கிரேசி மோகன்
“நூறஞ்சு வம்சமே நிர்முலம் ஆவதையும்.
பாரஞ்ச செங்குருதி பாய்வதையும், -ORANGE,
மேனியில் சொல்கிறான், மாடுகளுக்கு ,வேய்ங்குழலின்,
பாணியில் சங்கின்பூம் பூம்”….கிரேசி மோகன் ….
கிரேசி மோகன்
“நூறஞ்சு வம்சமே நிர்முலம் ஆவதையும்.
பாரஞ்ச செங்குருதி பாய்வதையும், -ORANGE,
மேனியில் சொல்கிறான், மாடுகளுக்கு ,வேய்ங்குழலின்,
பாணியில் சங்கின்பூம் பூம்”….கிரேசி மோகன் ….
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (33)

கணந்தோறும் நினைத்துக்கொண்டு
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
ரணமான நெஞ்சைக் கெஞ்சி
ரகசியமாய்த் தேற்றிக் கொண்டு
திசைதொலைந்த பறவை போலே
தெருமுனையில் திகைத்து நின்று
வசைமலிந்த ஜீவனாக
வலியே என் உயிராக…
கசையடியின் உச்சத்தில்
கண்ணீரும் வறண்டேபோய்
இசையாத சிரிப்பொன்று
இதழோரம் அரும்புவதாய்
ஊருக்கு நான்சிரிக்க
உள்ளமெல்லாம் காடெரிய
காரிருளே இடறுமிருள்!
யாருக்கு இது புரியும்?
காதலெனும் கொடுமையின்முன்
கடுநரகும் நந்தவனம்
வேதனையில் வெந்தமனம்
வீழ்ந்துசாம்பலாயெழுந்து
வேதனையில் வெந்துவீழும்
விலாவலிக்க விதிசிரிக்கும்
உன்னையே எண்ணியெண்ணி
உடலுருகும் உயிர்கரையும்
என்னையுன்னில் காணவேண்டி
ஏங்கியேங்கி எட்டிப்பார்க்கும்
எப்போது வந்திடுவாய்
என்றெனக்கு உறுதியொன்றை
இப்போது வந்துசொல்லேன்
என்னுயிரைத் தந்துசெல்லேன்!
படத்திற்கு நன்றி : இளையராஜா
சுபாஷிணி ட்ரெம்மல்
I much prefer the sharpest criticism of a single intelligent man to the thoughtless approval of the masses.
-Johannes Kepler
கெப்லரின் சமகாலத்தவர் கலிலியோ. இருவரது ஆய்வுகளும் விண்வெளி ஆய்வுத் துறையில் அளப்பரிய கண்டுபிடிப்புக்களை உலகுக்கு வழங்கின. ஐசேக் நியூட்டனின் கோளங்களின் அசைவு தொடர்பான கண்டுபிடிப்புக்களுக்கு அடிப்படையை அமைத்து தந்தவையும் கெப்லரின் ஆய்வுத்தரவுகள் தாம். இன்று வரை தொடர்ந்து நிகழும் விண்வெளித்துறை ஆய்வுகள் கெப்லர் அமைத்துக் கொடுத்த ஆதாரங்களை மையமாகக் கொண்டே தொடர்கின்றன என்பது விண்வெளி ஆய்வுத் துறையில் கெப்லரின் பங்கை நாம் நன்கு உணர உதவும்.
கெப்லரின் ப்ளாடோனிக் சோலிட் மாடல் (Platonic solid model of the Solar system from Mysterium Cosmographicum) (1596)
1591ம் ஆண்டில் டுயூபிங்கன் பல்கலைகழகத்தில் தமது பட்டப்படிப்பை முடித்தார் கெப்லர். தத்துவமும் கணிதமும் படித்த அவருக்கு அக்கால கட்டத்தில் வானியல் ஆய்வுகளில் ஆர்வம் ஈடுபட ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக இந்த பூமி உருண்டையானது, சூரியனை சுற்றி வருகின்றது என்ற நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸின் (1473- 1543) கருத்துக்கள் இவரது கவனத்தை ஈர்த்தன. டியூபிங்கன் பல்கலைக்கழகம் அப்போது யொஹான்னஸ் கெப்லருக்கு ஆஸ்திரிய நாட்டில் உள்ள க்ராஸ் பகுதியில் கணித ஆய்வாளர் பணி ஒன்றினை அமைத்துக் கொடுத்தது. 1954ல் இப்பணியை மேற்கொள்ள இவர் க்ராஸ் சென்றடைந்தார். இங்கிருந்த போது தமது ஆய்வுகளில் கவனத்தைச் செலுத்தி மிகக் கடுமையாக உழைத்து வந்தார். அக்கால கட்டத்தில் தான் இவர் பார்பரா மூலெக் என்ற மங்கையை மணந்தார். இது 1597ல் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தாலும் இறுதியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை மட்டுமே உயிர் பிழைத்தனர்.
தைக்கோ ப்ராஹா என்ற ஜோதிட வானியல் ஆய்வாளர் ஒருவரிடம் பணி புரிய கெப்லருக்கு ஆர்வம் ஏற்பட்டது. தைக்கோ டென்மார்க்கின் ஒரு முழு தீவையுமே வாங்கி அங்கே குடிபெயர்ந்து தனது ஆய்வுகளை அத்தீவில் செய்து வந்தார். அதோடு அவர் ப்ராக், அதாவது இப்போதைய செக் நாட்டில் மன்னர் இரண்டாம் ரூடோல்ஃபுக்கு கணிதமேதையாக அமைந்திருந்தார் என்பதும் அவரது தகுதியை நாம் அறிந்து கொள்ள உதவும்.
ஹ்வென் தீவு வரைபடம் – இங்கு தான் தைக்கோ ப்ராஹா தமது ஆய்வுக்கூடத்தை அமைத்திருந்தார்
அவரிடம் உதவியாளராக விரும்பி, வின்ணப்பித்து 1600ம் ஆண்டு அப்பணியில் அமர்ந்தார் கெப்லர். 1601ம் ஆண்டு ப்ராஹா தற்செயலாக இறந்து போக அப்பதவி கெப்லருக்கு வழங்கப்பட்டது. 1611ம் ஆண்டில் மன்னர் ரூடோல்ப் பதவியிறங்க வேண்டிய நிலையில் கெப்லர் தாமும் அப்பதவியைத் துறந்து வேறொரு பகுதியில் பணியாற்ற நாட்டம் கொண்டார். தனக்கு பொருத்தமான ஒரு பணியை தேடும் வேலையிலும் ஈடுபட்டார். அப்போது ஆஸ்திரியாவின் லின்ஸ் நகரில் ஒரு தேவை இருக்கவே அங்கே தமது குடும்பத்தாருடன் சென்று சேர்ந்து தமது புதிய பணியை 1612ம் ஆண்டில் தொடங்கினார். லின் நகரில் தான் கெப்லர் அதிக ஆண்டுகள் பணியாற்றியிருக்கின்றார், அதாவது 14 ஆண்டுகள். இக்கால கட்டத்தில் இவரது மனைவி பார்பரா இறக்கவே, சில காலங்களுக்குப் பிறகு இவர் சூசன் ரோய்ட்டிங்கர் என்ற மாதுவை மணந்து கொண்டார் என்ற தகவல்களையும் அறிகின்றோம்.
கெப்லர் அறிவியல் நம்பிக்கையோடு ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவராகத் திகழ்ந்தார். இவர் தமது ஆய்வுகள் அனைத்துமே தாம் ஒரு கிறிஸ்துவர் என்ற அடிப்படையில் தமது பிறப்பின் கடமையைச் சரியாகச் செய்ய வந்ததாக நினைத்தே செய்வதாக தமது எழுத்துக்களில் குறிப்பிடுகிறார். கடவுள் உருவாக்கிய இந்த அண்ட கோளங்களை புரிந்து கொள்ள தாம் முயல்வதாக இவர் தமது எழுத்துக்களில் தன் கருத்தை பதிந்து வைக்கின்றார்.
யொஹான்னஸ் கெப்லர் ஐரோப்பாவின் சில நகரங்களுக்கு தொழில் நிமித்தம் பயணித்து தமது ஆய்வு தொடர்பான உரைகளை நிகழ்த்தியும் வாதங்களில் ஈடுபட்டும் வந்தவர். அதிலும் குறிப்பாக தனது இறுதி காலகட்டங்களில் இவரது வாழ்க்கை இப்படியே அமைந்திருந்தது. நவம்பர் மாதம் 15ம் தேதி 1630ம் ஆண்டில் இந்த அறிவியல் வல்லுநர் இவ்வுலகை விட்டு மறைந்தார். அப்போது அவர் ரேகன்ஸ்புர்க் நகரத்தில் வசித்து வந்தார். ஜெர்மனியின் ரேகன்ஸ்புர்க் நகரின் தேவாலயத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் நிகழ்ந்த 30 ஆண்டுகள் தொடர் போரின் போது இந்த தேவாலயப் பகுதி அழித்து சேதமாக்கப்பட்ட நிலையில் இந்த நினைவுச்சின்னமும் அவர் சமாதியும் முற்றாக அழிந்தன.
ஒரு தனி மனிதராக யொஹான்னஸ் கெப்லர் உலகுக்கு வழங்கிய ஆய்வுக் கொடைகள் தொடர்ந்து இவரை நம்மிடையே மறக்காமல் நிலைத்திருக்கச் செய்திருக்கின்றன. இத்தகைய பல அறிய தகவல்களை நமக்கு வழங்கும் இந்த யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகத்துக்கு ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் வருவோர் வந்து இங்குள்ள தகவல்களையும், இவர் பயன்படுத்திய, உருவாக்கிய கருவிகளையும், இவரது எழுத்தில் அமைந்த நூல்களையும், ஆவணங்களையும் நேரில் பார்த்துச் செல்லலாம்.
அருங்காட்சியகத்தின் வாசல் பகுதியில்
Truth is the daughter of time, and I feel no shame in being her midwife.
-Johannes Kepler
[Edmond Halley]
(1656-1742)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
வால்மீன்கள் தென்படா யாசிப்போர் மாண்டால் !
வானகமே தீப்பற்றி முழக்கும் இளவரசன் சாவை !
