Blog

  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு

     

                                                   சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

                             [ http://www.space.com/13180-titan-surprisingly-earth-surface-revealed-color.html  ]

     

     

    சனிக்கோளின் சந்திரன்களில்
    பூதச் சவ்வுருண்டை போன்ற டிடான்
    பூமியை ஒத்தது !
    தடம் வைத்தது ஹியூஜென்ஸ்
    தளவுளவி டிடானில் !
    சூழ்வெளி வாயு, ஒளிந்திருக்கும்
    ஆழ்கடல் பனிச் சிகரம் கொண்டது !
    சனிக்கோளின் மற்ற சந்திரன்
    என்செலாடஸில்
    பனித்தளம் முறியக்
    கொந்தளிக்கும் தென் துருவம் !
    தரைத்தளம் பிளந்து
    வரிப்புலி போல் வாய்பிளக்கும் !
    முறிவுப் பிளவுகளில்
    பீறிட்டெழும்
    வெந்நீர் ஊற்றுக்கள் !
    முகில்மய வாயுக்கள் !
    பனித்துளித் துகள்களும்
    எரிமலை போல்
    விண்வெளியில் வெடித்தெழும் !
    புண்ணான பிளவுகள்
    மூடும், மீண்டும் திறக்கும் !
    எழுச்சியின் வேகம் தணியும் !
    பிறகு விரைவாகும் !
    பனித்தட்டு உருகிப் போய்
    தென் துருவத்தில்
    திரவமானது எப்படி ?
    ஊற்று நீர் வெடித்து வெளியேற
    உந்துவிசை அளிப்பது எது ?
    விந்தை யான எழுச்சி !
    புரிந்தும் புரியாதப்
    பிரபஞ்சப் புதிர்களில் ஒன்று !

    +++++++++++++++++

     

    பூமியில் தோன்றிய உயிரினத் தோற்றத்தின் மூலத்தை அறிய, டிடான் துணைக்கோள் உன்னத உயிரியல் குறிப்பீடு அறிந்து கொள்ளும் ஒரு பசுஞ் சோலையாக எங்களுக்குத் தெரிகிறது.  கார்பன் மனாக்ஸைடு, மீதேன் [CO & CH4] போன்ற  சாதாரண உபரி மூலக்கூறுகள் மூலமாய் அடர்த்தியான வாயு மண்டலம் தோன்றியதாகத் தெரிகிறது.   அந்த இயக்கங்களுக்கு ஆர்கானிக் பனிமுகில் துகள்கள், [Organic Hase] எரிகற்களின் உலோகங்கள் வினையூக்கியாய்  [Catalysts] உதவியுள்ளன.

    ஜோஸஃப்  டிரிகோ ராட்ரிகஸ் [Institute of Space Sciences, Barcelona, Spain]

    காஸ்ஸினி விண்ணுளவி சனியின் துணைக்கோள் டிடானில் பெரும் ஏற்ற இறக்க அலையடிப்புகளைக் [Tides] கண்டது, மறைந்துள்ள ஓர் அடிக்கடலைக் காட்டுகிறது.  இப்போது சூரிய மண்டலத்தில் பூமிபோல் இத்தகைய பேரளவு நீர் நிலை இருப்பை இரண்டாவதாக அறிந்துள்ளோம்.  [முதலாவதாக நீர் பீச்சும் ஊற்றுகள் சனிக் கோளின் சந்திரன் என்செலாடஸில் இருப்பது அறியப் பட்டது]

    லூஸியானோ ஐயஸ் [Cassini Spcecraft Lead Member]

     

    டிடானில் திரவ நீரடுக்கு இருப்பது, டிடான் உட்பகுதியில் எப்படி மீதேன் வாயு சேமிப்பாகிறது, எப்படி அது மேற்தளத்துக்குக் கசிகிறது என்று அறிய எமக்கு உதவப் போகும் முக்கியமான ஒரு தகவல்.  ஏனெனில் டிடானின் தனித்துவப் பண்பாடு பேரளவுள்ள மீதேன் மூலமாகவே உண்டாகுகிறது.   ஆயினும் அந்த மீதேன் பரிமாண அளவு டிடான் சூழ்வெளியில்  நிலையற்றது.  பிறகு குறுகிய கால வரையறையில் அழிக்கப் பட்டு மறைந்து போகிறது !

    ஜொனாதன் லுனைன் [Cassini Spacecraft Team Member, Cornell University Ithaca,  N.Y.]

    “(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்சிலாடஸின் தென் துருவத்தில் கண்டு பிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க ஒன்று வேறில்லை !  மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்ப ளிக்கிறது !  அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை.  அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது.  நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”

    காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]

    பூமியில் உயிரினதோற்றம் உருவாக நேர்ந்த ரசாயன இயக்கங்களைப் புரிந்து கொள்ள டிடான் துணைக்கோள் ஒப்பற்ற ஒரு சூழ்வெளியை அறியத் தருகிறது.   அந்த விதத்தில் டிடான் சூழ்வெளி, பூமியின் உயிரின முன்னிருப்பு ரசாயன மண்டலத்தை [Pre-biotic Atmosphere]  எங்களுக்குப் பல வழிகளில் காட்ட ஓர் இயற்கை ஆய்வகமாக உதவுகிறது.

    ஜோஸஃப்  டிரிகோ ராட்ரிகஸ்.

    “என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன.  மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”

    கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலிஃபோர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு

    “சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனி வெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]

    “சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    american-yellowstone-park-geysers

    “இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கை யான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]

    “பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    பூமியின் சூழ்வெளியை ஒத்தது டிடானின் வாயு அடுக்கு மண்டலம், நீர் செழிப்பு

    சனிக்கோளின் மிகப் பெரிய துணைக்கோள் டிடான் பல பில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை ஒத்திருந்தே வந்துள்ளது.  பூமிக்கும், டிடானுக்கும் இடையே 800 மில்லியன் மைல் தூரம் இருப்பினும் அவற்றின் ஈர்ப்பு விசையால் அடுக்கடுக்காக வாயு மண்டலமும், நீர்ச் செழிப்பும் வால்மீன்கள், முரண் கோள்கள் [Comets & Asteroids] ஆகியவற்றின் தாக்குதலால் உண்டானவை என்பது தெரிகிறது.

    பூமியில் தோன்றிய உயிரினத் தோற்றத்தின் மூலத்தை அறிய, டிடான் துணைக்கோள் உன்னத உயிரியல் குறிப்பீடு அறிந்து கொள்ளும் ஒரு பசுஞ் சோலையாக எங்களுக்குத் தெரிகிறது.  கார்பன் மனாக்ஸைடு, மீதேன் [CO & CH4] போன்ற  சாதாரண உபரி மூலக்கூறுகள் மூலமாய் அடர்த்தியான வாயு மண்டலம் தோன்றியதாகத் தெரிகிறது.   அந்த இயக்கங்களுக்கு ஆர்கானிக் பனிமுகில் துகள்கள், [Organic Hase] எரிகற்களின் உலோகங்கள் வினையூக்கியாய்  [Catalysts] உதவியுள்ளன என்று ஜோஸஃப்  டிரிகோ ராட்ரிகஸ் [Institute of Space Sciences, Barcelona, Spain] கூறுகிறார்.

    பூமியில் உயிரினதோற்றம் உருவாக நேர்ந்த ரசாயன இயக்கங்களைப் புரிந்து கொள்ள டிடான் துணைக்கோள் ஒப்பற்ற ஒரு சூழ்வெளியை அறியத் தருகிறது.   அந்த விதத்தில் டிடான் சூழ்வெளி, பூமியின் உயிரின முன்னிருப்பு ரசாயன மண்டலத்தை [Pre-biotic Atmosphere]  எங்களுக்குப் பல வழிகளில் காட்ட ஓர் இயற்கை ஆய்வகமாக உதவுகிறது என்றும் ஜோஸஃப்  டிரிகோ ராட்ரிகஸ் கூறுகிறார்.  சூரியனுக்கு சற்று நெருங்கிய அகக்கோள் பூமியிலும், அப்பால் உள்ள புறக்கோள் டிடானிலும் இவ்வாறு வெவ்வேறு மூலப் பொருட்களால் நேர்ந்த  இந்த உடன்பாடு, ஒரு மகத்தான நிகழ்ச்சி, என்றும் அவர் கூறுகிறார்.

    சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி

    2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்செலாடஸைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது.  என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன.  என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது.  மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன,  அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார்.  அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.

    சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel).  சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது.  சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது.  அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது.  E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக் கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன.  பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன.  காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது !

    fig-1g-saturns-moons

    என்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ?

    வரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன.  என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது.  வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசையால் எதிராகத் தள்ளப்படுகிறது.  ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன.  பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன.  சில இடங்களில் ஆழம் குறைவு.  அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன.

    பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்).  ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன ?  பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன ?  அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது ?  இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது ?

    fig-3-cassini-space-probe-orbiting-saturn

    பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று.  பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு.  யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு.  நீர் வெள்ளத்துக்கு உந்து சக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே.  காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது.  அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித்தளங்களைக் காட்டியது.  மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன.  மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.

    fig-1c-how-the-geyser-does-function

    தென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்

    என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது.  சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம்.  அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக்கலாம்.  பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம்.  என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton).  பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.

    தென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது.  பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C)   பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப் படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது.  அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது.  வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன.  2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.

    fig-4-hot-geysers-jump-upon-friction

    சனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்

    2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது!

    fig-3-water-springs

    2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது! சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது !

    fig-1f-cassini-huygens-mission

    காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை:

    1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்தி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?

    2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது ?

    3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன ?

    4. முப்பத்தி யொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா ? [இப்போது காஸ்ஸினி மேலும் 21 (மொத்தம் :52) துணைக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.]

    fig-5-saturns-moons

    5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது ? சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா ?  பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா ?  2005 ஆம் ஆண்டில் காணப்பற்ற வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் எப்படி உண்டாகிகின்றன ?

    6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது ? அதன் மூலப் பிறப்பிடம் எது ?

    7. டிடான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை ?

    8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது ?

    9. டிடானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா ?

    10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா ?

     

    fig-7-sea-floor-shape-comparision

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html (Elceladus & Mars)
    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html (Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html (Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Saturn’s Strangely Warm Moon By Emily Sohn [Dec 2005]
    25. NASA’s Report : Icy Particles Streaming form Saturn’s Enceladus [Dec 6, 2005]
    26 A Hot Start Might Explain Geysers on Enceladus [March 24, 2006]
    27. Science Daily: Enormous Plume of Dust & Water Spurts into Space from the South Pole of Enceladus [Feb 23, 2008]
    28. Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Signal Underground Water & Microbial Life By Casey Kazan [Nov 11, 2008]
    29.  Saturn’s Dynamic Moon Enceladus Shows More Signs of Activity [Dec 15, 2008]
    30. Astronomy Now Online – Cassini Reveals Enceladus’ Shifting Terrain By Dr. Emily Baldwin [Dec 19, 2008]
    31.  NASA Scientists Ask : Is Life Possible on Saturn’s Moon Enceladus ? [Dec 19, 2008]

    32.  http://www.space.com/14247-saturn-moon-titan-atmosphere-earth.html  [Saturn’s Moon Titan May be more Like Earth]  [January 16, 2012]

    33.  http://m.phys.org/news/2012-06-saturn-moon-titan-harbor-ocean.html   [June 28, 2012]

    34.  http://en.wikipedia.org/wiki/Titan_(moon)  [Saturn’s Lagest Moon Titan] [November 14, 2012]

    35.  Saturn’s Moon — Mirrors the Conditions that Led to the Origin of Life on Earth”  [November 11, 2012]

     

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) [November 15 2012]

     

    Share
  • அவன்

    விசாகை மனோகரன்
     

    வாழ்க்கை ஓடத்தின் ஓட்டத்தில்

    வாழ்ந்து கொண்டிருக்கும் வேடத்தில்

    நிரந்தரம் என்பது ஏதடா?

    அதை நினைத்து மாய்வது ஏனடா?

     

    ஆட்டத்தின் நாயகன் அவன்

    ஆட்டுவிப்பனும் அவன்

    ஆடாது நிற்க முயன்றால்

    ஆட்டாது விடுவானோ அவன்

     

    ஆட்டுவதும் அவனே

    அரவணைப்பதும் அவனே

    அவன் ஆடாத ஆட்டமா?

    அவன் இல்லாமல் நாமா?

     எல்லாம் அவனே!!!!!!!!

     

     படத்துக்கு நன்றி

    http://www.puppetryindia.org/page1/page7/page7.html

     

    Share
  • வரிவடிவங்கள்-பல்லில்லி்!

     

    சேட்டைக்காரன் (எ) வேணுகோபாலன்

    அவன் பெயர் ஒன்றும் எல்லாரும் அழைப்பதுபோல ‘பல்லில்லி’ இல்லை; பாலகிருஷ்ணன் என்று அழகான பெயர். இந்த ‘பல்லில்லி’ என்ற பெயரை யார், எந்தக் காரணத்திற்காக வைத்தார்கள் என்பதையெல்லாம் சரியாக நினைவுபடுத்திச் சொல்ல முடியவில்லையென்றாலும், அப்படித்தான்  எல்லாராலும் அழைக்கப்பட்டான். இல்லாவிட்டாலும் அவனை யார் எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும், அவன் திரும்பிப் பார்த்திருப்பான். ஒரு விசில்; ஒரு கைதட்டல் அல்லது ஒரு ‘டேய்’ அவனைத் திரும்பிப் பார்க்க வைக்கப் போதுமானதாக இருந்தது. அனேகமாக அவனுக்கே தனது இயற்பெயர் பாலகிருஷ்ணன் என்பது மறந்திருக்கலாம். ஒருவேளை, அவனுக்குப் பெயரே வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சொன்னாலும் அவன் கவலைப்பட்டிருக்க மாட்டான் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அவன் போன்றவர்களுக்கு எப்படி உயிரும் உணர்ச்சியும் இருக்கிறது என்பதை பலரால் உதாசீனப்படுத்த முடிகிறதோ, அதே மூர்க்கத்தனத்துடன் அவனது பெயரையும் அலட்சியப்படுத்த முடிந்திருந்தது. பெரும்பாலானோர் அதைத்தான் செய்தார்கள்

          அவனுக்கும் ஒரு இயல்பான கடந்தகாலம் இருந்தது. பாலகிருஷ்ணன் ஐந்தாம் வகுப்புவரை படித்திருக்கிறான். வயதுக்கு மீறிய உயரம்; மாநிறம்; சுருள்முடியில் அழகாக வகிடெடுத்துக் கொண்டு வருவான். பெரிய படிப்புக்காரனெல்லாம் கிடையாது என்றாலும், தினசரி முதல் மணியடிப்பதற்குள் வகுப்புக்குள் உட்கார்கிற மாணவர்களுள் அவனும் ஒருவனாய்த் தானிருந்தான். பள்ளிக்கூடத்தின் வாசலில் ஈ மொய்க்கிற சவ்வு மிட்டாய், வெள்ளெரிப்பிஞ்சு, மாங்காய் ஆகியவற்றின் மீது ஈர்ப்பில்லாமல், பள்ளி முடிந்ததும் அமைதியாக வீடுதிரும்புவான். கிரிக்கெட், கபடி, கோகோ எதிலும் கலந்து கொள்ள மாட்டான். இயல்பாகவே, அவனுக்கு சினேகிதர்களே இல்லாமல் போனதில் வியப்பொன்றுமில்லை

          ஆனால், அது கடந்தகாலம்!

          இப்போது அவன் முன்னைக் காட்டிலும் உயரம்; உடம்பு கொஞ்சம் மெலிந்து விட்டிருந்தது. பள்ளிக்கூடத்துக்குப் போன காலங்களில் அவனது தோற்றத்தில் தென்பட்ட பொலிவு இப்போது கிடையாது. சில சமயங்களில் ஒரே சட்டை, கால்சராயைப் போட்டுக்கொண்டு அவன் நாட்கணக்கில் சுற்றிக் கொண்டிருப்பான். அவனைப் பார்த்தால் பெண்களும் குழந்தைகளும் ஒதுங்கிச் செல்வார்கள் என்றாலும் அவன் எவருக்கும் எந்த இடையூறும் செய்ததில்லை. சொல்லப்போனால், அவன் தான் பற்பல இடையூறுகளுக்கு இலக்காகி விட்டிருந்தான்.

          இப்போது பல்லில்லியை எந்தத் திண்ணையில் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் உட்கார வைத்து அவனைப் பேசவைத்து வேடிக்கைப் பார்க்கலாம். மீசை அரும்பத் தொடங்கியவர்கள் முதல் அவனைக் காட்டிலும் இளையவர்கள் வரையில் நிறைய பேர், பேதமில்லாமல் அவனை அழைத்து அருகில் உட்காரவைத்து, அவனைத் தங்களது கேளிக்கைக்குப் பயன்படுத்திக்கொள்வர்.

          ”டேய் பல்லில்லி! கண்ணன் சித்தப்பா பாட்டுப் பாடுறா…”

          இந்த நேயர் விருப்பம் அடிக்கடி நிகழ்ந்தேறும். அழைத்ததும் ஓடிச்சென்று, கேட்டவுடன் தயக்கமின்றிப் பாடுவான் பல்லில்லி!

          ”கண்ணன் சித்தப்பா!

         கருப்பட்டி தின்னாரு

         எப்படித்தின்னாரு…..

         ட்ச்..ட்ச்..ட்ச்…ட்ச்…..” என்று கண்ணன் சித்தப்பா கருப்பட்டி தின்னதை அபிநயித்துக் காட்டுவான்.  நேயர் விருப்பம்  கேட்டவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ‘இன்னொரு வாட்டிப் பாடிக்காட்டுறா…’ என்று ஒன்ஸ் மோர் கேட்பவர்களும் உண்டு. எத்தனை பேர், எத்தனை முறை கேட்டாலும் சங்கோஜப்படாமல், சந்தோஷமாகப் பாடுவான் பல்லில்லி.

          ”டேய், வாசு சித்தப்பா பாட்டு பாடுறா…!” என்று யாராவது கேட்பார்கள். உடனே சுற்றியமர்ந்திருக்கும் பட்டாளமே விசிலடிக்கும்; உற்சாகக்கூச்சலிடும்.

          ”மாட்டேன்!” என்று நாணுவான் பல்லில்லி. எல்லாரும் அவனை வற்புறுத்துவார்கள்; ஆசை வார்த்தை சொல்லுவார்கள்.

          ”பாடுறா டேய்! கதலிப்பழம் வாங்கித்தர்றேண்டா!”

          ”கடலை மிட்டாய்…?”

          ”சரி, கடலை மிட்டாய் வாங்கித்தர்றேண்டா…..!”

          ”ஒரே ஒரு வாட்டிதான் பாடுவேன்…!” பல்லில்லி நிபந்தனை விதிப்பான்.

          ”சரி, பாடு!”

          ”வாசு சித்தப்பா…

          $@!#*&$%^@!#!@#$&@!

          $@!#*&$%^@!#!@#$&@ “

          சுற்றியிருக்கும் கூட்டம் குபீரென்று சிரிக்கும். அந்தச் சிரிப்பொலியைக் கேட்டு, அந்தந்தத் திண்ணைக்குரிய வீட்டிலிருந்து எவராவது வெளிப்படுவார்கள்.

          ”டேய், என்னடா சத்தம் இங்கே? டேய் பல்லில்லி, கிறுக்கா, எந்திரிச்சிப் போடா…போடா அறிவுகெட்டவனே….!”

          பல்லில்லி போகாமல், சிரித்துக் கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து தானும் விழுந்து விழுந்து சிரிப்பான். அவனுக்கு சற்றுமுன் தான் பாடிய பாட்டின் விபரீதமான பொருள்பற்றிக் கிஞ்சித்தும் தெரியாது. பொழுதுபோகாமல் ஊர்சுற்றித்திரிகிற கும்பல்களுக்கு, தான் ஒரு இலவசமான கேளிக்கையாக இருப்பதும், அவர்களில் சிலர் தனக்குக் கற்றுத்தருகிற சில சங்கதிகளில் வக்கிரம் தோய்ந்து கிடப்பதும், அதையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டு, அந்த அருவருப்புகளையே தனது அடையாளங்களாக்குவதும் – எதுவும் தெரியாது. சொல்லிப் புரிய வைக்கவும் முடியாது. காரணம் எதுவென்றால், மருத்துவ விபரங்களுக்குள் போகாமல் ஒற்றை வார்த்தையில், அவனுக்கு ‘கிறுக்கு’ பிடித்திருந்தது; அவ்வளவுதான்!

          மாசி மாதத் திருவிழா பத்து நாட்கள் நடக்கும். ஏழாவது நாளன்று ’சப்பரம்’ என்று சொல்லப்படுகிற அலங்கரிக்கப்பட்ட மேடையில், நடராஜரின் திருவுருவத்தை வைத்துக் கொண்டு ‘தில்லையம்பலம்… திருச்சிற்றம்பலம்… ஆடினாரே… ஆடினாரே..’  என்று சுமந்து வருகிறவர்களும் ஆடியவாறே தேரோடும் வீதிகளில் ஓடோடி வருவார்கள். ஒரு வருடம் தெருமுனை வரைக்கும் வந்த ஊர்வலம் உள்ளே வராமல் மாற்றுப்பாதையில் சென்றபோதுதான், பாலகிருஷ்ணனின் அம்மா இறந்த தகவல் பலருக்குத் தெரிய வந்தது.

          அன்று அதிகாலை எழுந்து, கோவில் குளத்தில் குளித்துவிட்டு, அரசமரத்தை வழக்கம்போல் சுற்றிவந்துவிட்டு, முத்தாரம்மன் கோவிலில் எண்ணை விளக்கேற்றிவிட்டு, வீட்டுக்கு வந்தவர் அடுத்த சில நிமிடங்களில் தன் மேல் மண்ணெண்ணையை ஊற்றிப் பற்றவைத்துக் கொண்டு இறந்துபோனார் என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. ‘ஏன்?’ – இந்த ஒற்றைக் கேள்விக்கு அவரவர் தங்களது அனுமானங்களுக்கேற்ப பல பதில்களைப் பரப்புரை செய்து கொண்டிருந்தனர் என்றாலும், அந்தத் துயரசம்பவத்தின் உண்மையான காரணம் எதுவென்று யாராலும் சரிவர ஊகிக்க முடியவில்லை. அன்றுமுதல் பாலகிருஷ்ணன் பள்ளிக்கூடம் போவதை நிறுத்திவிட்டான் என்பது மட்டும் சகமாணவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அவன் வீட்டை விட்டு வெளியே வராமலிருந்ததுதான் அவன் தாயாரின் மரணத்தைக் காட்டிலும் பெரிய மர்மமானது.

          அவனது வயதுக்காரர்கள் அவனை ஏறக்குறைய மறந்துவிட்ட நிலையில், திடீரென்று பாலகிருஷ்ணன் வெளியே மீண்டும் நடமாட ஆரம்பித்தான். அந்தக் காலகட்டத்தில் தான், முதலில் அதிர்ச்சியூட்டினாலும் நாட்பட நாட்பட பலரின் அனுதாபத்துக்கும் சிலரின் எள்ளலுக்கும் ஆளான அவனது நடவடிக்கைகள், அவனை பாலகிருஷ்ணனிலிருந்து பல்லில்லி ஆக்கின என்று சொல்லலாம். உண்மையில், அந்தப் பெயருக்கு எந்தப் பொருளும் கிடையாது. அவனுக்குச் சூட்டப்பட்ட பட்டப்பெயரும் அவனைப்போலவே குறிக்கோளற்றதாக அமைந்தது.

          திருமணமோ, திருவிழாவோ, ஊர்வலமோ எதுவாயிருந்தாலும் சரி, மேளக்காரர்களுக்குப் பின்னால் சிரித்தபடி ஆடிக்கொண்டே போவான். தெருவில் சுற்றித்திரியும் மாடுகள் வாலைத்தூக்கி அசுத்தம் செய்யும்போது குலுங்கிக் குலுங்கி உரக்கச் சிரிப்பான். காய்கறி விற்பவர்கள் பின்னாலேயே சென்று அவர்களைப் போலவே குரலெழுப்பியபடி தொடர்வான். தபால்காரருடன் தெருவின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ‘சார் போஸ்ட்’ என்று குரல் கொடுப்பான். இப்படி, இன்னும் அவனது வினோதமான நடவடிக்கைகளின் பட்டியலின் நீளம் மிகவும் அதிகம். ஆரம்பத்தில் அனுதாபம் காட்டியவர்களும் பின்னாளில் ஏனோ அவனை அயர்ச்சியுடன் பார்த்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.

          அன்று தெருவில் விறகுவண்டிகள் வந்து போயிருந்தன. பல வீடுகளின் வாசலில் விறகுத்தடிகள் இறக்கப்பட்டிருக்க, கோடாரியால் பெரிய பெரிய தடிகள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. எங்கள் வீட்டு வாசலிலும் விறகு வந்து இறங்கியிருந்தது. விறகுவெட்டி வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருப்பதை பல்லில்லி வேடிக்கை பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தான்.

          விறகுவெட்டி ஒவ்வொரு முறையும் கோடாரியை உயர்த்தும்போது தலையைத் தூக்கி, அது வேகமாக விறகின் மீது விழும்போது தலையை அதே வேகத்தில் இறக்கி, வாய்விட்டுச் சிரித்து, கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தான். அவனது நடவடிக்கைகள் புரியாமல் முதலில் சிரித்தபோது ‘ஐயோ பாவம், சிரிக்காதேடா’ என்று என் பாட்டி கண்டித்திருந்தார் என்பதால் குழப்பத்துடன் அவனையே ஜன்னலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

          ”லேய், தள்ளி உட்காருலே! “ விறகுவெட்டி எச்சரித்துக் கொண்டிருந்தார். “கண்ணுலே சிலாம்பு ஏறுனா பெறகு கதை கந்தலாயிரும்…தள்ளி உட்காருலே!”

          பல்லில்லி தள்ளி உட்காராமல் சிரித்துக் கொண்டிருக்கவே, அந்த விறகுவெட்டி பொறுமையிழந்து அவனை வசைபாட ஆரம்பித்தார்.

          ”ஐயோ பாவம்!” என்றாள் பாட்டி. “தாயில்லாப் புள்ளே எப்படிச் சீரழியுது பாரு!”

           நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் விறகு வெட்டப்படுவதையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று, விறகுவெட்டியின் கோடாரியின் அதிரடியில் ஒரு பெரிய விறகுத்துண்டு ஜிவ்வென்று காற்றில் பறந்து பின்னால் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த பல்லில்லியின்  நெற்றியை ஒரு ஏவுகணை போலத் தாக்கியது.

          ”அம்மா!”

          புத்தி சுவாதீனமில்லாதவன், வலியில் அலறியதைக் கேட்டதும், ‘அம்மா’ என்ற அந்த ஒரு ஒற்றை வார்த்தையின் பொருள் எனக்கு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மிக அழுத்தமாய்ப் புரிந்தது போலிருந்தது.

                   ***********

    படங்களுக்கு நன்றி:

    http://natarajar.blogspot.in/2008_06_01_archive.html

    Share
  • யாருக்காக அழுதாள்?

    தேமொழி

    இருக்கையை விட்டு எழுந்த வண்ணம் வாயில் பென்சிலைக் கவ்விக் கொண்டு மேஜையில் கிடந்த தாள்களையும், நோட்டுப் புத்தகங்களையும் பையில் திணித்தேன். அவிழ்ந்திருந்த கூந்தலை வாரிக் கொண்டை போட்டு பென்சிலை அதில் செருகினேன். முதுகில் பையை சுமந்து கொண்டு, கைபேசியை ஜீன்ஸ் பேண்ட்டில் உள்ள ஒரு பக்க பையில் செருகிக் கொண்டேன்.  அடுத்த பக்கப் பையில் சில்லறைகள் வைத்திருக்கும் சிறிய பர்ஸும் வீட்டுச் சாவியும் இருக்கிறதா என நிச்சயப் படுத்திக் கொண்டேன். நாற்காலியின் சாயுமிடத்தில் தொங்கிய, பெரிய, மஞ்சள் கரடியின் பாதத்தில் “cal” எனப் படம் போட்ட நீல நிற ஹூடி அங்கியை மாட்டிகொண்டு வகுப்பறைக்கு வெளியே வந்தேன். வகுப்பு முடிந்து இரண்டு நிமிடத்திற்குள் வகுப்பும், நீண்ட தாழ்வாரமும் காலியாகி இருந்தது.

    பல்கலைக்கழகத்தை விட்டு வெளியில் வந்ததும் நவம்பர் மாத முதல் வாரமாக இருந்தாலும் பளீரென அடித்த மதிய வெய்யிலும்,  நீலவானமும், இதமான வெப்பத்துடன் இருந்த சூழ்நிலையும், வரப்போகும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களும் மனதுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்தது.  பார்ட் (BART) இரயில் நிலையத்தை நோக்கி நடந்த பொழுது இப்பொழுதே வீட்டிற்கு போய் என்ன செய்வது என்ற எண்ணம் வந்தது.  ரஹீம் ஏதோ ஒரு கருத்தரங்கு என்று சியாட்டில் சென்று இரண்டு நாளாகிவிட்டது.  மீண்டும் திங்களன்றுதான் வீட்டுக்கு வருவார்.

