காரியம் அற்றசோர்வு வீரன் உனக்கெதற்கு
சூரிகள் விண்ணிடை சேர்ப்பாரோ ! -பாருய்யா(என்னைப் பார் அய்யா!),
தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்னைக்கேள்,
நூறை ஒடுக்க நிமிர்… கிரேசி மோகன்….
Category: திருமால் திருப்புகழ்
பெருமாள் திருப்புகழ்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
நிறைகுடமாய் நீண்டதொரு பயணம்!
சாக்லேட் கிருஷ்ணா
பவள சங்கரி

‘மார்க்கபந்து… மொதல் சந்து… அடடா பேரு கவிதை மாதிரி இருக்கே’ – வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் , திரு. கிரேசி மோகன் எழுதி, திரு கமல்ஹாசன் பேசிய ஆரம்ப நகைச்சுவை வசனம் இதுதான்.. படம் முழுக்க வயிறு நோக சிரிக்காமல் வெளியில் வர முடியாது! உலகம் முழுவதும் 285 திரையரங்குகளில், சுமார் 400 மில்லியன் இந்திய ரூபாய்களை வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் இது. கமல்ஹாசன், சினேகா, பிரபு, பிரகாஷ்ராஜ், நாகேஷ், மாளவிகா போன்ற பலரும் கலக்கியிருந்த இப்படம் கிட்டத்தட்ட 10 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது! வசூலில் குறிப்பிடும் அளவிற்கு சாதனை படைத்துள்ள திரைப்படம் இது.‘ஆண்டவன் சொல்றான்… அருணாச்சலம் முடிக்கிறான்’ – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களை ஒரு அடி உயரச் செய்த உன்னத வசனத்தின் படைப்பாளர். எந்திரன் திரைப்படத்திலும் தம் தந்திர மொழியால் ஒரு கலக்கு கலக்கியிருப்பவர் நம் கிரேசி மோகன் அவர்கள்.
பி.ஈ., எம்.டெக். படிப்பை முடித்ததும் சுந்தரம்-கிளேட்டனில் பொறியாளராகப் பணியாற்றியவர், எழுத்தின் மீது ஏற்பட்ட தணியாத தாகத்தால், தம் பணியை விடுத்து முழு நேர எழுத்தாளராக தம்மை மாற்றிக்கொண்டவர். நகைச்சுவையே தம் உயிர் மூச்சு என்று வாழ்பவர். இவர் பேச்சு அனைத்துமே நகைச்சுவை.. நகைச்சுவை.. நகைச்சுவைதான். தாம் துளியும் சிரிக்காமல் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு மற்றவரை விழுந்து, விழுந்து சிரிக்க வைப்பது இவருக்கு கைவந்த கலை. திரைப்படங்களில், வசனங்களில் என்றில்லாமல் இயல்பாகவே இப்படியொரு குணம் கொண்டவர் திரு கிரேசி மோகன். திரு. கமல்ஹாசன் மூலம், அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதி திரையுலகில் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சதி லீலாவதி, தெனாலி, அவ்வை ஷண்முகி, பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் , ஆஹா, காதலா காதலா, நான் ஈ உள்ளிட்ட நாற்பதிற்கும் மேலான திரைப்படங்களுக்கு கதை- வசனகர்த்தாவாக பணியாற்றி அனைத்து வெற்றிகளிலும் பங்கு பெற்றவர். ரஜினி, பிரபு, சூர்யா என்று முன்னணி நாயகர்கள் பலரின் படங்களுக்கு தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர். மேடை நாடகங்கள் பலவற்றை எழுதி, நடித்து, வெற்றி கண்ட இவர் எழுதிய ‘க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ என்ற நாடகம் பெற்ற மாபெரும் வெற்றி, திரு. மோகன் அவர்களை ‘கிரேசி மோகன்’ ஆக்கியிருக்கிறது!
தாம் தம் பணியை விட்டு, முழுநேர எழுத்தாளரானதன் காரணத்தைக் கேட்டால், அவர் தம் வழமையான நகைமொழியில்,
“எல்லோரும் சொல்வார்கள், மோகன் சுந்தரம் கிளேட்டன் வேலையை விட்டதற்குக் காரணம் சினிமா ஆசை, நாடக ஆர்வம் என்று. ஆனால் அது உண்மையில்லை. உண்மையான காரணம் நாய் பயம். சுந்தரம் கிளேட்டனில் நைட் ஷிப்ட் முடித்து வீட்டுக்கு வரும் போது ஜெமினியில் ஒரு குரூப் நாய் என்னை பிடித்துக் கொள்ளும். அப்படியே ஸ்டெல்லா மாரிஸ் வரை கூடவே வந்து, என்னை அங்கே விட்டுவிட்டுப் போய்விடும். அங்கே இன்னொரு குரூப் நாய் காத்துக் கொண்டிருக்கும். அது மியூசிக் அகாடமி வரைக்கும் கொண்டு வந்து விடும். பின் அங்கிருந்து வீடு. எனக்காகவே பிளான் பண்ணி அந்தக் காலத்தில் நாய்கள் குரூப் வாழ்ந்து வந்திருக்குமோ என்று சந்தேகம். ரிலே ரேஸ் மாதிரி என்னை அவை சுற்றிச்சுற்றி வந்தன. என்னால் முடியவேயில்லை ரொம்ப பயமாகிப் போய்விட்டது. குரைக்கிற நாய் கடிக்காது என்பதெல்லாம் பொய். நான் நம்பவே மாட்டேன். நாய் பத்தின எந்த பழமொழியையும் நான் நம்ப மாட்டேன். எனக்கு நாய் பயம் ரொம்ப ஜாஸ்தி. அதனால்தான் வேலையை விட்டேன். அதுதான் உண்மை” என்ற பதிலே வருகிறது!
‘இயல்’, ‘இசை’, ‘நாடகம்’ என்ற முத்தமிழில் முத்தான மூன்றாம் தமிழ் நாடகத்தமிழ். சொல் வடிவான, ‘இயல்’, சொற்களோடு இசையும் சேர்ந்த வடிவமே ‘இசை’. ‘இயல்’, ‘இசை’ மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவமே ‘நாடகம்’ என்பது. உள்ளம் உவகை கொள்ளும் வகையில் ஆடலும், பாடலும் சேர்ந்து விளங்குவது நாடகம் (நாடு+ அகம்). கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் நாடகக் கூறுகளை காணமுடிகிறது.
நாடக வழக்கினைப் பற்றித் தொல்காப்பியம் ,
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பா லெட்டாம் மெய்ப்பா டென்பர்-” என்கிறது.கி.பி.18ஆம் நூற்றாண்டளவில், இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நாடகங்கள் மிகப் புகழ் பெற்றிருந்தாலும், கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே நாடகம் அதிவேக வளர்ச்சி பெறலாயிற்று. 20 -ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஐம்பதாண்டு காலம் தமிழ் நாடகக் கலைக்குப் பெரும் பங்காற்றியவர்கள் தி .க.சங்கரன் ,தி.க .முத்துசாமி ,தி .க .சண்முகம் ,தி.க. பகவதி ஆகியோர் . தமிழ் மரபுவழி நாடகங்கள் சீரான வளர்ச்சியினை எட்டியபோது தி.க.சண்முகத்தின் இராஜராஜசோழன் , மற்றும் நாடகக் காவலர் என்று பாராட்டப்பட்ட திரு. ஆர் .எஸ் . மனோகர் அவர்களின் “இலங்கேஸ்வரன் ” என்ற நாடகத்தின் மூலமும் தமிழ் நாடகக் கலை மிகவும் பிரபலமடைந்தது எனலாம். நாடகத் துறையில் ஆழமாகத் தம் தடம் பதித்தவர்கள் பலர். காசி விசுவநாத முதலியார், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பரிதிமாற் கலைஞர், பம்மல் சம்பந்த முதலியார், திண்டிவனம் ராமசாமி ராஜா, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, நவாப் ராஜமாணிக்கம், எம்.ஆர்.ராதா, ஆர்.எஸ்.மனோகர் , கிரேசி மோகன், எஸ்.வி. சேகர், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் நாடகங்கள் ,ஏற்றம் கண்டு, காலந்தோறும் சமுதாய மலர்ச்சிக்கும் , மாற்றத்திற்கும் களனாக விளங்கி வருகிறது என்பது வெள்ளிடைமலை.
