அப்பானை வெண்ணை அருந்தி அதைமறைக்க,
நிப்போனே நாகசாயி(கி) நந்தலாலா! , -ஜப்பானிய,
வேடமிட்டு நின்றாலும் வாசம் பிடித்தபடி,
மாடுவந்து முட்டும் முகம் ….கிரேசி மோகன்….
Month: November 2015
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
இந்த வார வல்லமையாளர்!
நவம்பர் 2, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு பேராசிரியர் முனைவர் டி. நாகராஜன் அவர்கள்
வல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், தமிழில் எழுத்துரை – பேச்சுரை மாற்றிக்கான மென்பொருளை (Tamil text to speech software) உருவாக்கிய, எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியின் (SSN College of Engineering) தொலைத்தொடர்பு தொழில்நுட்பத் துறையின்(Department of Information Technology) தலைவரும், பேராசிரியருமான முனைவர் டி. நாகராஜன் அவர்கள்.
முனைவர் டி. நாகராஜனும், அவருடைய தலைமையில் அவரது குழுவினரும் உருவாக்கியுள்ள “தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை” அவர் தமிழ் இணையக் கழகத்தில் இயக்கிக் காட்டினார். இந்த மென்பொருளின் செயல்பாட்டை பார்வையிட்ட, தமிழக அரசின் 2013 ஆண்டிற்கான கணித்தமிழ் விருதாளரும், மொழியியல் பேராசிரியருமான முனைவர் ந. தெய்வ சுந்தரம் அவர்கள், உண்மையில் மிக நன்றாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாகயிருந்தது. ஏறக்குறைய 100% சரியாக இயங்குகிறது … மேலும் சிறிது உழைத்தால், மொழியியல் ஆய்வாளர்களுடன் இணைந்து செயல்பட்டால், உச்சரிப்பில் இயல்புத் தன்மையை மேலும் மேம்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
முனைவர் டி. நாகராஜன் அவர்களின் தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை இயக்கி அதன் செயல்பாட்டை அறிய விரும்புபவர்கள் – http://www.ssn.edu.in/Speech_Lab/tts_demo.html – என்ற தளத்திற்குச் சென்று பயன்பெறலாம். கீழுள்ள படத்தில் காண்பித்துள்ளது போன்று 1. தங்களுக்குத் தேவையான தமிழ் மொழி தகவலைப் பதிவிட்டு, 2. மென்பொருளை இயக்கி (விருப்பமான குரலை – ஆண் குரலையோ, பெண் குரலையோ தேர்வு செய்யலாம்) 3. மென்பொருள் தமிழைப் படிப்பதைக் கேட்கலாம், 4. தேவையானால் அதனை ஒலிக்கோப்பாக தங்கள் கணினியில் சேமித்தும் பயன்பெறலாம்.
முனைவர் டி. நாகராஜன் அவர்கள் சென்னை ஐ.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 2004 ஆம் ஆண்டு கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் பட்ட ஆய்வில் பேச்சொலி மொழியை அடையாளம் காணும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பிறகு தனியார் நிறுவனம் ஒன்றின் ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்றுப் பணியாற்றிய பிறகு, கனடாவின் தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் முதுமுனைவராக (postdoctoral fellow at The National Institute of Scientific Research – INRS, Montreal, Canada) இரண்டு ஆண்டுகள் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அந்த ஆய்வில் தொடர் பேச்சொலியை அடையாளம் காணுவதையும், ஒலியை வகைப்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கண்டறியும் ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இரண்டாண்டு முதுமுனைவர் ஆய்விற்குப் பிறகு, சென்னை எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியின் பேராசிரியராக பணியில் இணைந்து இன்றுவரை ஆய்விலும், கற்பித்தலிலும், ஆய்வு மாணவர்களை நெறிப்படுத்துவதிலும் பங்கு பெற்று வருகிறார். கருத்தரங்கங்களிலும், ஆய்விதழ்களிலும் தனது ஆய்வுகளைப்பற்றி இதுவரை சுமார் 80 ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார். மேலும், இவர் தற்பொழுது ஈடுபட்டிருக்கும் ஆய்வுகளையும், இவரது ஆய்வுப்பணிகளைப் பற்றி விரிவாக இத்தளத்தில் – http://www.ssn.edu.in/?page_id=1483 – அறிந்து கொள்ளலாம்.
கணினித் தமிழ் வளர்ச்சியில் முக்கியப் பங்கு பெரும் தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை உருவாக்கியுள்ளமைக்காக முனைவர் டி. நாகராஜன் அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளராக அவரைப் பாராட்டி மகிழ்கிறோம். அவரது ஆய்வுகள் மேலும் வெற்றி பெற வல்லமை இதழின் வாழ்த்துகள்
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
Contact Info:
Dr. T. Nagarajan,
Professor & Head
Department of Information Technology
SSN College of Engineering
Rajiv Gandhi Salai (Old Mahabalipuram Road)
Kalavakkam- 603 110 (off. Chennai)Phone: 044 27469700 [HOD Extn: 217]
Fax: 044 27469772
Email: nagarajant@ssn.edu.in -
தமிழ் மொழியின் சொல்வளம்!
பவள சங்கரி
ஒரு பொருளின் தன்மைக்கேற்ப அப்பொருளின் பெயரைக் குறிக்க பல சொற்கள் பயன்படுத்துவது நம் மொழியின் தனிச்சிறப்பு. இது வேறு எந்த மொழியிலும் காணமுடியுமா என்பது ஐயமே… உதாரணமாக,
இலை என்று எடுத்துக்கொண்டோமானால் அதற்கு எத்தனை வகைப் பெயர்கள் பாருங்கள்…
நெற்பயிர் இலைகள் – தாள்
கருப்பஞ்செடி இலைகள் – தோகை
தென்னை, பனை மர இலைகள் – ஓலை
தாழை இலைகள் – மடல்
காய்ந்த இலை – சருகு
சில வகை இலைகளை – தழை என்கிறோம்..அதேபோல் செடியில் தோன்றும்போது பூ – அரும்பு என்றும், மலர் மலர்ந்து வருங்கால் அது ‘போது’ என்றும், விரிந்த நிலையில் மலர் என்றும் அழைக்கிறோம்.
மலராத பூவையோ, மொட்டு, அரும்பு, மொக்கு, முகை என்று பலவாறு அழைக்கிறோம்…
பூவிலிருந்து காய் வரும்போது அதை, ‘பிஞ்சு’ என்றும், முதிர்ந்த பிஞ்சை காய் என்றும், பழுக்கும் பருவத்தில் செங்காய் என்றும், முற்றிலும் பழுத்த பின்பு பழம், கனி என்றும் கூறுகிறோம். ‘பிஞ்சு’ வகைகளில், ’குரும்பை’, ‘வடு’, ‘மூசு’, ‘கச்சல்’ என்று செடிகளின் வகைக்கேற்ப மாறுபடும்.. எடுத்துக்காட்டு:
வாழைப்பிஞ்சு – கச்சல்
மாங்காய் பிஞ்சு – வடு
தேங்காய் பிஞ்சு – குரும்பை
இளங்காய் – மூசு -
கற்றல் – ஒரு ஆற்றல் (1)
க. பாலசுப்பிரமணியன்
கற்றல் – சில பார்வைகள்
“கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு” ..-
இது அவ்வையின் அறிவுரை. “அவங்களுக்கென்ன சொல்லிட்டுப் போயிட்டாங்க.. இது என்ன முடியற காரியமா?” அலுத்துக்கொள்ளும் பல நெஞ்சங்கள்.
“ உனக்கு படிக்க டியூஷன் செலவு பண்ணியே நான் போண்டியாயிட்டேன். நீ பேசாமே படிக்கிறதை விட்டுவிட்டு மாடு மேய்க்க போகலாம்” என அலுத்துகொள்ளும் தந்தை..
“அப்போ மாடு மேய்க்கிறதுக்கு மூளை வேண்டாமா?” என இடக்காகக் கேட்கும் மகன்.
“என் பையன் உங்களை மாதிரித்தானே இருப்பான். சட்டியிலே இருப்பது தானே அகப்பையில் வரும் ” எனக் கேலி செய்யும் தாய்..
“உனக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை விட இந்த மரத்திலே போய் முட்டிக்கலாம்” என செய்யப்போகாத ஒரு செயலை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு ஆசிரியர்.
இவர்களுக்கு நடுவே ஒரு விந்தைப் பொருளாக மாணவன். ,,
“நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். மண்டையிலே ஏற மாட்டேங்கறது சார் … இதையெல்லாம் எவன்தான் கண்டுபிடித்தானோ, அவனுக்கு மட்டும் இந்த மூளை எப்படி வேலை பார்த்தது?.” சோர்வுடன் கேட்கும் மாணவர்கள்.
இந்த மூளை தான் என்ன?. இறைவன் கொடுத்த வரமா? அது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறதா? அதற்க்கும் சாதி மத பேத பாவங்கள் உண்டா? பணக்காரனின் மூளையும் ஏழையின் மூளையும் வித்தியாசப்பட்டதா? ஆண்களின் மூளையும் பெண்களின் மூளையும் ஒரே மாதிரித்தான் உள்ளதா? அவர்களின் சிந்தனையின் வடிவங்களில் மாற்றங்கள் இருக்கின்றதா?
நன்றாகப் படித்து விட்டு தேர்வில் உட்காரும் மாணவனுக்கு அங்கு சென்ற உடனேயே எல்லாம் ஏன் மறந்து போகின்றது? நம்முடைய கற்றல் என்ற செயல் எப்போது ஆரம்பிக்கின்றது?
கேள்விகள் ஆயிரம்…!!
இவைகளுக்கெல்லாம் பதில் எங்கே இருக்கின்றது? இவைகளைப் பற்றி என்ன ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன? இந்தத் தொடரின் நோக்கம் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி அறிந்து கொள்வதுதான்?
கற்றல் ஒரு ஆற்றல்….. இது எப்போது தொடங்குதின்றது?
ஒரு முறை ஒரு தாய் ஓர் ஜென் துறவியைக் காணச் செல்கின்றார். ” குருவே.. என் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் எப்போது தொடங்கலாம்? ” என்று வினவுகின்றார்.
அந்த குரு அவளிடம் கேட்கிறார் ” உன் குழந்தைக்கு என்ன வயதாகின்றது?” என்று.
:” குருவே. என் குழந்தை பிறந்து ஐந்து மாதங்களே ஆகின்றன.”
“அப்படியா? ஏற்கனவே நீ பதினான்கு மாதங்கள் கால தாமதம் செய்து விட்டாயே.” என பதிலளிக்கிறார்.
அப்படியென்றால் ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறதா? இதைப் பற்றி விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்ன சொல்லுகின்றன?
நம்முடைய புராணங்களில் அபிமன்யுவைப் பற்றியும் பிரகலாதனைப் பற்றியும் சொல்லப்பட்டது கட்டுக் கதையா? அதில் சிறிதளவேனும் உண்மை இருக்குமா, என்றெல்லாம் கேள்விகள் எழும்புகின்றன.
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் தன் இளம் பிராயத்திலே சொன்னாராம் ” நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் . ஆனால் கற்பிக்கப் படுவதை வெறுக்கிறேன்” என்று.
நம்முடைய மாணவர்களில் எத்தனை பேர் சர்ச்சில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கின்றார்கள்? அவர்களால் சர்ச்சில் போல வாழ்க்கையில் முன்னேற முடியுமா? அவர்கள் எப்படி கற்றிக்கொள்கின்றனர்?
கல்வி என்பது ஒரு மாணவனை ஏதாவது ஒரு தெருவினில் வெற்றிபெறச் செய்வதா? அறிவு என்பது வெறும் புத்தக அறிவா? ஒரு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்க்கு நிகரான அறிவு நிச்சயம் இருக்கின்றதா? பள்ளிக்குச்செல்லாத நம் முன்னோர்கள் எவ்வாறு அறிவிலும் திறனிலும் மேம்பட்டு இருந்தனர்?
இப்படி பல கேள்விகள் நம் மனிதினில் அடிக்கடி தோன்றுகின்றன. இவற்றிக்கு அறிவு பூர்வமாகவும் அறிவியல் மூலமாகவும் என்ன பதில்கள் கிடைக்கின்றன ?
தொடரின் அடுத்த பகுதியில் பார்ப்போம்.!
-
படக்கவிதைப் போட்டி (37)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

அமுதா ஹரிஹரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.11.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
-
“அன்புள்ள அம்மா” (5)
ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சரிதம்
மீ.விசுவநாதன்
( பகுதி: ஐந்து )காயல் நிறைத்த இடம் !
நீலக் கண்ணனின்
சாயல் உறைந்த இடம்!
நீலக் கடலலை
ஒயல் இலாத இடம் !
மீனவ மக்களின்
மான மிகுந்த இடம் !
வானவ தேவதையாய்
ஒரு குழந்தை
வந்து வளர்ந்த இடம்
இந்தப்
“பறையகடவு” !கரையைக் கடக்கும்
புயலும் கூடக்
காதல் கொள்ளப்
பறையும் கடவு !வளமும் ஏழ்மையும்
பாசமாய்
தினமும் வாழ்கிற
கரையிலா அன்பில்
கரைகிற உறவு
கடலின் மீன்களை
படகில் சென்று
பிடித்து வந்து
குவிக்கிற துறையிது !
படித்து வாழாமல்
குடித்து மாள்வோரின்
கறையினைக் கிள்ளவும்
தவிக்கிற மனமெலாம்
தாம்பூலம் கொள்ளவும்
தாயே பராசக்தி
தான்கோலம் மாற்றி
தவம் செய்த துறையிது !
பக்தி வானத்தின்
மூன்றாம் பிறையிது !
“வியாச” வம்சத்து
வித்தின் முறையிது !
பிரபஞ்சம் முழுதிற்கும்
பொதுவான மறையிது!
என்னும்
பறையகடவு
என்றும்
அமிர்தபுரியாய்
இருக்கக்கடவென
இறைவன் கட்டளை
இட்ட பொழுதே
சுதாமணி பூமியைத்
தொட்ட பொழுதானது !
ஏழ்மையும் துன்பமும்
விட்ட பொழுதானது !துன்பத்திலும் இன்பம்
குப்பையைக் கூட்டுவாள்
மனத்தின்
குப்பையைச் சேர்த்துக் கொட்டுவாள் !
வீடும், கொல்லையும்,
மாட்டுத் தொழுவமும்
துப்புரவாகத்
தன்னுடல் வேர்க்கத் துடைப்பாள்!
எப்போதும் வேலையை
அப்புறம் செய்யலாம் என்று
தள்ளிப் போடாமல்
பள்ளிப் பாடம்போல்
ஆனந்தமாகப் பாடிக்கொண்டே
அப்பொழுதே செய்து முடிப்பாள் !
ஆனாலும் தன் அம்மா
தமயந்தியின்
கடும் செல்லுக்குத் துடிப்பாள் !
மறுநொடியே தான்
படும் அவதி மறந்து
அம்மாவின் செயலை மதிப்பாள்!
அவளையே தன் தவறைத் திருத்தும்
குருவாகத் துதிப்பாள்
சிறுமி சுதாமணி தன்
தாய்மீது கொண்ட மதிப்பால் !அச்சம் இல்லாத அகம்
மகளை பயமுறுத்த
அம்மா
அந்த ஊரில்
ஆபீசரம்மாவை அழைத்தாள்!
