Month: July 2013

  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர்

    மனிதனும் இயற்கையும் ஒன்று. நம் உடல் பஞ்ச பூதத்தினால் ஆனது. மண், ஆகாயம், நீர், காற்று, அனல் இவற்றுடன் சம்பந்தப்படுத்தியே மனிதன் படைக்கப்பட்டான். அதனால் மனிதன் இயற்கையோடு ஒன்றிச் செயல்பட வேண்டும் என்பதற்காகப் படைக்கப்பட்டவன்.. ஆனால் மனிதனே மனிதனை அதாவது இயற்கையை அழிக்கலாமா.. ஆண்டாண்டுக் காலமாக இந்த விழிப்புணர்ச்சி இல்லாமல் இயற்கையை அழிப்பது இந்த மனித குலம்தான்.

    மனிதர்களின் சின்னச் சின்ன சுகங்களுக்காக இயற்கையை அதிகம் சீண்டி விளையாடியதால்தான் சமீபத்திய கேதார்நாத், பத்ரிநாத் இழப்புகள் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள். இயற்கைச் சீற்றங்களினால் மனித அழிவு ஏற்படும்போதும் அந்த அழிவில் நமக்கு நெருங்கியவர்களில் சிலர் மறையும்போதும் ஆற்றாத் துயருணர்ச்சி உண்டாகிறதுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் மனித வசதி மேம்பாடு என்கிற பெயரில் நாம் இயற்கைக்கு செய்யும் கொடுமைகளை மட்டும் மிக வசதியாக மறந்துவிடுகின்றோம்.

    இயந்திரமயமான நிகழ்கால வாழ்க்கையில் நமக்காக நாம் முதல் பலி கொடுப்பது இயற்கையை அழிக்கும்போதுதான். அதே சமயத்தில் இயற்கையும் நமக்குப் போட்டியாக எத்தனையோ பேரழிவுகளை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஆனால் அவைகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வதில்லை. மேலும் தவறு செய்கிறோம். பாதுகாப்புக்காகவும், நீர்வசதிக்காகவும் இயற்கை கொடுத்திருந்த மலைகள் கிரானைட் கல் ஏற்றுமதியில் இருந்த இடம் தெரியாமல் கரைக்கப்பட்டு வருகின்றன. சுத்தமான குடிநீரை அள்ளித் தரும் நதி நீரில் ரசாயனக் கழிவுகள் தெரிந்தே கலக்கப்பட்டு, மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இன்று சுற்றுச் சூழல் காற்று கெடுக்கப்பட்டு வருவதை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதனைத் தடுக்க எத்தனையோ கூப்பாடுகள் போட்டாலும் சுற்றுச் சுழல் மாசுபடுத்தப்படுவது நிறுத்தப்படுவதில்லைதான். வான்வெளியையும் விட்டு விடுவதில்லை நாம். இயற்கையைக் கெடுத்து அதனால் நாமும் நம்மைக் கெடுத்துக்கொண்டு வாழும் இந்த வாழ்க்கையும் ஒரு வாழ்வா என்று மனிதன் எப்போதுதான் நினைக்கத்தொடங்குவானோ..

     வே.ம.அருச்சுணன்இயற்கைதனை அழிப்போர்
    இறைவனின் எதிரியென்போம்
    படைத்தவன் நமக்களித்த
    வாழ்வுதனைத் தட்டிப் பறிக்கும்
    அரக்கனை அழிப்போம்
    பணத்துக்குச் சோரம் போகும்
    கொடியோரின் கருவறுப்போம்
    தலைமுறையும் துளிர்க்காமல்
    காவல் காப்போம்!
    செயற்கைப் பேரிடர்
    நந்தவனப் பயிர்களும் உயிர்களும்
    அற்ப ஆயுளை முத்தமிடல்
    கொடுமையின் உச்சம்!

    இறைவனின் அருட்கொடை
    மனிதன் இயற்கையை
    நேசிப்பதும் சுவாசிப்பதும்
    காப்பதும் வாழ்த்துவதும்
    உரிமையும் பெற்றவன்!

    இயற்கையைக் காக்க
    உள்ளத்தையும் உயிரையும்
    அள்ளித் தருவோம் மடமையில்
    எதிர்ப்போரைக் கிள்ளி எறிவோம்
    அடுத்த தலைமுறைக்கு இயற்கையை
    விட்டுவைப்போம் செழிப்பாய்
    அதுவரையில் உயிராய்க்
    காத்து நிற்போம்!

    மலேசியாவைச் சேர்ந்த வே. ம. அருச்சுணனின் கவிதை இது. இன்னும் இது போல எத்தனை ஆயிரம் கவிதைகள் விழிப்புணர்வு தந்தால் மனிதன் விழித்துக் கொள்வானோ.. இந்த வாரத்தில் வல்லமை இதழில் இக்கவிதையை இயற்றிய திரு அருச்சுனன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து வாழ்த்துகின்றோம்.

    கடைசி பாரா: திரு செண்பக ஜகதீசனின் கவிதை

    எல்லாம்
    ஒன்றாய்ச் செய்யும் மனிதன்,
    நன்றாய் இல்லையே குணத்தில்
    ஒன்றியே உள்ளானே பணத்தில்…!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 78 (01.07.13)

    மலர் சபாuntitled

     

    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை

    மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து வசந்த மாலையிடம் கொடுத்து அனுப்புதல்

    சற்று முன் அங்ஙனம்
    மயங்கி நின்ற மாதவி
    மணம் பொருந்திய மலரம்புகளினால்
    பெரு நிலம் முழுதும்
    தனிச்செங்கோல் செலுத்தி ஆளும்
    மன்மதன் அவன் ஆணையால் வருந்தி,
    ஒரு திசை மட்டுமல்லாது
    உலகமே தொழுது வணங்கி வேண்டும்
    அவனது அழைப்பின் அறைகூவலைக்
    கடிதம் ஒன்றின் வாயிலாகக்
    கோவலனுக்கு அனுப்பத் துணிந்தனள்.

    செண்பகம், குருக்கத்தி, பச்சிலை, பித்திகை
    வெண்மல்லிகை, மெல்லிதழ் செங்கழுநீர்
    இக்தனை நறுமண மலர்களுடன்
    சற்றே மாறுபட்ட மணமுடைய
    முற்றிய தாழையையும் வைத்துத் தொடுக்கப்பட்ட
    தன் கழுத்தில் அணிந்திருந்த
    மாலையதனில் இருந்து
    வெண்தாழை மடல் ஒன்றை
    ஆராய்ந்து எடுத்தனள்.

    அத் தாழை மடலைத்
    தாள் எனக் கொண்டு
    அதனருகில் இருந்த பித்திகை அரும்பொன்றை
    எழுத்தாணி எனக் கொண்டு
    அதனைக் கொழுவிய
    செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்துக்
    கடிதம் எழுதவே தொடங்கினள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 45 – 55
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    படத்துக்கு நன்றி

    http://dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/05/article1575464.ece

    Share
  • குறளின் கதிர்களாய்…(5)

     

    செண்பக ஜெகதீசன்

     

    இனிய உளவாக இன்னாத கூறல்

    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

    -திருக்குறள்-100 (இனியவை கூறல்)

     

    புதுக் கவிதையில்…

     

    இனிய சொற்கள்தான்

    இருக்குது பலவாய்,

    இருப்பினும் மனிதா ஏன்

    விரும்புகிறாய் இன்னாத சொற்களை..

     

    மரம் நிறையப் பழமிருந்தும்

    மனம் விரும்பி

    காய்பறிக்கும் கதைதான் இது…!

     

    குறும்பாவில்…

     

    இனியவை ஒதுக்கிப் பேசும்

    இன்னாசொல், பழம் தவிர்த்து

    விரும்பித் தின்னும் காய்தானே…!

     

               மரபுக் கவிதையில்…

     

    கிளைமுறிய பழம்பழுத்துத் தொங்கும்

    கீழ்க்கிடக்கும் பழுத்தபழம் எங்கும்,

    பளபளக்கும் காய்பறித்துக் கடித்தால்

    பைத்தியம்தான் என்றுலகு எடுக்கும்,

    அளவிதுதான் நீயுரைக்கும் சொல்லும்

    அன்பான இன்சொல்லே வெல்லும்,

    களையெனவே கொடுஞ்சொல்லை உரைத்தால்

    கவலைப்பட இன்னலது வருமே…!

     

    லிமரைக்கூவில்…

     

    இன்சொல்லிருக்கக் கொடுஞ்சொல்லை ஒதுக்கு,

    இனிக்கும் கனிநிறைந்த மரத்தில்

    கனியைவிட்டுக் காய்பறித்தல் எதுக்கு…!

     

    கிராமிய பாணியில்…

     

    காயிருக்கு பழமிருக்கு

    கடிச்சித்தின்ன அணிலிருக்கு

    கம்மாக்கர தோட்டத்தில,

    சும்மாநீயும் பாத்துக்கோ

    சேதிசொல்றேன் கேட்டுக்கோ..

     

    பழுத்தபழம் பாத்துத்திங்குது

    பச்சக்கிளிதான்- நீயும்

    பழத்தவுட்டு காபறிச்சா

    பயித்தியந்தான் பயித்தியந்தான்..

     

    நல்ல வார்த்த நெறஞ்சிருக்க

    கெட்டவார்த்த பேசுறியே

    கேடுகெட்ட மனுசாயிது

    காபறிச்ச கதயாச்சே- நீயும்

    நல்லதயே பேசிப்புடு

    கெட்டதயே வீசிப்புடு…!

     

    Share
  • சேவாலயாவின் வெள்ளிவிழா!….

     

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    F B1, First Floor, Pld no 10. New no 24, Kesava perumal Westward street, Mylapore, Chennai 600004.

    KasuvaVillage, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

    VadanallurVillage, Uthiramerur, Kanchipuram Dt., TamilNadu, India

    Phone: 044-24950204, 9444620289, 9444620286, 044-64611488.

    E-mail:   Sevalayamurali@gmail.com,   Sevalayaprm@sevalaya.org,   Visit us at: www.Sevalaya.org.

    ————————————————————————————————————————————————————-                                                                   

    Please publish the following matter in your esteemed newspaper          27.06.2013

    சேவாலயாவின் வெள்ளிவிழாவையொட்டி  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினம்

           திருவள்ளூர் மாவட்டம்  திருநின்றவூர் அருகே அமைந்துள்ள கசுவா கிராமத்தில் செயல்படும் சேவாலயா சேவை  மையத்தில் இன்று காலை 10 மணியளவில் சேவாலயாவின் வெள்ளிவிழாவையொட்டி  தனியார் தொண்டு நிறுவனங்கள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

           இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.சையத் ரவூப் (சமூக நன்னடத்தை அலுவலர் மற்றும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்),  திரு. கே.சீனிவாசன் (Founder & Chairman, Primepoint Foundation), திருமதி. அர்ச்சனா ஹரி (Head, Credibility Assurance Team – GiveIndia), திரு.பிரசன்னகாந்தி (CIOSA) ஆகியோர் கலந்துகொண்டனர்.

          விழாவில் சிறப்பு விருந்தினர் திரு. திரு.சையத் ரவூப் (சமூக நன்னடத்தை அலுவலர் மற்றும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்) அவர்கள் பேசுகையில் அரசுக்கு உதவி செய்கின்ற இது போன்ற தொண்டு நிறுவனங்கள் பெருக வேண்டும். பொது மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தால் மட்டும் செய்து விட முடியாது. சேவாலயா போன்ற தொண்டு நிறுவனங்கள் இத்தகைய மகத்தான பணிகளை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது.

      தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசாங்கத்துடனும் தன்னார்வ தொண்டர்களுடனும் தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து அடித்தட்டு மக்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து தர முன்வர வேண்டும். மேலும் குழந்தைகள் கடத்தல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தலை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

           இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நமது நாடு முன்னேற்றமடையச் செய்ய வழிவகுக்க வேண்டும்.

       முன்னதாக சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு.முரளிதரன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்க திரு. கிங்ஸ்டன் (மைய நிர்வாகி, சேவாலயா) அவர்கள் நன்றி நவில விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.

     சேவாலயாவுக்காக,

     (வி.முரளிதரன்)

    நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்

    ————————————————————————————————————————————————————

    Board of Trustees

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

    Advisory Committee: Dr.G.Nammalvar,

    Dr.D.K.Oza, IAS(Retd)  Mr.R.Nataraj IPS (Retd),  Mr. Amarchand Jain,  Dr. Malavika Vinothkumar

     

    Hony, Co-Ordinator:                                                                   Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                  Mrs. Bhuvaneshwari Muralidharan

    ————————————————————————————————————————————————————-

     

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    F B1, First Floor, Pld no 10. New no 24, Kesava perumal Westward street, Mylapore, Chennai 600004.

    KasuvaVillage, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

    VadanallurVillage, Uthiramerur, Kanchipuram Dt., TamilNadu, India

    Phone: 044-24950204, 9444620289, 9444620286, 044-64611488.

    E-mail:   Sevalayamurali@gmail.com,   Sevalayaprm@sevalaya.org,   Visit us at: www.Sevalaya.org.

    ————————————————————————————————————————————————————-                                                                   

    Please publish the following matter in your esteemed newspaper          27th June 2013

     

    NGO Day Celebrated in connection with Sevalaya’s Silver Jubilee Celebration

    NGO Day was celebrated at Sevalaya’s Kasuva centre in 27th June 2013 at 10.00 a.m. Mr.Syed Ravoof (Social Probatinery Officer, District Child Protection Officer), Mr. K.Srinivasan (Founder & Chairman, Primepoint Foundation), Ms.Archana Har (Head, Credibility Assurance Team – GiveIndia) and Mr.Prasanna Gandhi (CIOSA) were the chief guests in the occasion.

     

    Mr.Syed Rawoof said that organization like this working for the welfare o the underprivileged should grow in number Government alone cannot take care of all the needs of the people. In such a circumstance NGO like Sevalaya render great service working side by side with the Government.

     

    NGO along with volunteers and corporates should come forward to help to the lowest strata of society awareness programme should be conducted to prevent child abuse, kidnapping etc,.

     

    Earlier Mr. V. Muralidharan (Founder and Managing Trustee, Sevalaya) welcomed the guests and

    Mr. A.A.Kingston  (Centre Head, Sevalaya Campus) proposed the vote of thanks.

     

     

    ————————————————————————————————————————————————————-

    Board of Trustees

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

    Advisory Committee: Dr.G.Nammalvar,

    Dr.D.K.Oza, IAS(Retd)  Mr.R.Nataraj IPS (Retd),  Mr. Amarchand Jain,  Dr. Malavika Vinothkumar

     

    Hony, Co-Ordinator:                                                                   Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                  Mrs. Bhuvaneshwari Muralidharan

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • ஆடித் திரிதல் கண்டால்!….

    முனைவர். ப. பானுமதி

    குழந்தைகள் பால் வேறுபாடு, இன வேறுபாடு இல்லாமல் தெருவில் ஓடி ஆடிக்கொண்டு இருக்கும் போது பார்க்கும் நடுத்தர வயதுள்ள எவருக்கும் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

    “மகிழ்ச்சியா துள்ளிக்கிட்டு இருந்தோம்; கவலைன்னா என்னன்னு தெரியாம திரிஞ்சோம்; ஏன் தான் பெரியவங்களா ஆனோமோ தெரியல? இளமைப் பருவத்திலேயே இருந்திருக்கக் கூடாதா?” என்று ஏங்காதவர்கள் இருக்க முடியுமா? புலம்பாதவர்கள்தான் இருக்க முடியுமா?

    இளமைப் பருவம் இனிக்கும் பருவம். அந்தப் பருவம் மட்டுமல்ல. அந்தப் பருவத்து நினைவுகளுக்கும் இனிமை இருக்கும்.. வயது கூடக் கூட வாழ்க்கையில் கசப்புச் சுவை கூடிக்கொண்டே போகின்றது. ஆனால் இளமைப் பருவத்து நினைவுகளை அசை போடும் போது மட்டும் வயது கூடக் கூட இனிப்புச் சுவையும் கூடிக்கொண்டே போகின்றது. குழந்தைப் பருவத்தில் குறும்புத்தனங்கள் செய்த எவரும் இதனை மறுக்க மாட்டார்கள்.

    ஒவ்வொரு பெரியவருக்குள்ளும் ஒரு குழந்தை உலவிக் கொண்டிருக்கும் என்பார்கள். பத்துக் குழந்தைகள் உலாவிக் கொண்டு இருக்கும் பெரிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம்கூட நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    அதே போல ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு பெரியவர் உலவிக்கொண்டு இருப்பாரோ என்னும் வினா இக்காலத்துக் குழந்தைகளைக் காணும் போது எழுகிறது. அதிலும் சின்னத்திரைகள் நடத்தும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் குழந்தைகளுக்குள் பல பெரிய மனிதர்கள் உலவிக் கொண்டு இருப்பார்களோ? என்னும் ஐயம் பலருக்கும் எழுகிறது.

    திருஞான சம்பந்தர்கூட உமையம்மையின் ஞானப்பால் அருந்திய பின் தான் “தோடுடைய செவியன்” என்று பாடத் தொடங்கினார். குமர குருபரர் மீனாட்சியம்மை நாவில் வேலால் எழுதியதால்தான் கவி பாடினார். கவி காளிதாஸ் காளியின் அருள் பெற்றதால்தான் கவிதை படைத்தார். ஆனால் இந்தச் சின்னத்திரைக் குழந்தைகள் மட்டும் எப்படி? தங்கள் பெற்றோரின் நாவுக்குப் பயந்தே ஒரு வேளை ஞானம் பெற்றுவிட்டனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    சின்னத்திரை போட்டிகளுக்கும் சின்னக் குழந்தைகளின் பெற்றோர்க்கும் இடையேயான அரசியல் ஒரு புரியாத புதிராக உள்ளது. எப்படி எப்படியோ தூண்டில் போட்டு இழுத்து விடுகின்றன பெற்றோர்களைச் சின்னத்திரைகள். விளைவு பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளைச் சுமக்கும் சுமைதாங்கிகள் ஆகி விடுகின்றன குழந்தைகள்.

    பத்து, பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுக் காய்ச்சல் ஒரு புறம் என்றால் மறுபுறம் சுமார் ஐம்பது அறுபது விழுக்காட்டினர் சின்னத்திரைக் காய்ச்சலில் சிக்கித் தவிக்கின்றனர். சின்னத்திரையைப் பார்த்தது ரசித்ததெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் சின்னத்திரைப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெற்றே ஆகவேண்டும் என்று நினைக்கின்றனர்.

    அதற்கான அழைப்புகளும் சின்னத்திரையில் கவர்ச்சிகரமாக மின்னலிடுகின்றன. பெற்றோர்க்கோ ஒரு புறம் மகனோ மகளோ புகழ் ஏணியில் பயணிக்கத் தொடங்குகிறார். மற்றொரு புறம் ஒவ்வொரு போட்டியும் கோடிகள்,, வீடு, வாகனங்கள் என்று சொத்துகளைச் சேர்த்துக் கொடுக்கின்றன. பிறிதொரு புறம் எதிர் காலத்தில் குழந்தைகள் அத்துறையில் ஒளிர வாய்ப்பாக அமைந்து விடுகிறது. விடுவார்களா பெற்றோர்கள். தங்களுக்கு கிட்டாத வாய்ப்பு தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கிறதே. தங்கள் கனவை நிறைவேற்றவே தங்களால் பெற்று வளர்க்கப் பட்ட அடிமைகளாகப் பார்க்கின்றனர் குழந்தைகளை.

    பாவம் அந்தச் சின்னஞ்சிறு மொட்டுகள். பெற்றோரின் கனவுகளைத் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு தங்கள் இளமையையும் குறும்புகளையும் அறவே மறந்து, போட்டிக்காகக் கடுமையாக உழைத்து ஓரு பக்கமாக வளர்ச்சி அடையும் இக்காலக் குழந்தைகளைப் பார்க்கும் போது வியப்பு ஏற்படுவதில்லை. பரிதாபமே மிஞ்சுகிறது. இதனை வளர்ச்சி என்று எப்படி கூறமுடியும். வீக்கம் என்று வேண்டுமானால் கூற முடியும். வளரும் குழந்தைகளின் உடல் மன வளர்ச்சியை மெல்ல மெல்ல அரித்துக் கொண்டிருக்கும் கரையான்களாக மாறிக்கொண்டு இருக்கின்றன சின்னத்திரைப் போட்டி நிகழ்ச்சிகள்.

    துள்ளித் திரியும் பருவத்தில் அந்தப் பிஞ்சுகளைப் பயிற்சி பயிற்சி என்று இப்படி வதைத்தால் அந்தக் குழந்தைகளுக்குக் கழிந்து போன பிள்ளைப் பருவம், விளையாட்டுப் பருவம் மீண்டு வருமா? மீண்டும் வருமா? அது மட்டுமல்ல. குழந்தைகள் பிஞ்சிலே பழுத்துவிடாதா?

    நம் முன்னோர்கள் குழந்தைகளின் முன்பு எதைப் பேசலாமோ அதை மட்டும் பேசினார்கள். பெரிய பெரிய செய்திகளை (விஷயங்களை) குழந்தைகளின் முன் பேச மாட்டார்கள். இப்போதோ சின்னச் சின்னக் குழந்தைகள் பெரிய பெரிய விஷயங்களைப் பேசுகின்றன.

    “கிருஷ்ணனுக்குப் பெண்களை ரொம்பப் பிடிக்கும். பெண்கள் மேல் அவ்வளவு ப்ரீத்தி. ஒரு யாமத்தில் முப்பது பெண்களைப் பார்த்தான். சாமக்கோழியை இடுப்பில் கட்டிக்கொண்டான். ஒவ்வொரு பெண்ணைப் பார்த்ததும் இடுப்பில் இருந்த சாமக்கோழியை ஒரு கிள்ளு கிள்ளுவான். அது கூவியதும், விடிஞ்சுடுத்து, நாழியாயிடுத்து. நா வரேன்னு சொல்லிவிட்டு கிளம்பி விடுவான். இப்படியே இரண்டரை மணி நேரத்தில் முப்பது பெண்களைப் பார்த்து விட்டு வீடு திரும்பினான். வீடு திரும்பி முன்னால் எப்படி படுத்திருந்தானோ அப்படியே வந்து நல்ல பிள்ளை மாதிரி படுத்துக்கொண்டான்” என்று மழலை மாறாத சுமார் எட்டு வயது முதியவன் பேசுகிறான். இதனை எண்பது வயதுள்ள பாலகர்கள் ரசிக்கிறார்கள். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காண நேர்ந்தது இந்த விபரீதத்தை.

    இப்படி உரையாற்றும் குழந்தையின் குணத்தில் எந்த மாறுபாடும் வராதா? அவன்  கிருஷ்ணனாக மாறி கோபிகா ஸ்திரிகளைத் தேட மாட்டான் என்று என்ன நிச்சயம்? வளரும் குழந்தைச் சமுதாயத்தைச் சீரழிக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் அவசியமா என்பதை பெற்றோர்கள் முதலில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    இது ஒருபுறம் என்றால் போட்டிகளில் தேர்வு பெறாத குழந்தைகள் அத்தனை பேரின் முன்பு அழுவது காணச் சகிக்காத காட்சி. அதைவிடவும் கொடுமையான சகிக்க முடியாத காட்சி அக்குழந்தையுடன் சேர்ந்து பெற்றோரும் அழுவது.

