Blog

  • எங்கே போகின்றோம் ?

    எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    மனித வாழ்வுக்கு ஒரு அர்த்தம் இருக்கின்றது. மனித வாழ்வு ஒரு புனித வாழ்வு. மனிதப் பிறவி ஒரு புனிதப் பிறவி. ” மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்றார் அப்பர் அவர்கள். ” மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் ” என்றார் சம்பந்தப் பெருமான். ” புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம் போக்குகின்றோம் அவமே ” எனத் தேவர்கள் கவலைப்பட்டுச் சொல்லுவதாக மணிவாசகப் பெருமான் கூறுகின்றார். இப்படியெல்லாம் சொல் லும் அளவுக்கு… இந்தப் புவியும், அதில் வாழும் மனிதவாழ்வும் போற்றப்படு கின்றது. அந்தப் போற்றுதலுக்கு ஏற்ப எமது வாழ்வு அமைகின்றதா? அந்தப் போற்றுதலுக்கு உரித்துடையவர்களாக இருக்கின்றோமா ?

    எங்கே போகின்றோம்? என்ன செய்கின்றோம்? என்ன சிந்திக்கின்றோம்? எதுவே ஒரு திட்டமில்லாது இருக்கின்றது. கண்டதே காட்சி!கொண்டதே கோலம்! என்று வாழ்கின்றோம். அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமாக இருக்கின்றோம். முழங்காலுக்கும் மொட்டத் தலைக்கும்முடிச்சுப் போடமுயல்கின்றோம். கரும்பிருக்க இரும்பைக் கடித்துப் பார்க்கின்றோம். கனியிருக்கக் காய் கவர்ந்து உண்ணுகின்றோம்.

    சிங்கத்தைவிட்டுச் சிறுநரியைப் பிடிக்கின்றோம். எங்களுக்குப் புரியவில்லை! தெரியவில்லை! திகைப்பு ! ஒரே மலைப்பு !சாந்தியில்லை… சமாதானம் இல்லை… அன்பு ஒளிந்துகொண்டுவிட்டது. அறம் வெளியே வர மறுக்கிறது. அஹிம்சை ஹிம்சையாகி நிற்கிறது. மன்னிக்கும் இயல்பு மறந்தே விட்டது. கல்வி காசாகி விட்டது. குருபக்தி கருகியேவிட்டது. கல்விக் கூடங்கள் காசுக் கூடங்களாகி   விட்டன. பெரியவரைக் காண்பதே பெரிய விஷயமாகிவிட்டது. சின்னத்தனம் எங்கும் சிரித்து நிற்கிறது. மனத்தில் இருட்டு! வழியில் திருட்டு! பார்க்குமிடங்க ளெல்லாம் படுகுழிகள் மயம் ! எங்கே போகின்றோம் ?

    கோவில்கள் கட்டப்படுகின்றன. கும்பாவிஷேகங்கள், மண்டலாபிஷேகங்கள் நடக்கின்றன. இலட்சார்ச்சனை, கோடியார்ச்சனை, மகாயாகம், சாந்திஹோமம், சங்காபிஷேகம், திருவிழாக்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன..இவற்றால் பலன் உண்டா? பலன் வந்ததா? இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால்…எங்கள் வாழ்வில் “சமயம் சமயமாக இல்லாது போய்விட்டமையேயாகும்”. சமயத்தை நாங்கள் யாருமே சரிவர அறியவில்லை. சமயத்துக்கான மனப்பாங்கைச் சரியாக வளர்த்துக் கொள்ளவும் இல்லை. ஒருகணம் யோசித்தால்…சமய வாழ்வையே வாழவில்லை! ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமம்தானே? நாம் அப்படி நடக்கின்றோமா? உயர்வு, தாழ்வு, பதவி, அந்தஸ்து காட்டப்படுவது முறைதானா?

    “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்” என்று அப்பர்பாடிய அந்த அருள் வாக்கை மறந்துவிட்டோம். “கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என மணிவாசகர் கண்ணப்பரைப் போற்றிய அன்பினை உணரவும் காட்டவும் தவறிவிட்டோம்.”பட்ட கட்டையிற் பகற்குருடு போகுது ” என்ற தத்துவத்தின் தாத்பரியத்தையும் அறவே மறந்து விட்டோம்.

    விளைவு … சமயம் சமயமாக இல்லை. எங்கள் சமயவாழ்வு சமய வாழ்வாக இல்லை. உண்பது, உடுப்பது, உறங்குவது, உல்லாசமாக வாழ்வது சமயவாழ்வா? “ஆடையணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவ தில்லை—அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை.” தன்னல மறுப்பு சமயத்தின் உட்கிடை. பொதுநலம் ஓம்புதல் சமயத்தின் உன்ன தம்.

    நான் வாழ வேண்டும். எனது குடும்பம் வாழ வேண்டும். எனக்கு எல்லாம் வரவேண்டும். நானே பெரியவன். மற்றவன் எக்கேடு கெட்டாலும் அதைப்பற்றி எனக்கென்ன? பணம்..பதவி..அந்தஸ்து..மற்றவனைவிட எனக்கும் எனது       குடும்பத்துக்கும் மட்டுமே வந்துசேரவேண்டும். இதுதான் சிந்தனை. இதுதான்   இன்றைய வழிபாட்டில் காணப்படுகின்றது. இதுதான் இன்றைய மனிதனின் மனப்பாங்காகவும் இருக்கிறது.

    இதை எப்படிச் சமயவாழ்வு என்று எடுக்கலாம்? சம்பந்தரும் அப்பரும் யாருக்காக வாழ்ந்தார்கள்? இறைவனிடம் தமது சொந்த சுகத்துக்காக எதையும் கேட்டனரா? மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும். அப்படி வாழ்வதற்குக் கழுமலத்தில் பெண்ணின் நல்லாளொடு இருக்கின்ற எம்பெருமான் துணை நிற்பார். அந்தப் பெருமானை வழிபடுவோம் வாருங்கள் என அடியவர்களுக்கு வழிகாட்டி நின்றார். அப்பர் முதலானோர்… சமயவாழ்வு , சைவம் தழைக்கத் தமது வாழ்க்கையையே தியாகம் செய்து நின்றார்கள். முதன் மந்திரிப் பதவியியும் அதனால் வரும் ஆடம்பர வாழ்வும் வாய்த்திருந்தபோதும் அவற்றை உதறிவிடுகிறார் மணிவாசகப் பெருமான். பெரியபுராணம் காட்டும் அடியார்கள் தமக்காக வாழாத பெரியவர்கள். சந்தனமாக, மெழுகுவர்த்தியாக வாழ்ந்தவர்கள்.

    “கூடும் அன்பினில் கும்பிடலேயன்றி வீடும்வேண்டா விறலினர்” என்று அவர்களை எமக்கெல்லாம் அடையாளம் காட்டுகின்றார் சேக்கிழார் அவர்கள்.

    ஆலயம் என்பது ஆன்மா லயிக்கின்ற இடமாகும். எல்லா வற்றையும் மறந்து ஆன்மா இறைவனை நினைக்கும் இடமாகும். அங்கே லயிப்பு இருக்கிறதா? லயிப்பதில் எம் மனம் நாட்டம் கொள்கிறதா? ஆலயத்தில்தான் எத்தனை வாக்குவாதங்கள்? ஆலயத்தில்தான் எத்தனை அந்தஸ்துச் சண்டைகள்.. நீயா..நானா ..பெரியவன்! எனக்கா — உனக்கா இந்த ஆலயத்தில் முதல் மரியாதை? எனக்குப் பரிவட்டமா? அல்லது உனக்குப் பரிவட்டமா? சுவாமி புறப்படும் முன்னர் நீ தேங்காய் உடைப்பதா? நான் உடைப்பதா? என்று பலரது மண்டைகளே உடைபடுவதைக் காண்கின்றோம்! இவைகள் பொருந்தக் கூடியனவா? இதுதான் சமயவாழ்வா? நாம் எங்கே போகின்றோம்?

    வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் தேவை. நோக்கம் இல்லாத வாழ்வு அர்த்தமற்ற வாழ்வாகும். வாழ்வுக்கு அர்த்தம் ஊட்டி நிற்பதே சமயவாழ்வுதான். சமயத்தை ” மதம் ” என்ற பெயராலும் அழைக்கின்றோம். மனிதனிடம் காணப்ப டுகின்ற ’மதத்தை ‘ அகற்ற உதவுங் காரணத்தால்தான் இப்படி ஒருபெயர் சூட்டப்பட்டதோ என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. ஆனால் மதத்தை அகற்றுவதற்கு ஏற்பட்ட ஒரு அமைப்பானது…மனிதனிடம் மதத்தை ஊட்டுவதற்குக் காரணியாக்கப் பட்டுவிட்டது. மதவாதிகளால், மதவெறியர்களால் இந்த நிலை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.

    சிலுவை யுத்தம், இந்து முஸ்லீம் கலவரம், பாபர்மசூதி விவகாரம், அயர்லாந்து இங்கிலாந்துப் பிரச்சினை யாவும் ..மதவெறிபிடித்தவர்களின் வெறியாட்டங்களையே காட்டிநிற்கின்றது. இது வரலாறாகி நிற்கின்றது. உலகில் பல மதங்கள் காணப்படுகின்றன. மதங்களின் சடங்குகள் ஆசாரங்கள் வேறுபட்டனவாக இருக்கலாம். ஆனால்… எந்தச் சமயமாவது; அநீதியை, அறம் அல்லாதவற்றை, ஒழுக்கத்துக்குப் புறம்பானவற்றைச் செய் என்று சொல்லுகிறதா என்றால் .. இல்லை என்றுதான் விடை வரும். “அன்புதான் இன்ப ஊற்று…அன்புதான் இதய ஜோதி…அன்புதான் அரவணைக்கும் தாரகமந்திரம் “.

    அன்பின் முக்கியத்துவத்தையே எல்லாச் சமயங்களும் வற்புறுத்துகின்றன. எங்கள் சைவமும் அன்பைப் போற்றுகின்றது.”அன்பும் சிவமும் இரண்டல்ல.அன்பும் சிவமும் ஒன்றே” என்பது எங்கள் சமயத்தின் பெருந்த த்துவமாகும். இறைவன் அன்பு வடிவானவன். அன்புடையார்க்கு ஆண்டவன் அருகில் வருவான். அருளைத் தருவான் என்று எங்கள் சமயமும், சமயப் பெரியோரும் கூறுகின்றனர். இன்று உலகத்தில் அருகிக் காணப்படுவது என்ன வென்றால்; அதுதான் “அன்பு “. மனித வாழ்வில் அன்புத்தேவை இல்லாமல் போய்விட்டது. அன்புக்காக ஏங்குவோர் அநேகர். அன்பைக் காட்டுவார் யார்? அவர்கள் அன்புக்காய் ஏங்குகிறார்கள்! அவர்களது தாகம்தான் தணிக்கப் படுவதாகவில்லை.

    ஏக்கம், ஏமாற்றம், மனக்கவலை, மலிந்துகிடக்கிறது. பாதுகாப்பு, அன்பு, காருண்யம், இரக்கம் ஒறுத்துவிட்டது. எங்கும் ஒரே அந்தகாரம், குழப்பம், பதட்டம், பேராசை, பொறாமை, முரட்டுத்தனம் மலிந்துவிட்டது. உலகாயதம் உருக்கொண்டுவிட்டது. உலகம் அதன் கைப்பொம்மையாகிவிட்டது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ந்து வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான். மனித வாழ்வில் பல செளகரியங்கள் ஏற்பட்டுள்ளன என்பதும் உண்மைதான்.

    ஆனால் மனித மனங்களில் மட்டுந்தான் செளகரியங்களோ செளஜன்யங் களோ ஏற்பட்டதாகத் தெரியவில்ல. வாய்ப்புகள், வசதிகள் மனதில் கூடக்கூட மனங்களில் நல்ல மாற்றங்களும் ஏற்படவேண்டும். ஆனால் மாறாக உள்ளது. விரிவடைய வேண்டிய மனங்கள் சுருங்கிவிட்டன. நேராக இருக்க வேண்டிய மனங்கள் கோணலாகிவிட்டன.மனங்களில் நிறைவு தோன்ற மறுக்கிறது.கிடை த்ததற்கு மேலாக இன்னும் இன்னும் வேண்டும் என்று மனம் பேராசை கொள்ளு கிறது. மேலும் கிடைப்பதற்கு– அது ; என்ன வழியானாலும் பரவாயில்லை என்று எண்ணுகிறது. இதனால் செய்யக்கூடாததை எல்லாம் செய்கிறது. மனித மனத்தில் வெறி ஏற்பட்டுவிட்டது. வெறிவந்தால் அங்கே நெறி அழிந்துவிடும்.

    நெறி அழிந்தால் அங்கே முறை தவறிவிடும். முறை தவறிவிட்டால் வாழ்க்கை வாழ்க்கையாக அமையாது. இதனையே இன்று நாளாந்தம் காண்கின்றோம்.

