வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
அனிதா சத்யம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
கருவண்டு விழிகளோடும், களைசொட்டும் முகத்தோடும், விளக்கொளியில் கல்விகற்கும் கவின்மழலையே! இன்று நீ கற்கும் கல்வி நாளை உன்வாழ்வில் நிச்சயம் விளக்கேற்றி வைக்கும்! வெள்ளத்தால் போகாத, வெந்தணலால் வேகாத விழுச்செல்வமாம் கல்வி, இறுதிவரை உன்னைக் காக்கும்! உன் இடுக்கண் போக்கும்!
திரு. வாசகன் பாலசூரியனின் கண்கவர் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளிஓவியருக்கும், தேர்வாளருக்கும் எம் நன்றிகள்!
இனி, கவிதைகளில் நம் கவனத்தைச் செலுத்துவோம்!
***
கடந்தகாலம் நோக்கிய சிந்தனைப் பயணத்தில் வானவில் தெரியவில்லை; வறுமைதான் தெரிந்தது இந்தக் குழந்தைக்கு. ”வறுமைகண்டு கலங்காதே கண்மணி! இளமையில் கல்! வளமையைக் காண்பாய்!” என்று மழலைக்கு நன்மொழி நவில்கின்றார் திருமிகு. ஹிஷாலி.
கருப்புவெள்ளை புத்தகத்தில் மெழுகுவர்த்திவெளிச்சம் எண்ணம்மாறி வண்ணம்களையாத அதேநிறக்கண்கள்
சிறுமியின் சிந்தனைச்செறிவைச் சிறப்பாய்ச் சித்தரித்திருக்கும் இந்தக் கவிதையின் ஆசிரியர் திரு. எஸ்.வி.வேணுகோபாலனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்அறிவிக்கின்றேன்.
***
மின்சாரம் இல்லாவிட்டால் என்ன? கிடைத்திடும் சிறியஒளியில் தன் அறிவுச்சாரம் பெருக்கிடுவாள் இந்தத் திருநிறைசெல்வி என்கிறது மற்றொரு கவிதை…
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
திரு. வாசகன் பாலசூரியன் எடுத்த இந்தப்படத்திற்குஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி.சாந்திமாரியப்பன்தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்திபுதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
திருமிகு. சாமினி எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்களுக்கு வல்லமையின் நன்றி!
அலையெறியும் கடற்கரையோரம் நின்றிருக்கும் இந்த ஆரணங்கின் மனத்தில் பொங்கிவரும் எண்ண அலைகள் சுமந்துவருபவை துன்ப நினைவுகளா? இல்லை இன்பக் கனவுகளா?
ஏந்திழையின் எண்ணங்களை எழுத்தில் படம்பிடிக்கும் வேலையை நம் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்! நமக்குத் தொழில் அவர்தம் கவிதைகளை இரசிப்பது மட்டுமே!
***
வெளிநாட்டில் வேலைசெய்யும் கொழுநனின் நினைவோடு குலக்கொடியாள் தவித்திருக்க, அவள் தனிமைத்துயரை அவன் காதில்போடவே இந்த அலைகள் இவ்வாறு ஆர்ப்பரித்து ஓடுகின்றன என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
”கைம்மாறு கருதாமல் கருங்கல்லைக் கட்டியணைக்கும் இந்தக் கடலலையானது நம்பிக்கை நீர்தெளிக்க, சுற்றத்தின் அருமையை முற்றாய் உணர்கின்றாள் இந்த மாது” என்று மொழிகின்றார் திருமிகு. ஹிஷாலி.
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற வலிநிறைந்த பாடங்கள்தாம் எத்தனை எத்தனை! அதிலொன்று… காதலில் ஏற்படும் தோல்வி. காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுக்கக் காரிகையொருத்தி காலம் பார்த்திருக்க, அந்தக் காதலனோ அவளைக் கைகழுவிவிட்டுச் சென்றால் அவள் மனம் சிதறிப் போகாதோ?
சேலையணிந்த சோலையாய்க் காட்சிதரும் பாவையின் காதல் கானல்நீராய்ப் போனதை, ஆசைகள் நீராசையாய் ஆனதைப் பேசும் கவிதை…
கடற்கரையில் நின்று சோககீதமிசைக்கும் சுந்தரியின் மனத்தைக் கவினுறக் காட்டியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், இவ்வாரத்தின்சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.
***
தரைமேல் பிறக்கவைத்த இறைவன் மீனவரைத் தண்ணீரில் பிழைக்க வைக்கின்றான். அவ்வாறு தண்ணீரில் பிழைக்கச்செல்லும் நம் இந்திய மீனவர், இலங்கைப் படையால் அடையும் கொடுமைகள் சொல்லி மாளா! சொல்லில் அடங்கா!
மீன்பிடிக்கச் சென்ற தன் காதற்கணவன் உயிரோடு மீள்வானா? இல்லை இலங்கைப் படையால் மாள்வானா? எனப் பரிதவிக்கும் பாவையின் ஏக்கத்தைச் சுமந்துவரும் கவிதையொன்று நம் கவனம் கவர்கின்றது.
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
சாமினிஎடுத்த இந்தப் படத்திற்குஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன்தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
மனங்கவரும் இந்தப் பனங்காய் வண்டியை ஓட்டிச்செல்லும் சிறார்களைக் காண்கையில் நம் உள்ளமும் குழந்தையாய் மாறிக் குதூகலிக்கின்றது.
காலச்சக்கரமும் இந்த வண்டிச்சக்கரங்களைப் போலவே சுழன்றுசெல்லும் இயல்புடையது என்பதை இத்தருணத்தில் நம் மனம் எண்ணிப்பார்க்கின்றது.
நுங்குவண்டி கண்ட நம் கவிஞர்கள் மனத்தில் நுங்கும் நுரையுமாகக் கற்பனைவெள்ளம் கரைபுரண்டோடத் தொடங்கியிருக்கும். அந்தக் கவிவெள்ளத்தில் நாமும் நனைந்துவரலாம்!
இற்றைய வாழ்வில், உடலுக்கும் உள்ளத்துக்கும் உறுதிபயக்கும் பழைய விளையாட்டுக்கள் எல்லாம் காணாமற்போய்க் கணினி விளையாட்டுக்களே கதியென்று சிறார்கள் மாறிவிட்டிருப்பது கண்கூடு. அதனை விளக்கும் கவிதை…
”வெம்மை தணிக்கும் நுங்கையுண்டு அதிலே வண்டிசெய்து ஓட்டிமகிழும் பாக்கியத்தை இழந்துவிட்ட தலைமுறை இது!” என்று இன்றைய குழந்தைகளின் நிலைக்காக இரங்கியுரைக்கும் இக்கவிதையை இயற்றியிருக்கும் திரு. செண்பகஜெகதீசன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.
***
இயற்கையை மறந்தோம்…கூடவே இயற்கையோடு நம்மை இணைத்துவைக்கும் விளையாட்டுக்களையும்! ”நுங்கே அறியாத் தலைமுறைக்கு நுங்குவண்டி குறித்துமட்டும் என்ன தெரிந்துவிடப்போகிறது? இயற்கையன்னையே என்செயப் போகிறாய் எம் இளைய தலைமுறையை?” எனச் சீற்றத்தோடு வினா எழுப்பும் கவிதை…
பழைய விளையாட்டுக்கள் அனைத்தும் பொய்யாய்ப் பழங்கதையாய் வழக்கொழிந்துவரும் வேதனையை உணர்வுபூர்வமாய்த் தன் ஆக்கத்தில் சுட்டியிருக்கும் திரு. இளவல் ஹரிஹரனுக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
வெங்கட் சிவாஎடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன்தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்திகணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா
பங்கயக் கைநலம் பார்த்தலவோ – இந்தப்
பாரில் அறங்கள் வளரும் அம்மா! என்று மங்கையரைப் போற்றினார் கவிமணி. அத்தகைய மாதவத்தோரான மங்கையர் புன்னகைபூத்த முகத்தோடும், புதுவண்ணங்கள் வழியும் உடலோடும் புகைப்படத்தில் நின்றிருப்பது வாராதுபோல் வந்த வசந்தகாலத்தை வரவேற்கவோ?
திரு. ராஜ எடுத்திருக்கும் இந்த வண்ணப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். நன்றி இவ்விருவருக்கும்!
அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துவருவோம்!
’பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்று பகர்ந்த தெய்வப்புலவன் அவதரித்த தமிழ்நாட்டில் இன்றோ வருணாசிரமத்தின் பெயரால் கருணையின்றி மனித உயிர்கள் காவுவாங்கப்படுகின்றன! சக மனிதர்களின் உணர்வுகளைப் புண்படுத்தி நம் பண்பாட்டை அழிப்போர் சகத்தில் வாழ்வது மாந்த இனத்திற்கே பெருத்த அவமானம் ஆகும்!
”வண்ணங்களால் வசந்தம் பூசிக்கொள்ளும் மனித மனத்தை, எண்ணங்களால் மனிதன் வேறுபடுத்துதல் வேதனைக்குரியது; வண்ணங்களே இயற்கைக்கு அழகூட்டுவன; புதிய சாலங்கள் காட்டுவன. அவற்றை மனிதனின் சுயநலம் சிதைக்கலாகாது” என்று நயமாய் உரைக்கும் கவிதை நெஞ்சைத் தொடுகின்றது!
புறவுலகின் பூக்கள் நம் அகவாழ்வுக்கு அழகுசேர்க்கட்டும் என்று இதமாய்ச் சொல்லுகின்ற இனிய இக்கவிதையை இயற்றியிருக்கும் திரு. இளவல் ஹரிஹரன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.
***
வறுமை மறந்து வானவில்லாய் ஆடுங்கள்; சாதி மறந்து சமத்துவ ஹோலி கொண்டாடுங்கள் என்று உற்சாகமூட்டும் கவிதை ஒன்று!
எளிய வரிகளில் அரிய வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லியிருக்கும் திருமிகு. ஹிஷாலியைப் பாராட்டுகின்றேன்.
கவிஞர் பெருமக்களே! கவிதைகளின் வரவு இவ்வாரம் மிகவும் குறைந்திருக்கக் காண்கின்றேன். சிந்தனைச்செல்வம் நிரம்பப்பெற்ற உங்களிடமிருந்து அதிக ஆக்கங்களை வரும் வாரங்களில் எதிர்பார்க்கின்றேன். நன்றி!
