Author: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171219 -tiruppavai 04_lr -24x32cms -(Andal appeals to the Krishna, the Lord of Varuna, to shower bountiful rains. Reference also to the Acharya, akin to the rain bearing cloud, not to hold back anything that they can explain.-Uthamur swami.)
    171219 -tiruppavai 04_lr -24x32cms -(Andal appeals to the Krishna, the Lord of Varuna, to shower bountiful rains. Reference also to the Acharya, akin to the rain bearing cloud, not to hold back anything that they can explain.-Uthamur swami.)

    எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்தானை,
    சங்கிருக்கும் கையானை சாரங்கனை -திங்கள்நன்
    மார்கழியில் பாடி மணம்புரிந்த ஆண்டாளே,
    நேர்வழியில் எம்மை நடத்து….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    Tiruppavai 03 -Uththama -raw -watercolour -24x32cms (The glory of Uththama.  Like a good monsoon, the generosity of wise men to impart knowledge, results in unhindered wealth and prosperity.)
    Tiruppavai 03 -Uththama -raw -watercolour -24x32cms (The glory of Uththama. Like a good monsoon, the generosity of wise men to impart knowledge, results in unhindered wealth and prosperity.)

    ”கிளிப்பிள்ளை போலவள் கீசுகீசு பாட்டை
    களிப்புடன் ஓதுவான் கண்ணன் -தளிப்புன்னில்
    அக்காரச் சோறுண்ன அந்தரங்கன் கைப்பிடித்து
    உக்கார வைத்தோளை உன்னு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171217 - Tiruppavai 02 - Krishna Anubhav is here! The dos and donts. The austerities. lr. watercolour 24x32 cms

    ”ஆடிவரும் பூரம் அவதரித்து, மார்கழியில்
    பாடிவரும் ஆண்டாளின் பாசுரத்தை -நாடிவரும்
    வைகுண்டம் விட்டந்த வில்லிபுதூர் வாழ்வுக்கு
    பைகொண்ட பாம்பணைவோன் பார்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171216 - Tiruppavai 01 -watercolour -24x32 cms -lr

    ”ஆடிப்பூ ரத்தாள் அளிக்கின்றாள் தள்ளுபடி
    வாடிக்கை யாய்வந்தாள், சீராயர் -பாடிக்கு,
    கோபியரே செல்லுங்கள் கண்ணன் திருக்கோயில்
    HOOBBYயா னாலும் HURRY’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171215 -Periyazhwar Tirumozhi 1-6-1 Uyya Ulagu-lr -watercolour - 24x32cms

    கடவுள் மடியில் கிடக்கும் வரையில்
    அட!உள் வெளியேது அஞ்சேல்! -கடலுள்ளே
    பன்னகத்தில்(பாம்பில்) யோகம் பயிலும் பரம்பொருளாம்
    கன்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171214 - Periyazhwar -MaNikkam katti 01 -wm - watercolour - 24x32cms 4000 divya prabandham

    காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
    காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
    கோளரி மாதவன் கோவிந்தன் நான்முகன்
    தூளியில் ஆடித் தூங்க வருகவே….கிரேசி மோகன்….!

    “நாலா யிரக்கண்ணன் நான்முகன் தொட்டிலில் –
    ஓலாவில்(taxi ) போவதுபோல் ஓய்ந்திருக்க -தாலாட்டு –
    மாலோலர் தூங்கிட மாதா யசோதாவின் –
    பாலூறும் பாடல்வெண் பா “….கிரேசி மோகன் ….!

    Yashoda sings a lullaby to Krishna describing the gem-adorned cradle given by Brahma and reminisces his avatar as Vamana. (Inspired by the 4000 divine songs of the Azhwars) #Krishnafortoday

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171213 -Krishnapremi -lr 24x32 cms -watercolour

    ”மந்திக்கும், பால்பசு மாட்டுக்கும், பேதத்தை
    சிந்திக்கா கண்ணன், சமத்துவ -நந்தன்
    சுகுமாரன் நெய்வெண்ணை சோரன்வாத் சல்ய,
    வெகுமானம் கேசவ் வரைவு’’….!