    இறை நம்பிக்கை குறைந்து தனது செயற்பாடுகளில் முற்றும் முழுதான நம்பிக்கை வந்துவிட்டது. எனவே எதுவும் செய்து எதையும் பெறலாம் என்ற முனைப்பு ஏற்பட்டுவிட்டது. இராவணர்கள், சூரர்கள், ஹம்சர்கள், இரணியர்கள் மலிந்துவிட்டார்கள். யாரை யார் திருத்துவது? யாருடைய சொல்லை யார் யார் கேட்பது? இறைத் தியானம் கலைந்துவிட்டது. லெளகீகம் மேலோங்கிவிட்டது.

    “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பதைமட்டும் பார்த்தவர்கள்…..”அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை” என்பதை பார்க்க மறந்து விட்டனரோ அல்லது மறுத்துவிட்டனரோ தெரியவில்லை!

    போதைவஸ்து, பொருள்கடத்தல், இலஞ்சம், ஊழல், மோசடி இவற்றால் பணம் சம்பாதிப்பது இன்று சாதாரணமாகிவிட்டது. பணத்தைச் சம்பாதிக்க   வேண்டும். உலகாயத வாழ்வை வாழவேண்டும்.பாவமாவது! புண்ணியமாவது! கடவுளா? சாமியா? தானமா? தர்மமா? நீதியா? நியாயமா? உண்மையா? நேர்மையா? ….. எதைப் பற்றியும் எள்ளளவும் கவலையே இல்லை. பணம் பண்ணுவது ஒன்றே குறிக்கோள். முடிவில் காண்பது என்ன? விரக்தி! வேதனை! பயங்கரம்!

    பாரததேசத்திலே பல மகான்களும்,துறவிகளும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அளவுக்கு நாங்கள் போகவேண்டும் என்பதில்லை. மனத்தளவிலே ஓரளவுக்காவது துறவுநிலை தேவைதானே? எங்கள் மனவெழுச்சிகள் மாற்றம் உறவேண்டும். மாற்றப்படவேண்டும்! எங்கள் சிந்தனைகள் செல்லும்திசை திருப்பப்படவேண்டும்.எங்களின் செயற்பாடுகளில் தூய்மை துலங்கிட வேண் டும். இவற்றுக்குச் சமயவாழ்வுதான் துணைபுரியும்.சமய நெறிகள்தான் வழி காட்டும். இறையுணர்வுதான் நல்வழி இட்டுச்செல்லும்.

    கோவில்கள் சோழர்காலத்தில் சமூக நிறுவனங்களாக விளங்கின. ஆதுரர்சாலையாக, கலைக்கூடமாக, கல்விச்சாலையாக, நீதித்தலமாக, என்று பலநிலைகளில் விளங்கின.ஆன்மீகம் கலந்ததாக நீதி, ஆன்மீகம் கலந்ததாக கலைகள், ஆன்மீகம் கலந்ததாக பொருளாதார நடவடிக்கைகள் இருந்தன.

    அரசன் முதல் ஆண்டி வரை கோவிலையே நினைத்தார்கள். கோயிற்பணி செய்வதையே தமது வாழ்வின் பெரும்பயன் என எண்ணினார்கள். ஆண்டவனுக்குச் செய்யும் பணியே பெரியது என்று நினைத்தார்கள். கனவும் நினைவும் கோவில் பற்றியதும், ஆன்மீகம் பற்றியதுமாகவே இருந்தது. இதனால் சோழ சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்து வளர்ந்தது. கலைகள் வளர்ந்தன. காவியம், ஓவியம், சிற்பம், கட்டிடம் யாவும் உன்னத நிலைக்கு வந்தன. திருமுறைகள் வகுக்கப்பட்டன. திருத்தொண்டர் புராணம் உருப்பெற்றது.

    இன்றோ எங்கள் கோவில்களில் உரிமைச் சண்டைகள் ஒருபுறம். நிர்வாகச் சண்டைகள் ஒருபுறம்.திருவிழாச் சண்டைகள் ஒருபுறம். அந்தஸ்துச் சண்டைகளும் ஒருபுறம். பூசைபண்ணுவதில் கூடச் சண்டைகள் நடக்கின்றன.

    இவையெல்லாம் தேவைதானா? கோவில்கள்…பிரச்சனைகளின் கூடமாகமாறி நீதிமன்றம் வரை சென்றுவிட்டதைக் காண்கின்றோம். ஒரு காலத்தில் நீதித் தலமாக விளங்கிய கோவில்கள் எங்களின் போக்கால் எள்ளிநகையாடும் விதத்திற்கு நிலைக்களனாகிவிட்டது.

    இதற்குக் காரணம் என்ன? எங்களது சிந்தனைகள் சமயச்சிந்தனைகளில் இருந்து வேறு நிலைக்குச்சென்றதும்… திருவிழாக்கள் களியாட்டமாக மாற் றப்பட்டதும்… அவசியமான காரியங்கள் கைவிடப்பட்டு ஆடம்பரங்கள் இடம் பிடித்துக்கொண்டதுமே ஆகும்.

    சமயச் சடங்குகள் முக்கியத்துவம் அற்றன என்றொரு மாயை ஏற்பட்டதும், சமயமே அர்த்தமற்றது என்ற நாத்திகவாதம் தலைதூக்கியதும், புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும்,வேதங்களுக்கும், ஆகமங்களுக்கும், வித்தியாசமான அர்த்தங்கள் கற்பித்து மக்கள் மத்தியில் விதைக்கப் பட்டமையுமேயாகும்.

    ராமகிருஷ்ணபரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ரமண மகரிஷி போன்ற வழிகாட்டிகள் இல்லாத நிலையுமாகும். யாவும் கொம்யூட்டர் மயமாகிவிட்டது. எங்கும் விஞ்ஞானம்.மெய்ஞ்ஞானம் வழிகாட்ட உகந்தது அல்ல என்ற வாதம் கவர்ச்சியாக அமைந்ததும் ஆகும்.ஆன்மீகத்தின் பெயரால் சமயத்தின் பெயரால் கடவுளின் பெயரால் பல போலிகள் நடத்தும் கபட நாடகங்கள் உண்மைச் சமயத்தின் உருவத்தைக் உருக்குலைத்துவிட்டது.

    சமயம் – அரசியல் லாபங்களுக்கு இடமாக்கப்பட்டது. அரசியல்வாதிகள் சமயத்தலைவர்களாக முற்பட்டனர். புனிதம் கெட்டது. தூய்மை அகன்றது. மக்களுக்கு…..பாதுகாப்பு – எது எனத்தெரியாத ஒரு நிலத்தோற்றம் பெற்றுவிட்டது. அரசியல் தலைவர்களா? ஆன்மீகத் தலைவர்களா? யார் உயர்ந்தவர்கள் / யார் உண்மையானவர்கள் ? என்னும் அளவுக்குச் சமயவாழ்வை அரசியல் வாழ்வும், ஆடம்பர வாழ்வும் … உருக்குலைத்துவிட்டன. மக்களும் கவர்ச்சிகளுக்குத் தங்களைப் பறிகொடுத்து விட்டனர். கவர்ச்சியினால் பகுத்தறிவும், பக்குவமும் மக்களைவிட்டு அகலத்தொடங்கிவிட்டது.பகுத்தறிவற்ற தன்மை… படாடோபத்துக்கே வழி சமைத்துவிட்டது. எங்கே போகிறோம் என்று தெரியாத ஒரு மயக்க நிலையைத் தோற்றுவித்துவிட்டது.

    இந்த மயக்க நிலையால் சுயநலமே மேலோங்கியது.பிறர்நலம் பேணல் என்பது மறக்கப்பட்டது. மற்றவர் துயர் துடைப்பது என்பது அவசியம் அற்றதாக ப்பட்டது. இறைபக்தி எள்ளி நகையாடப்பட்டது. கோவில் தரிசனமே பெரிதாகக் கொள்ளப்படாத ஒரு நிலை ஏற்பட்டது. இதனால் கண்டது என்ன? அமைதி குலைந்தது. சாந்தி நிலை தடுமாறுகிறது. அன்பு விலை ஏறிவிட்டது. அஹிம்சை யைப் பார்க்கவே முடியாது போய்விட்டது. குடும்ப உறவு சீரற்றதாகிவிட்டது. கல்விக்கூடங்களில் அமைதியில்லை.கலைகளில் காணப்பட்ட தெய்வீகத் தன்மை தரம் இறங்கிவிட்டது. வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்டது.

    இதனால் எங்கே போகிறோம் என்பதை அறியாது, உணராது, திட்டமிடாது போவதுபோலவே இருக்கின்றது. இந்த நிலை மாற்றப்படவேண்டும். ”குறிக்கோள் இலாது கெட்டேன்” என்னும் நிலைக்கு வந்துவிடக்கூடாது. எப்படியும் வாழலாம் என்ற நிலை மாற்றப்பட்டு, “இப்படித்தான் வாழவேண்டும்” என்னும் நிலை உருவாகவேண்டும். அதற்குச் சமயவாழ்வுதான் உகந்தது. எனவே…எங்கே போகிறோம் என்று உணர்ந்து தெளிந்து அறிந்து எங்கள் வாழ்க்கையை அமைக்கவேண்டும். அதுவே “மண்ணில் நல்லவண்ணம் வாழும் வாழ்வாகும்”. அதுவே “வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்வாகும். ” இதனை ஏற்படுத்தும் சக்தி இறைபக்தி யாகும். இறைபக்தியுடனான சமயவாழ்வை வாழ்ந்து எங்கள் குறிக்கோளை அடைவோமா?

    Share
  • ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    jay

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
    (1847-1922)

     

    ‘இயற்கை அன்னை ஒரு பணியைப் புரிய வேண்டி இருந்தால், அதைச் செய்து முடிக்க ஓர் ஆக்க மேதையைப் படைக்கிறாள்!’

    ரால்ஃப் வால்டோ எமர்ஸன் (1803-1882)

    ‘மிஸ்டர் வாட்ஸன், இங்கே வாருங்கள், உங்களைப் பார்க்க விரும்புகிறேன்.”

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் படைத்த முதல் டெலிஃபோனில் நடந்த உரையாடல் (மார்ச் 10, 1876)

    ‘படைப்பு மேதைக்கு ஆக்க உணர்வு ஒரு சதவீதம்! வேர்க்கும் உழைப்பு தொன்னூற்றி ஒன்பது சதவீதம்!’ தாமஸ் ஆல்வா எடிஸன் (1847-1931)

    முன்னுரை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் தொழிற் புரட்சி மலர்ந்த போது, தகவல் தொடர்பு [Communication] வளர்ச்சி அடைய முப்பெரும் ஆக்க மேதைகள் மின்சாரம், மின்காந்த அலைகள் (Radio Waves) ஆகியவற்றைப் பயன்படுத்தி மெய்வருந்தி உழைத்தார்கள்! கம்பியின் மூலம் தகவல் தந்தி [Telegraph] அனுப்பும் முறையைச் செம்மைப் படுத்திப் பிறகு பெல் தயாரித்த தொலைபேசி அனுப்பியைச் சீர்ப்படுத்திய அமெரிக்க மேதை, தாமஸ் ஆல்வா எடிஸன். கம்பி வழியாக வாய்ப் பேச்சை அனுப்பி, பதிலையும் கேட்கும் தகுதியுள்ள தொலைபேசியை [Telephone] முதலில் படைத்த அடுத்த அமெரிக்க மேதை, அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். மூன்றாவது கம்பியில்லா தொடர்பைப் [Wireless Communication] படைத்த இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனி. இருபதாம் நூற்றாண்டில் தொலைபேசித் தொடர்பும், கம்பியில்லாத் தொடர்பும், தொலைகாட்சித் தொடர்பும் பன்மடங்கு விருத்தியாகி, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எல்லாவிதத் தொடர்புகளும் கம்பியில்லா தொடர்புகளாய் மாறிக் கொண்டு வருகின்றன! பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடவுள் படைத்த உன்னத ஆக்கவினை யந்திர நிபுணர்களாய்க் கருதப் படுபவர்கள்: எடிஸன், பெல், மார்க்கோனி, ரைட் சகோதர்கள். அவர்கள் அனைவரும் வடஅமெரிக்க மண்ணில் ஆய்வுகள் நடத்தி, யந்திர யுகத்தை உலகத்தில் ஆலமர விழுதுகளாய்ப் பெருக்கியவர் என்று போற்றப்படுவர்கள். தந்தித் தகவல் தளவாடங்களை தாமஸ் எடிஸன் செம்மைப் படுத்தி வரும் போது, பெல் வாய்ச் சொற்களை நேரடியாக எவ்விதம் மின் சமிக்கையாக மாற்றிக் கம்பி வழியாக அனுப்பி அப்பால் காதில் கேட்பது என்ற ஆய்வுச் சோதனைகளில் மூழ்கி இருந்தார். 1861 இல் ஃபிலிப் ரெய்ஸ் ஜெர்மனியில் முதலில் பாதரஸ திரவத்தைத் [Mercury Liquid] தொடர்பு அனுப்பியில் [Transmitter] பயன்படுத்தி ஒரு தொலைபேசிச் சாதனத்தைப் படைத்தார். தாமஸ் எடிஸன் 1875 இல் தனது உதவிப் பொறியாளர் ஜேம்ஸ் ஆடம்ஸை ஜெர்மன் நிபுணரின் மாடலைப் பின்பற்றி ஒரு தொலைபேசியைத் தயாரிக்க ஏற்பாடு செய்தார்.

