‘கரிகாலன் விருது’ பெற்றுள்ள் பிரபல சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலாதேவி அரவிந்தன் மற்றும் திரு மா. இளங்கண்ணன் அவர்களுக்கும் வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் களுக்கு வழங்கப்படும் ”கரிகாலன் விருது” சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலோதேவி அரவிந்தனுக்கும் திரு. மா. இளங்கண்ணனுக்கும் கிடைத்துள்ளது. 2010ஆம் ஆணடுக்கான விருது திருமதி கமலாதேவியின் “நுவல்”சிறுகதைத் தொகுப்புக்கும் 2011ம் ஆண்டுக்கான விருது திரு. மா. இளங்கண்ணனின்“குருவிக் கோட்டம்” நூலுக்கும் வழங்கப்படுகிறது. இவர்கள் இருவருமே சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாக் கதைகளையும் படித்தேன். இந்தத் தடவை வந்த கதைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நிறைய கதைகள் எழுதி வந்தவர்கள் கூட இம்முறை எழுதவில்லை. ஒரு வேளை ஏமாந்த மனக் கசப்புடன் இருக்கிறார்களோ என்னவோ.
வந்த கதைகளில் முற்றிலும் திருப்தி அளித்த கதைகள் என்று சொல்லமுடியாவிடடாலும் தமிழில் சாதாரணமாக எழுதப்படாத, சரி, வல்லமையில் சாதாரணமாக எழுதப்படாத விஷயங்களை கையாண்டு பெரும்பாலும் நன்றாகவே எழுதப்பட்டவை என்று சொல்லப்படவேண்டியவை இரண்டு. ஒன்று, அம்மாவின் தேன் குழல் மாதவன் இளங்கோ எழுதியது; இரண்டாவது நாலடி கோபுரங்கள் ஜெயஸ்ரீ ஷங்கர்எழுதியது.
பெரும்பாலும் நன்றாக எழுதப்பட்டவை என்று சொன்னேன். மாதவன் இளங்கோ எனக்கும் ஒரு வேளை வல்லமைக்கும் கூட புதியவர். எங்கோ இருப்பவர். ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும். ஆனால் இணையாதவர்கள் இரண்டு முனைகளி. நன்றாகத் தான் ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார். ஆங்காங்கே சில வார்த்தைகள், சில வாக்கியங்கள் melodrama வாக இருக்கின்றன. அதைப் பெரிது படுத்த வேண்டாம். போகப் போக சரியாகும். கடைசியாக், வரும் சில பாராக்களை ஒதுக்கியிருக்கலாம். ”இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன என்னும் வரியோடு கதை முடிகிறது. அடுத்து வருபவை வேண்டாம்.
ஜெயஸ்ரீ ஷங்கர் கதை இது காறும் அவர் வல்லமையில் எழுதிய கதைகளிலிருந்து நாலடி கோபுரங்கள் மாறுபட்டது. தாய் தந்தையரால் கூட உதறிவிடப்பட்ட ஒரு குள்ள மனிதனின் அனுபவங்கள், கேலியும் தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையும் கூட பாதிக்கவில்லை. அதெல்லாம் சரி. கடைசியில் லிப்டிலிருந்து குழுந்தையைக் காப்பாற்றியது – இது நடக்கலாம் தான் ஆனால் – இது வரை இயலப்பாக எழுதப்பட்டது இங்கு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போல தோன்றுகிறது. அதேபோல முன்னரும் கூட தன்னை மாற்றச் சொல்லி கடிதமாக எழுதி ராஜாவிடமே கொடுத்தது. இது மறைவாகச் செய்யப்பட்டது பின் ராஜாவின் காதில் விழுகிறது என்றிருந்தால் அது இயல்பாக இருந்திருக்கும்.
எப்படியாயினும் இந்த இருகதைகளும் என் தேர்வுகள். மாதத் தேர்வு தானே. அதனால் பரவாயில்லை. இரண்டும் உற்சாகப்படுத்த தகுதி கொண்ட எழுத்துக்கள்.
போட்டியில் வெற்றி பெற்ற திரு மாதவன் இளங்கோ மற்றும் திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள். பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து தங்கள் படைப்புகளை அனுப்புங்கள். பரிசினை வெல்லுங்கள்!
காலம் வெகுவாக மாறி விட்டது. ஒரு காலத்தில் தமிழ்ச்சமுதாயம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது. ஒரு பெரிய கூடம் (ஹால்) இருக்கும். குறைந்தது 20 பேரை நிம்மதியாகப் படுத்து உறங்க வைக்கும் கொள்ளளவு அந்தக் கூடத்திற்கு இருக்கும். ஒரே நேரத்தில் முப்பது அல்லது 40 பேருக்குப் பந்தி வைக்க வேண்டும் என்னும் கொள்கை அளவும் அதற்கு இருக்கும். இதை பட்டாசாலை என்று கூறும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கு அடுத்து அங்கணம் என்று கூறப்படும் சின்ன பட்டாசாலை ஒன்று இருக்கும். இதிலும் சுமார் 20 பேர் படுக்கலாம். இது இன்னும் சில வீடுகளில் நிலா முற்றம் எனப்படும் நிலவொளி உள்ளே விழும் அமைப்பில் கம்பிகள் மட்டும் மேற்கூறையாகப் போட்டு அமைந்திருக்கும்.
இவை தவிர, ரேழி ஒன்று இருக்கும். முன்னறைக்கும் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதியைத்தான் ரேழி என்று கூறுவது வழக்கம். அறை என்று சொன்னால் பொதுவாக ஒன்றோ இரண்டோ அறைகள் சின்னஞ்சிறிய அளவில் இருக்கலாம். ஒன்று அந்த வீட்டு மாப்பிள்ளை வந்தால் தங்க வைப்பதற்கு. மாப்பிள்ளைகள் வந்தால்….? கூடி கும்மாளம் அடிக்க வேண்டியதுதான். மற்றொன்று சாமான்கள் வைக்கும் ஸ்டோர் ரூம். மற்றபடி சமையல் அறை ஒன்று பெரிதாக இருக்கும். ஒத்தார் ஓர்ப்படிகள் ஒன்றாய்க் கூடி கும்மியடிக்கும். தப்பு தப்பு சமையல் செய்யும் இடம்.
ஆமாம் இப்போது எதற்கு இந்த வாஸ்து சாஸ்திரம் என்று கேட்கத் தோன்றுகின்றதா? தோன்றவில்லை என்றால் நீங்கள் ஏதோ இயந்திரத்தனமாக இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்கி உள்ளீர்கள் என்று பொருள்.
சங்க இலக்கிய மான் குடும்பத்துக் காட்சி ஒன்றை இப்போது கூறுவது இக்கட்டுரைப் பொருளுக்குப் பொருத்தமாக இருக்கும். தமிழில் எதைச் சொல்லப் புகுந்தாலும் சங்கத்தில் இருந்து எடுத்துக்காட்டிச் சொல்வது தமிழுக்குப் பெருமை என்பதை விடவும் அதைச் சொன்னவருக்கே பெருமை அதிகம் . “எத்தனைதான் தேக்கு இருந்தாலும் பர்மா தேக்கு போல வராது என்பார்கள். அது போலத்தான் பக்தித்தமிழ், பாமரத்தமிழ், இலக்கியத்தமிழ் என்று பல சொன்னாலும் சங்கத்தமிழ் என்பதில் உள்ள பெருமை மற்ற எதிலும் இல்லை” என்று பேரா. தி. இராசகோபாலன் சொல்வார். விளக்க முற்படும் எந்தச் செய்திக்கும் சங்கச் சான்றே தங்கச் சான்றாக ஒளிவீசும் என்பதில் ஒருவருக்கும் ஐயம் இருக்காது. உயர் மதிப்பையும் அள்ளித் தருவது. தமிழனின் அறவியல், அறிவியல், உடலியல், உளவியல் நுட்பத்தை எடுத்துக் கூறும் சான்றுகளின் கருவுலமும் அதுவே எனலாம்.
தான் காதலித்த தலைவனோடு உடன் போக்கு சென்று விடுகிறாள் தலைவி. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விடுகின்றது. அப்போதும் அவளது தாயும் தந்தையும் அவள் மீது கோபத்துடன் இருக்கின்றனர். ஆனால் அவளை வளர்த்தச் செவிலித்தாயால் அப்படி இருக்க இயலவில்லை. அவள் சென்று தலைவியைப் பார்த்துவிட்டு வருகிறாள். தான் கண்டு வந்த காட்சியைச் சொன்னால் நற்றாய் மனம் மாறி, தலைவி மீது கொண்டுள்ள சினத்தை மாற்றிக் கொள்வாள் என்று நினைக்கிறாள். தலைவியின் கடிமனைக்குச் சென்று வந்த செவிலி உவந்த உள்ளத்தினளாய் நற்றாய்க்குப் பின்வருமாறு கூறுகிறாள்.
மறியிடைப் படுத்த மான்பிணை போல,
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்றஅவர் கிடக்கை; முனிவின்றி
நீல் நிற வியலகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலருங்குரைத்தே!
காட்டில் குட்டியை ஈன்ற காதல் மான்கள், குட்டி இடையில் படுத்திருக்க அதனைத் தழுவிக் கலைமானும்(ஆண்மான்) பிணை மானும் (பெண்மான்) படுத்திருக்குமாம். அது போல, புதல்வன் நடுவே படுத்திருக்க, அவனைத் தழுவியவாறு தலைவனும் தலைவியும் படுத்திருக்கும் காட்சி இனிமையானது. பரந்து விரிந்த நீல வானத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் இந்த மண்ணுலகத்திலும் இதற்கு அப்பாற்பட்ட தேவர் உலகமாகிய விண்ணுலகத்திலும் இந்தக் காட்சி கிடைப்பது அரிது என்று கூறுகிறாள். இதில் தலைவன், தலைவி இருவரும் தம் குழந்தை மீது கொண்ட காதலை விளக்குகிறாள். இருவரது அன்பையும் பற்றி கூறுகிறாள். அப்போதும் மனம் மாறாத நற்றாயைப் பார்க்கிறாள். மற்றொரு காட்சியையும் கூறுகிறாள்.
“புதல்வன் கவையினன் தந்தை; மென்மொழிப் புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்
இனிது மன்ற அவர் கிடக்கை
நனி இரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே”
உன் மகள் எப்படிப் பட்ட தாயாக இருக்கிறாள் தெரியுமா? தலைவன் தன் புதல்வனாகிய உன் பேரனைத் தழுவியபடி படுத்திருக்கிறான். உன் மகளோ தான் ஈன்றெடுத்த மகனான உன் பெயரனையும் தன் காதல் தலைவனையும் ஒரு சேர ஒரு தாயாக தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள் என்னும் கருத்து தொணிக்கப் பாடுகிறாள். அப்போதும் சினம் தணியாத தாய்க்கு அங்கு அரங்கேறிய மற்றொரு காட்சியையும் படம் பிடிக்கிறாள்.
புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்
நரம்பு உளர் முரற்கை போல
இனிதால் அம்ம! பண்புமார் உடைத்தே!
இப்போது புதல்வனை அரவணைத்துக் கொண்டு படுத்திருக்கிறாள் தலைவி. அவளின் முதுகுப் புறத்தைத் தழுவி, விருப்பத்தோடு படுத்துக் கொண்டிருக்கிறான் தலைவன். அவர்களை அவ்வாறு காண்பது மிகவும் இனிய காட்சி. அது பாணர்கள் தங்கள் யாழின் நரம்புகளை மீட்டி இசைக்கும் இசையைப் போல இனியது; மிகுந்த பண்பும் உடையது” என்கிறாள். இப்படிப் பட்ட அழகொளிரும் இல்லறக் காட்சிகளை அமைக்கிறார் பேயனார் என்னும் சங்கத் தமிழ்ப் புலவர்.
பூனைக் குட்டிகளைப் பாருங்கள். தாய்ப்பூனை அருகில் இருக்கும்போது பாதுகாப்பு உள்ளது என்னும் உணர்ச்சியில் அச்சமற்று நன்கு உறங்கும். தாய்ப்பூனை வெளியில் சென்றிருக்கும்போது அவை அச்சத்துடன் திரு திருவென விழித்துக் கொண்டிருக்கும்.
ஐந்தறிவே உள்ள மான்கள் தங்கள் குட்டியை அணைத்துக் கொண்டு படுக்கின்றன என்கிறது முதல் பாடல். வீட்டு விலங்குகளான பூனை, நாய் முதல் சிங்கம், புலி முதலிய விலங்கினங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பருவம் வரைத் தம் மக்களைத் தனியாகப் படுக்க வைப்பதில்லை.
நம் பண்டைய பண்பாட்டுத் தமிழர்கள் தங்கள் குழந்தையைத் தனியாகப் படுக்க வைத்ததில்லை. ஒரு வேளை செல்வந்தர்களின் இல்லங்களில் இணையர் தனியறையில் படுக்க நேர்ந்தால் அவர்களின் குழந்தைச் செல்வங்கள் பாட்டன், பாட்டியுடன் கதை கேட்டு, பாட்டுக் கேட்டு மகிழ்வாகப் படுத்துறங்கும்.