நம் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றியவரும், நம் நாடு சுதந்திரம் பெற்றிருந்த காலகட்டங்களில் பொறுப்பான பதவிகளில் இருந்தவர் மட்டுமல்லாது, ஒரு மீப்பெரும் எழுத்தாளராகவும் இருக்கும் ஒரு ஆளுமையைச் சந்திக்கப்போகிறோம் என்ற பேராவல் உடன்வர பேராசிரியர் நாகராஜன் ஐயா அவர்களும் நான் நரசய்யா ஐயாவை சந்திக்கப்போவது தெரிந்தவுடன் உடன் வருவதாகக் கூறிவிட்டார்கள். அவர்தம் இல்லத்தின் எல்லையைத் தொட்டவுடன் கட்டிடப் பாதுகாவலர், ‘இதோ இந்த வீடுதான். ஐயா உங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்’ என்றார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் தம்பதி சமயதராக வந்து வரவேற்று அன்பாக இருக்கையில் அமரச் செய்தார்கள். இலக்குமி கடாட்சம் முழுமையாக நிறைந்திருந்த இல்லம் அது. நாங்கள் அமர்ந்திருந்த, சற்றே பள்ளமாக அமைந்திருந்த வரவேற்பறையின் நேர் எதிர்புறம் முதன்முதலில் கண்களில் பளிச்சிட்டது பரந்த அழகானதொரு ஓவியம். இரண்டு, மூன்று முறை திரும்பத் திரும்ப என் பார்வை அதன் மீதே செல்வதைக் கண்ணுற்றவர் குறிப்பால் என் எண்ணம் உணர்ந்தவராக அது செருமனியில் இருக்கும் ஒரு கோட்டை என்றும் அந்த ஓவியத்தைத் தீட்டியதும் தான் தான் என்ற ஆச்சரியமான தகவலையும் அளித்தார். பன்முக நாயகரின் மற்றொரு முகத்தையும் அறிந்த திருப்தி எங்களுக்கு. அம்மையாரின் அன்பான உபசரிப்புடன் எங்கள் உரையாடல் துவங்கியது.
பணியையும், எழுத்தையும், வாழ்க்கையையும் சமமாக பாவிக்கும் மனித நேயமிக்க ஒரு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள். அதாவது எந்த முகமூடியுமில்லாத வெளிப்படையான பேச்சே இவருடைய மொத்த உருவமாக உயர்ந்து நிற்கிறது! சமகால எழுத்து மட்டுமன்றி, தொல்லியல் சார்ந்த பதிவுகள், வரலாற்றுத் தகவல்கள், விமர்சனங்கள், நாட்டு நடப்பு என பல்வேறு தளங்களில் மிக அமைதியாக, தன் போக்கில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிக சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் இவர். பெரும்பாலும் பிரபலமான அனைத்து தினசரிகள், வார இதழ்கள், இணைய தளங்கள் என பல்வேறு பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. எந்த ஒரு விசயத்தையும் ஆய்வுப்பூர்வமாக அணுகி அதன் நன்மை, தீமைகளை எந்தவிதமான மேற்பூச்சுமின்றி வெளிப்படையாக விவரிப்பதில் வல்லவர் இவர். அனைத்திற்கும் மேலாக வார்த்தைகளில் தெளிவும், எவரையும் புண்படுத்தாத நளினமும் இவருடைய தனித்தன்மை. அந்த வகையில் அன்பான மனைவியையும், பண்பான இரு மகன்களும் கொண்ட அழகான குடும்பத்தின் சொந்தக்காரர் இவர். இரண்டு மகன்களும் திருமணமாகி குழந்தைகளுடன் நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு மகன் தன்னைப் போலவே கப்பற் பணியில் ஈடுபட்டு இளம் வயதிலேயே மிக உயர் பதவியை வகிப்பதை பெருமை பொங்கக்கூறுகிறார். அமைதியும், அருளும் நிறைந்த அழகிய குடும்பத்தின் தலைவராக இருக்கும் , நரை, திரை மூப்பைக் கடந்த இந்த இளைஞருக்கு 83 வயது என்று சொன்னால் நம்புவது சற்று கடினமாகத்தான் உள்ளது. புலவர் பிசிராந்தையாரிடம் ஒரு வழிப்போக்கர் அவருடைய இளமையின் இரகசியம் குறித்து கேட்டபோது அவர் பாடிய அந்த புறநானூற்றுப் பாடல்தான் நினைவிற்கு வந்தது.
” யாண்டு பலவாக நரையில வாகுதல் யாங்காகியர் என வினவுதிராயின், மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.”
திரு நரசய்யா அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நான் முதன்முதலில் ஐயாவைச் சந்தித்ததும் இக்குழுவின் துணைத்தலைவர் முனைவர் சுபாஷிணி அவர்கள் நடத்திய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில்தான். அந்த நிகழ்ச்சியில் என் நான்கு நூல்களும் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ஒரு நூலுக்கு ஐயா அவர்களின் அணிந்துரை பெற்றிருந்ததும் என் வாழ்நாள் நினைவுகூரத்தக்க செய்திகள் என்றால் அது மிகையாகாது! அவருடைய வரலாற்று ஆய்வுகளின் விருப்பமான ஒரு வாசகியாக, அவர்தம் பணிசார்ந்த ஆளுமையை வியப்புடன் நோக்கும் ஒரு சாதாரண இந்தியக் குடிமகளாக அவரைச் சந்திக்கச் சென்றவள் மனிதம் நிறைந்த அந்த இணையரைச் சந்தித்துவிட்டு ஒரு அன்பு மகளாய் திரும்பி வந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.