    முதல் தொலைபேசிக்கு அடித்தளமிட்ட நிபுணர்கள்

    1832 இல் அமெரிக்க மேதை சாமுவேல் மோர்ஸின் [Samuel Morse] புள்ளிக் குறியைப் [Morse Code (Dot & Dash)] பயன்படுத்தி விருத்தி செய்த தந்தித் தகவல் அனுப்பு முறை உலக நாடுகளில் 1844 ஆண்டு முதல் தொடர்ந்து உபயோகப் பட்டது. நேர்திசை மின்னோட்டத்தைப் [Direct Current] பயன்படுத்தி மின்காந்தச் சுற்றுக் கலன்களைக் [Electrical Solenoids] கொண்டு தந்தி அனுப்பு முறை ஏற்பாடுகள் தயாராயின. அதற்குப் பின்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதிக் காலத்தில், மின்கம்பி மூலமாக நேரடிப் பேச்சில் தொடர்பு கொள்ளும் தொலைபேசி முறையைப் படைக்க நிபுணர்கள் போட்டி யிட்டனர். ஒலி அலைகளை எப்படி ஒப்பான மின்சாரத் துடிப்புகளாய் [Electric Pulses] மாற்றிக் கம்பியில் அனுப்பி, மீண்டும் ஒலி அலைகளாய்க் கேட்பது என்பதே அக்காலத்தில் சவாலாக இருந்தது!

    முதன்முதலில் 1861 இல் ஜெர்மன் மேதை ஃபிலிப் ரெய்ஸ் [Philips Gray] ஒலி அனுப்பிச் சாதனம் ஒன்றை அமைத்தார். ஒரு பெட்டிக்குள் இருக்கும் துளை ஒன்றின் மீது, இழுத்து மூடப்பட்ட தகடு ஒன்று வைக்கப் பட்டது. தகடின் பின்புறத்தில் பிளாட்டினத் தட்டு இணைப்பாகி யிருந்தது. பிளாட்டினத் தட்டு முன் புறத்தில் ஒரு பிளாட்டினக் கம்பியைத் தொடும்படி அல்லது நெருங்கும்படிப் பக்கத்தில் அமைப்பாகி யிருந்தது. ஒலிச்சக்தி அசைவுக் கேற்ப மெல்லிய தகடு அசையும் போது, பிளாட்டினத் தட்டு கம்பியைத் தொட்டும், தொடாமலும் மின்னோட்டத்தைக் கூட்டிக் குறைத்து மூலக் குரலுக்கு ஒப்பான ஒலியைக் கேட்கும்படி அனுப்புகிறது. பார்க்கப் போனால் ஃபிலிப்ஸ் ரெய்ஸின் சாதனம் மிக எளிதானது. இசை நாதங்களை அது அனுப்ப முடிந்தாலும், மனிதரின் சிக்கலான அதிர்வுகள் கொண்ட வாக்கு மொழிகளைச் செம்மையாக அனுப்புவதற்குத் தகுதி அற்றது. காரணம் அவர் அனுப்பியில் பயன்படுத்திய திரவம் அடர்த்தியான, ஒலி அதிர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்காத பாதரஸம்!

    அமெரிக்காவில் ஏறக்குறைய ஒரே காலத்தில் மூன்று படைப்பாளிகள் தொலைபேசியை ஆக்க முற்பட்டனர். 1871 ஆண்டு அமெரிக்காவில் வாழ்ந்த இத்தாலிய நிபுணர் அண்டோனியோ மியூச்சி [Antonio Meucci] ஒருவர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முயன்றவர் இருவர்: ஸ்காட்லண்டில் பிறந்து அமெரிக்கரான அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், அடுத்த அமெரிக்கர் எலிஸா கிரே [Elisha Gray (1835-1901)]. ஆனால் அவர்களில் வாய்ப் பேச்சை அனுப்பவும், காதில் கேட்கவும் பழக்கத்திற்குப் பயன்படும் தொலைபேசிச் சாதனத்தை முதலில் ஆக்கிப் பதிவு செய்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் மட்டுமே! சிறப்பாக வேலை செய்த எலிஸா கிரேயின் சாதனம் ஒரே சமயத்தில் தயாரானாலும், யார் முதலில் படைத்தவர் என்ற வழக்குப் போட்டியில் பெல் ஒருவரே வெற்றி பெற்றார். அவரே தொலைபேசியின் முதல் படைப்பாளர் என்றும் உலகத்தில் கருதப் படுகிறார். தனது புதிய கருவியைப் பெல் விரைவில் வர்த்தகத் தொழிற்துறை உற்பத்திக்குப் பயன்படப் பதிவு உரிமை பெற்றார். ஆயினும் அவரது தொலைபேசிச் சாதனத்தில் ‘தகவல் வாங்கி ‘ [Receiver] மட்டுமே முறையாகப் பணியாற்றியது! பெல் ஆக்கிய தொலைபேசியில் செம்மையாக வாக்குச் சமிக்கைகளைத் ‘தகவல் அனுப்பி ‘ மூலம் [Transmitter] சரிவர அனுப்ப முடியவில்லை!

    தாமஸ் எடிஸன் செம்மைப் படுத்திய தகவல் அனுப்பி

    முதலில் படைக்கப் பட்ட தொலைபேசியில் சாதனப் பழுதுகள் மிகையாக இருந்தன.

    மென்மையான குரல் ஒலி அதிர்வுகள் சரிவரக் காதில் படாமலே மாய்ந்து போயின. பெல் தயாரித்த முதல் சாதனம் வெளிவந்த ஓராண்டுக்குப் பிறகு, 1878 இல் தாமஸ் ஆல்வா எடிஸனும், ஹென்றி ஹன்னிங்ஸ் [Henry Hunnings] என்பவரும் ‘கரித்துகள் தகவல் அனுப்பி ‘ [Carbon Granule Transmitter] என்னும் சிறப்பான ஒரு புதுவிதத் தகவல் அனுப்பியைத் தயாரித்தனர். ஒலிச்சக்தியின் அழுத்தப் பண்பைப் பயன்படுத்தி, கரித்துகள்களின் அடர்த்தியைக் கூட்டிக் குறைத்து, எடிஸன் ஒலி சமிக்கையின் தன்மையை மின்கம்பியில் அடுத்த முனைக்குத் தெளிவாக அனுப்ப முடிந்தது. கரி ஒரு சிறப்பான மின்சாரக் கடத்தி [Electrical Conductor] என்பது குறிப்பிடத் தக்கது. கரித்துகள்களை ஒரு கலனில் இட்டு அதன் அடர்த்தியை மிகையாக்கினால், மின்தடை குன்றிக் கம்பியில் மிகையான மின்னோட்டம் உண்டாகும். மாறாக கலனில் கரித்துகள்களின் அடர்த்தி தளர்ந்தால், மின்தடை கம்பியில் மிகுந்து, மின்னோட்டம் குறைகிறது. இந்த நியதியையே ஒலிச்சக்தி அனுப்புதற்கு எடிஸன் தனது அனுப்புச் சாதனத்தில் பயன்படுத்தினார்.

    நவீனத் தொடர்பு தகவல் அனுப்பியின் அமைப்பு

    தற்போதுள்ள தகவல் அனுப்பியில் அலுமினிய உலோகக் கலவைத் தகடு [Aluminium Alloy Diaphragm] ஒன்று குமிழ் வடிவான கரிக்கட்டியுடன் இணைக்கப் பட்டிருக்கிறது. இந்த குமிழ்க் கரிக்கட்டி கரித்துகள் நிரம்பி இருக்கும் குழிந்த கரிக்கலன் ஒன்றின் உள்ளே அமைந்துள்ளது. இவ்விருக் கரி முனைகளும் (குமிழ்க் கரிக்கட்டி ஒரு முனை, குழிந்த கரிக்கலன் மறு முனை) மின்சாரக் கம்பியால் மற்ற மின்சாரச் சாதனங்களோடு இணைக்கப் பட்டுள்ளன. குரல் ஒலி உச்சரிப்புக்கு ஏற்ப எழும் காற்று அழுத்தத்தால் கரித்துகள்கள் நெருக்கப் பட்டோ அல்லது விடுவிக்கப் பட்டோ மின்தடையை [Electrical Resistance] குறைத்துக் கூட்டுகிறது. அப்போது சுற்றில் மின்னோட்டம் ஒலி உச்சரிப்புக்கு ஏற்ப ஒப்புநிலையில் ஏறி, இறங்கி ஒரு முனையில் வாங்கும் வாக்கு ஒலி மறு முனையில் அதே முறையில் அனுப்பப் படுகிறது. பெல் முதலில் தயாரித்த காதுமுனைச் சாதனம் [Earpiece] ஒரு நிரந்தரக் காந்த சாதனமும் [Permanent Magnet], மின்காந்தச் சாதனம் [Electro Magnet] ஒன்றின் மீது இயங்கும் மற்றோர் இரும்புத் தகடும் கொண்டிருந்தது. தற்போதுள்ள நவீனத் தொடர்பு தகவல் வாங்கிகளில் அவ்வித அமைப்பே பயன்பட்டு வருகிறது.

    அடுத்த கட்டுரையில் தொலைபேசியைப் படைக்க அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் செய்த முயற்சிகளையும், அவரது வாழ்க்கை வரலாற்றையும், மற்ற படைப்புகளையும் காண்போம்.

    [கட்டுரை தொடரும்]

    தகவல்:

    1. Alexander Graham Bell, The Life & Times of the Man Who Invented the Telephone By: Grosvener & Wesson (1997)

    2. Working at Inventing, Thomas A. Edison & Menlo Park Experience By: William S. Pretzer (1993)

    3. The History of the Telephone, Electronic Text Center, University of Virginia Library

    4. The New Book of Knowledge By: Grolier Incorporated (1984)

    5. Encyclopaedia of Britannica (1978)

    6. The Children ‘s Encyclopedia of Science (1985)

    7. Science & Technology The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

    8. The Living World of Science in Colour (1966)

    9. Britannica Concise Encyclopedia [2003]

    10 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: அமெரிக்க ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (http://www.thinnai.com/science/sc0302023.html) [மார்ச் 2, 2002]

    11 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: மார்க்கோனி (http://www.thinnai.com/science/sc0203022.html)  [பிப்ரவரி 2, 2002]

    *****************

    Share
  • காதல் நாற்பது (25) கனத்துப் போன மனது !

    jay

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    துயரில் கனத்த இதயத்தை

    தூக்கிச் சுமந்தேன் ஆண்டு தோறும் !

    துயருக்கு மேல் துயர் உற்றேன்

    உன் முகத்தை நான்

    காணும் வரை

    எனதினிய காதலனே !

    தொடுத்த ஆரத்தின் முத்துக்கள் போல்

    அடுத்தடுத்து இதயத் துடிப்பு

    இயல்பான

    இன்பம் எல்லா வற்றிலும்

    உடனெழும்

    நடன வேளையில் !

    கனத்துப் போன என் இதயத்தைக்

    கடவுள் கைதூக்கி விடும்வரை

    நம்பிக்கை உடைந்து

    வேதனையே மேலோங்கும் !

    என் இதயத்தை

    உன் கம்பீரத்தின் முன்பு

    அன்புடன் சமர்ப்பணம் செய்ய நீ

    அழைத்தாய் என்னை !

    உன்னிதயம்

    என்னருகிலே உள்ள போது,

    பின்னது மூழ்கிடும் தானாய்,

    விரைவாய்,

    ஒரு கனத்த பளுவாய்,

    விண்மீன் களுக்கும், நிறைவேறாத

    விதிக்கு மிடையே !

    ********************

    Poem -25

    Sonnets from the Potuguese

    By: Elizabeth Browing

    A heavy heart, Beloved, have I borne

    From year to year until I saw thy face,

    And sorrow after sorrow took the place

    Of all those natural joys as lightly worn

    As the stringed pearls, each lifted in its turn

    By a beating heart at dance-time. Hopes apace

    Were changed to long despairs, till God’s own grace

    Could scarcely lift above the world forlorn

    My heavy heart. Then thou didst bid me bring

    And let it drop adown thy calmly great

    Deep being! Fast it sinketh, as a thing

    Which its own nature doth precipitate,

    While thine doth close above it, mediating

    Betwixt the stars and the unaccomplished fate.

    **********

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “காப்பளிக்கும் கண்ணனின்று கன்னத்தில் வண்ணத்தின்
    தீப்பறக்கத் தோற்றம் தருகின்றான் ,-ஆப்பிரிக்க
    GOATSதோலைப் போர்த்தியக் COWஅவன் கால்கவ்வ;
    GODSMUSTBE க்ரேசி கரெக்ட்”…கிரேசி மோகன் ….

    Share
  • இரா நடராசன் படைப்புலகத்தினுள்……

    எஸ் வி வேணுகோபாலன் 

     

    பேச்சு மொழியாகவே எதிரொலிக்கும் எழுத்து மொழி!

