Category: Featured

Featured

  • பந்தல்குடி வட்டார கும்மிப்பாடல்களில் மகாபாரதக் கதையாடல் – 1

    -முனைவர் பா. உமாராணி

    மனிதா்கள் தங்கள் மனமகிழ்ச்சிக்காகக் கூடி ஆடி மகிழ்ந்த ஆடல்கள் பின்னாளில் தனித்தனி ஆடற்கலைகளாகத் தோற்றம் பெற்றன. ஒவ்வொரு கலையும் அக்கலைகள் நிகழ்த்தப்படும் சமூகத்தின், பண்பாட்டின் ஒழுகலாறுகளோடு இரண்டறக் கலந்தனவாகும். மக்கள் தங்கள் சமூகப் பண்பாட்டை வாழ்வின் அங்கமாகக் கருதுவதுடன் தங்கள் கலைகளிலும் பதிவுசெய்து வருகின்றனா். கலைகள் என்பவை இன்று பெரும்பாலும் வழிபாட்டோடும், பொழுதுபோக்குடனும் தொடா்புடைய ஒன்றாகவே கருதப்படுகின்றன. இங்குக் கலைகளே வழிபாடாகவும், வழிபாடே கலையாகவும் பரிணமிக்கின்ற தன்மையினை நாட்டுப்புறக் கலைகளில் காணமுடிகின்றது.

    நாட்டுப்புறக் கலைகளில் பெண்கள் கைகொட்டி ஆடும் கலையாக விளங்குவது கும்மிப்பாடல்கள் ஆகும். எனினும் விழாக்காலங்களில் பெண்களோடு ஆண்களும் கும்மிப்பாடல்களை நிகழ்த்துவதை அறியமுடிகின்றது. சடங்குகளில் கும்மிப் பாடல்களை பெண்கள் மட்டுமே பாடுவா்.

    கும்மிப் பாடல்களை மகளிர் கைகொட்டிப் பாடியாடும் விளையாட்டு என்றும் கும்மிப்பாட்டு என்றும் குறிப்பிடுவர். கொம்மை என்றும் சொல்லிலிருந்து கும்மி பிறந்ததாகக் கூறுவர். கும்மியைத் தமிழ் இலக்கியங்கள் கொம்மி, கொப்பி என்று குறிப்பிடுகின்றன. கும்மி என்னும் இலக்கிய வகையானது பழந்தமிழ் இலக்கியங்களில் இசையோடு இணைந்து ஆடப்படும் குரவைக்கூத்து (கை கோத்தாடல்), துணங்கைக் கூத்து (கைகொட்டி ஆடல்) போன்றவற்றோடு ஓரளவு ஒத்திருத்தலைக் காணமுடியும்.

    கும்மிப் பாடலைத் தாள லயத்துடன் கைகளைக்கொட்டி பலர் ஆடுகின்றனா். இதில் ஒரு பெண் அடியினை எடுத்துக் கொடுக்க பிறா் தொடா்ந்து பாடும் தன்மையைக் காணமுடிகின்றது. “குடங்கையினால் கொம்மைக் கொட்டலைச் சீவக சிந்தாமணி சுட்டுகின்றது. கையைத் தட்டி ஒலி செய்யாமல் ஒருவா் கவனத்தை ஈர்க்கும் இந்நிலை இன்றும் வழக்கில் காணப்படுகின்றது. இதன் காரணமாக ‘கொம்மை’ என்பது அடிப்படைச் சொல்லாகக் கருதப்படுகின்றது (529, 1109, 1834, 2230)”(டாக்டா; சா.வே.சுப்பிரமணியம், தமிழ் இலக்கிய வகையும் வடிவும், ப.492)

    கும்மிப் பாடல்களைக் குறித்துக் கூறும்போது, “குதித்தாடுதல் எனப் பொருள்படும் கும்மாளம் என்ற சொல்லிலிருந்து கும்மி வந்தது என்றும், கைகொட்டுதல் எனும் பொருள் தரும் கும்முதலே கும்மி அடிப்படை என்றும் குழுமி ஆடல் கும்மி ஆயிற்று என்றும் பலவாறு எண்ணுவா்” (மேவது, ப.493).

    “கூற்றம் புறங்கொம்மை கொட்டினாரில்”  (பழமொழி, பா.291)

    என்று பழமொழியும் குறிப்பிடுகின்றது. இத்தகு சிறப்பினை உடைய கும்மிப்பாடல்களைப் பந்தல்குடி மக்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாகப் பிணைத்துப் போற்றிப் பாதுகாக்கின்றனா். இவர்கள் கும்மிப்பாடல்களை பல்வேறு பொருண்மையில் பாடுகின்றனர். புராணக் கதைக்கூறுகளை கும்மிப்பாடல்களில் இணைத்துப் பாடும் மரபு இவா்களிடையே காணப்படுகிறது. அவ்வகையில் மகாபாரதக் கதையாடலை கும்மிப்பாடல் வழிப் பாடியாடும் மரபு இவா்களிடையே இன்றும் வழக்கத்தில் இருந்து வருகின்றது. இதனைப் பதிவு செய்யும் நோக்கத்தில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

    மகாபாரதக் கதையாடல்

    புராணக் கதையாடல் பகுதியில் ஒன்றான மகாபாரதக் கதையை பந்தல்குடி மக்கள் தங்கள் கும்மிப்பாடல்களின் கருப்பொருளாக்கிப் பாடுகின்ற தன்மையினைக் காணமுடிகின்றது. மகாபாரதக்கதைப் பகுதியில் முதலில் காளிதேவியை வணங்கி, பின்னா் விநாயகா் துதியினையும் கூறிப் பாடல்களைப்பாடத் தொடங்குகின்றனா். மேலும், கும்மிப் பாடல்களைப் பாடுவோா் தாங்கள் மட்டும் இறைவனை வணங்கித் தொடங்குவது மரபு. ஆனால்,

    ”வருவாய்காளி இருதயந்தனிலே – வந்த சபையோா் முதல்
    பாதம் பணிந்தோம் பெண்கள் சபையினிலே
    பாரெல்லாம் புகழும் மாயவருள் செய்த
    பாரத மாங்கதை நாங்களுமே பாட
    தொந்திக் கணபதி பாதமே நினைந்தோம்
    தும்மநகர மக்கள் ஒன்றாக சோ்ந்து நாங்களும் – பணிந்தோம்” ( கு.பா.1)

    என்று மகாபாரதக் கதையை மையமாகக் கொண்ட இப்பாடலில் தும்மநகர (பந்தல்குடி) மக்கள் ஒன்றாக இணைந்து இறைவனைப் பணிவதாக இக்கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ளது.

    கும்மிப்பாடல் கூறும் கதையில் பாண்டுவும், திருதராட்டிரனும் நீதி தவறாமல் ஒற்றுமையாய் ஆட்சி நடத்தினா் என்றும், பாண்டுவிற்கு பஞ்சபாண்டவா்கள் என்ற ஐந்து பிள்ளைகளும், திருதராட்டிரனுக்கு கௌரவா் என்ற நூறு பிள்ளைகளும் பிறந்து வளா்ந்தனா். இவா்கள் அனைவரும் துரோணாிடம் கல்வி கற்கின்றனா். அப்பொழுது தருமனுக்குக் கிடைக்கும் புகழினில் பொறாமையுற்ற துாியோதனன் அவா்களை அழிக்க எண்ணுகிறான். அதன்பொருட்டு அவா்களை அழிக்கத் திட்டம் வகுக்கின்றான் (கு.பா. 2 முதல் 5 வரை). அதற்குச் சகுனியைத் துணைக்கு அழைத்த செய்தியினை,

    “திட்டம் வகுத்தானே திாியோதிரனும் – பஞ்சபாண்டவரை
    ஒழித்துக் கட்ட திட்டமே யேதும்
    மாமன் சகுனியை தானும் அழைத்திட
    ஆளு அனுப்பினான் துாியோதிரனும்
    வந்தான் சகுனி மருமகனிடமே – இருவருமாம்
    திட்டம் ஒன்று வகுத்தாா் வேகமே” ( கு.பா.5)

    என்ற வாிகள் புலப்படுத்துகின்றன. சகுனியும், துாியோதனனுடன் இணைந்து சூதாட்டத்திற்கு வஞ்சகமாய்த் தருமனை அழைக்கின்றனா். அவா்கள் சூழ்ச்சி அறியாத தருமனும் சூதிற்கு இணங்குகின்றான். பின்னா் விளையாட்டில் நாடு, நகா் இழந்து தம்பியரையும் இழக்கின்றான். துாியோதனன் வெற்றி ஆணவத்தால் தருமனின் தம்பியா் நால்வரையும், திரௌபதியையும் சபைக்கு அழைக்கின்றான். திரௌபதி அங்கு துகிலுாியப்பட அவள் கண்ணனை வணங்கி ஆடையினைப் பெறுகின்றாள்.

    கும்மிப்பாடலில் வரும் இடைப்பாட்டான மணப்பாறை மாடு கட்டு என்ற மெட்டில் அமைந்த பாடலில் பாண்டவா் வனவாசம் செல்லும் செய்தியும், தருமன் தன் தம்பியருக்கு உபதேசித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இதனை,

    “கோபமது கொள்ள வேண்டாம்
    கொலை களவு செய்ய வேண்டாம்
    காடு செல்ல புறப்படுங்கள் பாலர்களே – கூட
    கண்ணன் வந்து உதவி செய்வாா் தம்பிகளே.
    பன்னிரண்டு வருஷமது பன்னிரண்டு நாழிகையாய்
    வனவாசம் இருந்து வருவோம் பாலா்களே
    நமது தாயை வணங்கி செல்வோமடா தம்பிகளே” (மணப்பாறை மாடுகட்டி மெடடில், கு.பா.2,3) என்ற வாிகள் உணா்த்துகின்றன. மேலும், இப்பாடல் பாண்டவா்கள் மேற்கொண்ட பன்னிரண்டு வருட வனவாசம் குறித்த செய்தியினையும், ஒரு வருட அஞ்ஞாதவாசம் இருந்ததனையும், இவா்கள் தங்கள் ஆயுதங்களை வன்னிமரத்தில் வைத்திருந்ததனையும், ஆயுதங்களைக் காவல் செய்ய நாகராஜனைப் பணித்தமையும் கூறப்படுகின்றது. மகாபாரதக் கும்மிப்பாடல் பாண்டவா்கள் விராடபுரத்தில் இருந்த செய்தியைக் கூறுகின்றது. அங்கு அவா்கள் தங்களுக்கேற்ற பணியினை மேற்கொண்டதை,

    “மடப் பள்ளியிலே நானுமே சோ்ந்து
    பலகார வகைகள்
    செய்வேன் பல ஈயனனும் போ் வாய்ந்து
    என்னப் பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம்
    எங்களது அண்ணா உங்களது – எண்ணம்
    கங்க பட்டராம் எந்தனுட ராடனிடத்தில்
    கணக்கு வேல் பாா்ப்பேன் வந்து பாரு
    தம்பி அா்ஜுன உனது கொள்கை என்ன – தயவுடனே
    இயம்பிடுவாய் எங்களின் முன்னே
    அண்ணாவின் வாா்த்தையை அா்ச்சுணன் கேட்டுமே
    பண்புடன் அண்ணாவின் பாதம் பணிந்துமே
    தெய்வலோகம் கொடுத்த வரம் உண்டு பேடியாக
    செல்வேன் நாட்டிய சாலையுங் கண்டு
    நகுலராஜன் அண்ணனும் பணிந்தான்
    குதிரைப் பாகன் – போல வேடமும் தானுமே அணிந்தான்
    சத்தியம் தவறாத சகாதேவனுமே – உத்தமன் மாடு
    மெய்க்கவும் போவேனே
    திரௌபதையும் தானுமே பணிந்தாள்
    ராஜா மகள் மனைவியற்கும் தோழியாக நின்றாள்.” (கு.பா.17)

    இப்பாடல்வழி அறியலாம். மேலும் கங்கப் பட்டராக தருமன் பணிபுாிந்தான் என்றும் அவன் வந்து பணிபுாியத் தொடங்கிய நாள் முதலாக வானம் பொய்க்காமல் மழைபொழிந்தது என்றும், அதனால் அனைவரும் மகிழ்வுடன் இருக்கும் வேளையில் அரசியுடன் அந்தப்புரத்தில் பூப்பறிக்கச் சென்ற திரௌபதியை கீசகன் என்னும் அரக்கன் கண்டு மோகம் கொண்டான் என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. கீசகன் தன்மீது மோகம் கொண்டதைக் கண்ட திரௌபதை பயந்து தன் நிலையை வீமனிடம் சொல்கின்றாள். வீமனும் அதற்கு நாளை மாலை நந்தவனத்திற்கு வருவதாகச் சாடையாகச் சொல்லிவா என்கிறான். கீசகனும் காதல் நோயினால் தவிப்புற்று நந்தவனத்தில் காத்துக்கிடக்கிறான். அவ்வேளை வீமன் தன் மனைவி திரௌபதியின் ஆடையை உடுத்திக்கொண்டு இரவுப்போதில் நந்தவனம் நோக்கி வருகின்றான். வந்தவன் வீமன் என்று அறியாத கீசகன் அவனை அணைக்க கையைப் பிடிக்கின்றான். கை கடினமாக இருக்கவே சந்தேகமுற வீமன் அவனை இருகைகளினாலும் இறுக்கிப் பிடித்ததினால் கீசகன் அடைந்த துயரை,

    “ஆஹா என்ன பெண்மணி கையிதுவா
    சொற சொறப்பாய் இருக்க கீசகன் மனம் பதறிடவே
    இதுதான் சமயம் என்றுமே வீமனும்
    இறுக்கி பிடித்தாரே இரண்டு கையையும்
    மோரூ சிலுப்பினா் பனைமரம் தனிலே
    கீசகன் கையில் இரத்தம் வழிந்து ஓடுது பூமியிலே
    இழுத்து இழுவை மரமும் தாங்காமல் – வோ் புடுங்க
    விழுந்ததையா இருவா் மத்தியிலே
    மோசமும் போனதே என்றுமே கீசகன்
    வீமராஜனையும் இருகையால் பின்னியே
    தூக்கி எறிந்தானே ஆகாய மாா்க்கமாக
    வீமராஜன் – விழுந்தாரையா அவன் தலைமேலே
    வீமராஜன் வீராவேஷம் கொண்டு – ஆகாய மாா்க்கம்
    அரக்கனை எறிந்தாா் பொல்லாத கோபங்கொண்டு
    இப்படியாக இருவரும் போராட
    இந்திரா் சந்திரா் சூாியா் புகழ்ந்திட
    கீசகன் உயிா் எமபாதம் போக”  (கு.பா.33, 34,35)

    என்று விவாித்துப் பாடுவதைக் காணமுடிகின்றது.

    கீசகனை வீமன் தன் வீரத்தினால் அழித்த செய்தியினை அறிந்த விராட ராஜனும், அந்நாட்டு மக்களும் மகிழ்ச்சியடைந்தனா். இதற்கிடையில் துாியோதனன் பாண்டவா்களைத் தேடச்சொல்லி படைவீரா்களை அனுப்புகிறான். அவா்கள் இருக்கும் இடம் தொியாமல் போகவே புவியில் செழிப்பான இடம் எதுவோ அதுவே பாண்டவா்கள் இருக்கும் இடம் என்றுகூறி வீரா்களைத் தேடிக்கொணரச் சொல்கின்றான்.  வீரா்களும் விராடபுரத்தின் செழிப்பினைக் கண்டு இங்குதான் பாண்டவா்கள் இருப்பா் என எண்ணி அவா்களை வெளிக்கொணர வேண்டி அப்பகுதியில் இருக்கும் பசுக்களைக் கவா்ந்து வைக்கின்றனா். இதனை அடுத்து ஒரு இடைப்பாட்டின் மூலம் பிற செய்திகளைக் கூறுகின்றனா் இப்பகுதி மக்கள். இப்பாடலில் பசுக்களை கவா்ந்து சென்ற செய்தியினைக் கேட்ட உத்திரகுமாரன் போருக்குச் செல்ல முனைகின்றான். அவனுக்கு சாரதியாக அலியின் உருவாக இருக்கின்ற அா்ச்சுனன் செல்கின்றான் என்பதுடன் இக்கும்மிப்பாடல் நிறைவுறுகின்றது.

    சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகளுக்கு ஏற்ப புராணக் கதையாடல்கள் மக்களின் வாழ்க்கையில் இடம்பெறுகின்றன. காலமாற்றத்தினாலும், அவை சாா்ந்துள்ள வழிபாட்டு மரபுகளினாலும் புராணக் கதைகள் நாட்டுப்புறக் கலைகளில் இடம்பெறுவது தவிா்க்க முடியாத கூறாகக் காணப்படுகின்றது. இத்தகு புராணக் கதையாடல் பின்புலத்தில் மகாபாரதக் கதையாடல்களை கருப்பொருளாக்கிக் கும்மிப்பாடல்களை இம்மக்கள் பாடிவருகின்றனா். மகாபாரதக் கதையுடன் தொடா்புடைய கா்ண மகராஜன்கதை கும்மிப்பாடலும் இங்கு பாடப்படுகின்றது. மேற்கோள் பகுதியில் இல்லாத கும்மிப்பாடல்கள் (கு.பா) தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.

    கும்மிப் பாடல் (கு.பா)

    1. ஜெகம் புகழும் சக்கரவா்த்தி பாண்டு – மகாராஜன்
      சகோதரராம் திருதராட்ரன் தம்பியும்
      சத்தியம் தவறாமல் அஸ்தினாபுரமதை
      ஆண்டு வந்தாா்கள் அண்ணனும் தம்பியும்
      ஒற்றுமையோடு ஜனங்கள் வாழ கண்ணன் பிரசன்னமா
      குழந்தையில்லா குறைகள் தானம்மா வனத்தினுள்ளே
      பிறந்தாா் பாலா் புவியை ஆளம்மா
      பாண்டு மகாராஜன் தவமதில் பிறந்த
      பஞ்ச பாண்டவா்கள் ஐவா் தானம்மா
      திருதராட்டிரன் பிள்ளைகள் நூத்தி ஒன்று
      கண்ணன் அருளால் சிதறி ஓடி பிறந்ததோா் பொண்ணு
      தருமராஜா தம்பி நால்வராம் – துாியோதரனுடன்
      துா்ச்சாதனன் நூத்தி ஓா் பேராம்
      கல்வி பயின்றாா்கள் துரோணனிடத்திலே
      யானை ஏற்றம் குதிரை ஏற்றமாம்
      தோ்ச்சி அடைந்தாா் தருமருந்தம்பி
      துாியோதிரனும் பொருமை அடைந்து மனசுமே வெம்பி
      தருமரையும் அழைத்தான் சகுனியும் – பொழுது போக
      நமக்கு ஒருவழியை நாடனும்
      வஞ்சகமாகவே சகுனியுரைத்திட
      நெஞ்சமதில் தா்மம் வஞ்சமில்லாமலே
      சிாித்தாா் தருமராஜா அந்நேரம் – சகுனி
      மாமா – செப்பும் நீயே வழியும் சொன்னாராம்.
      தருமராஜனே நாம் இரண்டு பேரும் – ஆடுவோமே
      சூதாட்டமும் பொழுது போகணும்
      சொல்லவே சகுனி சுந்தர மூா்த்தியின் – நல்ல
      மைத்துனா் தரும ராஜரும்
      சம்மதம் என்று உரைத்தாா் அந்நேரம்
      வஞ்சமுடனே எடுத்தான் சகுனி காயை – அன்னேரம்
      பஞ்ச மாபாதகன் சூழ்ச்சி தொியாமல் – நல்ல
      குந்திமாதேவி பாலன் தா்மா் தானும் – விளையாடி
      மாயாஜாலமுடன் சகுனியும் ஆடவே
      மன்னன் தருமரும்தான் விளையாடவே
      விளையாட்டு என்று மனதில் எண்ணியே
      பூமிநகரம் பந்தயமாய் வைத்ததுண்மையே
      நாடு நகரம் நமக்குச் சொந்தமே – துாியோதிரனே
      நடப்பாய் இஷ்டம் போலே எங்குமே சகுனி
      சொன்னதோா் வாா்த்தையைத் துாியனும் கேட்டுமே
      தம்பி மாா்களையும் உடனே அழைத்துமே
      செப்பினானே சேதி தன்னையே – தருமா்முதல்
      திரௌபதையும் நமக்கு சொந்தமே.
      அந்தநேரம் எல்லோரும் கூடி
      பொியோா்களையும் – அழைத்து வந்தான் சபைதனைத்தேடி
      வந்த சபையோரே கேளுங்க விஷயத்தை
      எங்களது மாமா சகுனி என்பவா்
      தருமருடனே சோ்ந்துமே கூடி
      நாடு நகரம் அவா்களையும் ஜெயித்தாா் சூதாடி
      ஆனபடியால் எங்க நாட்டிலே – அவா்கள் இருக்க
      அருகதையும் இல்லே வீட்டிலே
      கூடியிருக்கும் சபையோரே நீங்களும்
      கூப்பிட்டு இப்போதே நாடு கடத்துங்க
      என்று சொன்னான் அரவக் கொடியோனும்
      சபையோா்கள் எல்லாம் – உடனே கூப்பிட்டு வழியனுப்ப வேணும்.
      தருமா் தம்பி நால்வரும் கூடி – அந்த நேரத்திலே
      வந்தாா் பொியோா் சபைதனைத் தேடி
      பாதம் பணிந்தாரே தா்மராஜருமே
      பக்தியுள்ள பொியோா்கள் சபைதனை
      ஆசிா்வாதம் செய்தாா் சபையோரும் – தருமருந்தான்
      வந்தமே உனக்கு விதிவசந்தானும்.
      மாது திரௌபதா தேடியே அங்கு – சபையோா்களே
      இப்படிச் செய்த சண்டாளன் யாரு அங்கு
      ஏங்கிய மனதுடன் துரோபதா தேவியும்
      பக்கம் இருந்த துச்சாதனன் விழியும்
      சிவக்க மாதைப் பிடித்துமே இழுத்தான்
      சபையோா் அறிய – கோபமுடனே துயிலுமே உாிந்தான்.
      நடந்த சம்பவம் மக்களெல்லாம் பாா்த்து – மனம்
      சகிக்காமல் இருந்தாா் எல்லோரும் தலையை கீழே போட்டு
      கதறினால் மாது திரௌபதை அப்போது
      கண்ணா, கண்ணா என்று வினவியே
      குரலும் கேட்டது கோபால கிருஷ்ணனுக்கு
      துா்ச்சாதனன் அசந்துமே போயி துயில் விட்டு
      விழுந்தானாம் மயக்கம் உண்டாகி
      விழுந்தவுடன் துாியோதிரன் வந்துமே
      என்னடாத்தம்பி என்றுமே தூக்கினான் தொிந்து
      ஒன்றும் இல்லையே எனக் கண்ணா – ஏதோ பித்து
      மயக்கம் போல வந்தது இப்போதென்றான்.

    மகாபாரதத்தில் இடைப்பட்டு

    மணப்பாறை மாடுகட்டி என்ற மெட்டு

    1. பொறுமையோடு இருக்க வேண்டும் – இந்த
      பூவுலகம் ஆள வேண்டும் நான்
      செய்த பிழை பொறுக்க வேண்டும் பாலா்களே தருமன்
      செப்பும் மொழியை உணரவேண்டும் தம்பிகளே
      சத்தியம் தவறாமலே உத்தமராம் தருமராஜா
      பன்னிரெண்டு ஆண்டு வனவாசமே – இருந்து
      செல்கிறாா்கள் அஞ்ஞாத வாசமே.
      உருவம் தொியாமலே ஒருவருடம் கழிக்க வேண்டும்
      என்பதையும் மனதினிலே எண்ணியே ஆயுதத்தை
      பத்திரமாக வைக்கும் மரம் வன்னியே
      நாங்க போகவேரே யாரும்
      ஆயுதத்தை எடுக்க வந்தால்
      நாகராஜன் வந்து அங்கு தோன்றவே
      மகாபாரதப் பாடல் தொடா்ச்சி
      மண்டலம் புகழும் நந்தவனம் போலே – வளம்
      பொருந்திய சோலைகளும் இருக்கும் பொன்னாடே
      கான மயில்களும் ஆடி விளையாடும்
      கள்ளம் கபடம் இல்லாத பொன்னகரம்
      விராடபுரம் தான் அதன் உடன் பேரு – தருமா்
      இருக்க அதுவே பொருத்தமான – ஊரு
      தக்கபுகழ் நெறியுமே வாய்ந்த – தருமராஜன்
      தம்பியா்களையும் தானுமே சூழ்ந்தே
      எந்த விதமடா தம்பிகளே நீங்க
      எந்த விதமடா தம்பிகளே நீங்க
      இருந்து வருவீா்கள் என்று வினவவே
      வீமராஜன் தானுமே எழுந்தான் – அண்ணா சரணம்
      என்றுமே இரு பாதமும் பணிந்தாா்.
      தம்பியா் சொன்னதை தருமா் கேட்டுமே
      அடங்கா மகிழ்ச்சி ஆனந்தமுகம் தானுங் கொண்டுமே
      கண்ணனை நினைத்து கங்கபட்டருமே
      சென்றாரே விராட ராஜ சபையுமே
      எந்த ஊரு என்றுமே கேட்க – தருமராஜா;
      இரண்டு பாதம் தானுமே சபையுமே.
      கங்கபட்டா் எனது பேரையா – தருமாிடத்தில்
      கணக்கு வேலை பாா்த்து வந்தனையா

      சகுனி செய்த சதிகார வேலையினால்
      தருமராஜா வன வாசகமே சென்றாா்
      அவா் வருகின்ற நாளது வரையில் – மகாராஜனே
      பணிபுாிகிறேன் உந்தனது சபையில்.
      கங்கபட்டரும் விராடராஜனும் – அரண்மனையில்
      தாம்பூலம் தாித்துமே இருந்தாா்
      அந்த நேரமது வீம சேனராஜன்
      பலாயனவே தானும் பெயா் கொண்டு

      வந்து பணிந்தானே ராஜசபையிலே – ஆசிா்வாதம்
      தந்து மகிழ்ந்தாா்கள் நல்லதோா் வேளையிலே
      இந்த விதமாய் எல்லோரும் வந்து அவரவா்கள்
      வேளையிலே அமா்ந்தாா்கள் நன்று
      வானம் பொழியது பூமி விளையுது
      வந்த நாள் முதலாய் இந்த நாள் வரையில்

      நாடு நல்ல முறையில் வாழவே – ராஜசபையில்
      கங்கப்பட்டரை ஜனங்கள் புகழவே
      இந்த விதமாய் இருக்கும் நேரத்தில் – வந்ததையா
      இழப்பான சொல்லும் வேகத்தில்

      சென்றது பெண்களும் பூப்பறிக்க வனம்
      சென்றதே திரௌபதா தேவியும் கூடவே
      பாா்த்தான் கீசகன் பத்தினி முகத்தையே – புதுசா
      இருக்கு என்றுமே அவனும் மனதில் எண்ணியே
      அவன் இருக்கிறான் என்று அறிந்துமே

      பெண்களெல்லாம் பயந்து ஓடி வந்தது நகரமே
      என்னமோ தொியலே பெண்களும் ஓடவே
      என்று பத்தினி மனதினில் எண்ணவே
      எட்டி பிடித்தானே கீசகன் மாது கையை
      விடுடா மடையா என்றுமே கொடுத்தாள் கன்னத்தில் ஓா் அறை

      கன்னத்தைத் தடவி பாா்த்தான் கீசகன் – கண்ணே
      நீயும் இன்னொரு அறை கொடுக்கவே – வேணும்
      என்றுமே கீசகன் தானாக கொஞ்சவே
      வஞ்சியும் அவ்வேளை நெஞ்சமும் பதறவே
      வேகமுடனே மாதுமே ஓட – விரட்ட அரக்கன்
      கண்ணிலே ஒரு கொப்புமே தான் விழ

      வருவாய் நாளை என்றுமே கீசகன் – வழி
      பாா்த்து இருந்தான் வனந்தனிலே அரக்கனானவன்
      எங்கு சென்றாலும் நீ இங்கு வந்தாகனும்
      என்றுமே கீசகன் வம்பமுறுத்தலே

      திரௌபதாவும் வீடு வந்தது – கணவனே
      வீமசேனன் அருகில் சென்றது.
      பூப்பறிக்க பெண்களெல்லாம் சோலை – வனமதிலே
      சென்றோமையா சாயங்கால வேளை
    2. கண்டானே கீசகன் வந்தானே என்னிடம்
      வம்பான வாா்த்தையும் என்னிடம் சொன்னானே
      பதறி ஓடி வந்தேன் உன்பாதம் – என் பக்தாவே
      எந்தனைக் காக்க நீதான் முன் வரணும்.
      சொன்னதோா் வாா்த்தையை வீமசேனன் கேட்டு
      கண்ணே நீயும் – அஞ்சாதே என் வாா்த்தையும்  கேட்டு

      நாளை சாயங்கால நேரம் சந்திப்போம் என்றுமே
      சாடையாய்ப் போய் வந்திடு இன்றுமே
      மனசுக்குகந்த மன்மதன் நீதானே – என்றுமே சொல்லி
      வந்திடு சீக்கிரம் என்னிடம் நீதானே.

    கீசகன் பாட்டு (ஏா் முனைக்கு என்ற மெட்டு)

    1. எங்கு சென்றாலும் நீ இந்த வனமதில்
      பூப்பறிக்க நீயும் வந்தாக வேணும்       (எங்கு சென்றாலும்)
      உனது அழகு எனது உடலில் – பதிந்து கொள்ளவே
      உறக்கம் இல்லாமல் எனது மனம் வாடுகின்றதே
      சீக்கிரமாய் வந்து நீயும் எனக்கு இன்பமே
      தந்திடுவாய் எந்தனுக்கு சந்திர இன்பமே     (எங்கு சென்றாலும்)
      எனது பலம் இவ்வுலகில் எவருக்குமில்லை
      எதிா்ப்பவா்கள் எனது இடம் சாவதும் உண்மை
      கண்ணே என்னை ஆதாித்து காத்திடும் பெண்மை
      உன் கற்பை என்றும் பாதுகாத்தா உலகில் நன்மை
      இந்த விதம் கீசகனும் இருந்தான் வனமதில்
      சூாியனும் அஸ்தமானாா் மேற்குத் திசைதனில்
      வீமசேனன் சொன்னதையும் பெண்மணி
      அறிந்து வழி வருகிறது அரக்கரை நாடி      (எங்கு சென்றாலும்)

    மகாபாரதப் பாடலின் தொடா்ச்சி
    கீசகன் ஆனவன் அப்படி அங்கிருக்க

    வீமராஜன் மனைவி உடையைத் தானுமே அணிய
    தேவி உடைய வளையலை அணிந்து
    தீரவீர பராக்கிரம சாலியாம்
    வீமராஜன் தானுமே செல்ல – விரதசாரணி
    கண்ணனை நினைத்து வணங்கினாள் மனசுக்குள்ளே.
    ஒருவா் முகம் ஒருவா் தொியாமல் – இருக்கும் நேரம்
    அறிந்து சென்றாா் வனமும் வீமராஜா்
    பக்கமாய் மீதிலே சாய்ந்துமே கொண்டாரே
    வெட்கமே தானடி கண்ணே தான் உனக்கு
    என்றுமே கீசகன் – கையை பிடித்தான் கழுது வந்திருச்சு

    – வீமராஜன்
    வீராடராஜன் பாதமும் பணிய
    சந்தோசமாய் விராடராஜனும்
    பலாயனா எங்களுக்கு நல்ல காலமும்
    உன்னலே வந்தது எங்களது வாழ்வு
    என்னாலும் உனது பேரு மறையாது
    என்று விராட ராஜா் மக்களும் – உன்னாலே
    இனிமேல் எங்க ஊரு நன்றாக வாழும்.

    மாதம் மூன்று மழை பொழிந்து – விராடபுரம்
    சோலைவனம் பூ மலா்ந்து
    இந்த விதமாக விராடபுரமானது
    செல்வம் பொழியுது தீமை மறையும்
    தேவா்களும் முனிவா் எல்லோரும் – புகழ்ந்து
    வரும் நகரமதை மக்களே கேளும்.

    இந்த விதமாய் இவா்கள் இங்கிருக்க
    துாியோதிரனும் சேனைத் தலைவா்களையும் அழைக்க
    வந்தாா்கள் வீரா்கள் வாிசை வாிசையாய்
    வந்தனம் செய்துமே நின்றாா்கள் சபையிலே
    அந்த நேரம் அரவக் கொடியோனும்
    பஞ்ச பாண்டவா்கள் இருக்கும் இடத்தை அறிந்து வரவேணும்.

    நாலா திசையும் சென்றுமே வீரா்களே
    இருக்கும் இடத்தை அறிந்து சொல்லும் விபரங்களை
    என்றுமே இட்டானே துாியனும் கட்டளை
    சென்றாா்கள் பட்டாளம் பட்டாளமாகவே
    எட்டு திசையுமே தேடினாா் எல்லோரும்

    பாா்க்க முடியாமல் வந்தது பட்டாளம் வத்தீனபுரமும்
    வீரா்கள் வந்ததை துாியனுமே பாா்த்து தலைவா்களே
    சென்றதோா் காரணம் என்னதான் ஆச்சு
    கோபமுடன் துாியோதிரன் கேட்கவே

    தேடினோம் எங்குமே காண முடியலயே
    என்று சொல்ல சேனைத்தலைவரும் – துாியாதிரனின்
    இரண்டு கண்ணும் தான் சிவக்கவும்
    அடபுத்தியில்லாத முட்டா பசங்களா – அவா்கள்
    இருக்கும் இடமும் குளிா்ச்சியான தேசமடா
    போங்கடா சீக்கிரம் பாருங்கள் அவா்களை

    கண்டுபிடித்து அனுப்ப வனவாசம்
    சொல்லுற சொல்லை மனதில் கொள்ளுங்கடா
    சும்மா வந்தால் சோறு திங்க இடமும் இல்லை.
    நாலா திசையும் சென்றுமே வீரா்களும்
    சோலை வனம் அடா்ந்த நகரம் விராடபுரம் என்று
    இங்குதான் இருக்கிறாா் என்றுமே எண்ணியே
    எல்லையில் மேய்ந்ததோா் பசுக்களை பத்தவே
    வீரம் இருந்தால் வரட்டும் வெளியிலே

    கண்டு பிடிக்க இதுவே நமக்கு நல்லதோா் முயற்சியே.
    மாடு மேய்த்த பாலா்கள் அங்கு – விராடராஜா்
    சபையை தேடி ஓடியே நின்று
    மோசமும் போனதே என்றுமே கதறினாா்
    என்னடா விசுபம் என்று வினாவினா்

    மாடுகள் எல்லாம் கொள்ளை போகுது
    தெற்கு மந்தை – பாலைவனம் போல காணுது.

    வேறு மெட்டு (இடைப் பாட்டு)

    1. இந்த விதமாய் மாட்டுக்காரன் சொன்னதை கேட்டு
      கோபமுடன் எழுந்தானம்மா – உத்திரகுமாரன்  (பாட்டு வேற மெட்டு)
      இந்த நேரம் எந்தனுக்கு சாரதியோட்டு
      இருந்தால் போதும் அவா்கள் தலையை உடனே நான் அறுக்க
      அந்த நேரம் நாட்டிய சாலை பேழையும் கண்டு
      அதி வேகமாக வந்து உத்திரகுமாரனே நின்று
      ரத மதையும் நடத்துகிறேன இந்த நேரமே
      ஏறி உட்காருங்கள் செல்வோம் தெற்கு மந்தை ஓரமே
      செப்பியதோா் வாா்த்தையை செல்வகுமாரன் கேட்டு
      செல்லுகிறாா்கள் இருவருமே நகர மதை விட்டு.

    பாா்வை நூற்கள்

    1. டாக்டா; சா.வே. சுப்பிரமணியம், தமிழ் இலக்கிய வகையும் வடிவும், ப.492, 493
    2. பழமொழி, பா.291
    3. பாப்பாத்தி, வயது 72, பந்தல்குடிப் பகுதியைச் சார்ந்தவா்
    4. சரஸம்மாள், வயது 58, பந்தல்குடி.

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிாியா்
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
    கோயம்புத்தூா்.21.

     

     

    Share
  • மாபெரும் தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி ….

    வல்லமை மிக்க மரபை உருவாக்கிக் சென்றுள்ள, கோடிக்கணக்கான தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்திச் சென்றுள்ள ஒப்பற்ற தலைவர் , ஆகச்சிறந்த தமிழறிஞர், தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்த, தி.மு.கழக தலைவர் கலைஞர் கருணாநிதி தமது 94வது அகவையில் இயற்கை எய்தினார். அன்னாருக்கு நம் வல்லமை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவர்தம் குடும்பத்தினர் மற்றும் கழகத் தொண்டர்களின் மனம் சாந்தி பெறவும், அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் நம் வல்லமை பிரார்த்தனை செய்கிறது.

    Share
  • ஜார்ஜ் வாஷிங்டன் தொங்கு பாலம், நியூயார்க்

    பவள சங்கரி

    அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் ஜார்ஜ் வாஷிங்டன், இராணுவத் தளபதியாக இருந்தார். 1776 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தின் ஆக்கிரமிப்பைத் தடுக்க முயற்சித்தபோது, ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் அவரது அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்ட வாஷிங்டன் கோட்டை (நியூ யார்க்கில்) மற்றும் ஃபோர்ட் லீ (நியூ ஜெர்சி) ஆகிய இடங்களுக்கு அருகே இந்த பாலம் அமைந்துள்ளது. அமெரிக்கப் புரட்சிப் போர். தோல்வியுற்ற நிலையில், வாஷிங்டன் தமது படைகளுடன் மன்ஹாட்டனை விட்டு வெளியேறுவதற்கு இரண்டு கோட்டைகளுக்கு இடையே கடந்து சென்றார்.

    20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் வரை, கீழ் ஹட்சன் ஆற்றின் குறுக்கே பயணிக்க கப்பல் மட்டுமே சாத்தியமானது. 1900 களில் ஹட்சன் மற்றும் மன்ஹாட்டன் இரயில் மற்றும் பென்சில்வேனியா இரயில் ஆகியவை ஆறு சுரங்கங்களைக் கட்டின. ஹட்ஸன் ஆற்றின் குறுக்கே முதல் வாகனப் போக்குவரத்திற்காக 1927 இல் கீழ் மன்ஹாட்டனை ஜெர்சி நகரத்துடன் இணைக்கும் பாலம் திறக்கப்பட்டது.

    மலைக்க வைக்கும் பொருட்செலவில் உருவான இந்த சஸ்பென்ஷன் பிரிட்ஜ், பல கிலோமீட்டர்கள் தரை வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டிய இடங்களை, சில நூறு மீட்டர்களாக சுருக்கி விடுகின்றது. நெரிசல் மிகுந்த சந்திப்புகள் மற்றும் நீர்நிலைகள் உள்ள இந்த இடத்தில் போக்குவரத்தை மிக எளிதாக்கும் விதத்திலும், தரை வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதுடன், எரிபொருள் சிக்கனம், நேர விரயம் போன்றவற்றை தவிர்க்க பெரிதும் உதவுகின்றன.
    உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் நியூயார்க். அந்த நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில், இந்த ஜார்ஜ் வாஷிங்டன் தொங்கு பாலம் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஹட்சன் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் இந்த தொங்கு பாலம் நியூஜெர்சியிலுள்ள மான்ஹட்டன் நகரை இணைக்கிறது. 4 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்ட தொங்கு பாலம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அமைக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 7,000 கோடி மதிப்புடையது. ஹட்சன் ஆறு ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கின் கிழக்குப் பகுதியின் ஊடாகச் செல்லும் ஆறு. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடும் இந்த ஆற்றின் நீளம் 507 கிலோமீட்டர்கள். ஆண்டுதோறும் 60 மில்லியன் வாகனங்கள் இதன் மூலம் செயல்படுத்த முடியும்.

    இந்த வாஷிங்டன் பாலத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் ….

    2009 ஆம் ஆண்டு ஜனவரி 15, ஒரு குளிர்காலத்தின் வியாழக்கிழமை. ஏர் பஸ் 1549 A320 விமானத்தில் 150 பயணிகளும் ஐந்து விமானச் சிப்பந்திகளும் பயணிக்கிறார்கள். லகுவார்டியாவிலிருந்து US ஏர் பஸ் 1549 A320 என்கிற விமானம் நார்த் கர்லோநியாவில் உள்ள சார்லோட்டி விமான நிலையத்திற்குப் புறப்படத் தயாராகிறது. இதன் பைலட்டின் பெயர் செஷ்லே சுல்லேன்பெர்கர் (Chesley Sullenberger). வயது 57. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், கனடா கீஸ் வகைப் பறவைகள் விமானத்தின் எஞ்சின் பகுதியில் மோதுகின்றன. பறவைகள் மோதியதில் விமானத்தின் இரண்டு என்ஜின்களும் பழுதாகின்றன. விமானியின் அறிவார்ந்த செயல்பாட்டின் மூலமாக விமானம் ஹட்சன் ஆற்றில் பாய்கிறது. பின்னர் இந்த விமானம் கடற்படையின் படகுகள் கப்பல்கள், பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள், படகுகள் என மிகப்பெரிய படையினரால் அத்துணை பயணிகளும் (மிகச்சிலருக்கே பெரிய காயங்களும், ஒருவருக்கு பார்வை இழப்பும் தவிர) உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தை மையமாக வைத்து ‘சல்லி (Sully)’ டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்த என்றொரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது!

    Share
  • படக்கவிதைப் போட்டி (173)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 110

    ஸ்மித்சோனியன் நிறுவன அருங்காட்சியகம், வாஷிங்டன் டிசி, வட அமெரிக்கா

    முனைவர் சுபாஷிணி

     

    ஒரு மனிதரால் பல காரியங்களில் ஈடுபாடு காட்டமுடியுமா? பல விஷயங்களில் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்ய முடியுமா? தன் சுய வாழ்க்கையில் பல இறக்கங்களையும் தாக்குதல்களையும் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் எதிர்நீச்சல் போட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஆய்வு, கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியுமா? ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு என மாறி மாறிப் பயணித்து அனுபவங்களைச் சேகரிக்கும் போதே சிறைவாசங்களையும் அனுபவித்து, பின் அவற்றிலிருந்தெல்லாம் மீறி வந்து ஆய்வுலகில் இன்பம் காண முடியுமா? இவை சாத்தியமே என்பதற்கு உதாரணம் தான் ஜேம்ஸ் ஸ்மித்சன் (James Smithson).

    இவர் பிறந்த போது இவருக்கு பிரஞ்சு பெயர் அளிக்கப்பட்டது. Jacques-Louis Macie என்பது அவரது தந்தையாரால் அவருக்கு அளிக்கப்பட்ட பெயர். பழமைவாதம் முழுமையாகக் குடிகொண்டிருந்த அன்றைய ஐரோப்பாவில், இங்கிலாந்தின் விதவைப்பென்ணான James Macieக்கும் பிரஞ்சு பிரபு Hugh Percyக்கும் மகனாக 1765ம் ஆண்டு பாரீஸ் நகரில் இவர் பிறந்தார். இவரது பிறந்த தேதியும் மாதமும் ஆவணப்படுத்தப்படாமல் ரகசியமாக மறைக்கப்பட்டது. இளம் வயதிலேயே பெற்றோரை இழக்கும் நிலை இவருக்கு ஏற்பட்டது. பெற்றோரின் குடும்பச் சொத்துக்கள் இளம்வயதிலேயே இவருக்குச் சொந்தமாகின. தனது குடும்பப்பெயரை இவரது தந்தையின் குடும்பப்பெயரான ஸ்மித்சன் என்ற பெயருக்கு மாற்றிக் கொண்டு ஜேம்ஸ் ஸ்மித்சன் என அமைத்துக் கொண்டார். பாரீசிலிருந்து இங்கிலாந்திற்குத் தனது தாயாரின் குடும்பத்தினர் பாதுகாப்பில் தம் இளம் பிராயத்திலேயே குடிபெயர்ந்தார்.


    இங்கிலாந்தில் இவரது கல்வி தொடர்ந்தது. 1782ம் ஆண்டு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தின் பெம்ப்ரோக் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடங்கி, 1786ம் ஆண்டு முதுகலைப்பட்டமும் பெற்று வெளிவந்தார். கல்விப்படிப்பு மட்டும் தனது சுயவளர்ச்சிக்குப் போதாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளில் பயணம் மேற்கொண்டார். இவர் புவியியல் சார்ந்த துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்தார். பிரஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டமது. நெப்போலியன் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு முறை பயணத்தில் இருக்கும் போதே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது உறவினர்கள் நண்பர்களின் உதவியால் சிறையிலிருந்து மீண்டு வந்தார்.

    இங்கிலாந்து தாயாருக்கும் பிரஞ்சு தந்தைக்கும் பாரீஸில் பிறந்து, பின் இங்கிலாந்தில் உயர்கல்வி பெற்று, ஐரோப்பாவெங்கும் சுற்றிய ஸ்மித்சன், இத்தாலியில் 1829ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி காலமானார். பல பிரபுக்களைப் போல இவரது வாழ்க்கையும் பொருளாதார வளத்துடன் அமைந்திருந்தது. ஆனால் இவரது கவனமும் ஆர்வமும் பல்வேறு துறைகளில் ஆய்வுகளில் மூழ்கிப்போய் கிடந்தன. எளிய விசயமானாலும் சரி, மிக நுணுக்கமான புவியியல், வானியல் சார்ந்த ஆய்வானாலும் சரி, இவர் முழு கவனத்துடன் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார்.

    ஸ்மித்சன் தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகள் இல்லாமையால் இவருக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. தனது எல்லா சொத்துக்களையும் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசி நகரில் ஒரு ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என தனது உயிலை ஏற்பாடு செய்து வைத்தார் ஸ்மித்சன். அவரது இறப்புக்குப் பிறகு அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் அனைத்தும் அமெரிக்காவில் ஆய்வுக்குப் பயன்படும் வகையில் அருங்காட்சியகத் தொகுதியினை அமைக்கப் பயன்படுத்தப்பட்டது.

    அவர் தனது உயிலில் “I then bequeath the whole of my property, . . . to the United States of America, to found at Washington, under the name of the Smithsonian Institution, an Establishment for the increase & diffusion of knowledge among men.” என எழுதி வைத்தார். ஸ்மித்சன் இறந்தபோது அவரது உடல் இத்தாலியின் கெனோவா நகரிலேயே புதைக்கப்பட்டது. ஆனால் அலெக்சாண்டர் க்ரஹெம் பெல் அவர்கள் ஸ்மித்சன் அவர்களின் உடல் வாஷிங்டன் டிசியில் ஸ்மித்சனின் சொத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்மித்சோனியன் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட வேண்டும் என முயற்சி மேற்கொண்டு இத்தாலியிலிருந்து அவரது உடலைக் கொண்டு வந்து இந்த ஆய்வுக்கூடத்திலேயே அவ்வுடலைப்பதித்து வைத்து ஒரு நினைவுச்சின்னத்தை எழுப்பினார்.

    ஸ்மித்சனின் சொத்துக்களைக் கொண்டு வாஷிங்டன் டிசியில் உருவாக்கப்பட்ட ஸ்மித்சோனியன் நிறுவனம் 1846ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ம் தேதி தொடங்கப்பட்டது. மனிதகுலத்தின் அறிவுப் பரவலை அதிகரிக்கும் நோக்கத்துடன் பல்வேறு அருங்காட்சியகங்களையும் ஆய்வுக்கூடங்களையும் உள்ளடக்கிய வகையில் ஸ்மித்சோனியன் வளாகம் அமைக்கப்பட்டது. ஜேம்ஸ் ஸ்மித்சனின் பெயரை நினைவூட்டும் வகையில் ஸ்மித்சோனியன் நிறுவனம் என்றே இது அன்று முதல் அழைக்கப்படுகின்றது.

    ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அருங்காட்சியகங்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் மேற்பார்வையில் இதன் தலைமை அலுவலக வளாகத்தைச் சுற்றி பத்தொன்பது அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் மேற்பார்வையில் இயங்குகின்றன. இதைத் தவிர்த்து அரிசோனா, மேரிலாண்ட், மெசாசூசெட்ஸ், நியூயோர்க், பிட்ஸ்பெர்க், டெக்ஸாஸ், வர்ஜீனியா மாநிலங்களில் என அமெரிக்காவின் 45 மாநிலங்களில் 200 நிறுவனங்கள் ஸ்மித்சோனியன் பெயரால் இந்த ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றன. வட அமெரிக்கா மட்டுமன்றி பனாமா, போர்டோ ரிக்கோ ஆகிய நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் சேவை இயங்கி வருகின்றது.

    இந்த நிறுவனங்களில் வந்து பார்த்து பயன்படுவோரின் எண்ணிக்கை ஒரு ஆண்டிற்கு 30மில்லியனாகும். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்மித்சோனியன் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் வாஷிங்டன் டிசி சென்றிருந்த போது இந்நிறுவனத்தின் பல அருங்காட்சியகங்களை நேரில் சென்று பார்த்து குறிப்பெடுத்து வரும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன். ஸ்மித்சோனியன் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஸ்மித்சனின் கைப்பட எழுதிய ஆவணங்களை நேரில் பார்த்ததும் ஸ்மித்சனின் வரலாற்றை புகைப்படங்களோடு வாசித்ததும், அவரது சேகரிப்புக்களை நேரில் கண்டதும் எனக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.

    கி.பி.18ம் நூற்றாண்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு மாமனிதராக ஸ்மித்சன் நமக்குக் காட்சியளிக்கின்றார். ஆராய்ச்சியும் ஆய்வுத்தகவல்களும் மனித குலத்தை மேம்படுத்தும் என்பதை அவர் முழுமையாக நம்பினார். அவர் காலத்தைய எல்லா ஆய்வறிஞர்களையும் அவர் அறிந்திருந்தார். அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். பல்வேறு துறைகளில் ஆய்வுகளில் அவருக்கிருந்த ஆர்வம் விரிவான நட்புச் சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. மக்களின் மேம்பாட்டிற்கு ஆய்வுகள் அடிப்படை என்பதை அவர் உணர்ந்திருந்தார். தனது வாழ்க்கையை மட்டுமன்றி தனது சொத்துக்கள் அனைத்துமே மனித குல அறிவு மேம்பாட்டிற்குப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே வாழ்ந்து செயல்பட்டவர் ஸ்மித்சன். பூவுலகை விட்டு மறைந்தாலும் ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் செயல்பாடுகளால் அழியா புகழ்பெற்று வாழ்கின்றார் ஸ்மித்சன்!

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் _ 119

    உலகைக் காக்கும் பொறுப்பு

    அம்மாணவன் பிறருடன் தோழமையுடன் பழகினான். கவர்ச்சிகரமாக இருந்தான்.

    எங்கள் பள்ளிக்கூடத்தில் நான் பொறுப்பேற்றிருந்த சங்கத்திற்குப் பிறர் ஏகமனதாக அவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தனர். (அதற்காகத்தானே அவ்வளவு சிநேகிதமாக இருந்தான்!) பல சங்கங்களிலும் அவனே தலைவனாக இருந்தான்.

    வருட இறுதியில், மாணவத் தலைவர்களுக்கெல்லாம் சான்றிதழ் அளிக்கும் வைபவம் நடந்தது. நான் கையெழுத்திட்ட சான்றிதழ் அவனுக்குக் கிடைக்கவில்லை.

    குழப்பத்துடன் என்னிடம் வந்தான். “டீச்சர்! நம் சங்கத்தின் சான்றிதழ்..?”

    நான், “நீ எதுவுமே பண்ணவில்லையே?” என்றபோது, அவன் அதிர்ந்தான்.

    பெரும்பாலான தலைவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். பதவி, அது அளிக்கும் அதிகாரம், பெருமை எல்லாம் வேண்டும். ஆனால், பொறுப்பாக நடக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

    செய்யவேண்டுவதைத் தாமே கவனித்துச் செய்பவர்கள்தாம் தலைவர்களாகும் தகுதி பெறுகிறார்கள். வீடு, சங்கம், நாடு – இவற்றில் எதன் தலைவராக இருந்தாலும் சரி, அவர் தன் கடமையைச் சரிவர ஆற்றாவிட்டால் அது ஆட்டங்கண்டுவிடும்.

    கதை

    “எங்கப்பா எப்பவும் குடிச்சுட்டு, கத்திக்கிட்டே இருப்பார். படிச்சதெல்லாம் மறந்து போயிடுது!” என்றாள் என் மாணவி மீனா.

    “ஏதாவது வாசகசாலைக்குப் போய் படி. பள்ளிக்கூடத்திலேயே ஓய்ந்த நேரத்தில் சில தோழிகளுடன் கலந்து படி. அதிகம் பேசாதே!” என்று ஆலோசனை கூறினேன். “அப்பாவை விடு! இது உன் வாழ்க்கை. நன்றாகப் படித்து முன்னுக்கு வருகிற வழியைப் பார்! இல்லாவிட்டால், உன் அப்பாவைப்போலவே ஒருவனை மணந்து, அவனிடம் அடிபட்டுச் சாகவேண்டும்!” நான் கூறியது கடுமையாக இருந்தபோதிலும், மீனா அதில் பொதிந்திருந்த உண்மையைப் புரிந்துகொண்டு ஏற்றாள். தனக்கென ஓர் இலக்கை வகுத்துக்கொண்டாள்.

    `இந்தமாதிரி ஒரு குடும்பத்திலே பிறந்துட்டு, நீயெல்லாம் உருப்பட்டுவிட முடியுமா?’ என்று அக்கம்பக்கத்தினர் பழிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்தாள். பிறர் தன் மனத்தைத் தளர வைப்பது பொறாமையால் என்று புரிந்தபின், அவர்களின் கேலியை அலட்சியம் செய்தாள்.

    சிறு வயதிலேயே நிறைய துன்பம் அனுவித்திருந்ததால், தன் வாழ்க்கை நல்லவிதமாக மாறவேண்டும் என்ற துடிப்பு மீனாவிடம் இருந்தது. பொறுப்புடன் தன் இலக்கை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தாள் அப்பெண்.

    எப்போதும் பிறர் சொன்னபடியே நடந்து, அவர்களை மகிழ்விப்பவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ, தமக்குரிய பொறுப்பை ஏற்க மறுப்பவர்கள். பின், எப்படித்தான் தம் செயலால் விளைந்த வீழ்ச்சிகளுக்கு பொறுப்பு ஏற்காது, பிறரைக் குற்றம் சாட்டுவது!

    வித்தியாசமாக இருந்தால் தனித்துத் தெரிவோம் என்ற பயத்தில், `நான் பயந்தாங்கொள்ளி, சோம்பேறி!’ என்பவர்களுக்கு நிறைய நண்பர்கள் வாய்ப்பதுண்டு. எல்லாருமாகச் சேர்ந்து, தம்மைப்போல் இல்லாதவர்களைக் கேலிசெய்து சமாதானம் அடைவார்கள்.

    கதை

    என் சக ஆசிரியை மேரி, “எனக்கு ஒரே மூச்சில் ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டும். அதிகம் படித்தால் தலைவலி வரும்,” என்று தெரிவித்தாள்.

    `நீ அதிகம் படிப்பதில்லையா?’ என்று நான் அவளைக் கேட்டிருக்கமாட்டேன். அவளுக்கே ஏதோ தாழ்மை உணர்ச்சி — ஆங்கில ஆசிரியையாக இருந்துகொண்டு தான் இவளைப்போல் படிப்பதே இல்லையே, பத்திரிகைகளில் எழுதுவதும் கிடையாதே என்று.

    “ஒரு வரி எழுதி முடித்தவுடன், இதை இப்படி எழுதியிருக்கலாமோ என்று பல முறை திருத்துவேன். அதுதான் எழுதுவதில்லை,” என்று மேலும் கூறினாள்.

    எடுத்த எடுப்பில் நமக்குப் பிடித்தமாதிரி எழுதுவது, (ஏன், எதையும் செய்வது) இயலாத காரியம். தோன்றுவதையெல்லாம் எழுதி முடித்துவிட்டு, அதன்பின் பல முறை திருத்த வேண்டியதுதான்.

    கனவு பலிக்க

    பல ஆண்கள், `நாற்பது வயதுக்குள் நான் லட்சாதிபதி ஆகவேண்டும்,’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், பொறுப்புடன் அதற்கான முயற்சியில் இறங்கமாட்டார்கள்.

    கனவு கண்டால் மட்டும் போதுமா? முதலில், அதை எப்படி நிறைவேற்றுவது என்று யோசிக்க வேண்டும். பல இடைஞ்சல்கள், எதிர்ப்பு, வரத்தான் செய்யும். எதற்கும் தளராது, முயற்சியைக் கைவிடாமல் இருந்தால்தான் வெற்றி கிட்டும்.

    பிற நல்ல பழக்கங்களைப்போல, பொறுப்புணர்ச்சியையும் சிறு வயதிலேயே பழக்கமுடியும்.

    குட்டிக்கதை

    சுமார் பத்து சிறு குழந்தைகளைப் பகல் வேளைகளில் பார்த்துக்கொண்ட இல்லத்தரசி ஸிதி (SITI) தான் ஓயாமல் குனிந்து, நிமிர்ந்து இடுப்பை ஒடித்துக்கொள்ளாமல் இருக்க ஓர் உபாயத்தைப் பின்பற்றினாள். கையை ஒரு முறை ஓங்கி தட்டி, “ஒழுங்குபடுத்து” என்று கூவுவாள்.

    அவள் கண்காணிப்பிலிருந்த என் மகன் எங்கள் வீட்டுக்கு வந்தபின்னரும், தன் விளையாட்டுச் சாதனங்களை எடுத்து வைக்க ஸிதி செய்ததுபோலவே கையைத் தட்டி, “KEMAS!” என்று மலாய் மொழியில் ஆணையிட்டுக்கொள்வான்!

    `குப்பையைக் கண்ட இடத்தில் வீசாதே!’ என்று பள்ளிக்கூடங்களில் விதி இருந்தாலும், சிலர் வீடுகளிலும் அதைப் பின்பற்றத் தவறிவிடுகிறார்கள். `நம் வீடுதானே!’ என்ற தம் பொறுப்பை அலட்சியம் செய்வார்கள். அத்தருணங்களில், மூத்தவர்கள் பரிவு காட்டாது, ஆனால் குரலை உயர்த்தாது கண்டித்தால் பொறுப்பு வரும்.

    வீட்டை மட்டுமல்ல, இப்பரந்த உலகையும் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி மிக்க ஒருவரைச் சந்திப்போமா?

    62 வயதான ராபர்ட் ஸ்வான் (ROBERT SWAN) என்ற ஆங்கிலேயரை உலகம் `பைத்தியக்காரன்’ என்று கேலி செய்தது. யாராவது வடதுருவம், தென்துருவம் இரண்டு இடங்களிலும் நடந்து போவார்களா?

    தென்துருவமான அன்டார்ட்டிகாவில் நாம் அறிந்தபடி நிலம் கிடையாது. பனிப்பாறைதாம். அங்கு வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் வசதியும் கிடையாது.

    அதன்மேல் கால்நடையாக தனது இருபதாவது வயதில், மற்றும் இருவரின் துணையுடன் போனார் ராபர்ட். அதற்கான செலவை (அமெரிக்க டாலர் 50 லட்சம்) சேகரிக்க ஏழாண்டுகள் பிடித்தன.

    900 மைல் நடந்தார்கள். ஒரு நாளைக்கு ஒன்பது மணி என்று 70 நாட்கள்! ஒவ்வொருவரின் முதுகிலும் 180 கிலோகிராம் எடைகொண்ட சாமான்கள்! _77 டிகிரி செல்ஷியஸ் குளிரில் வியர்வை உறைந்துவிடுமாம். (குளிரில் வியர்க்குமா என்ற யோசனை வருகிறதா? உடலை இந்தப் பாடுபடுத்தினால்?) ஒருவருக்குக் குதிகால், இன்னொருவருக்கு கால் பெருவிரல் இரண்டும் சிதைந்துவிட்டன. ராபர்ட்டின் எடையில் 33 கிலோ குறைந்தது. கண்களின் நீல நிறம் வெளிறியது. முகத்தின் சதை பிய்ந்தது.

    கடந்த பதினைந்து வருடங்களில், 3,500 பேரை (இந்தியா. சீனா போன்ற உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்தவர்கள்) 22 முறை இத்துருவங்களுக்கு அழைத்துப்போயிருக்கிறார். பல பெண்களும் இதில் அடங்குவர். பல்வேறு தாவர, விலங்கினங்களைத் தன்னிடத்தே அடக்கியிருக்கும் அழகான அன்டார்ட்டிகாவை ரசிப்பதுடன், அதைக் காக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

    சரி, இதில் பொறுப்பு எங்கே வந்தது, என்கிறீர்களா?

    உலகின் 90% சுத்தமான நீர் அன்டார்ட்டிகாவில்தான் உள்ளது, பனி வடிவில். 4,500 மீட்டர் நீளத்திலுள்ள பனிப்பாறைகள் உருக ஆரம்பித்தால்..?

    இவ்வாறு உலகம் அழியாது காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் ராபர்ட் ஸ்வான். எட்டு ஆண்டுகள் பிரயத்தனப்பட்டு, 1,500 டன் (TON) எஃகு குப்பையை அகற்றி, அதை மறுசுழற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார். (இந்த `குப்பை’ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் விட்டுப்போனது).

    நம்மால் பிறரது நலனுக்கென இப்படியெல்லாம் உழைக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், பிளாஸ்டிக் சாமான்களையும், தகர டப்பாக்களையும் அதற்கென வைக்கப்பட்டு இருக்கும் குப்பைத்தொட்டிகளில் போட்டு மறுசுழற்சிக்கு அனுப்பலாமே!

    தொடருவோம்

    Share
  • முத்திக்கு வித்தாகும், திருவிடைக்கழித் திருப்புகழ்

    –முனைவர் இரா. மதன் குமார்

    முன்னுரை

    அறுமுகச்சிவமாகிய திருமுருகப்பெருமானுக்கு, ‘மாத்ருகா புஷ்பமாலை’ என்னும் திருப்புகழ்ப் பாமாலை சூட்டிச் சிறந்தவர், ‘திருஅருணகிரிநாத சுவாமிகள்’.  ‘மாத்ருகா புஷ்பமாலை கோலப்ரவாள பாதத்தில் அணிவோனே’ என்பது அவர்தம் அருள்உவகைப் பெருவாக்கு. சுவாமிகள் பாடிப்பணிந்த, திருப்புகழ்த் திருத்தலங்கள் அனைத்திலும் முத்தித்தலமாகவும், திருவடித்தலமாகவும் விளங்குகின்ற சிறப்புடையது, திருவிடைக்கழித் திருத்தலமாகும். ‘எத்தலத்தவரும் மருவ முத்தியைத் தரு திருவிடைக்கழி’ என்று இத்திருத்தலத்தைச் சுவாமிகள் பாடியுள்ளார்.  அவ்வகையில், சுவாமிகள் திருவிடைக்கழியினை எட்டுத் திருப்பாடல்களால் போற்றியுள்ளார். அத்திருப்பாடல்களில், திருமுருகன் திருப்புகழும், சுவாமிகளின் பக்திப்பெருக்கும், மாந்தர்தம் அறியாமைக் குறைகளைத் தமது குறைகளாக ஏறிட்டுக்கொண்டுள்ள கருணையும், நமக்கென, அவர் பெருமானிடத்தில் வேண்டிய அருளியல் விண்ணப்பங்களும், தம்மையே ஞானகுருவாகத் தந்து நம்மை ஆட்கொள்கின்ற அருள்நிலையும் அமைந்துள்ள திறத்தை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    ஞானக் கடலாகிய திருவிடைக்கழி

    அறுபடைவீட்டுத் திருப்புகழில், ‘திருத்தணிகைத் திருப்புகழ்’ தனிச்சிறப்பு பெற்றுத் திகழ்கிறது.  சுவாமிகளின் மந்திரமொழிகளாகிய பல திருவருள் ஆணைகளும், அருளியல் விண்ணப்பங்களும் இத்திருத்தலத்துத் திருப்புகழில் இடம்பெற்றுள்ளன. அவ்வகையில், திருப்புகழை ஓதுவதன் அருட்பயனை விளக்குவதாக, ‘இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும்’ (திருப்புகழ்:242) எனச் சுவாமிகள் உறுதிபடச் சாற்றியுள்ளார்.  அவர் உரைத்தவகையில், திருப்புகழை உண்மையுடன் ஓதிப் பயன்பெறுவதற்கு, உற்ற குருநாதரின் அருள்துணை நாளும் இன்றியமையாததாகும். அப்பெருநோக்கத்தின் பொருட்டு, நாம் பற்றி உய்யவேண்டிய பெருமானாக, சுவாமிகள் நமக்கு, திருவிடைக்கழிப் பெருமானைக் காட்டியருளியுள்ளார்.  இத்தகைய அருள்சிறப்பினை உணர்ந்தே ஒன்பதாம் திருமுறை அருளாளர்களில் ஒருவராகிய சேந்தனாரும் மிகுந்த அருள்விருப்புடன், திருவிடைக்கழிப் பெருமானைப் போற்றிப் பணிந்துள்ளார்.  அறியாமை மிக்க ஆருயிர்கள் அனைத்துக்கும் முத்தி தரவல்ல வித்தகத் துறையோனாக, ஞானக்கடலாகத் திருவிடைக்கழிப் பெருமான் விளங்கவல்ல அருளனுபவத்தைச் சுவாமிகளும்,

    “வித்தகத் துறையோனே
    தருமருவு எத்தலத்தவரும் மருவ முத்தியைத்
    தருதிருவிடைக்கழிப்… பெருமாளே” (திருப்புகழ்: 795) எனக் குறித்தருளியுள்ளார். 

    அடியும் – நடுவும் – முடியும்:

    திருப்புகழ்த் திருத்தலங்களில், ‘அறுபடைவீடுகள்’ என்னும் அருள்தொடர்புத் தலவரிசை  போல விளங்குபவை, திருவிடைக்கழியும், சிறுவாபுரியும், திருப்போரூருமாகும். திருமுருகப்பெருமானின் திருவடி முதலாக, திருமுடி ஈறாக அமைந்தவையாக இத்திருத்தலங்கள் போற்றப்பெறுகின்றன. திருக்கடவூருக்கு அருகே அமைந்துள்ள இத் திருத்தலத்தின் கருவறையில், சிவலிங்கத் திருமேனிக்கு முன்பாக, திருமுருகன் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது, ‘தாமே அறுமுகச் சிவம்’ என்பதனை நமக்கு உணர்த்தவே எனலாம்.

    “கொந்துவார் குரவு அடியினும் அடியவர்
    சிந்தை வாரிஜ நடுவினும் நெறிபல
    கொண்ட வேதநன் முடியினும் மருவிய குருநாதா”  (திருப்புகழ்:268) இத்திருத்தொடர்களில், ‘கொந்துவார் குரவுஅடி’ என்பது, ‘தேன் சிந்துகின்ற திருக்குரா மரத்தின் அடி’ என்பதாகிய திருவிடைக்கழியைக் குறிக்கும். ‘திருவிடைக்கழிப் பெருமானுக்கு, அடியவர்களின் சிந்தையெனும் தாமரையே இருப்பிடம்’ என்பதனை உணர்த்த, ‘சிந்தை வாரிஜ நடுவினும்’ எனக் குறித்தருளியுள்ளார். பெருமான், அடியாரின் சிந்தையில் இடம்கொண்டு, மெய்ஞ்ஞானம் அருளி, ‘வேதப்பொருளாகத் தானே விளங்கவல்ல பெருந்திறத்தையும் உணர்த்தியருள்வான்’. அதனையும் அறிவுறுத்தவேண்டி, ‘வேதநன் முடியினும் மருவிய குருநாதா’ எனக் குறித்துள்ளார். இவ்வாறு,   திருவிடைக்கழிப் பெருமானின் திருவடிகளில் சரண்புகுந்தால், அவன் நமது உள்ளத்தாமரையில் நீக்கமற நிறைந்திருந்து, வேதப்பொருளாகிய ஓங்காரமாகவும் தானே விளங்குகின்ற அருந்திறத்தையும் உணர்த்தியருள்வான்’ என்பது சுவாமிகளின் அருளனுபவத் திருவாக்கு எனலாம்.

    குறை உயிர்க்கும் குருவாகின்ற சுவாமிகள்

    உயிர்களுக்கு, மெய்ஞ்ஞானப்பேற்றினை பெருமானே குறைவின்றி வழங்கியருள்கின்றான். அதற்கேற்ப ஞானகுரு வாய்ப்பதும் உயிரின் பரிபக்குவத்துக்கு ஏற்பவே நிகழ்கிறது.  ‘பிரணவப்பொருளாகிய பெருமானே ஊழிகள்தோறும் திருவிடைக்கழியில் குருவாக வீற்றிருக்கின்றான். பல்லூழிக் காலங்களிலும் தோன்றுகின்ற அரனும், அரியும், பிரமர்களும், தமது முந்தை வினைப்பயனாகிய பூசனைப்பேற்றினால்,  திருவிடைக்கழிப் பெருமானைக் குருவாகப் பெற்றுச் சிறக்கின்றனர். பெருமானும் அவர்களுக்கு உவகையுடன், பிரணவப்பொருளாகிய தனது பரத்துவத்தை உணர்த்தியருள்கின்றான். அக்கருணைகூர் அறுமுகனே, பாண்டியநாட்டில் சைவ நீதியை நிலைநாட்ட, திருஞானசம்பந்தரெனவும் எழுந்தருளினான்’ என்று சுவாமிகள் பாடியுள்ளார்.

    “அலை நெருப்புஎழ வடவரை பொடிபடச் சமணர்கள் குலம்
    அணி கழுப்பெற நடவிய … மயில்வீர
    அரன் அரிப் பிரமர்கள் முதல் வழிபடப் பிரியமும்வர
    அவரவர்க்கு ஒரு பொருள் புகல் … பெரியோனே” (திருப்புகழ்: 799) எனச் சுவாமிகள், மேற்கண்ட திருப்புகழில் குறித்தருளியுள்ளவாறு,  ஞானகுருநாதனாகிய திருவிடைக்கழிப்  பெருமானின் பரத்துவத்தை உணர, சுவாமிகளின் கருணையுள்ளம் வழிகாட்டுகிறது. 

    குருவாகி வந்த பெருமான்

     பெற்ற மனிதப் பிறப்புக்குரிய பேரறிவின் பயனாகப் பதிப்பொருளை உணர இயலாத நமது அறியாமையினைச் சுவாமிகள்,

    “அனல்அப்பு அரிபுக்க குணத்ரயம் வைத்த
    அடர்பொய்க் குருதிக் … குடில்பேணா
    அவலக் கவலைச் சவலைக் கலைகற்று
    அதனிற் பொருள்சற்று … அறியாதே”   (திருப்புகழ்: 792) எனக் கலங்கிப் பாடியுள்ளார்.

     பல அறிவு நூல்களைக் கணக்கில்லாமல் கற்றும், அதன் மெய்ப்பொருளை அறிய முயலாமல், குறைஅறிவால் துயரடைவதே மக்களின் ஞானத்தேடலாக முடிகிறது. இத்தகைய அறியாமையாகிய அவலக்குழியிலிருந்து மீள்வதற்கு வகை தெரியாமல், அறிவில் சிறந்தோர் எனச் சிலரை நாம் நாடுகிறோம். அவர்கள், பதிஞானத்தால் பக்குவமுற்றவர்களாக இல்லை. வீணே பழங்கொள்கைகளைப் பிதற்றுவதன்றி, எள்முனை அளவு ஞானத்தையும் பெற்றுத் தருவதில்லை. அவர்களது  வழிகாட்டுதலால், அறிவுக்கண் திறக்கும் என்ற நம்பிக்கையும் என்றும் மெய்யாவதில்லை. அவர்களது பழங்கொள்கைப் பிதற்றலால், அறிவு துருப்புபோல் இளைத்து, மேன்மேலும் துன்புறவே நேருகிறது.

    “படுகுழி புக்கு இனி தேறும் வழிதடவித் தெரியாது
    பழமை பிதற்றிடுலொக … முழுமூடர்
    உழலும் விருப்புடன் ஓது பாசவலைக் கலைதேடி
    யொரு பயனைத் தெளியாது”        (திருப்புகழ்: 796)  எனத் தெளிவில்லாமல், ஞானகுருவைத் தேடிக் கலங்குகின்ற நமக்கு, தாமே ஞானகுருவாகி இரங்கியருள்பவராகத் திருவிடைக்கழித் திருப்புகழைச் சுவாமிகள் தந்துள்ளார்.

    குருவாகி வந்தருள்கின்றார்:

    உயிரின் பரிபக்குவம், வினைவலிமையினை மாய்க்கிறது. ‘பெருமானே பரம்பொருள்’ என்று உணர்த்தவல்ல நற்குருவைக் காட்டியருளி, மெய்ஞ்ஞானப்பேற்றுக்கும் ஆட்படுத்துகிறது. வினைவலிமையால், நம் அறிவானது, நற்குருவைக் கண்டடைகின்ற பேரறிவாக விரிவடைவதில்லை. ‘தம்மானை அறியாத சாதியார் உளரே’ என்று பாடிய சுந்தரர்பெருமானின் திருவாக்கு, நமக்கு மிகவும் பொருத்தமுடையதாகும். அன்று அவர், சித்தவடமடத்தில் தம்மைத் தாமே நொந்தழுத நிலையில், திருவருளே அவருக்குக் கண்ணாக இருந்து சிவத்தைக் காட்டியருளியது. அதுபோன்றே, ஊனக்கண்கொண்டு, சிற்றறிவால் சிவத்தை உணரஇயலாத நம்மைப் போன்றவர்களுக்கும் குருவருளே கண்ணாக விளங்கிக் காட்டியருளவேண்டும். அத்தகைய அருள்நோக்கத்துடன் சுவாமிகளே நமக்கு ஞானகுருவாக இரங்கியருள்கின்ற வகையில், நமது அறியாமைக் குற்றங்களையும் தன்னுடையதாக ஏறிட்டுக்கொண்டு, பெருமானிடத்தில் பல அருளியல் விண்ணப்பங்களைப் பணித்துள்ளார்.

    நற்பதம் காட்டுகின்றார்

    நமது ஐம்புலச் சேட்டைகள் நீங்கி, சிந்தையாலும், சொல்லாலும், செயலாலும், பெருமானது திருப்புகழில் ஒன்றுகின்ற ஆன்மபலத்தினைத் திருவிடைக்கழிப் பெருமானிடத்தில் வேண்டுகின்றார்.

    “உனகமலப் பதநாடி உருகி உளத்து அமுதூற
    உனது திருப்புகழ் ஓத … அருள்வாயே”          (மேலது பாடல்)

    என்பது அவர்தம் விண்ணப்பம். பதிஞானமாகிய பேரறிவு வாய்த்தாலும், நமது ஆணவமல வாசனை, நாம் உணர்ந்த இறைபொருளை, எடுத்த மொழியாலும், ஏதுக்களாலும் சோதித்தறிய முற்படுகின்ற அறியாமைக்கே தலைப்படும். ஞானப்பொருளாகிய பெருமான், தன்னை உணர்ந்தாரின் கல்மனத்தையும் கரையச் செய்கின்ற அருளே நிலையாக விளங்குபவன். அவனை அன்புக்கண்கொண்டு பார்ப்பவர்தம் உள்ளத்தை உருக்கி, அதில் ஊற்றென எழுகின்ற அருள்வெள்ளமென விளங்குபவன். எனவே, நமது ஞானத்தேடலின் படிநிலையில், அறிவால் அல்லாமல், அன்பால் பெருமானைத் தேடுகின்ற நெறியைச் சுவாமிகள் மேற்கண்ட திருப்புகழ் பாடலில் அறிவுறுத்தியுள்ளார்.

    குற்றமில்லாத பேரறிவுக்கு வழிகாட்டல்:

    சுவாமிகளையே ஞானகுருவாகப் பெறினும், நமது முந்தை வல்வினை அவரால் உணர்த்தப்பெறுகின்ற இறைபொருளை முழுமையுற இயலாதவண்ணம், அறியாமையாகிய மறைப்பினையே மேன்மேலும் விளைவிக்கும். இதையே சான்றோர், ‘மலமறைப்பு’ என வழங்குவர். மலமறைப்பாகிய அறியாமையை நீங்கி, பெருமானின் திருவடிகளில் சரண்புகுவதாகிய ஞானத்தைச் சுவாமிகள், ‘புகரில் புத்தி’ (குற்றமில்லாத பேரறிவு) எனக் குறிக்கின்றார்.

    குற்றமில்லாத நிறைஅறிவு, பெருமானை உணர்ந்து, அவனை அணுப்பொழுது அகலாது பற்றியிருக்கச் செய்யும். அவ்வறிவு வாய்க்கச் செய்தலும், அதன்வழி அடியவரை ஆட்கொள்ளுதலும், பெருமானின் அறக்கருணை எனப்படும். அதற்கு, ‘வள்ளி சன்மார்க்கம்’ குறியீடாகும். அடாதவற்றைச் செய்தொழுகுவோரையும் பெருமான், அடியவராக ஆட்கொள்ளத் தவறுவதில்லை. அவர்களையும் பெருமான், மறக்கருணையால் ஆட்கொள்வதனைத் திருவிடைக்கழித் திருப்புகழில் சுவாமிகள் அருளிச்செய்துள்ளார். சூரர்கள், நிகரில்லாத அனைத்து வகைப் பெருவாழ்வையும் பெற்றிருந்தனர். ஆயினும், அவர்கள்தம் அறிவு, பெருமானை உணர்கின்ற பேரறிவாக விளங்கவில்லை. அத்தகைய அவலம், நம்மனோர்க்கு நிகழாத வண்ணம், குற்றமில்லாத பேரறிவை வாய்க்கச் செய்வதாகிய, ‘வள்ளி சன்மார்க்கத்தையும், சூரன் அருள்பெற்றதையும் திருவிடைக்கழித் திருப்புகழில் உரைக்கின்றார்.

    வள்ளி சன்மார்க்கம்:

    திருவிடைக்கழித் திருப்புகழில், வள்ளியம்மையைச் சுவாமிகள், ‘குறத்திரு’ எனக் குறித்தலால், ‘அவள் உள்ளமும் அழகியவள்’ என்பது பெறப்படும். பெரும்பெயர் முருகன் என்னும் அழகனும், அடியாரின் உள்ளத்தாமரையினையே தனக்கு இடமாகக் கொள்கின்றான். இதனை உணர்த்தவே சுவாமிகள், திருவிடைக்கழிப் பெருமான், ‘அடியார்தம் சிந்தை வாரிஜ நடுவிலும் குடிகொண்டவன்’ என்றருளிச் செய்தார். இதனைக் குறித்தே மணிவாசகரும், ‘சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை’ என்றருளினார். வேடுவர்தம் குடிவாழ்க்கை வாய்த்தபோதிலும், வள்ளிக்குறத்தி, தன்னை உணர்ந்தவளாக, பெருமானை மட்டுமே தனது சித்தத்துள் நிறைத்தவளாக, நிறைதவத்தினை மேற்கொண்டாள். அவளது பக்குவத்தினை நோக்கியே பெருமான், தானே இரங்கி அவளை நாடித் தினைப்புனத்திற்கு வந்தான்.

    “தினை வித்தின நற்புன மறத்தியை
    தழுவு பொற்புயத்…திருமார்பா’            (திருப்புகழ்: 792)

    என்பது, திருவிடைக்கழித் திருப்புகழ். இங்கு,  ‘புனம்’ என்பது, விளைச்சல் தருகின்ற வயல்வெளியைக் குறிக்கும். மானுடராக உரு தாங்குகின்ற அனைவர்க்கும், அவர்தம் உள்ளமே பக்திப்பயிர் வளர்க்கின்ற நல்வயலாகவும், உடம்பே அதைக் காக்கின்ற வேலியாகவும் அமைகின்றன. பெருமானைப் பெற்றுய்ய வேண்டும் என்கின்ற மெய்யுணர்வே, ஞானப்பயிருக்குரிய உரமாகவும் அமைகின்றது. வள்ளிக்குறத்தி தன் உள்ளமாகிய வயல்வெளியில், அன்பென்னும் பக்திப்பயிரினை நாளும் தழைத்து வளரச்செய்தவள். மாறாக, ‘ஆணவம்’ என்கின்ற நச்சுமரமாக நாளும் ஓங்கி வளர்ந்தவன், சூரன். ‘தாம் வளர்த்ததோர் நச்சு மரமாயினும் கொல்லார்’ என்பதுபோல, பெருமானும் சூரனுக்கு இரங்கியருளினான். சூரனைத் தனது திருவடியில் பணியச்செய்த பெருமான், வள்ளிக்குறத்தியின் உயர்ந்த அன்பின் பக்குவத்தை  நமக்கு உணர்த்தவேண்டி, அவளது திருப்பாதங்களில் தான் பணிந்ததாக நயமுறப் பாடியுள்ளார்.  “தினைவேடர் காவல் தங்கு மலைகாடெலாம் உழன்று, சிறுபேதை கால்பணிந்த குமரேசா’ என்பது திருப்புகழ் (பொதுப்பாடல் வரிசை-மனநூறு கோடி). 

    வள்ளியாகி, பேரின்பக்காதல்:

    வள்ளி சன்மார்க்கத்தைப் பேரின்பக் காதலாகக் குறிக்கவேண்டிச் சுவாமிகள், தானே வள்ளிக்குறத்தியின் நிலையினை ஏற்றுப் பாடியுள்ளார். திருவிடைக்கழிப் பெருமானும், தானும் மட்டுமே இருந்து  துய்ப்பதாகிய பேரின்பக் காதலைக் காட்டி, உலகியலில் நமது சிற்றின்பபோகத்தை மறக்கச்செய்கின்றார். வள்ளிக்குறத்தி,  திருவிடைக்கழிப் பெருமானிடத்தில் மாலை வேண்டி ஊடல் கொள்கின்றாள்.

    ‘பெருமானே!, உனது அடியவரின் துயரினை நீக்குவதற்காகவே, வீரவேல் தாங்கி, மயில் மீதிலேறி,  ஓடோடி வருபவன் நீ; உனது மென்மையான உள்ளத்தின் குறியீடாகவே, நீயும் மென்மையான கடம்ப மலர் மாலையினை மிக விரும்பிச்  சூடிக் களிக்கின்றாய். கடம்பமாலை சூடி, குராமர நிழலில் உறைகின்ற நீயே, எனக்குப் பேரின்ப மையலை ஊட்டினாய். நோய் தந்த நீயே அந்நோய்க்கு மருந்தும் ஆவாய். இதனை அறியாத என் பெற்றோரும், உற்றோரும் மற்றோரும் உன்னைப் பலவாறு நொந்துரைப்பதனை கேட்டு என்னால் பொறுக்க இயலவில்லை. அதனால், எனது பேரின்பக்காதல் நோயினைத் தீர்க்கவேண்டி, நீயே மயில்மீது உடன் வந்து அருளுவதே முறையாகும்;  ஆயினும், எனது வல்வினையால் நீ எனக்கு அருளக் காலம் தாழ்கின்றவேளையில், நீ சூடிக் களைந்த கடம்பமலர் மாலையினையாவது தந்து என்னைக் காக்கவேண்டும்’  என்று சுவாமிகள்,  தலைவி நிலையிலிருந்து பாடியுள்ளார்.

    “மருக்கு லாவிய மலரணை … கொதியாதே
    வளர்த்த தாய்தமர் வசையது… மொழியாதே
    கருக்கு லாவிய அயலவர் …  பழியாதே
    கடப்ப மாலையை இனிவர … விடவேணும்
    தருக்கு லாவிய கொடியிடை … மணவாளா
    சமர்த்தனே மணிமரகத … மயில்வீரா
    திருக்கு ராவடி நிழல்தனில் … உறைவோனே
    திருக்கைவேல் வடிவழகிய … பெருமாளே” (திருப்புகழ்: 798)

    மேற்கண்ட பாடல், வள்ளிக்குறத்தி, திருவிடைக்கழிப் பெருமானைப் பெற்று இன்புறுவதற்கு, ‘கடம்ப மாலை’ கருவியாக வேண்டுவதைக் குறிக்கின்றது.   வள்ளிக்குறத்தியின் வகையில் நின்று நாமும் திருவிடைக்கழிப் பெருமானிடத்தில்,  என்றும் அகலாத அருள்காதல் கொள்ளவேண்டியே, சுவாமிகள் மேழும் ஏழு திருப்புகழ்ப் பாடல்களை இத்திருத்தலத்துக்கு அருளியுள்ளார். அவை நமது அன்றாட வாழ்வியல் மந்திரங்களானால், உலகியலாகிய சிற்றின்பநாட்டமும்,  அண்டங்களையும் கடந்த பேரளவுடைய, சொல்லுக்கும் அடங்காத நம் சிற்றின்பச் சூரத்தனங்களும் நம் சிற்றறிவுக்கு விளங்கும். நமது சூரத்தனங்கள் அகன்று நன்னிலையினை வாய்க்கச்செய்யவே, ‘ஞானச்சூரியனாகிய பெருமான், சூரன் முதலானோரின் அறியாமைச் செயல்களை, ஞானவேல் கொண்டு அடர்த்தருளிய திறத்தையும் சுவாமிகள் குறித்துள்ளார். 

    ஞானவள்ளியும் அகந்தைச் சூரனும்

    வள்ளிக்குறத்தியும் நம்மைப் போன்றே, உடம்பெடுத்து மண்ணுலகில் வாழ்ந்தவளே. அவள், உள்ளமாகிய வயல்வெளியில், குறிஞ்சிக் கிழவனுக்கு உகப்பாகிய தினைப்பயிரை விளைவித்தவள். ஐம்புல வேலியால் அதனை உரியவாறு காப்பதும், அதனைப் பெருமானுக்குப் பணிப்பதும், அவளது பெருநோக்கமாக  இருந்தது. அவள், சித்தத்துள் குறிஞ்சிக்கிழவனையே நிறைத்திருந்ததால், அவளது செயல் அனைத்தும், பெருமானுக்கு உரியவையாகவே அமைந்தன. அவை பதி புண்ணியங்களாக விளைந்து, அவள் விரும்பியவாறே, பெருமானைப் பெறச்செய்தன. குறவரால் வளர்க்கப்பட்ட வள்ளிக்குறத்தி, தனது வாழ்வின் பெருநோக்கத்தைத் தெளிவுற அறிந்திருந்தமைக்கு, அவளது முந்தை வினைப்பயனே துணையாக விளங்கியது.

    நாமும், நமது முந்தை வினைப்பயனின் துணையினாலேயே பெறுதற்கு அரிய பிறப்பாகிய மனிதப்பிறப்பினைப் பெற இயன்றது’ என்பதனை உணர இயலவில்லை. இப்பிறப்பின் பெரும்பயன், ‘செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே’ என்ற மெய்யுணர்வுக்குத் தலைப்படுவதுமில்லை. நம்மிடமுள்ள அறியாமையின் குறியீடாகவே சூரன் வாழ்ந்திருந்தான். வெற்றிப் பெருவாழ்வு வாழ்கின்ற பேறு வாய்த்திருந்தபோதிலும், அதன் பயன், பிறப்பினை வெற்றி கொள்வதாகிய முத்திப்பேற்றினை விரைவில் பெற்றுய்வதற்கு அவனது நல்லறிவு துணைசெய்யவில்லை. அதனாலேயே, தாயினும் சாலப்பரிகின்ற பெருமான் அவனை ஆட்கொள்வதற்கு, பதினெட்டு ஆண்டுகள் போரிட்டார். அங்கு, சூரனின் ஆணவப்போர் மாய்ந்து, பெருமானின் அருள்போரே வெற்றிகண்டது.

    வள்ளிக்குறத்தியைப் போன்று, சூரனும், மனிதனாக உடல்தாங்கிய போதும், உள்ளத்தில் பெருமானைக் குடியேற்ற அவன்பால் அன்பென்னும் அறச்சிந்தனைச் சிறிதும் இல்லை. அதனாலேயே அவனால், ‘அறுமுகச்சிவமே தன்னை ஆட்கொள்ள வந்துள்ளது’ என்பதனை உணர இயலவில்லை. அவனது அறிவளவிற்கு எட்டுகின்ற வகையில், மறக்கருணையால் பெருமானும் அவனை ஆட்கொண்டருளினார். அப்பெருமானே, திருவிடைக்கழியிலும் எழுந்தருளியுள்ளதாகச் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.

    “நெருக்கியே வரும் அவுணர்கள் குலமற
    உறுக்கியே மயில் முதுகினில் விசைகொடு
    நிலத்திலே சமர்பொருதவர் உயிர்பலி … கொளும்வேலா’ (திருப்புகழ்: 797)

    என்று பாடி, சூரனைப் போன்று அறியாமை மயக்கில் ஆட்படாமைக்கு, பெருமானது திருவடிகளில் நம்மைச் சுவாமிகள் சரண்புகுத்துகின்றார்.