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
மீண்டும் மீண்டும் வரும் வால்மீனைக் கண்ட விஞ்ஞானி
கி.மு.86 இல் ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸர் [Julius Caesar] 14 வயதுச் சிறுவனாக இருந்த போது, ஒளிமய வால்மீன் ஒன்றைக் கண்டிருப்பதாக வரலாறு கூறுகிறது! சீஸருக்கும் முன்பு அந்த வால்மீனைக் கி.மு.240 இல் கண்டிருப்பதாக சைன வானோக்காளர் தம் ஏடுகளில் எழுதி வைத்துள்ளனர்! சைனர்கள் அதை ‘வாரியல் மீன் ‘ [Broom Star] என்று குறிப்பிட்டுள்ளார்கள்! பாபிலோனியர் கி.மு.164 இல் அந்த வால்மீனைக் கண்டு தம் கல்வெட்டுகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்! கி.பி.530 இல், பிறகு 684 இல் அது வந்த போது ஐரோப்பாவில் பிளேக் நோய் தாக்கி பலர் மாண்டதாகத் தெரிகிறது! கி.பி.1066 இல் திரும்பிய போது, நார்மன் போர் வீரர்கள் இங்கிலாந்து அரசர் ஹெரால்டைப் போரில் வென்றதாக வரலாறு கூறுகிறது! அடுத்து 1222 ஆம் ஆண்டில் அந்த வால்மீன் மீண்ட போது, மொங்கல் போர்வீரன் செங்கிஸ் கான் [Ghengis Khan] ஆசியா யுத்தத்தில் ஆயிரக் கணக்கான மனிதர்களைக் கொன்றதாகச் சரித்திரத்தில் உள்ளது! நீண்ட வால் கொண்டு திடீரெனத் தோன்றும், புதிரான வால்மீன் வருகையைக் கண்டு, அபாயம் நிகழ்வதற்கு முன் கடவுள் அனுப்பிய முன்னறிவிப்போ என்று பழைய மாந்தர் பல நூற்றாண்டுகளாக அஞ்சி வந்துள்ளார்கள்!
1700 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி எட்மண்ட் ஹாலி 1531, 1607, 1682 ஆகிய மூன்று வருடங்களில் பூமியின் அருகே மாந்தரால் காணப் பட்ட வால்மீன்கள் மூன்றும் வேறானவை அல்ல! மூன்றும் ஒரே வால்மீன் தான் என்று ஆணித்தரமாகக் கூறினார்! மேலும் அதே வால்மீன் மீண்டும் 1758 ஆம் ஆண்டில் பூமிக்கு விஜயம் செய்யும் என்றும் முன்னறிவித்தார்! அது பரிதியைச் சுற்றுக் காலம் [Period] சுமார் 76 ஆண்டுகள்! அதன் சுற்றுக் காலங்கள் 15 மாதங்கள் கூடியோ அன்றிக் குறைந்தோ குறிக்கப் பட்டுள்ளன! இதுவரை 30 முறை கண்டு பதிவான அதே வாரியல் மீனை, இப்போது ஹாலியின் பெயரைச் சூட்டி, ‘ஹாலியின் வால்மீன் ‘ [Halley ‘s Comet] என்று உலகம் என்மண்ட் ஹாலியைக் கெளரவித்தது! இருபதாம் நூற்றாண்டில் இருமுறை அது வருகை தந்தது! ஹாலி வால்மீனின் ஒளிமிக்க உருவையும், கவினுள்ள வாலையும் 1910 ஆண்டில் பலர் கண்டு வியந்துள்ளார்! சமீபத்தில் 1986 இல் ஹாலி வால்மீன் வந்து போனது! அடுத்து அது பூமிக்கு அருகே 2061 ஆம் ஆண்டில்தான் மீண்டும் வரும்!
1682 இல் அந்த வால்மீனைக் கண்ட ஹாலி, ஐஸக் நியூட்டனுடன் பலமுறை விவாதித்து அவருடன் கணித்து, அடுத்து 1758 இல் அது மீண்டும் வரும் என்று முன்னறிவித்தார்! அவர் கூறியபடி வால்மீன் பூமிக்கு விஜயம் செய்தது! ஆனால் ஹாலி அதைக் காணாது, 16 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார்!
வால்மீன்களின் வானியலை வகுத்த மேதைகள்
2300 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க மேதை அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)] வால்மீன்களைப் பற்றித் தெளிவாகத் தனது அரிய கருத்துக்களைக் கூறி யிருக்கிறார்! வால்மீன்கள் விண்வெளி நிற வீச்சு [Aurora, Northern Lights] எரிமீன் [Shooting Star] போன்றவை என்று அரிஸ்டாடில் விளக்கினார்! ‘பித்தகோரியர் [Pythagoreans] எனப்படும் சில இத்தாலியர் வால்மீனை அண்டக் கோள் எனக் கருதியது சரியல்ல! வால்மீன்கள் நீண்ட கால இடைவெளியில் தோன்றி மறைபவை. அவை தொடுவானுக்குச் சற்று மேலே மட்டும் தென்படு பவை. வால்மீன்கள் வாயுக் கற்களும், ஆவிகளும் [Airy Meteors & Vapours] கொண்டவை ‘ என்றும் அரிஸ்டாடில் கூறினார்! புதிரான வால்மீன்களைப் பற்றிய அரிய கருத்துக்கள் பண்டைக் காலம் தொட்டே கிரேக்கர்களிடம் இருப்பினும், பிற்காலத்தில் மகத்தான அதன் விஞ்ஞானம் தொடரப் படாமல் புறக்கணிக்கப் பட்டு விட்டது என்று கவலைப் படுகிறார், வானியல் வல்லுநர் எட்மண்ட் ஹாலி!
1540 இல் முதன் முதலாக வால்மீன் நகர்ச்சியைத் தொடர்ந்து கண்களால் நோக்கிப் படங்கள் வரைந்தவர், ஜெர்மன் விஞ்ஞானி பீட்டர் அப்பையன் [Peter Appian (1501-52)]. வால்மீனின் வால் எப்போதும் பரிதிக்கு எதிராகவே நீண்டிருக்கும் என்பதை முதலில் எடுத்துக் காட்டியவரும் அப்பையனே!
1577 இல் டென்மார்க் விஞ்ஞானி டைசோ பிராஹே [Tycho Brahe] ஒளி மிக்க ஓர் வால்மீனைக் கண்டு, ஒரு நாள் தொடர்ந்து நோக்கியதில் இடத்திரிபு [Diural Parallax] இல்லாமல் இருப்பதைப் பார்த்து, அது பூமிக்கு நிலவை விட வெகு தூரத்தில் இருப்பதாகவும், அது சூரிய மண்டலத்தின் ஓரண்டம் என்றும் கூறினார்! நூறாண்டுகள் கழித்து நியூட்டனின் ஆப்த நண்பர், எட்மண்ட் ஹாலி வால்மீன்கள் யாவும் சூரிய குடும்பத்தின் கோள்கள் என்பதை முதன் முதல் நிலைநாட்டினார்! வான வீதியில் சென்ற 24 வால்மீன்களின் நகர்ச்சி வீதிகளை [Orbits] 1705 இல் நியூட்டன் நியதிப்படிக் கணக்கிட்டு எட்மண்ட் ஹாலி, அவற்றின் சுற்று வீதிகளைக் கணித்து, ‘வால்மீன்களின் வானியல் சுருக்க வரலாறு ‘ [A Synopsis of the Astronomy of Comets] என்னும் அரிய விஞ்ஞான நூலைப் படைத்தார்!
நியூட்டனின் ஒப்பற்ற நியதியை முதலில் வெளியிட்ட விஞ்ஞானி!
பிரிட்டனில் எட்மண்ட் ஹாலி ஐஸக் நியூட்டன் வாழ்ந்த அதே சமயத்தில் வானியல் துறையில் ஆராய்ச்சி செய்து வந்த விஞ்ஞான வல்லுநர்! ஹாலி நியூட்டனை விடப் பதினான்கு ஆண்டுகள் இளையவர்! நியூட்டனிடம் வானியல் பற்றி அடிக்கடி விவாதித்து, அவரிடம் தொடர்பு கொண்டிருந்தவர்! ஹாலி ஒரு செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். 1684 ஆம் ஆண்டு முதன் முதலில் ஹாலி நியூட்டனைக் கேம்பிரிட்ஜில் சந்தித்தார். அவ்வரிய சந்திப்பு நியூட்டனின் ‘ஈர்ப்பியல் நியதி ‘ [Theory of Gravitation] விருத்திக்கும் மேம்பாட்டுக்கும் வழி வகுத்து, விஞ்ஞான வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாக இடம் பெற்றது! கீழ்க் காணும் ராஜீயக் குழு உறுப்பினர் [Royal Society Members] மூவரில் ஹாலியே இளையவர்! மற்ற இருவர் ராபர்ட் ஹூக், கிரிஸ்டொஃபர் ரென் [Robert Hooke, Christopher Wren] ஆகியோர். ராபர்ட் ஹூக் ஒரு படைப்பாளி, கணித நிபுணர், நுண்துகள் நோக்காளர் [Inventor, Microscopist]. கிரிஸ்டொஃபர் ரென் புகழ் பெற்ற ஓர் கட்டடக் கலைஞர் [Architect].
மூவரும் நியூட்டனின் அண்டக் கோள் நகர்ச்சிக்கு ஒருவித யந்திரவியல் விளக்கம் தர முயன்றார்கள்! அண்டக் கோள்கள் சூரியனை நோக்கி விழாமலும், அப்பால் விலகி விண்வெளியில் செல்லாமலும், சூரியனைச் சுற்றி வரும் அவற்றை, முன்னே உந்தச் செய்யும் விசை எது, என்பதே அவர்கள் மூவரது தீராப் பிரச்சனை! யார் முதலில் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு புகழ் அடைவது, என்ற வேட்கையில் மூவரும் மும்மரமாகப் போட்டியில் மூழ்கினார்கள்!
எட்மண்ட் ஹாலியும், ராபர்ட் ஹூக்கும் அண்டக் கோள்களை வீதியில் தள்ளிச் சுற்ற வைக்கும் விசை, அவற்றின் இடைவெளித் தூரங்களின் ஈரடுக்கிற்குத் தலைகீழ் விகிதத்தில் [Inversely proportional to the square of the distances] உள்ள தென்று அறிந்திருந்தாலும், ஏற்கனவே உள்ள சுழல்வீதியைப் போல, ஒரு புதியக் கோட்பாடு வீதியைத் [New Theoretical Orbit] தமது விதிகள் மூலம் கணிக்க முடியாது களைத்துப் போயினர்! அவ்வாறு ஓர் கோட்பாடு வீதியை ஆக்குவோருக்கு வெகுமதி அளிப்பதாக, கிரிஸ்டொஃபர் ரென் பறைசாற்றி யிருந்தும் பலனில்லாமல் போனது!
ஹாலி நியூட்டனை நெருங்கிக் கேட்டதும், தான் முன்பே அப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டு விட்டதாகவும், அந்த வீதி ஓர் நீள்வட்டம் [Ellipse] என்றும் பதில் அளித்தார்! அதற்குப் பின்பு எட்மண்ட் ஹாலி அளித்த ஊக்கத்தில், நியூட்டன் தனது அண்டக்கோள் யந்திரவியலை [Celestial Mechanics] விரிவு படுத்தி, அதுவரை மனித மனம் படைத்திராத ‘பிரின்ஸிபியா ‘ [Principia] என்னும் மகத்தான நூலை ஆக்கினார்! ராபர்ட் ஹூக் நியூட்டன் தனது ஈர்ப்பியல் கோட்பாடுகளைக் களவாடி எழுதி விட்டார் என்று வாய்ப் போரிட்டார்! ஹாலி இருவரையும் சமாதானப் படுத்திய பின், நியூட்டன் ராபர்ட் ஹூக்கின் கருத்துகளைத் தன் ‘பிரின்ஸிபியா ‘ நூலிலிருந்து நீக்கினார்! பிறகு ராஜீயக் குழுவினர் [Royal Society] தீர்மானப்படிச் செல்வந்தரான ஹாலியே நிதி உதவி செய்து, நியூட்டனின் நூல், ‘பிரின்ஸிபியா ‘ அச்சிடப் பட்டு 1687 இல் வெளியானது!