ஆபீசரம்மாவும் முகமூடி
போட்டுக் கொண்டு
சுதாமணியை முறைத்தாள் !
சதாபணி செய்யும்
சுதாவோ
அச்சம் துளியும் இன்றி
உச்சத்தில் ஓங்கிச் சிரித்தாள் !
ஆபீசரம்மதான்
அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள் !
இப்படிதான்
அச்சமின்றி சுதாவும்
ஆண்டவன்
ஆடவன் கண்ணனின் நினைவையே
தீய ஆசைகளின்றி
உள்ளத்தில் படமாய்ப் பிடித்தாள் !
அவனின் படத்தைத்தன்
மார்பிலே இடமாக வைத்தாள் !
ஏழை மக்களின்
சார்பிலே மலராகத் தைத்தாள்
மாதவன் நெஞ்சிலே !
அதனால்
பறையகடவு தந்த
ஆதவன் ஆனாள் பிஞ்சிலே !…….(நம்மோடு இன்னும் தொடர்வாள் அம்மா)
-
உன்னையறிந்தால் ……… (29)
நிர்மலா ராகவன்
ஒழுக்கத்தைக் கற்பிப்பது
கேள்வி: குழந்தைகளுக்கு எப்படி ஒழுக்கத்தைப் புகட்டுவது?
விளக்கம்: வீட்டில் பெரியவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து குழந்தைகள் தாமே ஒழுக்கத்தைக் கற்கிறார்கள். அதை விட்டுவிட்டு, ஓயாத போதனைகளாலும், வன்முறையாலும் இது முடியாத காரியம்.
கதை 1:
ஒரு நீர்வீழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு சீன மாது தன் இரண்டு வயதுப் பெண்குழந்தையிடம், `எவ்வளவு அழகா இருக்கு, பாத்தியா? மேலேயிருந்து எவ்வளவு வேகமா கொட்டுது!’ என்று காட்டிக்கொண்டிருந்தாள்.
அத்துடன் விட்டிருக்கலாம். `நீ விஷமம் பண்ணினா, அதிலே தூக்கிப் போட்டுடுவேன்!’
முதலில் மகிழ்ந்து சிரித்த குழந்தை தாயின் மிரட்டலைக் கேட்டு அச்சத்துடன் தலையைப் பின்னால் இழுத்துக்கொண்டாள்.
இது கண்டிப்பாக ஒரு குழந்தையை ஒழுக்கப்படுத்தும் வழியல்ல. பயமுறுத்தல் நாளடைவில் ஒரு குழந்தையை எதற்கும், யாரிடமும் பயப்படச் செய்யுமே தவிர, நாம் விரும்பும் நல்ல குணங்களை வளர்க்காது.
சில ஆசிரியர்கள் `என் கடமையை எவ்வளவு ஒழுங்காகச் செய்கிறேன், பார்!’ என்பதுபோல், காரணமின்றியே தண்டிப்பார்கள்.
போதிப்பது என்ன? ஒழுக்கமா, ஒழுங்கீனமா?
கதை 2: ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் எல்லாரும் அமைதியாக உட்கார்ந்து, சொற்பொழிவொன்றைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஓர் ஆசிரியை கையில் பிரம்புடன், ஒவ்வொரு மாணவனின் பின்புறத்திலும் ஓங்கி அடித்தபடி நகர்ந்துகொண்டிருந்தாள். அதைப் பார்த்த தாய் ஒருவர், `அவர்கள் மௌனமாகத்தானே இருக்கிறார்கள்! எதற்கு அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, `அடித்தால்தான் இப்போது பேசவே கூடாது என்று புரியும் அவர்களுக்கு!’ என்றாளாம்.
குழந்தைகளின் மன வளர்ச்சி, மனோதத்துவம் இதைப்பற்றி எல்லாம் எவருக்கும் சரியாகத் தெரியாத காலத்தில், ஓயாது அடித்தாலும், பழித்தாலும் ஒரு சிறுவன் ஒழுங்காகிவிடுவான் என்று நம்பினார்கள். அந்த வழியில் வளர்க்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றளவும் அதே வழியைப் பின்பற்றுகிறார்கள். `நான் அம்முறையால்தான் உருப்படியாக வளர்ந்தேன்!’ என்பார்கள். இவர்கள் மனோபலம் மிகுந்தவர்கள் என்பதில்லை. தங்கள் பலகீனத்தை அதிகாரத்தால் மறைத்துக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். இதனால், வீட்டில் அடி வாங்காது, நல்ல விதமாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்குத் தங்கள் ஆற்றலிலேயே ஐயம் எழுந்துவிடாதா!அதிகார வர்க்கத்தின்மேலேயே வெறுப்பை வளர்த்துக் கொள்பவர்களும் உண்டு.
கதை 3: என் பதினான்கு வயது மாணவன், அடுனன் (ADNAN), கேட்டான்: `செய்வது தப்பு என்று தெரியும். இருந்தாலும், அதைச் சுட்டிக்காட்டினால், ஏன் சில ஆசிரியர்கள் ஆத்திரப்படுகிறார்கள்?’
நான் மெல்லச் சிரித்தேன். `அவர்களை POWER CRAZY (அதிகார வெறி கொண்டவர்கள்) என்கிறோம்!’
தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டான் அடுனன். `அப்படிப்பட்ட ஆசிரியர்கள் நம் பள்ளியில் நிறைய பேர் இருக்கிறார்கள்!’ என்றான், வயதுக்கு மீறிய அறிவுடன். பிறகு, `நான் இப்படிப்பட்ட ஒருவருடைய பாடத்தைச் செய்யாமலிருந்தால் என்ன ஆகும்? காரணமில்லாமல் என்னைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்!’
தனக்குப் பிடிக்காத ஆசிரியரைப் பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரை மீறத் துணிகிறான்!
`நீ படிப்பதும், தேர்ச்சி பெறுவதும் உனக்காகத்தான்!’ என்று புத்தி சொல்லிப்பார்த்தேன். அதைக் காதில்வாங்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.
இறுதிப் பரீட்சைக்கு சேர்க்கப்படும் வீட்டுப் பாடத்தைச் செய்யாமல் விட்டுவிட்டான் அடுனன் என்று அந்த ஆசிரியர் பொது அறையில் அலறிக் கொண்டிருந்தபோதுதான் நடந்ததை அறிந்தேன்.
`ஒழுக்கம்’ என்ற பெயரால் அந்த ஆசிரியர் செய்த அனர்த்தத்தால் விளைந்த வினை! ஒரு வேளை, இந்தப் பையன் தன்னைவிட முன்னுக்கு வந்துவிடுவானோ என்ற பொறாமையில் விளைந்த அச்சமோ? (அந்த ஆசிரியர் பல முறை பதவிக்குறைப்பு கண்டவர்).
பெற்றோரால் மிரட்டி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு அவர்கள் எப்போது, எதற்குத் தண்டிப்பார்கள் என்றுகூடப் புரியாது என்பதுதான் சோகம். இம்மாதிரியான வளர்ப்பு முறையால் கற்பனைத்திறன் அறவே வளராது என்பது ஒரு பக்கம் இருக்க, குழப்பத்தில், பயத்தில், சுயமுயற்சியுடன் புதிதான எது ஒன்றைச் செய்யும் துணிவையும் இழந்துவிடுகிறார்கள். இவர்கள் ஆட்டுமந்தையைப்போல், தம்மைவிடத் துணிச்சலானவர்களைப் பின்பற்றுவார்கள். மேலதிகாரிகள் சொல்வதை இம்மி பிசகாமல் கடைப்பிடிப்பார்கள். அதனால், தம்மீதே கசப்பையும், வெறுப்பையும் வளர்த்துக்கொள்வார்கள்.
ஒரு பையன்(16) என்னிடம் கூறினான், `எங்கப்பா தினமும் திட்டுவார், அடிப்பார். எதுக்கு அடிக்கிறாருன்னே புரியாது!’
இந்தமாதிரி சந்தர்ப்பங்களில், கணவரை எதிர்த்தால், மகனுக்கு அப்பாமேல் மரியாதை போய்விடும் என்று சாக்குச்சொல்லி, தாய் கண்டும் காணாததுபோல் நடக்கலாமா? மகனைத் தனியாக அழைத்துப்போய், `ஒன்மேல ஒரு தப்பும் இல்லே. அப்பாவுக்கு இன்னிக்கு ஆபீசில ரொம்ப வேலை! இல்லை, மேலதிகாரி நாலுபேர் முன்னால் அப்பாவைக் கண்டபடி திட்டியிருப்பார். அந்த கோபத்தை ஒன்மேல காட்டுகிறார்!’ என்று விளக்கினால், பையன் தெளிவடைவான்.
இம்மாதிரியான பெற்றோர் இருந்தால், சிறுவர்கள் பள்ளி நண்பர்களிடம் தம் இயலாமையைக்கூறி ஆறுதல் தேடப் பார்ப்பார்கள். ஆனால், பிரச்னை என்னவோ தீராது.
`இந்த அப்பாக்களே இப்படித்தான்!’ என்று நண்பர்கள் கசப்புடன் முடிவு செய்து, தங்களின் எண்ணிக்கையால் பலம் பெறுவதாக எண்ணுகிறார்கள். `வேடிக்கை’என்று நினைத்து, வயதில் மூத்தவர்களை எதிர்க்கிறார்கள். தண்டனை பெற்றால், நடத்தை இன்னும் மோசமாகிறது. படிப்பில் அக்கறை அறவே போய்விடுகிறது. ஒன்றாகச் சேர்ந்து தீய பழக்கங்களில் ஈடுபடுவதும் இப்படித்தான்.
கதை 4: மன் லீ என்ற என் சீன மாணவி(17) வகுப்பில் கீழ்ப்படியாதவளாக இருந்தாள். காரணத்தை அறிய நான் அவளைத் தனியே அழைத்துப் பேசினேன்.
`நான் கொஞ்ச நாள் போதைப்பழக்கம் உள்ளவளாக இருந்தேன். இப்போது விட்டுவிட்டேன். ஆனால், அதையே சொல்லிச் சொல்லி, என் பெற்றோர் என்னைத் துன்புறுத்துகிறார்கள்!’ என்று ஒத்துக்கொண்டாள்.
உளவியல்படி, ஏழ்மை, பெற்றோருக்கிடையே ஓயாத சண்டை, ஒற்றுமையற்ற பெரிய குடும்பம், வன்முறையில் பிள்ளைகளைத் தண்டித்தல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால்கூட மனதின் ஆரோக்கியம் குறைய வாய்ப்பிருக்கிறது. வீட்டில் பெரியவர்கள் சண்டை போட்டுக்கொண்டே இருந்துவிட்டு, பிள்ளைகள் மட்டும் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், நடக்கிற காரியமா?
பெற்றோரின் சரியான கவனிப்போ, பாராட்டோ இல்லாததால்தான் மன் லீ தீய பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறாள்! அது புரிந்து, மதிப்பெண்களுடன் அவள் பெற்றோருக்கு ஒரு குறிப்பு எழுதி அனுப்பினேன்: ` மன் லீ நல்ல பெண். இப்போது இருக்கிறபடியே ஏற்றுக்கொள்ளுங்கள்’.
வீட்டில் நிலவரம் சுமுகமாக ஆகியிருக்க வேண்டும். அதன்பின், அவள் ஒரேயடியாகச் சிரித்தபடி, எனக்கு உதவ எப்போதும் ஓடி வந்தாள்!
மரியாதை குறையாது, பெற்றோர் அல்லது ஆசிரியரின் கருத்தை வெட்டி பேச அனுமதித்தால்தானே, இளம் வயதினர் மகிழ்ச்சியுடன் தம் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள்?
மாறாக, அதிகாரம் செலுத்தி, பயத்தால் பணியவைக்க நினைத்துவிட்டு, `இந்தக் காலத்தில் எல்லா இளைஞர்களும் மோசம்!’ என்று சலித்துக்கொள்வதால் யாருக்கு என்ன லாபம்?
தொடருவோம்
-
இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 5
-மீனாட்சி பாலகணேஷ்
கண்ட கதை வேண்டா, நீலகண்டன் கதைசொல்!
சிறுகுழந்தைகளைத் தாலாட்டுப்பாடி உறங்கவைப்பது தாய்மார்களுக்கு ஒரு இனிய அனுபவம். தால் என்றால் நாக்கு எனப்பொருள். நாவை அசைத்து, ‘ருலுலுலு வாயீ,’ என அவள் எழுப்பும் ஓசை குழந்தைக்கு என்ன மாயமோ மந்திரமோ, அது அந்தப் பொருளற்ற ஒலியினைக் கேட்டவாறே கண்ணயர்ந்து விடுகின்றது.
குழந்தை உளவியல் வாயிலாகக் காணப்புகுந்தால், இவ்வொலி, அச்சிறு மகவிற்குத் தாயின் அருகாமையைக் காட்டி உறுதி செய்கின்றது. கர்ப்பவாசத்தை விட்டு இவ்வுலகிற்கு வந்து சில மாதங்களே ஆன மகவு, தாயின் அரவணைப்பை அல்லும் பகலும் எதிர்நோக்குகின்றது. சில குழந்தைகள் தாயின் மடியை விட்டு இறங்கினாலேயே அமைதியின்றி அழவாரம்பிக்கும். அதனால் தான் கிராமப்புறங்களில், தாய் தன்னை அணைத்திருப்பதைப் போலவே குழந்தை உணரும் என்பதாலேயோ என்னவோ தாயின் பழைய புடைவையால், ஏணை எனும் தூளியைக் கட்டி அதில் மதலையைக் கண்வளர்த்துவார்கள்.
அதுபோன்றே தாயின் குரல் கேட்கும்போது, தன்னருகே தான் அவளிருக்கிறாள் எனும் பாதுகாப்பு உணர்வில் குழந்தை அமைதி கொள்கின்றது. இதற்காகவே தாய்மார்கள் தாம் குழந்தையின் அருகாமையில் இருக்கிறோம் என உணர்த்தும் வண்ணம் பலவிதமான பாடல்களை இயற்றிப் பாட ஆரம்பித்தனர். தாமாக இன்னும் ஓடியாட இயலாத சின்னஞ்சிறு குழந்தைகள் தாயின் குரல் கேட்டு அவளுடைய அரவணைப்பை உணர்கின்றனர்.
தாலாட்டுப் பாடல்கள் என்பன உலகின் அனைத்து நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒரு தனி இலக்கியமாகவே வளர்ந்தது எனலாம். குழந்தை பசியால் அழும்போதில் தாய்ப்பால் இயல்பாகவே அன்னையிடம் சுரப்பதைப் போல, குழந்தையை உறங்கவைக்கவும் தாய்மையின் வெளிப்பாடாகவே தாலாட்டுப் பாடல்கள் உருப்பெற்றன.
தமிழில் தாலாட்டுப் பாடல்கள் என இருப்பினும், தமிழுக்கே உரிய தனிப்பெருமை வாய்ந்த பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் தாயர் தாலாட்டுப் பாடி மகவை உறங்கவைக்கும் தாலப்பருவம் மூன்றாவது பருவமாக அமைக்கப்பட்டு பத்துப்பாடல்களால் அழகுறப் பாடப்படுகிறது.