ஒரு நாடகத்திற்கு அதன் களன் என்பதே அடிப்படை. நாடகம் இவ்வளவு கால நேரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லாதலால், புனையப்படும் நாடகம் நடிப்பவரின் மெய்ப்பாடு, குரல் அழுத்த வேறுபாடு போன்றவற்றின் மூலம் வசனங்களை மெருகூட்டி, காண்போரை வசீகரிக்கச் செய்யும் வகையில் அதன் கால நீட்டிப்பும் நிர்ணயிக்கப்படுகிறது. நாடகங்கள், சமூக நாடகங்கள், புராண இதிகாச நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், அரசியல் நாடகங்கள் போன்ற பல வகைகளில் இருந்தாலும், சமீபத்தில் இப்படி எந்த கட்டுக்குள்ளும் அடங்காத ஒரு வித்தியாசமான களனில் அமைந்த ஒரு நாடகம் காணும் வாய்ப்பு அமைந்தது. அந்த நாடகத்தைக் காணும்போது,
‘எழுத்தாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் என்று படைப்பாளிகளுக்கு ஒரு தரம் இருக்கிறது. அது தராதரம் இல்லாததாக ஆகிவிடக் கூடாது. அதில் ஒருவனுக்கு கவனம் இருக்க வேண்டும். பணத்துக்காக நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கும் போதுதான் தரம் கீழே இறங்குகிறது. அவ்வாறு செய்வது அவன் சார்ந்த துறைக்கே துரோகம் செய்வதாகும். நகைச்சுவை என்னுடைய வீடு. அதில் நான் என்ன செய்தாலும், எதை எழுதினாலும் அதன் தரம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எனது பொறுப்பு. அதைத்தான் நான் செய்து கொண்டு வருகிறேன்’ என்று தன்னிலை விளக்கம் அளிக்கும் திரு கிரேசி மோகன் அவர்கள் இதைத் தவறாமல் கடைப்பிடிப்பவரும்கூட என்பதையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது.
‘சிரி, சிந்தி. சிந்திக்க முடியவில்லையா, சிரி, மீண்டும் சிரி – இதுதான் எனது நாடகங்களின் கருத்து. ஏனென்றால் சிரிப்பதையே மிகப் பெரிய சமூகச் சீர்திருத்தமாக நான் கருதுகிறேன்’ என்று இயல்பாகக் கூறும் திரு கிரேசி மோகன் மேலும், ‘நகைச்சுவை மூலம் நீங்கள் சமுதாயத்திற்கு என்ன சேவை செய்திருக்கிறீர்கள் என்று கேட்டால், நகைச்சுவையே மிகப்பெரிய சேவை என்பேன். நான் சமுதாயத்தை மாற்றுவதற்காகப் போராடுகிறேன். அதற்காக என் வியர்வையை, இரத்தத்தைச் சிந்தி, அதைப் பேனாவில் மையாக ஊற்றி எழுதுகிறேன் என்றெல்லாம் ஒருவர் சொன்னால் அதெல்லாம் சும்மா பம்மாத்து. சுத்த பேத்தல். எந்த எழுத்தாளராலும் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட முடியாது. சமுதாயத்தில் நிறைய புரையோடிப் போன அல்சர்கள், அப்பெண்டிசைடிஸ்கள் இருக்கின்றன. அவற்றை குணமாக்குவதற்கு நிறைய டாக்டர்கள் வேண்டும். ஆனால் இந்த எழுத்தாளர்கள் அந்த டாக்டர்கள் கிடையாது. அந்த social doctors யார் என்று கேட்டால் அவர்கள்தான் மதர் தெரஸா, சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, பாரதி போன்றவர்கள்’ என்கிறார்.
அமெரிக்கா, துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, ஹாங்காங் என்று பல்வேறு நாடுகளுக்கும் சென்று நாடகம் நடத்தி பெரும் வரவேற்பு பெற்றுள்ளவர். அமெரிக்காவில் மட்டுமே நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்தி சாதனை புரிந்துள்ளார். 1979ல், தம் சொந்த நாடகக் குழுவான ‘கிரேசி கிரியேஷன்ஸ்’ என்பதைத் தொடங்கியுள்ளார். தனது தம்பி திரு. மாது பாலாஜியுடன் இணைந்து இன்றுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்கள் நடித்து சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார். மேரேஜ்இன் மேட் இன்சலூன் , கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம், கிரேசி கிஷ்கிந்தா, மீசையானாலும் மனைவி, போன்ற இவருடைய பல நாடகங்கள் பிரபலமானவை. அந்த வரிசையில் , தற்போது மிகப் பிரபலமாக, சாதனைப் படைத்துக்கொண்டிருக்கும், ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் குறித்து திரு கிரேசி மோகன் அவர்கள்,
“6 வருடங்களுக்கு முன்பு அரங்கேற்றம் ஆனது ‘சாக்லேட் கிருஷ்ணா’….. கிட்டத்தட்ட 750 முறைகள் உலகம் முழுவதும் போட்டது….500 வது ஷோ அமெரிக்காவின் ஹ்யூஸ்டன் நகரில் நிகழ்ந்தது…. 600 வது ஷோ சிங்கப்பூரில்…. இந்த பிரும்மாண்டமான வெற்றிக்குக் காரணம், எனக்குத் தோன்றிய வரையில், என் எழுத்தோ, நடிப்போ அல்ல…. 36 வருடங்களாக ‘கூட்டுக் குடும்பமாக’ வாழும் ‘கிரேசி கிரியேஷன்ஸ்’ குழு உறுப்பினர்களின் ஒற்றுமையே… மேலும் கடவுள் கண்ணனின் அருள்…. லாஜிக்கை மீறிய மேஜிக் ஹ்யூமர்…. மேஜிக்கோடு ஹுமரையும் இணைத்ததால் இந் நாடகம் இன்னமும் கூஜிக்ஜிக் ரெயில் போல ஓடிக்கொண்டிருக்கிறது…. ஒவ்வொரு முறையும் வெளியூர் செல்லும் போது ‘வெண்பாவில்’ கண்ணனை வேண்டி துணைக்கு அழைப்பேன்” என்கிறார்.
வேண்டுதல் வெண்பாக்கள் இதோ ; http://www.vallamai.com/?p=54292
இந்த நாடகம், அரங்கு நிறைந்த காட்சியாக, பெருவாரியான இரசிகர்களைக் கவர்ந்திருப்பதன் காரணம், இதன் வித்தியாசமான கதைக்களமும்தான். பொதுவாக, பக்திக் கதைகளில், பக்தன் வேண்டிக் கொள்ள கடவுள் காட்சி தந்து, என்ன வரம் வேண்டும் என்று கேட்பார். அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். ஆனால் சாக்லேட் கிருஷ்ணாவில், முற்றிலும் மாறுபட்ட வகையில், சாக்லேட் கம்பெனியில் வேலை செய்யும் மாது, சாக்லேட்கள் கொஞ்சமும் விற்காதலால், அலுவலகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார். கிருஷ்ணரை வேண்டிக்கொள்பவர் முன் பெருமான் தோன்றுகிறார். ஆனால் அவர் மாதுவுக்கு வரம் தருவதற்காக வருவதில்லை. தன்னுடைய சில பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பூமிக்கு வருகிறார். அர்ச்சுனரும் கிருட்டிணரும் நட்பாக இருந்தது போல, மாதுவுடன் மிக யதார்த்தமான நல்ல நண்பனாக இருந்து அவருக்கு என்ன உதவிகள், எப்படி செய்து விட்டுப் போகிறார் என்பதுதான் கதை. இதில் நிறைய மாயாசாலங்களும் செய்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து திரு கிரேசி மோகன் அவர்களிடம் கேட்டபோது, இதற்காகத் தானே மேஜிக் கற்றுக் கொண்டிருப்பதாகக் கூறி ஆச்சரியமேற்படுத்துகிறார்.