எட்மண்ட் ஹாலியின் வாழ்க்கை வரலாறு
எட்மண்ட் ஹாலி 1656 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் லண்டன் மாநகரின் அருகில் மிடில்ஸெக்ஸ் ஹாகர்ஸ்டன் [Hagerston, Middlesex] என்னும் ஊரில் பிறந்தார். அவரது ஆரம்பக் கல்வி லண்டன் புனிதர் பால் [St Paul] பள்ளியில் ஆரம்ப மானது. ஹாலியின் அதிர்ஷ்டம், அவர் வாழ்ந்த காலத்தில்தான் ஐரோப்பாவில் விஞ்ஞானப் புரட்சி தோன்றி, நவீன சிந்தனா வளர்ச்சி வேரூன்றி விழுதுகள் விட்டது! ஐஸக் நியூட்டன், காட்ஃபிரைடு லைப்னிட்ஸ் [Leibnitz], ராபட் ஹூக்ஸ் [Hookes], கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [Huygens], ஜான் ஃபிளாம்ஸ்டாடு [Flamsteed] போன்ற மேதைகள், விஞ்ஞானக் கணிதத் துறைகளை விருத்தி செய்து செம்மைப் படுத்தினர்! ஹாலி நியூட்டனை விட பதினான்கு ஆண்டுகள் இளையவர்! தந்தையார் உப்பு, சோப்பு உற்பத்தி செய்யும் ஒரு பெரும் வணிகர். மற்றும் செல்வந்தர்!
ஹாலி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ராணி கல்லூரியில் 1673 இல் சேர்ந்தார். கூர்மையான அறிவு கொண்ட ஹாலி கல்லூரிக்குப் போகும் போது, தனது 24 அடி நீள தொலை நோக்கியையும் மற்ற வானியல் கருவிகளையும் எடுத்துச் சென்றார்! அங்கே கணிதம், பெளதிகம், வானியல் ஆகிய வற்றைக் கற்றார். ஹாலி ராஜீய கிரீன்விச் நோக்ககத் திற்கு [Royal Greewich Observatory] அடிக்கடிச் சென்று, வானியல் நிபுணர் ஜான் ஃபிளாம்ஸ்டாடு செய்யும் ஆய்வுகளில் ஆர்வ முற்று அவற்றில் பங்கெடுத்தார். பதினெட்டு வயதாகும் ஹாலி தைரியமாக, ஃபிளாம்ஸ்டாடு தயாரித்த வியாழன், சனிக்கோளின் இட அட்டவணை பிழையானது என்று மரியாதையுடன் கடிதம் எழுதினார்! வானியல் நிபுணர் ஃபிளாம்ஸ்டாடு கோபப் படாது ஒப்புக் கொண்டு, மற்றபடி ஹாலியின் விஞ்ஞானக் கட்டுரைகள் வெளிவர உதவியும் செய்தார்! ஃபிளாம்ஸ்டாடு அங்குள்ள தொலை நோக்கியைப் பயன்படுத்தி வடபுற வானில் இருந்த விண்மீன்களின் இடத்தைத் துல்லியமாகக் குறித்து, ஓர் அட்டவணை தயாரித்தார். ஹாலி அவரது திட்டத்தில் ஆர்வம் கொண்டு, தொலை நோக்கியைப் பயன்படுத்தி, அவரது அனுமதியில் தென்புற வானில் இருந்த விண்மீன்களின் இடத்தைக் குறித்தார்.
1676 இல் இருவது வயதாகும் போது, கல்லூரிப் பட்டம் வாங்காமல் தந்தையின் நிதி உதவி பெற்று, அரசாங்க ஆதரவில், கிழக்கிந்தியக் கம்பெனியின் [East India Company] கப்பலில் பயணம் செய்து, ஆஃப்ரிக்காவுக்கு மேற்கே உள்ள, பிரிட்டிஷ் பேரரசுக்குச் சொந்தமான செயின்ட் ஹெலினா தீவில் [St Helena Island] உள்ள நோக்ககத்திற்கு அண்ட கோளங்களை ஆராய வந்து சேர்ந்தார். அங்கே பல நாட்கள் தங்கி 341 விண்மீன்களின் வான்வெளி நெடுரேகை, மட்டரேகை [Celestial Longitudes & Latitudes] ஆகியவற்றைக் குறித்தார். அப்போது ஹாலி முதலாக புதன் கோள் சூரியத் தட்டைக் கடந்து செல்வதைப் [Transit of Mercury] கண்டு பதிவு செய்தார்! ஹாலியின் விண்மீன்களின் அட்டவணை நூல் 1678 இல் வெளியானது. அந்நூலில் நிலவின் தனித்துவ வளர்வேகம் [Secular Acceleration of Moon], விண்மீன் களின் நகர்ச்சி உறுதிப்பாடு [Establishment of Stellar Motion], வெள்ளியின் கடப்புகள் [Transits of Venus] மூலம் வானியல் அளப்பு [Measuring Astronomical Unit] ஆகிய வற்றைக் காணலாம். அதுவே தொலை நோக்கியில் கண்டு குறித்து, முதன் முதல் வெளிவந்த தென்புற விண்மீன்களின் அமைப்பு நூல்! அந்த நிகழ்ச்சி ஹாலியை ஓர் வானியல் வல்லுநர் ஆக்கியது! அதே ஆண்டு அவர் ராஜீயக் குழுவினரின் சிறப்புநர் ஆகி [Fellow of Royal Society] ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் M.A. பட்டமும் அளிக்கப் பெற்றார்! ஹாலி இங்கிலாந்துக்கு மீண்டதும், மேரி டூக் [Mary Tooke] என்னும் மாதை மணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு பெண், ஓர் ஆண் பிள்ளைகளும் பிறந்தனர்.
1684 இல் நியூட்டன் எழுதிய ‘சுற்று வீதி அண்டங்களின் நகர்ச்சி ‘ [On the Motion of Bodies in Orbit] என்னும் கட்டுரை ஹாலியின் கையில் கிடைத்தது! ஒன்பது பக்கங்கள் உள்ள அந்தக் கட்டுரையில் கெப்ளரின் மூன்று விதிகளைப் பிரதிபலிக்கும் ‘தலைகீழ் ஈரடுக்கு விதிக்கு ‘ [Inverse Square Law] நிரூபணம் இருந்தது! அத்துடன் ‘அசைப்பியல் ‘ [Dynamics] என்னும் புது அகண்ட விஞ்ஞானத்திற்கு வித்துக்களும் கட்டுரையில் இருந்தன! ஹாலி அதன் உன்னதக் கருத்துக்களை வியந்து, நியூட்டனைக் கேம்பிரிட்ஜில் காண விரைந்தார்! அங்கே அந்தக் கட்டுரையை விரிவு படுத்தி அதை ஓர் நூலாக எழுத வேண்டு மென்றும், உடனே அப்பணியைத் துவங்க வேண்டு மென்றும், நியூட்டனிடம் ஹாலி வாக்குறுதி வாங்கிக் கொண்டார்! பார்க்கப் போனால், நியூட்டன் படைப்புகள் பலவற்றின் வெளியீட்டுக்கு, எட்மன்ட் ஹாலியே காரண கர்த்தாவாக இருந்திருக்கிறார்!
ஹாலி முதலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஜியாமெட்ரிப் பேராசிரியாகப் பணி யாற்றிப் பிறகு ராயல் கிரீன்விச் நோக்ககத்தில் வானியல் நபராக வேலை செய்தார். ஹாலி தன் வாழ்க்கை முழுவதும் அண்டக் கோள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யவே தன்னை அர்ப்பணித்தார். அதற்காக அரேபிய மொழியைக் கற்று இஸ்லாமிய வானியல் நூல்களைப் படித்து அறிந்தார்! அடுத்து வேதாந்த வெளியீடுகளில் ‘கோட்பாடு வானியல் ‘ [Theoretical Astronomy] என்னும் கட்டுரையை வெளியிட்டார்! ஹாலி வால்மீன்களின் போக்குகளை ஆராய்ந்து 1705 இல் எழுதிய [A Synopsis of the Astronomy of Comets] என்னும் நூலே, அவருக்குப் பேரும் புகழும் உலகில் பெற்றுத் தந்தது! அறுபத்து நான்கு வயதில் ஆரம்பித்து, 1720 முதல் பதினெட்டு ஆண்டுகள் நிலவைப் பற்றி ஆய்வுகள் செய்தார்!
வால்மீன்களின் போக்கை ஆராய்ந்த விஞ்ஞானி
முதலில் நியூட்டன்தான் வால்மீன்கள், அண்டக் கோள்களைப் போல் நீள்வட்ட வீதியில் செல்கின்றன என்று கணித்துக் காட்டியவர்! சில வால்மீன்களின் பாதை வளைநீட்சி [Ellipticity] நீண்டு பிறைவளைவு வீதியை [Parabolic Orbit] நெருங்குகிறது என்று கூறினார்! வால்மீனின் மூன்று நகர்ச்சி இடங்களை நோக்கிக் குறித்து, அதன் சுற்று வீதியைக் கணித்திட நியூட்டனே முதலில் வழி வகுத்தார்!
ஆனால் எட்மண்ட் ஹாலியே வால்மீன்களின் போக்கை வரையறுத்து, விபரங்களைச் சேமித்து நூல் எழுதி வெற்றி பெற்றவர்! ஹாலி நியூட்டனின் தத்துவங்களைப் பயன்படுத்தி, மெய்வருந்தி உழைத்து 24 வால்மீன்களின் நகர்ச்சிகளை ஒப்பிட்டுக் கணித்து சுற்று வீதிகளைத் தீர்மானித்தார்! அவற்றில் மூன்று வால்மீன்கள் ஒரே மாதிரியானவை எனக் கண்டு மூன்றும் ஒன்றே என்று முடிவு செய்தார்! மூன்றில் முதலான வால்மீனை 1531 இல் ஜெர்மன் விஞ்ஞானி பீட்டர் அப்பையன் நோக்கினார்! இரண்டாவது ஒன்றை 1607 இல் ஜொஹான் கெப்ளர் [Kepler] கண்டார்! மூன்றாவது ஒன்றை ஹாலியே 1682 ஆம் ஆண்டில் கண்டார்! அதுவே ஹாலின் பெயரைப் பெற்றது! ஹாலி கண்டு பிடித்ததால் அந்த வால்மீன், அவரது பெயரை அடைய வில்லை! மீண்டும் 1758 இல் அது வரும் என்று ஹாலி உறுதியாகக் கூறி, அது மெய்யாக 1758 இல் திரும்பியதால், அந்த வால்மீனுக்கு ஹாலியின் பெயர் இடப் பட்டது! 1758 ஆண்டில் ஐந்து மாதங்களுக்கு வால்மீன் பலரது கண்ணில் தென்பட்டது!
