-கவிஜி
அவள்கள் எனது
பார்வையாக, பாதையாக
இருந்தார்கள்…
எங்கெல்லாம் இல்லாமல்
போகிறேனோ….அங்கு
அவள்கள் என்னைக்
கண்டு கொண்டார்கள்…! (more…)
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
வா ! என் கிண்ணம் நிரப்பு! வசந்தக் கனலில்
வருத்தம் எனும் குளிர் மேலங்கிப் பறந்தோடும்;
காலப் பறவைக்குக் குறுகிப் போனது பாதை,
ஆயினும் பறக்கும் பறவை சிறகடித்த படியே!
7. Come, fill the Cup, and in the Fire of Spring
The Winter Garment of Repentance fling:
The Bird of Time has but a little way
To fly — and Lo! the Bird is on the Wing.
பாபி லோனோ வேறு நைசாப்பூர் நகரோ,
கிண்ண மது இனிப்போ இல்லை கசப்போ,
உயிரின் ஒயின் மது கசியும் துளித் துளியாக,
உதிரும் வாழ்வின் இலைகள் ஒவ்வொன் றாக!
8. Whether at Naishapur or Babylon,
Whether the Cup with sweet or bitter run,
The Wine of Life keeps oozing drop by drop,
The Leaves of Life keep falling one by one.
காலைப் பொழுது பூக்கும் ஆயிரம் பூக்கள்
ஆயினும் நேற்றைய பூக்கள் எங்கே போயின?
பூக்கள் தோன்றிய வேனிற் காலம் முதலாய்
ஜாம்சைத், கைகோ பாத் மறைந்து போயின.
9. Morning a thousand Roses brings, you say;
Yes, but where leaves the Rose of Yesterday?
And this first Summer month that brings the Rose
Shall take Jamshyd and Kaikobad away.
+++++++++++++++++++
தகவல்:
1. http://www.acole.com/novels/timuras/khayyam.html
2.http://poetsgraves.co.uk/Classic%20Poems/FitzGerald/rubaiyat_of_omar_khayyam.htm
3. http://www.omarkhayyamrubaiyat.com/text.htm
4. https://en.wikipedia.org/wiki/Rubaiyat_of_Omar_Khayyam [November
17, 2015]
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
“கழிந்து போகும் பகலுக்கும், சூழ்ந்து வரும் இரவுக்கும் இடையே உதிரும் நமது வாலிபத்துக்கு வருந்தி, தெரியாத ஒருத்திக்கு ஏங்கிப் பலமுறைக் கரிய வெற்று வானை வெறித்து நோக்கி, மௌனத்தின் முணுமுணுப்பைக் கேட்டு ஒன்றுமில்லாததற்கு எல்லாம் அலறிக் கொண்டு நின்றோம்.
யுகங்கள் கடந்து விட்டன ஓநாய்கள் சமாதிகளுக்குள் அடங்கியதைப் போல் ! ஆனால் இப்போது வானம் வெளுத்து விட்டது. நாம் அமைதியோடு தெய்வீக மெத்தைகளில் ஓய்வெடுக்கலாம். நமது ஆசைகளை அணைத்து நம் எண்ணங்களை, கனவுகளை நிறைவேற்ற வரவேற்கலாம்.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
___________________
நீதானா அவன் ?
___________________
நீ தானா
துன்பத் தொட்டிலில்
தோன்றியவன் ?
இடர்ப்பாட்டின் மடியில்
அடக்கு முறை இல்லத்தில்
வளர்ப் பானவன்
நீ தானா ?
உலர்ந்து போன ரொட்டியைக்
கண்ணீரில் ஈரமாக்கி
உண்பவன் நீ தானா ?
உதிரமும், கண்ணீரும் கலந்த
சகதி நீரைப்
பருகி வருபவன்
நீ தானா ?
___________________
பேராசை பிடித்த உனது
நாட்டுத் தலைவன்
காட்டுத் தனமாய்க்
கடமை விதி யென்ற
கட்ட ளைக்குக்
கீழ்ப்படிந்து
மனைவி மக்களைப் பிரிந்து
உடைவாள் ஏந்திப்
போர்க் களத்துக்குப் போகும்
படைவீரன் நீ தானா ?
