”சத்தியம் யாதவர், சாரங்க மாதவர்
நித்திய நூதனர், நந்தகோபர் -’’பெத்தால்தான்
பிள்ளையா’’என்பதை,பாகவதம் சொல்லுதே:
வள்ளல் யசோதை வசம்’’….கிரேசி மோகன்….!
Author: கிரேசி மோகன்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஆடுறாரே கீதையைப் பாடுறாரே கோகுல
மாடு(உ)ராய ஆனந்த மா(ய்ஆ)யாட்டம் -போடுறது:
பார்த்தன் அருகிருந்தால் பாவபுண்யம் பார்க்கணுமே
வார்த்தையில்லா ஜீவன் வசு’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஈதல் இசைபட வாழ்தல் இவருக்கோ
காதலும் மோதலும் கைவல்யம்: -சாதலோ!
வேடன்(ஜரா) விரலாலே, வேளை வரும்வரை
வீடகம்(வீடும் அகமும்) பாக வதம்’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

170301 -Dialogue with Arjuna -lores ’’பார்த்தனின் சாரதி, வேர்த்து வணங்கிடும்,
பார்த்தர்க்கு கீதை பொழிந்தது, -தீர்த்தம்
திருவல்லிக் கேணி, குருமா(குரு மகாகவி பாரதியார்) கவியால்,
கருமல்லிக் கண்ணன் கவி’’….
(OR)
—————————————–குருமா கவிஞர்
இருமில்லத் தாலாச்(சு) இது’’….கிரேசி மோகன்….!பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்குப் பக்கத்தில் மகாகவி பாரதியார் இருக்கும் இல்லம்….!
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”பைகொண்ட பாம்பில் பசுவோ(டு) அமர்ந்ததனை,
மெய்கண்ட ஸூரியாய் மேய்த்திடும், -வைகுண்ட
நாதர்க்கு ,நாட்காலே நீராடும் நங்கையாம்
கோதையின் கீதையே(திருப்பாவை) காப்பு’’….(OR)
நாதர்க்கு நாட்காலே நீராடி நின்னளிப்பு(கேசவ்)
ஃபாதர்க்கு(FATHERக்கு) தந்தாய் ஃபிகர்(FIGURE)”….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”சாமதான பேததெண்ட” , சத்குரு கீதய்யன்,
ராமனாதர் பின்வந்த ராஜீவர் , -காமதேனு
உற்சாகம்(வால்மயிற்பீலியுடன்) கொண்டவர் உச்சி முகர்ந்திட,
பொற்சரக்(தங்கக் கை கண்ணன்) கையால் பிணைப்பு”….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ரிஷிகேசர்’’….!
———————————பெருமாளின் த்வாதசநாமத் துதியில் ‘’ரிஷிகேசர்’’….அயிகிரி நந்தினி மெட்டில்….
பெருமாள் த்வாதச நாமத் துதி….
“அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
அழியச ராசரம் வந்தவனை
தசவித வேஷனை முனிமன வாசனை
தவரிஷி கேசனை வந்தனம்செய்
தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
ரகுபதி ராகவ ரூபமெடு
தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(8)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
ஏக ரேகா கண்ணன்….
——————————“ஏகத்திற்(கு) ஏதுகை ரேகை, நாமெல்லாம்
காகநிறக் கண்ணனின் கைபொம்மை, -போகவர,
பூமத்ய ரேகையில் போட்டெடுத்து, ஏகாக்ர
சூமந்த்ர காளி, சுகம்”….கிரேசி மோகன்…. -
மகா சிவராத்திரி
கண் விழிக்கும் நாளெல்லாம் நீல கண்டர் சிவராத்திரி….கேசவ் தாமத்திற்க்கு மன்னிக்கவும்….இன்று விடிகாலைதான் “மஸ்கெட்டிலிருந்து’’ அடியேன் வந்தேன்….விடிய விடிய கண்விழித்து விமானப் பயணம்….!
ஆட வருகவே….