    “முடுக்கியே உனது இருகழல் மலர்தொழ … அருள்தாராய்”     (மேலது பாடல்)

    மேற்கண்ட தொடரில், ‘முடுக்கி’ என்பது விரைவாக எனப் பொருள்படும். சூரனுக்கருள நீண்ட பதினெட்டாண்டுகள் அமைந்ததைப் போன்று, இம்மண்ணுயிர்களுக்கு அருளவும் மிக நீண்ட காலம் அமைவதே அவ்வவ் உயிர்களின் விதியாயினும், அதனை மதியால் வெல்கின்ற பேறாக, ‘உடனே உனது திருவடியைப் பணிகின்ற பேற்றினை வழங்கியருள்க’ என்று பெருமானிடத்தில் நமக்காகச் சுவாமிகள் பரிந்துரைக்கின்றார்.

    அறஉள்ளம் வேண்டும் எனல்:

    பெருமானை உணரத்தக்க அன்புக்கு, அறமே அடிப்படை. அதனால், அடியாரின் அறவாழ்க்கையையே, பக்திவாழ்வியலாகச் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். திருவிடைக்கழிப் பெருமானின் திருவடித்தாமரைகளை வேண்டுகின்ற அடியார்க்கு, பிறர் துயர் தீர்த்தலாகிய அன்புள்ளமே அடிப்படைத் தேவையாகும். ‘தமக்குப் பெருமான், பெறற்கரிய திருவருளைத் தந்தருளவேண்டும்’ என்று சிந்திப்போர், தம்மால் இயன்றதைப் பிறருக்குத் தருகின்ற அன்புள்ளம் கொண்டவராக இருத்தலைச் சுவாமிகள் பிற தலங்களின் திருப்புகழிலும் வலியுறுத்தியுள்ளார்.

    தம் பொருளைப் பிறருக்கு ஈயாத கீழோரின் அவலத்தைத் தம்பால் ஏறிட்டுக்கொண்டு, திருவிடைக்கழித் திருப்புகழில் சுவாமிகள் பாடியுள்ளார். நெறியல்லாத நெறிகளில் பொருளைத்தேடி, இன்பங்களில் தலையாயது பெண்ணின்பமே என நாடி, ஓடியோடி இளைக்கின்ற அறியாமை நீங்கி அறவாழ்வு வாழ்வதற்குத் துணையாகத் திருவருளை வேண்டுகின்றார்.

    “இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும்

    அற்ற எனக்கு”…………………………………………………
    …………………….ப்ரபுத்துவம் உற்று…………………………….
    ……சளப்பம் இடும் இப்பவக் கடலைக் கடக்க இனிக்
    குறித்து இரு பொன்கழல் புணையைத் தருவாயே”                 (திருப்புகழ்: 793)

    என்ற தொடர்களில், உயர்வில்லாத வகையில் உலகியலிலேயே உழன்று, தாமே தனித்தலைவர் என்ற செருக்குடன் வாழ்ந்து, இதுகாறும் இப்பிறப்பில்  துன்பத்தையே  சேர்த்துள்ளோம்’ என்று கழிவிரக்கம் கொள்கின்ற மனிதர்களின் அறியாமையினை, ‘ப்ரபுத்துவம் உற்று, சளப்பம் இடும் இப்பவக் கடல்’ என்று குறிக்கின்றார். ‘துன்பம் தருவதாகிய உடம்பைப் பேணி, நாளும் அதனை வளர்ப்பதற்கே தீனியிட்டு, உடல் கொண்ட நோக்கத்தை உணர்கின்ற அறிவற்று, நாயினும் கீழாக வாழ்கின்ற வாழ்க்கை’ என மனித வாழ்க்கையின் அவலத்தைச் சுட்டுகின்றார்.

    “பசிபடு நிணச்சடக் … குடில் பேணும்
    உடலது பொறுத்த அறக்கடை பெறு பிறப்பினுக்கு
    உணர்வுடைய சித்தமற்று … அடிநாயேன்
    உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து
    உனது தமர் ஒக்க வைத்து … அருள்வாயே’     (திருப்புகழ்: 795)

    பிறப்பின் பெருநோக்கத்தினை உணராத அறியாமை, பகுத்தறிவுபெற்ற மனிதப் பிறப்புக்கு அறமன்று; ஆதலால், அத்தகைய பேரறிவுக்குத் தலைப்படுவதற்குரிய சூழலாக, அடியார்களுடன் இருத்தலாகிய பெரும்பேற்றினைப் பெற்றுய்ய சுவாமிகள் வழிகாட்டுகின்றார்.

    முடிவுரை

    திருப்புகழை வாழ்வியல் நெறியாக உடையவர்தம், திருவடிகளைத் தாம் வணங்குவதாகச்சுவாமிகள் குறித்துள்ளார். ‘உனைப் பலநாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார்தம் குளிமேவி உணர்த்திய போதம் தனைப் பிரியாது, ஒண்பொலச் சரணானும் தொழுவேனோ (திருப்புகழ்: 249)’ எனப் பாடி, திருப்புகழை ஓதுகின்ற குருநாதரின் அறவுரைக்குத் தம்மை ஆற்றுப்படுத்துமாறு முருகப்பெருமானிடம் பணிகின்றார். மேற்கண்ட இத்தொடரானது, பிறப்பினைக் கடந்த சுவாமிகள் நம்மைப்போன்ற ஆருயிர்களின்பால் கொண்ட கருணையால் விளைந்ததாகும். அக்கருணையின் வெளிப்பாடே,

    “புகரில் புத்தியுற்று அரசு பெற்றுறப்
    பொலியும் அற்புதப் … பெருவாழ்வும்
    புலன் அகற்றிடப் பல விதத்தினைப்
    புகழ் பலத்தினைத் … தரவேணும்”         (திருப்புகழ்: 794)

    என்றமைந்த திருவிடைக்கழித் திருப்புகழாகும். இத்திருப்பாடல், ஐம்புலச் சேட்டைகள் மாயவும், யாவர்க்கும் தலைவராகி, கற்பகப் பெருவாழ்வு வாய்க்கவும், பதிஞானம் நிலைக்கவும் ஓதவேண்டியதாகும். இத் திருத்தலத்துக்குரிய பிற திருப்பாடல்களும் நமது வாழ்வியல் நெறியானால், சொல்லுக்கும் அடங்காத நம் சூரத்தனங்கள் மாயும். வள்ளிக்குறத்தி கொண்ட அயராஅன்பு நமக்கும் வாய்க்கும். அவ்உயர்ப்பேற்றினால், திருக்குராவடியில் உறைகின்ற பெருமானின் திருத்தாள் நிழலுற்று உய்யலாம்.

    (மேற்கோள் பாடல் எண்கள், WWW.KAUMARAM.ORG இணையத்தில் உள்ளபடி குறிக்கப்பட்டுள்ளன.)

    ஆய்வுத் துணைநூல்களும் இணையமும்: 

    1.ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மாலை,
    அடியார் திருக்கூட்ட இறைபணி மன்றம்., சென்னை.
    கிரி ட்ரேடிங் ஏஜென்ஸி, சென்னை. 15-ஆம் பதிப்பு: ஏப்ரல் – 2014.

    2. இணையம்: WWW.KAUMARAM.ORG

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,
    கோயம்புத்தூர் – 21.

     

     

    Share
  • தமிழில் முதல் சமையல்கலை நூல்

    -முனைவர் இரா.வெங்கடேசன்

    தமிழில் சமையல்கலை தொடர்பான பல நூல்கள் இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன. சைவம், அசைவம், குழம்பு, பருப்பு வகைகள், சிற்றுண்டி, காய்கறி உணவு, அசைவத்தில் சிக்கன், மீன், ஆடு, கடல் உணவுகள் என்று தனித்தனியாக பல நூல்கள் விதவிதமான சமையல் நுணுக்கங்களை மையமிட்டு எழுதப்பட்டுள்ளன. இவ்வளவு உணவு வகைகளை சமைப்பதற்குத் தனித்தனியாக நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இதற்கெல்லாம் அடிப்படை நூலாக இருக்கும் நூல் இந்துபாக சாஸ்திரம் எனும் நூலாகும். முதற்பதிப்பு 1891ஆம் ஆண்டு வெளிவந்து இரண்டாயிரம் பிரதிகள் விற்றுதீர்ந்தன. இரண்டாம் பதிப்பு 1900 ஆண்டில் வெளிவந்துள்ளது. இந்நூலை சேலம் தொ.க. இராமசந்திரன் எழுதியுள்ளார். தமிழில் சமையல்கலை குறித்து எழுதப்பட்ட முதல் நூலாக இதனைக் கொள்ளலாம்.

    தமிழ்ச் சமூகத்தில் உணவு சமைத்தல் என்பதனை தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்களில் முழுமையாகக் காணமுடிகிறது. தமிழ்ச் சிந்தனை மரபில் குறிஞ்சியில் உணவுகளைச் சுடுவதும் முல்லையில் வேகவைத்தலும் நெய்தல் மருதத்தில் பொரித்தல் சமைத்தல் எனும் வகையில் பண்பாட்டு வளர்ச்சி காணப்பெறுகிறது. தமிழ் இலக்கியங்கள் விலங்குகள் உணவுக்கும் மனிதர்களின் உணவுக்கும் வேறுபாட்டைக் காட்டுகின்றன. விலங்குகள் உண்ணும் உணவு சமைக்கப்படுவதன்று. மனிதர்களோ உணவைச் சமைக்கின்றார்கள். சமையல் கண்டுபிடிப்பே பண்பாட்டின் தோற்றத்திற்கு மிக முக்கியமான அடித்தளமாகும். (பக்தவத்சலபாரதி 2011:27 இந்தப் பண்பாட்டின் முழுமையைச் சங்க இலக்கியங்கள் முழுமையாகப் பதிவு செய்துள்ளன. சங்க இலக்கியங்களில் பதிவு பெற்றுள்ள உணவு சார்ந்த மரபுகளை அறிந்துகொள்வதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அடித்தளப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.

    சங்க இலக்கியம் வழியாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஐந்து நிலங்களில் சமைக்கப்பட்ட உணவு குறித்த பதிவுகளின் வழியாக உணவு சமைக்கப்பட்ட வரலாற்றினை அறிந்துகொள்ள இயலும். கிழங்கு, தேன், வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் என்பவற்றில் உணவு வரலாறு தொடங்குகிறது. இறைச்சிதான் முதலில் சமைக்கப்பட்ட உணவாக இருக்கலாம். காட்டுத்தீயில் அகப்பட்டுக் கருகிய விலங்குகள் உணவாகப் பயன்படுத்தப்பட்டதன் விளைவே சமையலும் நெருப்பின் பயன்பாட்டை உணர்ந்தமையும் எனலாம் (ஞா.ஸ்டீபன் 2017:34). இறைச்சியை நெருப்பில் நேரடியாகச் சுடுவதே தொன்மையான சமையல் முறையாக இருந்திருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து சமைக்கும் முறை அறிமுகமாயிருக்க வேண்டும்.

    தமிழ்ச் சமூகத்தின் உணவுச் செழுமை என்பது உணவு வரலாற்றில் முக்கியமானதாகும். பசி இயற்கையானது. ருசி என்பது மனித குலத்தின் தேடல். இந்தக் காலம்வரை உலகில் புழங்கும் அத்தனை விதமான உணவு வகைகளும் அந்தத் தேடலின் விளைவே. எண்ணி எழுதவோ பட்டியலிடவோ முழுமைப்படுத்தவோ வழியே இல்லை. ஆயிரம் பல்லாயிரம் விதமான உணவு வகைகள் பிராந்தியம் தோறும் காலந்தோறும் உதித்துக்கொண்டே இருக்கிற விஷயம். மனிதகுலத்துக்கு மட்டுமேயான கலையுணர்வு என்பது உணவில்தான் தொடங்குகிறது (பா.ராகவன் 2012:251). எனவே உணவு குறித்த தேடல்கள் தமிழ்ச் சமூக வரலாற்றில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் உணவு வரலாறு தனித்தன்மை கொண்டதாகவே உள்ளது.4

    உணவுப் பண்பாட்டில் தனித்தன்மை கொண்ட தமிழ்ச் சமூகத்தின் உணவுப் பழக்க வழக்கங்களைப் பதிவு செய்தல் மிக முக்கியமானதாகும். ஏனென்றால் நகர்ப்புறமயமாதல், தொடர்புச்சாதனங்களின் விளம்பரத்தன்மை, பொருளியல் வளர்ச்சி, பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாகக் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்குள் தமிழர்களின் உணவுமுறை மிகப்பெரிய அளவில் மாறுதல் அடைந்திருக்கிறது. நிகழ்கால உணவுப் பழக்க வழக்கங்களில் உடல்நலம் குறித்த அக்கறையைவிடச் சுவை குறித்த பார்வையே ஆளுமை செலுத்துகிறது. எனவே இன்னும் சில மிச்ச சொச்சங்களோடு இருக்கும் பழைய உணவுப் பழக்க வழக்கங்களைத் தொகுத்துக் காணுவது நல்லது (தொ. பரமசிவன் 2014:19). ஏனென்றால் உணவுப் பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருள்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்தி முறை, பொருளாதாரச் சூழல் போன்றவற்றைப் பொறுத்து அமைவதால் உணவுப் பண்பாடு குறித்த பதிவுகளை முறைப்படுத்த வேண்டும்.

    உணவுப் பண்பாடு குறித்த பதிவுகளை இரண்டு வகையாக மேற்கொள்ளலாம். ஒன்று இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உணவு குறித்த நுட்பம். மற்றொன்று சமையல்கலை சார்ந்த நூல்களின் வழியாக இலக்கியத்தை ஓரளவு நாம் பகுத்தாய்ந்துள்ளோம். ஆனால் சமையல் நூல்களை பகுத்தாராயவில்லை. சமையல்கலை சார்ந்த நூல்கள் பல நுட்பங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன என்பது முக்கியமான தகவலாகும்.

    1891ஆம் ஆண்டு வெளிவந்த இந்துபாக சாஸ்திரம் எனும் தமிழ் சமையல் நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த உணவு பழக்க வழக்கங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட நூலாகும். இந்த நூலை எழுத வேண்டியதன் தேவை குறித்து ஆசிரியர் குறிப்பிடும்போது நமது பெண்கள் பெரியவளாகும்போது தங்களுடைய கணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு யாதொரு முயற்சியுஞ் செய்யப்படவில்லை என்பதேயாம். அவர்களுக்குப் பாடசாலைகளில் வாசிப்பு, எழுத்து, கணிதம், சரித்திரம், பூகோளம், சுகாதார விளக்கம், தையல் வேலை முதலிய பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனாலும் பெண் பிள்ளைகளுக்கு மேற்கூறிய விஷயங்களைக் காட்டிலும் அதிக அவசியமும் முக்கியமான சமைதொழில் நாடோடி வைத்தியம் ஆகிய இரு விஷயங்களில் தேற்சியுண்டாக்க இதுவரையில் யாதொரு முயற்சியுஞ் செய்யப்படவில்லை. சமைதொழிலில் அதிக தேற்சியடைந்திருந்தவர்களுடன் அவ்விஷயமாய்ச் சம்பாஷிக்கறம் சந்தற்பம் நேர்ந்தது. இவ்விதமான அநுகூலங்கள் ஏற்றபடியால்தான் எனக்கு இக்கிரந்தத்தை எழுத துணிவுண்டாயிற்று (தொ.க.இராமசந்திர ராயர் 1900:IX) என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்நூலை எப்படிச் சமைப்பது, எந்த உணவு உடலுக்கு நல்லது, யார் எந்த உணவை எடுத்துக்கொள்வது, உணவுகளின் குணங்கள், சமைக்கும் முன் செய்வன. அடுப்புகள், தண்ணீர் பற்றிய கண்ணோட்டம், அளவு, எந்தப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது போன்ற அரிய குறிப்புகளைத் தருகின்றார். இன்றைக்கு வெளிவருகின்ற சமையல்கலை நூல்களெல்லாம் இந்நூல் போன்று நுட்பமான அடிப்படையான தகவல்களைத் தரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

    சமையல் குறிப்புகளைத் தருவதற்கு முன்பாகப் பல குறிப்புகளைத் தருகின்றார். அத்தனையும் பயனுள்ளவை. குழந்தை வளர்ப்பு பெண்களோடு தொடர்புடையதால் உணவை எப்படிச் சமைப்பது உணவின் தன்மை குறித்து விளக்கமாகப் பேசியிருக்கிறார். உணவோடு சேர்க்கும் பொருள்கள் நல்லவையாக இருத்தல் வேண்டும்7 என்று குறிப்பிடுகின்றார். சமைப்பதற்குத் தேவையான உணவுப் பொருட்களை நாமே பயிரிட்டு பயன்படுத்த வேண்டும் என்கிறார். உணவு சக்கை, சத்து, சுவை, தோஷம், குணம் ஆகியவற்றை உள்ளடக்கியது. பசி எடுத்தபின்பே உணவு உட்கொள்ளவேண்டும். ஒவ்வொரு சுவைக்கும் தனித்தனிப் பண்புகள் உண்டு. கசப்பு தரும் காய்களாக பாகற்காய், சுண்டைக்காயைக் குறிப்பிடுகிறார். இந்தச் சுவை உடலுக்கு நன்மை செய்யும் எனக் குறிப்பிடுகிறார்.8 இப்படியாக ஒவ்வொரு சுவைக்குமான நன்மை, தீமைகளைப் பதிவு செய்கிறார்.

    வாதம் – சோளம், சாமை, மொச்சை, பலாக்காய், மாங்காய், கடலை, வள்ளிக்கிழங்கு, பித்தம் – கஞ்சா, அபினி, புகையிலை, கொத்தவரங்காய், சீதாப்பழம், பீர்க்கங்காய், சிறுபயறு, எள்ளு, வேர்க்கடலை.  கபம் – வெள்ளரிக்காய், கொளிஞ்சிக்காய், கம்பு, வெண்டைக்காய், சாம்பாற் பூசணிக்காய் போன்றவற்றால் இவைகள் உண்டாகும். இவற்றையெல்லாம் மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்கிறார். உணவை உட்கொண்டால் காமம், குரோதம், பலவீனம், ரோகம், சஞ்சலம், பேராசை, கபடம் முதலியவற்றை உண்டாக்கக்கூடிய உணவை உண்ணாமல் பலம், ஆரோக்கியம், மனோதைரியம், தயை, சாந்தம், சத்தியம், பக்தி முதலிய நற்குணங்கள் எந்த உணவு தருகிறதோ அந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

    உடலுக்கு நலம் தரும் உணவுகள் எனக் குறிப்பிடும்பகுதி முக்கியமானதாகும். அரிசி வகைகளைக் குறிப்பிடும்போது கருங்குறவை, ஈர்க்குச்சம்பா, புழுகுச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்லுண்டைச்சம்பா, குண்டுச்சம்பா, மல்லிமைகச்சம்பா, இலுப்பைப்பூச்சம்பா, மணிச்சம்பா, வளைதடிச்சம்பா, கொரைச்சம்பா, குறுஞ்சம்பா, சீரகச்சம்பா, மிளகுச்சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கொடைச்சம்பா, காடைச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி என்று பலவகை அரிசிகளைக் குறிப்பிடுகின்றார். இவர் குறிப்பிடும் இந்த அரிசி வகைகள் இன்று காணாமல் போயின. இந்த அரிசி வகைகள் நமது பண்பாட்டின் அடையாளமாய் இருந்தவை என்பதை உணர வேண்டும். நன்றாகச் சிந்திப்பதற்கும் மிடுக்காக இருப்பதற்கான குணங்களைக் கொண்ட உணவு வகைகளைக் கொடுக்கின்றார். இந்தக் குறிப்புகளெல்லாம் மிக முக்கியத்துவம் கொண்டவை. எந்த அரிசியை உண்டால் என்ன நன்மை கிடைக்கும் என்று குறிப்பிடும் குறிப்புகள் முக்கியமானவை. காடைச்சம்பா – இதனால் பிரமேகசுரமும் சில அற்பநோய்களும் நீங்கும். சுக்கிலதாது விருத்தியும் பலமும் உண்டாகும். தினை, கோதுமை, உழுந்து, பச்சைப்பயறு, பொரி, அவல், எள்ளு, சுக்கு, இஞ்சி, மிளகு, சீரகம், வெந்தயம், வெள்ளம், கற்கண்டு, தேன், ஜாதிக்காய், ஏலரிசி, எண்ணெய் போன்ற 267 பொருள்களின் மருத்துவக் குணங்களையும் அவற்றை உண்டால் கிடைக்கும் பயன்களையும் விரிவாகவே பேசியுள்ளார். இந்தக் குறிப்புகள் முக்கியமானவை.

    சமைப்பதற்கு முன் செய்யக்கூடியவற்றை விரிவாகப் பேசுகிறார். அவற்றிற்கான பல விளக்கப் படங்களைக் கொடுக்கின்றார். பயன்படுத்தும் பொருட்கள், அளவைகள், தயார் செய்யும் முறை போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். இந்நூலில் சாப்பாடு, களி, அடை, ரொட்டி, குஷ்கா, ரொட்டிகள், பொங்கல், பருப்புகள், பச்சடிகள், குழம்புகள், கூட்டுகள், ரசம், கறிகள், பொடிகள், பாயாசங்கள், ஊறுகாய், வற்றல், வடங்கள், அப்பளங்கள், தோசை, வடை, போளி, இனிப்பு வகைகள், காபி, டீ போன்றவற்றைச் செய்யும் முறை குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமைக்கப்பட்ட உணவுகளை எவ்வாறு இலையில் பரிமாற வேண்டும் என்பதை விளக்கப்படத்தோடு கொடுக்கின்றார். சாதாரண நாட்கள், விழா நாட்கள், பித்ருதோச நாளில் எவ்வாறு எப்படி எந்த முறையில் இலையில் பரிமாற வேண்டும் எனக் குறிப்பிட்டு அதற்கான காரணத்தையும் பதிவு செய்துள்ளார்.

    396 பக்கங்கள் கொண்ட இந்நூல் சமையல் செய்யும் முறைகுறித்து விரிவான பதிவைக் கொண்டுள்ளது. இந்நூல் குறிப்பிடும் உணவு முறைகள் பெரும்பாலும் உணர் சமூகத்தினர் உண்ணும் உணவுக்கான தயாரிப்பு அட்டவணையாக உள்ளது. என்றாலும் இந்நூல் தரும் பல தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. சமையல் பெண்களோடு தொடர்புடையதாக இருந்தாலும் தமிழில் முதலில் சமையல் நூலை எழுதியவர் என்கிற பெருமையை இந்நூல் ஆசிரியர் பெறுகிறார். சமைக்கும் முறை குறித்து பேசியது மட்டுமல்ல அவ்வுணவால் என்ன நன்மை உண்டாகும் என்று சொன்ன விதத்தில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இறுதியாக விலைப்பட்டியல் ஒன்றைத் தருகிறார். 1900 காலகட்டத்தில் உணவுப் பொருட்கள் எந்த விலை விற்றது என்ற அந்தக் குறிப்புகள் முக்கியமானதாகும். அரிய குறிப்புகளைக் கொண்ட இந்நூல் மறுபதிப்பு வருமானால் ஆரோக்கியமாக நாம் வாழலாம். 

    சான்றெண் விளக்கம்

    1. பக்தவத்சலபாரதி (தொகுப்பாசிரியர்), 2011, தமிழர் உணவு, காலச்சுவடு பப்ளிகேசன்ஸ் நாகர்கோவில்
    2. ஞா.ஸ்டீபன், 2017 தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
    3. பா.ராகவன், 2017, உணவின் வரலாறு, மதிநிலையம், சென்னை.
    4. சமைத்தல்/உண்ணுதல், சைவம்/அசைவம், சாதாரண உணவு/விருந்து உணவு, விருப்பம்/விலக்கு, புனிதமானது/புனிதமற்றது என்பன போன்ற பண்புகளாக இருப்பதைக் காண்கிறோம். ஒவ்வொரு சமூகத்தின் உணவு முறையானது பொதுத்தன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதனதன் தனித்துவத்தைக் காலங்காலமாக நிலைநிறுத்தவும் வந்துள்ளது. தமிழ்ச்சமூகம் போன்ற நீண்ட நெடிய பழமைச் சமூகங்களில் உணவு வரலாறும் உணவுப் பண்பாடும் தனித்துவமான மரபுடையது (பக்தவத்சலபாரதி, 2012:17)
    5. தொ.பரமசிவன் 2014, பண்பாட்டு அசைவுகள், காலச்சுவடு, பப்ளிகேசன்ஸ், நாகர்கோவில்
    6. தொ.இ. இராமச்சந்திரகவிராயர் (இ.ப.) 1900, இந்து பாக சாஸ்திரம், வைஜயந்தி பிரஸ் புரொபரைமா, சென்னை.
    7. இப்போஷணைக் காதாரமான ஆகாரத்தின் பொருட்டு உதவுகின்ற வஸ்துக்கள் அவற்றின் பாகபேதங்கள், சுவை முதலியவைகள் கெடுதியாயிருந்தால், அப்போஷணையைப் பெறும் இச்சரீரத்துவங்கள் நிலைபிரித்து மிதமிஞ்சிக் கெட்டு சரீரத்திற்கும் பலவாறு துன்பங்களை விளைவிக்கின்றன. (தொ.சி.இராமச்சந்திரராயர் 1900:4)
    8. இந்தச் சுவையானது சீக்கிரத்திற் சீரணிக்கச் செய்யுஞ் சக்தியுடையது. அரோசிகஹரம், மிதமாய் புசித்தால் சுரம், மூர்ச்சை, கிருமி, குஷ்டம் இவைகளைப் பரிகரிக்கும் உடம்பெரிச்சலைக் குறைக்கும் பகலைச் சுத்தப்படுத்தும். (தொ.இ. இராமச்சந்திரராயர் 1900:18)

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிரியர்,
    இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

     

     

    Share
  • பழந்தமிழக வரலாறு – 13

    பதிற்றுப்பத்தும், பதிகமும், சேர வேந்தர் ஆண்டுகளும்

          பதிற்றுப்பத்துப் பதிகம் குறிப்பிடும் மொத்த ஆட்சி ஆண்டுகளை அரசனாக இருந்த ஆண்டுகள், வேந்தனாக இருந்த ஆண்டுகள் என இரு பகுதிகளாகக் கணிக்கப்பட்டன. இமயவரம்பனின் தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன், அவனது மகன்கள் களங்காய் கண்ணி நார்முடிச் சேரல், சேரன்செங்குட்டுவன் ஆகியோர் முறையே 25, 25, 55 ஆண்டுகள் ஆண்டதாகப் பதிகம் குறிப்பிடுகிறது. இவை அவர்கள் அரசனாகவும் வேந்தனாகவும் இருந்த மொத்த ஆட்சி ஆண்டுகள் ஆகும். இமயவரம்பன் கிட்டத்தட்ட கி.மு. 275வாக்கில் இறக்கிறான். இமயவரம்பனுக்குப் பின் கி.மு. 275இல் வேந்தனாக ஆன அவனது தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன்  10 ஆண்டுகள் வேந்தனாகவும், 15 ஆண்டுகள் அரசனாகவும்(கி.மு.290 முதல்) இருந்தான் எனக் கணிக்கப்பட்டது. இமயவரம்பன் இறந்த போது கி.மு. 275வாக்கில், அவனது மகன்கள் களங்காய்கண்ணி நார்முடிச்சேரல், சேரன் செங்குட்டுவன் ஆகிய இருவரும் அரசனாக்கப்படுகின்றனர். 10 ஆண்டுகள் கழித்து, அவனது தம்பி இறந்தபின் இமயவரம்பனின் மூத்த மகன் கி.மு. 250 வரை, 15 ஆண்டுகள் வேந்தனாக இருக்கிறான். அதன்பின் இமயவரம்பன் இறந்து 25 ஆண்டுகள் கழித்து கி.மு. 250இல் சேரன் செங்குட்டுவன் வேந்தனாக ஆகி 30 ஆண்டுகள் வேந்தனாக ஆண்டான். அதன்பின் அவனது கடைசிமகன் ஆடுகோட்பாட்டு சேரலாதன் 8 ஆண்டுகள் மட்டுமே வேந்தனாக இருந்தான். பதிகம் குறிப்பிடும் மொத்த ஆட்சி ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்ட, அரசர், வேந்தர் ஆட்சி ஆண்டுகள் குறித்த கீழ்க்கண்ட அட்டவணை, இக்கணிப்பு குறித்த ஒரு தெளிவைத்தரும்.

     

    வேந்தன்பெயர்        மொத்தஆண்டு   அரசர்ஆண்டு    வேந்தர்ஆண்டு

    1.இமயவரம்பன்       333-275=58       333-327=6        327-275=52

    2.அவனதுதம்பி        290-265=25       290-275=15       275-265=10

    3.மூத்தமகன்          275-250=25       275-265=10       265-250=15

    4.செங்குட்டுவன்       275-220=55       275-250=25       250-220=30

    5.கடைசிமகன்         250-212=38       250-220=30       220-212=8

    மொத்த ஆண்டுகள்    201             86              115

    பொறையர் குலச்சேர வேந்தர்கள்:

    1.செல்வக்  வாழி.           230-205=25       230-212=18       212-205=7

    2.பெருஞ்   பொறை    210-195=15       210-205=5        205-195=10

    3.இளஞ்    பொறை    200-184=16       200-195=5        195-184=11

    மொத்த ஆண்டுகள்    56              28              28

         உதியனின் மகன்கள் இருவரும்(இமயவரம்பனும் அவனது தம்பியும்), அவனது பேரன்கள் மூவரும்(இமயவரம்பனின் மகன்கள்) சேர்ந்து பதிற்றுப்பத்துப்படி மொத்தம் 201 ஆட்சி ஆண்டுகள் ஆண்டுள்ளனர். இதில் ஒருவன் வேந்தனாக இருந்த போது மற்றவர்கள் அரசர்களாக இருந்துள்ளனர். இவர்களது வேந்தர் ஆட்சி ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட 115 ஆண்டுகள் ஆகும். இந்த வேந்தர் ஆட்சி ஆண்டுகளைத்தான் காலக் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளமுடியும். இமயவரம்பன் சோழன் மகள் மணக்கிள்ளியை இரண்டாவது மனைவியாக மணந்தபின்,  அவனது 50ஆவது வயதில் சேரன் செங்குட்டுவன் அவனுக்கு மகனாகப் பிறக்கிறான். அதன் பின் ஆடுகோட்பாட்டு சேரலாதன் பிறக்கிறான்.

