கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
பீஷ்மரின் நோயென்ற மரணத்தில் பிறந்தது நமது பிறவிப்பிணி தீர்க்கும்
“விஷ்ணு சகஸ்ரநாமம்” என்ற மருந்து….பாரத ‘கதாம்ருதம்’ இதுதான்….
“கதாமகன் பாகவதக் கண்ணன் மடியில்,
பிதாமகர் பீஷ்மர் புலமைக், -கதாம்ருத,
மாய்ப்பிறந்த ஆயிரம்நா மாக்களைப் பாடிட,
நோய்மருந்(து) ஆச்சு நமக்கு”….கிரேசி மோகன்….


ஆயிரம் நாமங்களும் அள்ளிதரும் சேமங்களோடு
பிறவிபிணி போ(க்)குமே