Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • ஊர்வசி- சயந்தன் கதை உணர்த்தும் பாடம்!

    ஊர்வசி- சயந்தன் கதை உணர்த்தும் பாடம்!

    முனைவர் அரங்கன் மணிமாறன்

    ஒரு முறை தேவாதிபதியான இந்திரனின் சபைக்கு அகத்திய மாமுனிவர் செல்கிறார். இந்திரன் மகிழ்ந்து பணிந்து மிகச்சிறப்பான வரவேற்பும் உபசரிப்பும் செய்கிறான். இந்திரன் சபை கலைகளின் உறைவிடமாயிற்றே! இரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ அரம்பையர் சூழ இருந்து கலைகளின் உச்சத்தைத் தொட்ட அரசவை அல்லவா?!

    அவ்வழியே தம் அரசவைக்கு வருகைப்புரிந்த தமிழ்முனி குறுமுனி குடமுனி கும்பமுனி அகத்திய  பெருமானுக்கு கலைவிருந்து அளிக்க விரும்பி ஊர்வசியின் நாட்டிய கலைவிருந்து ஏற்பாடு செய்கிறான் இந்திரன். தேவாதிபதியின் தேவசபை புதுப்பொலிவு பெற்றது. கலைநயத்தியத்தின் உறைவிடமான இந்திரனின் சபை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. கலைநயமும் ஒளிநயமும் நறுமணமும் மிக்கு விளங்கிய சபை ஊர்வசியின் கலைத்திறனைக் கண்டு ரசிக்க கூடியது. “ஊர்வசி! உன் கலைத்திறனை தமிழ்முனி அகத்தியர் கண்டு வியக்கும்படி நிகழ்த்திக்காட்டு!” என ஆணையிட்டான் இந்திரன்.

    சபையில் இந்திரனின் மைந்தனான சயந்தனும் அமர்ந்திருந்தான். ஊர்வசியின் காதலனாக அவன் அவள் இதயத்தில் இடம்பிடித்திருந்தான் என்பது பலரும் அறியா உண்மை.

    நாட்டியம் தொடங்கியது. ஆனால் ஊர்வசியின் மனமும் விழிகளும் சயந்தனையே நாடிநின்றது. ஆடலின் இடையே கண்கள் வழியே நயன காதல் சரசத்தில் ஈடுபட்டாள் ஊர்வசி. நாட்டியத்தை ஒப்புக்கு ஆடினாள். கடமைக்கு ஆடினாள். உப்புசப்பு இன்றி ஆடினாள். அந்த கலை அர்ப்பணம் அகத்தியருக்கன்றி சயந்தனை மகிழ்விப்பதாகவே இருந்தது.

    இந்திரன் தன்னை அழைத்து கலைவிருந்து கொடுப்பதாய் அவமானப்படுத்திவிட்டான் என கொதித்தெழுந்தார். கோபங்கொண்ட அகத்தியர் ‘ஊர்வசி! நிறுத்து உன் கலை கொலையை! நீ நிகழ்த்தியது நாட்டிய விருந்தா? அல்லது உன் உள்ளங்கவர் கள்வன் சயந்தனுடனான நயன சல்லாபமா? காதல் மயக்கத்தில் கலையை மறந்து என்னையும் அவமானப்படுத்திவிட்டீர்கள்!

    இனி உனக்கும் சயந்தனுக்கும் தேவ லோகத்தில் இடம் இல்லை. நீ பூமியில் மாதவி எனும் கணிக்கைக்குலப் பெண்ணாக அவதரிப்பாய்.நீ காதல் மயக்கத்தில் மறந்த ஆடற்கலையை முழு ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் கற்று,  சோழன்  அரசவையில் அரங்கேற்றுவாய்! அங்கு மூங்கிலாக மாறப்போகும் சயந்தன் தலைக்கோல் எனும் பட்டமாகச் சூட்டப்பெற்று நீ அவனை அடைவாய்! இதுவே காமத்தில் கலையை மறந்து இழிவுப்படுத்திய உங்கள் இருவருக்கும் நான் கொடுக்கும் சாபம்! அகத்தியனின் வாக்கு அகிலத்தில் பொய்க்காது!நான் வருகிறேன்.

    ஊர்வசி மாதவியாக மண்ணில் பிறப்பெடுக்கிறாள். ஐந்தாம் வயது முதலே நாட்டியம் கற்கிறாள். தம் பனிரெண்டாம் வயதில் சோழ மன்னன் அரசவையில் தன் நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்துகிறாள். கலையை முழுதாகக் கற்றுத்தேர்ந்த அவள் தன் திறன் முழுதும் வெளிப்படும்படியாக அரங்கேற்றியதைப் பாராட்டிய சோழன், நெறிப்படி பகைவரின் வெண்கொற்ற குடை காம்பை இழைத்து நவரத்தினங்களை பதித்து இடைஇடையே தங்க இழையால் சுற்றி அதை புனித நீராட்டி பூமாலைச் சூட்டி பட்டத்துயானையின் மீது இசை முழக்கத்தோடு அரசவை பெரியோர்கள் சூழ வலம்வரச்செய்து நாட்டிய அரங்கில் இருத்தினான். அத்தலைக்கோல் எனும் பட்டத்தையே மாதவியின் ஆடற்கலை திறனுக்கு உயரிய விருதாக அளித்தான். ஊர்வசி தலைக்கோலாம் சயந்தனைச் சூடினாள். இதனை சிலப்பதிகாரம் புகார்காண்டம் அரங்கேற்றுக்காதையில் “காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் சயந்தன் என வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்!”

    எனவும்

    ‘இலைப் பூங்கோதை இயல்பினில் வழாமைத் தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி’ எனவும் குறிக்கப்பெற்றுள்ளது.

    இதன் மூலம் இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அறிந்து கொள்ளும் பாடம் என்னவெனில் நம்முன் கடமைகள் இருக்கும்போது அதை மறந்து  பொழுதுபோக்கு, விளையாட்டு, கேளிக்கை, காதல் போன்ற தேவையற்ற செயல்களிலேயே மூழ்கி, கல்விகற்றல், திறன்களை வளர்த்தல், எதிர்கால வாழ்வுக்கான திட்டப்பணிகளில் ஈடுபடுதலை மறக்கிறோம்.

    நாம் யார்? எந்த பருவத்தில் இருக்கிறோம்? நம் இன்றைய பணிகள் என்னென்ன? என்னென்ன திறன்களை நாம் பெற வேண்டியுள்ளது. உலகிலுள்ள மற்ற நாட்டின் இளைஞர்களில் சிலர் எந்த முன்னேற்றத்தை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை உணர வேண்டும். மொழியறிவு, தொழில் நுட்ப அறிவு, விஞ்ஞான அறிவு ஆகியவற்றில் எத்தனை விரைவான முன்னேற்றம் கண்டுள்ளனர் என்பதை உணர்ந்து நாமும் அத்தகை அறிவுலகின் பந்தயத்தில் பங்கேற்று வெல்வதற்கான சூழல்களைப் பெற வேண்டும். ஆனால் எதிர்கால திட்டங்களோ இலட்சியங்களோ இன்றி அரசியல், சினிமா, விளையாட்டு,  பொழுதுபோக்கு போன்றவற்றில் மூழ்கி குறிக்கோளற்ற பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம். சிறந்த உடற்திறனும் அறிவுத்திறனும் கொண்டு   முன்னேற வேண்டும். அதைவிடுத்து தவம் செய்யும் காலத்து சுகங்களில் திளைத்தால் வரம் வாய்க்காது என்பதை உணரவேண்டும். காதல் மயக்கத்தில் கலையை மறந்தவள் கதை உணர்த்தும் நீதி மனம் ஒன்றிலும் செயல் வேறொன்றிலும் இருந்தால் வரத்திற்கு பதிலாக சாபமே கிடைக்கும்.

    மனம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றிய கடமைகள் செய்து முன்னேற்றம் காண்போம்!

    Share
  • வாரியார் சுவாமிகள் வாழ்கிறார்!

    வாரியார் சுவாமிகள் வாழ்கிறார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    வீணை படித்திருந்தால் வித்துவானாய் மேடைகளில் இசை நிகழ்சிகள் செய்த படியேதான் இருந்திருக்க வேண்டி வந்திருக்கும். ஆனால் இறைவனின் ஆணை வேறாக இருந்ததால் பாதை மாறியது. பயணமும் மாறியது. சைவமும் தமிழும் கைபிடித்து நின்றது. கலியுகத் தெய்வம் கந்தப் பெருமான் தன்னுடைய   கடைக்கண் பார்வையில் வைத்திருக்கும் நிலையும் உருவாகியது. இப்படி யெல்லாம் யாருக்கு நேர்ந்தது  என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா! வேறுயாருமல்ல….. பேச்சாலும், எழுத்தாலும், கதைகளாலும், இசையாலும், எம்மையெல்லாம் தன்பக்கம் ஈர்த்து நின்ற வாரியார் சுவாமிகளே!

    கிருபானந்த வாரியார் என்னும் பெயரினை நாங்கள் சாதாரணமாகவே பார்க்கிறோம். அந்தப் பெயருடன் சுவாமிகள் என்பதையும் சேர்த்து அழைத்து விட்டு அத்துடன் நின்று விடுகிறோம். ஆனால் அந்தப் பெயரின் அர்த்தத்தை நாங்கள் எவருமே எண்ணியே பார்ப்ப தில்லை. ‘கிருபை ‘ என்றால் ‘கருணை; ‘ ஆனந்தம் ‘இன்பம்;  ‘வாரி‘ என்றால் பெருங்கடல்; இப்பொழுது – “கிருபானந்த வாரியார் ” என்னும் பெயரினை எண்ணிப் பாருங்கள். மலைப்பாக இருக்கிற தல்லவா! இவருக்கு இப்பெயர் கருவிலேதான் உருவாகி இருக்க வேண்டும் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. கருணையே உருவமாகக் கொண்டே அவர் விளங்கினார். கருணை உருவில் இருந்தே பிரசங்களை ஆற்றினார். அனைவரையும் கட்டிப் போட்டார். கருத்துக்களை வழங்குவதில் கடலாகாவே இருந்தார். அவரின் செய்கைகள் அத்த னைக்கும் ஏற்றதாக அவரின் பெயரும் அமைந்து வந்திருக்கிறதல்லவா! இதைத்தான் – ‘ நினையாது முன்வந்து நிற்கினும் நிற்கும் – எனை யாளும் ஈசன் செயல் ‘ என்பதா!

    திருவருட்செல்வர்களாக இருந்தவர்களைப் போற்றி தெய்வத் தமிழ்ச் சேக்கிழார் பெருமானால் பெரிய புராணம் பாடப்பட்டது. அந்தப் புராணத்தின் நாயகர்கள் அறுபத்து மூவர் ஆவர். அனைவருமே ஆண்டவனுக்குப் பலவிதத்தில் தொண்டாற்றியவர்களாகவே இருக்கிறார்கள். அறுபத்து மூவருடன் நின்று விடாமல் அந்த எண்ணிக்கையில் வாரியார் சுவாமிகளுக்கும் இடம் இருக்கிறது என்னும் சிந்தனையைப் பலரும் சொல்லுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கிறது. ஆகையால் வாரியார் சுவாமிகளையும் சேர்த்து திருவருட் செல்வர்கள் அறுபத்து நான்கு என்று அழைப்போமா! உடன்படுவீர்கள் என்று எண்ணுகிறேன். பத்தொன்பது வயதில் இல்லறத்தினுள் இணைகின்றார். அவருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. இளமையில் இல்லறத்தில் இணைந்தவர் – சிற்றின்பக் கடலினுள் மூழ்கிவிட நாட்டங் கொண்டவராய் இருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் இல்லறத்தை நல்லறமாகவே கருதி – மனைவி இருந்த போதும் – சிற்றின்பம் என்பதை மறந்து – இல்லறத்திலே ஒரு துறவியாகவே வாழ்ந்தார் என்பதை மனமிருத்தல், அவசியமாகும். இப்படி இருப்பதுதான் உண்மையான துறவாகும். பொருள்கள் வந்து குவிந்தாலும் – அருளின் வசமே அவரின் மனம் இருந்த காரணத்தால் – இல்லற ஞானியாகவே வாரியார் சுவாமிகள் விளங்கினார் என்பதுதான் அவரின் தனித்துவத்தைக் காட்டி நிற்கிறது எனலாம்.

    இப்பொழுது – காணுமிடமெல்லாம் பல அமைப்புகள். ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு தலைவர். ஒவ்வொரு தலைவருமே தம்மைச் சாமியார் என்று முத்திரை குத்திக்கொண்டு – செய்யக்கூடாத அத்தனை இழிவான காரியங்களையும் செய்கிறார்கள். ஏமாற்றிப் பிழைக்கின்றார்கள். அவர்களுக்கு என்று தரகர் கூட்டமோ இன்னொரு பக்கம். பொருள் குவிகிறது. அருள் அறுகிறது. ஆடம்பரம் தலைவிரித்து ஆடுகிறது. அங்கு சென்று அகப்பட்டு அல்லல்படுகிறார்கள் அநேகம் பேர்! இப்படி ஏமாற்றிப் பிழைப்பவர்களை சுவாமிகள் என்று அழைப்பது எத்தகைய மதியீனம்? மனைவி இருந்தும் – இல்லறத்தை துறவறமாக்கி வாழ்ந்த வாரியாரைத்தான் சுவாமிகள் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாய் இருக்கிறதல்லவா! “பசித்திரு, தனித்திரு, விழித்திரு” என்பதை வாரியார் சுவாமிகள் நன்கு உணர்ந்தவர். அதனால் அவர் எல்லாவற்றிலும் விழித்தே இருந்தார்.

    பள்ளிக்கூடத்தைத் தொட்டிராதவர் வாரியார். நிழலுக்கும் அந்தப் பக்கம் போகாதவர் வாரியார். அவரைப் பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பாராட்டிக் கெளரவித்தார்கள். பல்கலைக் கழகங்கள் வாரியாரை வரவழைத்து அவரின் உரைகளை  – கற்றிடும் மாணவரையும், பேராசிரியர்களையும் கேட்கவைத்த நிலையினை எண்ணிப் பார்க்கையில்யாவும் இறையின் திருவருள் என்றுதானே எண்ண வேண்டும். பள்ளிக்குச் சென்று சாதாரண கல்வியினைக் கற்காதவர், புராணங்களையும், இதி காசங்களையும், வேதக்கருத்துக்களையும், சைவசித்தாந்தக் கருத்துக்களையும், தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகளையும்; எப்படித் துன்னுள் தேக்கி வைத்திருந்தார் என்று நினைத்துப் பார்க்கவே பெரும் வியப்பாக இருக்கிறதல்லவா!

    மூன்று வயதில் வாரியாரின் வித்தியாரம்பம் ஆரம்பிக்கிறது. தந்தைதான்  அவரின் ஆத்மார்த்த குரு. ஐந்து வயதாக இருக்கும் பொழுதே ஏட்டினைப் படிக்கும் அளவுக்கு கற்றலில் முன்னிற்கிறார். எட்டு வயதில் வெண்பாபாடும் அளவுக்கு துலங்கி நிற்கிறார். பாக்களிலே வெண்பா பாடுவது என்பது மிகவும் கடினமானது. சட்ட , திட்டங்களுடன் பாடப்பட வேண்டிய யாப்பினைக் கொண்டதுதான் வெண்பா. அப்படியான “வெண்பாவினை” எட்டு வயதில் வாரியார் பாடினார் என்றால் “வாணி அவர் நாவில் அமர்ந்து விட்டாள்” என்று தானே எண்ணிட வைக்கிறதல்லவா! அத்துடன் அவரின் ஆற்றல் நின்று விடவில்லை. தன்னுடைய பனிரெண்டாவது வயதிலே பனிரெண்டாயிரம் பாடல்களையே மனனம் செய்திருக்கிறார் என்றால் நம்புவீர்களா? ஆம் …. இது வெறும் புகழ்ச்சி அல்ல! இது உண்மை! இப்படி ஒரு பிள்ளை வளர்ந்து வந்ததென்றால் அதற்குப் பின்னால் அந்த ஆண்டவனும் கூடவே வந்திருக்கிறான். எந்த நேரமும் அந்தப் பிள்ளையை அரவணைத்த படியே இருந்திருக்கிறான் என்பதுதானே அர்த்தமாகும். இதைத்தான் “கருவிலே திருவுடையார்” என்றார்கள்.

    “இவன் தந்தை என்நோற்றான்” என்னும் நிலையில் வாரியார் பிள்ளையாய் வாய்திருக்கிறார். ‘நோற்றான்’  என்றால் நோன்பு இருந்தான் என்பதுதான் அர்த்தமாகும்.வாரியார் தந்தையார் மல்லையாதசர் அந்தப் பரம்பொருளை வேண்டி பக்திசிரத்தையுடன் நோன்பு நோற்ற காரணத்தால்த்தான் – வாரியார் ஒளி விட்டுப் பிரகாசித்தார் என்பது பொருத்தமாய் இருக்கிறதல்லவா! வள்ளுவம் காட்டுகின்ற,

    “தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
      முந்தி இருப்பச் செயல்”

    “மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
      என்னோற்றான் கொல்எனும் சொல்”

    இந்த மொழி – வாரியாருக்கும் அவரின் தந்தையாருக்கும் எத்துணை பொருத்தமாய் அமைகிறது பாருங்கள்!   

    “வேத நெறி தளைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க” ஒரு பிள்ளை பிறந்தது. அந்தப்பிள்ளை ஞானப் பால் உண்ட பிள்ளை. அந்தப்பிள்ளை தன்னை “நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்” என்றது. இன்னுமொரு பெரியவர் “தமிழோடு இசை பாட மறந்தறியேன்” என்றார். அப்பெரியார்தான் அப்பர். இந்தத் திருவடியார்கள் வழியில் பயணத்தை ஆரம்பிக்கிறார் எங்கள் வாரியார் சுவாமிகளும். அவரும் “தமிழையும் இசைய யும்” துணையாகக் கொள்ளுகிறார். திருவடியார்கள் ஊர்கள் தோறும் சென்று இறைவனைப் பாடிப் பரவி மக்களை ஆன்மீகத்துக்குள் வரச்செய்தார்கள். எங்கள் வாரியார் சுவாமிகளும் ஊர் ஊராய், நாடு நாடாய் சென்று சன்மார்கத்தை நன் மார்க்கமாய் காட்டி நிற்கிறார். ஆதலால் அறுபத்து நான்காவது திருவடியார் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாய் இருக்கிறது அல்லவா.  

    நல்லைநகர் தந்த நாவலர் பெருமான் சொன்னபடியே செய்தார். சொல்லிவிட்டு மட்டும் நின்று விட வில்லை. நாவலர் பெருமான் ஈழத்தின் ஞானவிளக்கு. தமிழையும், சைவத்தையும் தன்னுடைய இரு கண்களாகவே அவர் கருதிச்செயற்பட்டார். பொருளைவிட அருளையே அவர் பெரிதும் நம்பினார் – துணையாக்கினார். அவரும் எழுதினார். பேசினார். புராணங்களையெல்லாம் பக்தி சிரத்தையுடன் கையிலெடுத்தார். விளக்கினார். அவரை இன்றும் நினைக்கிறோம். என்றுமே நினைத்துக் கொண்டே இருப்போம்.

    அவரின் வழியில் வாரியாரையும் பார்ப்பது பொருத்தமாய் இருக்கும் என்று கருதுகிறேன். நாவலர் பெருமான் ஆசார அனுட்டானங்களைச் சொல்லி விட்டுப் போகாமல் தானும் அதன் வழி மிகவும் இறுக்க மாகவே நின்றார். வாரியாரும் தன் வாழ்நாள் எல்லாம் ஆசார அனுட்டானங்களைக் கைவிடாதவராகவே வாழ்ந்தார். “நீறில்லா நெற்றி பாழ்” என்னும் தமிழ் மூதாட்டியின் வார்த்தைகளை இருவருமே வாழ்வெல்லாம் போற்றி நின்றார்கள். நாவலர் பெருமானின் படங்கள் அத்தனையும் நெற்றியில் நிறைந்த திரு நீற்றின் மூன்று குறிகளுடனேயே காணப்படும். வாரியார் என்றதும் அவரின் திருநீறு நிறைந்த அகன்ற நெற்றியே ஒளி விட்டு மனத்தில் வந்து நிற்கும். கூடாதது அத்தனையும் கூடாதது என்று எண்ணியே இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மனமிருத்துவது சாலப் பொருந்தும் என்று கருதுகிறேன்.

    நாவலர் பெருமான் சிவதீட்சை பெற்றிருந்தார். விபூதி உருத்திராக்கத்தை உயிராகப் போற்றிக் காத்து வந்தார். வாரியாருக்கு ஐந்து வயிலே திருவண்ணாமலை பாணிபத்ர மடத்தில் “சிவலிங்க தாரணம்” நடத்தப்பட்டது. அத்துடன் இவரின் தந்தையாரால் “சடாஷர மந்திரமும்” உபதேசிக்கப்பட்டது. தந்தையாரின் உபதேசத்துடன் மதுரை திருப்புகழ் சுவாமியினால் “சூட்சும சடாஷர” மந்திரமும் உபதேசிக்கப்பட்டது. அது மட்டு மன்றி வாரியாரின் கனவில் பாம்பன் சுவாமிகள் தோன்றி “சடாஷர மந்திரத்தை” திரும்பவும் உபதேசித்தார் என்றும் அறிய முடிகிறது. நாவலர் பெருமான் கால்பட்ட இடங்களெல்லாம் வாரியாரின் கால்களும் பட்டிருக்கின்றன. நாவலரின் சிந்தனைகள் பரவிய இடமெல்லாம் வாரியாரும் சென்று தன்னுடைய சிந்தனைகளைப் பரப்பினார் என்பதும் நோக்கத்தத்தது. நாவலர் பிரமச்சாரியத்தை மேற்கொண்டார். வாரியார் இல்லறத்தில் இருந்து கொண்டே பிரமச்சரியத்தை மேற்கொண்டு வந்தார் என்பதும் கருத்திருத்த வேண்டியதே. நாவலரை இலங்கை அரசாங்கம் கெளரவித்து முத்திரை வெளியிட்டது. வாரியாரை இந்திய அரசாங்கம் கெளரவித்து முத்திரை வெளியிட்டது,  சைவத்தையும், தமிழையும் காத்தவ ர்களை நாடும் போற்றியது. நாட்டு அரசாங்கங்களும் போற்றின.

    நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களையும், ஐஞ்ஞூறுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் வாரியார் சுவாமிகள் சமுதாயம் பயனுறும் வகையில் வழங்கி இருக்கிறார். அவரின் நூல்கள் பல பதிப்புக்களைத் தொட்டு யாவர்மத்தியிலும் சென்று இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. எதனை எழுதினாலும் அதனை யாவரும் விளங்கும் படியே எழுதுவார். இராமாயாணம் பற்றி எழுதினார். பாரதம் பற்றி எழுதினார். கந்தபுராணம் பற்றி கற்றவரும் மற்றவரும் விளங்கும் வகையில் “கந்தவேல் கருணை” என்னும் மகுடத்தில் எழுதினார். பெரிய புராணத்தை யாவரது  மனதில் பதியும் வகையில் தனக்கே உரித்தான தமிழ் நடையில் “சிவனருட் செல்வர்” என்னும் பெயரில் வழங்கினார். யாருமே தொட முடியாத ஒரு பெரும் எழுத்துப் பணியினை இவர் மேற்கொண்டார். அதுதான் வாக்குக்கு அருணகிரி என்று போற்றப்படும் அருணகிரியின் ஆன்மீகப் பனுவல் திருப்புககழ் தொடர்பான பணியாகும். வேலூர் மாவட்டத்தில் பிறந்தததால்  வேலவன் வசமானார். காங்கேய நல்லூரில் பிறந்ததால் காங்கேயப் பெருமான் திருவடியைப் பற்றினார். அந்தக் காங்கேயனின் அருள் பெற்ற அருணகிரியின் திருப்புகழ் பாடல்கள் வாரியாரை வசப்படுத்தின. “முத்தைத்தரு” என்று எம்பருமான் கந்தப் பெருமானால் அடியெடுத்துக்கொடுத்த திருப்புகழ் என்னும் என்னும் அமுதத்தை தான் மட்டும் பருகினால் போதாது என்று கருதினார் வாரியார். அதனால் ஆயிரத்து தொழாயிரத்து முப்பத்து ஆறாம் ஆண்டில் “திருப்புகழ் அமிர்தம்” என்னும் மாத இதழைத் தொட ங்கினார். அவரின் பல வேலைகளுக்கு மத்தியிலும் விட்டு விடாமல் முப்பத்து ஏழு ஆண்டுகள் அந்த மாத இதழை நடத்தி – எழுத்துப் பணியில் ஆன்மீக முத்திரையினைப் பதித்திட்டார் எங்களின் வாரியார் சுவாமிகள். பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என்று அவரின் எழுத்து ஆளுமை அத்தனையும் திருப்புகழ் அமிர்தம் தாங்கிச் சிறப்புற்று நின்றது. தமிழிலே சந்தம் சிந்தும் பாடல்கள் என்றால் அது திருப்புகழ் மட்டுமே. அந்தச் சிந்துகளில் தனது சிந்தனைகளை வெளிப்படுத்திய வாரியாரும் ஒரு அருணகிரிதானே!

    பெண்களைப் பெரிதும் மதித்தார். குழந்தைகளைக் கொண்டாடியே மகிழ்ந்தார். அவரின் ஒவ்வொரு பிரசங்கத்திலும் முன்னே இருப்பவர்கள் நிச்சயமாகக் குழந்தைகளாகவே இருப்பர். இசையுடன் இணைந்த அவரின் பிரசங்கம் கேட்பவர்களை எங்குமே அசைய விடாமல் ஆக்கியேவிடும். வளர்ந்து வருகின்ற குழந்தைகளிடம் நன்னெறியைப் புகுத்த வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார் வாரியார் எனலாம். இதனால் தன்னுடைய பிரசங்க மேடையின்முன் அமர்ந்திருக்கும் – குழந்தைகளிடம் பல வினாக்களைக் கேட்டு – அதற்குப் பதில் அளித்த குழந்தைகளை மேடைக்கு வரவழைத்து நல்ல நூல்களை வழங்கி ஆசீர்வதித்தார். இந்த அணுகு முறை மிகவும் சிறப்பானது மட்டுமல்ல புதியதொரு அணுகு முறையாகவும் அமைந்தது  என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். குழந்தைகளையும், பெண்களையும் மதிப்பவர்களை சமூகமும் என்னாளும் மதித்துக் கொண்டே இருக்கும். குழந்தை என்றாலே செல்வம்தான். பெண்கள் என்றாலும் செல்வம்தான். பெண்களை வீட்டின்  மகாலக்சுமி என்றுதானே பார்க்கின்றோம். வாரியாருக்கு இந்த நுட்பம் மனதில் தோன்றிய படியால்த்தான் அவர் தன் வாழ்வெல்லாம் – பெண்களை மதித்தார். குழந்தைகளைக் கொண்டானார் எனலாம். “இல்லாள்” கருத்துடையது. “இல்லான்” எதுவுமே இல்லாதவன் என்று வாரியார் சுவாமிகளே சொல்லியிருக்கிறார்.

    வாரியார் சுவாமிகளின் பிரசங்க உத்தியைப் பாராட்டியே ஆக வேண்டும்.தத்துவங்களைச் சொல்லு வார்.ஆனால் அவற்றை யாவரும் விளங்கும் வகையில் நல்ல கதைகள் மூலமாய் சொல்லுவார். அதாவது இனிப்புத் தடவிய மருந்துபோல அவரின் கருத்துக்கள் வந்து அமையும். கதையினையும் நாடகப் பாணியிலேதான் சொல்லுவார். சொல்லும் பொழுது இசையும் அங்கே இணைந்து நிற்கும். தேவார,  திருவாசக, திருமுறைப் பாடல்கள்-  தாள , லயத் துடன், பக்கவாத்தியங்கள் இணைய வரும்பொழுது – கருத்துக்கள் பசுமரத்தாணி போல மனத்தில் சென்று பதிந்தேவிடும். எந்த அளவுக்கு சைவசிந்தாந்த, வேதாந்த அறிவு நிரம்பி இருந்ததோ அந்த அளவுக்கு – இசைஞானமும் அவரகத்தில் நிறைந்தே இருந்தது. இளமையிலேயே பல பாடல்களை மனனம் செய்திருந்த காரண த்தால் – கதைக்குப் பொருத்தமான கருத்துக்கள் பொதிந்த பாடல்கள் அங்கு வந்து நிற்கும். அப்படி வரும் பாடல்களையும் தன்னுடைய கணீரென்று குரலில் அவர் இசைத்தும் பாடும் பொழுது அந்த சரஸ்வதி தேவியே அவரை விண்ணிருந்து வாழ்த்திடுவார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    இயலும், இசையும், நாடகமும் அவரின் பிரசங்கத்தின் முத்திரை எனலாம். தமிழ் மொழியை மிகவும் நுட்பமாய் அவர் அறிந்திருந்தார் என்றுதான் பலபேருக்கும் தெரியும். அவருக்கு சமஸ்கிருதமும் தெரியும். பிரசங்கங்களில் அவர் காட்டுகின்ற நயத்தகு தமிழ் சொற்றொடர்கள் போல – பொருத்தமான இடங்களில் பொருத்தமான சமஸ்கிருதச் சுலோகங்களையும் காட்டி அதற்கான விளங்களையும் அவர் காட்டுவதும் சிறப்பாகவே இருக்கும்.

    பெண்கள் என்றாலே அவர்கள்தான் சமூகத்தின் கண்கள் என்று வாழ்வெல்லாம் எண்ணி வாழ்ந்தவர் வாரியார் சுவாமிகள். “பெற்றெடுத்த தாயின் பெயரை  (இனிஷியலாய் ) பெயருக்கு முன்னால் போடலாமே” என்று எவருமே தமிழ்ச் சமூகத்தில் சிந்தியாததை, சொல்லாததைச் சொன்னவர் வாரியார் சுவாமிகள். அந்த அளவுக்கு பெண்மையைப் போற்றி நின்றார். புரட்சி புரட்சி என்கிறார்களே! இதுவல்லவா சிறப்பான புரட்சி!

    கிடைத்த பொருளையெல்லாம் தனது சொந்தச் சுகத்துக்காக அவர் பயன்படுத்தவே இல்லை. பொருளை அருளான வழியில் பயனாக்கினார். பள்ளிக் கூடத்துக்கே போகாதவர் – காங்கேய நல்லூரிலே துவக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்று பள்ளிகளை நிறுவி வருங்காலச் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

    வயலூரில் அருணகிரி அறச்சாலையினை நிறுவி உணவளித்து நிற்க உறு துணையானார். பசிப்பி ணிக்கு மருந்தானார். பக்குவம் பெற கல்விக்கு கலங்கரை விளக்கமானார். வந்த பொருளையெல்லாம் இறைவனது ஆலயத் திருப்பணிக்கும் கொடுத்து ஆனந்தம் அடைந்தார். “தர்மம் செய்ய நினைத்தால் தாமதிக்கக் கூடாது” என்பதுதான் வாரியார் எண்ணமாக இருந்தது.

    தர்மத்தைத் தனது மனதில் இருத்தித் தேடிய பொருளையெல்லாம் பயனுறு வகையில் செய்த வாரியார் சுவாமிகள் – கொடுத்துச் சிவந்த கைகளை உடையவராய் விளங்கிய ஒருவரை வாழ்த்தி “பொன் மனச் செம்மல்” என்று விலைமதிப்பில்லாப் பட்டத்தை வழங்கினார். பல பட்டங்களை அவர் பெற்ற பொழுதும் வாரியார் சுவாமிகளால் வழங்கப்பட்ட இப்பட்டமே இன்றளவும் அவரை யாவரிடத்தும் அறியச் செய்து நிற்கிறது எனலாம். அவர்தான் மூன்று எழுத்தில் மக்கள் மனதில் பதிந்த தமிழ் நாட்டின் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். வாரியார் சுவாமிகளின் வாழ்த்தின் பின் அந்த மூன்றெழுத்தாளர் மக்களின் திலக மாகவே ஆகிவிட்டார் வாழ்த்துவார் வாழ்த்தினால் அதுதான் பெருவரமாகும். வாரியார் வாழ்த்தும் அப்படி யானதே !

    மண்ணுலகில் பிறப்பவர்கள் யாவருமே மண்ணை விட்டுப் பிரிவது என்பது தவிர்க்க முடியாததுதான். அப்படிப் பிரிந்தவர்களை “காலமாகிவிட்டார்” “அமரராகிவிட்டார்” “இறையடி சேர்ந்துவிட்டார்” “தெய் வீகமானார்” என்றெல்லாம் சொல்லுவது மரபாகி விட்டது. இப்படிச் சொல்லுவது எல்லோருக்கும் பொருந்துமா என்று சிந்தித்திப் பாருங்கள்.

    ” வையத்துள் வாழ்வாங்கு வாழ்வபவன் வானுறையும்
      தெய்வத்துள் வைக்கப் படும்”

    இக்குறள் வழியில் சிந்தித்தால் யாரை வானுறையும் தெய்வ நிலைக்கு அதாவது –  காலமாகி விட் டார், அமரராகி விட்டார், இறையடி சேர்ந்து விட்டார், தெய்வீகமானார் – என்று சொல்லுவது பொருத்தமாய் இருக்கும் என்பது தெளிவாகிறதல்லவா!

    வள்ளுவத்தின் கருத்துப்படி “வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவருக்கு” இப்படிச் சொல்லுவது தான் பொருத்தமாய் இருக்கிறது அல்லவா! அந்தவகையில் வாரியார் சுவாமிகள் போன்றவர்களையே – மண்ணுலகை விட்டுப் பிரியும் நிலையில் இப்படி அழைக்கலாம் என்பது பொருத்தமாய் இருக்கும் என்ப தைக் கருத்திருத்த வேண்டியது அவசியமாகும் என்று கருதுகிறேன். வாரியார் சுவாமிகள் நாத்திகர்களை யும் ஆத்தீகத்தில்  நாட்டங் கொண்டிடச் செய்தார். சினப்போரையும் சிந்திக்க வைத்தார். சிரிப்பினை மருந்தாக்கிக் கொடுத்தார். வைதாரையும் வாழ்த்தினார். எதிர்த்தவர்களையும் இரக்கத்துடன் பார்த்தார்.

    சுவாமிகளின் ஆன்மீகத் தொண்டு. அவரின் அறப்பணிகள். அவரின் சிந்தனையால் வெளிவந்த படைப்புகள். அவரின் உரைகள் பதிந்த ஒலி ஒளிக் காட்சிகள் . வெள்ளித்திரையில் வந்தும் வேலவனைக் காட்டிய அவரின் பாங்கு. இவையனைத்துமே அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்றுதானே எண்ணத் தோன்றுகிறது. ஆகையால் அவர் அமரரானாலும் எங்கள் மத்தியில் இன்னுமே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 6

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 6

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    முனைவர் பிச்சை தமிழகனின் ‘‘மரபுத்தொடர் அகரவரிசை’”   

    முன்னுரை

    கவிதை, இலக்கணம், இவைபற்றிய ஆய்வு, மெல்லிசை, என்னும் நாற்பொருளையும் இதயத்தின நான்கு அறைகளிலும் நிரப்பிக் கொள்வதையே நாட்கடமையாகக் கொண்டிருக்கும் எனக்குச் சில நேரங்களில் ‘மறுமாத்தம்’ தேவைப்படுவதை உணர்கிறேன். அப்போது என் கண்ணில் பட்ட நூற்களில் ஒன்றுதான் ‘மரபுத் தொடர் அகரவரிசை’ என்னும் இந்நூலாகும். ‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்’ என்னும் தொடர் தமிழுக்கு வழக்கின் இன்றியமையாமையை உணரத்தும். வழக்கின் உயிர்நாடி மரபுத் தொடர்களே!. ‘பனையட்டு’ என விதிப்படி உடம்படுமெய் புணர்த்தெழுதிப் பின்னர் ‘பனாட்டு’ எனச் சுயதிருத்தம் செய்து கொணடவர் தொல்காப்பியர். புளிச்சோறு, புளிங்கூழ், புளியமரம், புளியம்பழம் என்னும் ஒரே பகுதிக்குப் பல்வகைப் புணர்ச்சி விதிகளைத் தொல்காப்பியம் கூறுவதற்கும் இந்த வழக்கே காரணம். ‘மயில் குயில் ஆச்சுதடி’ என்பார் வள்ளலார். ‘மண்வெட்டிக் கூலிதின்னல் ஆச்சே’ என்பார் மகாகவி!. ‘குந்தி இருந்தவள் வீடு சென்றாள்’ என்பார பாவேந்தர். ‘வீடு முச்சூடும் அழும்’ என்பார் ஜீவா!. இப்பெருமக்கள் தமிழை ஆண்டிருக்கலாம். ஆனால் தமிழ் வழக்கு இவர்களை ஆண்டது  அத்தகைய வழக்கின் உயிர் நாடியான மரபுத் தொடர்களை இயன்ற அளவு தொகுத்தும் வகுத்தும் விளக்கமளித்தும் உண்மையான தமிழ்த் தொண்டு செய்திருக்கிறார் கல்வெட்டறிஞர் இலக்கணக்கடல், வழக்கியல் வல்லாளர் முனைவர் பிச்சை தமிழகன் அவர்கள். நான் விரும்பிய நேரத்திலும் வேண்டிய நேரத்திலும் படித்துச் சுவைத்த ‘மரபுத்தொடர் அகரவரிசை’ என்னும் நூலைப் பற்றிய ஒரு சுருக்க மதிப்பீட்டினை இங்கே பதிவு செய்கிறேன்.

    மரபத தொடர்களின் சிறப்பும் இன்றியமையாமையும்

    மரபுத் தொடர் என்பதில் மரபு என்பது மக்கட்குழுவையும தொடர் என்பது அவர்களால் பேசப்படும் மொழியையும் குறிப்பது. மக்களால் உருவாக்கப்படுதலின் மொழி மக்களுக்கானது. தன்னை உருவாக்கிய மக்கட் சுமதாயத்தின் வழக்கையே தன் வழக்காகக் கொள்வது மொழியின் இயல்பு. இந்த மரபு என்பது பெரும்பாலும் உலகியல் வழக்கையும் மிகச் சிறுபான்மை செய்யுள் வழக்கையும் உள்ளடக்கியது.  ஒரு மொழியின் இலக்கியத்திலோ இலக்கணத்திலோ ஒரு அசை கூட தானாக அமைந்துவிடாது. உலக வழக்கிலிருந்துதான் வரவேண்டும். இது அடிப்படை. ‘உலகத்தார் உண்டென்பது’ என்பார் திருவள்ளுவர். ‘உலகியல் கூறி பொருள் விளக்குவார் தமிழ்ச்சான்றோர். ‘வட்டார வழக்கு’ என்ற பெயரில் இலக்கியங்கள் வெற்றி பெறுவதற்கும் நாடடுப்புறப் பாடல்கள் தனிக்கவனம் பெறுவதற்கும், திரையிசைப்பாடல்களில் நாட்டுப்புற இசையமைப்புடன் கூடிய பாடலகள் பெருஞ்சிறப்பு பெறுவதற்கும் மண்ணின் மணமாகிய மரபே காரணம். ‘சரிகமபதநி’ என்னும் ஸ்வரங்களை அறியாதவன் ‘தந்தானே தானே தன்ன தன்னானா’ என்னும் தத்தகாரத்தில் தன்னை இழப்பதற்கும் இந்த மரபிசைதான் காரணம். அறிவியல் வளர்ச்சியாலும் மொழிக்கலப்பினாலும் நடப்பியல் வாழ்வில் போலித்தனத்தாலும் மரபுத் தொடர்கள் மறக்கப்படினும் அது தலைகாட்டுகிற இடங்களில் எலலாம் தனிச்சிறப்பு பெறுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு நூறு பேர் முழுக்கால் சட்டை அணிந்த ஒரு விழாவில் வேட்டி கட்டிய ஒருவனுக்கான பெருமை அது. முன்னோர்கள் விட்டுச்சென்ற ‘ வீட்டு உலக்கை’ அது. கண்ணில் மறைந்திருக்கும் காமாட்சி விளக்கு!

    உண்மையான தமிழ்த்தொண்டு

    அறிஞர் உ.வே.சா. பெரிய படைப்பாளர் அல்லர். கவிஞர் அல்லர். நாவலாசிரியர் அல்லர். வரலாற்றாசிரியர் அல்லர். ஆனால் இவர்களுக்கெல்லாம் மூலமாகத் திகழ்ந்தார். திகழ்கிறார். அதற்குக் காரணம் அவர் ஏற்றுக் கொண்ட பதிப்புப் பணி. குறிஞ்சிப்பாட்டின் இரண்டு வரிகளுக்காகக் குக்கிராமத்திற்கும் குதிரைவண்டிப் பயணம் மேற்கொண்ட குணாளர் அவர். எப்படி புலமைக்கடல் நச்சினார்க்கினியர் தாமே தனித்து ஒரு நூலை எழுதவில்லையோ அவரைப் போலவே தனியொரு நூல் செய்யாமல், இருந்து மறைந்த நு{ல்களைத் தேடுவதிலும் செப்பம் செய்வதிலும் உண்மை கண்டு பதிப்பிப்பதிலும் ஐயரின் உழைப்பு ஆண்டவனும் அறியாதது. அறிஞர்களாலும் பேராசிரியர்களாலும் கைகக்கொள்ள முடியாத கடும்பணி ஐயர் மேற்கொண்ட அந்தப் பணி. அந்தப் பணியை அல்லது அதுபோன்றதொரு பணியைத்தான் அறிஞர்  தமிழகன் செய்திருக்கும் இநத மரபுத்தொடர் அகரவரிசை. இருந்த இடத்திலிருந்து இருப்பதைப் படிக்கவே சுணங்கும் இந்த உலகில்  கால நேரம் பார்க்காது கால்கடுக்கச் சென்று கேட்டும் குறிப்பறிந்தும் தொகுத்திருக்கும் இந்த ‘மரபுத் தொடர் அகர வரிசை’ முனைவர் அவர்களுக்குப் பெருமை தரும். தமிழுக்கு உரமாகும். இதுதான் உண்மையான தமிழ்த்தொண்டு. பிறர் செய்யாத தொண்டு. அவ்வளவு எளிதாகப் பிறர் செய்ய முடியாத தொண்டு!.

    மக்கள் பயனபாட்டில் மரபுத் தொடர்கள்

    இலக்கணத்தை அல்லது அது சார்ந்த பொருண்மைகளை  இலக்கணமாகக் கற்பித்தலின் அதன் பயன்பாட்டை மக்கள் வழக்கிலிருந்து அல்லது தொடரில் அமைத்து எடுத்துக் காட்டினால் இன்னும் தெளிவாகும்.

