Blog

  • பூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெருங் காந்த மண்டலம் எப்படி உண்டானது ?

     

    jay

     

     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://www.youtube.com/watch?v=GMbWzJll0lE&feature=player_detailpage

     

    2016 ஆண்டு ஆகஸ்டு மாதம் பூதக்கோள் வியாழனைச் சுற்றப் போகும் அமெரிக்க விண்ணுளவி ஜூனோ புதிய தகவல் அனுப்பி, அதன் உட்கருவைப் பற்றியும்,  விந்தையான அதன் காந்த மண்டலத்தைப் பற்றியும் மேற்கொண்டு விளக்கம் கூறும்.

    ஜொஹான்னஸ் விக்ட் [மாக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆய்வுக் குழுத் தலைமை விஞ்ஞானி]

     

    பூதக்கோள் வியாழனில் பெருங் காந்த மண்டலம் இருப்பது அறிவிக்கப்பட்டது.

    சூரிய குடும்பத்திலே மிகப் பெரிய வாயுக்கோள் வியாழன்.  வாயுக்கோளில் பூமியைப் போல் பத்து மடங்குக்கு மேற்பட்ட  ஆற்றலுள்ள ஒரு பெரும் காந்த மண்டலம் இருப்பது சமீபத்தில் கணனிப் போலி மாடல் மூலம் [Computer Simulation Model]  நிரூபிக்கப் பட்டது.  உலோகப் பாறைக் கோளான பூமிபோல் எப்படி ஒரு திணிவு வாயுக் கோளான வியாழனில் காந்த மண்டலம் உண்டானது என்பது விஞ்ஞானிகளைப் பெரு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.   2014 ஆகஸ்டு 21 இல் ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் ஆய்வுக் கூடத்தின் சூரிய ஏற்பாடு ஆராய்ச்சியினர்  ஒரு விளக்கமான கணனிப் போலி மாடலை அமைத்து, வியாழன் வாயுக்கோளத்தின் உட்கருவில் எப்படிக் காந்த மண்டலம் உண்டானது என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.   அறிக்கை வெளியிட்ட மாக்ஸ் பிளாங்க் சூரிய ஆராய்ச்சிக் குழுவினரின் தலைமை விஞ்ஞானி :  ஜொஹான்னஸ் விக்ட் என்பவர்.

     

    Jupiter Magnetic field -1

     

    பூதக்கோள் வியாழனின் காந்த மண்டல ரேகைகளை ஆராய்ந்தால் அவை உட்புறத்தில் மிக்க சிக்கலான நிலையில் இருப்பது தெரியவரும்.  உட்தள உலோகவியல் எல்லையைத் தாண்டிக் காந்த தளத்தின் தீவிரம் சிறிது சிறுதாய்க் குறைகிறது.  வியாழனின் மேற்தளத்தில் இருதுருவப் பகுதி ஒன்று [Dipolar Region] சுற்றச்சுக்கு 10 டிகிரி கோணத்தில் சாய்ந்து ஆளுமை செய்கிறது.  காந்த ரேகைகளின் தடிப்பு காந்த தளத்தின் உறுதியைக் காட்டுகிறது.   மத்திய ரேகைப் பகுதியில் [Equatorial Region]  உலோக அடுக்கு எல்லை அருகே [Metallic Layer Transition] ஓர் உந்து சக்தி கிழக்கு-மேற்கி திசைநோக்கி அழுத்தமாகச் செல்லும் காந்த ரேகைகளை உண்டாக்குகிறது.

    மின்சார ஓட்டம் நிகழும் போது எப்போதும் காந்த ரேகைகள் தோன்றுகின்றன.   நமது பூமியில் அவ்விதம் ஓர் காந்த தளம் சூழ்ந்துள்ளது.   ஏனெனில்  பூமியின் உட்கரு ஆழத்தில் இரும்பு-நிக்கல் உருகிய திரவம் உள்ளது.   பூமியின் சுழற்சியில் அது சுற்றும் போது மின்சார ஓட்டம் உண்டாகி, இருதுருவக் காந்த தளம் தோன்றுகிறது.   பௌதிக விஞ்ஞானிகள் அதைப் பூதள-ஜனனி [Geo-Dynamo] என்று குறிப்பிடுகின்றார்.   ஆனால் பூதக்கோள் விழானின் வியப்பான மின் ஜனனி எவ்விதம் வேலை செய்கிறது என்னும் வினா  இப்போது எழுகிறது.

     

    Jupiter Core

     

    title 

     

    பூதக்கோள் வியாழனில் ஹைடிரஜன், ஹீலிய வாயுக்கள் தவிர வேறு எதுவும் இருப்பதாக இதுவரை அறியப்பட வில்லை.  அதிக அழுத்தமுள்ள ஹைடிரஜன் பனிக்கட்டி உலோகமாக [Metallic Hydrogen] மாறி இருப்பதுபோல் தெரிகிறது.   பூதக்கோள் மீது பல்லாண்டுகளாய் பெரும் சூறாவளிப் புயல் முகில்கள் அடிப்பது தெரிகிறது.   முகிலின் மேற்புற உஷ்ணம் ( – 100)  டிகிரி செல்சியஸ்.   ஆனால் உஷ்ணம், அழுத்தம், மின்சக்தி கடப்பு, ஆழத்தில் செல்லச் செல்ல பேரளவு மிகையாகின்றன.  10,000 கி.மீடர் ஆழத்தில் ஹைடிரஜன் வாயுவின் அழுத்தம் பல மில்லியன் பூவழுத்தம் [Several Million Atmospheres].  அந்த கொடூர அழுத்தத்தில் திணிவு ஹைடிரஜன் வாயு கூட உலோகம் போல் மின்கடத்தி ஆகிறது.   இதுபோல் ஓர் அழுத்த நிலை நமது பூமியில் எங்கும் இருப்பதில்லை.   பூதக்கோள் வியாழனின் உட்கருவில், பூமிபோல் பாறை உள்ளதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.  2016 ஆண்டு ஆகஸ்டு மாதம் பூதக்கோள் வியாழனைச் சுற்றப் போகும் அமெரிக்க விண்ணுளவி ஜூனோ புதிய தகவல் அனுப்பி, அதன் உட்கருவைப் பற்றியும்,  விந்தையான அதன் காந்த மண்டலத்தைப் பற்றியும் மேற்கொண்டு விளக்கம் கூறும்.

     

    [Juno Spacecraft Travels to Orbit Jupiter]  
    (2011 – 2016)

     

    “பரிதி மின்சக்தித் தட்டுகள் இணைத்தியங்கும் (Solar Panel Powered) விண்ணுளவிப் பயணத் திட்டமானதால், துருவ நீள் வட்டத்தில் சுற்றும் ஜூனோவின் பரிதி மின்தட்டுகள் எப்போதும் சூரியனை நோக்கியே பறந்து செல்லும்.  விண்ணுளவி வியாழக் கோளின் மறைவுப் புறத்தில் பயணம் செய்யாதபடி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.”

    ஸ்காட் போல்டன்,  ஜூனோ திட்டப் பிரதம விஞ்ஞானி

    (ஜூனோ விண்ணுளவியின்) முக்கிய முதலிரண்டு சோதனைகள் :

    1.  பூதக்கோள் வியாழனில் எவ்வளவு நீர் உள்ளது ?

    2.  வியாழக் கோளின் மைய உட்கருவில் இருப்பது கன மூலகங்களின் திரட்சியா அல்லது நடு மையம் வரை இருப்பது அழுத்த வாயுத் திணிவா ?

    ஸ்காட் போல்டன்

     

    Juno Space Probe

     

    “கடந்த நூற்றாண்டுகளில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”

    காலிலியோ (1564-1642)

    நாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை.  நாமறியாதவை கணக்கில் எண்ணற்றவை.  புரிந்து கொள்ள முடியாத கரையற்ற ஒரு கடல் நடுவே, சிறு தீவு ஒன்றில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம். நமக்குத் தொழில் ஒவ்வொரு பிறவியிலும் நாம் மேலும் சிறிது புதுத் தளத்தைக் கைப்பற்றுவதுதான்.

    தாமஸ் ஹக்ஸ்லி [Thomas Huxley] (1825-1895)

     



    2011 இல் பூதக்கோள் வியாழனை நோக்கி மீண்டும் நாசா பயணம்

    ஒரு பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிதிச் செலவில் மீண்டும் நாசா 2011 ஆகஸ்டு 5 ஆம் நாள் பிளாரிடா கெனாவரல் ஏவுமுனைத் தளத்தில் சுமார் 200 அடி (60 மீடர்) உயரமுள்ள அட்லாஸ் -5 ராக்கெட்டில் (Atlas -5 Rocket) மனிதரற்ற ஜூனோ விண்ணுளவியை ஏற்றிக் கொண்டு ஆய்வுகள் செய்ய அனுப்பி யுள்ளது. ஜூனோ விண்ணுளவி 5 ஆண்டுகள் 1740 மில்லியன் மைல்கள் பயணம் செய்து செந்நிறக் கோள் செவ்வாயைக் கடந்து, கோடிக் கணக்கான முரண்கோள்கள் சுற்றும், முரண்கோள் வளையத்தை ஊடுருவிச் (Asteroid Belt) சென்று, 2016 இல் புறக்கோள் வியாழனை நெருங்கி ஓராண்டு சுற்றி வரத் திட்டமிடப் பட்டுள்ளது.  அட்லாஸ் -5 ராக்கெட் சுடப்படும் முன்பு அதன் மேலடுக்கில் ஹீலியம் ஏற்றும் சாதனத்தில் கசிவு உண்டாகி பிரச்சனை எழுந்ததால், அதை அடைக்க ஏவுக் காலம் சற்று தாமதமானது.  ஆகஸ்டு 5 ஆம் தேதி ஏவப்பட்ட ஜூனோ விண்கப்பல் இப்போது சுமுகமாகப் பயணம் செய்து வருகிறது.

     

    ஜூனோ விண்ணுளவி முதல் இரண்டு ஆண்டுகள் பரிதியைச் சுற்றி வந்து, பூமிக்கு மீண்டு அதன் ஈர்ப்பு வீச்சு விசையில் மேலும் உந்தப்பட்டு (Earth Flyby) அடுத்த மூன்று ஆண்டுகள் வியாழனை நோக்கி வேகமாய்ச் செல்லும்.  பூமியிலிருந்து 390 மில்லியன் மைல் (640 மில்லியன் கி.மீ.) தூரத்தில் இருக்கும் பூதக்கோள் வியாழனுக்குப் பயணம் செய்ய முதன் முதலாக பரிதி மின்சக்தித் தட்டுகள் (Solar-Panelled Mission) மூன்று அமைக்கப் பட்டு இயங்கும் விண்வெளித் திட்டம் இது.  சூரிய மின்தட்டு ஒன்றின் நீளம் 30 அடி.  அகலம் 9 அடி.  பூதக்கோள் வியாழன் மீது படும் பரிதி ஒளி பூமியின் மீது விழும் ஒளியைப் போல் 25 மடங்கு குறைந்தது.  ஆகவே ஜூனோ விண்ணுளவி வியாழனின் மறைவுப் புறத்தில் சுற்றாமல் துருவங்களைச் சுற்றி வரப் போகிறது.  இதற்கு முன்பு வியாழன், சனிக்கோள் நோக்கிச் செல்லும் இவ்வித நீண்ட பயணங்களுக்குக் கதிரியக்க முள்ள புளுடோனிய மின்கலம் பயன்படுத்தப் பட்டது.  ஜூனோவில் பரிதி மின்சக்தி திரட்ட, 120 டிகிரிக் கோணத்தில் இருக்கும் மூன்று சூரியத் தட்டுகளில் 18,000 பரிதிச் செல்கள் (Solar Cells) அமைப்பாகி உள்ளன.  பூதக்கோள் வியாழனின் துருவச் சுற்று வீதியில் 33 நீள்வட்டச் சுற்றுக்களை 3000 மைல் (5000 கி.மீ.) உயரத்தில் ஓராண்டு புரிந்து வர ஜூனோ திட்டமிடப் பட்டுள்ளது.  இறுதியில் பரிதி மின்தட்டுகள் பழுதடையும் போது வியாழக் கோளில் ஜூனோ விண்ணுளவி சுற்றுவீதியை முறித்துக் கொண்டு வியாழனில் விழும்படி நாசா விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்துள்ளார்.

     

    Magnetic field

     

    ஜூனோ விண்ணுளவித் திட்டத்தின் முக்கிய குறிப்பணிகள் என்ன ?

    பூதக்கோள் வியாழனே பரிதி மண்டலத்தில் சுற்றிவரும் மற்ற கோள்களை விடப் பெரியது.  அது சூரியனைப் போலிருக்கும் ஒரு வாயுக் கோள்.  வியாழனின் தோற்றத்தை யும் வளர்ச்சியையும் புரிந்து கொண்டால் ஓரளவு சூரிய மண்டலத்தின் ஆரம்பத்தை அறிந்து கொள்ள முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  ஜூனோ விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள ‘தூர முகர்ச்சிக் கருவிகள்’ (Remote Sensing Instruments) பூதக்கோளின் பல்லடுக்குச் சூழ்வெளியை உளவி அவற்றின் உஷ்ணம், உட்பொருட்கள்,  முகில் நகர்ச்சி, மற்றுமுள்ள தளப் பண்பாடுகளைப் பதிவு செய்து, பூமிக்கு மின்தகவல் அனுப்பி வைக்கும்.  மேலும் வியாழனில் தோன்றும் முகில் வண்ணப் பட்டைகளின் உள்ளமைப்பைக் கண்டறியும்.  சிறப்பாக கடந்த 300 ஆண்டு களாகக் காணப்படும் விந்தையான ‘கொந்தளிக்கும் செந்திலகம்’ (Violently-Active Red Spot) என்ன வென்று ஆழ்ந்து அறியப்படும்.  எல்லாவற்றும் மேலாக பூதக்கோள் வியாழனில் உள்ள நீரின் செழிப்பை அறிந்து ஆக்ஸிஜன் எத்தனை அளவு இருந்தது என்று கணக்கிடவும், பரிதி மண்டலத் தோற்றத்தை உறுதிப் படுத்தவும் பயன்படும்..  அத்துடன் பூதக்கோள் வியாழனுக்கு நடுவே உள்ளது திண்ணிய கடும் பாறையா அல்லது வாயுத் திணிவு மிகுந்து வியாழன் உட்கருவில் அழுத்தமுடன் உறைந்து போய் உள்ளதா என்றும் அறியப்படும்.

     

    Fig 5 Jupiter Exploration

     

    வியாழக் கோளின் காந்த தளத்தையும், ஈர்ப்புக் களத்தையும் பதிவு வரைபடக் கருவி வரையும்.  பூதக்கோள் வியானின் துருவக் காந்தக் கோளத்தை (Polar Magnetosphere) உளவி அது எப்படி வியாழனின் சூழ்வெளி வாயு மண்டலத்தப் பாதிக்கிறது என்று ஆராயும்.  ‘வியாழனில் தென்படும் தென்துருவ, வடதுருவ ஓவியக் கோலங்களையும்’ (Polar Auroras) ஜூனோ ஆராயும்.

    வியாழக் கோளை முன்பு சுற்றிய நாசாவின் விண்கப்பல்கள்

    நாசா காஸ்ஸினி விண்கப்பல் (1997- 2004) இல் சனிக்கோளைச் சுற்ற அனுப்பு வதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, காலிலியோ விண்வெளிக் கப்பல், வியாழனைச் சுற்றிவர ஏவப்பட்டு, ஏராளமான விஞ்ஞானத் தகவல்களைப் பூமண்டலத்துக்கு அனுப்பியுள்ளது. விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூட்டிய, காலிலியோவின் பெயரைக் கொண்ட நாசாவின் விண்கப்பலே, வியாழனை ஆராயும் முதல் ‘விண்ணுளவி’ [Space Probe] ஆனது !  தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளி யின் முகத்திரையை உலகுக்குத் திறந்து வைத்தவர், காலிலியோ! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு துணைக் கோள்களை முதலில் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ!

     

    நாசா 1972 இல் ஏவிய பயனீயர்-10, பயனீயர்-11 [Pioneer-10, Pioneer-11], அடுத்து1977 இல் அனுப்பிய வாயேஜர்-1, வாயேஜர்-2 [Voyager-1, Voyager-2] ஆகிய நான்கு முன்னோடி விண்சிமிழ்கள் பயணம் செய்து முதன் முதலில் வியாழன், சனிக்கோளின் விஞ்ஞான விபரங்களை உளவிப் பூமிக்கு ஏராளமான தகவல் அனுப்பின. 1987 இல் அனுப்பிய காலிலியோ விண்கப்பல் எட்டாண்டுகள் பயணம் செய்த பிறகு, 1995 இல் வியாழக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் இழுக்கப்பட்டு, நீள்வட்ட வீதியில் சுற்றி, ஓர் உளவுச்சிமிழை [Probe Module] வியாழ தளத்தில் இறக்கி, விண்வெளி வரலாற்றில் முதன்மை பெற்றது.  ஒரு ‘சுற்றுச்சிமிழும்’ [Orbiter] ஒரு ‘சூழ்வெளி உளவுச் சிமிழும்’ [Atmospheric Probe] இணைக்கப் பட்டிருந்த, காலிலியோ விண்வெளிக் கப்பல் இரண்டு முக்கியப் பணிகளை நிறைவேற்றத் தயாரானது. முதல் பணி வியாழனை நெருங்கி, சுற்றுச்சிமிழ் சுழல்வீதியில் விழானைச் சுற்றிவருவது. அடுத்த பணி உளவுச்சிமிழை விடுவித்து, வியாழ தளத்தில் அதை மெதுவாக இறக்குவது.  மின்சக்தி பரிமாறப் புளுடோனியம் டையாக்ஸைடு [PuO2] பயன்படும் இரண்டு ‘கதிர்வீச்சு வெப்ப ஜனனிகள்’ [RTG, Radioisotope Thermal Generators] அமைக்கப் பட்டிருந்தன.

     

    கொந்தளிக்கும் செந்திலகம்! பூதக்கோளில் புயல் காற்று !

    வியாழச் சூழகத்தில் பொங்கி எழும் வாயு மண்டலம் வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து விரிகிறது! மத்திம ரேகைப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்றுகள், மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன! அப்பட்டை நிற மேகங்கள், சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது! புயல் காற்று மத்திம ரேகையில் அடிக்கும் உச்ச வேகம் 360 mph!

    வியாழனின் பெயர் பெற்ற ‘மாபெரும் செந்திலகம் ‘ [Great Red Spot] சீரிய தொலை நோக்கி தோன்றிய நாள் முதல், 300 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்பட்டு கொந்தளித்து வருகிறது! செந்திலகம் முட்டை வடிவானது! அதன் கொந்தளிப்புக்குக் காரணம் இன்னும் அறியப் படவில்லை.