    இம்முறையும் அவர் உருவத்தையும் பெயரையும் பார்த்து, விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்பவர்கள் அவரைத் தனியே அழைத்து தட்டித் தடவி, உடமைகள் மற்றும் பெட்டிகளைக்  கொட்டிப் பார்த்து அலைக் கழித்திருக்கிறார்கள். ஒருமுறை கூட விமான பயணத்தில் அவருக்கு இது நடக்கத் தவறியதில்லை. சியாட்டில் போய் சேர்ந்ததும் தொலை பேசியில் அழைத்து ஆற்றாமை தாங்காமல் அதைப் பொரிந்து தள்ளிய பொழுது அமைதியாகக் கேட்டுக் கொண்டேன். மனக் குமைச்ச்சலை வெளியிட்டால் ஆறுதலாவது கிடைக்கும் அல்லவா? மீண்டும் திரும்பி வரும்பொழுதும் நிச்சயம் இந்தக் கூத்து  நடக்கும்.  இதனை “ராண்டம் செர்ச்” என்று வேறு சொல்லிக் கொள்வார்கள்.  ரஹீம் சொல்வது போல இந்த ராண்டம்னஸ் பரிசுச் சீட்டு வாங்கும்பொழுதும் இருந்தால் அவர்கள் இப்பொழுது மில்லியனர்களாக இருந்திருப்பார்கள். இந்த வெள்ளியன்று குலுக்கும் மெகாமில்லியன் பரிசுத் தொகை இருபத்தியைந்து மில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால் அப்பொழுது மட்டும் இந்த ராண்டம்னஸ் வேலை செய்வதில்லையே அது ஏன்?

    யோசித்தவாரே சாலையில் இருந்து படி இறங்கி சுரங்கப் பாதையில் இருக்கும் பார்ட் இரயில் நிலையத்தை அடைந்தேன், பயண அட்டையை கதவு போட்ட வேலியின் இயந்திரத்தில் நுழைத்து அனுமதி பெற்று உள்ளே நுழைந்தேன். ஆரஞ்சு வண்ண வழித்தடத்தில் தெற்கு நோக்கி செல்லும் வண்டி வர எவ்வளவு நேரம் இருக்கிறது என்று அறிவிப்பு பலகையில் மாறி மாறி மின் எழுத்துக்களில் வரும் அறிவிப்பை பார்த்துக்கொண்டே நடந்த பொழுது “ஹாய் மேடி” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். என் வகுப்புத் தோழன் ஸ்டீவ். வாட்டசாட்டமான உருவமும் மொட்டைத் தலையும் உள்ள அவன் கருப்பு இன வழி வந்தவன்.  அவன் மிதிவண்டியைப் பிடித்தவண்ணம் நின்றிருந்தான்.  அந்த சைக்கிள் அவன் உருவத்துடன் ஒப்பிடும் பொழுது ஒரு பொம்மை போல இருந்தது.  பளீர் என்ற வழக்காமான சிரிப்பு அவனிடம்.

    மாதவி என்ற என் பெயரை பலருக்கு இங்கே சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை.  பெரும்பாலும் ‘மதாவி’ என்று நெடிலைத் தூக்கி தேவையட்ற இடத்தில் போட்டு என் பெயரை ‘சதக்’ ‘சதக்’ செய்யும் கொடுமையைத் தாங்காமால் ‘மேடி’ என எல்லோரையும் அழைக்கச் சொல்வேன்.  ‘ஆர்னால்ட் ஷுவிஷனைகர்’ என்ற நீண்ட, கடுமையான அவர்களது மாநில ஆளுநர் பெயரை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர்களுக்கு, எனது குட்டிப் பெயரை சரியாக உச்சரிப்பதில் ஏனிந்த சிரமமோ தெரியவில்லை. எம்மிற்கு அடுத்து டபுள் ஏ போட்டால் சரியாக உச்ச்சரிப்பார்களோ என்னமோ?

    அந்தக் கருப்பழகனுடன் அவன் தோழி மஞ்சளழகியும் நின்று கொண்டிருந்தாள்.  எனக்கு இன்னமும் ஒருவரின் முகவெட்டைப் பார்த்து அவர்கள் ஃபிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான், வியட்நாம், கொரியா போன்ற கிழக்காசிய நாடுகளில் எந்த நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லத் தெரிவதில்லை.  எல்லோருமே சீன நாட்டவர்கள்தான் எனக்கு. அந்த மஞ்சளழகியும் சீன நாட்டவள்தான் என்னைப் பொறுத்தவரை.  அவளுடைய மூதாதையர்கள் அங்கே இருந்து குடி பெயர்ந்திருக்கலாம்.  இவள் பேசும் ஆங்கிலம் அமெரிக்கர்கர்கள் ஆங்கிலம்தான். என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு தன்  காதில் வந்து விழும் ஐ பாட் இசைக்கு தலையைத் தலையை ஆட்டியவாறு இருந்தாள்.  நான் வீட்டுக்குப் போகும் வழியில் வழக்கமாக இருவரும் ஓக்லாண்ட் நிலையத்தில் இறங்கிவிடுவார்கள்.

    நடைபாதையில் போடப்பட்ட கோடுகளுக்கு நேர் எதிரே கதவுகள் சரியாகப் பொருந்துவது போல வண்டி நிறுத்தப்பட்டது. இறங்குபவர்களுக்கு வழி விட்ட பின்பு ஏறுபவர்கள்  ஒழுங்காக வரிசையாக ஏறினார்கள்.  ஸ்டீவ் தன்  தோழியுடனும் சைக்கிளுடனும் இறங்க வசதியாக கதவு பக்கமே உட்கார்ந்து கொண்டான்.  நான் போகும் ஹேவர்ட் நிலையத்திற்கு அரைமணிக்கும் மேல் பயணம்.  உள்ளே தள்ளி வசதியாக ஒரு இருக்கையைப் பிடித்து அமர்ந்து, எனது ஐ பேட் மின்பலகையை எடுத்து, விட்ட இடத்தில் இருந்து படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தைத் தொடர்ந்தேன். ‘டிங் டிங்’ என்று கைபேசி ஒலி எழுப்பியது. அது குறுஞ்செய்தியின் அறிவிப்பு ஒலி. லீலா அனுப்பியிருந்தாள். “என் வீட்டிற்கு உடனே வர முடியுமா?”, “ஒகே” என்று அனுப்பிவிட்டு வெளியே பார்த்தேன். வண்டி ஆஷ்பி நிலையத்தை அடைந்திருந்தது.  அடுத்து வரும் மெக்கார்த்தர் நிலையத்தில் இறங்கி வண்டி மாறினால் லீலாவின் வீட்டிற்குப் போகலாம். எழுந்து கதவருகில் வந்து தயாராக நின்று கொண்டேன்.  ஏன் இங்கேயே இறங்குகிறாய் என்ற கேள்வியை பேசாமல் புருவத்தை மட்டும் உயர்த்தி கண்களால் ஸ்டீவ் கேட்டான். தோழியைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நிலையத்தில் இறங்கிக் கொண்டேன்.  வண்டி நகர்ந்த பொழுது புன்னகையுடன் “ஹாவ் எ நைஸ் வீக்கெண்ட்” என்று அவனும் மஞ்சளழகியும் கையசைக்கவே நானும் வாழ்த்திக் கையசைத்தேன்.

    அறிவிப்புப்  பலகை குறிப்பிட்டபடி வடக்கு நோக்கி செல்லும் மஞ்சள் வழித்தடத்தின் வண்டி வரும் நேரத்தையும், வால்நட்க்ரீக்கில் இருக்கும் லீலாவின் வீட்டிற்கு உள்ள பயண தூரத்தையும் கணக்கிட்டு, அரைமணி நேரத்தில் உன் வீட்டில் இருப்பேன் என்று அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.  வண்டி வந்து ஏறி உட்கார்ந்ததும் லீலாவைப் பற்றிய சிந்தனை ஓடியது.  இம்முறை லீலாவைப் பார்த்து மூன்று நான்கு மாதங்கள்  ஆகியிருக்கலாம் எனத் தோன்றியது. அவள் தாய் மொழி தெலுங்கு, ஒரே நாட்டில் இருந்து வந்திருந்தாலும் ஆங்கிலத்தில் மட்டுமே ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளும் நிலை.  இருவரும் ஒன்றாகப் படித்து பட்டம் வாங்கினோம். அவள் திருமணம் குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கைக்கு மாறிவிட்டாள், மேற்கொண்டு படிக்க சிறிது பணம் சேர்ப்பதற்காக நான் மூன்றாண்டுகள் வேலை செய்த பின்பு மீண்டும் முது நிலை பட்டம் வாங்க பல்கலைக் கழகத்தில் நுழைந்து, வாழ்க்கை இன்னமும் மாணவப் பருவத்திலேயே இருந்தது.  லீலாவிற்கு இரண்டு மகன்கள், மூன்றாவதாக ஒரு பெண் வேண்டும் என்று முயற்சி செய்கிறாளாம்.

    அவள் கணவனுக்கு நல்ல வேலை, நல்ல வருமானம்.  அவளுக்கும் வேலைக்குப் போக விருப்பம்தான், ஆனால் மற்றொரு கார் செலவு, வேலைக்கேற்ற உடை, குழந்தைளைக் காப்பகத்தில் விடும் செலவு என எல்லாமும் சேர்ந்து “தானிக்கு தீனி” என செலவழிந்து கடைசியில் ஒன்றும் மிஞ்சாது.  எனவே பொருளாதார அடிப்படையில் கணக்கிட்டால் வீட்டிலிருப்பதே மேல் என முடிவு செய்திருந்தாள்.  பிள்ளைகள் வளர்ந்த பின்பு வேலைக்குப் போவாளாம். புஷ் ஆட்சி காலத்தில் மட மடவென வீழ்ந்த வீடுகளின் விலை சரிவினால், இப்பொழுது வீடு வாங்கி கையைச் சுட்டுக் கொள்வதைத்  தவிர்க்க ஒரு அப்பார்ட்மெண்ட் தொடர் குடியிருப்பில் வசிக்கிறாள்.

    இரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் வீடு பக்கம்தான். அழைப்பு மணியை அழுத்திய சிறிது நேரத்தில் கதவு திறந்தது.  அழுது சிவந்த கண்களுடன் மூக்கை உறிஞ்சிக்கொண்டு நின்ற லீலாவைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். பேசும் பொழுது புரிவது போல குறுஞ்செய்தி வழியே செய்தி அனுப்புபவரின் உணர்ச்சிகள் அவ்வளவாகப் புரிவதில்லையே.  என்ன ஆச்சு லீலா? என்றேன், என்னையும் அறியாமல் என் குரலில் பதட்டம் வந்துவிட்டது.  “மேடி” என்று கூச்சலிட்ட வண்ணம் அவள் மகன்கள் ஓடி வந்து என் காலைக் கட்டிகொண்டார்கள்.  அவர்களிடம் என்னை ‘ஆண்ட்டி’ என்று அழைக்கக் கூடாது ‘மேடி’ என்றுதான் கூப்பிடவேண்டும் என்று சொல்லிவைத்திருக்கிறேன்.  இன்னொரு இந்திய ஆண்ட்டியாக என்னை அடையாளம் காட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை.

    லீலா சமையலறையை நோக்கி நடந்தாள், நானும் பின் தொடர்ந்தேன்.  அவள் மகன்கள் மீண்டும் தொலைக்காட்சி பார்க்க ஓடி விட்டார்கள்.  இப்பொழுதுதான் பார்த்தேன், அந்த சிறுவர்களின் வயதை ஒத்த இரு சிறுமிகளும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  இவள்தான் எங்கள் மேடி  ‘ஆண்ட்டி’ என்று மூத்தவன் அந்த சிறுமிகளுக்கு என்னைப் பெருமையுடன் அறிமுகப் படுத்தினான். அதில் என்ன பெருமை என்பது எனக்கு விளங்கவில்லை. அந்த இரண்டு சிறுமிகளும் அழகான கொழுக் மொழுக் செல்லுலாயிட் பொம்மைகள்.  புன்னகை உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.  மீண்டும் மழலைப் பட்டாளம் ‘டோரா’ தொலைக் காட்சியில் சொல்லிக்கொடுப்பதை ஆவலுடன் சேர்ந்து கூடவே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  நான் சமையலறைக்குப் போனதும் லீலா எனக்கு விருந்தோம்பலாக கொடுத்த கோக் டப்பாவைத் தள்ளி வைத்துவிட்டு “என்ன ஆச்சு சொல்லு” என்றேன்.

    உணவருந்தும் மேஜையின் நாற்காலில் அமர்ந்த வண்ணம் “அந்த பெண்குழந்தைகளைப் பார்த்தாயா?” என்றாள்.

    “உன் பக்கத்துக்கு வீட்டிற்கு டெக்ஸ்சாசில் இருந்து புதிதாக ஒரு இந்தியக் குடும்பம் வந்திருக்கிறது, அவள் பெயர் நிஷா என்று நீ தொலைபேசியில் சொன்ன ஞாபகம். அவர்களுக்கு இரண்டு பெண்கள் என்று நீ சொன்னதும் நினைவிருக்கிறது, அந்தக் குழந்தைகளா இவர்கள்?”

    “ஆமாம், நீ யூகித்தது சரிதான்”

    “அதற்கும் உன் அழுகைக்கும் என்ன தொடர்பு?”

    “குழந்தைகளுடைய பெற்றோர்கள் நேற்று இரவு சாலை விபத்தில் இறந்து விட்டார்கள், குழந்தைகளுக்கு இன்னமும் அந்த விபரம் தெரியாது, சொன்னாலும் புரியாது” என்று அந்தக் குழந்தைகளைப் பார்த்தவாறே விம்மினாள்.

    லீலா விரிவாக சொல்லத் தொடங்கினாள்.  சமீபத்தில் அங்கு குடி வந்த நிஷாவின் குடும்பம் மிகச் சிறிய மகிழ்ச்சியான குடும்பம். திருநெல்வேலி பக்கம் ஏதோ ஒரு சிறிய கிராமம் நிஷாவின் கணவனுக்கு, நிஷா மும்பையில் வளர்ந்தவள். வந்த சில நாட்களிலேயே குழந்தைகளும் நிஷாவும் லீலா குடும்பத்துடன் நன்கு பழகி விட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு  நிஷாவும் வேலைக்குப் போக நினைத்திருக்கிறாள்.  குழந்தைகளை இரவில் கணவனும், பகலில் அவளும் பார்த்துக்கொள்ள வசதியாக ஒரு இரவு நேர வேலை கிடைத்தது. இரவு எட்டு மணிக்கு கிளம்பினால் காலையில் ஆறு மணி போல வீடு திரும்பும் வகையில் ஒரு மருத்துவமனையில் வேலை.

    நேற்று இரவு நிஷாவின் கணவன் லீலா வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறான்.  நிஷா வேலைக்கு கிளம்பும் முன்பு பார்த்த பொழுது அவள் காரின் சக்கரம் பழுதடைந்திருக்கிறது, காற்று இல்லை.  எனவே தன் காரில் கொண்டு விட்டு வர நினைத்திருக்கிறான்.  அவன் குழந்தைகள் லீலாவின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.  அவர்களைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல், ஒரு அரை மணி நேரத்தில் திரும்பி வந்து அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு மனைவியுடன் சென்றுவிட்டான்.  இரவு மணி பத்திற்கும் மேலாகி குழந்தைகளும் லீலாவின் வீட்டிலேயே தூங்கி விட்டார்கள்.  என்னவோ, எதுவோ சரியில்லை என லீலாவின் கணவன் நிஷாவின் கணவனை அவனது  கைபேசியில் அழைத்திருக்கிறான்.  ஆனால் மறுமுனையில் பேசியதோ போலீஸ்.  குடிகாரன் ஒருவன் தாறுமாறாக வண்டி ஓட்டி இவர்கள் காரில் மோதி பெரிய விபத்து.  வண்டி உருண்டு தீப்பிடித்துவிட, இறுகிப்போன காரின் கதவையும் உடனே திறந்து அவர்களை வெளியே இழுக்க முடியாமல் கால தாமதமாகிப்போன காரணத்தினால் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. போலீஸ் அந்த கைபேசியின் வழியே உறவினர் யாரையாவது தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

    நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது இடையில் லீலாவிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது.  அவளது மொழியில் பேசினாள்.  அவளது கணவன் போலிருக்கிறது.  பேசி முடித்தவுடன் மீண்டும் அழுதாள், அவளைச் சுற்றி மூக்கை சிந்திய டிஷ்யூ காகிதம் குவிந்திருந்தது. கொஞ்ச நாள் பழக்கத்தில் அந்த நிஷா தம்பதியினரின் மறைவுக்கு எப்படி அழுகிறாள், என்ன ஒரு இளகிய மனம் இவளுக்கு என்று லீலா மீது இரக்கமாக இருந்தது.  அவளாகவே மேலும் பேசட்டும் என மெளனமாக திரும்பி அந்த சிறுமிகளைப் பார்த்தேன்.

    இப்பொழுது அவர்கள் சின்னத் திரையில் டோரா விடுத்த வேண்டுகோளின்படி “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்”, “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்”,  “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்” என்று கூச்சலிட்டார்கள்.  அவர்கள் அதை அந்தக் கதையில் வரும் சூழ்ச்சிக்கார நரியிடம் சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை.  தங்கள் பெற்றோரைக் கொண்டு சென்ற விதியிடம் சொல்வதாகத் தோன்றியது.  பெரும்பாலும் தோல்வியடைந்து “ஓ மேன்” என சலித்துக் கொள்ளும் கார்ட்டூன் நரி இந்த முறை “யு ஆர் டூ லேட்” என்று கூறி “ஹெக் ஹெக் ஹே” என்று சிரித்து டோராவின் பொருளைத் திருடிக் கொண்டு ஓடியது.  அது அந்த சிறுமிகளின் விண்ணப்பத்திற்கு நரியின் வழியாக விதி சொன்ன பதிலாகத் தோன்றியது.  இந்த அழகுக் குழந்தைகளை வளர்க்க முடியாமல் போன, இதுவரைப் பார்த்திராத நிஷா தம்பதியரின் மீது எனக்கும் பரிதாபமாக இருந்தது. எதேச்சையாக திரும்பி என்னைப் பார்த்த சிறுமிகளில் ஒருத்தியிடம் இங்கே வா என சைகை செய்தேன்.  அவள் வந்து என் மடியில் உட்கார்து கொண்டாள்.

    அவளைப் பார்த்தவாறே, “இவர்களை இவளது உறவினர்கள் வந்து பெற்றுக்கொள்ளும் வரை எங்களுடன் வைத்துக்கொள்ள போலீஸ் அனுமதி கொடுத்துள்ளார்கள்” என்றாள் லீலா.

    “இதைத்தான் உன் கணவர் இப்பொழுது சொன்னாரா?”

    ஆமாம் என்று தலையாட்டிய லீலா, “நிஷாவுக்கு உறவுகள் யாரும் இல்லை, அதனால் நிஷாவின் கணவனது தம்பியைத் தொடர்பு கொண்டு செய்தி சொன்னாராம்.  அந்த தம்பி இந்தியாவில் இருந்து உடனே புறப்பட்டு வந்து குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்வதாகச் சொன்னாராம்.  அந்த சின்னக் கிராமத்தில் இவர்கள் எதிகாலம் என்னவாகுமோ தெரியவில்லையே” என்றாள்.

    “என்ன இருந்தாலும் அப்பா அம்மா பார்த்துப் பார்த்து இவர்களை வளர்ப்பது போலாகுமா?” என்று உடைந்த குரலில் சொன்ன லீலா, திடீரென அந்த சிறுமியிடம் கைநீட்டி “பாவி, பாவி,  உங்களை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்டாள் உன் அம்மா, இப்படி நட்டாற்றில் விட்டு விட்டுப் போனாளே அந்தப் பாவி,” என்று தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதாள்.  அந்தக் குழந்தைக்கு எதுவும் புரியாமல் திரு திருவென விழித்து அழுது விடுவது போல முகம் மாறியது.

    நான் உடனே சட்டென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு டிவி முன் உட்காரவைத்து அதன் கவனத்தை திசை திருப்பிவிட்டு அங்கிருந்தே லீலாவைத்  திரும்பிப் பார்த்தேன். இப்பொழுது அவள் இந்தக் குழந்தைகளுக்காக, இவர்களது எதிர்காலத்தை எண்ணி அழுவது புரிந்தது.  இது போன்று அடுத்தவர்களின் குழந்தையின் எதிர்காலாத்தை எண்ணித் துடிக்க ஒரு பெண்ணால் அவள் தாயான பின்புதான்  முடியுமோ என்று தோன்றியது. இந்த நிலையில் லீலாவின் உடனிருப்பதுதான் அவளுக்கு நல்லது, இன்றிரவு இங்கேயே தங்கி விடலாம் எனத் தீர்மானித்தேன்.

    லீலாவின் இளைய மகன் சமயலறைக்கு ஓடி மேஜையடியில் உட்கார்ந்திருந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.  பிறகு சமயலறையில் உள்ள மேடையைப் பார்த்தான், பிறகு மீண்டும் திரும்பி அம்மாவைப் பார்த்தான்.  அவனுக்கு என்னவோ வேண்டும் ஆனால் அழும் அம்மாவிடம் கேட்க தயக்கம் எனப் புலப்பட்டது.  அவனிடம் சென்று தோளைத் தட்டி “ஹாய் ஹாண்ட்ஸம்,  என்ன வேண்டும் உனக்கு?” என்றேன்.

    “மேடி, சாக்லேட் டோநட் கொடு”, என்று ஒரு பெட்டியைக் காட்டிக்  கேட்டான். அதிலிருந்து ஒரு  டோநட்டை அவனிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு, தொலைக்கட்சியில் மூழ்கிவிட்ட மற்ற குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒன்று கொடுத்துவிட்டுத் திரும்பினேன்.  இளையவன் டோநட் சாப்பிட்ட வண்ணம் அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவனைத் தூக்கி மேஜையில் லீலாவின் அருகில் உட்கார வைத்தேன்.  இவனைப் பார்த்தாவது சமாதானம் அடைவாள் இல்லையா?  சப்புக் கொட்டியவாறு டோநட் சாப்பிட்டுக் கொண்டு, அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தலையைத் தடவிக் கொடுத்த மகனை அமைதியாக சிறிது நேரம் பார்த்தாள் லீலா. பிறகு மீண்டும் பெரிதாக விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள்.

    இப்பொழுது அந்த அழுகையில் ஒரு அச்சமும் கலந்து இருந்தது.  நிஷாவின் குழந்தைகள் இடத்தில் இப்பொழுது தன் குழந்தைகளை வைத்துப் பார்ப்பாளோ? தானும் தன்  கணவனும் திடீரென ஒருநாள் இதுபோலவே சாலை விபத்தில் இறந்துவிட்டால் தன்  மகன்களின் கதி என்ன ஆகும்? அவர்கள் அனாதைகளானால் அவர்களது எதிர்காலம் என்ன ஆகும்? என்ற அவளது அச்சம் அவள் அழுகையின் ஊடே வெளிப்படுவதாகத் தோன்றியது, அவள் இப்பொழுது அழுவது அவளது மகன்களுக்காகவோ?

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …(32)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !
     
    ஒரு நாட்டின் ஊடகம் என்பது அந்நாட்டின் முதுகெலும்பைப் போன்றது. ஊடகங்கள் சர்வாதிகார அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் நாடுகளில் அந்நாட்டுப் பிரஜைகளின் குரல்வளை நெரிக்கப்படுவது போன்ற ஒரு நிலையே தோன்றுகிறது.
     
    ஊடகங்களின் சுதந்திரம் ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது. ஊடகங்களின் சுதந்திரத்திலேயே நாடுகளின் சுபீட்சமும், தன்மானமும் காக்கப்படுகிறது.
     
    ஊடகங்களுக்கே பதவியிலிருப்போர் அப்பதவியின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகிக்கும்போது அதைத் தட்டிக் கேட்கும் உரிமை இருக்கிறது. நாட்டின் முன்னனிப் பிரஜைகள் தவறான பாதையில் போகும் போது அதைச் சுட்டிக் காக்கும் கடமை சுதந்திரமான ஊடகங்களின் கைகளில் தங்கியுள்ளது.
     
    ஆனால் அச்சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், மக்களுக்கு அவ்வூடகங்கள் தரும் செய்திகளில் உள்ள உண்மையின் மீது நம்பிக்கை வலுவடைய வேண்டுமானால் அதைப் பாதுகாக்கும் கடமை கூட அவ்வூடகங்களின் கைகளிலேதான் தங்கியுள்ளது. சுதந்திரத்திர்கும், தாந்தோன்றித்தனத்திற்கும் இருக்கும் எல்லையைக் கடந்து விடாமல் இருக்க வேண்டியது ஊடகங்களின் தார்மீகக் கடமையாகிறது.
     
    என்ன சக்தியின் இம்மடலின் பீடிகை நீண்டு கொண்டே போகிறது ? என்ன விடயமாக இருக்கும் என்னும் ஆவல் உங்களுக்கு ஏற்படுவது எனக்குப் புரிகிறது.
     
    பி.பி.ஸி உலக ஊடகத்துறையினருக்கே ஒரு முன்னுதாரணமாக, பல நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றிருந்த பிரித்தானிய நாட்டின் தேசிய ஊடகத்தின் மீது படிந்த கறைகளைப் பற்றிய ஒரு அலசலுக்கான பீடிகையே நீங்கள் மேலே கண்டது.

    பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானிய ஒலிபரப்புக் கம்பெனி (British Broadcasting Company) 1922ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் திகதி ஆறு பிரத்தியேக கம்பெனிகளினால் பரீட்சார்த்த வானொலி ஒலிபரப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டது.

    அதே ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி இதன் முதலாவது ஒலிபரப்பு 2LO எனும் ஸ்டேசனுக்காக லண்டனில் உள்ள மார்க்கோனி ஹவுஸ் எனும் இடத்தில் இடம்பெற்றது.

    இதனுடைய விரிவாக்கம் தம்முடைய பத்திரிக்கைகளின் விற்பனையைத் தாக்கிவிடும் எனும் பீதியால் பிரித்தானிய பத்திரிக்கைத்துறையினர் அன்றைய அரசாங்கத்தினூடாக இவ்வானொலிச் சேவைச் செய்திகளை மாலை 7 மணிக்குப் பின்னரே ஒலிபரப்பலாம் எனும் நிபந்தனையைக் கொண்டுவந்தார்கள்.
     
    இப்ப‌டியாக‌ ஆர‌ம்பித்த‌ இவ்வூட‌க‌த்தின் முக்கிய‌ ஸ்தாப‌ன‌ங்க‌ளில் ஒன்று பிரித்தானிய‌ தேசிய‌ தாபாற் சேவை இலாகாவாகும். தேசிய‌ச் சேவையான‌ தாபாற்சேவை இலாகா ஒரு த‌னியாருட‌ன் இணைந்த‌ கூட்டுத்தாப‌ன‌த்திற்காக‌ ம‌க்க‌ளிட‌ம் இருந்து வ‌ரி வ‌சூலிக்கத் த‌ய‌ங்கிய‌தால் இக்கூட்டுத்தாப‌ன‌த்தில் அங்க‌ம் வ‌கித்த‌ த‌னியார் நிறுவ‌னங்க‌ள் வில‌கின‌. 1926ம் ஆண்டு ந‌ட‌ந்த‌ பிரித்தானிய‌ பொது வேலை நிறுத்த‌ம் ப‌த்திரிக்கைக‌ளின் வெளியீட்டில் இடையூறு ஏற்ப‌டுத்த‌ இக்கூட்டுத்தாப‌ன‌த்தின் மீது விதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ நேர‌த்த‌டை அக‌ற்ற‌ப்ப‌ட்ட‌து. இப்பொது வேலை நிறுத்த‌த்தின் போது இவ்வொலிப‌ர‌ப்பு ஊட‌க‌ம் எடுத்த‌ ந‌டுநிலையான‌ த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ம் ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இக்கூட்டுத்தாப‌ன‌த்திற்கு ஒரு உய‌ரிய‌ இட‌த்தை அளித்த‌து.
     
    விளைவாக பிரித்தானிய அரச முத்திரையுடன் 1926ம் ஆண்டு இன்றைய பி.பிஸியின் அமைப்பு முறை தோற்றுவிக்கப்பட்டது. இதன் முதல் செயற்பாட்டு நிறுவனராக சார் ஜான் ரீத் நியமிக்கப்பட்டார்.
     
    இத்தகைய ஒரு சூழலில் ஆரம்பிக்கப்பட்ட பி.பி.ஸியே உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் முத‌லாவதாக ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஊடக சேவையாகும்.
     
    இதன் முதலாவது தொலைக்காட்சிச் சேவை 1936ம் ஆண்டு லண்டனில் அலெக்ஸாண்ரா மாளிகையில் இருந்து ஒலிபரப்பப்பட்டது.
     
    இச்சேவையில் நடுநிலைமையான ஊடகச் சேவையின் மதிப்பு பலநாடுகளிலும் ஊடுருவியிருக்கிறது. குறிப்பாக தற்போது உலகெங்கும் ஒலிபரப்பாகும் பி.பி.ஸி உலக தொலைக்காட்சி, வானொலி சேவை உலகநாடுகளின் பல செய்திகளை உடனுக்குடன் எம்மை வந்தடையச் செய்கிறது.
     
    இத்தகைய ஒரு முன்னணி ஊடகத்துறை இன்று ஒரு அவதூறுக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு தத்தளிக்கிறது. இதுவரை இதன் தலைவரான ஜார்ஜ் என்ட்விசில் (George Entwistle ) அவர்களது பதவியைக் களைந்துள்ளது. அவரைத் தொடர்ந்து இன்னும் பல முக்கிய பதவியிலிருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகி விட்டது.

    இந்நிலை தோன்றக் காரணமென்ன ?
     
    நான் ஒருவாரங்களுக்கு முன்னால் தீட்டியிருந்த மடலில் குறிப்பிட்டிருந்த ஜிம்மி சவைல் (Jimmy Saville) அவர்களின் மீதான சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றியதோர் நிகழ்ச்சி ஒலிபரப்பாவதை கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நேரம் தடை செய்தமை தொடர்பாக மிகவும் கடுமையான விமர்சனத்துக்கு பி.பி.ஸி உள்ளாகியிருந்தது.
     
    அதனால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தீவிரமாக விசாரிக்காமல் தம்மீது கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னனனி அரசியல்வாதி பலவருடங்களுக்கு முன்னால் பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டார் என்று குற்றம் சாட்டிய ஒருவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தமது நியூஸ் நைட் (News night) என்னும் நிகழ்ச்சியில் ஒரு பரபரப்பான செய்தியை ஒலிபரப்பிவிட்டார்கள்.
     
    விளைவு ஒரு முன்னணி கன்சர்வேடிவ் அரசியல்வாதியான லார்ட் மக் அல்ப்பைன் (Lord McAlpine) என்பவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டது.
     
    பி.பி.சி நிகழ்ச்சியில் அவர் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் அவர்மீது தேவையற்ற அவதூரு சுமத்தப்படுவதற்கு தீர ஆராயப்படாமல் ஒலிபரப்பப்பட்ட அந்நிகழ்ச்சியே காரணம் என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட்டது. பி.பி.சியின் நடுநிலைமையான ஊடகத்தன்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்பதே பெரும்பான்மையோரின் ஏகோபித்த அபிப்பிராயம்.
     
    பிரித்தானிய பத்திரிக்கை ஊடகத்துறையினர் கையாண்ட சில கபடத்தனமாகச் செய்தி சேகரிக்கும் முறையினால் பத்திரிக்கைகளின் மீது தணிக்கை அவசியமா என்பதற்கு ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து அதன் முடிவுகள் வெளியாகப்போகும் தருணத்தில் தம்மீது விழப்போகும் பழியைத் திசைதிருப்ப, பத்திரிக்கைத் துறையினருக்கு இது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலான சந்தர்ப்பம் ஆகி விட்டது எனச் சில அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
     
    அது மட்டுமின்றி இத்தகைய ஒரு அனர்த்தத்தினால் முன்னணி நிறுவனமான பி.பி.சி உட்ப்பட ஊடகத்துறையினரின் சுதந்திரத்திர்கு வேட்டு விழுந்து விடுமோ என்றும் பழுத்த‌ அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்.
     
    தொடர்ந்து எடுக்கப்படப்போகும் நடவடிக்கைகள் தான் பிரித்தானிய ஊடகத்துறையினரை இந்நிகழ்வு எந்த அளவிற்குப் பாதிக்கப் போகிறது என்று உணர்த்தப் போகிறது.
     
    ஒரு நாட்டின் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானல் அது அந்நாட்டின் ஊடகத்துறையினருக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைப் பொறுத்தே உள்ளது. ஆனால் அதைப்பாதுகாக்கும் கடமையின் முக்கியத்துவத்தை உணர வேண்டியது அவ்வூடகத் துறையையும் அதை சார்ந்தவர்களையுமே சேர்ந்துள்ளது.
     
    இதை உணர்ந்துதான் எமது தமிழ்ப்பாட்டன் பாரதி ” தம்பி உன் உள்ளத்தில் உண்மை இருந்தால் எழுதுகோலை எடு எழுது ” என்றானோ ?
     
    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
     

     

    Share
  • Diwali celebrations at Sevalaya

     

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    No 2/25, Ground Floor, Rajaji Nagar Main Road,Pillaiyar Koil Street, Thiruvanmiyur, Chennai 600041.

    Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

    Phone: 04424484009, 9444620289, 9444620286, 044-64611488, 044-26344243.

    E-mail:   Sevalayamurali@gmail.com,   Sevalayapro@gmail.com,   Visit us at: www.Sevalaya.org.

     

    Please publish the following matter in your esteemed newspaper.

     

                                                          Press Report                                                              10.11.2012

    ‘Sevalaya’s Diwali Lights overwhelmed the Darkness’

     

    ‘Diwali Day’ was celebrated on 10th of November in Sevalaya’s Service centre at Kasuva at 10.00 AM.  The chief guest Ms. Srimathi Shivashankar (Associate Vice President – Diversity & Sustainability, HCL Technologies) has presided over the devotional function, to invoke the blessings of the God Almighty to the residents that include Orphan children, Destitute Senior Citizens & Balwadi Kids. In order to inculcate the ‘Religious Harmony’ in the tender minds of the kids, Sevalaya has a reputation of celebrating all auspicious days of every religion.

    Students of Mahakavi Barathiyar Hr Sec School have given a spectacular cultural program by many forms that included a small skit about the concept of Diwali, poetry and a dance sequel.  Mr. Ram of HCL Technologies felt triumphant by visiting an Organization whose main agenda was educating the poor kids.  He has jovially compared the school kids to the stars and the Teachers to the Moon.  He also told the audience that the HCL Team’s quest for social responsibility is satisfied by the involvement in the activities of Sevalaya.  Colorful posters depicting the Diwali were displayed in the stage by the HCL staff.  Students and staff from Saraswathi   Matriculation School have donated new cloths to the resident children of Sevalaya.

                 Delivering her address, the chief guest Ms. Srimathi Shivashankar said that it gave immense pleasure to see the transformation of cultural heritage of our past to the present generation. She appreciated the students who have performed culturals like songs and dances. She has announced on behalf of the Staff of HCL Technologies, to donate Solar Lights and Equipments to the entire campus of Sevalaya.  Ms. Srimathi has emphasized the significance of Dreams to the children that would one day will be realized.  During her speech, which was very participating from the audience, advised the students to write down their specific dreams in a paper and to get motivated by reading it twice a day.  She promised the applauding audience, she would personally come and collect all the ‘Dream Lists’ from the Kids in her next visit.   She also started a Leadership Training Program to the Heads of Departments of Sevalaya, which is likely to be continued for the next four months.

                 New cloths for Diwali were distributed to the Senior Citizens of the Old Age Home and to the destitute Children Home.

    Earlier Mr.V.Muralidharan (Founder and Managing Trustee, Sevalaya) welcomed the guests, and Mrs. Annapoorna (Head Mistress, Mahakavi Barathiyar Hr Sec School) has proposed the vote of thanks.

     

    Thanks & Regards

    For Sevalaya

    (V.Muralidharan)

    Founder & Managing Trustee             

    Board of Trustees:

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

    Advisory ommittee: Dr.G.Nammalvar,

    Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj IPS (Retd), Mr. Amarchand Jain, Dr. Malavika Vinothkumar

    Hony, Co-Ordinator:                                                                                         Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                                            Mrs. Bhuvaneshwari Muralidharan

     

    Share
  • மாநகர காவல் ஆணையரை சந்தித்தது TUJ

     

    செல்வரகு

    நடவடிக்கை எடுக்குமாறு மறு கோரிக்கை

     

    தமிழ்நாடு  பத்திரிக்கையாளர் சங்க தலைவர் DSR சுபாஷ் அவர்கள் சிக்கிமில் நடைபெறும் அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் (IJU)தேசிய மாநாட்டில் கலந்துகொண்டிருந்த சமயத்தில் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சில விஷமிகள் சென்னை காவல் ஆணையாளரிடம் கொடுத்த பொய் புகார் கொடுத்ததை கண்டித்து சங்கத்தின் மாநில பொது செயலாளர் கு.வெங்கட்ராமன் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் ஒன்று கூடி இன்று 10-11-12 —மாலை  5.30 மணிக்கு சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து  நடவடிக்கை எடுக்குமாறு மறு கோரிக்கை அளித்துள்ளனர் . அதன் நகல் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது .

     

    Share
  • உன்னைப் போல எவருண்டு!

     

    கவிநயா

    சின்னக் கண்ணே சிரிக்கும் முத்தே
    சின்னப் பாப்பா வா
    கண்ணின் மணியே கொஞ்சும் கிளியே
    கண்ணே பாப்பா வா

    அ, ஆ, இ, ஈ, கற்றுக் கொண்டு
    அழகாய்ப் பேசிடணும்
    நம்தாய் மொழியாம் தமிழை நீயும்
    கண்ணாய்ப் போற்றிடணும்

    உண்ணும்போது பிறர்க்கும் கொடுத்து
    பகிர்ந்தே உண்டிடணும
    உதவி வேண்டும் பேர்க்கு உடனே
    ஓடி உதவிடணும்

    கோபம், அழுகை, பிடிவாதம், இவை
    எல்லாம் விட்டிடணும்
    அன்பே தெய்வம் எனும் எண்ணம்உன்
    மனதில் நின்றிடணும்

    குழந்தை உள்ளம் மாறாமல் நீ
    உலகில் வாழ்ந்திடணும்
    உன்னைப் போல எவருண்டு என
    உலகம் சொல்லிடணும்!

    படத்திற்கு நன்றி :

    http://www.pakindifun.com/picdetail.php?catId=33&tid=471

    Share
  • காணிக்கை

     

    சு. கோதண்டராமன்

    கோவில் உண்டியல் காணிக்கைக்குக்
                காசினை எடுக்கையில் அறிவு தடுத்தது
                “பற்பல கோவிலில் உண்டியல் திருட்டு,
                அறங்காவலரால் ஆலயம் சூறை,
                என நிதம் படிக்கிறோம் செய்தித்தாளில்.

                நேரே  நல்லோர்க் கீவாய்” என்றது.

                தீபத்தட்டுடன் குருக்கள் வந்தார்-
                வைரக்கடுக்கன் வகை வகை மோதிரம்
                “இவர்க்கேன் எந்தன் அற்பக்காசு?
                தனிகர்க் களித்தல் தருமம் அல்ல.”

               
                வறுமையின் உருவமாய் வந்தார் பணியாள்
                “ஐயகோ! இவனொரு குடியன் அன்றோ?
                ஆலயப் பணியின் புனிதம் மறந்து
                அறவழி பிறழும் இவனும் வேண்டாம்.”

                வெளியே பலபேர் பிச்சை எடுத்தனர்
                எஃகினைப்போன்ற உடலினைக் கொண்டோர்
                உழைக்கா துண்பதில் தனிச்சுகம் காண்போர்
                “இவர்க்கு ஈந்தால் சோம்பல் வளரும்,
         எனக்கோர் சமூகக் கடமையும் உண்டு.”

    தெருவில் இறங்கி நடந்தபோது
    எதிரில் சுவரில் இருந்ததிவ் வாசகம்
    “கடமையைச் செய்யவே உனக்குளதுரிமை,
    பலனை அலசுதல் மாபெரும் மடமை.”

    காசினை அங்கே வைத்து நகர்ந்தேன்
    கனமிலா மனத்துடன் இல்லம் வந்தேன்.

    Share
  • குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்! (2012)

     

    பவள சங்கரி

     மலரும் மொட்டுகளுக்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

    உலகிலேயே மிக அதிகமான குழந்தை மக்கள் தொகை உடைய நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று. குழந்தைகள் மீது அதீதமான அன்பும், அக்கறையும் கொண்டிருந்தவர், நம்முடைய சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லார் நேரு. இவரின்  நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாளான நவம்பர் மாதம் 14ம் தேதியன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 1925ம் ஆண்டு, ஜெனீவாவில் குழந்தைகள் நலவாழ்வு என்பதன் அடிப்படையில் சர்வதேச மாநாடு ஒன்றை நடத்தியிருக்கிறர்கள். 1954ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் தினத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. சர்வசேத குழந்தைகள் தினம் நவம்பர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.  குழந்தைகள்தான் ஒவ்வொரு நாட்டின் வருங்காலத் தூண்கள் மற்றும் அந்நாட்டின் எதிர்காலம்ர்ர் அவர்கள்தான் என்று பல பெரியோர்களால் போற்றப்பட்டாலும், அவர்களை நல்வழியில் செலுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசியர்களுக்கு உண்டு.

    உலகளவில் கோடிக்கணக்கானக் குழந்தைகள் இன்று ஊட்டச்சத்து குறைபாடு, பாலியல் வன்முறைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் போன்று பலவிதமான பிரச்சனைக்களுள்ளாவதையும் கருத்தில் கொண்டு அதற்கான தீர்வு காண வேண்டிய காலமிது. சரியான உணவும், நல்ல உடைகளும், சுகாதாரமான தங்குமிடங்களும் இல்லாமல் எண்ணிலடங்காத குழந்தைகள் இன்று அல்லலுறுவதைக் காண மனம் வேதனை கொள்ளுகிறது. குழந்தைகள் தினக் கொண்டாட்டங்கள் இது போன்ற பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகளின் நலவாழ்வு குறித்து பல்வேறு திட்டங்களும், தீர்மானங்களும் நிறைவேற்றியிருந்தாலும் அவை யாவும் இன்று நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. அனைத்தும் பேச்சளவிலேயே நின்று கொண்டிருப்பதே நிதர்சனம். இந்த பிரச்சனைகளெல்லாம் களையப்பட்டு குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாகச் சிறகடிக்கும் காலமே அவர்களின் வசந்த காலம்.  அடுத்த ஆண்டின் குழந்தைகள் தினமாவது அப்படி ஒரு தினமாக அமைய வேண்டும் என்று மனமார வாழ்த்துவோம்!

    தளிரே, எம் இளந்தளிரே
    அரும்பாய் நீ மலர்ந்திடவே
    கனிவாய் நீ கற்றிடுவாயே

    உவகையும் ஊட்டமும் ஊறட்டும்
    ஈகையும் எளிமையும் இருக்கட்டும்
    நம்பிக்கையும் ஊக்கமும் பெருகட்டும்

    சிறகு விரித்து பரவசமாய்
    வானில் மிதந்து களிப்பாய்
    கடமையுணர்ந்து கருத்தாய்

    காலம் கடந்து ஞானம் நிறைந்து
    வாழையடி வாழையாய் வாழ்கவே!