கூட்டுக் குடும்பம் நலிந்து தனிக்குடும்பம் மலிந்த, நாகரிகத்தில் முற்றிப்போன இன்றைய சமுதாயத்தில் தனியறையில் குழந்தைகளைப் படுக்க வைப்பதும் மலிந்து போனது. எட்டுக்கு எட்டு அறை ஒன்றில் குழந்தையையும் அதற்கென ஒரு கணிப்பொறி மற்றும் இத்யாதி இத்யாதிகளையும் வாங்கி அடைத்து விடுகின்றனர். அணைப்பாரற்ற அந்தக் குழந்தை அன்பு, பாசம் என்னும் ஏக்கத்தால் மூச்சு முட்டியபடியே உறங்குகிறது. உயிர் வாழ்கிறது.
இதனினும் பெருங்கொடுமை மகிழ்வுந்துப் பயணம். இப்போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் வெளியில் செல்கின்றார்கள் என்றால் குழந்தைகள் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன. காரணம் காரில் முன் இருக்கையில் கணவனுடன் மனைவிதான் அமர வேண்டும். இது இன்றைய நாகரிகம். அதாவது கணவரது எஜமானியாம் மனைவி. அவர்கள் இருவரும் பாட்டுக் கேட்டுக்கொண்டோ, அல்லது ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோ தம் குழந்தையைச் சட்டை செய்யாமல் முன்பக்க இருக்கைகளில். அந்தக் குழந்தையோ பின் இருக்கையில் சோர்ந்த வாடிய முகத்துடன் ஜன்னலில் இருந்து வெளியே வெறித்துப் பார்த்தபடி.
இந்நிலையில் அக்குழந்தைக்கு எப்படி மன ஆரோக்கியம் இருக்கும்? அக்குழந்தையின் உலகம் எந்திரங்களாக ஆன பின்பு அக்குழந்தையும் பாசம், பந்தம், அன்பு, கருணை, இரக்கம் என்னும் நற்பண்புகள் எதனையும் புரிந்து கொள்ள முடியாத எந்திரமாகவே ஆகிவிடுகின்றது. அதனால் எதிராளியின் துன்பத்தைக் கூடப் புரிந்து கொள்ளவோ, உதவவோ முடியாமல் போய்விடுகின்றது. சற்று அழுத்தமாகக் கூறவேண்டுமென்றால் எதிராளியைத் துன்புறுத்துவதும் கூடிப் போகிறது என்று கூறலாம். குழந்தைகள் வளரும்போது இக்குணமும் படிப் படியே வளர்ந்து வன்முறையாளர்களாக அவர்களை மாற்றிவிடுகின்றது.
இளமையில் தம்மைத் தனிமைப் படுத்திய பெற்றோர்களை முதுமையில் அவை தனிமைப் படுத்திவிடத் துடிக்கின்றன. முதியோர் இல்லங்களில் பெற்றோர்களைப் போடுகின்றன. ஐந்தில் விளைவுதுதான் விளைவு. குழந்தையின் பத்து வயதிற்குள் அதன் சிந்தையில் என்ன நற்பண்புகள் பதிகின்றதோ அதுதான் எப்போதும் ஒளிவிடும். இவற்றை உணராது ஐயோ முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டனவே என்று அங்கலாய்த்தலில் ஒரு பயனும் விளையப் போவது இல்லை.
ஆய்வு என்று எதையும் மேற்கொள்ளாத சங்கத் தமிழன் இந்த உளவியல் சார்ந்த உண்மைகளை உணர்ந்தவன். இதற்குச் சான்றுகளே மேற்கூறிய பாடல்கள்.
ஆனால் இதனை இத்தனை ஆண்டுகள் கழித்து ஆய்ந்து கண்டவர்கள் டென்மார்க் ஆய்வாளர்கள். 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்த. டென்மார்க் ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர். நன்னா ஓல்சன் கூறுவதாவது, “பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் உடல் மற்றும் மன நலத்துடன் இருக்கிறார்கள் என்கின்றனர். முக்கியமாக பாதுகாப்பு உணர்வு இருப்பதால் நிம்மதியாக உறங்குகின்றனர். ஹார்மொன்கள் அளவாகச் சுரக்கின்றன. அவர்களது செரிமானம் சீராக இருக்கறது. அதனால் அவர்கள் குண்டாவதில்லை.
தனியாக உறங்கும் குழந்தைகள் அச்சத்துடன் சரியாக உறங்குவதில்லை. தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களைப் பாதித்து உடல்பெருக்கத்தைத் தூண்டும். சரியான உறக்கமின்மையால் உண்ட உணவு சரியாக செரிப்பது இல்லை. அதன் காரணமாகக் குண்டாக இருக்கின்றனர். பெற்றொருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட தனியாகப் படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது” என்கிறார்.
“மக்கள்மெய்தீண்டல்உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”
என்பார் திருவள்ளுவர். மழலைகளின் மெய்யை வருடுவது குழந்தைக்கு இன்பம் தரும். பெற்றோர்க்கு பேரின்பம் தரும். அந்த இன்பப் போதையில் மூழ்கித் திளைத்த மீசைக்காரனும்,
என்று பாடிப் பரவசமடைந்து படிப்போரையும் பரவசத்துள் ஆழ்த்துகின்றான்.
குழலையும் யாழையும் தம் இனிய குரலில் இசைத்து நம்மை இன்பமாக இசைவிக்கும் மழலைகளைத் தனியாக உறங்க விடாதீர்கள். ஏக்கத்தின் தவிப்பில் உழலவும் விடாதீர்கள். இனியேனும் பெற்றோர்கள் விழித்துக்கொள்வீர்களாக. தங்கள் குழந்தையை பதமாக அணைத்து இதமாக உறங்க வைப்பீர்களாக! ஒரு மன, உள நோயற்ற குழந்தையின் பெற்றோர் என்னும் பெருமையுடன் உலாவருவீர்களாக!
ஸ்ரீ த்யாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும் அன்றைய தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றியப் பஞ்ச ரத்ன கீர்த்தனங்கள் பாடுவார்கள்.அப்போது அவரது சிலைக்கும் அபிஷேகம் ஆராதனை, பூஜைகள் நடக்கும் . அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது .அவர் தன் ஐந்து வயதிலிருந்தே ஸ்ரீராமநாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார் சுமார் 95கோடிகள் ஜபித்திருக்கிறார், ஒரு சமயம் அவ்ர் திருப்பதி கோவிலுக்குப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இடத்தில்ஒரே கூட்டம் , என்னவென்று விஜாரித்ததில் ஒருவன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டான் என்றுத் தெரிய வந்தது அதாவது ஒரு பிராமணன் தன் மனைவி, குழந்தையுடன் அங்கிருக்கும் ஒரு கோவிலுக்குப் போனான், இருட்டிவிட்டது ஒரு ஆலயத்திற்குள் சென்று இரவைக் கழித்துவிட்டுச் செல்ல நினைத்தான் ஆனால் அந்தக் கோவில் உள்ளேத் தாழிடப்பட்டிருந்தது என்ன செயவது என்றுத் தெரியாமல் அங்கிருக்கும் மதில் மேல் ஏறி உள்ளேக் குதித்து பின் உள் இருக்கும் தாழ்ப்பாளைத் திறக்கலாம் என்று எண்ணி உள்ளே குதித்தான் அவ்வளவுதான் டம் என்றச் சத்தத்துடன் கிணற்றில் விழுந்து விட்டான் நீரில் மூழ்கி தத்தளித்து செத்துப்போனன் ,.அவள் மனைவி வாசலில் தன் கணவன் இவ்வளவு நாழியாகியும் வெளியில் வரவில்லையெ என்றுக் கவலையுடன் அழுது ஊரைக் கூட்டினாள் /எல்லொரும் கோவில் உள்ளேத்தேடி பின் அவனைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள். அவன் கழுத்தில் துளசி மாலை
இருந்தது அவன் சிறந்த விஷ்ணு பக்தன் என்று தெரிந்து, கொண்டார்
“நா ஜீவோ தாரா” என்றுத் தெலுங்கில் ஒரு பாட்டு அதாவது அந்த மனிதனின் உயிரைத் தந்துவிடு ராமா என்று உள்ளம் உருகிப் பாடினார் தியாகராசர் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை ,,,
,
அவர் பாடிய பாடல்
நாஜீவாதா ர நாநோமு ப லமா
ராஜீவலோசந ராஜ ராஜ சிரோமணி
நா சூபு ப்ரகாசமா
நா நாஸிகா பரிமளமா
நா ஜபவர்ண ரூபமா
நாது பூஜா ஸூமமா த்யாக ராஜநுத
இதன் பொருள்
என்னுடைய ஜீவனுக்கு ஆதாரமாயுள்ளவனே
நான் பார்க்காத ஒளியாய் உள்ளவனே நான் என்னுடைய சுவாசத்தினால் உன்னுடைய சுகந்தத்தை முகர்கிறேன் நான் ஜபிக்கும் அக்ஷரத்தின் ரூபமாய் உள்ளவனே , என்னுடைய பூசையின் புஷ்பமாய் உள்ளவனே தியாகராஜனால் துதிக்கப்பட்டவனே …..
பாகவதத்தில் துருவசரித்திரத்தில் துருவனுக்கு மஹாவிஷ்ணு பிரத்த்யட்சமான்வுடன் ஒருஸ்லோகம் வரும் அதன் பொருள் இந்தப்பாட்டுப்போல் தான் இருக்கும்
” எவர் என்னுள் பிரவேசித்து தூங்கிக்கொண்டிருந்த வாக்கு கை கால் காது கண்கள் ,தேகம் முதலியவைகளைத் தன் சக்தியினால்
ஜீவிக்குமாறு செய்தாரோ அந்த மஹாபுருஷனான மஹாவிஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன்
இந்தப்பாட்டிலும் ஸ்ரீ தியாகராஜர் ஆரம்பத்திலேயே“என்னுடைய ஜிவனுக்கு ஆதாரமானவனே “என்கிறார் இதில் “அஹம் பிரும்மாஸ்மி “என்ற தத்துவம் சொல்லி அந்த இறந்தவன் ஜீவனுக்கும் நீதான் ஆதாரம் என்று சொல்லாமல் சொல்லி பாடுகிறார் ……. கீதையில்
பத்தாவது அத்தியாயம் 20 ஸ்லோகத்திலும் இது சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்
அவருடைய பாடலிலும் “நா ஜீவோ தாரா” என்பது இதைக்குறிக்கிறது என நினைக்கிறேன்
அந்த மனிதனின் உயிரைத் தந்துவிடு ராமா என்ற பொருள் பட பாடிய பாடலால் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை …… “ராம நாமம்” ஒரு சிறந்த மந்திரம் இதை எப்போதும் ஜபிக்கலாம் ப்டுக்கையிலும் ஜபிக்கலாம் அதன் சக்தியே தனி வாருங்கள் நாமும் ராம நாமம் சொல்லலாமே !
காந்தீயக் கோட்பாடு என்ன என்பது முதலில் நான் குறிப்பிட வேண்டும்.
சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்றும் பின்னிய தேசம், ஆட்சி, ஆணையகம், அரசாங்கம், அமைச்சர், அரசாங்கப் பணியாளர், நாடாளும் மன்றம், ஊராட்சி, பல்கலைக் கழகம், கல்விக்கூடம், துணை வேந்தர், கோயில் திருப்பணி, சமயத் திருப்பணி, சட்ட நீதி மன்றம், நீதிபதி, உயர்நீதி, உச்சநீதி மன்றம், காவல்துறை, தொழிற்சாலைகள், தொழிற்சாலை அதிபர், ஊழியர், சமூக சேவை, இல்லறம், துறவறம், மருத்துவக் கூடம், மருத்துவர், மருத்துவப் பணியாளி, சட்ட நிபுணர், வழக்காடுவோர் ஆகியோர் இந்தியருக்கு வேண்டும்.
சுதந்திரம் [உரிமைப்பாடு, விடுதலை உணர்வு] மனிதப் பிறப்புரிமை. சுதந்திரம் என்பது கட்டுப்பாடுள்ள சுதந்திரம். கட்டவிழ்த்தோடும் பூரண சுதந்திரமில்லை. சுதந்திரம் நடுவில் அடைபட, அதைக் கட்டுப்படுத்த ஒருபுறம் சத்தியம், மறுபுறம் சமத்துவம் உள்ளது.
சத்தியம் என்பது நேர்மை, மெய்ப்பாடு, உண்மை நெறி. சத்திய நெறியற்ற சுதந்திரம் தீவிர இன்னல் விளைவிக்கிறது. அதுபோல் சமத்துவம் இல்லாத சுதந்திரம் மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவுகளைப் பெருக்கிறது. நேர்மையில்லாத துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் வாங்குகிறார்.
அறநெறி, உரிமை, சமநெறி என்பது முப்பெரும் ஒப்பிலாப் பண்புகளே காந்தீயக் கோட்பாடு. சத்தியம், சுதந்திரம், சமத்துவம் எந்த நாட்டுக்கும், எந்த நூற்றாண்டுக்கும் ஏற்புடைதாகும்.
*****************************
அறப் போர் புரிய மனிதர்
ஆதர வில்லை யெனின்
தனியே நடந்து செல் ! நீ
தனியே நடந்து செல் !
பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.
மகாத்மா காந்தி
முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!
கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்! ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!
உலக வரலாறு மீண்டும் மீண்டும் மீள்கிறது [History repeats again & again]! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த நான்கு பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!
ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!
அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!
மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்” என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.
ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார். ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!
டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!
“முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.
காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்
காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!
40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.
காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.
மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்
பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.
சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.
[bws_captcha]
‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.
மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.
கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!
கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!
இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரியதல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’
அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’
1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.
காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.
இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!
ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!
பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]’ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?
வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார்களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மையினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.
[bws_captcha]
காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.
‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்படவேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!
[bws_captcha]
இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !
‘ஜாதிகள் இல்லயடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!
பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மையான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!
[bws_captcha]
இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!
[bws_captcha]
அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !
மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!
கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!
வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!
மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார். ரஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியின் ஆயுதமற்ற விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார். ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’ மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்! ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது ! பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!
Picture from Gandhi Movie with Ben Kingsley as Gandhi
+++++++++++++++++
Mohandas Gandhi
Timeline
October 2, 1869: Birth of Mohandas Karamchand Gandhi
1883: Gandhi and Kasturbai are married.
1885: Death of Karamchand Gandhi, Gandhi’s father
September 4, 1888: Gandhi leaves for England to study law.
June 10, 1891: Gandhi passes the bar exam in England.
1891-1893: Gandhi fails as a lawyer in India.
April 1893: Gandhi accepts commission to spend a year in South Africa advising on a lawsuit.
Spring 1894: Gandhi elects to stay on South Africa, and founds the Natal Indian Congress.
Spring 1896: Gandhi returns to India to collect his wife and children.
December 1896: Gandhi returns to South Africa with his family.
October 1899: Outbreak of Boer War (1899-1901) in South Africa. Gandhi organizes an ambulance corps for the British.
1901: Gandhi returns to India to attend the Indian National Congress. G.K. Gokhale introduces him to nationalist leaders.
1901-1906: Gandhi struggles toward Brahmacharya, or celibacy, finally ending his sexual activity in 1906.
1904: Nationalists found the magazine the Indian Opinion, and soon print it on Gandhi’s farm, the “Phoenix Settlement.”
July 31, 1907: The Boer Republic Transvaal, now under the control of the British, attempts to register all Indians as members; Gandhi and others refuse to register. Their resistance efforts mark the first use of nonviolent non-cooperation by the Indian minority in South Africa, soon calledsatyagraha, or “soul-force.”
January 11, 1908: Gandhi is arrested and sentenced to two months in prison.
October 10, 1908: Gandhi is arrested again, spends a month in jail.
1909: Gandhi travels to London, pushing for rights of South African Indians. The Transvaal registration law is repealed.
November 13, 1913: Indians in Natal and Transvaal, under Gandhi’s leadership, march peacefully in protest of a racist poll tax and marriage laws. The marches continue through the winter.
June 30, 1914: Gandhi and Smuts, the Prime Minister of the Transvaal, reach an agreement, ending the protests.
July 18, 1914: Gandhi sails to England.
August 1914: Gandhi arrives in England, just at the outbreak of World War I(1914-1918).
January 9, 1915: Gandhi returns home to India, and receives a hero’s welcome.
May 25, 1915: Gandhi and his followers found Satyagraha ashram, the religiously-oriented communal farm where Gandhi, his family, and his followers will live.
April 6, 1919: Nationalists hold a hartal, or day of fasting and prayer, in protest of the Rowlatt Act, which drastically curtails civil liberties in India.
April 13, 1919: Amritsar Massacre; Under General Dyer, British troops slaughter Indian protesters.
August 1, 1920: Gandhi calls for a period of non-cooperation across India.
March 10, 1922: Gandhi is arrested for sedition.
March 1922-January 1924: Gandhi remains in prison.
1924-1928: Gandhi avoids politics, focusing his writings on the improvement of India.
1925: Despite his long absence from politics, Gandhi becomes President of the Indian National Congress.
February-August 1928: Residents in the district of Bardoli protest high rents using methods of non-cooperation inspired by Gandhi.
January 26, 1930: Gandhi publishes the Declaration of Independence of India.
March 2, 1931: Gandhi warns the Viceroy of his intention to break the Salt Laws.
March 12-April 6, 1931: Gandhi leads his Salt March to the sea.
May 5, 1931: Gandhi is arrested for violating the Salt Laws; non-cooperation movements break out across India.
January 1931: British government yields to protests, releases all prisoners, invites a Congress representative to Britain for a Round Table Conference (the Congress asks Gandhi to be this representative).
Autumn 1931: Gandhi participates in the Round Table Conference in Britain.
December 28, 1931: Gandhi returns to India.
January 4, 1932: Gandhi is arrested for sedition, and held without a trial.
September 20-25, 1932: Gandhi fasts in prison to protest the treatment of untouchables.
1934-38: Gandhi avoids politics, travels in rural India.
1935: Government of India Act passes British Parliament and is implemented in India; it is the first movement toward independence.
September 1939: World War II begins, lasting until 1945.
March 22, 1942: Sir Stafford Cripps arrives in India, presenting to the Indian National Congress a proposal for Dominion status (autonomy within the British Commonwealth) after the War.
August 8, 1942: The Indian National Congress rejects the Cripps proposal, and declares it will grant its support for the British war effort only in return for independence.
August 1942: Congress leaders are arrested; Gandhi is imprisoned in the Aga Khan’s palace.
February 10 to March 2, 1943: Gandhi fasts while imprisoned, to protest British rule.
February 22, 1944: Death of Kasturbai
May 6, 1944: Gandhi is released from the Aga Khan’s palace.
Summer 1944: Gandhi visits Muhammed Ali Jinnah in Bombay, but is unable to work out an agreement that will keep India whole.
May 16, 1946: British Cabinet Mission publishes proposal for an Indian state, without partition; Jinnah and the Muslim League reject the proposal.
March 1947: Lord Mountbatten arrives in India and hammers out agreement for independence and partition.
August 15, 1947: Indian independence becomes official, as does the partition into two countries, India and Pakistan.
August-December 1948: India dissolves into chaos and killings, as Hindus and Muslims flee for the borders of India and Pakistan.
January 30, 1948: Gandhi is assassinated by Nathuram Vinayuk Godse, a Hindu nationalist.
அவரொரு அதிசயப்பிறவி. அவனியில் அவரைப்போல் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. என் அகக்கண்ணுக்கு மட்டும் புலப்பட்ட தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் வந்திறங்கி சைத்ய உபசாரங்கள் பல செய்து, அனாயாசமாகவல்லவோ அவரை சுவர்க்கலோகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஜனவரி 9, 2013; அன்றைய தினம் வழக்கம் போல்த்தான் பொல பொலவென பொழுது விடிந்தது. அவரும் சகஊழியர்கள் எல்லாரையும் கனிவுடன், கட்டித்தழுவி குசலம் விசாரித்தார். அது பல வருடங்களாக அவருடைய அன்றாட வாடிக்கை. பிறகு தன்னுலகம் சுற்றி வந்தார். அவருடைய நண்பர்கள் பல இனங்களை சார்ந்தவர்கள். உக்ரம், வக்ரம், மக்கார் எல்லா குணாதிசயங்களும் உண்டு, அவர்களிடம். அவர் சம்பந்தப்பட்டவை, யாவரும் நேசிக்கப்பட்டவர்கள். அவர்களும் அவரவது பலவீனங்களை உதறி விட்டு, அவருடைய அரவணைப்பை அனுபவிப்பார்கள். பிரஹாரம் சுற்றிய பிறகு, வந்தபின், வழக்கம்போல் சொற்பமான காலை உணவு. ஒரு குட்டித்தூக்கம். அதுவே நீளாதூக்கம் ஆகி விட்டது, சார்! துக்கம் தாங்காமல் என் மனம் தேம்பித் தேம்பி அழுகிறது. ஏன்? உலகமே அழுகிறது.
மனித ஜன்மங்களே! மனித நேயம் என்று புத்தகங்கள் எழுதி, சொற்மாரி பெய்து, அதைப் பொய்த்து, நடமாடுகிறீர்களே! இந்த தேவகுமாரரின் பெயர் ஆர்னி. அவர் ஒரு கம்பீரமான பூனை. லிண்டன் மிருகக்காட்சி சாலையில் அவர் தான் செவிலித்தாய். சிங்கக்குட்டிகளும், புலிக்குட்டிகளும், குரங்குக்குட்டிகளும் அவரால் தான் பேணி வளர்க்கப்பட்டன. அவற்றின் கூடைக்குள் நுழைந்து, கட்டித்தழுவும் போது, அவை அன்னையின் அரவணைப்பின் சுகம் உணர்ந்தன.
எனக்கு நேரடியாகத் தெரிந்த உண்மை நிகழ்வு ஒன்று. ஒடிஷாவின் ஸிமிலிபால் பிராந்தியத்தில், ‘கைரி’ என்ற புலிக்குட்டி ஒரு வீட்டு செல்லப்பெண்ணாக வளர்ந்தாள். செவிலித்தாய் ப்ளாக்கி என்ற நாய். கைரியின் உருவத்தில் ஒரு சின்ன பின்னம் அளவு சைஸ். ஆனால், கைரிக்கு ப்ளாக்கியிடம் தான் பயம். ஒரு நாள் ப்ளாக்கிக்குக் குட்டிகள் பிறந்தன. கைரிக்கு அவற்றுடன் விளையாட ஆசை. வாசற்படியில் வந்து கெஞ்சுகிறாள். அனுமதி டினைய்ட்! தன்னுடைய கூர்நகங்களை உள்ளிழுத்துக்காட்டி கெஞ்சுகிறாள். அனுமதீட். அப்பப்பா! என்ன விளையாட்டு! போங்கள்! அதுவல்லவோ தெய்வீகம்!
சார்! இனி மேல் எந்த மனிதன் உக்ரமாகவும், வக்ரமாகவும், மக்காராகவும் நடந்தால், மிருகத்துடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள், சார்! ப்ளீஸ்.
இன்னம்பூரான்
29 01 2013
பி.கு: சோம்பல் இருந்தால் கூட, அதை முறித்து விட்டு, உசாத்துணையிலிருக்கும் ஆர்னியின் சித்திரத்தைக் க்ளிக்கி, ஒரு கும்பிடு போடுங்களேன்.
அழகுத் தெய்வமாகக் காட்டப் படும் பார்வதி, இந்துமதப் பெரும் கடவுள் சிவனின் மனைவி, யானைத் தலையினையை உடைய கணேசர் மற்றும் வீரமிகு போர்க் கடவுள் கந்தனின் அன்னையும் ஆவார். கருணை வடிவான தெய்வமான பார்வதியே உக்கிரம் நிறைந்த துர்காவாகவும், காளியாகவும் காட்சி கொடுப்பார். நான்கு கரங்களுடன் வழக்கமான பாணியில் அமைக்கப்பட்டுள்ள பார்வதி சிலையின் கையில், பெரும்பாலும் இடம் பெறும் வடிவங்களில் இரண்டு; ஒன்று அழகையும் தெய்வீகத் தன்மையையும் காட்டும் தாமரை மலர், மற்றொன்று இறையாண்மையை உணர்த்தி அருள் வழங்கும் ருத்திராட்ச மாலை. பெரிய கண்களையும், நிறைந்த வடிவுடைய மார்பையும், குறுகலாகத் துவங்கி பிறகு அகண்டு கால்களுடன் இணையும் இடையையும் கொண்டு, பண்டைய இந்தியாவின் பெண்களின் அழகு எனக்குறிப்பிடப்படும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்வதியின் சிலை அமைக்கப் பட்டுள்ளது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036
இந்து தெய்வம் பார்வதி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 13 – 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036
துர்கை:
அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025
துர்கை என்னும் பெண் தெய்வம், இந்துமத ஆண் தெய்வங்களின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை ஏந்தி, தேவர்களுக்குத் துன்பம் விளைவித்த எருமை வடிவ அரக்கனை (மகிஷாசுரன்) கொன்றழித்தவர். இங்கு காட்டப்பட்டுள்ள சிலையில் துர்கை தனது வாகனமான சிங்கம் அருகிருக்க, தப்பிக்க முயலும் எருமை அரக்கனின் முகத்தை ஒரு கையினால் அழுத்தி, மறு கையில் உள்ள சூலாயுதத்தை அரக்கனின் முதுகில் செலுத்தித் தாக்குவதாகக் காட்டப் பட்டுள்ளது. துர்கையின் குணம் எளிதில் மதிப்பிட முடியாதது. கோபத்துடன், இணையில்லா ஆற்றலுள்ள வீரப் பெண்ணாக துர்கா சித்தரிக்கப் பட்டாலும், முகபாவம் அமைதியும் சாந்தம் நிறைந்ததாகவும் வடிவமைக்கப் பட்டது இதனை விளக்கும். துர்கை அரக்கனைக் கொன்று அடைந்த வெற்றி ஒவ்வொரு ஆண்டும் அறுபது நாட்களுக்கு விழாவாக இன்றும் கொண்டாடப் பட்டு வருகிறது.
அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025
மகிஷாசுர வதம் செய்யும் இந்து தெய்வம் துர்க்கை, இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மதுரா பகுதியினைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 10 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025
திரிபுரசுந்தரி:
அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028
திரிபுரசுந்தரி என்று வழங்கப்படும் அழகியப் பெண் தெய்வம் இந்துமதப் புராணத்தில் செல்வமாகக் குறிப்பிடப் படும் உடல், ஆன்மா, முக்தி நிலை ஆகிய மூன்றிற்கும் உரிய தெய்வம். புராண இலக்கியங்களில் பார்வதியின் சக்தி வாய்ந்த பத்து வடிவங்களில் ஒரு வடிவமாக திரிபுரசுந்தரி குறிக்கப் படுகிறார். அத்துடன் திரிபுரசுந்தரி, காளியின் உறுதியும், துர்கையின் அழகும் அருளும் ஒருங்கிணைந்த குணத்தை உடைய தெய்வமாகச் சித்தரிக்கப் படுகிறார். இப்பண்புகளைக் குறிக்கும் வகையில் ஒரு கையில் பாசக் கயிற்றையும், மறு கையில் யானையை அடக்கும் அங்குசத்தையும் ஏந்தி, அணிகலன்கள் பல அணிந்து தாமரை மலராசனத்தில் அமர்ந்துள்ளதாகக் காட்டப் பட்டுள்ளது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028
இந்து தெய்வம் திரிபுரசுந்தரி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 15 – 17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028
காளி/சாமுண்டி:
அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026
அச்சுறுத்தும் வகையில் பல கரங்களுடன் காட்சி தரும் இந்தப் பெண் தெய்வத்தின் கரம் ஒன்றில் மண்டை ஓட்டாலனப் பாத்திரமுள்ளது, சிதைந்துவிட்ட மற்ற கரங்களில் கொலைத்தொழில் செய்யத் தேவையான பிற ஆயுதங்களும் இருந்திருக்கக் கூடும். இரு ஆண் அரக்கர்கள் (சண்ட முண்ட அரக்கர்கள்) வீரப் பெண் தெய்வம் துர்கையை அழிக்க அனுப்பப் பட்டார்கள். அவர்களைக் கண்டு “கோபம் கொண்ட அவள் முகம் மையைப் போன்ற கருமை கொண்டது. அவளது நெரிந்த புருவங்களில் இருந்து பயங்கரமான முகத்தை உடைய காளி தோன்றினாள். அவள் கபால முனை கொண்ட தண்டாயுதத்துடன், புலித்தோலை ஆடையாக அணிந்து, வறண்ட தோலுடனும், எட்டுத்திசையும் அவளது கர்ஜனயால் அதிர, திறந்த வாயின் வழி துருத்திய நாக்குடன் கோரத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாள்.”**
** மேற்கோளாகக் கொடுக்கப் பட்டிருப்பது 1500 அண்டுகள் பழமையான “தேவி மகாத்மியம்” என்ற இந்துமத இலக்கியத்தின் சாரம். இவ்வரிகள், வித்யா தேஹிஜியா எழுதிய, “தேவி: சிறந்த பெண் தெய்வம்” (Devi:the great goddess) என்ற 1999 ஆண்டு வெளியான நூலில் இடம் பெற்ற தாமஸ் பி. கோபர்ன் அவர்களின் மொழி பெயர்ப்பு வரிகள்.
அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026
இந்து தெய்வம் சாமுண்டி, மத்திய இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 10 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026
(தொடரும்)
[படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]
Source:
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013
ஒரு நாணயமான உயரதிகாரி ஒருவரின் கதையைச் சொல்கிறேன். இளைஞர், ஐஏஎஸ் தேர்வுக்காகத் தன்னை நான்கு முறை ஈடுபடுத்தி ஒவ்வொரு முறையும் புள்ளிக்கணக்கில் பெரிய தேர்வை கோட்டை விட்டவர். கடைசியில் ஐபிஎஸ் கிடைத்தது. இங்கும் அவருக்கு ஒரு தடை. உயரம் ஒரு சில மில்லி மீட்டர்கள் குறைவானது என்பது. ஆனாலும் தேர்வு உயரதிகாரிகள், இவர் திறமையைக் கண்டு அதிசயமாக பாவித்து இந்த சிறு குறையை கண்டுகொள்ளாமல் விடலாம் என்று யோசனை சொன்னார்கள். ஆனால் நம்மாள் ரோஷம் மிக்கவர்.. இப்போது கண்டுகொள்ளாமல் போனாலும் பின்னாளில் இதுவே தன் வேலைக்கு உலை வைக்கும் தீயாக மாறலாம் என்று மறுத்துவிட்டார்.
பிறகு இவருக்கு ரெவின்யூ’வில் கிடைத்தது. ஒப்புக் கொண்டார். இவர் சாமர்த்தியம் எக்ஸைஸ் வரி விதிப்பிலும், அதன் வசூலிலும் தெரிந்தது. சரியான நேர்மையாக விதிப்படி யார் யார் எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படியே நேர்மையாகவே வசூல் செய்யுங்கள் என்றார். இங்குதான் வந்தது மிகப் பெரிய சவால். ஏற்கனவே குறைந்த அளவில் உற்பத்தியைக் காண்பித்து குறைந்த அளவில் வரி செலுத்தியவர்கள் உண்மையான முறையில் வரி செலுத்தவேண்டும் என்றால் இத்தனை நாள் வரை ஏமாற்றியதும், இந்த ஏமாற்றலுக்கு உதவிய அதிகாரிகளின் ஏமாற்றுதலும் தெரிய வந்தது. ஆனாலும் சளைக்கவில்லை இவர். இப்போதிலிருந்து வசூலை ஒழுங்காக நடத்துங்கள் என்றார். ஏனைய அதிகாரிகளுக்கும் ஒரு வகையில் சந்தோஷம்.. ஒரே வருடத்தில் வசூல் அதிகமானது. அதே சமயம் ஒரே வருடத்தில் அதிகாரிகள் பலர் தங்கள்மேல் வருவாயை அதிகபட்சமாக இழந்ததால் வெறுப்புற்று இதற்கெல்லாம் காரணமான இவரிடம் தன் மனதை மாற்றிக்கொள்ளுமாறும் பழையபடியே விட்டுக்கொடுத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தினர். அத்துடன் தங்கள் வசூலில் இவருக்குப் பாதியை ‘சமர்ப்பிப்பதாகவும்’ ஆசை காட்டினர். ஆனால் இவர் மசியவில்லை.. தனக்கே ஆசை காட்டியவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை வேறு பயனில்லாத பகுதிக்கு மாற்றினார்.. அவ்வளவுதான் வந்தது மோசம். ஏனைய அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து இவருக்கே வேட்டு வைத்தனர். என்ன செய்தனரோ, ஏது செய்தனரோ, இரண்டே நாளில் இவருக்கு பதவி மாற்றம்.
கலங்கவில்லை.. அடுத்து சென்ற வேலையிலும் இதே தொடர்ந்தது. மறுபடியும் வேலை மாற்றல், இடம் மாற்றல். அங்கேயும் இவர் நேர்மையைப் பழகினார். ஆளில்லாத காட்டில் வசூலே இல்லாத இடத்தில் ‘ஆடிட்’ எனும் பெயரில் அதே பதவியில் இடமாற்றம். கவலைப்படவில்லை. நான் நேர்மையாக இருக்கும் வரை எனக்கு என் நெஞ்சில் பயமில்லை. என் நெஞ்சில் பயமில்லை எனும்போது என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிகிறது’ என்றுதான் ஒவ்வொரு மாற்றத்திலும் இவர் எழுதிக்கொடுப்பது.. இப்போதும் எங்கேயோ ஒரு மூலையில் இருக்கிறார். நேர்மை அவருக்குத் துணையாக இருக்கிறது. நெஞ்சில் பயமில்லை. நிம்மதியாகவே இருக்கிறார்.
இங்கே இவரைப் பற்றி எழுதுவதற்குக் காரணம் நான் சமீபத்தில் வல்லமையில் மாதவன் இளங்கோ எழுதிய ‘என் இனிய சக இந்தியனே’என்ற நீண்ட கவிதைதான்.
மேடைபோட்டு முன்னோர் புகழ்பாடிக் காலங்கடத்தினாய்
வெறுத்துப்போய் ஒதுங்கிக் கொண்டேன்!
ஐரோப்பியரைப் பாரேன்றேன்!
ஐயா! தாய்மொழியைக் கொண்டே தழைப்போமென்றேன்
ஆங்கிலத்தில் அசிங்கமாய் வசவுகள் வீசினாய்
அமைதியாய் குமுறினேன்!
சினிமா பின்னால் ஒருகூட்டம்
கிரிக்கெட் பின்னால் மறுகூட்டம்
அரசியல் பின்னால் தெருக்கூட்டம்
இம்மூன்றின் பின்னால் ஊடகக் கூட்டம்!
இலக்கியம் பல படைத்த இந்தியன் எங்கே!
அறிவியல், சிற்பம், வானவியல், கணிதம் என
அனைத்தும் கண்ட அவன் எங்கே?
அன்பு, பண்பு, அறம், மறம் –
இவையெல்லாம்தான் எங்கே?
எதுவும் இன்றி எல்லாம் கண்டவன் –
எல்லாமிருந்தும் செய்யாதிருக்கும்
நிலை ஏனோ?
வந்தான் பாரதி மீசை முறுக்கியபடி,
தொடர்ந்தான் முண்டாசை கழற்றி உதறியபடி,
“‘நெஞ்சு பொறுக்குதிலையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்!’
அன்றே பகர்ந்தேன் புரியலையோ?
அறிவில்லையோ?
நெஞ்சில் உரமுமில்லையடா,
நேர்மை சிறிதுமில்லையடா,
வஞ்சனை சொல்வாரடா,
வாய்ச்சொல்லில் வீரரடா!
நீ புறப்படடா!
உலகெலாம் நம் புகழ் பரப்படா!
நிலையாய், நீர்நிலையாய்,
குளமாய் நீ இராதேடா!
துர்நாற்றம் வீசுமடா!
ஓடும் ஓடையாய் மாறடா!
ஓடடா! ஓடடா! ஓடடா!!”
வந்தோம் ஓடி வெளிநாடு!
வாவென்றது வளநாடு!
கடுமையாய் உழைத்தோம் திறமோடு!
மேலை நாட்டவர் பார்த்தனர் மதிப்போடு!
நிமிர்ந்தோம் இந்தியர் இறுமாப்போடு!
என்று மாறும் எம் திருநாடு?
வாழ்கிறோம் இன்று ஏக்கமோடு!
எம்மைப்போல் ஏங்குபவர்
எத்தனை பேர்?
எத்தனையோ பேர்!
நான் மேலே குறிப்பிட்ட நண்பரைப் போல எத்தனையோ பேர் எங்கெங்கோ இன்னமும் எந்தந்த நிலையிலோ இந்த பாரதத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களை யாரும் விலைக்கு வாங்கிட முடியாது. அவர்களுக்கும் ஏக்கங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் நம்பிக்கை என்ற ஒன்றுதான் இந்த உலகத்தையே ஆட்டுவிக்கிறது. அந்த நம்பிக்கை இவர்களையும் ஒருநாள் வாழவைக்கும் என்றுதான் நம்ப விரும்புகிறேன்.
இந்தவாரம் ஒரு சிந்தனைக்குரிய கவிதையைப் படைத்த மாதவன் இளங்கோ அவர்களை இந்தவார வல்லமையாளராக வல்லமை குழு தேர்ந்தெடுக்கிறது. திரு மாதவன் இளங்கோ அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
கடைசி பாரா: திரு இன்னம்பூரான் அவர்கள் ‘குசலம்’ விசாரித்து எழுதியதில் ஒரு பகுதி
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக் கண்ணில் நல்லஃது உறும் கமுமல வள நகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
“இவ்வுலகின்கண் நல்ல முறையில் தினமும் வாழலாம்; சிந்தித்துப்பார்த்தால் அடுத்த உலகில் பெறவேண்டிய நல்ல கதிக்கும் யாதொரு விதமான குறையும் ஏற்படாது; கண்ணுக்கினிய நல்ல வளத்தோடு கூடிய கழுமலம் என்னும் சீர்காழிப்பதியின்கண் பெண்ணின் நல்லவளாகிய இறைவியுடன் பெருந்தகையாகிய சிவபிரான் நலமாக இருக்கிறான் அல்லவா”
அமெரிக்கா உலகிலேயே பணக்கார நாடு; ஜனநாயக நாடு. பிரிட்டன் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் தன்னுடைய அரச பரம்பரையை இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறது. டயானா-சார்லஸ் திருமணம் தோல்வியில் முடிந்தது, டயானா தன்னுடைய காதலனோடு காரில் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு சதியால் கார் விபத்தில் மடிந்தது, இளவரசர் சார்லஸ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவரைத் திருமணம் செய்துகொண்டது ஆகிய எல்லாம் ஒரு அரச பரம்பரைக்குரிய செயல்களாக நான் நினைக்கவில்லை. நான் நினைப்பது இருக்கட்டும். பிரிட்டன் தன் அரச பரம்பரையை வெகுவாகக் கொண்டாடுகிறது. அது தன் நாட்டின் பெருமைக்குரிய சின்னமாகக் கருதுகிறது. அரசராகப் போகும் இளவரசர் ஹேரியின் மனைவி கருவுற்றது இங்கிலாந்தைப் பொறுத்த வரை பெரிய செய்தி.
