என்று பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார். “செர்ன் விரைவாக்கியின் கருவி (LHCb) எதிர்ப் பிண்டத்தின் (Anti-Matter) இயற்கைப் பண்பாட்டை நுட்பமாய் நோக்கும். அதே கருவி சமீபத்தில் முதன்முதலாக “நளினி” “விபரீத அழகி” என்னும் இரண்டு பரமாணுக் களைக் (Sub-atomic Particles, Called : Charm & Strange Beauty) கண்டு பிடித்துள்ளது. “விபரீத அழகி” நுண்துகளை முதன்முதல் கண்டுபிடித்த எனது குழுவினர் பேருவகை அடைந்தனர்.

    இயல் பிண்டத்தைப் (Normal Matter) போலின்றி மாறாக இயங்கும் எதிர்ப் பிண்டத்தை (Anti-Matter) அறிய நாங்கள் இந்த நுண்துகளை பயன்படுத்துவோம். ‘விபரீத அழகி’ நுண்துகளைப் பற்றி வேறு யாரும் அறியார். அதுவே செர்ன் விரைவாக்கி யந்திரத்தின் தனித்துவத்தைக் காட்டுகிறது.” என்று லிவர்பூல் பல்கலைக் கழக ஆய்வாளர், டாக்டர் தாரா ஸியர்ஸ் கூறினார். செர்ன் விரைவாக்கியின் சக்தியும், இயக்கமும் தயாராகி “ஹிக்ஸ் போஸான்” நுண்துகளைக் கண்டுபிடிக்க 2011 ஆண்டு ஆரம்ப மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டர் வைட்பர்க் கூறுகிறார்.

    அணுகருவுக்குள் இருக்கும் புரோட்டான் மிகவும் சிக்கலான துகள். அதனுள் குவார்க்குகள், குளுவான் உள்ளன. இந்த வார முடிவில் விஞ்ஞானிகள் முதன்முதல் எதிர் எதிர் வரும் முத்திரட்சி உள்ள இரு புரோட்டான் கற்றைகளை (Two Beams Consisting Three Bunches of Protons) செர்ன் விரைவாக்கியில் மோத விட்டார். முதல் முறையாக செர்ன் படைப்புத் திறனில் இயங்கி இயல் அடர்த்தியில் (Normal Intensity) இம்மூன்று திரட்சிகளும் இருந்தன. ஆதாவது ஒவ்வொரு திரட்சியிலும் 100 பில்லியன் புரோட்டான்கள் உச்ச அளவில் ஏவப்பட்டன.


    Fig 1D Comparative Size of Particles

    இப்போது பாதி அளவுத் தீவிரத் திறனில்தான் (7 TeV) செர்ன் இயங்கியுள்ளது. ஒவ்வொரு கற்றையும் முழுத் திறமையில் (14 TeV) இயங்க 2014 ஆண்டில்தான் முடிவான சோதனையாக இருக்கும். முடிவான குறிக்கோள் திட்டம் 2808 திரட்சிகளை ஒரு கற்றைக்குள் உண்டாக்குவது. அது 2016 ஆண்டில்தான் நிகழும் என்று நம்பப் படுகிறது. புரோட்டான்கள் ஓடிச் சென்று மோதிக் கொள்ளும் வட்ட வளைக் குழலில் நான்கு பெரிய சோதனை நிகழ்த்திப் பிரபஞ்ச மர்மத்தின் புதிய பௌதிகப் படிக்க நான்கு கருவிகள் [Compact Muon Solenoid (CMS), (Atlas, Alice, LHCb] அமைக்கப் பட்டுள்ளன. இந்தக் கருவிகளின் விளைவுகளை ஆராயும் தலைமைத் திட்ட விஞ்ஞானி : டாக்டர் கொலூட்வின். கற்றையில் திரட்சிகள் கூடும் போது விஞ்ஞானிகள் ஒரு சிறு கருந்துளை (Mini Black Hole) தோன்று வதை எதிர்பார்க்க லாம் !  “செர்ன் விரைவாக்கியில் கருந்துளைகளை நாங்கள் படைக்க முடிந்தால் அது பேருவகை அளிக்கும் எங்களுக்கு”, என்று பௌதிகப் பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார்.

    ஐரோப்பாவில் உலகப் பெரும் செர்ன் விரைவாக்கியிலும் புரோட்டான் கணைகளை ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் மோத விட்டு விஞ்ஞானிகள் இதே “ஹிக்ஸ் போஸானைக்” காணத்தான் துடித்துக் கொண்டிருக்கிறார்.  ஃபெர்மி ஆய்வக விஞ்ஞானிகள் “எளிய நிறை ஹிக்ஸ் போஸானை” முதன்முதலில் கண்டு விட்டார் என்னும் செய்தி செர்ன் விஞ்ஞானிகளுக்கு ஓர் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் !

    ஆனால் ஃபெர்மி ஆய்வகம் தனது புதுக் கண்டுபிடிப்புப் பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பும் இதுவரைச் செய்ய வில்லை.  எளிய நிறை ஹிக்ஸ் போஸானை ஃபெர்மி விஞ்ஞானிகள் டெவடிரான் விரைவாக்கிச் சோதனையில் உற்பத்தி செய்ததை மட்டும் மறுக்கவில்லை.  ஆனால் ஹிக்ஸ் போஸான் உற்பத்திச் சோதனையில் தாமொரு முன்னேற்றைப் புரிந்துள்ளதாக அறிவித்தார்.  அதாவது 50-50 வாய்ப்பு முறையில் இந்த ஆண்டு (2010) முடிவுக்குள் அல்லது 2011 ஆண்டு துவக்கத்துக்குள் ஹிக்ஸ் போஸான் இருப்பை அழுத்தமாக வெளியிடத் தகுந்த அளவு தகவல் சான்றுகளோடு வருவோம் என்று அறிவித்தனர்.


    ஃபெர்மி ஆய்வக டெவடிரான் உடைப்பியின் மகத்தான சாதனைகள்

    1983 இல் சிகாகோ அருகில் (Batavia, Illinois, USA) 120 மில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப் பட்ட டெவடிரான் விரைவாக்கி (1994-1999) இல் 290 மில்லியன் டாலர் நிதிச் செலவில் அடுத்தடுத்து மேம்படுத்தப் பட்டது.  1995 இல் அதன் நிபுணர்கள் (CDF & DZero Experiment Collaborators) முதன்முதல் “மேல் குவார்க்” (Top Quark) அடிப்படைத் துகளை உற்பத்தி செய்து கண்டுபிடித்தார் !  அடுத்து 2007 இல் மேல் குவார்க்கின் நிறையை 1% துல்லிமத்தில் அளந்தார்.  2006 ஆம் ஆண்டில் இருவித “சிக்மா பரியானைக்” (Two Types of Sigma Baryon) கண்டுபிடித்தார்.  2007 ஆம் ஆண்டில் செய்த சோதனையில் (DZero Experiment) புதுவித பரியான் (Xi Baryon) ஒன்றைக் கண்டுபிடித்தார்.  2008 இல் அதே சோதனையில் மீண்டும் வேறு வித பாரியானைக் (Double Strange Omega Baryon) கண்டுபிடித்தார்.

    அமெரிக்க எரிசக்தித் துறையகத்தைச் சேர்ந்த ஃபெர்மி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் (US Dept of Energy, Fermilab Scientists) செய்த இரண்டு புரோட்டான் உடைப்புச் சோதனைகளில் (CDF & DZero Collider Experiments) கீழ்க்காணும் விளைவுகள் நிகழ்ந்தன.  இந்தச் சோதனைகள் 158 முதல் 175 GeV/C2 வரை நிறையுள்ள ஹிக்ஸ் போஸான் துகள்களைத் தவிர்த்து விட்டன.  துகள் பௌதிக நிலவர மாதிரிப்படி (Standard Model of Particle Physics) ஹிக்ஸ் போஸானின் நிறை 114 முதல் 185 GeV/C2 முடிய இடைப்பட்டு இருக்க வேண்டும்.  (ஒப்பீடாகச் சொல்லப் போனால் நிறை 100 GeV/C2 அளவு என்பது 107 மடங்கு புரோட்டான் நிறைக்குச் சமமாகும்).  இந்த விஞ்ஞான விளைவுகள் யாவும் ஜூலை 22-28, 2010 தேதிகளில் பாரிசில் நடந்த அகில நாட்டு உயர் சக்திப் பௌதிகப் பேரவையில் (International Conference on High Energy Physics (ICHEP-2010) விவாதிக்கப் பட்டன.  அப்போது இத்தாலிய விஞ்ஞானி எழுதிய ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு வதந்தி பொய்யானது என்று கூறப்பட்டது !

     

    வியக்கத் தக்க முறையில் பூமியில் ஏற்படும் பூகம்பங்களை உளவி எச்சரிக்கை செய்துள்ளது டெவடிரான் விரைவாக்கி !  அதனுடைய அடித்தளக் காந்தங்கள் மிக்கக் கூர்மையானவை.  ஆயிரக் கணக்கான மைல் தூரத்தில் மிகச் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதை உணர்ந்தறியும் வல்லமை படைத்தவை டெவடிரான் மின் காந்தங்கள் !  2004 இல் இந்து மாக்கடலில் எழுந்த அசுரப் பூகம்பத்தையும், சுனாமியையும் உளவி அறிந்தது.  மறுபடியும் சுமாத்ராவில் 2005 இல் நேர்ந்த கடல் பூகம்பம், 2007 இல் நியூ ஸீலாந்தில் கிஸ்போர்ன் நிலநடுக்கம் (Gisborne Earthquake), 2010 ஹெய்தி பூகம்பம், 2010 சில்லியின் நிலநடுக்கம் ஆகியவற்றை டெவடிரான் கண்டுபிடித்து அறிவித்தது.