            கி.மு. 232 வாக்கில் அசோகர் இறந்தார் என்பதாலும், கி.மு. 230 வாக்கில் சாதவாகனர்கள் தனி ஆட்சியை நிறுவினர் என்பதாலும் சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பு என்பது கி.மு. 232-228 வாக்கில்தான் நடந்தது எனலாம். சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப்படையெடுப்பு, சாதவாகனர்கள் தனி ஆட்சியை நிறுவக் காரணமாக அமைந்தது. பரணரால் சேரன் செங்குட்டுவன் பாடப்பட்டவன்; அதியமான் காலத்தில் வாழ்ந்தவன்;  வடநாட்டுப் படையெடுப்புக்குப் பின்னரே சோழன் கிள்ளிவளவனுக்கு உதவ நேரிவாயில் போர் இவனால் நடத்தப்பட்டது; அவன் இறந்த ஆண்டும், சம்பை கல்வெட்டின் ஆண்டும் கிட்டத்தட்ட கிமு. 220 ஆகும். கொல்லிமலை கைப்பற்றப் படுவதற்கும் திருக்கோவிலூர்போர் நடப்பதற்கும் சிறிது காலத்துக்குமுன் அவன் இறந்துவிடுகிறான்.

           7ஆம் காலகட்டம் வரையான சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை நிர்ணயிப்பதில் பதிற்றுப்பத்தின் மொத்த ஆட்சி ஆண்டுகளும், சங்கப்பாடல்களும் போக, நந்தர்கள்-மௌரியர்கள் ஆட்சிமாற்றம் கி.மு. 323 வாக்கில் நடந்தது; இந்தியாவின் வடபகுதியில் கி.மு. 325-322 வரை கலவரங்கள் நடந்தன; கி.மு. 272 வாக்கில் பிந்துசாரன் இறந்தான்; அதன்பின் 4 ஆண்டுகள் கழித்து அசோகன் கி.மு. 268 வாக்கில் முடி சூடினான்; கி.மு. 256 வாக்கில் அசோகன் கல்வெட்டுகள் வெட்டப்பட்டன; கிமு. 232 வாக்கில் அசோகர் இறந்தார்; கி.மு. 230 வாக்கில் சாதவாகனர்கள் தனி அரசை அமைத்தனர்; கி.மு. 220 வாக்கில் சம்பைக்கல்வெட்டு வெட்டப்பட்டது; கி.மு. 165 வாக்கில் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு வெட்டப்பட்டது; கி.மு. 163 வாக்கில் இரண்டாவது தூமகேது தோன்றியபோது யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இறந்தான் என்பன போன்ற வரலாற்றுச் செய்திகள், கி.மு. 327 முதல் கி.மு. 163 வரையான 2ஆம் காலகட்டம் முதல் 7ஆம் காலகட்டம் வரையிலான சேரஆட்சியாளர்களின் ஆண்டுகளை வரையறை செய்து அவைகளை நிர்ணயிப்பதில் மிக முக்கியப் பங்கை வகித்தன.

          சிலப்பதிகாரக் காப்பியம் மூலம் சாதவாகனர்களுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் தொடர்பு இருந்ததை,  அதில் சேரன் செங்குட்டுவன் பெரு வேந்தனாகவும், சாதவாகனர்கள் அவனுக்குக் கட்டுப்பட்டு, அவன் சொல்படி செயல்படுபவர்களாகவும் காட்டப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. மேலும் சேரன் செங்குட்டுவன் தனது இறுதிக்காலத்தில்தான் வடநாடு படையெடுத்தான் என்பதையும் அறிய முடிந்தது. இமயவரம்பன் தனது வேந்தர் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே வடநாடு படையெடுத்தான் என்பதை 2ஆம் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. இந்த ஒவ்வொரு செய்தியும் காலக்கணிப்பிற்கு பயனுள்ளதாக இருந்தது எனலாம்.

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(220)

     

     

     

    உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து      

    மட்பகையின் மாணத் தெறும்.                                                

           -திருக்குறள் -883(உட்பகை)

     

    புதுக் கவிதையில்…

     

    வாழ்வுதனில்

    தற்காத்துக்கொள்ள வேண்டும்,

    உட்பகைக்கு அஞ்சி..

     

    இல்லையெனில்

    அது

    அறுத்தழித்துவிடும்

    மண்பாண்டம் அறுக்கும்

    கருவிபோல…!

     

    குறும்பாவில்…

     

    மண்பாண்டமறுக்கும் கருவிபோல்          

    அறுத்தழிக்கும் வாழ்வை, உட்பகைக்கு 

    அஞ்சித் தற்காத்துக்கொள்ளாவிடில்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    உடனிருந் தழிக்கும் உட்பகையை

         உணர்ந்தே யஞ்சி யதுவாழ்வில்

    இடரது யேதும் தந்திடாமல்

         இயல்பாய்த் தற்காத் திடல்வேண்டும்,

    தொடர்ந்திடும் பகையிது அறுத்தழிக்கும்

         தூய தாம்நல் வாழ்வினையே,

    குடமதில் மண்ணை அறுத்தெடுக்கக்

         குயவன் கைக்கொளும் கருவிபோலே…!

     

    லிமரைக்கூ..

     

    தற்காத்திடு உட்பகைக்கு அஞ்சி,    

    மண்பாண்டமறுக்கும் கருவியாய் அறுத்தழிக்கும்             

    அதுவே வாழ்வினில் மிஞ்சி…!

     

    கிராமிய பாணியில்…

     

    கொடியது கொடியது உட்பகதான்

    கூடயிருந்தே கெடுக்கும் உட்பகதான்..

     

    தற்காத்துக்கோ தற்காத்துக்கோ

    உட்பகக்கிப் பயந்து

    ஒன்ன நல்லாத் தற்காத்துக்கோ..

     

    இல்லயிண்ணா அது

    பச்சமண்ணு பானய அறுக்கும்

    அருவாபோல அழிச்சிப்புடும்

    வாழ்க்கயயே அழிச்சிப்புடும்..

     

    அதால

    கொடியது கொடியது உட்பகதான்

    கூடயிருந்தே கெடுக்கும் உட்பகதான்..!

     

    -செண்பக ஜெகதீசன்…

     

     

     

     

    Share
  • இரண்டு விண்மீன்கள் மோதிக் கொள்ளும் போது ஒன்றாகி விண்வெளியில் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன

    Posted on August 3, 2018

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    ++++++++++++++++
    மோதும் இரண்டு விண்மீன்கள் ஒன்றாய் ஒளிவீசி கதிரியக்க மூலக்கூறுகளை வெளியேற்றும்.
    நமது சூரியன்போல் இரண்டு விண்மீன்கள் மோதிக் கொண்டால்,  அதன் விளைவுக் காட்சி : உன்னத ஒளிமய வெடிப்புக் காட்சி !  முடிவாகப் பெரியதோர் புதிய விண்மீன் ! அப்படி ஒரு காட்சி 1670 இல் தோன்றியது.  கண்டோருக்குச் செந்நிறத்தில்  தெரிந்தது ஒரு புதிய சூரியன்.  ஆரம்பத்தில் நேராக வானில் கண்ணுக்குத் தெரிந்த அந்த ஒளிக்காட்சி, பின்னர் உடனே மறைந்து, இணையும் நிகழ்ச்சி மங்கலாகி, தற்போது நுணுக்கமான தொலைநோக்கி மூலம்தான் காண முடிகிறது. இப்போது அதைச் சுற்றிலும் மங்கிய ஓர் கசிவு முகில் வளையமே தென்படுகிறது.
    இந்நிகழ்ச்சி நேர்ந்து சுமார் 348 ஆண்டுகள் கடந்து [1670 + 348 = 2018]   2018 ஆம் ஆண்டு ஜூலையில், அகிலநாட்டு வானியற் குழுவினர் <<அல்மா>> &  நோயிமா கருவிகள் மூலம் [ ALMA – ATACAMA Large Millimeter Array] &  [NOEMA –  Northern Extended Millimeter Array]  ரேடியோ தொலை நோக்கி வழியாக, நடந்த வெடிப்புக் காட்சி விளைவை [Known as CK Vulpeculae (CK -Vul)]  ஆய்வுகள் செய்ததில்  உறுதியாக கதிர்வீசும் அலுமீனியம் [26 AL]  [Radio Isotope of 26AL] இருப்பது அறியப் பட்டது.  அதாவது 26AL மூலகத்தின் கதிர்வீசும் ஏகமூலம் [13 புரோட்டான் + 13 நியூட்ரான்] ஃபுளோரின் [Fluorine] சேர்க்கையுடன், அலுமினியம் மானோ ஃபுளூரைடு [26ALIF] ஆகக் காணப்பட்டது.  இதுவே முதன்முதல் பூமிக்கு 2000 ஒளியாண்டு தூரத்தில், நமது சூரிய மண்டலம் கடந்த புற விண்வெளியில் காணப்பட்ட கதிரியக்க மூலக்கூறு [Radioactive Molecule] என்று வரலாற்று முதன்மை பெறுகிறது.
    ++++++++++++++++++

     luminosity-of-birth-star-1

    http://slideplayer.com/slide/1374764/

    பெருநிறை விண்மீன்கள் பிறப்பு இன்னும் மர்மமாகத் தெரிகிறது நமக்கு. காரணம் இந்த விண்மீன்கள் தீவிரமாய்த் திண்ணிய வாயுத் தூசிகள் ஈடுபாடு கொண்டவை.  இந்த ஒளிபுகாச் சூழ்புறம் [Opaque Envelope] நவீனத் தொலை நோக்கிகள் மூலம் ஆயும் நேரடி நோக்குதலுக்கும் கடினமாய் உள்ளது.  சொல்லப் போனால்,  இவ்வகை விண்மீன்கள் பிறக்கும் தாலாட்டு ஊஞ்சல் மட்டும் நமக்குத் தெரிகிறதே தவிர, அந்த விண்மீன்கள் தென்படு வதில்லை.

    ரால்ஃப் கியூப்பர் [ Emmy Noether Research Group for Massive Star Formation, Germany]

    protostar-formation

    குளிர்தேசக் கணப்பு அடுப்பில் மரத் துண்டுகளை எறிந்தால் குப்பெனத் தீப்பற்றுவதுபோல், பெருநிறை விண்மீன்கள் எழுப்பும் தீவிரப் பேரொளி வெடிப்புகள்  நூறாயிரம் சூரியன்கள் உண்டாக்கும் கூட்டு ஒளிமயத்தைக் காட்டுகின்றன.  இம்மாதிரி ஒளி வெடிப்பு நிகழ்ச்சிகள், பிரபஞ்சத்தில் சிறுநிறை கொண்ட நமது சூரியன் போல், பூர்வப் பரிதிகள் தோன்றிய போதும் நேர்ந்துள்ளன.

    எட்வேர்டு வொரோபையோவ் [ஜெர்மன் ஆய்வக அறக்கட்டளை]

    முன்னுரை:  பிரபஞ்சத்தில் சூப்பர்நோவா ஒன்று விளைவித்த கொந்தளிப்பில் அல்லது பளுமிக்க விண்மீன் ஒன்று வெடித்த கொந்தளிப்பில் புதிய விண்மீன் ஏற்பாடுகள் (New Star Systems) உருவாகுகின்றன. நமது சூரிய மண்டலமே பால்மய வீதி காலக்ஸியின் சுருள் ஆரத்தில் மரித்த ஒரு சூப்பர்நோவா வீசி எறிந்த மிச்சத்திலிருந்து தோன்றி யிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஒரு கோட்பாடை ஊகிக்கிறார்கள். சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அது வெளியேற்றிய கூண்டு விண்வெளியில் உலவி வீதி வழியே தூசி துணுக்குகளை வாரிக் கொண்டு, வழி நெடுவே திண்ணிய தீக்கனலுடன், எரியும் வாயுக்களில் நீல நிறத்தில் எக்ஸ்ரே கதிர்களை எழுப்பிக் கொண்டு சென்றது !

     luminosity-of-stars-1

    பெருநிறை விண்மீன்கள் பிறக்கும்போது பேரொளி வெடிப்பு நேர்கிறது

    பெருநிறை விண்மீன்களின் பிறப்பானது, வானியல் விஞ்ஞானி களுக்கு இன்னும் புதிராகவும், மர்மமாகவும் இருக்கிறது.  அதற்குக் காரணம் : அந்த வகை விண்மீன்கள் பேரடர்த்தி வாயுத் தூசிகள் கலந்த அரங்குகளில் அடைபட்டுக் கிடக்கின்றன.  அந்த ஒளிபுகாச் சூழக நிகழ்ச்சிகளை தொலை நோக்கிகள் மூலம் காண்பதும் கடினமாய் உள்ளது. இந்த விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபட்டு வருவது, ஜெர்மன் ஆய்வு அறக்கட்டளை [GRB – German Research Foundation] [Emmy Noether Research Group for Massive Star Formation] தலைமை விஞ்ஞானி ரால்ஃப் கியூப்பர் [Rolf Kuiper].

    ஜெர்மன் ஆய்வாளர் ஒரு கணினி இலக்கப் போலி மாடலில் [Computer Numerical Simulation] இட்டு அதன் விளைவுகள் வெளியிட்டுள்ளார்.  அதற்கு அதிகத் திறனுள்ள கணினிகள் [High Performance Computers]  பயன்படுத்தப் பட்டன.  அந்த மாடல்கள் சுய ஈர்ப்பியல் இறுக்கி அழுத்தப்படும் வாயுத் தூசி முகிலில் ஆரம்பமாகிறது.  அதுவே முடிவில் கொந்தளிக்கும் இளம்பரிதி ஒன்றைச் சுற்றிவரும் சுழற் தட்டாகி [Accretion Disk] உருவா கிறது.  அந்த சுழற் தட்டுப் பிண்டம் ஒரு மையப் பரிதியைச் சுற்றிவந்து, மெதுவாக வாயுத் தூசிகளை மையத்தை நோக்கி இழுக்கிறது.

    [https://www.youtube.com/watch?v=9j1AKzICLts?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [https://www.youtube.com/watch?v=0wP5GPFALCg?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    Life cycle of a Star

    வெடிப்பு நிகழ்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து வெடியலைகள், குளிர்ந்து போன கருமை முகிலோடு முட்டி முனையில் செந்நிற ஹைடிரஜன் மின்னிட மோதியது ! இந்தப் பின்புலத்திலே மோதலுக்குப் பிறகு வாயுக்கள் குளிர்ந்து திணிவும் (Density) உஷ்ணமும் மாறி பல்வேறு வண்ணப் பட்டைகள் (Muli-colour Bands) தெரிந்தன. குளிர்ந்து திரண்ட ஆரஞ்சு நிறத் திரட்டுகள் விண்மீனின் வடிவாயின ! சிதைவுக் குப்பைகள் ஈர்ப்பு ஆற்றலில் மேலும் அழுத்தமாக்கப் பட்டன. காலம் செல்லச் செல்ல ஈர்ப்பு விசையே வலுத்து வாயுக்களையும், தூசி துணுக்குகளையும் சுருக்கித் திரட்டி சுழற்றுத் தட்டுகளாய் ஆக்கின ! பிற்காலத்தில் அத்தட்டுகளே “முன்னோடி விண்மீன்களாகவும்”, முன்னோடிக் கோள்களாகவும் (Protostars & Protoplanets) விண்மீன் ஏற்பாடுகளுக்கு அடிப்படையாயின (Steller System Forerunners).

    luminosity-of-stars-2

    இந்திய அமெரிக்க வானியல் விஞ்ஞான மேதை சுப்ரமணியன் சந்திரசேகர் (1910-1995) விண்மீன்களின் தோற்ற பௌதிகத்தையும், கருந்துளைகள் (Black Holes) பற்றிய ஆராய்ச்சிகளையும் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பல்லாண்டுகள் செய்தவர். அவர் விண்மீன்களின் பளுவுக்கும் அவற்றின் சிதைவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டுபிடித்தார். ஒரு விண்மீனின் பளு சூரியனைப் போல் 1.4 மடங்கானால் அது சிதைவடைந்து மடியும் போது நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது ஒரு கருந்துளையாகவோ (Neutron Star or Black Hole) மாறிவிடும் என்று கூறினார். அந்தக் குறிப்பிட்ட 1.4 விகித எண்ணிக்கையே “சந்திரசேகர் வரம்பு” (Chandrasekher Limit) என்று வானியல் விஞ்ஞானிகளால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் “வெண்குள்ளி” விண்மீன்களின் (White Dwarf Stars) பளு வரம்பையும், உள்ளமைப்பையும் சந்திரசேகர் விளக்கினார்.

    luminosity-of-stars-3

    விண்வெளியில் கண்சிமிட்டும் விண்மீன்களின் தோற்றமும் சிதைவும்!

    பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் வானியல் வல்லுநர்கள், மின்மினிபோல் வானிருளில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பரிதியின் பரம்பரைச் சேர்ந்த அண்டங்களோ என்று ஐயுற்றார்கள்! விண்மீன்களின் இடம்மாறிய பிம்பங்களை [Stellar Parallaxes] முதலாகக் கண்டு, 1838 இல் அந்த ஐயம் மெய்யான தென்று உறுதியானது. மேலும் அந்நிகழ்ச்சி விண்மீன்களின் இயற்கைத் தன்மைகளை ஆழ்ந்து அறிய அடிகோலியது. சுயவொளி வீசும் சூரிய வம்சத்தைப் போல் தோன்றினாலும், பல விண்மீன்கள் முற்றிலும் வேறுபட்டவை!

    கோடான கோடி விண்மீன்களின் பிறந்தகமும், அழிவகமும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பால்வீதி ஒளிமயத் திடலே [Milky Way Galaxy]! தோன்றிய எந்த விண்மீனும் அழியாமல் அப்படியே உருக்குலையாமல் வாழ்பவை அல்ல! பூமியில் பிறந்த மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் எப்படி ஆயுட்காலம் என்று குறிக்கப் பட்டுள்ளதோ, அதே போன்று  அண்ட வெளியிலும் விண்மீன் ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் தீர்மானிக்கப் பட்டுள்ளது! இதுவரைப் பத்து பில்லியன் ஆண்டுகள் விண்வெளியில் கண்சிமிட்டி வாழ்ந்து வந்த சில விண்மீன்கள், இன்னும் 100 பில்லியன் ஆண்டுகள் கழித்து அழிந்து போகலாம்! சில விண்மீன்கள் சூரியனை விடப் பலமடங்கு பெரியவை! சில வடிவத்தில் சிறியவை!

    luminosity-of-stars

    கொதிப்போடு கொந்தளிப்பவை சில! குளிர்ந்து கட்டியாய்த் திரண்டவை சில! ஒளிப் பிழம்பைக் கொட்டுபவை சில! ஒளி யிழந்து குருடாகிப் போனவை சில! பல பில்லியன் மைல் தூரத்தில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பற்றிய விஞ்ஞானிகளின் அறிவெல்லாம், அவற்றின் ஒளித்திரட்சிதைப் பார்த்து, ஒளிமாற்றத்தைப் பார்த்து, இடத்தைப் பார்த்து, இடமாற்றத்தைப் பார்த்து, ஒளிநிறப் பட்டையைப் [Light Spectrum] பார்த்துத், தமது பெளதிக ரசாயன விதிகளைப் பயன்படுத்திச் செய்து கொண்ட விளக்கங்களே!

    ஒரு விண்மீன் தனது உடம்பைச் சிறிதளவு சிதைத்து வாயு முகிலை உமிழ்கிறது. அப்போது விண்மீன் முன்பு இருந்ததை விட 5000-10,000 மடங்கு ஒளி வீசுகிறது! அது நோவா விண்மீன் [Nova Star] என்று அழைக்கப்படுகிறது. சூப்பர்நோவா [Supernova] விண்மீன்கள் வெடிப்பில் சிதைவுற்றுச் சிறு துணுக்குகளை வெளியேற்றிச் சூரியனை விட 100 மில்லியன் மடங்கு ஒளிமயத்தைப் பெறுகின்றன. சூரிய குடும்பத்தின் அண்டங்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் உண்டானவை என்றும், அவற்றைப் பின்னால் சூரியன் கவர்ந்து கொண்ட தாகவும் கருதப்படுகிறது!

    Supernova & White Dwarf

    பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு [1.4 times Solar Mass] மேற்பட்ட விண்மீன் இறுதியில் ஒரு வெண்குள்ளியை [White Dwarf] உருவாக்குவ தில்லை என்று சந்திரசேகர் கூறினார். [வெண்குள்ளி என்பது பரிதியின் பளுவை (Mass) அடைந்து, அணுக்கருச் சக்தி யற்றுச் சிதைந்த விண்மீன் ஒன்றின் முடிவுக் கோலம். அது வடிவத்தில் சிறியது! ஆனால் அதன் திணிவு [Density] மிக மிக மிகையானது!] அதற்குப் பதிலாக அந்த விண்மீன் தொடர்ந்து சிதைவுற்று, சூப்பர்நோவா வெடிப்பில் [Supernova Explosion] பொங்கித் தனது வாயுக்களின் சூழ்வெளியை ஊதி அகற்றி, ஒரு நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] மாறுகிறது. பரிதியைப் போல் 10 மடங்கு பருத்த விண்மீன் ஒன்று, இன்னும் தொடர்ந்து நொறுங்கி, இறுதியில் ஒரு கருந்துளை [Black Hole] உண்டாகிறது. சந்திரசேகரின் இந்த மூன்று அறிவிப்புகளும் சூப்பர்நோவா, நியூட்ரான் விண்மீன், மற்றும் கருந்துளை ஆகியவற்றை விளக்கிப் பிரபஞ்சம் ஆதியில் தோன்றிய முறைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

    சந்திரசேகரின் ஒப்பற்ற வாழ்க்கை வரலாறு

    இந்தியராகப் பிறந்து அமெரிக்காவில் குடிபுகுந்த சுப்ரமணியன் சந்திரசேகர் பிரிட்டிஷ் இந்தியாவில் 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 19 இல் லாகூரில் அவதரித்தார். 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்று உலகப் புகழடைந்த விஞ்ஞானி ஸர் சி.வி. ராமனின் மருமான் [Nephew] சந்திரசேகர், என்பது இந்தியர் பலருக்குத் தெரியாது! தந்தையார் சுப்ரமணிய ஐயர் அரசாங்க நிதித்துறையகத்தில் வேலை பார்த்து வந்தார். தாயார் சீதா பாலகிருஷ்ணன் பிள்ளைகள் பிற்காலத்தில் பேரறிஞர்களாக வருவதற்கு ஊக்கம் அளித்தவர். பத்துக் குழந்தைகளில் சந்திரசேகர் மூன்றாவதாகப் பிறந்த முதற் பையன்! 1918 இல் தந்தையார் சென்னைக்கு மாற்றலானதும், சந்திரசேகர் சென்னை ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து [1922-1925] படித்துச் சிறப்பாகச் தேர்ச்சி அடைந்தார்.

    Star Life cycle

    பிறகு பெரியப்பா சி.வி. ராமன் அவர்களைப் பின்பற்றிச் சென்னை பிரிசிடென்ஸிக் கல்லூரியில் படித்து, 1930 இல் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் B.Sc. பட்டதாரி ஆனார். கல்லூரியில் சிறப்புயர்ச்சி பெற்று முதலாகத் தேறியதால், அரசாங்கம் அவர் மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல உதவிநிதிப் பரிசளித்தது. அங்கே கேம்பிரிடிஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிடிக் கல்லூரியில் படித்துப் 1933 இல் பெளதிகத்தில் Ph.D. பட்டத்தைப் பெற்றார். 1936 செப்டம்பரில் கல்லூரியில் சந்தித்துக் காதல் கொண்ட லலிதா துரைசாமியை மணந்து கொண்டார். கேம்பிரிட்ஜில் ஸர் ஆர்தர் எடிங்டன் [Sir Arthur Eddington], மில்னே [E.A. Milne] போன்ற புகழ் பெற்ற வானியல் வல்லுநர்களின் நட்பைத் தேடிக் கொண்டார்.

    Sun’s Evolutionary Tracks

    அதற்குப் பிறகு சிகாகோ பல்கலைக் கழகத்தில் 1937 இல் ஆய்வுத் துணையாளர் [Research Assistant] பதவியை ஒப்புக் கொண்டு, அமெரிக்காவுக்குச் சென்றார். 1938 இல் சந்திரசேகர் வானியல் பெளதிக [Astrophysics] உதவிப் பேராசிரியராகி, ஒப்பற்ற வானியல் பெளதிகப் பேராசிரியர் மார்டன் ஹல் [Morton Hull] அவர்களின் கீழ் பணியாற்றினார். அவர் பணி யாற்றிய இடம் விஸ்கான்சின், எர்க்ஸ் வானியல் நோக்ககம் [Yerks Observatory, Williams Bay, Wisconsin]. சந்திரசேகர் 1953 இல் அமெரிக்கப் பிரஜையாக மாறினார். 1952 ஆம் ஆண்டு பேராசிரியர் ஆக்கப் பட்டுப் பல ஆண்டுகள் வேலை செய்து, ஓய்வுக்குப் பின்பு கெளரவப் பேராசிரிய ராகவும் 1986 வரை அங்கே இருந்தார். சந்திரசேகர் வானியல் ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்ட, விண்மீன் தோற்றத்தின் இறுதி நிலைக் கோட்பாடு [Theory on the Later Stages of Stellar Evolution] என்னும் பெளதிகப் படைப்பிற்கு 1983 இல் நோபெல் பரிசை, அமெரிக்க விஞ்ஞானி வில்லியம் ·பவ்லருடன் [William Fowler] பகிர்ந்து கொண்டார். அந்தக் கோட்பாடு அண்டவெளியில் நியூட்ரான் விண்மீன்கள் [Neutron Stars]. கருந்துளைகள் [Black Holes] ஆகியவற்றைக் கண்டு பிடிக்க உதவியது.

    H-R Diagram

    அண்டவெளியில் சூப்பர்நோவா, வெண்குள்ளி விண்மீன்கள்

    இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் டேனிஸ் விஞ்ஞானி ஐஞ்சர் ஹெர்ட்ஸ்புருங் [Einjar Hertzsprung] அமெரிக்க விஞ்ஞானி ஹென்ரி ரஸ்ஸெல் [Henri Russell] இருவரும் முதன் முதல் விண்மீன்களின் ஒளிவீச்சையும், உஷ்ணத்தையும் சேகரித்து, ஒரு வரைப்படத்தில்

    புள்ளியிட்டு அவற்றின் இணைச் சார்புகளைக் காட்டினார்கள். அந்த ஹெர்ட்ஸ்ப்ருங்-ரஸ்ஸெல் [Hertzsprung-Russell, H-R Diagram] வரைப்படமே வானியல் பெளதிகத்தில் விண்மீன்களின் தன்மைகளை எடுத்துக் காட்டும் ஒரு முக்கிய ஒப்புநோக்கு வரைப்பட மாகப் பயன்படுகிறது. ஒளித் திரட்சியை நேரச்சிலும் [Luminosity in Y-Axis], உஷ்ணத்தைக் மட்ட அச்சிலும் [Temperature in X-Axis] குறித்து, ஆயிரக் கணக்கான விண்மீன் களின் இடங்களைப் புள்ளி யிட்டுக் காட்டப் பட்டுள்ளது. ஹைடிரஜன் 10% கொள்ளளவுக்கும் குறைந்து எரிந்த பெரும்பான்மையான விண்மீன்கள் முதலக வீதியில் [Main Sequence] இடம் பெற்றன. ஒளிமிக்க விண்மீன்கள் இக்கோட்டுக்கு மேலும், ஒளி குன்றியவை கோட்டுக்குக் கீழும் குறிக்கப் பட்டன. பேரொளி வீசுவதற்கு விண்மீன் பெருத்த பரப்பளவு கொண்டிருக்க வேண்டும்! அவைதான் பெரும் பூத விண்மீன்கள் [Super Giants] ! அவற்றுக்கும் சிறியவைப் பூத விண்மீன்கள் [Giant Stars]! பிறகு வாயுக்கள் எரிந்து எரிந்து அவைச் செந்நிறப் பூதங்களாய் [Red Giants] மாறுகின்றன! போகப் போக வாயு விரைவில் காலி செய்யப் பட்டு, ஈர்ப்பு விசையால் குறுகி விண்மீன்கள் வெண்குள்ளியாய் [White Dwarfs] சிதைவாகின்றன.

    Supergiants & White Dwarfs

    பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகுப் பரிதியும், ஒரு வெண்குள்ளியாகச் சிதைவடைந்து மடியப் போவதாய்க் கருதப் படுகிறது! அவ்வாறு நிகழ்ந்தால் அது ஒரு செந்நிறப் பூதமாகி [Red Giant] புதன், வெள்ளி ஆகிய இரு கோள்களை வெப்பக்கடலில் மூழ்க்கி, அடுத்து பூமியின் வாயு மண்டலத்தை ஊதி வெளியேற்றிக், கடல்நீரைக் கொதித்துப் பொங்க வைத்து, உயிரினம் யாவும் மடிந்து மீண்டும் எதுவும் வாழ முடியாத வண்ணம், பூமி ஓர் நிரந்தர மயான கோளமாய் மாறிவிடும்! ஏறக்குறைய முழுப்பகுதி ஹைடிரஜன் வாயுள்ள விண்மீன், ஈர்ப்பு விசையால் பேரளவில் அமுக்கப் பட்டுச் சுருங்கி உண்டானது. வாயுக்கள் கணிக்க முடியாத பேரழுத்தத்தில் பிணைந்து, பல மில்லியன் டிகிரி உஷ்ணம் உண்டாகி, வெப்ப அணுக்கரு இயக்கம் [Thermonuclear Reaction] தூண்டப்பட்டு அவை ஹீலியமாக மாறுகின்றன. அந்த நிகழ்ச்சியின் போது அளவற்ற வெப்பமும், வெளிச்சமும் எழுந்து பிணைவு இயக்கம் [Sustained Fusion Reaction] தொடர்கிறது!