அமெரிக்காவிற்கு என்று ஒரு அரச பரம்பரை இல்லாவிட்டாலும் தங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது அந்த நிகழ்ச்சி அரசரின் முடிசூட்டு விழாவைப் போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும். ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முன் அந்தப் பதவிக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்வதாக சத்தியம் செய்வதுதான் இந்தத் தொடக்க விழாவின் முக்கிய, அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற, முக்கிய நிகழ்ச்சி. ஆனால் நாளடைவில் இது பெரிய விழாவாக உருவாகியிருக்கிறது. பொதுமக்களும் இதை ஒரு பெரிய திருவிழா போல் கொண்டாட நினைக்கிறார்கள்.
இந்தத் துவக்கவிழா ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற வேண்டும் என்று திருத்தப்பட்ட அமெரிக்க அரசியல் சாசனம் கூறுகிறது. அன்றிலிருந்துதான் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பதவிக் காலம் ஆரம்பமாகிறது. முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் 1789-இல் ஏப்ரல் 30-ஆம் தேதி நியுயார்க்கில் பதவியேற்றாராம். அப்போது அதுதான் அமெரிக்காவின் தலைநகரம். 1801-இல் மூன்றாவது ஜனாதிபதியான தாமஸ் ஜெபர்ஸன் பதவியேற்ற போது வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவின் தலைநகரமாகியிருந்தது.
அதன் பிறகு மார்ச் மாதம் நாலாம் தேதியை ஜனாதிபதியின் துவக்க விழா நாளாக மாற்றினார்களாம். தொலைபேசி, இண்டெர்னெட் ஆகிய வசதிகள் இல்லாத காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்தல் முடிவுகள் குதிரை வீரர்கள் மூலமாக தலைநகருக்கு வந்துசேர வேண்டுமாதலால் நவம்பர் முதல் செவ்வாய்க் கிழமையன்று (அமெரிக்கா உருவான நாளிலிருந்து நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க் கிழமைதான் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் நாள்; இது வியப்பிற்குரிய விஷயம்தான்) தேர்தல் நடந்தாலும், வாக்குகளைக் கையால் எண்ணி, முடிவை அறிவித்து, தேர்தல் குழுவின் (Electoral College) முடிவுகளையும் தெரிந்துகொண்டு ஜனாதிபதி பதவி ஏற்பதற்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. 1937-இல் ரூஸ்வெட்டின் இரண்டாவது பதவியேற்பின் போது பதவியேற்பு விழா அரசியல் சாசனம் இருபதாவது திருத்தத்தின்படி ஜனவரி 20-க்கு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இரண்டரை மாதங்கள் புதிதாகப் பதவியேற்பவர் தன்னுடைய மந்திரி சபையையும் மற்ற அதிகாரிகளையும் தேர்ந்தெடுப்பதற்கு அவகாசம் அளிக்கிறது.
துவக்க விழா அமெரிக்க பார்லிமெண்டான கேபிடல் ஹில்லின் (Capitol Hill) படிகளில் நடக்கும். அமெரிக்க தலைமை நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். அதன் பிறகு ஜனாதிபதி பொறுப்பை ஏற்றவர் தன் அதிகார பூர்வமான வீட்டிற்குச் செல்வார். ஜெபர்ஸன் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின் குதிரை மீது வாத்தியக் குழுக்கள் புடைசூழ தன் இருப்பிடத்திற்குச் சென்றாராம். அதுதான் இப்போது பெரிய துவக்க விழா அணிவகுப்பாக (Inaugural Parade) உருவாகியிருக்கிறது. ஜெபர்சனை அடுத்து வந்த ஜேம்ஸ் மேடிசன் காலத்தில் அணிவகுப்பிற்குப் பிறகு துவக்க விழா நடனம் (Inaugural Ball) ஆரம்பித்தது. இதில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் $4 கொடுத்து டிக்கெட் வாங்கினார்களாம். இன்று டிக்கெட்டின் விலை $60. ஆனால், நன்கொடை விலையாக முதலில் $1000-உம், பின், $500-உம் பெறப்பட்டது. 1913-இல் பதவியேற்ற உட்ரோ வில்ஸன் இது அதிகப் பணம் செலவாகும் நிகழ்ச்சி என்று கருதி ரத்துசெய்துவிட்டாராம். அவரை அடுத்து வந்த வாரன் ஹார்டிங்கும் அதைத் தொடர்ந்தாராம். 1949-இல் ஹேரி ட்ரூமன் இதை மறுபடியும் கொண்டுவந்தாராம். ஜனாதிபதி கிளிண்டன் காலத்தில் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் பதினான்காக உயர்ந்தனவாம்.
பதவிப் பிரமாண விழாவிற்கு ஆகும் செலவுகளை மட்டும்தான் அரசு செலவழிக்கிறதாம். மற்ற எல்லா நிகழ்ச்சிகளுக்காகும் செலவுகளை துவக்கவிழா கமிட்டி தனிப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்கிறதாம். இந்த முறை ஒபாமாவே 50 மில்லியன் டாலர்கள் வசூலிக்கும்படி கமிட்டி அங்கத்தினர்களிடம் கூறினாராம்.
பல நாட்களாக பதவியேற்பிற்கான ஏற்பாடுகள் நடந்தன. மிஷல் ஒபாமாவின் உடைகளுக்காக பல ஆயிரம் டாலர்கள் செலவழிக்கப்பட்டன. (ஆனால் அன்று ஒரு நாள் அதை அணிந்த பிறகு அவருடைய அந்த உடை ஜனாதிபதி ஆவணக் காப்பகத்திற்குச் (presidential archives) சென்றுவிடுமாம்.) பெரிய ஆடை வல்லுநர்கள் அதைத் தயாரித்தார்களாம். அதன் விலை ரகசியம். ஃபாஷன் பற்றித் தெரிந்தவர்கள் $10,000 இருக்கலாம் என்று மதிக்கிறார்கள். முப்பது வருஷங்களுக்கு முன் ஜனாதிபதியாக இருந்த ரீகனின் மனைவி ஆடைகளில் அதிகப் பணம் செலவழிக்கிறார் என்று மக்களிடையே அதிருப்தி இருந்ததாம். இப்போது மிஷல் ஒபாமாவின் உடைகளைப் பற்றி யாரும் குறை சொல்வதாகத் தெரியவில்லை. இந்த முப்பது ஆண்டுகளில் எத்தனை மாற்றம்!
துவக்க விழாவிற்குப் பிறகு அணிவகுப்பு, நடனம் என்று பல நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. சுமார் பத்து லட்சம் பேர் வாஷிங்டனின் குளிரையும் பொருட்படுத்தாமல் துவக்க விழாவில் கலந்துகொண்டனர். இது ஒபாமாவின் முதல் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கிஅயில் பாதி.
ஒபாமா தன்னுடைய துவக்க உரையில் (Inaugural Speech) தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் கூறிய வாக்குறுதிகளை மறுபடி கூறினார். பலர் அன்றாடத் தேவைகளுக்கே போராடிக்கொண்டிருக்கும்போது சிலர் கையில் மட்டும் பணம் சேருவது நாட்டிற்கே நல்லதல்ல என்றும் ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர்களை மற்றவர்கள் வெறுக்கும் வரையில் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதாகாது என்றும் அட்சய பாதிரமான அமெரிக்காவிற்கு வர விரும்புபவர்களில் தகுதி இருப்பவர்களை வரவேற்பதே மனிதநேயம் என்றும் அவர் கூறியது அவர் எப்படிப்பட்ட மனித நேயர் என்பதைக் காட்டியது. சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது பற்றியும் விரிவாகப் பேசினார்.
அவருடைய துவக்க விழாவில் கடவுள் வணக்கம் பாடியவர் ஒரு கருப்புப் பெண். கவிதை வாசித்தவர் ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர். துணைஜனாதிபதிக்குப் பதவிப் பிரமாணம் செய்வித்த உச்சநீதிமன்ற நீதிபதி போர்ட்டரீகோவிலிருந்து சிறு வயதில் அமெரிக்காவிற்குத் தன் பெற்றோர்களுடன் குடியேறி நியுயார்க்கில் வறியவர்கள் பகுதியில் வளர்ந்து படித்து முன்னேறியவர். இவர்களைத் தன் துவக்க விழாவிற்குத் தேர்தெடுத்ததின் மூலம் தான் இவர்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதை உலகிற்கு அறிவித்தார். அமெரிக்கா பல வித மக்களையும் அரவணைக்கும் நாடு; அவர்கள் மேலே வர வாய்ப்புகள் அளிக்கும் நாடு என்று காட்டவும் அப்படிச் செய்தார் என்று நினைக்கிறேன். White Anglo-Saxon Protestant-களுக்குத் துவக்க விழாவில் முக்கிய இடம் இல்லை (இவர்களை WASP என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்). இவர்கள் அமெரிக்காவிற்கு வந்த முதல் குடியேறிகளின் வழி வந்தவர்கள். இவர்கள் அமெரிக்கா தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்கள். இந்த இனத்தைச் சேர்ந்த யாருக்கும் இறை வணக்கம் பாடவோ கவிதை வாசிக்கவோ ஒபாமா இடம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் எனக்குள்ளே ஒரு நெருடல். இந்தத் துவக்க விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் வேண்டுமா? சிகாகோ நகரின் முக்கிய வீதி ஒன்றில வயதான கருப்பர் ஒருவர் கடுங்குளிரில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது இத்தனை பணம் இதற்காகச் செலவிட வேண்டுமா? காந்திஜி பற்றி அதிகம் தெரிந்திராத ஒரு அமெரிக்கப் பெண் என்னிடம் ஒரு முறை ‘டயப்பர் (diaper-சிறு குழந்தைகளுக்கு அவர்களுக்கு விபரம் தெரியும் வரை இடையில் கட்டும் துண்டு) கட்டிக்கொண்டு இருப்பாரே அவர்தானே நீங்கள் குறிப்பிடும் காந்திஜி’ என்று கேட்டார். தமிழ்நாட்டிற்கு வந்தபோது இடையில் வேட்டி மட்டும் உடுத்தியிருந்த தமிழ்நாட்டு விவசாயிகளைப் பார்த்த காந்திஜி அன்றிலிருந்து தானும் வேட்டி மட்டும் உடுத்தத் தீர்மானித்தார் என்று அந்தப் பெண்ணிற்கு விளக்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஆனால் ஒபாமா காந்திஜியைப் பற்றி முழுவதும் அறிந்தவர். அவருடைய எளிமையை வெகுவாகப் போற்றியவர். ‘யாரோடு – அவர்கள் உயிரோடு இருப்பவர்களானாலும் சரி அல்லது இறந்துபோய்விட்டவர்களானாலும் சரி – நீங்கள் உணவு உண்ண விரும்புகிறீர்கள்?’ என்று ஒபாமாவிடம் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு மாணவன் கேட்டபோது எந்த விதத் தாமதமும் இன்றி அவர் உடனடியாகக் கொடுத்த பதில் ‘நான் காந்திஜியோடுதான் உணவு உண்ண விரும்புகிறேன். அவர் உண்ணும் உணவு மிகவும் எளிமையானதாக, அளவில் குறைவாக இருக்கும் என்றாலும்’ என்றார். அவர் காந்திஜியைப் போற்றுபவர் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்? அவராலேயே ஜனாதிபதி பதயேற்பு விழாவை எளிமையாக நடத்த முடியவில்லை என்றால் அமெரிக்காவின் பகட்டிற்கு அவர் பணிய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது என்பதைத் தவிர என்ன காரணம் இருக்க முடியும்?
பொதுவாக இந்தியாவில் அரசியல்வாதிகள் தாங்கள் எளிய வாழ்க்கை வாழுவதாக – அப்படி வாழுகிறார்களோ இல்லையோ – காட்டிக்கொள்வார்கள். ஆனால் அமெரிக்காவில் அப்படியில்லை. எல்லா அரசியல்வாதிகளும் ‘டிப்டாப்பாக’ உடை அணிந்து வருகிறார்கள். நூற்றுக் கணக்கில் பணம் செலவழித்து தலை அலங்காரம் செய்துகொள்கிறார்கள். (2008 ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட ஜான் எட்வர்ட்ஸ் 8000 டாலர் செலவழித்துத் தலை அலங்காரம் செய்துகொண்டதாகக் கூறினார்கள்.) அமெரிக்காவில் எல்லோரும் – முதியவர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் உட்பட – தலை அலங்காரம் செய்துகொள்ளுகிறார்கள் என்பது இன்னொரு விஷயம். உடம்பை ஊளைச்சதை எதுவுமில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அமெரிக்க இலக்கணங்களில் ஒன்று. அதுவும் பொதுவாழ்வில் ஈடுப்பட்டிருப்பவர்கள் உடலை நேர்த்தியாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு நாகரிகம் தெரியவில்லை என்று பொதுமக்கள் நினைத்துவிடலாம். அதிலும் கருப்பு இனத்தைச் சேர்ந்த ஒபாமாவுக்கும் அவரது மனைவிக்கும் மற்ற வெள்ளையர்கள் போல் நாகரிகமாக இருக்கத் தெரியாது என்று பொதுமக்கள் நினைக்க வாய்ப்பு உண்டு. மிஷல் ஒபாமா அவர் ஜனாதிபதி மனைவியாக ஆவதற்கு முன்பிருந்ததை விட இப்போது தன்னுடைய உடல் அமைப்பில் அக்கறை செலுத்துகிறார் என்று நான் என்று நினைக்கிறேன். தாங்கள் எந்த விதத்திலும் வெள்ளை அமெரிக்கர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிக்கொள்வதற்காகவும் பதவியில் இருப்பவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள்.