     

    ஓங்கி மண்டையில் அறைந்தாற்போல் நம்மை உலுக்கி எடுக்காத புத்தகத்தை 

    எதற்கு வாசிப்பானேன்…… 

    – காஃப்கா 

     

    கணையாழி இலக்கிய இதழின் நீண்ட கால வாசகர்களில் ஒருவனான என்னை, ’90களின் பிற்பகுதியின் வெளியான அந்தக் குறுநாவல் அப்படியே போட்டு உலுக்கி எடுத்தது…பேரதிர்ச்சியின் ஆழத்தில் திணறடித்தது….ஓர் இலக்கிய பிரதியில் சமூகத்தின் ஆன்மாவை இப்படி பளீரென்று சாட்டையடியாக எடுத்து வைக்க முடியும் சாத்தியம், வெளியே வர முடியாத எண்ணக் குமிழிகளுக்கிடையே ஆட்படுத்தியது. சம காலக்  கல்வி முறையின் பரிதாபத்தை, பள்ளிக்கூடங்களில் நிகழும் உடலியல்-உளவியல் வன்முறையை அதற்கு முன்னரும், பின்னரும் கூட வாசிக்க நேர்ந்திருக்கிறது. ஆனால் அந்தக் குறுநாவலின் தளம் அதற்கு மேலும், அவற்றைவிட நுட்பமான கட்டமைப்பிலும், பேசப்படாத செய்திகளினூடும், புறக்கணிக்கப்படும் கோணங்களிலிலும் அமைந்திருந்தது. வாசித்துவிட்டு கீழே வைக்க முடியாத கனத்தை அதன் கதை உள்ளிறக்கியது என்றால், தப்ப முடியாத கேள்விகளையும் அது காற்றில் கலந்து சுவாசிக்க வைத்துவிட்டது. பல லட்சம் வாசகர்களை விம்மி விம்மி அழவைக்கப் போகும் “ஆயிஷா”வை வாசித்த முதல் தலைமுறை வாசகர்களில் ஒருவனின் அன்றைய இராப்பொழுது எப்படி கடந்து போனது என்பதை இப்போது விவரிக்க முடியாது.

     

    நவயுகத்தின் கட்டியக்காரன் இரா நடராசன்.  ஏதோ ஓர் அழகான கவிதை. சிலிர்க்க வைக்கும் சிறுகதை. சிந்திக்க வைக்கும் கட்டுரை. போற்றத் தக்க ஆய்வு நூல் என்று சொல்லிவிட்டு நகர முடியாத எழுத்துக்கள் அவருடையவை. மன்னிக்க முடியாத படைப்பாளிகள் வரிசை ஒன்றை மானசீகமாக வைத்திருக்கும் வாசகர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவஸ்தைக்குள்ளாக்கும் எழுத்துக்களை இடைவிடாது நெய்து கொண்டிருக்கும் நெசவாளிகளில் ஒருவர் நடராசன்.

     

    பத்தாண்டுகளுக்கு மேலிருக்கும். அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றை வாசித்த மாத்திரத்தில் எங்கெங்கோ தேடிப் பிடித்து அவரது அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து (93605 47808), அவரோடு முதன்முதல் பேசிய அந்த உரையாடலை மறக்கமுடியாது. ஏன்யா எங்களை இப்படிக் கொல்றீங்க….நாங்க என்னதான் ஆகறது… என்பதாகத் தான் தொடங்கியது எனது புகார்ப்பட்டியல்! அத்தனை வித்தியாசமான தொகுப்பு அது.

     

    அந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வடிவத்தில், வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எழுதப் பட்டிருந்தது. ஆயிஷா கதையே, அறிவியல் ஆசிரியை ஒருவர் தமது ஆய்வு நூலுக்கு எழுதும் முன்னுரை போன்ற வடிவத்தில் கொடுக்கப் பட்டிருக்கும். தலைப்புக் கதையான “மதி எனும் மனிதனின் மரணம் குறித்து”, பிரேத பரிசோதனை அறிக்கை எப்படி இருக்குமோ அந்தப் படிவத்தை நிரப்பிய பாணியில் கதையை அத்தனை நேர்த்தியாகச் சொல்லிச் செல்லும். பாலின மாற்றத்திற்குள்ளான மதியை ஏற்க முடியாத குடும்பம், துரத்தித் துரத்தி கொச்சை செய்து மகிழும் சமூகம், இறுதியில் குடும்ப கௌரவத்தைக் காக்க சோதிடனின் ஆலோசனைப்படி நிகழ்த்தப்படும் கொடூரக் கொலை என்று பேசப்படும் செய்திகளில் திருநங்கையர் பிரச்சனைகள் குறித்து முதலாவதாகப் பேசிய கதைகளில் ஒன்றாக அதிர வைத்த கதை அது. வனத்துறை அதிகாரிகளிடம் தனது நேர்மையான நடத்தையால் சிக்கிக் கொண்ட நரிக்குறவன், நீதிமன்றத்தில் முன்வைக்கும் சாட்சிய நடையில் பேசும் வேறொரு கதை, காடுகளில் இருந்து பூர்வகுடிகள் விரட்டப்படுவதன் வலியை உணரவைக்கும். சிறையிலிருந்து மகள் தாய்க்கு எழுதும் கடித நடையிலான கதை, குகைக் கோவிலுக்குள் இருந்தபடி சாதிய சமூகத்தின்மீது சாட்டையடி அடிக்கும் பறையடி சித்தன் கதை….என் விரியும் பெருவெளி அந்தத் தொகுப்பு.

     

    “ரோஸ்” புத்தகத்தை யாரோ நண்பருக்குக் கொடுத்துவிட்டேன் என்பதற்காக என்னிடம் என் மகள் போட்ட சண்டை எளிதில் மறக்க முடியாதது. சூரியசந்திரன் எழுப்பிய அருமையான கேள்விக்கு, நடராசன் புத்தகம் பேசுது இதழுக்கான நேர்காணலில் இப்படி பதில் சொல்லி இருந்தார்: “ஆயிஷா ஓர் ஆசிரியனின் சுய விமர்சனம் என்றால், ரோஸ், ஒரு தந்தையின் சுய விமர்சனம்!” கேள்விகள் எழுப்பும் குழந்தைப் பருவத்தின் தேடலைத் தூண்ட நேரமற்ற நடுத்தர நகர வாழ்க்கையில் ஒரு சிறுவன் ரோஸ் என்றால் என்ன என்ற தனது எளிய கேள்விக்குப் படும் அலைக்கழிப்பான ஒரே ஒரு நாள் நிகழ்வுகள் சமகால பரந்த வாசிப்புக்கான கதை.

     

    நடராசனின் புனைவு மிகுந்த வேலைப்பாடுகள் உடையதாக நிகழ்கிறது. கடலூரில் வசிப்பதால் ஆழிப் பேரலை குறித்த நேரடி அனுபவம், சுனாமியை அடித்தளமாகக் கொண்டு சாகசமிக்க ஒரு குறுநாவலை, சாரணர் இயக்கத்தைப் பெருமைப்படுத்தும் வண்ணம் எழுத வைத்தது. அவரது “நாகா” நாவல், சாரணிய இயக்கம் குறித்த அற்புதமான செய்திகள் பலவற்றை உட்கொண்டிருப்பது. சதுரங்க ஆட்டம் குறித்த  வரலாற்றுத் தரவுகள், சுவாரசியமான செய்திகள் போன்றவை அவருள் நிரம்பித் ததும்புகையில், “ஒரு தோழரும் மூன்று நண்பர்களும்” என்ற மிகவும் வித்தியாசமான கதை ஆகிறது! கண்பார்வை அற்றவர்கள் படிக்கும் வண்ணம் பிரெயில் மொழியிலும் அச்சிடப்பட்ட அவரது “பூஜ்யமாம் ஆண்டு” அசாத்திய வகையில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றைக் குறித்த அசரவைக்கும் செய்திகளை எளிதாக முன்வைத்தது.

     

    சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டோரின் தவிப்புகளையும், ஒடுக்கப்பட்டோரின் குரல்களையும், கவனம் பெறவேண்டியவர்களது கண்ணீரையும் இலக்கியமாக்கும் புதுமைச் சித்தர் நடராசன். கல்விமுறையின் அராஜக வன்முறை குறித்த தாளமாட்டாத வேதனைகள் அவரது எழுத்தின்வழி கலகக் குரல்களாக வெளிப்படுவதைத் தொடர்ந்து காண முடியும்.

     

    நாளைய தலைமுறைகளுக்கான கொடையாகவே வெளிவந்திருக்கும் “இது யாருடைய வகுப்பறை” நூல்,  அவரது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் வேர்வையோடு, மாற்றுக் கல்விமுரைக்கான அவரது தாகத்தையும், நம்பிக்கைகளையும் ஆவேசப் படையலாகக் கொண்டிருப்பது. கல்வி முறையை வருணாசிரம முப்பட்டைக் கண்ணாடி வழியாகவும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் பின்புலத்திலும், தாராளமய காலத்தில் ஈவிரக்கமற்ற போட்டியின் பலிபீடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதன் வரைபடத்திலிருந்தும் பேசும் இந்த நூல், ஆரோக்கியமான கல்வி வெளி இருக்கவே செய்யும் நாடுகளையும் பெருமிதம் பொங்க எடுத்துக் காட்டுவது.  நமது சமூகத்தின் பேசுபொருளாகவே உருப்பெற வேண்டிய விவாதங்களை மாற்றுக் கல்விக்கான போராளிகள் ஆயுதங்களாக்கிக் கொள்ளமுடியும்.

     

    அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆழத்தில் உறைந்திருக்கும் ஆய்வாளர்களின் குருதியை, அவர்கள் எதிர்கொண்ட அவமதிப்புகளை, பேசப்படாது போன அவர்களது துயரக் கதைகளை, பறிமுதல் செய்யப்பட அவர்களது சுதந்திரத்தை, களவாடப் பட்ட அவர்களது உழைப்பை, நலம் கெட புழுதியில் வீசப்பட்ட அவர்களது அறிவுச் செல்வத்தை, இரா. நடராசன், மூதாதையருக்கான கடமை ஆற்றல் போன்ற பொறுப்புணர்வோடு வழங்கி இருக்கும் எழுத்துக்கள் அசாத்தியமானவை.

     

    அவரது வாசிப்பும், தேடலும், பன்முக அக்கறையும் எப்போதும் வியக்க வைப்பது. பாரதி புத்தகாலயத்தின் “புத்தகம் பேசுது” மாத இதழின் ஆசிரியராக அவரது பங்களிப்பு, தமிழ் வாசக உள்ளங்களைப் பரவசப்படுத்தவும், எட்டு திக்கும் சென்று இலக்கியச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்த்து பெருமைப்படுத்தவும், சலனப்படுத்தவுமாக அமைந்திருப்பதை வாசகர்கள் உணரமுடியும். வாசிப்பின் இன்பத்தை மகத்தான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து ஓயாது மேற்கோள் காட்டும் வற்றாத அருவி அவரது தலையங்கங்கள். “ஏகாதிபத்திய போர்வெறியர்களை சர்வதேச நீதிமன்றத்தின்முன் கொலையாளிகளாக நிறுத்துங்கள்” என்று துணிவோடு பேசிய ஹெரால்ட் பின்ட்டர் உள்ளிட்டோரின் நோபல் பரிசு ஏற்புரைகளை இரா.நடராசனின் எழுதுகோல் நமக்குப் பரிமாறி உணர்வூட்டியது.

     

    “விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகளுக்காக” பால சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கும் அவரை தமிழ் வாசகர்கள் பல்வேறு காரணங்களுக்காகவும் கொண்டாட முடியும். பெண் அறிவியலாளர்கள் குறித்த ஆயிஷாவின் கேள்வி அவரையும் துரத்தியதில் உலக பெண் விஞ்ஞானிகள் குறித்தும் எழுதியவர் அவர். கணிதம் குறித்த ஆர்வத்தை “மலர் அல்ஜீப்ரா” முன்வைத்தது. ஆயிஷா உள்ளிட்டு அவரது கதைகள் சில குறும்படங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றன. “ஆயிஷா ” தமிழில் லட்சம் பிரதிகளுக்கு மேல் மக்களைச் சென்றடைந்ததோடு, இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை உடையது.

     

    மிக அண்மையில் வந்திருக்கும் அவரது “டார்வின் ஸ்கூல்”, பரிணாம வளர்ச்சி குறித்த விஷயங்களை சிறுவர்கள் இலகுவாகச் சென்றடையும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கும் அரிய புனைவு.

     

    சில ஆண்டுகளுக்குமுன், பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி இதழின் ஆசிரியர் குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்ற கூட்டத்தில், குழந்தைகள் குறித்தும், கல்வி முறை பற்றியும் படக் காட்சிகளுடன் மிகுந்த தயாரிப்போடு வந்திருந்தார். பயணச் செலவு குறித்துக் கேட்கையில், தமக்கு உடனே தேவைப்படும் இயல்பியல் புத்தகம் ஒன்றை எப்படியாவது வாங்கி அனுப்புமாறு கேட்டுக் கொண்டு விடைபெற்றுச் சென்றார்.

