Category: செய்திகள்

  • காலங்களில் அவன் வசந்தம் – 72ஆவது நிகழ்ச்சி

    காலங்களில் அவன் வசந்தம் – 72ஆவது நிகழ்ச்சி

    இசைக்கவி ரமணன் வழங்கும் காலங்களில் அவன் வசந்தம் – 72ஆவது நிகழ்ச்சி.

    சிறப்பு விருந்தினர் – முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் (சிங்கை)

    Share
  • கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] – தீர்மானங்கள்

    கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] – தீர்மானங்கள்

    சி. ஜெயபாரதன், கனடா

    கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] காலநிலை மாற்றப் பன்னாட்டுப் பேரரங்கில் அறிஞர் பங்கெடுத்து என்ன தீர்மானித்தார்?

     

     

    ===========================

    2021 காப்பு-26 [COP-26] பேரரங்கம் செய்த தீர்மானங்கள்

    1. வரம்பு குறிக்கோள் உஷ்ணம் 1.5 C என்பது மாறவில்லை.
    2. ஆண்டுக்கு 1.4 பில்லியன் டன் கரிவாயுக் குறைப்பு நல்ல முயற்சி.
    3. சைனா உலகப் பூகோளக் கரி வெளியேற்றத்தில் 30% பங்கு பொறுப்பு
    4. மற்ற நாடுகள் 70% அளவுக்குப் பொறுப்பு.
    5. சைனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் நிலக்கரி பயன்படுத்தி வருகின்றன. [2021] காப்பு-26 பேரரங்கில் ரஷ்யா, சைனா கலந்துகொள்ளவில்லை.
    6. சைனா பேரளவு சூரிய, காற்றாடி எரிசக்தி மீள்புதிப்பு சாதனங்கள், மின்னணு வாகனங்கள், பேருந்துகள் பயன்படுத்தி வருகிறது.
    7. இந்தியப் பிரதமர் மோடி 2070ஆம் ஆண்டில்தான் பூஜிய விஷவாயுச் சூழ்வெளி இந்தியாவில் கொண்டுவர இயலும் என்று அறிவித்தார்.
    8. ரஷ்ய & சைனப் பிரதிநிதிகள் 2060ஆம் ஆண்டுக்குள் பூஜிய விஷ வாயுக் கடைப்பிடிப்பு என அறிவித்தனர்.
    9. ஓர் ஆண்டுக்கு 1.4 பில்ல்லியன் டன் கரிவாயு வெளிவீச்சு குறைப்புத் திட்டம், பூஜிய விஷ வாயுச் சூழ்வெளியை 2050இல் நிறைவேற்றும்.
    10. இப்போதுள்ள நிலைமை நீடிப்பு, மேலும் வெளிவீச்சுகளைக் குறைக்காமை இன்னும் 11 ஆண்டுகளில் வரம்பு உஷ்ணம் 1.5 டிகிரி செல்சியசுக்கு எட்டிவிடும். இது 50% அனுமான அறிவிப்பு.

    தகவல்

    1. https://ukcop26.org/

    Share
  • நவம்பர் 1ஆம் தேதியே தமிழ்நாடு நாள் – வானதி சீனிவாசன்

    நவம்பர் 1ஆம் தேதியே தமிழ்நாடு நாள் – வானதி சீனிவாசன்

    மாநிலம் பிறந்த நாளை விட்டுவிட்டு. பெயர் சூட்டப்பட்ட நாளைக் கொண்டாடுவது பொருத்தமற்றது

    கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை.

    மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள், சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டன. “இந்நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி, ‘தமிழ்நாடு நாள்’ என்று சிறப்பாகக் கொண்டாடப்படும்” என்று கடந்த 2019 ஜூலை 20ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அன்றைய முதல்வர் திரு. கே.பழனிசாமி அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை வரவேற்ற அன்றைய திமுக தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நாளுக்குக் கடந்த இரு ஆண்டுகளாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 1 தமிழ்நாடு நாளுக்குத் திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1ஆம் நாளில், நாம் தமிழ்மொழி, இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் மீட்டெடுப்போம்” என்று கூறியுள்ளார்.