___________________
நீ யொரு கவிஞனா ?
சகத் தோழர்
அறியாத அன்னியனாய் –
பிறந்த நாட்டில்
தற்காலிய மனித னாகத்
தங்கு பவனாய் –
பிரிவு பட்ட வாழ்க்கையில்
திருப்தி அடைப வனாய் –
தோலும் மையும்
எழுதப் பெற்றதில்
களித்துப் போய்க் –
காலம் தள்ளும் நீயொரு
கவிஞனா ?
___________________
நீ யொரு
சிறைக் கைதியா ?
மனிதனை வஞ்சித்து
நேராக மாற்ற நினைக்கும்
நீசர்கள்
ஓரிருட் டறையில்
உன்னைத் தள்ளி
சிறு குற்றம் ஒன்றுக்குத்
தண்டிக்கப் பட்ட
சிறைக் கைதியா நீ ?
___________________
-மேகலா இராமமூர்த்தி
திரு. பிரேம்நாத் திருமலைசாமி எடுத்துள்ள இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமை இதழின் நன்றி.
பிள்ளைக்கனியமுதின் கருவிழிகள் அருவியாய் நீரைப் பொழிவது முடியிழந்த துக்கத்திலா? இல்லை… ’மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம் பழித்ததை ஒழித்துவிடுங்கள்’ எனும் வள்ளுவத்தை அறியாதோராய் மக்கள் இருக்கிறார்களே எனும் துயரத்திலா?
காரணம் எதுவானாலென்ன கண்மணியே…விரைவில் திருமுடி பெறுவாய்! சிந்தும் கண்ணீரை நிறுத்து! முகத்திலே புன்னகையைப் பொருத்து!
இந்த அழகுக் குழந்தையின் அழுகையைப் பற்றி நம் கவிஞர்களின் கருத்தென்ன என்று அறிந்துவருவோம் இனி!
***
’முடியிழந்தாலும் நீ முழுநிலவுதானம்மா! இன்றுன்னை அரவணைக்கும் அருமைத் தந்தையை நாளை நீ மறக்காதே!’ என்று மழலைக்கு இன்மொழிகள் பகர்கின்றார் திரு. ஜெயராமசர்மா.
மொட்டை அடித்தாலும்
முழுநிலவு நீயம்மா
முடிமுழைத்த பின்னாலே
முழுநிறைவு பெற்றிடுவாய் !
அப்பாவின் அரவணைப்பில்
அழுகின்ற நீபின்னர்
அப்பாவை அணைத்துநிற்க
அருவருப்புக் காட்டாதே !
***
கண்ணே! உன் பெற்றோர் உனக்குச் செய்வன எல்லாம் உன் நன்மை கருதியே என்பதை உணர்வாய்! மேன்மேலும் வாழ்வில் உயர்வாய்!’ என்று நல்லுரை நவில்கின்றார் திரு. தாரமங்கலம் வளவன்.
முதல் மொட்டை
குலதெய்வத்திற்கோ, பழனி முருகனுக்கோ
போட்டே ஆக வேண்டும்..
மொட்டை போட்டால்தான்
உன் முடி கருகருவென்று அடர்த்தியாய் வளரும்..
இன்று ஆரம்பித்து பெற்றோர் உனக்கு
செய்யும் ஒவ்வொரு காரியமும் உன்
எதிர்கால நன்மைக்கே என்று புரிந்து கொள்.
நீ சற்று வளர்ந்து பெரியவளானதும்
உன்னை பள்ளிக்கு அனுப்பும் போது
அழாதே..
அது உன் வளமான எதிர்காலத்திற்கு என்று மனதில் கொள்..
இன்னும் சற்று வளர்ந்த பின்
உன்னை படி, நல்ல மதிப்பெண் எடு
என்று பெற்றோர் சொன்னால்
அவர்கள் மேல் கோபம் கொள்ளாதே…
அதுவும் உன் எதிர்கால நன்மைக்கே என்று புரிந்து கொள்..