     

     

    முகில் ஆட்டத்திற்குச் செந்நிறத்தைத் தருபவை, புறவூதா [Ultraviolet] ஒளியை விழுங்கும், கந்தகம் [Sulfur], ஃபாஸ்ஃபரஸ் [Phosphorus] போன்றவற்றின் இரசாயனக் கூட்டுறுப்புகள் [Compounds]. மாறிக் கொண்டே வரும் செந்திலகத்தின் தற்போதைய பரிமாணம் 16200 மைல் நீளம்; 8700 மைல் அகலம்.

    மாபெரும் புயல்கள் வியாழ மண்டலத்தில் திடீர் திடீரென வீசி அடிக்கின்றன!சூரியனின் தட்ப, வெப்ப மாறுதலால், பூமியில் சூறாவளி, ஹரிக்கேன் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் வியாழக் கோளின் சூறாவளிப் புயல்கள், கொந்தளிக்கும் உட்தள வாயுக் குமிழ்களால் [Gas Bubbles] எழும்பி, அடர்த்தி யான முகில் அடுக்குகளைக் கலக்கி அடிக்கின்றன! வாயுக் குமிழ்கள் தாறுமாறான வெப்பத் திட்டுகளை தாங்கிக் கொண்டு, புயல் காற்றுக்களைக் கட்டுப் படுத்த, வியாழனில் மேடு, பள்ளங்கள், மலைகள் ஏதும் இல்லாது, எல்லாத் திசைகளிலும், குறுக்கு நெடுக்காக முறுக்கி அடிக்கின்றன!

     

    chart Earth - Jupiter

     

    (தொடரும்)
    ++++++++++++++++

    தகவல் :

    Picture Credit : NASA, ESA,

    1. Galileo Project Informationhttp://www.nssdc.gsfc.nasa.gov/planetary/galileo.html

    2. Exploration of the Planets By: Brian Jones [1991]

    3. Jupiter By: Garry Hunt & Patrick Moore

    4. Galileo Orbiter & Probe By: Michael Wilcox [Nov 16, 1995]

    5. Solar System Exploration: Mission Jupiter, Galileo

    6. Astronomy By: Reader ‘s Digest [1998]

    7. Galileo Project: http://www.jpl.nasa.gov/galileo NASA/JPL Press Release [Feb 26, 2003]

    8. National Geographic News : On August 5th NASA Spacecraft is Slated to Launch on a     Five-year Journey to Jupiter (August 4, 2011)

    9. Space Daily : NASA Launches Juno to Jupiter (August 5, 2011)

    10. BBC News : Juno Probe Heads for Jupiter from Cape Canaveral (August 5, 2011)

    11. NASA Report : NASA’s Juno SpacecraftLaunches to Jupiter (August 5, 2011)

    12.  http://en.wikipedia.org/wiki/Jupiter  [August 12, 2014]

    13.  http://www.dailygalaxy.com/my_weblog/2014/08/origins-of-jupiters-vast-magnetic-field-deciphered.html  [August 21, 2014]

    ++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) (August 23, 2014)

    http://jayabarathan.wordpress.com/

    Attachments area
    Share
  • சிங்காரச் சென்னை என்றோர் கிழவி

    — தேமொழி.

    இந்த ஆகஸ்ட்  22, 2014 இல் தமிழகத்தின் தலைநகர் சென்னை தோன்றி 375  ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.  சென்னை ஒரு பழம் பெரும் நகரம்தான் என்றாலும்   இச்சென்னை மாநகர் தனது 257 ஆம் ஆண்டில் நடை போடும் பொழுதே சென்னை நகரைக் “கிழவி” என்று ருட்யார்ட் கிப்லிங் எழுதியுள்ளார்.

    ருட்யார்ட் கிப்லிங் (Joseph Rudyard Kipling) என்ற ஆங்கில எழுத்தாளரைப் பற்றித் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கமுடியாது.  அதுவும் இந்த தலைமுறையினருக்கும் அவரைப் பற்றி அறிமுகப்படுத்தியது வால்ட் டிஸ்னியின் படமான “தி ஜங்கில்  புக்” என்பதாகும்.  அவரது வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாகச் சொன்னால், அந்தக்கால ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த மும்பையில் 1865 ஆம் ஆண்டு பிறந்தவர்.  தன்னை ஆங்கிலோ இந்தியர்கள் எனக் கருதிக்கொண்ட இங்கிலாந்தின் குடிமக்களான பெற்றோர்களுக்குப்  பிறந்தவர்.  அவர் பிறந்தபொழுது அவர் தந்தை “Sir J. J. College of Architecture” என்னும் மும்பை கல்லூரியில் பணிபுரிந்தார்.  அவர் பிறந்த வீடு சிதிலமடைந்ததால் அதை இடித்து மற்றொரு கட்டிடம் அங்கே எழுப்பப்பட்டு, அது இப்பொழுது அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுவிட்டது.  கிப்லிங் பிறந்த இடம் எனக் குறிப்பிடும் பட்டயம் மட்டுமே அங்கே ஓர் இடத்தில் பொறிக்கப்படுள்ளது. அதைத்தவிர முக்கியத்துவம் தர நம் இந்தியர்களுக்கு அவர் பெயரில் அவ்வளவாக ஆர்வம் இல்லை.

    அதற்குக் குறிப்பாக மற்றொரு காரணம், கிப்லிங் ஆங்கில ஏகாதிபத்தியத்தில் பெருமை கொண்டவர், அவர் காலத்தில் பிரட்டிஷ் அதிகாரம் உலகம் முழுவதும் பரந்து கிடந்தது.  எனவே அது அவரது நாட்டுப் பற்று, அதில் எந்த ஒரு குறையும் சொல்வதற்கில்லை.  ஆனால் அவர் கூறிய மற்றொரு கூற்று “தி வைட் மேன்ஸ் பர்டன்” (The White Man’s Burden) என்றது பலருக்கு எரிச்சல் மூட்டியது.  ஐரோப்பிய கிறிஸ்துவ வெள்ளைக்காரர்களின் கடமை பின்தங்கிய நாடுகளுக்கு சென்று அந்த மக்களை கலாச்சாரப்படி மேம்படுத்துவது என்பதைத்தான் அவர் அவ்வாறுக் குறிபிட்டார்.  இது பொதுவாக மற்றக் கலாச்சாரங்களைக் கீழ்த்தரமாகக் கருதிய அக்கால ஐரோப்பியர்கள் அல்லது வெள்ளைக்காரர்களின் கருத்து. நமது கடிகாரம் சரி என நாமே நினைத்து நாம் அடுத்தவர் கடிகாரத்தை சரிசெய்ய முயன்றால்….அது சரியா? எனவே இது போன்ற ஆணவ, அகங்கார எண்ணமுடைவர்களை நம் மண்ணில் பிறந்த ஒரே காரணத்திற்காக நாமும் கொண்டாட விருப்பமில்லாமல் இருப்பதில் தவறில்லைதான்.

    நோபல் பரிசுகள்  வழங்க ஆரம்பித்த பின்பு ஆங்கில இலக்கியத்திற்காக முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களில் மிகவும் இளையவர் (42 ஆம் வயதில், 1907 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்)  என்ற பெருமைகள் இவரைச் சாரும்.  மும்பையில் பிறந்து ஆறு வயது வரை அங்கு வளர்ந்து, பின்பு பள்ளிப் படிப்பிற்காக இங்கிலாந்து அனுப்பப்பட்டு, மீண்டும் இந்தியா வந்து கொஞ்ச நாள் வேலை பார்த்தார்.  பின்னர் உலகம் முழுவதும் சுற்றினாலும், பல நாடுகளில் வாழ்ந்தாலும், அவரால் இந்தியாவில் வாழ்ந்த நாட்களை மறக்க முடியவில்லை.  அதிலும் அவர் பிறந்த பம்பாய் நகர் மேல் தனி அன்பும் அவருக்கு இருந்தது.  இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதினார்.  ஜங்கிள் புக் கதையின் கருவாக இந்தியாவை அடிப்படையாக வைத்து எழுதியது போல அவரது பிற படைப்புகளிலும்  இந்தியாவைப் பற்றிப் பலமுறைக் குறிபிட்டுள்ளார்.

    இவரது “If___” (http://www.everypoet.com/archive/poetry/Rudyard_Kipling/kipling_if.htm) என்ற கவிதையின் சாரம் கீதாஉபதேசத்தின் கருத்துக்களைக் கொண்டது என்று பத்திரிக்கையாளர் திரு. குஷ்வந்த்சிங் அவர்கள் கருத்து தெரவித்துள்ளார். சிறிது காலம் கிப்லிங் ஒரு யானை தன் துதிக்கையில் தாமரைப் பூவினை வைத்திருப்பதையும், இந்துக்கள் சூரியனின் குறியாகக் கருதும், அதிர்ஷ்டம் தரும் என்று நம்புகிற சுவஸ்திகாவையும் தன் புத்தகங்களில் இலச்சினையாகப் பயன்படுத்தியுள்ளார்.  ஆனால் ஜெர்மனின் நாஃசிப் படைகளின் குறியாக  சுவஸ்திகா உயோகப்பட ஆரம்பித்தவுடன் அவர் அந்த வழக்கத்தை நிறுத்திக் கொண்டார்.

    தனது  “The Seven Seas” என்ற புத்தகத்தை (http://www.gutenberg.org/files/27870/27870-h/27870-h.htm)  கிப்லிங் பம்பாய் நகரத்திற்குச் சமர்ப்பணம் செய்து, பம்பாய் நகரத்தின் மீது ஒரு கவிதையே அதில் எழுதியுள்ளார்.  இந்தப் படைப்பில் ஓரிடத்தில் ஆங்கில ஆட்சியின் கீழிருந்த நகரங்கள் கூறுவதாக “The song of the Cities” என்ற தலைப்பில் பல சிறிய செய்யுள்களும் இடம் பெற்றுள்ளன.  அதில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களும் இடம் பெற்றிருக்கின்றன (இடம் பெற்ற மற்ற நகரங்கள், Rangoon, Singapore, Hon-Kong, Halifax, Quebec, Montreal, Victoria, Capetown, Melbourne, Sydney, Brisbane, Hobart, and Auckland).  அவற்றில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களின் கவிதைப் பகுதிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

    The song of the Cities
    (by Rudyard Kipling, 1896)

    Bombay
    Royal and Dower-royal, I the Queen
    Fronting thy richest sea with richer hands —
    A thousand mills roar through me where I
    glean
    All races from all lands.

    Calcutta
    Me the Sea-captain loved, the River built,
    Wealth sought and Kings adventured life to hold.
    Hail, England!  I am Asia-Power on silt,
    Death in my hands, but Gold!

    Madras
    Clive kissed me on the mouth and eyes and brow,
    Wonderful kisses, so that I became
    Crowned above Queens –a withered beldame now,
    Brooding on ancient fame.

    (* beldame என்றால் பாட்டி , முதியவள், கிழவி என்று பொருள்)

    இராபர்ட் கிளைவ் கொடுத்த அருமையான  அன்பு முத்தங்களினால் முடிசூடிய இங்கிலாந்து அரசியைவிடவும் உயர்ந்த புகழுடன் இருந்த சென்னை நகரம் பிறகு பழம்பெருமையை எண்ணி வாடிய கிழவியாக  இருப்பதாக சென்னை தன்னைப்பற்றிக்  கூறுவது போல அக்கவிதைவரிகள் எழுதப்பட்ட ஆண்டு 1896, அதாவது  118 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையின் நிலை கிழவியாக இவரால் கருதப்பட்டிருக்கிறது.

    Chennai Mount Road in - 1896Chennai Chepauk Cricket-1891Chennai HARBOUR-1891Chennai high courts -1895Chennai Marina beach-1890Chennai Moubray Road-1885Chennai Napier Bridge-1895Chennai Parrys Corner-1890

     

     

     

     

     

     

     

    படங்கள் உதவிக்கு நன்றி:
    https://groups.yahoo.com/neo/groups/sagakkal/conversations/topics/979

     

     

    இக்கட்டுரையின் “ருட்யார்ட் கிப்லிங்” பகுதி வேறு ஒரு கட்டுரையாக முன்னர் வெளிவந்தது.

    Share
  • எங்கே சிட்டுக்குருவி?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (29)

    எங்கே சிட்டுக்குருவி?

    {கேட்டு மகிழ}

     

    10317549_739794126082611_4567379894746634661_o
    சிட்டுக்குருவி சிறகடித்துப் பறந்துவிட்டதா? என்
    சின்னச்சின்ன முத்தங்களை மறந்துவிட்டதா?
    கட்டிக்கொள்ளும் போதுகொஞ்சம் கசந்துவிட்டதா? ஒரு
    கணப்பொழுதில் என்காதல் கரைந்துவிட்டதா?

    இப்படியென் பாதையென்றும் வளைந்ததில்லையே! என்
    இதயத்தை இப்படிநான் இழந்ததில்லையே!
    தப்புசரி என்றுமாறும் வாதங்களெல்லாம், அவள்
    தரிசனத்தின் ஒளியினிலே தகர்ந்துபோனதே!

    வெந்துமனம் ஒன்றிங்கே விம்முகின்றது, அதன்
    வேதனைகள் மெளனத்திலே பம்முகின்றது
    அந்தமனம் எந்நிலைமை அறிந்துகொள்ளுமா? என்னில்
    அவளன்றி யாருமில்லை புரிந்துகொள்ளுமா?

    மண்ணில்வீழும் நேரம் வாழ்வில் மாலை நேரமா? அது
    மண்ணில் வீழும்போது பாவம் மலரலாகுமா?
    கண்ணின் சின்னத் திரைக்குப்பின்னே கடல்கள் குமுறுதே! என்னைக்
    கட்டிக்கொண்ட தேவதையைத் தேடிப் பதறுதே!

    விட்டுவிட்டுப் போவதுனக்கு வாடிக்கைதானா? என்னை
    வீழவைத்துப் பார்ப்பதுமோர் வேடிக்கைதானா?
    தொட்டுச்சொன்ன சத்தியங்கள் மறந்துபோனதா? இதழைத்
    தொட்டுத் தொட்டுச் சொன்னதெல்லாம் பறந்துபோனதா?

    கொஞ்சமேனும் மனமிருந்தால் ஓடிவந்திடு! மொத்தம்
    கொள்ளைபோன நிம்மதியைக் கொண்டு தந்திடு!
    கொஞ்சம்கூட இடைவெளியே மிஞ்சிடாமலே, என்னைக்
    கொஞ்சிக்கொஞ்சி உந்தன்நெஞ்சில் கூட்டிவைத்திடு…

    படத்திற்கு நன்றி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    “பாரதக் குட்டு பரந்தாமன் சக்கிரத்,
    தேரதின் சுற்றலைத் திட்டமிட , -வாரணக்,
    COPYISTடும், வேதக் கதைவசன கர்த்தாவும்,
    HAPPYயாய்WAI TINGFOR ஹரி”….கிரேசி மோகன்….

    crazy

    பாரதக் குட்டு -Writers Block ….

    Exactly! Writers and thinkers block. It is the space gained by vyasa to write his next verse.
    (Vinayaka has a condition that Vyasa should not stop dictating his verses, and Vyasa poses a counter condition that vinayaka should understand the work before writing it. So, vyasa composed complicated verses to gain time )
    This is one such occasion. 🙂
    Mind blowing verses in a short time. Spring of imagination flows.
    Thanks and regards,

    Keshav

     

    Krishna holds the chakra in his hand, also the symbol of the Mahabharatha.

     

    Share
  • வளையும் பாதை

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (28)

     

    வளையும் பாதை

    {கேட்டு மகிழ}

    10270279_276364999201423_1998995586313210948_n
    இது மனமா?
    இல்லை வானமா?
    இல்லை வானமே ஒற்றை மேகமாக மாறிவிட்டாதா?

    வீதியில் நான் நடக்கும்போதும், என்
    விரலை ஒரு 
    பிஞ்சு மேகம்தான் 
    பிடித்துக்கொண்டு நடக்கிறது

    புழுதியில்லை..காற்றின் அலட்டலில்லை
    ஒரு
    பொற்சிலைச் சிவனின் புன்னகை போலப்
    பொடித்தூறல்..
    தெரிந்தும் தெரியாமல்..இடைவிடாமல்
    விட்டுவிட்டு விழுகின்ற திவலைகளால்
    தெளிவுக்குத் திரையே விளக்கமாகும் விசித்திரம்!

    சாலையிலே ஈரமிருக்கிறது
    நேற்றிரவில் கன்னத்தை நீ
    கவ்வி இட்ட முத்தத்தின் நினைவு போல

    தற்செயலாய் வந்ததுபோல் பாவனை காட்டித்
    தானே அதில்வந்து வீழ்ந்தமலர்போல்
    உன்முகம் அதிலும் வந்து என்னை
    உற்றுப் பார்ப்பது எதற்கோ!

    கள்ளக் காதலர்கள்போல்
    வெளிச்சமும் இருளும் தழுவிக் கிடக்கும் இந்த
    வேளைக்கு என்ன பெயர் வைப்பது?
    காலையின் வெண்மையும் இல்லை
    மாலையின் செம்மையும் இல்லை
    இரவின் தனிமை மட்டும்
    இருப்பதுபோல் தொடர்கிறது, ஓர்
    இடைஞ்சலற்ற நிசப்தம்

    இருப்பது எங்கே
    நடப்பது எதை நோக்கி
    எதுவும் தெரியாமல்தான், அதோ
    வளையும் பாதையில்
    வளைகிறது வாழ்க்கை

    வளைவுதான், வெற்று இருப்பில்
    வனப்பைக் கொண்டுவந்து சேர்த்து
    வசீகரிக்கிறது

    என்ன இருக்கும் அந்த வளைவில்?

    பாசை படிந்த பாறையின் ஓரம், தன்
    பட்டுக் கண்களால், ஒரு
    நீலமலர் கண்சிமிட்டி
    நெஞ்சு லேசாகிப் போகுமோ?

    சட்டையைக் கழற்றிவிட்டுச்
    சகியுடன் புணர்வதற்காகப்
    பளபளவென்று சாலையைக் கடக்குமோ
    படமொடுங்கிய பாம்பு?

    அவசரம் மிக அவசரமென்று
    பரவசமாகக் குறுக்கே
    பறக்குமோ ஒரு சிட்டுக்குருவி?

    எது விலகிச்சென்றதென்று
    என்னை அறியவிடாமல்
    புதர்கள் சிரித்துக்கொள்ளுமோ?