    1. மண்ணையே ஆளலாம் என்று அவன் ‘மனக்கோட்டை’ கட்டுகிறான்.
    1. ‘கணணும் கருத்துமாக’ இருந்தால் காரியம் கைகூடும்
    2. ஆடம்பரத்திற்காகப் பணத்தை ‘அள்ளியிறைக்கிறான்’
    3. விஷயததை ‘ஆறப்போடுவதற்கு’ விசாரணை ஆணையம்
    4. சில்லறை இலஞசம் பெற்றான் அதனால் ‘சீட்டு கிழிந்தது’
    5. ‘அவசரக் குடுக்கையாய்’ இறங்கினான், அல்லற்படுகிறான்
    6. கையேந்தி கடன் பெற்றவன் ‘கம்பி நீட்டினான்’
    7. கூட்டுக் குடும்பம் என்பது இனி ‘கானலே!’
    8. ‘கயிறு திரிப்பதில்’ இவனுக்கு நோபல் தரலாம்.
    9. குடி வாழ்க்கையைக் குட்டிச் சுவராக்கிவிடும்
    10. மேலாளருக்குத் தாளம் போட்டே இவன் மேலே வந்தவன்

    மேலே காட்டப்ட்டிருக்கும் தொடர்கள் எல்லாம் நாளும் மக்கள் வாழ்வில் புழங்குவன. மனத்திலே கோட்டை கட்ட முடியாது. தகுதிக்கு மீறிய ஆசை. கண்ணும் கருத்தும் பொறுப்புணர்வை உணர்த்தியது. அளவின்றி வீணான செலவுதான் ‘அள்ளியிறைத்தல்’.  ஆறப்போடுதல் என்றால் சூடு குறைவதற்காக அன்று  மக்கள் மறக்கட்டும் என்று. . ‘சீட்டு கிழிந்தது’ என்றால் பதவி பறிபோனது.. ‘அவசரக் குடுக்கை’ என்பது பொறுமையின்மை. ‘கம்பி நீட்டினான்’ என்றால் காணாமல் போனான் ‘கானல் என்றால் காணமுடியாது .கயிறு திரித்தல் என்றால் பொய் சித்திரிப்பு. ‘குட்டிச் சுவர்’ என்பது இடிந்த சுவரைக் குறிக்காது வாழ்க்கையின் சிதைந்த நிலையைக் குறிப்பது. ‘தாளம் போடுதல்’ என்றால் அநியாயத்துக்குத் துணைபோதல். இதனை ஒததூதல் என்றும் சொல்வர். ‘ஜால்ரா’ என்பதும் அது. சொற்களுக்கான நேரடிப் பொருளைத் தராது மக்கள் கருதும் பொருளை அவர்தம் பண்பாடு சார்ந்து அமைகின்ற தொடர்களே மரபுத் தொடர்கள் என்பது இவற்றால் ஓரளவு விளங்கக் கூடும்.

    உலை வைத்தலும் ஊசலாடுதலும்

    உலையும் கஞ்சியும் ஒரு திறத்தன. அவை ஏழைவீட்டுச் சமையல் அறை அணிவகுப்பு  ‘கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு’ என்பார் அழுகணி சிததர். அது கொல்லன் உலை. “உலைஅமிழ்தை  வறியவள் ஒருத்தி தூக்கல் போல்  என்று குழந்தையைத் தூக்குதற்கு உவமம் காடடுவார் பாவேநதர். இந்த இடங்களில் எல்லாம் ஏழை வீட்டுச் சிந்தனையே உலை என்ற சொல்லால் வெளிப்படுததப்படடது.  இந்த ஏழையின் பிழைப்பில் மண்ணைப் போடுவதற்கென்று சில ஏகாதிபத்திய சக்திகள் எந்த நாளும் இருந்து வருவது இயல்பு. . முயன்று  படித்து முன்னேறும் நோக்குடன பணிபுரியும் ஏழை ஒருவனைப் பற்றிய மொட்டைக் கடுதாசி அந்த எழையின் பிழைப்புக்கு உலை வைக்கும்.  ‘வைத்தல்’ என்ற வினைக்குத் தரையில் வைத்தல் என்று பொருள. ஆனால் ‘பற்ற வைத்தல்’ என்ற சொல்லில் அது அப்பொருள் தராது. அதுபோல ‘உலை வைத்தல்’ என்ற இந்தச் சொல்லில் ‘வைத்தல்’ என்ற சொல் உலை எனபதோடு இணைந்து ‘கேடு செய்தல்’ என்ற பொருளில் வந்தது. அதுவும் பிழைப்புக்கே கேடு சூழ்வதைததான் ‘உலை வைததல்’ என்னும் மரபுத் தொடர் குறிக்கிறது என்பதை ஆசிரியர் நுட்பமாக விளக்கியிருக்கிறார். காற்று தீயாகி ஸ்டவ் அடுப்புச் சமையலுக்கு உலையும் தெரியாது. அதனால் கஞ்சியும வடியாது!

    ‘ஊசல் என்பது இலக்கியத்தில் கலம்பகத்திலும் பெண்பாற் பிள்ளைத் தமிழிலும் ஓர் உறுப்பு.  திருவாசத்தில் திருப்பொன்னூசல் என்பதைக் காணலாம். ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்? உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்? என்பது நந்திக்கலம்பகம் .‘ஆகாயப் பந்தலிலிலே பொனனூஞ்சல் ஆடுதம்மா’ என்பது திரையிசைப் பாடல். தூய்மையான தமிழ்ச்சொல். அது ஆட்டம் என்னும் தொழிற்பெயரோடு சேர்ந்து ‘ஊசலாட்டம்’ என வருவதுண்டு.

    “எண்ணிலா  அருந்தவத்தோன்  இயம்பிய சொல்  மருமத்தின்
    எறிவேல்  பாய்ந்த
    புண்ணிலாம்  பெரும் புழையில்  கனல் நுழைந்தால்  எனச் செவியில்
    புகுத லோடும
    உண்ணிலா  வியதுயரம்   பிடித்து உந்த  ஆருயிர் நின்று
    ஊசல் ஆடக்
    கண்ணிலான் பெற்றிழந்தான்  என உழந்தான் கடும் துயரம்
    கால வேலான்”.

    என்னும் கம்பன் பாடல். துன்பத்திற்கும் கடமைக்கும் இடையே தசரதன் மனத்து ஊசலாட்டத்தைக் காட்டும். இந்த அரிய சொல் மக்கள் வழக்கிலிருந்து வந்தது. மனம் ஒரு நிலையில் நிலலாமைக்கு ‘ஊசலாட்டம்’ என்று பெயர். இதற்கும் கடியாரத்தின் ஊசலுக்கும் தொடர்பில்லை. ஆனால் கடியாரத்தின்  ஊசலுக்குத் (PENDULUM) தமிழில் அப்பெயர் வந்ததற்குக் காரணம் ஒரு முனையிலும் நில்லா அதன் ஆட்டமே. ஊஞ்சலில் ஆடுவதற்கும் ஊசல் ஆடுவதற்கும் தொடர்பில்லை. மக்கள் பார்வையில் அதன்  இருமுனையாட்டம் ஒரு முடிவுக்கு வராத நிலையை நினைவுபடுத்தியதால் தோன்றிய தொடர்.!.

    உடம்புக்கும் பாடைக்கும் ஒரே பெயர் 

    ‘கட்டுமானம்’ என்ற சொல்லிற்கும் ‘கட்டு’ என்ற சொல்லிற்கும்  தொடர்பு உண்டு. ‘மானம்’ என்னும் விகுதி வருமானம், வெகுமானம், அடமானம், உவமானம் என்பன போல் வரும். உறுதியான பொருட்தொகுதிக்கு அப்பெயர் வழங்கப்படுகிறது. தேகக்கட்டு, உடற்கட்டு, வீட்டுக்கட்டுமானம், கீரைக்கட்டு என்பன போன்ற சொற்களில் அப்பொருள் இழைவது காண்க. இனி ‘நாட்டுக்கட்டை’ என்ற சொல்லில் இருக்கும் நுண்ணியமும் அதுவே. உடலுறுப்புக்களின் உறுதியும் அழகும் தளர்ச்சியின்மையும் சுட்டுவதாக அது அமைந்திருப்பதை உணரமுடியும்.

    மொழியின் முழுமையான ஆழத்தையும் ஆளுமையையும அவல வெளிப்பாட்டில் காணலாம்.. இலக்கியச் சுவைகளில் பெரிதும் மனங்கவர்ந்து நிற்பது அவலமே. கம்பனின் ஆறு காண்டங்களில் யுத்த காணடத்தை ‘மரண காண்டம்’ அலலது ‘அவல காண்டம்’ என்றே கூறலாம். புலம்பலின் உச்சம். அழுகைகளின அணிவகுப்பு.  வழக்கிலும் இந்த அவலததைக் காணலாம். ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பார் திருமூலர். ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்றதும் அவரே. அத்தகைய உடம்பை வழக்கில் ‘கட்டை’ என்று வழங்குகின்றனர் மக்கள்.

    ‘உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்த பிறகுதான் இந்தக் கட்டை போகும், வேகும்’ என்பது வழக்கு. இந்தத் தொடரில் ‘கட்டை’ என்பது உடம்பு. கட்டை என்பது யாக்கையின ;மறுபெயர். யாக்கை தொழிற்பெயர். யாத்தல் எனினும் ஒக்கும். உயிரன்றி யாக்கை செயல்படாது. இயலாது. இனி ஈரம் இல்லாதது கட்டை. விறகுக் கட்டை, மரக்கட்டை என்னும் வழக்கு நோக்குக. உயிரற்ற உடம்பிற்கு யாக்கை என்பது பெயர்.

    ‘கட்டையிலே போறவனே’ என்பதும் வழக்கு. இங்கே கடடையென்பது உடம்பைக் குறிக்காது கட்டையாகிய உடம்பு வேகின்ற மயான மேடையைக் குறிக்கிறது. உடம்புக்குப் பெருமை உயிர். மரத்திற்குப் பெருமை ஈரம். உயிரிலலாத உடம்பும் ஈரம் இல்லாத மரமும் பயனற்றவை. வேரில் விழுகின்ற மழைத்துளிக்கும் விறகில் விழுகின்ற மழைத்துளிக்கும விளைவு வேறுபடும். எனவேதான்  எரிகின்ற உடம்பையும் ‘கட்டை’ யென்றார்கள் எரிக்கப்படும் உடம்பையும் ‘கட்டை’ யென்கிறார்கள்.

    ‘என் கட்டை போகிறவரைக்கும்’ என்பதும் ‘நான் கட்டையில் போகிறவரைக்கும்’ என்பதும் முறையே உடம்பையும் பாடையையும் ‘கட்டை’ என்னும் ஒரு சொல்லே வழக்கில் இருக்கிறது என்தைத் தமிழகன் மிக அருமையாக உணர்த்தியிருக்கிறார்.  இந்த வழக்குச் சொலலை கவிஞர் வைரமுத்து தாம் எழுதிய பெய்யெனப் பெய்யும் மழை என்னும் கவிதை நூலில்

    “கட்டையிலே போகையிலும்
    கட்டாயம் சோதி! என்
    கண்ணுக்குள் தெரியுமடி
    கவிதையென்னும ஜோதி!”

    என்று பாடி அதன் இலக்கியத் தகுதியை உறுதிசெய்திருக்கிறார். எதுகையைப் புறந்தள்ளி மோனைக்கும் இயைபுக்கும் முதன்மை தரப்பட்டிருக்கும் இந்தக் கவிதை வரிகளில் ‘கட்டையிலே’ என்ற சொல்லைப் ‘பாடை’ என்னும் பொருளில் அவன் பயன்படுத்தியிருப்பது காண்க.

    கடைவிரித்தலும்

    செங்குத்தான  (VERTICAL) திறப்புக்குத் திறப்பு என்றும் கிடக்கை நிலைத் (HORIZONTAL) திறப்புக்கு விரித்தல் என்றும் பெயர். கோயில் நடைத் திறப்பு,, மதில் வாயில் திறப்பும் என்பவற்றையும்  படுக்கை விரித்தல், பூவிரித்தல், இலை விரித்தல் முதலிய வழக்கு நோக்குக. இது முரணாகிறபோது பொருள் மாறுபடும். ‘தலைவிரிக்கோலம்’ என்னும் ;முரண் அவலக் குறிப்பு. கடைவிரித்தல் என்பது சாதாரண மொழியில் தரைக்கடையை விரிப்பதாகக் கொளளலாம். ஆனால் அது மரபுத் தொடராக அமைகிறபோது ‘மந்தணத்தை வெளிப்படுத்துதல்’ என்னும் பொருளில் வரும். ‘எல்லாவற்றையும் கடைவிரிக்கத்தான் நீ வந்தாயா? என்பது உலகியல்.  நூலாசிரியர் கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்னும் தொடரை வள்ளலார் வாக்கு அதாவது வாயச்சொல் என்கிறார். உண்மையில் அது திருவருட்பாவில் எங்கும் காணப்படாத வரி. மிகவும் சாதுரியமாக ‘வாய்ச்சொல்’ என் ஆசிரியர் சொல்வதும் ஒரு வகை உத்தியே! அது வள்ளலார் சொன்னதாக வழிபோக்கர் சொன்னது. இத்தகைய வழிப்போக்கர் விட்ட கதை தமிழில் எராளம்! ஏராளம்!

    கண் – மூடுதல் – விழித்தல் — காட்டுதல்

    ‘கணணயர்தல்’ என்பது உறங்குதல் என்னும் பொருளில் வரும். இந்தச் சொல்லில் ‘கண்’ என்பது பெயர்ச்சொல். அயர்தல் என்பது வினைச்சொல். இவையிரண்டும் அவற்றுக்கான உண்மைப் பொருளையே உணர்த்தியது. ‘கண்மூடுதல்’ என்பது சாதாரண நிலையில் ஒரு பொருளும்  மரபத்தொடராக மற்றொரு பொருளும் உணர்த்தி நிற்கிறது. ‘கண்மூடுதல் என்றால் கண்ணயர்தல் என்பது போலவே உறங்குதல் என்பதை உணர்த்தும். ‘கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே’ என்பது அன்றைய திரையிசைப்பாடல். கூடவே ஒரே சொல்லாக நின்று ‘இறந்து போதல்’ என்னும் பொருளையும்  உணர்த்தி நிற்கும். அவன் கண்ணை மூடுவதற்குள் இதனைச் செய்துவிட வேண்டும் என்பதில் ‘அவன் இறந்து விடுவதற்குள் இதனை முடித்துவிட வேண்டும் எனனும் பொருள் அமைந்திருப்பதை அறிக. ‘கண்ணை மூடுதல்’ என்னும் சினைவினை மரபுத் தொடராக நின்று நுண்பொருளை உணர்த்துகிறது.

    ‘கண்விழித்தல்’ என்பதும் அதுபோன்றதொரு சொல்லே. உறங்கி எழுதல் என்பது இயல்பான வழக்கு. ஆனால் ‘என்னைக் கொஞ்சம் கண் திறந்து பார்க்கக் கூடாதா?’ என்று திறந்த விழி உடையவனையே நோக்கி இறைஞ்சுகிறபோது அது மரபுத் தொடராகிவிடுகிறது, என்பால் இரக்கம் காட்டமாட்டாயா என்னும் பொருளைத் தருகிறது,  ‘இன்னமும் பாரா முகம் ஏனம்மா?’ என்பது அக்காலத்திய புகழ் பெற்ற திரையிசைப் பாடல் வரி. ‘கண்ண தெறக்கணும சாமி’ என்பது இக்காலத்திய திரையிசைப் பாடல் வரி. ‘மீன் நோக்கும் நீள்வயல் சூழ் வித்துவக் கோட்டு அம்மா என்பால் நோக்காயாகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன்’ என்பது பெருமாள் திருமொழி.

    ‘கண்விழித்தல்’ என்பதுபோன்ற மற்றொரு மரபுத்தொடர் கண்காட்டுதல். கண்காட்டுதல் என்றால் ‘அருள்பாலித்தல்’ ‘நன்னெறி காட்டுதல்’, ‘பிழைக்கும் வழி காட்டுதல்’ என்பது பொருள். கொஞ்சம் உன் கண்ணைக் காட்டினால் பிழைத்துக் கொள்வேன் என்பதும்  ‘அவனுக்கொரு கண்ணைக் காட்டிட்டா பிழைத்துக் கொள்வான்’ என்பதும். ‘சாமி கண்ணத் தொறக்கணும்’ என்பதும் மரபியல் சார்ந்த உலகியல் வழக்கு.

    கரைத்துக் குடித்தலும் கரைகாணுதலும்

    முற்றோதல் என்பதும் முழுதறிதல் என்பதும் தமிழ்ப்பனுவல்களில் காணப்படும் சொற்கள். மனனம் செய்யப்பட்ட பகுதிகளை முழுமையாகச் சொல்லிச் சுவைப்பது  முன்னது. ஒரு பொருள் பற்றி முழுமையாக அறிவது பின்னது. உணவுப்பொருட்களை நன்கு மென்று உள்ளே அனுப்பினால் உள்ளே இருக்கும் செரிமான உறுப்புக்களின் வேலைப் பளு குறையும் என்பது மருத்துவக் குறிப்பு. பற்களின் உடலியல் பயன் அது. அவசர வாழ்க்கையில் பலர் பற்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக விழுங்குவதற்குத் தொண்டையைப் பயன்படுத்துகிறார்கள். ‘கஞ்சி’ என்பதும் குழைத்தும் கரைத்தும் உண்பது. அது இன்னும் நல்லது. எதிலும் நுனிப்புல் மேய்வார் பரவி நிற்கும் உலகத்தில் எந்தப் பொருள் பற்றியும் முழுமையும் தெரிந்து கொள்வார் குறுகிப்போயினர். ஒருவனுடைய அடையாளப்படுத்தப்பட்ட அறிவின் அளவை அறிந்த மக்கள் அவன் அளவு தெரியாது பேசினால் ‘கரைத்துக் குடிச்சவன் மாதிரி பேசாதே’ எனக் கடிந்துரைப்பர். எதிர்மறையில் இப்படி வரும் இந்தத் தொடர் ‘வாரியார் அவர்கள் திருப்புகழைக் கரைத்துக் குடிததவர்’ என உடன்பாட்டில் வழங்கப்படும்.

    ‘கங்குல் எல்லை காண்பளவும இமைப்பிலன்’ (இலக்குவன்) என்பது குகன் வாக்கு. கரைத்துக் குடித்தல் என்பது ஒரு பொருளைப் பற்றிய பன்முகப் பரிமாணத்தைப் பற்றியதெனின் ‘கரைகாணுதல்’ என்பது பரப்பைப் பற்றியது. அகலக்கற்றல் ஆழக்கற்றல் என்னும் இருவகையுள் இது அகலக் கற்றலைக் குறிக்கும். இதுவும் எதிர்மறையிலும் வரும் உடன்பாட்டிலும் வரும். ‘கரைகாணாத் துன்பம்’ என்பது எதிர்மறை. ‘சிலப்பதிகாரத்தில் சிலம்புச் செல்வர் ம.மொ.சி. கரை கண்டவர் என்பதும் ‘வேர்ச்சொல் ஆய்வில் கரைகண்டவர் பாவாணர்’ என்பதும்  உடன்பாடு. கரைத்தல், கரைகாணுதல் என்னும் பருப்பொருள் வினைகள் நுண்பொருள் உணர்த்தி வந்தமை வழக்கு நுண்ணியம். பண்பாட்டு நுண்ணியம். மொழியியல் நுண்ணியம்.

    முழுகாமல் இருத்தலும் முழுகிப் போதலும்

    ‘ரங்கோன் ராதா’ என்ற திரைப்படம் பேரறிஞர் அண்ணா எழுதியது. அதில் ஒரு காட்சி வரும். விலைமகளை நாடும் தலைவனிடம் கதைத்தலைவி தான் கர்ப்பமாயிருப்பதை நாணத்துடன் இப்படி வெளிப்படுத்தவாள்.  “நான் மூனு மாசம் முழுகாமல் இருககிறேன்” என்று. அதற்கு உடனடியாக கதைத்தலைவன் சொல்வான்’ நான் (உன்னை) ‘தலைமுழுகிவிட்டேன்” என்று. ‘தலை’ என்ற சொல் ‘தனி. முழுகுதல்’ என்ற சொல் தனி. இவ்விரண்டு சொற்களும் இணைந்து முற்றிலும் மாறுபட்டதொரு பொருளைப் தமிழ்ர் பண்பாட்டுத் தளத்தில் வைத்துப் பெறமுடிவதைக் காணலாம். பெண்கள் கருவுற்றிருப்பதை வெளிப்படுத்துவதற்குப் பல சொற்கள் இருக்கின்றன. அவை பண்பாடு காக்கும் சொற்கள். ‘மாசப்பொழுதாய் இருக்கிறாள்’. ‘முழுகாமல் இருக்கிறாள்.’ ‘மசக்கையாய் இருக்கிறாள்’ ‘இப்ப அவ ஐந்து மாசம்’ என்றுதான் சொல்வார்கள். அப்போதெல்லாம் பெண்களுக்குச் சுண்டு வலி வரும் அதனால் சுகப்பேறு நிகழும். அது ஒரு கனாக்காலம்!. போலி நாகரிகத்தில் எதனைப் பேசுகிறோம் யாரிடம் பேசுகிறோம் என்று தெரியாமல் ஜிகினா வாழ்க்கையில் சிக்கித தவிக்கிற தற்காலத்தில் ‘என் மவ உண்டாயிருக்கிறா’ என்று உவந்து போகிறார்கள். அப்படிச் சொல்வது அவர்கள் உரிமை. அதே நேரம் ஒரு நெடிய மரபு புதைக்கப்படுகிறது என்பதை மறந்துவிடக்கூடாது, பெரியவர் தமிழகன் பண்பாடு காக்கும் இத்தகைய மரபுத்தொடர்களைத் தொகுத்துக் காட்டியிருக்கிறார் வகுத்துச் சொல்லியிருக்கிறார். இதில் என்ன பண்பாடு இருக்கிறது என்று சிலர் வினவலாம். ‘முழுகுதல்’ என்றால் தலைக்குக் குளித்தல் மாதாந்திர விலக்குக்கு உள்ளான மகளிர் மூன்றாம் நாள் குளித்து வீடடுக்குள் வருவது தமிழர் பண்பாடு. இன்றைக்கும் பெருவாரியான தமிழகச் சிற்றூர்களில் பின்பற்றப்படும் வாழ்வியல் நியதி. திங்கள்தோறும் தலைமுழுகும் மகளிர் கருவுற்றால் தலைகுளித்தலாகிய அந்தக் குறிப்பிட்ட சடங்கு நிகழாது. ‘தலைக்கு ஊற்றுதல்’ என்பது தலையைத் தாண்டியதொரு பண்பாட்டைக் குறித்தது காண்க. எனவே ‘முழுகாமல் இருக்கிறாள்’ என்ற சொல் ஏற்கனவே அவள் திஙகள் தோறும் முழுகியதைக் காட்டுகிறது. ஆனால் ‘உண்டாயிருக்கிறாள்’ என்ற சொல் அந்தப் பண்பாட்டு விழுமியத்தை எள்ளின் முனையளவும் வெளிப்படுத்தவில்லை என்பதை அறிதல் வேண்டும்.

    ‘என் குடி முழுகிடுச்சே?’ இந்த அவலம் அங்கிங்கு எனாதபடி எங்கும் கேட்கும் காலம் இது. முழுகுதல் என்பது நீரின்கண் நிகழ்கிற நிகழ்வு. வீடு வெள்ளத்தில் மூழ்குவது வேறு. காதல் கண்ணீரில் மூழ்குவது வேறு. குடி வறுமையில் மூழ்குவது அவற்றினும் வேறு. இது மூன்றாவது. தமிழின் மரபின் நுண்ணியம் வெளிப்படும் இடங்களில் இதுவும் ஒன்று. ஒருத்தி முழுகாமல் இருந்தால் அந்தக் குடும்பம் மகிழ்கிறது. அந்தக் குடும்பம் வறுமையில் மூழ்கினால் புலம்புகிறது. .  இதனை வேறுவாய்பாட்டிலும் சொல்லலாம். முழுகாமல் இருந்தால் களிப்பு. மூழ்கினால் சலிப்பு! இந்தச் சலிப்பு பத்து பவுன் சங்கலியை அடகுவைத்து வட்டிக் கட்ட இயலாது மூழ்கிப் போனவனுக்குத்தான் தெரியும்!

    சந்திக்கு இழுத்தல்

    ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பாரத்துக் கொள்வதற்குச் சந்தித்தல் என்று பெயர். சாலைகளுக்கும் இரு பொருந்தும் இரண்டு மூன்றாகி முச்சந்தி, நாற்சந்தி எனவும் வருவதுண்டு. ஐந்து சாலைகள் சந்திக்கின்ற இடத்துக்கு ‘ஐஞ்சந்தி’ என்று வந்திருக்க வேண்டிய பெயர் ‘விரல்நிலை’ என்று வந்தது. ‘FINGER POST’  என்பது நீலமலை மாவட்டத்தில் ஐந்து சாலைகள் சந்திக்கின்ற இடத்திற்குப் பெயர். இ;நதப் பெயர் இங்கிலாந்து நாட்டில் உள்ளது. வெள்ளையர்கள் ஆட்சியில் தங்கள் நாட்டிலிருந்த பெயர்களையெல்லாம் நீலமலையில் முதன்முதலாகக் குடியேறிய காலத்து அங்கே வைத்தார்கள். கட்டுரைக்குத் தொடர்பிலலாதவிடத்தும் இது ஒரு கூடுதல் தகவலாகக் கொள்ளப்படலாம். இந்தச் சந்திகளில் தமிழர்களின் வாழ்வில் முச்சந்தி பெற்ற இடத்தை வேறு எதுவும பெற்றதாகத் தெரியவில்லை. ‘அங்காடி நாய்’ என்றே பட்டினத்தார் பாடுகிறார். சாவும் நெருங்காது சந்தியிலே நிற்கின்றேன் என்பார் வைரமுத்து. ‘சந்திப் பிழை போன்ற சந்ததிப் பிழைகள்’ என்பார் காமராசன்.   “சந்திக்கு இழுத்தல்” என்பதன் பொருள் தெருக்கள் கூடும் சந்தியை நோக்கி ஒருவரை இழுத்துச் செல்வது என்பதன்று. ‘அவமதித்தல்’ அல்லது ‘மானக்கேடான சம்பவங்களைப் பிறரறிய வெளிப்படுத்தல்’ என்பதே மரபுப் பொருளாகும். ஒருவன் மற்றொருவனைச் சந்திக்கு இழுத்தால் அங்கே அவர்கள் சிரிக்கமாட்டார்கள். சந்தி சிரிக்கும்! சந்தியென்றால் வேடிக்கை மனிதர்கள்!

    குளிர்ந்தது நெஞ்சா? வயிறா?

    வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்பார் மகாகவி. புவியனைததையும் ஒரு சேர நோக்கி அனைத்தையும் தன் கவிக்குடைக்குள் கொண்டு வர எத்தனித்த அவன், ஒரு தனிமனிதனின் உணவுப் பசியைப் போக்குவதையே தலையாய தொண்டாகக் கருதினான்.  பாரதிக்கு முன்னால் அறச்செல்வி மணிமேகலை இதனை முன்னெடுத்திருந்தாலும் அவள் ‘கவிதாயினி’ அல்லள். பாரதி வையகத்து மாகவிஞன். ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று தத்துவ முரணை முன்னெடுக்கிறான். சமுதாயத்திற்காகத் தனிமனிதன் என்பதுதான் நெறி. பாரதி பசியின் கொடுமையைச் சித்திரிக்க வேண்டி தனிமனிதனுக்காகவே சமுதாயம் என்று முன்னெடுக்கும் நுட்பம் உணரத்தக்கது. வயிற்றை அடிப்படையாகக் கொண்ட இச்சமுதாய வழக்கினை அறிஞர் முனைவர் தமிழகன் ஐயா அவர்கள மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

    வயிற்றில் பால் வாரத்தல்

    ‘பால்வார்த்தல் என்பது பாம்புக்குரிய பழமொழியின் பகுதி. ‘பாலாபிஷேகம்’ என்பது இறைவழிபாட்டில் இடம்பெறுவது. ‘பூவே பூச்சூடவா என் நெஞ்சில் பால் வார்க்க வா’ என்பது வைரமுத்தின் வரி. ஆனால் வயிற்றில் ‘பால் வார்த்தல் என்பது வழக்கு. வாழ்க்கைச் சிக்கல்களில் விடும் பெருமூச்சுக்களில் சிக்கித் திணறும் சூழலில் ஆறுதல் தரும் பொருளோ சேதியோ கிட்டும்போது வரும் வெளிப்பாடு இது. ‘சுகப் பிரசவம்’ எனக்கேட்டுத் தாய் பூரிக்கிறாள். ‘விபத்தில் பிள்ளை தப்பினான்’ என்னும் சேதி குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி. இவையெல்லாம் தொடர்புடையவர்களுக்கு ‘வயிற்றில் பால் வார்த்தது போல’ என்பதாம். வயிற்றுக்குச் சோறே கிட்டாதாரும் ‘வயிற்றுக்குப் பால் வாரத்தல்’ என்னும் இந்த வழக்கைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல சேதி நெஞ்சைக் குளிரவைக்கும். நல்ல சோறு வயிற்றின் பசிபோக்கும். நெஞ்சின் வினை வயிற்றுக்கு இடம் மாறும் உலகியலில் வழக்கில் பயன்படுத்தப்படும் மரபியல் தொடர் இது. பதற்றம் நெஞ்சுக்கானது என்பதைப் புரிந்து கொண்டால் மரபுத் தொடரின் ஆழமும் அழகும் புரியக்கூடும்.

    கொள்ளையடிததலும் வயிற்றிலடித்தலும்

    “ஊரை அடித்துப் போடும் அரசியல்வாதி’களோடு தற்போது அரசு அதிகாரிகளும் இணைந்திருக்கிறார்கள் என்பது தினச்செய்தி. ‘படியளப்பேன் என்று பாராள வந்தவர் தடியெடுப்பதும், கடமை செய்ய வந்தவர்கள கையூட்டல் வளம் பெறுவதும் கண்கூடு’. தகராறு வருகிறபோதோ சண்டைவருகிறபோதோ யாரும் வயிற்றில் அடித்துக் கொள்வதில்லை, உடலின் கீழ்ப்பகுதியாக அது இருப்பதால். ஆனால்  ஒருவனுடைய கை செயல்படாடமலேயே அடிப்பதுதான வயிற்றில் அடிப்பது.  வயிற்றுப் பிழைப்புக்கான வழியைத் தூர்ப்பதே வயிற்றில் அடிப்பது என்பதன் பொருள். சமுதாயத்தின்  எதிர் நிலைச் செயல்பாடுகளை இத்தகைய ஆழமான, அடர்த்தி நிறைய குறிக்கும் புலனெறி வழக்கு இன்மையையும் உணர்தல் வேண்டும். ‘அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்’ என்னும் இலக்கிய வழக்கினையும் ‘என் வயிற்றில் அடிச்சுட்டானே’ என்னும் சமுதாயப் புலம்பலையும் இணைத்து மதிப்பிடின் உண்மை துலங்கும்! உருக்கம் தெரியும்!

    எரிந்து சொல்வதும் எரிச்சல் படுவதும்

    சில நேர்வுகளில் புலனெறி வழக்கின் ஆழத்தைவிட, நுட்பத்தைவிட வழக்கின் நுண்ணியம் சிறந்து நிற்கும். ‘வயிறெரிந்து சொல்கிறேன்’ என்னும் வழக்கு அல்லற்பட்டு ஆற்றாது அழுதவனின் சொல்!. தெள்ளிய நீர்போல் கள்ளமில்லா உளததிலிருந்து சொல்கிறேன் என்பது கருத்து. ‘பலித்துவிடும்’ என்பது ‘அனுமானம்’ அன்று ‘திண்ணம்’. ‘நான் வயிறெரிந்து சொல்கிறேன், நீ உருப்பட மாட்டாய்! என்பது போல்வது இது. இதே வயிறு எரிதலை விட்டு எரிச்சல் படுவதும் உண்டு. அது வயிற்றெரிச்சல். இலக்கியவாதிகள் இதனை ‘அழுக்காறு’ என்று சொல்லி அதனைக் ‘கொள்ளாமை’ என்னும் பொருளில் ‘அழுக்காறாமை’ என எதிர்மறை இலக்கணம் எல்லாம் புணர்த்து எழுதுவார்கள். ஆசிரியர் பரிமேலழகர்,

    “அழுக்காறு என்பது ஒருசொல். பிறரர் ஆக்கம் கண்ட வழி பொறாமை. அச்சொல் பின் அழுக்காற்றைச் செய்யாமை என்னும் பொருள் எதிர்மறை ஆகாரமும் மகர ஐகாரவிகுதியும் பெற்று ‘அழுக்காறாமை என நின்றது”

    எனத் தம் மலையளவு புலமையை நிலவளவு காட்டுவார். ஆனால் இலக்கணம் அறியாது எதிர்வீட்டை மட்டுமே அறிந்த ஒரு தமிழச்சி பெண் “அடுத்த விட்டுக்காரி ஆம்பள புள்ள பெத்தா எதுத்த வூட்டுக்காரி இடிச்சுககிட்டுச் செத்தாளாம்’ என்று  ஓரங்க நாடகத்தையே நடததிவிட்டுப் போய்விடுவாள். உலகியலுக்குப் புலனெறி வழக்கு தலைவணங்கி நிற்கும் இடங்களில் இதுவும் ஒன்று.

    பூசி மெழுகலும் பூண்டற்றுப் போதலும்

    ‘தெளிவுபெற்ற மதியினாய்’ என்பார் பாரதியார். அறிவு தெளிவின் மேற்று. அதனால் பேச்சும் தெளிவின் மேற்று. மறைத்துப் பேசுதல் மாசுபடும். ‘நிரந்தினிது சொல்லுதல்’ சான்றோர் திறமை. உள்ளவாறே உரைத்தலும் நடந்தவாறே நவில்வதும் நல்லவர் கொள்கை. இவ்வாறின்றி ஒன்றைப் பிறிதொன்றாகக் கூறுவதும் மறைத்துக் கூறுவதும் மயங்கக் கூறுவதும் எதிர்மறை விளைவுகளேயே தரும். சிக்கலைத் தீர்க்க உதவாது. ‘வெட்டொன்று துண்டிரண்டாய் பேசு. ‘இந்தப் பூசி மெழுகிற வேலை இங்கு ஆகாது’ என்பது உலகியல். ‘உடைத்துப் பேசு’ என்பதும் அது. பூசி மெழுகுவதால் புரை ஆறாது என்பது தமிழர்தம் பண்பாட்டு விழுமியம்

    எள் அமங்கலப் பொருள். எருக்கும் அமங்கலப் பொருள். ‘வாழையடி வாழையென. என்பது மங்கலம். ஒரு குடும்பம், ஒரு அரசு இவையெல்லாம் தழைத்திருக்க வேண்டியன. அற்றுப்போகக் கூடாதன. குடும்பத்திற்குக் குழந்தையும் அரசிற்கு வாரிசும் இல்லாவிடின் வாரிசு அற்று வழிதோன்றல் இல்லாது போய்விடும். இதனைப் பூண்டற்றுப் போதல் என்பது உலகியல். ‘பூண்டும்’ என்பதில் உம்மை தொக்கது. உண்மையில் பூண்டு என்பது புல்லிற்கு அடுத்த நிலைத் தாவரம். தரை நனைய மழைபெய்தால் புல் துளிர்க்கலாம். ஆனால் வேர் நனைய பெய்தாலே பூண்டு தழைக்கும். அல்லலுக்கு ஆளாகித் துன்புறுத்தப்படும் ஏழைகளின் சாபத்தில் இந்த வழக்கு தென்படும். ஏழை அழுத கண்ணீருக்குப் பூண்டற்றுப் போகச் செய்யும் வலிமை உண்டு. அன்னப் பறவையும் அசுணப் பறவையும் இன்றைக்குப் பூணடற்றுப் போய்விட்டன.

    வெளுத்து வாங்குதலும் வெளிச்சம் போடுதலும்

    ‘முதல் மரியாதை’ திரைப்படப்பாடல்களின் ஒன்றில் ‘உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்’ நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்’ என்று எழுதியிருப்பார் வைரமுத்து. ‘வெளுப்பது’ ஒரு வினை. ‘வாங்குதல்’ மற்றொரு வினை. வெளுத்து வாங்குதல் என்றால் ‘வெளுத்த துணியை வாங்குதல்’ என்னும் இருவினைத் தொகுப்பன்று. நடிப்பதன் உச்சி என்று பொருள். நேர்முகமாக இந்தத் தொடரை ‘கச்சேரியில் வெளுதது வாங்கினான்’ என்பர்.  எதிரியை ஏசுகிற போதும் ‘நல்லா வெளுத்து வாங்கிட்டியே!’ என்பர். நேர்முகமாகவும் எதிர்மறையாவும் இந்தத் தொடர் பயன்படுகிறது. தொடர்மழையால் துன்புறும் மக்கள் ‘வானம் வெளுத்து வாங்குது’ என்பர். இந்தத் தொடரில் உள்ள வெளுத்தல் என்னும வினைக்கும் சலவைத் தொழிலாளிக்கும் தொடர்பே இல்லை.

    “வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
    அவர் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே” என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாலே வந்த திரையிசைப்பாடல்.  இந்தப் பாடலில் முதலில் வநதிருக்கும் ‘வெளிச்சம்’ என்ற சொல் ஒளியையும் இரண்டாவது வந்திருக்கும் சொல்  ‘பகட்டு’ மற்றும ‘படோடாப உணர்ச்சிகளையும்’ குறிப்பதாக அமைந்திருக்கிறது. பாடுபட்டு உழைத்து எளிய வாழ்க்கையை வாழ்பவர்கள் இடையே வெற்று ஆடம்பரத்திற்காகவும் வீண் ஆரவாரத்திற்காகவும் போலிவாழ்க்கை வாழ்கிறவர்களை இந்தச் சொல் குறிக்கிறது. மரபுத் தொடர்கள் வாழ்வியல் குறியீடுகள் என்பதை நினைவிற் கொண்டால் இதன் பொருள் இன்னும் தெளிவாகும். ‘ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’ என்னும் பழமொழியின் கருத்தும் இதுவே!

    நிறைவுரை

    மரபுத் தொடர்களின் துணையின்றி உரைநடை சிறக்காது அதற்காக உரைநடையைச் சிறக்கவைப்பதே மரபுத் தொடர் என்பதல்ல. மரபுத் தொடர் காட்டும் வரலாறும் பண்பாட்டு விழுமியமும் நோக்கத்தக்கவை. மரபுத் தொடர்கள் என்பன சொல்லியல் அல்ல. பொருளியல். ஆம். அது தலைமுறைத் தேட்டம். முந்தைய தலைமுறை பத்திரப்பதிவு இல்லாமலேயே நமக்கு விட்டுச் சென்றிருக்கிற பல்லாயிரம் கோடி சொத்துக்கள், பண்பாட்டு உடைமைகள். மரபுத் தொடர்களை அறிவதும் அறிந்து பயன்படுத்துவதும் இன்றைய தமிழ்நாட்டார் கடமை. தமிழ் எழுத்தாளர்களின் கடமை. தமிழ்ப் பேராசிரியர்களின் கடமை. ‘வட்டார வழக்கு’ என ‘மொழிச்சேரி’ காண்பதை விட்டு மொழியில் ‘சமத்துவபுரம்’ காண்பதே இன்றைய உண்மையான தமிழ்த் தொண்டு. அந்தத் தொண்டினை அறிஞர் பிச்சை தமிழகன் செய்திருக்கிறார். கொட்டிக் கிடக்கின்ற மணிகளில் எதனைக் கொத்துவது எதனைக் கோப்பது என்று தெரியாமல் தட்டுத் தடுமாறி நின்ற நான் கட்டுரையின் அளவு கருதி ஒரு சிலவற்றை மட்டுமே காட்டியிருக்கிறேன். காட்டு மூலிகை ஒன்றினைக் திருச்சிராப்பள்ளி காசாமலை பிச்சையம்மாள் நகரில் கண்டெடுத்த மகிழ்ச்சியில் திளைக்கிறேன்!

    நூலாசிரியர் பற்றி

    கவிதைக்கு ஈரோடு தமிழன்பனையும் நாவலுக்குப் புதுவை பிரபஞ்சனையும் தந்த தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரி கண்டெடுத்த கல்வெட்டு மாமணி பிச்சை தமிழகன்!. நூறாண்டு தமிழ் வாழ்வுக்குச் சொந்தக்காரரான நிறைதமிழ்ச் சான்றோர் அடிகளாசிரியரின் அணுக்கத் தொண்டர். அன்புக்கிசைந்த மாணவர். இவர் கால்படாத ஊர், கண்படாத திருக்கோயில் தமிழக வரைபடத்தில் இல்லை. திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி வட்டம் குமுலூரில் தோன்றிக் கல்வெட்டைத் தத்தெடுத்துக் கொண்ட இவரைச், சொல்லியல் களவு மணம் புரிந்து கொண்ட கதை, சாண்டில்யன் சொல்லாத கதை! சிக்கனத்தைப் பேச்சிலும் உதவுவதில் தாராளத்தையும் கடைப்பிடிக்கும் இவர்  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சங்க இலக்கிய மரபுச் சொற்களை ஆய்ந்து ‘முனைவர்’ பட்டம் பெற்றவர்!. கருத்த தோற்றமும் வெளுத்த உள்ளமும் உடைய அறிஞர் பிச்சை தமிழகன், சொல்லாராய்ச்சிக் களம் காணும்  இறுதித் தலைமுறையின் இளைக்காத தளபதி!

    Share
  • தமிழகம் கண்ட திறன்மிகு எழுத்தாளர்

    தமிழகம் கண்ட திறன்மிகு எழுத்தாளர்

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களை நாம் வரிசைப்படுத்தினால் அதில் குறிப்பிடத்தக்கதோர் இடத்தைப் பெறுபவர் வல்லிக்கண்ணன் அவர்கள். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திறனாய்வு என்று இலக்கியத்தின் பல வகைமைகளிலும் சுவடுபதித்த வல்லிக்கண்ணன், கட்டுரையாளராகத் தனிமுத்திரை பதித்த சாதனையாளராவார்.

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள திசையன்விளை எனும் ஊரில் நவம்பர் 12, 1920இல் சுப்பிரமணியப் பிள்ளை, மகமாயி அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் ரா.சு. கிருஷ்ணசாமி எனும் இயற்பெயர்கொண்ட வல்லிக்கண்ணன்.

    பின்னாளில் அவர் எழுத்தாளராக மாறியபின் தமக்கொரு புனைபெயர் சூட்டிக்கொள்ள விழைந்து, தம் முன்னோர்களின் பூர்வீகமான இராஜவல்லிபுரத்திலுள்ள ’வல்லி’யையும், தம் பெயரான கிருஷ்ணசாமி என்பதன் தமிழாக்கமான ’கண்ணனை’யும் இணைத்து வல்லிக்கண்ணன் ஆனார்.

    சிறு பத்திரிகைகளுடனான அறிமுகம் வல்லிக்கண்ணனுக்குச் சிறுவயதிலேயே கிடைத்துவிட்டது. பரலி சு. நெல்லையப்பரின் லோகோபகாரி எனும் சிற்றிதழும், சங்கு சுப்பிரமணியம் என்பவர் நடத்திய சுதந்திரச் சங்கு எனும் பத்திரிகையும், காந்தி, மணிக்கொடி போன்ற இதழ்களும் அவருக்குப் பள்ளி நாட்களிலேயே படிக்கக் கிடைத்தன. அதனால் இளம்பருவத்திலேயே சிற்றிதழ்களின் காதலன் ஆனார் வல்லிக்கண்ணன்.

    படிப்பதில் இருந்த ஆர்வம் எழுதுவதிலும் அவருக்கு ஏற்பட்டது. எனவே, தாமும் கதைகள் கட்டுரைகள் என்று எழுதத் தொடங்கினார். அவ்வாறு பதினாறு வயதில் தொடங்கிய அவரின் எழுத்துப்பணி அவர் வாழ்வின் இறுதிவரைச் சலிப்பின்றித் தொடர்ந்தது.

    பள்ளியிறுதிப் படிப்புக்குப் பின் அரசுவேலையில் சேர்ந்த வல்லிக்கண்ணன், தம்முடைய ஓய்வுநேரத்தை படிப்பதிலும் எழுதுவதிலும் செலவழித்துவந்தார். அதனால், பணியிடத்தில் மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளானார். ஒருகட்டத்தில் அரசுப்பணி தம் எழுத்துப்பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதை உணர்ந்து அதனைத் துறந்து முழுநேர எழுத்தாளரானார்.

    சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன் உள்ளிட்ட சிறு பத்திரிகைகள் பலவற்றில் வல்லிக்கண்ணனின் தொடக்ககாலப் படைப்புகள் வெளிவந்தன. திருமகள், சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன் முதலிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு.

    புகழ்பெற்ற குடந்தை எழுத்தாளரான தி. ஜானகிராமனின் முதல் நாவலான ‘அமிர்தம்’ கிராம ஊழியன் பத்திரிகையில் வல்லிக்கண்ணன் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான் வெளிவந்தது.

    பாரதி பரம்பரையில் வந்த கவிஞர்களுள் தலைசிறந்தவரான பாவேந்தர் பாரதிதாசனின் கவியாளுமையை விளக்கும் வகையில், ’பாரதிதாசனின் உவமை நயம்’ என்ற கட்டுரைத் தொடரை கிராம ஊழியன் இதழில் எழுதினார் வல்லிக்கண்ணன். பாவேந்தரே அக்கட்டுரைகளைப் படித்துவிட்டு வல்லிக்கண்ணனைப் பாராட்டியிருக்கின்றார்.

    வல்லிக்கண்ணன் என்ற பெயரே அல்லாமல் நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் எனப் பல புனைபெயர்களிலும் அவர் எழுதியுள்ளார். எனினும், வல்லிக்கண்ணன் என்ற பெயரே அவருக்கு நிலைத்தது.

    ஈட்டிமுனை, கோவில்களை மூடுங்கள், எப்படி உருப்படும்?, கொடு கல்தா போன்ற சமூக விழிப்புணர்வூட்டும் கட்டுரை நூல்களை கோரநாதன் என்ற பெயரில் அறச்சீற்றங் கொண்ட இளைஞனாக எழுதியவர் வல்லிக்கண்ணன்.

    ’எப்படி உருப்படும்?’ என்ற நூலில் சினிமா உலகின் இயல்பையும் அது சமூகத்தைச் சீரழிக்கும் விதத்தையும் கண்டு உள்ளங் குமுறி,

    ”இன்றைய பட முதலாளிகளுக்குக் கலை வளரவேண்டும், நாட்டுக்கு நல்லன புரியவேண்டும், மக்களின் பண்பாட்டை உயர்த்த வேண்டும் என்பதெல்லாம் நோக்கமல்ல. இவர்களுக்கு வேண்டியது பணம், படாடோப வாழ்க்கை. செலவுசெய்கிற பணத்தைவிட அதிகமான லாபம் வருகிறது; அத்தோடு ரகரகமான உருப்படிகளை, நட்சத்திரங்களை இஷ்டம்போல் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற வெறி நினைப்பு, மன அரிப்பு முதலியவைகளால் உந்தப்பட்டு சினிமாத் தொழிலில் ஈடுபட்ட முதலாளிகளே அதிகம் காணப்படுகின்றார்கள்.” என்று சினிமா எனும் மாய உலகின் நடப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார்.

    மிவாஸ்கி என்ற புனைபெயரில் வல்லிக்கண்ணன் எழுதிய ’அடியுங்கள் சாவுமணி’ என்ற நூலில்,

    ”புதுயுகம் பிறக்கவேண்டுமா?
    அடியுங்கள் சாவுமணி மக்களின் அறியாமைக்கு!
    மக்களை அடிமைகளாக்க முயல்கின்ற சுரண்டும் கும்பலுக்கு!
    மக்களின் மிருக வெறிக்கு!
    மக்களின் கண்மூடிப் பழக்கங்களுக்கு!” என்கிறார் ஆவேசமாக.

    இரஷிய இலக்கிய மேதையான மேக்ஸிம் கார்க்கியின் (Maxim Gorky) கட்டுரைகள் சிலவற்றையும், அவரின் சிறுகதைகள் சிலவற்றையும், இரஷிய இலக்கியத்தின் மற்றொரு மகத்தான ஆளுமையான லியோ டால்ஸ்டாயின் கதைகள் சிலவற்றையும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ள வல்லிக்கண்ணன், இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் இராகுல் சாங்கிருத்தியாயன், தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

    இவையல்லாமல், பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை, எழுத்தாளர்களும் பத்திரிகைகளும், வாசகர்கள் – விமர்சகர்கள், சரஸ்வதி காலம், தமிழ்ப் பத்திரிகைகள் அன்றும் இன்றும், ஊர்வலம்போன பெரிய மனுஷி, மத்தாப்பு சுந்தரி, கேட்பாரில்லை, அமர வேதனை, ஆண் சிங்கம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார் வல்லிக்கண்ணன்.

    ‘ஊர்வலம் போன பெரிய மனுஷி’ என்ற வல்லிக்கண்ணனின் சிறுகதை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புக்குரியது.

    ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற அவருடைய நூலுக்கு1978-இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. இந்நூலைத் தாம் எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்கவரும் வல்லிக்கண்ணன்,

    “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பிலான கட்டுரைகள் வரலாற்று நோக்கில் எழுதப்பட்டவையாகும். தீபம் இலக்கிய ஏட்டில் ’சரஸ்வதி காலம்’ பற்றிய கட்டுரைத் தொடரை நான் எழுதி முடித்திருந்த நேரம், அடுத்ததாக இலக்கியக் கட்டுரைத் தொடர் ஒன்றை நான் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் தீபம் இதழின் ஆசிரியர் நா. பார்த்தசாரதி.

    அதே சந்தர்ப்பத்தில் எனக்குக் கடிதம் எழுதிய இலங்கை எழுத்தாளர் கலாநிதி க. கைலாசபதி அவர்கள், ”புதுக்கவிதை பற்றி ஏதேதோ விவாதங்கள் நடைபெறுகின்றனவே; அதன் வரலாறு உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியுமே; நீங்கள் ஏன் அவ்வரலாற்றை எழுதக்கூடாது?” என்று கேட்டிருந்தார். கவிஞர் மீராவும் புதுக்கவிதைகளின் தோற்றம் அவற்றின் வளர்ச்சி குறித்து நான் எழுதவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.

    இவ்வாறு நண்பர்கள் பலர் கேட்கவே, புதுக்கவிதையின் வரலாற்றை 1972 நவம்பர் முதல் 1975 மே முடிய தீபம் இதழில் கட்டுரைத் தொடர்களாக எழுதினேன்.

    இது புதுக்கவிதையின் வரலாறுதான்; புதுக்கவிதைகள் குறித்தோ, கவிஞர்கள் குறித்தோ எழுதப்பட்ட விமர்சனமோ ஆய்வுரையோ அன்று. புதுக்கவிதைகளின் வரலாறு ஆண்டுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு இதில் எழுதப்பெற்றுள்ளது. போகிற போக்கில் ஆங்காங்கே சிற்சில இடங்களில் எனது அபிப்ராயங்களையும் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருக்கின்றேன்” என்கிறார்.

    இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பின்னர் நூலாக வெளிவந்தது.

    பாலாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் 1950ஆம் ஆண்டு வெளிவந்த ‘லைலா மஜ்னு’ என்ற படத்திற்கு வசனம் எழுதுமாறு வல்லிக்கண்ணனை அவரின் நண்பர் ஒருவர் மிகவும் வற்புறுத்தவே, அப்படத்தின் சில காட்சிகளுக்கு வசனம் எழுதியிருக்கின்றார் வல்லிக்கண்ணன். அதன்பிறகும் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், இலக்கியத்துறையில் ஈடுபடுவதிலேயே ஆர்வங் கொண்டிருந்த வல்லிக்கண்ணன் சினிமாத் துறையில் தன்னைத் தொலைக்க விரும்பாததால் அவ்வாய்ப்புகளை ஏற்கவில்லை.

    திறனாய்வாளராகவும் திகழ்ந்த வல்லிக்கண்ணன், படைப்பாளிகளைப் பாராட்டுகின்ற நேரிய அணுகுமுறையையே அதிகம் கடைப்பிடித்தார்; அதுவே அவரின் குறையாகவும் பலரால் விமர்சிக்கப்பட்டது. ”வல்லிக்கண்ணன் படைப்பாளிகளைத் தேவைக்கு அதிகமாகப் புகழ்கின்றார்; படைப்புகளின் குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்டுவதில்லை” என்ற குற்றச்சாட்டு அவர்மீது வைக்கப்பட்டது.

    அதற்கான பதிலை ஒரு நேர்காணலில் அளித்த வல்லிக்கண்ணன்,

    ”பாராட்ட வேண்டியதைப் பாராட்டாமல் தவறவிட்டதாலே, பல நல்ல காரியங்கள் வளராமலே போய்விட்டன’’ என்று மகாகவி பாரதியே சொல்லியிருக்கிறார். பொதுவாக, பாராட்ட வேண்டியதை பாராட்டுகிற மனநிலை நம்மவர்களிடம் இல்லை. வளர விரும்புகிறவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். பாராட்டு அவர்களுக்கு மகிழ்ச்சியையும், மேலும் உழைக்க உற்சாகத்தையும் வளர்வதற்கான ஊக்கத்தையும் அளிக்கும்.” என்றிருக்கின்றார்.

    உண்மையில் மிகவும் அரிதான, வியக்கத்தக்க பெருந்தன்மை இது!

    ‘வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்’ என்ற அவருடைய நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்றுள்ளது.

    ‘வாழ்க்கைச் சுவடுகள்’ என்ற தன்வரலாற்று நூலில் தம் வாழ்வின் சுவையான அனுபவங்களைப் பதிவுசெய்திருக்கின்றார் வல்லிக்கண்ணன். இந்நூல் ஓர் அரிய வரலாற்று ஆவணமாய்த் திகழ்கின்றது.

    தம் வாழ்வின் இறுதிவரை திருமணமே செய்துகொள்ளாத வல்லிக்கண்ணன், சென்னையிலும் நெல்லை இராஜவல்லிபுரத்திலுமாக மாறி மாறி வசித்துவந்தார். அவர் இராஜவல்லிபுரத்தில் தங்கியிருக்கும் காலத்தில் அவரைக் கண்டு அளவளாவிச் செல்வதற்காக அந்நாளைய இலக்கிய இளவல்களான வண்ணதாசன், வண்ணநிலவன், நம்பிராஜன், கலாப்பிரியா போன்றவர்களும், கி.ராஜநாராயணன் (கி.ரா), தீப. நடராஜன் (இரசிகமணி டி.கே.சியின் பேரன்), தஞ்சை பிரகாஷ் போன்றோரும் அடிக்கடி வந்து சென்றிருக்கின்றார்கள்.

    பல எழுத்தாளர்களுக்குப் பெயர்சூட்டிய பெருமையும் வல்லிக்கண்ணனுக்கு உண்டு. வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அப்பெயர்களைச் சூட்டியவர் வல்லிக்கண்ணனே ஆவார்!

    ”வல்லிக்கண்ணனின் முத்து விழாவின்போது அவருக்குக் கவிஞர், நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல கிரீடங்கள் சூட்டப்பட்டன. இந்த கிரீடங்கள் அனைத்திலும் கட்டுரையாளர் என்ற கிரீடமே அவர் தலைக்கேற்ற அளவில் பொருத்தமாய்ச் செய்யப்பட்ட சரியான கிரீடமாகும்” என்று குறிப்பிடும் அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்,

    ”மிக நேர்த்தியான வடிவமைப்பு, பிசிறில்லாத தெளிந்த நடை, திடீரென உரத்த குரலில் பேசாமல் கட்டுரை முழுவதையும் ஒரே தொனியில் பேசச் செய்திடும் ஆற்றல், கடும் உழைப்பைத் தந்து நம்பகமான தகவல்களைத் திரட்டித் தரும் பொறுப்புணர்ச்சி இவையெல்லாம் வல்லிக்கண்ணனுடைய  கட்டுரைகளின் பொதுத்தன்மைகள்” என்று பாராட்டுகின்றார்.

    ஆடம்பரம் என்ற சொல்லையே அறியாதவராய் மிக எளிமையாய் வாழ்ந்து காட்டியவர் வல்லிக்கண்ணன். ”ஒல்லிக்கண்ணன்” என்று அவருடைய எழுத்தாள நண்பர்கள் வேடிக்கையாய்க் குறிப்பிடும் அளவுக்கு மெலிந்த தேகம் படைத்தவர்; ஆனால், அழுத்தமான நெஞ்சுறுதி உடையவர்.

    இலக்கியத்துக்கே தம்மை முழுமையாக அர்ப்பணித்து எழுத்தையும் எழுதுகோலையுமே தெய்வங்களாய்க் கருதிவாழ்ந்த வல்லிக்கண்ணன், 2006-ஆம் ஆண்டு தம்முடைய 85ஆம் அகவையில் நிமோனியா காய்ச்சலால் மறைந்தார்.

    தற்காலக் கவிதை இலக்கியத்தின் வரலாற்றைத் தம் எழுத்துக்களால் நிலைநிறுத்திய வல்லிக்கண்ணனும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பார் சிறந்ததோர் தமிழ் ஆளுமையாய்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    https://ta.wikipedia.org/wiki/வல்லிக்கண்ணன்
    http://www.geotamil.com/pathivukal/vallikkannan_a.htm
    https://www.hindutamil.in/news/blogs/63933-10-2.html
    http://tamilonline.com/thendral/article.aspx?aid=3121

     

    Share
  • கனகவேல் காக்க!

    கனகவேல் காக்க!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே”, “கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்” என்று முருகன் அடியார்கள் தினமும் எண்ணி எண்ணியே முருகனை மனதார வழிபட்டு வருகிறார்கள்.குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று அடியார்கள் கொண்டாடிப் போற்றுகின்றார்கள். எனலாம்.  கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக முருகனே விளங்குகிறார் என்று முருகன் அடியார்கள் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். “வைதா ரையும் வாழவைப்பான் முருகன்” என்பது அவர்களது உறுதியான எண்ணமாகவும் இருக்கிறது.

    கந்தக்கடவுள் எங்களின் சொந்தக்கடவுள் என்று என்ணியே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேலை வணங்குவதே வேலை என்றும் மனத்தில் இருத்தியும் வைத்திருக்கிறோம்.வேலும் மயிலும் வேதனை போக்கிடும், சோதனை தீர்த்திடும் என்னும் நம்பிக்கை – கந்தக்கடவுளைச் சொந்தக் கடவுளாய் நினைப்பவர்களிடம் நிறைந்தே இருக்கிறது. தெய்வங்கள் பல உண் டேனும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் காட்சி தருவது கந்தக் கடவு ளேதான் என்பதை யாவரும் அகத்தில் அமர்த்தியே இருக்கிறார்கள். கரு ணைகூர் முகங்கள் ஆறு , கரங்கள் பனிரெண்டு கொண்டு , உலகுய்ய திரு மேனி கொண்ட அருள் தெய்வமாய் கந்தக்கடவுள் விளங்குகிறார்.அந்தக் கருணைக் கடல் ஏந்துவது அயில்.அவரைத் ஏந்துவதோ மயில். வேல் என்றால் “வெல்” என்பதுதான் பொருள். வெற்றியை அளிப்பதுதான் வேல். வே லைக் கரத்தில் தாங்கியதால் கந்தக்கடவுள் வேலவனாகி நிற்கின்றார். வென்று வேற்றியை உலகிலே தரக்கூடியது எது என்றால் – அது “ ஞானந் தான் “ .ஞானத்தை அறிவு என்றும் சொல்லலாம்.அறிவு என்பது செந்தமிழ்ச் சொல்லாகும்.செந்தமிழ் முருகனின் கையிலுள்ள வேல் – அறிவினது பூரணமான உருவம் என்றே சொல்லலாம்.ஆழமாய், அகலமாய் கூர்மையாய் அறிவென்பது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது முழுமை யான அறிவாக அமை யமுடியும்.முருகன் கையின் வேலும் ஆழமாயும், அகலமாயும், கூர்மையாகவுமே இருக்கிறது அல்லவா ! வேலவன் என்றால் பூரணமான அறிவின் இருப்பிடம் என்றுதான் என்ணிடத் தோன்றுகிறதல்லவா !

    வேல் என்றாலே அஃது – அஞ்ஞானத்தை அகற்றி. வினையினை வேரறுக்கும். ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாய் உருப்பெற்று நின்றவர்கள்தான் சூரபது பதுமனும் அவனின் தம்பியருமான – சிங்கமுகனும் ,தாரகனுமாம். இவர்களைச் சாய்த்தது ஞானமாகிய வேல்தான். நான் என்னும் அகங்காரம் தலையெடுத்தால் அழிவு நிச்சயம் என்பதை சூரசம்ஹாரம் வெளிப்படுத்தி நிற்கிறது. வரம் பெறலாம். அதனால் உரமும் பெறலாம். வரமும் உரமும் கிடைத்த பின்னர் அதனை அறவழியில் பயன்படுத்தாமல் – அறத்துக்குப் புறம்பான வழியிலே பயன் படுத்தினால் என்ன நேரும் என்பதையே சூரசம்ஹாரம் உணர்த்தி நிற்கிறது. கடுந்தவத்தால் பெற்ற வாழ்வும் வளமும் – தர்மத்தைத்தைத் துணையாக் காமல் இருந்த காரணத்தால் ஒழிந்தே போய்விட்டது.தர்மத்தை மதி யாது நடந்து – தலைகால் தெரியாது நடக்கும் பொழுது – அதனை தடுக்க நிச்ச யம் ஒரு சக்தி வந்தே நிற்கும். அந்தச் சக்திதான் கடவுள். அந்தக் கடவு ளாய் வேலவன் வந்தார். வேலால் வென்றார். வினைகளை ஓட் டினார்.

    வேலேந்தும் வேலவனை விளக்கும் வகையில் அமைந்ததுதான் கந்தபுராணம்.கந்தபுராணம் என்றதும் எங்கள் நினைவில் வந்து நிற்பார் நல்லை நக ர் ஆறுமுகநாவலர் பெருமான். கந்தபுராணத்தைச் சொந்தப் புராணம் என் று மனமிருத்தியவர் அவர். கோவில்கள் தோறும் கந்தபுராணத்தை பிரசங்கம் செய்து – யாவரும் அறிய வேண்டும் என்று அரும்பணியாற்றினார். கந்தனது புராணத்தை மையப்படுத்தி ” கந்தபுராண கலாசாரம் ” என்னும் சைவத் தமிழ் கலாசாரம் தோற்றம் பெற்றது மிகவும் முக்கிய விடயம் எனலாம். ஒரு கலாசாரமாக உருவாகி வருமளவுக்கு கந்தப் பெருமானின் மீதான பக்தி ஆழப்பதிந்து இருந்திருக்கிறது என்பது மனங் கொள்ளத் தக்கதேயாகும்.

    கந்தப்பெருமையை மனமெண்ணி நிற்கின்ற அடியவர்கள் “கந்தசஷ்டி விரதத்தை” வாழ்விலே பெரும் விரத மாகவே கொண்டிருக்கிறார்கள். கந்தசஷ்டி வருவதை உன்னிப்பாய் கவனித்தபடியும் இருப்பார்கள். இந்தியா, இலங்கை எங்கணும் இருக்கின்ற கந்தனது அடியார்கள் கந்தசஷ்டியைக் கண்ணுங் கருத்துமாய் கடைப்பிடித்தே வருகிறார்கள். கந்தசஷ்டி என்றதும் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நல்லைக் கந்தனே வந்து நிற்பார். நல்லைக்கந்தன் சன்னிதானத்தில் பல அடியார்கள் கந்தசஷ்டி காலங்களில் கந்தனின் பூசையினைக் கண்டு அங்கு கொடுக்கும் தீர்த்தத்தை மட்டுமே பருகி – ஆறு தினங்களுமே எதுவுமே சாப்பிடாமல் விரதம் அனுட்டிப்பார்கள் என்பது முக்கியமாகும். நல்லூர் வரமுடியாத அடியார்கள் தங்கள் வீட்டிலேயே கடும் விரதமாய் இருப்பார்கள் – இன்றும் பலர் விரதத்தை விடாமல் அனுட்டிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். யாழ்ப்பாண த்தில் பலர் பல வருடங்களாகவே இடை விடாது தொடர்ந்து கந்தசஷ்டி யைக் கடைப்பிடித்து வருகிறார்கள் என்பதும் மனங்கொள்ளத் தக்கதேயாகும். நீரை மட்டும் அருந்துவார் சிலர்.மாலையில் பாலை மட்டும் பருகு வார் சிலர்.பாலையும், ஒரு பழத்தையும் மாலையில் எடுப்பாரும் இருக்கி றார்கள். முதியவர்கள் மட்டுமன்றி – இளைஞர்களும் கூட கந்தசஷ்டியை பக்தி பூர்வமாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதேயா கும்.

    கந்தசஷ்டி நோற்கும் காலங்களில் யாவருமே கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்வார்கள். கோவில்களில்களில் விரதமிருக்க அடியார்கள் யாவரும் ஒன்று சேர்ந்து பாடுவதற்கு வசதியாக – கந்தசஷ்டி கவசத்தை ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பும் வழக்கம் இடம்பெற்றும் வருகிரது. கந்தசஷ்டி கவசத்தை மனனம் செய்யாமல் இருப்பவர்களுக்கு இப்படிச் செய்வது மிகவும் பொருத்தமாய் அமைகிறது. ஆனால் பெரும்பாலனவர்கள் கந்தசஷ்டி கவசத்தை மனப்பாடம் செய்தே வைத்திருப்பார்கள். கந்தப் பெருமானை மனமெண்ணிப்பாடும்பொழுது அப்பாடல் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறந்த பாதுகாப்புக் கவசமாய் அமைகிறது என்பதால்தான் அப்பக்தி துதிக்கு “கந்தசஷ்டி கவசம்” என்று பெயர் அமைந்ததோ என எண்ணிடத் தோன்றுகிறது.

    கந்தசஷ்டி கவசம் இலகுவான மொழிநடையில் அமைந்திருக்கிறது. இசையுடன் பாடவும் பொருத்தமாய் அமைந்திருக்கிறது.கந்தசஷ்டி கவசத்தை பலரும் மனப்பாடம் செய்து வைத்திருந்தாலும் அதில் பொதிந்திருக்கும் தத்துவத்தை பெருதும் கண்டு கொள்ளுவதே இல்லை. கந்தசஷ்டி கவசத்தை உன்னிப்பாய் கவனித்தால் அதில் பொதிந்திருக்கும் பொக்கிஷ ங்களைக் கண்டு கொள்ளலாம். அவற்றை மனமிருத்துதல் வாழ்க்கைக்கு அவசியமாகும். பக்திப்பாடல்கள் பாடப்படுவதால் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. சாதாரண பாடல்களும் தருகின்ற இன்பம் வேறு. அப்பாடல்களினால் ஏற்படும் உளநலம் வேறு. சாதாரண பாடல்கள் பார்க்கும் பார்வை வேறு. பக்திப்பாடல்கள் பார்க்கும் பார்வை வேறு. அந்த வகையில் கந்தசஷ்டி கவசம் தருகின்ற கருக்கள் உடலையும், உள்ளத்தையும் தூய் மையாக்கவும், உறுதிப்படுத்தவும், நல்லுணர்வுகளை ஏற்படுத்தவும் உறு துணையாகி நிற்கின்றன என்பதை யாவரும் மனமிருத்துதல் அவசியமாகும்.

    நீறிடுநெற்றியும் நீண்ட புருவமும்                                                                    
    பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்                                                                
    நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்                                                                                            
     ஈராறு செவியில் இலகு குண்டலமும்                                                                                                             
    ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்                                                                                                       
    பல்பூஷணமும் பதக்கமும் தரித்து                                                                                             
    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்                                                                                                 
    முப்புரி நூலும் முத்தணி மார்பும்                                                                                            
    செப்பழகுடைய திருவயிறு உந்தியும்                                                                                                      
    துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்                                                                                                          
    நவரத்னம் பதித்த நற்சீராவும்                                                                                         
    இருதொடையழகும் இணை முழந்தாளும்                                                                                         
    திருவடியதனில் சிலம்பொலி முழங்க

    என்று. கந்தப்பெருமானைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி விட்டுத்தான் கந்தசஷ்டிகவசம் தன்னுடைய தத்துவங்களைத் தந்து நிற்கிறது. போர்புரிபவர்கள் எதிரியிடமிருந்து வருகின்ற படைக்கலங்களின் பாதிப்பி லிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அணிவதுதான் “கவசம்”. அது சாதாரண கவசம். இதுவோ “கந்தசஷ்டி கவசம்”. அகப்பகை, புறப்பகை எதுவுமே எம்மைத் தாக்கிடா வண்ணம் காத்திடவல்லதாகும். கந்தனது வேல் ஞானத்தின் பேருவம். அந்த ஞானத்தின் துணைமட்டும் வாய்த்து விட்டால் வந்தவினையும், வருகின்ற வல்வினையும் – வந்தவழியே ஓடி ஒழிந்தே விடும். 

    அடியேன் வதனம் அழகுவேல் காக்க                                                                                     
    பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க                                                                            
    கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க                                                                                            
    விதிசெவி இரண்டும் வேலவர் காக்க                                                                                                 
    நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க                                                                                                    
    பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க                                                                                            
    முப்பத் திருபல் முனைவேல் காக்க                                                                                                  
    செப்பிய நாவைச் செவ்வேல் காக்க                                                                                                      
    கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க                                                                                            
    என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க                                                                                     
    மார்பை இரத்தின வடிவேல் காக்க                                                                                    
    சேரிள முலைமார் திருவேல் காக்க                                                                                                                     
    வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க                                                                                               
    பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க                                                                                         
    அழகுடன் முதுகை அருள்வேல் காக்க                                                           
    பழுபதினாறும் பருவேல் காக்க                         
    வெற்றிவேல், வயிற்றை விளங்குவேல் காக்க                                                                                                 
    சிற்றிடைய அழகுறச் செவ்வேல் காக்க                                                                                                 
    நாணாங் கயிற்றை நல்வேல் காக்க                                                                                                            
    ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க                                                                             
    பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க                                                                                                    
    வட்டக் குதத்தை வல்வேல் காக்க                                                                         
    பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க                                                                          
    கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க                                                                      
    ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க                                                                                    
    கைகள் இரண்டும் கருணைவேல் காக்க                                                                     
    முன்கை இரண்டும் முரண்வேல் காக்க                                                                                      
    பின் கை இரண்டும் பின்னவள் இருக்க                                                                                                    
    நாவில் சரஸ்வதி நற்றுணையாக                                                                                                             
    நாபிக் கமலம் நல்வேல் காக்க                                                                                                          
    முப்பால் நாடியை முனைவேல் காக்க                                                                                 
    எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க                                                                                     
    அடியேன் வதனம் அசைவுள நேரம்                                                                                                  
    கடுகவே வந்து கனகவேல் காக்க                                                                                              
    வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க                                                                    
    அரையிருள் தன்னில் அனையவேல் காக்க                                                                                         
    ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க                                                                                                         
    தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க                                                                                                                       
    காக்க காக்க கனகவேல் காக்க    

    எத்தனை வேல்கள்! அத்தனை வேல்களும் பெறும் பெயர்களல்ல. எத்தகைய கொடிய பகைகளைகளையும் எம்மிடத்து வாராமல் காத்து நிற்கும் கருணைநிறை வேல்கள்! நம்மை என்றுமே வாழ்வில் காத்துமே நிற்கும் என்னும் நம்பிக்கையை நம்மனத்தில் ஊன்றும் வகையில் கந்த சஷ்டி கவசம் அமைந்திருக்கிறதல்லவா! எங்களது உடம்பில் உள்ள அத்தனை பகுதிகளும் எந்தவிதமான பாதிப்பும் இன்றிக் காக்கப்பட வேண்டும் என்று – அந்த வேலவனிடம் வேண்டுகோள் விடுக்கும் முறையும் கந்த சஷ்டி கவசத்தின் சிறப்பாக அமைகிறது அல்லவா! உடம்பின் ஒவ்வொரு பாகமும் காக்கப்பட வேண்டும் என்னும் சிந்தனையும், அந்தச் சிந்தனையை வெளிப்படுத்தும் பாடல்களின் வரிகளும், பாடல் வரிகளின் நிறைவில் “காக்க” என்று அமைவதும் – உள்ளத்தை நலப்படுத்துகிறது, உடலை நலப்படுத்துகிறது. “காக்க” என்பதும் சிறந்த மந்திரமாய் அமைகிறதல்லவா! இந்த வரிகளைப் பாடும்பொழுது – தியானத்தில் இருப்பதுபோன்ற ஒரு உணர்வு நம்முள் ஏற்படுகிறது அல்லவா! திரும்பத் திரும்ப இந்த வரிகளை வாய் உச்சரிக்க – எம்மை அறியாமலேயே எம்முள் ஒரு சக்தி உட்புகுவதை நாம் அனுபவித்தால் அறி வோம். பில்லி, சூனியம், பெரும்பகை, வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற்படுத்தும் அடங்கா முனி, பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனி, கொள்ளிவாய்ப் பேய்கள், குறளைப் பேய்கள் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர், அத்தனையும் கந்தசஷ்டி கவசத்தின் ஒலி கேட்டவுடன் உருக் குலைந்தே போய்விடும் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். பில்லி , சூனியம் என்பது இன்றும் கிராமப்புற மக்களின் மனதில் குடியிருக்கும் பயமாகும். நவநாகரிகத்தில் இவை மூட நம்பிக்கையாய் இருக்கலாம். ஆனால் – பில்லி  சூனியம் என்பதை “எம்மை விடாது பிணித்தி ருக்கும் கொடியவினை” என்று கருதிவிட்டால் கருத்து மனம் அமரும் அல்லவா!

    புலியும் ,நரியும் ,புன்னரி நாயும், எலியும் கரடியும்,கிட்டவராது ஓடிவிடும். தேளும், பாம்பும், செய்யான், பூரான், கடிப்பதால் வரும் விஷங்களும், அதனால் ஏற்படும் கடித்துயரங்களும் இறங்கிவிடும். அதுமட்டுமட்டமல்ல ஒளிப்பும், சுளுக்கும், ஒரு தலை நோயும், வாதம் சயித்தியம், வலிப்பு, பித்தம், சூலை, சயம், குன்மம், சொக்குச் சிரங்கு குடைச்சல், சிலந்தி, குடல்விப் பிரிதி, பக்கப் பிளவை, படர் தொடை வாழை, கடுவன் படுவன், கைத்தாள் சிலந்தி, பற்குத்து அரணை, பருஅரை யாப்பும், ஆகிய பிணிகள் எல்லாம் எம்மை விட்டு அகன்றே விடும் என்று கந்தச்சஷ்டி கவசம் – வாழ்வியலுக்குப் பெருந்துணையினை வழங்கி நிற் கிறது.எங்களுக்கு வருகின்ற நோய்கள் அத்தனையும் வரிசைப் படுத்திக் காட்டியிருக்கும் பாங்கினை வியக்காமல் இருந்திடவே முடியாது. அதும ட்டுமல்ல விஷங்களைக் கொட்டி உயிராபத்தை தருகின்ற அத்தனை ஜந் துக்களின் பெயர்களையும் வரிசைப்படுத்தி பாங்கு – ஒரு சிறந்த விஷக்கடி வல்லுனரையே மனத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது எனலாம்.   

    எங்களுக்கு மனத்துயரங்கள், ஆபத்துகள், ஏற்படுகின்ற தருணத்தில், எங்கள் உறவுகள் நோயினால் அல்லது வேறு துன்பத்தால் அல்லல்படுகின்ற வேளையில் எல்லாம் நாங்கள் “கந்தசஷ்டி கவசத்தை” சொல்லியபடி இருப்போம். அப்படி நாங்கள் இருப்பதற்கு அடிப்படையே – ஆபத்திலிருந்து அல்லலிருந்து நிச்சயம் காப்பாற்றப்பட்டுவிடலாம் என்னும் அசையாத நம்பிக்கையே எனலாம். இன்றும் இதனைப் பலரும் செய்கிறார்கள், செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம். இதனை வலியுறுத்தி, மனத்தில் நல்ல நம்பிக்கை தரும் வகையில் கந்தசஷ்டி கவசத்தின் முதல் துதியே உறுதி பயந்து நிற்பது ஐயத்தைப்போக்கி அணைப்பதாய் அமைகிறதல்லவா!

    “துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
    பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
    நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
    சஷ்டி கவசம் தனை”

    கந்தசஷ்டி கவசத்தை ஓதுங்கள் ! ஓதியபடி இருங்கள் என்பதற்குச் சான்றாக வருகின்ற இக்கருவினை மனமிருத்தல் அவசியமேயாகும்.

    காசினியிற் றுன்பகலக் கந்தனருள் பெற்றுயர
    மாசில்லாச் சீரெய்த மாமனையும் – பேசுதிரு
    காதலரும் பெற்றுவக்க கந்தர் கவசத்தை
    ஓத வெவரும் உவந்து

    நிறைவில் எல்லாவற்றையும் அளிக்கின்ற வேலினை வணங்குவோம். அந்த வேலினைக் கையேந்தும் வேலவ்னையும் வணங்குவோம்.கந்தசஷ்டி கந்தனை மனமிருத்தும்.கந்தனை அருகழைக்கும் !

    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
    தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் – வாரி
    குளித்தவேலி கொற்றவேல் சூர்மார்புங் குன்றக்
    துளைத்தவே லுண்டே துணை

    Share
  • வ.உ.சி.யின் மொழிபெயர்ப்புகளும் உரைகளும்

    வ.உ.சி.யின் மொழிபெயர்ப்புகளும் உரைகளும்

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப்பேராசிரியர்
    அரிய கையெழுத்துச்சுவடித்துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

    வ.உ.சி. என்றவுடன் கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் போன்றவையே மனதினில் எழும். காரணம் அவரின் சுதந்திரப் போராட்டங்கள் நினைக்கப்படும் அளவிற்கு இலக்கியப் பங்களிப்புகள் மனதினில் எழுவது இல்லை. ஏன் அதிகம் அறியப்படவே இல்லை. இலக்கணப் புலமை மிக்க வ.உ.சி. கட்டுரை, பதிப்பு, உரை, படைப்பாக்கம் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் தடம் பதித்தவர்.  தமது சுயசரிதையைச் செய்யுளில் படைத்தவர். அவரின் ஆக்கங்களுள் அவரின் மொழிபெயர்ப்புகளுக்கும், உரைகளுக்கும்  தனி இடம் உண்டு.  அவற்றைக் குறித்து இப்போது பார்க்கலாம்.

    மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரையில் அவரின் நிறைவான பெயர்ப்புகளாக நமக்குக் கிடைப்பன  நான்கு நூல்கள்.  நான்குமே ஜேம்ஸ் ஆலன் உடைய ஆங்கில நூல்கள். இவருடைய முதல் மொழிபெயர்ப்பு பணி சிறைச்சாலையில் தான் தொடங்கி உள்ளது.  ஜேம்ஸ் ஆலனின் As a Man Thinketh எனும் நூலை மனம்போல் வாழ்வு என்று 1908 இல் மொழிபெயர்த்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே 1905 லேயே ஜேம்ஸ் ஆலனுடைய நூல்களை மொழிபெயர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வ.உ.சி.க்கு இருந்ததாம். ஆனால் அவ்வெண்ணம் 1908இல் அவர்  சிறையில்  இருந்தபோது தான் நிறைவேறியுள்ளது.

    சிறைச்சாலையில் கடுமையான தண்டனைப் பெற்றுவந்த அவருக்குச் சிறிது காலம் சிறிய மாற்றம் ஏற்பட்டது.  அது பற்றி அவரது சுயசரிதையில்

    “திங்கள் ஒன்றில் சென்னை ஐக்கோர்ட்டில்
    செய்த அப்பீலில் திருத்தமும் ஒழுக்கமும்
    தேசாபிமானமும் சேர்ந்த நல் ஜட்ஜ் சங்கரநாயர் தகுதியில் – பின்னியின்
    தீர்ப்பினை சஸ்பெண்டு செய்து அறிவித்தார்
    தொலைந்தது வேலை – சொந்த உணவும்
    சொந்த உடையும், சொந்த படுக்கையும்
    வந்தன.  கொண்டவை மகிழ்வுடன் இருந்தேன்”

    என்று எழுதியிருக்கிறார்.

    சங்கர நாயர் என்கிற ஓர் இந்தியர் அந்த காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்ததால் தான் தளர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.  நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பிற்கு இடைக்காலத்தடை விதித்ததாலேயே சிறிது தப்ப முடிந்தது வ.உ.சிக்கு. இதனால் பிற கடும் குற்றங்கள் புரிந்த கிரிமினல் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவதிலேயிருந்து கொஞ்சம் காலம் விலக்கு கிடைக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தான் வ.உ.சி.யால் சிறைக்குள்ளே படிக்கவும் எழுதவும் முடிந்திருக்கிறது. அவர் ஜேம்ஸ் ஆலனுடைய நூல்களை மட்டுமே மொழிபெயர்த்திருப்பதற்கான காரணம் – அதாவது அந்த ஈர்ப்புக்கான காரணம் சிந்திக்கத்தக்கது. வ.உ.சி. ஆங்கிலேய விதேசி அரசுக்கு எதிராகப் போராடியவர். சுதேச சிந்தனையாளர்.  அவரது  ஈர்ப்புக்குக்  காரணம் ஜேம்ஸ் ஆலனின் கருத்தியல்தான். ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கைச் சுருக்கத்தையும் மொழிபெயர்த்துள்ளார்.

    இந்த ஜேம்ஸ் ஆலன், இங்கிலாந்தில் 1864இல் பிறந்தவர். இளம் வயதிலேயே அதிபுத்திசாலியாக இருந்தவர். வாலிப வயதிலேயே தந்தையை இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்றவர்.

    ஆங்கிலேயராக இருந்தாலும் புலால் மாமிச உணவுகளை உண்பதில்லை மது அருந்துவதில்லை.  இது போன்ற பழக்கங்கள் இல்லாதவராக இருந்தாராம். நாம் “ஆசிய ஜோதி” என்று சொல்கிற ‘The Light of Asia’  நூலை   அவர் படித்த பின்னரே மெய்யுணர்வு அவரக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார். நமது பாரத தேச நூல்கள் மீதும், மெய்யியல் அதாவது தத்துவவியல் மீதும் அளவுக்கு அதிகமான ஈர்ப்பு இருந்துள்ளது. “கீழ்நாட்டரே மெய்ஞ்ஞான கருவூலம்” என்பதாக அடிக்கடி ஜேம்ஸ் ஆலன் கூறுவாராம்.  வ.உ.சி. இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “அவர் வாக்கின்று வந்த ஒவ்வொரு வார்த்தையிலும் நமது நாட்டு நீதியும்  மதக் கோட்பாடும் கலந்திருக்கும்.” என்கிறார்.

    இவை எல்லாம், வ.உ.சி.க்கு ஜேம்ஸ் ஆலனின் படைப்புகள் மேல் ஈர்ப்பு வர காரணமாக இருக்கலாம்.

    1908இல் “As a Man Thinketh-“ மனம் போல் வாழ்வு என்கிற முதல் மொழிபெயர்ப்பு நூல் எழுதப்பட்டுள்ளது  இது “ வ.உ.சி.யின் நண்பர் சுவாமி வள்ளிநாயகம் அவர்களால் 1909இல் வெளியிடப்பட்டுள்ளது.  இதன் ஐந்தாம் பதிப்பு 1938இல் வெளிவந்துள்ளது. அதன் வெளியீட்டாளர் தூத்துக்குடி விக்டோரியா பிரிண்டிங் பிரஸ்சார் ஆவார்.

    இந்த நூலின் உடைய மொழிபெயர்ப்பானது சரியான ஆக்கம், அதாவது முறையான மொழியாக்கம் என்று சொல்லலாம். மொழிப்பெயர்ப்புகளில் ஏராளமான சிக்கல்கள் உண்டு. அதில் ஒன்று செய்யுள்களை மொழியாக்கம் செய்வது. தமது மொழியாக்கத்தைக் குறித்து வ.உ.சி. சொல்லும்போது, “இதனை முதனூற்குச் சற்றேற குறையச் சரியான மொழிபெயர்ப்பென்றே சொல்லலாம்; முதனூலில் மேற்கோளாகக் காட்டியுள்ள சொற்கள் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளன அத்தனை அடிகளில் தமிழ்ச் செய்யுள்களை அமைத்துள்ளேன்.

    மற்றைய உரை மேற்கோள்களுக்கு மேற்கோள் அடையாளங்கள் இட்டுள்ளேன். ஆயினும் சில இடங்களில் முதனூலாசிரியரது கருத்துகளை நன்கு விளக்குதற் பொருட்டுச் சிற்சில சொற்களைக் கூட்டியும் குறைத்தும் மொழி பெயர்த்திருக்கிறேன். “ அன்றியும், “கற்க கசடறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக”, என்றபடி, இந்நூலின் அரிய பொருள்களைத் தமிழுலகம் நன்குணர்ந்து கைக்கொண்டொழுகுதல் வேண்டும் என்ற எண்ணமே என் மனதின் கண் முற்பட்டு நின்றமையின், நமது நாட்டில் மிகுதியாக வழங்கும் வடமொழிகளை இதில் மிகுதியாக உபயோகித்திருக்கிறேன்.” என்கிறார்.  இதிலிருந்து செய்யுள்களை அதன் தன்மை மாறாமல் உள்ளது உள்ளபடி அமையுமாறு மொழி ஆக்கம் செய்யும் ஆற்றல் கைவரப் பெற்றவராக வ.உ.சி. இருந்துள்ளதை அறியமுடிகிறது.  மக்கள் வழக்கில் பயன்படுத்தும் சொற்களையே பயன்படுத்த வேண்டும்.  அவையே அவர்களின் புரிலுக்கு மிகவும் பயனுடையதாக அமையும் என்ற எண்ணம் உடையவராகவும் இருந்துள்ளார். மனிதனின் எண்ணங்களே அவனுடைய வாழ்வை வடிவமைக்கிறது என்ற கருத்தை அடிநாதமாகக் கொண்ட நூலாக இது உள்ளது.