உன் கல்லூரிக்காலத்தில்–
நல்ல பழக்கங்களையும், நல்ல நண்பர்களையும்
மட்டுமே வைத்துக் கொள் என்று
பெற்றோர் உனக்கு அறிவுரை சொன்னால்
உதாசீனப் படுத்தாதே..
ஏற்றுக் கொள்..
***
குலசாமிக்காகத் தரும் முடிகாணிக்கை உன் குலம் காத்திடும்! சத்தமிடாமல் சற்றே உன் தலையைக் காட்டு! என்று கொஞ்சுமொழி கூறிக் குழந்தையை அழைக்கின்றார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.
பிள்ளை யழுகையிலே பெற்றவுள்ளம் நோகிறதே
துள்ளு மழகே துவளாதே !- முள்ளாகக்
குத்தியதோ கண்ணே ! குலச்சாமி காத்திடும்
கத்தாமல் நீசற்று காட்டு .
***
’தனக்கு மொட்டை போட்டதற்காக அழவில்லை இப் பெண்மகவு; நாளை வரதட்சணை என்ற பெயரில் இச்சமுதாயம் தன் தகப்பனுக்குப் போடப்போகும் மொட்டையை நினைத்தே அழுகின்றது’ என்று சமூக அவலத்தைக் குழந்தையின் வாயிலாய்ச் சாடுகின்றார் திரு. மெய்யன் நடராஜ்.
தாய்மாமன் மடியில் வைத்துத்தம்
பெண் குழந்தைக்கு மொட்டை அடிக்கும்
தாய்மார்கள் அறிவதேயில்லை.
மொட்டையடித்தல் பற்றியறியா
மாமன்மார்கள் பிற்காலத்தில்
தம் மகன்மூலம் தம்கணவர் சொத்தையெல்லாம்
மொட்டையடிப்பர்கள் என்னும் உண்மை .
மொட்டையாகும் தலைக்காக
குழந்தை அழவில்லை நாளை
தகப்பனை மொட்டையடிக்கப்
போகிறார்களே என்றழுகிறதெனும்
உண்மை தகப்பன் மாருக்கே புரியும் உண்மை .
இனி இங்கே காதுகுத்தி
இத்துனூண்டு தங்கத்தைப் போட்டுவிட்டு
பவுன்கணக்கில் கேட்கப் போகிறார்களே
என்று புலம்பி அழும் குழந்தையை
புரிந்துகொள்ள இன்னும் நாம்
பதினெட்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்
***
’தலைக்கனம் குறையத் தலைமுடி யிழப்பாய்; இழந்ததை விரைவில் பெறுவாய் பலமடங்காய்!’ என்று மனமினிக்கும் மணிமொழிகளை இம்மழலைக்குச் செப்புகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
தலை தலையாய்
வேண்டுதல் இந்த
வேண்டு தலை
கடந்த ஜென்மத்து
பந்தங்களை துண்டிக்க
இந்த வேண்டு தலை
இந்துக்களின் முக்கிய சடங்கு
குல தெய்வத்துக்கு
முடி கொடுத்தால்
முடி மட்டுமல்ல
குழந்தையும் ஆரோக்கியமாய்
வளரும் என்பது ஐதீகம்
தலைக்கனம் போக
தலைமுடி தருவாய்
பார் பார் உனக்கு முடி
எப்படி வளரப்போகுதுன்னு
அழாமல் முடிகொடு சாமிக்கு
அடுத்துக்கொடுப்பார் சாமிசீக்கிரமே
ஆறடி க்கூந்தலை உனக்கு
***
செல்லமே! தாய்மாமன் மடியினிலே தலைமுடிக்கு விடு’தலை’ தந்து சாமி வேண்டு’தலை’ நல்லபடி செய்திடுவோம் என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
தாய்மாமன் மடியினிலே முடியிழப்பது ஓர் இன்பம்.
தாய்மாமன் தன்மடியில் தாங்கிப் பிடித்திட்டார்,
ஓய்வின்றி வேண்டாம் அழுகையும்தான் – சாய்ந்திடாதே
செல்லமே சொல்கேளு, சொந்தசாமி வேண்டுதலை
நல்லபடிச் செய்திடுவோம் நாம்!
