Category: திருமால் திருப்புகழ்

பெருமாள் திருப்புகழ்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170831 -Radha Krishna -lr
    ஆலிங் கனித்தராதை தோளிங்க நர்த்தனத்தால்
    காளிங்கக் காட்சி கவனத்தில் – மாலிங்கு
    காதல்கூத் தாடுகிறான், காண்டீ பனைமறந்து:
    கீதையா! ராதையா! கூறு!’’….!

    நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
    நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
    வளிசொல்லி வேணு விட்டலனை வாழ்த்தி
    களிகொள் அடியார்தம் கூட்டு….

    நாவல் நிறத்தனே நாலாயிரம் போற்றிடும்
    காவலில் தோன்றிய கண்ணனே -ஆவலால்
    விட்டகன்றாய் அத்வைதம் வந்தாய் விசிஷ்டனாய்
    வெட்டுநீ துண்டிரெண்டா வோம்….

    ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன்
    ராதை கழுத்தென்னும் சங்கை – போதை
    தலைக்கேற கண்ணனவன் தோளைத் தழுவி
    வளைக்கரத்தால் தூதுவிட்டாள் WAR….!

    பார்த்தோர் பசுமையாய் பாராதோர் பூதமாய்
    சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய் -ஆர்த்தொலிக்கும்
    சங்கில் மவுனமாய் சக்கரத்தில் சீற்றமாய்
    எங்கும் திகழ்வோனை ஏத்து….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    ’’பூம்பூம்பூம் மாட்டுக்காரன் பாற்கடல் ஓரத்தில்
    ஜாம்ஜாம்னு வந்தான் ஜனித்திட-ஓம்ஓம்ஓம்
    நாரணன் பேரு , நவநீதம் உண்டதை
    ஜீரணிக்க விட்டெழுந்தான் சேச்சு(சேடன்)’’….!

     
    ‘சந்தேகம் யார்க்கென்று சற்றேனும் சந்தேகி!
    வந்தேகிச் செல்லும் விளையாடி -உன்தேகம்
    பொய்யென்(று) உணர்ந்து புகலடை யாதவன்கால்
    மெய்யுணர் மானுட மாடு’’….கிரேசி மோகன்….

    தொட்டகுறை ஆத்திகம் விட்டகுறை நாத்திகம்
    நட்டவிதை உள்ளிருக்கும் தெய்வீகம் -எட்டஅதை
    சுட்ட பழமாகி சுடாத பழங்களில்
    பட்டும் படாமல் பருகு….!

    அமுதா! அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
    எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
    பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்
    சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_3467
    கரதூ ஷணர்கள் பரலோகம் செல்ல

    நரவேஷம் இட்டாய்கண் ணர்முன் -வரவர்ஷம்(வர மழை)

    அண்டர்கோன்(இந்திரன்) கர்வமாய், ஆவினம் காத்திட

    சுண்டுவிரல் கொண்டாய்கல்(கல் -கோவர்த்தன கிரி)….!

    KEY -SOLYUTION….!

     

    கொட்டும் மழைக்குக் குடையாகக் குன்றினைச்

    சுட்டு விரலால் சுமந்தவா -திட்டம்

    உனக்குண்டோ என்னை உருப்படியாய் ஆக்க

    குணக்குன்றே கொள்ளுந்தன் கீழ்….

     

    ‘போலெ’ன்(று) உவமை புகல முடியாது

    மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று

    சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா

    எந்தனை வேறுவடி வாக்கு….

     

    பிறந்து புவியில் பிருந்தா வனத்து

    விருந்தைப் பறிமாற வாராய் -மறந்துபோய்

    எங்குநீ தோன்றினும் ஏழைநான் ஏங்கிடும்

    மந்தை வெளியிலிரு வந்து….!

     

     

     
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    -கிரேசி மோகன் 

    krishna

    இடைப்பிள்ளை உந்தன் இசையில் மயங்கி
    மடிப்பால் நிலத்தில் மணக்க – கடைக்காலை
    கன்றென எண்ணிக் கறவைகள் சுற்றிட,
    நின்றிடென் நெஞ்சில் நிலைத்து….!

    எழில்நீல வண்ணம் , பொழில்வேணு கானம் ,
    தொழில்காதல், தாமரைத் தொப்புள் – சுழியில்
    உலகெலாம் உண்டு, அலைகடல் நீந்தும்
    அலகிலாக் கண்ணன் அழகு….!

    வேணு இசைக்கையில் வெண்ணெய் புசிக்கையில்
    வானில் வரைதூக்கி நிற்கையில் – ஊணும்
    ஒருகால் உதவ , மறுகால் தயாராய்
    ஒருகால் குரல்வருமுன் கேட்டு…. 