     

    தனியார் கல்வி நிலையத்தின் புகழ் வாய்ந்த முதல்வராக இருந்தவண்ணம் அவரது அசாத்திய வாசிப்பும், எழுத்தாக்கமும் ஏற்படுத்தும் பிரமிப்பு, யாரிடத்தும் “எனக்கு நேரம் கிடைப்பதில்லை” என்று சொல்லவே கூச வைத்துவிடுகிறது. அவரது அயல்மொழி அலமாரி வசீகரமானது. சரளமான மொழியில் கவிதைகளைத் தொட்டுத் தொடங்கும் அவரது உரைகளின் வேகமும், ஆவேசமும் அவரது படைப்புலகத்தின் பேச்சு மொழியாக உருவெடுத்து விடுகிறது.

     

    இன்னுமின்னும் எங்களைத் திண்டாட விடுங்கள், அலைக்கழியுங்கள், ஆவேசம் கொள்ளச் செய்யுங்கள், வாளாவிருக்க விடாதீர்கள் என்றே கேட்டுக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது அவரை!

     

    **********************

    நன்றி: தீக்கதிர் – இலக்கியச் சோலை (நவம்பர் 24, 2014)

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “பூவைக் குமிடத்தில் பொன்வைப்போன் வள்ளலென்றால்,
    பூவைக்கும் பாதத்தில் பிள்ளையை -நீவைத்தாய்;
    கர்ண மகாப்பிரபு கேசவ் கலக்கும்நீ
    வர்ண மகாப்பிரபு வே” 

    “எதிர்காத்(து) இருப்பவர்க்கு ஏமாற்றம் தந்து
    எதிர்காத்தாய் வீசும் எவர்க்கோ -மதில்மேலே
    பூனைக்கீ டாமிரெண்டும்; பிள்ளை அழைத்தாலோ
    தூணைப் பிளந்துதெய்வம் தொப்….

    குழந்தை தெய்வமும் கேசவ் கொண்டாடும் தெய்வமும்….
    நம் நலம் பேணும் தாயும் சேயும் நலம் ….
    “ஓணமும் ஆதிரையும் ஒன்றிக் கலந்திட
    கானில் பிறந்தமணி கண்டனே ,-ஞானமே,
    தாய்மோ கினியவள் தாளில் பசித்திராய்
    போய்வன் புலிப்பால் பருகு”….கிரேசி மோகன் ….

    ஓணம் -அரி , திருவாதிரை -அரன்
    கானில் -காட்டில்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 24, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு இயக்குநர் கீதா இளங்கோவன் அவர்கள்

     

    Geetha-Ilangovan-267x300

     

     

    இந்தவார வல்லமையாளராக வல்லமைக் குழுவினரால்  பாராட்டப்படுபவர் ஊடகவியலார் கீதா இளங்கோவன் அவர்கள். இயக்குநர் கீதா இளங்கோவன், பலராலும் பாராட்டப்பட்ட “மாதவிடாய்’’ என்ற ஆவணப்படத்தை இரு ஆண்டுகளுக்கு முன்னர் (டிசம்பர் 2012) வழங்கியவர். அந்தப் படம் பெற்ற வரவேற்பைக் கண்டு மேலும் பல சமுதாய நலன் கருத்துக்களைக் கொண்ட ஆவணப் படங்களை தொடர்ந்து வழங்குவதாக ஊக்கத்துடன் உறுதி அளித்தார். மாதவிடாய் படத்தைத் தொடர்ந்து அவர் உருவாக்கியிருக்கும் “நம்பிக்கை மனுஷிகள்’’ என்ற குறும்படம் சென்ற சனிக்கிழமையன்று (நவம்பர் 22, 2014) ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. இம்முறையும், ஒரு சமூக அக்கறை கொண்ட படமாக “மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (தசைச்சிதைவு நோய்) என்றக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்ற இரண்டு சகோதரிகளின் தன்னம்பிக்கை நிறைந்த வாழ்வையும், நோயினால் துவண்டுவிடாது தங்களைப் போன்று பாதிக்கப்பட்டப் பிறருக்காக அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன் மூலம் மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்து உதவும் அச்சகோதரிகளின் ஆக்கப்பூர்வமான வாழ்க்கை முறையைத் தொகுத்து குறும்படமாக்கியுள்ளார். இப்பட வெளியீட்டிற்காக கீதா இளங்கோவன் அவர்களை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய பத்திரிக்கைத் தகவல் அலுவலகத்தில் ஊடகத் தகவல் அலுவலராகப் பணியாற்றும் கீதா இளங்கோவன் சமூகநல அக்கறை கொண்ட ஓர் இயக்குனர். இவரது புதிய வெளியீடான நம்பிக்கை மனுஷிகள் என்ற குறும்படமும், மற்ற இரு படங்கள் பற்றிய தகவல்களும் அவரது சமூக அக்கறையைத் தெளிவு படுத்துகின்றன.

    கீதா இளங்கோவன் இயக்கிய சமூகச் சிந்தனைக் குறும்படங்கள்:
    [1]
    நம்பிக்கை மனுஷிகள் குறும்படம் (2014 வெளியீடு)
    http://youtu.be/svH7fYOOnE4

    வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்னும் இரு சகோதரிகள் தசைச்சிதைவு என்ற கொடிய நோயினால் தாக்கப்படவர்கள். தசை செல்களின் புரதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மரபணுவில் ஏற்படும் கோளாறால் தசை நாளடைவில் தனது செயல்பாட்டை இழந்து விடும் நிலை ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு புதிய தசை செல்கள் உருவாக்கப்படாது இருக்கும் தசைகளும் அழியும் நிலை ஏற்பட்டு நோய் உடலை உருக்குலைக்கிறது. மனிதர்களின் தன்னிச்சை செயல்களான நடமாடுதல், தனது செயல்களைத் தானே செய்தல் போன்றவற்றை முதலில் பாதிக்கும் இந்த நோய், காலப்போக்கில் மோசமடைந்து உயிர்வாழ உதவும் அனிச்சை செயல்களான சுவாசிக்கும் நுரையீரல்கள், இரத்த ஓட்டத்திற்குக் காரணமான இதயத் தசைகளின் நிலையையும் பாதித்து உயிரிழப்பில் முடிவடைகிறது. மரபணுக் கோளாறால் உருவாகும் இந்நோய்க்கு இன்று வரை மருத்துவம் இல்லை. தொடர்ந்த உடற்பயிற்சியினால் சிறிது காலம் நடமாட்டத்தை நீட்டிக்கலாம் என்பதே இன்றுவரை இந்நோயின் நிலை.

    மூத்த சகோதரி வானவன் மாதேவி ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது முதலில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து வந்த இரண்டு ஆண்டுகளில் இளைய சகோதரி இயல் இசை வல்லபியும் பாதிக்கப்பட்டார். நடப்பதற்கே சிரமப்படும் நிலையை அடைந்த சகோதரிகளிடமும், இவர்களது பெற்றோர்களிடமும் மருத்துவர்கள் நோயின் நிலையையும், சிகிச்சையால் நோயைத் தீர்க்க வழியில்லை என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இருப்பினும், நோயினால் மனம் தளராது தங்கள் பெற்றோரைத் தேற்றியதுடன், பத்தாம் வகுப்புவரை பள்ளி சென்று கல்வியை முடித்துள்ளார்கள் இந்தச் சகோதரிகள். பிறகு தனிப்பட்ட முறையில் ப்ளஸ் டூ மற்றும் அஞ்சல் வழியில் டிசிஏ படித்திருக்கிறார்கள்.

    the great sisters2the great sisters

    கொடிய நோயினால் மனம் துவண்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் போராடும் இந்தச் சகோதரிகள், தங்களைப் போன்றே தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக “ஆதவ்” என்ற அறக்கட்டளையைத் துவக்கி அவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை அளித்து உதவி வருகிறார்கள். தற்பொழுது அவர்களது நோக்கம் தசைச்சிதைவு நோயாளிகளுக்காக மருத்துவமனை ஒன்றை அமைத்து சிகிச்சைக்கு வழி செய்வது. இந்த தளரா உள்ளம் கொண்ட சகோதரிகளின் தன்னம்பிக்கையையும் ஆக்கப்பூர்வமான பணிகளையும் கீதா இளங்கோவன் “நம்பிக்கை மனுஷிகள்” என்ற குறும்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படம் சகோதரிகளைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிகையுடன் வாழ்வை எதிர் கொள்ளவும், பொதுமக்களின் கவனத்தைக் கவர்ந்து அதன் மூலம் இச்சகோதரிகளின் அறக்கட்டளைக்கும், மருத்துவமனை அமைக்கும் நோக்கத்திற்கும் உதவும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. அதற்கும் மேலாக, குறையற்ற ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்தாலும் வாழ்க்கையைப் போற்றத் தெரியாதவர்களின் அறிவுக் கண்களையும் இக்குறும்படம் திறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

    ஆதவ் அறக்கட்டளை பற்றிய தகவல்களை கட்டுரையின் இறுதிப் பகுதியில் காணலாம்.

    [2]
    மாதவிடாய் குறும்படம் (2012 வெளியீடு)
    படத்தின் ஒரு சிறு பகுதி
    http://youtu.be/9JI_G7NuUR8

    பெண்களின் உடலின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக, பருவமடைந்த பிறகு இயற்கையாக அவர்கள் எதிர்கொள்ளும் `மாதவிடாய்’ எனப்படும் மாதாந்திர உதிரப்போக்கு என்பது பற்றிய ஒரு சரியான புரிதலின்றி, அதுவே பெண்களை ஒடுக்கி வைக்கும் செயலாக நம் நாட்டில் அமைந்துள்ளது. இந்த அறியாமையை, 40 மணித்துளிகளில் செய்தி தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓர் ஆவணப்படமாக கீதா இளங்கோவன் தயாரித்தார். “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்ற அறிமுகத்துடன் வெளியாகி மக்களின் கவனத்தைக் கவர்ந்தது. பல சமூக நிலைகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கருத்துக்களை அதில் பதிவு செய்தனர். மாதவிடாய் என்பது ஒரு விவாதத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்வாக, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தக்க வசதியை செய்துதராமல், அவர்களை கீழ்மைப்படுத்தும் தீண்டாமை செயலாக மட்டுமே மக்கள் எண்ணியிருப்பதை அப்படம் வெளிக்கொணர்ந்தது.

    Geetha-Ilangovan-1Geetha-Ilangovan-11

    மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் ஒழித்து பெண்கள் சுகாதார முறையில் மாதவிடாயை எதிர்கொள்ள பள்ளிகளில் பாலியல் கல்வி தேவை என்பது கீதா இளங்கோவன் அவர்களின் கருத்து. “பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி பாலியல் கல்வி” என்று கீதா இளங்கோவன் வலியுறுத்துகிறார். மேலும், ”இந்த ஆவணப்படம், பெண் உலகின் சிரமங்களை, ஆண்கள் புரிந்துகொள்ள நிச்சயம் ஒரு கருவியாக இருக்கும்!” என்ற நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

    [3]
    லிட்டில் ஸ்பேஸ் (2011 வெளியீடு)
    http://youtu.be/oiB6oeGb2t8

    ‘லிட்டில் ஸ்பேஸ்’ என்ற மிகச்சிறிய படம் ஓர் ஐந்து மணித்துளிகள் கால அளவில் தொடர்வண்டி பயணத்தில் பயணிக்கும் மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவன் எதிர் கொள்ளும் நிகழ்வுகளைத் தொகுக்கிறது. இதில் கீதா இளங்கோவனும் நடித்துள்ளார். உரையாடல்களற்ற, இசைப் பின்னணியில் மாற்றுத்திறனாளிகளின் தேவையை எடுத்துரைக்கிறார். இப்படம் பல பரிசுகளையும், ஹைதராபாத்தில் நடந்த, உலக சிறுவர்களுக்கான படவிழாவிலும் திரையிடப்பட்ட சிறப்பையும் பெற்றது.

    ஊடகங்களினால் சமுதாயப் போக்கையையே மாற்றியமைக்க முடியும் என்பது உலகறிந்த உண்மை. இதனை உணர்ந்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை, ஆனாலும் பெரும்பாலும் விவாதத்திற்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் செய்திகளை சிறப்பான குறும்படங்களாக உருவாக்கி மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பணியைத் தொடர்ந்துவரும் இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்து பாராட்டி, வாழ்த்தி அவரது அடுத்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.

    ***

    கீதா இளங்கோவன் அவர்களின் மின்னஞ்சல் முகவரி: geetaiis@gmail.com
    வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி சகோதரிகளிடம் பேசுவதற்கான எண்: 99763 99403

    ஆதவ் அறக்கட்டளை நிர்வாக அலுவலக முகவரி:
    ஆதவ் அறக்கட்டளை
    489-B, வங்கி அலுவலர் குடியிருப்பு
    அஸ்தம் பட்டி, சேலம் -636007
    தமிழ் நாடு, இந்தியா
    தொடர்பு எண் :00919976399403

    ஆதவ் ட்ரஸ்ட்

    நன்கொடைகளை “Aadhav Trust” என்ற பெயருக்கு (Cheque / DD) அனுப்பலாம்.
    Bank Name : Canara Bank
    SB Account Name: Aadhav Trust
    Branch : Suramangalam
    Name : A/c No : 1219101036462
    IFSC Code: CNRB0001219
    MICR Code: 636015005
    வழங்கும் நன்கொடைகளுக்கு வருமானவரி கணக்கு பிரிவு 80G ன் கீழ் வரிவிலக்கு உண்டு.