     

    ஃபெர்மி ஆய்வகத்தின் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு

    இத்தாலிய விஞ்ஞானி பேராசிரியர் தாமஸோ தோரிகோ சொல்லிய தகவலை நம்பினால் அது “முச்சிக்மா முத்திரையாக” (Three Sigma Signature) எடுத்துக் கொள்ளப்படலாம்.  அதன் அர்த்தம் என்ன வென்றால் புள்ளி விபரப்படி 99.7% அந்தக் கூற்று மெய்யானது என்பதே.  உலகக் கண்கள் ஐரோப்பாவின் செர்ன் பரமாணு உடைப்பி மீது விழுவதால், அதுதான் ஹிக்ஸ் போஸானை முதலில் கண்டுபிடிக்கும் என்னும் கருத்து இப்போது மாறி விட்டது.  கடந்த 27 ஆண்டு களாக (1983-2010) அடுத்தடுத்து சிகாகோ டெவடிரான் செம்மையாக்கப் பட்டு மேன்மைப் படுத்தப் பட்டுள்ளது.  ஃபெர்மி ஆய்வகம் டெவடிரான் விரைவாக்கி மூலம் ஒரு குவார்க்கையும், நான்கு வித பாரியான்களை இதுவரை உற்பத்தி செய்து நிரூபித்துள்ளது.  எளிய ஹிக்ஸ் போஸான் ஒன்றை முதன் முதலில் உற்பத்தி செய்து காட்டி, ஃபெர்மி ஆய்வகம் அற்புதக் “கடவுள் துகளைக்” காணும் காலம் நெருங்கியது என்பதே இந்த இத்தாலிய விஞ்ஞானியின் தகவலுக்கு உறுதி அளிக்கிறது.  ஹிக்ஸ் போஸான் துகளே கடைசித் துகளாக துகள் பௌதிகத்தின் நிலவர மாடலாகக் (The Standard Model of Particle Physics) கருதப் படுகிறது. கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டதால், நிலவர மாடல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அப்படி இல்லாவிட்டால் பழைய துகள் நியதிகள் மீளாய்வு செய்யப் படவேண்டும்.  2012 ஜுலை 6 ஆம் தேதி செர்ன் விரைவாக்கி துகள் விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸான் போன்ற ஒரு கனத்துகளைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.    இது ஆரம்ப நிலை விளைவின் முடிவு மட்டுமே.  இன்னும் ஏராளமான செர்ன் விரைவாக்கியின் சோதனை விளைவுகள் ஆராயப் பட வேண்டும்.   கண்டுபிடித்த துவக்க நிலை கடவுள் துகளின் தடத்தை வைத்து, அது ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்று  துகள் விஞ்ஞானிகள் அழுத்தமாக நம்புகிறார்.

     

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: Fermilab, Chicago, USA, CERN, Geneva Websites.,

    1 CERN Large Hadron Collider – Particle Physics – A Giant Takes on Physics’ Biggest Question By : The New York Times (May 15, 2007)
    2 CERN Fires up the New Atom Smasher to Near Big Bang By : Alexander Higgins [Sep 7, 2008]
    3 World’s Largest Atom Smasher (CERN) Completion [March 26, 2008]
    4. Time Magazine Report – The Moment [September 10, 2008] Geneva [Sep 22, 2008]
    5 CERN Atom Smasher – Latest Wikipedia Report.
    6 BBC News What Happened to the Big Bang Machine (Sep 20, 2008)
    7 BBC News LHC Gets Colder than Deep Space By Paul Rincon (Oct 16, 2009)
    8 BBC News Particle Beams Injected into LHC (Oct 26, 2009)
    9 Rebirth of the LHC : The Search for the God Particle Resumes (Nov 2, 2009)
    10 Second Chance of Large Hadron Collider To Deliver Universe’s Secrets By : Robin McKie, Geneva (Nov 1, 2009)
    11. http://jayabarathan.wordpress.com/2008/09/18/cern-atom-smasher/(CERN Article-1)
    12 http://jayabarathan.wordpress.com/2008/09/26/cern-atom-smasher-2/(CERN Article-2)
    13 http://jayabarathan.wordpress.com/2009/11/05/cern-worlds-greatest-atom-smasher/ (CERN Article-3)
    14 http://jayabarathan.wordpress.com/2010/03/25/cern-atom-smasher-4/(CERN Article-4)
    14(a) http://jayabarathan.wordpress.com/2010/04/02/cern-atom-smasher-5/ (CERN Article-5)
    14(b) http://jayabarathan.wordpress.com/2010/04/09/cern-atom-smasher-6/ (CERN Article-6)
    14(c) http://jayabarathan.wordpress.com/2010/07/03/cern-atom-smasher-7/ (What is Happening in CERN ?)
    15 BBC News LHC High Energy Results Published By Jason Palmer (Feb 9, 2010)
    16 BBC News : LHC Smashes Energy Record Again (March 19, 2010)
    17 BBC News : God Particle Hunt Set to Start By Paul Rincon (March 23, 2010)
    18 http://en.wikipedia.org/wiki/Large_Hadron_Collider (CERN Atom Smasher) (25 March 2010)
    19 BBC News : The Science of LHC By Paul Ricncon (Nov 20, 2009)
    20 BBC News : Collider Sees High-Energy Success (March 30, 2010)
    21 Large Hydron Atom Smasher Reaches Near Speed of Light (Daily Galaxy) March 31, 2010
    22 Deep Thought – The Large Hadron Collider Could Prove the Existence of a Parallel Universe (Daily Galaxy 2009 Top Story) Jan 6, 2010
    23 Atom Smasher Will Keep Revealing “The Beginning” (CTV News, Canada) March 30, 2010
    24. Why the Large Hadron Collider (LHC) ? A Few Unanswered Questions
    25. What Will the Large Hadron Collider (LHC) Reveal ? By : Steve Giddings Los Angeles Times(January 7, 2010)
    26. Will the LHC Solve the Mystery of the Great Attractor ? By Casey Kazan, Daily Galaxy (Jan 11, 2010)
    27 ABC News – Atom Smasher Closer to Big Bang By : Rachael Brown (March 31, 2010)
    28 BBC News : LHC Particle Search Nearing By : Paul Rincon (May 17, 2010)
    29 Space Daily – World’s Biggest Atom Smasher Gains Pace : CERN By : Staff Writers (June 28, 2010)
    30 BBC News : LHC Smashes Beam Collision Record By Katia Moskvitch (June 28, 2010)
    31 Telegraph, New Scientist – The Tevatron Accelerator – Competition with Large Hadron Collider Heats Up By Clay Dillow (July 12, 2010)
    32 Fermilab Web / Space Daily Fermilab Experiments Narrow Allowed Mass Range for Higgs Boson (July 26, 2010)

    32 (a) http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=41003121&format=html  (Satyendranath Bose)

    33. Wikipedia The Tevatron Collider, Fermilab (August 3, 2010)
    34 New Scientist Magazine ” Who Will Find the God Particle First ?” (Will an old Faithful Find the Higgs ?) By : Rachel Coutland (July 24, 2010)
    35.  http://jayabarathan.wordpress.com/2010/07/03/cern-atom-smasher-7/ (July 3, 2010)
    36.  http://jayabarathan.wordpress.com/2010/08/07/god-particle-rumour/ (August 7, 2010)
    37  Daily Galaxy :  News of the Century  ?  CERN to Announce its Findings on Higgs Boson Tomorrow (July 3, 2012)
    38.  Time & Space : CERN Experiments Observe Particle Consistent with Long-Sought Higgs Boson (July 5, 2012)
    39. Time & Space :  A New particle has been Discovered- Chances are, it is the Higgs Boson(July 5, 2012)
    40.  Time & Space :  Higgs Boson Hunters Declare Victory – as Significant as DNA Discovery  (July 5, 2012)

    41.  http://www.bbc.co.uk/news/science-environment-21421460 LHC switches off for two-year Maitenance  [February 14, 2013]

    42. http://www.bbc.co.uk/news/science-environment-21785205 LHC cements Higgs boson identification [Masrch 14, 2013]

    43. CERN: LHC Data Confirms Particle is “God Particle”, But the Devil is in the Details [March 14, 2013]

    44  Daily Galaxy : LHC Data confirms Higgs Boson [March 14, 2013]

    45.  http://en.wikipedia.org/wiki/Higgs_boson  [March 2013]

    46.  Daily Tech CERN: LHC Data Confirms Particle is “God Particle”, But the Devil is in the Details  [March 14, 2013]

    47.  http://rt.com/news/higgs-boson-found-confirmed-274/  [March 15, 2013]

    48.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=l6H7-GKCDBQ ]

    49.  http://www.popsci.com/article/science/indisputable-proof-new-four-quark-particle  [April 10, 2014]

    50.  http://www.haaretz.com/life/science-medicine/.premium-1.585887   [April 16, 2014]

    51. http://www.thestar.com/news/world/2014/11/19/scientists_at_atom_smasher_discover_2_new_subatomic_particles.html  [November 19, 2014] 

    52.  http://en.wikipedia.org/wiki/Large_Hadron_Collider  [November 20, 2014]

    53.  http://www.cbc.ca/news/technology/new-subatomic-particles-predicted-by-

    …

    [Message clipped]  View entire message

    Attachments area
    Preview YouTube video CERN Scientists Discover 2 New Subatomic Particles

    CERN Scientists Discover 2 New Subatomic Particles

    Preview YouTube video The Standard Model Of Particle Physics 001 : Overview

    The Standard Model Of Particle Physics 001 : Overview

    Preview YouTube video 2014 God Particle Project: Opening A Bottomless Pit to Hell Now! (Disturbing)

    2014 God Particle Project: Opening A Bottomless Pit to Hell Now! (Disturbing)

    Preview YouTube video Sadhguru on the God Particle – Higgs Boson (Part 1)

    Sadhguru on the God Particle – Higgs Boson (Part 1)
    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(131)

    – சக்தி சக்திதாசன்.

     

     

    LOECD1

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    மற்றொரு வாரத்தில் உங்களுடன் இணைவதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    இலண்டன் பி.பி.ஸி தொலைக்காட்சியில் சமீபத்தில் ” உலகில் உயிரினங்கள் ( Life on Earth ) “ எனும் ஒரு தொடர் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

    அந்நிகழ்ச்சியை பார்வையுற்ற போது என் மனதில் பல நினைவலைகள் அதிர்ந்து எழுந்தன.

    இப்பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் எத்தனையோ வகையானவை. அவை ஒவ்வொன்று வாழும் வகைகள் வேறுபட்டவை.

    இப்பூமி உருவானதாகச் சொல்லப்பட்ட காலத்திலிருந்து வாழ்ந்த உயிரினங்கள் பல அக, புற சூழல்களின் காரணத்தினால் முற்றாக அழிந்து போயின.

    வேறு பல வாழ்க்கையின் சவால்களை சந்திப்பதற்காக மாறும் சூழல்களினால் தம்மை மாற்றியமைத்துக் கொண்டுள்ளன.

    ஏன் குரங்கு வடிவிலிருந்து மனித வடிவிற்கு மாற்றம் காணக் காரணம் கூட காலநிலை மாற்றங்களினால் ஏற்பட்ட சவால்கள் என்றுகூடக் கூறப்படுகின்றன..

    இந்நிகழ்ச்சியில் உயிரினங்கள் சிலவற்றின் வாழ்க்கை அணுகுமுறைகளை அவை பிறந்தது முதல் அவைகளின் பருவமாற்றங்களினூடக நிகழும் மாற்றங்களைக் கையாளும் வகையில் ஆராய்ந்திருக்கிறார்கள்.

    இவற்றில் சிலவற்றை ஒரு பேச்சுக்காக எடுத்துப் பார்ப்போம்.

    monkeysபால பருவத்திலிருந்து வாலிபப் பருவத்தையடைந்த “சிம்பன்ஸி” எனும் வகையைச் சேர்ந்த குரங்கு ஒன்றைப் பார்க்கிறார்கள். பால பருவ குரங்குகளுடன் இணைந்து விளையாடுவதைத் தவிர்த்த இக்குரங்கு அக்குரங்குக் கூட்டத்தின் முன்னனித் தலைமைக் குரங்குகளுடன் தன்னை இணைத்துக் கொள்வதற்காக முயன்று தோல்வியடைந்து பின் வாங்குகிறது.