இதில் தாய் குழந்தையை உறங்கும்படி வேண்டுவாள், அக்குழந்தை அவளுக்கு எத்துணை அருமை என விவரிப்பாள், அக்குழந்தையின் விளையாட்டுகளை நினைவுபடுத்திக் கொண்டு மகிழ்வாள்; அவனோ அவளோ பெரியவர்களானதும் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் தனது உள்ளத்து ஆசைகளையும், கனவுகளையும் பற்றியும் பாடுவாள். இது மானிடக் குழைந்தைகட்குப் பொருந்தும்.
தெய்வக் குழவியாயிடின்…?
அந்த தெய்வத்தின் திருவிளையாடல்களைக் கூறி அவற்றை இக்குழந்தைப் பருவத்தோடு பொருத்திப் பாடி மகிழ்வாள்; செயற்கரிய செயல்களில் பெருமை கொள்வாள். இத்தகைய குழந்தை என்னுடையவள் என்று பூரித்து அன்பின் மிகுதியில், உணர்ச்சிப் பெருக்கில், பக்தியில், பாசத்தில் எல்லையில் நின்று களிப்பாள். குழந்தைக்காகவே பற்பல பாடல்களையும் இயற்றுவாள். இதனைத்தான் அடியார்களும், நல்லிசைப் புலமை வாய்ந்த சான்றோர்களும் செய்தனர்.
அன்பின் மிகுதியால் தாங்கள் குழந்தையாகக் கொண்டாடும் தமது தெய்வங்களை செல்லமாகச் சினந்து கொண்டும், அதன் குறும்புகளால் பொய்யாகச் சலிப்படைந்தும், மகிமைகளால் சிலிர்ப்படைந்தும் பலவாறு ஏத்துவர்; போற்றுவர்; பரவினர்.
கோவை கவியரசு நடேச கவுண்டர் அவர்கள் தமது ஆன்மநாயகராகக் கொண்டு வழிபட்ட சீர்காழி பிரம்மபுரீசுவரரின் நாயகியாம் திருநிலை நாயகியின்மீது சொல்நயம், பொருள்நயம், கற்பனைநயம், இன்னும் பல தமிழ்நயங்கள் மிகுந்த பாடல்களால் ஒரு பிள்ளைத்தமிழ் நூலினை இயற்றியருளியுள்ளார். அதன் தாலப் பருவத்திலிருந்து இரு பாடல்களைக் கண்டு களிக்கலாமா?
* * * * *
“அம்மா, காகம், நரி, பூனை, புலி போன்ற கண்ட கண்ட கதைகளெல்லாம் கூறாதே! நீலகண்டன் பற்றிய கதை சொல்! என்றாய் குழந்தாய்! நானும் உனக்காக அவர் கங்கையை எவ்வாறு அடக்கித் தன் சடையில் தரித்துக் கொண்டார் என்ற கதையைக் கூறினேன். கண்ணனாகிய திருமால் பெண்ணாகி மோகினி வடிவம் தரித்து வந்தபோது, அசுரர்கள் மட்டுமல்ல, அண்ணல் சிவபிரானும் அக்கண்ணப்பெண்ணின் அழகில் மயங்கியதைக் கூறினேன். நீ இவற்றைக் கேட்டுவிட்டு, ‘என் கொழுநன் மற்ற பெண்களுடன் குலாவிய கதையையா கூறுகிறாய்,’ என்று ஊடிச் சினம் கொண்டாய்! உன் கண்கள் சினத்தால் சிவந்தன; இமைக்காது உறங்கவும் மறுத்தாய் பார்!
“உலகத்து நியதி ஒன்றினை இங்கு உனக்கு நான் உணர்த்த வேண்டும்! ஒரு தடாகத்தில் மற்ற எத்தனை மலர்கள் மலர்ந்திருந்தாலும் தாமரை மலர் அதிலிருந்தால் அது தாமரைத் தடாகம் என்று தானே வழங்கப்படும்? அது போன்று கங்கையும், மோகினியான திருமாலும் இறைவனைக் கலந்தாலும் அவனை, அந்த மாதேவனை, உலகத்தோர் ‘பார்வதிபதி’ என்று தானே அறிவார்கள்? அந்த விமலனுக்கு இனிய மனைக்கிழத்தி உன்னையன்றி வேறு எவருமில்லையடி குழந்தாய்! ஆதலால் நீ ஊடல் கொள்ள வேண்டாம். நான்மறைகளும் கூட இதையே கூறுகின்றன; இன்னும் வேறு என்ன சான்று உனக்கு வேண்டும்? சினத்தை விட்டொழிப்பாயாக இமயக்கொடியே! காழித் திருநிலைப் பூங்கொம்பே! தாலோ தாலேலோ, துயில் கொள்வாய்,” என்று தாய் கூறுகிறாளாம்.
வேறெந்த பிள்ளைத்தமிழ் நூலிலும் காணாத அருமையான கற்பனை இது! உவமை நயமும் வியக்கத்தக்கது.
ஊடும் குழந்தை உமையும், அருகிலொரு தாயும் தொட்டிலை ஆட்டியவாறு நம் கண்முன் தோன்றும் காட்சி சித்திரமாக விரிகின்றது அல்லவா?
கண்ட கதைவேண் டாநீல
கண்டன் கதைசொ லென்றாய்க்குக்
கங்கை சடைமேற் கரந்தகதை,
கண்ணப் பெண்ணைக் கலந்தகதை
விண்டோம்; ஊடல் கொண்டாய்கொல்;
விழிகள் சிவந்தாய் இமைக்கில்லாய்;
விமலர்க் கினிய மனைக்கிழத்தி
விளம்பி லுன்னை யலதுண்டோ?
வண்டு மொய்க்கும் பிறமலர்கள்
மலர்ந்த தடந்தா மரைத்தடமே
மாதே வன்பார் வதிபதியே;
மறையும் இதற்குச் சான்றாமே
கொண்ட முனிவா றுகவிமயக்
கொடியே தாலோ தாலேலோ!
குளிர்பூங் காழித் திருநிலைப்பூங்
கொம்பே தாலோ தாலேலோ!
(திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)குழந்தை சமாதானமாகி விட்டாள்; ஆனால் உறங்கவில்லை; வாய் ஓயாது என்னவெல்லாமோ பேசிக்கொண்டும், கேள்விகளைக் கேட்டுக் கொண்டும், கண்மூடாது கிடக்கிறாள். தாய் சலிப்பு (பொய்யானது தான்! எந்தத் தாய் குழந்தையை உண்மையாகச் சினந்து கொள்வாள்?) மீதூரக் கூறுகிறாள்:
“அம்மா குழந்தாய்! உன்னை வாகீசுவரி- வாக்குசாதுரியம் மிக்கவள்- எனப் பெருமைப் பட்டுக் கொண்டோம். அதற்கேற்ப நீயும் இடைவிடாது பேசுகின்றாய்; மூகேசுவரி எனவும் ஏத்தினோம் (மூகாம்பிகை என ஒரு பிரபலமான அம்பிகை கோவில் உண்டு) அதற்கேற்பவும் நீ சில பொழுதுகள் நடந்து கொள்ள வேண்டாமோ? (அதாவது வாய்பேசாது மௌனமாக இருக்க வேண்டும்); தற்சமயம் சிறிதே கண் துயிலாயோ? நீரில் குதித்து நீந்தி விளையாடும் கயல்மீன் போன்ற கண்கள் கொண்ட மீனாட்சி எனப் பெருமைப்பட்டோம். நீயும் அதற்கேற்ப இரவும் பகலும் உறங்காது விழித்திருக்கிறாய்! (தாய்மீன் தனது குஞ்சுகளைக் காக்க வேண்டிக் கண்ணிமைகளை மூடாது இருக்குமாம்; அதுபோன்று அன்னை மீனாட்சியும் குழந்தைகளாகிய நம்மை அனவரதமும் காக்க வேண்டி கண்களை மூடுவதில்லையாம்!). பதும (தாமரை) விழியாள் என்றோம்- அதற்கேற்ப (தாமரை மலர் இரவில் குவிந்து மூடுவது போல) நீயும் கண்மூடி உறங்க வேண்டாமோ? பாவை போன்ற பெண்ணே! வாய் திறந்து பேசிக் கொண்டே இராது, பட்டால் கட்டிய இந்த ஏணையில் உறங்குவாயாக! சண்பை நகர்த் தலைவியே! திருஞான சம்பந்தருக்குப் பாலமுதம் அளித்த தாயல்லவோ நீ! தாலோ தாலேலோ!” என உறங்க வைக்கிறாள் அன்னை.
திருமாளிகையில் ஓர் அறையில் நிகழும் இந்தச் சிறு வாக்குவாதத்தை நாமும் மனக்கண்ணில் கண்டு களிக்க, குழந்தையின் குறும்பை எண்ணி நம் இதழ்களில் நம்மையறியாமலே புன்னகை மலர்கின்றது.
மதுர வாகீ சுவரியென்றோம்
மலர்வாய் மழலை மொழியாயால்
மாமூ கேசு வரியாகி
மணியே சிறிதே துயிலாயோ
குதிகொள் கயற்கண் ணாளென்று
குறித்தே மிரவு பகலுறங்காய்
குவளைக் கண்ணா யென்றாலும்
கூடாய் துயிலிவ் விரவெல்லாம்
பதும விழியா யென்றின்னே
பகர்ந்தோ மிரவு விழிமூடிப்
பாவாய்! தூவாய் திறவாமல்
பட்டே ணையினி லுறங்குகவே
சதுர மறைசேர் சண்பைநகர்த்
தலைவீ தாலோ தாலேலோ!
சம்பந்தர்க்குப் பாலளித்த
தாயே தாலோ தாலேலோ!
(திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)இந்தத் திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் எனும் நூல் கற்பனை வளம் நனி சொட்டச் சொட்ட எழுதப்பட்டுள்ளது. பயிலுந்தொறும் பரவசமூட்டும் இனிமையான நயமிகுந்த பாடல்கள். இனிய தமிழ்ச் சித்திரங்களான இன்னும் சிலவற்றைப் பிறிதொரு சமயம் காணலாமே!
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}********************************
-
மணமகளே உன் மணவறைக்கோலம் – 1
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே …
— வைதேகி ரமணன்.
எதைப்பற்றி எழுத என்று யோசித்தபோது, ஏன் திருமணத்தைப் பற்றி எழுதக்கூடாது என்ற சிந்தனைதான் முதலில் தோன்றியது. திருமணம் செய்யாதவள் எப்படி திருமணம் பற்றி எழுதலாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏன் கூடாது?
நான் பார்த்த, செய்து வைத்த திருமணங்களைப் பற்றி எழுதலாமே என்ற எண்ணத்தில் எழுதத் துணிந்துவிட்டேன்.
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் மூத்த அக்காவின் திருமணம் நடந்தது நான் பிறந்து வளர்ந்து இப்போது பிரிந்திருக்கும் ஊரில்தான். அதன் பேர் என்ன என்றுதானே யோசிக்கிறீர்கள்? அது எதுக்கு இப்ப??? பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாதுதானே!!!
விடிய காலையில் சூரியோதயத்திற்கு முன்னர் நடந்தது. புதுச்சட்டை போட்டிருந்ததும், அக்கா மணவறையில் உட்கார்ந்திருந்ததும் லேசாக நினைவில் இருக்கு. அதன் பின்னர் பக்கத்து வீடு மாமா பெரிய அண்டாவில் சோறு, குழம்பு, காய்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒரு கையில் பெரிய கரண்டியும் மறுகையில் பெரிய கழியும் வைத்து குறவன், குறத்தி, பிச்சைக்காரர்களை வரிசைப்படுத்தியும், அடித்தும் அந்தச் சோறு முழுவதையும் பகிர்ந்து அளித்ததும் லேசாக நினைவில் வருது.
அந்த மாமாவின் திருமணம்தான் அடுத்து நான் பார்த்தது. அது எதுவும் நினைவில் இல்லை. அதில் மீந்து போன சாம்பாரை மறுநாள் சூடாக்கியது மட்டும் நினைவில் இருக்கு. அதன் சுவை இன்னும் நாவில் இருக்கு. நாங்கள், சிறுவர்கள் எல்லாம் புதுச்சட்டை போட்டு நேரம் காலம் தெரியாமல் விளையாண்டதும் நினைவில் இருக்கு.
அப்படியே பதினோராம் வகுப்பிற்கு வந்துவிட்டேன். என் தோழிக்குத் திருமணம் பேசினார்கள். பள்ளியில் செய்தி பரவத் தொடங்கியது. ஆசிரியர்கள் அவளைக் கேட்டால் உடனே அழத் தொடங்கிவிடுவாள். நாங்கள் கேட்டாலும் அப்படித்தான். இத்தனைக்கும் நானும் அவளும் ஒரே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், பிறகு ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை பெண்கள் பள்ளியிலும் ஒன்றாகவே படித்தோம். நான்கு தெரு தள்ளியிருந்தாலும் ஒன்றாகவே பள்ளி முடிந்து திரும்புவோம். மதிய சாப்பாட்டிற்கு அந்த நாட்களில் வீட்டிற்கு வருவோம். அத்தனை நெருக்கமான நான் கேட்டாலும் கூட உடனே அழுது விடுவாள். நானும் அவளும் ‘திக்’ தோழிகள் என்றாலும் பக்கத்தில் உட்கார முடியாது. அவள் நல்ல உயரம். அந்தக் காலத்தில் உயரப்படிதான் வரிசையாக வகுப்பில் உட்கார வைப்பார்கள்.அவளின் திருமண நாளும் வந்தது. பக்கத்துத் தெருவில் என் அக்காவிற்கு நடந்த அதே கல்யாண மண்டபத்தில்தான் திருமணம் நடந்தது. விடுமுறை நாள்தான் அது. நாங்களும் போகலை. அவளும் கூப்பிடலை. வீட்டில் ஒருமுறை, ஒரே ஒருமுறை அம்மாவிடம் அவள் திருமணம் பற்றிக் கூறியபோது… ம்ம்… ம்ம்… போதும் போதும்… திருமணம் பற்றியெல்லாம் சிறுவர்கள் பேசக்கூடாது என்று கூறிவிட்டார்கள். பிறகெங்கே வீட்டில் வாயைத் திறப்பது. அதே வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணமே நடக்கிறது. ஒருத்திக்கு அதைப்பற்றிப் பேசக்கூட அனுமதியில்லை. எதிர்த்து பேசத் தெரியாத சூழலில் வாழ்ந்த காலகட்டம் அது.
திருமணம் முடிந்து பள்ளி திரும்பினாள். கழுத்தில் கறுப்பு மணி இருந்தது தவிர வேறு மாற்றம் ஏதும் இல்லை. அப்போதும் ஏதாவது சிறிய கேள்வி கேட்டால் உடனே அழுவாள். திருமணம் ஏன் செய்து கொள்கிறார்கள் என்பது கூடத் தெரியாத வயது, சூழல், குடும்பம் இப்படிப் பல காரணங்கள்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் அக்கா அவளைப் பார்த்துப் பேசியிருக்கிறார்கள். அவள் மகளை அவளது தம்பிக்கே கொடுத்ததாகவும், அவளது கணவர் இறந்துவிட்டதாகவும், நான் சென்னை வந்தபிறகு அவளைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்கள். நானும் வந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் சந்திக்க நேரம் வரவில்லை.