    சகோதரிகள் வானவன் மாதேவி, இயலிசை வல்லபி ஆதவ் அறக்கட்டளை பற்றிய தகவல்கள் அறிய:
    [1] http://www.aadhavtrust.org/
    [2] https://www.facebook.com/pages/Aadhav-Trust/185118278177615?sk=photos_stream&ref=page_internal
    [3] https://aadhavtrust.wordpress.com/2013/10/25/aadhav-trust-inauguration-of-home-computer-center-library/

    கட்டுரைக்கான படங்கள் உதவி:
    http://www.thehindu.com/
    http://www.penniyam.com/

    தகவல்கள் உதவி:
    [1] http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/why-is-it-the-dirty-word/article4405543.ece
    [2] http://www.thehindu.com/features/cinema/why-is-it-the-dirty-word/article4386137.ece
    [3] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/uneasy-attitude-towards-menses/article4503438.ece
    [4] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/documentary-that-brings-to-light-issues-faced-by-women/article4325003.ece
    [5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1121126
    [6] http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=27656
    [7] http://news.vikatan.com/article.php?module=news&aid=35198
    [8] http://puthu.thinnai.com/?p=26556
    [9] http://www.tamilnewstime.com/ta/content/4675
    [10] http://www.penniyam.com/2014/04/blog-post.html
    [11] http://tamilamudam.blogspot.in/2014/11/blog-post_22.html

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • என்னத்தைச் சொல்ல! – 5

    –இன்னம்பூரான்.

     

    வாலு போச்சு! கத்தி வந்தது !

     

    neyyiபாலில் தண்ணீர் கலந்தார்கள். அதை மாதக்கணக்காகக் கச்சிதமாகவே செய்தார்கள். மனசாக்ஷியை அடகு வைத்தார்கள். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை லஞ்சாபரணங்கள்.

    அதற்கு முன்னால், செங்குன்றத்திலியோ, கருங்குளத்திலியோ, குதிரை சாணம் கலந்த தேயிலை சக்கைப் போடு போட்டது. சாயா குடிக்க எனக்கு பயம். அதற்கு முன்னாலே, அரிசியில் கல் கலந்தார்கள். இந்த மாபாவிகள் சுண்டைக்காயை கல்யாணபரங்கி என்று கூட விற்றுவிடுவார்கள். அல்லது, சில வருடம் முன் சொல்லப்பட்டப்படி கலப்பட மருந்துகளையும் காலாவதி மருந்துகளையும் விற்று கொலை செய்தார்கள். மஞ்சள்பொடி தான் க்ளோரோமைசிட்டீன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

    conviction-news3இன்றைய கலப்படம்: நெய்க்கு வந்த சோதனை. இரண்டு வருஷம் முன்னால் திருநெல்வேலியில் நடந்தது. இப்போது அதருமமிகு சென்னையின் சந்தைக்கடை தி.நகரில் கண்ணம்மா பேட்டை. அங்கு சுடுகாடுகள் இரண்டு உள்ளன. ஒன்றில் இறந்தவர்களுக்குக் கொள்ளி வைப்பார்கள். மற்றொன்று முத்துரங்கன் தெருவில் இருப்பதாக ஹிந்து இதழில் இன்று செய்தி. ஊரை சொன்னவங்க பேரை சொல்லாமல் விட்டுட்டாங்க. அந்த தெரு கடைக்காரன் நம்மை எல்லாம் உயிரோடு கொளுத்தும் இனம். அவனிடமிருந்து பிடித்த ஏழு டன் நெய்யில், நிறம் மாற்றிகள், டால்டா, பாம் ஆயில் போன்றவை 90%. மேலே தடவிய நெய் 10%. இதில் தான் நான் வாங்கி சாப்பிட்ட தீபாவளி மருந்து கூட. இப்ப புரியுது, ஏன் என் வயிறு கொதித்தது என்று. இந்த அழகில் கறுப்புப் பணாதிபதிகளைப் போல பினாமி விலாசங்கள். எல்லாம் பொய். வியாபாரம் அண்ணா நகரில் கொடி கட்டிப் பறந்தது. ஒரு சமாச்சாரம் புரிந்து கொள்ள வேண்டும். வியாபாரி அயோக்யன் என்றாலும், கலந்தது, பொய் சீட்டு டப்பாவில் ஒட்டியது, சில்லறை வியாபாரம் எல்லாரும் நடுத்தர மக்களே/ஏழை மக்களே. அவர்களால் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதும் நடுத்தர மக்களே/ஏழை மக்களே.

    என்னத்தைச் சொல்ல !
    வாலு போச்சு!
    கத்தி வந்தது !

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com
    -#-
    சித்திரத்துக்கு நன்றி: மாலைமுரசு
    http://foodsafetynews.files.wordpress.com/2012/06/conviction-news3.jpg

    நெய் !!

    Share
  • நிரந்தரக் கவிதைகள்!

     சந்தர் சுப்பிரமணியன்

    books55

    ஆயிரம் கவிதை நூல்கள்
    .. அருஞ்சுவைத் தமிழிற் கண்டோம்
    போயின காலம் யாவும்,
    .. போயினும் போகா தின்றும்
    வாயினில் வழக்கில் நம்முன்
    .. வாழ்ந்துகொண் டேயி ருக்கும்
    தோயுந்தீங் கவிதை ஏதோ?
    .. தொகுத்தனம் கவிதை யாலே (1)

    ஊரெலாம் தமதே என்றான்,
    .. உறவினர் எவரும் என்றான்,
    சாருநற் பண்பும் தீதும்
    .. தருவதால் வாரா தென்றான்;
    நேரிய வழிகள் எல்லாம்
    .. நிறைந்துள கணியன் பாடல்,
    நீருள வரையில் வாழும்
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (2)

    இனியநற் சொற்கள் அன்பை
    .. இயல்புடன் அளிக்கத் தோதாய்க்
    கனிகளாய்க் காத்தி ருக்கக்
    .. காய்ந்திடும் சொல்லாற் பேச்சை
    முனைவதில் பயனே இல்லை;
    .. முறையுடன் இனிமை தன்னை
    நினையெனும் குறளே மண்ணின்
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (3)

    நற்றுணை நமக்கு நீறே
    .. ஞானசம் பந்தன் கூற்று;
    மற்றெதும் தேவை யில்லா
    .. மந்திரம், அதுவும் நீறே
    சொற்களிற் சுவையைச் சேர்த்துச்
    .. சுந்தர மாகும் நீற்றை
    நிற்குமோர் விதமாய்ச் சொன்னான்;
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (4)

    வஞ்சியை மாடம் ஏற்றி
    .. வளைந்தவள் விழிகள் நோக்க
    மிஞ்சிடும் அழகன் தன்னை
    .. மிடுக்குடன் நடக்க வைத்துக்
    கொஞ்சிடும் அவர்தம் பார்வை
    .. கொடுத்தனன் நமது கண்ணில்;
    நெஞ்சினுள் கம்பன் தைக்கும்
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (5)

    எத்தனை கோடி யென்றான்
    .. எழுமெலாம் இறையே என்றான்
    சித்தினை அசித்தோ டேற்றும்
    .. சிந்தையின் தெளிவி னாலே
    பக்தியின் நிலையைப் போற்றி
    .. பாரதி வழங்கும் பாடல்
    நித்தமும் நெஞ்சில் நிற்கும்
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (6)

    கருப்படு பொருளைக் கண்டு
    .. கவிதையுள் அதனைக் கூட்டி
    உருப்பட வைக்கும் விந்தை
    .. உணர்ந்தவன் கவிஞன் என்னும்
    பொருட்பட கண்ண தாசன்
    .. புதுநிலைக் கணித எண்ணம்
    நிரப்பியப் பாடல் ஒன்றே
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (7)

    ஓங்கிடும் மொழியிற் சந்தம்
    .. ஒலிக்குநல் தொடையைத் தேர்ந்து
    பாங்குடன் கருத்தைச் சேர்த்துப்
    .. பாட்டினுட் பொருளாய் யாத்துத்
    தேங்கிடும் அமுதச் சாறாய்த்
    .. தேந்தமிழ்ச் சொற்கள் கோக்க
    நீங்கிடா தொலிக்கும் எங்கும்
    .. நிரந்தரக் கவிதை அன்றோ (8)

    பொட்டினில் அறைந்தாற் போலே
    .. புலன்களை எழுப்பச் செய்து,
    கொட்டிய முத்தாய்ச் சொற்கள்
    .. கொஞ்சிடப் பொருளைக் கூறிச்
    சொட்டிடும் தேனாய் நெஞ்சில்
    .. சுகந்தரும் சந்தப் பாட்டே
    நிட்டையிற் கூட நிற்கும்
    .. நிரந்தரக் கவிதை அன்றோ (9)

    Share
  • ‘இல்லை’ இல்லை இனி…

    -செண்பக ஜெகதீசன்

    வையத்தின் கதையிதுதான்,
    வைத்துக்கொள் மனதினிலே…

    மலர்ந்த மலர்களெல்லாம்
    மணப்பதில்லை,
    மலர்ந்து மடிந்து
    உதிர்ந்தவையெல்லாம்
    உருவாக்கவில்லை
    காயை, கனியை, விதையை…

    மந்தை மந்தையாய் வந்த
    மேகக் கூட்டமெல்லாம்
    மழையைப் பொழியவில்லை…

    கடலடியில் காணும்
    கணக்கில்லாச் சிப்பியெல்லாம்
    கொண்டதில்லை முத்தைத் தம்மில்…

    கழனி விளையும்
    நெல்மணியெல்லாம்
    நல்மணியாய் ஆவதில்லை…

    இந்த
    ’இல்லை’யென்பது வேண்டாம்
    இனிய மனிதனே உன் வாழ்வில்,
    இருக்கும் நாளில்
    எதையாவது செய்திடு உருப்படியாய்,
    இதை
    ஏற்றுக்கொண்டிடு கருத்தினிலே…!

     

    Share
  • நாகர்கள் 1

    விசாலம்

    என் பள்ளியில் வருடாந்திர பரிசு விழாவின் போது ஓரு வித்தியாசமான நடனம் வைக்க எண்ணி மூங்கில் நடனம்  ஒன்றைத்தயாரிக்க முயற்சித்தோம்  {bamboo dance}. இதற்காக நாகாலாந்து பெண்மணியை அழைத்தோம். அவள் தில்லியில் இருந்ததால் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புத்துக்கொண்டு நடனம் சொல்லிக்கொடுக்கவும் ஆரம்பித்தாள். அவளிடம் பழகியதில் நாகாலாந்தின் மக்கள், கலாச்சாரம் பற்றி பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்.  அவள் எனக்கு நல்ல தோழியும் ஆனாள். அவள் சொன்னதில் சில பகுதிகளை இங்கு எழுதுகிறேன். அவளது பெயர் என் வாயில் நுழையவில்லை. ஆதலால் அவளை ரீமா என்று பெயரிட்டு அழைத்தேன்.

    “ரீமா, உங்கள் இடத்தில்  எது மிகவும் பெயர் போன இடம்? எங்கு எல்லோரும் வருகை தருகிறார்கள்?”

    “அதுவா … முதலில் கோஹிமாவைச் சொல்லலாம்.”

    “உங்களைப் பார்க்க கொஞ்சம் சீனா, கொஞ்சம் ஜப்பான்  மக்களின் சாயல் தெரிகிறதே. “

    “இல்லை இல்லை. நாங்களும் பாரதத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்று எங்கள் முன்னோர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். இந்தியர்களைப் போலவே  எங்களுக்கும் மந்திரம், பூஜை,  இசை எல்லாம் உண்டு. நாட்டுப்பாடல்கள் அதிகமாக பாடுவோம். எங்கள் ஊரில் எங்கள் முன்னோர்கள் இருந்த இடத்தில் 12 அடி நீளம் 4 அடி அகலம் கொண்ட ஒரு கல் வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா மேடம்?”

    “இல்லையே! ஏன் அந்தக் கல்லில் என்ன விசேஷம்?”

    “கேஸாகேனோமா என்ற குடியிருப்பு பகுதியில் இந்தக் கல்லைக் காணலாம். இந்தக் கல்லுக்கு கிடைக்கும் மரியாதை அபாரம். மக்கள் தினசரி இங்கு வந்து பயபக்தியுடன் கண்களை மூடியபடி தியானித்து பின் காணிக்கை செலுத்துவர். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளையும் இங்கு அழைத்து வந்து அவருக்காக ஆசிகள் வேண்டி மந்திரங்களை படிப்பார்கள்.”

    “ரீமா,  இது ரொம்பவே இன்டெரெஸ்டிங், இன்னும் இந்தக் கல்லைப் பற்றி  சொல்லு.”

    “எங்கள் முன்னோர்கள் காலத்தில் இந்தக்கல்லுக்கு ஒரு மேஜிக் சக்தி இருந்ததாம். காலையில் இந்தக்கல்லின் மேல் நெற்மணிகளைப் பரப்ப  மாலையில் அது இரண்டு பங்காக வளர்ந்து விடுமாம். இந்தக்கல்லை வைத்தவர்கள் இதைப்பயன்படுத்திக்கொண்டார்களாம்.  அந்தக் கதையைச் சொல்லட்டுமா?”