எடுத்த எடுப்பில் ஆணித்தரமான வாதங்களை வெகு எளிதாக இருவரும் துவங்கிவிட்டனர். இடையிடையே விட்ட இடத்தை இணைத்துப் பிடிக்கச் செய்வதும், எனது ஐயங்களை தீர்த்துக்கொள்ள எழுப்பிய வினா மட்டுமே எனது பணியாக இருந்தது. சம்பிரதாயமான விசாரிப்புகளுக்குப் பிறகு தமது நூலக அறைக்கு அழைத்துச் சென்றார் மிகப்பெருமையாக. தலையணி அளவிற்கு பெரிய, பிரபலமான பன்னாட்டு எழுத்தாளர்களின் ஆங்கிலப் புத்தகங்கள் நிரம்பியிருந்த அறையில், பல தமிழ் நூல்களும், இரண்டு புராதன பெரிய பிரம்பு இருக்கைகளையும் காண முடிந்தது. எண்பது ஆண்டுகள் பழமையான அந்த நாற்காலிகளை தம் மகன் மூலம் விரும்பி பரிசு பெற்றதாக பெருமை பொங்கக் கூறியபோது ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை அவர் முகத்தில் காண முடிந்தது. பல அரிய நூல்களுக்கு மதிப்புரை வழங்கியுள்ளவருக்கு சம்பந்தப்பட்ட அயல்நாட்டு ஆளுமைகளிடமிருந்தும் கிடைத்த பாராட்டுக் கடிதங்களையும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. சில அரசு அலுவலகங்களில் தகுந்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பது பற்றிய பேச்சை மிக ஆக்கப்பூர்வமாக அதே சமயம் நகைச்சுவையாக ஆரம்பிக்க பேரா. நாகராசன் அவர்களும், ‘inclination’ (Inclination is defined as a tendency towards something, such as a behavior or a habit) என்ற பண்பாடு, அதாவது ஏதாவது ஒரு விசயம் பற்றிய மாற்று கருத்தை முன்வைக்கும்போது அதை நாசூக்காக கையாள வேண்டியது பற்றிய சிறு விவாதம் வந்தது.
நரசய்யா அவர்கள் சரிதான் என்று ஆமோதித்தவர், “நம்ம ஆட்கள் ஆதாரங்கள் ஏதும் இல்லாமலே நல்ல கதை விடக் கற்றுவைத்திருக்கிறார்கள். அதுதான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் மீது எனக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு. ஆனால் அவர் சொன்ன அந்த பக்கிங்காம் கால்வாய் குறித்த விசயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு பதிலாக, வரலாற்றுத் தகவல்களை சரியாக அறிந்துகொள்ளாமல் கற்பனையாக எதுவும் எழுதுவது சரியல்ல என்று எழுதிவிட்டேன். பக்கிங்காம் கால்வாய் பகுதிகளின் முந்தைய நிலையை நன்கு அறிந்தவன் நான். ஒரு பெரிய பொறியியல் வல்லுநர் இது குறித்து எழுதிய ஆய்வுத் தகவல்களை வாசித்திருக்கிறேன். அதற்கான ஆதாரங்களாக என்னிடம் படங்கள் உள்ளன. பக்கிங்காம் கால்வாய் அப்போது மிக சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு படக்குத்துறை. அங்கு குறைந்தது 30 படகுகள் நின்றுகொண்டிருக்கும். இப்போது அங்கு எப்படியிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல் சிலர் எடுத்ததற்கெல்லாம் லெமூரியாக் கண்டம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எதற்கும் அடிப்படை ஆதாரங்கள் இல்லாத ஒரு விசயத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதில் சலிப்புதான் மிஞ்சுகிறது.