    ”மந்திமனம் மண்ணிலே மண்டியிட்டுக் கண்ணனின்
    பந்திக்கு முந்தும் பரவசத்தை, -தந்தீர்(கேசவ்): –
    கிருஷ்ணப் பிரேமியென்றார் கோபுலு ஆசான்,
    பிரஷ்ணப்(BRUSH) பிரேமிவெண் பாக்கு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    என்ன ஆச்சரியம்…..வழக்கமாய் ‘’கேசவ்’ படத்துக்கு அடியேன் வெண்பா எழுதுவேன்…. இம்முறை அடியேன் வெண்பாவுக்கு (ரமண வசனாம்ருதம்…. எப்போதும் ஈசனைப் பற்றிக் கூறும் பகவான், அதிகாலை ரமண வசனாம்ருதத்தைப் பிரித்தால் ‘’பெருமாளை’’ப் பற்றி கூறியுள்ளார்…. அந்த வெண்பா ‘’கேசவ்’’ வரைந்த படத்துக்கு பொருத்தமாய் இருந்ததால், அதையே அனுப்பியுள்ளேன்…. இதுதான் COINCIDENCE என்பதா….!)கேசவ் படம் பொருத்தமாய் இருந்ததால் அனுப்பியுள்ளேன்….!ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்….!

    KRISHNA FOR TODAY….!
    ——————————————-

    171212 -Dialogue with Arjuna -watercolour -24x32 cms - lr

    ” எண்ணம் எழஎழ எல்லாம் பெருமாளெனும்-
    வண்ணமாய் பார்த்தால் வழியுண்டு :-முன்னமவர்-
    கீதை உரைத்தது குந்தியின் சேய்க்கிலை,-
    பாதை நமக்கவர் பந்து”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171211 -Udupi Krishna -lr

    “இடக்கையில் மத்து, வலக்கையில் வெண்ணை
    உடுப்பிவிலாஸ் கண்ணன் உரத்து- விடுக்கின்றான்,
    அன்னை அவளுக்காய் வெண்ணை கடைகின்றான்:
    தொன்னையவள் ஆதாரம் தாமு(தாமோதரர்)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171210 - RadheKrishna -lr 24x32 cms -watercolour

    நாமடைதல் சிற்றின்பம், நாமாதல் பேரின்பம்,
    நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
    வளிசொல்லி வேணு விட்டலனை வாழ்த்தி
    களிகொள்ள ராதைபோல் கட்டு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171209 -Goverdhan -icam watercolou -wm -24x32cms

    ”சுண்டு விரல்கொண்டு , சோமழை காத்திட
    ஒண்டுக் குடித்தனமாய் ஓர்பசு, -ரெண்டு
    கரங்களில் கண்ணயர, காப்பினைக் கண்ணன்
    வரம்தரும் கைவழி விஷ்ணு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171208 -Krishna and Rukmani -lr-watercolour -24x32cms

    பாங்கி முதற்கொண்டு பாமாக்கள் ருக்மணிகள்
    தாங்கிய திண்தோள் தாமோதர், -சாங்கிய
    யோகமகள் பாதாதி கேசமதை நீயுரைக்க
    வாகனமாம் புள்ளேறி வா….

    பாமாவின் பாய்ச்சலுக்கு ருக்மணியின் கூச்சலுக்கு
    ஆமாமாம் போட்டசாமி ஐடியாவாய் -காமாய்
    கவுண்ட்செய்து பார்க்க கிடைத்தது கல்கி
    டவுண்-டு-எர்த் மீண்டும் பிறப்பு….கிரேசி மோகன்….!

     

    ருக்மணியின் காதல் கடிதம் கண்ணனுக்கு….!
    ———————————————————————————–

    ‘’கண்ணனுக்கு காதல் கடிதம் எழுதினாள்
    உன்னையே நம்பும் உருப்பிணி(ருக்மணி), –அன்னையவள்
    அம்பாளைச் சுற்றிடுவேன், ஆலயத்துள் காத்திருப்பேன்
    நம்பாள் உனக்காக நான்’’…..கிரேசி மோகன்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171207 GoDaMa 12 -Gajendra -watercolour - 24x32 cms Canson 200 gsm -lr

    பீதாம் பரமவிழ போட்ட நகைசிதற
    வேதப்புள் வாகனனை தோள்சுமந்து -பாதாதி
    கேசம் குலுங்க களிறுக்கன்(று) ஏகிய
    நேசனக் கேசவனை நம்பு….!

    முதலைவாய் சிக்கி மதகளிறு ஆதி
    முதலைவா வென்றைக்க மூன்றில்(மும் மூர்திகளில்) -முதலாய்
    கருடன் அமர்ந்து கஜேந்திரனைக் காத்த
    புருடனைப் போற்றல் பிழைப்பு….கிரேசி மோகன்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171206 -GoDaMa- Draupadi -watercolour -24x32 cms -lr

     

    ’’பூர்ண சரணாகதி பாஞ்சாலி ஏற்றனள்
    கார்ணமின்றி(எதிர்பார்ப்பு காரணமின்றி) கைகூப்ப கண்ணனாம் -நார்ணர்(நாரணர்)
    துஷ்டன்(துஸ்சாதனன்) கரம்நோக தங்கைமா னம்காத்தார்:
    விஷ்ணுவந்த வேலை வசு(பசு)’’….கிரேசி மோகன்….!

     

    Share