    “ஆஹா! இதைத்தான்  நான் எதிர்ப்பார்த்தேன். சொல்லு.”

    “நாகர்களின் பாரம்பரிய வரலாறு இது. அவர்களின்  ஆதி முன்னோருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கு திருமணம் ஆனது  குடும்பத்தைக் காப்பாற்ற  விவசாயம் கைக்கொடுத்தது. அப்போதுதான் ஒரு கல் அவர்கள் கண்ணில் பட்டது. அந்தக் கல்லில் மந்திரம் உருவேற்றப்பட்டதால் அதில் ஒரு மாதிரி தெய்வ சக்தி இருந்தது . இதை அந்தப் பிள்ளைகள் கண்டுபிடித்தனர். ஒரு நாள் அந்தக் கல்லின் மேல் காலையில் தானியங்களைக் காய வைக்க  மாலையில் அது இரண்டு மடங்கு அதிகமாகி இருந்தது. இதைக் கண்டப்பின் தினமும் அந்த மூன்று சகோதரரும் போட்டிப்போட்டுக்கொண்டு  அந்தக் கல்லின் மீது தானியங்களைப் பரப்ப ஆரம்பித்தார்கள். இதனால் அவர்களுக்குள் சண்டை வராமல் இருக்க அந்த மூன்று பிள்ளைகளும் ஒரு அட்டவணைப் போல் போட்டுக்கொண்டு அதன் பிரகாரம் அவரவர்கள் முறை வரும் போது தானியங்களைப் பரப்பி அதை இரட்டிப்பாக ஆக்கிக்கொண்டனர் ஆனாலும் பேராசை யாரை விட்டது! தானியங்களுக்கு பதிலாக செல்வத்தை வைக்க ஆரம்பித்தனர். அதுவும் இரு மடங்கு ஆனது. அவர்கள் நடுவே போட்டியும் சண்டையும் வந்தது. அவர்களது தந்தை இதைப் பார்த்து நொந்துப் போனார். பின்னர் அந்தக் கல்லினால் தானே  ஒற்றுமை குறைந்து சண்டை வருகிறது என்று அந்தக்கல்லை நெருப்பில் போட்டார். இதனால் அந்தக் கல்லில் விரிசல் உண்டானது. அந்தக் கல்லின் ஒளியும் குறைந்தது. அந்தக் கல்லில் இருந்த ஆத்மா சுவர்க்கத்திற்கு போய்விட்டது. கல்லுக்கு இருந்த மேஜிக் சக்தியும் போய்விட்டது.”

    “அப்புறம் என்ன ஆச்சு? அந்தப் பிள்ளைகள் என்ன செய்தார்கள்?”

    “அவர்கள் மூன்று திசைகளில் தனித்தனியே சென்று பிரிந்து விட்டனர். அவர்கள் வழி வந்த மலை வாசிகளே அங்காமா, சேமா, லோத்தா போன்றவர்கள். அவர்கள் பலவேறு நாக மக்களை உண்டுபண்ணினர். ஒரு நாள் அந்தக்கல்லில் திரும்ப  தெய்வீக அம்சம் திரும்பும் என்ற நம்பிக்கை வைத்திருக்கின்றனர்  அந்த  மக்கள்.”

    “வந்தால் நன்றாக இருக்கும் இல்லயா ரீமா? நானும் அதில் என் ரூபாய் நோட்டுக்களை அடுக்கவா?” என்று சொல்லி சிரித்தேன்.

    “இன்னும் கேள். இதைத் தவிர அந்தக் கிராமத்தில் ஒரு ஸ்பெஷல் மரம் இருக்கிறது. அங்கு பறவைகளுக்கு ஆண்டு விழா நடைப்பெறும் இது எப்படி இருக்கு?”

    “அட  பறவைகளுக்கு ஆண்டு விழாவா? கேட்கவே ஜாலியாக இருக்கிறதே!”

    “ஆம் அந்த மரத்தில் ஆயிரக்கணக்கான  பறவைகள் வாழ்ந்து வருகின்றன.  டிசம்பர் மாதம் இந்த விழா நடக்கும். நாகர்களின் யாராவது ஒருவன்  தான் ஒரு மகானாக மிகச்சிறந்தவனாக ஆக வேண்டும் என்றால் அவன் அந்த மரத்திலிருந்து ஒரு பறவை பிடித்து வரவேண்டும். அப்படி செய்தால்தான் அவனுக்கு வழிபாடு செய்ய அதிகாரம் கிடைக்கும் அந்த அதிகாரமும் மிகுந்த மரியாதையுடன் ஒரு சடங்கு போல் நடத்தப்படும். எங்களது  விசேஷ  நாட்களில்  எங்கள்  அருகில் குடியிருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் விருந்து வைக்கும் பழக்கம் எங்களிடம் உண்டு.”

    “ஆமாம் ரீமா  நாங்களும் முக்கிய பண்டிகையின் போது பல உறவினர்கள் கூடி கொண்டாடி மகிழ்வோம். ஆனால் இந்த வழக்கம் கிராமத்தில்தான் இன்னும் நிலைத்து நிற்கிறது. நகரத்தில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது .”

    “எங்கள் கிராமத்தவருக்கு விருந்து வைத்தப்பின் அது ஒரு  ஸ்பெஷல் தினம் என்பதை அறிவிக்க ஒரு கல்லை அங்கே நிறுத்தப்படுகிறது. இந்தக்கல் நாட்டும் பழக்கம் இப்போதும் தொடருகிறது. விருந்தோம்பல் என்பது எங்களுக்கு மிக முக்கியம் . நாங்கள் எந்த அன்னியரையும் மனம் திறந்து வரவேற்போம். பணிவிடையும் செய்வோம்.”

    “ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் வெகுகாலத்திற்கு முன்பாகவே  நெருங்கிய  தொடர்ப்பு  இருந்திருக்க வேண்டும் ஆரியர்கள் போலவே  நீங்களும்  திருவிழாக்களை மந்திரம். இசை, நாட்டுப்படல்களுடன் கொண்டாடுகிறீர்கள். நாங்கள் சில இடங்களில் சுயம்புவாக வரும் கல்லில் சிவலிங்கத்தையும், மாரியம்மனையும், பிள்ளையாரையும், அனுமாரையும் காண்கிறோம். அங்கு பூஜையும் செய்கிறோம். நீங்களும் மந்திரத்துடன் பிரதிஷ்டை செய்யும்  கல்லை தெய்வரூபமாக பார்க்கிறீர்கள். எல்லா இடங்களிலும் செயல்படும் விதம் வித்தியாசமாக இருக்கிறதே தவிர நம்பிக்கை மூலதனமாக இருக்கிறது இல்லையா?”

    “ஆம் எல்லாமே நம்பிக்கையின் மேல் தான்  நடக்கிறது.  முன்பு ஜப்பானிய போரில்  ஜப்பானிய படை கோஹிமாவிலும் வந்தது பாரத சிப்பாய்களில் இருந்த வீர நாகர்கள்  அணி திரண்டு  அவர்களை மேலே வரமுடியாமல் செய்து விட்டனர். அவர்களும் எப்படியாவது முன்னேறி விடவேண்டும் என்று பிரயத்தனம் செய்தனர். ஆனால்  நாகர்கள்  அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர். அந்த மகிழ்ச்சியில் வெகு தூரத்திலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்தனர் அதை மணிப்பூர். பீமாபூர் சந்திக்கும் நாற்சந்திக்கு இடையே நிறுவப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு வாசகமும் எழுதப்பட்டிருக்கிறது,

    “நீங்கள் உங்கள் வீடு செல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு அடிக்கடி சொல்வது இதுவே. நீங்கள் நாளை உயிரோடு வாழ நாங்கள் இன்றே விடுதலை வழங்குகிறோம்.”

    Share
  • சுமையென்று நினைத்து . . .

    வில்லவன் கோதை

    நாட்டு ஓடு வேயப்பட்ட அந்த வீடு அழுக்கேறிக் கிடந்தது.

    மரச்சட்டங்களால் தடுக்கப்பட்டிருந்த அதன் கதவுகளில் பழமையான பூட்டு ஒன்று  தொங்கிக்கொண்டிருந்தது.

    தயங்கித் தயங்கி அந்த வீட்டின் முன் நிற்கிறான் கார்த்தி.. இத்தனைக்கும் அவன் பிறந்து வளர்ந்த வீடுதான். இன்று அவனுக்கே அன்னியமாக தோன்றுகிறது.

    நடுத்தர வயதைக்கடந்த  மெலிந்த  பெரியவர் ஒருவர் குறுக்கிடுகிறார்.

    “வாத்தியார்  வைரமுத்து …”

    கார்த்தி வாக்கியத்தை முடிக்கவில்லை.

    “ஆமா தம்பி. .இப்ப அவுரு இல்லீங்க .கொஞ்ச நாளைக்கு முன்னால தவறிட்டாருங்க.“

    பெரியவரின் பதில் கார்த்தியின் உடலிலும் உள்ளத்திலும் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

    அப்ப  அவுரு பொண்ணு.

    “பாப்பாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சிங்க. மாப்பிள்ள கும்மோணம் பேங்ல செக்குரிட்டியா இருக்கிறதா கேள்வி.  வாத்தியாரு கல்யாணம் முடிஞ்சி  கொஞ்ச நாள் இங்கதான் இருந்தாருங்க.அப்ரம் பாப்பாவே கூட்டிகிட்டு போயிடுச்சிங்க..  நீங்க. தம்பி …“

    முதன் முறையாக வாத்தியாரின் மூத்த பிள்ளை என்று சொல்லிக்கொள்ள அவன் நா  தடுமாறுகிறது.  அப்படி ஒன்றும் கார்த்தி தப்பானவன் இல்லை.

    “தெரிஞ்சவுங்க..”

    “ வடக்குத்தெருவுல சீனுவாசன் டாக்டர் வீட்டுக்கு நேர் எதிர்வீடு. போனா பாப்பாவ பாக்கலாமுங்க. “

    கார்த்திக்கு தெரியாமல் நிகழந்துபோன தகவல்களை தொட்டுக்காட்டிய பெரியவர் நகர்கிறார்.

    நெஞ்சில் ஒரு இனம் புரியாத படபடப்பு. அவன் நினைவுகள் பின்னோக்கி அலசுகிறது.

    கடைசியாக அப்பாவையும் இழந்துவிட்டேன். அன்று நான் செய்த முடிவு என்னைப்பொறுத்தவரை தவறென்று தோன்றவில்லை. இருந்தும் இன்று இந்த மஞ்சுவைக்கூட  எதிர் கொள்ள போதுமான துணிவு எனக்கு ஏன் ஏற்படாமற்போயிற்று.

    இருபது வருஷம் கழிந்தபின்னும்  ஏன் இந்த குற்ற உணர்வு   !  மன உருத்தல். !

    சொற்ப வருமானத்தில் போராடிக்கொண்டிருந்த அப்பாவை உதறி நான் ஓடியிருக்கக்கூடாது.

    கனவுகளோடு கல்யாணத்தை உறுதி செய்து கொண்டிருந்த அந்த புதுப்பெண் , தீராத நோயுற்ற அம்மா  , அடுத்த பத்து வருஷத்தில் கரைசேற்க வேண்டிய தங்கை…

    நான் பொறுபற்று திரிந்தபோதும்  ஓய்வின்றி உழைத்து எங்களைச்சுமந்தவர் அப்பா. அம்மாவின் முடிவற்ற மருத்துவச்சுமைக்கிடையே என்னை முதுகலை பட்டாதாரி ஆக்கி மகிழ்ந்தவர்.

    தான் சுமக்கும் சுமைக்கு காலப்போக்கில் இவன் ஒரு சுமைதாங்கியாக இருப்பான் என்று நினைத்திருப்பாரோ என்னவோ.

    அவரை தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றிவிட்டேன்.

    அவர் தேடித்தந்த பலவேறு வேலைகள் அன்று என் கவுரவத்துக்கு இழுக்காக தோன்றிற்று.

    ச்சே ! என்ன காரியம் செய்தேன்.

    கார்த்திக்கு நினைவெல்லாம் கசந்தது.

    அன்று மனைவி உடல் மோசமடைய கார்த்திக்கு  கால்கட்டு போட நினைத்தார் வைரமுத்து வாத்தியார்.

    பெண்ணுக்கொன்றும் குறையில்லை. கார்த்திக்குகூட சம்மதம்தான். ஆனால் பெண்ணின் வயது முதிர்ந்த பெற்றோர் அவன் நினைவுகளில் இடறினர். அவர்களையும் சுமக்கக்கூடிய சூழல் ஏற்பட்டால்     என்ன செய்வதென்ற ஒரு அதீத கற்பனை.  கிடைத்திருக்கிற வாழ்க்கையில் சுமையின்றி சுதந்திரமாக பறக்கவிரும்பியவன். அதுதான் அவனுக்கு முக்கியம்.இந்த உறவுக்கு அவன்  தயாராயில்லை. .

    “ நம்ம குடும்பத்துக்கேத்த நல்ல பொண்ணுடா. ஒன்ன நம்பி நிச்சியம்கூட  பண்ணிட்டேன்..இதில ஒனக்கு இஷ்டமில்லேண்ணா அத்தோட உட்டுடு. அப்ரம் என் மொகத்தலயே விழிக்காதே. “

    தன் கனவுகள் தன் கண்ணெதிரே நொறுங்கிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையில்  விருட்டென்று எழுந்து கொல்லைபுறம் போகிறார் அப்பா.