அவள் தம்பியும் என் தம்பியும் ஒரே வகுப்பு. அவள் தம்பி அவனுடைய பெயரை ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டிச் சொல்லுவான். காரணம், அவன் பெயர் நாலே எழுத்து R–A–V–I. என் தம்பியால் முடியாது. அந்தக் காலத்தில் ஆங்கிலப் பாடப்புத்தகங்களில் ‘ரவி’ அல்லது ‘ராமா’ என்ற பெயர்தான் அதிகம் இருக்கும். என் தம்பியின் நீளமான பெயரெல்லாம் புத்தகத்தில் வராது. எனக்கு என் பெற்றோரின் பெயரில் கோவமாக வரும். ஏன் இப்படி இவனுக்குப் பெரிய பெயர் வைத்தார்கள் என்று. பெயரை ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி உச்சரிப்பதெல்லாம் , பெரிய ….. திறமையாக மதிக்கப்பட்ட காலம் அது.
அதன் பிறகு கல்லூரி. அப்போதெல்லாம் யார் திருமணத்திற்கும் போக வீட்டில் அனுமதியில்லை. எனவே போனதாக நினைவுமில்லை. பிறகு, பல்கலைக்கழகம். அப்போதும் போனதில்லை. நான் மாஸ்டர்ஸ் டிகிரிக்குப் படிக்கும் போது என் இரண்டாவது அக்காவின் திருமணம் நடந்தது. நானும் என் தம்பியும் போகலை. அதனால் எப்படியிருந்தது என்று சொல்ல முடியலை. ஆனால் அவர்களுக்கு நடந்த ரிசப்ஷனுக்கு என் தோழிகள் எல்லாம் வந்தார்கள். பரிசளித்தார்கள். கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.
பின் ஆராய்ச்சிப் படிப்பில் என் தோழியாக ஒரு ‘டுயூட்டர்’ வந்தார். அவரும் அதே வகுப்பில் ஒன்றாகப் படிக்கவே, ‘கம்பைன் ஸ்டடி’ என்று இருவரும் நெருங்கிப் பழகினோம். அவருக்குத் திருமணமாகவில்லை என்பது அவருடைய பெரிய கவலையாக இருந்தது. உண்மையாகவே மிகவும் கவலைப்பட்டார்கள். யார் யாரெல்லாமோ மாப்பிள்ளை பார்த்தும் கடைசியாக எங்கள் பேராசிரியரின் மாணவன் ஒருவரைத் திருமணம் செய்தார்கள்.
அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள். கொஞ்சம் நஞ்சமல்ல. என் சகோதரிகள் இருவரும், அவருடைய பழைய நண்பர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கோவைக்குப் பயணப்பட்டு சிலபல பிரச்சனைகளை மணமகன் வீட்டாரோடு பேசி சரிசெய்த பிறகு நடந்த திருமணம் அது. அதற்குப் போக வீட்டில் அனுமதி கிடைத்தது. திருமண மேடையிலேயே மணமகனும் மணமகளும் நண்பர்களும் அரட்டை. திருமணமே ஏதோ டிப்பார்ட்மென்ட் மீட்டிங் போல நடந்தது. பதினைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து, இரண்டு பிள்ளைகளையும் பெற்ற பிறகு, இப்பொழுது பதினைந்து ஆண்டுகளாகப் பிரிந்து தனித்தனியே வாழ்கிறார்கள். இன்னமும் அவர்கள் இருவருக்கும் தோழி நம்பர் ஒண்ணு நான்தான்.
அதன்பிறகு எனக்கு சீனியரான தோழி சாந்தியின் திருமணம் நடந்தது. நண்பர்கள் எல்லோரும் தஞ்சைக்குப் போனோம். அதிகாலையில் திருமணம், மாலையில் ரிசப்ஷன். எனவே இடையில் கல்லணை, கோவில் என்று செம்ம சுற்றல். நன்றாக என்ஜாய் செய்தோம். மற்றதெல்லாம் அவ்வளவாக நினைவில் இல்லை. எப்படிப் போனோம்; வந்தோம் என்பதெல்லாம் தெரியவில்லை.
அதன்பிறகு, எங்கள் துறை டைப்பிஸ்ட் அலமேலு திருமணம் உள்ளூரில் நடந்தது. அதற்கும் கும்பலாகப் போய் மகிழ்ச்சியாக இருந்தோம். இவ்வாறு தோழிகளின் திருமணங்களில் கொண்டாட்டம் போட்டதற்கும் ஒருபடி மேலே சென்று எனது தோழிகளின் திருமணங்களை நானே நடத்தி வைத்த அனுபவங்களும் உண்டு.
________________________
-
நான் அறிந்த சிலம்பு – 185
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக் காதை
‘கோவலன் கொலைப்படுமகன் அல்லன்‘ என்ற காவலாளருக்குப் பொற்கொல்லன் கள்வரின் இயல்பினை எடுத்துரைத்தல்
“இங்கு இருக்கும் இவன் இலக்கண முறையால்
மேன்மக்களைப் போலத் தோன்றுவதால்
இவன் கொலைபாதகக் கள்வன் அல்லன்” எனக்
காவலர் கூறினர்.அவர்களைப் பார்த்து எள்ளி நகைத்த பொற்கொல்லன்
“நீங்கள் கள்வரின் இயல்புகள்
அறியாதவராய் இருக்கிறீர்கள்;” என்று கூறிக்
கள்வரின் இலக்கணங்களை
அவர்தமக்கு விரிவாக எடுத்துக் கூறலானான்.மந்திரம் தெய்வம் மருந்து நிமித்தம்
தந்திரம் இடம் காலம் கருவி ஆகிய
எட்டுச் சூழல்களையும்
தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு
எப்போதும் திரிவர் கள்வர்.
இவர்களின் மருந்தில் நீங்கள்
அகப்பட்டுக் கொண்டீர்கள் என்றால்
புகழ்மிக்க மன்னனின்
தண்டனைக்கு ஆளாவீர்கள்.கள்வரின் எட்டுத் துணைகள்
கள்வர் தம் நாவால் மந்திரத்தை உச்சரித்தால்
தேவகுமாரர்களைப் போல
நாம் காண முடியாமல் மறைந்து விடுவர்.தாம் வழிபடும் தெய்வத்தின் உருவை
மனத்தில் நினைப்பாராயின்
களவாடிய பொருளை நமக்குக் காட்டியபடியே
தப்பி ஓடி விடுவர்.அவர்கள் மருந்தினாலே
நம்மை மயக்கினால்
நம்மால் இருக்கும் இடம்விட்டு
அசையவே முடியாது.கிடைப்பதற்கு அரிய பொருள்
தானாகவே கையில் கிடைத்தாலும்
நல்ல நிமித்தம் வாய்க்கவில்லையெனில்
அதைத் தொட மாட்டார்கள்.களவு நூலில் கூறப்பட்ட வழியில்
களவாடச் செல்வாராயின்
இந்திரனின் மார்பணியைக்கூட
எளிதில் களவாடி விடுவர்.இப்பொருளைக் களவாட
இந்த இடமே சிறந்தது என்று
அவர் எண்ணுவாராயின்
அதன் பின் அவர்களை
யாராலும் காண முடியாது.களவு செய்வதற்கு
இதுதான் ஏற்ற காலம் என்று
அவர்கள் முடிவு செய்துவிட்டால்
தேவர்களால் கூட
அவர்களைத் தடுக்க முடியாது.அவர்தம் கருவிகள் கொண்டு
அரிய பொருட்களைக் களவாடினால்
இந்தப் பெரிய உலகில்
அவரைக் கண்டுபிடிக்க வல்லவர்
ஒருவரும் இல்லை.அவர்கள் களவுபுரிய
இரவு பகல் நேர வேறுபாடு கிடையாது.
அவர்கள் களவு புரியும் இடத்தை ஆராய்ந்தால்
நாம் ஓடி ஒளிய ஓர் இடமும் கிடைக்காது.எனவே எல்லாக் காலங்களும்
எல்லா இடங்களும்
அவர்கள் களவாட ஏற்புடையவை
என்று கூறினான்.அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 162 – 189
-
வெண்பாவில் விடுகதைகள்
வெண்பாவில் விடுகதைகள்
ரமணி
தமிழில் விடுகதைகளுக்குப் பஞ்சமே யில்லை. ஒருவரியில் இருவரியில் பலவரியில் என்று அவை ரத்தினச் சுருக்கமாகவோ வெற்றிலைப் பெருக்கமாகவோ காணப்படுகின்றன. முதலில் புதிராகவும் விடையை அறிந்தபின் வியப்பாகவும் காணும் விடுகதைகளை வெண்பாக்களில் சேகரித்து எழுதுவோம். சின்னச் சின்ன விடுகதைகளைக் குறட்பாவில் எழுதலாம்.
விடுகதை ஒன்றைக் குறட்பாவிலோ, மற்ற வகை வெண்பாவிலோ அமைக்கக் கீழ்வருவது போன்ற விதிகளை அமைத்துக்கொள்ளலாம்.
1. குறட்பாவானால், பொதுவாக ஈற்றடியில் உள்ள மூன்று சீர்களில் ஒன்றில் விடை அமைய வேண்டும். வெண்பாவானால் விடை பொதுவாக ஒரு சீருக்குள் எந்தச் சீரிலும் அமையலாம். விடை மறைமொழியாக, சீரின் பெரும்பான்மை எழுத்துகளை வைத்துக் கண்டறிவதாக அமையும்.
2. விடைச்சொல் சிதைவோ புணர்ச்சியோ உறாது அதுவாகவே அமைய வேண்டும். புணர்ச்சி தவிர்க்க முடியாத போது புணரும் எழுத்தை அடைப்புக் குறிகள் மூலமோ வேறு விதத்திலோ காட்டுதல் நலம்.
3. விடைச்சொல் மறைமொழி யாவதால் அது மற்ற சீர்களுடன் இலக்கணத்தில் பொருந்தி நின்றாலும் பொருளில் பொருந்தாது நிற்குமாதலால் அதை இனங்கண்டு கொள்வது எளிதாகுமாறு அமைக்க வேண்டும்.
4. விடைச்சொல்லைப் பலவிதமான மறைமொழிகளில் (encryption) கூறலாம். எவ்வித மறைமொழி உத்தியாயினும் விடை எளிதில் காண முடிவதாக இருக்கவேண்டும்.
5. மறைமொழியும் பொருளுடன் அமைந்தால் விடை காணுவது சுவையான சிக்கலாக இருக்கும். பொருளில்லாதோ வேற்று மொழிச் சொல்லாகவோ அமைந்தாலும் தனித்து நின்று கண்பட்டு விடை காண வைக்கும்.
6. சில மறைமொழி உத்திகள்:
6.1. விடைச்சொல்லில் அதிக பட்சம் இரண்டு எழுத்துகளை மறையாக்கலாம், ஒற்றுகள் தவிர்த்து. ஒற்றுகளை மாற்றக்கூடாது.6.2. மறையாகும் எழுத்து விடையின் எழுத்தைச் சேர்ந்த இனமாக–குறிலெனில் குறிலாக, நெடிலெனில் நெடிலாக–இருக்கவேண்டும். அவ்வாறு வரும் குறில்/நெடில் தகுந்த முந்தைய அல்லது பின்வரும் எழுத்தாக அமைந்தால் விடைகாண எளிதாக இருக்கும். தள்ளியுள்ள எழுத்துகளாகவும் அமையலாம்.
உதாரணமாக, ’பட்டு’ என்னும் விடைச்சொல்லை முன்பின் அடுத்துள்ள எழுத்துகள் மூலம் ’நட்டு, மட்டு, மிட்டு’ என்று அமைக்கலாம். தள்ளி வரும் எழுத்துகள் மூலம் ’கட்டு, முட்டு, மொட்டு’ என்று அமைக்கலாம்.
6.3. விடைச்சொல்லின் எழுத்துகள் இடம் மாறியோ, ஒலி மாறியோ வரலாம். சான்று: ’சிவா’ என்பது ’வாசி’ அல்லது ’விசா’ என வரலாம்.
6.4. இரண்டு எழுத்துகளை மறைக்கும் போது ஒன்றின் மறை அருகில் வருவதாகவும் மற்றது தள்ளி வருவதாகவும் அமைக்கலாம். சான்று: ’பெண்மணி’ என்பதைத் ’தண்பணி’ எனலாம்.
6.5. இருசொல் விடைகள்:
சற்றுக் கடினமான விடுகதைகளில் விடை மறைமொழியாக இரண்டு சீர்களில் இருக்கும். இவ்விரண்டு சீர்கள் வெண்பாவில் ஏதோவோர் அடியில் ஒன்றையொன்று அடுத்துவரும். இரண்டு சீர்களிலும் உள்ள எழுத்துகளில் ஒற்றுகள் தவிரித்து இரண்டு முதல் நான்கு எழுத்துகள் வரை மாறியிருக்கலாம். குறில் நெடில் ஒன்றுக்கொன்று மாறியும் வரலாம். சீரில் உள்ள எழுத்துகளில் பெரும்பாலானவற்றை வைத்து விடையைக் கண்டறிய வேண்டும். உதாரணமாக,எரியும் விளக்கில் எரிவதோ எண்ணை?
எரியும் கிழக்குத் தெரு.இந்தக் குறட்பாவில் விடை மறைமொழி: கிழக்குத் தெரு; விடை: விளக்குத் திரி.
6.6. வேறுவித உத்திகளைக் கையாளுவோர் அவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.
*****
வெண்பாவில் விடுகதை: உதாரணம்
அடித்தால் வலித்திட ஆனை விரும்பும்
கடித்தால் நுனியில் கசக்கும் – அடியில்
இனிக்கும் மதுரம் இலையது கீறும்
கனமான புல்லாம் எறும்பு.இந்த வெண்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சொல் வெண்பாவின் பொருளுடன் ஒட்டாமல் நிற்பதால், அதுவே விடை மறைமொழி என்று அறியலாம். ஒற்று மாறாதிருக்க, ’எறும்பு’ என்னும் சொல்லில் இரு குறில் எழுத்துகள் மட்டும் மாறியிருக்க, மற்ற எழுத்துகளை இந்தச் சொல்லில் அமைத்துப் பார்த்தால் ’கரும்பு’ என்னும் விடை எளிதில் கிடைக்கும். இப்போது கரும்பு என்னும் விடையை வெண்பாவில் அமைத்துப் பார்த்தால் அது பொருளுடன் ஒன்றுவது தெரியும்.
*****
வெண்பாவில் விடுகதைகள்: வாசகர் விடை காண
இனி, வாசகர்கள் விடை கண்டறிய, மற்ற வெண்பா விடுகதைகள் ஒவ்வொன்றாக இந்த இழையில் வரும், ஒன்றின் விடை தெரிந்ததும் அடுத்தது என்ற நிரலில்.