    அடுத்ததாக அவர் மொழிபெயர்த்த நூல், Out from the Heart என்ற ஆங்கில நூல் அதற்கு அகமே புறம் என்று பெயரிட்டுள்ளார்.  இது நூலாக வெளிவந்தது 1914 இல்.

    இதில் இடம் பெற்றுள்ள முதல் மூன்று கட்டுரைகள் சுப்பிரமணிய சிவம் நடத்திய ஞானபாநு இதழில் வெளிவந்தவை. அகமும் வாழ்வும் – ஆகஸ்ட் 1913, மனதின் தன்மையும் வன்மையும் – செப்,1913, சுபாவத்தை ஏற்படுத்துதல் – அக்.1913 ஆகிய ஞானபானுவில் வெளிவந்த கட்டுரைகளை நூலின் தொடக்கமாக அப்படியே அமைத்துள்ளார்.  1916 இல் சென்னை புரோகிராம் பிரஸ் மூலம் அதன் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது. நூலின் முக உரையில் வ.உ.சி. மூல நூலில் உள்ள ஒரு அத்தியாயத்தை நான்கு சிறிய அத்தியாயங்களாகப் புரிதற்பொருட்டு அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்

    மிக மிக எளிய நடையில் இந்த நூல் அமைந்துள்ளது.  அதன் ஒரு பகுதியாகத்தான் அத்தியாயங்களைப்  பிரித்துக் கொடுத்திருக்கலாம். ஒழுக்கத்தை மிக உயர்ந்ததாக எடுத்துரைப்பதாக இந்த நூல் உள்ளது.

    மூன்றாகப் பகுத்துத் தந்துள்ள உயர்தர வாழ்வு என்ற தலைப்பு (முதல் பாடம் / இரண்டாம் பாடம் / மூன்றாம் பாடம்) முழுவதுமே இந்த ஒழுக்கம் பற்றியதுதான். இதிலிருந்தே ஒழுங்கமைந்த வாழ்வை வ.உ.சி. மிகவும் நேசித்துள்ளது விரும்பியுள்ளது தெரிகிறது.

    முதற்பகுதியில் மனதை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகக் குறிப்பிடுகிறார்.  அதன் முதல் சாதனம் சோம்பலை ஒழிப்பது என்கிறார். உணவுக் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தின் பாற்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.  இப்படியேதான் இரண்டாம் பாடம், மூன்றாம் பாடம் ஆகியவற்றிலும் ஒழுக்கத்தின் உயர்வுகளையே சொல்லி செல்கிறார். உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் தான் அழகு.

    அவர் மொழிபெயர்த்த நூல்களில் மூன்றாவது நூலாகக் கிடைக்கப் பெறுவது, வலிமைக்கு மார்க்கம் என்கிற நூல்.

    ஜேம்ஸ் ஆலன் எழுதிய “From Poverty to Power” என்ற நூலின் முதல் பகுதி  The Path of Prosperity  என்பது.  அதனை மட்டும் 1916இல் வலிமைக்கு மார்க்கம் என்பதாக ஆக்கித் தந்தவர் நம்முடைய வ.உ.சி. இந்த பெயர்ப்பின் சில இடங்களில் தழுவுதல் தன்மை இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். இதனைப் பாயிரம் பகுதியில் வ.உ.சி. சொல்லியிருப்பதில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

    “மூல நூலின் ஐந்தாவது அதிகாரத்தின் தொடக்கத்தில் கண்ட ஆங்கிலக் கதையை நம்மவரில் பெரும்பாலார் கேட்டிருக்க மாட்டாராதலால் அக்கதையின் பெயரினை இந்நூலில் குறிப்பதால் பயனில்லையென்று கருதி அதற்குப் பதிலாகப் பாரதக் கதை என்று குறித்துள்ளேன்.

    முதல் நூலின் கருத்துகளை நம்மவர்கள் எளிதில் உணருமாறு சிற்சில இடங்களில், சில சொற்களைக் சேர்த்தும் சில சொற்களை விடுத்தும் இம் மொழிபெயர்ப்பைச் செய்துள்ளேன்”. என்று பாயிரப் பகுதியில் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார்.

    நூலில் வலிமைக்கு உரிய, உயரிய வழியாக அவர் சொல்வது நீதி நெறியில் இருந்து தவறாது நடந்து கொள்வதுதான். “நீதி மார்க்கத்தை விட்டு விலகினவர் போட்டி தம்மைப் பாதிக்காதபடி தம்மைக் காத்துக் கொள்வதற்காக எண்ணிறந்த முயற்சிகள் செய்கின்றனர்.

    நீதி மார்க்கத்தில் நடக்கின்றவர் போட்டியில் தம்மைக் காப்பதற்காக முயற்சிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்பன போன்ற அற வாழ்வை எடுத்துச் சொல்லி அதுவே வலிமைக்கான மார்க்கம் என்று வலியுறுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.

    சாந்திக்கு மார்க்கம் என்கிற மொழிபெயர்ப்பு நூல் 1939இல் வெளிவந்துள்ளது.  ஜேம்ஸ் ஆலனின்  The Way of Peace  என்ற நூலின் மொழியாக்கம் இது.

    நமது பாரத தேசம் அன்பு மயமான வாழ்வைப் போதிப்பதில் உயர்ந்த இடத்தில் உள்ளது.  அன்பின் வழியது உயிர்நிலை என்போம்  அத்தகைய அன்பு மயமான வாழ்க்கைக்குரிய பல்வேறு வழிகளைப் பல கோணங்களில் எடுத்துரைப்பதாக இந்த நூல் உள்ளது. மனதுள் சுழலும் நமது எண்ணங்கள் நமது எதிர் காலத்தை வடிவமைக்கும் என்பதை எளிமையாக எடுத்துரைக்கிறார்.

    முதல் அத்தியாயமான தியான வலிமை தலைப்பில், “நீங்கள் எதனைப் பற்றி அடிக்கடி ஆழ்ந்து நினைக்கின்றீர்களோ, வேலையற்ற நேரங்களில் எதனிடத்தில் உங்கள் ஆத்மா இயற்கையாகச் செல்கிறதோ அதனை எனக்குச் சொல்லுங்கள்; நீங்கள் எந்தத் துன்ப இடத்திற்கு அல்லது இன்ப இடத்திற்குச் சென்று கொண்டு இருக்கிறீர்களா? நீங்கள் தெய்வ வடிவாகவோ? அல்லது மிருக வடிவாகவா? வளர்ந்துகொண்டு இருக்கிறீர்களா? என்று உங்களுக்கு நான் சொல்லுகிறேன், என்பதாகக் குறிப்பிடுகிறார் இப்படி வாழ்வியல் எதார்த்தத்தை எளிமையாகப் புரியும் வகையில் தந்துள்ளது உண்மையிலேயே சிறப்பு.

    அனைத்து மொழிபெயர்ப்புகளிலுமே எளிய நடையில் கருத்துகளை வாசகர்களின் புரிதலுக்குக் கொண்டு செல்லும் பாங்கினைப் பார்க்க முடிகிறது.  நுட்பமான பகுதிகளையும் சுவை குன்றாமல் நல்லதொரு யதார்த்த நடையில் கொண்டு செல்வதில் வ.உ.சி. வெற்றியடைந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

    அடுத்ததாக வ.உ.சி.யின் உரைகள் குறித்துப் பார்க்கலாம் உரை நூல்கள் என வரும் போது திருக்குறள்,  இன்னிலை, சிவஞான போதம் ஆகிய நூல்களுக்கு அவர் உரை எழுதியுள்ளார்.

    திருக்குறளைப் பொறுத்தவரையில் திருக்குறள் முழுமைக்கும் வ.உ.சி. உரை கண்டுள்ளார். இருந்தாலும் திருக்குறள் அறத்துப் பாலை மட்டுமே அவர் நேரடியாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இன்று அவரின் திருக்குறளுக்கான முழு உரையும் கிடைத்துள்ளது அவரது அறத்துப்பால் விருத்தியுரை 1935ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.  ஆனால் 1917 இல் திருக்குறள் மணக்குடவர் உரையைத் தந்தவர் இவர்.  தனியாக இவர் உரை கொடுப்பதற்கான காரணம் குறித்து அவரின் சிவஞான போதம் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    திருக்குறள், சிவஞான போதம், கைவல்ய நவநீதம் என்னும் நூல்கள் முறையே நீதி நூல்களிலும், சித்தாந்த நூல்களிலும், வேதாந்த நூல்களிலும் ஒப்புயர்வற்றவை என்பது வ.உ.சி.யின் கருத்து.

    இவற்றுள் திருக்குறள், சிவஞான போதம் இரண்டின் உரைகளும் கடின நடையில் அக்காலத்தில் இருந்ததாம். அதனால் அவற்றை எளிமைப்படுத்த எண்ணியே வ.உ.சி. எளிய நடையில் உரை வழங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

    வ.உ.சி., திருக்குறளை மூன்று பால்களாகவே பகுத்திருந்தாலும் இயல் அமைப்பில் சில வேறுபாடுகளைச் செய்துள்ளார்.  அதிகார அமைப்பு, அதிகாரப் பெயர், குறள் வைப்பு முறை  ஆகியவற்றிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்.  குறள்களுக்கு நேரடியாக எளிய விளக்கங்கள் தந்துள்ளது.  முக்கியமாக இலக்கணக் குறிப்புகள் தந்துள்ளது போன்றவற்றால் வ.உ.சி.யின் உரை மேலும் சிறப்பு பெறுகிறது.

    இதை போன்றே வ.உ.சி.யின் சிவஞான போத உரைகளுக்கும் தனிச் சிறப்பு உண்டு.  இதன் ஒவ்வொரு நூற்பாவின் சாரத்தையும் அதனதன் தலைப்பாகக் குறிப்பிடுகிறார்.  பாடலின் பொருளையும் பொருள் எனத் தலைப்பிட்டு எளிய நடையில் கொடுத்துள்ளார்.  இதன் மூலம் ஒருங்கிணைத்து எளிதில் புரிந்துகொள்ள வகை செய்துள்ளார் வ.உ.சி.

    செய்யுள் முதற் குறிப்பகராதி, அரும்பத அகராதி, உரை மேற்கோள் அகராதி ஆகியவற்றோடு இந்நூலை வ.உ.சி. கொடுத்திருப்பது சிறப்புக்குரியது.

    பொய்கையார் எழுதியுள்ள பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இன்னிலை நூலுக்கு வ.உ.சி. வழங்கியுள்ள உரையும் சிறப்புடையது.  இதில் பொய்கையார் குறித்த பெரும் ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் அவர் கொடுத்துள்ளார்.

    நாலாயிரத் திவ்யபிரபந்தத்தில் இடம் பெறும் ஆழ்வார் பொய்கையார், களவழி, புறநானூறு ஆகியவற்றில் வரும் பொய்கையார் ஆகியோரோடு இன்னிலை ஆசிரியர் பொய்கையாரையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறார்.

    பொய்கையார் என்கிற பெயரில் இடம் பெறும் அனைவரும் ஒரே புலவர்தான் என ஏற்றுக் கொள்ள இயலாது என்பதே வ.உ.சி.யின் கருத்து. அதேநேரம் ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான பொய்கையாரே இன்னிலையையும் இயற்றியிருக்க வேண்டும் என்கிறார்.

    மொத்தத்தில் மொழிபெயர்ப்பு, உரை ஆகிய இரண்டு தளங்களிலும் வ.உ.சி.யின் பங்கு குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக வ.உ.சி மொழிபெயர்த்துள்ள ஜேம்ஸ் ஆலனின் வாழ்வியல் படைப்புகள் தமிழில் தோன்றியுள்ள தன்னம்பிக்கை, சுய முன்னேற்ற நூல்களுக்கெல்லாம் முன்னோடி எனலாம்.

    Share
  • இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி

    இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி

    India Has Successfully Tested Its First 3,000-Mile Ballistic Missile

    இந்தியாவின் தூர நீட்சி கட்டளை வெடிகணை முதற் சோதனை வெற்றி

    2021 அக்டோபர் 28 இல் இந்தியா முதன்முதல் செய்த 3000 மைல் தூர நீட்சி அக்கினி -5 வெடிகணைச் சோதனை வெற்றி, ஆசியாவில் இந்தியா சைனா போன்ற நாட்டின் எந்த நகரையும் துல்லியமாகத் தாக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டியது ஆனால் இந்தியா முதன்முதல் அக்கினி-5 வெடிகணையை பகை நாட்டின் [NO FIRST USE] மீது ஏவாது. மேஜர் கௌரவ், அக்கினி-5 மிக்க ஆற்றல் கொண்ட வெடி ஆயுதம். அணு குண்டையும் ஏந்திச் செல்லும் தகுதி உடையது. தணிந்த ஆற்றல் [620-1242 miles] [1000-2000 km] கொண்ட வெடி கணை அக்கினி-பிரைம் சோதனை செய்யப் பட்டது. சைனா 2021 ஆகஸ்டு மாதம் தனது ஹைபர்சானிக் ஆயுதத்தைச் சோதனை செய்து பூமியை ஒருமுறை சுற்றி, குறிக்கோளை 24 மைல் தூரத் துல்லிமத்தில் தாக்கியது.

    India’s long-range ballistic missile adds a strategic piece amid growing US-China tensions.

    India successfully test-launched on October 28, 2021 its first ballistic missile, the Agni-5, at roughly 10:20 AM EDT, using a three-stage solid-fueled engine that can fire nuclear payloads up to 3,000 miles with an extremely high level of accuracy, according to an initial report from  Republic World, an India-based news service.

    On the world stage, this weapon isn’t new, but it represents a major advancement for India, and fundamentally alters the balance of power in the region amid mounting tensions between major worldwide powers.

    The test of Agni-5 is part of India’s central defense policy to have “credible minimum deterrence” to maintain its commitment to “No First Use”, according to the report. The country’s first long-range intercontinental ballistic missile was developed by the Defense Research and Development Organization (DRDO), and can target any location in China, and even reach as far as Europe. Major Gaurav Arya of India’s military forces said Agni-5 can actively deter China’s strategic plans. “This missile has nothing to do with Pakistan, it does not even consider Pakistan as a possible landing target,” he said. “This is an aim at China, which is very important.”

    Arya also said that once Agni-5 is inducted for real-world service, it will serve as a powerful symbolic piece on the board against China’s government, according to the report. “We can hit you whenever we want, wherever we want inside Mainland China,” he said. This comes on the heels of another recent success of the DRDO’s Indigenous Technology Cruise Missile (ITCM), fired off the Odisha coast. Earlier, in July, India also test-fired its New Generation Akash Missile (Akash-NG), which is a surface-to-air missile system that can reach 37 miles (60 km). Other recently developed weapons from the DRDO include the Man-Portable Anti Tank Guided Missile, and another new missile of the Agni series called the Agni-Prime, with a range of 621 to 1,242 miles (1,000 to 2,000 km).

    Ballistic missiles are far easier to shoot down than hypersonic weapons

    This comes amid rising tensions between the U.S. and China, the former of which has good relations with India. But while India’s expanding ballistic missile capabilities add to the hypothetical chessboard should conflict happen, it’s still one step behind its northern rival. Earlier this month, it was revealed that China had tested a hypersonic missile in August that launched atop a Long March rocket, and then circled the Earth in low orbit before descending to its final target, which it only missed by 24 miles. For reference, the Earth is 7,917.5 miles in diameter, which means, as far as public knowledge goes, China is an entire step ahead of India’s ally, the United States, in the most advanced missile technology.

    Last week, the Pentagon confirmed that a test launch of a hypersonic missile had failed, implying that the United States’ hypersonic weapons technologies have yet to reach the level of maturity of its China-built counterparts. While the U.S. has famously closed the technological gap with rival countries at blinding speeds, and India’s newest ballistic missile is another strategic asset in the defense against possible conflict with China, India’s ballistic technology could be vulnerable to strategic air defense capabilities of its northern neighbor, since ballistic missiles’ parabolic trajectory makes them a far easier target than hypersonic weapons

    இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++

    அக்கினி இடித் தாக்கம்!
    அசுர வல்லமை ஊக்கம்!
    பொறுமை யற்ற புயலிலே
    புதுநெறி படைக்க
    புறப்படும் எமது கனவுகள்!

    டாக்டர் அப்துல் கலாம்
    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h15J9jF7cEk

    “இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை!  இந்த உலகிலே அச்சத்துக்கு இடமில்லை!  வல்லமைதான் வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்தவை.”

    டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி

    இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதை

    டாக்டர் அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த முன்னோடி விஞ்ஞானி.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த முதல் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் ஃபான் பிரௌன் [Wernher Von Braun].  அமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் அவர் முழுமையாக ஈடுபட்டார்.  பாரத நாட்டில் டாக்டர் ஃபான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்.  அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட் படைப்புக் பிதாவாகாப் போற்றப்படுகிறார்.  இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி, பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி செய்தவர் அப்துல் கலாம்.  அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது!  1980 ஆண்டுகளில் ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research & Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக் கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக ஆக்கினார்.  உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990 ஆம் ஆண்டில்  பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப் பட்டது.

    1931 அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராம பூமியான இராமேஷ்வரத்தில் பிறந்தார்.  அங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்.  திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர்.  தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார்.  பட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார்.  அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்.

    1958 இல் ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் பட்டம் வாங்கிய பிறகு, தன் நெடுநாட் கனவான விமானப் பறப்பியலில் ஈடுபட நினைத்தார்.  அவருக்கு இரண்டு வித வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி பிறந்தன.  முதலாவது வேலை இராணுவ அமைச்சகத்தின் தொழில் நுணுக்க விருத்தி & உற்பத்தித் துறைக் கூடத்தில் {Directorate of Technical Development & Production, (DTD&P) Ministry of Defence].  அடுத்தது இந்திய விமானப் படையில் ஊழியம் [Indian Air Force].  இரண்டுக்கும் விண்ணப் பித்து அவருக்கு நேர்காணல் தேர்வும் கிடைத்தது.  முதலில் கூறிய இராணுவப் பணி அவரது திறமைக்குச் சவாலாக இருக்க வில்லை.  அடுத்து தேரா தூன் விமானப் படைத் தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை.

    தோல்வி மனதுடன் திரும்பி வரும் வழியில் ரிஷிகேஷில் தங்கிப் புனித கங்கா நதியில் நீராடிய போதுதான், அவருக்குப் புத்தரைப் போல் தோன்றிய சுவாமி சிவானந்தாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது!  தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டதும், சுவாமி சிவானந்தா அவரோர் இஸ்லாமியர் என்று மனதில் கருதவில்லை!  கவலைப் படுவது ஏனென்று சிவானந்தா கேட்டபோது, அப்துல் கலாம் தனது பறக்கும் கனவுகளை இந்திய விமானப் படை நேர்காணல் ஏமாற்றி விட்டெதெனக் கூறி வருந்தினார்.  அப்போது சிவானந்தா கூறினார், ” உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது.  ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு.  உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.  உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்!  கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.

    டெல்லிக்கு மீண்டதும் DTD&P இல் சீனியர் சையன்டிஃபிக் அஸ்ஸிஸ்டென்ட் வேலை கிடைத்தது.  அப்போது அவர் தன்னோடு பணி செய்த குழுவுடன் முன்னோடி ஹோவர்கிராஃப்டு [Prototype Hovercraft] ஒன்றைத் தயாரித்தார்.  அவர் முதன்முதல் அமர்ந்து இயக்கிய இந்திய ஹோவர்கிராஃப்டில் முன்னாள் இராணுவ மந்திரி கிருஷ்ண மேனன் பயணம் செய்தார்.  அதற்குப் பிறகு 1962 இல் டாக்டர் அப்துல் கலாம் இந்திய விண்வெளித் திட்டத்தில் வேலை கிடைத்துச் சேர்ந்தார்.  சுமார் இருபதாண்டுகள் (1963-1982) அவர் இந்திய வெண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் [Indian Space Research Organization (ISRO)] பல பதவிகளில் பணியாற்றினார்.  பிறகு அவர் தும்பாவில் [திருவனந்தபுரம், கேரளா] துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் [Satellite Launch Vehicle Team (SLV)] சேர்ந்து, SLV-3 ராக்கெட் படைப்புத் திட்டத்தின் டைரக்டர் ஆக நியமிக்கப் பட்டார்..  SLV-3 ராக்கெட்டின் 44 துணைச் சாதனங்களை டிசைன் செய்து, பயிற்சி செய்து, மேன்மையாய் விருத்தி செய்து வெற்றிகரமாக ஏவிடப் பணிபுரிந்தார்.  1980 ஜூலையில் இல் ரோகினி என்னும் முதல் விஞ்ஞானத் துணைக்கோளைத் தூக்கிக் கொண்டு SLV-3 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு, ரோகினி பூமியைச் சுற்றிவரும் சுழல்வீதியில் இடப் பட்டது.  அவ்வரிய பணிக்குப் பாரத அரசாங்கம் 1981 இல் டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரதத்தின் மாபெரும் “பத்ம பூஷண்” பாராட்டு மதிப்பை அளித்தது.

    ICBM

    ஓர் ஆன்மீக முஸ்லீமாக அப்துல் கலாம் தினமும் இருமுறை இறைவனைத் துதிக்கிறார்.  அவர் அறையில் தஞ்சை நடராஜர் வெண்கலச் சிலை காணப்படுகிறது. மேலும் அவர் ஓர் இராம பக்தர்.  வீணை வாசிக்கிறார்.  ஸ்ரீராகத்தை ரசிக்கிறார்.  தமிழில் கவிதை புனைகிறார்.  தானோர் இந்தியன்ரென்று பெருமைப் படுகிறார். 1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த வெடிப்புகளில் பங்கெடுத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார். விடுதலை பெற்ற பிறகு இதுவரைச் சாதித்த விஞ்ஞானப் பொறியியற் துறைகளை எடுத்துக் காட்டி முன்னேறும் நாடாகக் கருதப்படும் பாரதம் விருத்தி அடைந்து 2020 ஆண்டுக்குள் முன்னேறிய நாடாக மாறப் போகிறது என்றோர் எதிர்காலவாதியாக [Forecasting Futurist] ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.  டாக்டர் அப்துல் கலாம் மெய்யாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, படைப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேச நேசர்.  அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.

    Fig 1G Indian Rockets

    இந்தியாவின் போர்க்களத் தாக்குகணைத் திட்டங்கள்

    1974 மே மாதம் இந்தியா முதன்முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பைச் சோதித்த பிறகு அந்த ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டு தாக்கச் செல்லும் ஏவுகணைகளை ஆக்கும் இராணுவ முற்பாடுகளில் முனைந்தது.  கடந்த மத்திய ஆசிய கல்ஃப் நாட்டுப் போர்களில் தாக்குகணைகள்தான் பெருமளவில் பங்கேற்றன.  எதிர்காலத்தில் எழும் போர்களும் இனிமேல் கட்டளைத் தாக்குகணைகளைத்தான் பேரளவில் பயன்படுத்தப் போகின்றன.  சென்ற சில ஆண்டுகளாய் இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்கு உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நம்பத் தகுந்த கட்டளைத் தாக்குகணைத் தயாரிப்பில் ஆழ்ந்து முற்பட்டு வருகிறது. 1994 இல் இந்தியப் பொறியியல் விஞ்ஞானிகள் 1500 கி.மீ. [900 மைல்] நீட்சித் தூரம் செல்லும் அக்கினித் தாக்குகணைகளை மூன்று முறை ஏவிச் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.  சமீபத்தில் 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அபார ஆற்றல் கொண்ட அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்தது.

    டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்

    1982 ம் ஆண்டில் இராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defense Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது.  அத்திட்டமே இந்திய இராணு வத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது.  அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின.  அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ஆரம்பமாயின.  அந்த ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

    1. நாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG – An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது.  உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.

    2. பிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம்.  வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் : 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின.  அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்).  சோவியத் யூனியன் ராக்கெட் பொறி நுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது.  பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ரம்பமாயின.  பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம்.  அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும்.  அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.

    3. ஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile).  எல்லா வற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது.  அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது.  நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்த டிக்கப் பயனாகிறது.  ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.

    4. திரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) – A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை.  அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)

    5. அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest),  அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்].  உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப் படுகிறது.  1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது.  2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது..

    பாரதத்தின் அண்டை நாடேகும் கட்டளைத் தாக்குகணை சூரியா

    இந்தியாவின் முதல் “அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை” சூரியா [Intercontinental Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல் இராணுவப் பணிகள் ரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல் திட்டமிடப்பட்டது.  தனிப் பயிற்சி இயக்கப்பாடுகள் முடிந்து முதல் சோதனை 2008 இல் திட்டமிடப் பட்டுள்ளது.  2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு : 10,000 கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு 20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்).  சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம் [130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிப்பொருள் பயன்படும் மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது.  முதல் அடுக்கு ராக்கெட் திரவ எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும் பயன்படுத்தும்.   ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2,  துருவத் துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle (PSLV)] கூட்டு யந்திர அமைப்புகளே.

    தகவல்:

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
    3. Indian Space Program By: Subhajit Ghosh
    4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
    9. Indian Space Program By: Wikipedia
    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
    11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
    12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
    13 Dr. Abdul Kalam : India’s Missile Program www.geocities.com/siafdu/kalam.html
    14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive]
    15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007]
    16 Missile Test By India [February 5, 2007]
    17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006]
    18 Defense Update, New Pissile Program at Aero India (2007)
    19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense
    20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]

    21 A Perennial Dream By: Dr. Abdul Kalam [http://sindhu.nomadlikfe.org/]
    22 AllIndidianSite.com – Dr. Abdul Kalam-It’s All About People.
    23 History of Indian Space Program -1 [www.bharat-rakshak.com/SPACE/space-history1.html]
    24 History The Tiger of Mysore & His Rocket Barrages By: Rajivlochan, Dept of History, Punjab University.
    25 India Successfully Tests Trisul Missile [www.spacewar.com/reports/India_Successfully_Tests_Trisul_Missile.html]
    26 India’s Missile Program By: John Cherian [www.hinduonnet.com/fline/]
    27 Indian ICBM Surya Missiles – India Defence Weapon Systems.
    28. Missiles in Indian History. (Agni, Prithvi, Akash, Trishul, Nag, Astra, Surya,
    29.  https://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam
    30.  http://www.abdulkalam.nic.in/profile.html
    31. /india-has-successfully-tested-its-first-3000-mile-ballistic-missile?utm_source=newsletter&utm_medium=mailing&utm_campaign=Newsletter-28-10-2021

    Share
  • தமிழ் இலக்கணத் தாத்தா! 

    தமிழ் இலக்கணத் தாத்தா! 

    -மேகலா இராமமூர்த்தி

    பழந்தமிழ் ஏடுகளைத் தேடி ஊர் ஊராய் அலைந்து அவற்றைத் திரட்டிப் பதிப்பித்தவரும் தென்னிந்திய கலைச்செல்வரும், தாம் செய்த அரிய தமிழ்ப் பணிகளுக்காகத் ’தமிழ்த் தாத்தா’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான டாக்டர் உ.வே.சா.வைத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறியும்.

    ஆனால், தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பதில் ஆர்வங்காட்டிய தமிழ்த் தாத்தாவைப் போலவே தமிழ் இலக்கண நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வங் காட்டி, அவற்றைப் பிழையறப் பதிப்பித்தவரும் தமிழ் இலக்கணத்தில் தேர்ந்த புலமைபெற்று விளங்கியமையால் ’தமிழ் இலக்கணத் தாத்தா’ என அன்று பாராட்டப்பெற்றவருமான மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையை இன்றைய தமிழர் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அத் தமிழ்ச்சான்றோரைத் தமிழர்க்கு மீள் அறிமுகம் செய்துவைத்தல் நலம் என நினைக்கின்றேன்.

    1896ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ஆம் நாள் மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை, பாக்கியம் அம்மையார் இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையவர்கள். இவரின் உடன்பிறப்புக்கள் மொத்தம் ஏழு பேராவர். சொந்த ஊர் சென்னை சைதாப்பேட்டைக்கு மேற்கில் அமைந்திருந்த சிற்றூரான மேட்டுப்பாளையமாக இருந்தபோதிலும், குழந்தைகளின் கல்விக்காகச் சைதாப்பேட்டையில் குடிபுகுந்தார் வேணுகோபாலப் பிள்ளையின் தந்தையார் வீராசாமிப் பிள்ளை.

    வேணுகோபாலருக்கு ஐந்து வயது நிரம்பியதும் அங்கிருந்த ஆசிரியப் பயிற்சிப்பள்ளியைச் சேர்ந்த மாதிரிப் பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு ஓராண்டுக் காலம் கல்விபயின்றார் அவர்.

    அப்போது வறுமை மேகம் வேணுகோபாலப் பிள்ளையின் குடும்பத்தைச் சூழவே, மாதிரிப் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டுத் திண்ணைப் பள்ளிக்கூடமொன்றில் சேர்க்கப்பட்டார்.

    இன்னல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அக் குடும்பத்தை முற்றுகையிடவே சைதாப்பேட்டையில் தாம் வாழ்ந்துவந்த 40,000 உரூபாய் மதிப்புள்ள வீட்டை 2000 உரூபாய்க்கு விற்றுவிட்டுப் பல்லவபுரத்திற்கு (பல்லாவரம்) குடும்பத்தோடு குடிபெயர்ந்தார் வேணுகோபாலப் பிள்ளையின் தந்தையார். பின்னர் அங்கிருந்து புரசைப்பாக்கத்திற்கு (புரசைவாக்கம்) குடிபெயர்ந்தது அக்குடும்பம். இவ்வாறு தொடர்ந்து வீடு மாறவேண்டிய சூழல் ஏற்பட்டதால் வேணுகோபாலப் பிள்ளையில் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.

    கல்வியில் ஆர்வமிருந்தும் கற்க இயலாத குடும்பச் சூழலால் வேப்பேரியிலுள்ள அச்சகத்தில் பணியிலமர்ந்தார் வேணுகோபாலப் பிள்ளை. காலை எட்டு மணிமுதல் மாலை 5 மணிவரை அப்பணியில் உழைத்த அவர், அறிஞர்கள் சிலர் இணைந்து நடத்திய இரவுப்பள்ளியில் சேர்ந்து ஓய்வுநேரத்தைக் கல்வி கற்பதில் கழிக்கலானார்.

    வேணுகோபாலப் பிள்ளைக்கு ஆங்கிலம் தமிழ் ஆகியவற்றைப் பயிற்றுவித்த வழக்கறிஞர் டி.என். சேஷாசலம் ஐயரவர்கள், வேணுகோபாலரின் தணியாத தமிழார்வம் கண்டு, தக்கார் ஒருவரிடம் அவர் தனியே தமிழ்பயிலுதல் நன்று என்று அவருக்கு அறிவுறுத்தினார்.

    வேணுகோபாலப் பிள்ளைக்கு ஆங்கிலம் பயிற்றுவித்த ஆசிரியர்களுள் சென்னைக் கல்வித்துறைத் துணை இயக்குநராகப் பணியாற்றிய திரு. வி.ஆர். அரங்கநாத முதலியார், திரு.கே. மாசிலாமணி முதலியார், வழக்கறிஞர் திரு. எம். தாமோதர நாயுடு, திரு. மோகனரங்கம் பிள்ளை ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

    என்ன இது இம் மனிதர்களுக்குப் பின்னால் ஐயர், முதலியார், நாயுடு, பிள்ளை என்று ஒரே சாதிப் பெயர்களாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா?

    பெயர்களுக்குப் பின்னால் சாதி அடையாளங்கள் இருந்தாலும் பேதம் ஏதுமின்றித் தமிழர்கள் தமிழால் ஒன்றிணைந்திருந்த காலம் அது. இப்போதோ பெயரளவில் சாதியை ஒழித்திருக்கின்றோமே தவிர அது முன்னைக் காட்டிலும் கூர்மையடைந்து பேதங்களையும் சமூகத்தில் அளவற்ற சேதங்களைவும் விளைவித்து வருகின்றது என்பதுதான் நடைமுறை உண்மை.

    வேணுகோபாலப் பிள்ளையின் வரலாற்றுக்குத் திரும்புவோம்!

    சேஷாசலம் ஐயரின் அறிவுரையை ஏற்ற வேணுகோபாலப் பிள்ளை, அந்நாளில் தமிழிலக்கண இலக்கியங்களில் வல்லுநராகவும் நல்லாசிரியராகவும் விளங்கிய சென்னையைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் கோவிந்தராச முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படிக் கற்றார்.

    பின்னாளில் தமிழ்ப் பெரும்புலவராக விளங்கிய மங்கலங்கிழார், தமிழ்ப் பேரறிஞர் மதுரை முதலியார், அருச்சுன முதலியார் ஆகியோரும் அப்போது வேணுகோபாலரோடு உடன்பயின்ற மாணாக்கர் ஆவர். இப்பெருமக்களுடன் இறுதிவரை இடையறா நட்பு பூண்டிருந்தார் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை.

    1920ஆம் ஆண்டுமுதல் 1923ஆம் ஆண்டுவரை சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் உதவித் தமிழாசிரியராய்ப் பணியாற்றினார் வேணுகோபாலப் பிள்ளை. அப்போது அவரைச் சந்தித்த புரசைப்பாக்கம் லூத்தரன் மிஷன் பெப்ரீஷியஸ் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. எம். ஏ. வேதநாயகம் அவர்கள், தம் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராய்ப் பணியாற்றுமாறு வேணுகோபாலருக்கு வேண்டுகோள் விடுக்கவே, அதனையேற்று அப்பள்ளியில் தமிழாசிரியர் பொறுப்பில் அமர்ந்தார். பின்னர் அப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக வளர்ச்சியடைந்தது.

    அக்காலக்கட்டத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய வித்துவான் தேர்வில் வெற்றிபெற்றுப் பட்டதாரியானார் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை.

    வேணுகோபாலப் பிள்ளை பணியாற்றிய லூத்தரன் பள்ளியின் மேற்பார்வையாளர்களாக ஜெர்மானியப் பாதிரியார்கள் இருந்தனர். அவர்களுக்குத் தமிழிலும் நல்ல புலமை இருந்தது. அவர்களின் நட்பால் வேணுகோபாலருக்குப் பள்ளியில் இருந்த மதிப்பும் செல்வாக்கும் மேலும் உயர்ந்தன. வேறெந்தப் பள்ளியிலும் தமிழாசிரியருக்கு அத்தகைய செல்வாக்கு கிடைத்திராது எனலாம்.

    ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த அந்நாட்டு அறிஞர் சிலரும் அவர்தம் மனைவிமாரும் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ் பயின்றனர். இப்பள்ளியோடு தொடர்புடைய பாதிரியார்களால் சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தில் குருகுல் கல்லூரி ஒன்றும் நடத்தப்பெற்று வந்தது. அக்கல்லூரியில் கிறித்தவமதத் தொண்டில் ஈடுபடுவதற்குப் பயிற்சிபெறுவோர்க்குச் சைவ வைணவ சமய நூல்கள் சிலவற்றைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் வேணுகோபாலர் விளங்கினார். 1938ஆம் ஆண்டு தம் ஆசிரியத் தொழிலைவிட்டு நீங்கினார் அவர்.

    பின்னர், பதிப்புப் பணியிலும் எழுத்துப் பணியிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணாக்கர்கட்கென்று பல நூல்களை எழுதினார். அந்நூல்களின் வழியே பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிமுகமானார் வேணுகோபாலப் பிள்ளை. அவர் எழுதிய நூல்களைப் பல இதழ்களும் மதிப்புரை வழங்கிப் பாராட்டின. அவ்வாறு அவர் எழுதிய நூல்களுள் ஒன்று அரிச்சந்திர புராணச் சுருக்கம் என்பதாகும்.

    உரைநடையில் அமைந்த அந்நூல் குறித்துத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் 1938ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 8ஆம் நாள் ’நவசக்தி’ இதழில் வெளியிட்ட மதிப்புரையின் ஒரு பகுதி இது…

    ”……தீந்தமிழ்ச் சொற்களாலும் சொற்றொடர்களாலும் அமைந்துள்ள உரைநடையைக் கொண்ட கதைச் சுருக்கம், ஒரு பூங்காவெனப் பொலிகிறது. அதனிடைத் தென்றற் காலும் வீசுகிறது. திரு. வேணுகோபாலர் தமிழில் தமிழூர்தல் வெள்ளிடைமலை. தமிழறிஞர் வேணுகோபாலரின் பிழையற்ற உரைநடை, தற்போது கறைபட்டுள்ள தமிழுலகைத் தூய்மை செய்யும் பெற்றி வாய்ந்ததென்று சுருங்கக் கூறலாம்.”

    தமிழ்நூல்கள் அளவில் சிறியவையாயினும் பெரியவையாயினும் அவை பிழையின்றித் திருத்தமாக வெளிவரவேண்டும் என்பதைத் தம் வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்டிருந்தார் வேணுகோபாலப் பிள்ளை. பதிப்புத்துறையின் நுட்பங்களையெல்லாம் ஆங்கில நூல்கள் வாயிலாகக் கற்றுத்தேர்ந்த அவர், பதிப்பித்த நூல்களின் விவரம் வருமாறு:

    இறையனார் அகப்பொருளுரை
    தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – நச்சினார்க்கினியர் உரை
    யாப்பருங்கல விருத்தியுரை
    யாப்பருங்கலக் காரிகை
    விசாகப் பெருமாள் தமிழிலக்கணம்
    தஞ்சைவாணன் கோவை – விளக்கக் குறிப்புரை முதலியன.

    வேணுகோபாலப் பிள்ளையைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பாரி நிலையம் வெளியிட்ட யாப்பருங்கலக் காரிகையின் துணையோடுதான் நமக்கு முந்தைய தலைமுறை யாப்பு பழகியது என்பது கருதத்தக்கது.

    மேற்கண்ட இலக்கண நூல்களேயல்லாமல்,

    அட்டப்பிரபந்தம் – விளக்கக் குறிப்புரை
    நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
    நளவெண்பா
    நீதிநூல்கள்
    பதினெண் சித்தர் ஞானக் கோவை
    விநோத ரச மஞ்சரி

    திருவாய்மொழி ஈட்டு வியாக்கியானம் – 10 பகுதிகள்

    உள்ளிட்ட இலக்கிய நூல்களையும் பதிப்பித்து, பதிப்புத் துறையில் ஆழமாய்க் கால்பதித்த வேணுகோபாலர், சிறந்த சொற்பொழிவாளராகவும் பரிமளித்தார்.

    அவற்றுள் 1931ஆம் ஆண்டு, சென்னை லயோலா கல்லூரியின் மாணவர் தமிழ்க்கழக ஆண்டுவிழாவில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவும், 1948ஆம் ஆண்டு மன்னார்குடியில் நடைபெற்ற தமிழ்த் திருநாளில் அறிஞர் அண்ணாவுடன் இணைந்து ஆற்றிய சொற்பொழிவும் குறிப்பிடத்தக்கன.

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 4, 5 தேதிகளில் ’தமிழ் அன்றும் இன்றும்’ எனும் தலைப்பில் வேணுகோபாலப் பிள்ளை ஆற்றிய சொற்பொழிவு நூலாகவும் வெளிவந்துள்ளது.

    தமிழ்நூல்களில் காணப்பெறும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கற்பனைகளை இந்நூலில் நமக்கு அடையாளம் காட்டுகின்றார் வேணுகோபாலப் பிள்ளை. அவ்வகையில், குறுந்தொகையிலுள்ள ’கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் இறையனார் எனும் பெயரிய மானுடப் புலவரேயன்றிக் கண்ணுதற் கடவுளான சிவனார் இல்லை என்று விளக்கும் வேணுகோபாலர், சமண முனிவர்கள், தாம் பாண்டி நாட்டைவிட்டுப் போவதற்குமுன் ஆளுக்கொரு வெண்பாவை எழுதித் தம் ஆசனத்தின்கீழ் வைத்துவிட்டுச் சென்றதாகவும், அவற்றை வையை ஆற்றில் பாண்டிய மன்னன் எறியச் சொல்ல, அவற்றில் எதிரேறி வந்த நானூறு பாடல்களின் தொகுப்பே நாலடி நானூறு என்பதும் பொருந்தாக் கருத்தே என்கிறார்.

    வேணுகோபாலப் பிள்ளையின் சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதானால் ஜானகி அம்மையார் என்ற பெண்மணியை மணந்து மூன்று புதல்வர்களைப் பெற்றார். அப்புதல்வர்களுள் ஒருவர் குழந்தைப் பருவத்திலேயே வருந்தத்தக்க வகையில் இறந்துபோனார்.

    சென்னையில் வசித்துவந்த வேணுகோபாலப்பிள்ளையின் குடும்பம், இரண்டாம் உலகப் போர் காலத்தில் அங்கு ஏற்பட்ட குழப்பங்களால் சென்னையைவிட்டுக் காஞ்சிபுரத்துக்குக் குடிபெயர நேர்ந்தது. அக்காலத்தில் வித்துவான் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த தமிழ் மாணாக்கர் பலருக்கு மாலை நேரங்களில் வகுப்பெடுத்தார் வேணுகோபாலப் பிள்ளை.

    தமிழ்படிக்க விரும்பும் மாணவர்கள் தம் பொருளாதாரச் சூழலால் அவ்வாய்ப்பை இழந்துவிடக் கூடாது எனக் கருதிய அவர், “தாம் பெற்ற தமிழ்க்கல்வி பெறுக இவ்வையகம்” எனும் உயரிய நோக்கோடு மாலை நேரத்தில் இலவசமாகவே மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புக்களை நடத்தினார். அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் பலர் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார்கள்.

    தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களேயன்றிச் செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த தமிழறிஞரான கமில் சுவலபில் அவர்களும் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ்பயின்ற அனுபவம் உடையவராவார். தமிழகச் சித்தர்கள் குறித்து தாம் எழுதிய “The Poets of the Powers” என்னும் நூலில் தம் ஆசிரியர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்டு “எனது குரு” என்று சுவெலபில் குறிப்பிட்டிருப்பது அவரது நன்றியறிதலையும் வேணுகோபாலப் பிள்ளைபால் அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பினையும் புலப்படுத்துகின்றது.

    காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமணரான ஜீவபந்து ஸ்ரீபாலர் என்பவர் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ்ப் பெருங்காப்பியமான சீவக சிந்தாமணி குறித்துச் சொற்பொழிவாற்ற வேண்டினார். அவ்வேண்டுகோளை ஏற்று ஜைனத் தமிழ்க் கழகத்தின் சார்பில் ஞாயிறுதோறும் சீவக சிந்தாமணிச் சொற்பொழிவை மூன்றாண்டுகள் நிகழ்த்தி முடித்தார் வேணுகோபாலர். இப்பெருந்தொண்டினைப் பாராட்ட விழா எடுத்தனர் ஜைனத் தமிழ்க் கழகத்தார்.