    ஆனால், அக்டோபர் 30ஆம் தேதி முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மாநிலம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1967 நவம்பர் 18ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

    1956 நவம்பர் 1ஆம் தேதி, தமிழ் மொழி பேசும் மக்களைக் கொண்ட மாநிலம் உருவாக்கப்பட்ட நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும். 1967 நவம்பர் 18ஆம் தேதி சென்னை மாகாணத்திற்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1969 ஜூலை 18ஆம் தேதி தான் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளை அல்ல. இதனைத் தலைவர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே, முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தேவையற்ற சர்ச்சைகள், குழப்பங்களுக்கு இடமளிக்காமல் நவம்பர் 1ஆம் தேதியையே தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும்.

    குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவே அறிக்கைகள் வெளியிடும் சிலரின் வேண்டுகோளை ஏற்று, வரலாற்றை மாற்ற முயல வேண்டாம் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். இன்று (நவம்பர் 1) தமிழ்நாடு நாள். தமிழகத்தில் வாழும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான தமிழகத்தின் வளர்ச்சிக்கு உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்.

    இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    Share
  • இந்தியாவைச் சீண்டுகிறது தமிழரசுக் கட்சி

    இந்தியாவைச் சீண்டுகிறது தமிழரசுக் கட்சி

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை
    புரட்டாதி 31, 2052 (17.10.2021)

    வடகடல் என்கின்ற பாக்குநீரிணை. தென்கடல் என்கின்ற மன்னார் வளைகுடா.

    இரண்டையும் சரிசமமாகக் கிழித்துக்கொண்டு நடுவே ஓடுவதே கற்பனையான இலங்கை இந்திய அனைத்துலக எல்லைக்கோடு. 1976உக்கு முன்னர் இத்தைகைய எல்லைக் கோடு இருந்ததே இல்லை.

    தமிழக மீனவர்கள் வடகடலில் எல்லைக் கோட்டைத் தாண்டி வருகிறார்கள். உலகில் இல்லாத வியப்பு நிகழ்வா?

    உலகெங்கும் பல்வேறு இடங்களில் இத்தகைய உள்ளகக் கடல்கள் உள்ளன. அவற்றை ஊடறுத்துச் செல்லும் அனைத்துலக எல்லைக் கோடுகளும் உள்ளன.

    இத்தகைய உள்ளகக் கடல் எல்லைகள் அனைத்துலக உடன்பாடுகளுள் அடங்கா. சிறப்பாகச் சி ஆண்டுகளுக்கு முந்தைய கராக்காசு (Caracas Law of the Sea Conference) அனைத்துலக கடல்வள உடன்பாட்டுள் வடகடல் அடங்காது. தென் கடலின் தெற்குப்பகுதி வரக்கூடும்.

    இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது வழமை.

    இந்திய கன்னியாகுமரிக்குத் தெற்கே உள்ள குமரிப் பரப்பில் (Wadge bank) இலங்கை மீனவர்கள் வளங்களை அள்ளுவதைப் பார்த்துக் கொண்டு தமிழகக் குமரி மாவட்ட மீனவர்கள் கண்டும் காணாது விடுகிறார்கள்.

    திருகோணமலையில் நங்கூரமிட்டு பல நாள்,மீன் பிடி வள்ள (multi day fishing vessels) மீனவர் கிழக்கே அந்தமான் தீவுகள் தொடக்கம் மேற்கே விசாகப்பட்டினம் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். என்றாலும் இந்தியக் கடலோர காவல்படை கண்டு கொள்வதே இல்லை.

    தென் கடலில் தூத்துக்குடி வரை கற்பிட்டி மீனவர்கள் சென்றுவருவது வழமை. எப்போதோ ஒருமுறை இந்தியக் கடலோர காவல்படை அவர்களைத் தளையிட்டு மதுரையில் நீதிமன்றம் முன்பு நிறுத்தம்.