***
முடி இறக்குவதற்காக நிகழ்த்தப்படும் இத்திருவிழா, உறவுகள் கூடி உணர்வையும் உணவையும் பரிமாறிக் கொள்ளும் ஓர் உன்னதத் திருவிழா என்று உளம்பூரிக்கின்றார் திரு. க. கமலகண்ணன்.
முடியை கொடுப்பது
சம்பிரதாயம் மட்டுமல்ல
மகிழ்ச்சியின் திருவிழா
உறவுகளின் அன்பின் ஒற்றுமைக்கு
உணர்வு கொடுக்கும்
ஆத்மார்த்த நிகழ்வு
மாமன் மடியில் வைத்து
மொட்டை போட
அத்தை ஆறுதல் சொல்ல
மற்ற உறவுகள் உணவுக்கும்
உணர்வுக்கும் உதவி செய்ய
குழந்தைக்கு தலைமுடி
எடுத்தால் இன்னும்
ஆரோக்கியம் என்ற
உண்மையான காரணத்திற்காக
முன்னோர்கள் செதுக்கி
வைத்த சிற்பம் போன்ற
நல்வாழ்வின் வழிமுறைகள்
அழாதே தங்கம்
நீ ஆரோக்கியமாய்
நீடூடிவாழ்வாய்
***
மாற்றவியலாத மூடவழக்கங்களில் முடி வழித்தலும் ஒன்று என்றாலும், இதனால் குழந்தையின் முடி அடர்ந்து வளரும் என்பது இதிலோர் சாதகமான அம்சம் என்கிறார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.
பிறந்த முடி வழித்தலென்று
பிறந்த முப்பதாம் நாள்
சிறப்பாகத் துடக்குமுடி வழிப்பர்
மறக்காது சந்தனமிட்டுக் குளிர்விப்பார்.
குழந்தை கதறக் கதற
வழங்கும் வழக்கங்கள் கொடுமை!
புனித அறிவைப் பாவிக்கலாம்!
மனித வேண்டுதல்களிற்கு அளவில்லை!
மூட வழக்கமென்று இதற்கு
மூடுவிழா வைத்தாலும் பல
தடவை வழித்தால் முடி
அடர்த்தியாக வளருமென்பதும் வழக்கு.
பொது உறவு கூடல்
இது சடங்கு என்று!
மாற்ற நினைத்தாலும் மாறாது
போற்றும் நிகழ்வு இது!
***
தந்தை சிரித்திருக்க, குழந்தையோ அழுதிருக்க நிகழும் இந்த முடிகாணிக்கைச் சடங்கானது, இறைவனிடம் சரணடையும் தத்துவத்தின் குறியீடு என்கிறார் திரு. நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன் .
திருக்கோவிலில் முடி காணிக்கை செலுத்துவது
இறைவனிடம் சரணாகதியாகும் சம்பிரதாயம்
திருக்கோவிலில் முடி காணிக்கை கொடுக்கும் போது
தந்தை சிரிக்கிறார்
மகன் அழுகிறார்
முடி வளர்ந்து மகன் வளர்கிறார்
மகன் தந்தையைகிறார்
தந்தை தாத்தவாகிறார்
பேரனும் திருக்கோவலில் முடிகாணிச்கை செலுத்துகிறைரர்
முடிசூடி மன்னாராகத் திகழ்கின்றார்
***
சிறந்த கவிதைகள்; பரந்த சிந்தனைகள். கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!
இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அடுத்துக் காண்போம்!
பிள்ளைப்பருவத்தில் முடிமீது வைக்கும் ’பற்று’ வளர்ந்தபின்னும் மனிதர்கட்கு விடுவதில்லை! ’பற்றற்றவன் பற்றைப் பற்றுவது ஒன்றுதான் பற்றை விடுதற்கு உற்றவழி’ என்பார் வள்ளுவப் பெருந்தகை. அஃது அத்துணைச் சுலபமன்று அல்லவா?
