Category: Featured

Featured

  • படக்கவிதைப் போட்டி (172)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 30

    க. பாலசுப்பிரமணியன்

     

    மகிழ்வும் திறனும் தொழிலுக்குத் தேவை

    பல நேரங்களில் நமக்கு நாம் விரும்பிய தொழிலோ அல்லது வேலைகளோ கிடைப்பதில்லை. எவ்வளவுதான் ஆர்வம் நமக்கு இருந்தாலும் குறிப்பிட்ட சில கல்வித்தகுதிகள் இல்லாததாலோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ நாம் விரும்பிய தொழில்களில் ஈடுபட முடிவதில்லை. ஆனாலும் நம் உள்மனதில் அந்தத் தொழிலைப் பற்றிய ஆர்வம் மற்றும் ஈடுபாடு இருந்துகொண்டே இருக்கின்றது. நாம் அந்த விருப்பங்களுக்கும் ஆர்வங்களும் மாறுபட்ட நிலையில் வேறு ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு விடுகின்றோம். சில சந்தர்பங்களில் இந்த மாதிரியான நிர்பந்தங்கள் குடும்பச்  சூழ்நிலைகளாலோ அல்லது பொருளாதாரச் சூழ்நிலைகளாலோ அல்லது சமுதாய கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்கள் காரணமாகவோ அமையக்கூடும். அந்த நேரங்களில் பலருக்கு ஒரு தோல்வி மனப்பான்மையோ  அல்லது ஏமாற்றமோ ஏற்பட வாய்ப்புக்கள்  உண்டு. இந்தச் சூழ்நிலைகள் நமக்குத் தாழ்வு மனப்பான்மை, மன அமைதியின்மை. மன அழுத்தங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தவறான பார்வையை ஏற்படுத்தலாம். இதிலிருந்து மீண்டு நாம் எந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோமோ அதையே ஒரு பரிசாக ஏற்று அந்தத் தொழிலை மகிழ்வுடனும் சிறப்பாகவும்  செய்ய கற்றுக்கொள்ளவும் முயலவும் வேண்டும்.

    எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் மகிழ்வும் ஈடுபாடும் இல்லாமல் செய்யும் பொழுது அது நமக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிடுகின்றது. அதையே மகிழ்வோடு செய்யும் பொழுது அது நல்வாழ்வுக்கு உரமாக மாறிவிடுகின்றது. உலகின் மிகப் பெரிய தத்துவ மேதை அரிஸ்டாட்டல் கூறுகின்றார் “மகிழ்வோடு செய்யும் எந்த வேலையும் மிகச் சிறப்பாக அமைகின்றது.”

    சில நேரங்களில் நாம் தொழிலில் நமக்கு அதைச் செய்வதற்கான வெகுமானமும் சம்பளமும் கிடைக்காததால் நம்முடைய ஈடுபாடுகளையும் மகிழ்வையும் குறைத்துக்கொள்கின்றோம். அது மட்டுமல்ல, நாம் நம்மைப் போன்ற பலருடன் நம்மை ஒப்பிட்டு நம்முடைய தரத்தை உயர்த்தியோ குறைத்தோ மதிப்பீடு செய்கின்றோம். இது ஒரு தவறான நோக்கு. இந்த ஒப்பீடுகள் ஓரளவிற்கு நம்முடைய திறனுக்கு அளவுகோலாக இருக்குமேயன்றி எல்லா நேரங்களிலும் நம்முடைய ஈடுபாட்டிற்கும் திறனுக்கும் நிரந்தரச் சான்று அல்ல. எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடோடு செய்யும் பொழுது நமது திறன் ஒளிர்கின்றது. அதில் கிடைக்கும் மகிழ்வே அந்தச் செயலை சரியாகச் செய்வதற்கான கூலியாக அமைகின்றது. இதையே பகவத் கீதையின் கர்மயோகத்தில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. “கர்மண்யேவாதிகாரஸ்தே; மா பலேஷு கதாசன” என்ற கூற்றில் கண்ணன் அர்ச்சுனனுக்கு கூறுகின்றார் “பலனை எதிர்பார்க்காமல் உன் கடமையைச் செய்.”

    சில நேரங்களில் நாம் மற்றவர்களிடம் சென்று “நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் தெரியுமா” என்று தங்களுடைய திறன்களையும் தொழில் வளர்ச்சியையும் பற்றி தற்பெருமையுடன் சொல்வதைக் கண்கூடாகக் காண்கின்றோம். சிறப்பாகத் தொழில் செய்பவர்களுக்கு இதற்கான அவசியம் இல்லை. “ஒரு சிறந்த வேலைக்காரனுக்கு அவன் தொழில் திறனே முகவரியாக அமைகின்றது”  என்று சொல்லப்படுகின்றது. அறிவுசால் சமுதாயத்தில் அறிவும் திறனும் உள்ளவர்களைத் தேடி உலகம் செல்கின்றது. இது நடைமுறை உண்மை. அவர்களுக்கு ஒரு விளம்பரமோ அல்லது பரிந்துரையோ தேவையில்லை. விளம்பரமும் பரிந்துரைகளும் கொண்டு தொழிலிலும் வாழ்விலும் முன்னேறுபவர்கள் அவர்களுடைய ஒவ்வொரு படியின் முன்னேற்றத்திலும் யாரையாவது தேடிக்கொண்டிருப்பார்கள். மற்றவர்களுடைய தயவும் ஒத்துழைப்பும் இல்லாமல் தங்களுடைய முன்னேற்றத்தின் சரித்திரத்தை அவர்களால் எழுத முடியாது.

    பல நேரங்களில் நல்ல திறனுள்ளவர்கள் என்ன திறமையிருந்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும்’ என்ற ஒரு பிற்போக்கான கருத்தை மனதில் நிறுத்தி தாங்கள் செய்யும் வேளையிலும் தொழிலும் தங்களுடைய முழுமையான உழைப்பை செலுத்தாமல் இருப்பார்கள். இவர்கள் அநேகமாகத் தோல்வியையே சந்திப்பார்கள். காரணம்- என்னதான் திறமையிருந்தாலும் கடின உழைப்புக்கு இணை ஏதுமில்லை. அமெரிக்க மனநல மற்றும் சமூகச் சிந்தனையாளர் மால்கம் கிளாட்வெல் என்பவர் கூறுகின்றார். “திறன்கள் மட்டும் போதுமானதல்ல. அந்தத் திறன்கள் அமைதியாக இருக்கும் பொழுது உங்களுடைய கடின உழைப்பு உங்களுக்காகப் பேசுகின்றது.”  சில சமயங்களில் நாம் நம்முடைய திறன்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது கேட்டேன் “உங்களுக்கு இந்தத் திறன்களெல்லாம் உண்டென்று உங்கள் மேற்பார்வையாளருக்குத் தெரியுமா?”

    அவர் அளித்த பதில் என்னைத் திகைப்படையச் செய்ததது. “இல்லை அய்யா. நான் அதெல்லாம் தெரியும் என்று சொன்னால் என்னை அதையெல்லாம் செய் என்று சொல்லுவார்கள். கொடுக்கின்ற சம்பளத்திற்கு அவர்கள் சொல்லுவதை மட்டும் செய்துவிட்டுப் போகவேண்டும்.” இந்த நோக்கு சரியானது அல்ல. நம்முடைய திறன்களை சரியான நேரங்களில் நாம் வெளிக்காட்டாவிட்டால் அவைகளின் பயன் என்ன? நமக்கு நம்மைத் தவிர யார் வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்?

    நாம் எந்தத் தொழில் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யலாமே  !

    Share
  • பழந்தமிழக வரலாறு – 12

    கணியன்பாலன்

            தமிழக வரலாற்றுக்கான காலவரையறைகள்

             நமது பழந்தமிழக வரலாறு இங்கு தரப்பட்டுள்ள இருபத்தொரு காலவரையறைகளைத் தனது வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டுள்ளது. இந்த அடிப்படை வரலாற்று ஆதாரங்களையும், நமது சங்க இலக்கிய ஆய்வுகளையும் இணைத்து, இவை இரண்டின் அடிப்படையில்  பல புதிய கணிப்புகள் கண்டுணரப்பட்டு, நமது முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்கான ஆண்டுகளும், காலகட்டங்களும்  கணிக்கப்பட்டன.

    1.கிரேக்கவீரன் அலெக்சாந்தர் கி.மு. 326 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்து, 19 மாதம் கழித்து கி.மு 325 வாக்கில் வெளியேறுகிறான்-(1).

    2.அலெக்சாந்தர் காலத்திலும் அவனுக்கு முன்னும் மகதத்தை நந்தர்கள் ஆண்டு வந்தனர். நந்தர்களில் மகாபத்ம நந்தன் இந்திய அளவில் புகழ்பெற்றவனாக இருந்தான்-(2).

    3.கி.மு.325-322 வரையான காலங்களில் வட இந்தியாவில் கலவரங்களும் குழப்பங்களும் நடைபெற்றது என்கிறார் வின்சென்ட் சுமித்-(3).

    4.மௌரியர்கள் சுமார் கி.மு. 321 வாக்கில் மகத ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். வட இந்தியாவில் தங்களை நிலை நிறுத்திக்கொண்ட அவர்கள் கி.மு. 300 வாக்கில் தக்காணத்தின் மீது படையெடுக்கின்றனர்-(4).

    5.கி.மு. 297இல், பிந்துசாரன் பதவியேற்றபின் தக்காணத்தின்மீதான படையெடுப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. கடலுக்கு இருபகுதிகளிலும் இருந்த தக்காணப்பகுதிகளைக் கைப்பற்றியவனாக அவன் கருதப்படுகிறான்-(5).

    6.சங்கப்பாடல்கள், வடுகர்கள், கோசர்கள் துணையோடு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்தும், வல்லம்போர், செருப்பாழிப்போர் ஆகியவற்றில் வடவடுகர், வம்பவடுகர், ஆரியர் எனப்படுகிற மௌரியர்கள் இளஞ்செட்சென்னியால் தோற்கடிக்கப்பட்டது குறித்தும் பேசுகின்றன-(6).

    7.இப்படையெடுப்புக்குப்பின் மௌரியர்களின் தெற்கெல்லை, மேற்கே கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரம் வரையிலும், கிழக்கே வடபெண்ணை நதியின் முகத்துவாரத்தில் இருந்த நெல்லூர் வரையிலும் பரவியிருந்ததாக வின்சென்ட் சுமித் குறிப்பிடுகிறார்-(7).

    8.வின்சென்ட் சுமித் தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகள் பராமரித்து வந்துள்ளன எனவும் ஆனால் மௌரியப்பேரரசில் கடற்படை இராணுவத்தின் ஓர் அங்கமாக இருந்தது பற்றிய ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் கூறுகிறார்-(8).

    9.மாமூலனார் தமிழ் மூவேந்தர்களின் கட்டுப்பாட்டில் மொழிபெயர்தேயம் எனப்படும் தாக்காணப்பகுதி இருந்ததாகத் தெரிவித்துள்ளார்(9).

    10.முதுகுடுமிப்பெருவழுதி வெளியிட்ட நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என்கிற நடனகாசிநாதன் அவர்களின் கருத்து, கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்கிற பிரித்தானிய-ஜெர்மன் குழுவினர்,  ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களின் கணிப்பு-(10).

    11.புகளுர்கல்வெட்டின் காலம் பட்டிப்பொருளு கல்வெட்டுக்கு(கி.மு.290-270) முந்தைய கி.மு. 4ஆம் நூற்றாண்டு என்கிற நடனகாசிநாதன் அவர்களின் கணிப்பு-(11).

    12.சேரலாதன் இமயவரம்பன் குறித்தப் பதிற்றுப்பத்துப்பாடல்கள், அதன் பதிகம், அவன்குறித்த மாமூலனார் போன்ற சங்கப்புலவர்களின் பாடல்கள் ஆகியன, அவன் 58 ஆண்டுகள் ஆட்சியாண்டதையும்,  வேந்தன் ஆனவுடன் இமயம்வரை அவன் படையெடுத்துச் சென்று வென்றதையும், கடம்பர்களையும், யவனர்களையும் வென்றதையும் தெரிவிக்கின்றன-(12)

    13.கி.மு. 256ஆம் ஆண்டைய அசோகன் கல்வெட்டில் சோழ, பாண்டிய, சதியபுத்ர, கேரளபுத்ர அரசுகள் இடம்பெற்றுள்ளனர். சோழர்கள் முதன்மை பெற்றுள்ளார்கள். அதியன்கள் இடம் பெற்றுள்ளார்கள்-(13).

    14.கி.மு. 232இல் அசோகர் இறந்துபோகிறார். சாதவாகனர்கள் கி.மு.230இல் தனி அரசாக ஆகின்றனர்-(14).

    15.சம்பை கல்வெட்டின் காலம் கி.மு.270-230; அதில் இடம்பெற்ற ‘சதியபுதோ’ என்பதில் உள்ள எழுத்துக்கள் பண்டைய எழுத்தியல்-கல்வெட்டியல் (palaeography-orthography) படி, அசோகரின் கல்வெட்டில் இருப்பது போன்றே இருப்பது-(15).

    16.காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டின்படி, கி.மு. 165க்கு முன்  1300 வருடங்களாக தமிழரசுகளின் ஐக்கியகூட்டணி இருந்து வந்துள்ளது. தமிழரசுகளின் காவல் அரணாக இருந்த, புத்துண்டா என்கிற கலிங்கநாட்டின் இரண்டாவது பெரிய துறைமுக நகரம் காரவேலனால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஆண்டு பாண்டிய வேந்தன் பரிசுப்பொருட்களை காரவேலனுக்கு அனுப்பியுள்ளான்-(16).

    17.பதிற்றுப்பத்துப் பாடல்களின் தரவுகளும், அதன்பதிகங்கள்தரும் வேந்தர்களின் ஆட்சியாண்டுகளும்-(17).

    18.வரலாற்றுக்கால இரண்டாம் தூமகேதுவின் ஆண்டும்(கி.மு.163), யானைக் கண்சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்தஆண்டும் ஒன்றாக இருப்பது. பத்தாம் பதிற்றுப்பத்தின் தலைவன் இவனே என்கிற தமிழறிஞர்களின் கணிப்பு-(18).

    19.தலைவடிவப் பெருவழுதி நாணயங்களின் காலம்-கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி(சுமார்கி.மு.130-100) என்கிற தினமலர் ஆசிரியர், நாணயவியலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கணிப்பு-(19).

    20.மாக்கோதை வெளியிட்ட தலைவடிவ நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டு அல்லது கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்கு சிறிது முந்தைய காலப்பகுதி(130-100)  என்கிற அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன், ஆர். கிருஷ்ணமூர்த்தி  ஆகியவர்களின் கணிப்புக்கள்-(20).

    21.கி.மு. முதல் நூற்றண்டில், சுங்க வம்ச ஆட்சியாளர்களின் இறுதிக் காலத்தில்(கி.மு.75), அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த உச்சயினி மீது  தெற்கத்திய சாதவாகனர்களின் படையெடுப்பு நடந்தது என்கிற கோசாம்பி அவர்களின் கருத்து. சோழன் நலங்கிள்ளி உச்சயினி மீது படையெடுத்தான் என சங்ககால இறுதிக்கால “முத்தொள்ளாயரம்” நூல் கூறும் செய்தி-(21).

           வரலாற்றுக் காலவரையறைக்கான ஆதாரங்கள்

    1.பண்டைக்கால இந்தியா, ஆர். எசு. சர்மா, தமிழில் மாஜினி,    வெளியீடு, ஜூன்-2004, பக்: 187.

    2.பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 101.

    3.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, பக்: 56.

    4, 5. பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 111, 112.

    6.மாமூலனார் – அகம்: 251, 265, 281; பாவைக்கொட்டிலார் – அகம் 336; இடையன் சேந்தன் கொற்றனார் – அகம்: 375;   ஊன்பொதிபசுங்கொடையார்- புறம்: 370, 378; கள்ளில் ஆத்திரையனார்-புறம்: 175; உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்- அகம்: 69.

    7.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, பக்: 64.

    1. “     “    பக்: 79

    9.மாமூலனாரின் அகநானூற்றுப்பாடல்: 31.

    10.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 45;  தமிழகக் கடல்சார் வரலாறு, பதிப்பாசிரியர்கள்-ந.அதியமான் & பா.ஜெயக்குமார்,   தமிழ்ப்பல்கலைக்கழகம்,   ஐப்பசி-நவம்பர்:2006,     பக்:24;     ஆர். கிருஷ்ணமூர்த்தி,  செழிய செழியன் நாணயங்கள், பக்: 125-128.

    11.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 25.

    12.இரண்டாம் பதிற்றுப்பத்துப்பாடல்கள் & பதிகம் – குமட்டூர் கண்ணனார்; மாமூலனாரின் அகப்பாடல்கள்: 127, 347.

    13.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, அசோகர் ஆணைகள், பக்: 123, 124, 139, 140.

    14.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 310, 311.

    15.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 26-28.

    16.www.jatland.com/home/Hathigumpha– inscription & சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இணையதளம் வழியாக இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

    17.சங்ககால பதிற்றுப்பத்தும் அதன் பதிகமும்.

    18.க.ப. அறவாணன், “தமிழியல் தேற்றங்களும் தீர்வுகளும்” டிசம்பர் 2009, பக்: 54-61 & பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 580-582.

    19.ஆர். கிருஷ்ணமூர்த்தி, பாண்டியர் பெருவழுதி நாணயங்கள், பக்: 81-91.

    20.சங்ககால சேர நாணயங்கள் கண்டுபிடிப்பு, சில வரலாற்றுச்செய்திகள், ஆர். கிருஷ்ணமூர்த்தி, 2009, பக்: 31, 32. & TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 45.

    21.டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா, செப்டம்பர்-2006, பக்: 388. & கவிஞர் தெசிணி அவர்கள், ‘கலித்தொகையும் முத்தொள்ளாயிரமும்’, டிசம்பர் 2004, பக்; 180;

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் _ 118

    நிர்மலா ராகவன்

     

    பதவி போதுமே, பண்பு எதற்கு?

    “ஏ குரங்கே!” ஒரு சிறுவன் இன்னொருவனை நோக்கிக் கூவினான்.

    அவனும் அதேபோல் கூவினான். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது என்றாலும், கெட்ட வார்த்தை என்று அவர்கள் நினைத்ததைப் பிரயோகிப்பதில் தனி மகிழ்ச்சி அந்த மூன்று வயதுச் சிறுவர்களுக்கு. அவர்களைப் பொறுத்தவரை, `ஹலோ!’ என்று சொல்வதற்கு ஒப்பான முகமன் இம்முறை.

    சிறு வயதில் மட்டுமில்லாது, இக்குணம் ஆண்கள் வளர்ந்தபின்னும் தொடரும். தாங்கள் ஏசிப் பேசுவதை நண்பர்கள் தப்பாக எடுத்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான். எந்த வயதானாலும், சற்றும் யோசியாது, ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வார்கள்.

    ஒருவரது பேச்சிலிருந்து குணத்தை அறிந்துகொள்ளலாம் என்றாலும், அவர்கள் இப்படி ஒருவரையொருவர் பழித்துக்கொள்வதில் உள்ளர்த்தம் எதுவும் கிடையாது. இது ஒருவர் மற்றொருவரை நெருங்கும் உத்தி. நற்பண்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

    பெண்கள் இப்படிப் பேசிப்பார்த்தால் தொலைந்தார்கள்.

    “ஒன்னோட பாவாடை (அல்லது வளை) அழகா இருக்கு!” என்பதுபோல் ஏதாவது புகழ்ந்தால்தான் இன்னொருத்தி அப்படிக் கூறுபவளை சிநேகிதியாக ஏற்பாள்.

    என்னுடன் வேலை பார்த்த ஓர் ஆசிரியை, தினமும்,`உன் புடவை அழகாக இருக்கிறது!’ என்பாள், என்னிடம். ஏதோ ஒரு நாள் கூறினால், அவள் கூறுவதில் உண்மை இருக்கிறதென்று நம்பலாம். ஆனால், தினமுமேவா?

    நான் ஏன் மகிழ்ந்து புன்னகைக்கவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை. போலியான புகழ்ச்சியால் நம்மை அடிமைப்படுத்த நினைப்பவர்களை எப்படி நம்பமுடியும்?

    கதை: யாரிடம் பணிவு?

    எங்கள் பகுதியிலிருக்கும் கறிகாய் மார்க்கெட்டில் பூனைக்குட்டிகள் வளைய வந்துகொண்டிருக்கும். அதை ஒட்டி இருக்கும் சாப்பாட்டுக்கடையில் மிகுந்துபோன உணவைச் சாப்பிட்டு, அவை காலந்தள்ளிக்கொண்டிருந்தன.

    கறிகாயைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒருவன், தன் காலருகே வந்த பூனைக்குட்டியை உதைத்தான். அதற்கு அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று புரியவில்லை. அவனருகிலேயே நின்று, உதை வாங்கிக்கொண்டிருந்தது. அவ்வளவு சிறியது – பிறந்து இரண்டு, மூன்று நாட்கள்தான் ஆகியிருக்கும். (அவன் வீட்டுச் சிசுவை இப்படி உதைப்பானா?)

    அருகிலிருந்த பிறர் அவன் செயலைத் தவறாக எண்ணவில்லை. `யாருக்கும் சொந்தமில்லாத பிராணிதானே!’ என்ற அலட்சியமாக இருக்கலாம். அல்லது, பிறர் செயலில் குறுக்கிடக்கூடாது என்ற `நாகரிகம்’ கருதி சும்மா இருந்தார்கள்.

    அருகில் திகைத்து நின்றிருந்த என் பேரனை, “இதைத் தூக்கி வெளியில் விடு,” என்றேன், கடுமையாக. (எரிச்சல் பூனைமேல் இல்லை).

    எதிர்க்க முடியாத பிராணிகளையும் மனிதர்களையும் அலட்சியமாக நடத்துபவர்கள் தன்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம், `இவர்களால் எனக்கு ஆதாயம் கிடைக்கும்,’ என்று தோன்றினால், அப்படி நடப்பார்களா?

    கதை

    மட்டமானவர்களிடம் நேர்மையை, நற்குணத்தை எதிர்பார்க்க முடியாது. எப்படியாவது பெரிய பதவிக்கு உயர்ந்தால் போதும் என்று கணக்குப்போட்டு, அதன்படி செயலாற்றுபவர்கள் இவர்கள்.

    பதின்ம வயது மாணவன் ரஃபி ஒரு கூட்டத்திற்குமுன், நாற்காலிகளை வரிசையாக எடுத்துப்போட்டு, இன்னும் பல வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தான்.

    `ஆகா! என்ன சுறுசுறுப்பு!’ என்று அங்கிருந்த ஆசிரியைகள் பாராட்ட, சில நாட்களில் PREFECT (நிர்வாகம் செய்பவர்) என்ற பதவி அளிக்கப்பட்டது. பிற மாணவர்களின் கட்டொழுங்கை கவனிக்க வேண்டிய பெருமையில், அவனுடைய சுறுசுறுப்பும் ஒழுங்கும் காணாமல் போய்விட்டதுதான் பரிதாபம். படிப்பு சம்பந்தமாக அளிக்கப்பட்ட வேலைகளைக்கூடச் செய்யாது, அலட்சியமாக இருந்தான். தன்னைப்பற்றிய அலாதி கர்வத்தில் எல்லோருடனும் சண்டை போட்டான்.

    முதல் முறை கிடைக்கும் வெற்றி திறமையால் ஆனாலும், அது நிலைத்திருக்க நற்குணம் அவசியம் என்று அவனுக்குப் புரியவில்லை.

    அவனுடைய பொறுப்பாசிரியரிடம், `ரஃபியை அடக்கிவைங்கள். `எனக்குப் பாடம் கற்பிக்கிறவர்களைவிட நான் உயர்ந்தவன்!’ என்பதுபோல் மரியாதை இல்லாமல் பேசுகிறான்!” என்றேன்.

    மூத்தவர்களிடம் மரியாதையாக நடக்கவேண்டுவது மலாய்க்காரர்களுக்கு மிக முக்கியம். `இன்றைய தலைமுறை இப்படி இல்லையே!’ என்று பெரியவர்கள் அரற்றுகிறார்கள்.

    அடுத்த முறை என் வகுப்பில் ரஃபியின் தலை நிமிரவேயில்லை. குரலும் எழும்பவில்லை. பதவி பறிபோய்விடுமோ என்று அவ்வளவு பயம்!