    இதனுடைய இம்முயற்சி எதற்காக? அக்குரங்குக் கூட்டத்தில் தன்னுடைய அந்தஸ்தை முன்னேற்றிக் கொள்வதற்காகன முயற்சி என்கிறார்கள்.

    அந்தஸ்தை முன்னேற்றிக் கொள்வது ஒன்றே உணவு பெறுவதில் முக்கியத்துவதையும், பெண் குரங்குகளுடனான உறவுகளில் முக்கியத்துவம் பெறுவதற்காகவும் என்று சொல்லப்படுகிறது.

    antஅடுத்து அமெரிக்காவில் அரிசோனா எனும் மாநிலத்தில் உள்ள ஒரு எறும்புச் சமுதாயத்தைக் காட்டுகிறார்கள். மழை பெய்தவுடன் ஈரமான நிலத்தில் தனக்கு ஒரு புற்று ஏற்படுத்துவதற்காக இராணி எறும்பு தரையைக் கிண்டத் தொடங்குகிறது. அதனுடன் சேர்ந்து இன்னும் ஓர் ஏழு இராணி எறும்புகள் அக்குழியைத் தோண்டுகின்றன.

    அமைக்கப்பட்ட புற்றினுள் இந்த எட்டு இராணி எறும்புகளும் முட்டையிட்டு பல தொழிலாளி எறும்புகளைத் தோற்றுவிக்கின்றன.

    அதன் பின்பு நடப்பதுதான் விசித்திரம்! அரசியலோ?

    அப்புற்றினுள் ஒரேயொரு இராணி எறும்புதான் அதிகாரம் செய்ய முடியும் விளைவு ஏழு இராணி எறும்புகள் அவைகளால் உருவாக்கப்பட்ட தொழிலாளி எறும்புகளினாலேயே அக்குவேறு ஆணிவேறாகப் பிரிக்கப்பட்டு வளரும் தலைமுறைக்கு உணவாக்கப்படுகின்றன.

    மிஞ்சிய அந்த ஒரு இராணி அவ்வெறும்புக் குழு அனைத்துக்கும் அதிகாரம் செய்யும் தலைமைத்துவத்தைப் பெறுகிறது .

    தண்ணீரிலே நீந்தும் ஒருவகை மீன் தனக்குத் தேவையான உணவை தன் வாயிலிருந்து சீறியடிக்கும் நீர்க்கற்றையின் மூலம் இலைகளில் ஒளிந்திருக்கும் பூச்சியை அடித்து நீரினுள் வீழ்த்தி அதனை உட்கொள்கின்றது.

    அதனைப் பார்த்துத் தானும் பழகிக் கொள்ளும் மீன்குஞ்சு கஷ்டப்பட்டு அடித்து வீழ்த்திய பூச்சியை அருகிலிருந்த பெரிய மீன் பாய்ந்து லபக்கென்று விழுங்க்கிக் கொள்கிறது. அந்தோ பாவம் அச்சிறிய மீன்!

    evolutionஇத்தகைய நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் அவைகளுக்கும் மனிதர்களாகிய நமக்கும் என்ன வேறுபாடு எனும் எண்ணம் தலைதூக்கியது.

    பகுத்தறிவு !

    ஆமாம்… அதன் மூலம் மட்டுமே நாம் நம்மை நாகரீகமாக வளர்த்துக் கொண்டு மனிதர்கள் என்று கூறித் தம்பட்டம் அடித்து அலைகின்றோம்.

    ஆனால் பகுத்தறிவற்ற இவ்வுயிரினங்களுக்கும் நமக்கும் அப்படி பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

    உடைகள் அணிவதிலும், நம்மை அறிவாளிகளாகக் காட்டிக் கொள்வதிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம் … ஆனால் அடிப்படையான தேவைகளின் உணர்வுகள் மாறுபடவில்லை.

    மனிதர்களும் அதே தேவைகளுக்குகாகத்தான் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கிறோம்..

    ஆனால் தமது வயிற்றுப்பசியை போக்கிக் கொள்ளவும், தமது சந்ததியைப் பெருக்கவுமே தமது உழைப்பை ஈந்திடும் விலங்குகள் அத்தோடு தமது இலக்குகளை நிறுத்திக் கொண்டு விடுகின்றன.

    ஆனால் மனிதர்களாகிய நாமோ நமது தேவைகளுக்கு மீறி சேர்க்கத் தலைப்பட்டு பேராசையினால் உந்தப்பட்டு அல்லல்படுகின்றோம்.

    மதம், இனம், மொழி, நிறம் எனப் பல்வேறு வேறுபாடுகளுக்கு முதலிடம் கொடுத்து நம்மைப் போன்ற அடுத்த மனிதர்களை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

    நாமும் வாழ்ந்து அடுத்தவரும் வாழ்தற்கான ஆதாரங்கள் பலவிருந்தும், அந்த அடுத்தவருக்குக் கிடைக்க வேண்டியதையும் நாமே அமுக்கிக் கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தினால் நமது மனவளர்ச்சியை நாமே குந்தகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    ஓ ….இந்தச் குட்டைக்குள் ஊறும் ஒரு மட்டைதான் நானுமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவிக்கு நன்றி: http://www.trunkrecords.com/turntable/life_on_earth.shtml & BBC

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    கண்ணன் உள்ளம் கவர் கள்வன் Thief Of HEARTS ….

    crazy

    “மத்யானம் ஆய்ச்சியர் மல்லாந்த வேளையில்
    தத்யோனம் வெண்ணை திருடுமிவன் -உத்தியோகம்,
    இன்னாரென்(று) இல்லாது இல்லம் புகுந்தெடுப்பான்;
    மன்னார்AND COCHOR மனது”….கிரேசி மோகன் ….

    Share
  • ஏன் இப்படி?

    எம். ஜெயராமசர்மா

    “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி” என்று பெருமை பேசுபவர்கள் தமிழர்களாகிய நாங்கள் தான். தமிழர் வாழ்வு பெருமையுடையது. தமிழர் நாகரிகம் உயர்ந்தது. கலை கலாச்சாரம் ஓங்கி உலகு அளந்தது. “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று சொல்லி தமிழன் என்றாலே துணிவும் அஞ்சாமையும் கொண்டவன் என்று பெருமை பேசுபவர்களும் நாங்களேதான். உண்மைதான்! எங்கு சென்றாலும் தன்னை அடையாளப்படுத்தத் தமிழன் தவறுவதில்லை என்பதும் வெட்ட வெளிச்சமானதாகும்.

    உலகம் முழுவதும் தமிழன் பரந்துபட்டு வாழ்கின்றான். பலவித முயற்சிகளிலும் ஈடுபடுகின்றான். தமிழன் கைபடாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். படிப்பாகட்டும், நடிப்பாகட்டும், வியாபாரமாகட்டும், யாவற்றிலும் தனது பேராற்றலை வெளிப்படுத்தியே தமிழன் நிற்கின்றான். இதனைப் பார்க்கையில் தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும் பெருமையில் பூரித்தே நிற்பான்.

    தமிழன் சென்ற இடமெல்லாம் கோவில்களைக் கட்டுவான். சங்கங்கள் அமைக்கத் தவறவே மாட்டான். பத்திரிகைகள் என்றால் தமிழனுக்கு உயிர் மூச்சு. கலைகளை வளர்ப்பதில் போட்டா போட்டி போடுவான். மேடைகளில் ஏறிவிட்டால் கருத்துக்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. பேனாவை எடுத்து விட்டால் கம்பனும் காளிதாசனும் கூடப் பிச்சை வாங்கவேண்டும். அந்த அளவுக்கு எழுதியே குவித்து விடுவான். பண்டிதமணி கணபதிப்பிள்ளை கம்பனை “அபரபிரமன்” என்று வியந்து கூறியிருப்பார். அவரது அந்தச் சொற்பிரயோகம் தமிழனுக்கே உரியதென்றால் அது மிகையாகாது.

    இப்படியெல்லாம் பலவித ஆற்றல் கொண்ட தமிழனிடம் மிகக் கேவலமான ஒரு குணமும் குடிகொண்டு விட்டது. அதுதான் அடிமை மனப்பான்மை. தன் இனத்திடம் மிகப் பெருமை கொண்ட பொக்கிஷங்கள் இருக்கின்றனவே என்று எண்ணுவதை விட்டு விட்டு தன்னையும் தனது இனத்தையும் தாழ்த்திக்கொள்ள நினைப்பதையிட்டுத்தான் பெரும் வேதனையாக இருக்கின்றது.

    உலகின் நனிசிறந்த மொழிகளிலே தமிழ் மொழியும் ஒன்று என்று அறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் உலகமொழிகளை வகைப்படுத்திய பொழுது “தமிழைப் பக்திக்குரிய மொழி” என்று சுட்டிக்காட்டினார். பக்தி இலக்கியம் தமிழ் மொழியில் உள்ள அளவு வேறு எந்த மொழிகளிலும் இல்லை என்பது தனிநாயகம் அடிகளாரின் கருத்துமட்டுமல்ல ஏனைய மொழியியல் அறிஞர்களின் கருத்து என்பதும் சுட்டிக்காட்டத் தக்கதாகும்.

    “பக்தி” என்பதில் அன்பும் அமைதியும் சாந்தமும் கனிவும் மென்மையும்  இரக்கமும் பொறுமையும் நிறைந்திருக்கின்றது என்று கொள்ளலாம். இதனால் தான் பாட்டுக்கொருபுலவன் என்று பாராட்டப்பட்ட பாரதியும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்போலும் என எண்ணக்கிடக்கின்றது.

    தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெள்ளை இனத்தவர்கள் பலர் தமிழின் இனிமை கருதி அதனைக் கற்றதோடு நில்லாது – தமிழ் உள்ளம் கொண்டவர்களாக மாறியதையும் தமிழ் வரலாற்றில் அறிகின்றோம். ஜோஸப் பெஸ்க்கி என்பவர் தமது தீராத தமிழார்வத்தால் வீரமாமுனவராகி இன்பத்தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றதோடு நில்லாமல் பல அரிய படைப்புக்களையும் தமிழில் படைத்தார்.

    இவரால் ஆக்கப்பட்ட ‘சதுரகராதி’ பிற்காலத்தில் எழுந்த பேரகராதிகளுக்கெல்லாம் முன்னோடியாக, அடிப்படையாக அமைந்ததெனலாம். கம்பனது கவிநயமும் திருத்தக்க தேவரது சுவைநயமும் நிரம்பப்பெற்றதென தமிழ் உலகம் போற்றும் “தேம்பாவணி” எனும் காவியத்தையும் இப்பெருமகனார் தமிழுக்கு அளித்துப் பெருமை சேர்த்தார்.

