நாராய ணாவென்னா நாவென்ன நாவே?

நாராய ணாவென்னா நாவென்ன நாவே?

நாமந்தான் சொல்லா நாவென்ன நாவே? ()

கன்றினத்தைத் தன்வசமாய் அமுதூட்டும் நாமம்
குன்றினத்தைக் குடையாக்கி அடைகாக்கும் நாமம்
கொண்டை மயிற்சிறகை அணியாக்கும் நாமம்
தண்டை மணிசிணுங்க அரவடக்கும் நாமம் ()

குழலூதி மெய்மறக்கச் செய்கின்ற நாமம்
அழலேகா வண்ணமே அருளூற்றும் நாமம்
உறியிருந்த மனம்திருடிச் சுவைக்கின்ற நாமம்
அறியாமல் செய்யவைத்து அறிகின்ற நாமம்()

தேனுக்கும் மேலாகத் தெவிட்டாத நாமம்
வானுக்கும் மண்ணுக்கும் வளங்கூட்டும் நாமம்
கோவிந்தா எனும்போது குழைகின்ற நாமம்
கோபாலா என்றாலோ குடியேறும் நாமம்()

Share

Comments

2 responses to “நாராய ணாவென்னா நாவென்ன நாவே?”

  1.  எட்டெழுத்து  மந்திரத்தோன் நாமம் சொல்லக் கிட்டாதது என்ன உண்டு? அற்புதமாய் அதன் பெருமை பேசி வரும் நற்கவிதை. குறிப்பாக, ‘குழலூதி’ எனத் தொடங்கும் நான்கு வரிகள்…. எத்தனை அருமையான பொருள்!!!. தித்திக்கும் தெவிட்டாத தேனூற்று. அருமை!! மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  2. சச்சிதானந்தம்

    நாராயணா என்னும் நாமத்தை ஓராயிரம் முறை சொன்னாலும் சலிக்காது. இனிமையான கவிதை வரிகள். வாழ்த்துக்கள் திரு.சத்தியமணி அவர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *