Author: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”முதலாதி என்று முதலைவாய் சிக்கி
    கதறும் கஜேந்திரனைக் காக்க -முதலாக
    புள்ளாண்டான் மாலர் பதறினார், வாகனப்
    புள்ளூர்ந்து வந்தனர் பார்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ’சகாதேவன் கட்டினான்,ய சோதை பிணைத்தனள்,
    சுகதேவர் சொல்லுற்ற(பாகவத) சேயோ, -அகமில்லா
    அன்பால் அடைபடும் ஆனந்தக் கண்ணன்,ஆ
    வின்பால் யசகாதே வர்’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180606 Yashoda -lr A4

    மாதவர், கேசவர், மாலவர், மோகினி
    மாதவர்(மாது அவர்) சபரீசன் மாதாவாம்: -ஆதலால்
    அன்னையென்(று) எண்ணி அணுகுவோரைக் காத்தருள்வான்
    தன்னையே கன்னையன் தந்து….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    பகவான் உவாச்….!
    ————————————————-
    ”கும்பிடுதல் ஏனெதற்கு! காண்டீபா, கொடியுச்சி
    எம்பிடும் ஆஞ்சனேயர் ஏளிவிட்டார் -நம்பிடு,
    ஆறறிவு கொண்டவனே அஞ்சறிவு ‘’ஆ’’வைப்போல்:
    போரறிவு கொள்மகனே பாண்டு’’….கிரேசி மோகன்….!

    Share
  • இனிய சந்திப்பு!

    அன்புடையீர்,

     

    ’’டப்ளின் சரண்யாபரத்வாஜ் இல்லம் வந்தார் , தன் தந்தையுடன்…..தன் மகன் பூணலுக்கு அழைக்க…..இந்த கி.வா.ஜி.(WoRd Punningil Expert) எனக்கு ஒரு மினியேச்சர் சாக்லேட் கிருஷ்ணாவை தந்து சாக்லேட் மாலை அணிவித்தார்,ஃஅப்கோர்ஸ் என் மனைவிக்கு ஒரு புடவை…மொமெண்டோவாக தனக்கே உரிய கிவாஜி பாணியில் மொமெண்டோவாக, எழுதி பரிசளித்தார் இந்த லண்டன் சகோதரி….படம் பார்க்க…..என்ன தவம் செய்தேனோ இவள் அன்புக்கு பாத்திரமாக…..!இவள் தந்த சாக்லேட் கிருஷ்ணா பொம்மையும்,மொமெண்டோவும் என் இல்லத்தை அழகு படுத்துகிறது….இவள் மகன் ‘’அத்வைத்’’ பூனலுக்கு அடியேன் விசிஷ்டாவைதி ஒரு வெண்பா எழுதினேன் அதை பத்திரிகையில் போட்டுள்ளார் இந்த கிவாஜி(கிவாஜாவின் ரசிகை)…வெண்பா ஸ்கேன் செய்து அடுத்த மெயிலில்….மிக்க நன்றி கிவாச(ச ஃபார் சரண்யா…சரண்யா எழுத ஆரம்பித்தால் கிரேஸ(மறுபடியும் ஸ ஃபார் ஸரண்யா) ஆகிவிடுவார்….ஈவரது எழுத்தில் PUN FUN இரண்டும் உண்டு…..மீண்டும் நன்றியுடன் கிரே(ஸ)ஸி மோகன்…..!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180603 Radha Krishna -lr – A4

    “கீதை உரைக்கின்றார் ராதை உருப்பட,
    காதலென்று எண்ணினாள் கன்னியவள்,-மாதுவிடம்,
    கிஸ்ஸல்ல தாயே குவித்தூதல் பாரதம்:
    அஸ்வத்தா ஆனை ஹதம்’’….!கிரேசி மோகன்….!

    KRISHNA FOR TODAY…..!
    ——————————————-

    டீயே மதுரம் சொன்னது ‘’கல்கி’’(கண்ணனின் பத்தாவது அவதாரம்)….என்ன பொருத்தம்….!
    ——————————————————————————————————————————————————————-

    “கீதை உரைக்கின்றார் ராதை உருப்பட,
    காதலென்று எண்ணினாள் கன்னியவள்,-மாதுக்(கு)
    அதரம் காட்டி அடியேகேள் டீ.ஏ(T.A)
    மதுர(ம்)என்.(N) எஸ்.(S)கிருஷ்ணனின் மாது….!கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
    கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
    அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
    நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….கிரேசி மோகன்…..!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”வாழையடி வாழையாய் வீரமுற்ற வாரிசுனை
    கோழையென இவ்வுலகோர் கூறிடுவர் -தோழனே
    சாதலினும் தீதன்றோ சூழும் அவமானம்
    ஊதிடச் சங்கிருக்கே ஓய்”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180529 Hrishikesh-lord of the senses -icam

    அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….!

    “கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”….!

    “அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
    அழியச ராசரம் வந்தவனை
    தசவித வேஷனை முனிமன வாசனை
    தவரிஷி கேசனை வந்தனம்செய்
    தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
    ரகுபதி ராகவ ரூபமெடு
    தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
    தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….!
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் -கிரேசி எண்ணம்

    180528 – Goverdhana -lr -watercolour – A4

    ”தாமரை நீரிலையில் தத்தளிக்கும் தத்துவமாய்
    ’’ஆ’’மருவி அப்பன் அதைக்காக்க -சோமழையில்
    கோவர்த் தனமேந்தி கோன்இந்த்ரன் கர்வபங்கம்(இதுபோல்)
    நீவர்த்த மானம் நிகழ்த்து’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    180530 Tvameva mAtha – A4 lr

    ’’அம்மாவும் நீரேதான், அப்பாவும் நீரேதான்,
    சும்மாவே நீரேதான் சைதன்யம், -பெம்மானாம்
    கண்ணபிரான் நீரேதான், கல்லினுள் தேரைக்கும்
    நீரேதான் வார்த்திடும் நீர்(WATER)”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    HE is the PLAY
    HE is the PLAYER
    HE is the PLAYGROUND
    HE PLAYS for HIMSELF….BAGAWAN SRI AUROBINDO….

    ”ஆட்டம் அவர்தான், அதைக்காணும் ஆடியன்ஸ்
    கூட்டம் அவர்தான், களமுமவர், -நாட்டமோ
    சண்டிக் குதிரையாய் சச்சிதா னந்தராட்டம்
    ஒண்டிக்கே ஒண்டியாம் ஓய்’’….கிரேசி மோகன்….!

    Share
  • பிரத்யங் கரா தேவி

     

    “பிரத்யங் கரா”மா” , பிரகிருதி சக்தி ,
    வரத்தயக்கம் ஏனோ!, வருவாய் -சிரத்தில் ,
    சஹஸ்ராஹா ரத்தினை ,செய்வாய் மலர
    அஹஸ்மாத்தாய் என்னுள் அரும்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180531 Udupi Krishna -lr -A4

    ’குத்துக்கால் இட்டு கோமள கண்ணபிரான்,
    மத்துக்கை ஏந்தி மணிவண்ணன் , -பத்து
    தடவை புவிவந்து தர்மம் கடைந்தார்,
    கடைந்தெடுத்த முட்டாளே(அடியேன்தான் அந்த முட்டாள்) காண்’’….கிரேசி மோகன்….!

    Share