    நாற்பது ஐம்பதுகளுக்கு மேல் எல்லோருக்கும் பாலைவனச் சோலையாக இருப்பது, மனத்தைக் குளிரச் செய்வது, சோர்ந்த இதயத்திற்குச் சுறுசுறுப்பைக் கொடுப்பது இளமைப் பருவத்தில் தாம் செய்த மொறு மொறு குறும்புகளை அசை போடுவதுதான். இந்தக் குழந்தைகள் தங்கள் நாற்பது ஐம்பதுகளில் எவற்றை அசை போடுவார்கள். அசைபோட வெற்றுக் கஞ்சிகள் மட்டும்தான் இருக்கும். மொறு மொறுவென்று கிருஸ்ப்பாக ஒன்றும் இருக்காதே….?

    தன் குழந்தை கன்னம்மா விளையாடிக் கொண்டு இருக்கின்றாள். அவளைக் காண்கிறான் பாரதி. அவனுக்குள்  அவளை அள்ளி அணைக்க ஆவல் எழுகிறது. தழுவலாம் என்று நினைக்கும் போது குழந்தை உளவியல் அவனைத் தடுக்கிறது. விளையாடிக் கொண்டிருக்கும் மகளைத் தொந்தரவு செய்யாமல், அவளின் விளையாட்டுக் கலையாமல் அவளைத் தொடாமல் தூர இருந்தே தழுவி மகிழ்கிறான்.

    ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடி என்கிறான். ஆடித் திரியும் போது தழுவினால் அது கூட அந்தக் குழந்தையின் மகிழ்ச்சியைக் கெடுத்தது போல ஆகும் என்பதால் தள்ளி இருந்து தன்னுடைய ஆவி அக்குழந்தையைத் தழுவுகிறது என்பான். குழந்தைகளின் விளையாட்டுப் பருவம் அவ்வளவு மகிழ்ச்சியானது. முக்கியமானது. அதனால்தான் பாரதி ஓடி விளையாடுவதை, ஆடித்திரிவதை அதிகமாகப் பாடுகிறான்.

    ஆளும் வளரனும் அறிவும் வளரனும்

    அதுதாண்டா வளர்ச்சி

    உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு

    அதுவே நீ தரும் மகிழ்ச்சி

    என்பார் குழந்தைகளுக்காகவே பாட்டுக் கோட்டைக் கட்டிய பட்டுகோட்டை.

    இந்தப் பாடலைக் கேட்ட மக்கள் எப்படி சிந்தித்தார்கள் என்று தெரியவில்லை. பட்டுக்கோட்டை குழந்தைகளிடம் குறையாத அக்கறை கொண்டவன். குழந்தைகளின் உடலும் உள்ளமும் சீராக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதைச் சொல்லவே இப்பாடலைப் பாடினான். அப்படிப் பாடியவன் முதலில், ஆள் வளர வேண்டும் என்கிறான்.. சுவர் இருந்தால்தானே சித்திரம். பிறகு அதற்கேற்றாற் போல் அறிவு வளர வேண்டும் என்று சிந்தித்தவன் அவன்.

    இரண்டில் ஒன்றை விட்டு ஒன்று வளர்ந்தால் அதனை வளர்ச்சி என்று கூற முடியாது. ஆள் மட்டும் வளர்ந்து அறிவு வளராது இருப்பின் அது ஆடிசம் (மனநோய்) என்னும் நோயின் அறிகுறி. அறிவு மட்டும் வளர்ந்து ஆள் வளராது இருப்பின் அது உடல் நோயின் அறிகுறி. சின்னக் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மிகவும் முக்கியம் அதனால்தான் முதலில் ‘ஆள் வளரவேண்டும்’ என்று உடல் வளர்ச்சியைப் பற்றிப் பாடியிருக்கிறான் பட்டுக்கோட்டை.

    ஆனால் சின்னத்திரைப் போட்டிகளில் பங்கு பெறும் குழந்தைகளின் அம்மாக்கள் தங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சியைப் பொருட்படுத்துகிறார்களா என்பது வினாவாக உள்ளது. அவர்களின் திறமை வளர்ச்சியையே பெரிதாக நினைக்கின்றனர் என்பது கண்கூடு. குழந்தைகளைப் பற்றி எப்படி எப்படியெல்லாமோ கனவு காண்கின்றனர். அதில் தவறு இல்லை. ஆனால் அதற்காக அணு அணுவாக அக்குழந்தைகளை வதைப்பது தவறு.

    பெற்றோர்களின் கனவைத் தம் கண்களில் காணும் குழந்தைகளுக்குச் சொந்தக் கனவுகளும் இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது பெற்றோர்கள். அவற்றை என்ன என்று அறிந்து அதன்படியும் குழந்தைகளை வளர்க்க முற்படுவது அறிவுடைமை. அப்போதுதான் பிற்காலத்தில் குழந்தைகளுக்குப் பழைய நினைவுகள் சுடாத வண்ணம் இருக்கும். குழந்தை மனம் கெடாத வண்ணம் இருக்கும்.

     

    Share
  • டேய். நம்ம காலேஜ் சல்யூட்டை அடி!!!

    ஹரிஹரன்

    டேய். நம்ம காலேஜ் சல்யூட்டை அடி!!!

    மெடிக்கல் காலேஜ். முதல் வருடம். நாள்-42.

    “டேய் டுபுக்கு டைரி, நில்லுடா மச்சான்”

    “அல்கேட்ஸ் மாப்ள, அவசரமா நான் போகணும்”

    “என்ன மச்சான், ஏதோ விளம்பரத்துல வர மாதிரி கூவுற, அடுத்த க்ளாஸ் கேன்சல்”

    “தெரியும்டா. பாத்ரூமுக்கு போணும்னேன்”

    “சரி வா, போவோம்”

    ”உனக்கும் வருதா?”

    “இல்ல சும்மா கம்பனிக்கு”

    அவன் ஜெண்ட்ஸ் பாத்ரூம் பில்டிங்கில் ஒரு ருமுக்குள்ளே போய் கதவ சாத்திக்கிட்டான். நான் பில்டிங் வெளிய நின்னு போற வர நம்ம மைனாக்களை (மொத்தம் 43, அதுல 6 தேவலாம்), நோட்டம் வுட்டுக்கிட்டு இருந்தேன். அதோ க்ஷில்பா போகுது. (வசீகரா பாட்டு உள்ள ஒடுது).

    திடீர்னு, அவன் ரும் மேலேந்து புகை வருது. டாய்லெட்டுக்கு கூரை கிடையாது. பில்டிங்குக்கு தான் ரூஃப். சிகரெட் நாத்தம். அப்போ, தொங்கு மரமும், ஆஃப்டர் க்ஷேவும் வந்தாங்க. ஆஃப்டர் க்ஷேவுக்கு சொந்தமா ஒரு, இன்ஜினியரிங் காலேஜே இருக்கு.

    தொங்கு மரம், “டேய் அங்க பார்றா. அந்த ரூம்லேந்து புகை வருது”.

    நான் அவன்ட்ட கிசுகிசு குரலில், “அது டுபுக்கு டைரி மாப்ள. சிகரெட் புடிக்கிறான்”

    தொங்கு மரம் சத்தமாக, “டேய் அல்கேட்ஸ், பாத்ரூம்ல பொக வருது. ஒரு பக்கெட் தண்ணிய எடுத்து மேலேந்து ஊத்துவோமா?”ன்னான்.

    டுபுக்கு டக்குனு பதறி அடிச்சுக்கிட்டு வெளியே வந்தான், “டேய் என்னாங்கடா?”.

    தொங்கு, “இல்ல மாப்ள, பொக வந்துது”ன்னான்.

    “பக்கத்து ருமிலயா இருக்கும். ஒரு மனுக்ஷனை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களே”.

    “டேய் உன் வாயிலேந்து சிகரட் நாத்தம் வருது. எப்படா ஆரம்பிச்சே?”

    “கண்டுபுடிச்சிட்டீங்களா? மூனு நாள் ஆச்சு. ஹாஸ்டல் வாட்ச்மேன்ட்ட மொதல்ல பீடி வாங்கி ஆரம்பிச்சேன்”

    “நல்லா வருவ”

    எனக்கு ஒரு மாதிரி இருந்தது.

    நான், டுபுக்கு, பருப்பு மட்டை, கட்டப்பை நாலு பேரும், பைக் பார்க்கிங்ல ஒக்காந்து பேசிக்கிட்டிருந்தோம்.

    நான், “மாமா, சாப்பாடு எங்க?”

    டுபுக்கு, “கேண்டீன்ல மச்சி. நாங்க ஹாஸ்டல் இல்ல? கேண்டீன் காரனுங்க போட்ருவாங்க”.

    “நானும் வரவா? டெய்லி வீட்லேந்து லெமன் சாதம், புளி சாதம்னு அலுத்துப்போச்சு. அங்க ஜாலியா ஒன்னா சாப்டுவீங்க இல்ல? நான் தனியாத் தான் சாப்பிடுறேன்”

    மூனு பேரும் முழிச்சாங்க. அப்புறம் டுபுக்கு மத்த ரெண்டு பேரையும் பாத்து கண்ணடிச்சான். நான் கவனிக்கலை.

    டுபுக்கு, “அட வா மாப்ள, சேந்து சாப்டுவோம்”ன்னான்.

    பருப்பு மட்டை, “ஹிஹி. ஆமா ஜாலியா இருக்கும்”ன்னான்.

    மதியானம், நாங்க நாலு பேரும் கேண்டீன் போனோம்.

    பருப்பு, “மாப்ள, நீ நேரா போ. ஏன்னா, நீ டே ஸ்காலர். நாங்க பில்டிங் பின்னாடி வேற வாசல் வழியாத் தான் வரணும்னு ரூல்ஸ்”ன்னான்.

    நான், “என்னடா சொல்ற? இது நம்ம காலேஜ். எப்படி வேணா போலாம்”ன்னேன்.

    “உனக்குத் தெரியாது. சரி நீ நேரா காரிடார்லயே போ. கேண்டீன்ல பாக்கலாம்”ன்னு சொல்லிட்டு, பில்டிங்கை சுத்தி ஒடுறானுங்க.

    நான் விசில் அடிச்சுக்கிட்டே நடந்துட்டிருந்தேன்.

    “டேய். நில்றா!!!”

    எவன்டான்னு ரைட்ல பாத்தா, ஒரு எட்டு பேரு நிக்கிறானுங்க. சீனியரா? சரி என்னனு கேப்போம்.

    நான் “என்னா?”ன்னேன்.

    பொளேர்!!!

    ”சீனியர எங்க, எப்ப பாத்தாலும், குட்மார்னிங், குட்ஈவ்னிங் சார்னு சொல்லணும்”

    என்னா அறை… அப்படியே 8 பேரும் ஆடற மாதிரி இருந்துச்சு.

    “குட்மார்னிங் சார்”

    பொளேர்!!!

    ”இது மதியானம்டா பேமானி”

    “யம்மா. குட்ஆப்டர்நூன் சார்”

    இன்னொருத்தன் அறைஞ்சான், “எனக்கு கிடையாதா?”

    அய்யோ, அம்மா, தாத்தா, “குட்ஆப்டர்நூன் சார்”னு ஒவ்வொருத்தனுக்கும் சொல்லிட்டு நடந்தேன்.