     

    படங்களுக்கு நன்றி :

    http://www.desicomments.com/childrens-day/

    Share
  • “பொருள் என்று ஒரு திடப் பொருள் உலகத்தில் இல்லை”

     

    வெங்கட் சாமிநாதன்

    நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 53)

    புர்லா திரும்பியதும்  மறுபடியும் பழைய அன்றாட பாட்டை நடைதான். அலுவலகம், தினசரி பத்திரிக்கையில் wanted column-ல் எனக்கு என்ன இருக்கு என்ற தேடல். இருந்தால் ஒரு மனு போட  வேண்டியது. இதில் ஏதும்  சுவாரஸ்யம் இல்லை என்றாலும், இவ்வளவு நெருக்கமாக பழகியவர்களை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற ஒரு வருத்தம் ஒரு மூலையில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு சமயம் இந்த நினைப்பு வந்ததும் சக்கரவர்த்தியைப் பார்க்கப் போய் விடுவேன். மஞ்சு சென்குப்தாவுக்கும் வேறு செக்‌ஷனுக்கு மாற்றலாகி விட்டது. அங்கு கொஞ்ச நேரம் கழிப்பேன். சில சமயங்களில் மிருணாலும் சேர்ந்து கொள்வான். அவன் இருக்கும் போது மஞ்சு சொல்வாள்: “எங்களை விட்டுப் போய் விடுவீர்கள் இல்லையா?” என்பாள் இது கட்டாயம் இண்டர்வ்யூவுக்குப் போகும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் கேட்கப் படும் கேள்வி. மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். சாதாரணமாகக் கேட்பது போலும் இருக்கும். குற்றம் சாட்டுவது போலும் இருக்கும். வருத்தத்துடன் தனக்குள் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது போலும் இருக்கும். என்ன என்று பதில் சொல்வது? எங்கோ பார்வை செல்லும். ஒரு வெறுமை முகத்தில் படரும். எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இந்த வருத்தம் சொல்லப்படும். பகிர்ந்து கொள்ளப்படும். எல்லோருமே வாய்ப்புக்காகத் தான் காத்திருந்தார்கள். வாய்ப்புக் கிடைத்ததும் சென்று கொண்டிருந்தார்கள். இங்கு தான் அணைக்கட்டு வேலை முடிந்து கொண்டிருக்கிறதே. உள்ளூர்வாசிகள், ஒடியாக்கள் தவிர மற்ற எல்லோருக்கும் இதே கவலை தான். வேலை நீக்க உத்தரவு தரப்படுவதற்கு முன் கிளம்பிவிடவேண்டும். FA & CAO அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கவலை இல்லை. அப்படியே கூண்டோடு அவர்கள் பிலாய்க்குப் போகக் காத்திருந்தார்கள்.

    இப்படி எல்லோரும் போய்க்கொண்டிருந்தால் இங்கு மிகுந்த நாட்களுக்கு வேலை நடக்க வேண்டாமா? வேறு வேலைக்கு உத்தரவு வந்த போதிலும் இருக்கும் வேலையைச்  செய்ய ஆட்கள் இல்லையென்று நிர்வாக மேல் அதிகாரிகள் வேலை கிடைத்தவர்களை விடுவிக்க மறுத்தார்கள். அந்த ஆபத்து வேறு ஒன்று தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக பயமுறுத்திக் கொண்டிருந்தது, என் செக்‌ஷனுக்கு பொறுப்பாக இருந்த தேஷ் ராஜ் பூரி எனக்கு ஆசுவாசம் அளித்திருந்தார். “உனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்ததும் சொல். பதிலுக்கு ஆள் வேண்டும் என்று நான் உனக்குத் தடை சொல்ல மாட்டேன். உடனே உன்னை விடுவித்து விடுகிறேன். கவலைப் படாதே” என்று எப்போதாவது தோணும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆறு வருஷங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த சமயம் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்தவர் பின்னர் ஒரு சில மாதங்களில் மிகவும் கனிந்த மனிதராக மாறியவர். அந்த ஆரம்ப மாதங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் அவரிடம் நான் வேலை பார்க்கவில்லை. ஆனால், அன்று விட்டுப்போன அந்தக் கனிவை இன்று இப்போது திரும்பப் பார்க்க முடிந்தது. உறவுகள் எப்படியெல்லாம் தான் மாறுகின்றன!

    Wanted columns பார்த்து வேலைக்கு  மனு எழுதிப் போடுவதும் எங்கிருந்து என்ன வரும் என்று எதிர்பார்ப்பும் தொடர்ந்தது. ஊர் சுற்றும் ஆசையும் அந்த எதிர்பார்ப்போடு சேர்ந்து கொள்ளும். வந்தது ஒரு அழைப்பு. Eastern Railway யிலிருந்து. கல்கத்தாவுக்குப் போகவேண்டும் நேர்காணலுக்கும் பரிட்சைக்கும். மிருணாலுக்கு சந்தோஷம் தான். ஆனால் கல்கத்தாவில் அவன் குடும்பத்தார் யாரும்  இல்லை. அப்பா இன்னமும் டாக்காவில் தான் வேலை பார்க்கிறார். ஆனால் முன்னொரு தடவை எல்லோரும் கல்கத்தா போயிருந்த போது எங்களுக்கு இடவசதிகள் செய்து கொடுத்தவர் இம்முறையும் தனக்குத் தெரிந்தவருக்கு ஒரு கடிதம் கொடுத்தார் பாலிகஞ்சில் வெகு காலமாக வாழ்ந்து வருகிறவர்கள். அங்கு நான் தங்கிக்கொள்ளலாம். இரண்டு நாட்கள் தான் தங்க வேண்டியிருக்கும். ஒரு நாள் பரிட்சை. மறுநாள் நேர்காணல். நேர்காணல் 12 மணிக்குள் முடிந்துவிடும். பின்  மதியம் எங்கும் போகலாம். அல்லது இன்னும் ஒரு நாள் தங்கவும் செய்யலாம். இரவு தான் பம்பாய் மெயில். காலை ஐந்து மணிக்கு ஜார்சகுடா போய்ச் சேர்ந்து விடும். அலுவலகத்துக்கு 10 மணிக்குள் போய்ச் சேர்ந்து விடலாம்.

    இம்முறை குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இருக்கவில்லை. நேர் காணலில் தான் நான் என் இயல்பில் இருந்ததாக நினைத்தேன். ஆனால் கடைசியில் என்னை அறியாது தவறிழைத்தது தெரிய வந்தது. மூன்று அதிகாரிகள் நேர்காணலில் இருந்தனர். எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகவே பதில் சொன்னதாகத் தான் நான் நினைத்தேன். கடைசியில் அந்த மூவரில் மூத்தவராகத் தோன்றியவர் ஒரு கேள்வி கேட்டார்.

    ”பதினைந்து நிமிஷங்களாகப் பார்த்து வருகிறேன். நாங்கள் உன்னை இங்கு வேலைக்குச் சேர்த்துக் கொள்வதற்கான உன் தகுதியை நிச்சயிக்கிறவர்கள். நாங்கள் உயர் அதிகாரிகள். எங்களைப் போன்ற ஒருவரிடம் நீ வேலை செய்ய வேண்டும். எங்கள் கேள்விகளுக்குப் பதில் தந்தாயே தவிர ஒரு தடவை கூட எங்களுடன் பேசும் போது “Sir” என்று நீ சொல்ல வில்லை. உயர் அதிகாரிகளிடம் எப்படிப் பேசுவது என்று கூடத் தெரியவில்லையே உனக்கு?” என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு கேள்வி வரும், என்று நான் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ந்து “yes I should have, I am sorry” என்று பதில் அளித்தேன். மூவரும் கொஞ்ச நேரம் அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். பின் சட்டென்று, “ இப்பவும், “Sir” என்று வரவில்லையே உன்னிடமிருந்து” என்று சொல்லி, “சரி, நீ போகலாம்.” என்று முடித்து விட்டார். நான் எழுந்து வந்து விட்டேன். சரி இனி பயனில்லை. வேலை கிடைக்குமா என்பது நிச்சயமில்லாது இருந்தது. இனி நிச்சயமாகக் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஏன் இப்படி நடந்தது? என்று தெரியவில்லை. சொல்லக் கூடாது என்ற கர்வம் இல்லை. பின்? ஒரு வேளை ஹிராகுட் அலுவலகத்தில் முழுதும் ஹிந்தியிலேயே பேசி வந்த பழக்கத்தால்தான் “Sir” சொல்ல வரவில்லையா? வேலை கிடைக்கப் போவதில்லை என்று வெளியே வரும்போதே மனதுக்குள் நிச்சயமாகி விட்டதால் அதைப் போட்டு நான் குழப்பிக்கொள்ளவில்லை. இன்னும் எத்தனையோ வாய்ப்புக்கள் விளம்பரங்கள் வரும் என்று மனம் சமாதானம் கொண்டது.

    மறுபடியும் பேலூர் மடம் தக்ஷிணேஸ்வரம் போகவேண்டும்  என்று ஒரு ஆசை. மிக அழகான  கோயில். மடம். ஆற்றங்கரை. எல்லாமே நமக்குப் பழக்கமில்லாத புதிய முறையில் கட்டப்பட்ட கோயில்கள். அன்று மாலை காலேஜ் ஸ்ட்ரீட் போனேன். அங்கு தான் அந்த தெரு முழுதுமே நம்மூர் மூர் மார்க்கெட் போல நடைபாதையிலும் கடைகளிலும் பழைய புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும். ஒரு நடை பாதைக் கடையில் Bertrand Russel-ன்  A History of Western Philosophy கிடைத்தது. பெரிய புத்தகம் பத்து ரூபாய்க்குக் கிடைத்தது. எனக்கு ஏதோ புதையல் கிடைத்தது போல சந்தோஷம். ரஸ்ஸல் எனக்கு பிடித்தமானவராகியிருந்தார். பாதியும் ஸ்ரீனிவாசனும் எனக்கு ரஸ்ஸலைப் பழக்கி விட்டிருந்தார்கள். மிகுந்த நகையுணர்வும் மிகக் கஷ்டமான தத்துவ கருத்துக்களையும்  மிக எளிய ஆங்கிலத்தில் மிக எளிய நடையில் சொல்வதில் அவர் திறமைசாலி. அவரைப் போலவே C.E.M Joad-ம் மிக எளிய நடையில் விளக்கி எழுதிய தத்துவ தரிசனப் புத்தகங்களைப் படித்திருந்தாலும் அவற்றை ரஸ்ஸல் சொல்லப் படிக்க வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருந்தது.

    ரஸ்ஸல் மாதிரி வெகு சிக்கலான தத்துவார்த்த தரிசனங்களையும் வேடிக்கையாகவும்  அதே சமயம் அவை சிதைபடாமலும் சொல்வது ஒரு கொடை என்று தான் சொல்ல வேண்டும்

    புனிதர் அகஸ்டினின் Confessions பற்றி பேசும்போது ரஸ்ஸலுக்கு மகாத்மா காந்தி தன் பால்ய பருவத்து பாலியல்  உணர்வுகளைக் குற்ற உணர்வுடனேயே தன் சுய சரிதத்தில் (My Experiments with Truth) நினைவு கொள்வதைக் குறிப்பிட்டு இரண்டு பேரும் ஒரே ரக ஜீவன்கள் என்பார். அந்தக் குற்ற உணர்வு ரஸ்ஸலுக்கு வேடிக்கையாக இருக்கும். இன்னொரு இடத்தில் அவர் காலத்து மனோவியல் அறிஞர்கள் மனம் பற்றிய ஆராய்ச்சியில் ஆழந்து மனம் என்றே ஏதும் கிடையாது என்ற முடிவுக்கு வந்துள்ளது போல பௌதீக அறிஞர்களும் பொருளைப் பற்றி விளக்கப்போக கடைசியில் பொருள் என்று ஒரு திடப் பொருள் உலகத்தில் இல்லை. எல்லாம் ஆராயப் போகப் போக ஒரு சக்தியின் வெளி தான் கிடைப்பது என்றும் சொல்வதெல்லாம். தையல்காரர்கள் உலகத்தில் எல்லோரும் நிர்வாணமாகத்தான் செல்கிறார்கள், ஆடை என்று ஒன்று உலகத்தில் இல்லை என்று சொல்வது போலும், , செருப்பு தைப்பவர்கள் உலகத்தில் எல்லோரும் வெறுங்காலுடன் தான் நடக்கிறார்கள், என்றும் சொல்வது போல் இருக்கிறது என்பார். தன்னுடைய சகா ஆல்ஃப்ரெட் நார்த் வொய்ட் ஹெட் என்ன சொல்கிறார் என்றே ஒருவருக்கும் புரியாது அவர் விளக்கங்கள அவ்வளவு கடினம். ஆனால் அவர் பிரசங்கங்களுக்கு பெருங்கூட்டம் கூடும். வொயிட் ஹெட் பேச்சைக் கேட்டு வந்தேன் என்று சொல்லிக்கொள்வதில் அவர்களுக்குப் பெருமை என்றும் காரணம் சொல்வார்.  இப்படி ரஸ்ஸல் பெரிய விளக்கங்கள் சொல்லிச் செல்லும்போது நகைச் சுவையான கமெண்ட் அடித்துக்கொண்டே செல்வார்.

    ஆனால் ஐம்பதுகளிலும்  அறுபதுகளிலும் ரஸ்ஸலும் பெர்னாட் ஷாவும் பேசப்பட்டது  போல் இப்போது அவர்களை யாரும் நினைவு கொள்வதில்லை. இதுவும் ஒரு இழப்பாகத்தான் தோன்றுகிறது. இந்த சோக உணர்வு ஒரு வேளை வயது முதிர்ந்த காலத்தில் பழைய நினைவுகளைக் கிளறும்போது தோன்றுவது இயல்பு என்று இளைஞர்கள் சொல்லக் கூடும்.

    அப்படித்தான் அன்று  எனக்கு இருந்தது. இந்த இடத்தை விட்டுப் போகவேண்டும் என்று  முனைப்போடு முயன்று கொண்டிருக்கும் போதே இவர்களை எல்லாம் விட்டுப் பிரிகிறோமே என்ற நினைப்பும் உடன் தோன்றிக்கொண்டே இருந்தது.

    புர்லா திரும்பியதும் நண்பர்களிடம் நடந்ததைச் சொன்னேன். இந்த கல்கத்தா பயணம் வீண் தான் வேலை கிடைக்காது என்றால் அவர்கள் காரணம் கேட்டுச் சிரித்தார்கள். ”உனக்குத் தெரியாது. உனக்குள் ஒரு திமிர் இருக்கத் தான் செய்கிறது. இருந்தாலும் கவலைப் படாதே. இன்னும் நிறைய வாய்ப்புக்கள் கிடைக்கும்” என்றும் சமாதானம் சொன்னார்கள். கிடைத்தது. இப்போது எனக்கு அழைப்பு வந்தது கட்டக்கிலிருந்து. ஒரிஸ்ஸாவின் தலைநகர். அப்போது புபனேஸ்வர் கட்டப்படவில்லை. இந்திய அரசாங்கத்தின் உள்துறை யிலிருந்து அழைப்பு. போனேன். எப்படிப் போனேன் என்று நினைவில்லை. பஸ்ஸில் தான் போகவேண்டும். ஆனால் பஸ்ஸில் போய்ப் பார்க்க வேண்டும் என்று அந்நாளைய வாலிப வீம்பில் ஒரு முறை போனேனே தவிர நிர்ப்பந்தத்திற்கு கட்டக் பஸ்ஸில் போன நினைவு இல்லை. ஏதோ கொஞ்ச தூரம் பஸ்ஸிலும் பின் எங்கே ரயில் ஏறினேன் என்று நினைவில்லை.