    எந்த வயதிலும், மமதையாலோ, பொறாமையாலோ பிறரை இழிவுபடுத்தி, வலுச்சண்டை போடுவது சிலரது வழக்கமாக இருக்கிறது.

    வேறு சிலருக்கு இது நல்ல பொழுதுபோக்கு. பேரக்குழந்தைகள் பெற்றுவிட்ட இந்த தம்பதியைப் பாருங்கள்.

    கணவர்: “உன்னைக் கல்யாணம் செய்துகொண்டதால்தான் எனக்கு இவ்வளவு வியாதிகள்!”

    மனைவி (அயராது): “நம் கல்யாணத்தின்போது உங்களுக்கு எழுபது வயதா?”

    குணமும் குழந்தைத்தனமும்

    மகிழ்ச்சிகரமாக வளர்க்கப்படும் சிறுகுழந்தையின் கண்களைப் பார்த்தால், அதில் அப்பாவித்தனம், உண்மை தெரியும். (பயமோ, வருத்தமோ இருக்காது). அதற்குப் போலியாக நடிக்கத் தெரியாது.

    வளர, வளர பல்வித இன்னல்களை அனுபவிக்க நேர்கிறது. வெளியுலகில் பழக்கமில்லாத அனுபவங்கள் வேறு. இதையெல்லாம் எப்படி ஒருவர் எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது குணாதிசயம் அமைகிறது. வயதானாலும் தன்னைச் சுற்றி நடப்பதில் அவருடைய ஆர்வம் குன்றாது இருக்கும்.

    குழந்தைத்தனம் மாறாது இருப்பவர் எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக இருக்கிறார். இது சிறுபிள்ளைத்தனம் இல்லை. எவ்வளவு சறுக்கினாலும் தன்னைத்தானே ஏற்பது.

    கதை: கர்வம் குணக்கேடு

    கண்ணபிரான் தலைமைப்பொறுப்பில் இருந்தார். பல கலைகளில் பாண்டித்தியம் உண்டு. அவரது புகைப்படம் பல முறை பத்திரிகையில் வெளிவந்திருந்தது.

    அத்துடன் திருப்தி அடையாது, பத்திரிகை ஆசிரியரைக் கூப்பிட்டு, `அடுத்த இதழில் இந்த இடங்களில் என் படத்தைப் போடுங்கள்!’ என்று பணித்துவிட்டு, மூன்று முறை வந்த தன் படத்தைப் பார்த்து பெருமகிழ்ச்சியும் கர்வமும் அடைந்தார்.

    அவரைப்போல் தன் பெயரையும் புகழையுமே பரப்பும் முயற்சிகளில் இறங்குகிறவர்கள் விரைவில் அவற்றை இழக்கிறார்கள். (`இவரா பண்பாளர்!’ என்று ஆசிரியர் வருந்தி எழுதியிருந்தார்).

    “குணம் மரம் என்றால், நற்பெயர் நிழலாகும்” (ஆப்ரஹாம் லிங்கன்). ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.

    கண்ணபிரானைப் போன்றவர்கள் தன்னைவிட சிறப்பானவர்கள் இருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்கவும் விரும்புவதில்லை. பிறர் இவரிடம் காட்டும் மரியாதை பயத்தால் இருக்குமே தவிர, அன்பினால் இருக்காது.

    பிறரை ஊக்குவித்து, அவர்கள் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடையும் ஒருவரே தன்னைப்போன்ற நல்ல தலைவர்களை உருவாக்குகிறார்.

    தொடருவோம்

    Share
  • ஹம்மிங் பறவைகள் (Hummingbirds)

    -சற்குணா பாக்கியராஜ்

    உலகத்தில் 330 வகை ஹம்மிங் பறவைகள் உண்டு. இவை வட அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் வாழ்கின்றன. இவைகளில் ஐந்து சதவிகிதம் மெக்ஸிக்கோவின் வட பகுதியில் காணப்படுகின்றன. இந்தப் பறவைகள் பறக்கும் போது சிறகுகள் “ஹம்” என்ற ஒலியை எழுப்புவதால் “Hummingbirds” என்ற பெயரைப் பெற்றுள்ளன.

    உலகத்திலுள்ள மிகவும் சிறிய பறவை, கியூபாவில் காணப்படும் Bee Hummingbird.  இதன் எடை: 1/15 of an ounce நீளம்: அலகிலிருந்து வால் வரை- 1”. இதன் முட்டை காப்பிக் கொட்டையின் அளவு. ஹம்மிங் பறவையில் மிகப் பெரியது Giant Hummingbird. நீளம்: 8¼”

    இந்தப் பறவைகளால் மாத்திரமே நீண்ட நேரம்  சிறகுகளை முன்னும் பின்னும் வேகமாக அடித்துப் பூக்களிலிருந்து தேனை எடுக்கவும் (hovering),  பின்நோக்கிப் பறக்கவும் முடியும். இந்தப் பறவைகள் ஒரு நொடிக்கு இறக்கை அடிக்கும் எண்ணிக்கை ஒவ்வொரு வகையிலும் (species) வேறுபடுகிறது. உதாரணமாக Bee hummingbird  ஒரு வினாடிக்கு 50-80 முறையும் Giant hummingbird வினாடிக்கு 16 முறையும் இறக்கைகளை அடிக்கின்றன.

    ஹம்மிங் பறவைகள் பறக்கும்போது அதிக energy செலவிடப்படுவதால் பெரும்பான்மையான நேரம் மரக்கிளைகளிலும் மரக்குச்சிகளிலும் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றன. சில நேரங்களில் (உ.ம். குளிர்காலத்தில் இரவு நேரம்) physical activityஐக் குறைப்பதன் மூலம் (torpor) உடல் வெப்பத்தையும் இதயத் துடிப்பையும் குறைத்துக் கொண்டு energy-ஐ சேமித்து வைத்துக்கொள்கின்றன.

    ஹம்மிங் பறவைகள் பூக்களிலுள்ள தேனை மட்டும் உண்ணாமல் சிறு பூச்சிகளையும் சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துசெல்லும் நேரங்களிலேயே சிறு பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. பதினைந்து நிமிடத்திற்கு ஒரு தடவை உணவு உண்கின்றன.

    ஹம்மிங் பறவைகளின் உச்சந்தலை, தொண்டை, மார்பு பகுதிகளில்  மினுமினுப்பான இறகுகள் (iridescent) காணப்படுகின்றன. தொண்டையில் காணப்படும் மினுமினுப்பான இறகுகளை ”Gorget” என்று அழைக்கின்றனர். இந்த நிறங்கள் பார்ப்பவர்களின் கோணத்தைப் பொறுத்தது (angle). ஆண் ஹம்மிங் பறவை, தலையைப் பக்கவாட்டில் திருப்பும்போது  இந்த நிறங்கள் சூரிய ஒளியில்பட்டுக் கண்ணைப் பறிக்கும் அழகுடன் மிளிருகின்றன. சூரிய ஒளிபடாத நேரங்களில் கறுப்பாகத் தோன்றும். ஏனென்றால் இந்த மினுமினுப்பான நிறம் (iridescence), இறகுகளிலுள்ள pigment-ஆல் ஏற்பட்டதல்ல இறகின் அமைப்பால் (structural) ஆகும். இந்த நிறங்கள் பெண் பறவைகளைக் கவருவதற்கும், எதிரிகளை எச்சரிப்பதற்கும் பயன்படுகின்றன.

    ஆண் ஹம்மிங் பறவை, உணவு கிடைக்கும் இடங்களில் தனக்கென்று ஒரு எல்லையை அமைத்துக் கொண்டு பிற ஹம்மிங் பறவைகளையும் எதிரிகளையும் அருகில் நெருங்க விடுவதில்லை.

    இனப்பெருக்கக் காலத்தில் ஆண் ஹம்மிங் பறவைகள்  பெண் பறவைகளைக் கவர உயரத்தில் பறந்து சடுதியில் கீழ்நோக்கிப் பாய்ந்து (diving) வினாடிக்குள் மேல் நோக்கிப் பறந்தோ பெண் பறவையின் முன்நின்று முன்னும் பின்னும் பறந்தோ தொண்டைப் பகுதியில் உள்ள நிறத்தைக் காட்டுகின்றன.

    ஆண் ஹம்மிங் பறவைகள் கூடு கட்டுவதிலும் குஞ்சுகளை வளர்ப்பதிலும் பொறுப்பு எடுப்பதில்லை. பெண் பறவை, சிலந்தி வலை, மெல்லிய நார்கள், மிருகங்களின் ரோமங்களைக் கொண்டு கூடுகட்டி, இரண்டு முட்டைகள் இட்டு அடைகாக்கின்றன. இரண்டு வாரங்களில், கண்கள் திறக்காத நிலையில் குஞ்சுகள் வெளிவந்த பின் குஞ்சுகள் வளர்ந்து கூட்டைவிட்டு வெளியேறும் வரையிலும் தாயே உணவு ஊட்டி வளர்க்கிறது.

    வலசைபோகும் ஹம்மிங் பறவைகள் கூட்டமாகப் பறப்பதில்லை. பிற பறவைகளின் முதுகில் அமர்ந்து செல்வதில்லை. தனியாகவே தங்கள் பயணத்தைத் தொடங்கி முடிக்கின்றன. பயணத்தைத் தொடங்கும்முன் பல நாட்கள் பெரும் அளவில் உணவு அருந்தி எடையை அதிகப்படுத்திக் கொள்கின்றன.

    இந்த அழகிய பறவைகளுக்குப் பூனை, வல்லூறுகள் போன்ற எதிரிகள் உண்டு. இவைகளில் மனிதன்தான் பெரிய எதிரி!! பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் பெண்களின் தொப்பிகளை அலங்கரிப்பதற்காகப் பறவைகளின் இறகுகளைப் பயன்படுத்தினர். அந்தச் சமயம் தென் அமெரிக்காவில் கோடிக்கணக்கான ஹம்மிங் பறவைகள் கொல்லப்பட்டு ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் சில வகை ஹம்மிங் பறவைகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டன.

    பறவைகளின் இறகுகளை ஏற்றுமதிச் செய்ய அரசாங்கம் தடை விதித்ததால் இன்று தென் அமெரிக்காவில் ஹம்மிங் பறவைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    Within my garden Rides a Bird

    Within my Garden, rides a Bird
    Upon a single Wheel—
    Whose spokes a dizzy Music make
    As ’twere a travelling Mill—

    He never stops, but slackens
    Above the Ripest Rose—
    Partakes without alighting
    And praises as he goes

    Emily Dickson (1862)

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(219)  

     

     

    இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்     

    சிறந்தமைந்த சீரார் செறின்.                                                

           -திருக்குறள் -900(பெரியாரைப் பிழையாமை)

     

    புதுக் கவிதையில்…

     

    அளவற்ற

    ஆள் துணையுடையோராயினும்

    அழிந்தொழிவர்,

    சிறந்த தவநெறிமிக்க

    பெரியோர்

    சினம் கொண்டால்…!

     

    குறும்பாவில்…

     

    தவநெறிமிக்க பெரியோர் கோபமுற்றால்,         

    தாங்கிக்கொள்ளாது அழிந்திடுவர்

    அளவற்ற ஆளுதவி கொண்டோரும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    குறைவே யில்லா அளவினிலே

         கூடும் உதவி ஆளிருந்தும்,

    முறையே யில்லாச் சிறியோரெலாம்

         முற்றிலும் சிதைந்தே அழிந்திடுவர்,

    மறைகள் பலவும் கற்றாங்கே

         முறைப்படி தவநெறி கொண்டோராம்

    குறையிலா வாழ்வுடைப் பெரியோரவர்

         கொள்ளும் அரிய கோபத்தாலே…!

     

    லிமரைக்கூ..

     

    தவநெறி பெரியோர்தம் கோபம்,    

    தக்க துணையாய்ப் பலரிருப்போரையும்             

    தாக்கி அழித்தொழிக்கும் சாபம்…!

     

    கிராமிய பாணியில்…

     

    நடந்துக்க நடந்துக்க

    நல்லமொறயில நடந்துக்க,

    நாலுந்தெரிஞ்ச பெரியவங்கக்கிட்ட

    நல்லமொறயில நடந்துக்க..

     

    ஒழுக்கம் நல்லதாக்கொண்ட

    ஒயர்வான பெரியவங்க

    கோவப்பட்டா,

    அது

    ஒதவிக்கு ஆள் நெறய

    உள்ளவனயும்

    ஒண்ணுமில்லாம அழிச்சிப்புடும்,

    அவன்

    உசிரயே எடுத்துப்புடும்..

     

    அதால

    நடந்துக்க நடந்துக்க

    நல்லமொறயில நடந்துக்க,

    நாலுந்தெரிஞ்ச பெரியவங்கக்கிட்ட

    நல்லமொறயில நடந்துக்க…!

     

    -செண்பக ஜெகதீசன்…

     

     

     

     

     

    Share
  • செவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது

    Posted on July 28, 2018
    [July 26, 2018]
     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

     
    ESA Mars Express Probes for Liquid Water Lakes
     
     
    செவ்வாய்க் கோளில் முதன்முதல் அடித்தளத் திரவநீர் ஏரி கண்டுபிடிப்பு
     
     
    இதுவரைச் செந்நிறக்கோள் செவ்வாயில் நீரோட்டத்  தடங்களும், துருவப் பகுதிகளில் உறைந்து கிடக்கும் பனிப்பாறைகளும், ஈர்மைக் கருகில் உருவாகும்  கனிமங்களுமே [Minerals] நாசா & ஈசா விண்ணுளவிகளும், தள ஊர்திகளும், தரை உளவிகளும் படமெடுத்து அனுப்பியுள்ளன.   ஆனால் ஈசாவின் விண்ணுளவி [Mars Express Space Probe] முதன்முதலாக ஜூலை 26, 2018 இல் ரேடார் கருவி மூலம் தென்துருவத்தில் பன்முறைத் துருவி ஓர் நீர் ஏரி அடித்தளத்தில் இருப்பதை உறுதிப் படுத்தி யுள்ளது.  ஈசாவின் எக்ஸ்பிரஸ் விண்ணுளவி 2003 ஜூன் 2 ஆம் தேதி ஏவப்பட்டது.  2018 டிசம்பர் 25 தேதியில் 15  ஆண்டு நிறைவுச் சுற்றுப் பயணம் கொண்டாடப் பட்டும்.
    ரேடார் கதிர்கள் சோதித்த தென் துருவப் பகுதி
    செவ்வாய்க் கோளின் கடந்த 4.6 பில்லியன் ஆண்டு தோற்ற காலத்தில் காலநிலை, பருவநிலை, பன்முறை தீவிரமாக மாறி, தளத்தின் மீது திரவநீர் இருக்க வழியற்று வறண்டு போனது.  ஆதலால் விஞ்ஞானிகள் இப்போது செவ்வாய்க் கோளின் அடித் தளத்தில் குறிவைத்து திரவநீர் காண முயன்றனர்.  ஈசாவின் [ESA – European Space Agency] கடந்த 15 ஆண்டு விண்ணுளவிப் பயணத்தில் “செவ்வாய் எக்ஸ்பிரஸ்” துருவப் பனிப் பாறைகளையும்,  மூடித் தரையில் தூசிக் கடியில் பதுங்கியுள்ள நீர்ப்பனித் துணுக்கு களையும் படம் எடுத்துள்ளது.  மேலும் துருவப்பகுதிகளின் கீழ் திரவநீர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.
    எதிர்பார்த்தபடி இப்போது மேன்மைத் திறம் வாய்ந்த “மார்சிஸ்” ரேடார் கருவி [(MARSIS INSTRUMENT) MARS ADVANCED RADAR FOR SUB-SURFACE & IONOSPHERE SOUNDING INSTRUMENT]  பன்முறைச் சோதிப்பில்,  முதன்முறையாக செவ்வாய்த் தளத்தில் ஒரு மைல் ஆழத்தில் [1.5 கி.மீ.] 160 சதுர மைல் பரப்பில் [200 சதுர கி.மீ]  29 முறை வட்டமிட்டு ஒருமுறை, 12 மைல் அகண்ட [20 கி.மீ. அகலம்]  திரவநீர் ஏரி இருப்பதைக் கண்டு பிடித்துள்ளது.   அப்பகுதியில் ரேடார் கதிர்களை அனுப்பி, மீளும் நேரத்தைக் குறித்து 12 மைல் அகண்ட திரவநீர் ஏரி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.    அதுபோல் நமது பூமியில் வாஸ்டாக் ஏரி [Lake Vostok] 2.5 மைல் ஆழத்தில் அண்டார்க்டிகா பனிப்பாறைக்குக் கீழ் கண்டு பிடிக்கப் பட்டள்ளது.  செவ்வாய்க் கோளில் அடித்தள திரவநீர் ஏரி உள்ளது, ஆங்கே உயிர் மூலவிகள் இருந்திருப்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.   அதற்கு அடுத்து ரஷ்யா அனுப்பப் போகும்  ஐரோப்பிய – ரஷ்ய விண்ணுளவி நிச்சயமாய்த்  திட்டமிடப்படும்.

    +++++++++++++++++++++++++++++

    பிரபஞ்சத்தில்  உயிரின மூலவிகள் பிறப்பு

    உயிரினத் தோற்றத்தின் மூலவியான  ஆரென்யே [RNA] உண்டாக பொரேட்ஸ் [Borates] முக்கிய பங்கு வகிக்கிறது.  செவ்வாய்க் கோளில் போரான் [Boron] மூலகக் கண்டுபிடிப்பு உயிரினம் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம் என்பதற்கு மேலும் வழி காட்டு கிறது.  பொரேட்ஸ் எளிய ஆரென்யே மூலக்கூறுகள் தோன்ற ஒருவகைப் பாலமாகக் கருதப் படுகிறது.  ஆரென்யே இல்லை என்றால், உயிரனத் தோற்றமே உருவாக முடியாது.  போரான் இருப்பு சொல்வது என்ன வென்றால், செவ்வாய்க் கோளில் கரி மூலக இரசாயனக் கலவை [Organics] காணப் படுவது, இவ்வித இரசாயன இயக்கங்கள் நடந்திருக்கலாம் என்பதே.

    பாட்டிரிக் காஸ்டா [Postdoctoral Research Leader, Los Alamos National Laboratory]

    செவ்வாய்க் கோளின் “கேல் ஆழ்குழியில்”  [Gale Crater] போரான் மூலகக் கண்டுபிடிப்பு, உயிரினத் தோற்றம் ஒரு காலத்தில் இருந்துள்ளனவா என்று விஞ்ஞானிகளுக்கு சிறு ஆதாரங்கள் காட்டியுள்ளன.

    3.8 பில்லியன் ஆண்டு வயதான செவ்வாய்க் கோளின் கேல் ஆழ்குழியில் நாங்கள் பொரேட்ஸ் [Borates] கண்டுபிடித்தோம். பூமியில் தோன்றிய உயிரினத்துக்கும் இளமையான உயிரினமே செவ்வாயில் இருந்திருக்க வேண்டும்.  முக்கியமாக இதன் மூலம் நாம் அறிவது என்ன வென்றால், செவ்வாய்க் கோளின் காலச் சூழ்வெளி அமைப்பு, பூமியோடு இணையாது, உயிரின வளர்ச்சி உருவாகத் தனி வசதி அளித்தது என்பதே.

    பாட்டிரிக் காஸ்டா [Postdoctoral Research Leader, Los Alamos National Laboratory]

    செவ்வாய்க் கோளில் கண்ட போரான் மூலகம் கால்சியம் ஸல்ஃபேட் தாதுவில் கண்டுபிடிக்கப் பட்டது.  அதாவது போரான் செவ்வாய்க் கோளின் தரை நீரகத்தில் [Ground Water] இருக்கிறது. அதைக் கண்டுபிடித்த கருவி : ரோவர் தளவுளவியின் கெம்காம் [ChemCam] [chemistry & Camera].  2020 ஆண்டில் நாசா ஏவப் போகும் செவ்வாய்த் தளவுளவி சுமந்து செல்லும் சூபர்காம் [SuperCam] & [SHERLOC] கருவிகள் பூர்வீக உயிரின மூல வசிப்புகள் வளர்ந்தனவா என்று ஆழமாக ஆராயும்.

    Solar Storms on Mars

    பல்லாண்டுகளாக பல்வேறு விண்ணுளவிகளைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி இந்தப் புதிரை விடுவித்துள்ளோம். இப்போது இந்தக் குளிர்மயப் பாலை நிலத்தில் திரவ நீர் ஓடுவதை, உறுதியாக நாங்கள் அறிந்து கொண்டோம்.  செவ்வாய்க் கோளைப் பற்றி மென்மேலும் ஆய்ந்து அறிவது, ஆங்கே உயிரின வாழ்வுத் தகுதி ஆதரவுக்கு வழி உள்ளதைக் கற்றுக் கொள்வதுடன், எதிர்காலத் தேடலில் எங்கே உயிரின வாழ்வுத் தகுதி வசதிகள் உள்ளன என்றும் தெரிந்து கொள்கிறோம்.

    மைக்கேல் மேயர் [நாசா தலைமை விஞ்ஞானி, செவ்வாய்க் கோள் தேடல் திட்டம்]

    செவ்வாய்க் கோள் நீரைப் பற்றிப் பெரும்பாலோர் சொல்லும் போது, அங்கே உறைந்திருக்கும் நீர் அல்லது பூர்வீகப் பனித்தள நீரைத்தான் குறிப்பிடுகிறார்.  இப்போது மேம்பட்ட வரலாறு உள்ளது தெரிகிறது. நாங்கள் மீளும் சரிவுப் போக்கு நீரோட்டங்கள் மூலமாக முதன்முதல் ஒளிப்பட்டைக் காட்சியாய் [Spectral Detection] திரவ நீரை ஐயப்பாடின்றி கண்டோம்.

    லுஜேந்திரா ஓஜா [Lujendra Ojha, Georgia Institute of Technology, Atlanta, USA]

    Mars brine water flow

    எமது செவ்வாய்க் கோள் வேட்கைக் குறிப்பணி, பிரபஞ்சத்தில் உயிரின மூலவிகள்  இருப்பதை உளவு செய்ய நீரைத் தேடிச் செல்வதே.  இப்போது நாங்கள் நீடிய காலம் ஐயுற்ற நீரிருப்பை உறுதியாக விஞ்ஞானச் சான்றுடன் அறிந்து கொண்டோம்.  செவ்வாய்ச் சரிவில் இன்று ஓடும் உப்பு நீரோட்டமாக இருந்த போதினும் இதுதான் இப்போது குறிப்பிடத் தக்க சிறப்பு கண்டுபிடிப்பாகக் கருதப் படுகிறது.

    ஜான் கிருன்ஸ்ஃபெல்டு  [நாசா விஞ்ஞானத் திட்ட ஆளுநர்]

    நாங்கள் பருவகால நிகழ்ச்சியாகப் பரவிய ஈரடிப்பு உப்பு [Hydrated Salts] நீரோட்டங்களை மலைச் சரிவுகளில் மீளும் நேர்போக்கில் செல்லக் [Recurring Slope Lineae] கண்டோம்.  இந்தக் கருநிற நெளிவுச் சிற்றாறுகள் ஈரடிப்புக் காரணமாக [Dark Streaks are sources of Hydration]  இருக்கக் கூடும்.

    லுஜேந்திரா ஓஜா [Lujendra Ojha, Georgia Institute of Technology, Atlanta, USA]

    Martian glacier

    சூனியச் செவ்வாய்க் கோளில் வேனிற் கால உப்பு நீரோட்டங்கள் கண்டுபிடிப்பு

    2015 செப்டம்பர் 28 ஆம் தேதியில் நாசாவின் மேவன் விண்ணுளவி [MAVEN Spacecraft] முதன்முதல் உறுதியாகச் செவ்வாய்க் கோளின் மலைச் சரிவுகளில் மீளும் வேனிற் காலத்து உப்பு நீரோட்டச் சிற்றோடைகளைப் [Recurring Slope Lineae]  படமெடுத்துக் காட்டியுள்ளது. பல்லாண்டுகளாக பல்வேறு விண்ணுளவிகளைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி இந்தப் புதிரை விடுவித்துள்ளார்.  இப்போது அந்தக் குளிர்மயப் பாலை நிலத்தில் திரவ நீர் ஓடுவதை, உறுதியாக அறிந்து கொண்டுள்ளார்.  செவ்வாய்க் கோளைப் பற்றி மென்மேலும் ஆய்ந்து அறிவது, ஆங்கே உயிரின வாழ்வுத் தகுதி ஆதரவுக்கு வழி உள்ளதைக் கற்றுக் கொள்வதுடன், எதிர்காலத் தேடலில் எங்கே உயிரின வாழ்வுத் தகுதி வசதிகள் உள்ளன என்று தெரிந்து கொள்ளவும் வழி வகுக்குகிறது.