நீள்வட்ட வீதியில் பரிதியை மையமாகக் கொண்டு பெரும் பான்மையான வால்மீன்கள், குறிமையத்திலிருந்து [Focus] பல மில்லியன் மைல் தூர நீள் ஆரத்தில் [Aphelion] சுற்றி மீண்டும் பூமியை நோக்கி வருகின்றன! ஆனால் அவை சுற்றி வரும் பாதைகள், பரிதிக்குச் சீரான முறையில் இல்லாது, முரணாகவே அமைகின்றன! விண்வெளிச் [Interstellar] சேர்ந்த வால்மீன்களாக இருந்தால், அவை இணையும் நீள்வட்டத்தில் [Closed Ellipse] சுற்றாமல், பிறைவளைவு [Parabola] அல்லது விரிவளைவு [Hyperbolic Orbits] வீதிகளில் பயணம் செய்து, பரிதியை ஒரு முறை வலம் வந்த பின், மீண்டும் அவை வரமாட்டா! மேலும் விண்வெளியைச் சேர்ந்த வால்மீன்கள், பரிதி நகரும் அதே திசையில்தான் அவையும் பயணம் செய்து, சூரிய மண்டலத்தில் நுழைகின்றன! சூரியனின் சுழலீர்ப்பு விசையால் [Centripetal Force] தூரத்தில் பயணம் செய்யும் அன்னிய வால்மீன்கள், பரிதியை நோக்கி இழுக்கப் படுகின்றன! பூதக்கோள் வியாழன் மூட்டும் சனிக்கோளின் ஒழுங்கற்ற நகர்ச்சியால், அருகே நீள்வட்டத்தில் செல்லும் ஓர் வால்மீனின் நகர்ச்சி தடுமாறி, வேகம் மாறுபட்டு, பாதை வேறுபட்டு பிறைவளை வாகிறது.
வால்மீன்களின் பிறப்பும், அவற்றின் அமைப்பும்!
வானியல் வல்லுநர் ஃபிரெட் விப்பிள் [Fred Whipple], வால்மீன்கள் விண்கற்களும், தூசிப் பனிக்கட்டிகளும் [Rocks & Dusty Ice] மண்டிய ‘குப்பைப் பனிப்பந்துகள் ‘ [Dirty Snowballs] என்று கூறுகிறார்! புதிராகவும், மர்மமாகவும் காணப்படும் வால்மீன்கள் எப்படித் தோன்றுகின்றன ? விண்வெளியில் புற்றீசல்கள் போலக் கிளம்பும் வால்மீன்கள் எங்கிருந்து எழும்புகின்றன ? வால்மீன் உடம்பில் என்ன பொருட்கள் இருக்கின்றன ? கண்கவரும் ஒளி அதற்கு எப்படி உண்டாகிறது ? வால்மீன்களை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெரும் சேமிப்புக் கோளம் பரிதிக்குப் பல பில்லியன் மைல்களுக்கு அப்பால், புளுடோவைத் [Pluto] தாண்டி இருப்பதாக யூகிக்கப் படுகிறது! அந்த சேமிப்புக் கோளம் ‘ஓர்ட் மேகம் ‘ [Oort Cloud] என்று அழைக்கப் படுகிறது! அதை யூகித்த ஜான் ஓர்ட் [Jan H. Oort] வானியல் வல்லுநரின் பெயரில் அது குறிப்பிடப் பட்டது. தேனீக்களின் கூடு போன்ற அந்த கூண்டில் சுமார் 100 பில்லியன் வால்மீன்கள் அடங்கி இருக்கலாம் என்று ஓர்ட் கருதினார்! அடுத்து நெப்டியூன் கோளைத் தாண்டி ‘கியூப்பர் வளையம் ‘ [Kuiper] ஒன்று இருப்பதாக யூகிக்கப் பட்டது! சுற்றுக் காலம் [Period] 200 ஆண்டுகளுக்கு மேலான வால்மீன்கள் ஓர்ட் மேகத்திலிருந்து வருவதாகவும், சுற்றுக் காலம் 200 ஆண்டுகளுக்குக் குறைந்தவை கியூப்பர் வளையத்திலிருந்து கிளம்புவதாகவும் அனுமானிக்கப் படுகிறது!
ஓர்ட் மேகக் கூண்டுக்கு அருகிலோ, அல்லது கியூப்பர் வளையத் திற்கு அண்டையிலோ போகும் விண்மீன்கள் வால்மீன் ஒன்றை இழுத்து வீசி எறியும் போது, சூரிய மண்டலத்துள் விழுந்தால், அதன் ஈர்ப்பியல் பிடியில் மாட்டிக் கொண்டு, அது நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கிறது! வீசி எறியும் வேகம் அதிகமானால், வால்மீனின் சுற்று வீதி பிறைவளைவிலோ, அல்லது விரிவளை விலோ மாறிச் பரிதியைச் சுற்றிச் செல்கிறது!
வால்மீன் தலையின் நடுவே திடவமான ‘உட்கரு ‘ [Nucleus] உள்ளது. ஹாலி வால்மீனின் உட்கரு சுமார் 9 மைல் அகண்டது! அட்டக் கரியான உட்கருவில் கரி [Carbon] மிகுதியாக உள்ளது! கரியை மூடிய பனித் தோல் மீது, கற்தூசிகள் படிந்துள்ளது போல் தோன்றுகிறது! அதன் வாலின் நீளம் 1910 இல் வந்த போது 37 மில்லியன் மைல் நீண்டிருந்தது! ஹாலி வால்மீனின் முழு நிறை 25 மில்லியன் டன் என்று அமெரிக்க வானியல் நிபுணர் ஹென்ரி ரஸ்ஸெல் [Henry N. Russell (1877-1957)] விஞ்ஞானி மதிப்பீடு செய்தார்! வால்மீனின் தலைப் பரிதியை நெருங்கும் போது, அதன் உஷ்ணம் 330 டிகிரி கெல்வின் [330 K] ஏறியதாக அறியப்படு கிறது! பரியின் ஒளியை எதிர்ப்படுத்தியே வால்மீன் ஒளி வீசுகிறது! அதற்குச் சுய ஒளி கிடையாது! 400 மைல் அகண்ட உட்கரு கொண்ட விண்மீன்களும் விண்வெளியில் உள்ளன! துணைக் கோள் [Satellite] மூலம் நோக்கியதில் உட்கருவைச் சுற்றிலும் ஹைடிரஜன் வாயுக் கோளம் பேரளவில் சூழ்ந்துள்ளது என்று அறியப் பட்டது! உட்கருவைச் சுற்றியுள்ள வாயுக் கோமா [Gaseous Coma] 80,000 மைல் விட்டமுள்ளது! வாயுக் கோமாவில் மீதேன் [CH4], கார்பன் மொனாக்ஸைடு [CO], சையனஜென் [C2N2 Cyanogen] போன்ற வாயுக்கள் அடங்கி யுள்ளன!
வாலின் நீளம் 200 மில்லியன் மைல் கூட விண்வெளியில் நீண்டிருக்கும்! பரிதியை நெருங்க நெருங்க வாலின் நீளம் அதிகமாகி, அதை விட்டு விலக விலக வாலின் நீளம் குன்றிப் பரிதிக்கு வெகு தொலைவில் வால்மீன் செல்லும் போது, வால் முழுவதும் இல்லாமல் போகிறது! அத்துடன் சூரிய ஒளி மங்குவதால், வால்மீன் ஒளி யிழந்து சுற்றுகிறது. அப்போது மிகக் குளிர்ந்து போகும் வால்மீன், தானாகச் சுய ஒளி வீசும் திறனற்றுப் போகிறது!
சூரியன் அருகே வரும் போது சூரியக் காற்றும், கதிர்வீச்சு அழுத்தமும் [Radiation Pressure] வால்மீனின் வாயுக்களைச் சூடாக்கி, அப்பால் தள்ளுகிறது. அதுவே எதிரே வாலாய்ச் சிறிது சிறிதாய் நீள்கிறது! பரிதியின் ஒளிக் கதிர்கள், வால்மீனின் வாயுக்களையும், தூசியையும் வெண்ணிற ஒளியாய் மாற்றுகின்றன! வாயுக்களும் மின் கொடை [Electrically charged] பெற்று, தாமாய்ச் சுடரொளி வீசுகின்றன!

மெதுவாய் ஊர்ந்து வரும் வால்மீன், பரிதிக்கு அருகே வருகையில் வேகம் அதிகரிக்கப் பட்டு, உச்சமாகி பரிதிக்கு அப்பால் போகும் போது, வேகம் சிறிது சிறிதாய்க் குறைகிறது! வால்மீன் வாலும் பரிதியை நெருங்க நெருங்க நீண்டும், பரிதியை விட்டு விலக விலகச் சுருங்கியும் போகிறது! அதாவது பரிதியின் அருகே வாலின் நீட்சிக்கும், வால்மீனின் வேகத்திற்கும் ஓர் தொடர்பு உள்ளது! சூரியக் கதிரழுத்தம் வாலை அப்பால் தள்ளுவதால், வால்மீனுக்கு முன்னோக்கி உந்து விசை உண்டாகி, ஏவுகணை [Rocket] போல் விரைவாகச் செல்கிறது!
ஹாலியின் பெருமை மிக்க இறுதிக் கால வாழ்வு
ரஷ்யாவின் பேரரசர் இஸ்ஸார் [Czar of Russia] 26 வயது மகா பீட்டர் [Peter the Great (1672-1725)] ரஷ்யாவை நாகரீக நாடாக்க, மேற்கத்திய நவீனங்களைக் காண்பதற்கு பிரிட்டனுக்கு 1698 இல் விஜயம் செய்தார்! பீட்டர் உன்னத மேதை ஐஸக் நியூட்டனைக் காண விழைந்தார்! ஆனால் யாரையும் பார்க்க விரும்பாத நியூட்டன், எட்மண்ட் ஹாலியைப் பீட்டரிடம் அனுப்பி வைத்தார்! 42 வயது ஆங்கில விஞ்ஞானி ஹாலியும், 26 வயது ரஷ்யப் பேரரசர் பீட்டரும் நெருங்கிய நண்பர் ஆனார்கள்! பீட்டருக்கு விஞ்ஞான ஆலோசகராக ஹாலி பல கருத்துக்களை அளித்ததாக அறியப் படுகிறது!
1698 பிரிட்டிஷ் பேரரசர் வில்லியம் III ஹாலி கண்டு பிடித்த ‘காந்த ஊசி நியதியைப் ‘ [Theory of Magnetic Needle] பயன்படுத்தி கப்பல் போக்கு முறைக்கு [Navigation] உபயோகிக்க வழி செய்தார்! அதே வருடம் ஆகஸ்டில் எட்மண்ட் ஹாலியைப் பேரரசர் ‘பாரமூர் ‘ [Paramoor] பெருங் கப்பலுக்கு தளபதி [Commander] ஆக்கினார்! ஹாலி முதல் பிரிட்டிஷ் விஞ்ஞானக் கடல் திட்டத்தின் [Marine Scientific Expedition] தளபதியாக ஸ்பெயின், பிரேஸில், கனேரித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளுக்கு கப்பல் பாரமூரை ஓட்டிச் சென்றார்! 65 ஆவது வயதில் ஹாலி 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சூரிய கிரகணத்தைப் [Solar Ecclipse] பற்றி ஆராயத் துவங்கி தனது 84 ஆவது வயதில் அத்திட்டத்தை முடித்துக் காட்டினார்! இறுதியில் எட்மன்ட் ஹாலி தனது 86 ஆம் வயதில் கிரீன்விச் நகரில் 1742 ஜனவரி 14 ஆம் தேதி காலமானார்.
