உன்னைப் போல எவருண்டு!

 

கவிநயா

சின்னக் கண்ணே சிரிக்கும் முத்தே
சின்னப் பாப்பா வா
கண்ணின் மணியே கொஞ்சும் கிளியே
கண்ணே பாப்பா வா

அ, ஆ, இ, ஈ, கற்றுக் கொண்டு
அழகாய்ப் பேசிடணும்
நம்தாய் மொழியாம் தமிழை நீயும்
கண்ணாய்ப் போற்றிடணும்

உண்ணும்போது பிறர்க்கும் கொடுத்து
பகிர்ந்தே உண்டிடணும
உதவி வேண்டும் பேர்க்கு உடனே
ஓடி உதவிடணும்

கோபம், அழுகை, பிடிவாதம், இவை
எல்லாம் விட்டிடணும்
அன்பே தெய்வம் எனும் எண்ணம்உன்
மனதில் நின்றிடணும்

குழந்தை உள்ளம் மாறாமல் நீ
உலகில் வாழ்ந்திடணும்
உன்னைப் போல எவருண்டு என
உலகம் சொல்லிடணும்!

படத்திற்கு நன்றி :

http://www.pakindifun.com/picdetail.php?catId=33&tid=471

9 thoughts on “உன்னைப் போல எவருண்டு!

 1. பாப்பாவிற்காகவே எழுதிய பாடல் அருமை, எளிமை, இனிமை

 2. கவிநயாவின் குழந்தை பாட்டு சொக்க வைக்கும் அழகிய தாலாட்டு.

 3. ’உண்ணும்போது பிறர்க்கும் கொடுத்து பகிர்ந்து உண்டிடணும்
  உதவி வேண்டும் பேர்க்கு உடனே ஓடி உதவிடணும்’
  Super lines of my Chinnapenn! இப்படிப்பட்ட நற்பண்புகளைக் பச்சிளம் குழந்தைகளுக்கு போதிப்பது போற்றர்க்குரியது. இது பெரியவர்க்கும் பொருந்தும்.
  ஆசிகளுடன்
  ஸம்பத்

 4. எளிமையான நளினமான கவிதை.
  அஆஇஈ கற்றுக்கொண்டு அழகாய்ப் பேசிடணும் என்ற என் பிள்ளைக்கனவு கனவாகவே இ(ரு)னிக்கிறது.

 5. மிக்க நன்றி ஐயா! உங்கள் உற்சாகம், எனக்கு ஊக்கம் தருகிறது 🙂 ஆசிகளுக்கு மிக்க நன்றி!

 6. மிக்க நன்றி அப்பாதுரை! உங்க பிள்ளைக்கனவு கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருக்கு 🙂 ஆனா எப்படியும் இனிக்குதுதானே, அதனால பிரச்சனையில்லை 🙂

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க