    1930 ஆரம்ப ஆண்டுகளில் விஞ்ஞானிகள், ஹைடிரஜன் சேமிப்பு யாவும் எரிந்து ஹீலியமாகி வற்றியதும் விண்மீன்கள் சக்தி வெளியீட்டை இழந்து, தமது ஈர்ப்பு ஆற்றலால் அமுக்கப் பட்டுக் குறுகி விடுகின்றன என்று கண்டார்கள். பூமியின் வடிவுக்குக் குன்றிப் போகும் இவையே வெண்குள்ளிகள் [White Dwarfs] என்று அழைக்கப் படுபவை. வெண்குள்ளி கொண்டுள்ள அணுக்களின் எலக்டிரான்களும் அணுக்கருத் துகள்களும் [Nuclei] மிக மிகப் பேரளவுத் திணிவில் [Extremely High Density] அழுத்தமாய் இறுக்கப் பட்டு, எண்ணிக்கை மதிப்பில் நீரைப் போல் 100,000-1000,000 மடங்கு அதன் திணிவு ஏறுகிறது என்று பின்னால் கணிக்கப் பட்டுள்ளது!

    Structure of a Star

    சந்திரசேகர் எழுதிய விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு

    சந்திரசேகரின் சிறப்பு மிக்க ஆக்கங்கள் விண்மீன்களின் தோற்ற மூலம் [Evolution of Stars], அவற்றின் அமைப்பு [Structure] மற்றும் அவற்றுள் சக்தி இயக்கங்களின் போக்கு [Process of Energy Transfer], முடிவில் விண்மீன் களின் அழிவு ஆகியவற்றைப் பற்றியது. வெண்குள்ளிகளைப் [White Dwarfs] பற்றிய அவரது கோட்பாடு, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ரால்·ப் பவ்லர் [Ralph Fowler], ஆர்தர் எடிங்டன் [Arthur Eddington] ஆகிய இருவரும் தொடங்கிய வினையைப் பின்பற்றி மேற்கொண்டு விருத்தி செய்தது.

    சிதைவுப் பண்டங்கள் [Degenerate Matter] சேர்ந்து பேரளவுத் திணிவு [Extremely High Density] பெருத்த வெண்குள்ளியில், எலக்டிரான்களும் அணுக்கருத் துகள் மின்னிகளும் [Ionized Nuclei], விண்மீனின் ஈர்ப்பு விசையால் இறுக்கிப் பிழியப் படுகின்றன என்று 1926 இல் ரால்ஃப் பவ்லர் விளக்கிக் கூறினார்.

    Image result for subramanian chandrasekher

    அதே ஆண்டு ஆர்தர் எடிங்டன் ஹைடிரஜன் அணுக்கருக்கள் பிணைந்து ஹீலியமாக மாறி, சக்தியைச் சுரக்கும் மூலமாக விண்மீன்களில் இருக்கலாம் என்று எடுத்துக் கூறினார். சந்திரசேகர் தனது ‘விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு ‘ [An Introduction to the Study of Stellar Structure] என்னும் நூலில், விண்மீன் தனது எரிவாயுவான ஹைடிரஜன் தீரத் தீர முன்னைப்போல் ஒளிக்கதிர் வீசத் தகுதி யற்று, அதன் ஈர்ப்பு விசை சிறுகச் சிறுக அதே விகிதத்தில் குன்றிச் சுருங்குகிறது என்று எழுதியுள்ளார். ஓர் அண்டத்தின் ஈர்ப்பு விசை அதன் பளுவைச் [Mass] சார்ந்து நேர் விகிதத்தில் மாறுகிறது! பளு குன்றினால், அண்டத்தின் ஈர்ப்பு விசையும் குறைகிறது! ஈர்ப்பு விசைச் சுருக்கத்தின் [Gravitational Collapse] போது, விண்மீனின் பளு ஒப்புமை நிலைப்பாடு [Relatively Constant] உள்ளது என்று சந்திரசேகர் அனுமானித்துக் கொண்டார். அந்தச் சுருக்கத்தை நிறைவு செய்ய, பேரமுக்க முள்ள எலக்டிரான்கள் [Highly Compressed Electrons] பொங்கி எழுந்து, விண்மீன் நொறுங்கிச் சிதைவடைந்து, சிறுத்துப்போய் முடிவில் வெண்குள்ளியாக [White Dwarf] மாறுகிறது என்பது அவர் கருத்து!

    What is a White Dwarf ?

    சந்திரசேகர் ஆக்கிய வெண்குள்ளிக் கோட்பாடு கூறுவது என்ன ?

    1936 முதல் 1939 வரை சந்திரசேகர் வெண்குள்ளிகளின் கோட்பாட்டை [Theory of White Dwarfs] உருவாக்கினார். அந்தக் கோட்பாடு வெண்குள்ளியின் ஆரம், பளுவுக்கு எதிர்விகிதத்தில் மாறுவதாக [Radius is inversely proportional to Mass] முன்னறிவிக்கிறது! பரிதியின் பளுவை விட 1.4 மடங்கு பெருத்த எந்த விண்மீனும் வெண்குள்ளியாக மாற முடியாது! வெண்குள்ளியா சிதைவடை வதற்கு முன்பு பரிதியின் பளுவை விட 1.4 மடங்கு மிகுந்த விண்மீன்கள் தமது மிஞ்சிய பளுவை, முதலில் நோவா வெடிப்பில் [Nova Explosion] இழக்க வேண்டும்! சந்திரசேகரின் மேற்கூறிய மூன்று முன்னறிவிப்புகளும் மெய்யான விதிகள் என்று விஞ்ஞானிகள் உறுதிப்பாடு செய்துள்ளனர்! ஏற்கனவே தெரிந்த ஒரு வெண்குள்ளிகளின் சரிதையைத் தவிர, இவற்றைத் தொலை நோக்குக் கருவிகள் மூலம் கண்டு ஒருவர் நிரூபிப்பது மிகவும் கடினம்! வானியல் வல்லுநர்கள் இதுவரை அறிந்த எந்த வெண்குள்ளியும் நிறையில் 1.4 மடங்கு பரிதியின் பளுவை மிஞ்சி யுள்ளதாகக் காணப்பட வில்லை! விண்மீன்களின் நிறையை இனம் பிரித்திடும் அந்த வரையரைப் பளு எண்ணைச் [1.4] ‘சந்திரசேகர் வரம்பு ‘ [Chandrasekar Limit] என்று வானியல் விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.

    Red Giant turning to White Dwarf

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய சிறப்பு ஒப்பியல் நியதி [Special Theory of Relativity] மற்றும் குவாண்டம் பெளதிகக் கோட்பாடு [Principles of Quantum Physics] ஆகிய இரண்டையும் பயன்படுத்திச் சந்திரசேகர், ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ‘பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு நிறை யுடைய ஒரு வெண்குள்ளி விண்மீன், சிதைவுற்ற வாயுவில் உள்ள எலக்டிரான்களின் உதவியை மட்டும் கொண்டு நிலைப்பாடு கொள்ள முடியாது. அப்படிப் பட்ட ஒரு விண்மீன் தனது வெப்ப அணுக்கரு எரு [Thermonuclear fuel] முழுதையும் எரித்துத் தீர்க்கா விட்டால், அதன் பளு சந்திரசேகர் வரம்பை விடவும் மிகையானது என்று அறிந்து கொள்ள வேண்டும்’.

    தொலைநோக்கியில் காணப் பட்ட மெய்யான வெண்குள்ளி விண்மீன்களின் பளுவைக் கணித்ததில், அவை யாவும் சந்திரசேகர் வரம்புக்குக் [1.4] குறைந்த தாகவே அறியப் பட்டன! அந்த வரம்புக்கு மேற்பட்ட பளுவை உடைய விண்மீன், தனது அணுக்கரு எரிப்புக் காலம் [Nuclear-Burning Lifetime] ஓய்ந்தபின், ஒரு வேளை நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] ஆகலாம்! அல்லது ஒரு கருந்துளையாக [Black Hole] மாறலாம்! சந்திரசேகர் ஆராய்ந்து வெளியிட்ட வானியல் சாதனைகள் விண்மீன்களின் இறுதி ஆயுள் நிலையை எடுத்துக் காட்ட உதவி செய்கின்றன. மேலும் ஏறக் குறைய எல்லா விண்மீன்களின் பளுக்களும் சந்திரசேகர் வரம்பு நிறைக்குள் அடங்கி விட்டதால், அகில வெளியில் பூதநோவாக்கள் [Supernovas] எதுவும் இல்லாமைக் காட்டுகின்றன. [நோவா என்பது உள்ளணுக்கரு வெடிப்பு (Internal Nuclear Explosion) ஏற்பட்டுப் பேரளவில் சக்தியை மிகைப்படுத்தி வெளியாக்கும், ஒரு விண்மீன்].

    Star turning to Black Dwarf

    ஈர்ப்பியல் நொறுங்கலில் தோன்றும் கருந்துளைகள்!

    1968 இல் கருந்துளை என்று முதன் முதலில் பெயரிட்டவர், அமெரிக்க விஞ்ஞானி ஆர்ச்சிபால்டு வீலர் [Archibald Wheeler]. ஆயினும் அவருக்கும் முன்பே கருந்துளையைப் பற்றிப் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வேதாந்தி [John Mitchell (1783)], மற்றும் பிரென்ச் கணித வல்லுநர் பியரி ஸைமன் லாபிளாஸ் [Piere Simon de Laplace (1796)] ஆகியோர் இருவரும் கருந்துளையின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி எழுதியுள்ளார்கள்.

    கருந்துளை [Black Hole] என்பது விண்வெளியில் பேரடர்த்தி [Highly Dense] கொண்டு, நியதிப்படி இருப்பதாகக் கற்பனிக்கப் பட்ட ஓர் அண்டம்! அகில வெளியில் ஈர்ப்பு விசைப் பேராற்றலுடன் உட்புறம் இழுத்துக் கொண்டிருக்கும் ஓர் குழிப் பகுதி. அப்பகுதியில் எதுவும், ஏன் ஒளிக்கதிர் வீச்சு, மின் காந்தக் கதிர்வீச்சு [Electromagnetic Radiation] கூட அதன் அருகே நெருங்க முடியாது!

    star-formation-cycle

    ஒளிமந்தை விண்மீன்கள் தோற்றம்

    அதன் அருகே புகும் ஒளிக்கதிர்கள் நேராகச் செல்ல முடியாமல் வளைக்கப் படும்; அல்லது ஈர்ப்பு மையத்துக் குள்ளே கவர்ந்து இழுக்கப் படும்! ஆகவே கருந்துளையின் பக்கம் ஒளி செல்ல முடியாத தால், அதன் இருப்பிடத்தைத் தொலை நோக்கி மூலம் காண்பது அரிது! கருங்குழியிலிருந்து எழும் எக்ஸ்ரே கதிர்களை [X-Rays], பூமியில் உள்ள வானலை நோக்கிகள் [Radio Telescopes] நுகர்ந்து கண்டு பிடிக்க முடியும். பபெருத்த ஒரு விண்மீன் தனது எரிபொருள் யாவும் தீர்ந்த பின், அதன் நிறையால் சிதைந்து, ஈர்ப்பாற்றல் [Gravitation] மிகுந்து அதன் உருவம் குறுகிக் கருந்துளைஉண்டாகிறது! அதன் வடிவம் ஒரு வளைவான கோள விளிம்பில் [Spherical Boundary] சூழப் பட்டுள்ளது. அந்தக் கோள விளிம்பின் ஊடே ஒளி நுழையலாம். ஆனால் தப்ப முடியாது! ஆதலால் அது முழுக்க முழுக்கக் கருமை அண்டமாக இருக்கிறது. ஈர்ப்பியல் நொறுங்கல் [Gravitation Collapse] நிகழ்ச்சி ஆக்கவும் செய்யும்! அன்றி அழிக்கவும் செய்யும்! ஒரு விண்வெளி அண்டத்தில் அல்லது விண்மீன் கோளத்தில் ஈர்ப்பாற்றல் விளைவிக்கும் உள்நோக்கிய சிதைவை ஈர்ப்பியல் நொறுங்கல் என்று வானியல் விஞ்ஞானத்தில் கூறப்படுகிறது. அண்டவெளிக் கோள்களும், விண்மீன்களும் ஈர்ப்பியல் நொறுங்கல் நிகழ்ச்சி யால் உருவாக்கப் படலாம்; அல்லது அவை முழுவதும் அழிக்கப் படலாம்.

    our-sun

    Star Structure

    சிறு விண்மீன்களில் நிகழும் ஈர்ப்பியல் சிதைவுகள்

    சில சிறு விண்மீன்களில் இந்த ஈர்ப்பியல் நொறுங்கல் மெதுவாக நிகழ்கிறது! சில காலத்திற்குப் பிறகு நின்று விடுகிறது! வெப்பம் படிப்படியாகக் குறைந்து, விண்மீன் வெளிச்சம் மங்கிக் கொண்டே போகிறது! வானியல் நோக்காளர்கள் அந்த மங்கிய விண்மீனையும் தொலைநோக்கி மூலம் காணலாம்! அவைதான் வெண்குள்ளிகள் [White Dwarfs] என்று அழைக்கப் படுகின்றன. நமது சூரியனும் உதாரணமாக பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு வெண்குள்ளியாகத்தான் தனது வாழ்வை முடித்துக் கொள்ளப் போகிறது!

    சில சமயங்களில் இறுதி நொறுங்கல் [Final Collapse] விண்மீனில் ஹைடிரஜன், ஹீலியம் ஆகியவற்றை விடக் கனமான மூலகங்களில் [Heavier Elements] திடீரென அணுக்கரு இயக்கங்களைத் தூண்டி விடலாம்! பிறகு அவ்வணுக்கரு இயக்கங்களே சூப்பர்நோவாவாக [Supernova] வெடித்து ஆயிரம் ஒளிமயக் காட்சிகளை [Galaxies] விட பேரொளி வீசக் காரண மாகலாம்! ஓராண்டுக்குப் பிறகு பேரொளி மங்கி, பரவும் முகில் வாயுக்கள் கிளம்பி, மூல விண்மீனின் நடுக்கரு [Core] மட்டும் மிஞ்சுகிறது! அம்முகில் பயணம் செய்து, அடுத்து மற்ற அகில முகிலோடு கலந்து, ஈர்ப்பியல் நொறுங்கலில் புதிய ஒரு விண்மீனை உண்டாக்கும்! எஞ்சிய நடுக்கரு பேரளவுத் திணிவில் [Extremely Dense] இறுகி வெப்பமும், வெளிச்சமும் அளிக்க எரிப்பண்டம் இல்லாது, முடமான நியூட்ரான் விண்மீனாய் [Neutron Star] மாறுகிறது!

    Steller Formation seen By Hubble Telescope

    நியூட்ரான் விண்மீன் முதல் நூறாயிரம் ஆண்டுகள் வானலைக் கதிர்க் கற்றைகளை [Beams of Radio Waves] வெளியாக்கி, விண்மீன் சுற்றும் போது கதிர்கள் பூமியில் உள்ள வானலைத் தொலைநோக்கியில் துடிப்புகளை [Pulses] உண்டாக்குகின்றன! ஓர் இளைய நியூட்ரான் விண்மீன் துடிப்பி [Pulsar] என்றும் குறிப்பிடப்படுகிறது. துடிப்பியின் குறுக்களவு சுமார் 9 மைல்! ஆயினும் அதன் பளு பிரம்மாண்டமான நமது பரிதியின் நிறைக்கு ஒத்ததாகும்!

    பூத விண்மீனில் நிகழும் ஈர்ப்பியல் சிதைவு ! கருந்துளைகள் !

    பேரளவு பளு மிகுந்த ஒரு விண்மீன் சிதையும் போது அழுத்தமோ, அணுக்கரு வெடிப்போ இறுதி நொறுங்கலை நிறுத்துவ தில்லை! அந்த விண்மீனின் ஆரம் [Radius] சிறுக்கும் போது, அதன் விளிம்பின் வளைவில் ஈர்ப்பு விசைப் பெருக்கம் அடைகிறது!

    Star formation process

    முடிவில் ஆரம் மிகச் சிறியதாகி, ஈர்ப்பு விசை பிரம்மாண்ட மாகி, விளிம்பின் வளைவு உள்நோக்கி இழுக்கப்பட்டு கருந்துளை உண்டாகிறது! அப்போது கருந்துளையின் அருகே ஒளிக்கதிர் சென்றால் அது வளைக்கப் பட்டு, உள்நோக்கி இழுக்கப் பட்டு விழுங்கப் படுகிறது!

    ஒளிக்கதிர் யாவும் விழுங்கப் படுவதால் கருந்துளையைத் தொலை நோக்கியில் காண முடியாது! கருந்துளை பிரபஞ்சத்தில் இன்னும் ஓர் மர்ம அண்டமாய், மாய வடிவத்தில் இருக்கிறது. நமது ஒளிமய வானிலும் [Galaxy] பால்மய வீதியிலும் [Milky Way], எண்ணற்ற கருந்துளைகள் இருக்கலாம்! ஆனால் இதுவரை யாரும் அவற்றின் இருக்கையைக் கண்டு பிடித்து உறுதிப் படுத்தியதில்லை! கருந்துளையின் அளவு அதன் உட்பளுவைப் பொறுத்து நேர் விகிதத்தில் மாறுகிறது. நமது பரிதியின் பளுவைக் கொண்டுள்ள ஒரு கருந்துளையின் ஆரம் சுமார் 1 மைல் [1.5 km] இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது! ஆனால் மற்ற ஒளிமய மந்தைகளில் [Other Galaxies] கருந்துளைகளை விஞ்ஞானிகள் கண்டிருப்பதாக நம்பப்படுகிறது!

    The Spinning Black Hole

    பிரபஞ்சத்தில் வெண்குள்ளி இறுதியில் கருங்குள்ளி ஆகிறது

    செந்நிறப் பூத [Red Giant] நிலையிலிருந்து விண்மீன் முடிவான வடிவுக்குத் தளர்வது ஒரு நேரடிப் பாதை!  குன்றிய பளுவுடைய விண்மீன்கள் பலவற்றில், பரந்த வெளிப்புற அரண் அண்டவெளியில் விரிந்து கொண்டே போக, அவற்றின் நடுக்கரு மட்டும் ஒளித்திறம் [Luminosity] வற்றி வெண்குள்ளியாய் தங்கி விடுகிறது. பல மடங்கு பரிதி நிறை கொண்டுள்ள விண்மீன்கள் பெருநோவா வாக [Supernova] வெடித்து விடும். அவற்றிலும் சந்திரசேகர் வரம்புக்கு [1.4 மடங்கு பரிதியின் பளு] உட்பட்ட நடுக்கரு மிச்ச அண்டமும் வெண்குள்ளி யாக மாறும். அவ்வாறு உண்டான வெண்குள்ளியில் தாய்மூலக அணுக்களிலிருந்து [Parent Atoms] எலக்டிரான் யாவும் பிடுங்கப் பட்டு, அதன் பிண்டம் [Matter]அனைத்தும் சிதைவான வாயுவாகத் [Degenerate Gas] திரிவடைகின்றது! அந்த விபரீத வாய்க்கள் வெப்பக் கடத்தி யாகி, பொதுவான வாயு நியதிகளைப் [Gas Laws] பின்பற்றுவ தில்லை! அவ்வாயுக்கள் பேரளவு நிலையில் அழுத்தம் அடையலாம்! அவற்றைப் போன்ற வெண்குள்ளிகள் சக்தி அளிக்கும் சுரப்பிகள் எவையும் இல்லாமல், நிரந்தரமாய்க் குளிர்ந்து, அடுத்து மஞ்சல்குள்ளியாகி [Yellow Dwarf], பிறகு செங்குள்ளியாகி [Red Dwarf], அப்புறம் பழுப்புக்குள்ளியாகி [Brown Dwarf] இறுதியில் முடிவான கருங்குள்ளியாக [Black Dwarf] கண்ணுக்குத் தெரியாமல் இருந்தும் இல்லாத உருவெடுக்கிறது!

    Supernova turning to a Black Hole

    சந்திரசேகர் எழுதிய வானியல் விஞ்ஞான நூல்கள்

    1952 முதல் 1971 வரை வானியல் பெளதிக வெளியீடு [Astrophysics Journal] விஞ்ஞானப் பதிவின் ஆசிரிய அதிபராகப் [Managing Editor] பணி யாற்றினார். பிறகு அந்த வெளியீடே அமெரிக்க வானியல் பேரவையின் [American Astronomical Society] தேசீய இதழாய் ஆனது. 1953 இல் ஆண்டு ராயல் வானியல் பேரவை [Royal Astronomical Society] சந்திரசேகருக்குத் தங்கப் பதக்கம் அளித்தது. 1955 ஆம் ஆண்டு தேசீய விஞ்ஞானப் பேரவைக்குத் [National Academy of Science] தேர்ந்தெடுக்கப் பட்டார். சந்திரசேகர் பத்து நூல்களை எழுதியுள்ளார். விண்மீன் சூழகத்தில் கதிர்வீச்சால் நிகழும் சக்தி கடத்தல் [Energy Transfer By Radiation in Stellar Atmospheres], பரிதியின் மேல்தளத்தில் வெப்பச் சுற்றோட்டம் [Convection in Solar Surface], விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு [An Introduction to the Study of Stellar Structure (1939)], விண்மீன் கொந்தளிப்பின் கோட்பாடுகள் [Priciples of Stellar Dynamics

    (1942)], கதிர்வீச்சுக் கடத்தல் [Radiative Transfer (1950)], திரவ இயக்க & திரவ காந்தவியல் நிலைப்பாடு [Hydrodynamic & Hydromagnetic Stability (1961)], கருங்குழிகளி கணித நியதி [Mathematical Theory of Black Holes (1983)]. மெய்ப்பாடும் எழிலும் [Truth & Beauty], விஞ்ஞானத்தில் கலைத்துமும் வேட்கையும் [Aesthetics & Motivation in Science (1987)]. விண்மீன் ஒளியின் இருமட்ட இயக்கம் [The Polarization of Starlight], காந்த தளங்களில் வெப்பச் சுற்றோட்ட வாயுக்கள் [Convection of Fluids in Magnetic Fields].

    Solar Sytem formation

    1999 ஆம் ஆண்டு ஏவப்பட்ட மனிதரற்ற விஞ்ஞானத் துணைக்கோள் [Premier Unmanned Scientific Satellite] ஓர் எக்ஸ்ரே நோக்ககத்தைக் [X-Ray Observatory] கொண்டது. அது ஒரு முற்போக்கான எக்ஸ்ரே வானியல் பெளதிக ஆய்வுச் சாதனம் [Advanced X-Ray Astrophysics Facility]. “சந்திரா எக்ஸ்ரே நோக்ககம்” என அழைக்கப்படும் அந்த துணைக்கோள், இந்திய அமெரிக்க வானியல் மேதை, சுப்ரமணியன் சந்திரசேகரைக் கெளரவிக்க வைத்த பெயராகும். அத்துணைக்கோள் எக்ஸ்ரேக் கதிர்கள் எழுப்பும் விண்மீன்களின் கூர்மையான ஒளிநிறப் பட்டைகளை எடுத்துக் காட்டும். அது பூமியின் சுழல்வீதியில் சுற்ற ஆரம்பித்ததும், ஒரு நண்டு நிபுளாவின் பொறிவீசி விண்மீனையும் [Pulsar in Crab Nebula], காஸ்ஸியோப்பியா பூதநோவாவையும் [Cassiopeia A Supernova] படமெடுத்து அனுப்பியுள்ளது.

    Image result for subramanian chandrasekher

    சந்திரசேகர் தனது 84 ஆம் வயதில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு 21 ஆம் தேதி காலமானார். இறப்பதற்கு முன் 1995 இல் அவர் எழுதிய இறுதிப் புத்தகம்: ‘பொது நபருக்கு நியூட்டனின் கோட்பாடு’ [Newton ‘Principia’ for the Common Reader]. அவரிடம் படித்த இரண்டு சைனா பெளதிக விஞ்ஞானிகள் [Tsung-Dao Lee, Chen Ning Yang] 1957 இல் துகள் பெளதிகத்திற்கு [Particle Physics] நோபெல் பரிசு பெற்றார்கள்! இரண்டாம் உலகப் போர் நடந்த போது, சந்திரசேகர் அணுகுண்டு ஆக்கத் திட்டத்தில் சிகாகோவில் முதல் அணுக்கருத் தொடரியக்கம் புரிந்த இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மியோடு [Enrico Fermi] பணியாற்றினார்! குலவித்தைக் கல்லாமல் பாகம்படும் என்னும் முதுமொழிக் கேற்ப நோபெல் பரிசு பெற்று உலகப் புகழ் அடைந்த ஸர். சி.வி. ராமனின் வழித்தோன்றலான, டாக்டர் சந்திரசேகர் வானியல் விஞ்ஞானப் படைப்பிற்கு பெளதிகத்தில் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்டதும் போற்ற தகுந்த ஆற்றலாகும்!

    ++++++++++++++++++

    தகவல்:

    1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4. Internet Article “Stellar Evolution”

    5. http://www.nasa.gov/audience/forstudents/9-12/features/stellar_evol_feat_912.html

    6. http://ezinearticles.com/?A-Star-From-Birth-to-Death&id=8981207  [April 1, 2015]

    7.  http://sc663drk.weebly.com/birth-and-death-of-the-stars.html

    8.  https://www.khanacademy.org/science/cosmology-and-astronomy/stellar-life-topic/stellar-life-death-tutorial/v/birth-of-stars

    9.  http://www.esa.int/esaKIDSen/SEM976WJD1E_OurUniverse_0.html

    10.  http://science.nasa.gov/astrophysics/focus-areas/how-do-stars-form-and-evolve/

    11. http://www.innovations-report.com/html/reports/physics-astronomy/the-birth-of-massive-stars-is-accompanied-by-strong-luminosity-bursts.html [November 7, 2016]

    12. https://www.sciencedaily.com/releases/2016/11/161107112423.htm  [November 7, 2016]

    13. http://phys.org/news/2016-11-birth-massive-stars-accompanied-strong.html  [November 7, 2016]

    14.  https://en.wikipedia.org/wiki/Star  [November 6, 2016]

    15.  https://www.eurekalert.org/pub_releases/2016-11/uov-tbo110716.php  [November 7, 2016]

    16. https://phys.org/news/2018-07-pair-colliding-stars-radioactive-molecules.html [July 30, 2018]

    17.  https://phys.org/news/2018-07-pair-colliding-stars-radioactive-molecules.html [July 30, 2018]

    *******************************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  August 3, 2018 [R-2]

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(279)

    அன்பினியவர்களே!

    அன்புநிறை வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் இங்கிலாந்திலிருந்து உங்களுடன் மனந்திறக்கிறேன். நேற்றிருந்தோர் இன்றில்லை, இன்றிருந்தோர் நாளையில்லை இதுதான் உலக யதார்த்தம். அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது தன்போக்கிலே தனது சக்கரத்தை உருட்டிக் கொண்டேயிருக்கிறது. சிரிப்போர் சிலர், அழுவோர் சிலர் சிரித்துக்கொண்டே அழுவோர் பலர். இப்படித்தான் வாழவேண்டும் என வாழத் தொடங்குவோர் எப்படியும் வாழ்ந்து முடிப்பதும் உண்டு. எப்படியும் வாழ்வோம் என்று வாழத் தொடங்குவோர் இப்படித்தான் என்று வாழ்ந்து முடிப்பதும் உண்டு.

    வகுத்த பாதை நினைத்த இடத்தில் கொண்டு சேர்ப்பது சிலருடைய வாழ்வில் தான் சாத்தியமாகிறது. இப்படியான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டே சமுதாய நிகழ்வுகளில் ஒரு கண்ணோட்டம் செலுத்த வேண்டியுள்ளது.

    சரி இனி இங்கிலாந்தில் நிகழ்ந்த சமீப நிகழ்வுகளில் சிறுதுளிகளை அலசுவோமா?

    அரசியல் அரங்கத்தில் பல காட்சிகள் நடந்தேறினாலும் முக்கியப் பங்கான ப்ரெக்ஸிட் எனும் காட்சி கொஞ்சம் தொய்வு கண்டிருக்கிறது. காரணம் தற்போது இங்கிலாந்துப் பாராளுமன்றம் தனது கோடைக்கால விடுமுறையை அமுல்படுத்தியுள்ளது. பிரதமர் கூட இச்சிக்கல்களில் இருந்து கொஞ்சம் ஓய்வு பெற இத்தாலியை விடுமுறைக்குத் தேர்ந்தெடுத்துச் சென்றுள்ளார். ஓ! அது கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடோ? பிரதமரைப் போட்டு துவைத்து எடுத்துவிட்ட சக பாராளுமன்ற அங்கத்துவர்கள் அவருடைய கட்சியினர் உட்பட பிரதமர் கொஞ்சம் மூச்சுவிட அவகாசம் கொடுத்துள்ளார்கள் போலத் தென்படுகிறது. ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ப்ரெக்ஸிட்டுக்கான எதிர்பார்ப்புகளை கொஞ்சம் அனுசரணையோடு ஐரோப்பிய ஒன்றியம் நோக்குகிறது எனும் செய்தியோடு அவற்றில் சில மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் எனும் செய்தியும் வயிற்றில் புளியைக் கரைக்கத்தான் செய்கிறது. பொறுமை, பொறுமை, பொறுமை என்கிறார்கள் சில அரசியல் அவதானிகள்.