ஸ்ரீகிருஷ்ணர் (கிரேசி மோகன்) திடீரென்று கை நீட்டினால் மாயமாக கையில் புல்லாங்குழல் வரும். ஆண்டாள் கிளி வேண்டும் என்று கேட்டு ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தொலைபேசியில் அழைக்க, அப்போது, கிருஷ்ணர் ஏதோ மந்திரம் போட்டதும், அங்கிருந்த ஒரு துணி கிளியாக மாறி, அப்படியே பறந்து போய்விடும். இந்த இடத்திலெல்லாம் அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல் பெறுகிறார். இந்த வகையில் இந்நாடகத்தில் குழந்தைகளைக் கவரும் அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. அனைவரும் குழந்தைகளாகி மனம் விட்டுச் சிரிக்கவும் முடிகிறது. கிட்டத்தட்ட 1 .40 மணி நேரம் ஒரு நிமிடமாகக் கரைந்தது நிகழ்ச்சி முடியும்போதுதான் தெரிந்தது. பங்குபெற்ற கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்கை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
நாடகத்தின் இறுதியில் கிருட்டிணர் தாம் வந்த வேலை முடிந்துவிட்டது, திரும்பிச் செல்லப்போவதாகச் சொல்லும்போது, மாது சோகமே உருவாக, ‘போய்த்தான் ஆகவேண்டுமா கிருஷ்ணா’ என்று கேட்டு கண்கலங்கும் போது, உடன் நம்மையும் உள்ளம் நெகிழச் செய்யும் அத்தருணமே இந்நாடகத்தின் பூரண வெற்றி முழுமையாகப் புலப்படுகிறது!
‘நமது அறிவை, ஆர்வத்தை கடவுள் நமக்குக் கொடுத்த திறமையைக் கொண்டு வாசகர்களையோ, பார்வையாளர்களையோ இப்ப இருக்கும் கட்டத்தை விட்டு அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடிகிறதா அல்லது அதே கட்டத்தில்தான் அவர்களை வைத்திருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அட்லீஸ்ட் கீழே இறக்காமலாவது இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அதுதான் ஒரு படைப்பாளியின் தார்மீகமான கட்டுப்பாடாக இருக்க வேண்டும்’ என்று சமுதாய நற்சிந்தையுடன் கூறும் திரு கிரேசி மோகன் அவர்களுக்கு, ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம், இன்று பாரதி விருது வழங்கி கௌரவிப்பது சாலத்தகும்!
திரு.கிரேசி மோகன் மென்மேலும் சாதனை படைக்க வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்!
-
வேண்டுதல் வெண்பாக்கள் – சாக்லேட் – கிருஷ்ணா
கிரேசி மோகன்
வெண்ணை தயிர்பால் மண்ணை கோபியர்தம்

கண்ணை உண்ட கிருஷ்ணா -உன்னையென்
வாக்கிலெட்ட வைத்திடுவாய் வையம்காண் நாடகமாய்
சாக்லேட் கிருஷ்ணா தலைப்பு….(1)….03-02-2008சாக்லேட் கிருஷ்ணா பூஜை அழைப்பு
———————————————
கற்பகாம்பாள் சன்னிதியில்
———————————-
மகோதரன் வேலவன் மாதாவின் சன்னிதியில்
சகோதரன் சாக்லேட் கிருஷ்ணாவின் -முகாந்திர
பூசை நடக்குது நாளைமணி ஆறதற்க்கு
ஆசையுடன் எந்தன் அழைப்பு….(2)….26-4-2008பதிலுக்கு சு.ரவி எழுதியது
———————————–
தகவலே போதும் அழைப்பெதற்கு, தட்டா(து)
அகமகிழ்ந்து நான்வருவேன் தானாய்-முகில்வண்ணன்
சாக்லேட் கிருஷ்ணா வெற்றி நடைபோட
வாக்தேவி தந்தாள் வரம்….(3)….26-4-2008
———————————————————————————-
சாக்லேட் – கிருஷ்ணா வெற்றி பெற வேண்டுதல்….
—————————————————————-
அரங்கேறி ஆதி அனந்தனின் மீது
உறங்கா(து) உறங்கிடும் மாலே-அரங்கேறும்
சாக்லேட் கிருஷ்ணாவை சக்சஸ்ஃபுல் ஆக்கயென்
வாக்கெட்ட வாராய் விரைந்து….(4)….23-5-2008பதிலுக்கு சு.ரவி எழுதியது
———————————
நாடகம் நன்றாய் அரங்கேற, ஊரெல்லாம்
கூடி மகிழ்ந்து குதுகலிக்க -ஊடகங்கள்
பாராட்ட சாக்லேட் கிருஷ்ணா பவனிவர
தார்சூடி வெல்க தழைத்து….(5)….23-5-2008சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————-ஞாலத்தை உண்டுமிழ்ந்த காலத்தில் ஆலிலையில்
பாலொத்தப் பாதம் பருகியவா -சேலத்தில்
சாக்லேட் கிருஷ்ணாவை மாம்பழத்துக்(கு) ஈடாக
டாக்-ஃஆப் தி-டவுன் ஆக்கு….(6)….20-7-2008
கேசவ் சாக்லேட் கிருஷ்ணா ஓவியம் பார்த்து
——————————————————-
இடைப்பிள்ளை உந்தன் இசையில் மயங்கி
மடிப்பால் நிலத்தில் மணக்க -கடைக்காலை
கன்றென எண்ணிக் கறவை வருடிட
நின்றிடென் நெஞ்சில் நிலைத்து….(7)….12-9-2008
——————————————————கேசவ் ஓவியத்துக்கு சு.ரவி எழுதிய கவிதை படித்து எழுதியது
————————————————————————வாக்கிலெட்டா கண்ணனை வண்ணக் குளிப்பாட்டி
சாக்கலேட் ஆக்கினான் கேசவன் -பாக்குளிட்டு
பாலா பிஷேகப் பரவசத்தை சொன்னயிது
நாலா யிரத்திலொன் று….(8)….9-9-2008பாரதி விழாவுக்காக சாக்லேட் கிருஷ்ணா
போடுவதாக இருந்தது….வானவில் பண்பாட்டு மையத்திற்காக…
பாரதி வீடு சற்றே சரிந்ததால் போடமுடியவில்லை….வக்கீல் க.ரவிக்கு எழுதியது
————————————————————————————————
கண்ணனென் சேவகன் கண்ணனென் காவலன்
கண்ணனென் மந்திரி நண்பனென -சொன்னவன்
கண்ணனென் சாக்லேட் கிருஷ்ணாவாய் ஆக்கினான்
புண்ணிய மாச்சென் பிறப்பு….(9)….29-9-2008க.ரவி பதிலுக்கு எழுதிய வெண்பா
———————————————
அற்புதம் வெண்பா அடடா உனக்கிந்த
சொற்பதம் வாய்த்ததென்ன சூட்சமமோ -வெற்புக்(கு)
குடைபிடித்த வன்பேரில் கூத்து நிகழ்த்தத்
தடையின்றி பொங்கும் தமிழ்….(10)….30-9-2008சாக்லேட் கிருஷ்ணா 100வது நாடகப் பூர்த்தி
————————————————————-
நூறு முடித்திட தேரை விடுத்தவா
நூறுநா னுறில் நிலைத்தவா -நூறு
முறையெங்கள் சாக்லேட் கிருஷ்ணா படைத்த
இறையின்று போலென்றும் இரு….(11)….30-11-2008
வேலூரில் சாக்லேட் கிருஷ்ணா….