———————–முனிவர்கள் கூடி மெளனம் காத்திட
தனி ஆவர்த்தனம் நந்தி முழங்கிட
பனி மலை வாசன் பார்வதி யுடனிம்
மனிதனில் தாண்டவம் ஆட வருகவே….(1)முகார விந்தம் முறுவல் பூத்திட
அகார,உகார,மகார அம்பிகை
அகோர மூர்த்தியை அணைத்து என்மன
விஹாரில் தாண்டவம் ஆட வருகவே….(2)துந்துபி முழங்க டமருகம் ஒலிக்க
கந்தன் கணபதி கைக்கட்டி நிற்க
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியென்
சிந்தையில் தாண்டவம் ஆட வருகவே….(3)மாலவன் சங்க நாதம் ஊதிட
நாலு முகன் நல்வேதம் ஓதிட
ஞால அன்னையும் அப்பனும் எந்தன்
மூளையில் தாண்டவம் ஆட வருகவே….(4)யாழில் பாரதி ஏழிசை சுரக்க
வாழிய கோஷம் வைதேஹி போட
ஊழி முதல்வனும் உமையும் எந்தன்
தோளில் தாண்டவம் ஆட வருகவே….(5)பாக்கு வெற்றிலைப் போன்று இணைந்த
தேக்கு மேனியரும் தளிர் இடையாளும்
பாக்கள் பூக்களாய்ப் புலர்ந்திட எந்தன்
வாக்கில் தாண்டவம் ஆட வருகவே….(6)பாஸியும் நீருமாய்ப் பிணைந்த இருவரும்
தூசி தோஷங்கள் தொல்லை இராது
வாசிவாசியென சுவாசிக்க எந்தன்
நாசியில் தாண்டவம் ஆட வருகவே….(7)தென்னாடுடையான் தன்தேவியுடன்
பெண்ணாடுடலொடு பாவியேன் நானுனை
மன்றாடுதலால் மனமிசைந்(து) எந்தன்
முன்னால் தாண்டவம் ஆட வருகவே….(8)வேத புராண இதிகாசங்கள்
பாதச் சிலம்பில் பதிந்திடவே திரு
வாதிரையான் தன் வாமியுடன் என்
காதில் தாண்டவம் ஆட வருகவே….(9)வாடிய பயிரென் வாழ்க்கையிலே நீர்
ஆடிய பாதராய் அழகுமையாளை
சூடிய வண்ணம் சேர்ந்தென் முன்னால்
ஜோடியாய் தாண்டவம் ஆட வருகவே….(10) -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”’பார்த்ததோ(பாட்டனார், குருக்களை) பார்த்தன்! பரமாத்மா உள்ளிருந்து,
வேர்த்ததோ லீலா வினோதம்! : -தீர்த்தர்,(பாற்கடல்)
இணக்கமான அர்ஜுனர்க்கு இங்கித கீதை,
தனக்கவர்தா னேகடைந் து”….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பீதாம் பரமாட பீலி மயிலாட
தோதான தோழர்கள் தோளிலுறி-மீதேறி
வெண்ணையை வாரி வழங்கிடும் வாசுதேவக்
கண்ணனை நெஞ்சே கருது….வாய்ப்பூதான் வாடிடுமோ,! வாழ்விலாழ் வாராகும்
வாய்ப்பெனெக்குத் தந்திட வாசுதேவா, -நோய்ப்பாயில்
கூற்றன்கைப் பாவையாய் தோற்றுக் கிடப்பேனோ
ஏற்றம் தரவா எனக்கு….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
ஸ்ரீ அன்னை பிறந்தநாள்
வேலை இருக்குது நிரம்ப -என்னை
வேகப் படுத்திடு தாயே –
பாலை சுரந்திடு தளும்ப -உந்தன்
பாதம் பணிந்திடும் சேய்நான்
ஆலை கரும்பெனெப் பிழிந்து-எந்தன்
ஆவி பிரிந்திடும் முன்னே
சோலை நகச்சுவைக் காற்றை – இவன்
நாளும் நுகர்ந்திட அருள்வாய்….அன்னை பிறந்த நாள்
—————————-கண்ணை இமைகாக்கும், தென்னை குலம்காக்கும்
அன்னை நமைகாக்கும் அற்புதம் -விண்ணை
இறங்கவைத்து மண்ணில் இருத்திய தாயின்
பிறந்தநாள் இன்று போற்று….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”சென்ற வருடம் என்று நினைக்கிறேன்….திருவல்லிக்கேணி ஸ்ரீபிரியா நினைவூட்டியும், பாழும் தூக்கத்தால் பெருமாள் கருட வாகனம் பாராது பாழானேன்…இன்று ”கேசவ்” உபயத்தால் வினதை மகன் முதுகேறி வரும் புள்ளமர்ந்த(கருட வாகனன்) புருஷோத்தமனை தரிசிக்கும் வாய்ப்பு….!
பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனம்….
——————————————————–
கொள்ளும்புண் ணாக்கும் குதிரைக்(கு) அளித்தன்று
வில்விஜயன் தேரை விரட்டியவன் -புள்ளமர்ந்து
வல்லிக் குளத்தை வலம்வருதல் காணாது
பள்ளிக் கிடந்தொழிந்தேன் பாழ்….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘’மனப்பால் அபிஷேகம் மாதவர்க்கு, மாடு
தினப்பால் கறக்காமல் தூக்கம் : -வனப்பிதை,
தந்தகேசவ் வாழ்க, தினம்மடி மோட்சமிடும்
கந்தவேளின் மாமன்வாழ் க’’….கிரேசி மோகன்….!