    தனுக்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே 22 கிலோ மீட்டர் தொலைவு. எந்திர வள்ளம் ஒன்றை முடுக்கிய அரை மணி நேரத்தில் தலைமன்னார் மீனவர் தனுஷ்கோடிக் கடலுள் சென்று விடுவார். தனுக்கோடி மீனவர் தலைமன்னார்க் கடலுள் சென்று விடுவார்.  மாதகல் – கோடிக்கரைக் கடல் தொலைவும் அத்தகையதே.

    15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மீனவர் எல்லை தாண்டி வந்ததாலேயே, உயிரைக் கையில் பிடித்தவாறு அவர்கள் வந்ததாலேயே, போராட்டமே தொடர்ந்தது. போராட்ட காலத்தில் வடக்கின் மீது திணித்த பொருளாதாரத் தடைகளை முறியடிக்க உதவியவர் தமிழக மீனவரே.

    நல்லாட்சிக் காலத்தில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களைக் கடுமையாக தண்டிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சுமந்திரன்  21 ஏப்பிரல் 2015இல் முன்மொழிந்திருந்தார். Indian trawlers have continued to enter Sri Lankan waters and exploit our resources. …………..Foreign fishermen fishing in our water has caused great distress to our fishermen especially those living in the north”, M.A. Sumanthiran stated regarding the issue…………….. The offender will be sentenced to a two-year prison term and will have to pay a fine of Rs. 50,000.” இரண்டாவது வாசிப்பு வரை அச்சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வந்தது.

    அந்த சட்ட மூல வரிகளைப் படித்ததும் நான் அதிர்ந்தேன. தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் தொப்புள்கொடி உறவுகளைக்கு அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் சட்டமூலத்தைக் கொண்டு வருகிறாரே என நான் வருந்தினேன்.

    என் அருமைத் தம்பி சித்தார்த்தனிடம் சொன்னேன். சுமந்திரனைக் கட்டுப்படுத்த முடியாதே எனச் சித்தார்த்தன் என்னிடம் சொன்னார்.

    என் அருமைத் தம்பி மாவை சேனாதிராசாவிடம் சொன்னேன்  அவ்வாறான ஒரு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வந்ததா என மாவை சேனாதிராசா என்னிடம் கேட்டார். நான் சட்ட மூலத்தின் வரிகளைக் காட்டினேன். தமிழரின் அரசியல் எதிர்காலத்துக்குத் தீங்காக அமையுமே என்றேன்.

    மாவை சேனாதிராசா நடவடிக்கை எடுத்தார் போலும்! நாடாளுமன்றத்தில் பின்னர் அச்சட்டமூலத்தைச் சுமந்திரன் முன்னெடுக்கவில்லை.

    அதே சட்டமூலத்தைப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்கினார்.

    எல்லை தாண்டும் இந்திய மீனவரைச் சுட்டுக் கொல்வோம் என்றார், தமிழரசின் ஆதரவுடன் நல்லாட்சியாளர் பிரதமர் இரணில்.

    அச்சட்டத்தையே அமைச்சர் இடக்ளசு தேவானந்தா கைவிட்டுள்ளார் எனச் சுமந்திரன் முறையிடுகிறார்.

    எந்த மீனவர் எம்மைக் காத்தார்களோ, எந்த நாடு எம்மவர் மூன்று இலட்சம் பேருக்குப் புகலிடம் கொடுத்துள்ளதோ, அந்த மீனவருக்கு அந்த நாட்டுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் தமிழரசுக் கட்சி!

    எந்த முகத்தோடு பாரதம் இலங்கைத் தமிழருக்கு உதவவேண்டும் எனத் தமிழரசுக் கட்சியினர் இந்தியாவைக் கேட்பார்கள்? இந்தியாவைச் சீண்டியவாறே, இந்தியாவிடம் அரசியல் ஆதரவு கேட்கிறதே தமிழரசுக் கட்சி.