’குழந்தாய்! அம்மான் மடியே ஆசனமாய், தருவாய் முடியைக் காணிக்கையாய்! அடைவாய்…நீ இழந்த முடியை விரைவாய்!’ என்று பிஞ்சுக் குழந்தைக்கு வாழ்வியல் உண்மைகளைப் பக்குவமாய் ஊட்டுகின்றது ஒரு கவிதை!
முடி இழக்கும் போதும்
முடி துறக்கும் போதும்
அழுவதும் சிரிப்பதும்
அவரவர் இயல்பே…..
ஆனால் குழந்தாய்
அம்மான் மடியில்
அமர ஓர் சிம்மாசனம்
அழகாய்த் தரும்முடி காணிக்கை…
மகிழ்வாய்க் கொடுக்க
மனமகிழும் ஆண்டவனும்
உறவும் சுற்றமும்
ஒன்றுகூடும் வழிபாடு……
இதுதான் வாழ்வின்
இனியதொரு தொடக்கம்…
இனிமேல் நிகழ்வன
எல்லாமிதில் அடக்கம்…
இழந்த முடியழகு
இன்னும் அழகூட்டும் மொட்டை….
இது ஓர் ஒத்திகை
இங்கினி யாரும் நமை
அடித்திடக்கூடாது மொட்டை…..
இழந்தன எல்லாம்
மீளத் திரும்பிடும்…..
சிரசில் முடியும்
செவ்வனே வளரும்,
அழகும் மிளிரும்…
அது ஓர் தத்துவம்
அறிந்தவர் அறிவாராக!
தத்துவக் கருத்துக்களை எளிமையாய்த் தந்திருக்கும் இக்கவிதையை இயற்றிய திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.
***
இந்தக் கருப்புவெள்ளைப் புகைப்படத்தின் நீட்சியை… காலவோட்டத்தில் இம்மழலைக்குக் கேசம் வளர்ந்திடும் காட்சியை…மனக்கண்ணில் வண்ணப்படமாய் விரிக்கும் கவிதை ஒன்று!
கருப்பு வெள்ளை
புகைப் படத்தை
உற்றுப் பார்த்துக்
கொண்டேயிருந்தேன்…..
மெல்லத் துளிர் விடத்
தொடங்கியது….
கால
ஓட்டத்தின்
வண்ண கேசங்கள்…
புகைப்படக் காட்சியோடு சிந்தனையின் பரப்பை வெட்டிவிடாமல், அதையும் தாண்டிக் கற்பனைச் சிறகை அகல விரித்திருக்கும் திரு. கவிஜியின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிடுகின்றேன்.
தம் புதுமைக் கருத்துக்கள் வாயிலாய்ப் புகைப்படங்களுக்குப் புதிய வண்ணங்களைத் தீட்டிவரும் கவிஞர் பெருமக்களுக்கு என் நன்றி!
பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமென
கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் -உள்ளமே
கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
வள்ளலென மாறும்காண் வாழ்வு ….கிரேசி மோகன்….
கண்ணன் அருளாலே கூகிள் கடோத்கஜன்,
எண்ணிக்கை ஐம்பதை எட்டுகிறது , -இன்னுமோர்,
ஆயிரம் ஆக்கிட ஆழ்வார்நா லாயிரனே,
தாயிடம்கட் டுண்டோய் தயவு ….கிரேசி மோகன்….

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
+++++++++
அணுக்கருத் தொடரியக்கம் புரிந்து
அணுசக்தி ஆக்கினார்.
உயிரியல் விஞ்ஞானத்தில்
முதன்முதலாய் டியென்ஏ உயிரின
மூலம் கண்டார்,
அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும்
செர்ன் விரைவாக்கி யந்திரம்
பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய்
அரங்கேற்றி உருவாக்கும்;
கடவுள் துகள் !
தடத்தைக் கண்டதாய்
அறிவிக்கும்.
ஒளிவேகத் துக்கு ஒட்டிய விரைவில்
எதிர் எதிரே
புரோட்டான்கள் மோதி
சக்தியைத் துகளாய் மாற்றும் !