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் [1986 February 9th] ஹாலி வால்மீன் கடைசியாகச் சூரியனச் சுற்றிச் சென்றது. அதே ஆண்டு மார்ச் மாதம், இரண்டு ரஷ்ய விண்வெளி ஆய்வுச்சிமிழ்கள் [Soviet Probes], வேகா-1, வேகா-2 [Vega-1, Vega-2], ஈரோப்பிய விண்வெளி ஆணையகத்தின் [European Space Agency] ஆய்வுச்சிமிழ் கியாட்டோ [Giotto], இரண்டு ஜப்பானியரின் விண்சிமிழ்கள் ஆகியவை யாவும், வெகு தூரத்தில் ஹாலி வால்மீன் போவதைப் படம் எடுத்துள்ளன.
*********************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 28, 2011
Information :
[Picture Credits: NASA Space Center, USA]
1. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006] [www.siliconchip.com.au/cms]
2. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006
3. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006] [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]
4. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]
5. Genesis Capsule Crash, Space Capsule Slams into Desert [www.abc.net.au/egi-bin] [Sep 9, 2004]
6. Space Capsule Carrying Comet Dust Returns to Earth [http://usatoday]
7. NASA – The Fiery Return of NASA ‘s Space Dust Cargo [Nov 29, 2005]
8. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005
9. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]
10 Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]
11 Watch Deep Impact ‘s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.com July 1, 2005]
12 NASA to Study Comet Collision http://www.PhysOrg.com [200
13 NASA Looks for Signs of Success from Celestial Broadsidehttp://www.PhysOrg.com [2005]
14 Deep Impact Makes a Better Impact than Plannedhttp://english.people.com.cn/ [July 5, 2005]
815 Deep Impact Slams into Comet By: Anthony Duignan-Cabrera Space.com Managing Editor {July 4, 2005]
15 Thinnai Article on Deep Impact http://www.thinnai.com/sc0707051.html
16 Thinnai Article on the Significance of Deep Impacthttp://www.thinnai.com/sc0715051.html
17 A Comet Tale By Paul Weissman, Senior Research Scientist, NASA ‘s Jet Propulsion Lab. Sky & Telescope Magazine [Feb. 2006]
18. Wikipedia – Edmond Halley (Jan 22, 2011)
19. Edmond Halley – Biography.
20. http://jayabarathan.wordpress.com/2010/11/06/comet-hartley-2-flyby/(Comet Hartley) (Nov 6, 2010)
+++++++++++++++++++
-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
பாஞ்சாலி துயர்தீர்த்தாய்
பார்த்தனுக்கு உதவிநின்றாய்
பாரதக் கதைதன்னை
பக்குவமாய் முடித்துவைத்தாய்! 
பலவேலை நீசெய்தாய்
பாதகமாய்த் தெரிந்தாலும்
பலபேரைத் திருத்துதற்குப்
பக்குவமாய் மருந்தாச்சு!
மாமருந்தாம் கீதைதனை
மாதவனே தந்தாயே
மாநிலத்தார் கீதையினால்
மயக்கநிலை தெளிந்தாரே!
சோதிவடி வானவனே
சுந்தரமாய் இருப்பவனே
ஆதியே அரும்பொருளே
அனைத்துமே நீயன்றோ!
குழந்தையாய் வந்திடுவாய்
குதூகலமும் தந்திடுவாய்
குறையொன்றும் வாராமல்
குணக்குன்றாய் நின்றிடுவாய்!
கண்ணா எனவழைத்தால்
கணப்பொழுதில் வந்திடுவாய்
எண்ணமெலாம் இருப்பதனால்
எங்குதான் போய்விடுவாய்?
அவதாரம் பலவெடுத்தாய்
அகிலமதைக் காத்துநின்றாய்
அனைவரது துயர்துடைக்க
அழைத்தவுடன் வந்துவிடு!
பால்தந்து மோர்தந்து
பதமாக வெண்ணைதந்து
பாலகனாய் நாளுமுனைப்
பார்க்கின்றோம் நாமுமிங்கே!
நீகடவுள் நீசக்தி
நினைப்பெமக்கு இல்லையப்பா
நீயென்றும் எம்மனதில்
நித்தமுமே குழந்தையப்பா!!
— மாதவ. பூவராக மூர்த்தி.
ரொம்ப நாளாக எனக்கு சைக்கிள் பற்றி எழுதவேண்டும் என்று ஆசை. சைக்கிள் ஒரு உன்னதமான வாகனம். லைஃப் சைக்கிளில் சைக்கிள் பயணம் ஏதேனும் ஒரு முறையாவது நம் எல்லோருக்கும் வாய்த்திருக்கும். நீங்கள் முதலில் சைக்கிளில் சென்றது நினைவிருக்கிறதா?
எனக்கு இருக்கிறது. அப்பா ஒரு சைக்கிள் வைத்திருந்தார். மூன்று அல்லது நான்கு வயதிருக்கும். என்னை முன்பகுதியில் பார் மீது உட்காரவைத்து கால்களை எடுத்து முன் பக்கம் மட்கார்ட் மீது வைத்துக்கொள்ளச் செய்து கையை ஹேண்டில் பார்மீது வைத்து விட்டார். நான் கெட்டியாகப் பிடித்து கொண்டேன். அப்பா ஸ்டாண்டு எடுக்க சைக்கிள் குலுங்கி நின்றது. பெடல் மீது அப்பா கால் வைத்து அழுத்த வேகம் பிடித்தது. என் முகத்தில் காற்று படர்ந்தது. வேகம் எனக்குப் பிடித்தது.
எதிரிலும் பக்கத்திலும் நிறைய சைக்கிள்களும் வண்டிகளும் பறந்தன. காவிரிக்கரையில் சின்ன மார்க்கெட்டில் வண்டி நின்றது. என்னை இறக்கி விட்டார். காய்கறி வாங்கினோம். தள்ளிக்கொண்டு போனார். நானும் கூடவே நடந்து போனேன். ஹோட்டலில் போய் இட்லி சாப்பிட்டு ஒரு கடையில் சைக்கிளை நிறுத்தினார். வாடகை சைக்கிள் நிலையம் என்று போர்டு போட்டிருந்தது. ஒரு பையன் வந்து ஒரு பம்பு கொண்டு வந்து முன் பின் சக்கரங்களில் காற்று அடித்தான். மறுபடியும் வீடு வரை ஒரு ஜாலியான பயணம். உட்காரும் இடம்தான் வசதி யாக இல்லை. அதன் பிறகு பலமுறை எனக்கு இது கிடைத்தது. ஒரு சில முறை மறதியாக காலை நீட்டி சக்கரத்தில் மாட்டியதும் உண்டு.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பின்னால் ஸ்டாண்டில் உட்கார ஆரம்பித்தேன். இது வசதியாக இருந்தது. இப்போது என் தங்கை சந்திரா பாரில் உட்கார்ந்திருந்தாள். ஆனால் பள்ளிக் கூடத்திற்கு நடந்து தான் போக வேண்டும். எப்போதாவது திரும்பும்போது மாமாவோ அப்பாவோ வழியில் வந்தால் ஏற்றிக் கொண்டு வருவார்கள்.
ஹைஸ்கூல் படிக்க ஆரம்பித்தபோது வகுப்பு நண்பர்கள் சைக்கிள் விட கற்றுக் கொண்டுவிட்டார்கள். வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் தெருக்களில் மிக வேகமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வார்கள். எனக்கும் சைக்கிள் விட ஆசை. அப்பாவிடம் கேட்க பயம். அம்மாவிடம் காசு கேட்டு நண்பன் சேகருடன் வாடகை சைக்கிள் தரும் ராமன் கடைக்குப் போனோம். அவன் எங்களை நம்பித்தரத தயாராயில்லை. சின்னப் பாட்டியை சிபாரிசுக்கு அழைத்துப் போனேன். அவர் வார்த்தைக்கு நல்ல மதிப்பு. சின்ன சைக்கிள் கைக்கு வந்தது.
சேகர் ராஜாந்தோட்டத்துக்கு போகலாம் என்று சைக்கிளில் ஏறி மிதித்தான். நான் அவன் பின்னால் ஒடினேன். அதில் ஒரு பத்து நிமிடம் போய்விட்டது. அங்கு போனபின் எப்படி ஓட்ட வேண்டும் தெரியுமா என்று எனக்குக் காட்டுவதற்காக ஓர் ஐந்து நிமிடம் அவன் ஓட்டினான். அப்பறம் என்னை சீட்டில் உட்கார வைத்து ஹேண்டில் பாரை கெட்டியாகப் பிடித்துக் கொள் என்றான். காலால் பெடலை அழுத்து என்றான். ஒரு காலால் அதை வேகமாக மிதித்தேன். அது கீழே போய்விட்டது. காலுக்கு எதுவும் தட்டுப் படவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் இப்ப இந்தக் காலால் மிதி என்றான். மிதித்தேன். அதுவும் கீழே போனது. நல்ல வேளை இந்த பக்கம் பெடல் காலுக்குச் சிக்கியது. மிதித்தேன். இந்த மிதிகளுக்குகாக என் முதுகு ஏகத்துக்கு வளைந்தது. சேகர் நடுமுதுகில் ஒரு குத்து விட்டான். நேரா உட்கார்ந்து வளைக்காம நேர பாத்திண்டு மிதி என்றான். வளைந்து வளைந்து சைக்கிள் நகர்ந்தது. அவனும் கூட ஓடி வந்தான். “இந்த கால்”, “அந்த கால்” , “ஹாண்டில் பாரை வளைக்காதே” என்று சொல்லிக்கொண்டே வந்தவன் பேச்சு நின்றுவிட்டது. சைக்கிள் கட்டுப்பாடில்லாமல் மிக வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.
“அப்படியே திருப்பு”, என்று அவன் குரல் தொலைவில் கேட்டது. அப்போதுதான் நான் தனித்து விடப்பட்டது அறிந்தேன். சந்தோஷமும் பயமும் என்னை ஆட்கொண்டது. நான் சைக்கிள் விட கற்றுக் கொண்டுவிட்டேன் என்று மனம் மகிழ்ந்தது. எல்லாம் ஒரு கணம்தான் அவனைத்திரும்பிப் பார்த்தேன். அடுத்த நொடி நான் தரையைத்தொட்டேன். சைக்கிள் என் மேல் விழுந்தது. பயம் சூழ்ந்து கொண்டது அம்மா என்று அலறினேன். சேகர் சிரித்து கொண்டே ஓடி வந்து என்னை தூக்கி நிறுத்தினான். விழுந்து எழுந்து நான்கு ஞாயிற்றுக் கிழமைக்குள் நன்றாக சைக்கிள் விடக் கற்றுக் கொண்டு விட்டேன்.
