-ராதா மரியரத்தினம்
சிந்தனைச் சிறகடித்தால்
சீறிடும் எண்ணங்கள்
தென்றலும் புயலாகும்
தண்ணொளி சுடும் நெருப்பாகும் 
வண்ணங்கள் இழந்த வாழ்க்கை
வானவில்லாய் உருமாறும்!
கற்பனைத் தேரேறி
சொற்களும் ஆட்சி செய்தால்
அத்தனையும் உயிர்ப்பாகும்
பேனா முனையினிலே
வண்ணத்துப் பூச்சிகளாய்
வண்டினங்கள் மாறாதோ?
எண்ணக் குவியல் எல்லாம்
சிறகடித்துப் பறவையாய் மாறாதோ?
பூசணிப் பழம்கூடப்
பல்லக்காய் மாறாதோ?
தும்பிகள்கூட பேரிகையாய்த் தெரிய
தூரத்து நீல வானிடைக்
கண் சிமிட்டும் விடிவெள்ளிகள்
நீலச் சேலையில் பதித்த வைரங்கள் ஆகாதோ?
கற்பனைக்கும் எல்லை உண்டோ?
சொற்பதங்கள் நடனமாடுமன்றோ?
சிந்தனைச் சிறகடித்தால்
சீறிடும் எண்ணங்கள்!

Leave a Reply