அமெரிக்காவின் படிமத்தை உலகில் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஒபாமாவிற்கு இருப்பதும் அமெரிக்கா தன் பலத்தையும் பணத்தையும் உலகிற்குக் காட்ட விரும்பியதும்தான் துவக்க விழா இவ்வளவு ஆடம்பரமாக அமைந்தது என்று நினைத்துக்கொண்டால் ஓரளவு சமாதானம் கிடைக்கிறது.
அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லையென்றால், பிரேமைக்குத் தளை இல்லை என்று ஆகிவிடுமா என்ன? இல்லை கனிவு கட்டற்ற அரவணைப்பு ஆகிவிடுமோ? விஷ்ணுவுக்கு சகஸ்ரநாமம் என்றால் பிரேமைக்கு லக்ஷார்ச்சனையே செய்து விடலாம். பிரேமை மனம் என்னும் சுரங்கத்தில் ஜனித்து, அலைந்து, திரிந்து, திக்குத்திசை தெரியாமல் தொலைந்து, மீண்டு/ மீட்கப்பட்டு, நிரந்தரமாக மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும் ஒரு சஞ்சீவி; சிரஞ்சீவி. அவள் ஒரு தொடர்கதை; அமரகாவியம்.
பெற்றெடுத்த அன்னை தான் பிரேமையின் ஊற்று, நீரோட்டம், பிரவாகம். ரத்த பாசமென்பது உள்ளம் உருகி, உடலும் சிந்தி, உருவும், உயிரும் அருளும் பாக்கியம் என்றால், அது அன்னையின் கொடையே. அவள் மறைந்த பின் ஆண்டாண்டு
தோறும் நினவு நாளை அனுசரிக்கும் போது, மனம் தத்தளிக்கிறது. உள்ளம் பதறுதடா! அவளை நினைக்காத க்ஷணமொன்று உண்டோ? உடன் பிறந்தோரை சஹோதரன், சஹோதரி என்கிறது சம்ஸ்கிருதம். ‘ஒரே வயிற்றில் பிறந்தோர்’ என்று பொருள். அதனால் மட்டுமா சகோதர வாஞ்சை?
பொருள் என்றால் என்ன பொருள்! சொல்லின் புரிதலை நாடி, தேடுவதும் பொருள் தான்.
திரைகடலோடியும் தேடும் திரவியமும் பொருள் தான். திவாகரமும், நிகண்டும், அகராதியும் சொல்லும் பொருள் எல்லாவற்றிற்கும் மேலான பொருள் ஒன்று உண்டு.
பிரேமையினால் தளை கழண்டுபோக, சுகிர்த்து மகிழ்ந்த தலைவன் பரிசம் போட ‘பொருள்’ தேடி செல்ல விழைகிறான். ‘ஒரு பொருளை தேடும் நீ விலை மதியா பொருளையல்லவா தொலைத்து விடுவாய்.’ என்று நைச்சியமாக அவனை பயமுறுத்தி, அவனை தடுத்தாட்கொண்டு விடுகிறாள், தலைவியின் பாங்கி. அவளுக்கு அல்லவோ தெரியும், தலைவியின் பிரேமையின் அருமை. கூட்டுக்களவாணியாயிற்றே!
“கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருளாகுமோ—”என்று ஒரு போடு போட்ட பாங்கி, ஒரு குண்டையும் வீசி அவனை கலங்கடித்தாள்.
“… விடமீன் போல் தொழுதேந்தும் வயங்கிய கற்பினாள்
தடமென் தோள் பிரியாமை பொருளாயன் அல்லதை…” என்று.
இன்றைய சினிமா தமிழில்:
“மிஸ்டர்! நீ எந்த ஊருக்குப் போவையோ? எந்த மீன் கிட்ட சிக்குவையோ? எம்.எஸ். நடிச்சாங்களே அந்த சகுந்தலை சினிமாவின் ஹீரோ (வில்லன்?) துஷ்யந்தன் மாதிரி ஹீரோயினை மறந்திடுவாயோ? யார் கண்டா? அவள் விரகதாபத்தில் துடித்து மடிந்து போனால், யாரடா பொறுப்பு? அவ தாங்கமாட்டாடா கண்ணு. உங்கப்புராணை! போகாதே! போகாதே! என் ஃப்ரெண்டின் ஃப்யூச்சர் கணவா!”
“கடன் இறந்து…அல்லதை…’ என்ற பிரேமபாணம் கலித்தொகையில் செலவு அழுங்குவித்தல் என்ற பகுதியில் இவ்வாறு வருகிறது:
செலவு என்றால் பயணம். அதை நடக்க விடாமல் செய்வதே அழுங்குவித்தல். பாங்கி உணர்த்தும் விலை மதியா, திரும்ப கிடைக்காத ’பொருள்’ தலவியின் இளமை. அது மட்டுமல்ல. அவளின் விரகதாபம் அவளை கொன்றுவிடுமோ என்று சொல்லி ‘மிரட்டுகிறாள்’. அவனும் செலவை தவிர்த்து விடுகிறான். ஒரு பிரமேயம் போதாதா, பிரேமைக்கு! பிரேமை இனிக்கும்; தகிக்கும்; இழுக்கும். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாத சமாச்சாரமா? என்று கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும்.
அதனால் தான் வாஞ்சைக்குத் திரும்புகிறேன். ‘ஒரே வயிற்றில் பிறந்தோர்’ என்பது மட்டுமல்ல. ஒரு கூட்டில் வாழ்ந்த பார்ப்புகள் அல்லவா. அதனால் ஒரு பிரேமை. பல வருடங்களுக்கு முன் பிருதிவி ராஜ் நடித்த ‘படோசி’ (அண்டை வீட்டுக்காரன்) என்ற சினிமா பார்த்தது ஞாபகம் வருகிறது. கலோனிய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பரஸ்பர பிரேமையை இழந்த ஹிந்து-முஸ்லீம் ‘படோசி’. எனவே பிரேமைக்கு பரந்த இயல்பும் உண்டு. அது தான் மனித நேயம். தற்கால அரசியல் வசனமல்ல.
இனி இறை மீது காதல், கனிவு, அன்பு, பிரேமை. ‘குசலம்’ படித்தவர்களில் பலர் ஒரு நுட்பம் பற்றி பேசவில்லை. திருஞானசம்பந்தர், தன்னை தேடி வந்த தகப்பனிடன் வினவியது: ‘…பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.’ குளக்கரையில் அழுது கொண்டு நின்ற திராவிட சிசுவுக்கு தங்கப்பாலாடையில் அடிசல் போட்டிய அம்பாள் நல்லாள். அது பொருத்தமே. கிருபாகரனோ அந்த தோணியப்பர். அவருடைய ‘குசலம்’ விஜாரிக்க வேண்டாமோ? திருஞானசம்பந்த்ரின் மோன நிலையில் சுவாமியும் பிரேமைக்குரிய உறவினன் தான். அதான் ‘நலம். நலம் அறிய அவா.’
அடுத்த கட்டம் மனதுக்குக் கஷ்டம், நம் போன்ற சராசரிகளுக்கு. தோணியப்பர் திவ்ய தம்பதிக்கு குழவியாக இருந்த போதே தெய்வீகசம்பந்தமாகிவிட்ட திருஞானசம்பந்தருக்கு 16 வயதில் இகலோக சம்பந்தம் பேசினார்கள். திருநல்லூர் நம்பியாண்டாரின் பெண்ணை இவருக்கு திருமணம் முடிக்க வந்த சுற்றத்தையும், மணமகளையும் கோயிலுக்கு அழைத்து சென்றார். அங்கு நடந்ததோ பெருமணம். எல்லாரும் கூண்டோடு கைலாசம்.
“இறைவனிடத்துக் காதல் கொண்டு, மனம் கசிந்து, கண்ணீர் நிறைத்து”அந்நிலையில் ஓதுகின்றவர்களை வீடு பேறுவறச்செலுத்துவது (யாதெனில்) நான்கு வேதங்களைக்காட்டிலும் மெய்பொருளாக உள்ளதும், இறைவனுடைய பெயராக உள்ளதுமாகிய ‘நமசிவாய’என்று சொல்லப்படும் திருஐந்து எழுத்து.”
~ அ.ச.ஞானசம்பந்தன்
இப்போது சொல்லுங்கள், பிரேமையின் பிரமையை பற்றி.
பிரேமையுடன்,
இன்னம்பூரான்
25 01 2013
உசாத்துணை: அ.ச.ஞானசம்பந்தன் (2005) இன்னமுதம்: பக்கம் 26.
“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அத்தகைய மங்கையர் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஆற்றி வரும் பணிகள் அளவிடற்கரியன. பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் “நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்” பெற்ற இன்றைய பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை எனலாம். வீட்டைப் பராமரிப்பது முதல் விண்வெளிக்குச் செல்வது வரை அவர்கள் செய்து வரும் பணிகள் அளப்பரியன. ஆனால் இவ்வளவு ஆற்றல் மிக்க பெண்கள் தங்கள் உடல்நலத்தில் போதுமான அக்கறை செலுத்துகின்றார்களா? என்றால், இல்லை என்றுதான் வருத்ததோடு சொல்லவேண்டியுள்ளது.
திருமணத்திற்கு முன்பு வரை தாயும், தந்தையும் தங்கள் மகளின் உடல்நலனைக் கண்போல் காக்கின்றனர் (பெரும்பாலான குடும்பங்களில்). ஆனால் திருமணத்திற்குப் பிந்தைய காலகட்டம் தான் ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான காலகட்டமாகத் திகழ்கின்றது என்பதில் இருவேறு கருத்துகட்கு இடமில்லை. ஏனெனில், பல்வேறு குடும்பப் பொறுப்புகள், குழந்தைப் பேறு, அலுவலகப் பணி, கணவனையும், வீட்டிலுள்ள பெரியோர்களையும் பேணுதல் போன்ற பல கடமைகளை அவள் கவனிக்க வேண்டியிருக்கின்றது. இத்தகைய முக்கியமான தருணத்தில் பெண்கள் தம் குடும்ப நலத்தோடு தங்கள் உடல் நலனிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.
”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது அனுபவ மொழி. அத்தகைய நோயற்ற வாழ்வைப் பெறுவதற்கு முறையான, சரியான உணவு முறை அவசியம் என்பதனை எவரே மறுப்பர்? “உணவே மருந்து” என்பது ஆன்றோர் வாக்கு. தெய்வப் புலவர் திருவள்ளுவரும்,
”மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு.” என்கின்றார். உண்ணும் உணவானது நோயற்ற வாழ்வை வழங்குவதில் பெரும்பங்காற்றுகின்றது. அத்தகைய உணவின் தன்மை, உண்ணும் அளவு, காலம் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு உண்ணுதல் நலம் பயக்கும்.
உணவில் மாவுச்சத்து (carbohydrates), புரதச்சத்து (protein), மற்றும் கொழுப்புச்சத்து (fat) ஆகையவைப் போதுமான அளவில் இருக்கின்றதா என்பதை பெண்கள் (ஏன் அனைவருமே) கவனித்தில் கொள்ள வேண்டும். இதனைத் தான் ”சமச்சீர் உணவு” (balanced diet) என்று இன்றைய மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, குழந்தை பெறுகின்ற வயதில் (child-bearing age) இருக்கும் மகளிர்க்கு இச்சமச்சீர் உணவு மிகவும் முக்கியமானது. அப்போதுதான் பிறக்கும் குழந்தைகள் நல்ல உடல்நலத்தோடும், மன வளத்தோடும், குறைபாடுகள் இன்றியும் பிறக்க வாய்ப்பு ஏற்படும். அதுபோலவே, 50 வயதைக் கடந்த பெண்களுக்கு (குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு) அதிகப் படியான கால்சியப் பற்றாக்குறை காரணமாக எலும்புத் தேய்மான நோய் (osteoporosis) ஏற்படுகின்றது. இதனால் தவறி அவர்கள் எங்கேனும் கீழே விழுந்தால் கூட எலும்பு முறிவு (bone fracture) ஏற்பட்டு விடுகின்றது. இதனைத் தவிர்க்கப் பெண்கள் கால்சியம் சத்து நிறைந்த பால், தயிர், கீரை வகைகள், சோயா பீன்ஸ், ஆரஞ்சு, முட்டை போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.
உடல் நலனைச் சீர்குலைக்கும் பிற நோய்கள் என்று பார்த்தால் பரம்பரை நோய்களுக்கு முக்கியப் பங்குண்டு எனலாம். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்றவை பொதுவான பரம்பரை நோய்களாக அறியப்படுபவை. 30 வயதிற்கு மேல்தான் இந்நோய்கள் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கும். ஆகவே, தாய், தந்தையர்க்கு இத்தகைய நோய்கள் இருப்பின் அவர்களின் வாரிசுகளுக்கும் அவை வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனை உணர்ந்து மருத்துவ ஆலோசனையை நாடுவதும், மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறையினைக் கடைப்பிடிப்பதும் அவசியம்.
