Category: திருமால் திருப்புகழ்
பெருமாள் திருப்புகழ்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மாடவர், மாதவர், மாதாகே சவ்விரல்
கோடவர், கோகுல கோபாலர், -வீடவர்,
ராதை கரம்விலக்கிக், கீதை உரைநிறுத்தி,
ஆதரவுக்(கு) ஓடும் அரி’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”கண்ணிநுண் பாம்பதன் கட்டுறங்கி, பின்யசோதா
கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்டோன் , -எண்ணிய
வண்ணம் எழுந்தருளி விஸ்வம் விளக்கிடுவான்:
கண்ணனை நெஞ்சே கருது’’….!கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு)
அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப்
பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில்
இறந்தில்லை யாவதேன் இங்கு….!எதற்கென்ற கேள்வி முதற்கொண்டு மாயை
உதிக்கின்ற ஞானமே எல்லாம் -மதித்துத்
துதிக்கின்ற நானும் விதிக்கின்ற நீயும்
நதிக்கரை நாணல்நீர் நட்பு….!
அமுதா, அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்
சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”தூணிருந்த பல்லியின் துண்டித்த வாலாக
வீணகந்தை யால்வீழ்ந்து வாடுகின்றாய் -நீநெகிழ்ந்து
அண்ணனாய் தம்பியாய் ஆன பலராமக்
கண்ணனை நெஞ்சே கருது”….!’’உந்த எதுகை, உருவாக மோனைகள்,
வந்ததே வெண்பா விதவிதமாய், -அந்தக்,
குழலினிது யாழினிது என்போர்கள், கண்ணன்,
மழலைச்சொல் கேளாத மண்டு’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”தேர்கடவி பாரதப் போர்முடிக்க பார்த்தனின்
சீர்கெடலை கீதையால் செப்பனிட்டோய் -மோர்குடத்தை
கல்லால் உடைத்தன்று கோபியர் கோபத்திற்
குள்ளான கண்ணனே காப்பு….!‘’கண்ணன் தலைமுடியால் பசு பார்க்க அசுவமானது….அடியேன் பார்வைக் கோளாறால் மனதில் தோன்றிய வெண்பாவை எழுதுகிறேன் கேசவ்…. தவறானால் மன்னிக்கவும்…. கண் கெட்ட பின்பு கண்ணனைக் கும்பிடுகிறேன்’’….!
‘’நதித்தலையர்(சொக்கநாதர்) நரியைக் குதிரையாய் விற்றார்,(திருவிளையாடல் புராணம்),
நதிதீரர் (யமுனைத் தலைவர்) கன்றை குதிரை -ரதமேறப்-
போவது முன்பே புரிந்ததால் , பூமங்கை – (பூபாரம்)
நோவதால் பாரத நோன்பு’’…. கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’வங்கக் கடல்கடைந்து வந்த அமுதினை
தங்கக் குடமேந்தி தாயாகி -சிங்கன்
வினியோகம் செய்கிறான் வள்ளல் பசுவாய்
இனியோகச் ஷேமம்தான் இங்கு’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

’’கண்டவர் விண்டிலர்(சொல்லார்) விண்டவர் கண்டிலர்(காணார்) -திருமூலர்….தான் கண்ட மூலவரை(பெருமாளை) உற்சவராய்(கண்ணன்) வரைந்து நாம் கண்டிட வரைந்து விண்டுரைக்கும் கேசவ் ‘’திருமூலவர்”….!”ஆலிலை மெத்தையாய்,’’ஆ’’வே தலையணையாய்,
மாலிவர் கண்ணன் மயங்குதலை, -காலையில்
கண்டு பரவசம் கொண்டேன்,தான் கண்டதை
விண்டது கேசவ் விரல்’’….கிரேசி மோகன்….!
—————————————-
”பேருண்மை, மாயப் பெரும்பொய் பிரகிருதி,
வேரொன்றும் இல்லா விருக்ஷமவர், -யாரென்று
கேட்டால் விளம்பிடுவோம், கேசவர் தானந்த,
சேட்டை புரிகின்ற சேய்”….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘’நேற்றுவரை மாடு ,இன்று மாருதி….துவாபரக் கண்ணனும் த்ரேதா ராமர்போல் இருக்கிறார்’’
”மந்திக்கு காலளித்து மாலவர் கண்ணராமர்
வந்திக்கிறார்(வணங்குகிறார்) வானர வீரனை(ருத்ராம்சம் -ஆஞ்சனேயர்) -தென்திக்கு-(தக்ஷிணாமூர்த்தி நோக்கிய திசை….அதனால்தன் கண்ணன் சின்மய முத்திரை காட்டுகிறாரா கேசவ்….!)
லங்கா புரியெரித்தோன், லஷ்மணரை மீட்டவர்
சங்கர ஈசா சரண்’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”காத்தால(காலையில்) வந்து கரம்கொடுக்கும் கண்ணா!
வாத்ஸல்யம் காட்டும் வரதரே! -மாத்தாடும்(கன்னடம்)
கோகுலமா டாயெனைக்கொள் கோபாலா! கோவிந்தா!
’’ஆ’’குலம்சேர் ஆரா அமுது!’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கேசவ்ஜி, அளவுக்கு மீறிய அமுது நஞ்சு….ஆரா அமுது கண்ணனோ, அளவுக்கு மீறிய காளியன் நஞ்சை அமுதாக்கி நிலவுக்கு அளித்தார் (அமுதைப் பொழியும் நிலவே)….ஒரு கற்பனை ஓகேதானே சார்….!
”கண்ணனவர் கோபமும் கையாசி என்றனர்,
பெண்களவர் காளியன் பத்தினியர்: -மன்னன்
அளவுக்கு மீறினாலும் ஆடிஅந் நஞ்சை
நிலவுக்(கு) அமுதாக்கி னார்’’….கிரேசி மோகன்…! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”காபி குடிப்பதேன்! , காலை சுறுசுறுப்பை,
கோபிகா கண்ணன் கொடுக்கையில், -டோபிகா(வண்ணான்)
வாலா மனவழுக்கில்(மனதின் அழுக்கை) வெண்மை பளிச்சிட,
மாலா(திருமாலா) எமையும் மடி(வண்ணாமடி)’’….கிரேசி மோகன்….!