    இந்தப் பயணத்தில்  என்னுடன் கட்டக்கில் பரிட்சைக்கும் நேர்காணலுக்கும் வந்திருந்தவர்கள் இன்னம் நான்கு பேரை எனக்கு நல்ல நினைவு இருக்கிறது. மற்ற எந்த பயணத்திலும் யாரும் நினைவில் இல்லை. டி.எம். ராகவாச்சாரி நாக்பூரிலிருந்து வந்தவன். பி.எஸ் ராஜூ, எங்கிருந்து என்று நினைவில் இல்லை. ஆனால் ஆந்திராவிலிருந்து வந்தவர். எங்கள் எல்லோரையும் விட மூத்தவர். நல்ல உயரமான மனிதர். டி.ஆர்.ஜி பிள்ளை என்று எனக்கு இளையவனான ஒருவன். பின் ஏ. சீனிவாசன் போற்றி. இருவரும் மலையாளிகள். நினைவிலிருக்கக் காரணம் இவர்கள் எல்லோருடனும் வெகு காலம் பழக விதிக்கப் பட்டிருந்தார்கள் என்பது அன்று எங்கள் எவருக்கும் தெரியாது. எப்படியோ நாங்கள் ஐவரும் கட்டக்கில் சந்தித்த கணத்திலிருந்தே வெகு நெருக்கமாக பேசிப் பழகினோம் அதுவும் ஏதோ விதிவசத்தில் நடந்தது போல் தான்.

    கட்டக்கில் தங்கியது,  சுற்றி உலவியது எதுவும்  எனக்கு நினைவில் இல்லை. சுற்றி எங்கும் குடிசைகள், ஓரு பெரிய விஸ்தாரமான கிராமம் போலத் தான் இருந்தது கட்டக். ஒரு பெரிய அழகான கட்டிடம் என்று பார்த்தது ராவென்ஷா காலேஜ் கட்டிடம் ஒன்று தான். நேதாஜி வாழ்ந்த ஊர் அது. அவர் படித்த காலேஜ் அது. அவர் வாழ்ந்த, படித்த காலத்தில் அந்நகரம் எப்படி இருந்திருக்குமோ, கற்பனை செய்துக்கொள்ளத் தான் வேண்டும்.

     தொடரும்

    Share
  • இலக்கியமும் விமர்சனமும் ‘மனமர்மமு’ மணி

     

    இன்னம்பூரான்
    14 11 2012

    சில வருடங்களாகத்தான் எனக்கு தமிழார்வம். தற்செயலாக, அது நிகழ்ந்தது என் பாக்கியம். கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் முன்னால் பரிசாக கிடைத்தது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் கட்டுரை நூல் ஒன்று. அப்பொழுது ஒரு சொல் கூட புரியவில்லை. இப்போது அகஸ்மாத்தாக மறுபடியும் கிடைத்தது; புரிந்தது. அதே மாதிரி இதுவும் கிடைத்தது. வெ.சாமிநாத சர்மா அவர்களின் மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். ஒரு டால்ஸ்டாய் கதை. ஒரு நிரபராதி தூக்கிலிடப்படுகிறான். பத்து வயதில் அதை படித்து விட்டு அழுததின் நற்பயனாக, அப்பா நல்ல நூல்களை மதுரையிலிருந்து கொண்டு வந்து கொடுத்து ஊக்கமளித்தார். பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு நூல்கள். ஒரு அணா ஒன்று. ராமுலு பிரசுரகர்த்தா என்று நினைவு. ஆங்கிலத்திலும், தமிழிலும் தொகுப்புக்கள். அன்று பிடித்த புத்தகபைத்தியம் என் மக்களுக்கும் இருப்பது எனக்கு திருப்தி.

    அது ஒரு புறமிருக்க, ஒரு கவலை என்னை ஆட்கொண்டது. புதுமைப்பித்தனின் அகல்யை சாபவிமோசனத்தை பற்றி சொன்னபோது, யார் அந்த பித்தன் என்று மெத்தப்படித்த பெண்மணியொருவர் வினவினார். தமிழுலகில் நடமாடும் நண்பரொருவரிடம் நான் தி.ஜானகிராமனின் ‘மோக முள்’ பற்றி அளவளாவியபோது அவர் தி.ஜ.ர. பற்றி பேசுகிறேன் என்று நினைத்தபோது, நான் திகைத்துத்தான் போனேன். எனக்கு பாடம் எடுத்த முனைவரொருவர் ‘தமிழில் இல்லாதது வடமொழியில் இருக்கிறதா?’ என்று உத்வேகத்துடன் வினவினார். அதன் பிறகு பல தமிழன்பர்களிடம் பேசும்போது, பெரும்பாலோர் இலக்கிய ரசனை, விமர்சனம், ஆய்வு, ஒப்பியல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது புரிந்தது. இந்த இலக்குகளை நாடும் நூல்கள் குறைவு என்றாலும், இருப்பதையாவது படிக்க வேண்டாமா? அப்படி படித்ததைப் பகிர்ந்து கொள்வதால் எனக்கும் மனதில் படியும். அவரவர் சுயவிருப்பப்படி, உருப்படியாக பங்கேற்கலாம். அதான்.

    இலக்கியம் வாழ்வியலின் கண்ணாடி என்பார்கள். 24 கதைகளும் இரண்டு கட்டுரைகளும் மட்டும் எழுதிய மணி (27.7.1907 ~ 6.7. 1985) உள்மனதைக் குடைந்து, சல்லடை போட்டு அரிந்து, அதை எக்ஸ்ரே படம் போல், சாட்சிக்கூண்டில் நிறுத்துவார். மாயவரத்து ஆசாமி. கும்பகோணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தவர். குடும்பச்சொத்தை பராமரிக்க, சிதம்பரம் வந்து சேர்ந்தார். அவரை தேடிச்சென்ற ‘இலங்கையன்’ பேராசிரியர் எம்.ஏ.நுமான் வீடு தெரியாமல் திண்டாடுகிறார். அவர் வசிக்கும் தெருவிலேயே அவரை யாருக்கும் தெரியவில்லை. அவருடைய புனைப்பெயர் ‘மெளனி’ பொருத்தம் தான்! ஒரு மாவு மில் நடத்தி வந்ததால்,’ மில் மணி ஐயர் என்று சொன்னால் தெரிந்திருக்கலாமோ என்னமோ! தற்கால தமிழிலக்கியத்தின் தூண்களில் ஒன்றான மணிக்கொடியில் எழுத ஆரம்பித்து பிற்காலம் ‘கசடதபற’ விலும் எழுதி வந்த ‘சிறுகதை சிற்பி’ மெளனியை, பிரபல இலக்கிய விமர்சகரான க.நா.சுப்ரமண்யன் அவர்கள் மிகவும் சிலாகித்துள்ளார். க.நா.சு. உலகசிந்தனை படைத்தவர். உலக இலக்கியங்களை ஆராய்ந்தவர். அவரே ஒரு படைப்பாளர். அவரது விமர்சனங்கள் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், அவற்றின் அலசல்களை புறக்கணிக்க முடியாது.

    1984ல் பேராசிரியர் எம்.ஏ.நுமான் மெளனியுடன் நடந்த நேர்காணலை விவரிக்கும்போது, தன்னுடைய, தருமு சிவராமு, நமது வெங்கட் சாமிநாதன், சச்சிதானத்தனின் ஆகியோரின் கருத்துக்களயும் தந்துள்ளார். அவற்றின் சுருக்கம்:

    நுமான்:

    முதுமையின் தாக்கம் அதிகம். அவருக்கு ஈழத்து தமிழ் பணி பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வில்லை. ஆங்கில இலக்கியம் நிறையப் படித்திருக்கிறார். தமிழ் முறையாகப் படித்ததில்லை.  படைப்பாளிக்குரிய நுண்ணுணர்வு விமர்சகனுக்கு வேண்டும் என்றார். அவருக்கு தத்துவம், பண்பாடு, நாகரீகம் என்றெல்லாம் ஆர்வமிருந்தது. ‘…தன்னைப் பற்றி தனது படைப்புக்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு நிகழ்காலம் இல்லாது போய்விட்டதை உணர வருத்தமாக இருந்தது…’. கதை எழுதிய அவர் தலைப்புகளை பத்திரிகைக்காரர்களிடம் விட்டு விட்டாராம்.’தனது கதைகளைத் தான் ஒரே இருப்பில் எழுதி முடித்து விடுவதாகச் சொன்னார்…உங்கள் மொழி  நடையைப் பிரக்ஞை பூர்வமாகக் கையாள்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை. அப்போது வருவதுதான் எழுத்து என்று சொன்னார்… தன்னுடைய புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை என்றும் யார் விரும்பினாலும் அவற்றை மறுபிரசுரம் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னார்…’.

    ‘… சில சொற்பிரயோகங்களைப் பொறுத்தவரையில் மௌனி பிரக்ஞை பூர்வமாகவும் பிடிவாதமாகவும் இருந்திருப்பதாகத் தெரிகிறது… ஆனால் வாக்கிய அமைப்பில் எப்போதும் அவர் பிரக்ஞைபூர்வமாக இருந்திருக்கிறார் என்று சொல்வதற்கில்லை. அவருடைய வாக்கியங்கள் பல தாறுமாறாக உள்ளன…

    தருமு சிவராமு

    ‘மௌனிக்கு தமது கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது. சொற்களின் அர்த்தத்தோடு, சில வேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும் கூட அவர் கவனத்தில் ஏற்கிறார்: “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” (அழியாச்சுடர்) என்ற வரியில் ‘எவற்றின்’ என்ற சொல் தவறு, ‘எவைகளின்’ என்பதே சரி என ஒருவர் மௌனியிடம் சொன்னாராம். மௌனி “அச் சொல்லின் சப்தம் அந்த வசனத்திற்குத் தேவைப்படுமான சப்தமே அவ்வரியிலுள்ள கேள்விக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது” என்று கருதினாராம். ‘இங்கு மௌனி தனது கதைகளைத் திரும்பத் திரும்ப எழுதிச் செப்பனிடுபவர் என்ற கருத்தே முக்கியமானது.’ என்று கூறும் நுமான் அவர்கள், மெளனி தன்னிடம் சொன்னது, இதற்கு முரண் என்று சுட்டுகிறார்.

    வெங்கட் சாமிநாதன்: ‘மௌன உலகின் வெளிப்பாடு’:

    ‘மௌனி எழுத உட்கார்ந்தால் கடுமையாக உழைப்பவர். பலமுறை திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுவார்… பிரசுர கர்த்தரின் பொறுமை எல்லை கடந்து சோதிக்கப்படும் வரை திருத்தம் செய்துகொண்டே இருப்பார்.’

    கி.அ. சச்சிதானந்தன்

    “(மௌனி) எழுதுவதற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக்கொள்வார். ஒவ்வொரு சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வரவில்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதிவிடுவார். பின்னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட் கூடப் போட்டிருக்கார்.”.

    ஒரு இலக்கியவாதியை பற்றி நால்வரின் கருத்துக்களை சுருக்கி அளித்திருப்பதால், பேராசிரிய உசாத்துணையில் இருக்கும் நுமானின் முழுக்கட்டுரையையும்  நீங்கள் படித்தால் நல்லது.

    நன்றி, வணக்கம்.
    இன்னம்பூரான்
    உசாத்துணை:

    http://azhiyasudargal.blogspot.co.uk/2010/10/blog-post_22.htmlஅ

    Share
  • எங்க வீட்டு சர்வெண்ட்

     

    முகில் தினகரன்

    காய்கறி மார்க்கெட்.

    ‘அய்ய்யோ…சதீஷ் வேற வர்றானே!…இப்ப என்ன பண்றது?…இந்த மாதிரி ஒரு அம்மாவோட…இத்தனை பைகளைத் தூக்கிட்டு…நான் போறதைப் பார;த்துட்டான்னா…அவ்வளவுதான்… என்னோட ஃபிரெண்ட்ஷிப்பையே கட் பண்ணிக்குவான்!…அது மட்டுமா?…காலேஜ்ல எல்லார; முன்னாடியும் வெச்சு…இதைச் சொல்லிச் சொல்லிக் கிண்டல் பண்ணியே என்னை சாகடிச்சிடுவான்!…” குமார். அந்தப் பணக்காரத் தோழனின் கண் பார்வையில் பட்டு விடாமல் நழுவும் எண்ணத்தில் சுற்றும் முற்றும் வழி தேடினான்.

    அதற்குள் அந்த சதீஷ் அவனைப் பார்த்து விட, ‘போச்சுடா… பார்த்துட்டான்….இனி தப்பவே முடியாது!” தனக்குத் தானே புலம்பிக் கொண்டு உடன் வரும் அம்மாவைப் பார்த்தான்.  ‘அய்யோ…இந்த அம்மாவைப் பார்த்தால் எனக்கே ஒரு மாதிரியிருக்கு…எண்ணை காணாத நரைத் தலையும்…வெளுக்குப் போன நூல் புடவையும்…”எங்கம்மா”ன்னு அறிமுகப் படுத்தினா நிச்சயம் என்னைத்தான் கேவலமா நினைப்பான்.”

    தன்னுடைய ஹூண்டாய் காரை பார;க் செய்து விட்டு குமாரை நோக்கி படு ஸ்டைலாக வந்தான் அந்த சதீஷ்.

    குமார; தன் கைகளிலிருந்த காய்கறிப் பைகளை அவசர அவசரமாய் அம்மாவின் கைகளில் திணித்து விட்டு, முக பாவனையைச் சற்று இறுக்கமாய் மாற்றிக் கொண்டு, சதீஷை சற்றுத் தள்ளியே நிறுத்தி விடும் நோக்கத்தில் அவனைப் பார்த்துக் கையசைத்தபடி வேகமாக முன்னால் வந்தான்.

      ‘ஹாய் குமார;!…எங்கே இந்தப் பக்கம்?….ஹூ ஈஸ் தட் ஓல்டு லேடி?” கூலிங் கிளாஸைக் கழற்றிச் சுழற்றியவாறே அவன் கேட்டான். அவன் அணிந்திருந்த உயர;தர டீ-ஷர;ட்டும்….ஜீன்ஸ் பேண்ட்டும் அந்தக் கூட்டத்தில் அவனைத் தனியே காட்ட, அவன் மீதிருந்த வீசிய காஸ்ட்லி செண்ட்டின் நறுமணம் அங்கிருந்த அனைவரின் நாசியையும் நளினமாய்த் தடவிச் சென்றது.

    ‘நோ யா…சும்மா டைம் பாஸிங்க்காக வந்தேன்!….ச்சை…வெரி டர;ட்டி ப்ளேஸ்…இஸிட்?” செயற்கைத்தனமான பகட்டுடன் பேசினான் குமார்.

    ‘யா…நானும் கூடத்தான் சும்மாத்தான் வந்தேன்!…ம்ம்…அது யாருன்னு நீ சொல்லலியே!” குமாரின் தாயாரை சுட்டிக் காட்டி அந்த சதீஷ் விடாமல் கேட்க. குமார் நெளிந்தான்.

    ‘ஓ…தட் ஓல்டு லேடி?…அவங்க எங்க வீட்டு சர;வெண்ட்!” மனங் கூசாமல் பெற்ற தாயை வேலைக்காரி என்று அறிமுகப்படுத்தினான். மேலும் அவனுடனான உரையாடலைத் தொடர;ந்தால் பொய்க்கு மேல் பொய்யாய் அடுக்க வேண்டி வரும் என்பதை உணர;ந்த குமார;, “ஓ.கே.டா..நான் கௌம்பறேன்…வீட்ல கெஸ்ட் வருவாங்க!” இன்னொரு பொய்யை வீசி விட்டு நகர்ந்தான்.