    Ancient Water Flows hint life in Mars

    குறுகிய பல திரவ நீரோட்டங்கள் கருமை நிறத்தில் சுமார் 100 மீடர் [300 அடி] நீளத்தில் செவ்வாய்க் கோள் சரிவை நோக்கிப் பாயும் சிற்றோடை களாய்க் காணப்பட்டன.  நீரோட்டமே செதுக்கிய நீரோடைகள் அவை. சமீபத்தில் அண்டக்கோள் விஞ்ஞானிகள் [Planetary Scientists] ஹேல் பெருங்குழிச் சரிவுகளில் [Hale Crater Slopes] ஈரடிப்பு உப்புகள் [Hydrated Salts] இருப்பதைக் கண்டனர்.  அவையே சிற்றோடைகள் திரவ நீரோட்டத்தால் செதுக்கப் பட்டவை என்பதை எடுத்துக் காட்டின. ஒளிப்பட்டை நீல நிறமாகத் தெரிவதின் காரணம், பைராக்சின் தாதுக்கலவை [Pyroxene Mineral].  அவை ஒருவிதப் பெர்கோலேட் தாதுக்கள் [Magnesium Percholate or A Mixture of Magnesium & Sodium Percholates]. கோடைக் காலத்தில் திரவ நீரோட்டம் பொங்கித் தணிவதும் தெரிந்தது. குளிர் காலத்தில் நீரோட்டம் அடங்கிச் சிற்றோடைகள் வெறுமையாயின. அவ்விதம் நீரோடும் சிற்றோடைகள் செவ்வாய்க் கோளின் பல இடங்களில் மைனஸ் 10 F [- 23 C] டிகிரிக்கு மேலாக உள்ள போது தெரிந்து, குளிர் காலத்தில் மறைந்து போயின.  தற்போது [அக்டோபர் 2015] செவ்வாய்க் கோளில் பல டஜன் தளங்களில் கோடைக் காலத்தில் இம்மாதிரித் திரவ நீரோட்டச் சிற்றோடைகள் காணப் பட்டுள்ளன.  அடுத்து செவ்வாய்த் தள ஆய்வுகள் இதுபோன்ற ஈரடிப்பு ஓடைகளில் உயிரின இம்மிகள் உள்ளனவா என்பதாக இருக்கும்.

    +++++++++++++++++++++

    Mars Exploration

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YWv8X5CmJeo

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tsnkTc15n4w

    http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001

    http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001

    http://article.wn.com/view/2015/04/09/Dustcovered_belts_of_glaciers_made_of_frozen_water_found_on_/

    Mars dust cover ice

     

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

    செவ்வாய்க் கோளின் பனித்திரட்சி [Mars Glacier] அளவைக் கணித்ததில் அதன் கொள்ளளவு 150 பில்லியன் கியூபிக். செ.மீ. என அறிந்தோம். அதைச் செவ்வாய்க் கோள் தளம் முழுதும் பரப்பினால் 1.1 மீடர் [3 அடி] தடிப்பு பனித்தள வடிவம் பெறும்.  இந்த பனிக்கடி ஏரிகள் யாவும் செவ்வாய்க் கோளின் வடதென் பகுதிகளின் நடுப்புறத்தில் அமைந்துள்ளன.

    நன்னா கார்ல்ஸன் [காலநிலைப் பனித்திரட்சி நிபுணர்]

    MARS GLACIERS

    செவ்வாய்க் கோள் தளத்தில் ரேடார் கருவி மூலம் சேகரித்த பத்தாண்டுக் கால பனிக்களத் தடிப்பையும், அதன் நடப்பையும் ஆழ்ந்து ஆராய்ந்தோம். பனித்திரட்சி [Glacier] என்பது ஒரு பெரும் பனிக்குன்று. அதற்கென தனித்த பனித்தள ஓட்டத் தடமும், தோற்ற வரி வடிவமும் உண்டாகி, எமக்கு அதன் மென்மைத் தன்மையைக் காட்டுகிறது.   இவ்வரிப் படங்களை பூமியின் பனித்திரட்சி [Earth’s Glaciers] வரை படங்களோடு ஒப்பிட்டு, நாங்கள் பனித்தள ஓட்ட கணினி மாடல்களை அமைக்கிறோம்.

    நன்னா கார்ல்ஸன் [காலநிலைப் பனித்திரட்சி நிபுணர், நீல்ஸ் போஃஹ்ர் ஆய்வகம், கோபன்ஹேகன் பல்கலைக் கழகம்.

     

    Mars Ice cover

    செவ்வாய்க் கோள் தளத்தில் செய்த புதிய ஆய்வு அறிவிப்பு 

    2015 ஏப்ரல் 9 ஆம் தேதி  “இயற்கை” [Nature] விஞ்ஞான இதழ் அறிவிப்பு மூலம் டென்மார்க் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தின் நீல்ஸ் போஃஹ்ர் ஆய்வகக் காலநிலை அறிவியல் பனித்திரட்சி நிபுணர் [Climatologist & Glacier Expert ] நன்னா கார்ல்ஸன் தெரிவிப்பது : செவ்வாய்க் கோளில் புதைந்துள்ள பனிதிரட்சிக் குன்றுகள் [Mars Buried Glaciers] பேரளவு பனிக்கட்டியைக் கொண்டுள்ளன.   அதைச் செவ்வாய்க் கோள் தளம் முழுதும் பரப்ப முடிந்தால், பனி மூன்றடி [1.1 மீடர்] உயரம் தடிப்பாகும் !   மேலும் மூடிய தூசிக்குக் கீழிருக்கும் பனித்திரட்சி வளையங்களில் [Glacier Belts] உள்ளது உறைந்த நீரே [Frozen Water] தவிர  அது உறைந்த கார்பன் டையாக்சைடு இல்லை [Not Frozen CO2] என்பது தெளிவானது.  செவ்வாய்க் கோளின் செந்நிறத் தூசி, பனித்திரட்சியை மூடி, உறைந்த பனிநீர் பரிதி வெப்பத்தில் ஆவியாக மறைய விடாது தடுத்து வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.

    “நீர் இருப்பு உயிரின வளர்ச்சிக்கு மிக முக்கிய மென்று நாமறிவோம்.  செவ்வாய்க் கோளில் நாங்கள் இப்போது கண்டிருப்பது வெறும் நீர் மட்டுமில்லை; அதற்கும் மேற்பட்ட பொருட்கள்:  நமது உடலில் காணும் உயிர் வளர்ச்சிச் சத்துக்களான ஸோடியம், பொட்டாஸியம், மெக்னீஸியம், ஃபுளுரைடுகள் !  ஆயினும் உயிரின விருத்திக்கு ஆதாரமான ஆர்கானிக் மூலக்கூறுகள் இன்னும் செவ்வாயில் காணப்பட வில்லை !  இனிமேல் திட்டமிடும் நாசாவின் அடுத்த பயணம் செவ்வாயில் உயிரினம் வாழ்ந்து வந்திருக்கிறதா என்று கண்டறியச் செல்லும்.”

    “மேலும் இந்த தளப்பகுதி செவ்வாயில் எதிர்காலப் பயணிகள் குடியிருக்கத் தகுதி உள்ளதா என்ற கேள்விக்கு எம்மால் பதில் சொல்ல முடியும்.  அது நாசாவின் எதிர்காலப் பயணத் திட்டத்தில் ஒன்றாக இருக்கும்.”

    பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

    MAVEN Spacecraft

    “இறுதியில் நாங்கள் செவ்வாய்த் தள மண்ணை ஆராய முடிந்து அதில் ஒட்டி இருப்பது உறைந்த நீரென்று உறுதிப் படுத்தினோம்.  மேலும் நீரான அதைத் தொடவும், சுவைக்கவும் முடிந்தது !  இதற்கு முன்பு சாதிக்காத ஒரு சோதனை அது !  அதன் சுவை மிக்க இனிமையானது !  இதைக் கண்டதற்கு நாங்கள் பெருமைப் படுகிறோம்.

    வில்லியம் பாய்டன், ஃபீனிக்ஸ் விஞ்ஞானி, அரிஸோனா பல்கலைக் கழகம். [ஜூன் 2, 2008]

    “ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியுள்ளதின் குறிநோக்கம் இதுதான் : நீருள்ளது என்று ஏறக்குறைய உறுதியில் அறிந்திருக்கும் செவ்வாய்க் கீழ்த் தளத்தைத் தோண்டி அறிவது.  தற்போது செவ்வாய்க் கோளை சுற்றிவரும் விண்ணுளவிகள் மூலமாக இறங்க வேண்டிய தளத்தை நுணுக்கமாக, விளக்கமாகக் காட்டி பத்து செ.மீ. அல்லது அதற்கும் குறைந்த ஆழத்தில் பனிக்கட்டிகள் புதைந்துள்ளன என்பதற்குச் சமிக்கை வந்துள்ளது.  ஏனெனில் உயிரனத் தோற்றத்துக்கும் குடியிருப்புக்கும் நீர்வள அமைப்பு மிக்க இன்றியமையாதது.”

    டாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, [Imperial College, London, UK]

    “செவ்வாய்க் கோள் மணற் படுகையில் [Sand Dunes] பனித்திரட்டு பரவிக் கிடக்கும் சான்று கிடைத்திருக்கின்றது. மணற் கட்டிகளைச் சேர்த்து வைத்திருப்பது நீர் என்பது எனது யூகம்.  எதிர்காலச் செவ்வாய்ப் பயண மாந்தர் பிழைப்பதற்கு அதை உதவவும், எரிசக்திக்குப் பயன் படுத்தவும் முடியுமென நினைக்கிறேன்.  அசுரக் குவியலான சில மணற் படுகையில் 50% நீர்மை இருப்பதாக செவ்வாய்த் தளப்பண்பியல் சான்றைக் [Topgraphical Evidence] காண்கிறேன்.  செவ்வாயில் பெருவாரியான நீர் வெள்ளம் கிடைக்கலாம் என்று நான் சொல்லவில்லை!  முன்பு காணப்படாத ஓரிடத்தில் புதிதாக நீரிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன்.”

    மேரி போர்க், அரிஸோனா அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வுக்கூடம் [Mary Bourke (Sep 2005)]

    Water Flow on Mars

    21 ஆம் நூற்றாண்டில் நாசாவின் மகத்தான விண்வெளிக் கண்டுபிடிப்பு

    ஆகஸ்டு முதல் தேதி செவ்வாய்க் கோள் தளத்தில் உள்ள பனித் திரட்டுகளை உருக்கி நீரென்று நிரூபித்து நாசாவின் ஃபீனிக்ஸ் விஞ்ஞானிகள் விண்வெளி வரலாற்றில் ஒரு மகத்தான பொன் மைல் கல்லை நிலைநாட்டினார் !  இதுவரை அது நீர்ப்பனிக் கட்டியா அல்லது உறைந்த கார்பன் டையாக்ஸைடு வாயுக் கட்டியா என்னும் குழப்பத்தில் இருந்தது.  இப்போது அந்து ஐயமின்றி 100% நீர் என்பது உறுதியானது ! ஃபீனிக்ஸ் தளக்கருவி பனிக்கட்டியை உருக்கி நீரென்று சுவைத்துப் பார்த்து விட்டது என்று விஞ்ஞானிகள் பீடும், பெருமிதமும் கொள்கிறார் !  இந்த மகத்தான வெற்றி நாசாவுக்கு ஃபீனிக்ஸின் ஆய்வுக் காலத்தை இன்னும் ஒரு மாதத்துக்கு 2 மில்லியன் டாலர் செலவில் நீடிக்க (செப்டம்பர் 30 தேதி வரை) அனுமதி கிடைத்துள்ளது !  செந்நிறக் கோள் செவ்வாயில் நீர் இருப்பது மெய்ப்பிக்கப் பட்டாலும் ஆங்கே உயிரினம் விருத்தி அடைந்ததற்குரிய சான்றுகள் இன்னும் கிடைக்க வில்லை !

    Clipboard02

    ஓராண்டு முன்பு ஏவப்பட்ட ஃபீனிக்ஸ் தளவுளவி விண்கப்பல் செவ்வாய்க் கோளில் நீர்  இருக்கிறதா என்று அறியவும், உயிரின மூலவிகளை வளர்க்கும் சிக்கலான ஆர்கானிக் மூலக்கூறுகள் (Complex Organic Molecules) உள்ளனவா என்று தெரிந்து கொள்ளவும் அனுப்பப் பட்டது.  அதற்கும் முன்னால் சென்று செவ்வாய்க் கோளைச் சுற்றிய ஆடிஸ்ஸி விண்கப்பல் (Odyssey Spacecraft) ஃபீனிக்ஸ் தளவுளவி இறங்கப் போகும் களத்தில் பனிக்கட்டிகள் உருகுவதைப் படமெடுத்து அனுப்பியது.  இரண்டு மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாய் இறங்கிய ஃபீனிக்ஸ் தளவுளவி செவ்வாய்த் தள மண்ணை அள்ளி இரசாயன ஆய்வுக் கருவியில் இடும் அகப்பையைக் கொண்டது.

    ஃபீனிக்ஸ் தளவுளவி நச்சு மூலக்கூறு (Toxic Molecule) கண்டது

    நாசா விண்தேடல் விஞ்ஞானிகள் செவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவியின் மெக்கா கருவி [Microscopy, Electrochemistry, Coductivity, Analyzer (Meca)] ஒரு நச்சுப் பொருளைக் கண்டுள்ளதாகக் கூறினார்.  ஆகஸ்டு 5 ஆம் தேதி தளவுளவியின் அகப்பை எடுத்த மாதிரி மண்ணில் இரசாயனத் தீவிர இயக்கமுடைய பெர்குளோரேட் (Perchlorate) உப்பு கலந்திருப்பதாகக் கண்டது.  மேலும் அந்த இரசாயனப் பொருள் மற்ற இடத்திலும் பரவி உள்ளதா என்று அறியப்படும்.  பூமியில் மிக்க வறட்சியான பாலைவனப் பகுதிகளில் பெரும்பாலும் அந்த பெர்குளோரேட் இரசாயனம் காணப்படுகிறது.  செவ்வாய்த் தளத்தை ஒத்த தென் அமெரிக்கா சில்லியின் அடகாமா பாலைவனத்தில் (Atacama Desert, Chille) அது இருப்பதாக அறியப்படுகிறது.

    Martian water

    பெர்குளோரேட் உப்பு உயிரினத்தை விருத்தியும் செய்யாது, சிதைக்கவும் செய்யாது.  அது ஓர் ஆக்ஸிடைசிங் அயான் (Oxydising Ion). அதில் ஒரு குளோரின் அணுவை, நான்கு ஆக்ஸிஜென் அணுக்கள் சுற்றி உள்ளன.  அது இரசாயன இயக்கத்தில் ஆக்ஸிஜன் வாயுவை வெளியாக்குகிறது.  ஆனால் அதிலிருந்து குளோரின் வாயு வரவில்லை.  சில உயிரினச் செல்கள் பெர்குளோரேட்டைத் தீனியாய் எரிக்கின்றன. சில பயிரினங்கள் அதனைத் தம்முள்ளே சேமித்து வைக்கின்றன.  முக்கியமாக பூமியில் ராக்கெட் உந்திச் செல்ல பெர்குளோரேட் இரசாயனம் எரிசக்தியில் (Used in Rocket Fuel) பயன்படுகிறது.

    பூமியில் வாயுத் தூசிகள் சூரிய ஒளியில் பட்டு பெர்குளோரேட் மூலக்கூறு உருவாக்கப் படுகிறது.  பிறகு அது வரண்ட தளத்தின் மீது தங்கி விடுகிறது.  ஈரமான அரங்குகளில் அது மண்ணுக்குள் இறங்கிக் கொள்கிறது.  பூமியில் சில வித பாக்டீரியாக்கள் தமது உயிர்ச்சத்து மாறுபாடுக்கு (Metabolism) பெர்குளோரேட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றன ! “பெர்குளோரெட்டுகள் செவ்வாய்க் கோளின் தளங்களில் நீரிருந்த வரலாற்றைச் சொல்லும்,” என்ற் ஃபீனிக்ஸ் ஆய்வாளர் ரிச்சர்டு குயின் (Richard Quinn) கூறினார்.

    Clues for water in Mars

    செவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவி கண்ட முதல் பனித்திரட்டு !

    2008 மே மாதம் 30 ஆம் தேதி சமீபத்திலே 420 மில்லியன் டாலர் திட்டமான செவ்வாய்க் கோளில் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி புதியதோர் விந்தைத் தகவலைப் பூமிக்கு அனுப்பியிள்ளது ! “செவ்வாய்த் தளத்தில் பனிக்கட்டியைக் காமிராவின் கண்கள் நேராகக் காண முடிகிறது” என்பதே அந்தச் செய்தி ! மெய்யாக ஃபீனிக்ஸின் 12 எதிர்த்தள்ளி உந்துகள் (12 Retro Thrusters) இயங்கித் தளம் சுத்தமாக்கப்பட்ட போது தளவுளவியின் கீழே வெண்ணிறத் தரைப் பளிச்செனக் காணப் பட்டது.  அதாவது விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி ஃபீனிக்ஸ் தளவுளவி பனித்தரை மீதுதான் தனது மூன்று பாதங்களைப் பரப்பியிள்ளது !  மேலும் மூன்று கால்களில் ஒரு பாதம் மூன்றடி விட்ட முள்ள ஒரு பனித்தட்டின் மீது அமர்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  அடுத்து ஃபீனிக்ஸின் சுயமாய் இயங்கும் யந்திரக் கரம் (Robotic Arm) சோதிக்கப்பட்டு முதல் மாதிரிச் செம்மண் எடுக்கப்பட்டது.  அந்த மண்ணில் வைரம் போல் பளிச்செனக் காமிராவின் கண்ணில் பட்டது ஒரு வெண்ணிறப் பனிக்கட்டி !  அதனுடைய வடிவத்தைக் கண்டு, அது காணப்பட்ட காலநேர உஷ்ண நிலையை [-300 C (-220 F)] ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த மாதிரிப் பனிக்கட்டி நீராக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.

     

    Flood waters on Mars -1

     

    ஃபீனிக்ஸ் எதிர்த்தள்ளி உந்துகள் இயங்கிக் கீழே மெதுவாக இறங்கிய போது மேலாகக் கிடந்த செம்மண்ணை வெளியேற்றித் தோண்டிய 6 செ.மீ. (~2.5 அங்குலம்) ஆழப் பள்ளத்தில் பனிக்கட்டி மாதிரி எடுக்கப்பட்டது.  அவ்விதம் தளவுளவியின் கரத்தில் எடுக்கப்பட்டு முதன்முதலில் கண்களில் தெரிந்த பனிக்கட்டி விஞ்ஞானிகளிடையே உற்சாகக் கொந்தளிப்பைத் தந்திருக்கிறது.  புதிய உலகில் குளிர்ந்த சுத்தமான நீர்க் கண்டுபிடிப்பு மனிதப் பயணத்துக்கும், குடியேற்றத் துக்கும் மிகவும் உதவிடும் என்பது 21 ஆம் நூற்றாண்டின் அதிசயச் செய்தியாகும்.  திட்டமிட்டபடித் தளவுளவி பனித்தளத்தில் தடம் வைக்காது வேறு வேண்டாத பாறைத் தளத்தில் பாதம் பதித்து விட்டதோ என்றோர் ஐயப்பாடு முதலில் எழுந்தது !  அடுத்து அறிந்த தகவலில் தளத்தின் எதிரொளிப்புத் தன்மைகள் உளவப் பட்டு வெண்ணிறப் பனித்தளம் பளிச்செனத் தலைகாட்டி விஞ்ஞானிகளைப் பிரமிக்க வைத்தது.  அந்தப் பனித்திரட்டு பனிநீர்க்கட்டியாக இருக்கக் கூடும் என்று தீர்மானிக்கப் பட்டது !  “இன்று என்ன சேதி” என்று கேட்டால் எந்த நாசா விஞ்ஞானியும் “செவ்வாயில் நீர்ப்பனிக் கட்டியைக் கண்டோம்” என்றுதான் சொல்கிறார்.  இந்த பனித்தள இடத்தைதான் நாசா விஞ்ஞானிகள் உன்னதப் படமெடுப்புக் காமிரா மூலம் [High Resolution Imaging Science Experiment (HiRISE Imager of Mars Orbiter)] முன்னால் விண்ணுளவிக் கப்பல் மூலம் தேர்ந்தெடுத்தனர்.

     

    Fig 1A South Polar Ice Depth

     

    செவ்வாய்க் கோளின் துருவங்களே நீர்க்கட்டி சேமிப்புகளின் பெருங் களஞ்சியங்களாகக் கருதப்படுகின்றன.  துருவப் பகுதிகளின் நீர்மை சேமிப்பு வரலாற்றை அறிந்தால், செவ்வாய்க் கோளில் உயிரின வளர்ச்சிக்கு ஒரு காலத்தில் வசதியும், சூழ்நிலையும் இருந்தனவா என்பதைத் தெளிவாக ஆராய முடியும்.  நீர்ப்பனிப் பாறைகளும், கார்பன் டையாஸைடு குளிர்க்கட்டிகளும் உள்ள துருவ அடுக்குப் படுகைகள் [Polar Layered Deposits] துருவப் பகுதிகளைத் தாண்டியும், துருவ முனைப் பரப்பின் [Polar Cap] ஆழத்திலும் உள்ளது அறியப் படுகிறது.  ரேடார் எதிரொலிப் பதிவுகள் பாறைப் பகுதிகள் போல் காட்டுவது 90% நீர்த் தன்மையால் என்று கருதப்படுகிறது.  துருவப் பிரதேசங்களில் மிக்க குளிராக இருப்பதால், உருகிப் போன திரவ நீரைக் காண்பது அரிது.

    பனிப் பாறைக்குக் கீழே உள்ள தளத்தையும் அறியும் போது செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள அமைப்பு தெரிய வருகிறது. “பனிப் பகுதிகளின் அடித்தளத்தைப் பற்றி எங்களால் அறிய முடியவில்லை. பூமியில் உள்ளது போல் பனித்தட்டுகள் அவற்றின் மேல் தட்டுகளால் அழுத்தப் படாமல் உள்ளதை அறிந்தோம்.  செவ்வாய்க் கோளின் அடித்தட்டும், மேற்தட்டும் [Crust & Upper Mantle] பூமியை விடக் மிகக் கடினமாக உள்ளது காணப் படுகிறது.  அதற்குக் காரணம் செவ்வாய்க் கோளின் மையப் பகுதி பூமியை விடக் குளிர்ச்சியாக உள்ளதே !

    Fig 7 North Polar Ice Cap

    செவ்வாய்க் கோளின் துருவப் பனிப் பாறைகள்

    செவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது!  துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது.  வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது!  மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது.  கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வறட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது.

    அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன.  கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அளவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வறட்சிப்பனி [Dry Ice or Frozen Carbon dioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.