——————————————
கோலோடு, ஊது குழலோடு, கோகுலத்தார்
தோளோடு தோள்சேர்த்த தோழனே -வேலூரில்
நாடகம் சாக்லே கிருஷ்ணா நலம்காண
ஊடகமாய்க் கண்ணா உத்வு….(12)….04-01-2009ஈரோடில் சாக்லேட் கிருஷ்ணா
—————————————–
நூறோட பாரதத் தேரோட வைத்தவனே
நூறோடு நாற்பதாம் நாடகமாம் -ஈரோடில்
சீராட வைத்திடு சாக்லேட் கிருஷ்ணாவை
நாரோடு பூவாய் நுழைந்து….(13)….24-1-2009கோவையில் சாக்லேட் கிருஷ்ணா
———————————————கோவையில் சாக்லேட் கிருஷ்ணா நாடகச்
சேவையை செவ்வனே செய்திட -ஆவையும்
ஆய்க்குலப் பாவையும் மேய்த்தவா மாயனே
வாய்க்குளே வாக்காக வா….(14)….1-2-2009திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————–
ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
கருத்தநிறக் கண்ணா கோட்டை – திருச்சியில்
மாது பிளஸ்டூவில் சாக்லேட் கிருஷ்ணாவில்
தாதவிழ் பூவாய் மலர்….(15)….06-02-2009
மெச்சிட பக்தர்கள் மேதினியில் மாலவனை
குச்சுக் குடித்தனம் கொள்ளவைத்தோய் -உச்சி
மலைக்கோட்டை பிள்ளாய் மனமுவப்பீர் நாடகக்
கலைக்கோட்டை காபந்துன் கால்….(16)….07-02-2009சாக்லேட் கிருஷ்ணா 150தாவது நாடகம்
—————————————————–நூறோடு அம்பதாம் நாடகம் நாளைக்கு
தேரிடர்ந்த கண்ணன் திருவருளால் -சீரோடு
சேர்த்து சிறப்பாக்க சாக்லேட் கிருஷ்ணாவை
பார்த்தனின் சாரதி பார்….(17)….21-2-2009
கேசவ் ஓவியத்திற்கு நன்றி
———————————-
விழிகள் சொருகிட வேய்ங்குழல் ஊதி
பொழிகின்ற ஆகாசப் பாலை -எழிலுடன்
கேசவன் உண்கின்ற கோலம் வரைந்தநீர்
ஆசுகவி ஓவியன் கேசவ்….(18)….23-2-2009கோவையில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————பாவைநப் பின்னைக்காய் தாவும் எருதாண்டோய்
பாவைநப் பின்னைக்காய் ஆவை அடக்கியவா
தேவை எமக்குன் துணைகண்ணா -கோவை
நகரிலின்றும் நாளையும் சாக்லேட் கிருஷ்ணாவை
நிகரிலாத வண்ணம் நடத்து….(19)….11-04-2009பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா
———————————————–அங்குள்ள தூணில் அடங்கிக் குதித்திரண்யன்
அங்கமதைக் கீண்ட அரியுருவே -பெங்களூரில்
நாடகம் சாக்லேட் கிருஷ்ணா நடக்கையில்
மேடையில் காப்பாய் மலர்….(20)….19-04-2009சாக்லேட் கிருஷ்ணா அப்த பூர்த்தி
——————————————ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்சொல்லி
நாங்கள் நடத்திய நாடகத்தை -பாங்குற
ஓராண்டு தாண்டியும் ஓயாது ஓட்டுவது
சீராயர் கண்ணன் சவுக்கு….(21)….23-05-2009சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா
—————————————-ஞாலத்தைப் பேரூழி காலத்தில் உண்டுமிழ்ந்து
ஆலத்தில் தூங்கிய ஆழிவண்ணா -சேலத்தில்
சங்கடம் இல்லாது சாக்லேட் கிருஷ்ணாவை
மங்களம் ஆக மலர்த்து….(22)….13-06-2009
மதுரையில் சாக்லேட் கிருஷ்ணா
—————————————–
ராணி லலிதாங்கி ஸ்ரீராஜ மாதங்கி
மீன்விழியால் சொக்கனை மீறிநிற்கும்-ஆண்மகளே
கூடலில் எங்கள் குழுவின் பெயர்விளங்க
நாடகத்தை நன்கு நடத்து….(23)….05-07-2009
கோயம்புத்தூரில் சாக்லேட் கிருஷ்ணா
————————————————-கோவை சாரதா அப்பா ”கோபாலன் சார்” எழுதியது….
————————————————————————
காணவே காத்துள்ளேன் கற்பூரச் சொல்லழகா
நாணேறும் அம்பாஇ நகைச்சுவையை -மாண்புறவே
செல்ல செலுத்தியெமை சிந்திக்கச் செய்திடும்
வெல்லப்பா மோஹனமே வெல்….(24)….10-09-2009
——————————————————————————தாயன்பில் கட்டுண்ட தாமோ தராநாங்கள்
கோயம்புத் தூரில் கொடிகட்டி -ஆயனே
சீரும் சிறப்புகளும் சாக்லேட் கிருஷ்ணாவால்
நேர நிகழ்வை நடத்து….(25)….12-09-2009பாண்டிசேரியில் இரு நாடகங்கள்….
———————————————-
கோரியன வாரிக் கொடுக்கும் புதுச்சேரி
ஊரிலிரு நாடகத்தை ஓகோவாய் -தேரிருந்து
பாரதம் செய்த பரந்தாமா நீவந்து
நேரில் இருந்து நடத்து….(26)….03-10-2009கோரியன வாரிக் கொடுக்கும் புதுச்சேரி
ஊரிலிரு நாடகத்தை ஓகோவாய் -தேரிருந்து
பாரதம் செய்தமன பாரம் குறைந்திட
சேரில்(CHAIR) அமர்ந்து சிரி….(27)….03-10-2009பெங்களூரில் இரு நாடகங்கள்….
———————————————-
மங்களமாய் மார்கழித் திங்களென்ற ஆண்டாளின்
கண்களுறை காதல் கருமுகிலே -பெங்களூரில்
எங்களிரு நாடகங்கள் ஏற்றமுற, வந்தமர்ந்து
பங்குபெற வேண்டுமதைப் பார்த்து….(28)….22-10-2009பெங்களூரில் குஷா மகள் ஜானும், சு.ரவி மகள் பாரதியும்
விருந்தோம்பல் செய்ததற்கு நன்றி வெண்பா….
———————————————————————–
சோறும் ரசமும் சுவையான காய்களும்
மோரும் மணக்கும்மா காளியும் -ஜோராக
வாரிதி மேகமாய் வற்றாது தந்தது
பாரதி ஜானின் பரிவு….(29)….25-10-2009கோவையில் நாடகங்கள்….
—————————————
ஏழை குசேலன் இதயம் சிரித்திட
தோழமைக்குத் தோள்கொடுத்த தெய்வமே -ஆழிவண்ணா
கோவையில் நாடகங்கள் கோலா கலமாக
நாவில் நகைச்சுவையாய் நில்….(30)….06-11-2009காரைக்குடியில் சாக்லேட் கிருஷ்ணா
———————————————-தேரை நடத்தி தனஞ்சயனைத் தேற்றியன்று
நூறை முடித்த நவநீதா -காரைக்
குடியிலெங்கள் சாக்லேட் கிருஷ்ணா சிரிப்பு
வெடிவிருந்தை வந்து வழங்கு….(31)….13-11-2009
ஹைதராபாத்தில் சாக்லேட் கிருஷ்ணா….
