-கிரேசி மோகன் 

krishna

இடைப்பிள்ளை உந்தன் இசையில் மயங்கி
மடிப்பால் நிலத்தில் மணக்ககடைக்காலை
கன்றென எண்ணிக் கறவைகள் சுற்றிட,
நின்றிடென் நெஞ்சில் நிலைத்து….!

எழில்நீல வண்ணம் , பொழில்வேணு கானம் ,
தொழில்காதல், தாமரைத் தொப்புள்சுழியில்
உலகெலாம் உண்டு, அலைகடல் நீந்தும்
அலகிலாக் கண்ணன் அழகு….!

வேணு இசைக்கையில் வெண்ணெய் புசிக்கையில்
வானில் வரைதூக்கி நிற்கையில்ஊணும்
ஒருகால் உதவ , மறுகால் தயாராய்
ஒருகால் குரல்வருமுன் கேட்டு…. 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.