     

    (தொடரும்)

    ***********************

    தகவல்:

    Picture Credits:  NASA, JPL, ESA & Wikipedia

    1. Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].
    2. Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]
    3. Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]
    4  Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
    5. Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    6  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html
    [Author’s Article on Mars Missions]
    7  Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    8  NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    9  Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]
    10 http://www.Space.com/missions/ Phoenix Mars Lader (Several Articles)  [Aug 31, 2005]
    11 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]
    12 Mars South Pole Ice Found to be Deep & Wide -NASA JPL Release [March 15, 2007]
    13 Dirt Digger (Phoenix) Rocketing toward Mars By: Marcia Dunn AP Aerospace Writer [Aug 5, 2007]
    14 BBC News Lift off for NASA’s Mars Probe (Phoenix) [August 4, 2007]
    15 Phoenix Mission Control Team Poised for Epic Landing on Mars Planet – The Dailey Galaxy (www.dailygalaxy.com/) [May 23, 2008]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html(Phoenix Launch Aug 7, 2007)
    17 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html(Mars Express Radar Finds Water Source in Mars South Pole)
    18. BBC News – Mars Lander is in Good Health [May 27, 2008]
    19 The New York Times – Mars Lander Transmits Photos of Arctic Terrain [May 27, 2008]
    20 RedOrbit News – Phoenix Lander Spotted from Mars Orbiter (www.redorbit.com) [May 28, 2008]
    21 Future Mission to Mars – Follow on Mars Missions / Mars Sample Return [May 28, 2008] (www.vectorsite.net/tampl_08.html)
    22 CNN News : Pictures Boost Hopes for Mars Ice Discovery [May 31, 2008]
    23 NASA’s Phoenix Lander Robotic Arm Camera Sees Possible Ice [May 30, 2008]
    24 Twittering from Mars – The Phoenix (Mars Lander Probe) on Ice [June 3, 2008]
    25 Phoenix Lander’s Robotic Arm Grabs a Scoop of Mars (Soil) [June 2, 2008]
    26 VOA News : Phoenix Spacecraft Confirms Water on Mars By : Art Chimes Washington DC [Aug 1, 2008]
    27 VOA News : NASA’s Phoenix Lander Finds Toxic Chemical on Mars [Aug 5, 2008]
    28 Phoenix Mars Team Opens Window on Scientific Process [Aug 5, 2008]
    29 BBC News : Open Science Promised for Phoenix [Aug 6, 2008]
    30 The New York Times : Alkaline Soil Sample from Mars Reveals Presence of Nutrients for Plants to Grow [June 27, 2008]
    31 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40806051&format=html (திண்ணைக் கட்டுரை-1)
    32 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805291&format=html (திண்ணைக் கட்டுரை-2)
    33 ABC News : Phoenix Lander Finds Water on Mars [Aug 1, 2008]

    34  Water on Mars Discovered by Phoenix Mission [Aug 5, 2008]

    35  Sky & Telescope Magazine – Phoenix Digs in By : Kelly Beatty  [September 2008]

    36.  http://www.sciencedaily.com/releases/2014/09/140929154248.htm [September 29, 2014]

    37.  http://www.marsdaily.com/reports/Mars_dust-covered_glacial_belts_may_contain_tons_of_water_999.html  [April 9, 2015]

    38. http://www.onenewspage.com/n/Science/754zwhlg5/Dust-covered-ice-glaciers-found-on-Mars.htm  [April 8, 2015]

    39.  http://www.sciencedaily.com/releases/2015/04/150408102701.htm  [April 8, 2015]

    40.  http://phys.org/news/2015-04-mars-belts-glaciers-frozen.html  [April 7, 2019]

    41. http://www.marsdaily.com/reports/Mars_rover_data_boosts_hope_for_liquid_water_on_Mars_999.html  [April 13, 2015]

    42.  http://www.marsdaily.com/reports/Mars_might_have_liquid_water_999.html [April 17, 2015]

    43.http://www.marsdaily.com/reports/Strongest_evidence_yet_of_liquid_water_on_Mars_NASA_999.html [September 28, 2015]

    44.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/10/nasa-mars-ancient-ocean-larger-than-earths-arctic-ocean.html?  [October 6, 2015]

    45.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/-once-an-ancient-blue-world-nasa-tv-to-live-stream-new-findings-on-fate-of-mars-atmosphere.html  [November 2, 2015]

    46. http://www.mhttp://Marsdaily.com/reports/NASA_mission_reveals_speed_of_solar_wind_stripping_Martian_atmosphere_999.html  [November 5, 2015]

    47. http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/news-flash-nasa-tv-to-live-stream-new-findings-on-fate-of-mars-atmosphere-today.html?  [November 5, 2015]

    48.  https://en.wikipedia.org/wiki/Mars_Reconnaissance_Orbiter   [November 5, 2015]

    49.   http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/nasa-news-update-solar-winds-stripping-mars-atmosphere-over-billions-of-years.html?  [November 5, 2015]

    50.  http://mars.jpl.nasa.gov/mro/mission/overview/

    51.  https://en.wikipedia.org/wiki/MAVEN  [November 6, 2015]

    52  http://www.poandpo.com/in-the-meantime/what-have-we-learned-from-the-discovery-of-liquid-water-on-mars-7-11-2015/   [November 7, 2015]

    53. https://www.space.com/29977-buckyball-molecules-milky-way-mystery.html [July 17, 2015]

    54. http://ca.pressfrom.com/news/technology/-43878-new-discovery-hints-that-mars-could-have-once-supported-life/  [September 7, 2017]

    55. http://www.dailygalaxy.com/my_weblog/2017/09/organics-discovery-at-mars-gale-crater-hints-at-existence-of-rna-and-ancient-life.html  [September 7, 2017]

    56. https://www.tasnimnews.com/en/news/2018/07/27/1787198/hidden-liquid-water-detected-under-south-pole-of-mars

    57. http://www.spacenewsfeed.com/index.php/news/1686-mars-express-detects-liquid-water-hidden-under-planet-s-south-pole [Jul5 25, 2018]

    58. http://spaceref.com/mars/mars-express-detects-liquid-water-under-mars-south-pole.html  [July 25, 2018]

    59 https://www.wsj.com/articles/scientists-find-evidence-of-hidden-lake-on-mars-1532527200?mod=hp_lead_pos7  [July 25, 2018]

    60  http://www.esa.int/Our_Activities/Space_Science/Mars_Express/Mars_Express_detects_liquid_water_hidden_under_planet_s_south_pole

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  [July 29, 2018 [R-2]

    Share
  • தொல்தமிழரின் உழவும் கலைச்சொற்களும்

    -முனைவர் ம. தமிழ்வாணன்

    இறைவனை வணங்கி வழிபடுவதை மரபாக கொண்டிருந்ததைப் போல, தங்கள் வாழ்வுக்கு அடிப்படையாக விளங்கும் இயற்கைப் பொருட்களைப் போற்றி வழிபடுகின்ற மனப்பாங்கும் தமிழர்க்குத் தொன்றுதொட்டு வந்த நற்பண்பாகும். பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தினரும் இன்றைக்கு இருப்பது போலவே உழவுத் தொழிலையே தங்கள் வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டிருந்தனர் என்பதனை ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ எனப் புறநானூறு விளக்குகின்றது. அவ்வகையில் வேளாண்மைச் செயல்முறைக்கு அடிப்படையாக விளங்கும் நிலம், நீர் இவற்றின் மேலாண்மையை அறிதல், வேளாண்மைக்குக் களம் அமைத்துப் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டதாக அமையும். நாடு உய்வதும், உயர்வதும் பொருளாதாரம் உறுதிநிலை பெறுதலையும் வேளாண்மையின் வளர்ச்சியையும் பொறுத்து அமைவது. வேளாண்மையில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்? விரைந்து முன்னேறிவரும் வேளாண் நுணுக்கங்களைத் தெரிந்து பரிந்துரைகளைச் செயலாற்றிச் செம்மைப்படுத்துவது வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு உழவனின் முக்கியக் கடமையாகும். இதற்குத் துணைநிற்பது வேளாண் செயல்முறைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லக் கை கொடுப்பது நல்ல கலைச்சொற்கள் தான்.

    பண்டைய விவசாயம் கடுமையான உழைப்பிலும் அனுபவ இயற்சியிலும் அமைந்தது. ஆனால், இத்தகைய உழைப்புடன் வேளாண்மை விஞ்ஞான முறைகளைப் புள்ளி விவரங்களுடன் இணைக்கும்போது ஒரு பெரும் சக்தியாக மாறிப் புரட்சிகரமாகவும் காலச் சூழ்நிலைக்கேற்பவும் மாறுபாடடைந்து மக்களுக்குப் பயன்படுகிறது. பழையன கழிந்து புதியன புகுந்ததால்தானே இன்று நாம் பசுமையில் புரட்சி செய்து, உணவு உற்பத்தியில் தன்னிறைவினையும் காண நேர்ந்துள்ளது?

    நாடும் மொழியும் வளர்ந்தால்தான் வாழும் மக்களும் வளமான வாழ்வு பெறுவர். இதற்கேற்ப நமது இந்திய வேளாண்மையுடன் விஞ்ஞான அடிப்படையில் அமைந்த உண்மைக் கூறுகளை இணைந்த யாவரும் அறிந்துகொள்ளும் வகையில், தொழில்நுட்பங்களை எளிதில் புரிந்து செயல்படுத்திடும் வகையில் தாய்மொழியில் உணர்த்துதல் மிகவும் அவசியம், அறிவியல், கலைச்சொற்களைப் பொருள் சிதையாமல் பெயர்த்துத் தமிழில் வழங்க வேண்டும் என்ற வேட்கை நாளும் வளர்ந்து வருகின்றது. தமிழில், புதிய கலைச்சொல்லாக்கங்களைச் செய்தற்கு முன்னர், இலக்கியப்பழமை சார்ந்த அறிவியல் கலைச்சொற்களைப் பேணிக்காக்க வேண்டிய கடமையும் தமிழுக்கு உரியது.

    மொழிபெயர்க்கும்போது பிறமொழி சொற்களுக்கு இணையான பொருத்தமுடைய சொற்களை ஆய்ந்து காட்டி நல்ல சொற்களைக் கண்டெடுத்து உறுதிப்படுத்துவது சிறந்தது. பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது சொல்லுக்குச் சொல் நேரிடையாகவே மொழி பெயர்க்காமல் பொருளுக்குப் பொருள் பொருந்தி வரும் வகையில் மொழி பெயர்ப்பது சிறந்தது. மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ‘கலை’ யாவும் வெறும் சொல்லால் மட்டும் சிறப்பதல்ல. சொல்லிய பொருளும், வழங்கும் மரபும் பயன்பட்டு வந்த வகையில் அறிந்தோராலேயே இக்கலை ஒளிர்வதாகும். சொற்பொருளை வழுவற உணர்ந்தோரே, புதிய சொற்களைத் தகுதியுடையாத ஆக்கவல்லவர். நாம் கடமையாற்றும் வகையில் எவரையும் சிந்திக்க வைக்கும் நிறந்த கருவூலமாக அமைதல் அவசியம். நம் பழைய இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கணக்கற்ற சொற்கள் காணக்கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பயன்படுத்திட, இல்லாத இடங்களில் புதிய சொற்களை உருவாக்கிடத் தளராத தமிழார்வமும் அயராத தமிழ்ப்பணித் திறனும் வேண்டும். கணக்கற்ற வேர்ச்சொற்களைப் பெற்றிருக்கும் தமிழ்மொழியில் புதிய சொற்கள் புனைவதில் தொல்லை இருக்காது. எனவே முனைப்புடன் செயல்படுவது சிறந்ததாக அமையும்.

    வேளாண்வளத்தில் கலைச்சொற்கள்

    வேளாண்மை இன்று நாடெங்கும் சிறப்புற்று வளர்ந்துவரும் ஓர் அறிவியல் துறை. வளமான மண்ணும் அளவான நீரும் உழவியலுக்கு இன்றியமையாத இரு கண்கள். உணவென்று சிறப்பித்துச் சொல்வது நிலத்தையும், நீரையும். மண்ணியல், உழவியல், நீர்வள இயல், வித்தியல், தாவரவியல், தாவர வினையியல், பயிர் நோயியல், நுண்ணுயிரியல், பூச்சியியல், உயிர் வேதியியல், மீன்வள இயல், வானவியல் என்றின்னோரன்ன முறைகள் பலவற்றையும் உள்ளடக்கிய அறிவியல் கலையாக வேளாண்துறை இன்று வீறுபெற்று நாளும் வளர்ந்து வருகின்றது.

    நிலவளத்தில் கலைச்சொற்கள்

    நிலப்பகுதிகள் மக்கள் வாழ்விற்கும் இயக்கத்திற்கும் பயிர் விளைச்சலுக்கும் உரியவை. எனினும் நிலப்பகுதிகள் அனைத்தும் ஒரே இயல்பும் தன்மையும் வாய்ந்தவை இல்லை. சில பகுதிகள் பண்படுத்தப்பட்டுப் பயிர் விளைவுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் உரியவையாக, உகந்தவையாக இருக்கும். மேலும் இந்நிலப் பகுதிகள் சமமட்டமாக இல்லாமல் மேடு பள்ளம் நிரம்பியவையாகவும் இருக்கக்கூடும். நிலப்பகுதியில் அமைந்த இவ்வேறுபாடுகளைச் சுட்டும் கவிஞர் அந்த இடத்தில் வாழும் மக்களின் இயல்புக்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப நல்ல நிலம், தீய நிலம் என்று நிலப்பகுதி பெயர் பெறுகின்றது. இக்கருத்தை எடுத்துக்கூறுவதாக,

    “நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ” (புறம்187)

    என்ற புறநானூற்றுப் பாடலில். பள்ளத்தை வழங்க அவல் என்ற சொல்லும், மேட்டைக்குறிக்க மிசை என்ற சொல்லும் பழங்காலம் முதற்கொண்டு வழங்கிய கலைச்சொற்கள் என்ற குறிப்பை அறியமுடிகிறது.

    நிலம் என்பது அனைத்துவகை நிலப்பகுதிகளையும் குறிக்கும் பொதுச்சொல். மாநிலம், நிலவரை என முன்னும் பின்னும் ஒட்டுச் சேர்த்தும் இப்பெயர் வழங்கப்பெறும். ஞாலம், உலகம், வையம் என்பனவும் நிலத்தைக் குறிக்கும் பிறசொற்களாக உள்ளன.

    நிலத்தை வன்புலம் மென்புலம், விடுநிலம் என்று பிரித்தரிந்து விவசாயம் செய்துள்ளனர். மேலும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்ற நானிலத்தின் விளைநிலங்களையும் பிரித்தறிந்து பார்த்துள்ளனர். நிலங்களைக் குறிக்கும் சொற்கள் பல நிலைப்பெற்ற கலைச்சொற்களாக உள்ளன. விவசாயத்தில் தமிழர்கள் தலைசிறந்தவர்கள் என்பதனையும், தமிழனால் எதையும் செய்யமுடியும் என்பதனையும் இது எடுத்துரைக்கின்றன.

    1.குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த நிலப்பகுதியுமாகும். இந்நிலத்தில் புன்செய் பயிரிடும் நிலத்தைத் துடவை (பெரும்.201) என அழைத்துள்ளனர். மரங்களை அழித்து விளைநிலமாக்கப்படும் புதிய புனத்தை ‘இதை’ என்றும் பழமையான விளைநிலத்தை ‘முதைபுனம்’ என்றும் அழைத்துள்ளனர்.

    2.முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலப்பகுதியாகும். இங்குள்ள நிலத்தைக் கொல்லை எனவும், மரங்கள் நிறைந்த பகுதியைப் புறவு, கானம், பாட்டம், தோட்டம் எனவும் பெயரிட்டு அழைத்துள்ளனர். மேலும் முல்லை நிலத்தைக் குறிக்கச் “சங்க இலக்கியங்களில் காடு, கானம், குறும்பொறை, கொல்லை, செந்நிலம், செஞ்சுவம், புறவு, புனம், புன்புலம், மென்புலம், முரம்பு, வன்புலம்” போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  (வி.சி. சசிவல்லி, பண்டைத்தமிழர் தொழில்கள்) இச்சொற்களில் பல இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன.

    3.மருதம் வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியுமாகும். கழனி, வயல், பழனம், செறு ஆகிய சொற்கள் மருத நிலத்தைக் குறிக்கும் சொற்களாகும். கழனி என்பது சேற்றுவயலையும், பழனம் என்பது நெல்வயலையும் குறிக்கும் சொற்களாகும். வயல் என்பது விளைநிலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கழனி என்ற சொல் 67 இடங்களிலும், பழனம் என்பது 16 இடங்களிலும், வயல் என்பது 52 இடங்களிலும் வந்துள்ளது. இச்சொற்கள் பரவலாக தமிழகத்தில் இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

    1. நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் நிலமாகும். இந்நிலத்தில் மழைபெய்தால் நெல்விளையும், மழை பெய்யாவிட்டால் உப்பு விளையும். இந்நிலத்தில் உள்ள நிலப்பகுதிகளை அடைகரை, எக்கர், பரப்பு, கழி, கழனி, கானம் என்றெல்லாம் அழைத்துள்ளனர். எக்கர் என்ற சொல் 54 இடங்களிலும், பரப்பு என்பது 62 இடங்களிலும், கழனி என்பது 171 இடங்களிலும், கானம் என்பது 130 இடங்களிலும் வந்துள்ளது.

    மேற்கண்ட சொற்கள் நானிலங்களிலும் பயன்பாட்டின் அடைப்படையில் குறிக்கப்பட்டுள்ளன. இவை விவசாயத்தில் தமிழர் ஆழங்கால் பட்டுள்ளதைக் காட்டுவதாக உள்ளது.

    தமிழகத்து நிலப்பகுதிகளை மண்ணியல் அடிப்படையில் இன்றைய அறிவியலார் ஐந்து கூறுகளாக வகுத்துரைக்கின்றனர்.

    செம்மண்                     – Red Soil
    கரிசல் மண்                         – Black Soil
    வண்டல் அல்லது அடை மண்     – Alluvial Soil
    செம்புறை மண்              – Laterite Soil
    மணற்பாங்கான மண்       – Sandy Soil

    இங்கு குறிக்கப்பெற்ற வண்டல் மண் மருத நிலத்தில் ஆற்றுப்படுகைகளில் மிகுதியாக உள்ளது. செம்புறை மண் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் அதாவது குறிஞ்சி நிலத்தில் அமையும். மணற்பாங்கான மண் கடற்கரைப் பகுதிகளாகிய நெய்தல் நிலத்துக்குரியது. முல்லை நிலப்பகுதிக்குச் செம்மண் அமைப்பு உரியது. எஞ்சிய கரிசல் மண் மிகுதியான அளவு நன்புலத்துக்கும் சிறுபான்மை புன்புலத்துக்கும் உரியதாகக் கொள்ளலாம். நன்புலம் இயற்கை நீர்வளம் உடைய நிலப்பகுதிகள், புன்புலம் செயற்கை நீர்வளம் உடைய நிலப்பகுதிகள். இன்றைய அறிவியல் செய்தியை அறிவியல் என்று அறியாமல் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவான உண்மையாகும்.

    நீர் மேலாண்மையில் கலைச்சொற்கள்

    நாட்டு வளத்திற்கு அடிப்படைக் காரணியாக விளங்குவது நீர்வளம், நீர் வளத்தைத் தரும் வற்றாத பேராறுகள் நாட்டின் செல்வமாகத் திகழ்பவை. உயிர்களுக்கு அமுதாய்த் தாய்ப்பால் விளங்குவதுபோல் பயிர்களுக்கு நீர்வளம் இன்றியமையாதது. பிள்ளையின் வளர்ச்சிக்கு உரிய பாலாக விளங்குவது தாய்ப்பாலே. ஆவின் பாலும் பிறவகைப் பாலும் உயிர் வளர்க்கும் ஆற்றல் உடையவை எனினும், தாய்ப்பாலை நோக்க அவற்றிற்கு அடுத்த இடமே பொருந்தும். அதுபோல் பயிரின் வளர்ச்சிக்கும் பிறவகை நீர்ப்பாசன முறைகள் இருப்பினும் ஆற்றுப் பாசனமே சாலச்சிறந்தது. ஆற்று வெள்ளத்தில் பலவிடங்களில் அமைந்த வளங்கள் ஒருசேர அடித்து வரப்பட்டுச் சேர்க்கப்படுவதால் பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து வளமனைத்தும் கொண்டுள்ளன. எனவே ஆற்றுப் பாசன முறையே உயர்ந்தது என்று வேளாண்மை அறிவியல் நுட்பத்தைச் சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன. தமிழ்நாட்டின் எல்லைக்குள் மொத்தம் 33 ஆற்றுப் படுகைகளும், அந்த ஆறுகளுக்கு எண்ணற்ற துணையாறுகளும் உள்ளன. காவிரியும் வைகையும் சங்க இலக்கியத்தில் பெரிதும் இடம்பெற்றுள்ளன. அடுத்து ஆன்பொருநையும், பொருநையும், பெரியாறும் இடம் பெறுகின்றன. அரிசிலாறு, காஞ்சி, குமரி, சிலம்பாறு, சுள்ளியம், பேரியாறு, சேயாறு, பஃறுளி, பெண்ணை, வாணி என்ற ஆறுகளும் இடம்பெற்றுள்ளன. கங்கை, நர்மதா போன்ற வட இந்திய ஆறுகளுடன் ஒப்பிடும்போது நமது ஆறுகளின் நீர்வளம் மிகக்குறைவு. எனவே நீர்வளத்தைக் கருத்திற்கொண்டு கிடைக்கிற நீரை விரயமின்றிச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் நீர் மேலாண்மையில் ஒரு சிறந்த தொழில்நுட்பம். இலக்கியச் சிறப்புப்பெற்றிருந்தாலும் நீர் மேலாண்மை ஆய்வுக்கு ஆறுகள் பற்றிய விவரம் இன்றியமையாதது. மருத நிலம் ‘விழைவுஅறா வியன் கழனிகளை’ பெற்றிருந்ததற்கு இந்த ஆறுகளே காரணமாகும். நிலத்தில் நீர் அதிகமாகத் தேங்கி இருந்தாலும் அல்லது நிலத்தில் நீர் இல்லாமல் இருந்தாலும், பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூலைத் தருவதில்லை. இவை இரண்டுக்கும் இடையே, பயிர்களின் இக்கட்டு நிலையறிந்து, நீர்த்தேவையைக் கருத்திற்கொண்டு பாசனம் செய்வது நல்லது.

    ஒரு நாட்டின் வளமும் நலமும் நீர்வளத்தைப் பொருத்தே அமையும் என்பது பண்டைத் தமிழர் கொண்ட கொள்கையாகும். விதைத்துவிட்டு வானத்து மழையை நோக்கும் புன்செய் நிலம் மிகப்பெரிய அளவினதாயினும் ஓர் அரசனது வெற்றிக்கு அது பயன்படாது. அதனால் பள்ளமான பகுதிகளில் நீர் நிலைகளை உருவாக்கியோரே இவ்வுலகில் தம் புகழை நிலைநிறுத்தியோராவர்.

    “வித்தின் வான்நோக்கும் புன்புலம் கண்ணகல்
    வைப்பிற்று ஆயினும் நண்ணி யாளும்
    இறைவன் தாட்கு உதவாதே” (புறம்.18;24-26)

    என்று புலவர்கள் மன்னர்கட்கு நீர்நிலைகளை அமைக்க வேண்டியதன் இன்றியமையாமையை எடுத்துரைத்தனர். ஆதலால் நிலையான வேளாண்மைக்குக் குறைவில்லா நீர்வளம் தேவை என்பதைப் பண்டைநாள் தொட்டே மக்கள் உணர்ந்து வந்துள்ளனர். இத்தகைய நீர்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது மன்னர்கள் கடமையாகும். அத்தகையவனே உடம்பையும் உயிரையும் படைத்தவனாகவும் கருதப்பட்டான் என்பதனை

    “உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
    நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
    உடம்பும் உயிரும் படைத்தசி னோரே” (குடபுலவியனார்)

    என எடுத்துரைத்துள்ளனர். நீர் நிலைகள் மன்னர்கள் அமைக்கவேண்டும் என்பது தலையாயக் கடமையாக இருந்துள்ளது. புலவர்கள் அரசர்களை வாழ்த்தும்போதும் நாட்டின்  நீர்வளம் பெருக்கவேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்தும் வகையில் ‘சோறும் நீரும் ஆகிய இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருந’ என்றும் ‘நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென ஆளும் வேந்தே’ என்றும் விளித்துப் பாடியது குறிப்பிடத்தக்கது. ‘தீம்புனல் உலகம்’என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த மருத நிலத்தில் வளம்சான்ற ஆறுகள் பாய்ந்து வேளாண்மைக்கு வளம் சேர்த்தன.

    நீர்ப்பாசனத்தைப் பொறுத்தவரை, நிலத்தின் மேல்மட்ட நீரேயன்றி, நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் முறை பற்றிய ஆராய்ச்சியும் கிடைக்கும் நீரைச் சேதமின்றிப் பயன்படுத்தப் பல்வேறு நீர்ப் பாதுகாப்பு முறைகளும் அறிவியல் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தட்பவெப்பநிலை, பயிர்வகை, நில இயல்பு ஆகியவற்றைப் பொறுத்து நீர்ச் சேதத்தைத் தவிர்க்க மேற்பரப்புப் பாசன முறை (Surface irrigation), வேரின் கீழ்மட்ட நீர்ப்பாசன முறை (sub/surface irrigation), தெளிப்பு நீர்ப்பாசனம், சொட்டுநீர்ப் பாசனம், ஆடல்ஸ் ஆகிய பல்வேறு நவீன நீர்ப்பாசன முறைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    உழவியற் கலைச்சொற்கள்

    உழவியல் செயல் முறைகளில், உழுதல், உரமிடுதல், களை மேலாண்மை, நீர்ப்பாய்ச்சுதல், பயிர்ப்பாதுகாப்பு என்ற ஐந்து கோணங்கள் இன்றியமையாதவை. இந்த ஐவகைக் கோணங்களையும் விளக்கும் வகையில்,

    “ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின்
    நீரிலும் நன்றதன் காப்பு” (குறள்.1038)

    என்ற திருக்குறள் அமைந்துள்ளது. உழுவதைக் காட்டிலும் உரமிடுதல் சிறந்தது. களை நீக்கியபின் நீர்ப்பாய்ச்சுவதைக் கட்டிலும் பயிர்ப் பாதுகாப்பு முக்கியமானது என்பது இக்குறள் காட்டும் கருத்து.

    இலக்கியங்களில் உள்ள உழவுச் சொற்கள் பாரம்பரியத்தை விளக்குகின்றன. அதேபோல் பள்ளு இலக்கியங்களில் உள்ள உழவுச்சார்ந்த சொற்கள் வட்டார மணம் கொண்டதாக உள்ளதையும் காணமுடிகிறது. பண்டைத் தமிழர்களிடம் வழக்கிலிருந்த உழவுத் தொழில் சார்ந்த சொற்கள் கலைச்சொல்லாக்கத்திற்கு முதல் படியாக அமைந்திருப்பதைக் காணலாம்.

    உழவுத்தொழில் சார்ந்த சில சொற்கள்

    நம் தமிழர்கள் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் உழவுத்தொழில் சார்ந்த சில சொற்கள் கலைச்சொற்களாக விளங்குவதைக் காணமுடிகிறது. அவ்வகையான சொற்கள் இங்கு பொருள் விளக்கத்துடன் கொடுக்கப்படுகின்றன.

    1. நல்லேர் கட்டுதல், பொன்னேர் கட்டுதல்- நல்லேரு கட்டுதல், பொன்னேரு கட்டுதல்- வருடத்தின் முதல் நாள் நல்லநாள் பார்த்து கட்டும் ஏர்.
    2. சேடை வைத்தல்- சேடெ வெக்கிறது- உழுவதற்கு முதல்முதலில் வயலுக்கு தண்ணீர் வைத்தல்.
    3. தொளி கலக்குதல், தொளியடித்தல்- தொளிமிதித்தல்- ஏர் பூட்டி உழுதபின்னர் விதைப்பிற்கு ஏற்ற வகையில் சரிசெய்தல்.
    4. விதையிடுதல்- வெதெவுடுதல்- உழுது பண்படுத்தப்பட்ட வயலில் விதையைத் தெளித்தல்.
    5. தெளியடித்தல்- தெளியடித்தல்- விதையிடுவதற்கு முன் கலங்கல் நீர் வடிகட்டுதல்.
    6. நாற்று முளைத்தல்- நாத்து மொளச்சிடுச்சி- விதைத்த விதை முளைவருதல்.
    7. சிலுப்பு நீர்க்கட்டுதல்- மிகக்குறைந்த அளவு மட்டுமே நீர்க்கட்டுதல்.
    8. கங்களவு நீர்ப்பாய்ச்சுதல்- கங்கு நீர்ப் பாச்சுதல்- நாற்று முளையின் அளவிற்கேற்பச் சீராக நீர்ப்பாய்ச்சுதல்
    9. வெட்டிவிட்டுச் சரித்தல்- வெட்டிவுடுதல்- நாற்றங்காலில் நீர் வடியவிடுதல்.
    10. நாற்றுக் குருத்தல்- நாற்று இளைத்து செறிந்து வளர்தல்
    11. நாற்று சமைத்தல்- நாத்துச் சமைத்தல்- நாற்றங்காலில் முளைத்த நாற்றுக்கள் பிடுங்கி நடுவதற்குரிய பருவத்தில் இருத்தல்
    12. தரிசடித்தல், முதல் ஓட்டு, தரிசு ஓட்டு – மொதெ ஓட்டு – நடுவதற்குரிய வயல்களை முதல்முறையாக உழுதல்.
    13. மறித்தடித்தல்- மரிச்சடித்தல்- இரட்டித்தல், மறுத்தடித்தல், இரண்டாவதுமுறை உழுதல்.
    14. இரண்டாஞ்சால் – ரெண்டாஞ்சாலு – நிலத்தை இரண்டாவது முறை உழுதல்.
    15. கிடை கட்டுதல்- கெடெ கட்டுதல் – உழவிற்கு முன்னை ஆடு, மாடுகளைக் கூட்டமாக இரவு முழுவதும் வயலில் அமர்த்துவது. நிலத்துக்கு வளம்சேர்க்கச் செய்யப்படும் செயல்.
    16. வேரூன்றல்- பயிர் புடிச்சிடுச்சி- பயிர்களை நட்ட பின்னர் மண்ணில் வேர்பிடித்து உறுதியாதல்.
    17. குறுத்துச் செறிதல், கிளை கொள்ளல், கணு வைத்து எழுதல், குளை இளைத்தல், தூர் கட்டுதல், தூர்வெடித்தல் – கப்பும் கிளையுமாகப் பயிர் வளர்தலைக் குறிக்கும் சொற்கள்
    18. மத்தாளித்தல், திமிரிப்போதல், அக்கிரோகமாக இருக்கு – மத்தலித்தல், அக்ரோமா இருக்கு – கதிர் விளைச்சல் வந்தும் மகசூல் கிடைக்காமலிருக்கும் பசுமை நீங்கிய நிலையில் காணப்படும் கதிர்.
    19. கருக்கொள்ளுதல், சூல் கொள்ளுதல், சூல் கட்டுதல் – கதிர் சூல் கொண்டு உருவாகுதல்.
    20. பொதி நீட்டுதல், பொதி கட்டுதல், பொதி பயிர், சூல் பயிர் – சூல் கொண்ட கதிர்கள் மெல்லத் தலை நீட்டுதல்.

    மேற்கண்ட வேளாண்மைக் கலைச்சொற்கள் தமிழின் கலைச்சொல் வளத்திற்கு எடுத்துக்காட்டாகும். எனவே தமிழில் முடியாது எனச் சொல்ல முடியாது. தமிழிலியே முயன்றால் தமிழில் கலைச்சொற்கள் பெருகும் என்பது உண்மையாகும்.

    துணைநூற்கள்

    1.சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) 1940, சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு.

    2.இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு, 2-ஆம் பதிப்பு 1958, வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,.

    3.சுப்பிரமணியன்.ச.வே. (ப.ஆ.), 2008, சங்க இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை.

    *****

    கட்டுரையாளர் – முதுநிலை ஆய்வு வல்லுநர்
    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
    தரமணி, சென்னை – 600113.

     

    Share
  • தகழியின் இரண்டுபடி நாவலில் எதார்த்த வாதம்

    -மு.சண்முகப்பிரியா

    தகழி சிவசங்கரப்பிள்ளை ‘பிரதிபலம்’ என்ற நாவல் மூலம் மலையாள இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்.  இவர் ஆலப்புழை மாவட்டத்தில் ‘தகழி’ என்ற சிற்றூரில் பிறந்தவர்.   தகழி ‘பதித்பங்கஜம்’, ‘சங்கதி’, ‘நித்தியகன்னிகை’ போன்ற புதினங்கள் படைத்துள்ளார்.  இவை அனைத்தும் இடதுசாரிச் சிந்தனைகள் உடையவை.  ‘தோட்டியின் மகன்’ (1947) தோட்டிகளின் வாழ்க்கையை சொன்ன மலையாள இலக்கிய உலகில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய புதினம் ஆகும்.  ‘இரண்டடங்கழி’ (1948) குட்ட நாட்டில் பண்ணை வேலை செய்யும் புலையரின் வாழ்வியல் பற்றியது.  சாகித்ய அகாதெமி விருதுபெற்ற ‘செம்மீன்’ (1956) பரதவ மக்களின் நம்பிக்கைகளையும் வாழ்க்கையையும் பதிவிட்டது.  ‘ஓசோபின்ட மக்கள்’ (1959 )கிறித்துவக் குடிகளை பதிவு செய்தது.  கேரளநாட்டு வரலாற்றையே உள்ளடக்கிய ‘கயிறு’ (1980) இலக்கிய உலகில் மிக உயரிய விருதான ஞானபீடப் பரிசும் பெற்ற புதினம் ஆகும்.

    ‘இரண்டுபடி’ சேற்று நிலம் நிறைந்த குட்டநாட்டில் பண்ணை முறை ஒழிந்து உடலுழைப்புக்கேற்ற கூலி என்ற நிலை ஏற்பட்ட காலத்தில் சொந்த நிலம் இல்லாத ஏழைப் பண்ணைத் தொழிலாளர்களின் வாழ்க்கைநிலையைக் கூறுகிறது.  நிலப்பற்று, தொழிற்பற்று, பண்ணையார் பக்தி ஆகிய மயக்கங்களோடு வாழ்க்கை நடத்துகிறவர்கள் குட்டநாட்டு விவசாயத் தொழிலாளர்கள்.  இந்த மயக்கத்தில் இருந்து விடுபடும் கோரன், சமூக அமைப்பின் கொடுமை குறித்தும் நடைமுறையில் இருக்கும் பொருளாதார நிலைமை குறித்தும், இதன் அநீதி குறித்தும் மெல்ல மெல்ல விழிப்படைய அவனுக்குச் சங்கங்கள் உதவி செய்கின்றன.

    கதையின் தலைவனான கோரன், தன் திருமணத்திற்குப் பெண்வீட்டிற்கு ஐம்பது ரூபாயும், இருபத்தைந்து பறநெல்லும், சீர்கொடுத்துத் திருமணம் செய்ய வேண்டிய சூழலில் புஷ்பவேலி பண்ணையாரிடம் ஓணப்பணியாளாக வேலைக்கு சேர்கிறான்.  முழுமையான பண்ணைத்தொழில் மட்டுமே தெரிந்த கோரன் முதலாளிகளால் தானும், தன்னைச் சார்ந்த தொழிலாளர்களும் சுரண்டப்படுகின்றனர் என்று தெரிந்தபோது அதை எதிர்க்கிறான்.  அங்கு உரிமை மறுக்கும்போது போராட்டக்களம் உருவாகத் தொடங்குகிறது. 1950-களில் சங்கம் தொடர்ந்து ஒன்றிணைந்து போராடுவதாக நாவல் புனைவாக்கம் செய்யப்படுகிறது.

    குட்டநாட்டுச் சமூகம்:

    எட்டித்துறையில் வாழும் காளிச்சம்பான் தன் மகள் சிருதயை திருமணம் செய்ய வருபவர்கள் 25 பறநெல்லும், ஐம்பது ரூபாயும் தட்சணை கொடுத்துத் திருமணச்  செலவு செய்து கொண்டு போக வேண்டும் என நிபந்தனை போட, சிருதைக்குத் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.

    ‘‘கல்யாண விருந்து, ஊர்ப் பணம், உடை, தாய்மாமானுக்கு உடை, பெண்ணின் தாய்க்கு உடை,  50 ரூபாய் 25 பறநெல்””1  இது கோரன் கொடுக்கவேண்டிய தட்சணை.  இதற்காகக் கோரன், புஷ்பவேலி பண்ணையாரிடம் ஓணப்பணியாளாக வேலைக்குச் சேர்ந்தான்.  வருடம் 180 நாள் வேலை. ஒருநாள் கூலி  5 கூலியேன், இரண்டுபடி நெல், ஓணம், அமாவாசை, மகம் நாட்களில் வேலை இல்லை.  அறுவடைக்காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாளாகக் கதிர்க்கட்டு கிடைக்கும்.  கோரன் குடும்பத்தினர் குஞ்சப்பு வீட்டில் ஒரு தரைபோட்டுத் தங்கிக் கொண்டனர்.  கடுமையான ஐப்பசி மாதக் குளிரில் தண்ணீரில் இறங்கிச் சகதிக்கட்டுகளைத் தோண்டி எடுத்து கரையில் போடுவது அவர்களின் முதல்வேலையாக இருந்தது.

    அங்குள்ள மக்கள் உரிஅரிசி இருந்தால் என்றாவது ஒருநாள் அரிசிச் சோறு வடிப்பார்கள்.  அங்கு ஊப்பைமீன்கள் கொண்டு குழம்பு வைப்பார்கள்.  ஆனால் மரவள்ளிக்கிழங்குதான் பெரும்பாலும் உணவாக இருக்கும்.

    தொழிலாளர்கள் நிலை:

    ஐப்பசி மாதம் ஒருநாள் அனைவரும் முதலாளியின் வீட்டில் ஒன்றுகூடுவார்கள்.  அன்று பண்ணையாரால் ஒருநேர விருந்தும் மதுவும் வழங்கப்படும்.  அதில் பலர் அடக்கி வைக்கப்பட்டுள்ள உண்மையைப் புலம்பலாக வெளியிடுவர்.  அன்று சமையல் சாம்பான் ‘‘பள்ளனும் பறையனும் வேலை செய்தான் நெல் உண்டாக்கினான் அதை, பண்ணையார் அறையில் வாரி போட்டாவ, சாம்பனும் குடும்பனும் வேலை செய்து தரையை உண்டாக்கினான், சகதிக்கட்டை போட்டு உயர்த்தி தோட்டமுண்டாக்கினான், தென்னம்புள்ள நட்டான், பண்ணையார் தேங்காய் பறிக்கிறாவ””2  என்று கூறுவதன் மூலம் அந்த ஊர் உருவாகக் காரணமானவர்களே அடித்தட்டு தொழிலாளி மக்களே ஆவார் என்பது புலனாகிறது. பண்ணையார் அடிக்கும்போது வாங்கிக்கொள்வது பெருமையாகவே இருந்தாலும் தொழிலாளர்கள் தம்மைப் பண்ணையார் அடித்தால் அந்த அடியை வாங்கிக் கொண்டால் பின் நன்மை செய்வார் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். முதலாளிகள் தன்னிடம் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுப்பார்.

    புஷ்பவேலிப்  பண்ணையாள் அந்த வயலில் உழுது, விதையிட்டு, பயிர் செய்து அறுவடை தொடங்கும் முன்வரை அவனே அதற்கு முழுப் பொறுப்பாவான்.  ஆனால் அறுவடை தொடங்கியதும் அந்த நிலத்திற்கும் அறுவடைக்கும் அவனுக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை.  உழைப்பும், விளைச்சலை உண்டாக்குவதும் தொழிலாளியுடையது.  ஆனால், அந்த விளைச்சலும் அதன் உரிமையும் அவனுக்கில்லை.  ‘‘கோரனுக்குத் தன் பொறுப்பில் உள்ள வயலின் அறுவடை வந்ததும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.  ஒரு மணிகூட சிந்தாமல் சிதறாமல் அறுக்கவேண்டும் என வேலை செய்யும் பெண்களிடம் கூறினான்.  தன் உழைப்பின் பயனைப் பார்த்துப் பார்த்து வியந்து  மகிழ்ச்சியால் ஒரு கதிரெடுத்து புட்டிலில் வைத்தான்.  அதைக் கவனித்த பண்ணையார் கதிரைக் கீழேபோடச் சொல்லி அதட்டினார்.  கோரன் அசைவற்று நின்றுவிட்டான்.””3  கோரன் போராடியும் ஒரு பிடி நெல் கேட்டபோது அவனைக் கடுமையாகப் பார்த்தார்.  பண்ணையாரின் சகதிக்காடு கோரனால் விளைநிலமாகியது.  அவன் உழைப்பால் உருவானது. ஆனால், அந்த விளைநிலத்தில் விளைந்த விளைச்சலைத் தொட அவனுக்கு அனுமதியில்லை.  பண்ணையார் தான் எடுத்த கதிர்க்கட்டைக் கீழேபோடச் சொல்லிய உடன் அவன் வெதும்பிபோய் தனக்கு உரிமையில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தான்.  இது அங்கிருந்த ஓணப்பணியாள் அனைவருக்கும் பொதுவான நீதியாக இருந்தது.

    வறுமையும் உணவும்:

    புஷ்பவேலியில் வாழும் தொழிலாளிகளுக்கு அதிகபட்சமான ஆசை சகதிக்காட்டை சரிசெய்து குடிசையிடுவதும், உணவாக நெல்லரிசிச் சோறும் சிறுமீன் குழம்பும் மரவள்ளிக்கிழங்கும் உண்பதுமாக இருந்தது. அதோடு புதுத்துணி அணிந்து ஆலப்புழைக்கு சென்று ஒரு திரைப்படம் பார்ப்பதுமாக இருந்தது.

    விவசாயத் தொழிலாளர்களின் அன்றாட உணவு என்பது நாழிக்கஞ்சியும் நாலு துண்டு கிழங்கும்தான் இருந்தது.  வெளுதை தன் மகன் குடிசைக்கு வந்திருந்தான்.  உடல் முழுவதும் வீக்கம்.  ‘‘அரிசி போட்டுக் கொதிக்கவச்ச தண்ணி குடிச்சு நாள் பத்தாச்சு, அதுதான் இந்த விதர்ப்பு என்று கூறினான்.””4  இதன்மூலம் நெல்லரிசிக்கு ஏங்கியிருந்தனர் என்பதை நம்மால் உணரமுடிகிறது. அறுவடைக் காலம் முழுவதும்  முதலாளிகள் கூலி நெல்லுக்கு பதில் காசு கொடுக்க ஆரம்பித்தனர்.  கூலி நெல்லைக் கொண்டு உணவருந்திப் பசிபோக்கிய குடும்பங்கள் குறைவான கூலிப் பணத்தைக் கொண்டு தங்களின் அடிப்படையான உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்யமுடியவில்லை. கோரனின் எண்ணம் முழுவதும் தன் தந்தையைக் கவனிக்க வேண்டும் என்றே விரும்பியது.  தந்தை தன் வீட்டிற்கு வந்தபோது தன் மனைவி அரிசிக் கஞ்சிக் கொடுத்தாள் என்ற செய்தி கோரனை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

    சரியான உணவு இல்லாமலும், குளிராலும் கோரனின் தந்தை இறந்தான்.  புதைக்க இடம் இல்லை.  குடியிருப்புப்பகுதி முழுவதும் ஈரமான தரை.  எனவே புதைத்தால் பிணம் மேலே வந்துவிடும்.  கிறித்துவர் ஆக இல்லாதால் கல்லறைப்பகுதிகூட இல்லை.  பிணத்தைக் கல்லால் கட்டி ஆற்றில் போட்டான்.  தன் தோட்டியின் மகன் புதினத்தில் கூட ‘‘சுடலையின் தந்தை இசக்கிமுத்து தோட்டியைப் புதைக்க இடமில்லால் புதைக்கப் பணம் இல்லாமலும் மலக்கிடங்கில் புதைத்தனர். இரண்டு நாளில் நாய் பிணத்தை எடுத்து வெளியே இழுத்துப் போட்டுவிட்டது.””5 என்று அடித்தட்டு மக்களின் வாழ்வியலை எதார்த்ததோடு சுட்டுகிறார்.

    போராட்டங்களும் தீர்வும்:

    உழைத்துப் பழகிய மக்கள் அதற்கான கூலி கிடைக்காமல் பட்டினியால் வருந்தினர்.  ‘‘பண்ணைத் தொழிலாளர்களுக்குச் சம்பளமாக ஒவ்வொரு ரூபாய் கொடுத்துவிட்டு யோசேப்பு கர்வத்தோடு வேணுமென்றால் கொண்டு போ இங்கு நெல்லும் புல்லும் ஒன்றுமில்லை.  வேலை வேண்டாம் என்றால் பற்றுள்ளதை வைத்துவிட்டு போ””6 என்றான்.  குட்டநாட்டில் பண்ணையார்கள் இரகசிய தீர்மானம் போட்டு யாருக்கும் நெற்கூலி இல்லை என்று முடிவெடுத்தனர்.

    முதல் முறையாகப் பத்திலிருந்து அறுபது பறையர்கள் கூடினர்.  தங்களைப் பற்றிய பிரச்சனைகளைப் பேசினர்.  ஒன்றுசேர்ந்து நிற்கவேண்டும் என்றனர். தங்களுக்குக் கூலி கொடுக்க நெல் இல்லை என்று சொன்ன பண்ணாயார்களின் நெல்லை லாரியில் ஏற்றும்போது அங்கிருந்த விவசாயக்கூலிகள் அந்த லாரியை மடக்கிப் பிடித்துத் தங்களின் முதல் எதிர்ப்புக்குரலை ஒலித்தனர்.  சங்கம் ஆரம்பித்தனர், சிறுசிறு சங்கங்களைச் சேர்த்த நிர்வாகமும் மக்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கிய காலகட்டம்.  கோயில் திருவிழாக்களில் சங்கம் குறித்தும் உழைப்புக்கேற்ற கூலி வாங்கவேண்டும் என்றும் பேசினார்.  இது ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் ‘‘ஒரு எசமான் எல்லோரும் சமமுனு சொன்னார்.  அப்ப நம்மளும் பண்ணையாரும் சமமா?  நமக்குக் கூலி கூடுதல் வேணமின்று கேட்டா பண்ணையாரிடம் இருந்து வாங்கி தருவாங்களா?””7 என்று அறியாமை நிறைந்த மக்களாகவே இருந்தனர்.  அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கிவிட்டது.  அதில் சாதி, மத, பேதமின்றி கட்சியில் அனைவரும் இணைந்தனர்.

    சங்கமானது தொழிலாளர்கள் பேசவும் அவர்கள் கருத்துக்களைக் கூறவும் அவர்களுக்குத் துணிவுடன் கூடிய உரிமையைக் கொடுத்து இருந்தது.  இந்த அரசாங்கம் நமக்கு என்ன செய்யபோகிறது என்று பேசும் அளவிற்கு வளர்ந்து இருந்தனர்.  இவர்களின் இந்த எதிர்ப்பால் அரசு இவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்தது.

    ‘‘தினந்தோறும் இரண்டு கூலியேன் நெல்லும், மீதி அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் என்றும் கூலிவிகிதம் மாறிவிட்டது.  இது சங்கத்தின் முதல் வெற்றியாகும்.  இந்த வெற்றி கோரனை இன்றும் சங்க செயல்களில் தீவிரப்படுத்தியது.  தன் மனைவி  தடுக்கும்போது அவள் தனக்கு முட்டுக்கட்டைப் போடுகிறாள் என்று கூறும் அளவிற்கு அவன் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டான்.  சங்கமே அவனுக்கு உயிர் மூச்சாகவும் இருந்தது.  அவனின் ஈடுபாட்டைப் பார்த்து தானும் கணவனுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சங்கத்தில் சேர்வதாக கூறுகிறாள்.  அப்போது சங்கம் பற்றிக் கோரன் தன் மனைவிக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தான்.””8 ‘‘இனி நமக்கு முன்னால் இருக்கும் காலம் அபாயகரமானது.  அதோடு இந்தப் போர் குட்டநாட்டுப் பண்ணைக்கு மட்டுமன்று; ராஜ்யத்தை  ஆளுகிறவர்களுக்குக் கூட யூனியனையும் அதில் பணியாற்றுபவர்களையும் எதிர்ப்பார்கள்.  இவர்கள் பண்ணையார்களின் மச்சான்களே.  எனவே நமக்கு வேண்டியதைப் பிடிச்சு வாங்கனும், ஜெயிலுக்கு போகவோ அடிபட்டு சாகவோ எல்லாம் நடக்கும்””9 என்ற நிலையினை எடுத்துச் சொன்னான்.

    குட்டநாட்டு விவசாயத் தொழிலாளர்கள் அவர்களுக்குத் தேவையான சிறு சிறு உரிமைகளை யூனியன் வழியாகப் பெற்றனர்.  அவர்களின் மோதல் பண்ணையார்கள் மட்டுமின்றி அரசாங்கமும்தான். அங்கு இருக்கும் தாழ்த்தப்பட்ட பண்ணைத் தொழிலாளர்கள் சற்று வளர்ந்தனர்.  ஆதலால், அவர்களின் குரலில் கனம் கூடியது. அவர்கள் இட்ட நிபந்தனைகளை ஏற்று கூலி தரப்பட்டது.  ‘‘கூலியை அவர்கள் முன்னால் அளக்கவேண்டும்.  நிலத்தில் விளைவதில் ஒரு பங்கும், மற்றும் பண்ணையாளர்களின் இலாபத்தில் ஒரு பங்கும், வேலைக்கேற்ற கூலி, அதோடு பண்ணையார்களின் கட்டுக்குத்தகையை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றனர்.””10 இதனால் சில பண்ணையார்கள் ஏழை நாயரையும் கிறித்துவர்களையும் ஈடுபடுத்தினர்.  பின் இவர்களே இதைச் சரியென்று ஒப்புக்கொண்டு போய்விட்டனர்.  நாடெங்கும் விவசாயத் தொழிலாளர்களின் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. தொழிலாளர்கள் முத்திரைமொழிகள் முழங்குகின்றனர்.  பல இடங்களில் வேலைநிறுத்தம் நடந்தது.  சில இடங்களில் கேட்ட கூலி வாங்காமல் வேலையாட்கள் கலைந்து போகவில்லை.  இரவில் வீட்டின் முன்னே நின்று உறுதிச்சொற்கள் உரைத்துக் கூவினர்.  அரசுக்கு எச்சரிக்கை செய்தனர்.  குட்டநாட்டில் உணவுப்பஞ்சம் உச்சத்தில் இருந்த காலத்தில் எல்லைமீறி பொது அமைதியை உடைத்தனர் என்று அரசு பலர்மீது வழக்குத் தொடர்ந்தது.  அதில் முக்கிய தலைவர்கள்  தலைமறைவாகிவிட்டனர்.  இதேபோல் டி.செல்வராஜின் ‘தோல்’ புதினத்தில் தோல் தொழிலாளர் போராட்டமும், ‘மலரும் சருகும்’ புதினத்தில் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டமும் வர்க்கப் போராட்டத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ‘‘1948-1955 காலகட்டத்தை இடதுசாரி இயக்கங்களின் தலைமறைவுக் காலம்””11 என்றே பா. ஆனந்தகுமார் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார். வகைமாதிரியான சூழல்களில் வகைமாதிரியான கதை மாந்தர்களைப் படைத்துக் காட்டுவதுதான் எதார்த்தவாதம் என்னும் ஏங்கல்ஸ் கூற்றுக்கேற்பக் கோரன் இங்குப் படைக்கப்படுகிறார்.  போராட்டத்தில் சிலர் பிடிபட்டனர்.  சிலர் ஒடுக்கப்பட்டு அடிக்கப்பட்டு அடைக்கப்படுகிறார்கள்.  கோரன் தலைமறைவாக இருக்கிறான்.  சிருதையை ஓர் இரவில் திடீரென சந்தித்திப் பேசிவிட்டுச் செல்கிறான்.

    தகழியின் இந்தப் புதினத்தில் புரட்சியான ஆனால் எதார்த்தமான காட்சியாக கோரன் தன் வாழ்க்கையைத் தொழிலாளர்கள் நலன், சங்கம் என்று அர்ப்பணித்துவிட்டதால் சிருதையை விரும்பிய சாத்தனிடம் ஒப்படைக்கிறான்.  அதோடு சிருதைக்குத் துன்பத்தைக் கொடுக்கும் புஷ்பவேலி சாக்கோவை அடித்துக் கொன்றான். ஆனாலும், தொழிலாளர்களின் நலனுக்காகத் தலைமறைவாக இருந்தான்.  விவசாயத்தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுவதால் ‘‘முதலாளி இனத்தார் மிகவும் பயந்து சங்கடப்பட்டனர்.   மாதா கோவில்களிலும் மிக நீண்ட பிரார்த்தனையும் இந்து கோவில்களில் திவ்ய ஹோமங்களும் நடந்தன.  கம்யூனிஸத்திலிருந்து உலகைக் காப்பாற்றுமாறு இவையெல்லாம் நடந்தது.””12 இவ்வாறு போராட்டத்தின் தன்மையைப் பார்க்கும்போது சிருதையும் மற்ற பெண்களும் போராட்டத்தில் தாங்களும் ஈடுபடவேண்டும்  என்று விரும்பினர்.

    முடிவுரை:

    விவசாயப் போராட்டங்களின் எழுச்சியானது அரசாங்கத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது.   குட்டநாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.  பொதுமக்களின் விருப்பங்கள் மதிக்கப்படவேண்டும் என்று சங்கங்கள் கூடிப் பேசி முடிவெடுத்தனர்.  சங்க உறுப்பினர்கள் அனைவரும் சமமான சீரான முன்னேற்றம் அடையவேண்டும் என முடிவெடுத்து விவசாயத் தொழிலாளர்களின் இந்த கலகக்குரலானது உரிமைக்குரலாக ஒலித்து வெற்றியடைந்தது.

    அடிக்குறிப்பு:

    1.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 20.
    2.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 33.
    3.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 53.
    4.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 71.
    5.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 98.
    6.தோட்டியின் மகன் தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 30.
    7.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 100.
    8.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 115.
    9.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 120.
    10.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 121.
    11.கட்டுரை டி.செல்வராஜ் தால் நாவல் வரலாறும் எதார்த்தவாதமும் பா. ஆனந்தகுமார், பக்.51.
    12.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 113.

    பயன்பட்ட நூல்:

    சிவசங்கரம்பிள்ளை, தகழி. இரண்டுபடிகள், சாகித்ய அகாடமி, தலைமை அலுவலகம், இரவீந்தரபவன், 35, பெரோஷா சாலை,புதுதில்லி-1.

    *****

    கட்டுரையாளர் – தமிழ் உதவிப்பேராசிரியர்,
    அரசுக் கலைக்கல்லூரி (தன்னாட்சி),
    சேலம் – 636 007.

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 29

    க. பாலசுப்பிரமணியன்

    தொழிலின் சிறப்பு

    மாற்றங்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை என்பதை நாம் புரிந்துகொண்டால் மாற்றங்களைச் சந்திப்பதற்கும் வாழ்வை வளமுடன் வாழ்வதற்கும் தேவையான சக்தியும் எண்ணங்களும் கருத்துப் பரிமாணங்களும் நமக்கு எளிதில் கிடைக்கும். இதற்குத் தகுந்தவாறு நமது அணுகுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வடித்துக்கொள்ளவும் உபயோகித்துக்கொள்ளவும் நாம் தயாராக வேண்டும்.

    எந்த ஒரு பிரச்சனையையும் நமது அணுகுமுறைகளால் சமாளித்து விடலாம். நமது அணுகுமுறைகள் நேர்மையானதாகவும் பரிசுத்தமானதாகவும் ஆக்கபூர்வமாகவும் இருத்தல் அவசியம். இவைகளில் எந்தவிதமான குறைகள் இருந்தாலும் நமக்கு கிடைக்கும் பலன்களில் அவைகளின் தாக்கமும் பாதிப்பும் இருக்கும்.

    உதாரணமாக மாணவப் பருவத்தில் சிலர் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்ளும் பொழுது ‘இதெல்லாம் தேர்வில் வராது’ என்றோ ‘இந்த மாதிரிக் கேள்விகள் வந்தால் அவைகளை தயாரிப்பின்றியே சமாளித்து விடலாம் ‘ என்ற கருத்தும் அணுகுமுறையும் இருந்தால் நிச்சயமாக அவர்களுக்குத் தேர்வில் பாதிப்புக்கள் ஏற்படும். கற்றலின் சிறப்பே அறிவுத் திறன்களை வளர்த்துக்கொள்வதேயன்றி வெறும் தேர்வில் மதிப்பெண்களுக்காக மட்டும் தயாரிப்பில் ஈடுபடுதல் அல்ல. இது ஒரு கட்டிடத்திற்கு அடிவாரம் இல்லாமல் மேலே கட்டிடங்களைக் கட்டுவது போல.

    இதேபோல எந்த ஒரு தொழிலிலும் நாம் ஈடுபடும் பொழுது அந்தத் தொழிலுக்குத் தேவையான திறனும் கண்ணியமும் ஈடுபாடும் தேவையானது. மேலெழுந்தவாரியாக வெளிப்பூச்சு செய்வதுபோல மற்றவர்களுக்காக ஒரு வேலையைச் செய்யும் பொழுது நமது உள்மனதிற்க்குத் தேவையான நிறைவும் மகிழ்வும் கிடைக்காதது மட்டுமின்றி அந்தத் தொழிலின் மீதே நமக்கு ஒரு வகையான வெறுப்பும் பிடிப்பின்மையும் ஏற்பட்டுவிடும். தொடர்ந்து ‘எப்பொழுது இந்த வேலையை நாம் விட்டுவிடுவோம் என்ற எதிர்பார்ப்புக்களும் அதைச் சார்ந்த மனச் சோர்வும், அதன் பலனாக மன-உடல்நல பாதிப்புக்களும் ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகமாக அமையும்.

    “செய்யும் தொழிலே தெய்வம் என்ற மனப்பான்மை வேண்டும். எந்தத் தொழில் செய்தாலும் அது நாம் இறைவனுக்குச் செய்யும் ஒரு படைப்பாகக் கருதிச் செய்யும் பொழுது அதில் ஒரு நிறைவும் மகிழ்வும் ஏற்படும். நிறவெறியை எதிர்த்துப் போராடிய தலைவர் மார்ட்டின் லூத்தர் கிங் என்பவர் கூறினார்”  ஒரு மனிதன் தெருவைச் சுத்தம் செய்யும் பொழுது, மைக்கெல் அஞ்சேலோ ஒரு சிற்பம் வடித்ததைப் போலவோ அல்லது செகப்பிரியர் ஒரு கவிதை புனைந்தது போலவோ அல்லது பீத்தோவன் ஒரு பாடலுக்கு இசை அமைத்தது போலவோ நினைத்து அந்தத் தொழிலைச் செய்யவேண்டும். அதைச் செய்யும் பொழுது மண்ணிலும் வானிலும் இருக்கும் தேவதைகள் சற்றே நின்று வியந்து ‘இதோ இங்கே தெருக்கூட்டுபவன் தன் தொழிலை எவ்வாறு சிறப்பாகச் செய்கிறான் பாருங்கள் ” என்று தங்களுக்குள் உரையாடிக்கொண்டு செல்ல வேண்டும்.”

    தொழிலைச் செய்யும் பொழுது அது ஒரு உயர்ந்த அல்லது தாழ்ந்த தொழில் அல்ல. எல்லாமே ஒருவர் இந்த மனித இனத்திற்கும் இந்த மண்ணிற்கும் தாங்கள் செய்யும் ஒரு சேவையாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு செய்கின்ற ஒரு மனிதனுக்கு இந்த உலகில் உள்ள அனைவரும் தலை வணங்குவர்.  சில ஆண்டுகளுக்கு முன் மராட்டிய மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு மிகப் பெரிய தொழிலதிபரின் வண்டி ஓட்டுநர் அவரிடம் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வேலை பார்த்தபின் மாரடைப்பால் காலமாகின்றார். அடுத்த நாள் அவர் உடலுக்கு இறுதி மரியாதை அளிக்க பலர் கூடியிருந்த வேளையில் அந்தத் தொழிலதிபர் எந்தக்காரில் அவர் ஓட்டுநராக இருந்தாரோ அதை அலங்கரித்து அவருடைய சவ ஊர்வலத்திற்க்காகக் கொண்டு வந்தது மட்டுமின்றி அதைத்தானே மயானம் வரை ஒட்டிச் சென்றார். பலரின் கேள்விக்கு பதிலளிக்கும் வண்ணம் அந்தத் தொழிலதிபர் கூறியதாவது. “முப்பது ஆண்டுகள் இவர் என்னை பத்திரமாகக் காப்பாத்தி இந்த வண்டியை ஒட்டியிருக்கின்றார். அவருடைய தொழில் திறனுக்கும்கடமை உணர்வுக்கும்  நான் கொடுக்கும் சிறிய மரியாதை அவரைக் கடைசி ஊர்வலத்தில் நானே அழைத்துச் செல்வதுதான்.” பல இடங்களில் தங்கள் தொழிலில் நேர்மையுடனும் கடமையுணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டவர்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் வரலாற்றுச் சிறப்புப் பெற்றவை.

    சில நேரங்களில் நாம் செய்கின்ற தொழிலுக்கும் அதில் நாம் காட்டும் ஈடுபாட்டிற்க்கும் நம்முடைய சிறப்பான திறன்களுக்கும் சரியான ஊதியம் கிடைப்பதில்லை. அல்லது நாம் சிறப்பாகத் தொழில் செய்தாலும் பல வித காரணங்களால் நமக்கு மற்றவர்களோடு நிகரான அங்கீகரிப்புக் கிடைப்பதில்லை. இவைகள் நம்முடைய தொழில் தர்மத்தையோ`அல்லது ஈடுபாட்டையோ, திறன்களையோ அல்லது கடமை உணர்வினையோ பலி  வாங்க அனுமதிக்கக்கூடாது. நமக்குப் பல நேரங்களில் நிகரான அங்கீகாரங்கள் கிடைப்பதில்லை. அது நம்முடைய திறனுக்கோ  அல்லது தனித்தன்மைக்கோ விமரிசனம் அல்ல. அவைகளுக்கு அப்பாற்பட்டு நாம் செய்கின்ற தொழில் இந்த மனித இனத்திற்கும் இறைவனுக்கும் நாம் செய்கின்ற ஒரு தோத்திரமாக இருந்தால் அதுவே நமது வாழ்க்கையின் பொருளும் வெற்றியும் ஆகும்.

    முயன்று பார்க்கலாமே !

    Share
  • திருமூலரின் வாழ்வியல் நெறி

    -முனைவர் த. மகாலெட்சுமி

    பக்தி நூலான திருமந்திரம் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையதாகும். இந்நூல் இறைவனைத் துதி செய்வதோடு நில்லாமல் பதி பசு பாசம் என்பனவற்றின் இணைப்பையும் உயர்ந்த முறையில் வாழ்வாங்கு வாழ உதவும் நல்முறைகளை விளக்கியும் நல் வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் சாத்திர நூலாகவும் விளங்குகிறது. பண்டைய பாரத சித்தர்கள் கூறிய மனித வளர்ச்சிக்கு உகந்த யோகம் தியானம் குண்டலினி யோகம் மருத்துவம் நல்ஒழுக்கம் போன்றவற்றை விளக்கும் அரிய நூலாகும் இது. அரிய பொருளை எளிய சொற்களால் அனைவரது உள்ளத்திலும் பதியும்படிக் கூறுதல் திருமூலரின் சிறப்பு இயல்பாக அமைந்துள்ளது. திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல செய்திகளைப் பற்றிப் பேசுகிறது. அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் அன்புதான் கடவுள். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலர்” என்பது நம் திருமூலர் திருமந்திரமாகும். இவற்றுள் திருமூலரின் வாழ்வியல் நெறிகளைச் சுருக்கமாகக் காண்போம்.

    திருமூலரின் பொதுநெறி

    திருமூலர் பெருமான் “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்…” என்று பாடி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்திற்கு வேண்டிய நல்லிணக்கச் செய்திகளைத் திருமந்திரத்தில் அழகாக விளக்கியிருக்கிறார். ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல் எனத் திருமூலர் தொடாத துறைகளே இல்லை. திருமூலர் இயற்றிய மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திர பாடல்களே இதற்குச் சான்று பகர்கிறது.

    தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
    மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
    திருவா சகமும் திருமூலர் சொல்லும்
    ஒருவா சகமென் றுணர்.           (ஔவையார், நல்வழி 40)

    திருவள்ளுவத் தேவர் இயற்றிய திருக்குறளும், திருநான்மறை எனப் போற்றப்படும், ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களின் முடிபும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரத் தமிழும், மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார், திருவாசகம் ஆகியனவும், திருமூலர் வாக்காகிய திருமந்திரமும் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் ஒன்றே என்று உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஔவையார் கூற்றே திருமந்திரத்தின் சிறப்புக்கு  மிகச் சிறந்த சான்றாகும். திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாது, உலக மக்களுக்கெல்லாம் அறத்தையும், ஆன்மிகத்தையும், மருத்துவத்தையும் வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கும் அரும்பெரும் களஞ்சியமாக விளங்குகிறது.

    மனதே கோயில்

    கடவுளை அறிவதற்கும் அடைவதற்கும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அக வழிபாடு, மற்றொன்று புற வழிபாடு. இதில் அக வழிபாடு தியானம் அதாவது தவம், அதேபோலப் புற வழிபாடு பூஜை, தொண்டு ஆகியவைதான். உள்ளம் பெருங்கோயில் எனக்கூறிய ஆன்மநேய அருட்கவி திருமூலர். கடவுள் வெளியே இல்லை உன் உள்ளேயும் இருக்கிறார் என்பது தான் கடவுள் பற்றிய இவரது ஒற்றை வரிக் கண்டுபிடிப்பாகும்.  இதைத்தான் அகம்பிரம்மா என்று வேதம் கூறுகிறது. எனவே உள்ளத்தில் அன்பு இல்லாமல் கூடைகூடையாய்க் கோயிலுக்கு இலட்சார்ச்சனை செய்வதை விட, உள்ளன்போடு கடவுளை வணங்கினாலே போதுமானதாகும். இதனைத் திருமூலர்,

    அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
    என்போன் மணியினை எய்த ஒண்ணாதே  (திருமந்திரம் 272)

    உள்மனம் குழைந்து அவனை வணங்கிச் சரணடைய வேண்டும். அப்போதுதான் ஒப்பற்ற மணியாகிய அவனது திருவருள் உங்களுக்குக் கிடைக்கும். அதேபோன்று விண்வெளியையும், கோள்களையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறையில் முதலில் தன்னை யார் என்பதை அறிந்தகொள்ள யாரும் முற்படுவதில்லை. எனவே முதலில் உன்னை நீயே அறிந்துகொள், அப்படி அறிந்துகொண்டால், அனைத்தும் அறியலாம் என்கிறார் திருமூலர். இச்செய்தியை,

    என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
    என்னை அறிந்தபின் ஏதும்  அறிந்திலேன்   (திருமந்திரம் 2366)

    என்ற பாட்டில் சுட்டுகிறார்.

    ஆன்மிக விஞ்ஞானம்

    திருமூலரின் தன் பார்வையில் ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றாகக் காண்கிறார். ஆன்மிகத்தால் தான்பெற்ற அறிவியல் கருத்துக்களை விதைத்தார். குறிப்பாக மருத்துவ அறிவியலுக்கு முன்னோட்டமாகப் பல வியத்தகு அறிவியல் அற்புதங்களை விளக்குவதாக உள்ளன. திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் ‘கரு உற்பத்தி’ எனும் தலைப்பில் உள்ள 41 பாடல்களை  இன்றைய மகப்பேறு குறித்தும் பாடியுள்ளார். சேர்க்கையின்போது, பெண் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் குழந்தை மந்தனாகப் பிறக்கும். சிறுநீர் தேங்கியிருந்தால், ஊமைக் குழந்தையும் இரண்டுமே இருந்தால் குழந்தை குருடாகவும் பிறக்கும் என்று 481-ஆம் பாடலில் சொல்கிறார் திருமூலர். எனவே சேர்க்கையின்போது தூய்மையுடனும் உயர் எண்ணங்களுடனும் தம்பதிகள் இருந்தால் நல்ல குழந்தை உருவாகும் என்பது திருமூலரின் திருவாக்கு.

    எல்லா உயிர்களையும் நேசி!

    யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
    யாவர்க்குமாம் உண்ணும் போதுஒரு கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே 
     (திருமந்திரம் 252)

    உலகில் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும். பசுவுக்குப் புல் தருவது, ஏழைக்கு ஒரு கவளம் உணவு தருவது, துன்பத்தில் உள்ளவருக்கு ஆறுதல் சொல்வது, பெற்றோரைக் காப்பது, மற்றவருக்கு உதவுவது ஆகியன தர்மங்கள் என்கிறார் திருமூலர். ஆதலால், நாம் திருமந்திரம் காட்டும் வழிப்படி தர்மங்கள் செய்வோம்;  பொல்லாப் பிணியும், சொல்லொணா துயரங்களும் இல்லாத வாழ்வை பெற்று மகிழ்வோம்.

    ஆற்றரு நோய்மிக்கு அவனிமழை இன்றிப்
    போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
    கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் எல்லாம்
    சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே        (திருமந்திரம் 517)

    சிவாலயங்களில் பூசைகள் குறைந்தால் நோய் மிகும், மழை குறையும், மன்னர் கெடுவர் என்கிறார் திருமூலர். திருக்கோயிலை முன்னோர்கள் பக்தியுடன் கட்டினர். அதற்குப் பலகோடி சொத்துக்களையும் தந்தனர். ஆனால் அந்தச் சொத்துகளை இன்றைய மக்கள் அபகரித்து வாழ்கிறார்கள். கோயில்களை வியாபார நோக்கில் செயல்படும் மையங்களாக மாற்றி வருகிறார்கள். அதனால்தான் வளம்குன்றி மழையை இழந்தோம்; துயரங்களை அனுபவிக்கிறோம். அதேபோன்று மனிதன் இயற்கையைக் கடவுளாக வணங்கியவரை அதுவும் இயல்பாக உதவியது. இன்று இயற்கையை அழித்து, மாசுபடுத்துவதால் இயற்கைப் பேரிடர்கள் உருவாகின்றன. எனவே ஆலய பூசைகளை முறைப்படிசெய்து மழை பெறுவோம்.

    அன்பே சிவமயம்

    திருமந்திரம் நூலானது ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் அறியக்கூடிய எளிமையும் இனிமையும் உடைய பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.  ‘அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவோம். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. இதைதான் நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்தினால் இறைவன் உங்கள் மேல் அன்பு செலுத்துவார் என்று திருமூலரும் வலியுறுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.

    அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
    அன்பே சிவம்ஆவது ஆரும் அறிகிலார் (திருமந்திரம் 270)

    உடல்நலத்தின் அவசியம்

    மானிடனுக்கு உடம்பு இல்லாமல் எந்தச் செயலையும் செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும், எனவே இன்றய காலகட்டத்தில் உடலினைப் பேணிப் பாதுகாப்பது என்பது மிக அவசியமானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. உடலினைப் பேணி பாதுகாப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை திருமந்திரம் அழகாகக் குறிப்பிடுகிறது.

    உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.    (திருமந்திரம்724)

    தேகமான உடல் அழிந்தால் உயிர் அழிவதுடன் அறிவும் வளராது எனவே உடலை வளர்க்கும் முறையை அறிந்து, உடலை வளர்த்து உயிரையும் வளர்த்தேன் என்கிறது திருமந்திரம்.

    உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
    உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
    உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. (திருமந்திரம் 725)

    இப்பாடலில் உடலினை இழுக்கென்றிருந்தேன், பிறகு அதனில் கடவுள் கோயில் கொண்டுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டு உடலைப் பாதுகாத்தேன் என்கிறார். நாம் ஒவ்வொருவரும் உடலினை பேணிப் பாதுகாத்து பயனுற வேண்டும். அவ்வாறு உடலையும் மனதையும் பேணிப்பாதுகாக்கத் திருமூலர் காட்டிய வழி அஷ்டாங்க யோகம் எனப்படுகிறது.

    அஷ்டாங்க யோகம்

    அஷ்டாங்கம் என்றால் அஷ்டாங்க (அஷ்ட + அங்க) என்பது எட்டு வகையான படிகள் (பகுதிகள்) என எளிமையாகக் கூறலாம். திருமூலர் காட்டிய எளிய வழி அஷ்டாங்க யோகம். ஒரு பாடலில் திருமூலர் “யோக விசேடமே அட்டாங்க யோகமாம்”  என்கிறார். பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சாத்திரத்தில் அத்யாயம் இரண்டு, ஸ்லோகம் இருபத்தி ஒன்பதில் அஷ்டாங்க யோகத்தை பற்றி எடுத்துரைக்கக் காணலாம். திருமூலரும் பதஞ்சலி முனிவரும் கூறிய அஷ்டாங்க யோகத்தைக் கீழே சுட்டக் காணலாம்.