என் உயரம் எனக்கு ஒரு சவால் விட்டது. 22 இன்ச் சைக்கிள்கள் தான் பெரும்பாலும் எல்லோரும் வைத்திருப்பார்கள். அதில் என்னால் ஏற முடியாது. குரங்கு பெடல் போட்டுக் கொண்டுதான் போகவேண்டும். சைக்கிள் நன்றாக விட வந்த போதும் ஏறுவதும் இறங்குவதும் சீராக வரவில்லை. ஒரு கல் அல்லது மேடையின் அருகில் சைக்கிளை வைத்து சைக்கிளில் ஏறி ஒரு உதை விட்டு புறப்படுவேன். அதே போல இறங்குவதும் மேடைக்கருகில் அல்லது மின்சார அல்லது தந்திக்கம்பங்களைக் கட்டிக்கொண்டுதான்.
வீட்டுக்கு யாரவது சைக்கிளில் வந்தால் அவர் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் மாமா கொஞ்சம் சாவி கொடுங்களேன் என்று வாங்கி ஒரு ரவுண்டு சைக்கிள் விடுவதில் ஒரு தனி சுகம் உண்டு.
எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் போது கீழையூர் தியாகராஜனுக்கு அவன் அப்பா ஒரு குட்டி சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார். அவனை நண்பனாக்கிக் கொண்டு அவனிடம் தினமும் ஒரு ரவுண்டு சைக்கிள் விடுவேன். எனக்கென்று ஒரு சைக்கிள் வாங்கவேண்டும் என்று ஒரு கனவு உண்டு.
என் சித்தப்பா கிராமத்தில் ஒரு சைக்கிள் வைத்திருப்பார். அதை தினமும் துடைத்து வைப்பார். ஆயில் கேனில் தேங்காய் எண்ணையும் மண்ணெண்யும் கலந்து போட்டு பெடல் மற்றும் சக்கரங்களில் எண்ணெய் விடுவார். ஸ்டாண்டு போட்டு கையால் வேகமாக பெடலைச் சுற்றுவார் டைனமோ ‘விர்’ என்று சத்தம் போட்டபடி சுழலும். முன் பக்கம் லைட்டின் முன் கை வைத்துப் பார்ப்பார். வீல் நடுவில் குஞ்சலம் கட்டிவைப்பார். மட்கார்டின் அடியில் சைக்கிள் கம்பெனியின் பெயர்போட்ட ரப்பர் ஷீட்டை அடிக்கடி மாற்றுவார். ஹேண்டில் பாருக்கு உறை போட்டி வைப்பார். டைனமோ விளக்கின் மேல் மஞ்சள் துணி கட்டி வைப்பார். கேரியரில் இடது புறம் ஒரு பெட்டியை இணைத்திருப்பார். அவர் சைக்கிள் ஓட்டி வருவதே அழகுதான்.

பி.யூ.சி சேர்ந்தவுடன் கொஞ்ச நாளைக்கு காலேஜூக்குப் பஸ்ஸில் போய்வந்தேன். ஒவ்வொருவராக சைக்கிள் வாங்கி அதில் போக ஆரம்ப்பித்தார்கள். சேகர், ரமேஷ், ஹரி, எல்லாரும் வாங்கி விட்டார்கள். ஹெர்குலஸ், அட்லஸ், எல்லாம் இருக்கும். எனக்கு ராலே சைக்கிள் மீது ஒரு காதல். அதிலும் பச்சை ராலே. அப்பாவிடம் அடி போட்டேன். பாவம் அவர் நிலைமை எனக்கும் தெரிந்ததே. சாதாரண சைக்கிள் வாங்கவே அவர் முக்க வேண்டும். அதுவும் பச்சை ராலே. என் அதிருஷ்டம் அப்பாவுக்கு ஏதோ போனஸ் வந்தது போல. கொடுக்க வேண்டிய கடனை அப்பறம் கொடுக்கலாம் என தீர்மானித்து ஜெகந்நாதன் கடையில் நின்றோம். என்னோடு ரகோத்தமன், ஸ்வாமி. ரகோத்தமன் கருப்பு ராலே, ஸ்வாமி ஹெர்குலஸ் நான் எனக்குப் பிடித்த பச்சை ராலே. வாங்கி வந்து அனுமார் கோவிலில் பூஜை போட்டோம். கடைக்காரர் “ஒரு மாசம் ரொம்ப ஸ்பீடு வேண்டாம், ரீ பிட்டிங் பண்ணிண பிறகு வேகமாக போகலாம்” என்றார். சரி சரி என்று தலையாட்டினோம்.
முதல் நாள் காலேஜிக்கு சைக்கிளில் ஒவ்வொருவராக மார்கழி நோண்புக்கு ஆண்டாள் கூப்பிடுகிறமாதிரி வீட்டின் வாசலில் முன் நின்று பெல் அடித்த போது எங்கள் முகத்தில் பெருமிதம் சொல்லி முடியாது. பஸ்ஸில் போன தூரம் சைக்கிளில் போனபோது அதிகமாக உணர்ந்தோம்.
ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள் வீடு திரும்பும் போது யார் சைக்கிள் வேகமாகப் போகும் என்று போட்டி. போட்டியின் முடிவு என் சைக்கிளில் பெடல் மட்டும் சுற்றுகிறது. சக்கரம் சுற்றவில்லை. மெதுவாக தள்ளிக் கொண்டு அப்பா ஆபீஸில் நிறுத்தி மெதுவாக விபரம் சொன்னேன்.
திட்டிவிட்டு ஜெகந்நாதன் கடைக்கு அழைத்து வந்தார். அவர் ஒரு மிதி மிதித்து விட்டு ரேஸ் விட்டிருக்கு என்றார். அப்பா என்னைப் பார்த்தார். நான் வெளியே பார்த்தேன். அவர் எதையோ பிரித்து மாட்டி சரி பண்ணிக் கொடுத்தார். சைக்கிள் ஒரு அங்கமாகிவிட்டது. காலேஜ் போக, கடைத்தெருவுக்கு சாமான் வாங்க, குளிக்க காவேரிக்குப் போக. கடைகுட்டித் தங்கை ஹேமலதாவை சைக்கிளில் உட்காரவைத்து காவிரிக்கு அழைத்துப் போவதில் அவளுக்குத் தனி மகிழ்ச்சி.
சைக்கிளின் பயனை நாம் முற்றிலுமாக மறந்து விட்டோம். அது தூரத்தைக் கடக்கும் ஒரு வாகனமாக மட்டும் இல்லாமல் ஒரு உடற்பயிற்சியாகவும் இருந்து வந்தது. பராமரிப்பு செலவும் குறைவு. சுற்றுப் புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும். இன்று அவ்வளவாக சாலையில் சைக்கிள்கள் உருளுவதில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் வாகனமாக அது நம்மிடையே ஒரு அடையாளத்தைப் பெற்றுள்ளது.
ரொம்ப வருஷம் என்னோடு இருந்த அந்த பச்சை ராலே சைக்கிளை ஒரு நாள் அப்பா அரிசி வாங்கி வர ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே போய் வர யாரோ திருடிவிட்டார்கள். அப்பா ரொம்ப வருத்தப் பட்டார். நான் சமாதானம் சொன்னேன். எனக்கு சைக்கிள் தொலைந்த போன வருத்தத்தைவிட அதை நான் தொலைக்க வில்லை என்ற சந்தோஷம்தான் அந்த நாட்களில் மிகுந்திருந்தது.
எனக்கு என் சைக்கிள் கொடுத்த சந்தோஷம் என் மகனுக்கு நான் வாங்கிக் கொடுத்த ஹோண்டா ஷைன் கொடுத்ததாக அவன் சொல்ல வில்லை. ஒரு வேளை அவன் மகனுக்கு அதைவிட உயர்ந்த வாகனம் வாங்கி கொடுக்கும் போது நினைத்துக் கொள்வானோ என்னவோ.
வாரத்துக்கு ஒரு முறையாவது சைக்கிள் ஓட்டுங்கள். நல்ல சாலைகளும் சைக்கிளும் மகிழ்வடையும்.
Raleigh, with drum brakes, hub dynamo and 3 speed gear
படம் உதவிக்கு நன்றி: http://www.team-bhp.com/forum/pre-war/75559-vintage-classic-bicycles-india.html
-செண்பக ஜெகதீசன்
வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. (திருக்குறள் -273: கூடாவொழுக்கம்)
புதுக் கவிதையில்…
தன்மனம் அடக்காமல்,
தவவேடம் பூண்டு
தவறு செய்தல்,
பசுவொன்று
புலித்தோல் போர்த்தி
பயிர்மேய்வதற்கு ஒப்பானதே…!
குறும்பாவில்…
புலித்தோல்போர்த்தி பசு பயிர்மேய்வதும்,
மனவடக்கமின்றித் தவவேடத்தில்
தவறுசெய்தலும் ஒன்றே…!
மரபுக் கவிதையில்…
புல்லைத் தின்னும் பசுவதுவும்
புலியின் தோலைப் போர்த்தியேதான்
நல்ல பயிரை மேய்ந்துவரும்
நாசச் செயலைப் போன்றதுதான்,
பொல்லா மனதை அடக்காமல்
பொய்யாய்க் கொண்டே தவவேடம்,
நல்லார் போல நடித்தாங்கே
நாச வேலை செய்வதுமே…!
லிமரைக்கூ…
பயிர்மேயும்பசு போர்த்தியிருக்கும் புலியின் தோலை,
பார்த்திடு கதையிதுதான்-
மனமடங்காது தவவேடத்தில் தவறிடுவோர் லீலை…!
கிராமிய பாணியில்…
பசுமாடு பசுமாடு
புல்லுமேயும் பசுமாடு,
பொல்லாத பசுமாடு
புலித்தோலப் போத்திக்கிட்டு
பயிர்மேயும் பசுமாடு…
இதுபோல,
தம்மனச அடக்காம
தவசிவேசம் போட்டுக்கிட்டு
தப்புசெயிற மனுசனுந்தான்,
பசுமாடு பசுமாடு
பொல்லாத பசுமாடு,
புலித்தோலப் போத்திக்கிட்டு
பயிர்மேயும் பசுமாடு…!
– கவிஞர் காவிரிமைந்தன்.

கவிஞர்களின் பாடுபொருள் நிலா என்பதில் புதுமையில்லை. ஆனால், ஒவ்வொரு கவிஞனும் புதிய புதிய யுக்திகளைக் கையாளத் தனது கற்பனைச் சிறகை விரிக்கிறான். கவிஞரின் கைவண்ணம் இங்கே தலைமை தாங்குகிறது. நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே! என்கிற பல்லவியை அடுத்து வருகிற வரியில் புராணத்தை பொருத்தமாய்க் கையாண்டுள்ளார்! திருநீலகண்டரின் மனைவி சொன்னது.. நீயொன்றும் புதிதாய் சொல்லிவிடவில்லை.. ஏற்கனவே திருநீலகண்டரின் மனைவி சொன்னதைத்தான் நீயும் சொல்லியுள்ளாய்! ஆணும் பெண்ணும் அனுசரித்துப் போவதுதானே இல்வாழ்க்கை! கருத்து வேறுபாடுகள் முற்றிடும்போது.. அனேகமாக.. இந்த வாசகம் சொல்லாத பெண்மை இன்னும் பிரம்மன் படைக்கவில்லை எனச் சொல்லலாம். அனுபவ முத்திரைகள் அள்ளித்தரும் கவி வள்ளலுக்கு இந்தப் பாடல் சர்க்கரைப் பொங்கல்தானே!