    அதைத்தவிர லேபர் கட்சியைப் பிடித்த சனிதோஷம் இன்னும் நீங்கிய பாடில்லாதது போலத் தோன்றுகிறது. யூத இன மக்களுக்கு எதிரான இனத்துவேஷக் கருத்துகளை கொண்டவர்கள் பலர் லேபர் கட்சியில் இருப்பதாக ஒரு பரவலான குற்றச்சாட்டு அனைத்து ஊடகங்கள் உட்பட பல முன்னணி யூத மதத் தலைவர்களால் சில மாதங்களாக லேபர் கட்சியை உலுக்கி வந்திருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். இக்குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் ஜெர்மி கோபனும் உட்படுத்தப்பட்டிருக்கிறார். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை நாம் எதிர்க்கிறோமேயொழிய எமது எதிர்ப்பு யூத மக்களுக்கு எதிரானதல்ல என்பது இக்கட்சியில் குற்றம் சாட்டப்பட்டிருப்போரின் வாதம். சரி, அப்படியாயின் உலகின் அனைத்துப் பொது ஸ்தாபனங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட “யூத எதிர்ப்பு” எனும் அடைமொழிக்கான பொது வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்ள ஏன் லேபர் கட்சி தயங்குகிறது என்கிறார்கள் குற்றஞ்சாட்டுவோர். இதற்கிடையில் வந்ததடா மற்றுமோர் தலையிடி லேபர் கட்சிக்கு “பீட்டர் வில்ஸ்மன் (Peter Wilsman)“ எனும் பெயரில். எப்படி என்கிறீர்களா? பீட்டர் வில்ஸ்மன் லேபர் கட்சியின் தேசிய நிர்வாகக் குழுவில் ஓர் அங்கத்தினர். அத்தோடு இவர் தலைவர் ஜெர்மி கோபனின் நெருங்கிய ஆதரவாளர். இவர் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் லேபர் கட்சியின் மீது சுமத்தப்பட்டுள்ள  “யூதர் எதிர்ப்பு”  எனும் குற்றச்சாட்டு “ட்ரம்ப் (அமெரிக்க அதிபர்)அவர்களின் மீது வெறித்தனமான ஆதரவு கொண்ட விஷமிகளினால் சுமத்தப்படுக்கிறது என்று எகிறிக்குதித்த பேச்சு ஒலிப்பதிவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளிவந்துவிட்டது. சும்மா விட்டு விடுவார்களா? நமது ஊடகங்கள், பின்னி எடுத்து விட்டார்கள் போங்கள் ! இதன் விளைவுகளை அடுத்தடுத்த வாரங்களில்தான் பார்க்க வேண்டும்.

    அதுதவிர சில வாரங்களாக இங்கிலாந்தை கொளுத்தும் வெயில் வாட்டி வதக்கிக் கொண்டிருந்தது. மேமாதம் இறுதிக்குப் பின்னால் கடந்த யூலை மாதம் 27ஆம் திகதி தான் இங்கிலாந்தின் தென்பகுதி (அடியேன் வசிக்கும் பகுதி) மழையையே கண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 1976ஆம் ஆண்டுக்குப் பின்னால் 33 டிகிரிகளை வெப்பம் அதிகநாட்களுக்குத் தாண்டியது இவ்வருடம்தான் என்கிறார்கள். 1976ஆம் ஆண்டு கோடை நான் லண்டன் வந்து சுமார் 18 மாதங்களின் பின்னால், அப்போதுதான் சமீபத்தில் நான் ஈழத்திலிருந்து இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்திருந்ததினால் அப்போது இருந்த வெப்பம் எனக்கு சும்மா “ஜூஜூபி “. ஆனால் இப்போதோ சுமார் 42 வருடங்களின் பின்னால் வாட்டி வதக்கி விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.  பச்சைப் பசேல் என்றிருந்த புல்வெளிகளெல்லாம் வைக்கோல்போலக் காட்சியளிக்கிறது. பின்புலங்களில் உலவுவது போல இங்கும் கால்நடைகள் உள்ளன என்றால் அவைகளுக்குத் திருவிழாதான் போங்கள்!

    இந்த ட்ரம்ப் அண்ணா இருக்கார் பாருங்கோ! அவருக்குச் சும்மா விளையாட்டுன்னா பாத்துக்கோங்களேன். விட்டேனா பார் அடித்து நொறுக்கி விடுவேன் என்று ட்வீட்டர் மூலம் வெருட்டி விட்டு பின்னர் சிரித்துக் கொண்டே சந்தித்து விட்டு வந்தார் தென்கொரிய அதிபரை. அமெரிக்க நாட்டு ஜனநாயகத்தின் அத்திவாரத்திலேயே கைவைத்து விட்டார் என்று அமெரிக்க அரச உளவு நிறுவனம் குற்றம் சாட்ட, சிரித்துக் கொண்டே சென்று கைகுலுக்கி விட்டு வந்தார் ரஸ்ய நாட்டு அதிபருடன். ஈரானா? காட்டுகிறேன் பார் அவர்களுக்கு நான் யாரென்று என்று கூறி முன்னணி மேற்குலநாடுகள் அனைத்தும் சேர்ந்து கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக வெளியேறியது மட்டுமல்ல சில நாட்களின் முன்னால் ட்வீட்டர் வலைத்தளத்தின் மூலம் ஈரானுக்கு எச்சரிக்கை கூட விட்டிருந்தார் ட்ரம்ப் அண்ணா. அடிச்சார் பாருங்கோ ஒரு பல்டி ” எதுவித முன்நிபந்தனைகளுமின்றி ஈரான் நாட்டு அதிபருடன் பேசத்தயார்” என்று எதுவித முன்னறிவித்தலுமின்றி எதேச்சையாக ஓர் அறிவித்தலைச் செய்தார். புரியவில்லை ஒருவருக்கும். ஓ! ஒருவேளை இதைத்தான் “ராஜதந்திரம்” என்கிறார்களோ? என்ன செய்வது? சாணக்கியர் இருந்திருந்தால் கேட்டறிந்திருக்கலாம். எதையும் கேட்ட மாத்திரத்திலேயோ அன்றி பார்த்த மாத்திரத்திலேயோ அதைப்பற்றி முடிவு கட்டி விடக்கூடாது. ஒருவேளை அவரது இந்த யுக்திகள் தான் இன்றைய உலகிற்கு உகந்ததோ? காலம்தான் விடைபகர வேண்டும்.

    மீண்டும் மற்றுமோர் மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • அவுஸ்திரேலியாவில் தமிழரது வாழ்க்கை முறை

    ம. ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா
    முன்னாள் தமிழ் கல்வி இயக்குநர்
    M.Phil , Dip.in Ed , Dip.in.Soc , SLEAS

    அவுஸ்திரேலியா பல்லின கலாசாரம் கொண்ட நாடாக விளங்குகிறது .இங்கு வந்த தமிழர்கள் தமக்குரிய வாழ்க்கை முறையினத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும், சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களும் வாழ்கிறார்கள்.இவர்களுக்குள் பெரும்பாலும் மொழியும், சமயமும், பாலமாக இருப்பதனையே முக்கியமான தொடர்பென்று கருதலாம்.

    இலங்கையில் இருந்து வந்த தமிழர்களிலே பல பிரிவுகளும் காணப்படுகிறது.ஆதாவது உயர் கல்வித்தகைமைகளுடன் ஆரம்பத்தில் வந்தவர்கள், பின்பு இங்கு வந்து படித்து தகைமைகளைப் பெற்றுக் கொண்டவர்கள், பின்னர் நாட்டின் பிரச்சினைகள் காரணமாக இடம் பெயர்ந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வந்து சேர்ந்தவர்கள், மற்றும் முகவர்கள் ஊடாக எப்படியோ இந்த நாட்டுக்குள் வந்து சேர்ந்தவர்கள்.

    ஆனால் இந்தியத் தமிழர்கள் மத்தியிலோ சிங்கப்பூர் மலேசியத் தமிழர்கள் மத்தியிலோ இந்த நிலையினைக் காணமுடியாது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியத் தமிழர்கள் படிப்பதற்கும், கல்வித் தகைமைகளுடன் வேலைவாய்ப்பினைப் பெற்றுமே வந்திருப்பபதைக் காணமுடிகிறது.

    சங்கங்கங்கள் வைப்பது, கோவில்கள் கட்டுவது, அரசியல் செய்வது என்று பார்த்தால் அது பெரும்பாலுமே இலங்கைத் தமிழர்களாகவே காணப்படுவர்.இலங்கைத் தமிழர்கள் பலர் இந்த நட்டில் குடியுரிமை பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதற்குக் காரணம் பல இழப்புகளின் மத்தியில் வந்ததாலும் உறவினர்கள் பலர் பல்வேறு நாடுகளில் குடிபுகுந்து விட்டதாலும் இலங்கைக்குப் போவது பல தமிழர்களுக்கு அவசியமானதாகப்படவே இல்லை. ஆனால் இந்தியத் தமிழர்கள் நிலை அப்படி அல்ல. அவர்களில் பலர் வசிப்பிட உரிமையுடன் இருக்கவே விரும்பி இந்த நாட்டின் குடியுரிமையில் ஆசையில்லாத வர்களாகவே விளங்குகிறார்கள்.

    இலங்கைத் தமிழர்களில் முன்னர் வந்தவர்வர்கள் தாங்கள் வெள்ளைக்காரர் என்ற பாவனையில் முற்றும் முழுதாகவே ஆங்கிலக் கலாசாரத்தினையே தமது வாழ்வாக்கிக் கொண்டு வாழ்கின்றவர்களாகவே இன்றுவரை விளங்குகின்றார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டு பெரும்பாலும் வெள்ளைக்காரரின் தொடர்பினையே விரும்பியவர்களாய் அவர்களின் பக்கமே தம்மைப் பார்க்கும்படி ஆக்கிக்கொண்டு வாழுகின்றார்கள்.

    இன்னுமொரு சாரார் இங்கு வந்து உயர்கல்வியைக் கற்று அதனால் உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.வைத்தியர்கள், கணக்காளர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் எனலாம்.

    அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் கூடுதலாக வாழும் மாநில மாக விளங்குவது நியூசவுத் வேல்ஸ் ஆகும்.அதுவும் தலைநகரான சிட்னியில் நிறையத் தமிழர்கள் வாழுகிறார்கள். வசதியுடனும் ஒரளவு அடிப்படையான வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.அதற்கு அடுத்ததாக விக்ரோறிய மாநிலமான மெல்பேணை எடுத்துக் கொள்ளலாம்.சிட்னிக்கு அடுத்து தமிழர்கள் கூடுதலாக மெல்பேணில்த்தான் வாழுகிறார்கள்.

    ஆண்களும் பெண்களும் வேலைசெய்யுமொரு நிலை இங்கு அவசியமாகிறது. பிள்ளைகள் இருந்துவிட்டால் படிப்புக்கு அதிக பணமும் , வீட்டுவாடகைக்கு அதிக பணமும் தேவைப்படுவதால் உழைக்க வேண்டிய கட்டாயம் இங்கிருக்கிறது.இதனால் இரவும் பகலும் எந்த வேலை ஆனாலும் குடும்பமே உழைக்க வேண்டிய ஒரு கட்டாயம் இங்கு அவசியம் ஆகிவிட்டது.

    தொடர்ந்து வேலைசெய்வதனால் மன ஆறுதலுக்கு ஏதாவது கொண்டாட்டங்களும் அவசியம் தேவைப்படுகிறது. அவற்றை சனி ஞாயிறு தினங்களிலேயே அனேகம் பேர் வைக்கின்றார்கள். பிள்ளைக்ளுக்குப் பாடசாலை விடுமுறை யானதாலும் தங்களுக்கு ஓய்வு கிடைப்பதாலும் இந்த நாட்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்.

    இங்குவாழும் இலங்கைத் தமிழர்களிடையே அவர்கள் வாழ்ந்த மண்ணின் நினைவுகள் இன்னும் போகவில்லை.அதே வேளை அந்த மண்ணுக்கே உரித்தான போட்டி மனப்பாங்குகளும், பொறாமைக் குணங்களும், குறைகள் சொல்லுவதும், ஒருவரை ஒருவர் தூற்றித்திரியும், மனப்பாங்குகளும் கூட மாறவில்லை என்றே சொல்லக் கூடியதாகவே இருக்கிறது. இந்தச் சிக்கலுக்குள் மற்றைய இடத்துத் தமிழர்கள் சேர்ந்துவிடுவதில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதே.தாங்கள் வாழ்ந்த மண்ணில் எப்படியான வகுப்புப் பிரிவுகள் காணப்பட்டதோ அவைகள் இங்கு வந்த பின்னரும் மாறுவது என்பது மிகவும் சிரமான தாகவே இருக்கிறது. கூட்டங்களில் என்னதான் சமத்துவம் பற்றி வீராவேசமாகப் பேசினாலும் திருமணம் என்று வரும்பொழுது பேச்சுகள் யாவுமே வெறும் பேச்சுகள் ஆகவே போயிருக்கும். என்னதான் படித்து உயர் பதவியில் இருந்தாலும் இலங்கையின் பார்ம்பரியப் பழக்க வழக்கங்கள் பதுங்கிய படியேதான் இருப்பதை இங்கு காணமுடிகிறது.

    வெள்ளைக்கார நாட்டுக்கு வந்துவிட்ட படியால் வெள்ளைக் காரர்களாகவே இருக்கப் போகிறோம் என்று எண்ணி அதற்கு ஏற்ப தங்கள் குடும்பத்தையே மாற்றுகின்ற தமிழர்கள் ஒருபுறம். தங்கள் பிள்ளைகள் வருங்காலத்தில் தங்கள் நட்டுக்கா போகப் போகிறார்கள் ? இந்த நாடுதானே அவர்களுக்குச் சொந்தம் என்று பிள்ளைகளை முழுக்க முழுக்க ஆங்கில மயமாக்கும் பெற்றோர்கள் ஒருபுறம். யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும் என்ன வேலையாவது செய்து நல்ல வீடு, நல்ல கார், நல்ல வசதியான வாழ்க்கையினை வாழ்ந்துவிட வேண்டும் என்று எண்ணுகின்ற வர்கள் ஒருபுறம். இவர்களுக்கு மத்தியில் பண்பாடு, கலாசாரம், மொழி, சமயம், சமூகம், தனது சொந்த நாட்டின் துன்பம் பற்றிய நினைப்பு, அதற்காக எப்படி நிவாரணங்களைப் பெற்று வழங்கலாம், என்று அதற்காகவே பல செயற்பாடுகளை அல்லும் பகலும் செய்து கொண்டிருக்கும் மனோ பாவம் மிக்க குடும்பங்கள் ஒரு புறம் என்று இங்குள்ள தமிழர்கள் வாழ்வு ஓடிக் கொண்டிருக்கிறது.

    இவற்றைப்பற்றி எல்லாம் இங்குள்ள பிள்ளைகளுக்கு எதுவுமே விளங்குவதே இல்லை.ஏனென்றால் அவர்கள் அனைவருமே ஆங்கிலச் சூழலில் ஆங்கிலப் பிள்ளைகளுடன் ஆங்கில மொழியிலேயே படிக்கிறார்கள்.வயது வந்தவர்கள் தங்களுக்குள் முரண்பட்டு பிரிவுண்டு பிளவுடன் நடப்பதை அவர்கள் அறியும் நிலையில் இல்லை. அவர்களின் எண்ணங்கள் யாவுமே இந்த அன்னிய கலாசரத்தைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது.

    வருங்கால தமிழ்ப்பிள்ளைகள் தமிழ்வழி கலாசாரம் பண்பாடுகளுடன் வருவார்களா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருகிறது எனலாம்.இதனால் இங்குள்ள பெரியவர்கள்தான் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தைப் பற்றி உணர்த்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவில் எல்லாவிதமான வசதிகளும் இருக்கின்றன. ஆனால் தங்களின் சுயத்தை இழந்து விடாமல் கிடைத்த இந்த அருமையான நாட்டையும் அதன் வாய்ப்புகளையும் உரியமுறையில் தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து வாழ இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒருமித்து நினைக்கும் நாள் மிகவும் உன்னதமான உயர்வுடைய நாளாக இருக்கும்.

    Attachments area

    Share
  • கவனம் பெறாத அகராதி

    -முனைவர் இரா.வெங்கடேசன்

    எந்த மொழிகளிலும் அகராதிகளின் பணி முக்கியமானதாகும். சமூகத்தையும் இலக்கியத்தையும் புரிந்துகொள்வதற்கும் நுட்பமான மையங்களைக் கணிப்பதற்கும் அகராதிகள் தேவைப்படுகின்றன. அகராதிகள் மொழியின் வளத்தைச் சொல்லும் கருவியாக உள்ளன. அகராதிகள் இல்லையென்றால் மொழியின் வளர்ச்சியை கவனத்திற் கொள்ளமுடியாது. தமிழ்மொழியின் செழுமையை எடுத்துரைப்பதற்குத் தமிழில் தோன்றிய அகராதிகள் முக்கியக் காரணிகளாக உள்ளன. தமிழில் தொல்காப்பியத்தில் சுட்டிக்காட்டப்பட்ட அகராதிக்கான முன்னெடுப்புகள் இன்று பரந்து விரிந்து வளர்ந்துள்ளன. தமிழில் ஏராளனமான அகராதிகள் இருப்பதைப் பெருமையாகக் கொண்டாலும் சில அகராதிகள் கவனம் பெறாமல் போனது துரதிர்ஷ்டமானதாகும். 1911ஆம் ஆண்டு ஏ.சி.கிலேற்றன் ஐயர் அவர்கள் உருவாக்கிய வேத அகராதி பைபிளுக்கென உருவாக்கப்பட்ட அகராதியாகும். பைபிளில் இடம்பெற்றுள்ள சொற்களையும் சொற்களுக்கான பொருளையும் விளக்கியுரைக்கும் இவ்வகராதி குறிப்பிட்ட காலம்வரை மிக முக்கியமான அகராதியாகவே இருந்துள்ளது. காலம் செல்லச்செல்ல இவ்வகராதி கவனம் பெறாமல் போனது எதனால் என்ற காரணம் தெரியாமல் உள்ளது. இவ்வகராதி குறித்த பதிவுகளைப் பற்றிச் சொல்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    ஏ.சி.கிலேற்றன் ஐயர் அவர்களால் உருவாக்கப்பட்ட வேத அகராதியின் (A TAMIL BIBLE DICTIONARY) தேவை ஏற்பட்ட சூழலைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

    கிறிஸ்தவ போதனையின் ஆதார நூலாக இருக்கக்கூடியது ‘வேதம்’ அல்லது ‘வேதாகமம்’ (BIBLE) ஆகும். இந்தப் பைபிள் தமிழில் வந்த வரலாறு முக்கியமானதாகும். கி.பி. முதற் சில நூற்றாண்டுகளில் ரோம தேசத்தில் பலர் கிரேக்க மொழியைப் பேசியதால் அவர்களுக்காகப் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. இதன்பின்னர் சீரியாக், கொப்திக், கோதிக், ஆர்மீனியன் மொழிகளில்1 மொழிபெயர்க்கப்பட்டது.

    இதே காலக்கட்டத்தில் கிரேக்கத்தில் ரோமரின் சொந்த மொழியான இலத்தீனில் மொழியாக்கம் பெற்றது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பைபிள் திருப்புதலை ஜெரோம் என்பவர் செய்தார். பி.பி.386இல் புதிய ஏற்பாடு முழுவதையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். கி.பி. 404இல் ஜெரோம் வேதம் முழுவதையும் மொழிபெயர்த்து முடித்தார். இலத்தீனில் அமைந்த இம்மொழிபெயர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதனால் இதற்கு ‘வல்கத்தா’ (vulgage) பொது ஜனத்துக்குரிய எனப் பொருள் கொள்ளக்கூடியதாக இந்நூலை ஏற்றுக்கொண்டனர். இந்நூலை மூலப்பிரதியாகவே கொண்டு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூலைத் தவிர வேறு நூல்களைப் பயன்படுத்த தடைகள் விதிக்கப்பட்டன.2 இலத்தீன் மொழியில் இருந்த வல்கத்தா தவிர வேறு மொழிகளில் மொழிபெயர்க்கத் தடையிருந்தது. புரோட்டஸ்தாந்து சபையின் முயற்சியால் 1521வரை மார்ட்டின் லுத்தர் இரகசிய காவலில் இருந்தபொழுது ஜெர்மன் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்தார். இவரின் முயற்சியில் ஜெர்மனியில் புரோட்டஸ்தாந்து மதம் வேரூன்றியது. இதன்பின்னர் இங்கிலாந்தில் 1525இல் தின்டேல் (Tyndale) 1538இல் கவர்டேல் (Coverdale) மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. இருவருடைய பெயர்ப்பையும் அடிப்படையாகக் கொண்ட அத்தியட்சர்மாருடைய மதம் (Bishops Bilble) என்னும் பெயருடன் 1538இல் வெளிவந்தது. இதே காலகட்டத்தில் ரோமன் சபையினர் ஆங்கிலமொழியில் 1582இல் பிரெஞ்சு தேசத்தில் ரேமஸ் நகரில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டனர். இந்நூல் 1857இல் புதுச்சேரியில் தமிழில் பிரசுரமானது. மற்றொரு மொழிபெயர்ப்பு 1890இல் திருச்சியில் வெளிவந்தது.

    1611இல் இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்ஸ் கட்டளைப்படி மொழிபெயர்க்கப்பட்ட அதிகாரம் பெற்ற மொழிபெயர்ப்பு (Authorized version) முக்கியமானதாகும். இந்நூல் ஜேம்ஸ் அரசனின் திருப்புதல் என அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் செல்வாக்கு மிகுந்த நாடுகளில் இந்நூலே முதன்மை பெற்றிருந்தது.

    இந்திய மொழிகளில் முதன்முதலில் தமிழில்தான் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. புதிய ஏற்பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு இலங்கையில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இலங்கையில் அச்சகம் இல்லாததாதல் பல்தேயுஸ் மொழிபெயர்த்த மத்தேயு சுவிசேஷம் அச்சில் வரவில்லை. பலரால் திருத்தம்பெற்று 1741இல் கொழும்பில் வெளிவந்தது. இலங்கையில் தமிழ் மொழிபெயர்ப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் சீகன்பால்கு அப்பணியைச் செய்யத்தொடங்கினார். புதிய ஏற்பாட்டில் 1714இல் முதல் பாகமும் 1715இல் இரண்டாம் பாகமும் வெளியிட்டார். பழைய ஏற்பாட்டை முடிக்கவில்லை. பின் அதனை பெஞ்சமின் பி.சூல்ட்ஸ் மொழிபெயர்த்து 1778இல் வெளியிட்டார். இவரே சீகன்பால்கு செய்த புதிய ஏற்பாட்டைத் திருத்தி 1776இலும் பழைய ஏற்பாட்டைத் திருத்தி 1777இலும் வெளியிட்டார்.

    இவர்களுக்குப் பின் டாக்டர் ஜான் 1809இலும் கல்கத்தா பைபிள் கழகம் 1811 இல் புதிய ஏற்பாட்டினையும் இரேனியஸ் ஐயர் எச். பவர், பெர்சீவல், ஹன்டின், ஹென்றி பவர், லார்சன் C.H.மோனஹன் போன்றோர் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்த பலரும் தமிழ் மற்றும் இருமொழி, மும்மொழி அகராதிகளை உருவாக்கியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    தமிழில் புதிய ஏற்பாட்டின் முதல் மொழிபெயர்ப்பு 1714இலும் கடைசி மொழிபெயர்ப்பு 1943இல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைவிட தமிழிலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் வந்த கிறிஸ்தவ மதத்தின் மூலநூலாக விளங்கக்கூடிய பைபிளைத் தமிழில் அதிகமான அளவில் மொழிபெயர்க்க வேண்டிய தேவை என்னவென்றால் தமிழில் மொழிபெயர்க்கும்போது பல சிக்கல்கள் இருந்திருக்கின்றன. பைபிளை மொழிபெயர்க்கும்போது கட்டுப்பாடுகள்3 விதிக்கப்பட்டன.

    பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தபொழுது கிரேக்கம், இலத்தினில் உள்ளவாறு அணுக்கமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கைக்கொண்டு மொழிபெயர்த்தனர். தமிழில் மொழிபெயர்க்கும்போது மூன்று விசயங்களைக் கவனத்தில் கொண்டுள்ளனர். 1. சொல்லும் முறையில் அழகு, 2. இலக்கிண விதிகள், 3. தெளிவு. மற்றொன்று பைபிளை மொழிபெயர்ப்பவர்களுக்கு இரண்டு மொழிகளில் தெளிவு இருத்தல் வேண்டும். பைபிளை முழுமையாக அறிந்தவராக மூலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் தமிழிலும் உரிய தெளிவைப் பெற்றவர்கள்தாம் பைபிளைத் தமிழில் மெழிபெயர்த்துள்ளனர். ஆனால் தமிழில் மொழிபெயர்க்கும்போது பல்வேறு சிக்கல்களை மொழிபெயர்ப்பாளர்கள் பெற்றுள்ளனர்.

    “கிரேக்கம், இலத்தின், ஆங்கிலம் போன்ற மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்ட பின்னரே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில் மொழிபெயர்ப்பதற்குப் பல மொழிகளில் இருக்கக்கூடிய பைபிள் பெயர்ப்புகள் ஒன்றாக உள்ளனவா அல்லது வேறுபட்டிருக்கின்றன என்பதனைக் கண்டறிந்து மொழிபெயர்க்க வேண்டிய தேவை இருந்தது. சில பிரதிகளில் ‘கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்’ என்றும் சிலவற்றில் ‘காதுள்ளவன் கேட்கக்கடவன்’ என்றும் ஸ்திரீயின் சரித்திரத்தில் ‘நாங்கள் தொடவில்லை’ என்று எல்லாரும் சொல்லவே’ என்னும் வார்த்தைகள் சில பிரதிகளில் இல்லை. ‘சில பிரதிகளில் ஆசாரியரும் சேனைத்தலைவர்களும் வந்தார்கள் என்றும், சிலவற்றில் பிரதான ஆசாரியர் என்று மட்டுமே இருக்கின்றது’” 4 (சபாபதி குலேந்திரன் 1967:23)

    இப்படியான வித்தியாசங்கள் தமிழுக்கு முன்னரே பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள்களில் காணப்படுகின்றன. எது ஆதியில் எழுதப்பட்டதென கவனமாகவும் நுட்பமாகவும் ஆராய்வது அவசியம். மற்றொன்று தமிழில் பேச்சுமொழி, எழுத்து மொழி என்ற வேறுபாடு உண்டு. சீகன்பால்கு மக்களின் பேச்சு வழக்கையும் இலக்கிய வழக்கையும் கலந்து பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தார். சீகன்பால்கு மக்களின் பேச்சுவழக்கை அதிகமாகக் கையாண்டார். அதனை வீரமாமுனிவர் கேலியும் கிண்டலும் செய்தார்.5 சீகன்பால்குவிற்கு பின்னால் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் கூடுதலாக கவனம் செலுத்தி மொழிபெயர்த்தனர்.

    தமிழில் பைபிளை மொழிபெயர்த்தபின் அதனை மக்களிடையே கொண்டு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. சமயம், வழிபாடு, மொழி, பண்பாடு, அரசியல், உணவு, பழக்க வழக்கங்கள் என அனைத்திலும் அன்னியமாகிநின்ற தமிழர்களிடம் பைபிளை ஏற்றுக்கொள்ள வைப்பது சவாலாக இருந்தது. தமிழகத்தில் தொடக்ககாலத்தில் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினர். அதற்கான காரணத்தைச் சீகன்பால்கு,

    “ஐரோப்பியர் வாரந்தோறும் அவர்களது சீயோன் என்னும் திருச்சபையில் டேனிசு (Danish) மொழியிலும் செர்மன் மொழியிலும் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்றார்கள். ஆனால் அத்திருச்சபையிலிருந்து வெளியே வந்தவுடனே மது அருந்தினார்கள். பெருந்தீனிக்காரர்களாய் இருந்தார்கள். விபசாரமும் விவாகரத்தும் செய்தார்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்து நடனமாடினார்கள்; அவர்கள் சூதாடினார்கள்; பிறரை சபித்தார்கள்; சத்தியம் பண்ணினார்கள்; இறைவனை தினந்தோறும் நினைப்பதற்கு அடையாளமாக அவர்கள் எந்தவிதமான வெளிப்படையான காரியங்களையும் செய்யவில்லை. அவர்கள் இறைவனைப் பற்றிய அறிவில்லாத புத்தியீனராய் வாழ்ந்தார்கள்; தமிழரைக் கருப்பு நாய்கள் என்று திட்டினார்கள். இந்த தீச்செயல்களை அவர்கள் தங்களுடைய ஆலய வழிபாட்டிற்குப் பின் செய்ததால் அவர்களுடைய ஆயர்கள் இந்த இழிவான காரியங்களைச் செய்யத் தூண்டினார்கள் என்று பல தமிழ் மக்கள் நினைத்தார்கள். இந்த ஐரோப்பியரே வீடுபேறு அடைவார்கள் என்று கிறித்தவர்கள் நம்பினால், நன்னடத்தையுள்ள தமிழர் நிச்சயமாக ஈடேற்றம் பெறுவது உறுதியான காரியம் என்று தமிழ் மக்கள் எண்ணினார்கள். மேலும் இப்படிப்பட்ட இழிவான ஐரோப்பியருடன் மோட்சத்தில் இருப்பதைவிட தங்கள் சொந்த முன்னோர்களுடனும் வீட்டாருடனும், இனத்தாருடனும் நரகத்தில் இருப்பது சிறப்பென்று தமிழர்கள் நினைத்தார்கள்.” 6 (பெ.டேனியல் ஜெயராஜ் 2017:82)

    என்று கூறியுள்ளார். தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய புரிதலைச் சீகன்பால்கு கொண்டிருந்ததால்தான் 1714இல் மக்கள் பேசிய பேச்சு மொழியை அடிப்படையாக வைத்து பைபிளை மொழிபெயர்க்கின்றார்.