    ஆயிரம் வசந்த காலங்களை
    அள்ளிப் பூங்கொத்தாக்கி
    அதரம் குவித்து
    அவற்றை முகர்ந்து மகிழ்ந்தபடி

    இதயத்தை மீட்பின்றி
    இன்னும் இன்னும் 
    கண்களால் கவர்ந்தபடிக்
    காத்திருப்பாயா நீ!

     

    படத்திற்கு நன்றி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    டியர் கேசவ் , வியாழக் கிழமை ஸ்ரீ ராகவேந்திரர் திருவல்லிக் கேணி கோயிலுக்குச் செல்வது வழக்கம்…. அதிகாலையிலிருந்து ராகவேந்திரர் மீது வெண்பா யோசித்துக் கொண்டிருந்தேன்….முதல் இரண்டு வரிகள் வந்தும் முற்றுப் பெறாமல் தவித்த போது அடுத்த இரண்டு வரிகளை உங்கள் ஓவியம் தந்தது….மூலராமன் கோல கண்ணனாய் வந்தான் ….இன்றைய இந்த ஆச்சரியம் போதும் ….நன்றி கேசவ்….

    crazy

    “ஆகவேண்டி செய்ததெல்லாம் ஆச்சு ,அலைகின்ற,
    தேகவாஞ்சை போச்சு ,திடமனதை, -ராகவேந்த்ரா,
    கற்பகம் ,காமதேனு ,கண்ணன் வியாழனில்
    அற்புதச் சேர்க்கை அளிப்பு”….கிரேசி மோகன் ….

    “மாமதனம் செய்கையில் ,மந்திர மேருதாங்க,
    ஆமைதன் ரூபமுற்ற அச்சுதா, -காமதேனு,
    கற்பகக் கண்ணனுன்போல் கேசவ் வரைந்தது,
    சொற்பதத்துள் சிக்காத சித்து”….கிரேசி மோகன்….

    மாமதனம் -மிகப் பெரிய கடைதல்….

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(120)

    — சக்தி சக்திதாசன்.

    U.S. Journalist James Foley Beheaded by Islamic State Militants in Iraq
    U.S. Journalist James Foley Beheaded by Islamic State Militants in Iraq

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    நாடுகளுக்கிடையேயுள்ள தூரம் குறைந்து, ஒரு நாட்டின் கலாச்சாரத்தை மற்றைய நாட்டினர் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு காலகட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஒருநாட்டின் பொருளாதாரம் மற்றொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முன் எப்போதுமில்லாதவாறு இப்போது தங்கியுள்ள ஒரு காலமிது.

    இனங்களுக்கிடையேயான கலாச்சார மேம்பாட்டை நன்கு புரிந்து கொண்டு மனிதநேயத்தோடு மற்றவர்களை அனுசரித்து நடக்கும் வகைக்கு ஏற்ற ஒருசூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஆனால் உண்மையில் இத்தகைய ஒரு பொன்னான காலத்தில் இன்றைய உலகம் எந்த ஓர் இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது ?

    எமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதமான இயற்கைப் பரிணாமத்தை ரசிக்காமல் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். ?

    ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக இலட்சிய நோக்கை நோக்கி முழு பிரயத்தனத்துடன் முன்னேற முயற்சிப்பது தவறாகாது.

    தமது தலைமுறையை விடத் தமது சந்ததியினர் வாழ்வில் மிகவும் பல செளகரியங்களுடன் வாழ வேண்டுமென்பதற்காக அயராது உழைப்பதும்தவறாகாது.

    ஆனால் இன்றைய உலகிலோ மதத்தின் பெயரால், இனங்களின் பெயரால், மொழியின் பெயரால் அனாவசியமான போர்கள் தொடுக்கப்பட்டு இலட்சக்கணக்கான மனித உயிர்கள் வீண் வீம்புக்காக பலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    மதமோ அன்றி, புரிந்துணர்வு கொண்ட பெரியோர்களோ என்றுமே தம்முடைய நம்பிக்கைக்காக மற்றைய உயிர்களைப் பறிப்பதைப் போதிக்கவுமில்லைஅன்றி ஏற்றுக் கொள்ளவுமில்லை.

    ஆனால் மதத்தின் பால் அன்பு கொண்டவர்கள் என்று கூறுவோர்களின் வெறித்தனமான நடவடிக்கைகள் இன்றைய நூற்றாண்டு மனித நாகரீகத்தையே எள்ளி நகையாடுகிறது.

    நான் சமீபத்தில் எனது காரில் வேலைத்தளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில் வானொலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றைச்செவிமடுத்தேன். சமீபத்தில் ஈராக்கில் கோரமாகக் கழுத்து வெட்டப்பட்டு மரணமெய்திய அமெரிக்க  ஊடகவியலாளரின் மரணத்தைப் பற்றிய கருத்தாடல் நடந்து கொண்டிருந்தது.

    அப்போது வானொலியில் அக்கருத்தாடலில் பங்கு பற்றிய நேயர் ஒருவர் , இப்படியான போர்ச்சூழலுக்குள் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியளாளருக்குத் தாம் ஈடுபடும் செயலின் பயங்கரம் புரிந்திருக்க வேண்டும். பின் எதற்காக நாம் அவருக்காகப் பரிதாபப் பட வேண்டும் எனும்வகையில் கருத்துத் தெரிவித்தார்.

    அவர் கூற்றில் இருக்கும் ஓரளவு உண்மையையும், தனது கருத்தைச் சொல்லும் உரிமை அவருக்கு இருப்பதையும் ஏற்றுக் கொண்டாலும் எனக்குஅக்கருத்து மனதில் ஒருவித சலனத்தை ஏற்படுத்தியது.

    இன்றைய நவீன தொலைக்காட்சி மயமான வாழ்க்கைச் சூழலில் நாம் எமது இல்லங்களில் இருந்து கொண்டே 24 மணிநேர செய்தியறிக்கைகளின் மூலம் பல மைல் தொலைவிலுள்ள நாடுகளில் நடக்கும் பயங்கரமான யுத்தங்களைப் பார்த்துப் பரிதாப்படுகிறோம், அன்றி விமர்சனம் செய்கிறோம்.

    இத்தகைய காட்சிகளை எம் கண்முன்னால் கொண்டு வந்து கொடுப்பவர்கள் யார்? அத்தகைய பயங்கரப் போர்முனைகளில் தமது உயிரைப் பணயம் வைத்துப் படம் பிடிக்கும் படப்பிடிப்பாளர்களும் அதற்கு  முறையான விமர்சனங்கள் கொடுத்து அவற்றை உயிர்ப்பிக்கும் ஊடவியலாளர்களும் தானே !

    தமது உயிர்களுக்குப் பயந்து நாம் வாழும் நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அங்கு செல்லாதிருந்தால் யார் எமக்கு நாம் வாழும் நாட்டின் கோணத்தில் அங்கு நடப்பவைகளை உண்மையுடன் எடுத்துச் சொல்லுவது ?

    ஒரு நாட்டின் போர்முனையில் அப்போர் தாம் வேண்டாத மக்கள் தம்மீது திணிக்கபடுவதையும், அம் மக்கள் படும் அவஸ்தையை உலகின் கவனத்திற்கு, சர்வதேச நாடுகளின் மட்டத்தில் கொண்டுவரும் அளப்பரிய பணிகளைச் செய்து வருகிறார்கள் இவ்வூடகவியலாளர்கள்.

    வெளிநாடுகளில் நடக்கும் செய்திகள் உண்மை வடிவத்தில் எமக்குக் கொண்டு வரப்பட வேண்டும் !

    அதை நாம் இருந்த இடத்தை விட்டு அசையாமல் ரசிக்க வேண்டும் !

    ஆனால் அவ்வூடவியலாளர்கள் அகோரமான முறையில் அக்கிரமக்காரர்களின் கையால் கொலைசெய்யப்படும் போது மட்டும் அது அவ்வூடகவியளாளரின் பொறுப்பு என்று இலகுவாகக் கூறி விட வேண்டும் !

    இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவிக்கு நன்றி: http://www.people.com/article/james-foley-american-journalist-beheaded

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 18

    –சு.கோதண்டராமன்.

    உஷஸ் – வைகறைப் பொழுது

     

    உஷா
    பொழுது புலர்கிறது. இரவு மெல்ல விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சூரியன் உதிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே கீழ்வானில் வெளிச்சம் பரவி விட்டது. மானிடர் மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் உறங்கி எழுந்து விட்டன. நேற்றைய உடல் வலிகள், மன வேதனைகள் யாவும் மறைந்து உடலிலும் உள்ளத்திலும் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. எல்லோரும் புதிய நாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

    இது போன்ற எத்தனையோ வைகறைகளை நாம் கடந்து வந்துள்ளோம். இனி நம் வாழ்நாளில் எத்தனையோ காணப்போகிறோம். சர்வ சாதாரணமான தினசரி நிகழ்ச்சி, ஆனாலும் வேத ரிஷிகள் ஒவ்வொரு விடியலையும் புதிதாகக் காண்கிறார்கள். அவர்களது உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை கவிதையாக்கித் தருகிறார்கள்.

    வைகறைப் பொழுதின் அழகை வர்ணிக்கும் மந்திரங்கள் பல உள்ளன. உதாரணத்துக்கு ஒன்று மட்டும் பார்ப்போம். கீழே வருவது ரிக் வேதம் முதல் மண்டலம் 113வது சூக்தம். குத்ஸ ஆங்கிரஸர் என்பவர் யாத்தது.

    வைகறைப் பொழுது ஆனந்தம் தருவது. அந்த ஆனந்தமே செல்வமாகக் கருதப்பட்டு ‘ரயி’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. நாம் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும் இந்த செல்வம் கிடைப்பதால் இது நிரந்தர ரயி எனப்படுகிறது.

    இது அழகானதும் கூட. அழகானவற்றை எல்லாம் பெண்ணாகவும், ஆற்றலோடு கூடியவற்றை எல்லாம் ஆணாகவும் உருவகிப்பது வேத ரிஷிகள் துவக்கிய கவிதை மரபு. இதோ இந்த விடியல் நேரம், உஷை (உஷா, உஷஸ்) என்னும் பெண்ணாகக் காட்டப்படுகிறது.

    இன்னும் இரு பெண்கள் உள்ளனர். இரவு ஒரு பெண், பகல் ஒரு பெண். இருவர்க்கும் என்ன உறவு? சோதரிகளாகத் தான் இருக்க வேண்டும். இரவு கறுப்பாகவும், பகல் வெள்ளையாகவும் இருக்கின்றன. ஆனால் அச் சோதரிகள் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. ஒரே பாதையில் ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு கணமும் தடைபட்டு நிற்காமல், அவர்களது இந்தப் பயணம் தொடர்கிறது. பகல் முழுமையாகத் தோன்றிவிட்டால் அதில் ஒரு உக்கிரம் காணப்படுகிறது. அதற்கு  முன் வரும் வைகறைப் பொழுதோ உக்கிரம் இல்லாத, அமைதியான, ஆனந்தமான, இனிய சூழலை ஏற்படுத்துகிறது. இந்த வைகறை பிறக்க ஒரு பிரசவ அறை அமைத்து விட்டு இரவு என்னும் நங்கை தன் இல்லம் நோக்கித் திரும்புவதாகக் கவிஞரின் கற்பனை விரிகிறது.

    இப்படி நாள் தவறாமல் இரவும் பகலும் மாறி மாறி வருவது எப்படி? கவிஞர் வியக்கிறார். ஒரு ருதம் (இயற்கை நியதி) உள்ளது, அதில்  தோன்றியவை தான் இவை யாவும், அந்த இயற்கை நியதிக்குக் கட்டுப்பட்டுத் தான் இவை அனைத்தும் செயல் புரிகின்றன என்பதை உணர்கிறார். வேதக் கவிதைகளில் எங்கும் இழையோடும் மையக் கருத்தே இது. வைகறைப் போதில் ஒவ்வொரு உயிரும் விழிப்புப் பெறுகிறது. இறந்தோர் மட்டுமே விழிப்பதில்லை. அவரவர் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுகின்றனர். அரசனாக இருந்தால் செங்கோல் ஓச்சுவது தொடர்பான கடமைகள் அவனுக்காகக் காத்திருக்கின்றன. பொருள் தேடப் புறப்படுவோர் சிலர். புகழ் நாடிச் செயல் புரியத் தொடங்குவோர் சிலர். தேவ பூசனைக்கு ஆயத்தமாவோர் சிலர். பொழுது புலரவில்லையெனில் தேவர்க்கு உணவளிப்பார் எவரும் இரார் என்கிறார் கவிஞர்.

    பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை அதிதி என்னும் பெண்ணாக உருவகிக்கப்படுவது வேத மரபு. தேவர்கள் யாவரும் அதிதியின் மக்களாகக் கருதப்படுகின்றனர். மக்கள் தேவ பூசை செய்யவும், தேவர்களுக்கு உணவளிக்கவும் வழி செய்வதால் உஷை தேவர்களின் தாயாகவும் அதிதியின் வடிவினளாகவும் கருதப்படுகிறாள்.

    எத்தனை காலமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என வியக்கிறார் கவிஞர். நம்முடைய எண்ணற்ற முன்னோர்கள் எத்தனையோ விடியல்களைப் பார்த்து விட்டு மறைந்து விட்டனர். இன்று நாம் பார்த்து மகிழ்கிறோம். இனி எத்தனையோ எண்ண முடியாத வைகறைகள் வரப்போகின்றன. நம் சந்ததியர் அதைக் கண்டு களிப்பர். இதன் துவக்கத்தையோ முடிவையோ யார் அறிவார்?

    ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் போது நம் வாழ்நாளில் ஒரு நாள் குறைந்து வருகிறது அதனால் உஷஸ் மக்கள் ஆயுளைத் தேய்க்கிறாள் என்கிறார் ரிஷி. இந்த மாபெரும் காலப் பெரு வெள்ளத்தில் தான் ஒரு சின்னஞ்சிறு திவலை என்பதை உணர்ந்து அடக்கம் கொள்கிறார் அவர்.

    இனி மேற் சொன்ன வேதக் கவிதையின் தமிழாக்கத்தைப் பார்ப்போம்:

    1    வந்தது வந்தது பேரொளி இன்று,
    வானகமெங்கும் பரவியே நின்று.
    ஆதவன் தோன்ற வழி விடும் இருட்டு
    அங்கு உஷை பிறக்க அமைத்ததோர் அரங்கு.

    2    வெள்ளைக் குழவியாய் வைகறை மலர்ந்தாள்
    இருளின் கருமையோ இல்லம் விரைந்தது.
    இரவென ஒருத்தி பகலென ஒருத்தி
    அமரத் தன்மை அடைந்த மகளிர்
    ஒன்று போல் இருப்பர், நிறம் தான் வேறு
    ஒருவரை ஒருவர் தொடர்ந்து சென்று
    விண்ணில் நடக்கும் விந்தை காணீர்

    3    மூலப் பரம்பொருள் ஏவியபடியே
    முடிவிலாப் பாதையில் முனைந்து செல்வர்
    இரு சோதரிக்கும் இருப்பது ஒரு வழி
    மாறி மாறியே பயணம் செய்வர்.
    நிறம் தான் வேறு, மனமோ ஒன்று.
    அழகியர் இருவரும் ஒருவரை ஒருவர்
    தடுப்பதும் இல்லை, நிற்பதும் இல்லை.

    4    உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை
    இனிய சொற்களின் எழில்மிகு தலைவி
    பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,
    கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.
    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

    5    சுருண்டு கிடந்து துயின்றிருந் தோரை
    பூசனை புரியவும் பொருளினைத் தேடவும்
    இன்ன நலன்களை இனிதே நாடவும்
    தூண்டி நிற்பாள் திருவளர் செல்வி
    விழியிலார்க்கு விழிகள் அருளி
    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

    6    கோலினை ஓச்சக் கிளம்பிடும் ஒருவன்
    புகழினைச் சேர்க்க புறப்படும் ஒருவன்
    இலாபம் ஈட்டவே இயங்கிடும் ஒருவன்
    கடமையைச் செய்யக் கடுகிடும் ஒருவன்
    வேலைகள் பலவாம் விரைதல் ஒன்று
    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

    7    விண்ணின் குழவியே, வெளிச்சம் என்னும்
    நல்லுடை உடுத்த நளின மங்கையே,
    புவியின் செல்வம் ஆளும் ராணியே,
    மங்கலச் செல்வி, இன்று எம்மீது
    உந்தன் ஒளியினை உவந்து பாய்ச்சுக.

    8    கடந்து சென்ற கணக்கிலா விடியல்
    அடிச்சுவ டொற்றிச் செல்கிறாய் நீயும்
    இனி வர விருக்கும் எண்ணிலா விடியல்
    யாவற் றிற்கும் நீ வழி காட்டி.
    உதித்ததும் எழுப்பினை உயிரினம் யாவையும்.
    இறந்தோர் தம்மை எழுப்ப வலாயோ?

    9    உஷையே, உன்னைக் கண்டதும் மக்கள்
    தீயினை மூட்டித் தொடங்குவர் வேள்வியை.
    சூரியக் கண்ணால் சுடரினைப் பரப்பினை.
    தேவ பூசனை செய்யும் உந்துதல்
    உன்னால் அன்றோ, உஷையே, நடைபெறும்!

    10    எத்தனை காலமாய் எம்முடன் உள்ளாய்?
    இன்னும் எத்தனை காலம் இருப்பாய்?
    கடந்து சென்ற நாட்களின் வழியில்
    நடந்து வந்து நாளும் ஒளிர்வாய்.
    இனிவரும் விடியலை இனிதே அழைப்பாய்

    11    எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்
    எண்ணிலா விடியல் கண்டு களித்து
    எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.
    உஷையின் ஒளி கண்டு உள்ளம் மகிழ்ந்திட
    இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.
    புதிய மக்கள் நாளை வருவர்
    விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.

    12    நியதியில் தோன்றினை, நியதியைக் காத்தனை
    நெடிய பகையினை நீளத் துரத்தினை
    மகிழ்வு அளித்தனை மங்கலச் செல்வி
    இனிய ஒலிகள் எழும்பச் செய்தனை
    தேவர்க்குணவை தினமும் கொணர்ந்தனை
    இன்றுனது ஒளியை எம்மிடம் வீசு

    13    தேவி உனது திருநிறை ஒளியை
    பன்னெடுங்காலமாய்ப் பாய்ச்சி வந்துளாய்.
    இன்றுனது ஒளியை எமக்கு அளிக்கின்றாய்
    மூப்பும் இறப்பும் கடந்தவளாதலால்
    இனி வரும் நாளிலும் இனிதே ஒளிர்வாய்

    14    விண்ணின் விளிம்பில் ஒளியுடன் வந்தாள்
    கருமையாம் போர்வையைக் கழற்றி எறிந்தாள்
    செந்நிறப் புரவியும் சிறந்ததோர் தேரும்
    கொண்டு அவள் விரைகிறாள் உலகினை எழுப்ப.

    15    உயிரினை ஊட்டும் பொருள்களை எல்லாம்
    உடமையாய்க் கொண்ட உஷையெனும் நங்கை
    வியப்புறு ஒளியால் விழிப்பினைத் தந்தாள்
    கடந்து சென்ற விடியல் களிலே
    கடைசியாய் வந்தது இன்றைய வைகறை
    இனிவர விருக்கும் விடிவு களுக்கு
    முதலாய் அமைந்ததும் இதுவே ஆகும்

    16    உயிர்த்து எழுந்தோம், ஒளியே எங்கணும்,
    விரைந்து மறைந்தது எங்கோ இருட்கணம்.
    பகலவன் நடக்கவோர் பாதை அமைத்தாள்
    இன்று எமது ஆயுளில் குறைந்தது ஒரு நாள்

    17    ஒளிமிகு உஷையை உளத்திலே துதித்து
    உயர்ந்த சொற்களால் பாக்கள் இயற்றிப்
    போற்றும் புலவர்க் கருளுக உஷையே
    குழந்தைப் பேறும் குன்றா ஆயுளும்.

    18    சோமம் பிழிந்து செஞ்சொல் கலந்து
    காற்றினில் கனிவாய்க் கலந்திடும் புலவரை
    வீரப் புதல்வர், விரையும் குதிரைகள்
    பசுக்கள் பலவுடன் தந்து காத்திடுக.

    19    தேவர் தாயே, அதிதியின் வடிவே
    வேள்விக் கொடியே ஓங்குக, ஒளிர்க!
    யாவரும் போற்றும் இனிய நங்காய்,
    உன்னைத் துதிக்கும் அடியார் தம்மை
    உலகில் உயர்ந்து ஓங்கிடச் செய்வாய்.

    20    உஷையைப் போற்றும் புலவோர் தமக்கு
    உவந்து அவள் அளிக்கும் உயரிய செல்வம்
    மிதிரன் வருணனும் அதிதி சிந்துவும்
    விண்ணும் மண்ணும் ஆமெனக் கூறுக.

    படம் உதவிக்கு நன்றி:   http://www.harekrsna.de/usha2.htm

    Share
  • ஒரு செய்தி!

    -எம்.ஜெயராம சர்மா – மெல்பேண்

    கண்ணன் வீடு ஒரே தடபுடலாக இருந்ததது. எல்லோருக்கும் சந்தோஷம் என்றால் சொல்லவே முடியாதபடி இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் தரையிலே கால்படாதபடி பறந்துதான் திரிந்தனர் எனும் அளவுக்கு அவர்களின் அந்த ஆனந்தமும் அவசரமும் காணப்பட்டது.

    கண்ணனின் தங்கை கலாவுக்கு வயது ஏறிக்கொண்டே வந்தது. ஆனால்   எந்தக் கல்யாணங்களும் சரிவராமல் போய்க்கொண்டே வந்தது. வடிவான பிள்ளை ஆனால் கால்தான் சற்று ஊனமாக இருந்தது. பல்கலைக்கழகத்தில்   பட்டம் பெற்றிருந்தாள். அதுமட்டுமல்ல கொம்யூட்டரிலும் சரியான கெட்டிக்காரி. ஆங்கிலம் எழுதினால் அது அத்தனை சுவையாக இருக்கும். ஆங்கிலத்தில் கவிதைகள் கூட எழுதுவாள். பல பத்திரிகைகளில் அவளது ஆக்கங்கள் வெளி வந்து பல பரிசுகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. நல்லாப் பேசுவாள்.         நல்லாய்ப் பாடுவாள்.

    ஆங்கில ஆசிரியையாக அவளுக்கு நியமனம் கிடைத்ததும் அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால் அவளுக்கு மனதில் மகிழ்ச்சியில்லை. பள்ளிக்கூடத்தில்   தன்னை நொண்டி என்று மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள் என்று மனதுக்குள் எண்ணியதால் மகிழ்ச்சி அவளிடம் வரமறுத்தது. ஆனாலும் தனது திறமையில் தன்னம்பிக்கை கொண்டகாரணத்தால் வேலைக்குப்போக ஒத்துக்கொண்டாள்.

    அவளின் விடாத உழைப்பால் பாடசாலையில் அவளுக்கு நல்ல மதிப்பு   தானாகவே வந்துசேர்ந்தது. வயதுமுப்பது ஆனாலும் வடிவு மட்டும் குறையவி       ல்லை. நல்ல மாநிறம். எடுப்பான மூக்கு. அகன்ற பெரிய கண்கள். பார்த்தால் இன்னொருதரம் பார்க்கத்தூண்டும் வசீகரம். கால்மட்டும்தான்குறை. அதை காலளவு குறை என்றுதான் கொள்ளவேண்டும்.

    உப அதிபர் மனோகரனுக்கு ஐம்பது வயது. அந்த மனிசனும் படி படி எனப் படித்து பல பட்டங்களைத் தனது பெயரோடு சேர்த்தாரே ஒழிய காதல் கல்யாணம் என்றால் அந்தப்பக்கம் மனிசன் தலைவைத்துப் படுத்ததே அறியார்.

    கலாவைப் பார்த்ததும் இவளைத் தனது வாழ்க்கைத்துணை ஆக்கினால்     எப்படி இருக்கும் என்று எண்ணம் ஏற்பட்டது. எண்ணத்தைத் தள்ளிப்போடாமல் உடனடியாகச் செயல்படுத்தவும் ஆயத்தமானார். கலாவின் வீட்டாரிடம் நேரடியாகவே சென்று கேட்டுவிட்டார். அவர்களுக்குச் சொர்க்கமே வந்து காலடியில் விழுந்ததுபோல இருந்தது. கல்யாணம் நடக்காதா என்று ஏங்கி நின்றவர்களுக்கு இந்தச்செய்தி சர்க்கரைப் பந்தலில் தேன்மாரியாக இருந்தது.

    கலாவுக்கும் மனோகரனுக்கும் கல்யாண ஏற்பாடுகளால்தான் கண்ணன் வீடு கலகலப்பில் மிதந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் சிவன் கோவில் மண்டபத்தில்தான் கல்யாணம். மாப்பிள்ளை வீடு கொக்குவில். பெண்வீடு மானிப்பாய். மணமகள் வந்து சேர்ந்துவிட்டாள் கல்யாண மண்டபத்துக்கு. மாப்பிள்ளை வீட்டாரை யாவரும் பார்த்தபடி நிற்கின்றனர். அவர்களோ வந்தபாடில்லை. கல்யாணமண்டபத்திலோ ஒரே படபடப்பு.

    அப்பொழுது வேகமாக மாப்பிள்ளையின் மச்சான் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துசேர்ந்தான் எல்லாரும் அவனைப்பார்த்து ”என்ன? என்ன?”  என்று கேட்டபடி கூடிவிட்டனர். மாப்பிள்ளை வந்த கார் இன்னொரு காரோடு மோதுண்டு மாப்பிள்ளை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில்… என்றதும் கல்யாண மண்டபம் கதிகலங்கிவிட்டது.

    ஆஸ்பத்திரிக்கு எல்லாரும் பறந்தார்கள். மாப்பிள்ளை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். டாக்டர் வந்து சொன்னார் மனோகரனுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் அவரின் குரூப் இரத்தம் இங்கில்லை. ஆராவது இருந்தால் கூட்டி வாருங்கோ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி உனக்குத்தெரியுமா? ஆரும் இருக்கினமா? என்றபடியே இருந்தனர்.

    இப்படி எல்லோரும் திக்குமுக்காடிக்கொண்டு இருக்கின்றபொழுது ஒருவர் அல்ல மூவர் ஓடிவந்து எங்கள் குரூப் இரத்தம் டாக்டர் கேட்டதுதான் எடுங்கோ என்று பதட்டமாகச்சொல்லி நின்றார்கள். கடவுளைக்கண்டதுபோல அவர்களின் வருகை அங்கு இருந்தது.

    இரத்தம் மனோகரனுக்கு ஏற்றப்பட்டது. மனோகரன் நினைவு திரும்பிய     செய்தியைக் கேட்டதும் யாவரும் ”கடவுளே!” என்றனர். அப்பொழுது டாக்டர்   வெளியே வந்து ”கேசவன் என்பவர் யார்?” என்று கேட்டார். அவர்கள் சொன்னார்கள் கலாவின் கடைசித் தம்பியென்று. ”அவன்தான் உங்களின் கடவுள். அவன் மட்டும் இப்படிச்செய்யாது விட்டிருந்தால் நீஙகள் யாருமே சந்தோஷப்பட முடியாமல் போயிருக்கும்” என்றார்.

    ஒருவருக்கும் ஒண்ணுமே விளங்கவில்லை. ”அப்படிக் கேசவன் என்னதான் செய்திருப்பான்?” என்று யாவரும் யோசித்தபடி இருந்தனர். டாக்டர் சொன்னார் ”கேசவன் மட்டும் தனது போன்மூலம்– தெரிந்த எல்லாருக்கும்   எஸ்.எம். எஸ் மூலம் இரத்தம் தேவை!” என்ற செய்தியை உடனே அனுப்பாது மட்டும் இருந்திருந்தால் நிலைமை வேறுமாதிரிப் போயிருக்கும். கேசவனின் சமயோசிதமும் அதற்காக அவன் பயன்படுத்திய விஞ்ஞான அணுகுமுறையுமேதான் மனோகரனை இப்போது காப்பாற்றி இருக்கிறது என்று ஒரு பெரிய விளக்கமே அளித்தார். கேசவன் ஒரு மூலையில் நின்று கொண்டு மீண்டும் போன் மூலம் “அத்தான் பிழைத்துவிட்டார்” என்ற செய்தியை யாவருக்கும் எஸ். எம். எஸ் செய்துகொண்டு இருந்தான்.

    Share
  • மாமருந்துமானார்!

    -எம். ஜெயராமசர்மா- மெல்பேண்

    teresa

    முன்னம் அவருடைய நாமம் கேட்டேன்
    முழுதுமாய் அவர்பணியை மனதில் கொண்டேன்
    பின்னை அவருடை ஆரூர் கேட்டேன்
    பிரமித்தேன் பிரமித்தேன் பிரமித் தேனே!

    அல்பேணியா ஈன்றெடுத்த அன்னை அவராவார்
    அனைவர்க்கும் தொண்டுசெய அவதரித்த அன்னை!
    சொல்லியவர் பணியாற்ற வந்து விடவில்லை
    தூயமனம் கொண்டு அவர் தொண்டாற்றிநின்றார்!

    எள்ளளவும் இரக்கமின்றி எச்சில்  உமிழ்ந்தார்கள்
    இன்முறுவல் கொண்டுமவர் ஏந்தியதைப் பெற்றார்
    கள்ளமிலா உள்ளம் அவர் கொண்டிருந்ததாலே
    காறி உமிழ்ந்தவரே கைநிறையக் கொடுத்தார்!

    தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்ந்தார்
    தனக்குவமை இல்லாமல் தானுவமை ஆனார்
    மனக்குறையைப் போக்குதற்கு மாமருந்துமானார்
    தனித்துநின்று தொண்டுசெயும்  தற்துணிவுபெற்றார்!

    கைகொண்டு மெய்கொண்டு கருணைமழை பொழிந்தார்
    கலியுகத்தில் கண்ணனெனக் கைகொடுத்து நின்றார்
    ஊரிலுள்ள சேரியெலாம் உவப்புடனே சென்று
    யாருமிலை என்பார்க்கு நல்மருந்தும் ஆனார்!

    சாதிமதம் பாராமல் சமத்துவமாய் நின்றார்
    சாதனைகள் செய்தாலும் தலைகனக்கா நின்றார்
    போதிமரம் ஆகிநின்று போதனைகள் செய்தார்
    நாதியற்ற மக்களுடன் நட்புரிமை கொண்டார்!

    வெள்ளுடையில் நீலக்கோடு விரும்பியவர் ஏற்றார்
    அள்ள அள்ளக் குறையாமல் அருந்தொண்டு புரிந்தார்
    உள்ளஎலாம் உவகையொடு உழைத்துமவர் நின்றார்
    உலகிடையே அன்னையாய் என்றுமவர் உள்ளார்!       

    Share
  • காற்று வாங்கப் போனேன்! (36)

    கே. ரவி

    சமூகப் பிரக்ஞை இன்றி எழுதப்படும் கவிதைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றொரு கருத்து நிலவுகிறதே! அதற்கு என் பதில் என்ன?

    சூழலின் தாக்கமின்றி எந்தப் படைப்பும் வருவதில்லை. ஆனால், ஒரு கவிஞனின் கவிதைகள் எந்தச் சூழலில் பிறக்க வேண்டும் என்பதை அவனே எப்படி முடிவு செய்ய முடியும்?

    என் உடனடிச் சூழலில் உள்ள சிக்கல்கள் எல்லாம் மனிதனால் தீர்வு காணக் கூடிய பிரச்சினைகளே. அந்தப் பிரச்சினைகள் பற்றி நானும் பலவாறு சிந்தித்து, அவற்றுக்குத் தக்க தீர்வுகளையும் முன்மொழிந்திருக்கிறேன். நான் என்னுடைய தத்துவத் துறை எம்.ஃபில். பட்டத்துக்கான ஆய்வுரைக்கு எடுத்துக் கொண்ட பொருள், “நல்வாழ்வுச் சிந்தனைகள்” (Philosophy of Welfare). அதில் தத்துவம் அதிகமா, பொருளாதாரச் சிந்தனைகள் அதிகமா, சமூகவியல் சிந்தனைகள் அதிகமா என்ற குழப்பமும், தடுமாற்றமும் நேர்முகத் தேர்வுக் குழுவினர்க்கு ஏற்பட்டதில் வியப்பில்லை. அந்தக் குழுவில் மேற்சொன்ன மூன்று துறை வல்லுநர்களும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எப்படியோ நல்ல மதிப்பீடுகள் தந்து என்னைத் தேர்ச்சி பெறச் செய்தனர். அந்த ஆய்வுரையில் நல்வாழ்வுச் சமுதாயம் எப்படி அமைய வேண்டும் என்று ஒரு மாதிரிப் படிமமே, ஆங்கிலத்தில் சொல்வதென்றால், ஒரு ப்ளூ ப்ரிண்டே கொடுத்திருந்தேன். அதில் முக்கியமான, ஆனால், புதுமையான ஒரு பரிந்துரையைச் செய்திருந்தேன். பணத்துக்குக் குறைந்த பட்சம் இரண்டு பரிமாணங்கள் இருக்க வேண்டும் என்பதே அந்தப் பரிந்துரையின் சாரம். ரூபாய், அல்லது டாலர் தாளுக்கு அதன் மதிப்பு, 1, 10, 100 என்று குறிப்பிடப்படுவது போல், அதன் ஆயுளும், அதாவது அது எந்த நாள் வரை செல்லுபடியாகும் என்ற தேதியும் குறிப்பிடப்பட வேண்டும். அந்தத் தேதிக்கு ஒரு வாரம் முன்பிலிருந்து காலாவதியாகப் போகும் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்திப் புதுப்பணம் அதற்கு பதிலாகப் பெற்றுக் கொள்ளலாம். இதனால் எல்லாப் பணமும் வங்கிக் கணக்குக்குள் வந்தே ஆக வேண்டும்; கருப்புப் பணம் அறவே இல்லாமற் போகக்கூடும்.

    என் உரை நடைப் படைப்புகளில் சமூகச் சிந்தனைகளும், சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் விரவியிருந்தும், என் கவிதை மட்டும் சற்றுத் தனித்தே இருந்தது.

    நம் நல்வாழ்வுக்குத் தேவையான தளவாடங்களையும், சூழ்நிலைகளையும் இயற்கையிலிருந்து உருவாக்கிக் கொள்ளும் பொறுப்பு நமதே. அந்தப் பொறுப்பைக் கவிதை எழுதித் தட்டிக் கழிக்க முடியாது. சுதந்திரம் கிடைத்த பிறகு எத்தனை ஆயிரம் கவிதைகள் சமூகக் கொடுமைகள் பற்றிய குமுறல்களைக் கொட்டித் தீர்த்திருக்கின்றன! அவற்றால், அந்தக் கொடுமைகள் ஒழிந்து விட்டனவா? இல்லையே. எதைச் சிந்தித்துச் செயல்படுத்திச் சரிசெய்ய வேண்டுமோ அதை வெறும் புலம்பல்களால் தீர்க்க முடியாது. சிந்திக்க வேண்டிய விஷயங்களில் சிந்தித்துத் தான் ஆகவேண்டும். சிந்தனை ஒதுங்கியிருக்க வேண்டிய கவிதைக் கணங்களில் சிந்திப்பதே இடர்ப்பாடாகிவிடும். இதுவே என் தன்னிலை விளக்கம்.

    பாரதியிடம் ஆழ்ந்த பற்றுக் கொண்ட நான் இப்படிச் சொல்லலாமா? பாரதி வாழ்ந்த காலத்தில், மக்களை உணர்வுப் பூர்வமாகத் தட்டி எழுப்ப வேண்டியிருந்தது. அது அவன் வாழ்ந்த காலத்தின் கட்டாயம். இன்றைய சூழ்நிலையில், நம்மை நாமே ஆண்டுகொள்ளும் சுதந்திரம் பெற்றுவிட்ட பிறகும், சிந்தித்துத் திட்டங்கள் தீட்டிச் செயல்படாமல், இன்றும் உணர்ச்சி பொங்கப் பேசிக் கொண்டிருந்தால் பயனில்லை. வெறும் வாய்ச்சொல் வீரர்களாக மக்களின் உணர்ச்சிகளைப் பற்ற வைத்து, அதன்மூலம் ஆட்சியைப் பிடித்துப் பின் நாட்டையே ஊழற் காடாக்கிவிட்ட அரசியல் வாதிகளே இதற்குச் சான்று. இதற்கு மேலும் இதுபற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

    சில சமயங்களில் நானே இந்தக் கேள்வியை மனத்துக்குள் எழுப்பியிருக்கிறேன். நம் எழுத்து என்ன சாதிக்கப் போகிறது?

    அப்படியொரு நாள், 2000-ஆம் ஆண்டு, என் அலுவலக அறையில் தனியாக, நெஞ்சு நிறைய கேள்விகளுடன் அமர்ந்திருக்கிறேன். மேஜை மேல் இருந்த வெற்றுத் தாள்கள் காற்றில் படபடக்கின்றன. எழுதுகோலை எடுத்து ஏதாவது எழுதலாமா? ஒரு தயக்கம். அப்போது சடாரென்று வந்து கதவைத் தட்டுகிறது, ஒரு கவிதை; மனக்கதவைத்தான்!