    அவ்விழாவில் சிந்தாமணிச் சொற்பொழிவு நினைவுமலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. வேணுகோபாலப் பிள்ளைக்குப் புத்தாடைகளும் விலைமதிப்பு மிக்க பார்க்கர் பேனாவும் பரிசளிக்கப்பட்டன.

    அந்நினைவு மலருக்கு நன்மொழி எனும் பெயரில் பொன்மொழிக் கட்டுரை ஒன்றை நல்கிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள்,

    ”வகுப்பை நடாத்திய மகாவித்துவான்
    மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களுக்கு
    என் வாழ்த்து உரியதாகுக! அவரைச்
    சிந்தாமணிச் செல்வர் வேணுகோபாலப் பிள்ளை
    எனத் தமிழ்நாடு இனி வழங்குவதாக!”

    என்று தம் கட்டுரையில் குறிப்பிட்டதை ஏற்று அவரைச் ’சிந்தாமணிச் செல்வர்’ என்று அழைத்து மகிழ்ந்தது தமிழ்கூறு நல்லுலகு.

    அரசு இலக்கண இலக்கியப் பாடநூல்களின் தலைமைப் பதிப்பாசிரியர்; சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவின் தலைமைப் பதிப்பாசிரியர்; தமிழகப் புலவர் குழுவின் தலைவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணப் பதிப்புக் குழு உறுப்பினர் எனப் பல பெரும் பொறுப்புகளை ஏற்று, அவற்றைத் திறம்படச் செய்த செயல்வீராகவும் திகழ்ந்தார் வேணுகோபாலப்பிள்ளை.

    காஞ்சியில் நடைபெற்ற அன்னாரின் மணிவிழாவில் தமிழவேள் பி.டி. ராஜன் அவர்கள் மீனாட்சி கருணையைப் பொன்னாடையாகப் போர்த்துகின்றேன் எனக்கூறி வேணுகோபாலப் பிள்ளைக்குப் பொன்னாடை அணிவித்தார். விழாவுக்கு வந்திருந்த தமிழறிஞர்கள் அவரை ’மகா வித்துவான்’ எனப் போற்றினர்.

    காஞ்சி அன்னை தமிழிலக்கிய மன்றத்தினர், அருந்தமிழ் வளர்த்த பெருந்தகையாம் வேணுகோபாலப் பிள்ளைக்கு ’தமிழ் இலக்கணத் தாத்தா’ என்று பட்டமளித்துச் சிறப்பித்தனர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தார் அவருக்குப் ‘பேரவைச் செம்மல்’ பட்டம் வழங்கிக் கௌரவித்தனர்.

    1967-இல் சென்னை தொல்காப்பியர் சங்கத்தின் சார்பில் நடந்த விழாவில் வேணுகோபாலப் பிள்ளைக்குச் ‘செந்தமிழ்க் களஞ்சியம்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார், அன்றைய தமிழக முதல்வர் அண்ணா. 

    நற்றமிழ் அறிஞராய், நல்லாசிரியராய், சிறந்த சொற்பொழிவாளராய், தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ந்த புலமையாளராய் விளங்கி, ஒல்லும் வகையிலெல்லாம் தமிழ்த்தொண்டாற்றித் தமிழன்னையைச் சிறக்கச் செய்த மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையை மறவாது போற்றுவோம்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை நூற்றாண்டு விழா மலர் – தமிழ்வளர்ச்சித் துறை வெளியீடு.
    2. https://www.hindutamil.in/news/literature/513791-venugopala-pillai.html

    Share
  • அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்

    அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்

    DESALINATION PLANT IN UNITED ARAB EMIRATES

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    JAPAN HTTR PRODUCES ELECTRIC POWER, HYDROGEN GAS 7 METHANE GAS
    NUCLEAR ENERGY COGENERATION SYSTEM

    அணுமின் நிலையத்தின் முக்கிய சாதனங்கள்

    Learn more about nuclear hydrogen production.

    DESALINATION PLANT

    அணுசக்தி உலையில் வீணாகும் வெப்பசக்தி மீள்பயன்பாடு

    அணுமின்சக்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வது மூன்றில் ஒரு பங்கு வெப்பசக்தியே [சுமார் 35% இயக்கத் திறன்] [EFFICIENCY]. குளிர்கலனில் TURBINE CONDENSER] 65% வெப்பசக்தி பயன் தராமல் கடல் தணிப்பு நீரிலோ , கோபுரத்திலோ [CONDENSER COOLING WATER] வீணாகிறது. இந்த 65% வெப்பசக்தி மீட்கப்பட்டு பல தொழிற்துறை ஆலைகளுக்குப் பயன்படுகிறது. முக்கிய கடல் சார்ந்த பகுதிகளில் உப்பு நீக்கி குடிநீர் தயாரிக்க முடிகிறது மேலும் எரிசக்தி நீரக வாயு [HYDROGEN GAS], மீதேன் [METHANE GAS] தயாரிக்கவும், குளிர் நாடுகளில் வீடுகளுக்குச் சூடு அளிக்கவும், தொழிதுறை ஆலைகளுக்கு நீராவி அனுப்பவும் உதவுகிறது. ஜப்பானில் இயங்கி வரும் உச்ச உஷ்ண அணு உலை [HTTR] [HIGH TEMPERATURE TEST REACTOR] மின்சாரம் தயாரிப்ப தோடு, பயன்படா சக்தி மீட்கப்பட்டு நீரக வாயு, மீதேன் வாயு தயாரிக்கப் படுகிறது. இம்முறைக்கு கூட்டுப்பிறப்பு [cogeneration] முறை என்று பெயர். கூட்டுப்பிறப்பு முறையின் இயக்கத் திறன் 80%.

    தற்போது 10% உலகத் தேவைக்கு அணுசக்தி நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன குளிர் நாடுகளான ரஷ்யா, பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, சுலோவேகியா, சுவிட்சர் லாந்து,யுக்ரேன் வீடுகளைச் சூடாக வைத்திருக்க அணுமின்சக்தி நீராவி பயன்படுகிறது.

    https://www.iaea.org/sites/default/files/styles/original_image_size/public/ne-charts-1140×640.jpg?itok=tywG9Wzs

    Non-electric applications of nuclear energy are reviewed, including technological, environmental and economic issues of such applications as well as future prospects and benefits of non-electric applications of nuclear energy. The applications for nuclear energy are significantly greater than electricity generation, including cogeneration, district heating and cooling, high-temperature process heating, hydrogen and alternative fuel production, transportation and desalination. These applications of nuclear energy expand its prospects and enhance its benefits, such as reduced environmental impact and climate change mitigation. Interest in non-electric applications of nuclear energy is growing, driven by environmental, economic, security and other reasons. The potential uses of nuclear energy beyond electricity generation and supply are likely to find increasing application in the future.

    What is the role of the IAEA?

    • The IAEA supports and facilitates the development of new and emerging non-electric applications of nuclear technologies through scientific and technical publications, webinars and coordinated research projects.
    • The IAEA has developed software tools, such as the Hydrogen Economic Evaluation Program (HEEP) and Hydrogen Calculator, to assess options for hydrogen production. Links to download both tools are available here.
    • To assess nuclear desalination, the IAEA has developed the Desalination Economic Evaluation Program (DEEP) and the DEsalination Thermodynamic Optimization Programme (DE-TOP) to perform economic, thermodynamic and optimization analyses of different power resources coupled to various desalination processes. The software are available for download here.
    • The IAEA has been coordinating feasibility studies on nuclear desalination since 1989. The IAEA Technical Working Group on Nuclear Desalination is a global network of experts that supports programme assessment and planning, research, development, design, construction, economics, safety aspects, international collaboration for demonstration projects, and operation and maintenance of nuclear desalination plants.

    ======================================================================

    இந்தியாவில் ஆறு 1000 MW அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது

    Image result for westinghouse nuclear reactor ap1000

    வெஸ்டிங்ஹவுஸ் AP-1000 MWe அணுமின்சக்தி நிலையம்

    https://www.reuters.com/article/us-india-usa-trump-westinghouse-exclusiv/exclusive-westinghouse-set-to-sign-pact-with-indian-firm-for-nuclear-reactors-during-trump-visit-idUSKBN20E1PM

    https://timesofindia.indiatimes.com/india/US-based-Westinghouse-to-build-6-nuclear-power-plants-in-India/articleshow/52644065.cms

    https://en.wikipedia.org/wiki/AP1000

    Obama, Modi Kick Start the Westinghouse Nuclear Deal

    +++++++++++++++++++

    Image result for westinghouse nuclear reactor ap1000

    அமெரிக்கா இந்தியாவில் கட்டும் ஆறு 1000 MWe அணுமின்சக்தி நிலையங்கள் 

    2020 பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய வெளிநாட்டு அமைச்சு செயலாளர் விஜய்  கோகலேயும் அமெரிக்க  அகில் நாட்டுப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாடு துணைச் செயலாளர் ஆன்டியா தாம்ஸன் ஆகியோர் கலந்துரையாடலில் வெளியான செய்தி இது.  பொதுநல அணுசக்திப் பயன்பாட்டில் இருநாட்டுக் கூட்டுறவு உடன்பாட்டின்படி, ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்களை, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்ட வாஷிங்டன் D.C. இல் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது.  கடந்த பத்தாண்டு களாக, அணுமின் உலை விபத்து இழப்பு நிதி [Indian Liability Rules] யார் அளிப்பது ?  அணு உலை இயக்கும் இந்தியாவா ?  அல்லது அணு உலை கட்டிய வெஸ்டிங்ஹவுஸா ?  [இது போன்று முன்பு போபால் நச்சு வாயுக் கசிவு விபத்தில் துயருற்ற லட்சக் கணக்கான இந்தியருக்கு விபத்து இழப்பு நிதி அளிப்பதில் தர்க்கம் ஏற்பட்டு நோயாளிகள் பெருந்துயர் உற்றார்.]  இந்த ஆறு அணு மின்சக்தி நிலையங்கள் ஆந்திராவில் நிறுவகம் ஆகும். இந்தியா 2031 ஆண்டுக்குள் 22,480 மெகாவாட் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளது.  2019 ஆண்டு  அணுமின்சார உற்பத்தி அளவு ; 6780 மெகாவாட்.

    Image result for westinghouse nuclear reactor ap1000

    2008 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ள போது இரண்டு நாடுகளும் ஆரம்ப ஒப்பந்தம் செய்து கொண்டாலும், இப்போது டிரம்ப் காலத்தில்தான் அத்திட்டம் உறுதி செய்யப்பட்டது.  “அமெரிக்கர் சாதனத்தை விற்பனை செய்” என்ற டிரம்ப் சுலோகத்தில் முடிவானது இந்த திட்டம்.  இந்தியா 2024 ஆண்டுக்குள் மின்சக்தி உற்பத்தியை மும்மடங்கு பெருக்க [தற்போது 6700 மெகாவாட்]  முனைந்துள்ளது.  அமெரிக்கன் 1000 மெகாவாட் ஒரு நிலையம் நிறுவ, குறைந்தது 3 ஆண்டுகள் ஆகலாம். சென்ற ஆண்டில் இந்தியாவும், ரஷ்யாவும் மேலும் ஆறு 1000 மெகாவாட் கூடங்குள மாடல் அணு மின்சக்தி நிலையங்கள் கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டன.  நொடித்துப் போன வெஸ்டிங்ஹவுஸ்  நிறுவனத்தைக் கைதூக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு பிப்ரவரியில் போகும் போது, இந்த திட்டம் உறுதி ஆகும்.  ஆயினும் விபத்து இழப்பு நிதி கொடுக்கும் பொறுப்பு யாருடையது என்பது முடிவு செய்யப் படவில்லை.

    Image result for indian electric power generation

    Information

    1. https://www.iaea.org/newscenter/news/the-use-of-nuclear-power-beyond-generating-electricity-non-electric-applications
    2. https://www.iaea.org/topics/non-electric-applications
    3. https://www.iaea.org/newscenter/news/nuclear-and-renewables-modelling-tool-to-evaluate-hybrid-energy-systems
    4. https://www.iaea.org/topics/non-electric-applications/nuclear-hydrogen-production
    5. https://www.sciencedirect.com/science/article/pii/B978012818483700010X
    6. https://www.cnbc.com/2021/02/25/bill-gates-nuclear-power-will-absolutely-be-politically-acceptable.html
    7. https://nuclearsafety.gc.ca/eng/reactors/research-reactors/other-reactor-facilities/small-modular-reactors.cfm
    8. https://www.anl.gov/article/10-myths-about-nuclear-energy

    Share
  • காந்திய மாமணி T D திருமலை நூற்றாண்டு நிறைவு நாள் – அக்டோபர் 26. 2021

    காந்திய மாமணி T D திருமலை நூற்றாண்டு நிறைவு நாள் – அக்டோபர் 26. 2021

    சுபாஷிணி திருமலை (T.D.திருமலை அவர்களின் மகள்)
    எழுத்தாளர், தலைவர், சிறுவாணி வாசகர் மையம்

    தடம் பதித்த தந்தை போற்றுதும்•••

    மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் எங்களது நண்பரும் ஓவியருமான பாலசுப்ரமணியன் என்னை எழுத்தாளர் பா ராகவன் அவர்களைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். என் கைகளில் இருந்த சில புத்தகங்களை அவருக்கு அளித்தேன்.

    அப்புத்தகங்களைக் கண்டு சந்தோஷிக்கும் போது , வாசிப்பைப் பரவலாக்கும் ஒரு இயக்கமாக “சிறுவாணி வாசக மையம்” என்ற அமைப்பைத் தலைமையேற்று நடத்துகிறார் என என்னை அறிமுகப்படுத்திவிட்டதோடு, மேலும் சிறப்பாக இவர் T.D. திருமலை என்னும் காந்தியவாதியின் மகள் சுபாஷிணி திருமலை என்றதும் “சட்” என்று இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார்.

    நாங்களும் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டோம்.

    ” காந்தியைப் பிடிக்காதோ? தவறான அறிமுகமாகிவிட்டதோ” என பயந்து விட்டேன்.

    “பாலுசார்! இதை முதலில் சொல்லக்கூடாதா!

    நீங்கள் வந்தது எனக்கு கௌரவம் சந்தோஷம் எல்லாம். அமருங்கள் “என்று எங்களை அமர்த்தித் தானும் அமர்ந்தார்.

    “நான் கல்லூரிப் படிப்பை முடித்ததும் தி நகரில் தக்கர்பாபா வளாகத்தில் உள்ள ஒரு குடிலில் உங்கள் தந்தையைச் சந்தித்தேன். 3 மணிநேரம் பேசினோம் . கிளம்பும்போது “காந்தி மண்டபத்தில் உள்ள நூலகத்தில் காந்தி பற்றிய நூல்களைப் படித்துப்பார்” என்றார். அந்த சந்திப்பு, அந்த வார்த்தைகள் என் வாழ்வில் திருப்புமுனை. “

    “தினந்தோறும் அங்கு போய் நூலகம் திறக்கும் முன்பே போய்விடுவேன். நூலகம் மூடும்போதுதான் நானும் வெளியில் வருவேன். இது நிகழாமல் இருந்திருந்தால் நான் வேறு மாதிரி உருவாகிஇருப்பேன்” என்றார்.
    நாங்கள் இருவரும் வாயடைத்துப்போனோம்.

    ஆம். இன்று என்று இல்லை. என்றும் திருமலை மகள் என்பதுதான் என் முகவரி.

    இதுதான் எனது 55 ஆவது வயதில் எனக்கு “செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில்” பணிபுரிய வாய்ப்பு நல்கியது. அந்நிறுவனத்திறகு வரும் பேராசிரியர்கள், ஆளுமைகள் அனைவரும் என்னைத் திருமலை மகளா என மகிழ்ந்து என் தந்தை பற்றி சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வர். அவருக்குள்ள இலக்கியத்தின் பால் உள்ள ஈடுபாடுதான் இதற்கு காரணம்.

    ஜஸ்டிஸ் மகராஜன் அவர்களின் நட்பால் ரசிகமணி டி கே சி அறிமுகமானார். அவருடைய ரசனையின் பால் கொண்ட மகிழ்வால் “உலக இதய ஒலி” என்ற காலாண்டு இதழை நடத்தினார். அவரது ஆசிரியர் அ சீனிவாசராகவன் அவர்கள் ஆவார். அப்போதைய இலக்கிய ஆளுமைகள் தெ பொ மீ அவர்களிலிருந்து அனைவருடனும் நட்பு கொண்டு இலக்கியத்தின் மூலம் காந்தியம் வளர்த்தார்.

    சித்தாந்தங்கள் வேறாக இருந்தாலும் இலக்கியத்தால் அன்பால் அனைவரிடமும் நட்பாக இருந்தார். அது தான்… அப்பா T.D.திருமலை.

    ஶ்ரீ வில்லிபுத்தூரில் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் தங்கள் செல்வத்தை நாட்டுக்காகவும், கல்வி நிறுவனங்களுக்கும், ஏழைஎளியோர்க்கும் அளித்து விட்டு ஏழ்மையை உவந்தே ஏற்றுக்கொண்டவர்கள். அப்பா அன்றையத் தேவையான வெள்ளையனே வெளியேறு , போராட்டத்தில் தொடங்கி பூதான இயக்கத்தில் கலந்து கொண்டவர். அவ்வூர் முனிசிபல் சேர்மனாக பதவி ஏற்று தண்ணீர் வசதி செய்தல் போன்ற நற்பணிகள் செய்தவர்.

    பின் மதுரையில் காந்தி மியூசியத்திலுள்ள காந்தி நினைவுநிதியில் தத்துவப் பிரசாரகராக பணியில் சேர்ந்து, தன் இறுதிநாள்வரை காந்தியை இளையதலைமுறைகளுக்கு கொண்டு செல்வதில் செலவிட்டார்.

    எங்களது இந்த உறவின் உன்னதம் பல நற்பணிகள் செய்வதற்கு ஆதரவாக இருக்கிறது. நான் கோவை நண்பர்களோடு இணைந்து நடத்தும் சிறுவாணி வாசகர் மையத்திற்காக பல இலக்கியவாதிகளையும் படைப்பாளிகளையும் எளிதில் அணுக முடிகிறது. ஆகச்சிறந்த ஓவியர்கள் என் நண்பர்கள். அனைத்தும் என் தந்தைவழி கிட்டியதுதான்.

    என்தாய்க்கு என தந்தை பற்றிப் புகார் இல்லை. மாறாக பெருமிதம் இருந்தது. தந்தையை எதிர்பார்க்காது தன் உழைப்பால் எங்களை வளர்த்தார். இது எங்களுக்கு இருவர்பாலும் மதிப்பும் மரியாதையையும் உணரவைத்தது…
    உறவுகளை நட்பைப் பேணிகாக்க சொல்லிக்கொடுத்தது.

    எங்கள் அம்மாவின் அறிவுரைப்படி எங்கள் கல்வி, உழைப்பு, அதனுடன் பணிவு போன்றவை எங்கள் வாழ்வின் ஆதாரமானது. அம்மாவின் நிர்வாகம் மிகவும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

    அப்பா இல்லாவிட்டாலும் (அப்பா மாதம் ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார்) அவரது வாழ்வியல் எங்களுக்குப் பாடமாக அமைந்தது. மனம் , உணர்வுகள் மயங்கும் போது அறிவு மேலோங்கி நிலையை நேர்செய்யும்.

    அறிவு தடுமாறும்போது உணர்வு உண்மையை உணர்த்தி நிலைநிறுத்தும்.

    கல்லூரிப் படிப்புக் காலம் வரை மதுரை காந்தி மியூஸித்தில்தான் பெரும்பகுதி இருப்போம். முன்னாள்பிரதமர் நேரு, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர். உசேன், காமராஜர் பக்தவத்சலம் போன்ற தலைவரகள் ஆகியோர்கள் அங்கு வரும்போது நாங்களும் அவர்களுடன் இருப்போம். நல்ல கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் போன்ற இலக்கிய கூட்டங்கள் நடக்கும். ஞாயிறு தோறும் நல்ல படங்கள் காட்டுவார்கள். இப்படி நல்ல விஷயங்களோடு வளர்ந்தோம். அப்பாவுடன் சென்னை வந்தபோது சென்னையில் அப்பா நடத்தும் காந்தியக் கூட்டங்கள், இலக்கியக் கூட்டங்கள், போன்றவற்றில் கலந்து கொள்வோம். இதெல்லாம் நாங்களாகத்தான் வருவோம் . என்றைக்கும் எங்களிடம் அப்பா எவற்றையும் திணித்ததில்லை.

    மேலும் எங்களுக்கு தத்துவஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியையும் அறிமுகப்படுத்தினார். சென்னையில் டிசம்பர் மாதங்களில் அவரது இடமான வசந்தவிஹாரில் கூட்டம் நடக்கும். அப்பா போகும்போது நாங்கள் உடன் போவோம். புரியறமாதிரி இருக்கும் . ஆனால் கூட்டம் முடிந்து அப்பா மற்றும் அவர் நண்பர்களுடன் திரும்பிவரும்போது அன்றைய பேச்சைப் பற்றிய விவாதம் பிரமாதமாக அமையும். அப்போது எங்களுக்குத் தெளிவாகி விடும்.

    என் தந்தையோ அவரது தந்தையோ பணத்தை விட்டு சென்று இருந்தால் பணக்காரர்களாக இருந்து இருப்போம். இந்த விழுமியங்களும் பெருமிதமும் எங்களுக்குக் கிடைத்திருக்காது.

    என் தந்தை எங்களைக் கவனிக்காது சமூகத்தைக் கவனித்ததால் நாங்கள் எதையும் இழக்கவில்லை. மாறாக. பல உறவுகளையும் உன்னதங்களையும் பண்பாட்டையும் பணிவுடன் மேன்மையையும் பெற்றோம். அவரது நற்பணிகளால் அவரது ஆசீர்வாதத்தால் நாங்கள், எங்கள் குடும்பம், நல்ல மருமகன்களையும் நல்ல மருமகள்களையும் சிறந்த பேரன் பெயர்த்திகளையும் பெற்றிருக்கிறோம் என்னும் பகிர்தலையன்றி பிறிதில்லை.

    அன்பின் விரிவாக்கம்தான் எங்கள் குடும்பம். திருமலை குடும்பம் என்பது காந்தி குடும்பம் ஆகியது. காந்தி கல்வி நிலையத்தில் உள்ளவர்கள் இணைந்து விரிவாக்கினோம். தென்காசியிலிருந்து டி .கே. சி குடும்பத்தார் கி .ரா.வின் குடும்பமும் இணைந்தது. பின் கோவை சிறுவாணி வாசகர் மையம் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் குடும்பம், எழுத்தாளர்நாஞ்சில் நாடன் , ஆலோசகர் சொல்வனம் வ ஶ்ரீநிவாசன் , ராக் அமைப்பாளர் ரவீந்திரன் குடும்பம் , ஆடிட்டர் கிருஷ்ணகுமார் என பல்கிப்பெருகி மிகப்பெரிய குடும்பம் ஆகிவிட்டோம்.

    என் தந்தை வாழந்த வாழ்க்கை எங்களுக்கு சாத்தியமாக்கிக்கொடுத்துள்ளது.

    வண்ணதாசன், வண்ணநிலவன், சந்தியா நடராஜன் ஆகியோர் தாண்டி ரவி சுப்ரமணியன், சண்முகம் சுப்ரமணியம் என்று தொடங்கி இளைய தலைமுறைகள் வரை ஒரு நட்பு கிடைத்திருக்கிறதே!

    வரும் அக்டோபர் 26 அன்று தந்தையின் 100 வது பிறந்தநாள் பூர்த்தியாகிறது். அவரது திருநட்சத்திரம் மகம் 31 ஆம் தேதி வருவதாலும் ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதாலும் அன்று விமரிசையாக அவர் பணிபுரிந்த காந்தி மியூஸியத்தில் நடைபெறவிருக்கிறது.

    இவ்விழாவை ஆறு காந்தியநிறுவனங்கள்- புது தில்லி நேஷனல் அருங்காட்சியகம், சென்னை காந்தி கல்வி நிலையம், மதுரை தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை தமிழ்நாடு சர்வோதய மண்டல், மதுரை சர்வோதய இலக்கிய பண்ணை, மதுரை காந்திய இலக்கிய சங்கம் ஆகியவை விழா எடுத்து சிறப்பிக்கப் போகின்றன.

    இது எங்கள் குடும்பத்தாருக்கு மிகவும் பெருமையும் சந்தோஷமும் ஆகும் .

    அப்பா T.D. திருமலை எழுதிய “வினோபா” வாழ்க்கை வரலாற்று நூலும், அம்மா சீதா திருமலை இந்தியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்த காந்தியின் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய “தியாக உள்ளம்” என்னும் நூலும் மீள்பதிப்பபாக விழாவில் வெளியிடுகிறோம்.

    மேலும் அப்பாவின் வாழ்க்கை வரலாறை “மனதில் நிறைந்த மாமனிதர்” என்னும் நூலாக எங்களது சகோதரர் தி.விப்ரநாராயணன் எழுதியதும், அப்பாவைக் கதாநாயகனாக வைத்து “வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்று நண்பர் திரு கம்யூட் ராஜ் எழுதிய நாவலையும் முதற்பதிப்பாக விழாவில் வெளியிடுகிறோம். தவிர அப்பா 20 வருடங்கள் நடத்திய இலக்கிய இதழான “உலக இதய ஒலி”யின் முதல் இதழை அனைவருக்கும் அளிக்கிறோம்.

    முனைப்பாகப் பல தேசியத்தலைவர்கள்இருப்பினும் என் தந்தை T D திருமலை அவர்களுக்குத்தான் ஒரு நிறுவனம் அமைந்து இன்னமும் சிறப்பாக சென்னையில் காந்தி கல்வி நிலையமாகச் செயல்பட்டு, முனைவர் பிரேமா அண்ணாமலையால் சிறப்பாக இயங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.

    அனைவரும் விழாவிற்கு வந்திருந்து ஆசீர்வதிக்குமாறு எங்கள் அனைவரின் சார்பில் கேட்டு கொள்கிறேன்.!

    Share
  • தேடப்படாத இலக்கியமாய் இருக்கும்  குண்டலகேசியும் வளையாபதியும்!

    தேடப்படாத இலக்கியமாய் இருக்கும் குண்டலகேசியும் வளையாபதியும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    தமிழ் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும்  தமிழ்த்தாயை வாழ்த்திப் பாடிய பின்னர்தான் ஆரம்பிப்பது என்பது வழமையாக இருந்து வருகிறது. தேடப்படாத இலக்கியமாக இருக்கின்ற குண்டலகேசியையும், வளையாபதியையும் பற்றி உங்கள் யாவருக்கும் எடுத்துச் சொல்ல வந்திருக்கும் இவ்வேளையில் – தமிழ் வாழ்த்தினை சொல்லாமல் ஆரம்பித்தால் அது சிறப்பாய இருக்காதல்லவா! ஆதாலால் தமிழ் அன்னைக்கான வாழ்த்தினை வழங்கி தேடப்படாத இலக்கியத்தை தேடலாம் என்று எண்ணுகின்றேன்.

    காதொளிரும் குண்டலத்தாள்
    கனிமொழியாள் வாழ்க
    கைக்கு வளையாபதி கொள்
    கன்னிகையாள் வாழ்க
    மேதகு மென்மார்பிடைச்
    சிந்தாமணியாள் வாழ்க
    மின்னுமணி மேகலை சூழ்
    மெல்லிடையாள் வாழ்க
    சீதமலர்ப் பாதமொலி
    சிலம்புடையாள் வாழ்க

    வாழ்த்துப் பாடி ஆகிவிட்டது. இனி விஷயத்துக்கு வருவோம்.

    காணக்கிடைக்காத காப்பியங்கள் என்று கருதப்படுவனதான் வளையாபதியும் குண்டல கேசியுமாகும். சிலம்பதிகாரத்துக்கோ, மணிமேகலைக்கோ, சீவக சிந்தாமணிக்கோ கொடுக் கப்படுகின்ற முக்கியத்துவங்கள் வளையாபதிக்கோ குண்டலகேசிக்கோ கொடுக்கப்படுவதி ல்லை. இவை இரண்டைப் பற்றியும் யாருமே பெரிதாய் பேசுவதும் இல்லை. ஐம்பெரும் காப்பியங்கள் என்னும் நிலையில் இக்காப்பியங்கள் இரண்டும் காப்பிய வரிசையில் கடை சியாகவே வைக்கப் பட்டிருப்பதையும் கருத்திருத்த வேண்டும்.

    சிலம்புக்காவலர், சிலம்புச் செல்வர், என்றுதான் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. மணிமே கலையானது சிலம்போடு இணைக்கப்பட்டு “இரட்டைக் காப்பியங்கள்” என்று வியந்து கூறப்படுவதையும் காண் கின்றோம். இரட்டைக் காப்பியம் என்னும் பெயர் எப்படி வந்தது? யார் இவ்வாறு இணைத்தார்கள் என்பதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது அநபாயச் சோழ மன்னன் மிகவும் விரும்பிப் படித்த காப்பியமாக சீவகசிந்தாமணி இருந்தது என்று அறிய முடிகிறது. சிற்றின்ப ரசம் பொருந்திய சிந்தாமணியினை அரசன் விடாமல் படித்துச் சுவைப்பதை சேக்கிழாரின் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அநபாயனின் போக்கினை மாற்ற வேண்டுமென்று அல்லும் பகலும்  அமைச்சராய் இருந்த சேக்கிழார் எண்னினார். சேக்கிழாரின் எண்ணம் ஈடேறியதால் அநபாயன் மனம் மாறினான் என்றும் – இந்த மடை மாற்றத்துக்கு சேக்கிழாரின் பெரியபுராணம் என்னும் சைவசமயக் காப்பியம் காரணமாய் அமைந்தது என்பதையும் அறிகின்றோம்.

    ஆனால் காப்பிய வரிசையில் இடம் பெற்று நிற்கும் வளையாபதிக்கோ, குண்டல கேசி க்கோ இப்படியான ஒரு நிலை வரவில்லை என்பதையும் கருத்திருத்தல்  வேண்டும். என்றாலும் இவற்றை எல்லாம் மீறி இந்த இரண்டு காப்பியங்களும் பேசு பொருளாக இருக்கின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதே.அந்தக் காப்பியங்களைப் பற்றிப் பேசும் நிலையும் இன்று எனக்கும் வாய்த்திருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதே!

    ஆரம்பத்திலே பாடப்பட்ட தமிழ் வாழ்த்தினை எழுதியவருக்கும்-  குண்டலகேசி, வளையாபதி பற்றிய ஒரு ஆதங்கம் இருந்தே இருந்திருக்கிறது. அவரின் மனமிருந்த கருத்தே வாழ்த்தாய் மலர்ந்திருக்கிறது. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்றுபாரதி போற்றுகின்றார். ஆனால் இந்த வாழ்த்துப் பாடியவரோ சற்று வித்தியாசமாய் பார்க்கிறார். தமிழ் அன்னை என்றவுடன் முதலில் தெரிவது அவளின் முகம்தானே! முகத்துக்குப் பின்தான் மற்றைய உறுப்புகள் வந்தமையும். பார்க்கப்டாத முக்கியத்துவம் கொடுக்கப்படாத – குண்டலகேசியை “காதொளிரும் குண்டலத்தாள்” என்று முதலில் காட்டுகிறார். பின்னர் அடுத்த நிலையில் வளையாபதியினை “கைக்குவளையா பதிகொள் “கனிமொழியாள் வாழ்க” என்று காட்டி தனது மனக்கிடக்கையினை வெளிப்படுத்திய பின்புதான் – மென்மார்பிடைச் சிந்தாமணி என்றும், மின்னும் மேகலைசூழ் மெல்லிடை என்றும்  கடைசிசியில்த்தான் “சீதமலிப் பாதமலர் சிலம்புடையாள்” என்று ஐம்பெரும் காப்பிய வரிசையினையே மாற்றிப் பார்க்கும் ஒரு புதுமையை இப்புலவர் செய்திருக்கிறார் என்பதையும் கருத்திருத்தல் அவசியம் என்று எண்ணுகின்றேன். பார்க்கப்படாத தேடப்படாத நிலையில்  குண்டலகேசியும், வளையாபதியும், இருக்கக் கூடாது என்னும் மனக்குறை யினைப் போக்குவதாய் இந்த வாழ்த்து அமைகிறதல்லவா!

    கல்லூரிகளில் படிக்கும் காலத்தும், பல்கலைக்கழகங்களில் பயிலும் காலத்தும் – சிலம் பையும்,மணிமேகலையும், சிந்தாமணியையுமே முக்கியத்துவப்படுத்தி கற்பித்தார்கள். ஐம்பெரும் காப்பியம் என்று தமிழ் வகுப்புகளில் பாடம் நடத்தும் வேளையில் மட்டுமே, குண்டலகேசியினதும், வளையாபதியினதும், பெயர் உச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரண்டையும் பற்றிப் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதையும் சுட்டாமல் இருக்கவே  இயலவில்லை. அந்த அளவுக்கு குண்டலகேசியும், வளையாபதியும், பார்க்கப்படாத காப்பியங்களாகவே இருந்திருக்கின்றன. படிக்கின்ற காலத்தில் எனக்குள் ஒரு ஐயம் எழுந்தது. ஐம்பெரும் காப்பியங்கள் வரிசையில் இடம்பெறும் வளையாபதியும், குண்டல கேசியும் அனாதை நிலையில் ஏன் பார்க்கப்படுகின்றன என்பதுதான் அது!

    எனக்கு ஆசான்களாய் அமைந்த ஒரு பேராசிரியரிடம் இதனைப் பற்றித் துணிந்து கேட்டுவிட்டேன். எனது ஐயத்தைக் கேட்ட பேராசான் சற்று யோசித்து விட்டு “நாங்கள் பாடம் நடத்தாவிட்டால் என்ன? பாடப்பகுதியில் சேர்க்கப்படாவிட்டால்த்தான் என்ன? வளையாபதியும், குண்டலகேசியும் இல்லை என்றுதான் ஆகிவிடுமா? ஐம்பெரும் காப்பி யங்கள் என்னும் வரிசையிலிருந்தும் அகற்றப்பட்டுத்தான் போய்விடுமா? ஒருக்காலும் போகவே மாட்டாது. பொது மக்கள் மத்தியில் அந்த இரண்டுமே மிகவும் சிறப்பாகப் போய்ச்சேர்ந்தே விட்டது. உனக்கு அது தெரியுமா? என்று என்னை நோக்கி ஒரு கேள்விச் சர த்தை எனது ஐயப்பாட்டுக்கு மறுமொழியாக அவர் விடுத்தார்”

    “நான் மெளனமாய் இருந்தேன்”. என் ஆசானே பேசத் தொடங்கினார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் அவர்கள். அவர் முதலமைச்சர் நிலைக்கு வருவதற்கு முன்பே தேடப்படாத இலக்கியம் என்னும் குண்டலகேசியைத் தேர்ந்தெடுத்து நன்றாக உள்வாங்கியும் விட்டார். குண்டகேசியை யாவரும் அறியச் செய்வதற்கு உகந்த வழி எது என்பதை மனமெண்ணி அவர் தேர்ந்தெடுத்த வழிதான் திரைத்துறையாகும். திரையில் வந்தால் அது எல்லாவிடத்தும் செறிந்தும் பரந்தும் நிறைந்தும் விடு மென்று அவர் நம்பினார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் குண்டலகேசியைஉள்வாங்கி  “மந்திரிகுமாரி” என்னும் திரைக்காவியத்துக்கு வித்திட்டார். அவரே திரைக்கதை வசனமும் எழுதினார். அவரின் எண்ணத்தில் குண்டலகேசி காவியம் 1950 ஆம் ஆண்டில் மந்திரிகுமாரி என்னும் பெயரில் வெள்ளித்திரையில் வலம் வந்தது என்று என் ஆசான் மூச்சுவிடாமல் சொல்லி நின்றார்”. அந்தப் படத்தைப் பார்த்தால் புரியும் குண்டல கேசியின் கதை என்றார்.

    அத்துடன் நிற்காமல் எனது அடுத்த ஐயத்தையும் போக்கினார் ஆசான். வளையாபதியும் தேடாத இலக்கியமாய் இருக்கக் கூடாது என்று எண்ணினார் புரட்சிக்கவி பாரதியின் சீடர் பாரதிதாசன். கலைஞருக்கு மிகவும் பிடித்தமான தமிழ்க் கவிஞன்தான் புதுவைக்கவி பாரதிதாசன். அந்தப் புதுவைப் புயல் பாரதிதாசன் திரைக்கதை வசனம் எழுதி திரையில் வளையாபதியை வெளிபரப் பண்ணினார் . “வளையாபதி என்னும் பெயருடனேயே 1952 ஆம் ஆண்டில் வெள்ளித் திரையில் தேடப்படாத இலக்கியம் வந்தது” என்று எனது மனத்தெழுந்த ஐயங்களெலாம் விளங்கும் வகையில் – விளங்கும் உதாரணத்துடன் ஆசான் அவர்கள் சொன்னதும் – எனக்கு நல்ல திருப்தி கிடைத்தது. பள்ளிக்கூடமும் பல்கலைக் கழகமும் செய்யாததை வெள்ளித்திரை செய்து விட்டதே என்பது பெரும் ஆறுதலாய் எனக்கு இருந்தது.

    தேடப்படாத காவியங்கள் வரிசையில் வளையாபதிபோல் இருப்பதுதான் குண்டல கேசியாகும். வளையாபதி ஒன்பதாம் நூற்றைண்டைச் சேர்ந்தது. குண்டலகேசி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது அறிஞர்களின் கருத்தாய் இருக்கிறது. வளையாபதியின் ஆசிரியர் இன்னார் என்று அறியா நிலை இருக்கிறது. ஆனால் குண்டலகேசியின் ஆசிரியர் நாதகுத்தனார் என்று காட்டப்படுகிறார். எழுபத்து இரண்டு பாடல்களுடன் வளையாபதி அமைய குண்டலகேசியோ மிகக்குறைந்த அளவில் பத்தொன்பது பாடல்களுடன் இலக்கியமாய் கவனிக்கப்படுகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். வளையாபதி சமணத்தைப் பேச குண்டலகேசியோ பெளத்தத்தைப் பேசுகிறது.

    சிலம்பிலும் பெண்தான். மணிமேகலையிலும் பெண்தான். சிந்தாமணியிலும் பெண்ணே. குண்டலகேசிலும் பெண்தான் வந்து முன்னிற்கிறாள். பெண்கள் இல்லை என்றால் காப்பியங்களே இல்லை என்று சொல்லும் வகையில் காப்பியங்களைக் கொண்டு செல்லும் விதத்தில் பெண்களே இருப்பதும் நோக்கத்தக்தேயாகும். அதே வேளை வணிகர் குலம் என்பதும் தொடர் நிலையாக இருப்பதையும் காண்கின்றோம். வளையாபதியில் வருகின்ற கதாநாயகன் வணிகர் குலத்தவன். குண்டலகேசியின் கதாநாயகியும் வணிகர் குலத்தவள்தான். ஆனால் கதையின் போக்கு மட்டும் மாறுபடுகிறது.

    வசதிமிக்க வணிக குலத்துப் பிறந்தவள் பத்தா சீதா. இவளின் காதல் பொருந்தாவிடத்தில் சென்று விடுகிறது. அதனால் அவளின் வாழ்வும் வசந்தத்தை இழந்து விடுகிறது. வசதி யான குடும்பத்தைச் சேர்ந்தவள் – கொள்ளை அடிக்கும் ஒருவனை விரும்புகின்றாள். அரசனால் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டவனைக் கண்டதனால் காதல் கொண்டு அவனையே மணந்திட நினைந்து விடுகிறாள். மகளின் ஆசையினை தந்தை நிறை வேற்றும் பொருட்டு – கொலைக்களம் அனுப்பபட்ட கொள்ளைக்காரனைப் பொரு ளைக் கொடுத்து மீட்டு மகளுக்கு மணம் முடித்து வைக்கிறான். கள்வன் காதல் கணவனாய் வந்தமை பத்தாவுக்கு பெரும் ஆனந்தமாய் அமைகிறது.

    களவிலே ஊறிப்போனவனுக்கு களவினை மறந்து வாழ்வது என்பது சற்றுக் கடினந்தான். வீட்டிலேயே கைவரிசையினைக் காட்டிட முனைகிறான். இதனால் மனஸ்தாபம் உருவாகிறது. முடிவில் மனைவியையே கொன்றுவிடத் திட்டமும் இடுகிறான். அவளைக் காதல் மொழிகள் கூறி மலை உச்சிக்கே அழைத்துச் சென்று கொன்றுவிடத் திட்டமிட்டு அவளை மலை உச்சிக்குக் கூட்டிச் செல்கிறான். தன்னைக் கொல்லப் போகிறான் என்பதை அறிந்து கொண்ட பத்தா – தந்திரமாக அவனை மூன்றுமுறை வலம் வருபோல செய்து முடிவில் தன்னைக் கொல்ல வந்த தனது காதல் கணவனையே மலை உச்சியில் இருந்து தள்ளிக் கொன்று விடுகிறாள் என்று கதை அமைகிறது.

    வாராய் நீ வாராய்
    போகுமிடம் வெகு தூரமில்லை
    நீவாராய்

    ஆகா மாரிதம் வீசுவதாலே
    ஆனந்தம் பொங்குதே மனதிலே

    இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்
    கலந்துயிர் விண்ணினைக் காண்பாய்
    அமைதி நிலவுதே
    சாந்தம் தவழுதே

    முடிவிலா மோன நிலையை நீ
    மலை முடிவில் காணுவாய்
    ஈடிலா அழகு சிகரம் மீதிலே
    கண்டு இன்பமே கொள்வோம்

    இன்பம் அடைந்தே இகமறந்தே
    வேறு உலகம் காணுவாய் அங்கே

    புலியினைத் தொடர்ந்தே
    புதுமான் நீயே

    இந்தப் பாடல் வந்து எழுபத்து ஒரு ஆண்டாகிறது. ஏழாம் நூற்றாண்டில் வந்த குண்டலகேசிக் கதைக்கு ஏற்ற பாடலைக் கேட்கின்ற வேளை கதையின் காட்சி கண்முன்னேயே வந்து நிற்கிறதல்லவா? காவியக்காட்சி வெள்ளித் திரையில் மந்திரிகுமாரியாய் மலர்ந்தது என்பதை நினைத்துப் பார்ப்போம்.