    தூரத்தில் நின்று கொண்டிருந்த அம்மாவை நெருங்கியவன், “வாம்மா கௌம்பலாம்…மீதியெல்லாம் நாளைக்கு வாங்கிக்கலாம்!”என்றான் ஒரு வித பதட்டத்துடன்.

    “அட..என்னடா நீ?…இன்னும் பாதி சாமான்கூட வாங்கலை… அதுக்குள்ளார போலாம்கறே?” அவனது அவஸ்தை புரியாத அவள் அப்பாவியாய் கூறினாள்.

    “அய்யோ…உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?” எரிந்து விழுந்தான்.

    “சரிடா…ரெண்டு..மூணு முக்கிய சாமான்களையாவது வாங்கிட்டு வந்திடறேனே!” கெஞ்சலாய்க் கேட்டாள்.

    “ம்.ம்.ம்..சரி…சரி…நீயே மட்டும் போய் வாங்கிட்டு வந்து சேரு…நான் மார்க்கெட் வாசல்ல நிக்கறேன்!” சொல்லி விட்டு வேக வேகமாய் ஓடினான்.

    மார்க்கெட் வாசலில் ‘கச..கச’வென்று நின்று கொண்டிருந்த கார்களுக்கு மத்தியில் தன்னை மறைத்தவாறு நின்று, தாயின் வருகைக்காக காத்திருக்கலானான் அவன்.

    ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, இயற்கை உந்துதலைத் தவிர்க்க மாட்டாமல் நாலைந்து கார்களைத் தாண்டி மறைவிடம் தேடிப் போனான்.

    ஒரு வெண்ணிற மாருதி காரைத் தாண்டும் போது, அந்த சதீஷ் அங்கு நின்று யாரோ ஒரு டீன் ஏஜ் ஏஞ்சலிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், சட்டென்று நின்றான்.

    “அடப்பாவி…இங்கேயும் வந்துட்டானா?” ஒளிந்தபடியே நகர;ந்த அவன் காதுகளில் அவர;களின் சம்பாஷனை விழஇ கூர;ந்து கேட்டான்.

     

    “ஹேய்…சதீஷ்….மார;க்கெட்டுக்குள்ளார நின்னு யாரோடவோ பேசிட்டிருந்தியே…யார; அது?…உன்னோட ஃப்ரெண்டா?” ஒரு வித முகச் சுளிப்புடன் அந்த ஏஞ்சல் குரலில் பியானோ இசைத்தது.

    “வாட் தட் ஃபெலோ?…மை ஃபிரெண்ட்?…நோ…நோ…அவன் என் வீட்டு சர்வெண்ட்…அவனைப் போய் என் ஃபிரெண்டுன்னு…ச்சே!…ஜஸ்ட்…என்னென்ன வெஜிடபிள்ஸ் வாங்கனும்னு அவனுக்கு சொல்லிட்டிருந்தேன்!” என்றான் சதீஷ் படு கேஷூவலாக.

    முகத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது குமாருக்கு.  வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

    பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்த அம்மாவிடமிருந்து காய்கறிக் கூடைகளை தானே வாங்கிக் கொண்டு நிதானமாய் நடந்தான்.

    (முற்றும்)

    Share
  • வெளி

     

    மதியழகன்

    அது ஒரு  தொடக்கப்பள்ளி.வாரத்தில்  மூன்று நாள் கம்ப்யூட்டர் க்ளாஸ் நடக்கும்.மற்ற பாடங்களைவிட  கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஆர்வத்துடன் மாணவர்கள்  வருவதற்கு ஆசிரியர் இளங்கோவன்  தான் காரணம்.

    பிரேயர் முடிந்தவுடன் கனஜோராக குதூகலத்துடன்  கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஓடும் குழந்தைகளை தலைமை  ஆசிரியை கண்டித்தும் கேட்பதில்லை.குட் மார்னிங் என்று ஆசிரியர் இளங்கோவனை வரவேற்பதில்  சிறிது கெஞ்சலும் இருக்கும்,இன்று வகுப்புக்கு எங்களை அழையுங்கள் என்ற வேண்டுகோளும் அதில் அடங்கி இருக்கும்.

    அந்தப்  பள்ளி ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் சொந்தமானது.பெண் துறவிகள் மேற்பார்வையில் இயங்கி வருவது.அங்கு  எந்த ஆணையும் பணிக்கு அமர்த்துவதில்லை.முதல்  முறையாக இளங்கோவனை ஆசிரியராக  நியமித்தார்கள்.

    சொந்த பந்தங்கள்  சிறிதும் மதிப்பதில்லை இளங்கோவனை. அவன் கவி தான்,ஆனால் கவிதை எழுதுவதை ஒரு வேலையாக சமூகம் நினைப்பதில்லை.உலகியல் ரீதியான வெற்றியை தவற விட்டவன் தான் இளங்கோவன்.வெற்றி கர்வத்தையும்,செல்வத்தையும் தரும்;ஆனால் தோல்வியோ சிறிது உள்ளுக்குள் திரும்பிப் பார்க்க வைக்கும்.அப்படி சிந்தனை பயணம் செய்ததில் இளங்கோவன் ஒன்றை உணர்ந்தான்.இந்த உலகே மயானம், இறப்பதற்காகத்தான் எல்லோரும் இருக்கிறார்கள். வாழ்க்கையே நிலையில்லாத போது அது என்ன நிலையான வேலை. நாம் தங்கியிருக்கும் வீடு கூட விடுதி போன்றது தான்.நேற்று தந்தை வசித்தார்,இன்று நான்,நாளை என் மகன் வசிப்பான்.

    எப்போது இந்த உலகம் அநித்யம் என்று  உணர்கின்றோமோ அப்பொழுதே  இந்த உலகை வேறு மாதிரியாக  பார்க்க ஆரம்பித்து விடுவோம்.நாம் செய்யும் செயல்களின் பலன்கள்  நல்ல பலன்களாக இருந்தாலும்  சரி,தீய பலன்களாக இருந்தாலும் சரி எங்கிருந்தாலும் நம்மை அடையாமல் விடாது.செயலுக்குத்தான் இவ்வுலகில் தண்டனை தருகிறார்கள்,இந்தியாவில் இ.பி.கோ சட்டம் போன்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சட்டம்.ஆனால் மனதில் எண்ணுவதே மிகப்பெரிய பாவம்.

    அவனுக்கும்  பெண் பார்த்தார்கள்.மணம் முடிக்க  நல்ல மனம் இருந்தால் மட்டும்  போதாது. பணம் வேண்டும், அக்கரைச் சீமையில் பணியிலிருக்க வேண்டும். பெண் பார்த்த அனுபவம் ருசிகரமானதாக இல்லை.முதல் பெண்ணை பிடித்திருந்தது தான், ஆனால் லகான் இவன் கையில் இல்லையே. ஊதியத்தைக் காரணம் காட்டி இவனை நிராகரித்தார்கள். முதல் கோணல் முற்றிலும் கோணலானது.

    கடைசியில் அந்தப் பெண்ணுக்கு வெளிநாட்டிலிருக்கும் ஒருவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் மாப்பிள்ளை பின்வாங்க யாரோ சொந்தக்காரப் பையன் ஒருவனை கட்டி வைத்ததாக கேள்விபட்டான்.

    ‘புதனுடன் கேது சேர்ந்தால் எப்படி படிப்பு சரியா வரும்’ இப்படி புலம்புவாள் அம்மா.ஏன் புலம்ப மாட்டாள் இவன் பொறியியல் பட்டப் படிப்பை முடிக்காமல் பாதியில் விட்டவன்.

    இங்கே அதை  சொல்லித்தான் ஆக வேண்டும்.பொறியியல்  இரண்டாம் ஆண்டில் நடைபெறும்  மூன்றாம் பருவத் தேர்வு, ஒரு பாடத்தில் விடை எழுதும் தாளில் இவன் தத்துவக் கருத்துக்களை எழுதிக் கொடுத்துவிட்டான்.எது தெரிந்ததோ அதைத்தானே எழுத முடியும்.அடுத்த நாள் எல்லா பேராசிரியருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. தெர்மோடைனமிக்ஸ் வகுப்பு எடுக்கும் வாத்தியார் கூப்பிட்டு பிசிக்ஸ் மேடத்தைப் போய் பார்க்கச் சொன்னார். ஏனென்றால் அந்தப் பாடத்தின் விடைத் தாளில்தான் இவன் தன் தத்துவத்தை அருவியாய்க் கொட்டியது.

    பிசிக்ஸ்  மேடத்திடம் போய் நின்றான். ‘வெளியே என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியுமா’ என்று கேட்டார். ‘எது இப்படி உன்னை எழுத தூண்டுனிச்சி’ என்றார்.அதற்கு இவன் ‘நான் தோத்துட்டேன் மேடம்’ என்றான்.ப்உண்மை தான் இவனோட படித்த ஒரு பெண் கல்லூரியில் உதவி பேராசிரியையாக இருக்கிறாள். இப்போது சொல்லுங்கள் இவன் தோற்றுவிட்டான் தானே.

    ‘ஆம்பளையா பொறந்துட்டு இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லை’ என்றார் மேடம். ‘மத்தவங்க உன்னை பிரின்சிபால்கிட்ட மாட்டிவிடச் சொன்னாங்க நான் தான் ஒத்துக்கலை சரி,வேற எதுல உனக்கு ஆர்வம் அதிகம்’ என்று அக்கறையுடன் கேட்டார்.

    உடனே இளங்கோவன்  சுதாரித்துக் கொண்டு ‘கொஞ்சம் கவிதை எழுதுவேன் மேடம்’ என்றான். ‘அப்ப அதுலேயே கவனம் செலுத்தி முன்னேற வேண்டியது தானே.எந்த நிர்பந்ததுக்கும் வளைந்து கொடுக்காதே நீ உன் முடிவில் உறுதியா இரு.இஞ்சினியரிங் படிப்பை டிஸ்கன்ட்னியூ பண்ணிடு.நாங்க எல்லோரும் க்யூல நின்னு உன்னைப் பார்க்கணும்,அப்படி நீ வளரணும் என்ன புரியுதா’ என்றார் மேடம்.

    இளங்கோவனை இது தான் நம் வழி என்று  உணரச் செய்ததே அந்த மேடம்  தான். இளங்கோவனை கவிப்பித்தனாக்கிய  கதை இது. இறைவனை பயபக்தியோடு  வணங்குகிறோம் என்றால் அவனது  படைப்புக்களான மனிதர்கள்  மீதும் நேசம் வைக்க வேண்டும் என உணர்ந்தான்.அவனுக்கு ஏற்பட்ட  ஒவ்வொரு அவமானமும் அவனை  ஆன்மிகத்தின் பக்கம் திசை திருப்பியது  

    இந்த நிலையில் தான் ஆசிரியர் வேலை கிடைத்தது  இளங்கோவனுக்கு. எல்லா குழந்தைகளையும் தன் குழந்தைகள் போல எண்ணும்  மனப்பக்குவம் இருந்தது அவனுக்கு.அவன் சொல்லும் கதையைக் கேட்க குழந்தைகள் சத்தம் போடாமல் கம்மென்று  இருக்கும்.

    பள்ளியை கோயிலாக்கிய இளங்கோவனை  இறைவன் கணக்கு முடித்து அனுப்பி  வைத்த இடம் மயானம்.அவன் கதை  சுமந்து வந்த பாதைகளின்  வழியே அவனைச் சுமந்து பாடை சென்றது. குழந்தைகள் சொல்லிக் கொண்டிருந்தன கதை சொல்லும் வாத்தியார் கண்டிப்பாக ஒரு  நாள் வருவாரென்று.

    Share
  • ஒரு காதல் தோல்வியாகிறது

    செழியன்

    காதலே !
    நீ ஒரு  கானல் நீரே .
    விலையில்லா
    இந்த உயிர்களை
    ஏன் ? விட்டில்    பூச்சி  ஆக்குகிறாய் .

    உனக்கும்
    தோல்விக்கும் ஏன்
    இந்த பற்றுதல்

    முதலில் பசுமை காட்டி
    முன்னேற விட்டு
    முடிவில்
    தோல்விப் பாலைவனத்தில்
    தள்ளும்  நீ
    ஒரு கானல் நீரே.

    விளையாத  நிலத்தில்
    முளையாத
    வித்தாக  விழுந்து
    வெறுப்பேற்றி
    நெஞ்சங்களை  ஏன்?
    வேதனைப்  படுத்துகிறாய் .

    எங்களை  எப்போதும்
    ரோமியோ -ஜூலியட்
    அம்பிகாபதி-அமராபதி
    லைலா -மஜ்னு வாக
    பார்க்கத்தான்  விருப்பமா?
    ஷாஷகான் -மும்தாஜ்  ஆக
    பார்க்க விருப்பமில்லையா?

    தோல்விக்குத் தஞ்சம் அளிக்கும்
    உன்னால்
    துவண்ட  நெஞ்சங்களுக்கு
    வாழ்வு  அளிப்பதில்
    ஏனிந்த  கஞ்சம் .

    பருவக் குளத்தில்
    துள்ளித் திரியும்
    எங்களுக்கு
    நீ
    தூண்டில்  புழுவாகவே
    காட்சி அளிக்கிறாய்

    தேனைத்
    தேடி வரும்  வண்டிற்கு
    திராவகத்தை
    கொடுப்பதிலையே  மலர்கள் .

    தோல்வி
    சரித்திரத்தை  நீ
    தொடர
    எங்கள்  உயிர்தான்
    உனக்கு மையாகுகிறது .
    காதலே !
    உன் தோல்வித் தாகம்
    இன்னுமா  தணியவில்லை.

    உன்
    தோல்வித்  தொடரை
    பல நூறு  ஆண்டுகளாக
    படித்து  கொண்டுதான் இருக்கிறோம் .
    நீயும்  தொடரை  முடிக்கவில்லை .
    நாங்களும்  திருந்த வில்லை .

    காதலே !
    உனக்காக  கோயில்
    கட்ட முனைந்தோம் .
    நீ
    எங்களை
    தோல்விக் கல்லறைக்குள்
    தள்ளுவாய்  என்று  அறியாமல் .

    இளமைப்  பூங்காவில்
    நீ
    தென்றலாய்த்தான்  நுழைகின்றாய் .

    அதை நீ
    கடந்த பின்னர்
    பார்த்தால்
    அது
    புயல்  நுழைந்த
    பூங்காவாக  அல்லவா  இருக்கிறது .

    இது புரியவில்லை
    இந்த  பூஞ்செடிகளுக்கு .

    உன்னால்
    இணைந்த உள்ளங்கள்  சில .
    இடிந்த உள்ளங்களோ  பல .

    படத்துக்கு நன்றி

    http://funtimebirdy.wordpress.com/2010/07/07/lovebirds-in-the-wild/

    Share