    எழுதுகோல் என்னெதிரே ஏளனம் செய்கிறது

    எழுதி எழுதிநீ என்னதான் சாதித்தாய்

    பழுதுகளைச் செப்பனிடப் பாதை அமைத்தாயா

    எழுதுகோல் என்னெதிரே ஏளனம் செய்கிறது

     

    வெற்றுத்தாள் படபடத்து வெடிச்சிரிப்(பு) உதிர்க்கிறது

    மற்றவர்க் காகநீ மனம்திறந்து பேசுகிறாய்

    சற்றேனும் உன்மனத்தைச் சரிபார்த்துக் கொண்டாயா

    வெற்றுத்தாள் படபடத்து வெடிச்சிரிப்(பு) உதிர்க்கிறது

     

    ஏளனத்தை வெடிச்சிரிப்பில் ஏற்றிவைத்(து) ஒருகணத்தில்

    காலத்தை நிறுத்துகிறேன் காகிதமும் பேனாவும்

    ஓலத்தை நிறுத்தியென்முன் ஓருருவாய்க் கலந்துவிடச்

    சூலுடைத்து வருகிறதே சொப்பனமாய் ஒருகவிதை

    மீண்டும், மீண்டும் சொல்கிறேன், கவிதை என் கைவாள் இல்லை; என் கேடயம் இல்லை; என் ஆயுதமோ, கருவியோ, சாதனமோ இல்லை. நானே கவிதையின் கருவி, ஆயுதம், சாதனம். கவிதையே என்னை ஆட்டி வைக்கும் பிச்சி, பேய், பெருந்தெய்வம்!

    யாருக்கும் என் கவிதை பயன்படப் போவதில்லை என்றால் நான் ஏன் கவிதை எழுத வேண்டும்? இந்தக் கேள்விக்கான விடை, ‘பயன்’ என்ற சொல்லின் அர்த்தத்தைப் பொறுத்தது. 1980-ல் இப்படித்தான் ஒரு கவிதை வந்தது:

    ன்கவிதை எந்நாளும் பயன்படாது

    எற்றத்துக்(கு) இன்பத்துக்(கு) இடம்தராது

    மின்னல் போலத் துள்ளியெழும்

    அடுத்த கணமே தடுக்கிவிழும் – ஆனால்

    எண்ண அலைகள் எழுப்பிவிடும்

    ஏகாந்தத்தில் வளையவரும்

    நின்று வரவேற்றால்

    நிச்சயம் உங்கள் தளையவிழும்

     

    நேற்று பெய்த மழைத்துளிகள் – என்

    நெஞ்சக் கதவை இடிப்பதும்

    காற்றில் அசையும் மலர்கள்போல்

    கனவுத் தளிர்கள் துளிர்ப்பதும்

    இன்றிப் பொழுதை என்றைக்கும்

    இருக்க வைக்க நினைப்பதும்

    நினைவுக் குள்ளே நழுவிக் கொண்டே

    நிற்ப தைப்போல் நடிப்பதும் – அட

    இருட்டைத் தேட வெளிச்சம் போடும்

    அறிவீ னம்தான் கவிதைகளா – இதைக்

    கேட்ப தற்கு வாய்திறந் தாலும்

    தாளம் போடும் வார்த்தைகளா

     

    என்கவிதை எந்நாளும் பயன்படாது – அது

    எல்லைகளை ஏற்காத மாயச் சூது

    “நின்று வரவேற்றால் நிச்சயம் உங்கள் தளையவிழும்” என்பதை ஒரு பொருட்டாக எண்ணாதவர்க்கு என் கவிதை எந்நாளும் பயன்படாது.

    அப்படியானால், என் கவிதைகளைப் படித்துவிட்டு யாராவது முக்தி அடைந்திருக்கிறார்களா என்று கேட்டுவிடக் கூடாது.

    கூட்டத்தில் என் கவிதையைக் கேட்பது, ரசிப்பது வேறு; அதையே தனிமையில், மனத்துக்குள் மெல்ல அசைபோட்டு, அசைபோட்டு, அதன் த்வனியாகிய வாகனத்தில் ஏறிக்கொண்டு அது கூட்டிச் செல்லும் உயரத்துக்கோ, ஆழத்துக்கோ துணிச்சலாகப் பயணித்து, அதன் அனுபவக் களத்தில் நின்று வரவேற்றால், கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால், நிச்சயமாகத் தளையவிழும். “ஏகாந்தத்தில் வளையவரும்” என்ற வரி புரிகிறதா? “நின்று வரவேற்றால்” என்ற வரியில் நின்று கொண்டிருக்கும் “நின்று” என்ற சொல்தான் இந்தக் கவிதையையே நிற்க வைக்கும் சொல் என்பதும் புரிகிறதா?

    “வா வா நயினா ஒண்ணா சேந்து வாரவதிக்கே போயிடலாம்”. இப்படித்தான் என் கவிதை உன்னை அழைக்கும் தோழா! வரத் தயாரா? அந்த வாராவதி, யாரும் எளிதில் வாரா பதி. மூட்டை முடிச்சுகள் வேண்டாம். தூக்கியெறி. அணிந்திருக்கும் சட்டையைக் கூடக் கழற்றியெறி. ஏன், உன் உடம்பே உனக்கு பாரமாகப் போகிறது. வள்ளுவக் கிழவனின் எச்சரிக்கைக் குரல் கேட்கிறதா?

    மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்

    உற்றார்க்(கு) உடம்பும் மிகை

    “அதெல்லாம் சரி நயினா. நீ என்னமோ கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்தே, அப்புறம் சடார்னு மாறிட்டேன்னு ஒரு வார்த்தை முன்னே சொன்னியே, அந்தக் கதையைக் கொஞ்சம் எடுத்து வுடுப்பா.”

    சொல்கிறேன். உயர்நிலைப் பள்ளியில் படித்த நாட்களில், கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகத்தான் இருந்தேன். எதையும் தர்க்கம் செய்துதான் ஒப்புக் கொள்வது என்ற தீர்மானத்தோடு நான் இருந்த நாட்கள் அவை. ஹிந்தி வகுப்புகளில், அந்த மொழியின் இலக்கணம் பற்றி நான் கேட்ட கேள்விகளில் திக்குமுக்காடி, எங்கள் ஹிந்தி ஆசிரியர் வகுப்பில் எல்லார் முன்னிலையிலும் எனக்குச் சாபமிட்டார்: “உனக்குத் தர்க்கமே தொழிலாகக் கடவது”. அந்த நல்ல உள்ளத்தின் வாழ்த்துப் பலித்து விட்டது. நீதி மன்றங்களில் தர்க்கம் செய்வதே என் தொழிலாகிவிட்டது.

    டாக்டர் சீனி சுந்தரம்ஒருநாள், ஹிந்தி வகுப்பில் உட்கார்ந்து கொண்டு ஹிந்தி ஆசிரியரை ஓவியமாக வரைந்தான் என் வகுப்புத் தோழன் சீனி. சுந்தரராஜன். அதைப் பார்த்து விட்டு அவர், அப்போது தலைமை ஆசிரியராக இருந்த சகோதரர் ஆன்ஸலம் அவர்களிடம் புகார் செய்ய, அவர் சுந்தரராஜனைத் தம் அலுவலக அறைக்கு வரச்சொன்னார். அடிவிழப் போகிறது என்று பயந்து கொண்டே போன அவனிடம் அவன் வரைந்த ஓவியத்தைப் பாராட்டிச் சாக்லேட் கொடுத்து யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி அவனை அவர் அனுப்பி வைத்தார். அப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் பயின்றதால்தான் நாங்கள் சுதந்திர உணர்வோடு வளர்ந்தோம். வீடு திரும்ப மாலை ஆறு மணிக்கு மேல் ஆனால் சுந்தரராஜன் வீட்டில் அவனுக்கு உதைவிழும். அப்படிக் கட்டுப் பெட்டியாக வளர்க்கப்பட்ட அவன் பிறகு ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது தன் தந்தையையே எதிர்த்து வீட்டை விட்டுச் சென்றதும், பிறகு டாக்டராகி, இப்பொழுது உலக வங்கியின் நிர்வாகத்தில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வருவதும், திருமணம் செய்து கொள்ளாமல் சுதந்திரமாக வாழ்ந்து வருவதும், தான் சேர்த்த பணத்தில் இருந்து தான் பயின்ற சாந்தோம் உயர்நிலைப் பள்ளி, விவேகானந்தா கல்லூரி, ஜிப்மர் ஆகியவற்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து சூரிய ஆற்றல் கருவிகள், அதாவது, சோலார் ப்ளாண்ட், வாங்கித் தன் தாய் தந்தையர் பெயரில் கொடை வழங்கியதையும் நினைத்துப்பிரதர் ஆன்சலம் பார்க்கிறேன். இதையெல்லாம் சாத்தியமாக்கியவர்கள், சுதந்திரமாகவும், கலையுணர்வோடும் எங்களை வளர்த்த ஆசிரியப் பெருமக்களே. தலைமையாசிரியர் ப்ரதர் ஆன்ஸலம், தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன், தமிழாசிரியர் கிருஷ்ணராமானுஜம் பிள்ளை, குப்புசாமி வாத்தியார், ஹிந்திப் பண்டிட் போன்ற நல்லாசிரியப் பெருமக்கள் கிடைத்தது எங்கள் பேறு. பதினோராம் வகுப்பு முடித்து நாங்கள் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் இருந்து விடைபெறும் போது நடந்த நிகழ்ச்சியில் நான் படித்த ஒரு வெண்பாவின் இறுதி வரிகள் நினைவுக்கு வருகின்றன:

    கல்வியெனும் சீரேந்திக் கண்களிலே நீரேந்திச்

    செல்கின்றோம் சேவிக்கின் றோம்.

    (தொடரும்)

    Share
  • துன்பம் நேர்கையில்.. யாழெடுத்து …

    — கவிஞர் காவிரிமைந்தன்.
    thunbamnergaiyil
    இன்பத்தைப் பற்றி எழுதிக்குவித்தாலும் படிப்பவர்கள் நிறைய பேர்!  துன்பத்தைப் பற்றி  எவரெழுதிவைத்தாலும் – அதில் துடிப்பவர்களுக்கு மட்டுமே சொந்தமாகும்! சந்தோஷம் – மகிழ்ச்சி – பங்கேற்க பலர் வருவார்? துயரம் – சிரமம் – எவரிங்கே உடன் நிற்பார்?

    என்றாலும் அத்தகு துயரங்களின்போது உடன்நிற்கும் உறவைத்தான் மனித மனம் நேசிக்கும்!  அன்பை மட்டுமே  சுவாசிக்கும்! ‘பதைக்கும்  நெஞ்சினை அணைக்கும் யாவரும்  அண்ணன்  தம்பிகள் தானடா’ என்பாரே  கண்ணதாசன்!  பளிச்சிடும் உண்மையன்றோ?

    bharathidasanஇதோ இந்தப் பாடல் காயப்பட்ட மனத்திற்கு மருந்து தடவுதல்போல்  மயிலிறகாய்  வருடி விடுகிறது பாருங்கள்!    கவிதை, தமிழ், இனம், உணர்வு  என்று பொங்கிப்  பெருகிய  பாவேந்தர் பாரதிதாசனாரின் பாட்டு வரிகளிவை..  ஓர்  இரவு   திரைப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது!

    சாதாரண வார்த்தைகளால் அளவிட முடியாத ஏதோஒரு உச்சத்தை இந்தக் கூட்டணி  நேர்த்தியாக நெய்தெடுத்திருக்கிறது.  எத்தனை மன அழுத்தத்தில் மூழ்கியிருந்தபோதும்  எந்த சோகம் நெஞ்சில் விழுந்தபோதும்..  அட இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள் சுகம்தெரியும்!  வலி குறையும்!

    அடர்த்தி மிகுந்த சொற்காளல் ஆட்சிநடத்தும்பாவேந்தரை -போற்றுவதும்  புகழுவதும் எதற்காக? தமிழுக்கு அடையாளம் தந்தமைக்காக!  அழகியல், உணர்வியல், உறவியல் இவற்றின் கலவையாய்நெஞ்சத்தில் நேரடியாய் வந்துவிழும்  சுகராகமிது! சோகம் நீக்க வந்த மாமருந்து என்பதைவிட வேறென்னசொல்லமுடியும்?  உங்கள் இதயச் சாளரங்களில்இனிமை சேர்க்கும் இந்தப் பாட்டு .. வாழ்க்கை முழுமைக்கும் அரிய பொக்கிஷமாகவே எனக்குத்தோன்றுகிறது!

    http://www.youtube.com/watch?v=kLV7EQJULdY

    காணொளி: http://www.youtube.com/watch?v=kLV7EQJULdY

    பாடல்: துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
    இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
    திரைப்படம்:பெயர் ஓர் இரவு(1951)
    கதை: அறிஞர் அண்ணா
    இயக்குனர்:  ப. நீலகண்டன்
    நடிகர்கள்: நாகேஸ்வரராவ், லலிதா
    இசை:தண்டபானி தேசிகர் & ஆர் சுதர்சன்
    பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
    இராகம்:தேஷ்
    தாளம்:ஆதி

    ***********************
    துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா?
    துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்
    கின்பம் சேர்க்க மாட்டாயா?

    எப்படி எப்படி? மாட்டாயா?
    ஊம்ம்கூம் …எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?
    – ஓஹோ! – எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம் …

    அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
    அல்லல் நீக்க மாட்டாயா? – கண்ணே அல்லல்

    ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம்
    கண்ணே …கண்ணே, சரிதானா கண்ணே?

    கண்ணே கண்ணேன்னு என் முகத்தை ஏன்
    இல்லை.. இல்லை, பாடு.. கண்ணே சரிதானான்னு கேட்டேன்

    வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
    வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
    வாழ்வின் உணர்வு சேர்க்க – எம்
    வாழ்வின் உணர்வு சேர்க்க – நீ
    அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
    ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
    ஆடிக் காட்ட மாட்டாயா?

    அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
    அறிகிலாத போது – யாம்
    அறிகிலாத போது – தமிழ்
    இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
    இயம்பிக் காட்ட மாட்டாயா? – நீ
    இயம்பிக் காட்ட மாட்டாயா?

    நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
    ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
    ஆடிக் காட்ட மாட்டாயா?

    …..

    புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே
    புலவர் கண்ட நூலின் – தமிழ்ப்
    புலவர் கண்ட நூலின் – நல்
    திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்
    செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்
    செல்வம் ஆக மாட்டாயா?
    (துன்பம்)

    Share
  • ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்

    தேசம் முழுவதும் தன்வந்திரி யாகம்

    Peedam
    இந்தக் கலிகாலத்தில் பல விதமான சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் மக்களுக்கு நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக கவலைதான் காத்திருந்து ஆட்கொள்கிறது. எத்தனைதான் கோயிலுக்குப் போனாலும், நல்லது செய்தாலும் நமக்கு ஏன் இப்படி ஒரு சோதனை என்று வேதனைப்படுபவர்கள் எண்ணிக்கைதான் இன்று அதிகம்.

    புதிது புதிதான நோய்கள், குழந்தைப் பேறு இல்லாமை, தாம்பத்தியத்தில் கருத்து வேற்றுமை, தொழிலில் ஏற்படும் தோல்விகள், சக்திக்கு மீறிய கடன் தொல்லை, அதர்ம கார்யங்களில் ஈடுபடும் மனம் – இப்படித் தனி நபர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் சிரமங்கள்.

    இதுதான் இப்படி என்றால், சமூகத்தின் பின்னணியிலும் எத்தனை எத்தனை சங்கடங்கள்! மழை இல்லை, விளைச்சல் இல்லை, மனித நேயம் இல்லை, மது& மாதுவின் சூழ்ச்சி வலை, லாகிரி வஸ்துக்களின் ராஜ்யம், நீயா நானா என்கிற போட்டி, பொறாமை எண்ணங்கள், இப்படி அன்றாடம் எத்தனை துயரங்கள் துரத்தித் துரத்தி மனிதனை வாட்டுகின்றன!
    ஏன் இவை எல்லாம்?

    001

    பூரணமான பக்தி சிந்தனையோடு, நல்ல எண்ணங்களோடு, மனம் நிறைய சந்தோஷத்தோடு ஒரு மனிதரைப் பார்க்க முடியவில்லையே! ஏன் எல்லோருக்குமே துயரம்?

    நம் சனாதன தர்மத்தில் ஒரு வசதி உண்டு. எந்த தெய்வத்தைக் குறித்து ஆராதிக்கிறோமோ, அந்த தெய்வத்துக்குத் தேவையான வழிபாடுகளைச் செய்யலாம். எனவே, தங்களின் தேவை என்னவோ அதைப் பொறுத்து, கல்வியா… வேலையா… தொழில் முன்னேற்றமா… திருமணமா… குழந்தைப் பேறா… குபேர சம்பத்தா என்று அததற்குத் தேவையான தேவதையை முன்னிறுத்தி ஹோமம் செய்து வழிபடுகிறோம். ஆத்மார்த்தமான எண்ணத்துடன் செய்கின்ற ஹோமங்களுக்கு உரிய பலன் இருந்து வரத்தான் செய்கிறது.

    சரி… மேலே சொன்ன எல்லா பிரச்னைகளுக்கும் அடிப்படை எது?
    நோய்… நோய்… நோய்தான்!

    ஒருவர் நோயில்லாமல் வாழ்ந்தாலே, அவருக்கு எந்த ஒரு குறையும் இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லி விடலாம். இன்று பலரது வாழ்க்கையும் சிக்கலாக இருப்பதற்கு முக்கியமான காரணம், மன அழுத்தம்.
    இந்த மன அழுத்தம் எங்கே கொண்டு போய் விடுகிறது? சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்று நோய், இதய வலி, அல்சர் என்று பட்டியல் நீள்கிறது.

    நமக்கு ஏற்படும் சகல விதமான பிணிகளையும் தீர்த்து, நமக்கு இன்னருள் புரிந்து ஆட்கொள்பவர் கலியுக மாமருத்துவரான ஸ்ரீதன்வந்திரி பகவான் என்றால், அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை. ‘நோயில்லாத வாழ்க்கை’யே இன்றைக்கு மாபெரும் சொத்து. ‘நோயற்று வாழட்டும் உலகு’ என்பதே வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் தாரக மந்திரம்.

    வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் சொல்கிறார்: ‘‘நோய்கள் நம்மைத் தீண்டாமல் இருப்பதற்கு, எத்தனையோ கடவுளர்களை வணங்கினாலும், ஸ்ரீதன்வந்திரி பகவானை வணங்குவதற்கு ஈடாகாது. ‘மாமருத்துவர்’ என்று போற்றப்படுபவர் தன்வந்திரி பகவான்.

    ஒரு சில வருடங்களுக்கு முன் வரை ‘தன்வந்திரி பகவானா? யார் அவர்? எந்தக் கோயில்லயும் நாங்க பார்த்ததே இல்லியே…’ என்று கூறியவர்கள்தான் அதிகம். ஆனால், காலம் செய்த கோலம் இன்று தன்வந்திரி பகவானைத் தேடி எல்லோரும் படை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு சில வருடங்களுக்கு முன் வரை ஒரு குடும்பத்தில் ஏதேனும் பிரச்னை என்றாலோ, வியாதி வெக்கை என்றாலோ ‘கணபதி ஹோமம் பண்ணு, சுதர்சன ஹோமம் பண்ணு’ என்றுதான் ஜோதிடர்களும் பண்டிதர்களும் சொல்வார்கள். தற்போதுதான் தன்வந்திரி பகவானின் முக்கியத்துவத்தை உணர்ந்து பலரும் ஸ்ரீதன்வந்திரி பகவான் வழிபாட்டையும், ஸ்ரீதன்வந்திரி பகவான் யாகத்தையும் பரிந்துரைக்கிறார்கள்.

    மந்திரங்களுக்கு உள்ள சக்தியும் பலமும் அளவிடற்கரியது என்பதில் தீவிர நம்பிக்கை கொண்ட இந்த பீடத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் கைப்பட எழுதிச் சேர்ப்பித்த தன்வந்திரி பகவானின் பல கோடி மந்திரங்களையே இங்கு ஆதார பீடமாக வைத்து, அதன் மேல் இந்த ஸ்ரீதன்வந்திரியை பிரதிஷ்டை செய்துள்ளார்.

    இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தைத் தேடி வந்து ஆனந்தத்துடன் தரிசிக்கிறார்கள். அதோடு இந்த மாபெரும் பீடத்தை ஸ்தாபித்த டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளையும் தரிசித்து அவரது ஆசிகளைப் பெற்றுச் செல்கிறார்கள்.

    ஸ்ரீதன்வந்திரி பகவான் தவிர சுமார் 70-க்கும் மேற்பட்ட சந்நிதிகளை, வேறெங்கும் காண முடியாத விசேஷ சந்நிதிகளை இந்த ஆரோக்ய பீடத்தில் தரிசிக்கலாம். தெய்வங்களும் மகான்களும் (ஷீர்டி பாபா, ஸ்ரீரமணர், மகா பெரியவா, குழந்தையானந்தா ஸ்வாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்ற எண்ணற்ற மகான்களுக்கு இங்கே சந்நிதி உண்டு) நிறைந்த இந்த பீடத்தில் 468 சித்த புருஷர்கள் லிங்க சொரூபத்தில் அருள் பாலித்து வருகின்றனர்.

    வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீதன்வந்திரி பகவான் மூலவரும் உத்ஸவரும் இந்தியா முழுக்க பல்லாயிரக்கணக்கான கி.மீ. தொலைவு பயணித்து அதன் பின் பிரதிஷ்டை ஆனார்கள். இதை மீண்டும் நினைவுபடுத்துவது போல் தற்போது உத்ஸவரான ஸ்ரீதன்வந்திரி பகவான், ஸ்ரீஆரோக்யலக்ஷ்மி தாயார், ஸ்ரீசுதர்சன ஆழ்வார் ஆகிய தெய்வங்கள் பக்தர்களின் இருப்பிடத்திற்கே சென்று ஆசி புரிந்து வருகின்றனர். அங்கு செய்யும் யாகங்கள், பூஜைகள், ப்ரார்த்தனைளை அனுபவித்து வருகின்றார்.

    இந்த யாகங்களின்போது பிரபல ஆன்மிக எழுத்தாளரும் உபன்யாசகருமான ‘ஜீ தமிழ் டி.வி. தெய்வத்தின் குரல் புகழ்’ திரு. பி. சுவாமிநாதன் அவர்கள், யாகத்தின் அவசியம் குறித்தும் பக்தியும் முக்கியத்துவம் குறித்தும் எளிமையான முறையில் சொற்பொழிவாற்றி வருகிறார். ‘நோயின்றி இந்த உலகம் வாழ வேண்டும்’ என்பதற்காக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தன்வந்திரி ஹோமங்களை இதே யக்ஞ பூமியில் செய்து ‘யக்ஞ புருஷராக’ சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்.

    இந்த ஸ்ரீதன்வந்திரி யாகம் நடைபெறும் இடங்களில் பலதரப்பட்ட பக்தர்களும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொள்கிறார்கள். உடல் ஊனமுற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள், மூப்பு நோயினால் பீடிக்கப்பட்டவர்கள், உயிர்க்கொல்லி, ஆட்கொல்லி என்று கூறப்படும் சர்க்கரை வியாதி, புற்றுநோய் உள்ளவர்களும், மன அழுத்தம் உள்ளவர்களும், விபத்தினால் பீடிக்கப்பட்டவர்களும், திருமணம் ஆகாத ஆண், பெண்கள், தொழில் மற்றும் உத்தியோகம் அமையாதவர்கள், வியாபாரம் சரி இல்லாதவர்கள், வழக்கு நிலுவையில் உள்ளவர்களும் மற்றும் மாணவ மாணவிகலும் இதில் பங்கு பெற்று பலன் அடைந்து வருவது கண்கூடு.

    யாகம் (ஹோமம்) ஓர் அறிமுகம்

    இன்றைக்குப் பலருக்கும் யாகம், வேள்வி, யக்ஞம், ஹோமம் – போன்ற சொற் பிரயோகங்களில் குழப்பம் வருகிறது. அதாவது, இந்த வார்த்தைகள் எல்லாமே ஒன்றுதானா, அல்லது வேறு வேறு பொருளில் பயன்படுத்தப்படுகின்றனவா என்று!

    யாகம், வேள்வி, யக்ஞம் – இவை எல்லாமே ஒரே பொருளைத் தருபவைதான். யாகத்தை அனுஷ்டிக்கும் முறை ஹோமம் எனப்படுகிறது.

    ‘புகை, ஜோதி, நீர்த்துளி, காற்று – இவற்றின் சேர்க்கையே மேகம். இந்த நான்கின் சேர்க்கை இருந்தாலே போதும். மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும். ஆனால், இந்த நான்கும் சேர வேண்டும் என்றால், அதற்கு வேள்வி செய்யப்பட்ட வேண்டும்’ என்பார் கவி காளிதாசர். சிலப்பதிகாரம் பாடிய இளங்கோ அடிகளும், ‘சாதாரணமாக உலவிடும் மேகங்களை சூல் கொண்ட மேகங்களாக மாற்றும் சக்தி யாகசாலைக்கு உண்டு’ என்கிறார்.

    ஆக, யாகம் என்று பொதுவாகச் சொல்கிறோம். யக்ஞத்திலே – அதாவது யாகத்திலே அநேக விதமான திரவியங்களை மந்திரபூர்வமாக அக்னியிலே போடுவதற்கு ஹோமம் என்று பெயர் (புனித மந்திரங்களை உச்சரித்தவாறு பொருட்களை அக்னியில் இறைவனுக்குப் படைப்பதற்குப் பெயர் ஹோமம் என்று வேதம் கூறுகிறது).

    ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார்.

    ஹோமங்களில் இருந்துதான் வேதங்கள் தோன்றின என்றும், வேதங்களில் இருந்துதான் ஹோமங்கள் தோன்றின என்றும் இரு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. இங்கே தாய் ஸ்தானம் எதற்கு என்பது முக்கியமில்லை. இவற்றால் நாம் அடையும் பலன்கள்தான் முக்கியம். ஹோமங்களும் சரி… வேதங்களும் சரி… இரண்டுமே அபாரமான தெய்வீக ஆற்றல் வாய்ந்தவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆதியும் அந்தமும் இல்லாத அழிக்க முடியாத அபாரமான சக்திகள் இவை இரண்டும்!

    வழிபாட்டு முறைகளில் ஹோமங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்ய வேண்டுமானால், அதற்குரிய ஹோமத்தை நாம் செய்வதன் மூலம் அந்த தெய்வத்தின் அனுக்ரஹத்தைப் பெற முடியும். கோவைக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தால், கோவை செல்லும் ரயிலில்தான் ஏறி அமர வேண்டும். மதுரை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தால், கோவைக்குப் போக முடியாது. அது போல நாம் எந்த தெய்வத்தை நினைத்து – என்ன பிரார்த்தனையை வைக்கிறோமோ, அதைக் கட்டாயம் அந்த தெய்வம் நிறைவேற்றித் தந்து விடும். என்ன ஒன்று… நம் பிரார்த்தனையில் ஆத்மார்த்தம் இருக்க வேண்டும். சஞ்சலங்கள் இருக்கக் கூடாது.

    தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

    தன்வந்திரி பீடம் ஓர் அறிமுகம்

    வாலாஜா ஸ்ரீதன்வந்த்ரி ஆரோக்கிய பீடத்தில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஹோமங்கள் நடந்துள்ளன. யக்ஞ பூமி அது. சைவம், வைணவம் – என ஷண்மதத்திற்குரிய அனைத்து தெய்வ சந்நிதிகளும், நூற்றுக்கணக்கான சித்தர் பெருமக்களும், எண்ணற்ற மகான்களும் பரிபூரணமாக பிரதிஷ்டை ஆகி இருக்கும் பீடம் அது. எனவே, உங்களது சக்திக்கு உட்பட்டு இது போன்ற சாந்நித்தியமான பீடங்களில் ஹோமம் செய்தாலும் அல்லது அந்தப் புனித நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் அது அளவற்ற பலன்களைத் தரும். சகல வளங்களையும் அருளும்.

    வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பிரதிஷ்டை ஆகி இருக்கிற ஸ்ரீதன்வந்திரி பகவான், இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சுமார் இரண்டு லட்சம் கி.மீ. தொலைவு பயணம் செய்து அதன் பின்தான் கருவறையில் குடி கொண்டுள்ளார். யாத்திரையின்போது ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் உட்பட எண்ணற்ற அருளாளர்களும் உடன் பயணித்துச் சென்றனர். 665 நாட்கள் பயணம் செய்து, 500-க்கும் மேற்பட்ட புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசித்து, 2000-த்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் – நகரங்களில் பயணித்து, 200-க்கும் மேற்பட்ட மடாதிபதிகளின் வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு, 100-க்கும் மேற்பட்ட புனித நதிகளில் நீராடி, 67 வைணவ திவ்ய தேசங்களை தரிசித்து, 200-க்கும் மேற்பட்ட சித்தர் சமாதிகளுக்குச் சென்று இந்த யாத்திரை வாலாஜாபேட்டை திரும்பியது. கோடிக்கணக்கான மந்திரங்கள் பக்தர்கள் மூலமாகவே ஜபிக்கப்பட்டு 15.12.2004 அன்று கும்பாபிஷேகம் நடத்தப்பெற்றது. திருப்பணி ஆரம்பிக்கப்பட்ட சுமார் 120 நாட்களில் கும்பாபிஷேகம் நடந்தேறி இறைவனின் மாபெரும் சக்தியை உலகுக்கு உணர்த்தியது இந்த பீடம்.

    வேலூருக்கு அருகே வாலாஜாவில் (வாலாஜா – சோளிங்கர் சாலையில்) கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞங்கள்தான் மிகச் சிறப்பு. உலக மக்களின் நலனுக்காக இங்கு சதா சர்வ காலமும் மந்திரங்கள் ஜபிக்கப்பட்டு பல அபூர்வ யாகங்கள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீ தன்வந்திரி பிரதிஷ்டை செய்யப் பெற்ற 15.12.2004-லிருந்து இன்றுவரை பல்லாயிரக்கணக்கான யாகங்கள் உலக நலன் கருதி நடந்தேறியுள்ளன. மந்திர ஒலிசக்தி குவிந்திருக்கிற இடங்களில் திருவருள் பிரகாசிக்கும் என்பர். அதற்கேற்ற மாதிரி இங்கு வந்து பிரார்த்திக்கும் பல பக்தர்களின் பிணிகளும் பனி போல் அகன்று சுகம் பெற்று வருகின்றனர் என்பது நிதர்சனம்.

    உலக மக்களின் ஆரோக்கியம் கருதி நிர்மாணிக்கப்பட்ட இப்பீடம், பல்லாயிரக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்து பலருடைய வேண்டுதல்களை நிறைவேற்றியும் அரிய பல அற்புதங்களை நிகழ்த்தியும் உள்ளது. இறையருளால், உலக மக்களுக்கு உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொன், பொருள், நிலம், மனை, வீடு, கல்வி, புத்திர பாக்கியம் மற்றும் திருமணம் ஆகிய சகல சம்பத்துக்களையும் நல்கும் குருமகான்கள் உள்ளிட்ட எண்ணற்ற பரிவார மூர்த்தங்களுக்கு தனிச் சந்நிதிகள் ஏற்படுத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. மானுட சக்திக்கு மாறுபட்ட ஒரு தெய்வீக சக்தியும் இறையருளும் பெற்ற ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் நம்பிக்கை மற்றும் முயற்சியே இந்த உயர்வுக்குக் காரணமாகி உள்ளது.

    ஸ்வாமிகளும் & தன்வந்திரி பீடமும் வாழும் மனிதனுக்கு வழிகாட்ட ஒரு மகான் (குரு) நிச்சயமாக வேண்டும். நாம் குழந்தையாக இருக்கும் போது தாய், தந்தையர் நமக்கு குருவாக திகழ்கின்றனர். பள்ளி செல்லும் போது ஆசிரியர் குருவாக திகழ்கிறார். வேலைக்கு செல்லும் போது முதலாளி குருவாக திகழ்கிறார்.

    ஆனால் வாழ்க்கையில் சறுக்கி விடாமல் சகலமும் பெற்று நோயின்றி வளமுடன் வாழ வேண்டுமானால் நமக்கு ஒரு மகான் (குரு) நிச்சயம் தேவை. அப்படிப்பட்ட ஒரு சிறந்த மகான்தான் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இவர் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, அரசு மருத்துவ மனையில் தந்தை சீனிவாசனுக்கும் தாயார் கோமளவல்லி என்பவருக்கும் மகனாக பிறந்தவர்தான் ஸ்வாமிகள்.

    பள்ளிப்பருவம் முதல் திருமணம் முடிந்த காலங்கள் மட்டும் ஸ்வாமிகள் பட்ட கஷ்டங்களை சொல்லி மாளாது. ஸ்வாமிகளின் 35வது வயதில் பலவிதமான இன்னல்களின் நடுவே வளர்த்து ஆளாக்கிய அன்னை கோமளவல்லி மிகவும் கொடிய வியாதியான புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இந்த புவியை விட்டு வைகுண்ட பதவி அடைந்தார். இந்த சம்பவம் ஸ்வாமிகளை மிகவும் பாதித்தது.

    ஆனாலும் அந்த அன்னை தனது மரணப் போராட்டத்தின்போதும் கூட தனது மகனிடம் கூறினார், நான் பட்ட இந்த துன்பம் இனி யாருக்கும் வரக் கூடாது, இது போன்ற நோய் எதிரிக்குக் கூட வரக்கூடாது, இதற்காக நீ ஏதாவது செய்தாக வேண்டும் என்று சத்திய வாக்கை பெற்றுக் கொண்டார்.

    ஸ்வாமிகளும் அன்னைக்கு கொடுத்த வாக்கை எப்படி காப்பாற்றுவது என்று யோசித்த வேளையில், அவரது மனதில் தோன்றியதே இந்த தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

    இன்று மக்கள் அதிக வேதனைக்குள்ளான ஒன்று அவர்களுக்கு ஏற்படும் நோய்களும் மன அழுததங்களும்தான். அப்படியானால் அந்த நோய்களை எப்படி தீர்ப்பது என்று யோசிக்கலானார். அப்போதுதான் அவரது உள்ளத்தில் தன்வந்திரி பகவான் உதித்தார்.

    உடனடியாக சற்றும் தாமதிக்காமல் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்து அங்கு ஸ்ரீ தன்வந்திரி பகவானை மூலவராக ப்ரதிஷ்டை செய்து இதர 71 பரிவார தெய்வங்களையும், லிங்க வடிவிலான 468 சித்தர்களையும் ப்ரதிஷ்டை செய்து தேக நலம், தேச நலம் என்ற முறையில் சேவை செய்து வருகிறார்.

    இன்று உலக அளவில் பல்வேறு மக்களும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து தங்களது இன்னல்கள் நீங்க ப்ராத்தனைகளும், யாகங்களும் செய்து வளமுடன் வாழ்ந்து வருகின்றனர் என்றால் அது முரளிதர ஸ்வாமிகளின் கடின உழைப்பும், பக்தர்களின் அன்பும், பெற்றோரின் ஆசியே எனலாம்.

    யாகங்களும் & தன்வந்திரி பீடமும்

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், தன்வந்திரி பீடம், தன்வந்திரி யக்ஞ பீடம் என்றாலே அங்கு ஹோமங்கள்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஸ்வாமிகள், பீடத்திற்கு வரும் பக்தர்களின் குறைகள் என்னவென்று அன்போடு கேட்கப்பட்டு அவரவர் குறைகளுக்கேற்ப தனக்கு கிடைக்கும் ஆக்ஞைப்படி ஹோமங்களையும், யாகங்களையும் நடத்தி வைக்கிறார்.
    அந்த வகையில் பீடத்தில் 200க்கும் மேற்பட்ட சண்டி யாகம், சூலினிதுர்கா ஹோமம், ஒரு லட்சம் மோதகங்கள் கொண்டு வாஞ்சா கல்பலதா கணபதி யாகம், 74 குண்டங்களில் 74 பைரவர் ஹோமம், 6000 கிலோ சிகப்பு மிளகாய் வற்றல் கொண்டு மஹா ப்ரத்யங்கிரா தேவி யாகம், 10,000 மாதுளை பழங்கள் கொண்டு மஹா காளி யாகம், 365 நாட்கள் 365 விதமான ஹோமங்கள், 51 சக்தி பீட ஹோமம், 15,000 வாழைப்பழங்கள் கொண்டு மஹா ஆஞ்சநேய ஹோமம் போன்ற எண்ணற்ற ஹோமங்களை நடத்தித் தந்த ஸ்வாமிகள் தினந்தோறும் உலக மக்களின் ஆரோக்யத்திற்காக தன்வந்திரி ஹோமத்துடன் சகல தேவதா காயத்ரி ஹோமங்களையும் செய்து வருகிறார்.