    சமணமும், பெளத்தமும் வாழ்க்கை நிலையாமையினை வலியுறுத்தும் பாங்கிலேதான் கருத்துக்களைக் கொட்டியபடியே இருக்கும். அந்த வகையில் காதலித்தவன் வஞ்சகம் செய்தபடியால் குண்டலகேசியின் அப்போதைய மன நிலைக்குச் சமணந்தான் மருந்தாய் அமைந்தது எனலாம். சமணப்பள்ளியை அடைந்தாள். சமண சம்பிரதாயப்படி அவளின் கூந்தல்கள் களையப்பட்டன. மழித்த தலையுடன் சமணப்பள்ளியில் இருந்தாள். சமணத்தில் ஊறிய அவள் சமணத்தை எதிர்ப்போரை யெல்லாம் வாதித்திட்டு நிற்கும் நிலைக்கு வந்து நின்றாள். ஆனால் பெளத்தத்திடம் அவள் வாதம் எடுபடா நிலையில் முடிவில் அவள் பெளத்தத்துக்கே மாறிவிடாள். மழிக்கப்பட்ட அவளின் கூந்தல் சுருண்டு வளர்ந்தது.வளைந்து குண்டலம் போல் அவளின் கூந்தல் காணப்பட்டதால் குண்டலகேசி என்றே அழைக்கப்ட்டாள். அந்தப் பெயரே இக்காப்பியத்துக்கும் பொருத்தமாய் அமைந்து விட்டது.

    யாக்ககை நிலையாமை, கூற்றுவனின் கொடுமை,வாழ்க்கையின் நிலையாமை, உடம்பின் இழிவு, என்பன பற்றியெல்லாம் குண்டலகேசி தன் கருத்துக்களைப் புகன்று நிற்கிறது,

    பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
    காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
    மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
    நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ

    நிலையாமையினை விளக்குதற்கு குண்டலகேசி ஆசிரியர் தருகின்ற ஒவ்வொரு படிமுறையும் அவரின் பேராளுமையினையே காட்டி நிற்கிறது எனலாம். இதைவிட இலகுவாய் நிலையாமையினை விளக்கிடல் முடியுமா என்றுதான் எண்ணிப் பாருங்களேன்! செத்துப்பிழைத்துக் கொண்டே ஒவ்வொரு நாளுமே இருக்கின்றோம். ஆனால் அதற்காக யாருமே அழுவதே இல்லை. இந்த உடலைவிட்டு உயிர்பிரிந்த போது மட்டும் ஏன்தான் அழுகிறார்களோ தெரியவில்லை என்று – யாவரும் விழித்திட வேண்டும் என்று நிலை யாமையினை எப்படி நாசுக்காய் காட்டுகிறார் குண்டலகேசி ஆசிரியர்.

    மறிய மறியும் மலிர்ப மலிரும்
    பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்
    அறிவது அறிவர் அழுங்கார் உவவார்
    உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று

    நயமும், நலமும், பொதிந்த பாடல். பாடலின் அமைப்பே அருமையோ அருமை! சொல்லும் பாங்கும், சொல்ல தேர்ந்தெடுத்த சொற்களின் பாங்கும், அந்தச் சொற்களைப் பாடலாய்க் கோர்த்த பாங்கும் வியக்காமல் இருந்திடவே முடியாது. அழுதாலும் பயனில்லை. ஆனந்தப் படுவதாலும் பயனில்லை. வருவதும் வரும். வந்தது வந்ததுபோல் போயும் விடும். போய்விடும் பொழுது புலம்புவதால் ஆவது எதுவுமே இல்லை. என்ன அருமையான வாழ்க்கைத் தத்துவம். தேடப்படாத குண்டலகேசியா இப்படிச் சொல்கிறது என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா!

    மண்ணுளார் தம்மைப் போல்வர் மாட்டதே அன்று வாய்மை
    நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
    விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
    கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையை யார் கறையன்று என்பார்

    கறை என்பது மனிதராயினும், தேவராயினும் ஏன் கண்ணுதற் கடவுளாகிய சிவனே ஆயினும் கறை என்பது கறைதான். தவறு என்றால் அங்கு எந்தவிதப் பாகுபாட்டுக்கும் இடமே இல்லை. என்று பார்க்கும் குண்டலகேசியின் பார்வை சுட்டெரிக்கும் தூய்மையான பார்வையாய் தெரிகிறதல்லவா!

    உவமைநயம் மிக்க நல்லதொரு பாடலையும் குண்டலகேசியில் பார்க்கிறோம். உவமையினைக் காட்டிட அமைந்தாலும் அங்கும் தத்துவமே முன்னிற்கிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்
    ஆயுவினை நோக்கியுள வாழ்க்கை யதுவேபோல்
    தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்ல்லாத்
    தூயவனை நோக்கியுள துப்பரவும் எல்லாம்.

    காற்றை நம்பியே ஓடம் செல்லுகிறது. ஊழ்வினையின் வழியேதான்  வாழ்க்கை அமைகிறது. மனத்தில் தூய்மை வருவதற்கு உகந்தவழி எது தெரியுமா? தூய மனத்தினை உடைய அந்த புத்தபிரானை நினைப்பதேயாகும், இங்கு ஒவ்வொன்றுக்குமே காட்டப்படும் உவமையினை எண்ணிப்பார்த்தால் குண்டலகேசியும் நல்லதொரு இலக்கியமே என்பது புலனாகும்.

    ஐம்பெரும் காப்பிய வரிசையில் இடம் பெறும் வளையாபதி ஒன்பதாம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்னும் கருத்து இலக்கிய அறிஞரிடையே காணப்படுகிறது. அதேவேளை இதனை வள்ளுவத்தின் பின் வந்ததென்றும்  அறிஞர்கள் சிலர் சொல்லு கிறார்கள். வள்ளுவத்தின் சில பாடல்களை எடுத்தாளும் தன்மையினை வளையாபதி கொண்டு இருப்பதால் இப்படிக் கூறும் நிலையும் வந்திருக்கலாமோ என்றுகூடக் கருதிட முடிகிறதல்லவா? இது சமணம் சார்ந்தது என்னும் கருத்து இருக்கிறது. அதேவேளை இதில்வரும் நாயகன் சைவமதத்தவனாய் இருப்பதால் – சமணம்  சார்ந்தது என்று எடுப்பது பொருந்துமா என்னும் நிலையும் அறிஞரிடையே காணப்படுகிறது. ஆனால் வளையாபதியின் பாடல்களில் காணப்படும் கருத்துக்களை நோக்கும் பொழுது சமணச் சார்ப்பான தன்மையே பெரிதும் இருப்பதும் தெரிய வருகிறது.

    வளையாபதிக் காவியத்தின் ஆசிரியர் யார் என்பதும் அறியமுடியவில்லை. எழுபத்து இரண்டு பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஆனாலும் இப்பாடல்களை மையப்படுத்தி ஒரு கதையும் அமைந்தே இருக்கிறது. அந்தக் கதையும் ஊகமாய்த்தான் இருக்கும் என்னும் ஒரு நோக்கும் அறிஞர்களிடையே  இருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    எழுபத்து இராண்டு பாடல்களுமே ஒரே இடத்தில் கிடைக்க வில்லை. புறத்திரட்டு என்னும் நூல் பதினான்காம் நூற்றாண்டில் வந்தமைகிறது. அந்த நூலில் இருந்து அறுபத்து இரண்டு பாடல்களை வளையாபதியின் பாடல்கள் என்று அறிஞர்கள் கண்டறிந் திருக்கிறார்கள். அடியார்க்கு நல்லார் என்பார் சிலப்ப திகாரத்துக்கு உரை எழுதி இருக் கிறார். அவர் உரை எழுதும் பொழுது மூன்று பாடல்களை எடுத்துக்காட்டாய் கையா ண்டிருக்கின்றார். அந்த மூன்று பாட்டும் வளையாபதியின் பாட்டென்று தீர்மானித் திருக் கிறார்கள். அத்துடன் மேலும் இரண்டு பாடல்களும் கிடைத்திருக்கின்றன. இலக்கணத்துக் கென்று பல நூல்கள் தமிழில் இருக்கின்றன அவற்றில் யாப்பருங்கலக்காரிகை என்பதும் முக்கிய இலக்கண நூலாகும்.

    இந்த நூலுக்கு ஒரு தமிழறிஞரால் எழுதப்பட்ட விருத்தி உரையில் இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாய் கையாளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கையாளப்பட்ட இந்த இரண்டு பாடல்களும் வளையாபதிக்கே உரியதாகும் என்று தமிழறிஞர்கள் சுட்டிக் காட்டி இருக் கிறார்கள். வளையாபதிக்கான பாடல்கள் இப்படித்தான் சேர்க்கப்பட்டன என்பதை வளை யாபதி பற்றி நோக்கும் பொழுது அறியக்கூடியதாக இருக்கிறது.

    நிறைவான நிலையில் வளையாபதி காப்பியம் கிடைக்கா விட்டாலும் – கிடைத்த பாடல் களைக் கருத்திருத்தில் இருத்தி அதனையும் காவிய வரிசையில் வைத்தமை யினைப் பாராட்டியே ஆகவேண்டும்.குறைவான பாடல்கள் கிடைத்த நிலையிலும் அதனூடாக ஒரு கதையினையும் இணைத்த பாங்கையும் பாராட்டவே வேண்டும்.

    சிலம்பில் புகார் வந்தது போல் வளையாபதியிலும் புகார்வருகிறது. இங்கு தான் – கதையின் நாயகனான நவகோடி நாராயணன் வருகிறான். சிலம்பின் நாயகனான கோவலன் கண்ணகியை மணம் முடிக்கிறான். பின்னர் மாதவியையும் மணக்கிறான். கோவலனும் கண்ணகியும் வணிகர் குலத்தவர். மாதவி அக்குலத்தவள் அல்ல. வளை யாபதி நாயகன் நவகோடி நாராயணனும் வணிகர் குலத்தவன். வணிகர்  குலத் துப் பெண்ணை இவனும் முதலில் மணக்கிறான். பின்னர் வணிகர் குலம் அல்லாத இடத்தில் இருக்கும் ஒரு பெண்ணையும் இரண்டாந்தாரமாய்  மணக்கிறான். கிட்டத்தட்ட கோவலனின் சகோதரன் போல வளையாபதி நாயகன் நவகோடி நாராயணனும் அமைகிறான் அல்லவா!

    சிலம்பின் நோக்கம் வேறு. அதனால் அங்கு கதையின் திருப்பம் வேறு விதமாய் மாறுகிறது. வளையாபதியை எழுதிய ஆசிரியர் கதையினை வேறு நிலையில் காட்டிட முன் வருகிறார். தன் குலத்தை விட்டு வேறு குலத்தில் இரண்டாந்தாரமாய் நவகோடி நாராயணன் திருமணம் செய்ததை அவனுடைய வணிக குலத்தார் எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பார் – அவனையே வணிகர் குலத்தை விட்டு ஒதுக்கி விடுவோம் என்று எச்சரிக்கையும் செய்கிறார்கள். குலத்தாரின் எதிர்ப்புக்கு அஞ்சிய நிலையில் நவகோடி நாராயணன் தன்னுடைய இரண்டாவது மனைவியை விட்டு விட்டு தனது வணிகத்தைக் கவனிக்கக் கடற்பயணத்தை மேற்கொள்ளுகின்றான். அவனால் கைவிடப்பட்ட அவனின் இரண்டாவது மனைவி அப்பொழுது வயிற்றில் கருவினைச் சுமந்தபடி இருந்தாள் என்பது முக்கியமாகும்.

    கடல் பயணத்தால் ஈட்டிய பெருஞ் செல்வத்துடன் முதல் மனைவியோடு நவகோடி நாராயணன் ஆனந்தமாய் வாழ்கிறான். அபலையான அவன் இரண்டாம் மனைவி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கிறாள். அந்தப் பிள்ளை வளர்ந்து வரும் வேளை – அவனது நண்பர்கள்  “தகப்பன் பெயரே தெரியாதவன்” என்று கேலியும் கிண்டலுமாகப் பேசி அவனை மனம் நோகும்படி செய்து விடுகிறார்கள். மனம் நொந்த பிள்ளை தாயிடம் வேதனையைக் கொட்டித் தீர்க்கின்றான். பிள்ளையின் கவலை தாயையும் வாட்டியதால் இதுவரை மூடி வைத்திருந்த விஷயத்தை சொல்லி விடுகிறாள்.

    தனக்குத் தந்தை இருக்கிறார் என்று கேட்டதும் கவலைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு துள்ளலுடனும், உற்சாகத்துடனும், ஆனந்தந்துடனும் தந்தையை நாடிச் செல்லுகின்றான். தந்தையைக் காணுகிறான். ஆனால் தந்தையோ தன்னுடைய வணைகர் குலத்துக் கட்டுப்பாட்டுக்குப் பயந்து அவனை மகனாக ஏற்றிட மறுத்துவிடுகிறான். ஏற்க மறுத்த விஷயத்தை அறிந்த தாயானாவள் சக்தியாய் விளங்கும் காளியை வேண்டுகிறாள். வணிகர் குலத்துப் பெண்கள் மத்தியில் காளியின் அனுக்கிரகத்தால் அவள் புனிதமானவள் என்னும் நிலை வெளிச்சமாகிறது. நிறைவில் நவகோடி நாராயணன் கைவிட்ட மனைவியையும், மகனையும் இணைத்துக் கொள்ளுகின்றான். அந்தப் பிள்ளைக்கு வீரபாணிபன் என்று பெயரையும் சூட்டி எல்லோரும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள் என்று வளையாபதி கதை நல்லதாய் நிறைவுறுகிறது.

    நல்லதொரு சுபமான திரைப்படம் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது அல்லவா? இப்படியான ஒரு கதை இதற்குள் புதைதிருந்த காரணத் தால்த்தான் – பாரதி தாசன் இதனைத் திரைக்காவியம் ஆக்கினாரோ என்றும் நினைத்திட வைக்கிறதல்லவா!

    வளையாபதி இவ்வளவுதானா? இதனைப் படிப்பதால் என்னதான் வரப் போகிறது? வளையாபதி ஏதாவது கருத்துக்களைப் பகர்ந்திருக்கிறதா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது அல்லவா! கருத்துக்கள் இல்லா விட்டால் அங்கு காவியமும் இல்லை. இலக்கியமும் இல்லை என்றாகிவிடும் அல்லவா! சமணக் காவியமா, சைவக் காவியமா என்றெல்லாம் விவாதிப்பதை விட்டு விட்டு – இக்காவியம் எதனைக் கூறுகிறது என்று பார்த்தால் – கல்லாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை இவைதான் இக்காவியத்தின் கருப்பொருள்களாகும்.  அதேவேளை வாழ்வியலுக்கு ஏற்ற கருத்துக்கதுக்களையும் காட்டாமலும் வளையாபதி இருக்கவில்லை என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். இங்கே காட்டப்பட்ட கருக்கள், சைவத்திலும் போற்றப்படு கின்றன. அதே வேளை சமணனந்தான் இக்கருக்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக் கிறது என்பது பொதுவான நிலை எனலாம். ஆதலால் வளையாபதியினைச் சமணக் காப்பியம் என்றே எடுக்கும் நிலை வந்துவிட்டது.

    பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்
    துறையிலா வசன வாவி துகில் இலாக் கோலத் தூய்மை
    நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச்
    சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே

    என்னதான் இருந்தாலும் பிள்ளைச் செல்வம் இல்லாவிட்டால் எல்லாமே வீண்தான் என்று காட்டும் இந்தக் கருவானது வாழ்வியலைக் குறிப்பதாய் இருக்கிறது அல்லவா? வளையாபதியின் பார்வை இப்படியும் இருக்கிறது.

    உயர்குடி நனியுட் டோன்றலூனமில் யாகையாதன்
    மயிர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல்
    பெரிதுண ரறிவே யாதல் பேரறங் கோட லென்றாங்
    கரிதிவை பெறுதலேடா பெற்றவர் மக்க ளென்பார்

    என்னென்ன நல்ல பண்புகள் இருக்க வேண்டுமோ அத்தனையும் அமையப் பெறுதல் வேண்டும். அவ்வாறு அமையப் பெறுபவர்களே பிறவியின் பயனை அடைந்து நல்ல பிறப்புடையாராய் மதிக்கப்படுவர் என்பதும் வளையாபதியின் பெருநிலை எனலாம். செப்பம் வேண்டும், நாண் வேண்டும். ஒழுக்கமும், வாய்மையும்  அமைய வேண்டும். ஈகையும் கூடவே இன்சொல்லும் இருக்க வேண்டும்.அதுமட்டுமன்றி இகழாமையும் கொள்ள வேண்டும்.ஒழுக்கத்தைப் பேணவேண்டும், பணிவுடமையினைப் பக்குவமாக்க வேண்டும்.என்னும் வாழ்வியல் தத்துவங்கள் இப்பாடலினால் காட்டப்படுவது கருத்திருத்த வேண்டியதே.

    அடக்கமுடமை, அறமனை காத்தல், பிறன்மனை நாடாமை, உண்டி கொடுத்தலின் உயர்வு, அருளின் பெருமை, புலால் மறுப்பதன் உன்னதம், தவத்தின் மாண்பு, காமத்தின் இழிவு, கள்ளாமை விளக்கம், செல்வத்தின் நிலையாமை, இளமை நிலையாமை என்று பல அறக்கருத்துக்களை வழங்கும் பாங்கில் – கிடைத்திருக்கும் வளையாபதிப் பாடல்கள் தந்து நிற்கின்றன.

    வல்கண் மடவார் விழைவுஒழிய யாம்விழையக்
    கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம்
    நாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்தது இனி
    நீத்தல் துணிவாம் நிலையாது இளைமையே

    என்னும் பாடலை மனமிருத்தினால் ஆடாத ஆட்டமும் பாடாத பாட்டுகளுமாய் திரியவே மாட்டோம்.இருக்கும் வாழ்வினைச் சீராக வாழ்வதற்கே முயலுவோம்.

    வளையாபதியின் கிடைத்த பாடல்களே இவ்வளவு அரிய கருத்துக்களை வழங்கி இருக்கிறது என்றால் – முழுமையாய் வளையாபதி கிடைத்திருக்கு மானால் – எத்தனையோ பொக்கிஷமான கருத்துக்களை அனைவருமே பெற்றுப் பயன் அடைந்திருப்போம். நல்ல கற்பனை வளமான பாடல்களையும் வளையாபதி கொண்டி ருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    காப்பு + இயம் என்பதே காப்பியம் ஆகிறது. மக்களின் வாழ்வியல் சிந்தனை, சமய நம்பிக்கைகள், அரசியல் நிலை, இவற்றை உள்ளடக்கியதாய் அதனூடாக பயணிக்கும் வகையில் கதைமாந்தரைக் கொண்டு கதையை  நடத்தி – அக்கதை மாந்தரின் வாயிலாகப் பலகருத்துக்களை வெளியிடும் பாங்கில் – படைத்த புலவனின் ஆளுமையினை வெளிப்படுத்தும் பாங்கில் முகிழ்த்து வந்து நிற்பதுதான் காவியம் ஆகிறது. காவியம் என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் இருக்கின்றன. எல்லாக் காவியங்களிலும் இந்த வரை விலக்கணங்கள் முழுமை பெற்றிருக்கின்றனவா என்பதும் ஆராய்வுக்கு உரியதேயாகும்.

    காவியங்களில் தலைவன் தலைவி நிச்சயம் இடம் பெறுவார்கள். சில வேளை தலைவனை விட தலைவியே அக்காவியத்தில் முதன்மையாய் இருப்பதையும் காணமுடிகிறது. காவியத்தைப் படைப்பவரின் எண்ணமே இவற்றை வடிவமைக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. கதைகளினூடாக பல்வகையான அறங்களை வெளிப்படுத்திக் காட்டும் பாங்கினையே காவியங்களில் காண்கிறோம்.

    அந்தவகையில் ஐம்பெரும் காவியங்களும் இணைந்தே இருக்கின்றன என்றுதான் எடுக்க முடிகிறது. குண்டலகேசியையும் வளையாபதியையும் படிப்பதால் என்னவந்து விடப் போகிறது என்னும் எண்ணமும் நிச்சயம் ஏற்பட்டே ஆகும்.தேடப்படாத இலக்கியங்களான இவை  – பல கருத்துக்களைச் செப்பி நிற்பதற்காகவேனும் படிக்க வேண்டும். இந்தக் காவியங்கள் காலத்தும் திருமணம் என்பதில் சாதிக்கட்டுப்பாடு மிகவும் இறுக்கமாய் இருந்திருக்கிறது என்பதும் அறிந்திட முடியும். தாக்கத்துக்கு உள்ளானவர்கள் பெண்களாகவே கானப்படுகிறார்கள் என்பதையும் அறிந்திடுகிறோம் பெண்களையே – அக்காலம் தொடக்கம் இக்காலம் வரையில் துன்பத்துள் ஆழ்த்துவது என்பது சமூகத்தின் மாற்ற முடியா நிலை என்பதும் மனத்தில் பதிகிறது. எதிர்த்த பெண்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களின் வாழ்வு வசந்தம் இல்லாது வரண்டே போனது என்பதும் மனத்தில் பதிகிறது. முடிவில் உலக வாழ்வினையே வெறுத்து ஒதுக்கும் நிலைக்கே பெண்கள் வந்தும் விடுகிறார்கள் என்பதையே குண்டலகேசியும் , வளையாபதியும் எமக்கெல்லாம் காட்டி நிற்கிறது எனலாம்.

    காலத்தின் கருத்துக்களே இலக்கியமாய் எழுகின்றன. இலக்கிய வரலாற்று அறிஞரின் நோக்கும் இதுவாகத்தான் இருக்கிறது. ஐம்பெரும் காப்பியங்கள் எழுந்த காலத்துச் சமய நிலையும், சமூக நிலையும், அரசியல் நிலையும், அந்தக் காப்பியங்களிலும் புகுந்துவிடாமல் இருக்கவே இல்லை என்பதும் நோக்கத்தக்கதே. ஐம்பெரும் காப்பியங்களிலும் சமயக்கருத்துகள் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்க முடியாத் ஒன்றாகவே காணப்படுகிறது. சிலம்பினைச் சமணம் சார்ந்தது என்று சொன்னாலும் கூட – அது சமய நல்லிணக்க்த்தைப் பேணுவதாய் அமைகிறது என்று அறிஞர் சுட்டிக் காட்டுவார்கள். அதே வேளை தேடப்படாத இலக்கியம் என்று நான் குறிப்பிடும் குண்டல்கேசியும், வளையாபதியும், சமய சமரசத்துக்கு அப்பால் சென்று – சமணம் என்னும் மதம்சார்ந்த உறுதியான கருத்துக்களைக் காட்டும் பாங்கிலேயான் அமைந்திருக்கின்றன என்பதும் மனங்கொள்ளத் தக்கதேயாகும். அதேவளை   வாழ்வியலிலும்  அறத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாய், நிலையாமையினை மேலோங்கிக் காட்டும் பாங்கினையே – தேடப்படாத இலக்கியங்கள் செப்பி நிற்கின்றன என்பதும் நோக்கத்தக்கதேயாகும். கதைக்குக் கதையாயும், கருத்துக்களுக்குக் கருத்தாயும் – காட்டி நிற்கும் குண்டலகேசியையும், வளையாபதியையும் “தேடப்படாத இலக்கியம்” என்று எண்ணுவதையோ அல்லது சொல்லுவதையோ மறந்துவிடுவோம். அவையும் நாடப்படும் இலக்கியமே என்பதையும் கருத்திருத்துவோம்!

    Share
  • பூகம்பத்தால் பூகோளச் சுற்றச்சின் கோணம் மாறி, சூடேறுகிறது பூமி

    பூகம்பத்தால் பூகோளச் சுற்றச்சின் கோணம் மாறி, சூடேறுகிறது பூமி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++

    https://youtu.be/fHS042a-Nb0
    https://youtu.be/-lLgA9C1G4c
    https://youtu.be/WLRA87TKXLM
    https://youtu.be/hvjTicipAwo
    https://youtu.be/xQSHxY5ZR6w
    https://youtu.be/dfiT3Zh5q3c
    https://youtu.be/ZD8THEz18gc
    https://youtu.be/OqsRD4HPtH0
    https://youtu.be/xVQnPytgwQ0
    https://youtu.be/B4Q271UaNPo
    https://youtu.be/3Uua_OEW2QY

    +++++++++

    Milankovitch cycles 2

    பூகோளம் மின்வலை யுகத்தில்
    பொரி உருண்டை ஆனது !
    ஓகோ வென்றிருந்த உலக மின்று
    உருமாறிப் போனது !
    பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை
    பூச்சரித்துக் கந்தை ஆனது !
    மூச்சடைத்து விழி பிதுக்க
    சூட்டு யுக வெடிப் போர் மூளுது !
    தொத்து நோய் குணமாக்க
    தூயநீர் வளம், காற்று வளம் தேவை !
    காலநிலை மாறுத லுக்குக்
    காரணிகள் வேறு வேறு !
    கரங் கோத்து பூமி காக்க, அனைவரும்
    வருவீ ர் எனக் கூறு கூறு !
    ஓரிடத்தில் எரிமலை வெடித்து
    உலகெலாம் பரவும்
    கரும்புகை மூட்டம் !
    துருவப் பனிக்குன்று வேனிற்காலம்
    உருகி, உருகி
    உப்பு  நீர்க்கடல் மட்டம் உயரும் !
    உஷ்ணம் மெதுவாய் ஏறும் !
    தாளம் தடுமாறி
    வேளை தவறிப் பருவக் காலம் மாறி,
    கோடை காலம் நீடிக்கும்,
    குளிர் காலம் குறுகிப் போகும்,
    பனி மலைகள் வளராமல்
    குள்ள மாகும்
    நில வளம் செழிப்பிழக்கும் !
    நிலப் பகுதி நீர்மய மாகும் !
    நீர்ப் பகுதி நிலமாகிப் போகும் !
    உணவுப் பயிர்கள் சேத மாகும் !
    மனித நாகரீகம் நாசமாகி
    புனித வாழ்வு மோசமாகி
    வெறிபிடித் தாளும்
    வெப்ப யுகப் பிரளயம் !

    +++++++++++++++++++++++++

    கடந்த 282,000 ஆண்டு கணிப்புத் தகவல் இலக்கங்களை [Data] ஆராய்ந்ததில், முதன் முறையாக பூகோள அச்சின் சாய்வுக்கும், பூமியின் பேரளவு நீர்மை, உஷ்ணப் பாதிப்புக்கும் பூமத்திய ரேகை உட்புறத் தளங்களில் [Inter-tropical Convergence Zone -ITCZ] ஓர் தொடர்பு உள்ளதைக் கண்டுபிடித்தோம். தகவல் இலக்கங்களை நாங்கள் கணித முப்பட்டை [Mathematical Prism] வழியாக அணித்துவத்தைப் [Pattern] பார்த்ததில் 41,000 ஆண்டு சுழற்சியில் மாறும் பூகோளச் சுற்று அச்சின் சாய்வுக்குத் தொடர்பு உள்ளதை அறிந்தோம்.

    கிரிஸ்டீன் திலாங், பூதளக் காலநிலை விஞ்ஞானி [University of Science & Technology of China & National Taiwan University Research Collaborators]

    What we can do

    பூகோளச் சுற்று அச்சின் சாய்வுக்கும், பூமியின் நீர்மை / உஷ்ணப் பாதிப்புக்கும் தொடர்பு உள்ளது.

    பூகோளச் சுற்று அச்சின் சாய்வு 41,000 ஆண்டுச் சுழற்சி மீட்சியில் மாறி வருகிறது.  உச்ச அளவுச் சாய்வு : 24.5 டிகிரி. அதம அளவு : 21.5 டிகிரி. தற்போதைய அளவு : 23.5 டிகிரி. பூமியின் சுற்றச்சு சாய்வுத் திரிபு 23,000 ஆண்டு சுழற்சியில் பூமியில் பனித்தட்டு உருவாக்கத்தைப் பாதிக்கிறது.  சுமார் 100,000 ஆண்டுக்கு ஒருமுறை சுற்று வீதி மாறும் அந்த நிகழ்ச்சி “சுற்றச்சுத் திரிபாட்டம்”  [Precession] என்று குறிப்பிடப் படுகிறது. அதனால் பூமத்தியப் பகுதிகளும் [Tropics] பரிதியைப் பூமி சுற்றும் சுற்று வீதியும் [Earth’s Orbit] பாதிப்படைகின்றன.  பூமியின் சுற்று வீதி மாறுதல் பூகோளத்தில் காலநிலைப் பாதிப்பை உண்டாக்கும். அந்த பூகோள சுழற்சி நிகழ்ச்சி “மிலன்கோவிச் சுழற்சி” [Milankovitch Cycle] என்று குறிப்பிடப் படுகிறது.

    சமீபத்தில் இந்த ஆய்வு முடிவை வெளியிட்ட குழுவினர் சைனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவியல் காலநிலை விஞ்ஞானி கிரிஸ்டீன் திலாங்க் [Kristine DeLong] தலைமையில் பணியாற்றியவர். அவர்கள் கடந்த 282,000 ஆண்டுகளாய்க் கிடைத்த தகவல் இலக்கத்தை வைத்து ஆய்வுகள் செய்து, முதன்முறையாக பூமியின் சுற்றச்சு சாய்வு திரிபுக்கும், பூமத்தியப் பகுதி நீர்மை, உஷ்ண மாறுதலுக்கும் தொடர்பு உள்ளதென அறிவித்தார். அந்த முடிவறிக்கை 2015 நவம்பர் 25 தேதி “இயற்கை வெளியீட்டு” [Nature Communications] இதழில் வெளி வந்துள்ளது.       

    Seasonal variations

    பூதளவியல் சீர்குலைப்பு, பருவச் சுழற்சி, காலநிலைப் பாதிப்புகளை  விளைவிப்பதால்,  அது அனைத்துப் பூகோள மாந்தரின் பிரச்சனையாக ஆகிவிட்டது.   அதைத் தீர்வு செய்ய முற்படும் போது, மனித இனத்தில் சில பிரிவினர் நிச்சயம் பாதிக்கப் படுவதைத் தவிர்க்க முடியாது.   உலக சமூக மாந்தர் முன்வந்து, பூதள மாந்தர் உரிமை, தேவைகளை நோக்கி,  அதைப் பயின்று ஆய்வு செய்து, முழுக் கவனமுடன் சீர்ப்படுத்த இப்போது எடுத்து நடத்த முற்பட வேண்டும்.

    ஜான்  கார்ல்சன் [சட்டப் பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம்]

    Global ocean mean temperature
    2013 மே மாதம் நவீன வரலாற்றில் முதன்முறையாக கரியமில வாயுத் திரட்சி 400 ppm [parts per million]  என்று ஹவாயியில் உள்ள மௌனா லோவா நோக்ககக் கருவிகள் [Mauna Loa Observatory] காட்டி ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக நிபுணர் வெளியிட்டு உள்ளார்கள். சென்ற முறை பூதளவியல் நிபுணர் இம்மாதிரி 400 ppm அளவு கரியமில வாயுத் திரட்சி [Concentration] இருந்தது முன்பு மூன்று – ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு இடையே “பிளியோசீன்” காலத்தில் [Pliocene Epoch] இருந்ததாக தற்போது நம்புகிறார்கள்.   அப்போது பூகோளத்தின் உஷ்ணம் : 3.5 முதல் 9 டிகிரி F [ 2 to 5 டிகிரி C ] இப்போது உள்ளதை விட மிகையாக இருந்திருக்கிறது.  அந்தப் பிளியோசீன் யுகத்தில் மரங்கள் ஆர்க்டிக் கடல் வரை [Arctic Tundra] வளர்ந்திருந்தன.   கடல் மட்டம் உயர்ந்து 65 அடி முதல் 80 அடி வரை பொங்கி எழுதிருந்தது !

    ஜேம்ஸ் ஒயிட் [Director, CU-Boulder’s Institute of Arctic and Alpine Research]  

    அடிப்படை விதிப்படி ஆர்க்டிக் பனித் தளங்கள் உருகும் போது, ஆர்க்டிக் கடல் ஒரு பெரும் நீர்மை ஆவிப் போர்வை, முகிலை [Blanket of water vapour and clouds]  உண்டாக்கி, ஆர்க்டிக் துருவப் பகுதியைச் சூடாக வைத்துக் கொண்டு வருகிறது.

    ஜேம்ஸ் ஒயிட்.

    World sharing of gas emiissions

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டி காவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    Arctic Ice Retreat

    Antarctica

    “கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது. சூடேறும் பூகோளம் மெல்ல மெல்லச் சூடேறி 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.”

    ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)]

    “கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும். கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டித்திருக்கிறது.  அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார் !  எதிர்பார்த்தை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.”

    கிரிஸ்டொஃபர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]

    Pollution groups

    “55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் தீவிரச் சூடேற்றம் உண்டாகி மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினம் அழிந்து போயின என்றும், அதே சமயத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் இன்றைய (நவம்பர் 19, 1999) விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது.  அந்த மாதிரி வெப்ப யுகம் “சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது.  அது 10,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை வருகிறது.”

    ஜான் ரோச் [John Roach, Environmental News Network (Nov 19, 1999)]

    “மீதேன் வாயு வெளியேற்றத்துக்கும், வெப்பச் சூடு ஏற்றத்துக்கும் உள்ள உறவு கடற்தளப் படிகைகளை [Ocean Floor Sediments] ஆராய்ந்து கண்ட விளைவுகளை வைத்துத் தீர்மானிக்கப் பட்டது.  அதுவே வெப்ப ஏற்ற விதிக்கு முதல்தர ஆதாரச் சான்று.  வெப்ப ஏற்றம் கடற்படிகையைச் சூடாக்கி திட மீதேனை நீர்த்திடச் செய்து [Hydrated Soild Methane (CH4)] வாயுக் குமிழ்களாய்க் கொப்பளிக்க வைக்கிறது.  மீதேன் வாயு நீரில் கலந்துள்ள ஆக்ஸிஜெனுடன் சேர்ந்து ஏரிகளில் கரிமம் [Carbon] பிரிந்து கரிமச் சுற்றியக்கம் [ Global Exogenic Carbon Cycle] தொடர்கிறது.”

    டோரோதி பாக், ஆய்வாளர், கலி·போர்னியா பல்கலைக் கழகம்

    Global Warming Effects
    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டி காவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

    Impacts of Global Warming

    What Global Warming does

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    சூடேறும் பூகோளம் பற்றி அல் கோர்

    Global warming family tree

    பூகோளம் சூடேறும் என்றால் எதைக் குறிப்பிடுகிறோம் ?

    பூகோளம் என்று நாம் சொல்லும் போது, மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட உஷ்ண நீட்சியில் [Temperature Range] வைத்துக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம். அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி சூட்டுப் பிரளயம் நேர்ந்துவிடும்.  வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் யாவும் சிதைந்து, சீர்குலைந்து பூகோளம் செவ்வாய்க் கோள்போல் நீர்மை, ஆக்ஸிஜென், ஹைடிரஜன் இல்லாமல் பாலைவனமாய் வரண்டு போய்விடும்!  சூழ்வெளியில் சேமிப்பாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் போன்ற வாயுக்கள்) பரிதியின் வெப்பத்தை விழுங்கிப் பூகோளத்தின் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன.  ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே.  ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, ஆயில் போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூகோள உஷ்ணம் விரைவாக ஏறுகிறது.

    Deaths due to Natural Disasters

    Fig 3 Gore's Presentation

    சமீபத்தில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டுகளாய்ச் சேமிப்பான பனிக்குவிப்பிலிருந்தும் மீதேன் வாயு பேரளவுக் கொள்ளளவில் வெளியேறுவதாகச் சூடேறும் பூகோள எச்சரிப்பாளர் எடுத்துக் கூறியுள்ளார்.  மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்படுகிறது.  பூகோளச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பன் டையாக்ஸைடை விட 23 மடங்கு பெரியது.  உலகில் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் சூடேறும் பூகோளத்தை மெய்யாகக் கருதி ஏற்றுக் கொண்டாலும், அம்மாறுதலை ஒப்புக்கொள்ளாத அறிஞரும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் சூடேறிய பூகோளத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் மெய்யாக உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.
    Earth's Orbit change

    சூடேறும் பூகோள எச்சரிக்கைகள், மாறுதல்கள், இன்னல்கள் !

    பூகோளம் சூடேறுவதால் ஒவ்வோர் ஆண்டும் காலநிலைக் கோர விளைவுகள் மாறி மாறி விளைந்து வியப்புக்குள் நம்மை ஆழ்த்துகின்றன.  துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் ஏறுவதைக் காண்கிறோம்.  கடல் வெள்ளம் சூடேறி சூறாவளி களும், சைக்குலோன்களும், ஹரிக்கேன்களும் எண்ணிக்கையில் அதிகமாகி, பலத்தில் அசுரத்தன மாகிக் கோடான கோடி உலக மக்களுக்குப் பேரின்னல்களை விளைவித்து வருகின்றன.  நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் பயம் வந்துவிட்டது.  மேலும் கீழ்க்காணும் நூதனக் காலநிலைக் கோர விளைவுகள் உலக மக்களைத் துன்புறுத்தி வருகின்றன !

    1.  கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5]   எண்ணிக்கை இரட்டித்துள்ளது.

    2.  கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன.

    3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.

    4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

    Fig 2 Milankovitch Cycles

    மேலும் தொடர்ந்து சூடேற்றம் மிகையாகச் ஏறிச் சென்றால், கீழ்க்காணும் பெருங் கேடுகள் பரவ வாய்ப்புகள் உண்டாகும்.

    1.  அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும்.

    2.  கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம்.

    3.  2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம்.

    Earth'a Axis wobbles

    Earth’s Axis Wobbles

    4.  2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம்.

    5.  வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம்.

    6.  நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.

    சூடேறும் பூகோளத்தில் எழுகின்ற இந்த பிரச்சனைகளை ஐயமின்றி நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும்.  அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமை நெறியாக உள்ளது.  நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும்.  அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் எப்போது என்று நினைக்கிறீர்கள் ? இப்போதுதான் !

    Impacts

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]  (April 9, 2007)
    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it”   By Al Core (2006)
    2(a)  The Assault on Reason  By Al Gore  (July 2007)
    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)
    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)
    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)
    6.  The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)
    7.  Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)
    8. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)
    9. http://www.terradaily.com/reports/Ice_free_Arctic_winters_could_explain_amplified_warming_during_Pliocene_999.html  [July 31, 2013]
    10.  http://www.livescience.com/topics/global-warming/  [August 6, 2013]
    11. http://www.nrdc.org/globalwarming/  [August 14, 2013]
    12.  http://en.wikipedia.org/wiki/Global_warming  [August 15, 2013]
    13.  http://www.answers.com/topic/global-warming
    14.   http://en.wikipedia.org/wiki/Effects_of_global_warming   [August 9, 2013]
    15.http://www.terradaily.com/reports/Seasonal_CO2_range_expanding_as_more_is_added_to Earths_atmosphere_999.html    [August  14, 2013]
    16. http://www.terradaily.com/reports/Greenland_ice_is_melting_also_from_below_999.html  [August 14, 2013]
    17. http://www.planetseed.com/relatedarticle/sun-and-earth-and-temperature-change
    18. https://en.wikipedia.org/wiki/Solar_activity_and_climate  [October 1, 2015]
    19. http://www.bgs.ac.uk/discoveringGeology/climateChange/general/causes.html?src=topNav
    20. http://www.spacedaily.com/reports/New_research_shows_Earths_tilt_influences_climate_change_999.html  [December 16, 2015]

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38

    -மேகலா இராமமூர்த்தி

    அசோக வனம் என்றால் சோகமில்லா இன்பத்தை நல்கக்கூடிய சோலை என்று பொருள். ஆனால் அங்குச் சிறையிருந்த செல்வியான சீதையோ அதற்கு நேர்மாறாய்ச் சோகத்தின் மொத்த வடிவினளாய்க் காட்சியளித்தாள்.

    தன் தனிமைத் துயர் எப்போது தீரும், அருமைக் கணவனைச் சேரும்நாள் எப்போது வாய்க்கும் என்று எண்ணியெண்ணி வேதனை நெருப்பில் வெந்துகொண்டிருந்தாள்.  

    ஆழநீர்க் கங்கையில் ஓடம் விட்டுக்கொண்டிருந்த எளிய வேடனான குகனிடத்தில் என் இளவலாகிய இலக்குவன் நினக்குத் தம்பி; நீ என் சோதரன்; என் மனைவி சீதை உனக்குக் கொழுந்தி (மைத்துனி) என்று சொன்ன இராமனின் சகோதர பாசத்தை, தொடர்பற்றவனிடம்கூடக் காட்டிய நேசத்தை எண்ணியவள், தன்பால் அவன் பராமுகமாகயிருப்பது ஏன் என்று நினைந்து கலங்கினாள்.  

    ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய
    ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ
    தோழன் மங்கைகொழுந்தி எனச் சொன்ன
    வாழி நண்பினை உன்னி மயங்குவாள்.
    (கம்ப: காட்சிப் படலம் – 5198)

    ஏதேதோ நினைந்து அலமந்துகொண்டிருந்த சீதையைச் சுற்றிலும் அரக்கியர் பலர் காவலிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரமாதலால், கொடூரமும் துர்க்குணமுமே இயல்புகளாகக் கொண்டிருந்த அவர்கள் துயிலில் ஆழ்ந்திருந்தனர். அவ் அரக்கியர் கூட்டத்தில் நற்பண்புகள் கொண்டவளும் வீடணனின் மகளுமாகிய திரிசடை மட்டும் நன்மொழிகளைச் சொல்லிச் சீதைக்கு ஆறுதல் அளித்துவந்தாள்.

    அமர்ந்திருந்த சீதையின் இடக்கண் அவ்வேளையில் துடிக்கவே, ”அஃது உணர்த்துவது என்ன?” என்று திரிசடையிடம் கவலையோடு வினவினாள் சீதை. அவளைப் பரிவோடு நோக்கிய திரிசடை, ”இது மங்கலச் சகுனம். நீ உன் கணவனை அடையப் போவது சத்தியம். கவலை நீக்கு!” என்று சீதையைத் தேற்றினாள். தொடர்ந்தவள்…”நீ துயிலுவதே இல்லை; அதனால் உனக்குக் கனவுகள் தோன்றுவதில்லை; நான் துயிலுவதால் குற்றமற்ற கனவுகள் சிலவற்றைக் கண்டேன்; அவற்றைக் கேள்” என்று சொல்லித் தன் கனவுகளை வி(வ)ரித்துரைக்கலானாள்…

    ”குற்றமிலாக் கற்புடையவளே! சிறந்த வேலினை ஏந்தியவனாகிய இராவணன் தன் அழகிய பத்துத் தலைகளிலும் எண்ணெய் பூசிக்கொண்டு சிவந்த ஆடையை அணிந்தவனாய்க் கழுதைகளும் பேய்களும் பூட்டப்பெற்ற, சென்றுசேரும் எல்லையை அறியாத, திண்ணிய தேரிலேறித் தென்திசை அடைவதைக் கண்டேன்” என்றாள் திரிசடை சீதையிடம்.