    மொத்….பின்னந்தலையில ஒருத்தன் அடிச்சான். “உன்னப் ’போ’ன்னு சொன்னோமா? நீ பாட்டுக்கு போற? வந்து நில்லுடா”.

    “சரிங்க”

    பொளேர்!!!

    ”சரிங்க சார்”னு எட்டு பேருக்கும் தனித்தனியா சொன்னேன். இவனோவுளுக்கு கிளாசே கெடையாதா? நிதானமா கஞ்சி ஊத்துறானுங்க?

    “எந்த ஊருடா?”

    “கிழிஞ்ச ஊரு”

    பொளேர்!!!

    ”கிழிஞ்ச ஊரு சார்”

    ”அப்பா என்னடா பண்றாரு?”

    “அப்பா இல்லைங்க சார்”, வாங்குன அடியில் கண்ணு கலங்கிடிச்சி.

    டக்குனு சைலண்ட் ஆயிட்டாங்க. “நீ இனிமே நம்ம பயடா. தப்பா எடுத்துக்காத, போ”. சொல்லிட்டு, ஆளுக்கு ஒரு பைக்குல போயிட்டானுங்க.

    டுபுக்கு டைரி, பருப்பு மண்டை, கட்டப்பை வந்தானுங்க.

    “சீனியர் போய்டாங்களாடா?”ன்னான் கட்டப்பை.

    அடப்பாவிங்களா, என்ன சிக்க வைக்கிறதுக்கு தான் இவ்ளோ ப்ளானிங்கா? ச்சை.

    “அடிச்சானுங்களாடா? கண்ணம் செவந்திருக்கு?”

    நான் குணிந்து கொண்டே, “ஆமான்டா, சரி வாங்க சாப்பிடலாம்”.

    “லஞ்ச் ப்ரேக் முடிஞ்சு போச்சு, நாங்க சாப்டாச்சு, வா போலாம்”ன்னான் டுபுக்கு.

    சாயங்காலம், கொஞ்சம் தெளிவான பிறகு,

    நான், “டுபுக்கு மாப்ள, ஹாஸ்டல் லைஃப் எப்படிடா இருக்கும்?”

    “ஏன்டா மச்சி?”

    “நானும் டெய்லி ஊர்லேந்து வரேன். ஸ்கூலுக்கு போற மாதிரியே இருக்கு. காலேஜ் லைஃப் மாதிரியே இல்ல. ஹாஸ்டல்னா ஜாலியா இருக்குமா மாப்ள?”

    டுபுக்கு மத்தவங்களைப் பாத்து கண்ணடிச்சான். நான் நடந்து போயிட்ருக்குற க்ஷில்பாவை பாத்துக்கிட்டிருந்தேன்.

    அவன், “மாப்ள. நீ வேற! ஹாஸ்டல் லைஃப், ஹாஸ்டல் லைஃப் தான். சாயங்காலமானா, 30 பேரும் கூடி ஒரே அரட்டை, சிரிப்பு, பாட்டு, டான்ஸ், சீட்டுக்கட்டு, கேரம் தான். நைட்டு ஃபுல்லா அப்படித் தான்”.

    நான் கண்கள் விரிந்து, “மாப்ள, நான் அம்மாக்கிட்ட க்ருப் ஸ்ட்டின்னு ஃபோன்ல சொல்லிடறேன். இன்னிக்கு ராத்திரி, நானும் ஹாஸ்டல்ல தங்கறேன்டா. ப்ளீஸ் மாப்ள”

    “ஹிஹி. உனக்காக இது கூடவா பண்ண மாட்டேன் மச்சி? வார்டன் கண்ல படாம உன்ன மறைக்க வேண்டியது என் பொறுப்பு. காலேஜ் பஸ் வந்திரிச்சி, வா போலாம்”

    ஹாஸ்டல் போனா, அப்படியே பெட்ல உழுந்து எட்டரை மணி வரைக்கும் எல்லோரும் தூங்குறானுங்க. சரி இனிமே தான் அரட்டை போலருக்குன்னு தனியா பில்டிங்கைச் சுத்திக்கிட்டு இருந்தேன். காபி,டீ இல்ல. அம்மாவோட முறுக்கும் காஃபியும் வேற ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிது.

    எட்டேமுக்காலுக்கு ஒவ்வொருத்தனா எழுந்தானுங்க.

    “மச்சி வா சாப்பிடலாம்”.

    நான், “சரி மச்சி, நல்ல பசி, பூரி கெடைக்குமா?”

    கட்டப்பை, “என்ன வேனுன்னாலும் கெடைக்கும் மச்சி, பூரி, ரோஸ்ட், சென்னா பட்டூரா, புதுசா ப்ரெட் ஆம்லெட்டும் கெடைக்கும். ஹிஹி”.

    இவன் ஏன் ஒரு மாதிரி இளிக்கிறான்??

    அங்க போனா, எல்லாரும் தட்ட எடுத்துக்கிட்டு சாப்பிடுறானுங்க. எனக்கு தட்டு இல்ல.

    “டேய் அல். இங்க வாடா”

    “மாப்ள, எனக்கு தட்டு இல்லடா”.

    “என் தட்லயே சாப்பிடலாம், வா”

    “ஐ ஜாலி. நான் இப்படி சாப்ட்தே இல்ல”.

    தட்டில் விசித்திரமா ஏதோ கெடந்துது.

    ”என்னடா இது? ப்ரவுன் கலர்ல இருக்கு?”

    “ஏய், இது குஸ்கா. தொட்டுக்க சால்னா இருக்கு பாரு. சாப்டு”

    ஒரு வாய் சாப்பிட்டு விட்டு,

    “மச்சி செம டேஸ்ட்டா இருக்கு”ன்னேன்.

    எங்கேந்தோ க்ளாஸ் ரெப் கும்பகர்ணன் வந்தான். “ஏண்டா இது நல்லாருக்கா? இத தெனமும் சாப்ட்டு சாப்ட்டு நாக்கு செத்து போச்சுறா. இங்க பாரு”ன்னு நாக்க நீட்டினான். அது பாவமா தொங்கிச்சு.

    “என்னாச்சு, உண்மையாவே நாக்கு செத்துப் போச்சா?”ன்னேன்.

    சாப்பிட வேற எதுவுமில்லாம அதயே தின்னேன்.

    அப்புறம் ஹால்ல எல்லாரும் உக்காந்து சீரியஸா ’சித்தி’ சீரியல் பாத்துக்கிட்டிருந்தாங்க.

    “என்னடா, மெகா சீரியல்லாம் பாக்குறீங்க?”

    “இங்க இந்த ஒரு சேனல் தான். முன்னாடி 15 சேனல் இருந்திச்சி. நாங்க சேனலை மாத்தி மாத்தி, டிவி கருகிப்போச்சு. இது புது டிவி, ஒரே சேனல்”

    சீரியல் முடிந்த்து. ஒரே அமைதி.

    “மாப்ள, என்னடா இது? ஒரே ஜாலியா இருக்கும்னு வந்தேன். எங்க வீடே தேவலாம் போல.”

    “மணி என்ன?”

    “ஒம்போதரை”

    “இனிமே தான் ஜாலி வரும்”

    “என்னது, ஜாலி வருமா?”

    டுர்ர்ர்ர்ர்ர்ர் டுர்ர்ர்ர்ர்ர்ர் க்ரீரீரீரீரீச்ச்ச்ச்ச்ச் ன்னு வாசல்ல சத்தம்.

    “வந்திரிச்சி”

    நாலு கார் வந்துது. அதுல 20 பேரு வந்தானுங்க. எல்லாம் தடிமாடு கனக்கா. தப தபன்னு எருமை மந்தை மாதிரி வர்றானுங்க. சாராய, சிகரெட் நெடி வேற. சீனியர்ஸ், இது வேற க்ருப்பு.

    அவனுங்க வந்து மேஜை மேல ஒக்காந்தானுங்க.

    ஒருத்தன், “ம்ம் ஸ்டார்ட்”ன்னான்.

    அவ்ளோ தான், நம்ம பசங்க 30 பேரும் டக்டக்குனு ட்ரெஸ் எல்லாத்தையும் கழட்டிட்டு, ஜட்டியோட நின்னானுங்க.

    ஒரு சீனியர், “இவன் யார்றா? போண்டா மணி மாதிரி இருக்கான்”.

    கட்டப்பை ஜட்டியோடு, “இவனும் எங்க க்ளாஸ் தான் சார். டே ஸ்காலர். சும்மா, தங்கலாம், ஜாலியா இருக்கும்னு வந்தான்”.

    சீனியர், “ஜாலியா இருக்குமா? டே சொரக்கா, இங்க வாடா”

    உடனே ஒடி வந்து, ”குட் ஈவ்னிங் சார்”னு, 20 தடவை சொன்னேன்.

    “எந்த ஊர்ரா?

    “கிழிஞ்ச ஊர்”

    “ஜட்டியோட ஒரு பாட்டு பாடு. மெட்டோட..”

    நானும் ரெக்கார்ட் ஸ்பீடுல ஜட்டியோட நின்னேன். அப்புறம் டான்ஸ் ஆடிக்கொண்டே “ஜலக்கு ஜலக்கு ஜரிக சேல ஜலக்கு ஜலக்கு, வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு, மாமன் தோளுல…….”ன்னு மெட்டுப் போட்டு, பாட்டுப் பாடி, டான்ஸும் ஆடினேன்.

    டேபிள்லேந்து கீழ விழுந்து சிரிச்சாங்க. நம்ம பசங்க அணிவகுப்புல நின்னுக்கிட்டு, தரைய அமைதியா பாத்துக்கிட்டு இருக்கானுங்க. சிரிச்சாலோ நிமிந்து பாத்தாலோ, மூஞ்சி பேந்துரும்.

    ஒரு சீனியர், என் மூஞ்சில சிகரெட் புகைய ஊதினான். நான் ரியக்க்ஷனே காட்டல. “என்னடா சிகரெட் பிடிக்குமா?”ன்னான்.

    பிடிக்காதுன்னா அடிப்பான், “பிடிக்கும் சார்”.

    “அப்போ பிடி, இந்தா”ன்னான்.

    நான் கையில் சிக்ரெட்டோடு முழிச்சேன்.

    “என்ன வேணாமா? சரி இந்தா வாங்கிக்க”ன்னு சிக்ரெட் பத்த வெச்ச தீக்குச்சிய தந்தான். “இதை வெச்சு இந்த ரூமை அள”.

    “1,2,3…………….48,…………434,…………..2136”ன்னு வச்சு வச்சு அளவெடுத்துக்கிட்டு இருந்தேன். குச்சி ஒடைஞ்சிருச்சு.

    சீனியர்ஸ் பிஸியா ராகிங் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. பசங்க எல்லோரும் ஜட்டியோட “கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாட்டுக்கு ஜோடி ஜோடியா சிரிக்காம ஆடிட்டுருந்தாங்க. பசங்கள்ல ஒருத்தன் வாயால டிரம்ஸ் வாசிச்சுகிட்டிருந்தான், ஒருத்தன் அந்தப் பாட்டுல வர குதிரை மாதிரி கணைச்சிக்கிட்டிருந்தான், ஒருத்தன் மேல் வாய்ஸ், ஒருத்தன் ஃபிமேல் வாய்ஸ், ரெண்டு பேரு கோரஸ். “ம்க ச்சா ச்சா ச்சா. ம்க ச்சா ச்சா ச்சா.ஆஆஆஆஆ”.

    நான் தயங்கிக்கொண்டே, “வத்திக்குச்சி ஒடஞ்சிருச்சி சார்”னேன்.

    “போவுது விடு, நீச்சல் தெரியுமாடா?”

    ”தெரியாது சார்”.

    “இப்ப கத்துக்க. இந்தா தண்ணி. ம். நீச்சல் அடி”ன்னு ஒரு டம்ளர்ல பாதியளவு சரக்க தந்தான்.

    நான் நாலு விரலால தைக் தைக்குனு டம்ளர்க்குள்ள அடிச்சேன்.

    “டேய், என்ன விரலை வச்சு அடிக்கிற?”

    ”சார். டம்ளருக்குள்ள எப்படி சார் அடிக்க முடியும்?”

    பொளேர்….

    “எழுத்தா பேசற?” டம்ளர்லேந்து தண்ணிய தரைல ஊத்தி, இப்போ ஃப்ரீயா அடி”ன்னான்.

    நான் அப்படியே அந்த்த் தண்ணி மேல் குப்புற படுத்து ஒரு 1 மணி நேரம் பட்டர்ளை, பாக் ஸ்ட்ரோக், ஃப்ரண்ட் ஸ்ட்ரோக், ஃப்ரீ ஸ்டைல், டால்ஃபின் ஸ்டைல்ன்னு, தூர்தர்க்ஷன் ஒலிம்பிக்ஸ்ல பாத்ததெல்லாம் அடிக்குறேன்.

    ஒரு பத்துப் பாட்டு முடிஞ்சிருக்கும், நடுவில தலைய தூக்கிப் பாத்தேன். அடப்பாவிங்களா, ஒரு பத்து பைனஞ்சு சீனியருங்களும் ஜோடிப் போட்டு ஆடிக்கிட்டுருக்காங்க. ஜட்டியோட. போதை முத்திரிச்சு. திடீர்ன்னு ஒரு சீனியர் பின்னாடிலேந்து என் பட்டக்ஸை மெதிச்சுட்டு ஓடினான். “பனாதைப் பயலே. ஒழுங்கா நீச்சல் அடிடா”

    அப்படியே பல விதமான நீச்சலும் அடிச்சு தூங்கிட்டேன். கனவுல, பீர் பாட்டிலால என் மண்டைய ஒடைக்க பாக்குறானுங்க.

    அடுத்த நாள். காலேஜில்…

    டுபுக்கு டைரி, நம்ம ஆள் க்ஷில்பாக்கிட்ட, “நேத்து அல்கேட்ஸ் ஹாஸ்டலுக்கு வந்தான். பாட்டு பாடி, டான்ஸ் ஆடி ஒரே ஜாலி”.

    Share
  • வார ராசி பலன்!01.07.2013-07.07.2013

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்:  பெண்கள் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டுமானால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த வாரம் மனை விற்பனை விஷயமாக சிலர் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். வியாபாரிகள் புதியவர்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதில் கவனமாக இருந்தால், இழப்புகளைக் குறைத்துக் கொள்ளலாம். கலைஞர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப் படுபவரிடமிருந்து விலகி இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொண் டால், நீங்கள் இனிமையான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
    ரிஷபம்:மாணவர்கள் கேளிக்கை பக்கம் திரும்பாமல், பாடத்தில் கவனம் செலுத்தி வந்தால், பதற்றமின்றி தேர்வு எழுதுவது எளிதாகும். இந்த வாரம் வியாபாரிகள் கடனைத் தீர்க்க கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முழு முயற்சியில் இறங்க வேண்டியிருக்கும். தொழில் வகையில் ஏற்படும் மாற்றங்கள் கலைஞர்களுக்கு சில ஏமாற்றத்தை கொடுக்கலாம். வலிய வரும் சண்டையால், தலைவலி கூடும். எனவே பெண்கள் தங்கள் பணியில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வரும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி பலனடைவார்கள்.
    மிதுனம்: மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு செயல் படும் காரியங்களில் கவனமாக இருப்பது அவசியம். கலைஞர்கள் கிடைத்த ஒப்பந்தங் களை குறித்த காலத்தில் முடிப்பதில் கருத்தாக இருந்தால், உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும் .சொந்தங் களையும், உடனிருப்பவர்களையும் அரவணைத்து நடத்திச் செல்லும் பெண்களுக்கு நல்ல ஒத்துழைப்போடு நல்ல பெயரும் வந்து சேரும். இந்த வாரம் கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்கு நீங்குவதால், மீண்டும் இல்லத்தில் மகிழ்ச்சி மலரும். மாணவர்கள் தெளிவான மன நிலையுடன், பாடங்களை ஆர்வத்துடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.
    கடகம்: பிள்ளைகள் படிப்பில் முதலிடம் பிடித்து உங்களை மகிழ்விப்பார்கள். பெண்கள் கோபத்திற்கு இடம் தாராமல் உரையாடுங்கள். கேட்ட உதவி உடன் கிடைக்கும். சுய தொழில் புரிபவர்கள் எடுத்த பணியை முடிக்கும் வரை, அதிலேயே முனைப்பாய் இருந்தால், நஷ்டங்களைத் தவிர்த்து விடலாம். ஏட்டிக்குப் போட்டி என்ற சூழல் இருந்தாலும், வியாபாரிகள் பொருட்களின் தரம் குறைய இடமளிக்காதிர்கள். வியாபா ரச் சலுகைகளை தவறாகப் பயன்படுத்தும் பங்குதாரர்களிடமிருந்து விலகி இருப்பது புத்திசாலித்தனம். மாணவர்கள்,சுற்றுலா போன்றவற்றில், வீண் ஆரவாரத்தோடு செயல்படுவதைத் தவிர்த்தல் அவசியம்.
    சிம்மம்: மாணவர்கள் இரவலாகப் பெறும் பொருட்களை உடன் திரும்ப தந்துவிட்டால், உபத்திரவம் ஏதுமிராது..பெண்கள் அதிக விலை கொடுத்து வாங்கிய பொருட்களை பத்திரமாக வைப்பது அவசியம். கலைஞர்கள் ,பண விவகாரங்களை முடிவு செய்தபின் ஒப்பந்தங்களை ஒப்புக்கொண்டால், அதிக சாதகம் பெறலாம். கருத்துப் பரிமாற்றத் தில், கண்ணியத்தை கடைபிடிப்பது நல்லது. வயதானவர்கள் உழைப்பிற்கு நேரம் ஒதுக்குவதை போல ஓய்வுக்கும் நேரம் ஒதுக்கினால், உடல்நலம் சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு அலைச்சல் அதகரித் தாலும், வேண்டிய தகவலும், புதிய முயற்சிக்கான ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும்.
    கன்னி: இந்த வாரம் மாணவர்கள் நட்பு வட்டம் தரும் தொந்தரவுகளை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும். பெண்கள் உடல்நிலையில் தகுந்த கவனம் செலுத்தி வந் தால், மருத்துவச் செலவுக்கு அவசியமிராது. வேலை செய்யும் இடத்தில் சிறு பூசல்க ளை வளர விடாமல் எச்சரிக்கையாக இருங்கள். அமைதியாக வேலைகளை செய்யலாம். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பை முழுமையாகப் பெற பாடுபட வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கை எண்ணி கவலைப்பட நேரிடலாம். உங்கள் வேலையில் சலிப்பு எழாதவாறு சிறு மாற்றங்களை அவ்வப்போது செய்து கொள்ளுங்கள்.
    துலாம்: மாணவர்கள் எந்த சூழலிலும், கோபமான வார்த்தைகளை பயன்படுத்துவ தில்லை என்பதில் உறுதியாக இருந்தால், அடுத்தவரின் சகாயம் குறையாமலிருக்கும். பணியில் இருப்பவர்கள் உங்கள் விருப்பு, வெறுப்புக்களை தேவையற்ற இடங்களில் வெளிப்படுத்துவதைத் தவிர்த்து விடவும். விடாமுயற்சி மூலமே விரும்பி யதை அடைய முடியும் என்பதை நினைவில் கொள்ளும் கலைஞர்களுக்கு வெற்றியோடு, வாய்ப்பு களும் பல வந்து சேரும். இந்த வாரம் பெண்கள் முழங்கால் வலி, பல் உபாதை களுக்காக மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். எனவே அதிக அலைச்சல், குளிர்ச்சியான பொருட்களை உண்ணுதல்- இரண்டையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

    விருச்சிகம்: உடல் உபாதைகள் உங்கள் உற்சாகத்தையும், வேகத்தையும் குறைப்பதற்கு இடமளிக்காதீர்கள். சில முக்கிய விஷயங்களில் உடனடியாக முடிவெடுக்க முடியாமல் திணறும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் நல்ல விதமாய் ஆலோசனை சொல்வது விரும்பிய பலனை அளிக்கும். இந்த வாரம் விலகிச்செல்லும் உறவுகளை சேர்த்து வைக்க பெண்கள் பாடுபட வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வியாபாரிகள் பத்திரங்களுக்கு ஈடாகப் பணம் பெறுவதற்கு முன் அதில் உள்ள விதிமுறைகளை தெரிந்து கொண்டு செயல்படுவது அவசியம். கலைஞர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடம் மட்டும் முக்கிய ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது நல்லது.
    தனுசு: முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், ஆவணங்களை கவனமாக வைத்துக் கொண்டால் பதற்றமின்றி வேலைகளைத் தொடரலாம். பெண்கள் உங்கள் நகைகளை இரவ லாகத் தருவதை இதமாக மறுத்துவிட்டால், மனக் கசப்பு இராது. மாணவர்கள் அளவாகப் பேசி, காரியங்களை முடிக்கும் திறனை வளர்த்துக் கொண்டால், எதிலும் வெற்றி கிட்டும். பணி புரிவோர்கள் முக்கியமான விஷயங்களை நிதானமாகக் கையாளவும். இல்லையெனில் நீங்கள் காட்டும் அவசரத்தினால், சில சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த செயலையும் தொடங்கும் முன்பு யோசித்துச் செயல்பட்டால், நினைத்த பலன் கிடைக்கும்.
    மகரம்: பெண்கள் பிறரிடம் உரையாடும் போது, உங்களின் சொந்த விஷயங்கள் இடம்பெறாதவாறு, கவனமாய் இருங்கள். வீண் வம்பைத் தவிர்த்து விடலாம். மாணவர்கள் எவரும் குறை சொல்லாதவாறு தங்கள் பணியை செய்து முடித்து பாராட்டைப் பெறுவார்கள். வீண் புகழ்ச்சியில் மயங்கிவிடாமல் உறுதியாக இருக்கும் கலைஞர்களின் எதிர்காலம் வளமாக அமையும். பணி புரியும் இடங்களில், உயர் அதிகாரிகளுடன் தர்க்கம் செய்வதை விடுத்து, இணக்கமாக நடந்தால், அவர்களின் ஆதரவு குறையாமல் இருக்கும். வியாபாரிகள் தங்களின் கணக்கு வழக்குகளை கவனமாக பராமரித்து வந்தால் சிறப்பு சலுகைகளை பெறலாம்.
    கும்பம்: பெண்கள் குடும்பத்தில் தோன்றும் பிரச்னைகளை, வளர விடாமல் மனம் விட்டுப் பேசி தீர்த்துக் கொண்டால், சந்தோஷத்திற்கு குறைவிராது. வியாபாரிகளை உற்சாகத்துடன் செயல் பட வைக்க நண்பர்கள் புதிய ஆலோசனையை வழங்குவார்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் கிடைக்கும் தருணங்களில், குடும்ப உறுப்பினரின் தேவைகளைப் பூர்த்தி செய்தால், அவர்களும் உதவ முன் வருவார்கள். இந்த வாரம் உடன் பணி புரிபவர்கள் தேவையான உதவிகளை இன்முகத்துடன் செய்வார்கள் . உயர் பதவியில் உள்ளவர்கள் காட்டும் ஆர்வம் மற்றவரையும் சுறுசுறுப்புடன் இயங்கச் செய்யும். வயதானவர்கள் கண் பராமரிப்பில் விசேஷ கவனம் செலுத்தி வரவும் .
    மீனம்: பெண்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களையும், கடமைகளையும் நல்லபடியாக முடித்து நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வார்கள். முதியவர்களுக்கு ரத்த அழுத்தம் தொடர்பான தொல்லைகள் அவ்வப்போது வந்து போகும். உங்களின் நிர்வாகத் திறன் பெருகுவதால் புதிய பொறுப்புகளும், அதற்கேற்ற வசதிகளும் வந்து சேரும். மாணவர்கள் சிறு சிறு பிரச்னைகளுக்கெல்லாம் குழப்பம் அடைவதைத் தவிர்த்துவிடவும். உங்கள் கருத்துக்கு நல்ல மதிப்பிருக்க, இனிமையாகப் பேசுங்கள். பணியில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களின் குற்றம் குறைகளை பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டாம். வேலைகள் எளிதில் முடியும்.