    இந்த ஹோமங்கள் மட்டுமல்லாமல் சிறப்பு ஹோமங்களான, திருமணமாகாத ஆண்களுக்காக பிரதி மாதம் 3வது ஞாயிறு கந்தர்வராஜ யாகம், பெண்களுக்காக பிரதி மாதம் கடைசி ஞாயிறு சுயம்வரம்கலா பார்வதி ஹோமம், குழந்தைபேறு இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க பிரதி மாதம் 3வது சனிக்கிழமையில் சந்தான கோபால யாகம், பிரதி தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் ஹோமமும், பிரதி வளர்பிறை பஞ்சமியிலும்,
    வாஸ்து நாட்களிலும் வாஸ்து சாந்தி ஹோமம் மற்றும் பிரதி பௌர்ணமி, அமாவாசையில் சிறப்பு ஹோமங்களையும் நடத்தி வருகிறார் நமது ஸ்வாமிகள்.

    மேற்கண்ட ஹோமங்களுக்கும், சிறப்பு யாகங்களுக்கும், அவரவர் தேவைக்கேற்ற ஹோமங்களுக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து ஸ்வாமிகளின் ஆலோசனைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று யாகத்தில் கலந்து கொண்டு பயன் பெற்று மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
    தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் மாபெரும் யக்ஞ பூமியாக தன்வந்திரி பீடம் சிறப்புடன் திகழ்ந்து வருகிறது என்றால் அது பக்தர்களின் ப்ரார்த்தனையும், ஒத்துழைப்பும், அபார நம்பிக்கை என்றால் அது மிகையாகாது. ஆரோக்ய பீடம் வாருங்கள் அருள் பல பெற்றுச் செல்லுங்கள் என்கிறார் நமது ஸ்வாமிகள்.

    ஸ்வாமிகள் மனதில் உதித்த தெய்வங்கள்

    நமது ஸ்வாமிகளின் தினசரி ஆத்மார்த்த பூஜைக்காகவும், பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், உலக மக்கள் நோயின்றி நலமுடன் வாழவும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கீழ்கண்ட விக்ரகங்களை பிரதிஷ்டை செய்து யாங்கள் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார். அவை கீழே பார்க்கலாம்.

    தன்வந்திரி பீடம் நுழைந்தவுடன் நறுமனம் கலந்த மூலிகை காற்று நம்மை மகிழ்ச்சி பெற செய்கிறது. அத்துடன் ஹோமத்தில் சேர்க்கப்படும் மூலிகைகளின் நறுமணப் புகையானது நமது சுவாசத்தை இனிமையாக்கி நோய்களை தீர்க்கிறது.

    வாஸ்து பகவான் : உள்ளே நுழைந்தவுடன் நாம் முதலில் தரிசிப்பது லட்சுமி கணபதியுடன் கூடிய வாஸ்து பகவானைத்தான். வாஸ்து பகவானுக்கு தனி பீடம் உலகில் முதன் முறையாக வாஸ்து முறை படி அமைத்திருப்பது தன்வந்திரி பீடத்தின் தனிச்சிறப்பாகும். இங்கு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமியிலும் வாஸ்து ஹோமங்கள் நடைபெறுகிறது. இதில் வைத்து பூஜிக்கப்பட்ட வாஸ்து யந்திரங்கள், மச்ச யந்திரங்கள், செங்கல், மணல் பிரசாதங்கள் தேவைப்படுவோர்க்கு குறைந்த காணிக்கையில் வழங்கப்படுகிறது.

    பாரத மாதா : உலகில் வேறெங்கும் காணாத வகையில் பாரத மாதாவிற்கு விக்ரஹம் அமைத்துள்ளார் ஸ்வாமிகள். முக்கிய தினங்களில் பாரத மாதாவிற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தேச நலமே தேக நலம் என்கிறார் நமது ஸ்வாமிகள்.

    தச புஜ காளியும் 51 சக்தி பீடமும் : உலகில் உள்ள 51 சக்தி பீடங்களையும் ஒன்றினைக்கும் வகையில் 60 அடி நீளத்தில் திரிசூலம் அமைத்து அதன் உள்ளே 51 சக்தி பீட யாக குண்டங்களை அமைத்து அட்சர சக்தி தேவிகளை வழிபடும் விதத்தில் 51 சக்தி பீடத்துடன் மகா பீடத்தையும் இணைத்து சக்தி பீட யாகத்தை நடத்தியுள்ளார் நமது ஸ்வாமிகள். அந்த சூலத்தின் அருகே தசபுஜ காளியையும், மகா யாக குண்டத்தையும் நிறுவி மாபெரும் யாகங்களை நடத்தி வருகிறார் ஸ்வாமிகள்.

    தைலக்காப்பில் & தன்வந்திரி விநாயகர் : அடுத்து ஸ்ரீ தன்வந்திரி விநாயகர், வேறெங்கும் காணமுடியாத வகையில் ஒரே கல்லில் பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானையும், வினை தீர்க்கும் விநாயகரையும் ப்ரதிஷ்டை செய்துள்ள விக்ரஹத்திற்கு பக்தர்கள் உடல் பிணி, உளப்பிணி நீங்க தைலாபிஷேகத்துடன் ப்ராத்தித்து செல்வது சிறப்பு.

    Mahisahasoormarthini
    மகிசாசுர மர்த்தினி : 8அடி உயரமுடன் 16 திருக்கரங்களுடன் மகிஷனை வதம் செய்யும் கோலத்துடன், புன்னகை ஏந்திய முகத்துடன் மிகவும் அழகாக காட்சியளிப்பது மகிசாசுர மர்த்தினி அம்மன். மாங்கல்ய பாக்யத்திற்காகவும், திருமண ப்ராப்தத்திற்காகவும் இவளுக்கு மஞ்சள் குங்கும அபிஷேம் செய்து எலுமிச்சை, திருமாங்கல்ய சரடு போன்ற பிரசாதங்கள் பெற்று பலனடைந்தவர்கள் ஏராளம் எனலாம்.

    ரோகம் தீர்த்து யோகம் அளிக்கும் யாக சாலையில் 6 அடி ப்ரத்யங்கிரா தேவி : அம்பாளை தரிசித்து விட்டு சற்று முன்னோக்கி சென்றால் நாம் தரிசிப்பது ப்ரத்யங்கிரா தேவி. இந்த தேவிக்கு பிடித்தமானது மிளகாய் வற்றல், வேப்பெண்ணெய், வேப்ப இலை, இனிப்பு வகைகள், பூசணிக்காய், மஞ்சள், குங்குமம், அரளிப்பூ மற்றும் விசேஷ திரவியங்கள் ஆகும் என்பார்கள். இங்கு தினசரி வருகை புரியும் பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே அணையா யாக குண்டத்தில் மேற்கண்ட திரவியங்களுடன் ப்ரார்த்தனை செய்து சமர்பித்து பலனடைந்து செல்கின்றனர்.

    ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி : மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. வேண்டும் வரத்தை வேண்டியவுடன் தருபவள். ஆர்ய வைசியர் குடும்பங்களின் குலதெய்வமாக போற்றப்படும் தேவிக்கு உலகில் முதன் முதலாக தன்வந்திரி பீடத்தில் ஒரு சன்னதி அமைக்கப் பட்டுள்ளது என்பது சிறப்பாகும். இங்கு ஏராளமான வைசியர் மற்றும் இதர குடும்பத்தினர்கள் அப்தபூர்த்தி, சஷ்டியப்தபூர்த்தி, விஜயரத சாந்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேக சாந்தி போன்ற சாந்தி வைபவங்களை நடத்தி செல்கின்றனர்.

    பலிபீடம் : பலி பீடம் என்பது நம்மை முழுமையாக பகவானிடம் சரணடையச் செய்வதாகும். அந்த வகையில் நம்முடைய தேவையற்ற தோஷங்களையும் எதிர்மறையான எண்ணங்களையும் பலி பீடத்தின் முன் சமர்ப்பித்து செல்ல வேண்டும்.

    கஷ்டம் தீர்க்கும் அஷ்டநாகக் கருடன் : தன்வந்திரி பகவானுக்கு நேர் எதிரில் அமைந்திருப்பதுதான் இந்த அஷ்டநாகக் கருடன். வாகன விபத்துக்கள், பஞ்ச பட்சி தோஷங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள் மற்றும் இதர தோஷங்கள் இவரை வணங்குவதால் நீங்கும்.

    கார்த்த வீர்யார்ஜுணர் : அடுத்ததாக நாம் வணங்குவது கார்த்த வீர்யார்ஜுணர், இழந்த செல்வங்களை மீட்டுத்தரும் வல்லமைப் பொருந்தியவர். இவருக்கு தனி சன்னதி இங்கு மட்டுமே. இவர் ஆத்ரேய கோத்திரக் காரர், தத்தாத்ரேயரின் சீடர், 16 திருக்கரங்களுடன், 4வித ரூபத்துடன் பச்சைக்கல்லில் அமைத்துள்ளார் நமது ஸ்வாமிகள்.

    மகாவீரர் : வட மாநிலங்களில் பல மகத்துவங்களை புரிந்தவர் மகாவீரர். மனம் அமைதி பெற மகாவீரரை வணங்குவது சிறப்பு. சமன மதத்தவரும், ஜெயினர் மதத்தவரும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து ஆனந்தத்துடன் வழிபட்டு செல்கின்றனர். இவரும் ஒரு வகையில் விஷ்ணுவின் அம்சமாகும்.

    சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் : சங்கடங்களை தீர்ப்பவர் சக்கரத்தாழ்வார். சத்ரு பயத்தை போக்கி சந்தோஷம் அருள்பவர்.

    பால ரங்கநாதர் : அடுத்து வலப்பக்கத்தில் அமைந்திருப்பது பால ரங்கநாதர் ஆவார். குழந்தை முகத்துடன் ரங்கநாதர் பள்ளி கொண்ட கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். குழந்தை வேண்டுவோர் மற்றும் இதர தேவைகள் பூர்த்தியடையவும் இவரை வழிபடலாம்.

    பதவி தரும் பட்டாபிஷேக ராமர் : ரங்கநாதருக்கு அடுத்து பட்டாபிஷேக ராமர், இனிய இல்லறம், சகோதர பாசம், வாழ்வில் நேர்மை முதலிய பற்பல நற்சிந்தனைகள் வளரவும், உயர் பதவி பெற வேண்டுவோர் பட்டாபிஷேக ராமரை வழிபடுவது சிறப்பு. இந்த விக்ரகம் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஆரோக்ய லட்சுமி : தன்வந்திரி பகவானின் துணைவிதான் ஆரோக்ய லட்சுமி. மருத்துவக் கடவுளான தன்வந்திரியை போன்றே இவரும் மருத்துவக் கடவுளாவார். பெண்களின் மனநோய்களை தீர்த்து நமக்கெல்லாம் தாயாக விளங்கும் தாய். இவளுக்கு பூஜித்த குங்குமப் பிரசாதம் பல அதிசயங்களை நிகழ்த்தும் அற்புத பிரசாதம் என்கிறார்கள் பயனடைந்த பக்தர்கள்.

    கெஜலட்சுமி : ஆரோக்ய லட்சுமி சன்னதியின் வாயிற்படி மேல்பகுதியில் கெஜலட்சுமி விக்ரகம் அமைந்துள்ளது. கெஜலட்சுமி இருக்கும் இடத்தில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம்.
    ஸ்ரீ சத்திய நாராயணன் : சத்தியம் காக்கும் சத்திய நாராயணன் என்பர். இவர் பக்தர்ககள் வேண்டிய வரங்களை வாரி வழங்குவதில் வள்ளல் ஆவார். அதே சமயத்தில் வேண்டியபடி நேர்த்திகடனை செய்யா விட்டால் சோதனை செய்வதிலும் வள்ளல் ஆவார். இந்த விக்ரகத்தில் கருடன் மற்றும் ஆஞ்சநேயர் சூரிய வழிபாட்டுடன் பூஜை செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

    ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மர் : உலகில் வேறெங்கும் இல்லாதவாறு ஆமையின் மேல் தாயார் லட்சுமியை மடியில் ஏந்தியவாறு பக்தர்களுக்கு திருக்காட்சித் தருகிறார் தன்வந்திரி பீடத்தில். பக்தர்களின் கோபங்களை தீர்த்து ருண, ரோகங்களுக்கு விடுதலை அளிக்கிறார்.

    வாக்கு அளிக்கும் வாணி சரஸ்வதி : அடுத்ததாக அன்னை சரஸ்வதி தேவி, கல்லாமையை இல்லாமை ஆக்குபவளும், கஷ்டங்களை போக்குபவளுமான கல்வி வளம் தரும் தேவியான வாணியை வணங்கி கல்வியில் மேன்மை பெறுவோம்.

    ராகு கேது : ஒரே கல்லில் தலை ராகுவாகவும், உடம்பு கேதுவாகவும் உலகில் எங்கும் இல்லாதவாரு அமைக்கப் பட்டுள்ளது. ராகு கேதுவிற்கு பிரதி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளா காட்சியாகும். இந்த பிரசாதத்தை உட்கொண்டால் உணவு குழலில் ஏற்படும் நோய்கள் நீங்கும் என்கிறார் நமது ஸ்வாமிகள்.

    நோய் தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவான் : தன்வந்திரி பீடத்தில் பிரதான தெய்வமாக வீற்றிருப்பவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான். இவர் பாற்கடலில் அமிர்த கலசம் ஏந்தி தன்வந்திரியாக தோன்றியவர் தேவர்களின் பிணிகளை நீக்குபவர். இவரே உலகின் ஆதி வைத்தியராக போற்றப்படுகிறார். தன்வந்திரி பகவான் சுமார் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 50 கோடி மந்திரங்களுடன் உலகம் முழுவதும் சுமார் 2லட்சம் கீலோ மீட்டர் பயணம் செய்து பக்தர்களுக்கு ஆசீர்வதித்து, திவ்ய தேசங்களுக்கும், விசேஷ ஸ்தலங்களுக்கும் எழுந்தருளிய பின் தன்வந்திரி பீடத்தில் ப்ரதிஷ்டை செய்துள்ளார் நமது ஸ்வாமிகள். மந்திர பீடமாகவும், ஔஷதகிரியாகவும் உள்ள தன்வந்திரி பகவானை பக்தர்கள் வாழ்வில் ஒரு முறையாவது வந்து சேவித்து பலன்பெற வேண்டும் என்கிறார்கள் பீடத்திற்கு வருகை புரியும் பக்தர்கள்.

    பணம் தரும் சொர்ணாகர்ஷண பைரவர் : அடுத்ததாக சொர்ணாகர்ஷண பைரவர். கணவன், மனைவி ஒற்றுமையை ஏற்படுத்தி, வழக்கு வியாஜ்யங்களில் வெற்றிபெறச் செய்து, தொழில், வியாபாரம் சிறக்க வைத்து மற்றும் வெளிநாடு செல்ல ஏற்படும் தடைகளை நீக்கி சகல ஐஸ்வர்யங்களையும் தருபவர்.

    ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரர் : பச்சை நிற மரகதக் கல்லால் ஆன சிவலிங்கம் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அருகில் மரகதீஸ்வரி விக்ரகம் அமைந்துள்ளது. கர்ம பிணிகளையும், ஊழ்வினைகளையும் நீக்கும் உத்தமர் இவர்.

    DSC_1290
    கவலைகள் போக்கிடும் காலச்சக்கரம் : இதுவரை எங்கும் அமைந்திராத வகையில் ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் கூடிய விருட்சங்களை உள்ளடக்கி இந்த காலச்சக்கரம் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சக்கரத்தை வணங்கும் போது ராசி, நட்சத்திரம் மற்றும் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும், பூமி தோஷங்களும் நீங்கும். விருட்ச வழிபாடே விசேஷம் என்கிறார் நமது ஸ்வாமிகள்.

    அஷ்டபைரவருடன் கால பைரவர் : வெளிநாடுகள் செல்லும் யோகத்தை தருபவர் இவரே. தன்வந்திரி பீடத்தில் மஹா பைரவருடன் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபாலபைரவர், பிஷ்ண பைரவர், சம்ஹார பைரவர் என ஒரே கல்லில் அஷ்ட பைரவர்களும் அமைந்துள்ளனர். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் பைரவர் ஹோமத்துடன் கூஷ்மாண்ட தீபம் ஏற்றப் படுகிறது. பிளாக்மெயில், பில்லி, சூன்யம், செய்வினை உத்யோக தடை போன்ற பல்வேறு தடைகளை நீக்குபவர் இவர் என்கிறார் ஸ்வாமிகள்.

    மனித நேய மணிகண்டன் : ஐயப்பனுக்கென்று தனி சன்னதி அமைத்து அவருக்கே உரிய பூஜை வழிபாடுகள் செய்து வருகின்றனர். பீடத்திற்கு வருகை புரியும் அனைவரும் மனித நேயத்துடன் மணிகண்டனை தரிசித்து மகிழ்ச்சியடைகின்றனர். இந்த சன்னதி மூன்றே நாட்களில் அமைக்கப்பட்டதாகும்.

    நவக்கிரக மண்டலம் : ஒன்பது நவக்கிரகங்களுக்கு உரிய நிறங்களில் ஒன்பது விதமான கட்டங்கள் அமைத்து, அதற்கே உரிய தானியங்கள், புஷ்பங்கள் என்ற முறையில் ஸ்வாமிகள் பூஜித்து வருகிறார்.

    நாளும் நன்மை தரும் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபத்தில் : தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ மையத்திற்கு செல்லும் பாதையில் நாம் தரிசிப்பது சிவலிங்க ரூபத்தில் அமைந்திருக்கும் 468 சித்தர்கள் ஆகும். இங்கு இவர்களை ப்ரதிஷ்டை செய்வதற்கு முன்பாக ஸ்வாமிகள், சுமார் 300 க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று பூஜித்து, அங்கிருந்து மண் (ம்ருதி) கொண்டு வந்து சிவலிங்கத்தின் கீழ் வைத்து 15 நாட்கள் அதிருத்ர மகா யாகம் செய்து சித்தர்களை ப்ரதிஷ்டை செய்துள்ளார். பௌர்ணமி மற்றும் ப்ரதோஷ காலங்களில் இவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யும் காட்சி திருக் கயிலாயக் காட்சியாகும்.

    அன்னம் அளிக்கும் அன்ன பூரணி : அடுத்ததாக அன்ன பூரணி, நமக்கு குறைவில்லாமல் அன்னம் வழங்குவதில் சிறந்தவள் அன்ன பூரணி. இங்கு அன்னதானத்திற்கு அரிசி மற்றும் பருப்பு வகைகள் வாங்கி சமர்ப்பிப்பது சிறப்பு. இவளை வணங்குவதால் அன்ன தோஷங்கள் நீங்கி ஆரோக்யத்துடன் உணவு குறைபாடின்றி வாழலாம்.