இன்றைய மருத்துவ உலகம் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், புரட்சிகளையும் கண்டு வருகின்றது என்றால் மிகையாகாது. சான்றாக, நுண் துளை அறுவை சிகிச்சை (laparoscopic surgery) ஓர் வரப் பிரசாதம் என்றே கூறலாம். இதன் மூலம் பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் எளிதாகச் செய்யமுடிகின்றது. வெகு விரைவிலேயே இயல்பு வாழ்க்கைத் திரும்பவும் இயலுகின்றது.
நவீன மருத்துவ வசதிகளை, முன்னேற்றங்களைப் பெண்கள் தங்கள் உடல் நலத்தை காக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோய்கள் வருவதற்கு முன்னமேயே தற்காப்பு மருத்துவப் பரிசோதனைகளைச் அவ்வப்போது செய்துகொள்வது நல்லது. குறிப்பாக 30 வயதினைக் கடந்த பெண்கள் 3 ஆண்டுகட்கு ஒரு முறை மார்பகப் பரிசோதனை (Mammogram) மற்றும் கருப்பைப் பரிசோதனை (Pap smear) போன்றவற்றைச் செய்துகொள்வது அவசியமானது. இதனால் மார்பகப் புற்றுநோய் (breast cancer), கருப்பைசார் புற்றுநோய்கள் (cervical cancer, endometrial cancer and ovarian cancer) ஆகியவை வராமலே தடுக்கவோ அல்லது ஏற்கனவே வந்திருந்தால் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தவோ இயலும். அதைவிடுத்து, வீட்டு வேலைகள், அலுவலகப் பணிகள் ஆகியவற்றின் காரணமாகப் பெண்கள் தங்கள் உடல்நலனில் போதிய அக்கறை செலுத்தத் தவறினால் பல்வேறு நோய்கட்கு அவர்கள் ஆட்பட நேரும். அது அவர்களின் இனிய இல்லறத்தைப் பாதிக்கக்கூடும். ஏன்..அலுவலகப் பணிகளையும் செம்மையாகச் செய்ய இயலாது.
அடுத்தபடியாக, பெண்கள் தங்கள் உடலைப் பேணுவதற்கு, கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கு உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை பெரிதும் உதவுகின்றன. எனவே, எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் அதற்கு இடையில் தினமும் (காலையோ அல்லது மாலையோ) 15 அல்லது 20 நிமிடங்களேனும் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபடுதல் அவசியம். யோகா, தியானம் போன்றவற்றை முறையாகப் பயின்று பின்பு பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது. இத்தகைய பயிற்சிகளினால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். வேலைகளைத் திறம்பட நிர்வகிக்கத் தேவையான ஆற்றலையும், புத்திக்கூர்மையையும் இவை அளிக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்கின்றனர்.
அலுவலகம் செல்லும் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதோடு, நேர மேலாண்மையிலும் (time management) ஆற்றலும் பெற்றவர்களாக இருந்தால் இன்றைய விஞ்ஞான உலகில் அவர்களால் அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறப்பாய்ச் செய்ய முடியும். நேர நிர்வாகம் என்பதனை அவர்கள் முதலில் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். வீட்டு வேலைகளை அவரவர் வயதிற்கும், அனுபவத்திற்கும் தக்கபடி வீட்டிலுள்ள அனைவர்க்கும் பகிர்ந்தளித்தல் வேண்டும். இவ்வாறு செய்வது பெண்களின் வேலை பளுவையும், உடல் சோர்வையும், மன அழுத்தத்தையும் குறைக்கும். இம்முறையை (வாய்ப்பிருப்பின்) அலுவலகத்திலும் பின்பற்றலாம். இதைத்தான் ”delegation of duties” என்று குறிப்பிடுகின்றனர்.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றொன்று, தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தைப் பெண்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. வேலைகளுக்கு நடுவில் கிடைக்கின்ற சிறிதளவு ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் செலவழிக்கப் பெண்கள் பழக வேண்டும். தொ(ல்)லைக் காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டுக் குழந்தைகளோடு செலவிடுதல் வேண்டும். நல்ல கருத்துள்ள நீதிக் கதைகள், திருக்குறள் போன்றவற்றை அவர்களுக்குக் கற்பிக்கலாம். அவர்களின் பள்ளி அனுபவங்களையும், ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறைகள் பற்றியும் கேட்டறியலாம். அவர்களோடு சிறிது நேரம் விளையாடலாம். இது போன்ற செயல்கள் குழந்தைகளுக்கு மனமகிழ்ச்சியை நிச்சயம் கொடுக்கும். அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக வாழ வழிகோலும்.
எனவே, உடல் நலத்தையும், மன வளத்தையும் காக்கத் தேவையான உணவினையும், உடற்பயிற்சிகளையும், முறையான மருத்துவப் பரிசோதனைகளையும், சரியான திட்டமிடலையும் மேற்கொண்டால் இன்றைய பெண்கள் மேலும் பல சாதனைகளைப் புரியலாம், சரித்திரம் படைக்கலாம். வீடு, அலுவலகம், இரண்டையும் திறம்பட நிர்வகிக்கலாம்.
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை-வாழ்க (பாரத)
மனித ருணவை மனிதர் பறிக்கம்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு;
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின் றித்தரு நாடு-இது
கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்
கணக்கின் றித்தரு நாடு-வாழ்க! (பாரத)
இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க! (பாரத)
இசைக்கு மனது கட்டுப்படுகிறது. இசைக்கு மனிதர்கள் மட்டுமின்றி பறவைகளும் விலங்குகளும் கூட மயங்குகின்றன.
மனிதன் ஏற்படுத்தும் ஒலிகளைப்போலவே சில நேரங்களில் இயற்கையும் ஓசையை அதாவது ஒலியை உண்டாக்கும்.
காட்டில் விளாம்பழ ஓடு ஒன்று கிடக்கிறது யானை ஒன்றுஅதனைத்தின்று போட்டதில் அதன்மீது துளை ஒன்று எப்படியோ வந்துவிட அதனுள் காற்று புகுந்து புறப்படுகிறதாம். அது குழல் ஊதுவதைப்போல ஒலிக்கிறதாம்!இந்தச்செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.
பொரியரை விளவின் புண்புற விளைபுழல் அழலெறி கோடை தூக்கலின் கோவலர்குழலென…(பாடல்219)
கோடைவெய்யிலில் மூங்கில்கள் உலர்ந்துவிட்டன. மேல்கற்றுவீசும்போது நெல் உதிர்ந்து பொறிகிறது. அப்போது நகம் நெறிவதுப்பொல ஓசைவருகிறது இதையும் அகப்பாடல் ஒன்றுதெரிவிக்கிறது.
குன்றின்மீது சுனை நீர்வற்றிவிட்டது காற்று சுனைக்கு உள்ளே மோதிச்செல்கிறது அப்பொழுது பறைமுழங்குவதைபோல ஓசைகேட்கிறது.
இவை நம்நாட்டு ஒலிகள்.
இதைப்போன்ற வினோத சில மேல்நாட்டு ஒலிகளைக்கேட்கலாமா?
மணி ஒலிப்பதைப்போலவும் வேறு சில ஒலிகள் கேட்பதாயும் சொல்வார்கள். எந்தக்கருவியிலிருந்து எந்ததிசையிலிருந்து என சொல்லமுடியவில்லை என்பார்கள்விலங்குகளோ பறவைகளோ அலலது வண்டுகளோ இந்த ஒலியை உண்டாக்குவதில்லை. பாலைவனத்தில் ஆள்நடமாட்டமே இலலாத இடத்தினிலிருந்து இத்தகைய ஒலிகள் வருவது பற்றி டாக்டர் எமிலி சோரேல் என்னும் பௌதீகப் பேராசிரியருக்கு வியப்பாகி, இதனைக்குறித்து சில பரிசோதனைகள் செய்ய முன்வந்தார்.
டாக்டர் எமிலி தனது துப்பாக்கியை பாலைவன காற்று வேகமாக வந்து மோதும் திசைக்கு எதிராக 45டிகிரி கோணத்தில் நிற்கவைத்தார். என்ன ஆச்சர்யம்? உலோகக்கம்பி அதிர்வதுபோல ஓசை கேட்டது. பிறகு துப்பாக்கியை அப்படியும் இப்படியும் மாற்றிவைத்து பாலைவனத்தில் வழக்கமாய் கேட்கும் கம்பிச்சுருள் அதிர்வதைப்போன்ற ஒலி வரும்படிச் செய்தார் . பிறகு இந்த அமைப்பை மற்றவர் பார்வையில் படாமல் மறைத்துவிட்டு ஒரு விவசாயியை அழைத்து வந்து அந்த ஒலியைக் கேட்கச்செய்தார்.
பாலைவன இசையைக்கூர்ந்து கேட்ட விவசாயி மணியோசைமிகவும் இனிமையாக இருக்கிறது என்றார்.
டாக்டர் எமிலி இந்தப்பரிசோத்னையின்படி கூறும் கருத்து…
‘அந்த விவசாய நண்பர் என் துப்பாக்கியின்மீது பட்டு ஆற்றலுடன் வெளிப்பட்ட ஒலியை மணியோசை போல இருப்பதாகக் கூறினார். அந்த ஒலி எந்தத் துப்பாக்கியிலிருந்து தோன்றுவது என்பதை நான் அவருக்குக்காண்பித்தேன் அவர் ஆச்சரியம் அடைந்தார்
அந்த இனியஒலி அருகிலிருந்து கேட்காமல் எங்கொ தொலைவிலிருந்து வருவது போல அவர் கூறியது முற்றிலும் உண்மை .ஏனென்றால் அந்த ஒலிஅப்படித்தான் கேட்டது.
இந்த சோதனையில் நான் அறிந்த உண்மை இதுதான் பாலைவனத்தில் சுழன்று அடிக்கும் காற்று உயரத்தில் இருக்கும்போது ஏதோ ஒருபொருளின் வழியாக ஊடுருவிச்செல்லும்போது அந்தப்பொருளை அதிரச்செய்கிறது. அப்போதுதான் இந்த விசித்திரமான ஒலிகேட்கிறது.
காற்றால் அதிரும் அந்தப்பொருள் குன்றின் உச்சியாகவோ பள்ளத்தாக்கை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் பாறையின் கூர்மையானமுனையாகவோ அல்லது தனது நிலையிலிருந்து சற்றே நெகிழ்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தும் ஏதேனும் ஒன்றாகவோ இருக்கலாம் .அதிர்வுகளை ஏற்பத்தும் சாதனம் ஈரத்துடன் இருக்கும்போது ஒலிகள் கேட்பதில்லை ‘என்றும் டாக்டர் எமிலிகூறுகிறார்.
மலைச்சாரலில் வளர்ந்துள்ள மூங்கில்களில் வண்டுகள் துளை ஏற்படுத்தி இருப்பது இயற்கை அந்ததுளைகளில் காற்று புகுந்து செல்லும்போது இனிய இசை ஏற்படும் என்று இலக்கியங்க்ள் கூறுகின்றன.
கில்பர்ட் என்பவர் நேச்சர் இதழுக்கு ஒருகடிதம் எழுதி உள்ளார்.
அந்தக்கடிதத்தில் தனது பண்ணைக்கும் சிறிது தொலைவில் உள்ள வீட்டுமுன்வாயிலுக்கும் உள்ள இடைபட்ட தொலைவில் பூச்சிகள் இறகடித்துப்பறப்பதால் உண்டாகும் ரீங்கார ஓசை கோடைக்கால மதியம் மற்றும் மாலை வேளைகளில் தொடர்ந்து கேட்பதாகக்
கூறுகிறார்
சாகத்தை ஏற்படுத்தும் ஆயிரக்கணக்கான தேனிகள் பறப்பது போல ஓசை உண்டானபோதிலும் ஒரு பூச்சிகூட கண்ணுக்குத் தெரியாததுவியப்பு!’ என்கிறார் அவர்
சில ஓசைகள் எங்கிருந்துவருகின்றன என இதுநாள் வரையிலும் அறிய இயலவில்லை.
உலகத்தில் தோன்றும் எல்லா ஒலிகளுக்கும் ஏதேனும் ஒருஅடிப்படைக் காரணம் இருக்கும் .
காரணம் கண்டுபிடிக்கும்வரை அவை விசித்திரமான் ஒலிகள் என்றேஅழைக்கப்படும்!
திருக்குறள் குறித்துத் தமிழர்களுக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. அந்தக் குறட்பாக்களை வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் எழுதி வைக்கிறோம். அரசுப் பேருந்துகளில், அரசு அலுவலகங்களில், பள்ளி – கல்லூரி – பல்கலைக்கழகங்களில், பல்வேறு அரங்குகளில்… திருக்குறளைக் காண்கிறோம். நாளிதழ்களில் தினமும் குறளும் உரையும் இடம் பெறுகின்றன. தொலைக்காட்சிகளில் திருக்குறளை விளக்குகிறார்கள். இணையத்திலும் பற்பல தளங்களில் குறள் வீற்றிருக்கிறது. திருக்குறளின் பெயரால் அமைப்புகளும் விருதுகளும் உலகெங்கும் உள்ளன. பாடப் பகுதியில் திருக்குறளின் சில அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன. அது போக, 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவர்கள் பலரும் உள்ளனர். திருக்குறளை மேற்கோள் காட்டும் தமிழறிஞர்களும் அரசியல்வாதிகளும் இன்ன பலரும் பற்பலர். திருவள்ளுவர் நாளும் திருவள்ளுவர் ஆண்டும் வேறு இருக்கிறது.