1. ஆலமரம் தூங்க…
(அளவியல் இன்னிசை வெண்பா)ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும்
பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும்
கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே
ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு.(தொடரும்)
*****
-
குறளின் கதிர்களாய்…(93)
–செண்பக ஜெகதீசன்
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. (திருக்குறள் -782: நட்பு)புதுக் கவிதையில்…
வளர்பிறைபோல் வளரும்

நல்லறிவுடையோர் நட்பு,
தேய்பிறை நிலவுபோல்
தேய்ந்து மறையும்
பேதையர்தம் நட்பு…!குறும்பாவில்…
வளரும் நட்பு வளர்பிறைநிலவாய்
அறிவுடையோரிடம்,
தேயும் நிலவாய்ப் பேதையரிடம்…!மரபுக் கவிதையில்…
நல்லதாய் அறிவு கொண்டோர்தம்
-நட்பு வளரும் நாள்தோறும்
நில்லா நிலவு வளர்பிறையில்
-நன்றாய் வளர்ந்திடும் வளர்ச்சிபோல,
பொல்லாப் பேதையர் கொளும்நட்பு
–பொலிவ தில்லை இதைப்போல,
இல்லா தாகும், தேய்பிறையில்
-இருளாய்த் தேயும் நிலவெனவே…!லிமரைக்கூ…
வளர்பிறை நிலவாய் வளர்ந்து காயும்
நல்லறிவு கொண்டோர் நட்பதுவே,
பேதையர் நட்பு தேய்பிறையாய்த் தேயும்…!கிராமிய பாணியில்…
நெலவுநெலவு பால்நெலவு
நெதமும்வளரும் பால்நெலவு,
இதுதான்நெலவு வளர்பெறயில்
இதுபோல்வளரும் நட்பதுவும்
படிப்பறிவுள்ளவர் நட்பதுவும்…தேயும்தேயும் அதேநெலவு
தேய்பெறவந்தா தேஞ்சிபோவும்,
அதுபோலத்தேயும் நட்பதுவும்
அறிவில்லாதவர் நட்பதுவும்,
தேய்பெறநெலவாத் தேஞ்சிபோவும்…நெலவுநெலவு பால்நெலவு
நெதமும்வளரும் பால்நெலவு…! -
நவீன முறையில் பொம்மலாட்ட வழிக்கல்வி
— தாமஸ் ஆண்டனி.
கடந்த 2004 ம் ஆண்டு அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியேற்றுக் கொண்டது முதல் மாணவ, மாணவியரிடையே நல்லொழுக்க பண்புகளை வளர்த்து வருகிறேன். சமுதாய அக்கறையுடன், ஊர் பொதுமக்களும், சமுதாயத்தினரும் போற்றத்தக்க வகையில் மாபெரும் அறிவியல் கண்காட்சி, முதியவர்களுக்கு உதவிப் பொருட்கள் அளித்தல், பெண் குழந்தைக் கல்வி மற்றும் பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, தூய்மை பாரத திட்டப்பணி, பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்கள் வழங்குதல், பல்வேறு திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை கொண்டு திருக்குறள் நடனம் ஆடிக் கற்பித்தல் பயிற்சி, கைவண்ண பொருட்கள் பயிற்சி என பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்குக் கொடுத்து ஊக்குவித்து வருகிறேன்.
மேலும் தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்கள் எமது பள்ளியில் நடத்திய நிகழ்ச்சிகள் குறித்து பிரசுரம் செய்து எங்கள் பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளன. ”தினத்தந்தி” தமிழ் நாளிதழில் திங்கள் கிழமை தோறும் வெளிவரும் மாணவர் ஸ்பெசல் கட்டுரைப் பகுதியில் தமிழ் அறிஞர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், சாதனையாளர்கள், வரலாற்று வீரர்கள் என இது வரை 44 கட்டுரைகள் எழுதி சாதனைப் படைத்துள்ளனர் எமது பள்ளி மாணவர்கள். கடந்த 2013 முதல் எனது பள்ளி மாணவர்களுக்கு இக்கட்டுரைகளுக்குக் குறிப்பு கொடுத்து எழுதப் பயிற்சி அளித்து வருகிறேன். இக்கட்டுரைகள் குறித்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பாராட்டுகள் கிடைத்துள்ளன.
நாம் மறந்துவிட்ட பாரம்பரிய கலைகளில் பொம்மலாட்டமும் ஒன்று. அதை மீட்டெடுத்து பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்தல் உரமூட்டி வருகிறேன். ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில்படிக்கும் குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து படிக்க வருபவர்கள். சிலரது பெற்றோர்கள் நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருப்பதால் தங்கள் குழந்தைகளைக் கவனிக்க முடியாதவர்கள். இவ்வாறு பல்வேறு சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் கவனத்தைப் பொம்மலாட்டம் மூலமாகக் கவர்ந்து பாடம் நடத்த முடிவு செய்தேன்.
நான் சின்ன வயதில் இருந்தே பல குரல்களில் மிமிக்ரி செய்வேன், நான் பல இடங்களில் அலைந்து திரிந்து இறுதியில் சென்னைக்கு வந்து எனது சொந்த செலவில் பொம்மைகள் வாங்கினேன். பொம்மலாட்ட திரைச் சீலை நானே வடிவமைத்தேன். திரைச்சீலைக்குப் பின்னால் நின்றுக்கொண்டு பொம்மைகள் மட்டும் தோன்றுமாறு செய்து நான் முழுவதுமாக மறைந்து கொள்வேன். பாடங்களில் உள்ள பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இவர்களின் பாடல்களை ஒரு சின்னக்குழந்தை பாடினால் எப்படி இருக்குமோ அப்படி எல்லாம் பொம்மைகள் பாடுவது மாதிரி பாடிக்காட்டுவேன். பெண்குரல், வயதானவர்கள், தடித்த அப்பாவின் குரல், பிரபல நடிகர்களின் குரல் என எட்டுக்கும் மேற்பட்ட குரல்களில் மாற்றி மாற்றிப் பேசி பாடத்தை மனதில் பதிய வைப்பதுடன் உற்சாகம் குறையாமலும் பார்த்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நீண்ட நேரம் குழந்தைகளுக்கு தெரியாதவாறு பொம்மைகள் உயர்த்திப் பிடித்தவாறு பாடம் நடத்துவதால் பயங்கரமாக கைகள் வலிக்கும். ஒரே சமயத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பொம்மைகளை கைகளில் மாட்டிக்கொண்டு பாடத்திட்டங்களை பார்த்துப் படித்தல், பொம்மைகளை அசைத்தல், குரல்களை மாற்றி மாற்றிப் பேசுதல் என செய்து கொண்டே இருப்பது சவாலான விஷயம் தான். ஆனால் எனது உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது . ஆசிரியர் முன்னாள் இருந்தால் தப்பாகி விடுமோ, தண்டனை கிடைக்குமோ என்ற பயமும், தயக்கமும் இல்லாமல் பொம்மைகள் முன்பாக தங்கள் கருத்துகளை மாணவர்கள் இயல்பாக வெளிப்படுத்துகின்றனர். பலமுறை தங்கள் சந்தேகங்களை கேட்டுத் திருத்திக் கொள்கின்றனர். மாணவர், ஆசிரியர் இடையே இடைவெளி மறைந்துவிட்டது. இப்போது எந்தக் குழந்தைகளும் விடுமுறை எடுப்பதில்லை. குழந்தைகளின் நினைவாற்றல் திறன் பன்மடங்கு அதிகரித்து உள்ளது.
ஒரே மாதிரியான பொம்மைகளை வைத்து பாடம் நடத்தினால் மாணவர்களுக்குப் அலுப்பு ஏற்படும் என்பதால் 2000 ரூபாய் செலவில் பெரிய குரங்கு பொம்மை வாங்கி வந்து அதன் மூலம் பாடம் நடத்துகிறேன். இந்தக் குரங்கு பொம்மை பெயர் டிங்கு, எனது இடுப்பில் உட்கார்ந்து இருக்கும். மாணவர்களிடமும் குரங்கு பொம்மையிடமும் நான் பேச வேண்டும். அதே நேரத்தில் பதிலுக்கு குரங்கு பொம்மை பேசுவதுபோல லிப் மூவ்மெண்டுடன் எனது கையை குரங்கு பொம்மைக்குள் விட்டு, குரங்கு பேசுவதுபோல மிமிக்கிரியும் செய்ய வேண்டும். அப்பொழுது எனது வாய் அசையக்கூடாது. அசைந்துவிட்டால் குரங்கு பேசவில்லை, நான்தான் பேசுகிறேன் என்று மாணவர்களுக்குத் தெரிந்துவிடும். இந்த முறைக்கு வெண்ட்ரிலோகிசம் என்று பெயர். இந்த முறையைக் கற்றுக்கொள்ள எனது சொந்த முயற்சியில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.
இந்த டிங்கு மூலம் நீதிக்கதைகள், சிந்திக்க வைக்கும் நகைச்சுவை துணுக்குகள், அறிவூட்டும் பட்டிமன்றங்கள் எல்லாம் நடத்துவேன், டிங்குவை நடுவராக வைத்து பட்டிமன்றம் நடத்தினால் மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கலந்து கொள்வர். இதனால் தங்கள் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்று பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
கற்கும் கல்வியானது மாணவர்களின் நினைவாற்றல் திறனை வளர்ப்பதற்கும், மகிழ்ச்சியைக் கொடுப்பதற்கும், வாழ்க்கை பாதையில் முன்னேற்றம் காண்பதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு நவீன முறையில் பொம்மலாட்ட வழிக்கல்வி மூலம் கற்பித்தல் பணியைச் செய்து வருகிறேன். இந்தப் புதுமையான கற்பித்தல் பணி குறித்து பிரபல மாத இதழ்களான ”சுட்டி விகடன்” இதழின் “கனவு ஆசிரியர்” என்ற பகுதியில் ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக இடம் பெற்றுள்ளேன். மேலும் பிரபலமான கல்கி, புதிய தலைமுறைக் கல்வி, ஜன்னல், குங்குமம், பாவையர் மலர், கல்வி டுடே, புதிய ஆசிரியன், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செய்தி, தினமணி கதிர் போன்ற வார, மாத இதழிலும் என மொத்தம் 12 புத்தகங்களில் இடம் பெற்றுள்ளேன். எனது பொம்மலாட்ட வழிக்கல்வி குறித்த சிறப்புக் கட்டுரை பாரதி புத்தகாலயம் சார்பில் பேராசிரியர் நா. மணி அவர்கள் மீண்டெழும் அரசுப்பள்ளிகள் என்ற தலைப்பில் புத்தகம் வெளிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாளிதழ்களான தினத்தந்தி ஞாயிறு மலர், தினமலர், தி இந்து [தமிழ் &ஆங்கிலம் ], தினகரன், காலைக்கதிர், தினமணி, இண்டியன் எக்ஸ்பிரஸ், தி டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் க்ரானிகல் போன்ற பத்திரிகைகளில் தமிழக அளவில் எனது பொம்மலாட்ட வழிக் கல்வி குறித்த செய்திகளை வெளியிட்டு தொடக்கக் கல்வி துறைக்கும் ஈரோடு மாவட்டத்திற்கும், எனக்கும் பெருமையை தேடித் தந்துள்ளனர். இக்கல்வி முறைக்கு பல்வேறு கல்வித்துறை உயர் அதிகாரிகளும், ஆசிரியப் பெருமக்களும், பல்வேறு சமுதாய தன்னார்வ அமைப்பினரும் வெகுவாக பாராட்டி ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் என் கற்பித்தல் பணியை ஊக்குவிக்கும் பொருட்டு 6 விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் கொடுத்துள்ளனர்.
கடந்த 07-07-2015 அன்று எனது பொம்மலாட்ட வழி கற்பித்தல் முறை குறித்து கோவையில் செயல்பட்டு வரும் “தூர்தர்சன் பொதிகை” தொலைக்காட்சியில் படப்பிடிப்பு நடைபெற்றது. 31-08-2015 அன்று தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சியில் சின்ன சின்ன நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சியானது ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலேயே தொடக்கக் கல்வித் துறையில் முதன் முறையாக “தூர்தர்சன் பொதிகை” தொலைக்காட்சியில் இடம் பெற்றது. இன்னும் தொடரும் எனது கற்பித்தல் மற்றும் சமுதாய பணிகள்.
__________________________________________________________________________________________
தே. தாமஸ் ஆண்டனி, பி .ஏ .[ தமிழ் ] , பி .எட்
இடைநிலை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
நாதகவுண்டன் பாளையம் , 638115
மொடக்குறிச்சி ஒன்றியம்
ஈரோடு மாவட்டம்
தொடர்பு எண் : 99769-71697
மின்னஞ்சல்: thomas1111981@gmail.com -
படக்கவிதைப் போட்டி 36-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
இந்தவாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்திருப்பவர் திரு. எல். சரவணன். இப்படத்தைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமை தன் நன்றியை நவில்கின்றது.
தனதடி தொழும் அடியார்தம் இடர்களைவதில் இணையற்றவர் கணேசர்! ஐந்து கரமும், ஆனை முகமும், இந்தின் இளம்பிறை எயிறும், தொந்தி வயிறும் கொண்ட அவரைப் பணியப் பாவம் ஓடும்; ஞானம் கூடும் என்பது நம் மக்களின் நெடுநாளைய நம்பிக்கை!
கடலில் கரையும் கணபதி சிலைக்கு அருமையான கவிதைப் படையல் செய்துள்ளனர் ஆற்றல்மிகு நம் கவிஞர் பெருமக்கள்! அப்படையலை நாமும் சிறிது சுவைத்துவிட்டு வருவோம் புறப்படுங்கள்!
***
செய்த பாவம் போதாதென்று நம் மக்கள் கணபதி சிலையைக் காலால் உதைத்துக் கடலில் கரைக்கும் பாவத்தைவேறு செய்யத் தொடங்கிவிட்டனர்; அதனால்தான் கணேசனார் கரையாமல் கரையேறுகின்றாரோ? என்று வினவுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.விண்ணுக்கும்
மண்ணுக்கும்
முதல்வன் நீ
மண்ணில் பிறந்தவை
மண்ணிலேயே
மறையும் என்ற
தத்துவத்தை உணர்த்த
தண்ணீரில் கரைக்கிறோம்
பண்ணும் பாவங்கள்
போதாதென்று
உன்னை உதைத்தும்
தள்ளியும் விடுகின்றனர்
கடலிலுனுள்
கற்றூணை பூட்டியோர்
கடலிற்பாய்ச்சினும்
நற்றுணையாவது
நமசிவாயவே என நீ
கரையாமல் கரையேறி நிற்பது கூட
பாவங்களிருந்து
எங்களை கரையேற்றத்தானோ?***
எளிமைவிரும்பியான கணேசனின் அருள்பெறப் பகட்டுவழிபாடு தேவையில்லை என எடுத்தியம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.மண்ணில் மாவில் மஞ்சளிலும்
மாட்டுச் சாணி எதிலெனிலும்,
எண்ணம் போல வடிவுபெறும்
எங்கள் யானை முகத்தவனே,
புண்ணியம் என்றே நினைத்துபல
பகட்டைச் சேர்த்தார் வழிபாட்டிலே,
தண்ணீர் நிலைகளில் கரைத்தாலும்
தாங்கியே அருள்வாய் விநாயகனே…!***
விநாயக சதுர்த்தியின் வரலாற்றை எழிலாய் விளக்கியுள்ளார் தன் கவிதையில் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.விரதம் முடிய, பார்வதியே
விரவல் செய்தார் கடலிலுன்னை.
பரதத்துவம் பாதத்தில் மிதிபடாமல்
சிரத்தையாயுன்னை நோன்பு இறுதியில்
பரவையில் போட கரைகிறாய்
பூமியில் அவதரித்த நாமிறுதியில்
பூமிக்கேயென்ற தத்துவம் கூறும்
பூதல உருவாய் நீயிங்கு!பஞ்சமா பாதகங்களை மானுடம்
அஞ்சாது செய்வதை தொலைக்க
நெஞ்சத்தால் உணர்ந்து கரைக்க
தஞ்சம் நீயென அடையாளமாகிறாய்.
தளர்வற்ற மாசறு மனம்
அளவற்று நீள அருள்வாய்!
வளர்பிறைச் சதுர்த்தி ஆவணியில்
வரம் தா ஆனைமுகத்தோனே!( விரவல் – கலத்தல்; பரதத்துவம் – பரம்பொருள்; பரவை – கடல்.)
***
நீரில் கரையும் விநாயகருக்கு நம் மனங்கரைகின்ற வகையில், கருத்துள்ள கவிதைகளைக் காணிக்கையாக்கியுள்ள கவிஞர்களே! உங்களுக்கு என் பாராட்டுக்கள்!இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும் என்றார் வான்புகழ் வள்ளுவர். ”மெய்யழுக்கை நீக்குதற்கு நம் மக்கள் தரும் முக்கியத்துவத்தைத் தம் மனஅழுக்கை நீக்குதற்கும் தரவேண்டும் என்பதை விநாயகப் பெருமானே விளக்கவேண்டும்” எனும் கருத்தமைந்த பாடல் என் சிந்தை கவர்ந்தது.கையில் இருக்கின்றக் காசைக் கரைத்துமே
மெய்யில் இருக்கும் அழுக்கினைப் – பொய்யாய்
மறைக்கின்ற மாந்தர் மனத்தழுக்கை நீக்க
இறைவா கரைந்து விளக்கு.தண்ணீர்க் கரையில் தனியாக நீகரைந்து
கண்ணீர் குளிக்கின்ற மக்கள் – மண்ணில்
எதிர்பார்த்து ஏங்கும் அமைதிக்கு நல்ல
பதிலொன்று தந்து விடு.நம்பிக்கை இல்லா தவறை விடு உனை
நம்பிக் கரைப்போர் நலம்வாழத் – தும்பிக்கை
நாயகனே நீயும் துணைசெய்! வீண்வாதப்
பேயகற்றி விட்டு விடு.மூடநம் பிக்கை எனஇகழும் வாய்களினை
மூடவிடு போதும் எதிலுமே தேடலின்றிக்
குற்றம் குறைகாணும் கோமாளிக் கூட்டம்தம்
குற்றம் உணர்த்துக் கரைந்து.இறைவனிடம் நல்ல கோரிக்கைகளை முன்வைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. மெய்யன் நடராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.
***
”மனிதா! நீ செய்யும் தப்புக்களை மூடிமறைத்து ஒப்புக்கு எனக்கு விழா எடுப்பதனால் நானுனக்கு அருள்செய்துவிடுவேன் என்றா எண்ணுகின்றாய்? ஒருநாளும் இல்லை! உன் தவறுகள் உன் பரம்பரையையே அழிக்குமுன் திருந்திவிடு!”என்று இறைவன் கணேசனார் இதோபதேசம் செய்கின்றார் ஒரு கவிதையில்!பாவத்தில் கரையாதே
எத்தனை கோடி இன்பம் வைத்தேன்
ஓ மனிதா!
அத்தனையையும் தொலைத்து
புத்தியின்றி நீ செய்யும்
காரியங்கள்தான் எத்தனை?களவு பல செய்து
ஈட்டிய பொருளின் பகுதியை
எனக்கும் காணிக்கையாக்கி
கற்பூரமேற்றுகிறாய்!உழைப்பவரை மிதித்துவிட்டு
நீ மட்டும் உயரப் பார்க்கிறாய்
உயரே நான் இருப்பதை
மறந்து போகிறாய்!ஊழலில் திளைத்து
ஊரையே சீரழிக்கிறாய்
தேவாலயங்கள் கட்டி
அதையும்
வியாபாரம் ஆக்குகிறாய்தினந்தோறும்
நீ என்முன்
படைக்கும் பாவம் கரைக்க
ஆண்டுக்கு ஒருமுறை
கடலில் கரைகிறேன்
நீ செய்யும் பாவங்களில்
உன் பரம்பரையே
கரைந்துவிடும் என்பதை மட்டும்
கவனத்தில் கொள்!திரு. கொ.வை. அரங்கநாதனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தெரிவுசெய்துள்ளேன்.
உற்சாகத்துடன் படக்கவிதைப் போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் என் நன்றி!
-
அணுப்பிணைவு மின்சக்தி நிலையத்தை கதிரியக்கக் கழிவின்றி நிதிச் சிக்கனத்தில் இயக்கலாம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
+++++++++++++++
++++++++++++++++

பிண்டமும் சக்தியும் ஒன்றெனக்
கண்டவர் ஐன்ஸ்டைன்
கணிதச் சமன்பாடு மூலம் !
பிளவு சக்தி யுகம் மாறி
பிணைவு சக்தி நுழையப் போகுது
கதிரியக்கக் கழிவின்றி
புவி விளக்கேற்ற !
இயல்பாகவே
தேய்ந்து மெலியும் ரேடியம்
ஈயமாய் மாறும் !
யுரேனியம் சுயப் பிளவில்
ஈராகப் பிளந்து
வெப்பசக்தி உண்டாகும் !
பேரளவு உஷ்ணத்தில்
சூரியன் போல் கன ஹைடிரஜன்
நீரக ஏகமூல வாயுக்கள்
சீராக அழுத்தத்தில்
இணைந்து
பிணைவுச் சக்தி
புது யுகத்தில் மின்சக்தி பரிமாறும்
கதிரியக்க மின்றி !++++++++++++++++

அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி செய்வதே தற்போதைய மனித இனத்தை நோக்கியுள்ள மிக முக்கிய விஞ்ஞானச் சவாலாகும். அதனால் கிடைக்கும் பரிசு, வெகுமதி அளவு பேரளவாகும். அது வரையறை இல்லாத, மாசுகளற்ற, மலிவான, பாதுகாப்பான எரிசக்தி படைப்பாகும் . அது பல நூற்றாண்டுகளாய் மனித வளர்ச்சிக்கு மின்சக்தி பரிமாறி வரும். அதைப் பேராசிரியர் ஸ்டீவ் கௌலி [Professor Steve Cowley] போன்ற விஞ்ஞானிகளால்தான் சாதிக்க முடியும். அந்த மின்சக்தி நிலையங்கள் நிச்சயம் உலக மானிடத்தைக் காக்கும். அணுப்பிணைவு மின்சக்திப் பொறி நுணுக்க நிலையங்களை வாணிப ரீதியாக விருத்தி செய்து, கூடுமான அளவு விரைவில் நிறுவனம் செய்வது அவரது கடமை நெறி. அவை இல்லாது போனால் நமது மனித இனம் இந்நூற்றாண்டு முடிவுக்குள் மிக்க இடரில் மூழ்கித் துயரடையும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.
ஸ்டீஃபன் ஹாக்கிங் & பிரையன் காக்ஸ் [பிரிட்டீஷ் விஞ்ஞானப் பேராசிரியர்கள்]

பிணைவு சக்தியின் பயன்கள்
நாங்கள் ஐயத்துக்கு இடமின்றி, சில அனுமானங்களை முன்னெடுத்துக் கொள்ள வேண்டிய தாயிற்று. ஆனால் எமது முன்னறிப்பு அணுப்பிணைவு மின்சக்தி, அணுப்பிளவு மின்சக்தியை விட நிதிச் செலவு மிக்கதாய் இருக்காது என்று எங்களால் உறுதியாகக் கூற முடியும். இந்த ஆய்வு அறிவிப்பு திட்ட அமைப்புக் குழுவினருக்கும், தனித்துறை வாணிபருக்கும், ஏதுவாக அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் நிறுவ முன்வருவார் என்று நாங்கள் நம்புகிறோம். உலகில் நிலக்கரி, எரிவாயு மற்றும் அணுப்பிளவு, அணுப்பிணைவு [Fisson & Fusion] நிலையங்கள்தான் உறுதியான அடிப்பளு மின்சக்தியைப் [Base-Load Power] பரிமாறும் தகுதி பெற்றவை. பிணைவு நிலையங்கள் பொறி நுணுக்கச் சவால்களால், நிச்சயமற்றுப் பெருநிதி செலவழித்துக் கட்ட இயலாது என்று இதுவரை ஒதுங்கினார்.
பேராசிரியர் டாமையன் ஹாம்சயர் [Lead Scientist, Durham University, U.K.]
பிணைவு மின்சக்தி நிலையங்கள் நிதிச் சிக்கன முறையில் நிறுவலாம்.
2015 அக்டோபர் 7 ஆம் தேதி எதிர்கால உலக மின்சக்தி உற்பத்திக்குக் கதிரியக்கக் கழிவற்ற பிணைவு அணுமின் நிலையங்களைச் [Fusion Power Plants] சிக்கனச் செலவில் அமைத்து இயக்கலாம் என்று பிரிட்டன் டுரம் பல்கலைக் கழக ஆய்வாளரும், ஆக்ஸ்ஃபோர்டுஸையர் குலாம் மையத்து [Durham University & Culham Centre for Fusion Energy in Oxfordshire] பிணைவு சக்தி ஆய்வாளரும் புது அறிக்கை வெளியிட்டுள்ளார். இது சமீபத்தில் முதன் முதலாக உயர்கடத்திப் பொறிநுணுக்கத்தில் [Superconductor Technology] பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் செய்து காட்டிய மேம்பாட்டு விளைவால் ஏற்பட்ட பயனே. கடந்த 60 ஆண்டு காலமாக இயங்கி வரும் அணுப்பிளவு நிலையங்களுக்கு [Fission Power Stations] ஒப்பாகச் சிக்கன முறையில் கட்டுமானம், இயக்கம், பராமரிப்பு, நிலைய அடக்கம் [Decommissioning] யாவும் செய்ய முடியும் என்று முதன்முதல் பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் பிணைவுப் பொறி நுணுக்க அமைப்பிதழில் [Journal of Fusion Engineering Design] அறிவித்துள்ளார்.
பாதுகாப்பான பிணைவு மின்சக்தி நிலையங்களால் அனுதினம் பிளவு நிலையங்கள் போல் கதிரியக்கக் கழிவுகள் வெளிவரா. அதற்குப் பயன்படும் மூல ஹைடிரஜன் ஏகமூல எரிவாயுக்கள் [Hydrogen Isotopes – Deuterium & Tritium] மலிவான விலையில் ஏராளமாய்க் கிடைக்கிறது. கடந்த 50 ஆண்டு காலமாக உலக நாடுகள் ஐரோப்பா, ஜப்பான், சைனாவில் அணுப்பிணைவு சக்தி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அணுப்பிணைவு நிலையங்களில் லேசர் மூலம் ஒளிப் பிழம்பை [Plasma] 100 மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் டியூடிரியம் & டிரிடியம் வாயுக்களைச் சூடாக்கி அழுத்தி பிணையச் செய்து பேரளவு வெப்ப சக்தியை உண்டாக்குகிறார்.

பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் ‘ஐடியார்” எனப்படும் அகில உலக நாட்டு வெப்ப அணுக்கரு சோதனை அணுமின் உலை [ITER – International Thermo- Nuclear Experimental Reactor] கட்டுமானமாகி 2020-2025 ஆண்டுகளில் இயங்கப் போகிறது. ஐடியார் உலைக்கு மூலாதார அமைப்பு ‘டோகமாக்’ [TOKAMAK] எனப்படும் பிளாஸ்மா சூட்டுக் காந்த வளையம். இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளில் இந்தப் பொறிநுணுக்கம் வெற்றி அடைந்துவிடும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.
அணுப்பிணைவு முயற்சியில் தவிர்க்க வேண்டிய தடைகள் & பிரச்சனைகள்
லேஸர் கதிர்கள் தாக்கிப் பேரளவு உஷ்ணத்தில் [100 மில்லியன் டிகிரி C] டியூட்டிரியம், டிரிடியம் வாயுக்கள் அழுத்தமாகிப் பிணையும் போது, புதிய மூலகம் ஹீலிய வாயும், நியூட்ரானும், பேரளவு இயக்க சக்தியும் [Kinetic Energy] விளைவில் உண்டாகுகின்றன. முதல் பிரச்சனை, டோகாமாக் காந்த வளையம் அதி உஷ்ணத்தில், இத்தகைய தீவிர நியூட்ரான்கள் தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடிவ தில்லை. சோதனை புரியும் ஜெட் டோகாமாக் [JET TOKAMAK] கடந்த18 மாதங்களாக பழுதடைந்த 4500 கரிக் கவசத் தட்டுகளை நீக்க நிறுத்தப் பட்டுள்ளது. நியூட்ரான் அடித் தடுப்புக்கு [Neutron Resilient] ஏற்ற புதுக் கவசத் தட்டுகள் பெரிலியம் & டங்ஸ்டன் உலோகங்களால் செய்யப் பட்டு இப்போது நிறுவப் படுகின்றன. இவை எத்துணை காலம் நீடிக்கும் என்பது அடுத்த சோதிப்புக்குப் பிறகுதான் தெரியும்.

சூரியனைப் போன்ற 20 மடங்கு கனலில் பூமியைப் போன்ற 1000 மடங்கு காந்த தளத்தில், பிளாஸ்மா கொந்தளிப்பை எப்படி டோகாமாக் வளையத்தில் நியூட்ரான்கள் தாக்கி முறிக்காது, நீடித்த காலம் கட்டுப் படுத்துவது என்பதே இப்போதைய விஞ்ஞானிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது. 15 பில்லியன் ஈரோ நாணயச் செலவில் [சுமார் 15 பில்லியன் டாலர்] கட்டப்படும் சோதனை ஐடியார் 50 MW ஆற்றல் செலவாகி 2019 ஆம் ஆண்டிலே 500 MW ஆற்றலில் வேலை செய்யத் துவங்கி வெற்றியோ தோல்வியோ நிலைநாட்டும்.
நாங்கள் செய்யப் போவது இதுதான்: ஒரு கட்டுப்பாட்டு முறையில் எரிக்கரு வில்லைச் சிமிழின் [Deuterium – Tritium Pellet [D-T Pellet] Fuel Capsule] வெளிப்புற கவசத்தை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் உடைப்பதே எங்கள் முயற்சி. அப்படிச் செய்யும் போது எரிக்கரு வில்லை [D-T Pellet] அழுத்தம் அடைந்து, சரியான கட்டத்தில் அணுப்பிணைவு இயக்கம் தூண்டப்படும்.
ஜான் எட்வேர்ட்ஸ் [Associate Director, NIF National Ignition Facility for Fusion Power]
எக்ஸ்ரே கதிர்கள் தூண்டும் அணுப்பிணைவு முறையில் தீர்க்கப் பட வேண்டிய ஒரு பெரும் இடையூறு : எருக்கருச் சிமிழ் முதிரா நிலையில் முன்னதாய் முறிந்து போய் [Premature Breakdown] விடுவது. ஆற்றல் மிக்க எக்ஸ்ரே கதிர்களின் அடர்த்தி காலிச் சிமிழி குறியில் [Hohlraum –> Hollow Room] தேவையான அழுத்தம் உண்டாக்கி அணுப் பிணைவைத் தூண்டுகிறது.
ஜான் எட்வேர்ட்ஸ் [Associate Director, NIF National Ignition Facility for Fusion Power]
பிண்டம் ! சக்தி ! அணுப்பிணைவுச் சக்தி !