    சுமந்திரனை அறிவோம். இந்தியாவுக்கு எதிரானவர் என்பதை அறிவோம். தில்லியில் என்னிடமும் மட்டக்களப்பு யோகேசுவரனிடமும் கூறியவர் தமிழரல்லாத பாரதீய சனதாக் கட்சி மேலிடத்தார்.

    சுமந்திரனை ஏன் இன்னமும் வைத்திருக்கிரீற்கள்? தமிழரசுக் கட்சி சார்பில் சென்னையில் தமிழக பாரதீய சனதாக் கட்சியைச் சந்தித்த சத்தியலிங்கத்திடமும் குகதாசனிடமும் கேட்டோர், தமிழக பாரதீய சனதாக் கட்சித் தலைவர்கள்.

    மாவை சேனாதிராசாவையும் சிறீதரனையும் சாணக்கியனையும் அந்தப் பட்டியலில் இந்திய அரசியல்வாதிகளும் ஆட்சியாளரும் இன்று முதலாகச் சேர்த்துக் கொள்வர். முதுகில் குத்துவதும் அதே நேரத்தில் ஆதரவு கேட்பதும் ஈழத் தமிழரின் இயல்பு என இந்திய அரசியலாரும் ஆட்சியாளரும் என்னிடம் பலமுறை கூறுவர்.

    Share
  • மாதந்தோறும் மகாகவி

    மாதந்தோறும் மகாகவி

    வணக்கம்.

    ‘மாதந்தோறும் மகாகவி’ அக்டோபர் 11, மாலை 6.30 மணிக்கு.

    சென்னை, மயிலாப்பூரில், லஸ் கார்னர் அருகிலுள்ள ஆர்கே கன்வென்ஷன் அரங்கிற்கு வரலாம். இயலாதெனில் இந்த இணைப்பில் நேரலையாகப் பார்க்கலாம்:

    https://youtu.be/uLklIBdb-1Y

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • T. D. திருமலை நூற்றாண்டு விழா

    T. D. திருமலை நூற்றாண்டு விழா

    அன்புடையீர்,

    ரசிகமணி டி.கே.சி. வட்டத்தொட்டி (2021 அக்டோபர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:30) நிகழ்ச்சியில் (ரசிகமணியின் சீடர் காந்திய மாமணி திரு. T. D. திருமலை அவர்களின் நூற்றாண்டு விழா) கலந்துகொண்டு ரசனை அமுதத்தைப் பருக, கீழே உள்ள இணைப்பில் இணையும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    Google Meet ( https://bit.ly/GMeet-TKC2110 )

    YouTube ( https://bit.ly/YouTube-TKC2110 )

    நன்றி

    விழா ஏற்பாட்டுக் குழு

    Share
  • தமிழ் அறிஞர்கள் நாள்

    தமிழ் அறிஞர்கள் நாள்

    வணக்கம்.

    நிகழ்ச்சியை நேரலையாய்க் காண்லாம்:

    https://facebook.com/chicagotamilsangam

    https://youtube.com/chicagotamilsangam

    அக்டோபர் 2, 2021, இரவு 8.30 மணி (இந்திய நேரம்)

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • காலங்களில் அவன் வசந்தம் – 70 ஆவது நிகழ்ச்சி

    காலங்களில் அவன் வசந்தம் – 70 ஆவது நிகழ்ச்சி

    வணக்கம்!

    காலங்களில் அவன் வசந்தம் – 70 ஆவது நிகழ்ச்சி.

    செப்டம்பர் 30, வியாழக்கிழமை, மாலை 6.30 மணிக்கு.

    இந்த முறை சிறப்பு விருந்தினர் யாரும் பங்கு கொள்ளவில்லை. தனியாட்டம்தான்! தாங்குவீர்கள்தானே??!!

    நிகழ்ச்சியைக் காண:

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நேரலை: https://www.youtube.com/watch?v=EUPJi1XNgO0

    புதுயுகம் முகநூல் நேரலை: https://www.facebook.com/255637074538822/posts/3677795312322964/?d=n

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • டாப்லைட் நூலகம்  நான்காம் ஆண்டுத் தொடக்க விழா

    டாப்லைட் நூலகம் நான்காம் ஆண்டுத் தொடக்க விழா

    திருப்பூர் பல்லடம் சாலை குன்னங்கல்  கிராமத்தில் அமைந்திருக்கும் டாப்லைட் நூலகத்தின்  நான்காம் ஆண்டுத் தொடக்க  விழா, ஞாயிறு மாலை நடைபெற்றது. டாப்லைட் பின்னலாடை நிறுவன உரிமையாளரும் நூலக ஸ்தாபனருமான வேலுச்சாமி, விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

    உள்ளூர்ப் பிரமுகர்கள், நூலகத்தின் சிறந்த பயன்பாட்டையும் பொதுமக்களின் உபயோகத்தையும் பாராட்டிப் பேசினர். மருத்துவர் பல்லடம் பாலமுரளி, பாலு மணியக்காரர், ஆல்வின் வெள்ளியங்கிரி  முத்துபாரதி, வெஸ்மேன் சேகரன், கவுசல்யா தேவி,  ஆ.அருணாச்சலம், சுப்ரபாரதிமணியன், மணிநாதன், ஆசிரியர் ரணதேவ், வேல்முருகன்  உட்பட, பலர்  கலந்து கொண்டனர்.

    மிருதுளா நடராஜன் ”தமிழக அரசியல் வரலாறு” நூல் பற்றியும், சரோஜினி “இவர்கள் வென்றது இப்படித்தான்” –சுயமுன்னேற்ற நூல் பற்றியும், டாப்லைட் வேலுச்சாமி மரபுக் கவிஞரும், பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கியவருமான வா.செ.குழந்தைசாமியின் ”குலோத்துங்கன் கவிதைகள்”  நூலையும் ஆய்வு செய்து பேசினர்.

    சுப்ரபாரதிமணியன்,  நோபல் பரிசு பெற்றவர் குறித்த ”வங்காரி மத்தாயும் சுற்றுச்சூழலும்“  என்ற தலைப்பில் பேசினார். என்.சொக்கன் எழுதிய “அண்ணாந்து பார்“ என்ற சி.என்.அண்ணாதுரை பற்றிய நூல் குறித்து மாணவர் இளையபாரதி, Kids who came from  space   நூல் பற்றி மாணவர் அனிருத் மற்றும் பள்ளி மாணவர்கள் பலரும் பேசினர். பல்லடம் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறுவர்களின் கதை சொல்லல் நிகழ்ச்சி நடைபெற்றது. நூலகப் பொறுப்பாளர் மணிநாதன், விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

    திருப்பூர் குன்னங்கல் பாளையத்தில் அமைந்துள்ள டாப்லைட் நூலகம், டாப்லைட் பின்னலாடை நிறுவன உரிமையாளரும் நூலக ஸ்தாபனருமான வேலுச்சாமி அவரின் பெற்றோர் வசித்து வந்த 20 செண்ட் வீட்டைப் பொதுமக்கள் உபயோகத்திற்காக  நூலாமாக மாற்றியுள்ளார். நூலகத்தை ஒட்டிய 8 ஏக்கர் நிலத்தில் அபூர்வமான 55 மரங்களை நட்டுப் பராமரித்து வருகிறார். ஏடகத்தின் கானகம் என்ற பெயரில் அமைந்துள்ள தோட்டம் பல அபூர்வ மரங்களையும் செடிகளையும் கொண்டுள்ளது. மியாவாக்கி முறையில் செடி, மரங்களை அந்த நிலத்தில் வளர்த்துப் பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பொதுமக்களுக்கும்  பயன்படும் வகையில்  இந்த டாப்லைட்  நூலகம் அமைந்துள்ளது.

    Share
  • வானத்தில் எத்தனை வண்ணங்கள் – தொடர் நிகழ்ச்சி

    வானத்தில் எத்தனை வண்ணங்கள் – தொடர் நிகழ்ச்சி

    வணக்கம்.

    ‘வானத்தில் எத்தனை வண்ணங்கள்’ தொடர் நிகழ்ச்சி.