    எண்ணெய்பொன் முடிதொறும் இழுகி ஈறுஇலாத்
    திண்நெடுங் கழுதைபேய் பூண்ட தேரின்மேல்
    அண்ணல் அவ்இராவணன் அரத்த ஆடையன்
    நண்ணினன் தென்புலம் நவைஇல் கற்பினாய்.
    (கம்ப – காட்சிப் படலம் – 5215)

    கனவில் செவ்வாடை, எண்ணெய்ப் பூச்சு, தேரில் செல்லுதல், தென்
    திசையில் போதல் முதலியன தோன்றுதல் கேட்டுக்கு அறிகுறி என்பது மக்களின் நம்பிக்கை. வால்மீகத்தில் திரிசடை தான்கண்ட கனவுகளை மற்ற அரக்கியரிடம் கூறுவதாய் அமைத்திருப்பார் வால்மீகி. கம்பர், அவள் நேரடியாகச் சீதையிடமே சொல்லுவதாய் அமைத்துள்ளார்.

    இராவணனுக்கும் அவன் நாட்டுக்கும் மனைவியர்க்கும் பல அமங்கலங்கள் நேருவதாய்த் தன் கனவில் தோன்றிய காட்சிகளைச் சீதையிடம் சொன்ன திரிசடை இறுதியாக, நெடுந்தூரம் வெளிச்சம் தரும் ஆயிரம் விளக்குகள் மாட்டிய அடுக்கு தீபமொன்றை ஏந்திய செந்நிறப் பெண்ணொருத்தி, இராவணன் இல்லிலிருந்து நீங்கி வீடணன் இல்லத்தில் நுழைவதைத் தான் கனவில் கண்டுகொண்டிருந்தபோது சீதை தன்னை எழுப்பிவிட்டதாகச் சொல்லவே, அதைக்கேட்ட சீதை, ”சரி நீ மீண்டும் துயில்கொண்டு அக்காட்சியில் தோன்றிய நங்கை யாரெனக் கண்டுபிடி” என்றாள்.

    ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
    சேயொளி விளக்கம்ஒன்று ஏந்திச் செய்யவள்
    நாயகன் திருமனை நின்று நண்ணுதல்
    மேயினள் வீடணன் கோயில் மென்சொலாய்.
    (கம்ப – காட்சிப் படலம் – 5227)

    விளக்கோடு பெண்ணொருத்தி இராவணன் மனை நீங்கி வீடணனை அடைகின்றாள் என்ற கனவினுக்கு, இராச்சியலட்சுமி இராவணனை நீங்கி வீடணனுக்குச் சொந்தமாவதாய்ப் பொருள்கொள்ளலாம்.

    நீண்ட நேரமாக நாம் கவனிக்கத் தவறிய அனுமனை மீண்டும் கவனிப்போம். சீதையைத் தேடிக்கொண்டு அசோக வனத்துக்குள் நுழைந்த அவன், இப்போது சீதையின் சமீபத்தை அடைந்திருந்தான். செறிந்து வளர்ந்திருந்த மரங்களுக்குப் பின் மறைந்திருந்து தவக்கோலத்தில் அமர்ந்திருந்த சீதையைக் கண்டான்.

    துயிலில் ஆழ்ந்திருந்த அரக்கியர் அனைவரும் இப்போது துயில்கலைந்து, சூலம் மழு முதலிய ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு அச்சந் தரத்தக்க பயங்கரத் தோற்றத்தோடு சீதையைச் சுற்றி அமர்ந்தனர்.

    சீதையைக் கண்ட மகிழ்வில் உவகைத் தேன் உண்டவனாய், ”அறம் அழியவில்லை; யானும் அழியேன்; இராமன் தேவியைத் தேடிய நான் இதோ கண்டுகொண்டேன் அவளை” என்று மகிழ்ச்சியில் அங்குமிங்கும் துள்ளினான் அனுமன்.  

    அவளின் தூய திருக்கோலம் அவனை வியக்க வைத்தது. மனத் தவம் புரியும் கற்புடை மகளிர்க்கு, உடலை வருத்தித் தவம் செய்யும் முனிவரும் ஒப்பாகார் என்ற முடிவுக்கு வந்தான் அவன்.

    அவ்வேளையில் சீதையிருந்த இடத்துக்கு அரம்பையர் புடைசூழ வந்தான் இராவணன். அவளருகில் வந்துநின்ற அவன், தனக்கு நேரும் பழிகுறித்து அஞ்சாதவனாய், ”மூவுலகத்தாரையும் அரசாளும் கொற்றமுடைய என்னை உன் அடிமையாய் ஏற்றுக்கொண்டு அருள்வாயாக!” என வேண்டித் தன் சிரங்களின்மேல் குவித்த கரத்தினனாய்ப் பூமியில் வீழ்ந்து வணங்கினான் அவளை.

    குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
    அடிமை கோடி அருளுதியால் எனா
    முடியின் மீதுமுகிழ்ந்து உயர் கையினன்
    படியின்மேல் விழுந்தான் பழி பார்க்கலான்.  
    (கம்ப – காட்சிப் படலம் – 5289)

    இராவணனின் செய்கையும் பேச்சுக்களும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைக் காதில் நுழைத்ததுபோல் சீதையை வருத்தின. அவனைத் துரும்பென மதித்த அவள், ”கல்லைப்போல் உறுதியான மகளிரின் மனம் கற்பைவிடச் சிறந்ததாய் எதனையும் கொண்டதில்லை. நீ பேசுகின்ற மொழிகள் நற்குடியில் பிறந்த மாதர்க்கு ஏற்புடையன அல்லாத கொடுஞ்சொற்கள். தவறான வழியில் நடக்கும் உன்னை இடித்துத் திருத்தும் நல்லமைச்சர்களை நீ பெறவில்லை; நீ கருதியதற்குத் துணைபோகும் அவர்கள் உன்னை அழிப்பவர்களே!” என்று சினந்து கூறிவிட்டு, இராமனுக்குத் தெரியாமல் தன்னைத் தூக்கிவந்த அவன் ஈனச் செயலை இகழ்ந்துரைத்தாள்.

    அவள் மொழிகளைக் கேட்ட இராவணன் சீற்றத்தின் உச்சிக்குச் சென்று அவளைக் கொல்ல முற்பட்டான். அவள்மீது கொண்ட கழிகாமம் அப்போது கிளர்ந்தெழவே, சீற்றமும் காமமும் ஒன்றையொன்று எதிர்த்துப் போரிடத் தொடங்கின. இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட இராவணன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனான்.

    இவற்றையெல்லாம் ஒரு மரக்கிளையில் அமர்ந்தபடி கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த அனுமன் கோபம் கொண்டு, இந்த இராவணனின் பத்துத் தலைகளையும் மோதி நொறுக்கி, இலங்கையைக் கடலில் அமிழ்த்திவிட்டுத் தேவியை நானே மகிழ்வோடு சுமந்துசென்று இராமனிடம் சேர்ப்பேன் என்று சிந்தித்தவனாய்த் தன் கரங்களைப் பிசைந்தபடி அதற்கேற்ற தக்க தருணத்தை எதிர்நோக்கியிருந்தான்.

    தனியன் நின்றனன் தலைபத்தும் கடிதுஉகத் தாக்கி
    பனியின் வேலையில் இலங்கையைக் கீழ்உறப்
     பாய்ச்சிப்
    புனித மாதவத்து அணங்கினைச் சுமந்தனென் போவென்
    இனிதின் என்பது நினைந்துதன் கரம்பிசைந் திருந்தான்.  (
    கம்ப – காட்சிப் படலம் – 5315)

    சினந்தணிந்த இராவணன் மீண்டும் சீதையிடம் ஏதேதோ பொருத்தமில்லா வார்த்தைகளைப் பேசிவிட்டு, அருகிருந்த அரக்கியரைப் பார்த்து, ”வெவ்வேறு உபாயங்களைக் கையாண்டு சீதையை எனக்கு வசப்படுமாறு செய்யுங்கள்; இல்லையேல் உம் உயிருக்கு நான் நஞ்சாவேன்!” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

    தன்னால் முடியாததைத் தன்னிடம் பணிசெய்யும் அரக்கியர் முடிப்பர் என்று கருதியமை இராவணனின் அறியாமையைப் புலப்படுத்துவதாய் உள்ளது. ஆசை, அறிவை அழித்துவிடும் என்பதை இதன்மூலம் நாம் அறியமுடிகின்றது.

    இராவணன் மொழிகளைக் கேட்ட அரக்கியர் அஞ்சி வஞ்சியாம் சீதையை மிரட்டத் தொடங்கவே, அவள் கலக்கமுற்றாள். அப்போது திரிசடை சீதையைப் பார்த்து, ”அம்மா! நான் கண்ட கனவுகளைத்தான் உன்னிடம் சொன்னேனே! நீ அஞ்சத் தேவையில்லை இனி!” என்று அவளைத் தேற்றிவிட்டு அக்கனவுகள் குறித்து அரக்கியரிடமும் கூறி இராவணனின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது என்பதை விளக்கவே, அவ் அரக்கியர் சீதையை அச்சுறுத்துவதை நிறுத்திவிட்டு அமைதியாயினர்.

    தான் சீதையிடம் தனித்துப் பேச அதுவே சரியான நேரம் என்று கணித்த அனுமன், ஒரு மந்திர வித்தை செய்து விழித்திருந்த அரக்கியரை மீண்டும் துயிலில் ஆழ்த்தினான். எளிதில் துஞ்சாத அரக்கியர் துஞ்சுதல் கண்டாள் சீதை. அவளின் ஆற்றொணாத் துயரம் தனிமையில் அதிகரித்தது. நீண்ட இரவும் கதிர்போல் காயும் மதியும் அவளை வாட்டின.

    ”இராமனைக் காணவேண்டும் எனும் விருப்பத்தில்தான் இவ்வளவு நாட்களும் பொறுமையோடிருந்து என் உயிரைப் போற்றினேன். எனினும், அரக்கர் நகரில் நெடுநாள் சிறையிருந்த என்னைப் புனிதனான இராமன் ஏற்றுக்கொள்வானா?” என்று தனக்குள் வினவிக்கொண்ட சீதை, மாசுற்ற நான் இருத்தலினும் இறத்தலே அறம் என்று எண்ணியவளாய் அங்கிருந்து எழுந்து அருகிலிருந்த குருக்கத்தி (மாதவி) சோலையை அடைந்தாள். அங்குள்ள கொடி ஒன்றை எடுத்துத் தன் கழுத்தை இறுக்கி அவள் சுருக்குப் போட்டுக்கொள்ள முயன்றாள். [வால்மீகி இராமாயணத்தில் சீதை தன் சடையால் கழுத்தை இறுக்கித் தற்கொலை செய்ய முயன்றதாகப் பேசப்பெறும்].

    அதுகண்ட அனுமன், சீதையின் உட்கிடையை உணர்ந்து துணுக்கமுற்றான். அவள் திருமேனியைத் தீண்டி அத் தற்கொலை முயற்சியிலிருந்து அவளை விலக்க அவனுக்கு அச்சமாக இருந்ததனால், ”தேவர்கள் தலைவனான இராமபிரானின் அருள்பெற்ற தூதன் நான்” என்று கூறித் தொழுதபடியே, மரத்திலிருந்து குதித்து, மயிலனைய சீதைமுன் தோன்றினான்.

    கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான்
    கொண்டனன் துணுக்கம்மெய் தீண்டக் கூசுவான்
    அண்டர் நாயகன் அருள் தூதன்யான் எனா
    தொண்டைவாய் மயிலினைத் தொழுது
     தோன்றினான். (கம்ப: உருக்காட்டு படலம் – 5357)

    தன்னை ஐயத்தோடு நோக்கிய சீதையிடம், ”தாயே! இராமனின் ஆணைப்படி உம்மைத் தேடிக் கண்டுபிடிக்கப் புறப்பட்டோர் பலர். அவர்களுள் உம்மைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றவனானேன் நான். அம்மையே…நான் இராமதூதன்தான்! என்னை ஐயுறாதீர்! உம்மிடம் காட்டுதற்கு இராமன் தந்த அடையாளப் பொருள் உளது; அப்பெருமான் சொல்லியனுப்பிய செய்திகளும் உள” என்றான்.

    அவனுடைய பணிவான தோற்றத்தையும் பக்குவமான மொழிகளையும் கண்ட பிராட்டி, இவன் தன்னை ஏமாற்றும் நோக்கத்தோடு மாய வடிவெடுத்து வந்த அரக்கன் அல்லன் எனத் தெளிந்து, ”வீரனே நீ யார்?” என்று வினவினாள்.

    தான் அஞ்சனை மைந்தன் அனுமன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன், தன்னுடைய வரலாற்றையும், இராமனுக்கும் கிட்கிந்தையிலுள்ள சுக்கிரீவனுக்கும் நட்பு ஏற்பட்ட வரலாற்றையும், சீதையைத் தேடி நாலாபுறமும் வானர சேனைகள் சென்றிருப்பதனையும், சுக்கிரீவனின் வழிகாட்டுதலின்பேரில் தென்திசையில் தேடிவந்த குழுவில் தான் இடம்பெற்றதையும், வாலி மைந்தன் அங்கதன் தன்னை இலங்கைக்கு அனுப்பியதையும் எடுத்துரைத்தான்.

    அனுமன் சொன்ன செய்திகளைச் செவிமடுத்த சீதை, ”இராமனின் அங்க அடையாளங்களை உன்னால் உரைக்க முடியுமா?” என்று கேட்கவே, இராமனின் திருமேனியழகை அடிமுதல் முடியீறாய் வருணித்த அனுமன், இராமன் சீதையிடம் காட்டச்சொல்லிக் கொடுத்த அவன் பெயர் பொறித்த திருவாழியை (மோதிரம்) நீட்டினான்.

    அதைக் கண்ணுற்ற சீதை, உடலைவிட்டு நீங்கிய உயிர் மீண்டும் அதனை அடைந்ததுபோல் இன்பக் கடலில் மிதந்தாள்; மணியிழந்த நாகம் மீண்டும் அதனைப் பெற்றதுபோல் மகிழ்ச்சியுற்றாள். உவகைக் கலுழ்ச்சியால் மலர்விழிகள் கண்ணீர் முத்துக்களைச் சொரிய, அனுமனை நன்றியோடு நோக்கியவள்,

    ”மூங்கில்போன்ற தோளையுடைய வீரனே! துணையில்லாத என் துன்பத்தைப் போக்கிய வள்ளலே…நீ வாழ்க! நான் களங்கமற்ற மனமுடையவள் என்பது உண்மையானால், ஒரு யுகத்தை ஒருபகலாய்க் கருதும், பதினான்கு உலகங்களும் அழியும் பிரளய காலத்தும் நீ அழியாது இருப்பாயாக!” என்று அவனை வாழ்த்தினாள்.

    பாழிய பணைத்தோள் வீர துணைஇலேன் பரிவு தீர்த்த
    வாழிய வள்ளலேயான் மறுஇலா மனத்தேன்
     என்னின்
    ஊழிஓர் பகலாய்ஓதும் யாண்டுஎலாம் உலகம் ஏழும்
    ஏழும் வீவுற்றஞான்றும் இன்றுஎன இருத்தி என்றாள்.
    (கம்ப – உருக்காட்டு படலம் – 5407)

    உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மானுட வேடம் கலைந்து தெய்வ ஆவேசம் உற்றவளாய்ச் சீதை வழங்கிய வரமாய் இது திகழ்கின்றது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • 2021 ஆண்டில் 20 செல்வீக நாடுகளில் கரிவாயு வீச்சு மிகுதி

    2021 ஆண்டில் 20 செல்வீக நாடுகளில் கரிவாயு வீச்சு மிகுதி

    A coal-fired power plant in China’s Inner Mongolia. Carbon emissions are rebounding strongly and are rising across the world’s 20 richest nations, according to a new study.

    சி. ஜெயபாரதன், B.E.(Hons). P.Eng. [Nuclear],Canada

    Ontario's Weather Is Turning Chaotic RN & Cities Are Being Warned Of Tornado Risks

    © Provided by Narcity Ontario’s Weather Is Turning Chaotic RN & Cities Are Being Warned Of Tornado Risks

    Environment Canada has just issued severe thunderstorm watches across parts of the province and Ontario’s weather is about to turn chaotic.

    What’s abundantly clear is that the United States of America is the all-time biggest, baddest greenhouse gas emitter on the planet.

    உலகிலே மிகப்பெரும் சூழ்வெளி விஷ வாயு வெளிவீச்சு வல்லமை நாடு

    அமெரிக்கா, அமெரிக்கா, அமெரிக்கா அசுர வல்லமை நாடு. கியோடோ, கோபன்ஹேகன், பாரிஸ் போன்ற உலகச் சூழ்வெளி விஷ வாயுக்கள் குறைப்பு ஒப்பந்தங்களில் உடன்படாத ஒரு பெரும் வல்லரசு நாடு அமெரிக்காதான். 2021 ஆண்டு கரிவாயு வீச்சு அளவை ஒப்பிடும்போது உலகச் செல்வீக நாடுகளில் 20 இல் கரிவாயுக் கொள்ளளவு விரைவாக மிகுந்துள்ளது என்று “காலநிலைத் தெளிவு அறிக்கை” தயாரிப்பாளர் [Climate Transparency Report] கூறுகிறார். இன்னும் இரண்டு வாரத்தில் கிளாஸ்கோ, ஸ்காட்லாந்தில் COP26 காலநிலைக் கூட்டிணைப்பு உலகப் பேரவை கூடிப் பேசப் போகிறது. .

    மேலும் தெளிவு அறிக்கை கூறுவது.

    1. G20 குழுமை நாடுகளால் இந்த 2021 ஆண்டில் கரிவாயு அளவு 4% ஏறுகிறது.;
    2. 2020 கொரோனா பேரிடரால் G20 குழுமை நாடுகளில் கரிவாயு சேர்க்கை 6% குறைந்தது.
    3. சைனா, இந்தியா, அர்ஜென்டைனா நாடுகளில் கரிவாயு வீச்சு 2019 ஆண்டை விட மிகையானது.
    4. இயற்கை வாயு, பெட்ரோலியம் எரிசக்தி தொடர்ப் பயன்பாடு சூழ்வெளி உஷ்ணக் கட்டுப்பாடை தடுத்தது.
    5. கடல்நீர் உஷ்ணம் தற்போது 1.1C ஆக உள்ளது. அது 1.5.C ஆக ஏறி விடாமல் தடுப்பு முறைகள் கையாள்வது.
    6. . G20 குழு நாடுகள்75% சுழ்வெளி விஷ வாயுக்கள் எழுச்சிக்குப் பங்கு ஏற்புக்கு துணை செய்கின்றன.
    7. G20 குழு நாடுகளில் நிலக்கரிப் பயன்பாடுகளால் கரிவாயு எழுச்சி இந்த ஆண்டு 5%
    8. சைனா நிலக்கரி எரிசக்தி பயன்படுத்தி கரிவாயு எழுச்சி 60% உலகில் இவ்வாண்டு மிகையாகி விட்டது.
    9. அமெரிக்கா, இந்தியாவில் இவ்வாண்டு நிலக்கரிப் பயன்பாடு அதிகரித்துள்ளது.
    10. இவ்வாண்டில் [2021] நிலக்கரி விலை 200% மிகையாகி மின்வெட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
    11. G20 குழு நாடுகளில் எரிவாயு பயன்பாடு 12% [2015-2020] ஆண்டுகளில்.

    ============================================================

    That’s true, despite recent gains in energy efficiency and cuts in emissions. These relatively small steps now cannot offset more than a century of reckless emissions that have built up in the atmosphere. Much more drastic steps are now needed to slow climate change. And as the top cumulative emitter, the US bears a greater imperative for curbing its carbon dioxide output and a greater moral responsibility for the impacts of global warming.

    Yet the US is now the only country aiming to withdraw from the Paris climate agreement. China now emits more than the US, and India’s emissions are rapidly rising. But these countries have a much smaller share of cumulative global emissions. Their populations are also much bigger than the US and other wealthier countries, so the amount that India and China emit per person is vastly smaller than the United States or the United Kingdom.

    Climate change: animation shows US leading the world in carbon emissions -  VoxGlobal CO2 Emissions by Country 2008 The global emissions of CO2 for... |  Download Scientific Diagram

    Global CO2 Emissions by Country 2008 The global emissions of CO2 for time 1900-2008 from fossil fuels and industrial processes are shown in Figure 2.

    Global Greenhouse Gas Emissions Data | US EPAGlobal GHG emissions by gas: 65% is from carbon dioxide fossil fuel use and industrial processes. 11% is from carbon dioxide deforestation, decay of biomass, etc. 16% is from methane. 6% is from nitrous oxide and 2% is from fluorinated gases.

    • Carbon dioxide (CO2): Fossil fuel use is the primary source of CO2. CO2 can also be emitted from direct human-induced impacts on forestry and other land use, such as through deforestation, land clearing for agriculture, and degradation of soils. Likewise, land can also remove CO2 from the atmosphere through reforestation, improvement of soils, and other activities.
    • Methane (CH4): Agricultural activities, waste management, energy use, and biomass burning all contribute to CH4 emissions.
    • Nitrous oxide (N2O): Agricultural activities, such as fertilizer use, are the primary source of N2O emissions. Fossil fuel combustion also generates N2O.
    • Fluorinated gases (F-gases): Industrial processes, refrigeration, and the use of a variety of consumer products contribute to emissions of F-gases, which include hydrofluorocarbons (HFCs), perfluorocarbons (PFCs), and sulfur hexafluoride (SF6).

    Black carbon is a solid particle or aerosol, not a gas, but it also contributes to warming of the atmosphere. Learn more about black carbon and climate change on our Causes of Climate Change page.

    floodsFlooding has taken place in many parts of USA, UK, Germany & China across 2021

    Report highlights

    • Coal consumption is projected to rise by almost 5% in 2021, with this growth driven by China (accounting for 61% of the growth), the USA (18%) and India (17%)
    • The US (4.9 tCO2/capita) and Australia (4.1 tCO2/capita) have the highest building emissions per capita in the G20 (average is 1.4 tCO2/capita), reflecting the high share of fossil fuels, especially natural gas and oil, used for heat generation
    • Between 1999 and 2018 there have been nearly 500,000 fatalities and close to $3.5 trillion of economic costs due to climate impacts worldwide, with China, India, Japan, Germany, and the US being hit particularly hard in 2018
    • Across the G20, the current average market share of electric vehicles (EVs) in new car sales remains low at 3.2% (excluding the EU), with Germany, France, and the UK having the highest shares of EVs

    2px presentational grey line

    There are expectations that both India and China will submit new national plans before the meeting in Glasgow, which could give a significant boost to attempts to keep the 1.5C target in view.

    The G20 group will meet in Rome in the days leading up to COP26 and the UK minister who will lead the talks has in recent days urged the leaders of these countries to now step up.

    “It is leaders who made a promise to the world in Paris six years ago, and it is leaders that must honour it,” said Alok Sharma.

    “Responsibility rests with each and every country, and we must all play our part. Because on climate, the world will succeed, or fail, as one.”

    October 16th, 2021 [நீரகவாயு பயன்பாடு]

    Ignore the hydrogen market at your own peril.

    Haven’t heard of the hydrogen economy and all the new technologies being developed around it?

    That’s okay, you’re not alone.

    And it isn’t too late. In fact, now is the perfect time to gain exposure.

    But first, what exactly is “the hydrogen economy”?

    Simply put, the hydrogen economy is a collection of markets and technologies that surround the fast-growing hydrogen market.

    Between liquid hydrogen and hydrogen fuel cell airplanes and cars, hydrogen is quickly becoming the hottest source of clean energy investing.

    This is the optimal time for investors to make the most of their money.

    Because the various technologies are real and decisions are still being made, investors in the know have a chance to make gains of a lifetime.

    While lithium-ion batteries have been leading the way in clean energy technology advancements, hydrogen is about to take the spotlight.

    We’ve been following the developments in hydrogen and the various technologies surrounding it for years, all the while taking notes and researching.

    Our latest (free) report contains that research and some investment ideas for those looking to take advantage of this quickly growing economy.

    It’s called “The Hydrogen Economy 2.0,” and in it, we detail:

    • Various industries impacted by hydrogen tech
    • What is causing recent breakthroughs for the technology
    • Why hydrogen technology has infinite room to grow

    After reading our free report, you’ll know why we’re excited about the huge potential of hydrogen technology not only for investors, but for the world as a whole.

    This is not an opportunity you want to delay taking action on.

    ===================================================

    தகவல்

    1. https://thelogicalindian.com/environment/carbon-emissions-by-rich-country-31224

    2.https://secure.energyandcapital.com/206207?

    3. https://www.nytimes.com/2021/10/13/opinion/climate-change-imf-carbon.html?auth=login-google1tap&login=google1ta

    4. https://ca.movies.yahoo.com/climate-change-carbon-emissions-rich-040016912.html

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 5

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 5

    முனைவர் ச. சுப்பிரமணியன்

     ‘நீ’தான் கவிதை!
    (துரை. வசந்தராசனின் கவிதைகளில் உத்தியால் சிறக்கும் உள்ளடக்கம்)

    முன்னுரை

    காட்டு மூலிகைபோல் கண்டெடுக்க முடியாமல் ஓட்டைக் குடிசைகளில் உயிர்வாழும் நடைப்பிணங்கள்” என்னும் ஓர் வரி நா.காமராசன் எழுதிய ‘கறுப்புமலர்கள்’ என்ற நூலில் வரும். மலைவாழ் பனியர் குல மக்களின் அவலத்தைப் பாடிய அந்த வரிகளை நான் படிக்கிறபோது வெளி உலகத்துக்குத் தெரியாமல் இருக்கும் கவிதை வல்லாளர்கள் சிலர் என் நினைவுக்கு வருவார்கள். தமிழ்நாட்டில் மருந்துக்கடைகள்போல் கவிஞர் இலட்சக்கணக்கில் இருந்தாலும்  கவிதைகள் கோவாக்சின் மருந்துபோலக் குறைவாகத்தான் கிடைக்கின்றன என்பது புகார் இல்லாமலேயே புலப்பட்ட உண்மை. அந்தக் கோவாக்சின் துளிகளில் ஒரு துளியாக முகநூலில் தன் முகம் காட்டுபவர் தம்பி வசந்தராசன்!. ‘பண்ணைக் கவிக்கோ என எல்லார் எண்ணத்திலும் இனிப்பவர் அவர்.!   அமர்ந்து படிக்க வேண்டிய அன்னாரது கவிதைகளைப் பலரும் நடந்து கொண்டே படித்து வீடு வந்து சேருமுன் ‘விரலாலே’யே விமர்சனமும் செய்து முடித்துவிடுகிறார்கள். அது அவர்கள் உரிமை. கவிதை என்றால் செறிவு, அழகு, எளிமை, உறுதியான கட்டுமானம் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கும் இந்த எழுபத்தாறு வயது முதியவன் காலங்கடந்து கண்டெடுத்த என் தம்பி வசந்தனின் கவிதைளைப் பல்லில்லாமலேயே படித்துச் சுவைக்கிறேன். சுவைத்ததைப் பந்தி வைக்கிறேன்.! இது எனக்குப் பிடித்த பந்தி! உங்களுக்கும் பிடித்தால் பெருமை எனக்கன்று, வசந்தனுக்கு! பந்தியில் பரிமாறியவன் மட்டுமே நான். நெஞ்சத்து மடப்பள்ளியில் சீர் அரிசியை கவிதைப் பிரசாதமாக்கியவன் அவன் என்பதால்!

    கவிதைக் கட்டுமானம் என்றால் என்ன?

    வீடுகள் பலவகையான கட்டுமானங்களைக் கொண்டவை. ஒவ்வொரு வீட்டின் கட்டுமானமும் தனித்தன்மை உடையன. குடிசைக்கு ஒரு கட்டுமானம். தொகுப்பு வீட்டுக்கு ஒரு கட்டுமானம். தேவைக்கு ஒரு கட்டுமானம் அடக்கத்திற்கு ஒரு கட்டுமானம். ஆடம்பரத்திற்கு ஒரு கட்டுமானம். அவரவர் பொருளாதார வலிமைக்கு ஏற்பவும் இக்கட்டுமானம் மாறுபடுவதுண்டு. வாடகைக்கு விடுகிற வீடுகள் என்றால் அந்தக் கட்டுமானமே தனி!. புதுக்கவிதை உள்ளிட்ட அத்தனைக் கவிதைகளுக்கும் இது பொருந்தும். வீடுகளில் ஒரு கட்டுமானத்தை மற்றொரு கட்டுமானத்தோடு ஒப்பிடுவது அறியாமை. காரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வலுவான  பொருளாதார மற்றும் ரசனையாகிய காரணிகளின் பின்னால் வடிவமைக்கப்படுகிறது. கவிதையிலும் ஒன்றினை மற்றொன்றோடு ஒபபிட்டு மதிப்பிடுவது நெறியன்று. சங்கச் சான்றோர்கள் அவர்தம்  வெளிப்பாட்டுக்குப் பெரும்பாலும் ஆசிரியப்பாவையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். காரணம் பாடுபொருள் அகம் புறம் என்னும் இரண்டு மட்டுமே ஆனதால். இளங்கோ தன் கதைக்குத் தேர்ந்தேடுத்துக் கொண்ட வடிவம் ஆசிரியப்பா. அதன் வடிவம் பல இடங்களில் கற்பாருக்குச் சோர்வு தரும் எனக்கருதியோ என்னவோ வரிப்பாடல்களையும் குரவைப் பாடல்களையும் இணைத்துக் கொள்கிறார். இந்த நெறியைப் பாஞ்சாலி சபதத்தில் மகாகவி பாரதியும் வீரத்தாய் காவியத்தில் பாவேந்தரும் பின்பற்றுகின்றனர் பொருண்மைக்கேற்ற வடிவம் என்பதுதான் தமழ்க்கவிதைகளின் வடிவக்கோட்பாடு. இதில் இன்னொரு நுண்ணியமும் இருக்கிறது. அண்ணாமலை ரெட்டியார் எழுதித் தற்போது அச்சில் வந்திருக்கும் காவடிச்சிந்து இருபத்து மூன்று பாடல்களும் இருபத்து மூன்று தனித்தனிச் சந்தத்தைத் தமக்கென கொண்டவை. எழுத்து வடிவம் சிந்தாக இருந்தாலும் இசைவடிவம் இன்னும் நுண்ணியமாகிறது என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். கம்பராமாயணத்தை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தாலோ சீவகசிந்தாமணியை வெண்பாவில் எழுதியிருந்தாலோ அவ்விலக்கியங்கள் இத்தகைய வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. இந்தப் பின்புலத்தில் தம்பி வசந்தராசன் எழுதியிருக்கும் ஒரு கவிதையின் உள்ளடக்கமும் கட்டுமானமும் எப்படி இரண்டறக் கலந்து நிற்கிறது என்பதை இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முனைகிறது.

    முன்னிலைப் பரவல் என்றால் என்ன?

    இறைவனையோ பாட்டுடைத் தலைவரையோ, தலைவியையோ இயற்கைப் பொருள்களையோ படர்க்கையில் வைத்துப் பாடுவதே பெருவழக்கு.  சில நேர்வுகளில் வெளிப்பாட்டின் வேகம் குறைந்துவிடுகிறது என்றோ, உள்ளத்துக் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் சரியான முறையில் படர்க்கை நிலை வெளிப்பாட்டில் முழுமையாக கொண்டுவரவியலவில்லை என்று நினைத்தாலோ படைப்பாளனின் எண்ணவோட்டத்தினாலோ அவறறையெல்லாம் முன்னிலையிலேயே வைததுப் பாடி விடுவது என்பது  ஓர் இலக்கிய வெளிப்பாடடு மரபு. அல்லது இலக்கிய வெளிப்பாட்டு உத்தி.

    கவிதைகள் சிறப்பது உத்திகளால்.

    முல்லைக்குத் தேரளித்த பாரியை இப்படிப் பாடுகிறார் புலவர் ஒருவர்.

    “பூத்தலை அறாஅப் புனைக்கொடி முல்லை
    நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
    கறங்குமணி நெடுந்தேர் கொள்கென கொடுத்த
    பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்”

    என்னும் வரிகளில் முல்லையின் பாட இயலாமை  படர்க்கையில் பாடப்பட்டிருப்பது காண்க.  பாடுபவர்க்கே பரிசளித்துப் பழக்கப்பட்ட மரபில் பாடுதற்கு நாக்கில்லா முல்லைக்குத் தேர்கொடுத்ததே வள்ளன்மைக்குப் பெருமை என்பதுதான் பாட்டின் சாரம். இன்னொரு புலவர் பாடுகிறார். ‘கொய்வார் இன்றி முல்லை வாடுகிறது’ என்பதைக் கருத்திற் கொண்டு அதனை முன்னிலையாக்கிப் பாடுகிறார்

    “இளையோர் கொய்யார்! வளையோர் சூடார்
    நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கி
    பாணன் சூடான், பாணினி அணியாள்.
    வல்வேல் சாத்தன் மாயந்த பின்றை
    முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே!”

    “முல்லையே நீ இப்போது பூத்து என்ன பயன்? வலிமை வாய்ந்த வேலையுடைய சாத்தன் மறைந்து போனான். அதனால் அமங்கலம் நிலவுகிறது நாடடில்! உன்னை இளையவர்கள பறிக்க மாட்டார்கள். வளைசூடிய இளம்பெண்களும் அணிய மாட்;டார்கள். யாழின் வளைவுகொண்டு ஒருபகுதியால் உனனை பாணனும் கொய்ய மாடடான். அதனால் பாணினியும் அணியமாட்டாள்! இந்த நிலையில் ஒல்லையூர் நாட்டில் நீ பூத்தனையோ? எனபதுதான் உள்ளடக்கம். உள்ளத்து எண்ணங்களைப் படர்க்கையில் சொன்னவர், முல்லையை நோக்கிய வினாவையும் ‘முல்லையும் பூத்ததே! எனப் படர்க்கையில் சொல்லியிருக்கலாம். அவர் அதனை விரும்பாமல் ‘முல்லையும் பூத்தியோ?’ என முன்னிலையில் விளித்துச் சொன்னது காண்க. முன்னிலைப் பரவலாகிய இந்த நெறி காலங்காலமாகத் தமிழ் இலக்கியப் படைப்புலகில் அதாவது கவிதையுலகில் படிந்துவருகிறது..

    மெல்லிசைப் பாடல்களில் முன்னிலை உத்தி!

    “நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்பதும் ஒரு முன்னிலைப் பரவல். ‘நீயல்லால் தெய்வமில்லை’ என்பதும் ஒரு முன்னிலைப் பரவல். ‘கற்பனை எனறாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்பதும் ஒரு முன்னிலைப் பரவலே! இன்னொரு வகையான முன்னிலைப் பரவல் இப்படி அமைந்திருப்பதை அனைவரும் அறிந்திருக்கலாம். ‘ காலத்தை வென்றவன் நீ! காவியமானவன் நீ! வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித்திருமகன் நீ’ “அன்புத் தெய்வம் நீ எங்கள் அன்னைவடிவம் நீ ….காமதேனு கற்பகம் நீயே! கோதையர் வணங்கும் குலமகள் நீயே!” ‘காலையும் நீயே மாலையும் நீயே! காற்றும் நீயே! கடலும் நீயே! ஆலய மணிவாய் ஓசையும் நீயே! அருள் வடிவாகும் தெய்வமும் நீயே!  “அமிழ்தாய் ஆழ்ந்த விதானம் நீ! அழகே நாயகி! விஷ்ணுவின் மோகினி அண்ட சராசர நிழல் நீ! வைகுண்ட நிவாஸினி என் தமிழ் நீ! என்பன போன்ற மெல்லிசைப் பாடல்களிலும் ‘நீ’ உததியால் பாடல்கள் சிறந்தன என்பது வரலாறு.

    புறத்திணையுள்  பாடாண் திணை

    தொல்காப்பியப் புறத்திணை பெரும்பாலும் மனித மதிப்புக்களையே தனது கருத்திற் கொண்டு அமைந்திருக்கிறது. போர்பற்றிப் பாட வேண்டிய புறத்திணை, புகழுக்கான காரணங்களைப் பாடுவதையும் அதன் பகுதிகளுள் ஒன்றாக்கியிருக்கிறது.  அத்தகைய புறவொழுக்கத்தைத்தான் ‘பாடாண் பகுதி’ எனக் குறித்தனர்;. இப்பாடாண்திணைப் பாடல்கள் முன்னிலையிலும் படர்க்கையிலும் அமையும். இதற்கான சான்றுகள் சங்க இலக்கியத்துள் பல உண்டு. எடுத்துக்காட்டாக,

    “கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி! நின்
    அசைவில் நோன்தாள் நசைவளன் ஏத்தி
    நாள்தொறும் நன்கலம் களிற்றொடு கொணர்ந்து,
    கூடுவிளங்குவியன்நகா;, பரிசில் முற்றளிப்ப
    பீடில் மன்னா; புகழ்ச்சி வேண்டி
    செய்யா கூறிக் கிளத்தல்
    எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே”

    ‘கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி!’ என வன்பரணா;, கண்டீரக் கோப்பெரு நள்ளியை முன்னிலைப்படுத்திப் பாடியிருக்கிறார்  இதனைப் போன்றே கோவூர்க் கிழார் ,

    “குணதிசை நின்று குடமுதல் செலினும்
    குடதிசை நின்று குணமுதல் செலினும்
    வடதிசை நின்று தென்வயின் செலினும்
    தென்திசை நின்று குறுகாது நீடினும்
    யாண்டும் நிற்க, வள்ளி., யாம்
    வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே”

    சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை,‘யாம்; வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே’ எனப் படர்க்கையில் வைத்துப் பாடியிருக்கிறார்.

    “விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்
    அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
    திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
    மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
    அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
    திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ;
    ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
    மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
    நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
    புலமும், பூவனும், நாற்றமும், நீ;
    வலன் உயர் எழிலியும், மாக விசும்பும்,
    நிலனும், நீடிய இமயமும் நீ!.

    என்னும்; பரிபாடலில் திருமாலின் இலக்கணங்களாகிய  அறமும் அளியும் மறனும் அணங்கும் திங்களு; ஞாயிறும் அரனும அயனும்  அவர் செய்தொழிலும் விசும்பு முதலிய பூதமுமாகிய எல்லாப் பொருளும அவனே என்னும் கருத்தினை முன்னிலையாக்கிக் கூறுதல் காண்க.

     தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
    கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
    அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
    வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
    வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
    அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;  (பரிபாடல்)

    என்னும் கடுவன் இளவெயினனார் பாடலிலும்  இயற்கையாற்றல்கள் அத்தனையும் ‘நீ’ என்னும் ஒரு சொல்லால் குறித்திருப்பது காணலாம்.

    வாலி தொடங்கி பாரதி வரை

    வசந்தராசன் கவிதைகளில் உத்தியால் சிறக்கும் உள்ளடக்கம் பற்றி ஆராயும் இந்தக் கட்டுரையில் அது தொடர்பான முன்னுரை சற்று நீண்டிருப்பது போல் தோன்றக்கூடும்.  காரணம் நீட்சி என்பது மரபின் தொடர்ச்சி. இந்த வீடு இன்றைக்கு என் வீடு, நேற்றைக்குத் தந்தை வீடு, அதற்கு முன் பாட்டன் வீடு, அவருக்கு முன் பூட்டன் வீடு என்று சொன்னால்தானே தற்கால வீட்டின் வழிவழி வந்த பழம்பெருமை புலப்படும்? வசந்தராசன் சிந்தனையில் வந்த மரபு அவரையும் அறியாது வந்து விழுந்த மரபு என்பதுதான் கட்டுரையின் சாரம். அந்த மரபே உத்தியாகி உள்ளடக்கத்தை மேலும் சிறக்க வைக்கிறது என்பதுதான் கட்டுரை சொல்ல வந்த சேதி!.

    “ஏவு கூர் வாளியால்  எய்து நாய் அடியனேன்
    ஆவிபோம் வேளைவாய் அறிவு தந்து அருளினாய்!
    மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ!  மற்றும் நீ!
    பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ” (கம்ப 4063)

    என்று வாலி இராமனைப் போற்றுவதற்கும்

    “அப்பன் நீ, அம்மை நீ, ஐய னும் நீ,

    அன்பு உடைய மாமனும் மாமி யும் நீ,
    ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,

    ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
    துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,

    துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
    இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,

    இறைவன் நீ ஏறுஊர்ந்த செல்வன் நீயே.

    என்று அப்பர் தாணடகம் பாடுதற்கும்

    “மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
    எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ
    கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ
    நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் “.

    என்று சிவவாக்கியர் தம் தத்துவத்தைப் பதிவு செய்வதற்கும்

    அறிவு நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை
    மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
    தோளிடை வன்பு நீ நெஞ்சத்து அன்பு நீ
    ஆலயந் தோறும் அணி பெற விளங்கும்
    தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே!

    என்று மகாகவி தன் சக்தியை வழிபடுதற்கும் இந்த ‘நீ’ என்னும் முன்னிலை உத்திதான் பயன்பட்டிருக்கிறது. அதனால் உள்ளடக்கம் சிறந்திருக்கிறது. ‘இதனால்தான் உள்ளடக்கம் சிறந்திருக்கிறது’ என்பதன்று. இந்த உத்தியினால் உள்ளடக்கச் சிறப்பு கூடியிருக்கிறது என்பதாம். இந்தப் பின்புலத்தில்தான் தம்பி வசந்தராசன் கலைஞரைப் பற்றிய கவிதை ஆராயப்படுகிறது, பாடாணில் தொடங்கிக் கையறுநிலையில் முடிந்திருக்கும் இந்தக் கவிதையை நான் படிக்கவில்லை. ஊரோடு வந்த உறவுபோல் விருத்தங்களின் சீரோடு பழகினேன்! சிலிர்த்துப் போனேன்!

    வாராக்கடனை வசூலித்தவன் நீ!

    பல்வகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களில் ஒன்று ‘காய் காய் மா மா’ என்னும் அரையடி அமைப்பு. கொண்டது. கவிஞர் பலரும் இறுதி இரண்டு சீர்களை ‘மா மா’ எனக் கொள்வதால் தனித்தனி மாச்சீர்களுக்காக திக்குத் தெரியாமல் அலைந்து திரிகிறார்கள்.  அவர்கள் தேமாந்தண்பூவும் புளிமாந்தண்பூவும் கூவிளம் தண்பூவும் மா மா என்னும் இரண்டு இருசீர்களுக்குரியன என்பதை மறந்து விடுகிறார்கள். மேலும் மூவசைச்சீர்களை இரண்டு ஈரசைச்சீர்களாக ஆக்கலாம் என்னும் வித்தையும் தெரிவதில்லை. காரணம் முனைப்பு! சொற்கள் சீராகும். சீர்கள் வாய்பாட்டுக்குள் அடங்கும். அடங்க வேண்டும். இது மாறி, வாய்பாட்டைச் சீர்களுக்குள் அடக்கம் செய்து சீர்களைச் சொற்களுக்குள் தேடும் முயற்சிதான் இன்றைக்கு எண்சீர் விருத்தம் சவலை தட்டிப் போனதற்குக் காரணம். கவிஞன் எதனை எண்ணுகிறானோ அதனை அப்படியே கவித்துவம் பிசகாமல் கொட்டிவிட வேண்டும். பிறகு களையெடுக்க வேண்டும். களையே இல்லாமல் பயிர் செய்ய நினைத்தால் கவிதைப்பயிர் எப்படி வரும்? வளரும்? வசந்தராசன் கவிதைகளில் யாப்பமைதி என்பது தனித்த ஆய்வுக்குரியது. கலைஞரைப் பற்றி இந்த எண்சீர் விருத்தங்களில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய இடங்களைத் தவிர பிற அரையடிக்கான மூன்று மற்றும் நான்காம் சீர்களில் முழுமையான சொற்கள் இல்லை என்பதை நோக்குதல் வேண்டும். இது இயல்பாக அமைவது. இட்டுக்கட்டுவது அன்று. உணர்ச்சியும் உணர்வும் மொழிக்கட்டமைப்புக்குள் வரும்போது யாப்பு தானாக அமைந்துவிடும் என்பதற்கு வசந்தனின் கவிதைகள் போதுமான சான்றாகும்.

