கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] – தீர்மானங்கள்
சி. ஜெயபாரதன், கனடா
கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] காலநிலை மாற்றப் பன்னாட்டுப் பேரரங்கில் அறிஞர் பங்கெடுத்து என்ன தீர்மானித்தார்?
===========================
2021 காப்பு-26 [COP-26] பேரரங்கம் செய்த தீர்மானங்கள்
- வரம்பு குறிக்கோள் உஷ்ணம் 1.5 C என்பது மாறவில்லை.
- ஆண்டுக்கு 1.4 பில்லியன் டன் கரிவாயுக் குறைப்பு நல்ல முயற்சி.
- சைனா உலகப் பூகோளக் கரி வெளியேற்றத்தில் 30% பங்கு பொறுப்பு
- மற்ற நாடுகள் 70% அளவுக்குப் பொறுப்பு.
- சைனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் நிலக்கரி பயன்படுத்தி வருகின்றன. [2021] காப்பு-26 பேரரங்கில் ரஷ்யா, சைனா கலந்துகொள்ளவில்லை.
- சைனா பேரளவு சூரிய, காற்றாடி எரிசக்தி மீள்புதிப்பு சாதனங்கள், மின்னணு வாகனங்கள், பேருந்துகள் பயன்படுத்தி வருகிறது.
- இந்தியப் பிரதமர் மோடி 2070ஆம் ஆண்டில்தான் பூஜிய விஷவாயுச் சூழ்வெளி இந்தியாவில் கொண்டுவர இயலும் என்று அறிவித்தார்.
- ரஷ்ய & சைனப் பிரதிநிதிகள் 2060ஆம் ஆண்டுக்குள் பூஜிய விஷ வாயுக் கடைப்பிடிப்பு என அறிவித்தனர்.
- ஓர் ஆண்டுக்கு 1.4 பில்ல்லியன் டன் கரிவாயு வெளிவீச்சு குறைப்புத் திட்டம், பூஜிய விஷ வாயுச் சூழ்வெளியை 2050இல் நிறைவேற்றும்.
- இப்போதுள்ள நிலைமை நீடிப்பு, மேலும் வெளிவீச்சுகளைக் குறைக்காமை இன்னும் 11 ஆண்டுகளில் வரம்பு உஷ்ணம் 1.5 டிகிரி செல்சியசுக்கு எட்டிவிடும். இது 50% அனுமான அறிவிப்பு.
தகவல்