    “போப்பையர்” என்று போற்றப்பட்ட வணக்கத்துக்குரிய ஜீ.யூ. போப் இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாளராக விளங்கியவர். இவர் தமிழ் மேல் கொண்ட ஆராக காதலால் தமிழைக் கற்று திருவாசகத்தையும், திருக்குறளையும், யாவரும் அறியும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் மூலம் தமிழின் இனிமையையும், அதன் பெருமையையும், உலகுக்குக் காட்டிய பெருமகனாகத் திகழ்கிறார் எனலாம்.

    இவர் தனது ஆசையாக எதைக்கருதினார் தெரியுமா? “தமது கல்லறையில் தாம் ஒரு தமிழ் மாணவன்” என எழுதப்படவேண்டும் என்று தானாம். எங்கோ பிறந்து, எங்கோ படித்து வளர்ந்த ஒருவர் “தாம் தமிழனாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று சொல்லும் அளவுக்கு தமிழுணர்வு ஊறிய அந்தப் பெருமகனை நினைப்பதற்கே எமக்கெல்லாம் தகுதி உண்டா என்றே எண்ணத்தோன்றுகிறது. “நாமமது தமிழரெனக் கொண்டிங்குவாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்” எனும் எண்ணமே எழுகின்றது.

    தாமரைத் தடாகத்தில் நிரந்தரமாக வாழும் தவளைக்குத் தன்னுடன் கூடவே இருக்கும் தாமரைப்பூவின் அருமை தெரிவதில்லை. அதே வேளை எங்கேயோ தொலைவில் உள்ள காட்டிலிருக்கும் வண்டினங்கள் ஓடிவந்து தாமரைப் பூவிலுள்ள மதுவை உண்டு இன்புற்றுச் செல்லுமாம் என்றொரு பாட்டு உண்டு. இந்தப்பாட்டும் இதன் பொருளும் தமிழர்களாகிய எங்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது. தமிழர்களாகிய நாம் அந்தத் தாமரைத்தடாகத் தவளை போல இருக்கிறோம். எமது மொழி, பண்பாடு,  இவற்றின் பெருமைகளை அறியாது நிற்கின்றோம். தாமரையின் தேனை உண்ணவரும் வண்டுகளைப்போல மற்றவர்கள் எமது பெருமைகளை அறிந்து வந்து பயன் பெற்றுச் செல்கின்றனர். இதனைப் பார்த்தாவது நாம் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டாமா? சற்றுச் சிந்திப்போமா?

    பொது இடங்களிலோ அல்லது வேலை செய்யும் இடங்களிலோ தமிழர் அல்லாத அதேவேளை ஆங்கில மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் சந்திக்கும்போது அவர்கள் தங்களது தாய் மொழியிலே பேசுவதை சாதாரணமாகக் காணமுடிகிறது. ஆனால் ஒரு தமிழன் மற்றொரு தமிழனைச் சந்திக்கும் வேளை எப்படி விளிக்கின்றான்? நமது மொழியிலா? அன்னிய மொழியிலா?

    தமிழ் மொழியில் பெயரை வைத்து அதற்காக உழைக்கப் போகின்றோம் என்று  உறுதி மொழி எடுக்கும் அமைப்பின் நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது பயன்படுத்தப்படுவது தமிழ் மொழியா? அன்னிய மொழியா? ஒரு அமைப்பின் பெயர் “தமிழ் வளர்ச்சிக் கழகம்”. அந்த அமைப்பின் பொதுக்கூட்டம் நடை பெற்றது. புதிய அங்கத்தவர்களுக்கும், புதிய உத்தியோகத்தர்களுக்கும் ஆன தெரிவு நடைபெற்றது.

    நிகழ்ச்சியை நடத்தியவர்கள் விளக்கம் அளித்து உரையாற்றியது தமிழில் அல்ல. அன்னிய மொழியான ஆங்கிலத்திலாகும். வேடிக்கை என்னவென்றால் அங்கு கூட்டத்துக்கு வந்திருந்த அனைவருமே நன்றாகத் தமிழ் பேசும் தமிழ்ப் பெருங்குடிமக்கள். நானும் அந்தக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். எனக்குத் தலை சுற்றுவது போலாகிவிட்டது. ஏன் இப்படி? இது தேவைதானா? இப்படிச்செய்வதற்கு என்ன பெயர்? அடிமை மனப்பாங்கா? அல்லது தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வதில் பெருமையா? சற்றுச் சிந்திப்போமா?

    ஒரு நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. முழுக்க முழுக்க தமிழர்கள் நிறைந்த அரங்கு. அங்கு நாட்டிய நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு முழுவதும் அன்னிய மொழியில். நடனம் ஆடியது தமிழ்ப் பெண்! நட்டுவாங்கம் தொடக்கம் பக்கவாத்தியம் வரை யாவரும் சுத்தத் தமிழர்கள்! யாருக்காக இந்த அறிவிப்பு? இப்படிச் செய்வதில் என்ன பெருமை? யாராவது எம்மைப் பாராட்டுவார்கள் என்ற எண்ணமா? அன்னிய மொழியில் பாண்டித்தியமும் எங்களுக்கு இருக்கிறது என்று கூறும் நோக்கமா? இதைத்தான் ஒரு வித மாயை எனலாமா?

    உடையை மாற்றுகிறோம். உணவை மாற்றுகிறோம். உரைப்பதை மாற்றுகிறோம். ஆனால் உணர்வை மாற்றலாமா? நாம் நம்மை எப்படித்தான் மாற்றினாலும் அன்னியரும் அவர்தம் நாகரிகமும் எம்மை அவர்களோடு ஒன்றாக்கி விடமாட்டாது. அவர்கள் எக்காலத்திலும் எங்களைத் தங்களோடு  இணைக்கவே மாட்டார்கள். எங்களை அவர்கள் எப்போதுமே ஒரு வரையறைக்குள்ளேயே வைப்பார்கள். நங்கள் எப்படிச்செய்தாலும், அவர்கள் அவர்கள்தான். நாங்கள் நாங்கள்தான். இதனை ஏன் உணர மறுக்கின்றோம்? ஏன் இப்படி ஆனோம்? வேதனையாக இருக்கிறதல்லவா? வெட்கமாகவும் இருக்கிறதல்லவா?

    மங்கலகரமான இடங்களில் பெண்களுக்கு முக்கிய இடமும் பெரு மதிப்பும் கொடுப்பது எமது மரபாகும். பூ அணிந்து நெற்றியில் பொட்டிட்டு பட்டுடுத்தி வந்தால் இலட்சுமீகரமாக இருக்கும் என்பதும் பொதுவான ஒரு கருத்தாகும்.   ஆனால் இன்று இதில் ஒருவித நவீனம் புகுந்து கொண்டது. திருமண வீடாகட் டும், பிறந்த நாள் விழாவாகட்டும், பெண்களில் பலர் தலைவிரி கோலமாக நிற்பதைச் சாதாரணமாகக் காணமுடிகிறது. கோவிலில் கூட இதுதான் நிலை ஆகி விட்டது.

    பெண்கள் தங்கள் கூந்தலை வெட்டினாலோ அல்லது விரித்து விட்டாலோ அதனை மங்கலமாகக் கருதாது அமங்கலமாகவே கருதும் வழக்கம் இருக்கிறது. கோவலன் கொலசெய்யப்பட்டதைக் கேள்வியுற்றதும் கண்ணகி “தேரா மன்னா” என்று ஆவேசம் பொங்க கண்ணீரும் கம்பலையுமாக தலைவிரி கோலத்துடன் பாண்டியன் சபையுள் புயலெனப் புகுந்தாள் எனச் சிலப்பதிகாரத்தில் காண்கின்றோம். ஆவேசம் வந்தால் தலைவிரித்து நிற்பதும், ஆற்றொணாத் துன்பம் வந்தால் தலைவிரித்து நிற்பதும் வந்தே தீரும். ஆனால் நல்ல சுப நிகழ்ச்சிகளின் பொழுது தலைவிரித்து நிற்பது தான் ஏனோ என்று விளங்கவே முடியவில்லை. இது தான் நாகரிகமா? இது தான் எமது பண்பாடா? இதுதான் எமது மரபா? அல்லது இவர்களெல்லாம் பாண்டியன் சபையில் நிற்கும் கண்ணகிகளா? சற்றுச் சிந்திப்போமா? இது எமக்குத் தேவைதானா? சிந்தித்தால் நல்லன தோன்றுமல்லவா?

    மொழியைப் பண்பாட்டை எப்படி வளர்ப்பது? முதலில் நாம் அதன் அருமையைப் பெருமையை உணரவேண்டும். அப்பொழுதுதான் எமது வருங்காலச் சந்ததியினருக்கு அதனைக் கொடுக்க முடியும்.

    உலகில் நாகரிகங்கள் பல. அவற்றில் பலவித முறைகள் காணப்படுகின்றன. அவரவர்களுக்கு அவரவர் பழக்கவழக்கம் முக்கியமானதாகும். அதனை நாம் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. அதே வேளை எங்களுக்கான பண்பாடுகளையும் நாங்கள் மறந்தும் விடக்கூடாது. அப்படி மறந்தோமானால் தமிழனின் அடையாளம் தொலைந்து கூடப் போகலாம் அல்லவா? எனவே எங்கள் அன்னையை அணைத்தபடி இருக்க வேண்டும்.

    எங்கள் பிள்ளைகளுக்குத் தமிழே தெரியாது! அவனுக்கு வேட்டி சால்வை பற்றி ஒன்றுமே புரியாது! கூந்தல் நீளமாய் இருப்பது எனது மகளுக்குப் பிடிக்காது! பொட்டு வைப்பது புடவை கட்டுவது நாகரிகம் இல்லை என்று அவள் நினைக்கிறாள்! அம்மா, அப்பா, என்று அழைப்பதைவிட மம்மி.. டாடி என்று அழைப்பதில்தான் அவர்களுக்கு பேரானந்தம். இப்படி தங்கள் பிள்ளைகள் நினைக்கிறார்கள், சொல்லுகிறார்கள், என்பதே தற்போது பல தமிழ்ப் பெற்றாருக்கு பெரு மகிழ்ச்சியும் உள்ளுக்குள் ஒரு வித பெருமையும்.

    நீ பிறந்தது தமிழ் மண்ணில்! நீ குடித்தது தமிழ்த்தாயின் பால்! உன் உடல் பூராவும் ஓடுவது தமிழ்தான். ஆனால் உன் உணர்வில் மட்டும் ஏன் தடுமாற்றம்? தாய் மொழியில் கூடப் பேசுவது வீட்டில் தரக்குறைவு என்று எண்ணுவதனால் தான் பிள்ளைகளும் தாய் மொழியைத் தவிர்க்கின்றனர்.

    அன்னிய மோகத்தில் நீ இருந்தால் உன் கீழ்வருபவர்கள் எப்படி தாய் மொழியைப் பேணுவார்கள்? உனது தாய் மொழியைப் பேசமுடியாத உனது பிள்ளைகளால் உனக்குப் பெருமை வருமா? உன நாகரிகம் அறியாப் பிள்ளைகளால் உனக்கு என்ன பயன்? அன்னிய மொழிகள் அனைத்தையும் நன்றாகப் படியுங்கள் உங்களின் ஆற்றலை வெளிப்படுத்துங்கள். ஆனால் அன்னை மொழியை, பண்பாட்டை, கலாசாரத்தை மட்டும் தூக்கி எறிந்து விடாதீர்கள்.

    மாறுவோமா? கட்டாயம் மாற்றம் வேண்டும்! எங்களின் அடையாளங்களைத் தொலைத்து விடுவதில் என்ன பெருமை இருக்கிறது? ஏன் இப்படி ஆகினோம்? சற்றுச் சிந்திப்போமா?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy
    சித்திரம் பேசுதுகே சவ்உன் கரங்களால்,
    இத்திறன் வாய்த்தது எங்கனம், -முத்திரை
    மோதிரம் போடவரார், யாதவர் யானையில்,
    போதமர்மா தோடு பராக்’’….கிரேசி மோகன்….

    போதமர் மாது-மலரில் அமரும் அலர்மேல் மஹாலக்‌ஷ்மி

    Share
  • நரபலி நர்த்தகி ஸாலமி -2

    – சி. ஜெயபாரதன்.

     

    narabali narthagi

    நரபலி நர்த்தகி ஸாலமி – 2

     

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=VJi8xd38zwE
    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=IyREn1-mCec

    (ஓரங்க நாடகம்)
    (Based on Oscar Wilde’s Play Salome)
    (1854-1900)
    சி. ஜெயபாரதன், கனடா

    காட்சி -1 பாகம் -2

    ‘கலைத்துவப் படைப்புகளில் ஒழுக்க நூல், ஒழுக்கம் தவறிய நூல் என்பது கிடையாது! நூல் முறையாக எழுதப் பட்டது அல்லது முறையற்று எழுதப் பட்டது என்றுதான் குறிப்பிடப் படும். அவ்வளவுதான். கலைஞன் தான் பின்பற்றும் நெறி வாழ்க்கை எனப்படுவது அவனைச் சார்ந்து தனித்துவம் கொண்டது. ஆனால் கலையின் நெறிமுறை குறைபாடான ஓர் ஊடகத்தின் மூலம் பூரணத்துவப் பயன்பாட்டைப் பெற எதிர்பார்க்கிறது! எந்தக் கலைஞனுக்கும் நெறித்துவம் மீது இரக்கம் கிடையாது. கலைஞனிடம் உள்ள ஒழுக்கவியல் பரிவு மன்னிக்க முடியாத ஓர் எழுத்து நடைப் பண்பாடு! கலைஞன் எவனும் மனக் கோளாறுடன் எப்போதும் இருப்ப தில்லை! எதையும் அவன் தனது மொழியில் படைத்துக் காட்ட முடிகிறது. சிந்தனையும், மொழியும் கலைஞனின் இரண்டு கலையாக்கக் கருவிகள்.

    ஆஸ்கர் வைல்டு, நாவல் முன்னுரை (The Picture of Dorian Gray)

    image1

    ஏரோத் மன்னர் முன் புனித நீராட்டி

    கலைப் படைப்புக்கு நற்பண்பும், துர்க்குணமும் கலைஞனின் இருகைச் சாதனங்கள். கலை வடிவ ஆக்கங்களை ஆழ்ந்து நோக்கினால், எல்லாத விதக் கலைகளும் ஓரிசை ஞானியின் கலைத்துவப் படைப்புகளை ஒத்தவையே. கலைத்துவம் உண்டாக்கும் உணர்ச்சியை நோக்கினால், அது நடிகனின் நடிப்புத் திறனைப் போன்றதுவே! அனைத்துக் கலைகளும் தோற்றத்தில் பளிச்செனக் கவரும் வெளிப்பகட்டுச் சின்னங் களே! அவற்றின் அடித்தளத்தில் மூழ்கி ஆய்ந்திடுவோர் ஆபத்தில் சிக்கிக் கொள்வார். சின்னங்களை மட்டும் படித்து அறிபவரும் விபத்தில் மாட்டிக் கொள்வர்! கலைத்துவப் படைப்பு ஒன்றின் மீது பலவித முரண்பாடான கருத்துகள் எழுந்து எறியப் பட்டால் அந்தப் படைப்பு புதிதானது, சிக்கலானது, முக்கியமானது என்று குறிப்பிடலாம்! கலைத்துவம் காட்டுவது வாழ்க்கை யன்று; அது காண்பவர் பிம்பத்தைக் காட்டும் காட்சிக் கண்ணாடி!

    ஆஸ்கர் வைல்டு, நாவல் முன்னுரை (The Picture of Dorian Gray)

    image2
    Princess Salome

    பாவங்களை விலக்கிப் புனித நீராடுவீர்!

    தேவன் உமது பாவத்தை மன்னிப்பார்!

    தயாரித்து வைப்பீர், பிரபுவின் பாதம்பட!

    யாரோ ஒருவர் சாலையில் முழக்குவார்!

    நேராக்குவீர் பயணத்துக் கேற்ற பாதைகளை!

    நிரப்புவீர் பள்ளத்தை! தணிப்பீர் மேடுகளை!

    நேர்பாதை ஆக்குவீர், நெளிந்து போனதை!

    கரடு முரடான பாதை வழுவழுப் பாகட்டும்!

    காண்பர் அனைத்து மாந்தரும்,

    கடவுளின் பாவத் தீர்ப்பு!

    புனித நீராட்டி: ஜான் போதகர்.

    +++++++++++++

    நரபலி நர்த்தகி ஸாலமி

    (ஓரங்க நாடகம்)

    காட்சி-1, பாகம்-2

    நாடக நபர்கள்:

    ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

    ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

    ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

    (ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

    ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

    ஏரோதியாஸின் சேடியர், காவலர்

    ஸிரியா வாலிபன் : ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

    சேனைக் காவலர்.

    கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

    நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

    நேரம்:

    அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

    image3

    John the Baptist Preaching the Public.

    காட்சி அமைப்பு:

    ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகை யில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரை யாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக் கிறான். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.

    **************

    [முன்பாகத் தொடர்ச்சி]

    image4

    ஸிரியா வாலிபன்: ஸாலமியை நான் கண்களால் பார்ப்பது ஏன் தவறு ? திருமணம் ஆகாத வாலிபன் நான்! ஸாலமியும் மணமாகாத ஓர் எழில் மங்கை! நானோர் ஏழை ஆயினும் எழிலரசியைப் பார்ப்பது தவறா ? அதோ திருமணம் செய்த ஏரோத் மன்னர் கொத்தித் தின்பது போல் ஸாலமியைப் பார்க்கிறாரே அது மட்டும் நியாயமா ? அதுதான் தவறு! ஸாலமி அவரது குருதியில் முளைக்காத புதல்வி! மாற்றான் ஒருவனுக்கும், அவர் மனைவிக்கும் பிறந்த வேற்றுப் புத்திரி! ஸாலமி மாற்றாம் தாய் வயிற்றுச் சகோதரனின் மகள்! ஸாலமியை விட மூன்று மடங்கு வயது மூத்த ஏரோத், தனயன் மகள் மீது வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாரே அதுதான் தவறு! நான் பார்ப்பது நேர்மையானது. அதில் ஏதும் தவறில்லை. ஸாலமியை நான் மனதார நேசிக்கிறேன்! ஏரோதின் காமக்கனல் விழிகள் அவரது உடற்பசிக்கு ஓர் இளமானைத் தேடுகின்றன!

    image5

    John the Baptist in Jail

    ஏரோதியாஸின் காவலன்: [கோபமாக] வாயை மூடடா வாலிபனே! கன்னத்தில் அறைந்து விடுவேன்! அரசர் மாளிகையில் இருந்து கொண்டு, அரசர் அளித்த விருந்தைச் சுவைத்துக் கொண்டு, அரசரையே குறை சொல்கிறாயா ? மூடனே! ஓடிப்போ! ஸாலமியை முறைகெட்டுப் பார்க்கும் உன்னிரு விழிகளைப் பிடுங்கி வீதியிலே வீசி விடுவேன்.

    முதற் காவலன்: அதோ பார்! கணவர் வைத்திருக்கும் கிண்ணத்தில் மதுவை நிரப்புகிறார், மகாராணி! நிரம்பக் குடித்து நிலை தடுமாறி நெளிகிறார் மன்னர்! மதுக்கிண்ணம் மட்டும் எப்படிக் கையிலிருந்து தவறி விழாமல் உள்ளது ?

    கப்பதோசியன்: யார் மகாராணி, தெரியவில்லையே ? தங்கக் கிரீடம் தலையில் மின்னும் மாதா ? முத்து மாலை மார்பில் ஊஞ்சலாடும் முதிய மாதா ? கூந்தலில் நீலப் பொடியைத் தூவி யிருக்கும் கோமகளா ?

    image6

    John baptizing Jesus

    முதற் காவலன்: ஆம், ஆம் அந்த கோமகள்தான் நாட்டரசி! கலிலீ நாட்டின் ஆளுநர் ஏரோதின் இரண்டாம் மனைவி! புள்ளிமான் போல் அங்குமிங்கும் துள்ளிக் கொண்டு அனைவர் விழிகளையும் ஈர்த்துக் கொண்டிருப்பவள்தான் வாலிப எழில் இளவரசி ஸாலமி! கோமகளின் ஏக புத்திரி! ஆனால் ஸாலமியின் நிஜத் தந்தை ஏரோத் மன்னரில்லை!

    இரண்டாம் காவலன்: ஏரோத் மன்னருக்கு ஒயின் என்றால் உயிர்! அவர் எத்தனை வகையான திராட்சை ரசம் சுவைப்பவர் தெரியுமா ? ஆனால் அவற்றில் அவருக்குப் பிடித்தது மூன்று ரகங்கள். ஒன்று ஸமத்ராஸ் தீவிலிருந்து வரவழைக்கப் பட்டது! அது ரோமானியத் தளபதி ஸீசர் மேலங்கியைப் போன்று பழுப்பு நிறத்தில் உள்ளது!

    கப்பதோசியன்: என்ன ஸீசரின் மேலங்கியைப் போன்ற பழுப்பு நிறமா ? நான் ஸீசரைப் பார்த்தது மில்லை! ஸீசர் மேலங்கியைப் பார்த்தது மில்லை!

    இரண்டாம் காவலன்: இரண்டாவது ஒயின் தனிச்சிறப்பாக ஸைப்பிரஸ் நகரத்திலிருந்து மன்னருக்கு வருவது. அந்த திராட்சை ரசம் தங்கத்தைப் போல் மஞ்சள் நிறத்தி லிருக்கும்.

    கப்பதோசியன்: எனக்குத் தங்கம் பிடிக்கும்! எந்த அங்கத்தை ஈந்தும் நான் தங்கத்தை வாங்கத் தயார். ஆனால் மஞ்சள் நிறம் எனக்குப் பிடிக்காது! கடவுள் ஏன் தங்கத்திற்கு மங்கிப் போகும் மஞ்சள் நிறத்தை அளித்தார் ? தங்கத்துக்கு உகந்த ஊதா வண்ணத்தைக் கடவுள் பூசி யிருக்கலாம் ?