    கார்த்திகை குமரன் : கார்த்திகை பெண்களுடன் தாமரை பீடத்தில் சித்தர்களுக்கு ஞானகுருவாக கார்த்திகை குமரன் அமைந்திருப்பதைக் காண கண்கோடி வேண்டும். சத்ரு சம்ஹார ஹோமம் செய்து கார்த்திகை குமரனுக்கு விபூதி அபிஷேகம் செய்தால் செய்வினை கோளாருகள், தோல் வியாதிகள், சத்ரு உபாதைகள் நீங்கும்.

    காயத்ரி தேவி : அடுத்து நாம் காண்பது காயத்ரி தேவி. காயத்ரி மந்திரங்களை நாம் உச்சரிக்கும் போது அனைத்து இன்னல்களும் நீக்கும் அகிலாண்டேஸ்வரி இவளே.

    DSC_0390

    மாமேரு : காயத்ரி தேவியுடன் மாமேருவும் அமையப் பெற்றுள்ளது. இந்த மாமேருவுக்கும் தினசரி குங்கும அபிஷேகம் நடைபெற்று வருகிறது. நவாவர்ண பூஜைகளும், ஸ்ரீ வித்யா ஹோமங்களும் இங்கே நடைபெற்று வருகிறது.
    தவப்பயன் தரும் தத்தாத்ரேயர் : அடுத்ததாக தரிசிப்பது தத்தாத்ரேயர், இவர் இயற்கையிடம் இருந்து பாடங்களை கற்று பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கி வந்தவர். இயற்கையை நேசிக்கவும் கற்றுக் கொடுத்தவர். சிவன், ப்ரம்மா, விஷ்ணு என மூன்று தெய்வங்களையும் ஒருங்கிணைத்து தத்தாத்ரேயராக போற்றப்படுகிறார். அத்ரி, அனுசுயா தேவிக்கு பிறந்த மாபெரும் தவப் புதல்வன் ஆவார்.

    லட்சுமி ஹயக்ரீவர் : கல்வி கடவுள் என்றால் அநேகம் பேருக்கு சரஸ்வதியைதான் தெரியும், ஆனால் அந்த சரஸ்வதிக்கே கல்வி போதித்தவர் ஹயக்ரீவர் ஆவார். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹயக்ரீவர் லட்சுமி தேவியுடன் வெளிர் பச்சை நிறத்தில் விக்ரஹம் அமைக்கப்பட்டு, ஏலக்காய் மாலை அணிந்து எழுது பொருட்களுடன் வீற்றிருக்கிறார். இங்கு மாணவ, மாணவிகளின் கல்வி திறன் மேம்பட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன.
    வேதாந்த தேசிகர் : இவர் ஹயக்ரீவரின் மறு அவதாரமாகவும், வைணவத்தின் குருவாகவும் திகழ்கிறார். இவரை வணங்கினால் அனைத்தும் பெறலாம்.

    நவ கன்னியர் : பீடத்தில் நவகன்னியர் வழிபாடும் முக்கியமான ஒன்றாகும். இந்த நவகன்னியர் அருகில் அத்தி மரமும் அமையப் பெற்றுள்ளது. குழந்தை இல்லாதவர்கள் தொட்டிலையும், திருமணமாகாதவர்கள் மஞ்சள் கயிற்றையும் இந்த மரத்தில் கட்டி ப்ரார்த்தனை செய்து சாபங்களை போக்கி மாங்கல்ய பாக்யம் பெறுகின்றனர். சுயம்புவாக உள்ள இந்த அத்தி மரத்தை பக்தர்கள் திரிசூலமாகவும், சக்தி தேவியாகவும் நவ கன்னியராகவும் வழிபட்டு வருகின்றனர்.

    அத்ரி பாதம் : நவ கன்னியர் அருகில் அத்ரி பாதமும் அமைக்கப் பட்டுள்ளது. ஸ்வாமிகள் பொதிகை மலையில் உள்ள அகஸ்தியர், அத்ரி பாதத்திற்கு சென்று வழிபட்டு அங்கிருந்து தெய்வீக பொருட்களை கொண்டு வந்து அத்ரி பாதம் அமைத்துள்ளார். அத்ரிபாதம் சென்று தரிசிக்க இயலாதவர்கள் தன்வந்திரி பீடம் வந்து 468 சித்தர்களையும் இதர மகான்களையும் தரிசித்தால் அத்ரி பாதம் சென்று தரிசித்த பலனை உணரலாம் என்கிறார் நமது ஸ்வாமிகள்.

    தொணி : சீரடி பாபா இங்கு சூரிய பாபாவாகவும், தங்க பாபாவாகவும் கிழக்கு மேற்காக ப்ரதிஷ்டை செய்துள்ளார்கள். பாபாவை தரிசிக்கும் பக்தர்களுக்கு ஏற்படும் தொல்லைகள், உபாதைகள் மற்றும் இதர தோஷங்கள் நீங்க சீரடி பாபா எதிரில் தொணி அமைத்து 24 மணி நேரமும் அணையாமல் பிரகாசித்து கொண்டிருக்கிறது.

    சூட்சுமத்துடன் சூர்ய பாபா, தங்கமான தங்க பாபா : வெள்ளை நிற பளிங்கு கல்லில் சூர்ய பாபாவாகவும், தங்க நிறத்தில் தங்க பாபாவாகவும் இங்கு அமைந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். வேண்டும் அனைத்தும் தரும் ஒரு மாபெரும் மகானே சீரடி. இவரை ஒருமுறை தரிசித்தால் தலைமுறை காப்பார்.

    தட்சிணா மூர்த்தி : மும்மலங்களை நீக்கும் விதத்திலும், அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும் விதத்திலும், குருவே அனைத்திற்கும் என்பதை உணரும் வகையிலும் இங்கு மேதா தட்சிணா மூர்த்தியாக அமைந்துள்ளார். என்னை வழிபட்டால் தோல்வி என்பதே இல்லை என்கிறார் இவர்.

    வள்ளலார் : அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் என்ற கொள்கையுடையவர். அனைவரிடமும் கருணை, இரக்கம், அன்பு எனும் முறையில் வாழ்ந்தவர். தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அருளையும் அதோடு சேர்த்து பசிப்பிணியை போக்குவதில் வள்ளல். இவருக்கு நிகர் இவரே. அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்ற தாரக மந்திரத்திற்கு சொந்தக்காரர். தன்வந்திரி பீடத்தில் மட்டுமே கருங்கல்லில் இவருடைய சிலை வடிவைமைக்கப் பட்டுள்ளது என்பது சிறப்பாகும். அன்னதானம் இங்கு ப்ரதானமாக நடைபெற்று வருகிறது.
    மகா பெரியவர் : அடுத்ததாக மகா பெரியவர், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சிறு வயதாயிருக்கும் போதே என்னைப் பார்க்க நீ வரவேண்டாம், உன்னைப் பார்க்க அனைவரும் வருவர் என்று ஆசீர்வதித்த நடமாடும் தெய்வமாவார்.

    ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் : தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர போன்ற மாநிலங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட ம்ருத்திகா ப்ருந்தா வனங்களுக்கு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் விக்ரஹத்தை கரிக்கோலம் கொண்டு சென்று அங்கிருந்து ம்ருதி எடுத்து வந்து இந்த விக்ரஹத்தின் கீழ் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தினங்களில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு சிறப்பு யாகங்களும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றது. காமதேனுவுடன் கூடிய ராகவேந்திரரை இங்கு மட்டுமே காண முடியும்.

    மகா அவதார் பாபா : இன்றும் நம்மோடு சூட்சும முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான் மகா அவதார் பாபா. தன்வந்திரி பீடத்தில் இவருக்கு ப்ரத்யோகமான முறையில் குகை வடிவில் கருவறை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்தில் வைத்து அவரது குடும்பத்தினர் பூஜை செய்தபின் இவர் இங்கே ப்ரதிஷ்டை ஆகியுள்ளார்.

    அருள் தரும் அகத்தியர் : இவரை குள்ளமுனி என்றும், குரு முனி என்றும் அழைப்பர். கயிலையில் நடைபெற்ற பார்வதி, சிவன் திருமணத்தை பொதிகை மலையில் இருந்து கொண்டே தரிசித்தவர். தன்வந்திரி பீடத்தில் மிகவும் விசேஷமான முறையில் ஒரு கையில் கமண்டலமும், மற்றொரு கையில் ஜப மாலையும், ஓலைச்சுவடி மற்றும் நமச்சிவாய மந்திரம் கொண்டு நாகக்குடையுடன் காட்சி தருகிறார். இது வேறெங்கும் காணமுடியாத திருக்காட்சியாகும்.

    ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஸ்ரீ விவேகானந்தரின் 150வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் வீரத் துறவியை உலகிற்கு காண்பித்த ஸ்ரீ இராமகிருஷ்ணருக்கு தன்வந்திரி பீடத்தில் நன்றி தெரிவிக்கும் விதத்தில் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிப்பட்டால் மன நோய்கள் நீங்கி மன மகிழ்ச்சி பெறலாம். இவர் காளி தேவியின் ஆசிபெற்றவர் ஆவார்.

    வீர ப்ரம்மங்காரு : கலியுகத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ உள்ள அனைத்து செயல்களையும், அற்புதங்களையும், காலக்ஞானம் எனும் நூலில் எழுதி வைத்து நம்மை காப்பாற்றியவர். ஸ்வாமிகள் வீர ப்ரம்மங்காரின் இன்றைய வாரிசுதாரர்களிடம் ஆசி பெற்று இந்த விக்ரஹத்தை தன்வந்திரி பீடத்தில் தென் மேற்கு மூலையில் ப்ரதிஷ்டை செய்துள்ளார்.

    அன்னதானக் கூடம் : இங்கு தினமும் 100 பேருக்கும், விசேஷ காலங்களில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும் அன்னதானம் அன்ன யாகமாக நடந்து வருகிறது. பீடத்திற்கு வருகைதரும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நோய் தீர்க்கும் பிரசாதமாக பெற்றுச் செல்கின்றனர்.

    சஞ்சலம் தீர்க்கும் சஞ்சீவி ராயர் : மிகவும் பிரம்மாண்டமான உயரத்தில், நின்ற கோலத்தில், திறந்த வெளியில் காட்சி தருகிறார். மேலும் இவர் அருகே 9 படிகள் அமைத்து 9 படிகளிலும் 9 விதமான அனுமனை ப்ரதிஷ்டை செய்து அனுமன் ஜெயந்தி, மூலா நட்சத்திரம் நாட்களில் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.

    சிக்கல் தீர்க்கும் செந்தூர ஆஞ்சநேயர் : குழந்தையானந்த சுவாமிகளின் நேர் எதிரில் அமர்ந்திருப்பவர் செந்தூர ஆஞ்சநேயர். இவருக்கு சாற்றிய செந்தூரமே சிக்கலை தீர்க்கும் பிரசாதம் ஆகும்.

    புத்தர், குருநானக், ரமணர் : குழந்தையானந்த சுவாமிகளின் சன்னதி அருகில் இந்த விக்ரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் ஜெயந்திக நாட்களில் சிறப்பு வழிபாடுகளுடன் யாகங்களும் நடைபெறும். மகான்களை வழிபட்டால் மன சஞ்சலங்கள் தீரும்.

    குழந்தையானந்த சுவாமிகள் : இவரை மீனாட்சி மைந்தன் என்றும், திரிலிங்கேஸ்வரர் என்றும் கூறுவர். இவருடைய சமாதிகளுக்கெல்லாம் ஸ்வாமிகள் விஜயம் செய்து ஆசி பெற்று, இவருக்கு இங்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஒரே நாளில் 4 இடத்தில் சூட்சும முறையில் சமாதி ஆனவர். இவர் சித்த புருஷர் என்பதால் இவருடன் விநாயகர் மற்றும் முருகனும் எழுந்தருளியுள்ளனர்.

    ஷேமங்கள் பல தரும் சேஷாத்திரி ஸ்வாமிகள் : பலவகை அற்புதங்கள் நிகழ்த்திய மாபெரும் சித்த புருஷர். இவரை வழிபட்டால் பல ஷேமங்களை பெறலாம். இவர் குழந்தையானந்த ஸ்வாமிகளின் பரம சீடர். தன்வந்திரி பீடத்தில் இவரை சூரிய சந்திரனாக பாவித்து, சூரிய சந்திர பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
    மூலிகை வனம் : விக்ரக வழிபாடுகளை விட விருட்ச வழிபாடு மிகவும் சிறப்பு என்ற முறையில் பலவகையான மூலிகை மரங்கள், பூ செடிகள், பழ செடிகள் அமைத்து மூலிகை வனமாக மரங்களையும், செடிகளையும் பூஜித்து வருகிறார் நமது ஸ்வாமிகள். மேற்கண்ட வனத்தில் கிடைக்கும் சமித்துக்களை பீடத்தில் நடைபெறும் ஹோமங்களில் சேர்த்து ஹோமம் மற்றும் மூலிகையின் அவசியத்தையும் பக்தர்களுக்கு எடுத்துரைக்கிறார் ஸ்வாமிகள். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.

    முனீஸ்வரர் : ஒவ்வொருவருக்கும் ஒரு தெய்வம் எவ்வளவு முக்கியமோ அத்தகைய முக்கியமானது குல தெய்வம். எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் முனீஸ்வரனை வழிபடுவது இன்னும் சிறப்பு ஆகும். முனீஸ்வரன் அனைத்து விதமான குலதெய்வ தோஷங்களையும், சாபங்களையும், நீக்கி குலம் தழைக்கச் செய்பவர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் குல தெய்வம் முனீஸ்வரன் என்பதால் குல தெய்வ அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பீடத்தில் முனீஸ்வரனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பால் முனீஸ்வரனாக இங்கு பாவித்து பிரதி ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணியளவில் முனீஸ்வர படையல், பூஜை நடைபெற்று வருகிறது.
    கோசாலை : காமதேனு என்று அழைக்கப்படும் மாபெரும் தெய்வீக பிரானியின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டி பீடத்தில் கோசாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பசுக்களை தானங்களாக கொடுத்து வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் பசுக்களை கவனமுடனும், ஆரோக்யத்துடனும் வளர்க்கப்பட்டு பசு வதையை தடுத்து வருகிறார் ஸ்வாமிகள்.

    கோ பூஜை : தன்வந்திரி பீடத்தில் தினந்தோறும் காலை மட்டுமன்றி நண்பகல் 1.00 மணியளவில் அபிஜித் நட்சத்திர வேளையில் அனைத்து விதமான சாபங்கள் நீங்க கோ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    Share
  • கண்ணே கலங்காதே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (27)

     

     

    கண்ணே கலங்காதே

    {கேட்டு மகிழ}

    4f45772108e844927371fa00bc5be2c3

     

    மாயை எனச்சிலர் மருட்டுகிறார், இது
    மாறும் எனச்சிலர் சிரிக்கின்றார்
    நேயம் எனச்சிலர் சொல்கின்றார், சிலர்
    நேற்றைய தொடர்ச்சி என்கின்றார்
    வாயொன் றிருந்தால் போதாதோ? பல
    வாறாய் வார்த்தைகள் பெருகாதோ?
    நீயேன் கண்ணே கலங்குகிறாய்? இது
    நிஜமா என்றா மயங்குகிறாய்?

    தீயை அணைக்க முடியாது, இனி
    திரும்பிச் செல்லவும் வழியேது?
    காயைப் படைத்தவன் இனிமையினைக்
    கடைசியில் எதற்கு வைத்தானோ?
    காலம் வந்தால் கனியாதோ? அது
    கனியும் போதில் இனிக்காதோ?
    ஆலம் விழுதின் ஊஞ்சலிலே, நாம்
    அசைவோம் முழுமதி இரவினிலே!

    எதிரே விரியும் பாதையிலே
    எத்தனை வளைவுகள் திருப்பங்கள்!
    ஏக்கம் தூங்கும் இதயத்தில்
    எத்தனை ரகசிய விருப்பங்கள்!
    புதிரின் மடியில் நாமெல்லாம், சிறு
    பூக்கள் போலே உதிர்கின்றோம், ஒரு
    கதியின் வசத்தில் வாழ்கின்றோம், அதைக்
    கண்ணீர்த் துளியால் நனைக்கின்றோம்

    முற்றத் தினிலே முழுநிலவு
    முன்னறி வித்து வருகிறதா?
    மொட்டை மாடியில் கோடைமழை
    முன்னுரை ஏதும் தருகிறதா?
    பற்றிக் கொள்ளும் சருகெல்லாம்
    தயங்கித் தயங்கி எரிகிறதா?
    பாலத் தினிலே சந்திப்பு! கீழே
    பாயும் நதியிது புரிகிறதா?

    பாசம் நட்பு நேசமென
    பலமுக மானது காதல்தான்
    பற்றைக் கடந்த பற்றாக
    பல்குவ தெல்லாம் காதல்தான்
    ஈசன் நினைப்பும் காதல்தான், தமிழ்
    இன்பம் தோய்வதும் காதல்தான்
    எங்கோ இருந்த இருமுகிலை, இங்கே
    இணைத்துப் பொழிவதும் காதல்தான்

    உனக்காய் வாழ்வதில் சுகமுண்டு, அது
    உனக்கே உனக்காய் ஆனாலும்
    உள்ளுக் குள்ளே ரகசியமாய், நித்தம்
    உறுத்துவதிலும் சுகமுண்டு
    எனக்கே எனக்காய் நீயும்தான், உன்
    நெஞ்சை மறைத்து வாழ்கின்றாய், அதன்
    எதிரே காதல் போதாமல்
    ஏழை திகைத்து நிற்கின்றேன்……..

    படத்திற்கு நன்றி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    crazy
    “என்னதவம் செய்த எசோதை” புகார்கேட்டு,
    என்னஅவம் செய்தாய் எனக்கேட்க, -கண்ணனவன்,
    பூமியைக் காக்கவே, பாகவதம் செய்கின்ற,
    சாமியென்றால் நம்புவாளோ சொல்”….! கிரசி மோகன் ….

    “வெக்கத்தை விட்டுறியில் வெண்ணெய் திருடியதை,
    பக்கத்து வீட்டம்மா போட்டுடைக்க, -திக்கத்து,
    கொள்ளை அடித்ததைக் கண்ணால் கொடுத்ததால்,
    வெள்ளையாச்சோ பாப்பா விழி”….கிரேசி மோகன் ….

    Share