டாப்லைட் நூலகம் நான்காம் ஆண்டுத் தொடக்க விழா

0

திருப்பூர் பல்லடம் சாலை குன்னங்கல்  கிராமத்தில் அமைந்திருக்கும் டாப்லைட் நூலகத்தின்  நான்காம் ஆண்டுத் தொடக்க  விழா, ஞாயிறு மாலை நடைபெற்றது. டாப்லைட் பின்னலாடை நிறுவன உரிமையாளரும் நூலக ஸ்தாபனருமான வேலுச்சாமி, விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

உள்ளூர்ப் பிரமுகர்கள், நூலகத்தின் சிறந்த பயன்பாட்டையும் பொதுமக்களின் உபயோகத்தையும் பாராட்டிப் பேசினர். மருத்துவர் பல்லடம் பாலமுரளி, பாலு மணியக்காரர், ஆல்வின் வெள்ளியங்கிரி  முத்துபாரதி, வெஸ்மேன் சேகரன், கவுசல்யா தேவி,  ஆ.அருணாச்சலம், சுப்ரபாரதிமணியன், மணிநாதன், ஆசிரியர் ரணதேவ், வேல்முருகன்  உட்பட, பலர்  கலந்து கொண்டனர்.

மிருதுளா நடராஜன் ”தமிழக அரசியல் வரலாறு” நூல் பற்றியும், சரோஜினி “இவர்கள் வென்றது இப்படித்தான்” –சுயமுன்னேற்ற நூல் பற்றியும், டாப்லைட் வேலுச்சாமி மரபுக் கவிஞரும், பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கியவருமான வா.செ.குழந்தைசாமியின் ”குலோத்துங்கன் கவிதைகள்”  நூலையும் ஆய்வு செய்து பேசினர்.

சுப்ரபாரதிமணியன்,  நோபல் பரிசு பெற்றவர் குறித்த ”வங்காரி மத்தாயும் சுற்றுச்சூழலும்“  என்ற தலைப்பில் பேசினார். என்.சொக்கன் எழுதிய “அண்ணாந்து பார்“ என்ற சி.என்.அண்ணாதுரை பற்றிய நூல் குறித்து மாணவர் இளையபாரதி, Kids who came from  space   நூல் பற்றி மாணவர் அனிருத் மற்றும் பள்ளி மாணவர்கள் பலரும் பேசினர். பல்லடம் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறுவர்களின் கதை சொல்லல் நிகழ்ச்சி நடைபெற்றது. நூலகப் பொறுப்பாளர் மணிநாதன், விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

திருப்பூர் குன்னங்கல் பாளையத்தில் அமைந்துள்ள டாப்லைட் நூலகம், டாப்லைட் பின்னலாடை நிறுவன உரிமையாளரும் நூலக ஸ்தாபனருமான வேலுச்சாமி அவரின் பெற்றோர் வசித்து வந்த 20 செண்ட் வீட்டைப் பொதுமக்கள் உபயோகத்திற்காக  நூலாமாக மாற்றியுள்ளார். நூலகத்தை ஒட்டிய 8 ஏக்கர் நிலத்தில் அபூர்வமான 55 மரங்களை நட்டுப் பராமரித்து வருகிறார். ஏடகத்தின் கானகம் என்ற பெயரில் அமைந்துள்ள தோட்டம் பல அபூர்வ மரங்களையும் செடிகளையும் கொண்டுள்ளது. மியாவாக்கி முறையில் செடி, மரங்களை அந்த நிலத்தில் வளர்த்துப் பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பொதுமக்களுக்கும்  பயன்படும் வகையில்  இந்த டாப்லைட்  நூலகம் அமைந்துள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *