சிங்கப்பூர் எழுத்தாளர்கள் இருவருக்கு ‘கரிகாலன் விருது’ 03/02/2013
‘கரிகாலன் விருது’ பெற்றுள்ள் பிரபல சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலாதேவி அரவிந்தன் மற்றும் திரு மா. இளங்கண்ணன் அவர்களுக்கும் வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் களுக்கு வழங்கப்படும் ”கரிகாலன் விருது” சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலோதேவி அரவிந்தனுக்கும் திரு. மா. இளங்கண்ணனுக்கும் கிடைத்துள்ளது. 2010ஆம் ஆணடுக்கான விருது திருமதி கமலாதேவியின் “நுவல்” சிறுகதைத் தொகுப்புக்கும் 2011ம் ஆண்டுக்கான விருது திரு. மா. இளங்கண்ணனின் “குருவிக் கோட்டம்” நூலுக்கும் வழங்கப்படுகிறது. இவர்கள் இருவருமே சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :
http://tamilmurasu.com.sg/news/national