திரு நரசய்யா அவர்கள் குறிப்பிட்ட, எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் ஒரு கட்டுரையின் பக்கிங்காம் கால்வாய் பற்றிய பகுதி கீழ்வருமாறு:
“இந்தியாவில் எப்போதுமே வரட்சி உண்டு. நூற்றாண்டுகளாகவே மழைபொய்த்து வரும் வரலாறு நமக்குண்டு. மழை பொய்க்கும்போது நாம் பஞ்சம்பிழைக்கச்செல்வோம். இந்தியாவின் மேற்குப்பாதியில் நல்ல விளைச்சலிருந்தால் கிழக்குப்பாதியில் மழை இருக்காது. இங்கே ம்ழை இருந்தால் அங்கே இருக்காது. இதுதான் இங்குள்ள இயற்கை. மக்கள் மழை இல்லாவிட்டால் மறுபாதிக்கு கிராமங்களையே காலிசெய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். இஸ்லாமிய ஆவணங்களில் அப்படி மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து ஊர்கலும் நகரங்களும் காலியாகக் கிடப்பதைப்பற்றிய வரிவசூலதிகாரிகளின் குறிப்புகள் பல உள்ளன. ஆனால் இந்த உப்புவேலி அந்த இடப்பெயர்வை தடுத்துவிட்டது. பஞ்சம் இருந்த இடங்களுக்கு தானியம் செல்வதையும் அது தடுத்துவிட்டது. தஞ்சைக்கும் ராமநாதபுரத்துக்கும் நடுவே ஒரு பெரிய மதில்கட்டினால் என்ன ஆகும்? அதுதான் நடந்தது
இரண்டாவது பெரும் பஞ்சம் வந்ததற்குக்காரணம் ரயில்பாதைகள்தான். அவ்வருடங்களில் பஞ்சாபில் மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது. மொத்த தானியத்தையும் வெள்ளையர் ரயில்பாதைகள் வழியாக துறைமுகத்துக்கு திரட்டிக்கொண்டு சென்று ஏற்றுமதி செய்தார்கள். உலகமெங்கும் போரிட்டுக்கொண்டிருந்த தங்கள் ராணுவத்துக்கு அந்த உணவை அளித்தார்கள் பஞ்சத்தில் மக்கள் கோடிக்கணக்காகச் சாகும்போது துறைமுகங்களில் உணவு மலைமலையாகக் குவிந்துகிடந்தது. ஆறுமாதம் உணவு ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தினால்போதும் பஞ்சத்தைத் தடுத்துவிடலாம் என பிரிட்டிஷ் மனிதாபிமானிகளே கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். ஆதிக்க அரசு செவிசாய்க்கல்வில்லை.
அந்த பெரும்பஞ்சத்தில் சென்னையை ஆட்சி செய்வ்ர் பக்கிங்ஹாம் பிரபு. அவர் இங்கே பணம் சேர்ப்பதற்காகவே அனுப்பப்பட்டவர். அவரது குடும்பம் நொடித்துப்போயிருந்தது. அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமாக இருந்ததனால் அவரை பணம் நிறையக்கொட்டும் இடமான சென்னைக்கு அனுப்பினார்கள். நண்பர்களே அக்கால சென்னை வெள்ளை கவர்னர்கள் அடித்த கொள்ளையை இன்றைய மதிப்புப்படி பார்த்தால் 2ஜி எல்லாம் சும்மா பொரிகடலை மாதிரி.
பக்கிங்க்ஹாம் பஞ்சத்தைப்பணமாக்கினார். இந்தியாவிலிருந்து கோடிக்கணக்கான கூலிகளை கப்பலில் ஏற்றி கிழக்கே நியூசிலாந்து முதல் மேற்கே கரீபியன் தீவு வரை, மலேசியா இலங்கை ஆப்ரிக்கா என கொண்டு சென்று அடிமைவேலை வாங்கினார்கள் வெள்ளையர். அப்படிக் கொண்டுசெல்பவர்களில் பத்தில் ஒருவரே தேறுவார்கள், மிச்சபேர் நோயிலும் குளிரிலும் மடிவார்கள். ஆகவே பத்து மடங்கு ஆட்களைக் கொண்டுசெல்லவேண்டியிருந்தது. அதனா இங்கே பஞ்சம் குறையக்கூடாது என ஆசைப்பட்டனர் வெள்ளை நில உடைமையாளர்கள். பஞ்சத்தை குறைக்காமலிருக்க அரசுக்கு கப்பலுக்கு இவ்வளவு என்ற கணக்கில் பணத்தை கொட்டிக்கொடுத்தனர்.
கடைசியாக பக்கிங்காம் கண்டுபிடித்த வழிதான் பக்கிங்ஹாம் கால்வாய். சென்னைமுதல் விசாகப்பட்டினம் வரை ஒரு தரைவழிக் கடல்பாதை. பக்கத்தில்தான் கடல் இருக்கிறது. இந்தப்பாதை அவசியமே இல்லை. ஆனால் கோடிக்கணக்கான மக்களை ஒருவேளை கஞ்சி மட்டும் கொடுத்து வேலைவாங்கி அதைக் வெட்டினார்கள். கூலி இல்லை. கூலி முழுக்க செலவாகக் காட்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அந்தக்கால்வாய் சில வருடங்கள் கூட பயன்படவும் இல்லை.”
மேலும் ஆர்வமாகத் தொடர்கிறார்.