இப்படியெல்லாம் திருக்குறளைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம், திருக்குறட் கருத்துகளை எந்த அளவுக்குப் பின்பற்றுகிறது? இந்தக் கேள்விக்கான பதில், நமக்கு உவப்பானது இல்லை.
கள்ளுண்ணாமையை வலியுறுத்திய வள்ளுவருக்குக் குமரி முனையில் 133 அடி உயரச் சிலையைத் தமிழக அரசு அமைத்தது. அதே அரசுதான் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் அரசு மதுபானக் கடைகளைப் பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மதுக் கடைக்கும் வணிக நிறுவனத்தைப் போல், விற்பனை இலக்கினை நிர்ணயித்து, வியாபாரத்தைப் பெருக்கி, பல்லாயிரம் கோடிகளை இலாபமாக ஈட்டி வருகிறது. அப்படியானால், வள்ளுவரைப் போற்றுவதன் பொருள் என்ன?
‘வள்ளுவர் கூறிய எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர், புலால் உண்ணாமையை வலியுறுத்தினார். அதற்காக இறைச்சி உண்பதை விட்டுவிட முடியுமா?’ என்று பேரா.சுப.வீரபாண்டியன், நானும் பங்கேற்ற ஒரு பட்டி மன்றத்தில் வினவினார். மாமிசம் உண்ணும் தமிழர்கள், வள்ளுவ நெறிப்படிதான் நடக்கிறார்களா?
பிறனில் விழையாமை என்ற கோட்பாட்டினை வள்ளுவம் முன் நிறுத்துகிறது. ஆனால், வாய்ப்பு கிடைக்காத வரை மட்டுமே அவ்வாறு இருப்பது, பெரும்பாலோரின் இயல்பு. இதற்கு எண்ணற்ற சான்றுகளை நம் தெருக்களிலும் ஊடகங்களிலும் அன்றாடம் காணலாம். உடல் அளவில் பிறனில் விழைந்தவர்களைக் காட்டிலும் மனத்தளவில் விழைந்தவர்கள் பற்பல மடங்குகள் அதிகம் இருக்கும். மனச்சான்றின்படி நோக்கினால், இங்கும் குறளின் கருத்தினை நாம் பின்பற்றவில்லை.
தாகத்திற்குத் தண்ணீர் கேட்டால், புட்டியிலும் நெகிழ்ம உறைகளிலும் அடைத்து வைத்துள்ளதைக் காசுக்கு விற்கிறார்கள். தொலைக்காட்சித் தொடர் ஓடும்போது கட்டிய கணவரே வந்தாலும் திரும்பிப் பார்க்காத இல்லத்தரசிகள் இருக்கிறார்கள். ‘கொட்டிக்கோ’ என்று சொல்லி, உணவு பரிமாறும் பண்பும் பல வீடுகளில் உள்ளது. நாம் விருந்தோம்பலைப் பற்றிப் பேசுவது தகுமா?
கடவுள் இல்லை, இல்லவே இல்லை, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் சொன்ன பெரியாரின் மாணவர்கள், தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்துகிறார்கள். இவர்கள், கடவுள் வாழ்த்துப் பாடிய திருவள்ளுவரையும் போற்றுகிறார்கள்.
பொய்யாமையை வலியுறுத்திய வள்ளுவரை முன்வைத்துக் கேட்கிறேன். பொய் சொல்லாத தமிழர்கள் எவ்வளவு பேர்? சிறிதோ, பெரிதோ, பொய் பொய்தானே? சரி, வாய்மை இருக்கிறதே என்கிறீர்களா? தீமையிலாத பொய்களைச் சொன்னவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?
இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்தவர்கள் எவ்வளவு பேர்? மனத்துக்கண் மாசிலனாக வாழ்பவர்கள்? ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் எனக் கருதுபவர்கள்? இன்னும் வள்ளுவத்தில் கூறிய நெறிகளின்படி வாழ்பவர்கள் எங்காவது இருக்கிறார்களா? அறியேன்.
நான் பார்த்த வரை வள்ளுவ நெறிகளில் தமக்கு வசதியான வெகு சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, சில நேரங்களில் மட்டும் பின்பற்றுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். பிற நெறிகளை நினைத்துப் பார்ப்பதே அரிது. பலருக்கு ஏட்டுச் சுரைக்காய், கறிக்குதவாது; கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதே கொள்கை.
போற்றுவது ஒன்றை, கடைப்பிடிப்பதோ வேறு ஒன்றை என்பதே தமிழரின் நிலைப்பாடோ? சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியுடன் அவர்கள் வாழ்வதற்கு வள்ளுவமே சான்று.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
என்ற பாரதியின் வரிகளுக்கு ஏதோ ஒரு பட்டிமன்றத்தில் ஒருவர் விளக்கம் தந்தார். வள்ளுவத்தை உலகிற்குத் தந்துவிட்டதால், உள்நாட்டில் அது இல்லை என நகைச்சுவைக்காக அவர் கூறினார். ஆனால், இந்தக் கூற்றில் ஓரளவு உண்மையும் உள்ளது.
வள்ளுவத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் கூட புரிந்துகொள்ளலாம். அதைப் போற்றிக்கொண்டே கடைப்பிடிக்காததுதான் எனக்குப் புரியவே இல்லை. இந்த இரட்டை வேடம் எதற்காக?
வள்ளுவர் சுட்டிய நெறிகள் அனைத்தும் அவர் ஒருவரே வகுத்தவை அல்ல. அவருக்கும் முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த நெறிகளைச் சீரமைத்து, அவர் வகுத்தும் தொகுத்தும் தந்துள்ளார். ஆதித் தமிழரின் சிந்தனை வளம் செறிந்த செவ்வியல் இலக்கியமே திருக்குறள். அப்படியானால், இவ்வளவு செழுமையான நெறிகளைக் கொண்டிருக்கும் ஒரு சமூகம், ஏன் அவற்றைப் பின்பற்றத் தயங்க வேண்டும்? பின்பற்ற மாட்டேன் என மறுக்க வேண்டும்?
திருக்குறள் எழுதப்பட்ட காலத்திலிருந்தே அதற்கு முரணான செயல்களைக் கொண்டவர்களும் இருந்தே வருகிறார்கள். ‘நல்லவற்றை எடுத்துரைப்பது என் கடமை. அதைப் பின்பற்றுவது உன் விருப்பம்’ என்பதே தமிழரின் நடைமுறை. வன்முறையினால் ஒரு வழக்கத்தை நிலைநாட்டுவதை அவர்கள் விரும்பவில்லை. இயல்பாகவே மனத்திலிருந்து அது பூக்க வேண்டும் என்பதே நம் முன்னோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இன்றும் எதைப் பின்பற்றுவது என்ற சுதந்திரம், நம் மக்களிடம் உள்ளது. அந்தச் சுதந்திரத்தை அவர்கள் முறையாக, முழுமையாகப் பயன்படுத்தினால் அது அவர்களிடம் நிலைக்கும்.
பிரம்மாவை நான்கு தலைகள் இருப்பதைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளலாம் (பார்வைக்குத் தெரியாமல் பின்புறம் ஒரு தலை அமைந்திருக்கும்). படைப்பதனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடவுளாக இருந்தாலும், பிரம்மாவிற்கு மிகக் குறைந்த அளவில்தான் பக்தர்களும் கோயில்களும் இந்துமதக் கலாச்சாரத்தில் உண்டு. படத்தில் காட்டப் படும் இச்சிலை ஒரு சிவன் அல்லது திருமாலின் கோயிலின் வெளிபிரகாரத்தில் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இதுபோன்று மென்மையாக, கண்கவரும் வண்ணம் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்ட பல சிற்பங்கள் தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்த சோழப் பேரரசுக் காலத்தில் உருவாக்கப் பட்டவை. இவ்வகை சிற்பவடிவமைப்பிற்கு உபயோகப் படுத்தப்பட்ட கடினமான கருங்கற்களில் மிக நுண்ணிய வேலைப்பாடுகளை செதுக்குவது இயலாத செயலாகும்.
அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001
இந்து தெய்வம் பிரம்மா: இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 10-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001
விஷ்ணு:
அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003
விஷ்ணு இந்துமதத்தின் மிகவும் சிறப்பு பெற்ற தெய்வம். உலகில் நீதியை நிலைநாட்டி காக்கும் தொழிலைச் செய்பவர் விஷ்ணு. உலகைத் தீய சக்திகள் ஆட்டிப் படைக்கும் பொழுது, மண்ணில் பல வகையான அவதாரங்களில் அவதரித்து அத்தீய சக்திகளை அழித்து மக்களைக் காப்பார். அந்த அவதாரங்களில் குறிப்பிடத் தக்கவை வினோதமான மனிதனும் சிங்கமும் இணைந்த உருவ அமைப்பினை உடைய நரசிம்ம அவதாரமும், மனித உருவிலேயே அவதரித்த ராமர் மற்றும் கிருஷ்ண அவதாரங்களும் ஆகும். விஷ்ணுவின் தெய்வீகத் தன்மையைச் சித்தரிப்பது அவருடைய நான்கு கரங்களும் அவற்றில் வழக்கமாக ஏந்திய கதை, சங்கு, சக்கரம் போன்றவைகளும் ஆகும்.
அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003
இச்சிலையில் விஷ்ணுவின் இருபக்கங்களிலும் சிறிய உருவங்களில் காட்டப் பட்டிருப்பது அவருடைய மனைவிகள். அவர்களுக்கும் அருகில், மேலும் சிறிய உருவத்துடன் காட்டப் பட்டிருப்பது விஷ்ணுவின் சங்கு சக்கரத்தை சித்தரிக்கும் உருவங்கள், முறையே சங்கு சக்கரத்தை தங்கள் தலையில் மகுடமாக தரிதுள்ளார்கள். விஷ்ணுவின் வாகனமான கருடன் மனித உருவில் உள்ள பறவையாக, இறக்கைகளுடன் மண்டியிட்டு அமர்ந்திருப்பதாக சிற்பத்தின் கீழே வலப்புறம் அலங்காரங்கள் நிறைந்த பகுதியில் காட்டப் பட்டுள்ளது. சிற்பத்தின் வலது மற்றும் இடது மேற்புறங்களில் தேவர்கள் மலர்மாலைகளைக் கையிலேந்தி விஷ்ணுவிற்கு அணிவிப்பதற்காகப் பறந்து வருவது போலச் செதுக்கப் பட்டுள்ளது.
இந்து தெய்வம் விஷ்ணு, அருகில் லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி: பங்களாதேஷ், டாக்காவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 11-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003
சிவன்:
அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015
இந்தியக் கடவுள் சிலைகளில் சிவனை அடையாளம் காட்ட உதவுபவை அவர் நெற்றியில் உள்ள மூன்றாம் கண், கழுத்திலணியும் பாம்பு, கையிலேந்திய மண்டை ஓடு, தலையில் முடிந்த கொண்டை போன்ற சிகையலங்காரத்தில் உள்ள பிறை. சிவனைக் குறிக்கும் அனைத்து உருவங்களிலும் இவை யாவும் அமைந்திருக்காது. இங்கு காணும் சிலையில் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அமர்ந்து முனிவர்களுக்கு உபதேசம் செய்யம் சிவன், தனது காலடியில் அறியாமையைக் குறிக்கும் குள்ள அசுரனை மிதித்திருப்பதாகக் காட்டப் பட்டுள்ளது. உலகில் தோன்றும் மனிதப் பிறப்பில் இருந்து விடுதலை அடைவதற்கு வழியைக் கூறி அருளுவது தட்சிணாமூர்த்தியின் உபதேசமாகும். சமஸ்கிரதத்தில் தட்சிணாமூர்த்தி என்பதற்கு ‘தென்திசை நோக்கும்’ என்ற மற்ற ஒரு பொருளும் உண்டு. தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தச் சிலை, பெரும்பாலும் அப்பகுதி கோயில்களில் தெற்குப் பிரகாரச் சுவர்களில் இடம் பெற்றிருக்கும்.
அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015
இந்து தெய்வம் சிவன், தட்சிணாமூர்த்தி வடிவில், தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 13 – 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015
ஹரிஹரன்:
அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013
இந்து மதத்தின் இரு முதன்மை ஆண் தெய்வங்களான விஷ்ணுவும் (ஹரி) சிவனும் (ஹரன்), சில சமயங்களில் இணைந்து ஹரிஹரனாக இருப்பதாகச் சித்தரிக்கப் படுவார்கள். இங்கு காணும் அது போன்ற ஹரிஹரன் சிலையில், மேலிருந்து கீழாக வலப்பக்கத்தில் சிவனும் இடப்பக்கத்தில் விஷ்ணுவும் காட்டப் பட்டுள்ளார்கள். வலது பக்க நெற்றியில் சிவனின் பாதி நெற்றிக்கண் காட்டப்படுள்ளது, சிதைந்த வலக்கையில் சிவனின் சூலாயுதம் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இடக்கைகளில், சிதையாத கை ஒன்றில் விஷ்ணு சங்கைப் பிடித்திருபதாகக் காட்டப் பட்டுள்ளது.
அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013
இந்து தெய்வம் ஹரிஹரன், இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. காட்சியகம் வாங்கிய சிலைகளின் சேகரிப்பில் உள்ளது. அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013
(தொடரும்)
[படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]
Source:
http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013