விலங்குகள்
தனுசு
கள்ளிப்பாலுக்கு கொஞ்சம்
கற்பழித்து கொஞ்சம்
வரதட்சணையால்
கரிக்கட்டையாகி கொஞ்சம்
தலைபிரசவத்தில் கொஞ்சம்
கணவன் கை விட்டு கொஞ்சம்
காப்பார் யாருமின்றி கொஞ்சம்
இப்படி
கொஞ்சம் கொஞ்சமாய்
பறிகொடுத்துவிட்டு
காலியாகி போன பெண்ணுலகுக்கு
ஒரு
வேலிக்குள் இருந்தாலும்
ஏனடா விலங்குகள்?
அடுத்தவீட்டில்
எதிர்வீட்டில்
ஆலயத்தில்
அலுவகத்தில்
பேருந்தில்
தெருவில்
இருட்டில்
பள்ளியில்
கல்லூரியில்
இங்கெல்லாம்
கசக்கி மிதித்து
அமிலம் வீசி
இருப்பதையும் கிழித்து அழிக்க
மனித விலங்குகள் இருப்பதாலா?
நல்ல கேள்விகள் தனுசு.
விலங்கு, வேலி என பலனற்ற இரட்டை அடுக்குப் பாதுகாப்பில் பயனில்லை. வாழு… வாழ விடு… என்ற வகையில் அனைவரின் கண்ணோட்டமும் மாற வேண்டும்.
வேலிக்குள் இருந்தாலும் விலங்குகள் ஏன்?
பாராட்டுக்கள்.
அன்புடன்
….. தேமொழி
மிக அருமையான நியாயமான கேள்வி. ஒரு பெண், தன் மீது இயற்கை சுமத்தும் பிரத்யேகச் சுமைகளோடும், அவளுக்கென்றே விதிக்கப்பட்டு விட்ட குடும்பப் பொறுப்புகளோடும், ஒவ்வொரு அடி முன்னேறும் போதும், சமூகம் அவள் மீது வீசும் ஏளனப் பார்வைகள், கேலி கிண்டல்களோடும் தான் உயருகிறாள். இருந்தும்….மனித விலங்குகளிடமிருந்து தப்பித்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க, எந்தப் பொழுது விடியுமோ?
தேமொழி அவர்களின் கருத்துரையும் அருமை. குறிப்பாக,
/////வேலிக்குள் இருந்தாலும் விலங்குகள் ஏன்?////
வாழ்த்துகள், பாராட்டுகள் சகோதரரே!!!
கவிதையை ரசித்துப் பாராட்டிய மதிப்பிற்குரிய தேமொழி அவர்களுக்கும், பார்வதி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.
விலங்காய் மனிதன் மாட்டிடும்
விலங்குகள்..
கவிதை நன்று…!
-செண்பக ஜெகதீசன்…