    பார்ப்புகட்குக் குடைபிடிக்கும் பறவைத் தாய்நீ !
    பாவலரைக் கூர்தீட்டும் உலைக்க ளம்நீ !
    வேர்த்திருந்தால் சிறகுகளால் விசிறு வாய்நீ !
    வேர்க்கருணை நீர்சுரக்கும் ஊற்றுக் கண்நீ !
    கார்திகைக்கும் வானம்நீ ! கதிர வன்நீ !
    கண்மலரில் கருணைத்தேன் தேக்கி வைத்துச்
    சேர்த்தூட்டும் காவலன்நீ ! சேயும் நீதான் !
    செத்துதினம் பிழைப்போர்க்கோ கடவு ளும்நீ !

    திராவிடத்தின் தேர்க்கால்நீ ! தன்மா னம்நீ !
    திராவிடத்துப் பண்பாட்டை மீட்டெ டுத்த
    வராக்கடனை வசூலித்த வங்கி யும்நீ !
    வரலாற்றைத் திருத்தவந்த வாலி பம்நீ !
    இராசராச சோழன்நீ ! ராப்ப கல்நீ !
    இரகசியமே இல்லாத வள்ளு வம்நீ !
    திராணிகளின் திகைப்பும்நீ ! திருத்த மும்நீ |
    தெம்புதரும் நெஞ்சுக்கு நீதி யும்நீ !

    தமிழகத்தின் வரைபடம்நீ ! தமிழர்க் கெல்லாம்
    தாதுபுஷ்டி லேகியம்நீ ! உண்மை சொன்னால்
    உமர்கய்யாம் போதைநீ ! கரக ரத்த
    உடன்பிறப்பால் உயிர்சுண்ட திசைகள் எட்டைக்
    கவர்ந்திழுத்த காந்தம்நீ ! உன்போல் யாரோ
    கைவிரலில் போதிமரக் காட்டைச் செய்தார் ?
    உவந்திருக்கத் தன்மானக் கோட்டை தந்தார்?
    உயிர்த்திருக்கும் தன்மான உருவம் நீ !ஆம் !

    ஒவ்வொரு அசையாக நோக்கிச் சுவைக்க வேண்டிய நிலையில் வசந்தனின் பாட்டு அமைந்திருக்கிறது.  எனனை அவர் அறியார்.  அவரை நான் அறியேன். முகநூற் வயல் வரப்பில் நின்று ஒரு கவிதை கிட்டுமா என நாற்றிசையிலும் என் பார்வை அலைந்தபோது நான் ஒரு கவிதைக் காடடுக்குள் இருப்பதை உணர்ந்தேன். அந்தக் காட்டுக்குச் சொந்தமானவர் வசந்தன் என்பது எனக்கு தாமதமாக வந்த செய்தி!.

    ‘பார்ப்பு’ என்னும் தொடக்கமே இவர் ஒரு மரபுக காவலர் என்பதைக் காட்டிவிடுகிறது. ‘பார்ப்புகட்குக் குடைபிடிக்கும் பறவைத் தாய்நீ !என்னும் தொடரில் பறவைகளின் குஞ்சுகளுக்குப் பார்ப்பு என்பது பெயர் என்னும் மரபியல் நூற்பாவை நினைவுபடுத்திவிடுகிறார். யாப்பினை முறையாகக் கற்கும் வாய்ப்பின்றித் தன்னுடைய இறுதிக்காலம் வரை தான் முறையாகத் தமிழ் கற்கவில்லையே என்னும் ஏக்கத்தோடு மறைந்தவர் கலைஞர். ஆனால் தமிழகத்துக் கவிதைச் சிற்பிகள் எல்லாம் அவருடைய கவிதைவரிகளைக் கண்டு தம்மைச் செப்பம் செய்து கொண்டார்கள், செதுக்கிக் கொணடார்கள் என்பது மேடைக்கவிதை வரலாறு எழுதிவைத்துள்ள பின்குறிப்பு. ‘பாவலரைக் கூர்தீட்டும் உலைக்களம் நீ! என்னும் வரிகளின் உண்மைப் பொருளை உணர்ந்து சுவைக்க வேண்டுமானால் அக்காலத்தில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கவியரங்குகளை இணையத்தில் காணவேண்டும்!. கார் மழையாகுமே தவிர வானம் மழையாகாது. ‘வான்சிறப்பு’ என்றால் வானத்தின் சிறப்பன்று மழையின் சிறப்பு.  ‘கார்’ என்பது கலைஞரால் கூர் தீட்டப் பெற்ற கவிஞர் கூட்டத்திற்கான உருவகம் என்றால்  கலைஞர் வானமாகிறார். வானம் கறுக்காது. பெய்யாது. ஆனால் கலைஞராகிய வானம் கொட்டுகிறது கவிதை மழையை! பெய்தும் வெளுக்காத கார், நீல வானத்தைக் கண்டு திகைக்கிறது என்கிறார். ‘கார் திகைக்கும் வானம்’ கலைஞராம்! தண்ணீருக்கே தாகம்! காற்றுக்கே வேர்வை! என்று கூன்விழுந்த புதுக்கவிதைக் கூறுகளைக் கண்டே களைத்துப் போன எனக்குக் ‘கார் திகைக்கும் வானம் கலைஞர்’ என்னும் தொடர் மருந்தால் கலைக்க  முடியாத மயக்கததைத் தந்திருக்கிறது. இனி கார்த்திகைக்கும் வானம்’ என்று கார்த்திகையைத் மழைத்திங்களாகக் கொண்டால் ‘கவிஞர் அனைவர்க்கும் கலைஞர் பேராசிரியர்’ என்பது விளங்கிக் கொள்ளலாம். ஏனைய திங்கள்களுக்கு மட்டுமன்று கார்த்திகைக்கும் கலைஞர்தான் வானம் என்பது நயம். பிரிமொழிச் சிலேடையை இப்படித்தான் கையாள வேண்டும்!

    வாராக்கடனை வசூலிக்க முடியாமல் அரசு திணறுகிறது என்பது தினச்செய்தி. பணத்தை வசூலிக்கத் திணறும் ஒரு கட்டமைப்பில் இனத்தை அதன் பணபாட்டை மீட்டெடுக்கும் பணியைக் கலைஞர் செய்திருக்கிறார். திராவிட இன மீட்பு என்பது கொள்ளையக்கப்பட்ட கட்டித் தங்கத்தை ஏழை தனியொருவனாக நின்று மீட்பது போன்றது.. பெரியார், அண்ணா என்னும் பெரியோர்கள் வழி நின்று திராவிடப் பண்பாடு என்னும் வாராக் கடனை மீட்டெடுத்த இனப்போராளி கலைஞர். இநத உருவகப் பாடடில் இனனொரு சேதியையும் இலாவகமாகச் சொல்லுகிறார் வசந்தன்.  அது திருக்குறள் பற்றியது. திருக்குறளில் எல்லாருக்கும் எல்லாம் தெரியும். புரியும். ஆனால் துறவறவியல் புரியாது. அதனால் அது மந்தணத்தை (இரகசியம்) உள்ளடக்கியது. ஆனால் கலைஞரின் கவிதையும் எழுத்தும் பேச்சும்  திறந்த புத்தகம். உப்பைப் போல் எல்லாருக்கும் உரியது, எவருக்கும் புரிவது!. ‘ரகசியமே இல்லாத வள்ளுவம் நீ!’ என்று இவர் பாடுவது குறளோவியத்தை உள்ளடக்கியும் என்பது அந்நூலைப் படித்தார்ககுப் புலனாம்.!

    தமிழகத்தின் பூகோளத்தைத் தம்முடைய ‘கால்களால்’ வரைந்தவர்கள் இருவர். ஒருவர் பெருந்தலைவர் காமராசர். மற்றொருவர் கலைஞர். ‘பூகோளம்’ என்பது ஆயிரத்துத் தொள்ளாயிர்த்து அறுபத்து ஏழுக்கு முன்பாகத் தமிழகப் பள்ளிகளில் புவியியல் பாடத்திற்கு வைக்கப்படடிருந்த பெயர். உண்மையில் அதற்குப் ‘பூமியாகிய கோளம்’ என்பதுதான் பொருள். ஆனால் புவியியல் என்பது ஆகுபெயராக அப்பாடத்தை உணர்த்தியதாம். பூகோளத்தில் ஆகுபெயரை அறிந்தவர்கள் நாம். காமராசரும் கலைஞரும் தமிழகத்துச் சாலைகளை வரைபடம் பார்த்து அறிந்தவர்கள் அல்லர். தலைச்சாலையிலிருந்து பிரியும் கிளைச்சாலை எந்த ஊருக்குப் போகும் என்பதை அவர்கள சென்னையிலிருந்தே சொல்லிவிடுவார்கள். மதகுகளின் எண்ணிக்கை அவர்களுக்குத் தெரியாது. ஆனால் தடுப்பணை எந்தெந்த ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளன என்பது பற்றி அதிகாரிகளுக்கு வகுப்பெடுப்பார்கள். எந்த மாவட்டத்தில் எத்தனை  ஏக்கரில் என்ன பயிர் விளையும் என்பது வேளாண் கல்லூரிக்குப் போகாத அந்தப் பெருமக்கள் விளக்கமளிப்பார்கள். இந்த இரு தலைவர்களும் செல்லாத ஊரில்லை. ஊர்களை மட்டுமன்று அந்த ஊர்களில் உள்ள தம் நண்பர்களை எப்போது சென்றாலும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அளப்பரிய நினைவாற்றல் கொண்டவர்கள்.  ‘தமிழகத்தின் வரைபடமே! என்னும் தொடர் கலைஞரின் பொதுவாழ்வுப் பயணத்தைச் சித்திரிக்கும் ஆத்திசூடி!  அருமை! கவிதை சுருக்கமானது! இது சுருக்கத்திலும் சுருக்கம்!

    உணர்வுகளுக்குப் பெருந்தமனி நீ!

    யாப்பமைக் கவிதைகளை எழுதுவார்க்கு முதல் எதுகையிலேயே தெரிந்து விடும் ‘இந்தப் பாட்டு என்ன கதிக்கு ஆளாகும்?’ என்று! கருத்துக்களும் சீர்களும் ஓரளவு புலப்பட்ட நிலையில் கைக்குக் கிட்டிவிடும் எதுகையால் கவிஞன் மகிழ்கிறானோ இல்லையோ கவிதைக்கு அன்றைக்குத் தீபாவளி! எண்சீர் விருத்தங்களில் எதுகையால் வெற்றி பெற்ற ஒரே கவிஞர் பாவேந்தரே!. ‘விருத்தத்தில் வெற்றிபெற்றார் பாவேந்தர்’ என்று சுரதா பாடியதற்குக் காரணம் பாவேந்தரின் எண்சீர் விருத்தங்களே. இந்த விருத்த வித்தையின் அனைத்து வேடிக்கைகளையும் செய்து காட்டியிருக்கிறார் வசந்தன்.  புதிதாக விருத்தம் எழுதுகிற அலலது எழுத விரும்புகிற அன்பர்கள் குறைந்த அளவு ஒரு நூறு விருத்தங்களையாவது மனப்பாடம் செய்திருக்க வேண்டும். கவிதை ஓட்டம் அப்போதுதான கைகூடும். சீர்கள் இறவாணத்தில் இல்லை என்பதையும்  கவிஞர் பிறரின் படைப்புக்களில் இருக்கின்றன என்பதையும் படைப்பாளர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ‘விழிப்புரை’ என்னும் சொல்லை இரண்டாவது சீரில் வைத்த வசந்தன் அதற்கான எதுகையை அடுத்த சீரில் ‘பொழிப்புரை’ என்று எழுதுவதும், பரப்புரை,  இடித்துரை,  படித்துறை என இயைபு நோக்கி எதுகை அமைப்பதும் கவிதை வலலாளர்களுக்கன்றிப் பிறரக்குக் கிட்டாத வரமாம். அதனால் இவர் வரம்பெற்ற வசந்தன்!

    “பெரியாரின் விழிப்புரைநீ !அண்ணா எங்கள்
    பேரறிஞர் பொழிப்புரைநீ ! திரைப்ப டத்தின்
    சரியான பரப்புரைநீ !சனாத னத்துச்
    சழக்கர்களின் இடித்துரைநீ ! சமூகத் திற்காய்
    விரிந்தமடி படித்துறைநீ ! வீணர் கட்கும்
    விளையாட்டுக் கடிந்துரைநீ ! வெற்றி யே நீ !
    புரிந்தவர்க்கோ புன்னகைநீ !புரியா தார்க்கோ
    புதிர்தான்நீ ! ஆனாலும் புதையல் நீதான் !

    அகரத்தைச் சிகரமாக்கும் அற்பு தம்நீ!
    அருந்தொண்டர் தோள்சுமக்கும் பெருந்தொண் டன்நீ !
    தகரத்தைத் தங்கமாக்கும் ரசவா தம்நீ !
    தமிழ்நிலத்தின் உயிர்முகம்நீ ! நிகழ்கா லத்தின்
    நிகரற்ற இலக்கியம்நீ ! நிலைத்து வாழும்
    நெஞ்சுக்கு நீதியும் நீ !என்போன் றோர்க்கு
    உகந்துவரும் உயிரெழுத்தே நீதான் !எங்கள்
    உணர்வுகளின் பெருந்தமனி நீயே தானே !

    பெரியார் தட்டி எழுப்பிய பிறகுதான் தமிழினம் தான் தூங்கிவிட்டதை அறிந்தது. கற்றவர்களுக்கு மடல் எழுதினார் அண்ணா! பெரியாரின் மூலத்திற்குப் பதவுரையை  அண்ணா எழுத அந்தப் பதவுரைக்குப் பொழிப்புரை எழுதி உடன்பிறப்புக்களைச் சிந்திக்க வைத்தவர் கலைஞர். கலைஞரின் எதிரிகள் யாராக இருந்தாலும் கோபாலபுரம் வீட்டில் ஒரு முறை அவரை நேரில் சந்தித்துவிட்டு வெளியே வருகிறபோது இதயத்தைச் ‘சுகமாகத் தொலைத்து’விட்டுத்  திரும்புவார்கள் என்பது அந்த வீட்டில் இன்னும் வைக்கப்படாத கல்வெட்டுச் செய்தி!. கலைஞரின் மனத்தை அறிவது அவ்வளவு எளிதன்று. அவர் அணிந்திருந்த கண்ணாடி கறுப்பாயினும் பிறரை எளிதில் படம்பிடித்துவிடும் ஆற்றல் வாய்ந்தது. அதனால்தான வசந்தன் அவரைப் புதிராகவும் பார்க்கிறார். புதையலாகவும் கண்டெடுக்கிறார்.

    ‘அருந்தொண்டன் தோள் சுமக்கும்’ என்னும்  இரட்டுற மொழிதல் மிகச் சிறப்பான வரிகள். தொண்டன் அவரைச் சுமக்கின்றான். தொண்டனை அவர் சுமக்கின்றார். முன்னதற்கு விளக்கம் தேவையில்லை. பின்னது பலராலும் அறியப்படாத செய்தி. கலைஞருக்குப பெருஞ்செல்வமே அவரது நினைவாற்றல்தான். முன்பே சொன்னதுபோல் எந்தச் சிற்றூருக்குச் சென்றாலும் அங்கேயிருக்கும் கடைசித் தொண்டனையும் அடையாளம் கண்டு பெயர் சொல்லி அழைக்கும் அசுர நினைவாற்றல் உடையவர் கலைஞர். ஒரு தலைவனைச் சுமக்கின்றவன தொண்டனாகிறான். தொண்டர்கள் அனைவரையும் சுமக்கின்றவன் பெருந்தொண்டனாகிறான். ‘பெருமை’ என்பதற்கு என்னால் இப்படித்தான்  பொருள்படுத்திக் கொள்ள முடிகிறது.

    எழுப்பியவனும் நீ! இழுத்து வந்தவனும் நீ!

    பாடப்படுபவன் பெருமை சொல்வதோடு அமைந்துவிடக் கூடாது ஒரு பாடாண்திணைப் பாட்டு! அழுது புலம்புவதோடு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுவிடக் கூடாது ஒரு கையறுநிலைப் பாட்டு. பரணர் பாட்டுப் போல் வரலாறு சொல்ல வேண்டும். வாழ்க்கை நெறி சொல்ல வேண்டும்.  அரசியல் சொல்ல வேண்டும். அக்காலச் சமுதாயம் சொல்ல வேண்டும். அனைத்தும் சொல்ல வேண்டும். வசந்தன் பாடல் அத்தனையும் மொத்தமாகச் சொல்கிற அற்புதக் களஞ்சியம். கலைஞரின் தொண்டைக்குரலைப் பாடியவர் பலர். அவர் அரசியல் தொண்டினைச் சுவைகுன்றாப் பாடலில் பதிவு செய்திருப்பவர் ஒரு சிலரே. அச்சிலருள் வசந்தனும் ஒருவர்.

    “குடிசைகளின் கோபுரம்நீ ! பாதை யோரக்
    கும்பிகளின் கூழும்நீ ! தனியு டைமைக்(குக்)
    கடிவாளக் கயிறும்நீ !பொதுவு டைமைக்
    கனவுகளின் மெய்ப்பொருள்நீ !சமூக நீதி
    வடிவமைப்பின் விடியல்நீ ! வரலாற் றுக்கோ
    வள்ளுவரின் கோட்டம்நீ ! கண்துஞ் சாது
    விடியலுக்காய்க் கதிரவனை எழுப்பி வைத்த
    வீரியம்நீ ! வீரன்நீ !வெற்றி யும்நீ !”

    குடிசைகளைப் பாடியவர்கள் இருந்தார்கள். ஆனால் குடிசைகளை வீடாக மாற்றும் சிந்தனையை ‘அரசியல் கவிஞர்’ கலைஞர்தான் முன்னெடுத்தார். குடிசைமாற்று வாரியத்தை அமைத்து  நாடடுக்கே வழிகாட்டியானார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து நாளில் போக்குவரத்துக் கழகங்களை நாடடுடைமையாக்கினார் கலைஞர். பொதுவுடைமைக் கனவுகளின் மெய்ப்பொருள் ஆனார்!, இன்றைக்கு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் அன்றைக்கு அனைத்துச் சாதியினரையும் ஒரே குடியிருப்பில் வைக்க பெரியார் சமத்துவபுரம் கண்ட பெரியார் கலைஞர். அந்த வரலாற்றைப் பாடிய நம் காலத்துப் பரணர் வசந்தன்!

    “நெருக்கடிக்கே நெருக்கடியைத் தந்த வன்நீ !
    நிமிர்ந்திருக்கத் தன்மானம் நெய்த வன்நீ !
    துருப்பிடிக்காத் தொண்டுள்ளத் தூய வன்நீ !
    தொலையாத எழுத்துக்குச் சொந்த மும்நீ !
    கருக்கரிவாள் கூர்ச்சொல்லின் கருப்பை நீ!வான்
    கார்மேகக் கருணைநீ ! கடலும் நீதான் !
    விருப்புற்று வந்தோர்க்கு நிதியும் நீதான் !
    விழுதுகளைத் தாங்குகின்ற வேரும் நீதான் !

    ஒருவருக்குப் பல வாரிசுகள் இருக்கலாம். ஆனால் கலைஞர் பலருக்கும் வாரிசாகத் திகழ்கிறார் என்பதுதான் கவிதை சொல்ல வரும் சேதி! கவிதை சொல்லப்படும் பொருளில் இல்லை. சொல்லப்படும் முறையில் இருக்கிறது. நெருக்கடிநிலை அமலில் இருந்த காலததில் அனைத்துவகையான ஊடகங்களும் தணிக்கைக்கு ஆளானபோது தணிக்கைக் குழுவின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவிய மந்திரக்காரன் கருணாநிதி! ‘வெங்காயம் உடல்நலததிற்கு நல்லது’ என்பது அன்றைய முரசொலி தலைப்புச் செய்தி!. தலைப்பை மட்டும் தணிக்கைக் குழு பாரத்தது. உள்ளடக்கத்தைக் கழகத் தொண்டன் புரிந்து கொணடான்.  நெருக்கடிக்கு நெருக்கடியைக் கலைஞர் தந்தது இப்படித்தான்!

    “இழிவகற்றி இருள்தின்ன பேனா வுக்குள்
    ஈரோட்டு மைபோட்ட செங்க திர்நீ !
    பழித்தவனைத் தாய்தடுத்தும் விடேன் என்ற
    பாவேந்தர் வழிநின்று வளர்ந்த வன்நீ !
    விழித்திருந்து விழித்திருந்து விடிய லையே
    இழுத்துவந்த அண்ணாவின் இதயம் நீ !உன்
    கழுத்துவரை அழுத்தங்கள் இருந்த போதும்
    கலங்காது தரைநடந்த கதிர வன்நீ !

    ‘இழிவகற்றி இருள் தின்ன’ என்பதை  ‘இருள் இழிவு அகற்றி’ என மாற்றியுரைக்க.  சமுதாயத்தின் பன்முக இழிவு இருளாக  உருவகம் செய்யப்பட்டது. இழிவாகிய இருளை அகற்ற ஈரோட்டு மைபோடப்பட்டது என்பதாம். ஈரோட்டு மை போடப்பட்டது கலைஞரின் பேனாவில் என்பதால், எழுதியே அகற்றியவர் என்பது பெறப்பட்டது. ‘கூவி வைப்போம விடியும் போது விடியட்டும்’ என்று திண்ணைக் கதை பேசியவர் அல்லர் கலைஞர். ‘தீ அணையாதா? தென்றல் வீசாதா? என்று விடியலுக்குக் காத்திருந்தவர் அவர்.  தமிழ்ச்சமுதாயத்தின் ஒவ்வொரு சிக்கலின் ஆழத்தையும் நன்கு புரிந்து கொண்டவர் அது தீர்கிறவரை மெய்வருத்தம் பாரார், கண்துஞ்சார். அதனால்தான் ‘விழித்திருந்து விழித்திருந்து விடியலையே இழுத்துவந்த அண்ணாவின் இதயம் நீ!’ என்கிறார் வசந்தன். ‘விடியலுக்காய்க் கதிரவனை எழுப்பி வைத்த வீரன்’ என்று முதற்பாட்டில் சொன்னவர், அவரை அங்கேயே அப்படியே விட்டுவிடாமல் கதிரவனோடு விடியலையும் கையோடு கொண்டுவந்தவர் என்று கவிதை பாடுகிறார். ‘தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்த வனததிற்குள் நடந்து போனதாக’ வைரமுத்து எழுதுவார். விடியலின் கையை வலியப் பிடித்து இழுத்து வந்ததாக வசந்தன் கற்பனை செய்கிறார். வைரமுத்தின் கற்பனை அழகியல். வசந்தனின் கற்பனை நடப்பியல்!

    சுருக்குப்பை நிறைக்கவந்த உழவர் சந்தை நீ

    ஏசி அறையில் அமர்ந்து, கவிதை மாதிரி எழுதிக்கொண்டு பிறரைத் தொல்லைக்கு ஆளாக்குபவர் பலர். பட்டுக்கோட்டையைப் போல, கம்பதாசனைப் போல, தோழர் ஜீவா அவர்களைப் போல கே.சி.எஸ் அருணாசலத்தைப் போல மக்களில் ஒருவனாக இருந்து கொண்டு பாடுபவர் சிலர். ‘உழவர் சந்தை’ என்பது கலைஞரின் சிந்தனையில் பூத்த ஒரு சமுதாயத் திட்டம். நீண்ட சணல் சாக்கை விரித்து வைத்துப் பகல் முழுவதும் நடக்கின்ற விற்பனையில் நொண்டிக் கிழவியின் சுருக்குப்பையில் காசு விழும் சத்தம் பைக்கே கேட்காது. ஆனால் உழவர் சந்தை வந்தபிறகு கிழவியின் சுருக்குப்பை பேரப்பிள்ளைகளுக்கு அமுதசுரபியானது. இதனைச் சிந்திக்கிறார் வசந்தன்.

    “சுருக்குப்பை நிறைக்கவந்த உழவர் சந்தை !
    சுடர்விளக்காய் வீட்டுக்கோர் ஒளிவி ளக்கு!

    பொதுநன்மைக்கான மக்கள்நலத் திடட்மானாலும் ஒவ்வொரு தனிமனிதனும் மகிழ்ச்சிக்கு அது உதவினால்தான் முழுமையடையும். உழவர் சந்தை என்னும் பொதுநன்மை சார்ந்த திட்டம் இங்கே கிழவியின் சுருக்குப்பையை நிறைக்கிறது. “வெட்டவெளி உழவர் சந்தை வீட்டுக்கோர் விளக்கு!” அருமை! எழுபதுகளிலேயே மனிதனை மனிதன் வைத்து இழுக்கும் கொடுமைக்கு முடிவு கட்டிக் காலால் மிதிக்கின்ற ரிக்‌ஷாக்களை அரசுத் திட்டமாகச் செயல்படுத்தியும் மகளிர்க்கு இந்தியாவிலேயே முதன் முதலாகச் சொத்துரிமைக்குச் சட்டம் செய்தவரும் கலைஞரே!

    “இருப்பவனை இல்லாதோன் கையி ரண்டால்
    இழுத்துவந்த இழிநிலைக்குப் புதிய மாற்று ;
    பெருமையுடன் பெண்ணுக்கும் சமமாய்ப் பங்கு ;
    பெறுங்கல்வி இலவசம் முதல் தலை முறைக்கு !
    அருமையுடன் திட்டங்கள் செயல்ப டுத்தி
    ஆண்டவனும் நீதானே ! தமிழ்நாட் டுக்கு !

    என்று பாடுகிறார் வசந்தன். பொருளிருப்பவன் அமர்ந்திருக்கிறான். இல்லாத பொருளுக்காக, இருக்கின்ற கைகளால் இழுக்கிறானாம்!. இதில் என்ன சிறப்பு? பாடாண் திணை என்பது மன்னனின் தனிச்சிறப்புக்களைப் பாடுவது. நம்முடைய கவிஞர்கள் என்ன பாடுவார்கள் என்பதைக் கலைஞரைப் பற்றிய கவிதைகளைப் படித்தவர்கள் தெரிந்து கொள்ளலாம். அவருடைய நேர்வகிடு  பற்றிப் பாடுவார்கள். கரகரத்த குரலைப் பற்றிப் பாடுவார்கள். அவர் தோளில் போடும் நீண்ட துண்டு பற்றிப் பாடுவார்கள். பராசக்தி பற்றிப் பாடுவார்கள். மனோகராவை அவர்கள் மறப்பதே இல்லை. அவர் செய்த இவையெல்லாம் கவிதையில் இனிக்கும். ஆனால் அவருடைய சமுதாயப் பணிகளை எதிர்காலத்திற்கு அறிமுகப்படுத்தும் கவிதைகளில் செய்திகள் இருக்கும். கவிதை இருக்காது.  இனிக்காது. செய்திகளின் தொகுப்பு கவிதையாகாது. தகவல்களின் தொகுப்பு கவிதையாகாது. செய்தியைக் கவிதையாக்க முடியுமா? முடியும்? எப்படி? இப்படி! ‘சுருக்குப்பை நிறைக்க வந்த உழவர் சந்தை’ என்பதும் ஒரு செய்திதான்!. ஆனால் ஒரு மூதாட்டியைத் தோன்றா எழுவாயாக்கிச் செய்தியைக் கவிதையாக்குகிற வித்தை வசந்தனுக்கு கைவந்திருக்கிறது!.

    செயலகம் நீ!

    சமுதாய அக்கறையை, செய்ய வேண்டிய சமுதாயத் தொண்டுகளை அரசு பதவிகொண்டு நிறைவேற்றிய கலைஞரின் சாதனைகளைப் பாடிய வசந்தன் தொடர்ந்து  கலைஞருடைய பண்பாடு மற்றும் கலாச்சார மீட்புப் பணிகளையும் பாதுகாப்புப் பணிகளைப் பட்டியலிடுகிறார்.

    “குமரியிலே வள்ளுவன்நீ ! புகழே என்றும்
    குன்றாத பூம்புகார்நீ ! தந்தை தந்த
    திமிர்ந்தஞானப் பகுத்தறிவுச் செருக்கி ருந்தும்
    திருவாரூர்த் தேராய்நீ ! தேச மெங்கும்
    நிமிர்ந்திருக்கும் பாலமாய்நீ ! நெஞ்சைக் காக்கும்
    நூற்றாண்டு நூலகம்நீ ! அறிவின் ஆசான்
    அமர்ந்திருக்கும் சிலைமுன்னே செயல கம்நீ !
    அடடாவோ அத்தனையும் நீதான் !நீதான் !

    இந்தப் பட்டியலில் தன் நெஞ்சுக்கு நெருக்கமான பெரியாரையும் அண்ணாவையும் மறக்காமல் கலைஞர் செய்திருக்கும் பணிகளை நிரல்படுத்துகிறார். சில முரண்களைச் சாதுரியமாகச் சுட்டுகிறார். குறளோவியம் எழுதிக் குமரியில் வள்ளுவனுக்குச் சிலை வைத்த கலைஞர் திருவாரூர் தேரை ஒடச் செய்தார். “ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கிக் கிடக்கையிலே தேரோட்டம் உனக்கெதற்கு தியாகராசா? என்னும் கொள்கையுடையவர் பெரியார். அவருடைய ‘திமிர்ந்த ஞானச செருக்கு’ கலைஞரின் நெஞ்சுக்குள் இருந்தும் ஊர்ப்பணி கருதி தேர்ப்பணி செய்தார். “செந்தமிழ்ச செல்வி சிலப்பதிகாரத் தலைவி, வீரத் தமிழகத்தின் விடிவிளக்கு வெற்றிக் காவியத்தின் பேசும் பெண்தெய்வம்” என்று கலைஞராலேயே புகழப்பெற்ற கண்ணகி வாழ்ந்த பூம்புகாரை மீட்டுருவாக்கம் செய்தது, அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தது ஆகிய செய்திகளை ‘நீ’ என்னும் முன்னிலையால் அடக்கிக் காட்டுகிறார். அறிவாளி அண்ணா நூலகம் அமைத்ததும் நோயாளிகளுக்காக அதனை மருத்துவமனையாக்கியதும் வரலாறு!

    உரசல்கள் இல்லாத உயிரெழுதது நீ!

    ‘தமிழகத்தின் வரைபடமே!’ என்று பாடியவர் பரிணாமத்தால் ‘திராவிடத்தின் வரைபடமே’ என்கிறார். கால்டுவெல்லைப் படிக்காதவர்களுக்கு இந்தக் கருத்து அவ்வளவாகப் புரிய வாய்ப்பில்லை. அவசர நிலைக்காலத்தில் அவர் முரசொலியில் எழுதிய ஒவ்வொரு உடன்பிறப்புக்கான மடலும் ஒவ்வொரு முனைவர்ப் பட்ட கருதுகோளாகலாம்!.

    “திராவிடத்தின் வரைபடமுன்கையெ ழுத்து!
    ……………………………………………………………|
    மிசாவுக்கோ நீமட்டும் ஆய்தெ ழுத்து !
    உரசல்க ளில்லாத உயிரெ ழுத்தே!
    உண்மையில்நீ தமிழ்நிலத்தின்பொன்னெ ழுத்து !”

    என்னும் வரிகளில் ‘உரசல்கள் இல்லாத உயிரெழுத்து’ என்பதுதான் கவிதை. தமிழெழுத்துக்களின் பிறப்புக்களை ஆராயும் தொல்காப்பியம் முதலில் உயிரெழுத்துக்களின் பிறப்புக்களை ஆராய்ந்து சொல்கிற முடிவு இதுதான். “உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் வாய்திறத்தல், நாவின் விளிம்பு நிலை, இதழ்குவித்தல் என்னும் முத்திறத்துக்குள அடங்கும்.” உச்சரரிப்பில் எத்தகைய  இடர்ப்பாடும் இல்லாத பிறப்புக்குரியன உயிரெழுத்து என்பதை ‘தத்தம் திரிபே சிறிய என்ப’ என்னும் விதிக்குள் அடக்கிக் காட்டுவார். கலைஞரின் பொதுவாழ்க்கையும் தமிழின் உயிரெழுத்துக்களின் உச்சரிப்பைப் போல் உரசல் இலலாதது. எவரையும் பகைத்துக் கொள்ளும் அல்லது உறழ்ந்து நோக்கும் போக்கு அவரிடம் காணாதது. காண முடியாதது. தன்னைக் கட்டமைப்பதிலும் தன் திறமையை, வளர்த்துக் கொள்வதிலும் தன்னைத் தானே பக்குவப்படுததிக் கொள்வதிலுமே முழுக்கவனத்தையும் செலுத்தியவர். வசந்தனின் பாடுபொருளில் நாம் கருணாநிதியைக் காணவில்லை. கலைஞரைத்தான் காணுகிறோம்  தனக்குத்தானே புடம்போட்டுக் கொண்ட தங்கம் கலைஞர் என்பதைத்தான் தமிழகத்தின் பொன்னெழுத்து என்கிறார் வசந்தன்!

    வாய்மை வரைந்து கொணட ஓவியம் நீ!

    உயர்வு நவிற்சி அணி என்று ஒன்று உண்டு. இதனை மிகைக் கற்பனை என்றும் சொல்வார்கள் இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் சிறந்திருக்கும் இது பொதுவாக இலக்கியங்களில் சிறப்பதில்லை.

    “வைரத்தால் புள்ளிவைத்துத் தன்னைத் தானே
    வாய்மையே வரைந்துகொண்ட ஓவி யம்நீ !”

    வசந்தன் எழுதுகிறார் இப்படி. வாய்மை வினைமுதல்!  அது ஒரு ஓவியம் வரைகிறது.  புள்ளி வைக்கிறது. வஞ்சி கோலமிட கோலமாவு போதும். வாய்மையென்னும் சத்தியவதி கோலமிட்டால் கோலமாவு போதுமா? எனவே வைரத்தைக் கொண்டு புள்ளிவைக்கிறாளாம். எந்தத் திறனாய்வு அளவுகோலாலும் அளக்க முடியாத கற்பனை!. ‘தெள்ளுதமிழ் பாடம் எழுதப் பள்ளியில் சேர்க்க வரும்  மாமனை’ப் பற்றிக் காமாட்சி சுந்தரம்  எழுதினார் அன்று  ‘வெள்ளியினால் செய்த ஏட்டில் நல்ல வைர எழுத்தாணி கொண்டு’ என்று!  ஏடு வெள்ளி! எழுதியவன் கல்யாணியின் மகன்! எழுதுகோல் வைரம்! மொழி தெள்ளுதமிழ்! அனைத்தும் ஒரே அலைவரிசை! இதுதான் கவிதை! வைரத்தைத் தங்கத்திலே வைத்தால் மதிப்பா?  தகரத்தில் வைத்தால் மதிப்பா?

    பாடாண் திணைக்குள் ஒரு கையறு நிலை!

    இந்தப் பாடலை ‘நீ’ என்னும் முன்னிலையில் தொடங்கிப் பாடிய வசந்தன் பல நுண்ணியங்களைப் பதிவு செய்திருப்பதை என்னால் உணர முடிகிறது. உணர்ந்து சுவைக்க முடிகிறது. பாட்டுடைத் தலைவனை நிகழ்காலத்தில் பாடினால் அது பாடாண் இழந்த நிலையில் இறந்த காலத்தில் பாடினால் அது கையறு நிலை!. கையறு நிலைக்குள் பாடாண் அடக்கம். ஆனால் பாடாணுக்குள் கையறு நிலை அடங்காது.  முதல் பன்னிரண்டு விருத்தங்களில் பாடாண் குறிப்புடன் பாடிய வசந்தனால் இறுதி விருத்தததை அவ்வாறு பாட முடியவில்லை. ‘கலைஞர் இல்லை’ என்னும் உண்மை அவரைப் பிழிகிறது.  அவரையும் அறியாமல் கொட்டுகிறார்.

    “நீரின்றி நிழலின்றிக் காற்று மின்றி
    நிலைகுலைந்து குடைசாய்ந்தே கிடக்க எங்கள்
    வேர்சாய்ந்து வான்பார்த்தால் என்ன செய்வோம் ?
    வெறுங்கையைப் பிசைந்துள்ளோம் !

    பாட்டுடைத் தலைவன் மறைவையும் அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளையும் வெற்றிடத்தையும் ஏழு எச்சங்களால் அடுக்கிக் காட்டுகிறார்.  “நீரின்றி நிழலின்றிக் காற்றுமின்றி நிலைகுலைந்து குடைசாய்ந்தே கிடக்க ….. வேர்சாய்ந்து” என்னும் எச்சங்கள் எல்லாம் கலைஞரைப் பற்றிய எதிர்மறை உருவகங்கள். ‘எல்லாமாக இருந்த நீ போய்விட்டதால் ஏதுமற்ற ஏழையானோம்’ என்பதை ‘வெறுங்கையைப் பிசைந்துள்ளோம்’ என்னும் மரபுத் தொடரால் புரிய வைக்கிறார்.

    வாழ்கிற காலத்தில் எவரையும் உரிமையோடு பேசலாம் என்பதால் இதுவரை ‘நீ’ என்று பாடி வந்தவர், ‘கலைஞர் இனி இல்லை’ என்னும் உண்மை உறுத்த,  இறுதி விருத்தத்தில்

    “………………………………………………………………………நீங்கள் வந்தால்
    தேர்வந்த தெருவாக மகிழ்ந்தி ருப்போம் !
    தென்னிமயம் கண்டுயிர்த்து களித்தி ருப்போம் !

    என்று ‘நீங்கள்’ என்று அழைப்பது காண்க. இதில் என்ன நயம் இருக்கிறது? எனச் சிலர் வினவக்கூடும். மகாகவி பாடிய ‘நந்தலாலா’வைக் கவனித்தவர்களுக்கு இந்த நுண்ணியம் புரியும். அந்தப் பாடடில் உள்ள நான்கு கண்ணிகளில் முதலிரண்டு கண்ணிகளில் ‘தோன்றுதையே!’ என்று விளித்த பாரதி, அடுத்த இரண்டு கண்ணிகளில் ‘தோன்றுதடா’ என்று விளிப்பார். இறைவன் எட்ட நிற்கிறபோது ‘ஐயே’ என்று வணங்கியும் அருகில் வந்து இனிக்கிறபோது ‘அடா’ என்ற  உரிமையோடும் அழைப்பது கவித்துவ நுண்ணியம். அது வசந்தன் பாட்டில் இடம் மாறியிருக்கிறது. கலைஞர் உயிரோடு இருக்கிறபோது உரிமையுடன் ‘நீ’ என்றவர், அவர் திரும்பாத இடத்திற்குச் சென்றுவிட்டார் என்று கைபிசைந்து நிற்கிறபோது ‘நீங்கள்’ என வணங்கி மதிப்பளித்துப் பாடுகிறார் என்பதாம். இது இச்சை வெளிப்பாடு அன்று. அனிச்சை வெளிப்பாடு!

    “சீர்கொண்டு வரும்சிரிப்பே ! வா! பி றந்து !
    சிறுநகையில் உயிர்மீட்பாய் ! சீக்கி ரம்வா !”

    உணர்ச்சியின் உச்சம் கவிதை என்பதை ‘பிறந்து வா என்பதை ‘வா பிறந்து என்னும் பிறழ்ச்சியில் உணர்க. பிறப்பு தாய்க்கு மகிழ்ச்சி. வருவது சமுதாயத்திற்குப் பயன். போய் வா! சென்று வா! வென்று வா! ஆடி வா! பாடி வா! என எச்சத்தை முன்னாக்கி ஏவலைப் பின்னாக்குவதுதான் பொதுமை. ‘இன்று போய் நின் தானையொடு நாளை வா!” என்பது கம்பன் தமிழ்! இந்தப் பொதுமையில்  பழகியவர்க்கு ‘வா! பிறந்து! என்பது மாற்றுச் சுவையைத் தரககூடும்!.

    நிறைவுரை

    இயற்கையைப் பாடலாம்! இறைவனைப பாடலாம்! தமிழைப் பாடலாம்! தத்துவத்தைப் பாடலாம்! ஆனால் தனிமனிதச் சிறப்புக்களைப் பாடுபொருளாக்கிக் கவிதைத் தொழில் செய்வது அவ்வளவு எளிதானதன்று. காரணம் பாட்டுடைத் தலைவனின் பண்புகளும் செயல்களுமே முன்னிற்பதால் கற்பனை குறைந்த அந்தச் சூழலில், அவற்றைக் கவிதையில் கொண்டுவருவது மிகமிகக் கடினம். ‘அன்பு மக்கள் கடலின் மீதில் அறிவுத் தேக்கம் தங்கத்தேரில்! என்று தந்தை பெரியாரைப் பாவேந்தரால் பாட முடிகிறது என்றால் அவர் பாவேந்தர்! அதனால் முடிகிறது!  ’சாவே! உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ?” என்ற கையறுநிலையில் நேருவைப் பாடவந்த கண்ணதாசன் சாவை நோக்கி ஏசுவது காண்க! “நான் வருகிறபோது மீண்டும் உன் (அண்ணாவின்)  இதயத்தைக் கொண்டு வந்து அவர் கால் மலரில் வைப்பேன்” என்னும் கற்பனையைக் கையறு நிலையில் கொண்டுவருவது கலைஞருக்கு எளிது! எல்லாருக்கும் எளிதன்று. பாடாண் மற்றும் கையறு நிலையில் நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பே இடம் பெறும். இத்தகைய இத்தகைய சிக்கலான துறையில் ‘நீ’ என்னும் முன்னிலையை உத்தியாக்கிக் கற்பனை கலந்து கவிதைத் தொழில் செய்து களவெற்றிக் கண்டிருக்கிறார் வசந்தராசன். மீள் பார்வை செய்யாததாலும், அவசரம் காரணமாகவும் எளிதாகத் தவிரத்திருக்க வேண்டிய யாப்புக் குறைகள் உட்பட சில குறைகள் ஆங்காங்கே தென்படுகின்றன.  இந்த ஆய்வு கொழுக்கட்டைச் சுவைபற்றியதாதலின் பானையின் ஓட்டையைப் பொருட்படுத்தவில்லை! தம்பி வசந்தராசனின் உள்ளங்கை விரல்களுக்கு ஒரு குருணி வாழ்த்துக்கள்!

    (தொடரும்)

    Share