    1708ஆம் ஆண்டு சனவரியில் சீகன்பால்கு தமிழர்களிடம் கிறிஸ்தவ மதத்தின் சிறப்பினை விளக்க முயல்கிறார். அப்போது தமிழர்கள் மறுமொழி கூறிய விதம் மிகுந்த வேதனையைக் கொடுத்தது.7 சீகன்பால்குவிற்கு தமிழர் பலர் கடிதங்கள் வாயிலாக கிறித்துவ மதத்தைப் பற்றியும் ஐரோப்பியர்கள் குறித்தும் எழுதினர்.

    சீகன்பால்கான “நீங்கள் எங்கள் சாதியைச் சேர்ந்தவராய் இல்லாமலிருப்பது வருத்தமான காரியம். நீங்கள் எங்கள் சாதிக்காரராய் இருந்தீர்களானால் எங்கள் நாட்டு மன்னர்களும் பெரியோர்களும் உங்களை மதித்திருப்பார்கள். கணக்கற்ற சீடர்கள் உங்களைப் பின்பற்றியிருப்பார்கள். ஆனால் நீங்கள் ஐரோப்பிய சாதியைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வெறுக்கப்பட்டிருக்கும் கிறித்தவத்தை எங்களுக்கு அறிமுகம் செய்வதையே உங்களுடைய மேலான நோக்கமாகக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் எங்கள் மத்தியில் வாழும் (ஐரோப்பியர்) கிறித்தவர்கள் நன்மைகளைச் செய்யாமல் அதிகமான தீமையையே செய்கின்றனர். எனவே நீங்கள் கூறும் ஞானமும், புத்தியும் எங்கள் நாட்டிற்குப் பயன்படாது.” (Hallt Reports. 1716, 1897) என்று கூறியுள்ளனர். மேலும் ஐரோப்பியர்கள் நீதியையும் கற்பையும் அறச்செய்கையையும் அறியாதவர்கள். அவர்கள் உதவிகள் செய்யமாட்டார்கள். உடலைத் தூய்மையாக வைக்காதவர்கள். கோபம், தன்னலம், ஆணவம், உலோபித்தனம், காமம், பகை, பெருந்தீனி, சோம்பல் போன்ற தீய செயல்களின் மொத்த உருவமாக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

    சீகன்பால்குவிற்குப் பிறகு தமிழகம் வந்த ஐரோப்பியப் பாதிரிமார்களைத் தமிழர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலைதான் இருந்தது. இதே காலகட்டத்தில்தான் (1711) பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அதனை முழுமையாக மக்கள் வாசிப்பதற்கான நூலாக மாற்ற வேண்டிய தேவை இருந்தது. சரியாக 200 ஆண்டுகள் கழித்து பைபிளுக்கென்று தனியாக வேத அகராதியை (A TAMIL BIBLE DICTIONARY) ஏ.சி.கிலேற்றன் ஐயர் உருவாக்கியுள்ளார்.

    பைபிளைப் புரிந்துகொள்வதற்கான ஆதார நூலாக வேத அகராதியைக் கொள்ளலாம். 1911ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்வகராதி உருவாக்கத்திற்கு A.பெல்பெர்க், H.E. பிலிப்ஸ், ட்ரைகார்ட், H.சொமேரஸ் போன்ற வேதசாஸ்திரிகளின் உதவியோடு ஏ.சி.கிலேற்றன் ஐயர் உருவாக்கியுள்ளார். இவ்வேத அகராதியை உருவாக்குவதற்கு இதற்கு முன்னால் இருந்த வேத அகராதி (H.பவர்), வேத வியாக்கியானங்கள் முதலிய நூல்களை ஆதாரமாகக் கொண்டுள்ளனர். இந்த நூலின் முன்னுரையில் வேத அகராதியை உருவாக்குவதற்கான காரணத்தைக் குறிப்பிடும்போது,

    “தமிழில் முழு வேதாகம சொல்லகராதி இல்லாததினால் கதைப் போலும் உதவுமாறு அநேக பதங்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த வேத அகராதியை வாசிப்போர் இதில் சொல்லியிருக்கும் ஒவ்வொரு நிபந்தத்தின் பொருளை முழுதும் அறிய வேண்டும் என்று விரும்பினால் அந்தந்த நிபந்தத்தில் குறித்த வாக்கியங்களை எல்லாம் வேதத்தில் பார்ப்பது அவசியம். பல பதங்களைப் பற்றிய விசேஷம் அவ்வளவு இல்லாமையால் அவைகளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அடங்கியிருக்கும் ஒரே வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது.” (ஏ.சி. கிலேற்றன், 1911:v)

    என்று குறிப்பிடுகின்றார். 1911இல் இந்த அகராதி உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த அகராதி உருவாவதற்கு முன்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் அனைத்திற்கும் ஒரே அகராதியாக இதனை உருவாக்கியுள்ளார். அதாவது தமிழ் பைபிளில் ஒரே ஆளின் பெயர் இடத்தின் பெயர் வெவ்வேறு வசனங்களில் வித்தியாசமான முறையில் எழுதியுள்ளனர். அதனையெல்லாம் இவ்வகராதியில் கிலேற்றன் ஐயர் முறைப்படுத்துகிறார். அதாவது யெகு – ஏழு, எத்சேர்-ஏசெர், ஏசேர், ஏத்சேர், -எசேர், ஏனாக்கீம்-ஆனாக்கீம்-வாசியா-உசியா என முறையாக மாற்றுகிறார். நிபந்தங்களில் எழுதியிருக்கும் பெரிய எண்கள் அதிகாரங்களையும் அவ்வெண்களுக்கு முன் மேலிருக்கும் சிறு எண்கள் வசனங்களையும் காட்டுகின்றன. (ப.5)

    இன்றைக்கு அகராதி உருவாக்கப்பணிகள் தலைச்சொல்பகுதி, அகராதிச்சொல், கட்டிலா வடிவங்கள், கட்டுடை வடிவங்கள், திரிபுகள், ஆக்கச்சொல், தலைச்சொல் இணைப்பு, எழுத்துப்பெயர்ப்பு, இலக்கணக்குறிப்பு, துணைப்பதிவு, ஒப்புருச்சொல் பதிவு, தொடர்பதிவு, பொருள்விளக்கப்பதிவு, பொருள் விளக்கம், இணைச்சொல், மொழிபெயர்ப்பு, இணைச்சொல், எடுத்துக்காட்டு, குறிப்பான்கள், கலைக்களஞ்சிய விளக்கக் குறிப்புகள், குறுக்கு நோக்கீடு, எதிர்மறை, நிறுத்தக்குறிகள், விளக்கப் படங்கள், சொல்மூலம் போன்ற பல்வேறு கோணங்கள் கவனம் பெறுகின்றன. 1911ஆம் ஆண்டு வெளிவந்துள்ள வேத அகராதி மேற்சொன்ன பலவற்றைப் பயன்படுத்தியுள்ளது கவனத்திற்குரியதாகும்.

    தலைச்சொல் இணைப்பு

    அகராதிகளில் ஒருசொல் மட்டுமே தலைச்சொல்லாகத் தரப்பட்டு அதற்குப் பொருள் விளக்கம் தரப்படும். எனினும் அகராதிகளில் ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் அல்லது இணைப்புச்சொற்கள மூலம் தலைச்சொற்களாகத் தரப்படுவதுண்டு. இதனை தலைச்சொல் இணைப்பு என்பர். இதனை இவ்வகராதியில் பல இடங்களில் காணமுடிகிறது.

    அசபியா
    அஙபியா
    அஷபியா
    அஷாபியா (Hashabiah) (p.6)
    அசரியேல்
    அசரெயேல் (Azared) (ப.7)

    தலைச்சொல் தருவதன் மூலம் பக்க எண்ணிக்கை, பன்மொழிக்கான மாற்று வடிவங்கள் தவிர்க்கப்படுகின்றன. 

    எழுத்துப்பெயர்ப்பு

    ஒருமொழிச் சொல்லைப் பிறமொழி எழுத்துக்களில் எழுதுவது எழுத்துப் பெயர்ப்பாகும். பிற மொழியினரின் பயன்பாட்டிற்காக இது செய்யப்படுகிறது. மேலும் ஒப்புருச் சொற்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுகிறது. இதனை வேத அகராதியில் காணமுடிகிறது.

    அகசாய் (Ahazai)
    அகசியா (Ahaziah) (p.1) 

    பொருள் விளக்கப் பகுதி

    தலைச்சொல்லிற்குரிய பொருளையும் அதனோடு தொடர்புடைய செய்திகளையும் விளக்கங்களையும் கொண்டிருப்பது பொருள்விளக்கப் பகுதியாகும். தலைச்சொல்லின் பொருளை எளிமையாகவும் விளக்கமாகவும் தருவது ஓர் அகராதித் தொகுப்பாளரின் கடமையாகும். பொருள் உத்திகள் மொழித்தொடர்புடைய உத்திகள் (Linguistic techniques) என்றும் மொழித் தொடர்பிலா உத்திகள் (Extr Linguistic techniques) என்றும் இருவகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. மொழியின் உட்கூறுகளைச் சார்ந்து அவற்றின் உதவியால் தரப்பெறும் பொருள் விளக்கம் முதல்வகை விளக்கமாகும். குறியீடுகள், நிறுத்தக்குறிகள், படங்கள், படப்பகிர்வு, பத்தி அமைப்பு போன்றன இரண்டாம் வகையினைச் சார்ந்த விளக்கமாகும். (சரளா ரங்கநாதன், 2009:32). பொருள் விளக்கத்தில் அடங்கும் பொருள் வரையறை, இணைச்சொல், எடுத்துக்காட்டு, குறிப்பான்கள், விளக்கக் குறிப்புகள், குறுக்கு நோக்கீடு, நிறுத்தக்குறிகள், விளக்கப்படங்கள் போன்றவற்றை இவ்வேத அகராதி தந்துள்ளது. இவ்வகராதி பல சிறப்புகளைப் பெற்று அமைந்துள்ளது.

    அண்ணகன் – Enunch என்ற சொல்லுக்கு விளக்கம் தரும்போது ஆண்மை இல்லாதவன் (ஏசா563) ‘இயல்பாகவே ஆண்மை இல்லாதவர்களும் அப்படிச் செய்யப்பட்டவர்களுமாகிய இவர்களை அரண்மனை அந்தப்புரத்தில் ஊழியர்களாக ராஜாக்கள் வைத்தார்கள்.’ இந்த விளக்கத்தில் கவனிக்கவேண்டியது இயல்பாக ஆண்மை திரிந்தவர்களால் சிக்கல் இல்லை என்பதைக்கூறிவிட்டு ஆண்மை கெடும்படி செய்துவிட்டு அவர்களை அரண்மனை அந்தப்புரத்தில் பணிக்கு வைத்தார்கள் என்று சொல்லும் பதிவிலிருந்து அன்றைய சமூகத்தில் இராஜாக்களின் அதிகார மையத்தைக் காட்டுவதாக உள்ளது. இதே போன்ற பல நிகழ்வுகளை அதிர்வுகளாகப் பல இடங்களில் தந்துள்ளார்.

    பல இடங்களில் விவாதங்களை முன்வைக்கிறார். அதிசயமானவர் (Wonderful) என்ற பதத்திற்கு விளக்கம் சொல்லும்போது இப்பதம் ஆலோசனைக்கர்த்தர் என்பதோடு சேர்க்கப்பட வேண்டும். ஆரியர் படையெடுத்து வந்து யூதாவின் ஜனங்களைத் தண்டித்த பிறகு உண்டான அமைதியான காலத்தில் கடவுள் அவர்களை நடத்தும்படி அதிசயமானவைகளைப் பாதிக்க ஒருவரை அனுப்புவார் என்பது ஏசாயாவின் அர்த்தம். யூத சாஸ்திரிகள் அதிசயமானவர் என்பது மோசியாவைக் கருதுகிறதென்றும் கிறிஸ்தவர்கள் இது இயேசுவைக் கருதுகிறதென்றும் சொல்கிறார்கள். (சபாபதி குலேந்திரன், 1967:18) என்று விவாதம் செய்து தீர்வு சொல்கிறார். பல இடங்களில் விரிவாக விளக்கம் தந்து விவாதத்தை பகிர்கின்றார்.

    இந்த நூலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அளவை என்ற பகுதியில் நீட்டல் அளவை விபரத்தைக் கொடுத்துள்ளார். விரற்கடை, உள்ளங்கை, சாண், முழம், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாட்டில் பாகம், மைல் போன்றவற்றிற்கான அளவைகள் தரப்பட்டுள்ளதைத் தந்துள்ளார். மேலும் மரக்கால், ஒன்றரைக்கலம், எப்பா, குடம், படி, ஓமர், காற்படி, ஆழாக்கு, இடம், படி, கலம், கோரா, ஜல், சேக்கல், கிறாத்தல், தாலந்து போன்ற அளவைகள் குறித்து விளக்கமாகக் கூறியிருப்பது கவனத்திற்குரியதாகும்.

    அகராதியில் ஏராளமான விளக்கப்படங்கள் தரப்பட்டுள்ளன. ப.9, 10, 11, 12, 15, 16, 20, 22, 30, 31, 55, 57, 63, 64, 68, 71, 73, 76, 77, 198, 200, 193, 188, 179, 171, 176 இந்தப் படங்கள் கவனிக்கத்தக்கன. ஏனென்றால் பைபிள் சொல்லும் கதைகள், நிகழ்வுகள் தமிழர்களுக்குத் தொடர்பில்லாதது அதனால் விளக்கப்படங்கள்வழி கருத்துக்களை இவ்வகராதி விளக்க முன்வந்துள்ளது சிறப்பு.

    வேத அகராதியின் அட்டையில் ஒரு வாசகம் தரப்பட்டுள்ளது.  ‘இதை வாசிப்போர், அதாவது விசேஷமாய் அதிக அளவிலான சிறுகிராமங்களிலும் பட்டிக்காடுகளிலும் வசிக்கும் பிரசங்கிமார் சுவிசேஷகன்மார் உபாத்திமார் முதலியோர் இதிலிருந்து நல்உதவியும் தேர்ச்சியும் அடைவார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த வாசகங்கள் உண்மையானவை. பைபிள் தெரியாத ஒருவர் இந்த அகராதியை வாசித்தபின் பைபிளைப் படித்தால் பைபிள் முழுமையாக விளங்கும்.

    வேத அகராதி என்பதைத் தாண்டி வேதத்திற்கு விளக்கம் தருவதாக அமைந்துள்ளது. வரலாற்றுச் செய்திகள், காலம் பற்றிய நுட்பமான தகவல்கள், பின் விவரணைக் குறிப்புகள், தொன்மக்கதைகள், அரசியல் செய்திகள், அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள், உணவு, உடை, நாடுகளைப் பற்றிய தகவல்கள், உபதேசங்கள், போதனைகள், அரிய தகவல்கள் எனப் பல நுட்பமான தகவல்களை வைத்துள்ளது. இந்த நூலைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதானால் அத்தேனே என்ற சொல்லுக்கு விளக்கம் தரும்போது ‘கிரேக்க தேசத்திலுள்ள நகரங்களின் சிரேஷ்டமான இந்நகரம் துறைமுகத்திலிருந்து மூன்று மைல் தூரம் ஒரு சமவெளியிற் கட்டப்பட்டிருந்தது. இதன் மத்தியில் ஒரு மலையிலே கல்விக்குச் சரஸ்வதி போலச் சொல்லப்படும் இத்தேனே தேவிக்கும் இந்த மலைக்கு அடுத்த மார்ஸ் மேடை என்னும் குன்றின்மேல் முருகக்கடவுளைப் போல ‘மார்ஸ்’ என்னும் தேவனுக்கும் கோயில்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன (ப.20) என்ற மாற்றுமதமான இந்து மதக்கடவுள்கள் பற்றிய குறிப்புகளைத் தரக்கூடிய நுட்பமான நூலாக இதனைப் பார்க்கலாம். வேதத்திற்கு அகராதியாகிய இருக்கக்கூடிய இந்நூல், தமிழ் உயிர் எழுத்துக்களுக்கான அகராதியாக உள்ளது. உயிர்மெய் எழுத்துக்களுக்கு அகராதி வரும் என்று ஆசிரியர் கூறியுள்ளார். அது வந்ததா எனத் தெரியவில்லை. பைபிளைத் தெரிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் தேவையான நூல் இவ்வகராதி. இது கவனம் பெறாமல் போனது துரதிர்ஷ்டமானது. 

    குறிப்புகள்

    1. கி.பி. முதற் சில நூற்றாண்டுகளில் ரோம சாம்ராச்சியத்தில் பலர் கிரேக்க பாஷையைப் பேசியபோதும் அதைப் பேசாதவர்களின் நன்மைக்காக அவர்கள் பாஷைகளில் வேதம் மொழிபெயர்க்கப்பட்டது. சீரியாக் (Syriac), பாஷையில் இரண்டாம் நூற்றாண்டிலும் கொப்திக் (Coptic) பாஷையில் மூன்றாம் நூற்றாண்டிலும் அடுத்த நூற்றாண்டுகளில் கோதிக் (Gohthic) ஆர்மீனியன் (Armenian) பாஷைகளிலும் திருப்புதல்கள் எழுந்தன (சபாபதி குலேந்திரன், ப.7)
    2. 1545-1563இல் ரோமான் சபையின் மகாசங்கங்கள் திரெந்து (Trent) நகரில் கூடி கிறிஸ்தவர்கள் வேறு திருப்புதல்களை உபயோகிக்கக்கூடாதெனக் கட்டளையிட்டது (சபாபதி குலேந்திரன், ப.9)
    3. வேத நூல்கள் உன்னத விஷயங்களைப் பாராட்டும். இவைகள் சொல்வனவெல்லாம் அவ்வச் சமயத்தவர்களுக்கு முக்கியமானவை. இவைகளின் வசனங்கள், சொற்கள் மாத்திரமன்றி உருபுகள், இடைச்சொற்கள், முதலியனவும் முக்கியமானவை. ஆகவே, வேத நூல்களை மொழிபெயர்ப்பவருடைய சுயாதீனம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகும். (ப.14
    4. சபாபதி குலேந்திரன், 1967, பைபிள் மொழிபெயர்ப்பு வரலாறு, ப.23
    5. சீகன்பால்க் கற்றோரை இடையிடையே சந்தித்தாலும் இவருடைய நடவடிக்கைகளையெல்லாம் பாமரரோடுதான் இருந்தன. இவர்கள் பழைய தமிழ் இலக்கியங்களையும் பண்பாட்டையும் அறிந்தவர்களல்லர். இவர்கள் மத்தியிலே அவர் வசித்து வந்தார். இப்படிப்பட்டவர்களே அவருடைய சபையார்; இவர்களையே தமது மனத்தில் வைத்து தமது திருப்புதலைச் செய்தார். சீகன்பால்கு 1. கொரி, 3:2 நீங்கள் இன்னும் மாம்சத்தாராயிருக்கிறீர்கள் எனத் திருப்பியிருந்தார். அதை உடலாசையில் தாழ்ந்த உணர்வினர்களாயிருக்கிறீர்கள்’ எனத் திருப்பியிருக்க வேண்டுமென்றார் முனிவர்.” (சபாபதி குலேந்திரன், ப.51)
    6. பொடேனியல் ஜெயராஸ், 2017 தமிழ் கிறித்தவ அறம் சீகன்பால்கு எழுதிய தன்மவழி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    7. ஐரோப்பியர் அனுதினமும் செய்யும் அக்கிரமங்களை நாங்கள் எங்கள் சொந்தக் கண்களால் பார்க்கின்றோம். அவை எங்களுக்கே அருவருப்பாய் இருக்குமானால் கடவுளுக்கு அவை எவ்வளவு அதிகமாக அருவருப்பாய் இருக்கும் என்பதை யோசிக்க எங்களால் இயலவில்லை என்றார்கள்.” Halle Reports, (i.e., Der Konig, missionaries Ours Ost Indien eingesandter Ausfuhrlicher Berichten, Vol.I, halle, I – Verlegung des waysen – Hausen – p.544
    8. Halle Reports, 1716. p.897
    9. ஏ.சி.கிலேற்றன், 1911 வேத அகராதி, The Christian Literature Society for India, madras, Colombo and London.
    10. சரளா ரங்கநாதன், தமிழ் அகராதிகளின் வளர்ச்சிப் போக்கும் அமைப்பு வேறுபாடும், ஸ்ரீ முருகன் பிரிண்டர்ஸ், சென்னை.

    *****

    கட்டுரையாசிரியர் – இணைப்பேராசிரியர்
    இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர்.

     

     

    Share
  • ”சமணமும் சங்கதமும்”

    தேவ் ராஜ்


    ‘சங்கதம் பார்ப்பனர்க்கு மட்டுமே உரிய மொழி. பவுத்த – சமண சமயங்கள் சங்கதத்தை ஆதரிக்கவில்லை. சாமானியப் பேச்சு வழக்கு மொழிகளையே கையாண்டு வந்தன’ என்பது
    பரவலான ஆழ்ந்த புரிதல். ஆனால் சமண வரலாறும், சான்றுகளும் இக்கருத்தைச் சற்றும் ஏற்க முடியாமல் அமைந்திருக்கக் காண்கிறோம். பஞ்ச பரமேட்டிகளைப் போற்றும் சமண மந்திரமான ணமோகார மந்திரம் பாகதத்தில் அமைந்திருப்பதும் உண்மையே. ஆனால் ஜைனம் பிரணவத்தை, பீஜாக்ஷரங்களை மறுக்கவில்லை. சமணக் கோட்பாட்டுக் கலைச்சொற்கள் அமைந்திருப்பது ஸம்ஸ்க்ருதத்தில்.

    அடிப்படையில் பௌத்தம், ஜைநம் என்பவை சங்கதப் பெயர்களே;
    தீர்த்தங்கரர் பெயர்கள் சங்கதத்தில், கணதரர் பெயர்கள் சங்கதத்தில். சமணக் கல்வெட்டு சொல்லும் சில சமணத் துறவியருக்கு அழகான சங்கதப் பெயர்கள் –
    ப₄த்₃ரோ ப₄த்₃ரஸ்வபா₄ஶ்ச த₄ரஸேநோ யதீஶ்வர:||
    பூ₄தப₃லி: புஷ்பத₃ந்தோ ஜிநபாலிதயோகி₃ராட்|
    ஸமந்தப₄த்₃ரோ தீ₄த₄ர்மா ஸித்₃தி₄ஸேநோ க₃ணாக்₃ரணீ:||

    புகழ்பெற்ற கணதரர் சிலர் –
    வ்ரு’ஷப ஸேன, கேசி, சுபதத்த, ஆர்யகோஷ, வசிஷ்ட, ப்ரஹ்மசாரி, ஸோம, வீரபத்ர, ஸ்ரீதர, இந்த்ரபூதி கௌதம, ஸுதர்ம ஸ்வாமி. இவர்கள் தீர்த்தங்கரர்க்கு அணுக்கமாக இருந்து கோட்பாடுகளைப் பரப்பினர். ஆநந்தகனர் என்ற வெள்ளாடைத் துறவியார் சிறந்த கவிதைகளைப் படைத்தார். இருபெரும் சமணப்பிரிவினரும் பின்பற்றும் ‘தத்வார்த்த ஸூத்ரம்’ அமைந்திருப்பது சங்கதத்தில்.

    சமணத் துறவியர் நந்தி கணம், ஸேன கணம், ஸிம்ஹ கணம், தேவ கணம் என நான்கு கணத்தவராக இருந்தனர். வஜ்ர நந்தி மதுரையில் சமண சங்கத்தை நிறுவினார். பவணந்தி முனிவர் [நன்னூல்] நந்தி கணம் சார்ந்தவர்; அப்பரடிகளார் தாய்ச் சமயம் திரும்புமுன் சமணத்தின் ஸேன கணத்தைச் சேர்ந்தவராக இருந்தார்; ‘தர்மஸேனர்’ அவர்தம் பெயர். திருஞான ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளின் ‘திருவாலவாய்ப் பதிகம்’ பார்த்துத் தெளிவு பெறலாம். தமிழ்க் காப்பியமான நீலகேசிக்கு உரை எழுதியவர் ஸமய திவாகர முனிவர்.

    இன்றளவும் சமணத் துறவியர் சங்கதப் பெயர்களோடுதான் இருக்கின்றனர்; இன்றைய சமண உலகின் புகழ்பெற்ற துறவியார் ‘தருண ஸாகர முனி’. இவரது சொற்பொழிவுகளை யுட்யூபில் கேட்கலாம்.

    சமணரின் தொன்மையான ஆகம நூலான ஷட்கண்டாகமத்தின் தவள டீகை அருமையான சங்கத சுலோகங்களுடன் திகழ்கிறது, மாதிரிக்கு ஒன்று-
    பூர்வாபரவிரோதா₄தே₃வ்ர்யபேதோ தோ₃ஷஸந்ததே:|
    த்₃யோதக: ஸர்வபா₄வநாமாப்தவ்யாஹ்ருʼதிராக₃ம:||

    சந்திரகுப்த மௌரியர் காலத்தில் வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த சமணர் குழாம் கருநாடகத்தில் நிலைபெற்று வளர்ந்தது; தென்னக மொழிகளில் சமயப் பரவல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் சங்கதம் ஒதுக்கப்படவில்லை. ‘மஹா புராணம்’ கருநாடகச் சமணர் தந்த முக்கியமான சங்கத நூல். சமணர் தம்மில் வாதுவல்ல அறிஞர்க்கு ‘வாதீப ஸிம்ஹ’, ’வாதி கண்டீரவ’ எனும் பட்டங்களை அளித்துக் கவுரவித்தனர். பாரதத்தில் விருதளிப்புச் சடங்கை முதலில் தொடங்கி வைத்தது சமணராகவே இருக்க வேண்டும்.

    தென்னகத்தின் மிகுந்த புகழ் படைத்த குந்தகுந்த ஆசார்யரும் சங்கதத்தில் நூல்கள் செய்துள்ளார். இவரது தீக்ஷா நாமம் – பத்ம நந்தி. மாநதுங்க முனி, ரிஷப தீர்த்தங்கரர் குறித்து ‘பக்தாமர ஸ்தோத்ரம்’ இயற்றினார்; இத்துதி நூல் சமணரால் மிகவும் மந்திர சக்தி பொருந்தியதாகக் கருதப்படுகிறது. பன்முக ஆற்றல் படைத்த ஹேமசந்த்ர முனியின் சங்கதப் படைப்புகள் பற்றித் தனியாக எழுத வேண்டும்.

    ப்ராஹ்மி லிபியை ஜைனரின் பழைய பகவதி ஸுத்தம் “ணமோ பம்பியே லிவியே” என்று போற்றி வணங்கினாலும், இன்றைய பாகதச் சமண நூல்கள் அச்சேற்றப்படுவது தேவநாகரியில்தான். அதைப் பார்த்துவிட்டுப் பாகத மொழிக்கெனத் தனியான எழுத்துருக் கிடையாது என முடிவுகட்ட இயலாது, இதே நிலைதான் சங்கதத்துக்கும். அன்றைய கால கட்டத்தில் எல்லா மொழிகளுக்கும் ப்ராம்மி லிபி பொது எழுத்துருவாக இருந்திருக்க வேண்டும். இன்றைய தேவநாகரி 120 மொழிகளுக்கு ஒரே எழுத்துருவாக விளங்குவதுபோல. அதே காரணத்தால் சமணமும் அந்த லிபிக்கு மரியாதை தந்திருக்கலாம்.

    அருமையான சங்கத நிகண்டு செய்தளித்த அமரசிம்மர் பார்ப்பனரல்லர்.

    அருகர் சமயப் பரப்புரைக்கு பேச்சுமொழிகளைக் கையாண்டனரே தவிர, சங்கத வெறுப்பு அவர்களிடம் கிடையாது. அர்த மாகதி, சூரஸேனி மொழிகளில் அவர்கள் எழுதினாலும் கூடவே ஸம்ஸ்க்ருதத்திலும் சாயை காட்டியே எழுதியுள்ளனர்.

    சமயவாதிகளின் நோக்கம் சமயப்பரவல் மட்டுமே; மொழி வளர்ப்பது அவர்களது நோக்கமன்று. தம் கோட்பாடுகளை விரைவில் பரப்பப் பிராந்திய அளவில் பெரும்பான்மையோர் பேசும் மொழிகளை ஊடகமாக்கிக் கொண்டனர். கோட்பாடுகளைச் செந்தரமாக்கிப் பொதுப்புரிதலுக்கு ஆக்கும்போது சங்கதத்தைத் துணை கொண்டனர். சமணக் கோட்பாடுகள் நூற்பா ஆகும்போது சங்கதமே துணை செய்கிறது. சமணர் தொடர்பில்லாத இந்திய மொழிகள் இல்லை; ஆனால் அவர்களின் சங்கதப் பங்களிப்பும் மிகுதி, இதுவே உண்மை. சமணம் சமயம் தவிரப் பிறதுறைகளிலும் அவர்கள் நூல்கள் யாத்துள்ளனர்.

    “What would be the condition of the Indian Sanskrit literature if the contribution of the Jains were removed? The more I study Jain literature the more happy and wonderstruck I am.”
    – Dr Hertel, Germany

    ஜப்பானிய அறிவியலார் தம் ஆய்வுரைகளை உலக அளவில் முற்செலுத்தும்போது ஆங்கில மொழி வல்லுநரைத் துணை கொள்வர், தம் கல்வித் திட்டத்தில் ஆங்கிலத்துக்கு இடமில்லாதபோதும். ஆங்கிலம் இன்றைய உலகில் இன்றியமையாத மொழியாக விளங்குவதுபோல், அன்று தெற்காசியாவைப் பொருத்த மட்டில் சங்கதம் இன்றியமையாத மொழியாக இருந்தது.

    Share