    இயம நியமமே எண்ணிலா ஆதனம்
    நயமுறு பிராணாயா மம் பிரத்தி யாகாரஞ்
    சயமிகு தாரணை தியானஞ் சமாதி
    அயமுறும் அட்டாங்க மாவது மாமே. (திருமந்திரம் 552)

    அவை முறையே வருமாறு

    1. இயமம் : தவிர்க்கப்பட வேண்டியவை
    2. நியமம் : பின்பற்றப்பட வேண்டியவை
    3. ஆசனம் : இருக்கை
    4. பிராணாயாமம் : மூச்சுப் பயிற்சி
    5. பிரத்தியாகாரம் : மனதை புலன் வழி நாட்டத்திலிருந்து திருப்புதல்
    6. தாரணை : மனதை ஒருமுகப்படுத்துதல்
    7. தியானம் : மனதை ஒரே சிந்தனையில் நிலைநிறுத்துதல்
      8. சமாதி : ஆழ் நிலை தியானம்

    இவற்றில் முதல் ஐந்தும் உடலும், மனமும் சம்பந்தப்பட்டவை எனவே இதை பகிரங்க யோகம் என்றும், அடுத்த மூன்றும் மனமும், ஞானமும் சம்பந்தப்பட்டவை எனவே அதை அந்தரங்க யோகம் என்றும் குறிப்பிடக் காணலாம்.

    மேற்கூறிய எட்டு நிலைகளையும் படிப்படியாகக் கற்று முக்திஅடைய வேண்டும் என்பது நம் முன்னோர்களின் விருப்பம். இன்றைய காலகட்டத்தில் நம்மால் எந்த அளவுக்கு கடைப்பிடிக்க முடியுமோ அந்த அளவுக்குக் கடைப்பிடிக்க வேண்டும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை “முயற்சி என்பது முடிந்தவரை செய்வதல்ல; முடியும்வரை செய்வதே” எனவே முயற்சி செய்து முன்னேற்றம் அடைய வேண்டும்.

    இக்கட்டுரையில் குறிப்பிட்ட செய்திகள் யாவும் திருமூலரின் இனிய வாழ்வியல் நெறிகளை விளக்குவனவாக அமைந்தன. தற்கால விஞ்ஞான முன்னேற்றத்தால் நமக்கு பல அரிய நூல்களும், விளக்க உரைகளும் எளிதில் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி யோகத்தின் வழி வாழ்க்கை நடத்த இறைவன் நமக்கு உதவி புரிவான். யோகத்தின் வழி வாழ்க்கை வாழ்ந்தால் நம் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பதுடன் சமுதாயத்தில் அமைதியும், சாந்தமும் நிலவும்.

    *****

    கருவிநூற்கள்

    1. திருமந்திரம் மூலமும் உரையும் (2010), ராமையா பதிப்பகம், சென்னை
    2. பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம் (2009), முனைவர் சுடலி தியாகராசன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, சென்னை
    3. திருமந்திரம் விரிவுரை (2012), ஜி.வரதராஜன், பழனியப்பா பிரதர்ஸ் சென்னை

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.)
    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
    தரமணி, சென்னை – 113
    drmaha08@gmail.com, பேசி.9629208408

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(218)

    திருக்குறள்

    செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
    வினைக்கரிய யாவுள நட்பு.
    -திருக்குறள் -781(நட்பு )

    புதுக் கவிதையில்…

    எதுவுமில்லை
    நட்பைப்போல்,
    பெறுதற்கரிய பெருளாய்..
    பெற்றுவிட்டால்
    நட்பதுபோலப்
    பகைவர்தம்
    தீச்செயலுக்குத் தடையான
    காவலும் ஏதுமில்லை…!

    குறும்பாவில்…

    நட்புபோலில்லை பெறுதற்கரிய பொருளேதும்,
    பெற்றுவிட்டால் அதுபோல் காவலேதுமில்லை
    பகைவர்தம் தீச்செயல்களுக்குத் தடையாய்…!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மனித வாழ்வதனில்
    மிகவும் சிரமமாய் பெறுவதிலே
    உண்மை யான நட்பதுபோல்
    உயர்வு மிக்க தேதுமில்லை,
    பண்பே யில்லா வகையில்தரும்
    பகைவர் தீச்செயல் தடையாக,
    கண்ணிய மிக்க நட்பதுபோல்
    காவலா யில்லை வேறெதுவுமே…!

    லிமரைக்கூ..

    நட்புபோல் பெற்றிட அரிதாய்
    வேறேதுமில்லை, பெற்றுவிட்டால் அதுபோலில்லை
    தீச்செயல் தடைக்காவல் பெரிதாய்…!

    கிராமிய பாணியில்…

    பெருசு பெருசு நட்பு பெருசு
    ஒலகத்தில நட்புதான் பெருசு..

    இல்ல இல்ல வேறேதுமில்ல
    செரமப்பட்டு கெடைக்கிற பொருள்
    நட்பப்போல வேறேதுமில்ல..

    இல்ல இல்ல வேறேதுமில்ல
    எதிரிசெய்யும் கெடுதியயெல்லாம்
    தடுத்துநெறுத்தும் காவலா
    இந்த
    நட்பப்போல வேறெதுவுமில்ல..

    அதால
    பெருசு பெருசு நட்பு பெருசு
    ஒலகத்தில நட்புதான் பெருசு…!

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • படக்கவிதைப் போட்டி (171)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    மோகன்தாஸ் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் _ 117

    நிர்மலா ராகவன்

    மதிப்பெண்கள் மட்டும் போதுமா?

    லாவண்யா வகுப்பில் எப்போதும் முதலாவதாக வருவாள். பேச்சுப்போட்டியில் அவளை யாராலும் வெல்ல முடியாது. `பள்ளிக்குப் பெருமை சேர்க்கிறாள்,’ என்று ஆசிரியைகளும், தலைமை ஆசிரியையும் அவளைக் கொண்டாடுவார்கள். பெற்றோரும் அப்படித்தான்.

    விளைவு: அவள் செய்வதை யாராவது கண்டித்தால், கோபம் தலைக்கேறும். எவராக இருந்தாலும் – அது ஆசிரியையாகவே இருந்தாலும், மரியாதை இல்லாது பேசுவாள். அவர்களும் அடங்கிப்போவார்கள்.

    எங்கு தவறு நேர்ந்தது?

    ஓயாது புத்தகங்களைப் படித்து, அதன்வழி பல விஷயங்களையும் தெரிந்துகொண்டால் புத்திசாலித்தனம் வளரலாம். ஆனால், தனது சொந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் நுண்ணறிவு வளரவில்லை லாவண்யாவுக்கு.

    பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியே வந்தபின், பாடங்களில் வாங்கிய மதிப்பெண்களை மட்டும் வைத்துக்கொண்டு உலகைச் சமாளிக்க முடியுமா? பிறருடன் எப்படிப் பழகவேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டாமா?

    எப்போதும் சிறுபிள்ளைத்தனமாக, தன் உணர்வுகளுக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து நடந்தால், சிறு விஷயங்களுக்குக்கூட ஆத்திரம் எழும்.

    தலைவனாக வேண்டுமா? உணர்ச்சியைக் கட்டுப்படுத்து!

    தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு இந்தத் தன்மை இல்லாவிட்டால் மதிப்பை இழக்க நேரிடும்.

    கதை

    `இவனுக்குத் தெரியாததே இல்லை!’ என்று பிறர் மெச்சும்படி இருந்தான் அக்கல்லூரி மாணவன். விரிவுரையாளர்கள் மட்டுமின்றி, ரங்கனுடன் பேசுவதே தமக்குப் பெருமை என்பதுபோல் சகமாணவிகளும் நடந்துகொண்டதில், அவனுக்குக் கர்வம் தலைக்கேறியது. அவனுக்குப் பயந்தோ, இல்லை மதித்தோ, எல்லாரும் விட்டுக்கொடுத்தே பழகிவிட்டதால், தான் நினைத்தது நடக்காவிட்டால் எளிதில் கோபம் எழ ஆரம்பித்தது.

    கடினமான சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது என்று புரியாது எதிர்ப்பட்டவர்களின்மீது தன் இயலாமையைக் காட்டுவான். ஆத்திரமே அவனது தலையாய குணமாகியது.

    நல்ல படிப்பு, பெரிய உத்தியோகம் என்றான பின்னரும், `நானே ராஜா,’ என்பதுபோல் நடக்க, விரைவில் எல்லாரும் விலகிப்போனார்கள்.

    கல்லூரி நாட்களில் அவனுடைய சிறப்புகளைக் கண்டு மணந்த காதல் மனைவியும், `இது நான் பார்த்து மயங்கியவர் இல்லை!’ என்று கண்டவர்களிடம் எல்லாம் புலம்பினாள். மனைவி மட்டுமின்றி, அவனுடைய குழந்தைகளுக்கும் அவனைப் பிடிக்காமல் போயிற்று.

    ரங்கனுக்குத் தன் உணர்வுகள் புரியவில்லை. அதனாலேயே பிறரையும் புரிந்துகொள்ள இயலவில்லை. பிறருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டால்தானே அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதும் விளங்கும்?

    ரங்கனுக்கு இதெல்லாம் புரியாததால், நாளடைவில், உத்தியோகத்தில் அவனுக்குக் கீழே வேலை பார்த்தவர்களுக்கு பதவி உயர்வும், பரிசுகளும் கிடைக்க, தன்மேலேயே பரிதாபம் எழுந்தது.

    வீட்டிலோ, வெளியிலோ, தனது உரிமை என்று அவன் எதிர்பார்த்த மரியாதை கிடைக்காததால் ஆத்திரம் அதிகரித்தது. தீய பழக்கங்களுக்கு அடிமையானான்.

    நம் உணர்வுகளை எப்படிப் புரிந்துகொள்வது?

    கதை

    கடைக்குட்டியான அந்த மூன்று வயதுச் சிறுவனை அவனுடைய சகோதர சகோதரிகளுடன் ஒப்பிட்டுத் தாய் சிலாகிக்கும்போது அவனுக்கு மகிழ்ச்சி தாங்காது. அதை வெளிக்காட்டாது மறைக்க, தலையைக் குனிந்து, வாயை உப்பிக்கொள்வான்.

    “யாருக்கோ ரொம்ப பெருமை!” என்று தாய் அறிவிக்க, எல்லாரும் அவன் பக்கம் திரும்பி, பாசத்துடன் புன்னகைப்பார்கள்.

    அடிக்கடி இந்த வாக்கியத்தைக் கேட்டு, அடுத்த முறை எதற்காவது மகிழ்ச்சி ஏற்படும்போது, “அம்மா! நான் பெருமை!” என்று தெரிவிப்பான். யாராவது புகழ்ந்தால், மகிழ்ச்சி பெருகுகிறது. சிறுவனுக்குத் தன் மனம் புரிந்தது.

    (புகழ்ச்சி மனதுக்கு உகந்ததாக இருப்பதால்தான் பலரும் அதை உபயோகப்படுத்தி தம் காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார்கள். முக்கியமாக, சிறுமிகளையும் இளம்பெண்களையும் கவர முயற்சிக்கும் கயவர்கள்.

    யார் எதையும் நாடாது புகழ்கிறார்கள் என்பதை ஆராயும் அறிவு இருந்தால், வெற்றுப்புகழ்ச்சியில் மயங்கமாட்டோம்).

    மாறாக, நம்மிடம் யாராவது குறை கண்டுபிடித்துவிட்டாலோ ஆத்திரம் எழுகிறது.

    `மற்றவர் அவர் வழியில் யோசிக்கிறார். நமக்கு உகந்த வழியில் நாம் போவோமே!’ இந்த சிந்தனை எழுந்தால், கோபம் எழுந்த வேகத்தில் அடங்கிவிடும்.

    என் சிநேகிதி ஜூலியான், “நான் எப்போது கடைக்குப் போய் தலைமுடி வெட்டிக்கொண்டாலும், என் கணவர் கத்துவார்,” என்றாள், பேச்சுவாக்கில்.

    அவளுடைய கணவர் பலமுறை கோபித்தபோது, உடனே ஆத்திரப்பட்டவளுக்கு, சற்று நிதானமாக யோசித்தபோது அவரது போக்கின் காரணம் பிடிபட்டது.

    அலுப்புடன், “உங்களுக்கு முடியெல்லாம் கொட்டிப்போய் வழுக்கையாகி விட்டதால் என்னிடம் குறை காண்கிறீர்களோ?” என்று ஒரு முறை இவள் கேட்க, அவரது குறுக்கீடு நின்றுபோயிற்று.

    தன்னம்பிக்கை உள்ளவர்கள் தம்மை உணர்ந்தவர்கள். இவர்களே தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவர்களாக இருப்பார்கள். சிபாரிசில் வருபவர்கள்…

    கதை

    அரச வம்சத்தில் வந்தவள் என்பதால் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டவள் ஆஸ்மா. தன் சாதனைகளால், புத்திகூர்மையால், அப்பெரிய பதவிக்கு வந்திருப்பதாக எண்ணிக்கொண்டாள். அந்த எண்ணத்தால் விளைந்த கர்வத்தில், தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றாள்.

    கட்டுக்கடங்காத சூழ்நிலை ஏற்பட்டபோது, அதை எப்படி சமாளிப்பது என்று ஆஸ்மாவுக்குப் புரியவில்லை. திரும்பவும் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாதே என்று பயந்தவளாக, தன்கீழ் வேலை பார்த்தவர்களை ஓயாது விரட்டினாள். அவளுக்குப் பின்னால் அவர்கள், `ரொம்பத்தான் காட்டாதே!’ என்று பரிகசித்தது அவளுக்குத் தெரியாது!

    “சிலபேர் ஏன் இப்படி ஆடுகிறார்கள்?” என்று என்னைக் கேட்டார்கள்.

    “தகுதி இல்லாதவர்களுக்கு அவர்களுக்கு மீறிய பொறுப்பைக் கொடுத்தால் இப்படித்தான்!” என்றேன், சிறிதும் யோசியாது. ஆதாயத்தை எதிர்பார்த்து அவள் பக்கம் சார்ந்திருந்தவர்களுக்கு முகம் சுண்டிப்போயிற்று.

    மற்றவர்களுக்கோ, ஆஸ்மா ஏதாவது தவறு செய்தால், அதைப் பெருந்தன்மையுடன் மன்னிக்க முடியவில்லை. ஏளனமாகப் பேச ஆரம்பித்தார்கள். அவளிடம் ஏற்பட்ட அவநம்பிக்கையால், தம் வேலையிலும் முழுமனதுடன் ஈடுபடத் தோன்றவில்லை.

    தன் குறை நிறைகளைப் புரிந்திருந்தால், ஆஸ்மாவுக்குப் பிறரது உணர்வுகளையும் மதிக்கத் தெரிந்திருக்கும். அவர்களது மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருப்பாள்.

    அமைதிப்படுத்த ஒரு பயிற்சி

    `உங்கள் குழந்தை புத்திசாலியாக வளர..’ என்று பாலர் பள்ளிகளில் விளம்பரப்படுத்துவார்கள்.

    குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு வந்தாலும், பல விஷயங்கள் கற்பிக்கப்பட்டாலும், நல்ல சுற்றுச்சூழலில் வளர்ந்திருந்தால்தான் முன்னுக்கு வரமுடியும் என்பது எவ்வளவு தூரம் உண்மை?

    கதை (படித்தது)

    வன்முறைக்குப் பெயர்போன பகுதி அது. அருகிலிருந்த ஆரம்பப் பள்ளியில் படித்த குழந்தைகள் அனைவருமே கொலையைக் கண்ணால் பார்த்தவர்கள். முதலில் அச்சமோ, வருத்தமோ எழுந்திருந்தாலும், அவ்வுணர்ச்சிகளிலேயே மூழ்கிவிடவில்லை.

    அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து வந்த சிறுவர்கள் பாடத்தில் கவனம் சிதறாது இருந்ததைக் கண்டு வியந்த சிலர் ஆராய்ச்சி செய்தபோது, ஓர் உண்மை தெரியவந்தது: தினமும் காலையில், தங்களுடைய அபிமான பொம்மையை வயிற்றின்மேல் வைத்து, படுத்த நிலையில் மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளியே விடும்போதும் மூன்றுவரை எண்ண வேண்டும் என்று அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் உன்னிப்பாக எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடிந்தது. ஒரு நாள் அந்தப் பயிற்சி செய்யாவிட்டாலும், அமைதி குலைய, அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாமல் போய்விடுமாம்.

    சூழ்நிலை நமக்குச் சாதகமாக இல்லாவிடினும், திறமையை வெளிக்காட்ட நம் உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    ஒத்துப்போவது வெற்றிக்கு அறிகுறி

    தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவி என்னிடம் கூறினார், “எங்களிடம் தற்காலிகமாக வேலைக்கு வருகிறவர்களின் மதிப்பெண்கள் இரண்டாம்பட்சம்தான். (உலகளாவிய எல்லா கம்பெனிகளிலும் இப்படித்தான்). அவர்களுடைய ஆடை, மரியாதையாகப் பேசும் தொனி முக்கியம். பல விஷயங்களையும் புரிந்து வைத்திருப்பதோடு, பிறருடன் எப்படி இணைந்து பழகுவது என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தால்தான் நிரந்தரமாக ஆக்குவோம். வேலையில் சிறந்து, ஆனால் பிறருடன் சண்டை பிடித்துக்கொண்டே இருந்தால், யார் அவர்களுடன் ஒத்துப்போவார்கள்?”

    எந்த துறையானாலும், பிறருடன் ஒத்துப்போகிறவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். கிடைக்கும் வெற்றியும் நிலைக்கும்.

    தொடருவோம்

    Share
  • பூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன

    Posted on July 21, 2018

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
    ++++++++++++++++++++++++
    ++++++++++++++
    See the source image

    பூதக்கோள் வியாழனுக்குப் புதியதாய் பனிரெண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிப்பு 

    சூரிய மண்டலத்தில் எல்லாவற்றிலும் பெரிய, மிகையான ஈர்ப்பு வீசை உடைய பூதக்கோள் வியாழனுக்கு அதிக எண்ணிக்கை யுள்ள [ இதுவரை 79 (2018 ஜூலை] விஞ்ஞானிகள் துணைக் கோள்கள் இருப்பதாய்க் கண்டுபிடித்துள்ளார்.  தற்போது சுற்றிக் கொண்டிருக்கும் நூதன விண்ணுளவி நாசாவின் ஜூனோ இந்த புதிய 12 துணைக்கோள்கள் கண்டுபிடிக்க உதவியது.  இனி ஆக்கப்படும் எதிர்கால மேம்பாட்டு விண்ணுளவி மேலும் புதிய துணைக்கோள் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம்.  இவற்றைக் கண்டுபிடித்த குழுவினர் தலைவர் கார்னகேயைச் சேர்ந்த ஸ்காட் ஸெப்பேர்டு.  2017 வசந்த காலத்தில் துவங்கி, புறக்கோள் புளுடோ கடந்து பெருநிறையுள்ள பிளானட் -X [Planet – X]  தேடிய போது,  விண்ணோக்கி மூலம் கண்டுபிடிக்கப் பட்டவை, இவை.  அந்த 12 புதிய துணைக்கோள்களில் ஒரு தனித்துவக்கோள் [Oddball] மட்டும்  வக்கிர திசையில் சுற்றுகிறது.  [கீழ் வரும் படத்தில் மஞ்சள் சுற்றுப்பாதை]

    அகில நாட்டு வானியல் ஐக்கியப் பேரவையைச் சேர்ந்த காரத் வில்லியம் [Gareth Williams]  குழுவினர் தகவலை வைத்து, 12 துணைக்கோள்களின் சுற்றுப்பாதை தூரங்களைக் கணிப்பார். கோள்கள் மெய்யாகவே வியாழனைச் சுற்றுகின்றன என்று உறுதிப் படுத்த ஓராண்டுக்கு மேல் நீண்ட காலம் எடுக்கிறது.  பூதக்கோள் வியாழனின் உட்புறத் துணைக்கோள்கள்  எதிர்க் கடிகாரச் சுற்றில் சுற்றி வருகின்றன.  வெளிப்புறத் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுற்றில் சுற்றிவர, ஒரே ஒரு புதிய துணைக்கோள் மட்டும் நேர்க் கடிகாரச் சுற்றில்  வியாழனைச் சுற்றுகிறது.  இந்த புதிய எதிர்ச்சுற்று கோள்கள் [Retrograde Planets]  மூன்று வித சுற்றுப்பாதைகளில் சுற்றுகின்றன.   அதாவது ஒரு காலத்தில் இந்த மூன்று குழுப்பாதைக் கோள்களும், மூன்று பெருங்கோள்களாய் சுற்றிவந்து, வால்மீன்களோ, முரண் கோள்களோ, பிற அண்டங்களோ மோதி, எதிர்ச்சுற்று சிறு துணைக் கோள்களாய் மாறின என்று கருதப் படுகிறது.  புதிய 12 எதிர்ச்சுற்றுக் கோள்கள் யாவும், ஒருமுறை பூதக்கோள் வியாழனைச் சுற்றிவர, விந்தையாகச் சுமார் ஈராண்டுகள் எடுத்துக் கொள்கின்றன.

    ++++++++++++++++

     வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சி
    2018 ஏப்ரல் 11 ஆம் நாள் நாசாவின் ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனின் வடதுருவப் பகுதியைச் சுற்றிவந்து முதன்முறை உட்சிவப்பு [Infrared]  முப்புறக் காட்சித் திரைப் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.  யூடியூப் படத்தை பாருங்கள்.  வடதுருவத்தில் கொந்தளிக்கும், அடர்த்தியான புயலடிப்புகள், எதிர்ப் புயலடிப்புகள் ஆட்டிப் படைப்பது தெரிகின்றன.  அத்துடன் முதன்முதல் விளக்கமான “சுழல் இயக்கி”  [Dynamo or Engine] காட்டப் பட்டுள்ளது.  பூமிக்கு அடுத்தபடியாக  அப்பால் ஆற்றலுடைய காந்த தளத்தை [Magnetic Field] பூதக்கோளான வியாழன் பெற்றுள்ளது. இந்த வி/ளக்கமான விஞ்ஞான அறிவிப்பு வியன்னா, ஆஸ்டிரியா ஈரோப்பிய ஐக்கியபூதளவியல் பொதுக் குழுவினர் கூட்டரங்கில்  [European Geosciences Union General Assembly] வெளியாகியுள்ளது.
    See the source image
    ஜூனோ விண்ணுளவில் பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறத் திரைப்படம் [3D Movie] எடுத்த கருவியின் பெயர் “ஜிராம்” [Jovian InfraRed Auroral Mapper – JIRAM].  பகலோ அன்றி இரவோ உட்சிவப்பு ஒளிப்பட்டை வியாழனின் ஆழ்தளத்தி லிருந்து எழுகிறது.  உளவும் கருவி 30 -45 மைல் [50 – 70 கி.மீ], வியாழன் முகிலுக்குக் கீழே ஊடுருவிப் படம் பிடிக்கிறது.  முதலில் எடுத்த படங்களில் வடதுருவ மேற்பகுதியில் எட்டுச் சுற்று துருவச் சூறாவளிகள் [Eight Circumpolar Cyclones] தெரிகின்றன.  அவற்றின் விட்டங்கள் நீட்சி 2500 மைல் [4000 கி.மீ] முதல் 2900 மைல் [4600 கி.மீ] வரை என்று கணிக்கப்பட்டு உள்ளன.  “ஜூனோ ஏவுவதற்கு முன் வியாழனின் துருவங்கள் எப்படி இருக்கும் என்று ஊகித்தோம்.  இப்போதுதான் எங்களுக்கு உறுதியாக வடதுருவப் பருவநிலை அமைப்பு புரிகிறது,”  என்று கூறுகிறார், ஜூனொ உளவு ஆராய்ச்சிக் கூட்டுழைப்பு விஞ்ஞானி, அல்பர்டோ ஏட்ரியானி.
    See the source image
    உட்சுழலும் காந்த விசைக்கோள் வியாழன்
    பூதக்கோள் வியழனின் உள்ளியக்கம் எல்லாம் முன்பு பூமித்தள நோக்கிகள் மூலம் அறிந்தவையே.  ஜூனோ உளவி இப்போது வெவ்வேறு வேகத்தில் உட்சுழலும் வாயு முகில் கோளங்களைக் காண் முடிகிறது.  முதன்முதல் ஜூனோ உளவி மூலம் கண்ட,  வியாழனின் காந்தவிசை இயக்கும் எஞ்சின் [Dynamo] வெளியிடப் பட்டது.

    https://www.nasa.gov/juno

    https://www.missionjuno.swri.edu

    The public can follow the mission on Facebook and Twitter at:

    https://www.facebook.com/NASAJuno

    https://www.twitter.com/NASAJuno

    More information on Jupiter can be found at:

    https://www.nasa.gov/jupiter

    ++++++++++++++++++++++++++++

    The Colorful Cloud Belts of Jupiter’s Southern Hemisphere Dominate This Stunnung Photo from NASA’s Juno Spacecraft in Orbit around the Gas Giant , Released on January 1, 2018.  Juno captured this Image on December 16, 2017.  It was Processed by Cityzen Scientist, Kevin M. Gill. 

    Credit : NASA / JPL -CALTECH / SwRI /  MSSS/ Kevin M. Gill

     

    +++++++++++++++

    2017 டிசம்பர் 16 இல் நாசா விண்ணுளவி ஜூனோ எடுத்த தெளிவான படங்கள் :

    https://www.space.com/12495-jupiter-juno-mission-photos-gallery.html

        பூதக்கோள் வியாழனின் வாயுச் சூழ்வெளியை எடுத்துக் காட்டும் வெவ்வேறு வாயுக்களின் பன்னிறப் பட்டைகளின் [Multicolored Ribbons]  படங்கள் பொதுநபர் பார்வைக்கு நாசா வலைத் தளத்தில் இடப்பட்டுள்ளன.   ஒரு படத்தில் பூதக்கோள் வியாழனின் நடுமைய ரேகையில் [Equator] மிகத் துல்லிய தெளிவு விளக்கமாய் வாயுப் பட்டைப் படம் எடுக்கப் பட்டுள்ளது.   அத்தெளிவுப் படங்களில் வாயுக்கள் திடப் பொருளைப் போல் நுணுக்க விபரங்கள் கிடைக்கின்றன. ஆரஞ்சு நிறப்பட்டை புள்ளிகள் இட்ட மரத்தடம்போல் [Speckled  Knotty Wood Plank]  தெரிகிறது.  வெண்ணீலப் பட்டை மணற் தளமுள்ள ஆறோட்டம்போல் [Sandy River Bottom] காணப் படுகிறது.  

     
    Citizen-scientist Gerald Eichstadt processed this image of Jupiter’s south polar region, which highlights the distinctive cloud bands that wrap around the gas giant.

    Credit: NASA/JPL-Caltech/SwRI/MSSS/Gerald Eichstadt

     

    அடுத்தோர் படத்தில் பூதக்கோள் வியாழனின் தென் துருவப் பகுதியில் புயல் காட்சிகள் இருப்பினும், பளிச்செனத் தெரியும் வண்ணத்தில் வளைய வாயுக்கள் தனித்தனியாய் வேறு பட்டுள்ளன.  பூதக்கோளை ஒருமுறைச் சுற்றிவர ஜூனோ விண்ணுளவி 53 நாட்கள் எடுத்துக் கொள்ளும் சுற்றுப் பாதை ஒன்றில் சுற்றி வருகிறது.   படம் எடுக்கும் கருவியின் பெயர் ஜூனோகாம் [JunoCam].  வாயுப் பட்டைகளுக்கு வண்ண மிட்டவர் பெயர்கள் :  கெவின் எம். கில் & ஜெரால்டு ஐக்ஸ்டாட்  [Kevin M. Gill & Gerald Eichstadt]. இருவரும் ஜெட் உந்துகணை ஆய்வுக்கூடத்தைச்    [JPL -JET PROPULSIOL LAB] சேர்ந்தவர்கள்.  படங்கள் எடுத்த தேதி : டிசம்பர் 16, 2017.  ஜூனோ விண்ணுளவி நடுமைய ரேகைக்கு மேல் 8453 மைல் [13,604 கி,மீ.] உயரத்தில் பறந்த போது எடுத்த படங்கள்.  தென் துருவத்தில் எடுத்த படங்கள் 64,899 மைல் [104,446 கி.மீ] உயரத்தில் ஜூனோ விண்ணுளவி பறந்த போது எடுத்தவை.

     

    அமெரிக்க விடுதலை நாள் [ஜூலை 4, 2016] கொண்டாட்ட தினத்தில் விழாவின் போது, அடுத்த முக்கியப் பாராட்டு நிகழ்ச்சி ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனின் சுற்றுவீதியில் துல்லியமாகப் புகுந்தது.  இது நாசாவின் துணிச்சலான முயற்சி.  இத்திட்டத்தில் இதுவரை எந்த விண்கப்பலும் செய்யத் துணியாதத் தீரச்செயல்களை ஜூனோ செய்துகாட்டப் போகிறது. இதுவரை அறியப் படாத பூதக்கோள் வியாழனின் வலுநிறைந்த கதிர்வீச்சு வளையங்கள் [Radiation Belts] பற்றி ஆய்வு செய்யும்.  வியாழக் கோளின் உட்தளத்தை ஆழமாய் உளவு செய்து, அது எப்படி உருவானது, நமது சூரிய மண்டலம் எப்படித் தோன்றியது போன்ற புதிர்களை விடுவிக்கும்.

    சார்லி போல்டன் [NASA Space Program Administrator]

    ++++++++++++++++++++++

    ஜூனோ விண்ணுளவி 1.7 பில்லியன் மைல் தூரம் பயணம் செய்து, பழுதின்றி முழுத்திறமையில் இயங்கியது.  பூதக்கோள் வியாழச் சுற்றுவீதி நுழைவு [Jupiter Orbit Insertion]  நுணுக்கமான, சவாலான ஒரு பெரும் விண்வெளிப் பொறியியல் எட்டு வைப்பு. இந்த முன்னோடி வெற்றியைச் சார்ந்தவைதான் மற்ற ஜூனோ திட்டக் குறிக்கோள்கள் எல்லாம்.

    ரிச்செர்டு நைபாக்கன் [ JPL Juno Project Manager]  

     

    அமெரிக்க நாட்டின் விடுதலை நாள் கொண்டாட்டம்

    2016 ஜூலை 4 அமெரிக்க விடுதலை நாளை மக்கள் கொண்டாடி வரும் சமயத்தில், அடுத்தோர் விண்வெளி வெற்றி அன்றைய தினத்தில் பாராட்டப் பட்டது.  அன்றுதான் ஐந்தாண்டுகள் பூதக்கோள் வியாழனை நோக்கிப் பயணம் செய்த ஜூனோ விண்கப்பல், அதன் சுற்றுவீதி ஈர்ப்புக்குள் வெற்றிகரமாய்ப் புகுந்தது.  சூரியனுக்கு அடுத்தபடியாய்ப் பூகோளத்தைப் பெரிதும் பாதிப்பது பூதக்கோள் வியாழனே.  சூரியக் கோள் மண்டலத்தின் வடிவத்தை வார்த்தது வியாழனே.  பூர்வப் புவியில் ஏராளமான பனித்தளப் பண்டங்களை  விதைத்தது வியாழனே.  பிறகுப் புவிமேல் வால்மீன்கள் போன்ற பல கொடூர அண்டங்கள் விழாமல், பாதுகாத்ததும் வியாழனே.  எப்படி முதலில் உருவானது வியாழன் ? மெதுவாக அது உருவானதா ?  அல்லது ஒரே சமயத்தில் ஒற்றை ஈர்ப்பு நிகழ்ச்சியில் குட்டி விண்மீன்போல் தோன்றியதா ?  அது நகர்ந்து வந்த தென்றால், ஆதியில் வடிவானது எப்படி ?  நாசாவின் இந்த ஜூனோ திட்டத்துக்குச் செலவு 1.1 பில்லியன் டாலர்.

    Juno Space Project

    இந்தப் புதிர்க் கேள்விகளுக்கு ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனை 37 முறை 3000 மைல் [5000 கி.மீ.] தூரத்தில் சுற்றிவந்து, பதில் கண்டு பிடிக்கும்.  இதற்கு முன்பு 1995 இல் வியாழனை நோக்கி ஏவிய முதல் கலிலியோ விண்கப்பல் 2003 ஆண் டுவரை சில ஆய்வுகளைச் செய்தது. ஆனால் ஜூனோ பூதக்கோள் வியாழனை ஆழமாய் உளவிடப் போகிறது. வியாழக் கோளின் ஈர்ப்பு விசைத் தளத்தை [Gravitational Field] வரைப்படம் செய்யும்.   அதன் உட்கருவில் இருப்பது என்ன ?  பாறைக் கருவா, உறைந்த திரவமா ? உலோகக் கருவா ?  இந்த வினாக்களுக்கு விரைவில் நல்ல தகவலை ஜூனோ விண்ணுளவி ஆய்ந்து அறிவிக்கப் போகிறது.

    முதலாவதாக 54 நாள் மெதுவான சுற்றுவீதியிலும் [54 Day Slow Speed Orbit] , பின்னர் 14 நாள் வேகச் சுற்றுவீதியிலும் [14 Day Fast Speed Orbit] ஜூனோ பூதக்கோள் வியாழனச் சுற்றிவரும்.  வியாழனின் காந்தசக்தி ஆற்றல் புவிக் காந்த சக்தியை விட 20,000 மடங்கு தீவிர உக்கிர மானது.  இதனை ஆழ்ந்து ஆராய ஜூனோ விண்ணுளவி 20 மாதங்கள் [240 நாட்கள்] வியாழக் கோளைச் சுற்றிவரும்.  இதுவரை பூதக்கோள் வியாழனின் 67 சந்திரன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  ஜூனோ தொடர்ந்து மேலும் புது சந்திரன் களைக் காணலாம்.

    Click to Enlarge

    விண்ணுளவி ஜூனோ வியாழனின் சுற்றுவீதி ஈர்ப்பில் நுழைந்தது

    2016 ஜூலை 4 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணுளவி ஜூனோவின் 650 நியூட்டன் உந்து தள்ளிகள் [Newton Thrusters] 35 நிமிடம் இயங்கி, வேகம் குறைக்கப் பெற்றுப் பூதக்கோள் வியாழனின் சுற்றிவீதி வட்டத்தில் புகுந்தது.  அப்போது விண்ணுளவியின் வேகம் 1212 mph [542 mps (meter per sec] தளர்ச்சி அடைந்து, வியாழனின் ஈர்ப்பு விசை ஜூனோவைத் தன் பிடிக்கொள் இழுத்துக் கொண்டது.  அதற்குப் பிறகு ஜூனோவின் ஆற்றல் மிக்க 18,698 சூரிய ஒளிச் செல்கள் பரிதியால் இயக்கமாகி விண்ணுளவிக்கு மின்சக்தி அளித்தன.

    +++++++++++++++

    “பரிதி மின்சக்தித் தட்டுகள் இணைத்தியங்கும் (Solar Panel Powered) விண்ணுளவிப் பயணத் திட்டமானதால், துருவ நீள் வட்டத்தில் சுற்றும் ஜூனோவின் பரிதி மின்தட்டுகள் எப்போதும் சூரியனை நோக்கியே பறந்து செல்லும்.  விண்ணுளவி வியாழக் கோளின் மறைவுப் புறத்தில் பயணம் செய்யாதபடி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.”

    ஸ்காட் போல்டன்,  ஜூனோ திட்டப் பிரதம விஞ்ஞானி

    (ஜூனோ விண்ணுளவியின்) முக்கிய முதலிரண்டு சோதனைகள் :

    1.  பூதக்கோள் வியாழனில் எவ்வளவு நீர் உள்ளது ?

    2.  வியாழக் கோளின் மைய உட்கருவில் இருப்பது கன மூலகங்களின் திரட்சியா அல்லது நடு மையம் வரை இருப்பது அழுத்த வாயுத் திணிவா ?

    ஸ்காட் போல்டன்

    Path & Probe of Juna

    “கடந்த நூற்றாண்டுகளில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”

    காலிலியோ (1564-1642)

    நாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை.  நாமறியாதவை கணக்கில் எண்ணற்றவை.  புரிந்து கொள்ள முடியாத கரையற்ற ஒரு கடல் நடுவே, சிறு தீவு ஒன்றில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம். நமக்குத் தொழில் ஒவ்வொரு பிறவியிலும் நாம் மேலும் சிறிது புதுத் தளத்தைக் கைப்பற்றுவதுதான்.

    தாமஸ் ஹக்ஸ்லி [Thomas Huxley] (1825-1895)


    Inside Jupiter

    2011 இல் பூதக்கோள் வியாழனை நோக்கி மீண்டும் நாசா பயணம்

    ஒரு பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிதிச் செலவில் மீண்டும் நாசா 2011 ஆகஸ்டு 5 ஆம் நாள் பிளாரிடா கெனாவரல் ஏவுமுனைத் தளத்தில் சுமார் 200 அடி (60 மீடர்) உயரமுள்ள அட்லாஸ் -5 ராக்கெட்டில் (Atlas -5 Rocket) மனிதரற்ற ஜூனோ விண்ணுளவியை ஏற்றிக் கொண்டு ஆய்வுகள் செய்ய அனுப்பியுள்ளது. ஜூனோ விண்ணுளவி 5 ஆண்டுகள் 1740 மில்லியன் மைல்கள் பயணம் செய்து செந்நிறக் கோள் செவ்வாயைக் கடந்து, கோடிக் கணக்கான முரண்கோள்கள் சுற்றும், முரண்கோள் வளையத்தை ஊடுருவிச் (Asteroid Belt) சென்று, 2016 இல் புறக்கோள் வியாழனை நெருங்கி ஓராண்டு சுற்றி வரத் திட்டமிடப் பட்டுள்ளது.  அட்லாஸ் -5 ராக்கெட் சுடப்படும் முன்பு அதன் மேலடுக்கில் ஹீலியம் ஏற்றும் சாதனத்தில் கசிவு உண்டாகி பிரச்சனை எழுந்ததால், அதை அடைக்க ஏவுக் காலம் சற்று தாமதமானது.  ஆகஸ்டு 5 ஆம் தேதி ஏவப்பட்ட ஜூனோ விண்கப்பல் இப்போது சுமுகமாகப் பயணம் செய்து வருகிறது.

    ஜூனோ விண்ணுளவி முதல் இரண்டு ஆண்டுகள் பரிதியைச் சுற்றி வந்து, பூமிக்கு மீண்டு அதன் ஈர்ப்பு வீச்சு விசையில் மேலும் உந்தப்பட்டு (Earth Flyby) அடுத்த மூன்று ஆண்டுகள் வியாழனை நோக்கி வேகமாய்ச் செல்லும்.  பூமியிலிருந்து 390 மில்லியன் மைல் (640 மில்லியன் கி.மீ.) தூரத்தில் இருக்கும் பூதக்கோள் வியாழனுக்குப் பயணம் செய்ய முதன் முதலாக பரிதி மின்சக்தித் தட்டுகள் (Solar-Panelled Mission) மூன்று அமைக்கப் பட்டு இயங்கும் விண்வெளித் திட்டம் இது.  சூரிய மின்தட்டு ஒன்றின் நீளம் 30 அடி.  அகலம் 9 அடி.  பூதக்கோள் வியாழன் மீது படும் பரிதி ஒளி பூமியின் மீது விழும் ஒளியைப் போல் 25 மடங்கு குறைந்தது.

    ஆகவே ஜூனோ விண்ணுளவி வியாழனின் மறைவுப் புறத்தில் சுற்றாமல் துருவங்களைச் சுற்றி வரப் போகிறது.  இதற்கு முன்பு வியாழன், சனிக்கோள் நோக்கிச் செல்லும் இவ்வித நீண்ட பயணங்களுக்குக் கதிரியக்க முள்ள புளுடோனிய மின்கலம் பயன்படுத்தப் பட்டது.  ஜூனோவில் பரிதி மின்சக்தி திரட்ட, 120 டிகிரிக் கோணத்தில் இருக்கும் மூன்று சூரியத் தட்டுகளில் 18,000 பரிதிச் செல்கள் (Solar Cells) அமைப்பாகி உள்ளன.  பூதக்கோள் வியாழனின் துருவச் சுற்று வீதியில் 33 நீள்வட்டச் சுற்றுக்களை 3000 மைல் (5000 கி.மீ.) உயரத்தில் ஓராண்டு புரிந்து வர ஜூனோ திட்டமிடப் பட்டுள்ளது.  இறுதியில் பரிதி மின்தட்டுகள் பழுதடையும் போது வியாழக் கோளில் ஜூனோ விண்ணுளவி சுற்றுவீதியை முறித்துக் கொண்டு வியாழனில் விழும்படி நாசா விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்துள்ளார்.

    ஜூனோ விண்ணுளவித் திட்டத்தின் முக்கிய குறிப்பணிகள் என்ன ?

    பூதக்கோள் வியாழனே பரிதி மண்டலத்தில் சுற்றிவரும் மற்ற கோள்களை விடப் பெரியது.  அது சூரியனைப் போலிருக்கும் ஒரு வாயுக் கோள்.  வியாழனின் தோற்றத்தை யும் வளர்ச்சியையும் புரிந்து கொண்டால் ஓரளவு சூரிய மண்டலத்தின் ஆரம்பத்தை அறிந்து கொள்ள முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  ஜூனோ விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள ‘தூர முகர்ச்சிக் கருவிகள்’ (Remote Sensing Instruments) பூதக்கோளின் பல்லடுக்குச் சூழ்வெளியை உளவி அவற்றின் உஷ்ணம், உட்பொருட்கள்,  முகில் நகர்ச்சி, மற்றுமுள்ள தளப் பண்பாடுகளைப் பதிவு செய்து, பூமிக்கு மின்தகவல் அனுப்பி வைக்கும்.  மேலும் வியாழனில் தோன்றும் முகில் வண்ணப் பட்டைகளின் உள்ளமைப்பைக் கண்டறியும்.  சிறப்பாக கடந்த 300 ஆண்டு களாகக் காணப்படும் விந்தையான ‘கொந்தளிக்கும் செந்திலகம்’ (Violently-Active Red Spot) என்ன வென்று ஆழ்ந்து அறியப்படும்.

    எல்லாவற்றும் மேலாக பூதக்கோள் வியாழனில் உள்ள நீரின் செழிப்பை அறிந்து ஆக்ஸிஜன் எத்தனை அளவு இருந்தது என்று கணக்கிடவும், பரிதி மண்டலத் தோற்றத்தை உறுதிப் படுத்தவும் பயன்படும்..  அத்துடன் பூதக்கோள் வியாழனுக்கு நடுவே உள்ளது திண்ணிய கடும் பாறையா அல்லது வாயுத் திணிவு மிகுந்து வியாழன் உட்கருவில் அழுத்தமுடன் உறைந்து போய் உள்ளதா என்றும் அறியப்படும்.  வியாழக் கோளின் காந்த தளத்தையும், ஈர்ப்புக் களத்தையும் பதிவு வரைபடக் கருவி வரையும்.  பூதக்கோள் வியானின் துருவக் காந்தக் கோளத்தை (Polar Magnetosphere) உளவி அது எப்படி வியாழனின் சூழ்வெளி வாயு மண்டலத்தப் பாதிக்கிறது என்று ஆராயும்.  ‘வியாழனில் தென்படும் தென்துருவ, வடதுருவ ஓவியக் கோலங்களையும்’ (Polar Auroras) ஜூனோ ஆராயும்.

    வியாழக் கோளை முன்பு சுற்றிய நாசாவின் விண்கப்பல்கள்

    நாசா காஸ்ஸினி விண்கப்பல் (1997- 2004) இல் சனிக்கோளைச் சுற்ற அனுப்புவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, காலிலியோ விண்வெளிக் கப்பல், வியாழனைச் சுற்றிவர ஏவப்பட்டு, ஏராளமான விஞ்ஞானத் தகவல்களைப் பூமண்டலத்துக்கு அனுப்பியுள்ளது. விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூட்டிய, காலிலியோவின் பெயரைக் கொண்ட நாசாவின் விண்கப்பலே, வியாழனை ஆராயும் முதல் ‘விண்ணுளவி’ [Space Probe] ஆனது !  தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளி யின் முகத்திரையை உலகுக்குத் திறந்து வைத்தவர், காலிலியோ! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு துணைக் கோள்களை முதலில் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ!

    நாசா 1972 இல் ஏவிய பயனீயர்-10, பயனீயர்-11 [Pioneer-10, Pioneer-11], அடுத்து1977 இல் அனுப்பிய வாயேஜர்-1, வாயேஜர்-2 [Voyager-1, Voyager-2] ஆகிய நான்கு முன்னோடி விண்சிமிழ்கள் பயணம் செய்து முதன் முதலில் வியாழன், சனிக்கோளின் விஞ்ஞான விபரங்களை உளவிப் பூமிக்கு ஏராளமான தகவல் அனுப்பின. 1987 இல் அனுப்பிய காலிலியோ விண்கப்பல் எட்டாண்டுகள் பயணம் செய்த பிறகு, 1995 இல் வியாழக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் இழுக்கப்பட்டு, நீள்வட்ட வீதியில் சுற்றி, ஓர் உளவுச்சிமிழை [Probe Module] வியாழ தளத்தில் இறக்கி, விண்வெளி வரலாற்றில் முதன்மை பெற்றது.  ஒரு ‘சுற்றுச் சிமிழும்’ [Orbiter] ஒரு ‘சூழ்வெளி உளவுச்சிமிழும்’ [Atmospheric Probe] இணைக்கப் பட்டிருந்த, காலிலியோ விண்வெளிக் கப்பல் இரண்டு முக்கியப் பணிகளை நிறைவேற்றத் தயாரானது. முதல் பணி வியாழனை நெருங்கி, சுற்றுச்சிமிழ் சுழல்வீதியில் விழானைச் சுற்றிவருவது. அடுத்த பணி உளவுச்சிமிழை விடுவித்து, வியாழ தளத்தில் அதை மெதுவாக இறக்குவது.  மின்சக்தி பரிமாறப் புளுடோனியம் டையாக்ஸைடு [PuO2] பயன்படும் இரண்டு ‘கதிர்வீச்சு வெப்ப ஜனனிகள்’ [RTG, Radioisotope Thermal Generators] அமைக்கப் பட்டிருந்தன.

    கொந்தளிக்கும் செந்திலகம்! பூதக்கோளில் புயல் காற்று !

    வியாழச் சூழகத்தில் பொங்கி எழும் வாயு மண்டலம் வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து விரிகிறது! மத்திம ரேகைப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்றுகள், மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன! அப்பட்டை நிற மேகங்கள், சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது! புயல் காற்று மத்திம ரேகையில் அடிக்கும் உச்ச வேகம் 360 mph!

    வியாழனின் பெயர் பெற்ற ‘மாபெரும் செந்திலகம் ‘ [Great Red Spot] சீரிய தொலை நோக்கி தோன்றிய நாள் முதல், 300 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்பட்டு கொந்தளித்து வருகிறது! செந்திலகம் முட்டை வடிவானது! அதன் கொந்தளிப்புக்குக் காரணம் இன்னும் அறியப் படவில்லை.

    முகில் ஆட்டத்திற்குச் செந்நிறத்தைத் தருபவை, புறவூதா [Ultraviolet] ஒளியை விழுங்கும், கந்தகம் [Sulfur], ஃபாஸ்ஃபரஸ் [Phosphorus] போன்றவற்றின் இரசாயனக் கூட்டுறுப்புகள் [Compounds]. மாறிக் கொண்டே வரும் செந்திலகத்தின் தற்போதைய பரிமாணம் 16200 மைல் நீளம்; 8700 மைல் அகலம்.

    மாபெரும் புயல்கள் வியாழ மண்டலத்தில் திடீர் திடீரென வீசி அடிக்கின்றன!சூரியனின் தட்ப, வெப்ப மாறுதலால், பூமியில் சூறாவளி, ஹரிக்கேன் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் வியாழக் கோளின் சூறாவளிப் புயல்கள், கொந்தளிக்கும் உட்தள வாயுக் குமிழ்களால் [Gas Bubbles] எழும்பி, அடர்த்தியான முகில் அடுக்குகளைக் கலக்கி அடிக்கின்றன! வாயுக் குமிழ்கள் தாறுமாறான வெப்பத் திட்டுகளை தாங்கிக் கொண்டு, புயல் காற்றுக்களைக் கட்டுப் படுத்த, வியாழனில் மேடு, பள்ளங்கள், மலைகள் ஏதும் இல்லாது, எல்லாத் திசைகளிலும், குறுக்கு நெடுக்காக முறுக்கி அடிக்கின்றன!

    (தொடரும்)

    Share