    இரண்டாம் காவலன்: மன்னருக்குப் பிடித்த மூன்றாவது திராட்சை ரசம் ஸிசிலியிலிருந்து வருகிறது! அந்த ஒயின் குருதிபோல் செந்நிற முள்ளது! ஏன் அது சிவப்பாக இருக்கிற தென்று என்னைக் கேட்காதே! பால் வெள்ளையாக உள்ளது ஏன் என்று வினாவை எழுப்பும் ஆய்வாளன் நீ! யாருக்குத் தான் தங்கத்தின் மீது ஆசை யில்லை ?

    image7
    நியூபியன்: என் நாட்டுத் தெய்வங்கள் நரபலி கேட்பவை! மானிடக் குருதி யென்றால் நாக்கு நான்கு முழம் நீண்டு தொங்கும்! ஆண்டுக்கு இருமுறை தெய்வத்துக்கு கோர நரபலி யிடுகிறோம்! எங்கள் தெய்வங்களுக்கு ஐம்பது ஆண்கள், நூறு பெண்களை வருடந் தோறும் பலியிட்டுச் சமர்ப்பிக்கிறோம்! ஆயினும் எங்கள் தெய்வங்களுக்கு அவை போதா! தெய்வச் சீற்றத்தால் நாங்கள் கேட்பது எங்களுக்குக் கிடைப்ப தில்லை! நாங்கள் தெய்வ வெறுப்புக்கு ஆளாகி விட்டோம்!

    கப்பதோசியன்: என் தாய் நாட்டில் எந்த தெய்வமும் விட்டு வைக்கப்பட வில்லை! ரோமானியப் படையினர் எங்கள் எல்லா தெய்வங்களையும் நகரை விட்டே விரட்டி விட்டார்! கவலையே யில்லை! நான் கடவுளைத் தேடிக் கொண்டிருக் கிறேன், இப்போது! மலைப் பிரதேசங்களில் தெய்வங்கள் ஒளிந்துள்ளதாகக் கூறப் பட்டது! ஆனால் நானந்தக் கதைகளை நம்புவ தில்லை! மூன்று நாட்கள் மலைமுகப்பில் தங்கி எல்லா இடங்களிலும் தேடினேன். மனதார வேண்டி வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தேன்! தெய்வங்கள் என் கண்ணில் படவில்லை! பிறகு தெய்வங்களை நான் வாயாரத் திட்டினேன்! அப்போதும் என் வாயை மூடக் கடவுள் வரவே வில்லை! எனது நாட்டில் தெய்வம் யாவும் மறைந்து போய் விட்டன! அவை எதுவும் மனிதனின் ஊனக் கண்களுக்குக் காட்சிச் சிலையாய் வரப் போவதில்லை!

    image8

    முதல் காவலன்: யூதர் யாவரும் கண்ணிலே காண முடியாத கடவுளைத்தான் வணங்கி வருகிறார். ஒருவருக்கும் புரியாத ஒன்றின் மீதுதான் அவர் மிக்க நம்பிக்கை வைக்கிறார்!

    கப்பதோசியன்: எனக்குப் புரிய வில்லை அது. அவரது குருட்டு நம்பிக்கை நகைப்பிடமாக உள்ளது!

    [கீழே பாதாளாச் சிறையிலிருந்து புனித நீராட்டி ஜானின் (ஜொஹானன்) ஆங்காரக் குரல் அழுத்தமாகக் கேட்கிறது]

    ஜொஹானன்: [சிறைக் கதவை ஆட்டிப் பெருங் கூச்சலுடன்] கேளுங்கள் மானிடரே! நீவீர் என்னைப் புறக்கணிக்கலாம்! என் வார்த்தைகளை மீறலாம்! ஆனால் அடுத்து எனக்குப் பின்னால் அதோ வீதியில் வந்து கொண்டிருக்கிறார், பாரீர்! என்னை விடப் பராக்கிரமசாலி! பெரிய தீர்க்க தரிசி! அவரது காலணியின் கயிற்றை அவிழ்க்கக் கூடத் தகுதி யில்லாதவன், நான்! அந்தப் புனிதர் வரும் போது, புறக்கணிக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவு கிடைக்கும்! அவர்கள் அனைவரும் ரோஜா பூக்கள் போன்று மலர்ச்சி அடைவார்! குருடாய்ப் போனவருக்குக் கண்ணொளி கிடைத்துப் பகலிரவு மாறுபாடு தெரியப் போகிறது! செவிடாய்ப் போனவருக்குக் காதொலி செம்மையாய்க் கேட்கப் போகிறது! கைசூப்பும் கைக் குழந்தை தீயைக் கக்கும் அசுர முதலை [Dragon] வாழும் குகைமீது கை வைக்கத் துணியும்! புனிதப் போதகர் [ஏசு மகான்] பிடரி மயிரைப் பிடித்து சிங்கத்தை இழுக்கும் பேராற்றல் படைத்தவர்!

    image9
    இரண்டாம் காவலன்: புலம்புபவன் வாயை அடக்கு! அவன் ஒரு கிறுக்கன்! பித்துப் பிடித்தவன்! தாறு மாறாக, ஏட்டிக்குப் போட்டியாக எப்போதும் பேசுபவன்! சிறையிலே அவனைப் போட்டாலும், வாயைக் கட்ட முடிய வில்லை! அவன் குரலை ஒடுக்க அறுக்க வேண்டும் அவன் நாக்கை! அல்லது ஊசியால் தைக்க வேண்டும் அவன் வாயை!

    முதற் காவலன்: [மனம் வெகுண்டு] அப்படிச் சொல்லாதே! அவர் ஓர் உன்னதப் போதகர்! ஒரு புனித மகான்! அவர் ஆங்காரமாய்க் கத்தினாலும் அர்த்தமுள்ள பேச்சு. அவருக்கு நெஞ்சில் கனிவு, பரிவு மிகுதி! அவர் ஒரு தீர்க்க தரிசி! தினமும் அவருக்கு நான்தான் தட்டிலே உணவு தருபவன். அன்போடு எனக்குத் தவறாமல் நன்றி சொல்வார்! மனிதர் அறநெறிகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் போதும்; அறிவு வெள்ளம் கரை புரண்டு செல்லும். கேட்டுக் கொண்டே யிருக்கலாம்!

    கப்பதோசியன்: அத்தகைய புனித மனிதருக்கு ஏனப்பா சிறைவாசம் ? அவர் பேரென்ன ? ஊரென்ன ? ஏன் அவரை அந்தப் புலிக் குகையில் அடைத்துக் கத்த விட்டிருக்கிறார் ?

    முதற் காவலன்: அவரது பெயர் ஜொஹானன். போதகர் ஏசு நாதருக்குப் புனித நீராட்டிய ஜான் என்று அழைக்கப் படுகிறார். பாலை வனத்தில் எங்கோ ஒரு குகையில் வாழ்ந்து வருகிறார். ஸெக்கரையா என்னும் பாதிரியின் ஒரே மகன் அவர். தாயார் பெயர் எலிஸபெத். வாலிப வயதில் பிள்ளை யில்லாமல் முதிய வயதில் பெற்றோருக்குப் பிறந்த ஞானக் குழந்தை அவர்! பிள்ளை யில்லாத வேளையில் தெய்வ சன்னதியில் தேவதை காபிரியல் தோன்றி, பிறக்கப் போகும் குழந்தை, பின்னால் ஏசு பிரபுக்குக் கால் தடமிட முன்பாதை விரிக்கு மென்று சொன்னது! மேலும் அந்தக் குழந்தைக்கு ஜான் என்று பெயர் வைக்கும்படிக் கூறியது.

    கப்பதோசியன்: எல்லாம் ஒரு பெரிய புனை கதை போல யிருக்கிறதே! யாரிந்த ஏசு பிரபு ?

    முதற் காவலன்: நானின்னும் ஜானைப் பற்றிச் சொல்லி முடிக்க வில்லை. ஏசு பெருமானைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். ஒட்டகத் தோல் உரோமத்தில் உடுத்தி யுள்ள உடை! இடுப்பில் ஓர் பட்டை! உண்ணும் உணவு என்ன வென்று தெரியுமா ? பெரிய விட்டில் பூச்சி, காட்டுத் தேன்! அவ்வளவுதான். மனிதர் திடகாத்திரமாக இருக்கிறார்! நல்ல உயரம்! கண்களில் எப்போதும் அறிவுக்கனல் பறக்கும்! ஆனால் பார்க்கச் சற்று விகாரமாகத் தோன்றுவார்! அவரைப் பின்பற்றிச் செல்லும் சீடரோ கணக்கில் அடங்கா.

    image10குடி மயக்கத்தில் ஏரோத் மன்னன்

    கப்பதோசியன்: புனித நீராட்டி என்ன சொல்கிறார் ? ஏன் ஆங்காரமாய்க் கத்துகிறார் ?

    முதற் காவலன்: என்ன சொல்கிறார் என்பது எனக்கு முழுவதும் புரிய வில்லை. யாரையோ திட்டுகிறார்! கேட்டால் அச்சத்தை ஊட்டுகிறது! அடிவயிற்றைக் கலக்குகிறது நமக்கு! அவரது சொல்லடி யார் மீது படுகிறதோ, அவருக்கு நெஞ்சடிப்பு ஏற்பட்டு மயக்கத்தில் விழுந்து விடுவார்!

    கப்பதோசியன்: அவரை நான் காண விரும்புகிறேன். பார்க்க முடியுமா அவரை ?

    முதற் காவலன்: முடியாது! முடியவே முடியாது! ஏரோத் மன்னர் தடை போட்டிருக்கிறார், அவரை யாரும் பார்க்கக் கூடாதென்று! மீறினால் சவுக்கடி விழும், தெரியுமா ?

    image11

    (தொடரும்)

    [காட்சி-1, பாகம்-3]

    ****

    தகவல்:

    1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York

    2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)

    3. The Desire of Ages By: Ellen G. White

    4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)

    5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)

    6. The New Testament & Psalms, Placed By the Gideons.

    7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)

    ****

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 32

    –சு.கோதண்டராமன்.

    தஸ்யு – மூன்று உருவகங்கள்

    indra-on-elephant

     

    தஸ்யுக்கள் என்போர் வேற்று இனத்தவர் அல்ல என்பதை அறிந்து கொண்டோம். பின் அவர்கள் யார்? இந்திரன் முதலானோர் ஆர்யர்களுக்காக தஸ்யுக்களை அழித்தனர் என வேதம் கூறுகிறது. தஸ்யுக்கள் ஆர்யர்களுக்கு இழைத்த தீங்கு என்ன? எதற்காக அவர்கள் அழிக்கப்பட்டனர்?