     

    Share
  • இமயம் – ஓர்துயரம்

     

    சத்தியமணி

     

    முகில் குளிர்ந்தால் வரும் மழை யின்பம்
    முக்கி வெடித்தால் அது பெருந்துன்பம்
    இமயம் நிமிர்ந்த கம்பீரம்
    இன்று அதற்கும் ஓர்துயரம்
    சுற்றுலா சென்ற சிலக்கூட்டம்
    சுழற்றி போட்டது காட்டாறு
    பக்தியில் சென்ற சிலக்கூட்டம்
    பாதியிழந்தது கூட்டாறு
    கேதாரம் தான் ஆதாரம்
    வெள்ளத்தால் பெரும் சேதாரம்
    பொங்கி பெருகிடும் கங்கையிலே
    புண்ணியம் சேர்ப்பதும் இப்படியா
    தங்கி தரிசனம் தரும் எழிலில்
    பயங்கரம் தெரிவதும் ஒருமுறையா
    மலைநாட்டவரின் மந்தாகினி
    கொலையாட்டமும் கண்டதனால்
    பயமும் வெறுமையும் உடன்தாக்க‌
    பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டாய்
    ஆறுதல் தந்தவர் வாழ்வினுக்கு
    வல்லமையாளர்கள் வலுவமைப்போம்
    அள்ளி தருபவர் வள்ளல்யென்போம்
    உள்ளம்தந்திடின் வாழ்த்திடுவோம்

     

    Share
  • புறம் போற்றும் அறம்!

    மேகலா இராமமூர்த்தி

     

    இயந்திரங்களைச் சார்ந்தே இன்றைய வாழ்க்கை என்று ஆகிவிட்ட நிலையில் அலுவலக நேரம் தவிர்த்த மீதி நேரத்தையெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதிலேயும், அலைபேசியில் நண்பர்களோடு அரட்டை அடிப்பதிலேயுமே நாம் பெரும்பாலும் கழித்துவிடுகின்றோம். மடிக் கணினியில் மடியின்றி (சோம்பலின்றி) உலவிக் கொண்டிருப்பதில் இன்பம் காணத் தொடங்கிவிட்டபிறகு நாம் தூங்கும் நேரம் கூடக் கணிசமாகக் குறைந்துவிட்டது என்று ஆய்வாளர்கள் (கவலையோடு) கருத்துத் தெரிவிக்கின்றனர். வாழ்க்கைச் சூழல் இவ்வாறு மாறிவிட்டதனால் அறிவுச் செல்வங்களாம் நூல்களை வாங்கிப் படிப்பதற்கு நமக்கு நேரமே இருப்பதில்லை; அப்படியும் புத்தகங்கள் வாங்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டாலோ நம்மில் பலர் விரும்பி வாங்குவது விரைவில் பணக்காரர் ஆவது எப்படி? வாழ்க்கையில் உடனடியாக வெற்றிகளைக் குவிப்பது எப்படி? என்பது போன்று வாழ்வின் வளங்களையும், நலங்களையும் உடனே அடைவது குறித்து எழுதப்படும் புத்தகங்களையே என்பதே கசப்பான உண்மை. பண்பட்ட நல்வாழ்விற்கு வழிகாட்டும் நம் பண்டைய இலக்கியங்கள் வாசிப்பாரற்றுத் தூசுபடிந்திருப்பதாக பதிப்பகத்தாரே தெரிவிக்கின்றனர்.

    செல்வந்தர் ஆவதையும், மற்றவரை வீழ்த்தி வாழ்வில் வெற்றி பெறுவதையுமே அல்லும் பகலும் சிந்தப்பதை விடுத்துத் தனிமனித ஒழுக்கம், தன்னலமற்ற தன்மை, எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ளும் துணிச்சல், நன்னெறிகளையும், ஆன்றோர் காட்டிய அற வழிகளையும் பின்பற்றி நடப்பது போன்றவை குறித்தும் நாம் சிந்திக்கத் தலைப்படுவோமேயானால் நேரிய வழியில் நடைபயின்று வாழ்வில் வெல்லலாம்.

    ‘தமிழர்களின் பொற்காலமாய்’த் திகழ்ந்த சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் மிகச் சிறந்த வாழ்க்கை வழிகாட்டிகளாய் இன்றும் விளங்கி நம் பண்பாட்டையும், நாகரிகத்தையும் செம்மைப்படுத்தப் பேருதவி புரிகின்றன என்றால் அது மிகையில்லை.

    சிறந்த சிந்தனைச் சிற்பிகளான சங்கப் புலவர்களும், சமண முனிவர்களும், தெய்வப்புலவர் திருவள்ளுவரும், ஏனைய சான்றோரும் காலத்தை வென்றுநிற்கும் மிக உயரிய சிந்தனைகளைத் தமிழ்மண்ணில் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இப்போது நாளிதழ்களிலும், வெகுஜனப் பத்திரிகைகளிலும் அதிகமாகப்  பேசப்படுகின்ற சுயமுன்னேற்றச் சிந்தனைகளும், மனவளக் கலைகளும் ஏற்கனவே நம் தமிழ்ச் சான்றோர்களால் விரிவாகச் சொல்லப்பட்டவையே.

    சிறந்த வாழ்வியல் சிந்தனைகளை, சித்தாந்தங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இன்றும் திகழ்வது அறத்தையும், மறத்தையும் தன்னிரு கண்களாகப் போற்றும் ’புறநானூறு’ஆகும். அதில் நிறைந்திருக்கும் அறச் சிந்தனைகளோ கடலளவு; அவற்றிலிருந்து ஓர் கையளவே பகிர்ந்துகொள்ள முனைகின்றது இக்கட்டுரை.

    வாழ்வைச் சிறப்பாக நடத்திச் செல்லவும், சமூகத்தில் மதிப்போடும், நல்ல பதவியோடும் வாழ்வதற்கும் அடிப்படைத் தேவையாக விளங்குவது கல்வியறிவே. அந்தக் கல்வியைக் கற்க வேண்டிய முறையையும், அழியாத கல்விச் செல்வத்தைப் பெற்றவன் சமூகத்தில் பெறுகின்ற சிறப்பையும் அற்புதமாக விளக்கியுள்ளது ஓர் புறப் பாடல். இப்பாடல் ’ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்’ என்னும் மன்னனால் இயற்றப்பட்டதாகும். சங்க நூல்களில் புலவர்களேயல்லாது புரவலர்களாகிய அரசர் பெருமக்களும் சிறந்த பல பாடல்களை இயற்றியுள்ளனர். அதற்குத் தக்கதோர் சான்றாக விளங்குகின்றது இப்பாடல்.

    உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்

    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

    பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்

    சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும்

    ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

    மூத்தோன் வருக வென்னாது அவருள்

    அறிவுடை யோனாறு  அரசுஞ் செல்லும்

    வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

    கீழ்ப்பா லொருவன் கற்பின்

    மேற்பா லொருவனும் அவன்கட் படுமே. ”  (புறம்: 183)

     

    ’ஆசிரியர்க்கு ஓர் துன்பம் ஏற்படும்போது ஓடிச் சென்று உதவியும்; அவருக்குத் தட்சிணையாகப் (அக்கால குருகுலக் கல்விமுறையில் குருதட்சிணை உண்டு; அதைத்தருவது மாணவர்தம் கடமை.) பொருள் கொடுத்தும்; எக்காரணம் கொண்டும் ஆசிரியர்பால் கோபம் கொள்ளாது கல்விச் செல்வத்தை மாணவர்கள் பெறவேண்டும். (ஒழுங்காகப் படி என்று சொன்னதற்காக ஓர் ஆசிரியையே சென்னையில் ஓர் மாணவன் சமீபத்தில் கொடூரமாகக் கொன்றது இங்கே நினைவுகூரத்தக்கது. நற்பண்புகளைப் பள்ளிகளும், பெற்றோரும் போதிக்கத் தவறுவதால் வரும் தீய விளைவே இது.)

    பெற்ற தாயே ஆனாலும் தன் பிள்ளைகளில் கல்வியில் சிறந்தவன் எவனோ அவனையே அவளும் போற்றுவாள். அதுமட்டுமா? அரசனேயானாலும் வயதில் மூத்தவனைவிட அறிவில் மூத்தவனின் சொற்களுக்கே அவனும் மதிப்பளிப்பான். சாதி வேறுபாட்டையும் களையும் ஆற்றல் பெற்றது கல்வி. நன்கு கற்றவன் குலத்தில் தாழ்ந்தவனாயிருப்பினும், அவனிடம் கல்வி பெறுவதற்காக மேற்குலத்தவனும் அவனைப் பணிவான்என்று இப்பாடல் கல்வியின் சிறப்பை அழகாய்ப் பட்டியலிடுகின்றது. இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் இன்றைக்கும்நூற்றுக்கு நூறுபொருந்துவதாகவேயிருப்பது எண்ணி மகிழத்தக்கது. ’கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றேஎன்று அவ்வை மூதாட்டியும் கல்வியின் அவசியத்தைக் கூறியுள்ளது இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

    சங்கப் புலவர்களில் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றவர் நக்கீரர் என்னும் புலவர். (‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற ‘திருவிளையாடல்’ புகழ் நக்கீரரே தான்.) இவர் ‘கணக்காயனார் மகனார் நக்கீரனார்’ என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றார்.  இவருடைய தந்தையார் ‘கணக்காயனாரும்’ சங்கப் பாடல்கள் சிலவற்றை இயற்றியுள்ளார். மகனாரும் தந்தையை விஞ்சும் புலமை பெற்றவராய்த் திகழ்ந்து கால வெள்ளத்தில் அழியாத அமரத்துவம் பெற்ற பாடல்களால் தமிழன்னைக்கு அணி சேர்த்துள்ளார். அனைவரும் அறிய வேண்டிய அவருடைய அருமையான பாடலொன்று சமத்துவச் சிந்தனைகளைச் சிறப்பாய் வெளிப்படுத்தியுள்ளது.

    ”உலகையே ஒரு குடை நிழலில் ஆளுகின்ற மன்னனாயினும் சரி; காட்டில் விலங்குகளின் பின்னே திரிகின்ற நகரத்து நாகரிகமறியாத மனிதனாயினும் சரி, உண்பது, உடுப்பது முதலியவை இருவருக்கும் பொதுவானவையே. மனித வாழ்வின் பிற தேவைகளும் அப்படியே. ஆகவே, மனிதர்களுக்குள் வேறுபாடு இல்லை, அது தேவையுமில்லை என்கிறார் இவர்; அத்தோடு நின்றாரில்லை. செல்வம் பெற்றவர்களே! அதனை வறியவர்களுக்கு ஈந்து மகிழுங்கள்! எல்லாச் செல்வத்தையும் நாமே துய்ப்போம் என்று எண்ணாதீர்கள்! அதனால் பலவற்றை (அறம், பொருள், இன்பம்) இழக்க நேரிடும்” என்று ஈதலின் அவசியத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

    தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
    வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
    நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
    கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
    உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
    பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
    அதனால், செல்வத்துப் பயனே தல்;
    துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.” (புறம்: 189)  என்பது அப்பாடல்.