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் ! அதுபோல், அமைதிக் காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தியை உற்பத்தி செய்யப் போகிறார்கள்.
கட்டுரை ஆசிரியர்
“அணுசக்தி ஆற்றல் உற்பத்தியில் அணுப்பிணைவு (Nuclear Fusion) முறைப்பாடு சூழ்வெளிப் பசுமைப் பண்பாடு மின்சாரமாகக் கருதப்படுகிறது. அது அணுப்பிளவு (Nuclear Fission) முறைப்பாடை விட சூழ்வெளித் துர்மாசுக்கள் மிகவும் குறைவானது.”
ஜாப் வாண்டர் லான் – நெதர்லாந்து எரிசக்தி ஆய்வு மையம். (June 28, 2005)
அணுப்பிணைவுச் சோதனையில் செய்த ஒரு பெரும் சாதனை
காலிஃபோர்னியாவின் வாரென்ஸ் லிவர்மோர் தேசீய சோதனைக் கூடத்தில் [Dept of Energy’s Lawrence Livermore National Lab] [National Ignition Facility- NIF] ஆராய்ச்சியாளர்கள் அணுபிணைவு சக்தி வெளியீட்டில் ஒரு நூதனச் சாதனையைச் சோதனையின் போது செய்து காட்டினர். தேசீய அணுப்பிணைவுத் தூண்டல் யந்திரத்தில் [National Ignition Facility – NIF] ஒருமித்த ஆற்றல் மிக்க 192 லேசர் ஒளிக்கதிர்களை உண்டாக்கி [1.8 மெகா ஜூல்ஸ் சக்தியில்] (megajoules of energy) முதன்முதல் 500 டெட்ரா வாட்ஸ் மின்சார ஆற்றலை [tetrawatts power – 10^12 watts] உருவாக்கினர். இந்த அசுர மின்னாற்றல் ஒரு கணத்தில் அமெரிக்கா பயன்படுத்தும் மொத்த மின்சார யூனிட்டுகளை விட 1000 மடங்கு ஆகும். அதாவது பூமியிலே ஒரு குட்டிச் சூரியனை முதன்முதல் உண்டாக்கி விட்டார்.
சூரியன் போல் அணுப்பிணைவு நியதியில் பேரளவு வெப்ப சக்தி வெளியாக்கச் செய்யும் சோதனையில் முதன்முதல் சுயமாய்ப் அணுப்பிணைவுத் தொடரியக்கம் நீடிக்கச் செய்து பேரளவு மின்னாற்றலை உற்பத்தி செய்தனர். இவ்வரிய தகவல் செய்தி, பிளாஸ்மா ஒளிப் பிழம்பு பௌதிக இதழில் [Journal Physics of Plasmas] சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது. ஆயினும் அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி வாணிப நிலைக்கு வர, இன்னும் மூன்று முக்கிய இடையூறுகள் தீர்க்கப்பட வேண்டும்.

சுய நீடிப்பு அணுப்பிணைவு இயக்க சக்திக்கு நேரும் மூன்று இடையூறுகள் :
1. விசைகள் சமநிலைப்பாடு [Equilibrium of Forces] :
பிளாஸ்மா ஒளிப் பிழம்பு மீது இயங்கும் உந்துவிசைகள் சமநிலைப் படவேண்டும். இல்லாவிட்டால் பிளாஸ்மா ஓரினத் தன்மையின்றி முறிந்து போகும். இந்த விசைச் சமன்பாடு இழப்பு முதல் இடையூறு. அதற்கு முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement] ஓர் விதிவிலக்கு. அதனில் பௌதிக இயக்கம் பிளாஸ்மா முறிவதற்குள் விரைவாக நிகழ வேண்டும்.
2. பிளாஸ்மா நீடிப்பு [Plasma Stability] :
பிளாஸ்மா ஒருமைப்பாடு சிறு ஏற்ற இறக்கம், குறைவு நிறைவு செய்யப் பட்டு முதல் வடிவத்துக்கு மீள வேண்டும். இல்லா விட்டால் பிளாஸ்மாவில் தவிர்க்க முடியாத பாதிப்புகள் நேரிடும். பிறகு அந்த தவறு செங்குத்தாக ஏறி பிளாஸ்மா முற்றிலும் அழிந்து போகும்.
3. துகள்கள் போக்கு [Transport of Particles] :
துகள்கள் இழப்பு பாதைகள் பூராவும் மிகவும் குறைய வேண்டும். அதைக் கசிய விடாமல் காப்பது முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement].
அணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விரைவில் வாணிப நிலைக்கு விரைவில் வரலாம் அல்லது சற்று நீடிக்கலாம். எப்படியும் 2050 ஆண்டுக்குள் அணுப்பிணைவு மின்சக்தி வர்த்தக ரீதியில் மி விளக்குகளை ஏற்றிவிடும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
“சூழ்வெளிக் காலநிலை மாற்றாமல் பேரளவு மின்சக்தி ஆக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு முயற்சியில் அணுப்பிணைவுச் சக்தி விருத்தி அடையப் பிரான்சில் விரைவாகக் கட்டப் போகும் அகில நாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) ஒரு பெரும் வரலாற்று மைல் கல்லாகக் கருதப்படுகிறது.”
பேராசிரியர் கிரிஸ் லிவெல்லின் ஸ்மித் (UK Atomic Energy Agency) (June 28, 2005)
“அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமான வேலைகள் 2005 ஆண்டு இறுதியில் துவங்கும். திட்டத்தின் பொறித்துறை நுணுக்க விளக்கங்கள் யாவும் இப்போது முடிவாகி விட்டன. அகில நாடுகளின் முழுக் கூட்டுழைப்பில் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) பூரணமாகி இத்திட்டம் முன்னடி வைப்பதில் நாங்கள் பூரிப்படைகிறோம்.”
பையா ஆரன்கில்டே ஹான்ஸன் (European Commission) (June 28, 2005)

“கடந்த 15 ஆண்டுகளாக அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைத் (ITER) திட்ட அமைப்பில் பங்களித்து அது நிறுவனமாகச் சிக்கலான உடன்பாடுகளில் உதவி செய்தது குறித்து, அணுசக்திப் பேரவை (IAEA) பெருமகிழ்ச்சி அடைகிறது. மேலும் பரிதியை இயக்கும் மூலச்சக்தியான அணுப்பிணைவுச் சக்தியை விஞ்ஞானப் பொறியியல் சாதனங்களால் பூமியில் உற்பத்தி செய்யக் கூடுமா என்று ஆராயும் அத்திட்டத்துக்கும் அணுசக்தி பேரவை தொடர்ந்து உதவி புரியும்.”
வெர்னர் புர்கார்ட் (Deputy Director General & Haed IAEA Nuclear Science and Applications) (June 28, 2005)
“அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) கூடிய விரைவில் இயங்க ஆரம்பித்து உலக மாந்தர் அனைவருக்கும் எதிர்காலத்தில் மின்சக்தி அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.”
நரியாக்கி நகயாமா (ஜப்பான் விஞ்ஞான அமைச்சர்) (June 28, 2005)
பிரான்சில் புது அணுப்பிணைவு மின்சக்திச் சோதனை நிலையம்முதல் அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமானத் திட்டத்தில் ஜப்பான் தேசம் கடுமையாகப் போட்டி யிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றது பிரான்ஸ். அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) அடுத்தபடி வெப்ப அணுக்கருச் சோதனை நிலைய அமைப்பே நிதிச் செலவு மிக்க (12 பில்லியன் டாலர் திட்டம்) ஓர் திட்டமாகக் கருதப் படுகிறது ! வெப்ப அணுக்கருச் சக்தி எனப்படுவது பரிதி ஆக்கும் அணுப்பிணைவுச் சக்தியைக் குறிப்பிடுகிறது. இதுவரைச் சூழ்வெளியை மாசுபடுத்திய அணுப்பிளவு, நிலக்கரி போன்ற பூதள எருக்கள் (Fission & Fossil Fuels) போலின்றி ஒப்புநோக்கினால் பேரளவு தூயதானது அணுப்பிணைவுச் சக்தியே (Fusion Energy) !
பதினெட்டு மாதங்கள் தர்க்கத்துக்கு உள்ளாகி முடிவாக ஜூன் 28 2005 ஆம் தேதி மாஸ்கோவில் ஆறு உறுப்பினர் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) உடன்பட்டு அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலையைக் [International Thermonuclear Experimental Reactor (ITER)] கட்டுமிடம் பிரான்ஸாக ஒப்புக் கொள்ளப் பட்டது. ITER திட்டத்தின் முக்கிய பங்காளர்கள் ஈரோப்பியன் யூனியன் (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, டென்மார்க், ஆஸ்டியா, நெதர்லாந்து, போலந்து, ஸ்வீடன். . . ), ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா). நிதிப் பங்களிப்பில் ஈரோப்பியன் யூனியன் 50% தொகை அளிப்பை மேற்கொண்டது. பிரான்ஸில் இடத்தேர்வு : மார்சேல்ஸ் நகருக்கு 60 கி.மீ. (37 மைல்) தூரத்தில் இருக்கும் “கடராச்சே அணுவியல் ஆராய்ச்சி மையம்” (Cadarache in France).

அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையத்தின் விபரங்கள்
வியன்னாவில் இருக்கும் அகில நாட்டு அணுசக்திப் பேரவை தலைமை அகத்தில் நீண்ட காலக் குறிக்கோள் திட்டமான அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தின் முன்னடி வைப்பு 2005 ஜூன் 28 ஆம் தேதியில் ஒரு பெரும் விஞ்ஞானச் சாதனையாக வெற்றிவிழாக் கொண்டாடப் பட்டது ! அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப் பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது ! அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் ! பன்னாட்டுப் பொறித்துறை வல்லுநர்கள் ! இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் ! அதுபோல், அமைதி காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யப் போகிறார்கள் !
அணுப்பிணைவுச் சோதனை நிலையம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.
— நிலைய மின்சார உற்பத்தி : 500 MW
— நியூட்ரான் சக்தி : 14 MeV (Million Electron Volt).
— காந்த மதில் ஆற்றல் தகுதி : 0.57 MW/Square meter
— பிளாஸ்மா (கனல் பிழம்பு) பெரு ஆரம் : 6.2 மீடர்.
— பிளாஸ்மா (கனல் பிழம்பு) குறு ஆரம் : 2.0 மீடர்
— பிளாஸ்மா மின்னோட்டம் : 15 MA (Million Amps)
— பிளாஸ்மா கொள்ளளவு : 837 கியூபிக் மீடர்.
— வளையத்தின் காந்த தளம் 6.2 மீடரில் 5.3 T (Toroidal Field)
— நிலைய யந்திரங்கள் இயக்கத் தேவை : 78 MW
— நிலையத் திட்டச் செலவு : 15 பில்லியன் டாலர் (2015 நாணய மதிப்பு)++++++++
அணுப்பிணைவுச் சக்தி எப்படி உண்டாகிறது ?சூரியனிலும் சுயவொளி விண்மீன்களிலும் ஹைடிரஜன் வாயுவை மிகையான ஈர்ப்பு விசை அழுத்தத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் பிளாஸ்மா நிலையில் (கனல் பிழம்பு) இணைத்து அணுப்பிணைவுத் தொடரியக்கத்தில் ஹீலிய வாயும் வெப்பச் சக்தியும் வெளியாகின்றன. அந்த வெப்ப மோதலின் விளைவில் உயர்சக்தி நியூட்ரான்களும் (High Energy Neutrons) எழுகின்றன ! ஹைடிரன் ஏகமூலங்களான (Isotopes of Hydrogen) டியூடிரியம் & டிரிடியம் (50% Deuterium & 50% Tritium) அணுப்பிணைவு எருக்களாகப் பயன்படுகின்றன. ஹைடிஜன், டியூடிரியம், டிரிடியம் மூன்று வாயுக்களின் அணுக்கருவிலும் ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. ஆனால் டியூடிரியத்தில் ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் உள்ளன. டிரிடியத்தில் ஒரு புரோட்டானும், இரண்டு நியூட்ரான்களும் இருக்கின்றன. அவை பேரளவு உஷ்ணத்தில் (100 மில்லியன் டிகிரி செல்சியஸ்) பிளாஸ்மாவாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து ஹீலியமாகின்றன. அந்த உஷ்ணம் பரிதியின் உட்கரு உஷ்ணத்தை விட 10 மடங்கி மிகையானது !
அணுப்பிணைவுக்கு அத்தகைய மிகையான உஷ்ணம் ஏன் தேவைப் படுகிறது ? பரிதியின் வாயுக் கோளத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணம் உண்டாவதற்கு அதன் அசுர ஈர்ப்புச் சக்தி அழுத்தம் கொடுக்கிறது. அந்த உஷ்ணத்தில் அணுக்கருக்கள் ஒன்றை ஒன்று இழுத்துச் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் மனிதர் உண்டாக்கும் அணுப்பிணைவு உலையில் அத்தகைய அழுத்தம் ஏற்படுத்த முடியாததால் அணுப்பிணைவை உண்டாக்க சூரியனைப் போல் பத்து மடங்கு உஷ்ண நிலை [100 மில்லியன் டிகிரி C.] தேவைப்படுகிறது. அந்த அழுத்தத்தை எப்படி உண்டாக்குவது ?
1. வாகன எஞ்சின் போல் பிஸ்டன் மூலம் வாயுக்களில் அழுத்தம் உண்டாக்கி வாயுக்களில் உஷ்ணத்தை அதிகமாக்கலாம்.2. மின்சார ஓட்டத்தை ஏற்படுத்தி வாயுக்களில் உஷ்ணப் படுத்தலாம்.
3. வாயுக்களை ஓர் அரணுக்குள் உயர்சக்தி நியூட்ரான்களால் தாக்கி உஷ்ணத்தை மிகையாக்கலாம்.
4. நுண்ணலைகள் (Microwaves) மூலம் அல்லது லேஸர் கதிர்களால் (Laser Beams) வாயுக்களில் உஷ்ணத்தை மிகைப்படுத்தலாம்.
மூன்று முறைகளில் பிளாஸ்மா கனல் பிழம்பை உண்டாக்கலாம்:
1. பிளாஸ்மா அரண் (Plasma Confinement) (பரிதி, விண்மீன்களில் உள்ளதுபோல்)
2. முடத்துவ முறை (Inertial Method).
3. காந்தத் தளமுறை (Magnetic Method).
சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து!
சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன! 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது! தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K! சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth ‘s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது! சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன்வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும்! ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா ?
1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை! அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது! ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான்! ஆனால் அந்த நிலையத்தை வர்த்தக முறையில் உருவாக்கி இயக்குவதுதான் உலக எஞ்சினியர்களுக்கு மாபெரும் போராட்டமாகவும், திறமையைச் சோதிப்பதாகவும் இருந்து வருகிறது!
அணுப்பிணைவை ஆய்வுக் கூடத்தில் எவ்வாறு ஆக்குவது ?