    தஸ்யுக்கள் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று பார்த்தோம். அவர்களில் விருத்திரன் என்பவன் மலைப் பாம்பு வடிவத்தில் நீர் வரும் வழியில் படுத்துக் கொண்டு நீரைத் தடுத்தான். வலன் என்பவன் ஆர்யர்களுக்குச் சொந்தமான பசுக்களைச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். பெயர் குறிப்பிடப்படாத சில தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குச் சொந்தமான ஒளியைத் திருடிக் கொண்டனர். இந்திரன் விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்தார். வலனைக் கொன்று பசக்களை மீட்டார். மற்ற தஸ்யுக்களைக் கொன்று ஒளியை மீட்டார்.

    ஒளியை யார் திருட முடியும் என்று சிந்திக்கும்பொழுது இது ஒரு உருவகமாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

    சாயணர் அளிக்கும் உருவகப் பொருள்- மேகம்
    விருத்திரன் என்பது மேகங்கள். இந்திரன் தன் நண்பர்களாகிய மருத் என்னும் காற்றின் துணை கொண்டு அதை அழித்து மழை பொழிய வைக்கிறார் என்கிறார் சாயணர். கறுத்த மேகத்தினூடே மின்னல் மின்னுகிறது. இடி இடிக்கிறது. மழை பொழிகிறது. வானம் வெளி வாங்குகிறது. மறைந்து இருந்த சூரியன் வெளிப்படுகிறது. இந்திரனை மின்னல் இடியை ஆயுதமாகக் கொண்டவர் என்பதிலிருந்து இது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பசுக்கள் என்பதற்கு ஒளிக் கிரணங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் சாயணர். இதுவும் பொருத்தமே. ஏனெனில் வேதத்தில் பல இடங்களில் சூரிய கிரணங்களும் வைகறை ஒளியும் பசுக்களாக உருவகிக்கப்பட்டுள்ளன.

    ஆனால் சாயணரின் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில் ஒரு இடைஞ்சல் உள்ளது. பசுக்களை (சூரிய கிரணங்களை) மேகம் மறைத்ததை தஸ்யு திருடினான் என்று கொண்டால் சரமா என்னும் நாயின் உதவியால் அங்கிரஸ் முனிவர்கள் பசுக்களின் இருப்பிடத்தை அறிந்தனர் என்பதை எப்படிப் பொருள் கொள்வது?

    உருவகம் -2 நிலச்சரிவு
    இதோ மற்றொரு ஊகம். இது சாயணர் கூறாதது.

    மலைப் பிரதேசங்களில் நிலச் சரிவு என்பது வழக்கமான ஒன்று. சில சமயங்களில் இந்த நிலச் சரிவு நதிகளில் விழுந்து நதிகளின் போக்கைத் தடுத்து விடும் அல்லது மாற்றி விடும். 2008 மே 12இல் சீனாவில் வென்சுவான் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச் சரிவு, ஒரு நதியைத் தடுத்து அதை ஏரியாக மாற்றி விட்டது. நதியின் கீழ்புறம் வறண்டுவிட்டது. ஏரியில் மேலும் மேலும் தண்ணீர் வந்து சேரவே அது வேறு திசைகளில் உடைப்பு எடுத்துப் பெருகக் கூடிய அபாயம் ஏற்பட்டது. அப்பொழுது சீன அரசு அங்கு உடனடியாக ஆட்களை அனுப்பி, அந்த ஏரிக்கரையை குண்டு போட்டு உடைத்து நதியை முன்பு போல ஓடச் செய்தது.

    இந்திரன் செய்ததும் இது போலத்தான் இருக்க வேண்டும். விருத்திரன் என்பது நிலச் சரிவால் நதியின் போக்கில் மலைப் பாம்பு வடிவத்தில் ஏற்பட்ட ஒரு தடையாக இருக்க வேண்டும். வலிமையுள்ள அரசனான இந்திரன், தன் படையுடன் அங்கு சென்று அந்தத் தடையை அகற்றி இருக்க வேண்டும். வ்ருத்ரன் என்ற சொல்லுக்கு சூழ்ந்திருப்பது என்று பொருள். அந்தத் தடை நதியின் நீர் ஓடாதபடி சுற்றிலும் சூழ்ந்து இருந்ததால் அது அப் பெயர் பெற்றிருக்க வேண்டும்.

    அதே போல, வலன் என்றும் பணி என்றும் பெயரிடப்பட்ட ஒரு நிலச்சரிவால் அங்கிரஸ்களின் மாடுகள் இருந்த இடம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். மோப்ப நாயின் உதவியால் மறைவுக்குப் பின்புறம் மாடுகள் இருப்பதை அறிந்த அங்கிரஸ்கள் இந்திரனின் துணையால் அந்தத் தடையை வென்று மாடுகளை மீண்டும் பெற்றிருக்க வேண்டும். மண் அகற்றும் திறமை படைத்த ஒரு பெரும் படை இந்திரனிடம் இருந்திருக்க வேண்டும்.

    இந்த ஊகம் ஒரு வகையில் பொருத்தமாக இருந்தாலும், இந்திரனும் அச்வின்களும் தஸ்யுக்களைக் கொன்று ஆர்யர்களுக்கு ஜ்யோதியைக் கொடுத்தார்கள் என்று சொல்லப்படும்போது (1.117.21, 7.5.6) இந்த உருவகம் பொருந்தவில்லை. நிலச்சரிவு ஒளியை எப்படித் தடுக்க முடியும்?

    கோத்ரம்
    மூன்றாவது உருவகத்தைப் பார்க்கும் முன் வேத காலத்தில் பசு எப்படிக் கருதப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

    ரிக் வேதத்தில் சில மந்திரங்கள் எங்களுக்கு நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான பசுக்களைக் கொடு என வேண்டுகின்றன. ஓரிடத்தில் ரிஷி தனக்கு அறுபதினாயிரம் பசுக்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறார் (1.126.3).

    மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்றாலும் அவர் குறைந்தது 60 பசுக்களாவது பெற்றிருக்கக் கூடும். இத்தனை பசுக்களை வைத்துக் கொண்டு அவர் எப்படிப் பராமரித்தார் என்ற கேள்வி எழுகிறது.

    வேதத்தில், பசு மந்தைக்கும் அவை தங்கும் இடத்துக்கும் கோத்ரம் என்பது பெயர். பிற்காலத்தில் இந்தப் பெயர் ஒரு பரம்பரையைக் குறிக்கும் சொல்லாக மாறியது. ஒரு பசு மந்தையின் உடைமையாளர்கள் ஒரு கோத்ரக்காரர்கள். இவர்கள் ஒரே கிராமத்து மக்களாக இருந்ததும், அவர்களுடைய பொது உடமையாக இந்தப் பசுக்கள் கருதப்பட்டிருந்ததும் ஊகித்து அறிய முடிகிறது.

    உருவகம் 3 – பொது உடமைப் பொருட்களைத் திருடும் சமூக விரோதி
    நீரையும், ஒளியையும் போல பசுவும் எல்லோருக்கும் பொதுவான பொருளாக இருந்தது. இதன் அடிப்படையில் மூன்றாவது உருவகத்தைப் பார்ப்போம்.

    கிராமத்துக்குப் பொதுவான பசுக்களைப் பராமரிக்க, உழைக்க வலிமையுள்ள சிலர் நியமிக்கப் பட்டிருக்க வேண்டும். வலிமையற்றவர்கள் அவர்களது உழைப்பின் பலனை அனுபவிப்போராக இருந்திருப்பர். ஒவ்வொருவருக்கும் அவரவருக்குத் தேவையான பொருள் கிடைத்தது. ஒவ்வொருவரும் அவரவருக்கு முடிந்த வேலைகளைச் செய்தனர். இது ஒரு சமதர்ம சமுதாயம்.

    பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்கும் வரை இந்த சமுதாயத்தில் பிரச்சினை எதுவும் வர வாய்ப்பில்லை. தட்டுப்பாடு ஏற்படும்போது, வலிமையுள்ள சிலர் தனக்கென்று மிக அதிகமான பொருட்களைப் பதுக்கி வைப்பது இயல்பு. பொதுச் சொத்துக்களைத் தன் சொந்த நலனுக்கென்று பயன்படுத்துவோரை நாம் இன்று சமூக விரோதிகள் என்று அழைக்கிறோம்.

    வலன் என்ற பணி பசுக்களைச் சிறைப் பிடித்தான். பணி என்ற சொல்லுக்கு வணிகர் என்பது அடிப்படைப் பொருள். வணிகர் தான் கொடுத்த பொருளின் மதிப்புக்குச் சமமான வேறு பொருளை பெற்றுக் கொள்வதில் குறியாக இருக்கிறார். பொதுச் சொத்தைப் பராமரிப்பவர் தான் செய்வதைச் சேவையாகக் கருதாமல், தன் உழைப்பினால் கிடைத்த உற்பத்திப் பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்தால் அவர் பணியாக(சமூக விரோதியாக)க் கருதப்படுவார். அதனால் அவர்களை வேதம் தஸ்யு (பகைவர்) என்று கூறுகிறது.

    அக்ரது (செயல் அற்றவர்கள்), அராதி (தானம் செய்யாதவர்கள்), அச்ரத்தா (சிரத்தை இல்லாதவர்கள்), அவ்ருதா (நல்ல காரியங்களை ஊக்குவிக்காதவர்கள்) என்ற அடைமொழிகளிலிருந்து தஸ்யுக்கள் சமூக நலனுக்குப் பாதகமான குணங்களைக் கொண்டவர்கள் என்று கருத இடம் உள்ளது.

    விருத்திரன் சமுதாயத்துக்குச் சொந்தமான நீரை மக்கள் அனுபவிக்காதபடி வளைத்துப் போட்டான். வலன் பொதுச் சொத்தான பசுக்களைத் தன் நலனுக்காகச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். இந்த சமூக விரோதச் செயல்களைச் செய்யும் பகைவர்களை வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பு அந்தச் சமுதாயத்தின் தலைவனின் பொறுப்பாகிறது. பகைவர்கள் தங்களைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு செய்து கொள்வது இயல்பே. பலர் உதவியுடன், தடைகளைச் சமாளித்து இவர்களைத் தோற்கடித்ததுதான் மலையைப் பிளந்து வலனைக் கொன்று பசுக்களை மீட்டதாகவும், விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்ததாகவும் கூறப்படுகிறது. தஸ்யுக்களைத் தண்டிக்கும் வகையில் அவர்களை கட்டாயப்படுத்தி அடிமைத்தனத்துக்கு உட்படுத்தும் முறை இருந்திருக்க வேண்டும் என்பது அறியப்படுகிறது. இதனால் தஸ்யுக்கள் தாஸர்கள் ஆனார்கள்.

    அவர்கள் செல்வம் மிகப் பெற்றிருந்தும் அதைப் பிறருக்குப் பயன்படுமாறு கொடுக்காமல் இருந்தார்கள், இனிமையான பேச்சு இல்லாதவர்கள் என்பதை அறிய முடிகிறது.

    தஸ்யுக்களை அழிக்குமாறு தேவர்களை வேண்டுகிறார்களே தவிர, ஆர்யர்கள் தாங்களே ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. தேவர்களால் தோற்கடிக்கப்பட்ட தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குத் தாஸர்களாக வாழத் தொடங்கினர். அந்த அடிமைகள் பிறருக்குத் தானமாகவும் கொடுக்கப்பட்டனர் என்பதை ஒரு ரிஷி தான் 100 தாஸர்களைப் பெற்ற விவரத்தைக் கூறுவதிலிருந்து அறிகிறோம் (8.56.37).

