இமயம் – ஓர்துயரம்
சத்தியமணி
முகில் குளிர்ந்தால் வரும் மழை யின்பம்
முக்கி வெடித்தால் அது பெருந்துன்பம்
இமயம் நிமிர்ந்த கம்பீரம்
இன்று அதற்கும் ஓர்துயரம்
சுற்றுலா சென்ற சிலக்கூட்டம்
சுழற்றி போட்டது காட்டாறு
பக்தியில் சென்ற சிலக்கூட்டம்
பாதியிழந்தது கூட்டாறு
கேதாரம் தான் ஆதாரம்
வெள்ளத்தால் பெரும் சேதாரம்
பொங்கி பெருகிடும் கங்கையிலே
புண்ணியம் சேர்ப்பதும் இப்படியா
தங்கி தரிசனம் தரும் எழிலில்
பயங்கரம் தெரிவதும் ஒருமுறையா
மலைநாட்டவரின் மந்தாகினி
கொலையாட்டமும் கண்டதனால்
பயமும் வெறுமையும் உடன்தாக்க
பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டாய்
ஆறுதல் தந்தவர் வாழ்வினுக்கு
வல்லமையாளர்கள் வலுவமைப்போம்
அள்ளி தருபவர் வள்ளல்யென்போம்
உள்ளம்தந்திடின் வாழ்த்திடுவோம்
செய்திகளில் படிக்கையிலேயே தவிப்பைத் தந்த பேரழிவு. இதற்காகச் சொல்லத் தோனுவது ஒன்றே ஒன்று தான், பேரழிவுக்கு ஒரு பேரழிவு வராதா? என்பதுதான்.