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170827 -Dialogue with Arjuna -lr

    மீசைக்கு பாரதியார், ஆசைக்கு ருக்மணி,
    பூசைக்கு ஆழ்வார்கள் பாசுரம், -ஓசைக்கு
    வெண்சங்கின் ஓங்காரம், வெற்றி உனக்குத்தான்
    உன்சங்கு கீதை உரை’’….!

    மூண்ட சமர்தனில் மாண்ட உறவுகள்
    மீண்டெழுந்து கண்ணனை கெக்கலிக்க, -பூண்டோடு
    பாயாசம் சேர்ந்தாற்போல், வெற்றியில் வாடைவர,
    ஆயாச மானார் அவர்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170826 -Vatsalya -sparrow -lr
    ”கன்றுக்கு பாதம், குருவிக்கு பாதாமும்
    இன்று கொடுத்திடும் இச்சேய்தான் -அன்று
    அணிலின் முதுகை அலங்கரித்த ராமர்:
    கணுவில்வாத் ஸல்யக் கரும்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     
    cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
    mouseயிக வாகனா மோதகா -houseனுள்
    வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
    தாராய் அறிவில் தெளிவு….
    பொன்மகள் அமர்ந்து பாத பங்கயம் பிடித்திட
    பொன்னிசூழ் அரங்கில் ஆதி சேடனார் படுக்கையில்
    தென்னிலங்கை வென்ற சோர்வில் கண்துயின்றவன் புகழ்
    பண் சிறக்க பாரதம் வடித்த வாரணம் சரண்….

    பிள்ளையார் பதினாறு
    —————————-
    ஷோடஸ நாயகர்
    ———————-

    பிள்ளையார் பிறப்பு
    ———————–
    நீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு
    ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக
    மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்
    ஞானி வினாயக னை….()….

    ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்
    பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்
    தள்ளிய பிள்ளை தலையைத் தகப்பனரன்
    கிள்ளியங்கு வைத்தான் கஜம்….()….

    ஸுமுகர் (பெரியவா ”அருள் வாக்கு’’ படித்துவிட்டு எழுதியது)….!
    ———–
    சிரித்த வதன ஸுமுகரைப் போற்ற
    விரித்த வலைவெவ் வினையை -அறுத்து
    இழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய்
    அழைத்திடுவாய் அவ்வை அளவு….(1)….

    ஏகதந்தர்
    ———–
    சோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும்
    யோகம் விரும்பிட ஏற்றிவிடும் -ஏகதந்தன்
    காப்பிருக்க கற்பூரம் கூடவேண்டாம், காரியக்கை
    பூப்பறிக்கும் உன்வீட்டில் பார்….(2)….

    கபிலர்
    ——–
    சிந்தூர வண்ணனை சித்தி அருளேக
    தந்தன் கபிலனைத் தோத்தரிக்க -வந்த
    கருத்ததெல்லாம் பாலாக, கண்முன் விலகும்
    வருத்தமெலாம் சாயம் வெளுத்து….(3)….
    கஜகர்ணகர்
    —————
    கஜகர்ணம் மற்ற கடவுளர்க்கு போட
    நிஜவர்ணம் காட்டும் நெகிழ்ந்து -கஜகர்
    ணகர்கபிலர் காதினில் நாத்திக பூசை
    பகர்அப லைக்கும் பலன்….(4)….

    லம்போதரர்
    ————–
    சம்போ மகாதேவர் செய்த தலைப்பிள்ளை
    லம்போ தரனால் லகுவாக -வம்போடு
    தும்பும் விலகும் துதிக்கை விரட்டிடும்;
    நம்பாள் கஜகர் ணகர்….(5)….
    விகடர்
    ———–
    மகுடம் தரித்தரன் முப்புரம் ஏக
    சகடத்தின் அச்சை சிதைத்த -விகடன்
    லலிதாங்கி மைந்தனை லம்போ தரனை
    எலிதாங்கும் ஆனையை ஏத்து….(6)….

    விக்கினராஜர்
    —————-
    சுக்கிரன் பார்க்க சுரர்கள் பணிந்திட
    இக்கிரக பூமியில் இந்திரனாய், -விக்கின
    ராஜன் விகடனை ராப்பகலாய் வேண்டிட
    பூஜா பலனாய் பவிஷு….(7)….

    வினாயகர்
    ————
    வினாஅகம் கேட்க விசாரணை செய்யும்
    மனோமுக மார்கம் முனிக்கே -வினாயகன்
    விக்கின ராஜனை வேண்டித் துயில்வோர்க்கு
    சொக்கிடும் போதேமோட் ஷம்….(8)….

    தூமகேது
    ———–
    சோமதேவன் சீமந்தன் மாமன்மால் அம்சமாய்
    தூமதீது துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
    வாக அவதரித்து வெற்றியை சூடிய
    வாகை வினாயகனை வாழ்த்து….(9)….