    கல்யாணம் என்பதையே கால்கட்டு என்றுதானே சொல்கிறார்கள். அந்த கட்டை தானே போட்டுக்கொள்ள விரும்பாமல் வீட்டைவிட்டு வெளியேறி அன்று இரவில் சென்னைக்கு ரெயிலேறுகிறான் கார்த்தி

    பையன் யாரையோ லவ் பண்ணியிருக்கான். அதான் விட்டுட்டான் சவாரி !

    ஊரே கூடிக்கூடி பேசியிருக்கும். அப்பா முகம் எப்படி இருந்திருக்கும்.

    இந்த தேசத்தின் வரைபடங்களில் மட்டுமே அறிந்திருந்த  பல்வேறு பிரதேசங்களில்  நாயாக அலைந்து  இறுதியில் கொல்கத்தா நகரில் ஒரு ட்ராவல்ஸ் நிறுவனத்தில் அடைக்கலமாகிறான்.. அதுவரை அவன் சந்தித்த துயரங்கள் கேட்க சகிக்காதவை.

    இருபது  வருடம்கள் முடிந்து போனது.

    நாடெங்கும் சுற்றிய கார்த்தி இந்தமுறை ஒரு சுற்றுலா குழுவினரோடு தமிழகம் வந்தபோது அவன் நெஞ்சில் புதைக்கப்பட்டிருந்த நினைவுகள் அவனை இங்கே இறக்கிற்று.

    வெளி வராண்டாவில்  இந்து யாரிடமோ பேசும் குரல் கேட்டு வெளியே வந்தாள் மஞ்சுளா.

    “மஞ்சுளா அம்மா வீடு இதுதானேண்ணு இந்த மாமா கேட்டார். மஞ்சுளா வீடுதான் இது. அவுங்க அம்மா வீடுல்லண்ணு சொன்னேன். “

    வீட்டுப்பாடங்களை செய்துகொண்டே பதிலளித்தாள் இந்து. பத்து வயது இருக்கக்கூடும். மீண்டுமொருமுறை காணவிரும்பும் வசீகரமான சிவந்த முகம். துருதுருவென்ற பார்வை.

    தோளில் கருப்புப்பையொன்றை மாட்டியவாறு  கலைந்த முடியோடு நின்றிருந்த அந்த இளைஞனைப்பார்த்தும் இனம் புரியாத குழப்பமும் அதைத்தொடர்ந்து எதிர்பாராத வியப்பும் அடைந்தாள் மஞ்சுளா.ஏறத்தாழ தன்னையொத்த சாயலில் அவன் இருப்பதை உணர்ந்து அவள் அறியாமல் உடலெங்கும் மகிழ்ச்சி அலைகள் பரவின.

    அவனுக்கும் அதே மாதிரியான மனநிலைகள் ஏற்பட்டிருக்கக்கூடும்.

    “வா ண்ணா ! “

    அடுத்த சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிய மஞ்சுளா அண்ணனை வரவேற்றாள். உள்ளே  நுழைந்த கார்த்தி  கைப்பையை கீழே வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.

    இந்துவுக்கு நடப்பது வித்தியாசமாய் தெரிந்தாலும் அவள் வீட்டுப்பாடத்தில் லயித்திருந்தாள்.

    “நல்லாருக்கியா அண்ணா  “

    எதிர் இருக்கையில் அமர்ந்த மஞ்சு பேச்சைத்துவக்கினாள்.

    கார்த்தி நா வரண்டுபோனதை உணர்ந்தான் .எந்த சொற்களும் அவனிடமிருந்து வெளியேறவில்லை. குளிர்ந்த நீரை ஒரு டம்ளர் நிறைய கொண்டுவந்து வைத்தாள் மஞ்சுளா.

    “இருபது வருஷத்ல ஒனக்கு எங்க நெனைப்பு ஒருதடவகூட வரல. அப்பா அன்னிக்கு அவரது இக்கட்டான சூழல்ல சொன்ன ஒரு வார்த்த ஒனக்கு பெரிசா போயிடுச்சி. அவர் கடைசிவரைக்கும் நீ வருவே வருவேண்ணு ..  போ . . ண்ணா ! “

    ஆத்திரமும் அழுகையும் பீரிட்டு வெளியேறுகிறது. நெஞ்சுக்குழியில் ஏதோ அடைப்பதை உணர்ந்தாள் மஞ்சுளா.

    துக்கத்தை மறைத்து அடுக்களைக்குள் நுழைந்த மஞ்சுளா .. .

    “அன்னிக்கு நிச்சியம் பண்ண  பொண்ணு நெலய நீ நெனச்சி பாத்தியா. ஊரே அப்பா மொகத்ல காரி துப்புச்சி. “

    அடுப்பிலிருந்த பாலை இறக்கி பில்டரில் இருந்த  டிகாஷத்தை சர்க்கரையோடு அளவாக கலந்து அண்ணனுக்கு முன்னாலிருந்த  மோடாவில் வைக்கிறாள்.

    காபியின் மணம் அந்த அறையை நிறைக்கிறது. கார்த்தியின் குற்ற உணர்வு அந்த மணத்தை விழுங்குகிறது.

    வலதுகையால் முகத்தைத் தாங்கியவாறு  பதில் ஏதும் பேசாமல் இருக்கையில் இருந்தான்  …

    “நீ போயி பத்து நாளைக்கெல்லாம் அம்மா போயிட்டாங்க. பெத்த பெண்ண எப்டி கரைசேர்க்கபோறோம்ங்ற பயம் அப்பாவுக்கு. அப்பாவோட ப்ரண்ட் மூலமா வந்த இவர்தான் எங்கள இக்கட்டான சூழல்லேயிருந்து விடுவிச்சார்.

    “அதுமட்டுமல்ல.  அப்பா படுத்த படுக்கையா போனப்ப ஒண்டரை வருஷத்துக்கு மேல அவர் செஞ்ச பணிவிடைகள்  கொஞ்ச நஞ்சமல்ல.அந்த விஷயத்ல அப்பா குடுத்து வெச்சவர்தான். அவருக்கு எந்த கஷ்டமும் தெரியாம  கடைசிவரைக்கும் அவருக்கு தொணையா இருந்தார்.

    இப்படியொரு புருஷன் எனக்கு கெடக்கிறதுக்கு நான் பாக்கியசாலிதான். இந்த குடும்பத்ல மூத்தவனா பொறந்த நீ பெத்து வளர்த்த  அப்பா ஏதோசொல்லிட்டாருண்ணு ஓடிப்போயிட்ட.

    எல்லாம் முடிஞ்சிபோனபிறகு இப்ப ஏண்ணா வந்த..யாராவது உசிரோடு இருக்காங்களாண்ணு பாக்கவா .இல்ல நீ உசிரோட இருக்கிறத காம்பிக்க வா.  “

    கண்களில் நீர் கொப்புளிக்க  எதிர் இருக்கையில் அமர்கிறாள்  மஞ்சுளா.

    “அப்பா சாகிற வரைக்கும் ஆபீசுலயும் வேல பாத்துகிட்டு ராப்பகலா கண்விழிச்சி . . . . அவர் ரொம்ப பாவம்ண்ணா. போன ஜன்மத்ல அவருக்கு புள்ளையா பொறந்து ஒன்னாட்டம் ஓடிட்டாரோ என்னவோ . “

    கார்த்தியின் கண்கள் கலக்கமுற்று கண்ணீரீரை வெளியேற்ற முயன்றது. முகத்தை தாழ்த்தி கட்டுப்படுத்த முயன்றான்.

    “சரி! காப்பிய குடிச்சிட்டு வா.  வென்நீர் போட்ருக்கேன்.குளிக்கலாம் “

    கலங்கிய கண்களை புடவைத்தலைப்பால் அழுந்த துடைத்துக்கொண்டே உள்ளே போனாள் மஞ்சுளா.

    தங்கையின் பேச்சைக்கேட்கக்கேட்க  கார்த்திக்கு ஓருபக்கம் தன்மீதே வெருப்பாகவும் இன்னொருபக்கம் மஞ்சுவை பார்க்க பார்க்க  வியப்பாகவும் இருந்தது

    மஞ்சுவா இப்படி பேசுகிறாள். காலம்தான்  மனிதர்களை  உடலாலும் உள்ளத்தாலும் எத்தனை எளிதாக பக்குவப்படுத்துகிறது.

    குளியலறைக்குள்  நுழைந்த கார்த்தி உடல் அசதி தீர குளித்தான். உள்ளத்தில் ஊறிக்கிடந்த நெடுநாள் குழப்பங்கள்  ஓரளவுக்கு வெளியேறியதை உணர்ந்தான்.

    தன்னுடைய பொறுப்பற்ற தன்மையும் எங்கிருந்தோ வந்த ஒருவனின் அசாத்திய பண்புகளையும் எண்ணிப்பார்த்தான். தான் கற்றிருந்த உயர்கல்வி தனக்கு இதை எள்ளளவும் போதிக்கவில்லை  என்ற எண்ணமே ஓங்கிற்று.

    “இந்து ! மாமாவுக்கு டவல் கொண்ட குடு. “

    அடுக்களையிலிருந்து குரலெழுப்பினாள் மஞ்சு.

    “ஒனக்கு இப்பிடியொரு அண்ணன் இருக்கிறதை இதுவரை சொல்லவே இல்லியே“

    என்றவாறே புதிய டவல் ஒன்றை கொண்டுபோனாள் இந்து.

    “சொல்ற மாதிரியா அவன் நடந்துகிட்டான்  ! “

    மெல்ல முணுமுணுத்த படியே  கார்த்திக்கு சுடசுட உணவு பரிமாரினாள் மஞ்சு.

    “ஒன் பொண்ணு ஒன்னாட்டம் ரொம்ப சமத்தா இருக்காளே !  இன்னிக்கு சண்டேதானே. அத்தான் எங்க போயிருக்கார். “

    முதன் முறையாக சாப்பிடுவதற்குமுன் வாயைத்திறந்தான் கார்த்தி.

    “அவுரு  மேனேஜரோட ஹெட் ஆபீசுக்கு கேம் போயிருக்கார். நாளை காலேலதான் திரும்புறார். “

    “எங்க ட்ராவல்ஸ் கோச் ஈவினிங் கும்பகோணம் வருது.அதுக்குள்ள நான் போயிடணும். “

    “நாளைக்கு இருந்து அவர பாத்துட்டு போ அண்ணா. அவரு ரொம்ப சந்தோஷப்படுவார். “

    ‘’இல்ல மஞ்சு .இன்னும் மூணுமாசத்துக்குள்ள  நான் சென்னைக்கு மறுபடி வருவேன்..  அத்தான் கிட்ட சொல்லு. அவர் மொகத்ல விழிக்கக்கூடிய தெம்பு எனக்கு மொதல்ல வரணும்.”

    அவனுக்கு பிடித்தமான வத்த கொழம்பையும்  கத்தரிக்காய் வருவலையும் நெடு நாட்களுக்குப்பிறகு தங்கை கையால் சாப்பிட நேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தான்.

    மஞ்சுவால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. அவனை பார்த்த இந்த தருணங்களே அவளுக்கு பெரிதாயிருந்தது.

    “மஞ்சு ஒன் கல்யாணத்துக்காக நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணம். இது .இந்துவுக்காவது ஒபயோகமா இருக்கட்டும். “

    அய்ந்து லட்சத்துக்கான ஒருகாசோலையை மஞ்சுவின் பெயரெழுதி இந்துவிடம் கொடுத்தான் கார்த்தி.

    “மாமா ஒரு நாள் இருங்க மாமா. “

    “நிச்சியமா இன்னொருமுறை வர்றம்மா. “

    கண்கலங்க விடை கொடுத்தாள் மஞ்சு.

    சந்தோஷம் என்பது  பொறுப்பற்று திரிவதில் இல்லை. சகமனிதர்களிடம்  அன்பை பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறதென்பதை கார்த்தி உணர்ந்து கொண்டான்.

    உறவுகளும் நட்புகளும் ஏற்பட்டிருப்பது அதற்காகத்தான்.

    Share
  • VETRIVAASAL -Full day Motivation Seminar

    MarabinMaindan Muthiah

    amm

    “Namadhu Nambikkai” magazine is conducting a full day motivation
    seminar on 21.12.2014for the ninth year.Reputed Professionals are delivering lectures and the theme for this year is Cooordination of body,mind,emotions and intellect.

    Each subject has an exclusive session and this theme is being done for the first time in Tamil.
    I am sure that this program would be of immense benefit to your staff members.

    I request you to kindly enroll your Staff members.I am enclosing details of the same

    regards
    Marabin Maindan Muthiah
    98430 63572

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ஆனை படுத்து அசுவமட் டமாகியன்று,
    தூணைப் பிளந்த துரைசிங்கத் ,-தானை,
    அறிந்தவன் தாளில் அடைக்கலம் என்று
    சரிந்தவிதம் கேசவ் சபாஷ்’’….கிரேசி மோகன்….

    அசுவமட்டம் -குதிரைமட்டம்….

    Share