ஹைடிரஜன் வாயுவுக்கு இரண்டு ‘ஏகமூலங்கள்’ [Isotopes] உள்ளன. ஒன்று டியூட்டிரியம் [Deuterium], மற்றொன்று டிரிடியம் [Tritium]. ஏகமூலங்கள் என்பவை, ஒரே புரோட்டான் [Proton] எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான் [Neutrons] எண்ணிக்கை யுள்ள மூலகங்கள் [Elements]. ஏகமூலங்கள் ஒரே மின்னீர்ப்பு [Electric Charge] மேவி, வெவ்வேறு அணுப்பளுவைக் [Atomic Mass] கொண்டவை. மூலகங்களின் அணிப் பட்டியலில் [Periodic Tables of Elements], ஏகமூலங்கள் யாவும் ஒரே இல்லத்தில் இடம் பெறுபவை. டியூட்டிரியம் மூலஅணு [Molecule] நீரில் 7000 இல் ஒன்றாக இயற்கையில் இருப்பதை, ரசாயன முறையில் பிரித்து எடுக்க வேண்டும். டிரிடியம் கனநீர் யுரேனிய அணு உலைகள் [Heavy Water Uranium Reactors] இயங்கும் போது, கனநீரில் உண்டாகிறது. கனடாவில் இயங்கும் காண்டு [CANDU] அணு உலைகளில் நிறைய கனநீரும், டிரிடியமும் இருப்பதால், பிணைவுச் சக்தி ஆய்வுக்குத் தேவையான எளிய வாயு மூலகங்கள் [Light Elements] கனடாவில் எப்போதும் கிடைக்கின்றன. ஆராய்ச்சி முறையில் பயன் படுத்திய போது, எளிய மூலகங்களான ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் ஆகியவற்றில், [டியூட்டிரியம் + டிரிடியம்] வாயு இணைப்பே அதிக வெப்ப சக்தியை ஈன்றதால், உலகில் பல நாடுகள் அணுப் பிணைவு உலையில், அவ்விரண்டு வாயுக்களையே எரிப் பண்டங்களாய் உபயோகித்து வருகின்றன. இந்த இயக்கம் தூண்டுவதற்கு வேண்டிய உஷ்ணம், 80 மில்லியன் டிகிரி C.
டியூட்டிரியம் +டிரிடியம் –> ஹீலியம் +நியூட்ரான் +17.6 MeV சக்தி Deuterium +Tritium –> Helium +Neutron +17.6 MeV Energyஇருபதாம் நூற்றாண்டில் உருவான மிக மேம்பட்ட ஆய்வுப் பிணைவு உலை [Fusion Reactor] ‘டோகாமாக்’ [Tokamak] என்பது, காந்தக் கம்பிகள் சுற்றப் பட்டு டோனட் [Donut] வளையத்தில் அமைந்த ஒரு பிரம்மாண்ட மான மின்யந்திரம். ‘டோகாமாக் ‘ என்பது ரஷ்யச் சுருக்குப் பெயர். அதன் பொருள்: வளை காந்தக் கலம் [Toroidal Magnetic Chamber]. அதனுள்ளே பேரளவு காந்தத் தளத்தைக் கிளப்பி பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் மின்னியல் வாயுப் பிழம்பை [Plasma] உண்டாக்கி வளையச்சுவர் கடும் வெப்பத்தில் உருகிப் போகாமல் உள்ளடக்க வேண்டும்! இத் தேவைக்கு உகந்த உலோகம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை! பிண்டம் நான்கு வித வடிவுகள் [Four States of Matter] கொண்டது. திடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas & Plasma]. வாயு அதிக உஷ்ணத்தில் நேர், எதிர் மின்னிகளாய்ப் [Positive, Negative Ions] பிரிந்து பிழம்பு வடிவாக மாறி மின்கடத்தி [Electrical Conductor] யாகிறது. பிணைவுச் சக்தியை மூலமாகக் கொண்டு இயங்கும் மின்சக்தி நிலையத்தில், ஹீலிய வாயு பிழம்பின் வெப்பப் போர்வையாகவும், கடத்தியாகவும் [Helium Blanket for Plasma & Heat Transport Medium] பயன் ஆகலாம். சூடேரிய ஹீலிய வாயு வெப்ப மாற்றியில் [Heat Exchanger] நீராவியை உண்டாக்கி டர்பைன் ஜனனியை [Turbine Generator] ஓட்டச் செய்யலாம். அமெரிக்காவின் மிகப் பெரும் ஆய்வு டோகாமாக், நியூ ஜெர்ஸி பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.

மூன்று வித முறைகளில் அனல் பிழம்பை அரணிட்டு [Plasma Confinement] அணுப்பிணைவு இயக்கம் நிகழ்த்தலாம். முதலாவது முறை ‘ஈர்ப்பியல் அரண் பிணைப்பு ‘ [Gravitational Confinement Fusion]. இம்முறைக்கு சூரிய, சுடரொளி விண்மீன்களில் இயங்கும் பேரளவு உஷ்ணம், வாயுப் பேரழுத்தம் தேவைப் படுகிறது. மனிதனால் இவற்றைப் பூமியில் சாதிக்க முடியாது! அடுத்தது, ‘காந்தவியல் அரண் பிணைப்பு’ [Magnetic Confinement Fusion]. ஆய்வுக் கூடத்தில் இது சாத்திய மானது. 1950 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி முறைக்கு உலகெங்கும் பயன் படுகிறது. இம்முறையில் உருவானதுதான் டோகாமாக் [Tokamak] யந்திரம். அனல் பிழம்பு நீடிக்க, மூன்று முக்கிய நிபந்தனைத் தொடர்புகள் பொருந்த வேண்டும்: உஷ்ணம், காலம், அடர்த்தி [Temperature, Time & Density]. 200 மில்லியன் டிகிரி உஷ்ணப் பிழம்பு சில வினாடிகள் நீடிக்க, வாயு அடர்த்தி ஓரளவு தேவை. இந்த உறவை ‘லாசன் நியதி ‘ [Lawson Criterion] என்று கூறுவர். மூன்றாவது முறை: ‘முடவியல் அரண் பிணைப்பு’ [Inertial Confinement Fusion]. இதில் லேசர் வீச்சுக் கதிர்களைப் [Laser Beams] பாய்ச்சி உள்வெடிப்பு [Implosion] நிகழ்த்தி அனல் பிழம்பு உண்டு பண்ணிப் பிணைப்பு சக்தி ஏற்படுத்துவது. இம்முறை பெரும்பாலும் அணு ஆயுதம் [Nuclear Weapons] தயார் செய்ய, யுத்த விஞ்ஞானிகளுக்குப் பயன் படுகிறது.

அணுப்பிணைவுச் சக்தியின் நிறைபாடுகள்! குறைபாடுகள்!
பிணைவுச் சக்தி பிளவுச் சக்தியை விட பல முறைகளில் மேன்மை யுற்றது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிர் இனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] அதிக அளவு இல்லை! பிணைவுச் சக்தியால் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே! அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவுச் சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் பல உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது! பிணைவு உலைகளில் எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை! அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங் களுக்குத் தீங்கு தருவன அல்ல! அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை! பிணைவு இயக்கம் ரசாயனத் தீயின் கடும் விளைவுகளை உண்டாக்காது! மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி வாயுக்கள் ஹைடிரஜன், டியூட்டிரியம் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கிறது. எதிர் காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வாயு எரி பொருளுக்குப் பஞ்சமே இருக்காது!
ஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன! கால தாமதம் ஆவதால், இன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது! அடுத்து உலையில் பயன்படும் லிதிய [Lithium] திரவம் ரசாயன இயக்க உக்கிரம் உடையது! அதன் விளைவு களையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு அதி உன்னத சூன்ய நிலை [High Vacuum] உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டும்! விசை மிக்க மின்காந்த அமுக்கமும், வேறுபாடு மிக்க கடும் உஷ்ண ஏற்ற இறக்கத்தால் நேரும் வெப்ப அழுத்தமும், அதி உக்கிர நியூட்டிரான் கணைத் தாக்குதலால் நிகழும் அடியும், தாங்கிக் கொண்டு நீண்ட காலம் உறுதியாக இயங்கும், நிலையச் சாதனங்களைக் கண்டு பிடிப்பது சிரமான முயற்சி.அணுப்பிணைவு சக்தி உற்பத்தியின் மேம்பாடுகள்!
அணுப்பிணைவு உலைகளுக்கு வேண்டிய எரு உலக நீர்வளத்தில் எண்ணிக்கை யற்ற அளவு உள்ளது. பேரளவு ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு சக்தி நிலையங்களை அமைப்பது சாத்திய மாகும். மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்கும் தேவையானது சிறிதளவு எருதான்! உதாரணமாக 1000 MWe நிலையத்துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம்! பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம்! அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா! பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனே இணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நின்று விடும். பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை! பிணைவு அணு உலையில் எழும் நியூட்ரான்கள் விரைவில் தீவிரத்தை இழப்பதால் பாதகம் மிகக் குறைவு. உலையின் மற்ற பாகங்களை நியூட்ரான் தாக்குவதால் எழும் இரண்டாம் தர கதிர்வீச்சுகளைக் கவசங்களால் பாதுகாப்பது எளிது. கதிர்ப் பொழிவுகளால் சூழ்மண்டல நாசம், நுகரும் காற்றில் மாசுகள் விளைவு போன்றவை ஏற்படுவதில்லை!
வெப்ப அணுக்கரு நிலையத்தை எதிர்த்து கிரீன்பீஸ் வாதிகள் கூக்குரல் !ஒரு கிலோ கிராம் அணுப்பிணைவு எருக்கள் (Fusion Fuel Deuterium +Tritium) 10,000 டன் நிலக்கரிக்குச் (Fossil Fuel) சமமான எரிசக்தி அளிக்கும் ! இத்தகைய பேரளவுப் பயன்பாடு இருப்பதாலும், சிறிதளவு கதிரியக்கம் உள்ளதாலும் அணுப்பிணைவு எரிசக்தி அகில நாட்டு பொறித்துறை நிபுணரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது ! அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் போன்று அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்களில் நீண்ட கால உயர்நிலைக் கதிரியக்கப் பிளவுக் கழிவுகள் (Long Term High Level Fission Product Wastes) கிடையா ! சில பசுமைக் குழுவாதிகள் 2005 ஜூன் மாத ITER கட்டட அமைப்புத் திட்டத்தை பண விரயத் திட்டமென்று குறை கூறினர் ! அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி செயல் முறைக்கு ஒவ்வாதது என்று தமது நம்பிக்கை இல்லாமையை அவர் தெரிவித்தார். “12 பில்லியன் டாலரில் 10,000 மெகாவாட் கடற்கரைக் காற்றாடிகள் மூலம் தயாரித்து 7.5 மில்லியன் ஐரோப்பிய மக்களுக்கு மின்சாரம் பரிமாறலாம்,” என்று அகில நாட்டு கிரீன்பீஸ் பேரவையைச் சேர்ந்த ஜான் வந்தே புட்டி (Jan Vande Putte) கூறினார். “உலக நாடுகளின் அரசுகள் பணத்தை வீணாக விஞ்ஞான விளையாட்டுச் சாதனங்களில் விரையமாக்கக் கூடாதென்றும், அவை ஒருபோதும் மின்சக்தி அனுப்பப் போவதில்லை என்றும், 2080 ஆம் ஆண்டில் குவிந்து கிடக்கும் “மீள் பிறப்பு எரிசக்தியைப்” (Renewable Energy) பயன்படுத்தாமல் இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் பறைசாற்றினர்.

++++++++++++++++++++++++++++++
தகவல்
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)
20 IAEA Report – France to Host ITER International Nuclear Fusion Project (June 28, 2005)
21 IAEA Report Focus on Fusion By : IAEA Staff
22 IAEA Report – Fusion : Energy of the Future By : Ursula Schneider IAEA Physics Section
World Atom Staff Report.
23 BBC News : France Gets Nuclear Fusion (Experimental) Plant.
24 World : France Chosen to Host Experimental Fusion Reactor Project By : Breffni O’Rourke(June 28, 2005).
25 http://www.thinnai.com/?module=displaystory&story_id= 40203101&format=html(அணுப்பிணை வுச் சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி)
26 http://www.thinnai.com/?module=displaystory&story_id= 40303172&format=html(இருபது ஆண்டுகளில் அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி)
27 http://www.thinnai.com/?module=displaystory&story_id= 40508052&format=html (21 ஆவது நூற்றாண்டின் அணுப்பிணைவுச் சக்தி ஆற்றலுக்கு லேஸர் கதிர்கள்)
28 http://www.thinnai.com/?module=displaystory&story_id= 40709271&format=html(கதிரியக் கம் இல்லாத எதிர்கால அணுப்பிணைவு மின்சக்தி நிலையம்) 29. http://www.popularmechanics.
com/science/energy/next- generation/is-fusion-power- finally-for-real [June 21, 2011] 29 (a) http://ens-newswire.com/2013/
03/28/japan-turns-from- nuclear-fission-to-nuclear- fusion/ [March 28, 2013] 30. http://world-nuclear.org/
info/Current-and-Future- Generation/Nuclear-Fusion- Power/#.UkceJNNza9I [August, 2013] 31. http://www.opli.net/opli_
magazine/eo/2013/laser-fusion- experiment-yields-record- energy-at-llnl.aspx [August 26, 2013] 32. http://en.wikipedia.org/wiki/
National_Ignition_Facility [September 17, 2013] 32(a) http://www.theguardian.com/
environment/2011/aug/23/ fusion-power-is-it-getting- closer [August 23, 2011] 33. http://en.wikipedia.org/wiki/
Fusion_power [September 27, 2013] 34. http://www.world-nuclear.org/
info/Current-and-Future- Generation/Nuclear-Fusion- Power/ [October 2014] 35. Fusion reactors ‘economically viable’ say experts [October 7, 2015]
36. https://en.wikipedia.org/
wiki/Fusion_power [October 26, 2015] 37. http://www.bing.com/images/
search?q=Fusion+nuclear+power+ plants&qpvt [2015] 38. http://www.futuretimeline.
net/blog/2015/10/8.htm#.VjJ3G_ mrRuk [October 8, 2015] +++++++++++++++
S. Jayabarathan (jayabarathans@gmail.com) October 31, 2015
Attachments areaPreview YouTube video Nuclear fusion within reach | Michel Laberge | TEDxKC
Nuclear fusion within reach | Michel Laberge | TEDxKCPreview YouTube video ITER – nuclear fusion power plant prototype
ITER – nuclear fusion power plant prototypePreview YouTube video Focus Fusion: The Fastest Route to Cheap, Clean Energy
Focus Fusion: The Fastest Route to Cheap, Clean EnergyPreview YouTube video The Energy Challenge and the Case for Fusion
The Energy Challenge and the Case for FusionPreview YouTube video LIFE: Laser Initial Fusion Energy System
LIFE: Laser Initial Fusion Energy SystemPreview YouTube video Thermonuclear fusion versus Murphy’s Law
Thermonuclear fusion versus Murphy’s LawPreview YouTube video Koho – Changing Banking In Canada
Koho – Changing Banking In Canada
Fusion Energy: Utopian or Practical?: Andrew Zwicker at TEDxSaintPetersUniversityPreview YouTube video ITER Fusion Power Plant Assembly in France
ITER Fusion Power Plant Assembly in FrancePreview YouTube video Lockheed Martin: Compact Fusion Research & Development
Lockheed Martin: Compact Fusion Research & Development



