    கணாத்யஷர்
    —————
    அனாதியாதி அச்சன் அரசவை பூத
    கணாதி களின்சேனைக் காவல் -ஜனாதிபதி
    தூமகேது முன்புநின்று தோப்புக் கரணமிட
    சாமகீதம் சம்சார சிந்து….(10)….

    பாலசந்த்ரர்
    ————–
    நாலுமுகன் செய்த நடிகர் களையியக்கும்
    பாலமுக பாலசந்த்ர பிள்ளையார் -ஞால
    கணாத்யஷன் காலில் கிடப்போர்க்கு நாளும்
    தனாக்ஷர தீரம் தரும்….(11)….

    கஜானனர்
    ————-
    அஜாதசத்ரு ஆனை அரக்கனுக்(கு) அன்று
    கஜேந்திர மோட்ஷம் கொடுத்த -கஜானனன்
    கோலசந்த்ரன் கொண்டமகா கர்வம் அடக்கிய
    பாலசந்த்ரன் பாதம் புகு….(12)….

    வக்ரதுண்டர்
    —————
    வக்ரதுண்ட சேயின் விடைபெறாமல், முப்புர
    நிக்ரகம் செய்ய நினைத்தூர்ந்த -உக்ரகண்டர்
    சக்ரதுண்டம் செய்த சதுர்த்தி கஜானனர்
    விக்னகண்டம் தீர்ப்பார் விரைந்து….(13)….

    சூர்ப்பகர்ணர்
    —————-
    வரம்தரும் போதே முறம்போல தீதை
    புரம்தள்ளி நையப் புடைத்து -அறம்பொருள்
    ஆர்ப்புகங்கை போலின்பம், அவ்வீடு சேர்த்திடும்
    சூர்ப்பகர்ண வக்ரதுண்ட சேய்….(14)….
    ஹேரம்பர்
    ————-
    பேரம்பார் பண்ணிப்பார் பூவெருக்கம் புல்லருகம்
    பேரன்பாய் பாதத்தில் போட்டுவிட்டு -ஆரம்பம்
    ஹேரம்பா என்றழைக்க எப்படியும் வெற்றிதான்
    நேரும்பார் சூர்ப்பகர்ண னால்….(15)….

    ஸ்கந்தபூர்வஜர்
    —————–
    சீரும்பர் கோன்மகள் சேனை கரம்பிடித்த
    சூரன்பால் வேலெறிந்த ஸ்கந்தனுக்கு -ஹேரம்பர்
    முன்வந்த பூர்வஜர் ,பெண்ணாக வெற்றியாய்நம்
    பின்வந்து நிற்கும் பிடி….(16)….
    பலஸ்ருதி
    ————-

    பதினாறும் பெற்று பெருவாழ்வு காண
    பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
    அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
    மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து….(17)….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கண்ணன் -சியமந்தக மணி வண்ணன்….!
    —————————————————————————-

    170824 -Krishna retrieves Syamantaka Mani from Jambavan #Vatsalya -lr

    ”சண்டையிட்ட ஜாம்பவான் சேர்த்தணைக்க வாசத்தால்
    கண்டுகொண்டான் கண்ணனன்று கல்யாண்ராம்: -தெண்டமிட்டு
    அண்ணலே என்றழைக்க, ‘’அண்ணல் அதுதிரேதா
    கண்ணன்நான் த்வாபரயு கம்’’….கிரேசி மோகன்….!

    Share
  • ’’அட்வான்ஸ் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்’’….!

     

    ”ஆடிவெள் ளிக்கிழமை அம்பாள் தினமதில்
    கோடி மதயானை கும்பிட -ஓடும்
    வினாயகர் தோன்றி வினைகள் அகற்றுவார்
    வினாவிடை, வாழ்த்துமவர் வாக்கு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_3375
    ’‘என்றும் புதியது, ஏகன் புதியது,
    கன்றும் புதியது , கேசவ்ஜி- நன்றிதை
    ஊரறியச் செய்திடும் உம்கை புதியது,
    FOR-EVER கண்ணன்காப் பார்’’….கிரேசி மோகன்….!

    லவ்லி கேசவ்….மாஸ்டர் ஃபீஸ்….
    ————————————————————————————————————————————–
    மருமகன் வேலனோ தகப்பன்சாமி,
    தாய்மாமன் மாலனோ தாய்ச்சாமி….குழந்தைகளிடமிருந்து INSPIRATION….!
    கண்ணனுக்குப் பிடித மடிகள் ரெண்டு….1) தாய் மடி 2) தாய்ப்பசு மடி ….!
    கண்ணன் புதியது, கன்று புதியது….குழந்தைகள் என்றும் புதியது….!
    ‘’தகப்பன் சுவாமி, தணிகை முருகன்,
    அகப்பட்டு அன்னை அணைப்பு, -சுகம்பெற்றான்:
    வெஞ்சிறை விட்டு, வெளிவந்(து) எசோதையின்,
    மஞ்சம் துயின்றதாய்சா மி’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170822 -Kaliamardhana - lr

    காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
    காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
    கோளரி மாதவன் கோவிந்தன் என்வீட்டுத்
    தூளியில் ஆடித் தூங்க வருகவே….!
    முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
    கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
    அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
    நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….
    எந்தவேலை செய்தாலும் தொந்தரவாய்த் தோணுதே
    இந்தநிலை ஏனெனக்கு நந்தலாலா -அந்தநாளில்
    ஆளாள் குறைதீர்க்க ஆதரித்தோய் இன்றுமட்டும்
    வாளா(து)(சும்மா) இருப்பதேன் வா….
    சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
    எந்தையே ஏகப் பரம்பொருளே -விந்தையே
    தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்
    சீராக ஆடிடும் சேய்….

    அற்புதம் செய்ய அவதரித்த ஆய்க்குலத்தோன்
    பொற்பதம் போற்றிப் பணிந்திட -கற்பூரம்
    மூச்சில் மணத்திடும் மூடக் கழுதைக்கும்
    ஆச்சரியம் கண்ணன் அருள்…

    ஒன்பது ஓட்டை உடலே உடனேநீ
    தின்பது தூக்கம் தவிர்த்தாயர் -நண்பனின்
    ஊது குழலாய் உருமாறி என்நாளும்
    கீதகோ விந்தமதைக் கூவு….கிரேசி மோகன்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ஆலிலையில்
    உண்டுமிழ்ந்த பின்னர் உருப்படியாய் உள்ளது
    உண்டவனும் , உண்ட உலகு

    —————————–

    170820 -Gonakshatra - eka rekha series -watercolor -lr

    “நீலவான் மேனி, நட்ஷத் திரம்பசுக்கள்,
    கோலத்தைக் வையக கோகுலம் : -ஆலிலையில்
    உண்டுமிழந்த பின்னர் உருப்படியாய் உள்ளது
    உண்டவனும், உண்ட உலகு (வையகம் அல்லது பசு )”….!
    பசு கண்ணனை மேய்ந்து உண்டது ….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170821 -Indra garvabhangam -lr

    “இம்மி அசையா(து) இமையோன் அயிராவதம்(இந்திரன் பட்டத்து யானை)
    JIMMYயா(வாலை சுருட்டிக் கொண்டு நாயாகும் வரையில்)  கும்வரையில்  ஜிம்னாஸ்டிக்(கோவர்த்தனம் தூக்கியது) -MUMMYக்காய்;

    ஆனவரை பெய்தான் அமரன்(இந்திரன்),முடிவிலே-

    வானவில்லாய்(ஆகாஸத்தில் வானவில்-சமாதான ஸிம்பல்) ஆனான் வளைந்து’’….கிரேசி மோகன்….!

     MUMMY -கோமாதா….!
    இமையோன் -கண்களை இமைக்காத இந்திரன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்

    FullSizeRenderkee

    முகமில் திருமால், முகமில் துருவன்,
    அகம்புறம் இணைதார்தன் ஆன்ம -நகமாம்வெண்
    சங்கினால் கன்னத்தில் சித்திரம் இட்டளித்தார்
    மங்காத விண்மீன் மலர்’’….!

    உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
    துருவன் விழிகள் திறக்க -அருவம்
    கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
    வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….

    ”பக்த துருவனை பக்கம் அழைத்தவர்க்கு
    உட்கார் மடிதானே உன்தேவை -தேவுவவர்(தேவு அவர்)
    புள்ளா சனமமர்ந்து புள்ளைக்(கு) அளித்தார்,வான்,
    உல்லாஸ மீனாய்(துருவ நக்ஷத்திரம்) உலவு”….!
    பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
    உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
    கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
    கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    Krishna Leela - oil on canvas 4’x4’ 2008 commissioned by Krishnan Microsoft Hyderabad —lowres
    Krishna Leela – oil on canvas 4’x4’ 2008 commissioned by Krishnan Microsoft Hyderabad —lowres

    ”லீலா தரங்கிணியில் லாகவ கேசவர்,
    மாலே மணிவண்ண மாமாயர் -நீல
    யமுனா ஆற்றில் இழந்ததைப் பெற்ற
    ரமணா பிரம்மச்சா ரி’’….கிரேசி மோகன்….!

    ஜாமக் கடுமிருளில் ஜாதிவிட்டு, நந்தனார்
    கோமக் களைமேய்த்த கோபாலன் -காமக்
    கடும்புனல் கோபியரைக் கூடியும், உள்ளக்
    கடும்பிரமச் சாரியாம் காண்….!

    Share