காலகாலமாக தீண்டாமைக் கொடுமை இந்த மண்ணில் நடந்துவருவது கண்டு வெஞ்சினம் கொண்ட வெண்தாடிவேந்தர் ஐயா பெரியார் ஆற்றிய சமுதாய சீர்திருத்தப்பணியால் தமிழ்நாடு நாகரீகமாய் நடைபோடுகிறது எனில் அது மிகையில்லை. ஆண்டுகள் பலவாக.. தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் மேடைபோட்டுச் சொல்லிவந்த பகுத்தறிவுக் கருத்துக்கள் தமிழர்களின் தன்மான வாழ்விற்கு விடிவெள்ளியாய் வந்தது என்பதை மறுப்பாரில்லை. இந்தப் பட்டறையில் கண்ணதாசனும் இருந்தவர் என்பதாலோ என்னவோ.. இதோ இந்தப் பாடல் வரிகளில் பளிச்சிடும் கருத்துக்கள் பாராட்டைப் பெறுகின்றன. திரைப்படத்தில் வருகின்ற கதாபாத்திரங்களின் வாயிலாக பாடல் என்னும் உத்தியில் பகுத்தறிவுக் கருத்தை உணர்த்த முடியும் என்று தெளிவாக்கியிருக்கிறார் என்பதை விட காலம் கண்ணதாசனுக்கு கை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா?
தர்மம் காத்த கை அது சமதர்மம் கண்டதா?
ஆலயம் சென்றேன் அங்கே அனுமதியில்லை.. நீ
அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை..
இவ்வரிகளில்தான் நான் அசந்து போயிருக்கிறேன் அதுநாள் வரை.. இன்னும் இப்பாடல் பற்றி .. இதில் உள்ள வரிகளின் ஆழத்தைப் பற்றி.. அர்த்தத்தை எடுத்துரைக்க வந்தார் என் இனிய நண்பர் என்பதைவிட நான் வணங்கும் நல்லவர்.. நாலும் தெரிந்தவர்… திரு.சுந்தரவரதன் அவர்கள்! கண்ணதாசனை அணு அணுவாக ரசிப்பவர்.. மெல்லிசை மன்னருக்கு உள்ளத்தில் கோயில் கட்டி வழிபடுபவர்! ராம்கி என்னும் எந்தன் நண்பரின் இதயத்திலும் பரிபூரணமாய் இடம்பெற்றவர்!
அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது .. என்னிடம் அவர் கேட்ட கேள்வி இதுதான்..
தந்தை தன்னையே தாய் தொடாவிடில்..
நானுமில்லையே.. நீயுமில்லையே..
தாய் – தந்தை இல்லையென்றால் பிறப்புக்கு வழியெங்கே என்கிற கருத்து மட்டுமே எனக்குத் தெரிந்தது என்றேன். அவர் சுட்டிக்காட்டிய வரிகளில் ஏதும் புதிதாக பொருள் ஒன்றுமில்லை என்று நான் விளம்ப.. அவர்தந்த விளக்கம் கேட்டு வியந்துபோனேன்.
பொதுவாக.. கூடலின்பொருட்டு ஆடவனே பெரும்பாலும் 95% பெண்ணை நாடுவான். அழைப்பான்.. தொடுவான்.. தொடருவான். இது நம் மண்ணின் பாரம்பரியம். பாரதப் பண்பாடு. பெண் ஒருத்தி ஆடவனைக் கூடலுக்கு அழைப்பது அரிதிலும் அரிது. இப்படியிருக்க, கண்ணதாசன் ஏன் தந்தை தன்னையே தாய் தொடாவிடில்.. என்று எழுதி உள்ளார் என்கிற வினா விடை தேடியது. என்றோ ஒரு நாள் பெண்ணுக்கு அந்த ஆவல் எழும்ப .. அவள் துவங்கிடும் அந்தக் கூடலின் விளைவாய் பிள்ளை உருவானால், அது எல்லா வகைகளிலும் பலமுள்ளதாக, வீரியமுள்ளதாக, வளமுள்ளதாக அமையும் என்பது மெய்ஞானம் கண்டெடுத்த விஞ்ஞான உண்மை என்றார்.
ஒற்றைப் பாடலுக்குள் ஓராயிரம் பொருள் வைத்து – சற்றும்
கர்வமின்றி குழந்தைபோல் வாழ்ந்தவனே.. அந்த
வித்தைக் கற்றுக்கொள்ள திறந்த புத்தகம் நீயே!
வாசகன் போல் நானும் என்றும் உந்தன் வாசலிலே!!
நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே

சவாலே சமாளி திரைப்படத்திற்காக நடிகர் திலகத்துடன் கலைச்செல்வி ஜெ.ஜெயலலிதா.. மெல்லிசை மன்னர் இயக்குனர் திரு மல்லியம் ராஜகோபால் ஆகியோரின் கூட்டணியில் விளைந்த வெற்றிப்படம்!
http://www.youtube.com/watch?v=FSdL74sUCNE
காணொளி: http://www.youtube.com/watch?v=FSdL74sUCNE
திரைப்படம்: சவாலே சமாளி
பாடல்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்: டி. எம். எஸ்.நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதேநிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதேநதியைப் பார்த்து நாணல் சொன்னது
என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது
என்னைத் தொடாதேநிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதேபுதியதல்லவே தீண்டாமையென்பது
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தயும் இரவல்தானது
திருநீலகண்டரின் மனைவி சொன்னதுநிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதேதாளத்தை ராகம் தொடாத போதிலே
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தை தன்னையே தாய் தொடவிடில்
நானுமில்லையே நீயுமில்லையே
நானுமில்லையே நீயுமில்லையேநிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதேதங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா?
தர்மம் காத்த கை அது சமதர்மம் கண்டதா?
ஆலயம் சென்றேன் அங்கே அனுமதியில்லை.. நீ
அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை..

What is Puja
Pooja is the act of showing reverence to a god, a spirit, or another aspect of the divine through invocations, prayers, songs, and rituals. An essential part of Pooja for the Hindu devotee is making a spiritual connection with the divine. Most often that contact is facilitated through an object: an element of nature, a sculpture, a vessel, a painting, or a print. It is possible to reduce the suffering due to the unfavorable position of planets through sincere reliance on God, the One who controls the planets.
What is homam
Homams are Poojas performed for a particular deity by invoking Agni – the God of fire. Each human performed strictly according to scriptures. These are conducted by fully learned and experienced vedic scholars.
Benefits of a Pooja according to our sacred texts, Pooja
Disciplines the mind
Energizes the deity and the worshipper
Enables one to experience oneness with divinity as we unconsciously offer the self through our material offerings.
Pooja establishes a bridge between the worshipper (the lover) and the deity (the loved).
It facilitates flow of love-energy in both ways. This energy not only sanctifies the self but also re-vitalizes the body’s resources, making one experience, what is called HOLY BLISS. Thus both the worshipped and the worshipper benefit from Pooja.
When do you need a Pooja & Homan
Initial stages of formalising house or commercial plans
Redesign of offices, workrooms etc
Renovation to an existing building
You want to enhance your life in certain areas that are not working for you
You have noticed that your life has had many problems since you have moved residence, decorated and renovated.
You want to place yourself in the most advantageous position to gain a winning edge.
To make up from losses.
To shine your destiny & to over come non auspicious surroundings (Home).
We Group of Danvantri Peedam having an expertise ‘Professional Sivachariyar, Archagas, Aachariyas and Pandits’ who performed all type of Pooja and Homams. so people who wish to know more about ‘Pooja and Homams’ may contact at e- Mail id:-danvantripeedam@gmail.com
Gita, a part of Maha Bharata, is considered essence of all philosophies. Having been told itself from the Divine mouth of Lord Krishna, its benefits, especially spiritual and divine, cannot be told in a single paragraph and the same can be only felt by the Yajman (the person, who sponsors the Havan).Bhagavad Gita Yagam is performed to get the essence of Bhagavad Gita.
Bhagavad Gita Yagna is an offering to fire accompanied by the reciting of the verses from the Bhagavad Gita. The Gita as given by the supreme Lord Sri Krishna representing supreme Narayana to Arjuna as Nara encompasses the real meaning of all the Upanishads.
It demonstrates and explains all aspects of the good human life and all paths to Moksha. Literal pathway such as the Purushasukta and the Gita are extremely suited for recitation in a dedicated performance of Bhagavad Gita Homam.
Homam Bhagavad Gita is mainly suitable for performing on Gita Jayanti that marks the day on which the Godly message of the Srimad Bhagavad Gita was delivered.
Homam for Bhagwad Gita also releases one from the cycle of birth, morality and reincarnation and helps one into ultimate liberation (Moksha). The Sri Danvantri Arogya Peedam strongly recommends Bhagavad Gita Puja And Homam after the death of your beloved ones, so that their souls take rest in ultimate peace.
Benefits of Bhagavad Gita Puja And Homam
· For fulfillment of wishes.
· To get prosperity and peace.
· To demolish Bad effects.
· To strengthen weak planets.
· To discipline mind, silence of mind.
· For promptness in action and result.
· For help to get fame and name.
· For getting wealth and achievement in life.
Gita Homam is an oblation to Agni accompanied by the chanting of the verses from the Bhagavad Gita. The Gita as imparted by the supreme Lord Krishna representing Narayana to Arjuna as Nara embodies the essence of all the Upanishads. It sets out and summarizes all aspects of the good life and all paths to salvation.
For more details,
Contact:
Sri Muralidhara Swamigal
Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar, Kilpudupet, Walajapet 632513, Vellore District.
Phones: 91-4172-230033, 0-94433 30203.
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (32)

இன்னும் என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?
அன்பே என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?
உன்விழியின் ஊஞ்சலிலே என்னெஞ்சம் உயிர்தேடும்
காலையும் மாலையும் நினைவின்றி
கனவும் நினைவும் துணையின்றி
புல்லின் நுனியில் பனிபோலே
துளித்துளியாய் நான் கரைகின்றேனே (இன்னும் என்னை)
கார்த்திகை தீபம் எந்தன் மனம்
தவழும் தென்றல் உந்தன் மனம்
அணைப்பாயா? இல்லை அணைப்பாயா?
அழகிய கைகளில் எடுப்பாயா?
பார்வையில் உயிரை நிறைப்பாயா? என்னைப்
பாதையில் மலராய் இறைப்பாயா?
தவிப்பே தவமாய்க் கனல்கின்றேன், ஒரு
தவத்தின் முனையில் கரைகின்றேன் (இன்னும் என்னை)
வெற்றியும் தோல்வியும் ஏதுமில்லை
வேதனை சாதனை பேதமில்லை
காதலெனும் ஒரு போதையிலே, மனம்
கலந்தபின்னே உயிர் மீதமில்லை
இதுதான் தருணம் வருவாயா?
எனக்கொரு ஜனனம் தருவாயா?
மலரில் பனித்துளி பழியில்லையே!
மெளனம் மரணத்தின் மொழியில்லையே! (இன்னும் என்னை)
படத்திற்கு நன்றி
கிரேசி மோகன்
“முலைப்பாலை எண்ணி மடியில் படுத்து,
அலைபாய, அன்னை அளித்த, -துளிப்பாலை,
உண்ண மறுத்தனன்; “ஊட்டிக்கே ஆப்பிளா”போல்,
“கண்ணனுக்கே சங்கா” கருத்து”….கிரேசி மோகன்….