———————————————————-
வைதசிசு பாலனுயிர் கொய்திட சக்கரத்தை
எய்தனை நூறிகழ்ச்சி ஏற்றன்று -ஹைதரா
பாத்திலெங்கள் சாக்லேட் கிருஷ்ணா நகைச்சுவையில்
நூத்திலொன்(று) ஆக நடத்து….(32)….04-12-2009திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா
———————————————தோப்புக் கரணமிட்டு , தந்தி சிரித்திட
சாப்பிட்ட சக்கரத்தை துப்பவைத்தோய்-காப்பாய்
திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணாவால் மக்கள்
சிரிச்சு மகிந்திடச் செய்….(33)….20-11-2009மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————-மாரதரும் மன்னவரும் நூறிடரும் பட்டழிய
வேரதிர தேரோட்டி வென்றவனே -பாரதத்தில்
ஷேக்லொட்ட பேகம் சிலிர்த்தல்போல் மஸ்கட்டை
சாக்லேட் கிருஷ்ணாவால் செய்….(34)….09-02-2010வைத்தநெய் பாலை வடிதயிரை வெண்ணையை
பொய்த்த இடையாள்நப் பின்னையை-துய்த்தவா
ஷேக்கூர் மஸ்கெட்டை சாக்லேட் கிருஷ்ணாவால்
ஷோக்காய் சிரித்திடச் செய்….(35)….09-02-2010செந்திரு ,சங்கு, சுடராழி, சாரங்கம்
நந்தகி, வைஜெயந்தி நாற்புறமும் -வந்திருக்க
மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா மதிப்புயர
யெஸ்கொட்டு கண்ணா எமக்கு….(36)….09-02-2010வலத்துறைய ஆழி ,இடத்துறைய சங்கு
தலத்திரு நூற்றெட்டு தங்கி -நிலத்திடை
உஸ்கொட்டும் பாம்பில் உறங்கும் பெருமாளே
மஸ்கெட்டில் வந்து மலர்….(37)….09-02-2010தஞ்சையில் சாஸ்த்ரா கல்லூரியில் சாக்லேட் கிருஷ்ணா….
————————————————————————–
வெஞ்சிறை தோன்றி விடிவதற்குள் ஆய்ப்பாடி
தஞ்சம் புகுந்த திருமாலே -தஞ்சையில்
சாஸ்திரா காலேஜை சாக்லேட் கிருஷ்ணாவால்
ஹாஸ்யத்ரா காலேஜாய் ஹாக்கு….(38)….05-03-2010விக்குருதி ஆண்டு வேண்டுதல்….
—————————————-
திக்கிறுதி கண்டதிரு விக்கிரம வாமனனே
அக்குறத்தி நாயகன் மாமனே -விக்குருதி
புத்தாண்டில் நாங்கள் புதுநா டகம்போட
மத்தாண்ட விட்டலா மேய்….(39)….13-04-2010சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா….
———————————————
வேலொத்த கண்மாதர் சேலை பறித்தாண்கள்
பாலுற்ற பாஞ்சாலி மேலளித்தோய் -சேலத்தில்
சாக்லேட் கிருஷ்ணா சிறப்பாய் நடத்தஅங்கு
கோகுலக் குட்டனே GO….(40)….08-05-2010பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா….
————————————————-
செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
சிங்கமே எங்களின் சாக்லேட் கிருஷ்ணாவை
பெங்களூரில் வந்தமர்ந்து பார்….(41)….15-05-2010செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
சிங்கமே பெங்களூரில் எங்களிரு நாடகத்தால்
அங்குளோரை ஆனந்தம் ஆக்கு….(42)….15-05-2010
கிரேசி கிரியேஷன்ஸ் 31வது ஆண்டில் நுழைந்தபோது
——————————————————————கண்ணன் அருளால் கிரேசி கிரியேஷன்ஸ்
முன்னம்கால் வைக்குது முப்பத்தி -ஒண்ணிலே
இன்னுமோர் நூற்றாண்டு இக்குழு கண்டிட
எண்ணுவோர்க்(கு) என்நன்றி இன்று….(43)….6-9-2010எழுபத்தி ஒன்பதில் ஒன்றாய் இணைந்து
முழுபக்தி கொண்டு முனைந்து -உழவொத்து
முப்பத்தி ஓராண்டு முப்போகம் கண்டது
ஒப்பற்ற நட்பின் உயர்வு….(44)….7-9-2010
மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————-மாரதரும் மன்னவரும் நூறிடரும் பட்டழிய
வேரதிர தேரோட்டி வென்றவனே -பாரதத்தில்
ஷேக்லொட்ட பேகம் சிலிர்த்தல்போல் மஸ்கட்டை
சாக்லேட் கிருஷ்ணாவால் செய்….(45)….09-02-2010வைத்தநெய் பாலை வடிதயிரை வெண்ணையை
பொய்த்த இடையாள்நப் பின்னையை-துய்த்தவா
ஷேக்கூர் மஸ்கெட்டை சாக்லேட் கிருஷ்ணாவால்
ஷோக்காய் சிரித்திடச் செய்….(46)….09-02-2010செந்திரு ,சங்கு, சுடராழி, சாரங்கம்
நந்தகி, வைஜெயந்தி நாற்புறமும் -வந்திருக்க
மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா மதிப்புயர
யெஸ்கொட்டு கண்ணா எமக்கு….(47)….09-02-2010வலத்துறைய ஆழி ,இடத்துறைய சங்கு
தலத்திரு நூற்றெட்டு தங்கி -நிலத்திடை
உஸ்கொட்டும் பாம்பில் உறங்கும் பெருமாளே
மஸ்கெட்டில் வந்து மலர்….(48)….09-02-2010விக்குருதி ஆண்டு வேண்டுதல்….
—————————————-
திக்கிறுதி கண்டதிரு விக்கிரம வாமனனே
அக்குறத்தி நாயகன் மாமனே -விக்குருதி
புத்தாண்டில் நாங்கள் புதுநா டகம்போட
மத்தாண்ட விட்டலா மேய்….(49)….13-04-2010பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா….
————————————————-
செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
சிங்கமே எங்களின் சாக்லேட் கிருஷ்ணாவை
பெங்களூரில் வந்தமர்ந்து பார்….(50)….15-05-2010செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
சிங்கமே பெங்களூரில் எங்களிரு நாடகத்தால்
அங்குளோரை ஆனந்தம் ஆக்கு….(51)….15-05-2010ஹைதராபாத்தில் நாடகம்….
————————————
பெய்தவாளி ஏற்றன்று பார்த்தனின் சாரதியாய்
ஐதரப்பு வெல்லமகா பாரதத்தை -நெய்தவா
ஹைதரா பாத்தையே ஆனந்த பாத்திலாழ்த்த
செய்திட வேண்டுமெங்கள் ஜோக்கு….(52)….30-09-2010வைதசிசு பாலன் வசைநூறு தாண்டிட
கைதவழ் சக்கரத்தால் கொன்றவா -ஹைதரா
பாத்திலெங்கள் நாடத்தைப் பார்த்தவர்கள் நெஞ்சிலே
பூத்திடச் செய்நகைப் பூ….(53)….30-09-2010அயோத்தியார் பக்கமென்ற ஹைகோர்டின் தீர்ப்பால்
வயோதிகம் காணும் வழக்கு….(54)….30-09-2010நேந்திரங்காய் கேரளத்தில் நீகுரு வாயூரன்
பாண்டுரங்கன் பண்டரியில் பக்தர்க்காய் -ஆந்திராவில்
ஆவென நாடகத்தால் ஆடியென்ஸ் வாய்பிளக்க
தேவுடு காமெடியாய்த் தோன்று….(55)….30-09-2010
கிரேசி கிரியேஷன்ஸ் 31வது ஆண்டில் நுழைந்தபோது
——————————————————————கண்ணன் அருளால் கிரேசி கிரியேஷன்ஸ்
முன்னம்கால் வைக்குது முப்பத்தி -ஒண்ணிலே
இன்னுமோர் நூற்றாண்டு இக்குழு கண்டிட
எண்னூவோர்க்(கு) என்நன்றி இன்று….(56)….6-9-2010எழுபத்தி ஒன்பதில் ஒன்றாய் இணைந்து
முழுபக்தி கொண்டு முனைந்து -உழவொத்து
முப்பத்தி ஓராண்டு முப்போகம் கண்டது
ஒப்பற்ற நட்பின் உயர்வு….(57)….7-9-2010ஹைதராபாத்தில் நாடகங்கள்….