    அந்த தாஸர்கள் நன்றாக உழைத்தார்கள் என்பது நான் தாஸனைப் போலக் கடுமையாக தேவர்களுக்கு உழைத்தேன் என்பதிலிருந்து தெரிகிறது (7.86.75 ).

    சமூக விரோதிகளைத் தற்காலத்தில் காவலர்கள் சிறைப்படுத்தி வேலை செய்ய வைப்பது போல இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. தண்டனையால் மனம் திருந்திய தாஸர்கள் கொடையாளிகளாக மாறினாலும் தங்கள் பழைய பெயராலேயே அழைக்கப்பட்டார்கள் என்பதை முன் சொன்ன பல்பூதன், தருக்ஷன் பற்றிய குறிப்பிலிருந்து அறிகிறோம்.

    ஆர்யர்களாக இருந்தவர்களில் கூடச் சிலர் காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாறியிருப்பர். அவர்கள் பழைய பெயரால் ஆர்யர்கள் என்று கூறப்பட்டாலும் எதிரிகளாகக் கருதப்பட்டனர். எங்கள் எதிரிகளைக் கொல்வாயாக, அவர்கள் தாஸர்களானாலும், ஆரியர்களானாலும் என்ற வேண்டுதல் காணப்படுகிறது (10.38.3).

    பொது உடைமைப் பொருட்களை அபகரிப்பவரே தஸ்யு என்னும் இந்த உருவகப் பொருள் ஜ்யோதியை எந்தத் தஸ்யு அபகரிக்க முடியும் என்பதை விளக்கவில்லை.

    இது வரையில் மூன்று வகையான உருவகப் பொருள்களைப் பார்த்தோம்- மேகங்களை அழித்து மழை பொழியச் செய்தல், நிலச் சரிவை அகற்றி நீர் மற்றும் பசுக்களின் பாதையைத் திறந்து விடுதல், பொது உடமைப் பொருட்களை அபகரிக்கும் சமூக விரோதிகளைத் தண்டித்தல். இந்த மூன்றுமே தஸ்யு பற்றிய எல்லாச் செயல்களையும் விளக்கவில்லை. இருப்பினும் இவற்றை முழுமையாகத் தள்ளிவிடவும் முடியாது. ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு உருவகம் பொருத்தமாக இருக்கும். அதை அங்கு ஏற்றுக் கொள்ளலாம்.

    படம் உதவிக்கு நன்றி:
    How Many People did Indra Kill?
    http://tamilandvedas.com/2014/07/17/how-many-people-did-indra-kill/

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(47)

    -செண்பக ஜெகதீசன்

    இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
    துணர விரித்துரையா தார். (திருக்குறள்:650 – சொல்வன்மை)

    புதுக் கவிதையில்…

    விரிந்த இதழ்களுடன்
    விதவித அழகாய் இருந்தாலும்,            flower
    மலருக்கு மகிமை
    மணம்தான்…

    கற்றவர், கற்றதை
    மற்றவர் அறிய
    எடுத்துரைக்க இயலாதபோது
    அவரும்
    மணமில்லா மலர்போலத்தான்…!

    குறும்பாவில்…

    கற்றிருந்தும் பிறரறிய
    எடுத்துரைக்க இயலாதவனும்,
    மணமிலா மலர்தான்…!

    மரபுக் கவிதையில்…

    ஆர்வமாய்ப் பலநூல் கற்றேதான்
    அறிவை அதிகம் பெற்றிடினும்,
    தேர்வுகள் பலவும் வென்றிடினும்,
    திறம்படப் பிறர்க்கே உரையாதார்
    பேர்தான் கற்றவர் என்போரும்,
    பற்பல வடிவில் பலநிறத்தில்
    பார்க்க விரிந்த போதினிலும்
    பழுதாம் மணமிலா மலரொப்பரே…!

    லிமரைக்கூ…

    கற்றவற்றை எடுத்துரைத்து அறியவேண்டும் பலர்,
    விரித்துரைக்காதவர் ஆவார்
    விரிந்திருந்தும் பயனில்லாத மணமில்லா மலர்…!

    கிராமிய பாணியில்…

    பூவுபூவு காட்டுப்பூவு
    பெருசுசெறுசா பாக்கும்பூவு,
    எதுக்கொமொதவா காட்டுப்பூவு
    வாசமில்லா வெத்துப்பூவு…

    பூவுண்ணா மணமிருக்கணும்
    பக்கமெல்லாம் மணம்பரப்பணும்…

    படிப்பு கதயும் இதுதானே,
    தெரிஞ்சிருக்கணும் தெரிஞ்சிருக்கணும்
    படிச்சதெல்லாந் தெரிஞ்சிருக்கணும்,

    படிச்சிக்குடுக்கத் தெரிஞ்சிருக்கணும்
    எடுத்துச்சொல்லத் தெரிஞ்சிருக்கணும்..

    தெரியலண்ணா காட்டுப்பூவு
    அவுனுமொரு காட்டுப்பூவு
    தேவயில்லா காட்டுப்பூவு
    வாசமில்லா காட்டுப்பூவு…

    பூவுபூவு காட்டுப்பூவு
    எதுக்கொமொதவா காட்டுப்பூவு…!

     

    Share
  • அகதியின் அகத்தீ!

    -அமீர்

    என்னுரிமை
    உன்னுரிமை ஒன்றாக
    நாமென்ன சகோதரர்களா?
    என்னுயிரும்
    உன்னுயிரும்
    சமமாக நாமென்ன தோழர்களா?

    இல்லை என்பதை உணர்கிறேன்
    அதனால் தானே விரட்டப்படுகிறேன்…

    பிறந்த மண்ணை
    உரிமை கோரல் தவறா?
    ஒடுக்கிய பின்பும்
    ஒழிக்க நினைப்பது சரியா?

    ஏகாதிபத்யமே…
    உங்களுகே சொந்தம் என்பது
    இந்தப் பரந்த உலகம் மட்டுமா?
    அண்ட வெளிக் கிரகங்களும்
    அதில் அடக்கமா?

    அச்சுறுத்தலும்
    தட்டிப்பறித்தலும்
    உங்களின் அன்பா?
    கொலைமிரட்டலும்
    விரட்டி அடித்தலும்
    உங்களின் பண்பா?

    உயிர்பயத்தில்
    கால்கள் கடுக்க ஓடும்போது
    தெரியாதவலி
    இந்த உலகம்
    மவுனமாய்ப் பார்க்கும் போது தெரிகிறது…

    ஆளப்படுபவர் அனுமதியின்றி
    ஆளப்படுவது
    சர்வாதிகாரத்தின் இலக்கணமோ?
    ஆட்சியும் மாட்சியும்
    துணைவருவதால்
    சேரும்ஆணவமோ?

    உடலைவிட்டு
    உதிரம் பிரிந்தால்
    உயிருக்கு  இல்லை உத்திரவாதம்
    நாங்கள்
    உடல் ஓரிடம்
    உதிரம் ஓரிடம்
    உயிர் ஓரிடமென வாழும்
    மண் தேடும் புழு…

    நாங்கள்
    கருவரையிலிருந்து
    கழிவாக வெளியேற்றப்படாமல்
    உங்களைப் போன்றே
    ஈன்றப்பட்ட பிறவிகளல்லவா!

    தாயும்
    தாரமும்
    பிள்ளைகளும்
    இரவில் மட்டும்
    எங்கள் மார்சாய்கிறார்கள்
    புகைப்பட உதவியோடு!

    வெயிலும்
    குளிரும்
    மழையும் மட்டுமே
    நாங்கள் அறிந்த உலக இயற்கை!

    ஐ.நா.வும்
    செஞ்சிலுவையும்
    அனுப்பும் ஆடைகள்
    அணியும் தினமே
    நாங்கள் அறிந்த திருநாட்கள்!

    பாலும் பழமும்
    பல்சுவை விருந்தும்
    பசிக்குக் கிடைக்கும்
    பழைய கஞ்சியில் காண்கிறோம்!

    நாடுபிடிப்போரின்
    நலியாத ஆசையால்
    நாங்கள்
    ஈழனென்றும்
    பாலஸ்தீனனென்றும்
    சூடானி என்றும்
    திபெத்தியனென்றும்
    பரந்து கிடக்கிறோம்
    பாவப்பட்ட உலகில்…

    இனி
    பரந்து கிடந்தோமென்று
    வரலாறு சொல்ல…
    பாலைவனம் ஒன்று போதும்
    எங்கள்  சொந்த மண் என்று துள்ள…
    கால்நடையாகவே பயணிக்கிறோம்
    அது கிடைக்கும்
    நன்னாளை எதிர்நோக்கி!

     

    Share
  • 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015

    மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு

    உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & ஜூன்1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ம் வருடம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் “கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்” ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
    இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர்(சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி…) இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல்…

    v ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.

    v கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தலும், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்)

    v திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.

    v கணினி மற்றும் இணையவழி தமிழ்க்கல்வி கற்றல், கற்பித்தல்.

    v தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள்…

    v தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள்….

    v தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.

    மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை A4 தாள் அளவில்1-2 பக்கங்களில் 25.12.2014 தேதிக்குள் cpc2015@infitt.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். பின்னர் 1.02.2015ஆம் தேதிக்குள் முழுக் கட்டுரையையும் அனுப்பிவைக்க வேண்டும்.

    கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறி அல்லது தமிழ் அனைத்து எழுத்துருத் தரப்பாடு(டேஸ்) ஆகிய குறியேற்றங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கத்தினை ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம்.

    மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம்கொண்ட கட்டுரைகளைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு 1.03.2015 ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.

    முழுக் கட்டுரையை 4-6 பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்பவேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்கவேண்டும்.

    மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர்திரவு(ISSN) எண்ணுடன் வெளியிடப்படவுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் சிறப்பு வெளியீடாக உத்தமத்தின் வாயிலாக வெளிவரவிருக்கும் இதழிலும் உலகக் கணினிமொழியியல் ஆய்விதழிலும் வெளியிடப்படும்.

    முக்கியமான நாட்கள்
    கட்டுரைச் சுருக்கம் அனுப்ப இறுதி நாள் : 25.12.2014

    முழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள் : 01.02.2015

    தேர்வுசெய்யப்பெற்ற கட்டுரை பற்றிய அறிவிப்பு : 01.03.2015

    மாநாடு நடைபெறும் நாட்கள் : 30.05.2015, 31.5.2015
    & 01.06.2015

    தமிழ் இணைய மாநாடு 2015இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2015@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    அன்புடன்
    முனைவர் இர. ஸ்ரீராம்
    தலைவர், மாநாட்டு ஆய்வரங்கக் குழு, தமிழ் இணையம் 2015.

    Share