வ.ரா., சிட்டி, கு.ப.ராஜகோபால், பிச்சமூர்த்தி போன்ற பெரும் எழுத்தாளர்களை நான் சந்தித்திருக்கிறேன். எத்தனை பெரிய ஆளுமைகள் அவர்கள்! ஒரு முறை சிட்டி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து சிரித்தார். உலகத்திலுள்ள அனைத்து மொழி வார்த்தைகளுக்கும் தமிழில் வேர்ச்சொல் உள்ளது என்கிறார்களே.. நான் ஒரு வார்த்தை சொல்கிறேன் அதற்கு வேர்ச்சொல் சொல்லுங்கள் என்றாராம் ஒருவர். ‘insect’ என்ற ஆங்கில வார்த்தைக்கு வேர்ச்சொல் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றாராம். பின் அவரே அதற்கு, ‘இம்சைக்குட்டி’ என்ற சொல்லாடல் தான் ‘insect’ ஆனது. ஆங்கிலேயர் ஒருவர் ஒரு பூச்சியைப் பார்த்து இது என்ன என்று கேட்கப் போக அதற்கு ஒருவர் போகிறபோக்கில் ‘இம்சைக்குட்டி’ என்றாராம். உடனே ஆங்கிலேயர் பேச்சு வழக்கில் இம்சைக்குட்டி என்று சொன்னதைக் கேட்டவன் ‘insect’ என்று பெயர் வைத்துக்கொண்டானாம் என்று கிண்டலாகச் சொல்லிச் சிரிப்பார். சிட்டி அவர்களிடம் நிறைய பேசியிருக்கிறேன். எனக்கு நெருங்கிய உறவு முறை அவர் என்பதும் ஒரு காரணம். மிகப்பெரிய ஆளுமை அவர். நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர். என்னுடைய ‘கடல்வழி வணிகம்’ நூலுக்கு அணிந்துரை எழுதச்சொன்னபோது அப்போதுதான் அவர் ஒரு அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். இருந்தாலும் நான் இந்த நூலை எழுதிக்கொண்டிருக்கும்போதே அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு மிக ஆர்வமாக செய்திகள் அனைத்தையும் கேட்டு அறிந்து உள்வாங்கிக்கொண்டிருந்தார். பின் அவரே அணிந்துரையும் எழுதிக்கொடுத்தார். அப்படி எழுத்தாளர் என்பவர்களுக்கு நிறைய பக்குவம் தேவை. சிட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறை, ‘சாதாரண மனிதன்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.
என்பார் வள்ளுவர். அதுபோன்ற சொற்கள் மட்டுமே ஆக்கங்களாக இருக்கவேண்டும். அதை இன்றைய எழுத்தாளர்கள் கட்டாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும்”.
இடையில் பேரா. நாகராஜன் அமெரிக்க உளவியல் துறை ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு குறித்து பகிர்ந்துகொண்டார். இன்றைய நவீன உளவியல்துறை சார்ந்த மருத்துவம் என்பது அன்றைய புத்த மத முக்கிய கோட்பாடுகளின் வழியே வந்தவைதான். புத்த பிட்சுகளை தெருவோரங்களில் கண்டால் பிடித்துக்கொண்டு வாருங்கள் என்பார்களாம். ஆரம்ப காலங்களில் உளவியல் சார்ந்த பல கருத்தாக்கங்களை புத்தமதங்களிலிருந்துதான் வந்தது என்றார்.
அடுத்து கீழை நாட்டு நாகரீகம் (orientalism) குறித்த பேச்சு வந்தது. இவை பற்றியும், நரசய்யா அவர்கள் எப்படி, ஏன் கப்பற்படை பணியைத் தேர்ந்தெடுத்தார் என்பது போன்ற சுவையான தகவல்களை இவர்களின் குரல் மூலமாகவே கேட்டுத் தெரிந்துகொள்வோமே..
தென் அமெரிக்காவில் வாழும் இலா காந்தி மகாத்மா காந்தியின் பேத்தி. இவர் மணிலால் காந்தி என்பவரின் மகளும், பீனிக்சு செட்டில்மெண்ட்டில் வளர்ந்து பட்டம் பெற்றவருமாவார். இவர் ஒரு சமூக சேவகியாக வெரூலம் குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறையில் 15 ஆண்டுகளும், தர்பன் இந்தியக் குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறையில் ஐந்து ஆண்டுகளும் பணிபுரிந்தார். இலா காந்தி அதன் துவக்கத்திலிருந்து 1991 வரை பெண்கள் நதால் நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். நிறவெறி தீவிரமாக இருந்த (1975) காலகட்டங்களில் இவர் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து தடை செய்யப்பட்டு 9 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டி மறைமுகமாகவும் செயல்பட்டார். இனவெறிக்கு எதிரான போராட்டத்தின்போது இவருடைய மகன் ஒருவரும் கொல்லப்பட்டார். தமது விடுதலைக்கு முன்பு நெல்சன் மண்டேலாவை சந்தித்த ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பாராளுமன்றத்தின் சேவைக்குப் பிறகு காந்தி, உள்நாட்டு வன்முறைக்கு எதிராக ஒரு 24 மணி நேரத் திட்டம் உருவாக்கியதோடு, காந்தி மேம்பாட்டு அறக்கட்டளையையும் நிறுவி, மத அலுவல்கள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியதோடு ஒரு மாதப்பத்திரிகையின் மேற்பார்வை பணியிலும் ஈடுபட்டிருந்தார். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை குழுவிலும், மகாத்மா காந்தி மேம்பாட்டு அறக்கட்டளையிலும் தலைமைப் பொறுப்பேற்றிருந்தார். இலா காந்தி பல ஆண்டுகளாக டெக்னாலஜி டர்பன் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றினார். 2007 இல், இவருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.
இலா காந்தி மற்றும் மகாத்மா காந்தியின் பெயரர் கோபாலகிருஷ்ண காந்தி இருவரும் தமது மதிப்புரைக்கு அளித்த அங்கீகாரத்தை மனமகிழ்ந்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் திரு நரசய்யா அவர்கள்.
“This article [my review] points out that the book is a distortion of facts and I agree with that fully. It is difficult to understand why the vicious attack as a follow up support to Arundhati Roys book. I want to make three comments. 1. Madam Roy and her supporters should concentrate on boosting the image of their Hero Dada Ambedkarji by publicising his own work and his own contribution to the liberation of India rather than by attacking Gandhiji.