    செப்டம்பர் 27 மாலை:

    https://youtu.be/CJGXrbAXL5A

    வரலாம். அல்லது நேரலையாகவும் காணலாம்.

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • இந்தியா இருமுறை எரிசக்தி இணைப்பில் [Hybrid Energy Integrated System] மின்சக்தி பெருக்கத் திட்டங்கள்

    இந்தியா இருமுறை எரிசக்தி இணைப்பில் [Hybrid Energy Integrated System] மின்சக்தி பெருக்கத் திட்டங்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    First Solar Company CEO, Mark Widmar recently met Prime Minister Shri Narendra Modi to discuss India’s renewable energy landscape, particularly solar energy potential, and the company’s target of 450 GW by the year 2030.

    2030 ஆண்டுக்குள் இந்தியா 450,000 MW மீள்புதிப்பு எரிசக்தியில் [சூரிய ஒளிக்கனல் & காற்றாடி மின்சாரம்] [Renewable Energy Solar & Wind Power] உற்பத்தி செய்யும் என்று பிரதம மந்திரி மோடி சமீபத்தில் அறிவிப்பு செய்துள்ளார். தொழிற்துறை ஆலைகள் தொடர்ந்து இயங்க அடிப்பளு மின்சார நிலையங்கள் [Base Load Power Stations], ஏறி இறங்கும் பளு மின்சாரத் தளங்கள் [Swing Load Power Systems] தேவைப்படுகின்றன.

    அடிப்பளுத் தேவைக்கு நிலக்கரி நிலையம், நீரழுத்த நிலையம் அல்லது அணுமின் நிலையம் பூர்த்தி செய்யும். கிரீன்ஹௌஸ் வாயுக்கள் எழுச்சி குறைக்க வேண்டுமானால் அணுமின் நிலையங்கள் தகுதி பெறும். இவ்விதம் இயங்கும் இருமுறை எரிசக்தி இணைப்பு ஏற்பாடுகள் பல [HYBRID ENERGY INTEGRATED SYSTEMS ] உலக நாடுகளில் பரவி வருகின்றன. கரிவாயு குறைப்பு நீடிக்க, கிரீன்ஹௌவுஸ் சேமிப்பு தவிர்க்க வேண்டுமானால் ஹைபிரிட் இணைப்பு எரிசக்தி ஏற்பாடுகளை இந்தியா மேற்கொள்வதை நாம் வரவேற்க வேண்டும்.

    இந்தியாவில் ஆறு 1000 MW அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது.

    Image result for westinghouse nuclear reactor ap1000

    வெஸ்டிங்ஹவுஸ் AP-1000 MWe அணுமின்சக்தி நிலையம்

    https://www.reuters.com/article/us-india-usa-trump-westinghouse-exclusiv/exclusive-westinghouse-set-to-sign-pact-with-indian-firm-for-nuclear-reactors-during-trump-visit-idUSKBN20E1PM

    https://timesofindia.indiatimes.com/india/US-based-Westinghouse-to-build-6-nuclear-power-plants-in-India/articleshow/52644065.cms