—————————————-நேந்திரங்காய் கேரளத்தில் நீகுரு வாயூரன்
பாண்டுரங்கன் பண்டரியில் பக்தர்க்காய் -ஆந்திராவில்
ஆவென நாடகத்தால் ஆடியென்ஸ் வாய்பிளக்க
தேவுடு காமெடியாய்த் தோன்று….(58)….30-09-2010
கோவையில் சாக்லேட் கிருஷ்ணா….
———————————————
அய்யனே, ஆயர்தம் பையனே, ஆழிசங்குக்
கையனே, அந்தரான்மா காண்போர்க்கு -மெய்யனே
கோவையில் சாக்லேட் கிருஷ்ணா ஜெயித்திட
தேவையுன் பக்கத் துணை….(59)….25-12-2010கோயம்புத்தூரில் நாடகம்
———————————-
தாயன்புக்(கு) உட்பட்ட தாமோ தரனேநீ
காயம்பத்(து) ஏற்றோய் கலிதீர்க்க -கோயம்பத்
தூரிலெங்கள் நாடகத் தூறல் மழையாக
நேரில்வா நீர்வண்ண னே….(60)….07-01-2011கும்பகோணத்தில் சாக்லேட் கிருஷ்ணா
————————————————-
குடம்குடமாய்ப் பால்வெண்ணெய் கோகுலத்தில் உண்டு
அடர்ந்தானாய் ஆரா அமுதாய் -கிடந்தாய்
குடந்தையில் சாக்லேட் கிருஷ்ணா சிரிப்பாய்
நடந்திட வேண்டும் நகைத்து….(61)….16-01-2011
டெல்லியில் சேஷாத்திரி சபா ”நாடக ரத்னா”
விருது தந்த போது….
———————————————————-தலைநகரில் நாளை தருகிறார்கள் பட்டம்
கலைநா டகரத்னா கண்ணா -அலைநகரும்
பாற்கடல் தன்னில் படுத்த பெருமாளே
நேர்கடன் பட்டேன் நினக்கு….(62)….04-03-2011(ALTERNATIVE வெண்பா)
————————————
தலைநகரில் நாளை தருகிறார்கள் பட்டம்
கலைநா டகரத்னா கண்ணா -மலைநகர்த்தி
சுண்டு விரலில் சுமந்த கடவுளுனை
விண்டு வழுத்தல் விருது….(63)….04-03-2011டெல்லி குளிரில் நடுங்கிய போது
———————————————
நாடக ரத்தினாவை நான்பெற டெல்லியில்
வேடமிட்டேன் கம்பளி ஆடையில் -பாடாய்
குளிரெனைக் கொல்லுது குன்றேந்தி கண்ணா
தளிர்விரலால் முன்போல் தாங்கு…(64)….05-03-2011இரா.முருகன் பதில் வெண்பா
————————————-
தெம்பாய் கரம் கஜர்கா ஹல்வாவும்
சொம்பில் ருசியான காப்பியும் -நம்பியே
துளிராக வெற்றிலையும் நாமணக்க மென்றால்
குளிர்போகக் கொள்வீர் விருது….(65)….05-03-2011கோவையில் மீசை ஆனாலும் மனைவி….
—————————————————
சங்கு சுடராழி சாரங்கம் நந்தகி
அங்கை தனிலேந்தும் அச்சுதா -கொங்கிலே
மீசையா னாலும் மனைவிக்குக் கைத்தட்டல்
ஓசை இடவை உரத்து….(66)….26-03-2011ஆவினைக் காக்கவன்று கோவர்த் தனக்குன்றை
பூவினைப் போல்சுமந்த பாலகா -கோவையில்
மீசையா னாலும் மனைவியை மக்களின்
ஓசை சிரிப்பால் உயர்த்து….(67)….27-03-2011கடலூரில் டாக்டர் விஜயராகவனுக்காக ”சாக்லேட் கிருஷ்ணா”….
————————————————————————————
படம்பத்து நூறுகொண்ட பஞ்சணையில் சாய்ந்துபாற்
கடலூரில் கண்வளரும் கண்ணனே -கடலூரில்
கூடியோர் சாக்லேட் கிருஷ்ணாவை உச்சியில்
சூடிடச் செய்வாய் சிரித்து….(68)….30-03-2011பெங்களூரில் மதில்மேல் மாது & அல்லவுதீன்….
————————————————————
தோலை வெளுக்கத் திருட்டுத் தயிர்வெண்ணை
பாலுக்(கு) அலைந்த பரம்பொருளே -நாளைகர்
நாடகாவில் எங்களிரு நாடகங்கள் வெற்றியை
நாட அருள்செய்வாய் நன்கு….(69)….15-04-2011பெங்களூரில் ”மாது பிளஸ் டூ & மீசை ஆனாலும் மனைவி”….
——————————————————————————–
பங்குபெற பாண்டவர்க்காய் பாரதம் செய்தவனே
சங்குகர சுற்றும்கை சக்கரனே -எங்களிரு
பெங்களூர் நாடகங்கள் பேஷாகப், பண்டரியில்
செங்கலேறி நின்றோய் சரண்….(70)….20-05-2011உன்நடத்தைக் கண்டன்னை உன்னை உரலிலிட
முன்னிடந்து சென்று மருதொடித்தோய் -கன்னடத்து
பெங்களூரில் எங்கள் ”பிளஸ்டூக்கும் மீசைக்கும்”
பொங்கிடச் செய்வாய்கும் பல்….(71)….20-05-2011சங்கர நாரண சங்கம சாஸ்தாக்கு
கொங்கை அமுதளித்த கோபாலா -எங்களின்
ஹாஸ்யம் சவுடையா ஹால்வரு வோரினட்ட
காஸ்ய சிரிப்பாயாக் கு….(72)….20-05-2011முன்னூர்ந்து தேரில் மகாபா ரதம்செய்து
முன்நூறை ஐந்துக்காய் மாளவைத்தோய் -முன்னூறு
ஐம்பதுக்கும் மேல்தாண்டி ஆடியன்ஸை சாக்லேட்டால்
மெய்மறக்கச் செய்வாய் மகிழ்ந்து….(73)….23-05-2011திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா….
————————————————
உச்சிமலைக் கோட்டை ஒருகொம்பன் உத்தியினால்
மச்சுமதில் காவிரிசூழ் மாநகர்வாழ் -கொச்சுரங்கா
சாக்லேட் கிருஷ்ணா சிரிப்புமழை பெய்திடனும்
ROCKFORTடில் நாளைக்கு ராவு….(74)….22-09-2011ஈரோடு, கோவையில் நாடகங்கள்….
———————————————–
போராடும் பாண்டவர்க்காய் பாரதம் செய்தன்று
நூறோட வைத்த நவநீதா -ஈரோடு
கோவையில் நாடகங்கள் கோலா கலமாக
தேவையுன் பேரா தரவு….(76)….07-10-2011 -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
ஹரிச் சுவடி
—————-அந்தரி அண்ணா கோவிந்தா
ஆவுடை அப்பா கோவிந்தா
இந்திர லோகம் கோவிந்தா
ஈ கொசு எனக்கு கோவிந்தா
உந்தன் மலையில் கோவிந்தா
ஊர்வேன் புழுவாய் கோவிந்தா
எந்த நாளுமே கோவிந்தா
ஏகாந்த சேவை கோவிந்தா
ஐந்து பொறிகட்கு கோவிந்தா
ஐயமிட்டிடு கோவிந்தா
ஒன்றி உரைப்போம் கோவிந்தா
ஓம் நம நாரண கோவிந்தா…. -
‘நான் -யார்’ ரமண வழி வெண்பாவாக்கம்….