கேசவ் OIL PAINTING கண்ணனுக்கு தைலக் காப்பு….
“நள்ளிரவு வண்ணனை, வெள்ளையுறு வாக்கிட,
தெள்ளமுதை வெண்சங்கில் தாயவள், -பிள்ளையதன்,
வாயில் புகட்டுவதை ,வார்த்தனன் கேசவ்ஜி;
OILலில் ஆரா அமுது”….கிரேசி மோகன்….
யசோதை பிடியிலிருந்து தப்ப முயலும் “கிருஷ்ண உவாச”….
“என்னதவம் செய்தாலும் என்னப்ப்ர யோஜனம்,
முன்னமிவன் செய்த முடிவம்மா, -உண்ணதவம்,
நோற்றவள் பூதனை, நச்சுமுலை யோடெமுனை,
ஆற்றருகே WAITING அனுப்பு”….கிரேசி மோகன் ….
பவள சங்கரி
தலையங்கம்
ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் போக்குவரத்து, தொழில் வளம், தொழிலாளர் வளம், தொழில்நுட்ப தொழிலாளர்களின் எண்ணிக்கை, தங்கம், மற்றும் மக்களின் வாங்கும் சக்தி, இவைகளைக் கொண்டுதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. நாட்டின் எந்த ஒரு வளர்ச்சிக்கும், அடிப்படை, பிரச்சனை இல்லாத சிறந்த போக்குவரத்து வசதிகள். ஆனால் பொது மக்களுக்கு சுமையைக் கூட்டும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், பயணம் செய்வதற்கான கட்டணங்கள் எந்த முன்னறிவிப்புமின்றி 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கச் சாவடிகள் பெரும்பாலும் தனி நபர்களால் நடத்தப்படுகின்றன. இப்போது இந்தச் சுங்கச் சாவடிகளில் திடீரென்று இவ்வளவு அதிகமாகக் கட்டண உயர்விற்கான காரணம் என்ன என்பதே விளங்கவில்லை. நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தயாரிக்கப்படும் பொருள் அந்நிய செலாவணி ஈட்டித் தருவதாகவோ அல்லது மக்களின் பயன்பாட்டில் இருப்பதாக இருந்தாலும் இந்தச் சுமை விதிக்கப்படுகிறது. இது பொது மக்களையோ அல்லது உற்பத்தியாளர்களையோ சென்று அடைவதை நாமறிவோம். எப்பொழுதோ போட்ட சாலைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் கப்பம் கட்ட வேண்டும்.. இன்னும் எவ்வளவு முறை இது உயர்த்தப்படும் என்றும் தெரியவில்லை. சில காலம் முன்பு மராட்டிய மாநிலத்தில் நடந்தது நினைவிருக்கும். நவநிர்மான் சமிதியைச் சார்ந்தவர்கள் திடீரென்று ஒரு நாள் ‘சுங்க வரி இனி ஒருவரும் செலுத்தப் போவதில்லை’ என்று கூறி சுங்கச் சாவடிகளை உடைத்து எறிந்தார்கள். உடனே மராட்டிய மாநில அரசு பேச்சு வார்த்தை நடத்தி, சுங்கச் சாவடிக் கட்டணங்களை பெருவாரியாகக் குறைத்தது. அப்படியிருக்க இப்பொழுது மீண்டும் இந்தியா முழுவதும் சுங்கக் கட்டணங்களை எதற்காக அதிகப்படுத்த வேண்டும்? ஒரு சில தனி நபர்கள் மட்டுமே இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பயன் பெறப்போகிறார்களே தவிர, இதனால் நாட்டிற்கு வேறு என்ன நன்மை விளையப்போகிறது?
போக்குவரத்திற்கும், நாட்டிற்கும் முதுகெலும்பாக இருக்கக்கூடிய பெட்ரோலியப் பொருட்களுக்களின் விலைகள், சந்தை விலைக்கும், ரூபாயின் மதிப்பிற்கும் ஏற்றவாறு லிட்டருக்கு குறைந்தபட்சம் 15 ரூபாய் குறைக்கப்பட வேண்டும். ஆனால் அது குறைக்கப்படவில்லை. வெறும் 2 அல்லது 3 ரூபாய்தான் குறைக்கப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயுவைப் பிரபலப்படுத்தாததன் காரணத்தினால் அந்நிய செலாவணியைக் குறைக்க முடியாமல் போகிறது. ரிலையன்சு நிறுவனத்தினர் மற்ற எரிவாயு கிணறுகளிலிருந்து உற்பத்தியை எப்போது அதிகப்படுத்துவார்கள்? உற்பத்தியை அதிகப்படுத்துவதைவிட்டு ஆண்டிற்கு ஆண்டு உற்பத்தி அளவு குறைந்துகொண்டே வருவதற்கான காரணமும் விளங்கவில்லை. இதற்கான புள்ளிவிவரங்கள் மிகக் குறைவான உற்பத்தியையே காட்டுவதும் வருத்தத்திற்குரிய விசயம். இயற்கை எரிவாயுவின் உற்பத்தியை இந்திய நவரத்தின குழுமங்களின் ஒன்றான எண்ணெய் உற்பத்திக் கழகமே உற்பத்தி செய்தால் பலன் கூடும் என்பதே வல்லுநர்களின் கருத்து.
நாள்தோறும் தங்கம் பெருமளவில் சுங்க வரி செலுத்தப்டாமலே நாட்டிற்குள் கள்ளத்தனமாக வருவதை அரசு முறைப்படுத்தினால் நலம். நகை உற்பத்தியாளர்கள் தங்கள் தேவைக்காக வாங்கக்கூடிய தங்கத்தின் அளவில் 50 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்வதோடு, தங்கள் தேவைக்கு வேண்டியதை கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலமாக நமக்கு அந்நிய செலாவணி அதிகமாகக் கிடைப்பதோடு சுங்க வரியும் பெற முடியும். மறைமுகமாகத் தங்கம் வாங்கி விற்கக்கூடிய தவறுகளையும் கட்டுப்படுத்த இயலும்.
இந்திய ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான குறிப்பிட்ட எந்த நடவடிக்கையும் இதுவரை அரசினால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. விவசாய விலை பொருட்களாகட்டும், உற்பத்திப் பொருள்களாகட்டும், இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகரித்தால் மட்டுமே இந்திய பொருளாதாரம் தலை நிமிர முடியும். மூலப் பொருட்களின் ஏற்றுமதியைக் குறைத்து, உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதை ஊக்குவித்தால் நாட்டின் பொருளாதாரம் சீரடைவதோடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் வாய்ப்பும் அதிகரிக்கலாம்.
அதிக வட்டிச் சுமையினால் கல்விக் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை சதவிகிதம் இன்று வெகுவாகக் குறைந்துள்ளது. கல்விக் கடன் முதலில் வாங்கியவர்களின் சதவிகிதத்தைவிட இன்று 25 % குறைந்து 9 சதவிகிதமாக உள்ளது. இது நாட்டின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கக்கூடிய ஒரு விசயம். இது போல வீட்டு கட்டுமானத்திற்கு கடன் பெறுவோர் மற்றும் அதற்கான தொகையும் கனிசமாகக் குறைந்துள்ளது. அதே சமயம், consumer durables என்று கூறக்கூடிய மக்கள் பயன்பாட்டிற்கு வாங்கக்கூடிய பொருட்களின் சதவிகிதமும், தொகையும் அதிகரித்துள்ளது. கடன் அட்டைகளுக்கான வாராத கடன் தொகையின் சதவிகிதமும் அதிகமாக உள்ளது. இவையனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தை கேள்விகுறியாக்கிக் கொண்டிருக்கிறது. அரசு, கல்விக் கடனை ஊக்குவித்து பொருளாதாரத்தை சீர் தூக்கினால் நாடே நலமடையும் என்பது உறுதி.
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (31)
{கேட்டு மகிழ}

நிம்மதியாகச் சென்று வா! எந்த
நிலையையும் அன்பால் வென்று வா!
நினைவும் கனவும் இறைவனையே
நித்தம் விடாமல் தொழுது வா!
நிம்மதி பிறர்க்குத் தந்து வா! அதில்
நிம்மதி புதிதாய்க் கொண்டு வா!
நீலக் கடலின் வெள்ளலைபோல், நீ
நேரே சீக்கிரம் ஓடி வா!
சந்நிதி என்பது அன்புமனம், அதில்
சரவிளக்காவது தொழுதசுகம்
சதியாய் இடைவரும் விதியைக் கூடச்
சமன் படுத்துவதே சாந்த குணம்
அந்நியம் அறியா அன்பினிலே, அந்த
ஆண்டவன் நெய்தான் உன் நெஞ்சை
அள்ளிக் கொடுக்கக் கொடுக்கப் பெருகும்
அன்பைக் கொடுத்து அழகே வா!
என்மனம் என்பதோ உன்விழியில்
என்னுயிர்? உன் இமையின் அசைவில்
என்கன வெல்லாம் உன்முகமே
என் நினைவெல்லாம் உன் நலமே
என்றோ ஏனோ பிரிந்தநதி
இன்று கலந்தது அவனருளால்
ஒன்றொன்றான இன்பத்தை, இன்னும்
ஒருமுறை கொண்டாட ஓ…டி… வா!
தினம்தினம் உனக்காய்ப் பிரார்த்திப்பேன்
திசையெலாம் உன்முகம் பார்த்திருப்பேன்
தினம்தினம் கண்முன் நீ வளர, பனித்
திரையின் ஊடே களித்திருப்பேன்!
எனையுன் உயிரில் கலந்தவளே! என்
உயிரினும் இனிய தெய்விகமே!
எனையினி ஒருகணம் பிரியாமல்
இறுகத் தழுவிடச் சீக்கிரம் வா!
படத்திற்கு நன்றி
கிரேசி மோகன்
“கல்கியேஜ் கண்டு கலிதீர்க்கக் கண்ணனவன்
LKG சேயாய்ஜொ லிக்கின்றான் ; -MILKYAGEல்(துவாபர யுகம் )
கட்டிமல் லாண்டந்த கம்சர்களைக் கொன்றதும்
சொட்டுநீ லம்டோய்கே சவ்”….கிரேசி மோகன்….
“கஷ்கம் சொறிவரது குட்டிக்கு வேடமிட்டாய்
கிஷ்ணன்போல் கேசவ், கிரேசிக்கு -உஷ்ணம்
சகிக்கவில்லை சித்திரையில் சாக்லேட் கிருஷ்ணா
நகைக்கவை கோபி நடித்து”….கிரேசி மோகன்….
பி. கு. இன்றைய பாலகிருஷ்ணர் பார்ப்பதற்கு ஜாடையில் “மைக்கேல் மதனகாம ராஜன் ” புகழ் வரது குட்டி போல் இருக்கிறான்….சாக்லேட் கிருஷ்ணாவில் என்னால் முடியாத போது “கோபியை” substitute ஆக அனுப்ப…. ” ம் மாட்டிக் கொண்டான் கோபி “….கிரேசி மோகன்….