     

    இதைத்தான் நம் வள்ளுவப் பேராசானும்,

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (குறள்: 322) என்று கூறுகிறார்.

    ‘Great minds think alike’ என்பது இதைத்தானோ?

    மற்றொரு கருத்தாழம் மிக்க புறநானூற்றுப் பாடல் நம் சிந்தையைக் கொள்ளை கொள்வதாய் அமைந்துள்ளது. அதனையும் சற்று கவனிப்போம் வாருங்கள்.

    ”மெத்தப் படித்த சான்றோர் பெருமக்களே! மீன்முள் போன்ற நரைமுடியையும் சற்றும் பயனில்லாத முதுமையையும் உடையோரே! யமன் மழுவென்னும் கூரிய ஆயுதத்தோடு உங்களைப் பிடித்துக்கொண்டு போக வரும் வேளையில் நீங்கள் (செய்த தீய செயல்களை எண்ணி) வருந்திப் பயனில்லை. எனவே உங்களால் யாருக்கும் நல்லது செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை; கெடுதல் செய்யாமலாவது இருக்க முயலுங்கள்! (இது ஏதோ சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பன்ச்’ டயலாக் போல இருக்கிறது இல்லையா?!) அதுதான் எல்லாரும் விரும்புவது; அதுமட்டுமல்ல…உங்களை நல்ல கதிக்குக் கொண்டு செல்லும் வழியும் அதுதான்.” என்கின்றது பொருளாழம் மிக்க அப்பாடல்.

    பல்சான் றீரே! பல்சான் றீரே!
    கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுள்,
    பயனில் மூப்பின், பல்சான் றீரே!
    கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
    பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
    நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
    அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
    எல்லாரும் உவப்பது; அன்றியும்,
    நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.” (புறம்: 195)

    இப்பாடலை இயற்றிய புலவரின் பெயர் ‘நரிவெரூஉத்தலையார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ’நரி அஞ்சும் தலையை உடையவர்’ என்பது இதன் பொருள். (அப்படியென்றால் ஒருவேளை…அவருடைய தலை நாய்த்தலையாக இருக்குமோ?! என்ற ஐயமும், வியப்பும் நமக்கு ஏற்படுகிறது.) பெயர் சற்று நகைச்சுவையாக இருந்தபோதிலும் அவர் தன் பாடலில் சான்றோர்களுக்குச் சொல்லும் அறிவுரை சாமானியர்க்கும் பொருந்துவதாகவே உள்ளது. (Though he is considered as dog-headed, his principles are dogmatic!!)

    புலவரின் அறிவுக் கூர்மைக்கும், பொதுநலச் சிந்தனைக்கும் சான்று பகர்கின்றது மேற்கண்ட பாடல்.

    அடுத்து நம்மை ஈர்ப்பது ‘பக்குடுக்கை நன்கணியார்’ என்னும் புலவர் பெருந்தகையின் பாடலொன்று. மனித வாழ்க்கை என்னும் நாடகத்தில் நீக்க இயலாத இரு பாத்திரங்கள் (characters) இன்பமும், துன்பமுமே அல்லவா! அதைத் தவிர்ப்பதோ, தள்ளிவைப்பதோ மனிதர்களால் ஆகக்கூடியதா?

    நடைமுறை வாழ்வில் நாம் காணுகின்ற துன்பத்தையும், இன்பத்தையும் அளிக்கக் கூடிய இரு நிகழ்வுகளை நம் கண்முன் ஒருங்கே அரங்கேற்றி, அச்சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளவேண்டிய வழிமுறைகளைக் கற்பிக்கும் ஓர் ’வாழ்க்கைக் கல்வி’ ஆசிரியராகவே இப்புலவர் நமக்குக் காட்சியளிக்கின்றார். நெஞ்சை நெகிழவைக்கும் அப்பாடல் நமக்கு ஓர் சிறந்த வாழ்வியல் பாடமே!

    ஓரி னெய்தல் கறங்க வோரில்

    ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்

    புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்

    பைத லுண்கண் பனிவார் புறைப்பப்

    படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்

    இன்னா தம்மவிவ் வுலகம்

    இனிய காண்கித னியல்புணர்ந் தோரே.” (புறம்: 194)

    ”இவ்வுலகம் இனிமையானதில்லை… ஒரு வீட்டில் சாப்பறை (சாவு மேளம்) ஒலிக்க, இன்னொரு வீட்டிலோ திருமண மேளம் முழங்குகின்றது. ஒருத்தி பூக்களை அணிந்துகொண்டு கணவனோடு மகிழ்ச்சியாக இருக்கின்றாள்; இன்னொருத்தி கணவனை இழந்து கண்ணீர் சொரிய நிற்கின்றாள். இத்தகைய முரண்பாடுகளோடு இவ்வுலகைப் படைத்த நான்முகன் (பிரம்மா) பண்பில்லாதவன் என அவனைச் சாடும் புலவர், மானிடர்களே! உலகத்தின் தன்மை இப்படிப்பட்டதுதான்; இதற்காக நீங்கள் வருந்துவதில் பயனில்லை. எதையும் தாங்கும் இதயத்தோடு வீட்டின்பத்தை (சொர்க்கம்) அடைவதற்குகந்த நல்லனவற்றைச் செய்து வாழுங்கள்” என்று அறிவுறுத்துகின்றார் பக்குடுக்கை நன்கணியார். பின்பற்றத்தக்க சிறந்த அறிவுரை தானே? துன்பம் கண்டு துவளாத மனநிலை மட்டும் நமக்கு வாய்க்குமேயானால் வாழ்வில் வெற்றி பெறுவது ஒன்றும் சிரமமான செயலில்லை அல்லவா!

     இதே பொருள்பட அமைந்த குறள் ஒன்றை நாம் இங்கே சிந்திப்பது பொருத்தமுடையதாக இருக்கும்.

    நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

    அல்லற் படுவ தெவன்.” (குறள்: 379)

    நல்லனவற்றைக் கண்டு மகிழ்கின்ற மனிதன், துன்பம் வரும் வேளையில் துவள்வது ஏன்? என வினவும் தெய்வப்புலவர் ’இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகவே பாவியுங்கள்’ என்றே வலியுறுத்துகின்றார் இக்குறளில்.

    ஒரே பாடலில் உலகப் புகழ் பெற்ற புறநானூற்றுப் புலவன் கணியன் பூங்குன்றனும், ஆற்றிலே செல்லுகின்ற தெப்பம் போன்றது இம்மானுட வாழ்வு என்பதை அறிஞர்களின் நூல்கள் வாயிலாய் உணர்ந்துகொண்டோம். ஆகவே பெரியோரை (அறிவிலோ, செல்வத்திலோ!) வியந்து போற்றவும் வேண்டாம்; சிறியோரை இகழவும் வேண்டாம் என அறிவுறுத்துகின்றார். எத்துணைப் பொருள் பொதிந்த பொன்மொழிகள்!!

    கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
    முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே;
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” (புறம்: 192)

    இதுபோன்று இன்னும் எத்தனையோ புறப் பாடல்கள் நம் மனத்தைப் பண்படுத்தி வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளவும், நல்லனவற்றையே செய்து நிலைத்த புகழையும், இன்பத்தையும் பெறவும் வலியுறுத்திச் செல்கின்றன. அற வழியில் பொருளீட்டி அதனைத் தாமும் துய்த்து, பிறர்க்கும் ஈந்து அதன் வாயிலாய்க் கிடைக்கும் இன்பத்தில் மகிழ்வதுதான் மானுட வாழ்விற்கு முறையானது என்பதனையே இப்புலவர் பெருமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இவர்கள் கூறிச் சென்ற நன்னெறிகளைப் பின்பற்றி நடந்தால் நம் வாழ்க்கைப் பயணம் வெற்றுப் பயணமாக இல்லாமல் பொருள் பொதிந்த வெற்றிப் பயணமாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

     

    Share
  • பங்கஜ வல்லித் தாயார்

     

    சு. ரவி

     

    வணக்கம், வாழியநலம்

    திருவெள்ளரைத் திருத்தலத்தின் பங்கஜ வல்லித் தாயார்

    கோட்டோவியமாக…

    பார்க்க, ரசிக்க…

     

    PankajaVallith Thaayaaar

    Share
  • வீணைக்கு ஒரு பூட்டு

    விசாலம்telegram-images

    அழகான வீணை . அதன் தந்திகள் ஒவ்வொன்றும் பேசும் . மகிழ்ச்சியா? ஆனந்தமாக ஒரு ஆனந்தபைரவியை அந்தத்தந்தியில் மீட்ட  கீழிருந்து மேல் வரை சென்று இதயத்தைத் தொடும்  வீரமா ? தந்தி மேல்  மோஹனம்  காந்தாரம் வரைச்சென்று வீரத்தை அள்ளி வழங்கும் .சோகமா ? வந்துவிடும் சுபபந்துவராளி , வராளி ஹிந்தோளம் போன்ற  ராகங்கள்..    முன்பெல்லாம்  யாராவது தேசத்தலைவர் மறைந்தால்  சட்டென்று கண்டுப்பிடிப்பது இந்த  ராகங்களில் தான் .  டிவி  முதன் முதலாக ஆரம்பித்த நேரம்   முக்கால்வாசி பேர் ரேடியோவையே பொழுது போக்காக கொண்டிருந்தனர் . அழகாக சினிமா பாடல்கள் பாட திடீரென்று அது நின்று போய் ஒரு  சோக ஒலி  வயலின்  மூலமாகவோ  வீணை சிதார் மூலமாகவோ திடீரென்று எழும்  “ஐயோ  ஏதோ ஒரு தலைவர்  காலமாகிவிட்டார் போலிருக்கு  ” என்று எல்லோரும் உன்னிப்பாக சோகத்துடன் செய்தி கேட்க தொடங்குவார்கள் .  சரி இந்த வீணைக்கு இப்போது வருவோம்