கிரேசி மோகன்
‘நான் -யார்’ ரமண வழி வெண்பாவாக்கம்….
————————————————————————–வாழும் உயிர்கள் விரும்புவது ஆனந்தம்,
சூழுமா னந்தமுன் சொரூபமே, -பாழும்
மனமில்லா தூக்கத்தில் மாசற்ற இன்பம்,
வினவு ‘நான் யார்’தான் வழி…தூல உடலோடு துய்த்திடும் ஐம்புலன்கள்,
கோலமதைக் காக்குமைம் காவலர்கள், -காலதேச
சேதி உணர்வற்ற ஜீவனும்நீ அல்ல
நேதிநேதி செய்தமீதி நீ….களவுமனம் நீங்கும் களைப்புற்று, கூட்டுக்
களவாணி புத்தி குலையும், -உலகம்
பழுதில் படர்ந்திடும் பாம்பென்(று) அறிவாய்;
கழுதைக்கு கற்பூரம் காட்டு….மந்திர வாதிமனம் மந்திமனம், எண்ணத்தை
உன்திறனாய்க் காட்டும் உலுத்தனவன், -தந்திரமாய்
எண்ணத்தைப் போக்கடித்து ஏதுமனம் என்றுணர்ந்து
பின்னத்தைப் பூரணத்தில் பார்…எண்ணியதால் வந்ததே ஏழுலகும், தூக்கத்தில்

கண்ணிமைகள் மூட ககனமில்லை, -நின்னயர்வு
சொப்பனத்தில் தோன்றிடும், ஜாக்ரத்தில் ஊன்றிடும்
இப்புவிக்கு இல்லை இருப்பு….வீட்டுச் சிலந்தி வலையுமிழ்ந்து தன்னுள்ளே
மீட்டுக்கொள் ளல்போல் மனச்சிலந்தி, -காட்டிய
உலகை கபந்தனாய் உண்டு மறைத்து
கலகம் புரியும் கனவு….தானாயும் தூங்காது, தள்ளிப் படுக்காது,
போ!நாயே என்றாலும் போகாது, -ஆணாய்,
அழகாய், அருவருப்பாய் அத்வைதம் போக்கிப்
பழகும்நான் யாரென்று பார்….மூலம் இதயத்தில், நிர்மூலம் உதயத்தில்,
வேலையோ செப்பிடு வித்தையாம், -தோலை
உபாசிக்கும் ‘நானை’ , உதாசீனம் செய்ய
சபாபதிக்(கு) ஈடாய் சமம்….எந்திரமாய் ‘நான்நான்’ எனவுள் ஜபித்தாலும்
மந்திரத்தில் மாங்காய் முளைத்தலாய், -பொந்திதய
மூலத்தில் போய்மனம் முங்கி மறைந்திடும்:
தாளத்தை மாற்றத் தவம்……கிரேசி மோகன்…. -
அக்கமகாதேவி
கிரேசி மோகன்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு
————————————————-சைவதிற்(கு) ஆண்டாள், சிவனின் மனம்புரிந்த
மொய்விரித்தக் கூந்தலால் மேனிமூடும் -தெய்வத்தாய்
அக்கமகா தேவியே அம்மல்லி கார்ஜுனரை
சொக்கவைத்தத் தோழி சரண்….(0)….
——————————————————————மனத்தலையைக் கொய்து மயானத்தில் நித்தம்
தனித்தலையும் தேவாதி தேவன் -பனிதலையன்
சென்னமல்லி கார்ஜுனன் சேவடி சேர்ப்பிக்க
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(1)….கோலுக்குக் குரங்காக நூலுக்கு பொம்மையாய்
தோலுக்குள் ஆடுகிறான் தாண்டவம் -மேலுக்கு
சென்னமல்லி கார்ஜுனன் சொன்னபடி ஆடினால்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(2)….கரங்களில் ஓடு கிராமத்தில் பிச்சை
கிறங்கிட பாழடைந்த கோயில் -குரங்கென
சென்னமல்லி கார்ஜுனனை சிக்கென்(று) அணைத்திட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(3)….கணுவில் கசப்பாய் கரும்பில் இனிப்பாய்
அணுவிற்குள் அண்டத்தை ஆளும் -குணவானாம்
சென்னமல்லி கார்ஜுனனை என்னசொல்லிச் சேர்ந்தாலும்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(4)….மன்ணில் புதையலாய் மாங்கனியில் தீஞ்சுவையாய்
உன்னில் உணர்வாய் ஒளிந்தமுக் -கண்ணனவன்
சென்னமல்லி கார்ஜுனரின் சர்வ வியாபகமே
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(5)….
புல்லினோடு பச்சையாய் பூவினோடு வாசமாய்
கல்லினோடு கெட்டியாய்க் குந்தியவன் -‘எல்லிநோடு’
சென்னமல்லி கார்ஜுனரை சிந்தை நினைந்திட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(6)….மன்றாடி வாழ்வோர்க்கும், அன்றாடங் காய்ச்சிக்கும்
தின்றாடி தீர்ந்தபின் துக்கம்தான் -மன்றாடி
சென்னமல்லி கார்ஜுனராம் அன்னமள்ளி உண்டிட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(7)….சாவில் பறிபோகும் சாசுவதம் எல்லாமே
ஆவி பிரியும்முன் அக்கமகா -தேவியின்
சென்னமல்லி கார்ஜுனரை சென்னியள்ளிச் சூடிட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(8)….
கூத்தாடும் வேளையில் கோவணம் போனது
தோத்தாடும் நேரத்தில் தான்தெரியும் -மாத்தாடு
சென்னமல்லி கார்ஜுனரின் கன்னலொலி நாமத்தை
உன்னையள்ளுக் கொள்ளும் உவப்பு….(9)….திகம்பர ஆடை திருநீறு வாடை
அகம்புறத்தில் நீராடும் மேடை -சுகம்பெறும்
சென்னமல்லி கார்ஜுனரின் சாரணர்க்கு சேவகம்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(10)….சூரணம் ஆயிரம் சூழப் படுக்கையில்
தேறணும் தேகமென்று தேம்பிடாது -நீறணி
சென்னமல்லி கார்ஜுனனின் எண்ணிலாத பேர்சொல்ல
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(11)….உமிக்குநீர் ஊற்ற உயருமோ நெல்லாய்!
குமித்த பழவினைகள் குன்றும் -நிமித்தமாய்
சென்னமல்லி கார்ஜுனரின் எண்ணமல்லி வாசத்தால்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(12)….வாழை வனம்புகுந்து பாழும் வினைகளைந்து
ஆழ வசனித்த அக்கம்மா -தோழனாம்
சென்னமல்லி கார்ஜுனரை சிந்திக்க சித்திக்கும்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(13)….தேடிக் களைத்துள்ளம் வாடி வதங்கிட
கோடிக்கை கொண்டாலும் காட்டிடுவான் -வேடிக்கை
சென்னமல்லி கார்ஜுனரின் சேவடி ஜோடிதான்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(14)….நெய்தடவும் மீசையும் பொய்தடவும் பாஷையும்
மைதடவும் மங்கையும், மூப்புற -கைவிடுமே!
சென்னமல்லி கார்ஜுனரால் சின்னவய சாகிடுவாய்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(15)….உடம்பை வளர்த்து உயிரை தளர்த்த
இடம்பிடிப்பாய் ஸ்ரீசைல ஈசன் -குடும்பத்தில்
சென்னமல்லி கார்ஜுனம் சொன்னவண்ணம் ஊர்ஜிதிக்க
உன்னயள்ளிக் கொள்ளும் உவப்பு….(16)….வெக்கமென்ன மானுடா அக்கமகா தேவியின்
சக்களத்தி ஆகிநீ சண்டையிடு -அக்கணமே
சென்னமல்லி கார்ஜுனம் என்னதிது என்றுவர
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(17)….காமனிடம் கால்பிடித்துக் கெஞ்சாதே, கையேந்தி
சோமனிடம் பிச்சைக்குச் செல்லாதே -ஷேமமாய்
சென்னமல்லி கார்ஜுனர்முக் கண்ணசையக் காதலாய்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(18)….பொய்யடைத்துப் பேசி பொருள்குவித்துப் போகுங்கால்
கையெடுத்துப் போகுமோ கூன்முதுகா -உய்படுத்து
சென்னமல்லி கார்ஜுனரின் சன்னிதியில் நிம்மதியாய்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(19)….ஆர்ப்பரித்து ஓடிவந்த ஆகாச கங்கையின்
நீர்பரப்பை வார்சடையால் நேர்படுத்தி -பார்விடுத்த
சென்னமல்லி கார்ஜுனரின் சீதளம் சீர்படுத்த
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(20)….திருநீறு மஞ்சள், திகம்பரம் ஆடை
குருபாத தீர்த்தம் குளியல் -மறுநாளை
சென்னமல்லி கார்ஜுனரின் சித்தமென்று சாய்ந்திருக்க
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(21)….சொப்பன வாழ்விது கொப்பள நேரம்தான்
எப்போ(து) உடையுமென்(று) யாறிவார் -அற்புதம்
சென்னமல்லி கார்ஜுனன் சுண்டு விரலசைய
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(22)….வசமான லிங்க எசமானன் மீது
பசவண்ணன் சிஷ்யை புகன்ற -வசனத்தை
சென்னமல்லி கார்ஜுனரின் சன்னிதியில் செப்பிட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(23)….மாற்றான் வனச்சென்ன மல்லியே ஆனாலும்
நோற்றாளக் கம்மா நமக்காக -போற்றுஅச்
சென்னமல்லி கார்ஜுனரை சொன்ன வசனத்தால்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(24)….ஏகனை, தேவியுமை பாகனை, தேவாரப்
பாகனை, அக்கம்மா ராகனை, -மோகனை
எண்ணியிரு பத்தைந்து பண்ணிசைக்கச் சொன்னவனை
சென்னமல்லி கார்ஜுனனைச் சூடு….(25)….கிரேசி மோகன்….
—————————————————————————————படங்களுக்கு நன்றி ; http://solvanam.com/?p=10377
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
அவரவர்(ஜீவாத்மா) கட்டை விரல் அளவுக்கு(அங்குஷ்டாப்யாம்) பரமாத்மா ‘’ஹ்ருதய குகை வாஸியாய்’’ இருப்பதாக ஐதீகம்….கேசவ் கைவிரல்கள் வரைந்த கட்டை விரல் பரமாத்மா கிளாஸ்….
அங்குஷ்டாப்யாம்
———————-“வீணாய் இலைகளும் வேர்களும் இல்லாது
தானாய் முளைக்கும் மரமிவன் -நானார் ?
உரலில் தலைவிட்டு ஓவென்(று) அழுதால்
விரலளவு ஆகும் வியப்பு”….கிரேசி மோகன்…. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஆனை படுப்பது அச்சுதற்கு மட்டுமே,
தேனை கறவை திருடுது, -பூனை,
கிசோரத்தை ஒத்து கிஷோரின் பதத்தில்,
விசாரத்தை விட்டு விழு”….கிரேசி மோகன்….பூனை கிசோரம் -பூனைக் குட்டி ந்யாயம்….பகவான் பாத்துப்பார்….
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“துலாபாரத் தட்டில் துளசி அமர,உலாபோறான் கண்ணன் உயரே, -விலாநோக,மூச்சடக்கி யோகம் முயல்வதேன் மூடனே,கூச்செறியும் பக்தியே காப்பு”…..கிரேசி மோகன்…. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
பீஷ்மரின் நோயென்ற மரணத்தில் பிறந்தது நமது பிறவிப்பிணி தீர்க்கும்
“விஷ்ணு சகஸ்ரநாமம்” என்ற மருந்து….பாரத ‘கதாம்ருதம்’ இதுதான்….“கதாமகன் பாகவதக் கண்ணன் மடியில்,
பிதாமகர் பீஷ்மர் புலமைக், -கதாம்ருத,
மாய்ப்பிறந்த ஆயிரம்நா மாக்களைப் பாடிட,
நோய்மருந்(து) ஆச்சு நமக்கு”….கிரேசி மோகன்…. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
”ஒருவர் படுக்க இருவர் அமர
வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில்
பொய்கைபேய் பூதத்தார் பின்னிப் பிணைந்திட
செய்த மழையோன் சரண்”….”சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
எந்தையே ஏகப் பரம்பொருளே -விந்தையே
தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்
சீராக ஆடிடும் சேய்”….”காயாம்பூ வண்ணத்தை கற்றோர்தம் எண்ணத்தை
ஆயர்தம் சின்னத்தை மண்ணையுன் -ஓயாத
மாயத்தை ஒப்பில்லா சீயத்தை நேயத்தில்
தாயொத்த தாயத்தைத் தேடு”….கிரேசி மோகன்…. -
மாட்டுப் பொங்கல்….
-
ஆன்ம கண்ணன் -ஜீவன் ராதை….
கிரேசி மோகன்
அருணாசல அன்பர் திரு.G.காமேஸ்வரன் இந்த ஓவியத்தை அனுப்பினார், வெண்பா எழுத பணித்து….“கோடாக நீரில் கிழித்தாலும் , நிச்சலன , –
ஆடாத நெஞ்சிலே ஆண்டாள்கண் -ணாடிபோல் ,-
ஆற்றில் கிருஷ்ண அனுபவம் கொள்வதற்கு ,-
நோற்றனள் மார்கழி நோன்பு “….கிரேசி மோகன்….“பிம்பமாய்க் கண்ணன் பிரதிபிம்ப மாய்ராதை –
அம்பலம் ஆனது ஆற்றுநீர் ; -தம்பலத்தை –
ஆத்துநீரில் ஆடொன்று பாத்து சிலிர்த்ததாம் –
ஆத்துமாதான் சிங்கமென்(று)அம் மே “….கிரேசி மோகன் ….அம்பலம் -கோவில் ….ஆட்டுமந்தையில் கலந்து விட்ட சிங்கம் பழக்க தோஷத்தால் ‘’மே’’ என்று கனைத்துத் திரிந்ததாம்….எதேச்சையாக ஆற்று நீரில் தன் பிம்பம் சிங்கமாய் இருப்பது கண்டு தன் சொரூபம் உணர்ந்து கர்ஜித்ததாம்….மந்தைவெளி அகந்தை ஆடு நாம்….நம்முள் இருக்கும் நரசிங்கமே கண்ணன்….இதை உணரவைக்கும் ஆற்று நீரே தெளிவான அசலன குரு….உபயம் பகவான் ஸ்ரீ ரமணர்…. -
பொங்கல் நல்வாழ்த்துக்கள்….
கிரேசி மோகன்
”எத்தைநாம் செய்தாலும் பித்தம் தெளியாது,
இத்தரை வாழ்வின் இயல்பது: -இத்தையில்,
அத்தைதன் மீசைக்கும், ஆச்சரியம் கொள்ளாதே,
சித்தத்தின் பொங்கல் சழுக்கு(குற்றம்)”….”கங்குலைப் போக்கும் கதிரவா தைத்திங்கள்,
பொங்கலை வைத்துப் பணிகின்றோம்: -எங்களுள்,
பொங்கிடும் காமத்துப் பாலைத் தணித்திடு,
சங்கராந்தி சூர்யா சரண்”….கிரேசி மோகன்….




