2. This book is a build up from two previous publications by Deedat and Swartz . I draw this conclusion because they clearly ignore the many articles in the Indian Opinion both in relation to African people as well as in relation to the plight of the indentured .
3. Gandhiji indeed was human and his work, qualities and commitment to the betterment of humanity and the universe needs to be acknowledged so that future generations can learn from it not worship it.” A reader named P rajeswaran said: “I fully agree with Mr Narasiah! The book fails miserably in proving that Gandhi was a racist..well Gandhi might have had different views (of indifference) at some earlier stages in his life in South Africa but they all changed over time to make him what he later came to be known famously for. Nothing wrong in such attempts at discrediting a world famous figure like the Mahatma. They could have been a little more fair in their treatment of the issues and their viewing angles, perhaps!”
Gopalkrishna Gandhi grand son of both Mahatma and Rajaji wrote to me
Dear and esteemed sir Of course I remember you ! Thank you for your gracious observations on my Colombo speech. I did indeed read your review and found it eminently fair. MKG will never be free of his prejudices detractors, just as he will never be free of his uncritical devotees. And he will survive both. By a coincidence, only this morning I was with Mrs Mina Swaminathan at a talk on music and the brain by Dr ES Krishnamoorthy. With regards, Gopal
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
ராஜஎடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன்தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
மரங்கள் இயற்கை நமக்களித்த வரங்கள். அவற்றின் அருமையறியாது அழித்தோம். விளைவு? பசுமையின்றி, பருவமழையின்றி மாநிலமே வறண்டுவருவதைக் கண்கூடாய்க் காண்கின்றோம்.
மரங்களைக் கணக்கின்றி அழித்தொழித்த பெரியோரின் தவறு, பிள்ளைகளுக்கல்லவா தீராத்துயரைத் தந்துவிடுகின்றது? “தம் தலைமுறையிலேனும் பசுமை மீண்டும் தழைக்கட்டும்; பூமி பிழைக்கட்டும்” எனக்கருதி இளஞ்சிறார் இருவர் மரக்கன்றை நட்டு, நீர்வார்க்கும் நற்செயல் நம் நெஞ்சில் பால்வார்க்கின்றது!
புகைப்படக்கலைஞர் புதுவை திரு. சரவணனின் புகைப்படத்தை இவ்வாரப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றி!
புகைப்படத்தைத் தம் கவிதையால் அணிசெய்துள்ள கவிஞர் பெருமக்களின் கவின்கவிதைகளைப் படித்து இரசிப்போம் இனி!
”மனிதனைப்போல் நன்றிமறந்து நகர்ந்துவிடும் இழிகுணம் மரங்களுக்கில்லை; இன்று நீ நீரூற்றினால், நாளை உன்னை நிழல்தந்து காக்குமவை நகராது!” என்று மரத்தின் அருங்குணத்தைச் சிறார்களுக்குச் சுட்டுகின்றார் தாரமங்கலம்திரு. வளவன்.
இணையத்தில் இறக்குமதி செய்துசாப்பிடும் இழிநிலையை வருங்காலத்தில் தவிர்த்திட, மரம்நடுதலின் அவசியத்தை இன்றே இளையோர்க்குச் சொல்லித்தாருங்கள்!” என்று அறிவுறுத்துகின்றார் திரு. க. கமலகண்ணன்.
இயற்கையோடு மனிதன் கைகோத்திருந்த காலத்தில் வானம் பொய்க்கவில்லை; வளம் பிழைக்கவில்லை. இன்றோ, தன்னலத்திலேயே திளைத்துவிட்ட மனிதக்கூட்டம், அமுதனைய மழையையும், வெயிற்கேற்ற நிழலையும், வீசும் தென்றற்காற்றையும் இலவசமாய் அள்ளித்தந்த மரங்களின் அருமை மறந்து அவற்றை வெட்டிவீழ்த்திவிட்டு இயற்கைச்சீற்றங்களாலும், செயற்கை மாசுகளாலும் அல்லலுறுகின்றது.
நம் மண்ணின்மைந்தர்கள் வேரிலே வெந்நீரைப் பாய்ச்சிவிட்டு, இலையிலே பசுமைதேடும் மடமையை இனியேனும் ஒழித்து மரங்களை நடுதல் நன்று! என்று புகல்கின்ற கவிதையொன்று கருத்தைக் கவர்கின்றது!
செத்த பின் சிந்து பாடும் செந்தமிழ் நாட்டின் வாரிசுகள் நாம் காடுகளை அழித்துவிட்டு மழைக்குத் தவம் இருக்கும் மண்ணின் மைந்தர்கள் நாம்
வேரிலே வெந்நீர் ஊற்றிவிட்டு இலையிலே பசுமைதேடும் பகுத்தறிவுவாதிகள் நாம்
அவசியங்களை அலட்சியப்படுத்திவிட்டு அவதிப்படும் அறிவிலிகள் நாம் போதும் போதும் இனியொரு விதி செய்வோம் இந்த ஜெகத்தினை வளமாக்குவோம் வா நண்பா வா காக்கின்ற இயற்கையைக் காப்போம் கேடுசெய்யும் மாசுகளைத் தவிர்ப்போம் மழைதரும் மரம் நிறைய வளர்ப்போம் முன்னோர் செய்த தவறுதவிர்ப்போம் அப்துல் கலாம் தோன்றிய நாடு அவர் வகுத்த பாதையில் மரம் நடு!
”காடுவாழவும், கேடுவீழவும் இன்றே வளர்ப்போம் மரங்களை!” என முழங்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரெனஅறிவிக்கின்றேன்.
***
இயற்கையின் ஆயுள்ரேகையாய்த் திகழ்பவை மரங்கள்; அவையின்றி அமையாது உலகு என்ற உண்மையை உரைக்கின்றது மற்றொரு கவிதை!
நேற்றைய சமுதாய உயிர்ப்பில் நாங்கள். நாளைய சமுதாய உயிர்ப்பிற்காய் இவர்கள். பூமிக்குப் பசுமை போர்த்தும் செயல். பூமியென்ற உடலை மரத்திற்குத் தருதல். மரம் நடுகையை சிறு மனதிலே வரமாய்க் கொடுத்தால் மழை வருமே! மரமின்றி அமையாது உலகு அறிவோம். மரமே இயற்கையின் ஆயுள் ரேகை. காற்றின் மூலக்கூறுகள், சூரியக் கதிரினொளிக் கூறுகள் மரத்தின் அணுக்கள். ஆற்றலுடை வேர் முனைகள் போர்வீரர்களாகி ஆற்றும் செயலாம் மரம் வாழ்க்கைவேர். பெருமனதான மூதாதையர் விட்டுச் சென்றவை தெருவோரம், ஏரி, ஆற்றுக்கரை நிழல்கள். இயற்கையின் பரிசாம் மரங்களை இவர்கள் செயற்கையில் நடுவதால் நீர் பெறுவோம்.
”மழைக்கு வழிகோலும் மரங்களை வளர்த்து, மன்பதை காப்போம்” என்று நன்மொழி பகர்ந்திருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் கவிதைக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக.
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
புதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
”மறந்துபோன மரபுகளில் ஒன்று களியூட்டும் வயல்வெளிக் குளியல்; அதனை மீண்டும் நினைவூட்டுகின்றது இந்தப் பட்டுத்தாமரையின் ஒய்யாரக் குளியல்” என்கிறார்திரு. க. கமலகண்ணன்.
எடுக்கப்படும் புகைப்படம் ஒவ்வொன்றும் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்துச் சங்கமமாகும் காலமிது! அந்த உண்மையைச் சின்னக்குழந்தை செப்புவதாய் அமைத்திருக்கும் ஒரு கவிதை மனங்கவர்கின்றது.
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
சின்னாளும் பல்பிணியும் கொண்ட நிலையற்ற இம்மானுட வாழ்வில், அன்பெனும் பிணைப்பு மனித உள்ளங்களை இணைத்து நிற்குமானால், வறுமையிலும் செம்மையாய்ச் சிறப்பாய் வாழலாம்.
அடடா! அன்பெனும் பிடியுள் அகப்பட்ட எழிற்சிலையாய்ப் புகைப்படத்தில் காட்சிதரும் இந்தக் குழந்தையின் கள்ளமற்ற முகமும், காந்தக் கண்களும் நம் சிந்தை நிறைக்கின்றன.
இவ்வழகிய புகைப்படத்தை எடுத்துள்ள திரு. ராஜவுக்கும்(?), போட்டிக்கு இதனைத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமையின் நன்றி!
இனி இவ்வாரக் கவிதைகளுக்குச் செல்வோம்!
***
பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு வாடும் புதியமலரொன்றும், பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவை நாடும் முதியமனமொன்றும் அன்பு இல்லத்தில் அமைதியாய் இணைந்திருப்பதைப் பேசுகின்றது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை.
முதுமையும் இளமையும் சந்தித்து வாழ்வின் பல்வேறு நிலைகள் குறித்துச் சிந்தப்பதைக் கவிமாலையாய்த் தொடுத்திருக்கின்றார் திரு. இளவல்ஹரிஹரன். கவிஞர் சொல்வதுபோல், வாய்த்திருக்கும் வாழ்க்கையினைப் பேய்க்குணமின்றித் தாய்மனத்தோடு வாழ்ந்தால் வாழ்க்கை தித்திக்கும் தேன்பாகுதான்!
”வறுமை என்பது வாழ்வுக்குத்தான்; அறிவுக்கு இல்லை” எனும் பாட்டியின் வைர வரிகளைத் தாங்கிநிற்கும் இந்தக் கவிதையைப் படைத்திருக்கும் திரு. கொ. வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.
***
‘வாழ்க்கை என்பது ஊழின் வழியில் பயணிக்கும் தன்மையது’ என்பது மாந்தரின் பரவலான எண்ணம். இதனையே, ’நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படூஉம்’ என்று பறைசாற்றுகின்றது பூங்குன்றனாரின் புறப்பாட்டு!
இதோ…இங்கே முதுமையின் மடிமையில் தலைசாய்ந்திருக்கின்றது இளமை. ஆனால் முதுமை, இளமைக்கு எத்தனைநாள் காவலாய் இருக்கவியலும்? குழந்தையின் வருங்காலம் நல்லமனிதர்களின் துணையால் நலமாய் இருக்கவேண்டுமே எனக் கவல்கின்றது ஒரு கவிதை!