    https://en.wikipedia.org/wiki/AP1000

    Obama, Modi Kick Start the Westinghouse Nuclear Deal

    +++++++++++++++++++

    Image result for westinghouse nuclear reactor ap1000

    Westinghouse PWR Reactor Vessel Components

    அமெரிக்கா இந்தியாவில் கட்டும் ஆறு 1000 MWe அணுமின்சக்தி நிலையங்கள் 

    2020 பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய வெளிநாட்டு அமைச்சு செயலாளர் விஜய்  கோகலேயும் அமெரிக்க  அகில் நாட்டுப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாடு துணைச் செயலாளர் ஆன்டியா தாம்ஸன் ஆகியோர் கலந்துரையாடலில் வெளியான செய்தி இது.  பொதுநல அணுசக்திப் பயன்பாட்டில் இருநாட்டுக் கூட்டுறவு உடன்பாட்டின்படி, ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்களை, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்ட வாஷிங்டன் D.C. இல் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது.  கடந்த பத்தாண்டு களாக, அணுமின் உலை விபத்து இழப்பு நிதி [Indian Liability Rules] யார் அளிப்பது ?  அணு உலை இயக்கும் இந்தியாவா?  அல்லது அணு உலை கட்டிய வெஸ்டிங்ஹவுஸா?  [இது போன்று முன்பு போபால் நச்சு வாயுக் கசிவு விபத்தில் துயருற்ற லட்சக் கணக்கான இந்தியருக்கு விபத்து இழப்பு நிதி அளிப்பதில் தர்க்கம் ஏற்பட்டு நோயாளிகள் பெருந்துயர் உற்றார்.]  இந்த ஆறு அணு மின்சக்தி நிலையங்கள் ஆந்திராவில் நிறுவகம் ஆகும். இந்தியா 2031 ஆண்டுக்குள் 22,480 மெகாவாட் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளது.  2019 ஆண்டு  அணுமின்சார உற்பத்தி அளவு ; 6780 மெகாவாட்.

    Image result for westinghouse nuclear reactor ap1000

    2008 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ள போது இரண்டு நாடுகளும் ஆரம்ப ஒப்பந்தம் செய்து கொண்டாலும், இப்போது டிரம்ப் காலத்தில்தான் அத்திட்டம் உறுதி செய்யப்பட்டது.  “அமெரிக்கர் சாதனத்தை விற்பனை செய்” என்ற டிரம்ப் சுலோகத்தில் முடிவானது இந்த திட்டம்.  இந்தியா 2024 ஆண்டுக்குள் மின்சக்தி உற்பத்தியை மும்மடங்கு பெருக்க [தற்போது 6700 மெகாவாட்]  முனைந்துள்ளது.  அமெரிக்கன் 1000 மெகாவாட் ஒரு நிலையம் நிறுவ, குறைந்தது 3 ஆண்டுகள் ஆகலாம். சென்ற ஆண்டில் இந்தியாவும், ரஷ்யாவும் மேலும் ஆறு 1000 மெகாவாட் கூடங்குள மாடல் அணு மின்சக்தி நிலையங்கள் கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டன.  நொடித்துப் போன வெஸ்டிங்ஹவுஸ்  நிறுவனத்தைக் கைதூக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு பிப்ரவரியில் போகும் போது, இந்த திட்டம் உறுதி ஆகும்.  ஆயினும் விபத்து இழப்பு நிதி கொடுக்கும் பொறுப்பு யாருடையது என்பது முடிவு செய்யப் படவில்லை.

    Image result for indian electric power generation

    Share
  • பாரதியைக் கொண்டாடுவோம்

    பாரதியைக் கொண்டாடுவோம்

    வணக்கம்.

    இன்றைக்கு, சிங்கப்பூர் லிஷா அமைப்புக்காக, பாரதியைக் கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் பேசுகிறேன்.

    இந்திய நேரம்: மாலை 3.30 மணி
    சிங்கப்பூர் நேரம்: மாலை 6.00 மணி

    Zoom:

    Meeting ID: 919 7404 0684
    Passcode: 129103

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • பாராளுமன்றத்தில் பாரதி!

    பாராளுமன்றத்தில் பாரதி!

    வணக்கம்.

    பாராளுமன்றத்தில் பாரதி!

    நாளை, செப்டம்பர் 18, சனிக்கிழமை நமது பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி அரங்கில்,

    வானவில் பண்பாட்டு மையம்
    இந்திரா காந்தி தேசிய கலாசார மையம்
    தில்லி தமிழ்ச் சங்கம்

    இணைந்து வழங்கும்

    மாபெரும் பாரதி விழா!

    மதியம் 3.45 க்கு நேரலையில் காணுங்கள்:

    https://www.youtube.com/vanavilculturalcentre

    உற்ற நண்பன் ரவியின் ஒரு கனவு நிறைவேறுகிறது!

    இன்னும் பல கனவுகள் மெய்ப்படும்!

    அன்புடன்,
    ரமணன்

    Share