    நான் சொல்ல வந்த வீணை  “டெலிகிராம்” . 1844 வருடம் திரு சாம்வேல் மார்ஸ் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டு உலக முழுதும் தன் தந்தியால்  நவரச பாவங்களை வழங்கி  பலரையும் உய்வித்த அந்த வீணை.    தற்போது அதற்கு ஒரு பெரிய பூட்டு போடப்பட்டு  தந்தியும்    அறுந்து நிற்கிறது ,      முதல் தந்தி   மே 24 வாஷிங்டன்னிலிருந்து  பல்டிமோருக்கு அனுப்பப்பட்டது   இந்தக்கண்டுப்பிடிப்பு ஒரு வரப்பிரசாதம் தான்
    .
    இதோ வருகிறார்  எங்கள் தெருவுக்கு வரும்  தந்திக்காரர்   அவரது உடையே தனி அழகுதான், காக்கி கலரில் பேன்ட்டும், ஷர்ட்டும் சட்டைப்பையின் மேல் புறம் ஒரு வில்லையும்,  பார்க்கவே பொது ஜன தோழன் என்பது நிதரிசனமாக தெரியும்   சைக்களை மிதித்தபடி  நேரம் ,காலம்  பார்க்காமல்  வருகிறார் . காலை ,மதியம்  அல்லது முன்னிரவு சுமார் பத்துவரை   அவரைப்பார்க்க   மனம் பக்  பக்கு என்றாலும்   காலை நேரம்    அவர் தரும் தந்தியை வாங்கும் தைரியம் இருக்கும் .  ஆனால் இதுவே தூங்கும் போது நடு நிசியில்  அவர் வரும் சூழ்நிலை ஏற்பட்டால் !   எங்கும் அமைதி .  இருள்   முன் வாசல் கேட்டை அவர் தட்ட வேண்டும் அது பாதுக்காப்பிற்காக பூட்டுப்போடப்பட்டிருக்கும். பாவம் அவரும் “சார் சார் என்றோ ஐயா என்றோ  வாசலை வேகமாக தட்டுவார் .     தூரத்திலிருந்து ஒரு கருப்பு   நாய் தன் பட்டன் போன்ற கண்களை உருட்டி இவரைக்குறி வைக்கும் .அந்த நாய் வருவதற்குள்  இங்கு கதவு திறக்கபடவேண்டும்    “சுப்பு என்ன இப்படி தூங்கற  ! வாசல்ல யாரோ கா மணியாய் உடைக்கிறா?தந்தியோ என்னவோ ” சொல்லும்போதே அந்த அம்மாவுக்கு வயிறெல்லாம பிசையறது “வரேம்மா “என்றபடி சுப்பு  வந்து கதவைத் திறக்கிறார் . தந்திக்காரர் தந்தியை நீட்டுகிறார். மனம் பதைபதைக்க கை நடுக்கத்துடன்  அதை வாங்குகிறார் .தந்திக்காரரும்  அதைப்பிரிக்கும்  வரை அங்கேயே நிற்கிறார் , ராஜி டைட்   டெலிவரி  ” என்ற வரிகள்  இருக்க  நாலு பக்கமும்   கரிய வரிகள் வரையப்பட்டுள்ளன   இந்தச்சந்தர்ப்பத்தைப்பார்த்தால்   நாதநாமக்கிரியா  ராகம் விணைத்தந்தியில் மீட்ட அது அப்படியே சோகத்தைக்கவ்விக்கொண்டு  அந்த வீட்டினுள் நுழைந்து அக்கம்பக்கத்திலும் பரவுவதைப்போல்  தோன்றும்  இந்த உணர்வு இந்தக்கால  ஈமெலில் கிடைக்குமா ?
    அதே தந்திக்காரர் மறு நாள்  காலை அதே  தெருவில் நுழைகிறார் . மனம் மகிழ்ச்சியுடன்   “என்ன முரளி சௌக்கியமா? என்று கேட்டபடி  கதவைத்திறக்கிறார்.  முரளி வருகிறார் , ” என்ன தந்தியா ” மனதில் கொஞ்சம் கலக்கம் இருக்க கேட்கிறார்  ஆனால் தந்தியில் சிவப்பு கோடு நாலு பக்கம் இருக்க   “அப்பாடி” என்றபடி ஒரு மூச்சு   “.  வெட்டிங் பிக்ஸ்ட் ,  லெட்டர் பாலோஸ்    சன்  ஹரி ”   இப்போது தந்தி கொடுத்த ஒலி கல்யாணி ராகம்  அந்தத்தந்தியை வாங்கிக்கொண்ட உடனேயே  மகிழ்ச்சியின் உச்சிக்குப்போய் மேல் காந்தாரத்தைத் தொட்டு உள்ளத்தைச்சிலிர்க்க செய்கிறது     “ஸீவீட் எடுத்துக்கோங்கோ ” என்றபடி உள்ளே போகிறார் .  இந்த உணர்ச்சி    கணிணி மூலம் அனுப்பும் மடலுக்கு  ஏன் வருவதில்லை . ஒரு இடத்தில் உனர்ச்சியில்லாத இயந்திரம் வேலை செய்கிறது இன்னொரு இடத்தில் உணர்வுகளுடன் கூடிய மனிதன் நேரில் பங்கு பெறுகிறான்  இதே போல் பயம் .பீபத்ஸம்   வாத்ஸல்யம்  வீரம் ஹாஸ்யம்  என்று பல ரசங்கள்  இந்தத் தந்தி மூலம்   நான்   அனுபவித்திருக்கேன்  ஒரு தீபாவளியன்று காலை என் பாட்டி இறந்ததைத் தாங்கி வந்த தந்தி இன்றும் என் மனதில் மங்காது இடம் பெற்றிருக்கிறது
    இந்தத் தந்தியே பல நேரத்தில் பலருக்கு உதவி  புரியும்  மூன்று நாட்கள் ஜாலியாக ஊட்டி போக ஆசை ஆனால் பாழாய்ப்போன ஆபீஸில் ஒரு லீவு கூட தரமாட்டேங்கறாளே “என்று அங்கலாய்க்கும் அம்பிக்கு  “மதர் சீரியஸ் ‘ என்ற தந்தி வந்து அவனுக்கு இந்த வாய்ப்பைக்கொடுக்கும் . சில சமயம்  தாத்தா இறந்துபோவார்   ஆனால் சில ஆபீஸர் இதைபுரிந்துக்கொண்டு ” ஏன் ரகு போனவருடமும் உன் தாத்தா காலமானாரே” என்று கேட்டபடியே லீவைத்தருவார் .சில பெற்றோர்களே இந்த வழியைச்சொல்லிக்கொடுப்பார்கள் , “டேய் ரகு இந்தத்தடவை பெண்பார்க்க கண்டிப்பாய் வந்துடு .  கல்யாணம் பிக்ஸ்  செய்யணும்
    “அம்மா என் பாஸ் லீவே தரமாட்டாரே ”    ”   அதற்கென்ன  பாட்டி உடல் நிலை மோசம்  உடனே வா ” என்ற தந்தி அனுப்பறேன்  ” வடநாட்டில் ஆங்கிலத்தில்  தந்தி அனுப்ப சிலர் மிகவும் திணறுவார்கள்  அந்தத்தந்தியைப்படித்து சில விபரீதங்களும் ஏற்பட்டதுண்டு   ஒரு சர்தார் தன் அப்பா லண்டன் போனதைச்சொல்ல  தன் தாய்க்கு  தந்தி அனுப்பித்தான்     “டேடி  கான்   யெஸ்டெர்டெ  ஹீ ஈஸ் இன் த வெல்  daddy gone yesterday  He is in the well ”     தன் அப்பா லண்டன் போய்விட்டாரென்றும் அவர் நலம்    என்றும் அடிக்க நினைத்து இது போல் தகவல் அனுப்ப  அவனது தாய் அலறியடித்துக்கொண்டு உடனே கிளம்பி வர  ……….ஒரே அமர்க்களம் தான் போங்கள் .
    இதே போல் ஒரு மாணவன்  தான்  காலேஜில் சேர்ந்ததை  ” அட்மிடெட்  இன் மெடிகல் ஆஸ்பிடல் . மெடிசன்  கிவன்  ”  என்று தன் விவசாயி அப்பாவுக்கு  தந்தி அனுப்பிக்க  அவரும் தன் நண்பர்கள் மூலம் விஷயத்தைத் தவறாக புரிந்துகொண்டு   தன் மகன் மோசமான நிலையில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டான் என மனம் பதைபதைக்க  தில்லி வந்தார் .  பார்த்தால் அவரது மகன் மெடிகல் சீட் கிடைத்த  குஷியில்  பார்ட்டி கொடுத்துக்கொண்டிருந்தான்   இது எப்படி இருக்கு ? கோயம்பத்தூரில் திரு ரத்ன சபாபதி கடந்த பல வருடங்களாக இரவு பகல் பாராமல் இந்த வேலையைச்செய்து வந்தார் .அவர் ஆபீஸில் ஒரே நேரத்தில் அழுகையும் இருக்குமாம் சிரிப்பும் இருக்குமாம்  ஆங்கிலத்தில் பண்டில் ஆப் எமோஷன்ஸ் என்று சொல்வார்கள் . இதை உணர்ச்சிகளின் பிழம்புகள் என்று  சொல்லலாமா ?அவரது ஜோல்னாவில்  கொடுக்கவேண்டிய பல நிரம்பி இருக்கும் அதில் வாழ்த்துகள் . சோக செய்திகள் என்று பல கலந்து இருக்கும்  ஆனால் வருடங்கள் செல்ல கணினி வந்தப்பின் இது  அதிக அளவு குறைந்து ஜோல்னா பைக்கு அவசியமே இல்லாது ஆகிவிட்டது என்று மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டார்  தவிர  மிகச்சிலவு இல்லாமல்   மிக நம்பிக்கையுடன் அவசர செய்தியை அனுப்பும் சமாசாரமாகத்தான் இது இருந்தது என்பது உண்மை
    தந்தியில் டபிள் எக்ஸ் டெலிகிராம்  மரண செய்தியைக்கொண்டிருக்கும் அதற்கு எப்போதுமே முதன்மை இடம் அதற்கு க்யூ நிற்க வேண்டாம்  கடந்த 27 ஆண்டுகளாக சென்னையில் இந்த லைனில் வேலைச்செய்து வரும் திரு அண்ணாதுரை தினமும் சுமார் 15 கிமீ சைக்கிளை மிதித்து  100 தந்தி வரை கொடுத்துமுடிப்பார். இவருக்கு சூறாவளி . அடைமழை,  கடும் வெயில்  எல்லாம் பழக்கப்பட்டு போய்விட்டன .இரவில் நாய் துரத்துவது தான் கொஞ்சம் சங்கடமான விஷயம் என்கிறார் இவர் . வேலை கடுமையாக இருந்தாலும் ‘ஜாப் ஸாடிஸ்பேக்‌ஷன் எனக்கு மிகவும் கிடைத்தது மனம் நிறைந்திருந்தது ”  என்றார் .

    இந்திரங்களுடன் சேர்ந்து மனிதனே இயந்திரமாகி உணர்ச்சிகளில்லாத ரோபோவாகி வருகிறான் அண்ணன் தம்பி  பாசம் அக்கா தங்கை பாசம் எல்லாவற்றுக்கும் மேலாக பெற்ற தாய் தந்தையரிடமும் இயந்திரகதியில்  பேசி  தான் பேசாத நிலைக்கு ‘நோ டைம்’  என்று காரணமும்  காட்டி ,  அட கடவுளே   நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்   என நினைக்கத்தோன்றுகிறது    முதியோர் இல்லம்பெருகாமல் என்ன செய்யும் ?

    படத்துக்கு நன்றி

    http://frank-op.blogspot.in/2010/08/last-week-telegraph-started-bihar.html

    Share
  • விலங்குகள்

     

    தனுசு

    கள்ளிப்பாலுக்கு கொஞ்சம்
    கற்பழித்து கொஞ்சம்
    வரதட்சணையால்
    கரிக்கட்டையாகி கொஞ்சம்
    தலைபிரசவத்தில் கொஞ்சம்
    கணவன் கை விட்டு கொஞ்சம்
    காப்பார் யாருமின்றி கொஞ்சம்
    இப்படி
    கொஞ்சம் கொஞ்சமாய்
    பறிகொடுத்துவிட்டு
    காலியாகி போன பெண்ணுலகுக்கு
    ஒரு
    வேலிக்குள் இருந்தாலும்
    ஏனடா விலங்குகள்?

    அடுத்தவீட்டில்
    எதிர்வீட்டில்
    ஆலயத்தில்
    அலுவகத்தில்
    பேருந்தில்
    தெருவில்
    இருட்டில்
    பள்ளியில்
    கல்லூரியில்
    இங்கெல்லாம்
    கசக்கி மிதித்து
    அமிலம் வீசி
    இருப்பதையும் கிழித்து அழிக்க
    மனித விலங்குகள் இருப்பதாலா?

     

    Share