கனமான நுண் துகளே
பரமாணுக்கு நிறை அளிக்கும்
கடவுள் துகள் !
‘மூவான்’ நுண்துகள் மோதலில்
தோன்றும் !
அணுக்கரு, எதிர் அணுக்கரு
துகள், எதிர்த்துகள்
பிண்டம், எதிர்ப்பிண்டம் உண்டாகும்.
புரோட்டான்கள் மோதிப்
பொரிக்கும் பற்பல
குஞ்சுகள் !
குவார்க்குகள் ! குளுவான்கள் !
அப்போது துகள்களின்
அதி உஷ்ண அளவு
நாலாயிரம் பில்லியன் டிகிரி !
+++++++
இரண்டு அணுக்கருக் கிடையே எழும் மோது சக்தி 1000 TeV [trillion electron volt] ஒரு வண்டு கன்னத்தைத் தாக்கும் அளவு மிகச் சிறியதே. ஆனால் அந்த சக்தியின் திரட்சி மிக மிக நுண்ணிய துகளில் அடைக்கப் பட்டால், அதன் தீவிரம் பன்மடங்கு பெருகி விடும். துகள்களை ஒன்றோடு ஒன்று மோத விடுவதின் காரணம், பெரும்பான்மை இயக்க சக்தியை [Kinetic Energy] பிண்டத் துகள்களாக [Matter -Particles like Quarks ] மாற்றுவதற்கே. இம்மாறுபாட்டை ஐன்ஸ்டைன் பளு-சக்தி சமன்பாடும் [E=MC^2] கூறுகிறது. அப்போது கணப் பொழுதில் மிகச் சிறு வடிவ குவார்க்குள், எதிர்க் குவார்க்குகள், குளுவான்கள் 4000 பில்லியன் உஷ்ணத்துக்கு மிஞ்சிய நிலையை அடைகின்றன.
பேராசிரியர் ஜென்ஸ் ஜார்கன் கார்தோஜி, நீல்ஸ் போர்க் ஆய்வகம், கோபன்ஹேகன். [Head, ALICE Experiment at CERN]
இதுவரை முழு விளைவுகள் ஆராயப்படா விட்டாலும், முதன்முறையாக இரண்டு ஈய அயனிகளுக்கிடையே [Lead Ions] நிகழ்ந்த மோதல்களில் 30,000 மேற்பட்ட துகள்கள் உருவாகின என்பதே விந்தையானது. இதற்குச் சமமான சக்தி திணிவு [Energy Density] 20 GeV/fm^3. அதாவது 40 மடங்கு புரோட்டான் நிறைக்கு ஒப்பானது.
பேராசிரியர் ஜென்ஸ் ஜார்கன் கார்தோஜி, நீல்ஸ் போர்க் ஆய்வகம்
செர்ன் விரைவாக்கியில் பெருவெடிப்பு பின் விளைவுப் பிரபஞ்சத் துகள்கள் படைப்பு
உலகிலே மிக்க ஆற்றல் படைத்த ஐரோப்பிய செர்ன் அணு உடைப்பு யந்திரத்தில் 2015 நவம்பர் 25 ஆம் தேதி விஞ்ஞானிகள் முதன்முதலாய் ஈய அணுக்கரு இரண்டை [Two Lead Nuclei] பேரளவு உஷ்ணத்தில் எதிர் எதிரே உச்ச சக்தியுடன் மோதவிட்டு, பிரபஞ்ச பெருவெடிப்பு நிகழ்ச்சியைச் சிற்றளவில் நேரச் செய்து துகள்கள் பிறந்த பின் விளைவுகளை ஆராய்ச்சி செய்தனர். ஆரம்ப காலத்தில் பெரு வெடிப்பு நேர்ந்த சில இம்மி இம்மி வினாடிக்குப் [A few billionths of a second] பிறகு, பிரபஞ்சம் குவார்க்ஸ், குளுவான் பிழம்பு [Quarks – Gluon Plasma] எனப்படும் அடிப்படைத் துகள்கள் கொண்ட மிக மிகச் சூடான திணிவுள்ள முதல்நிலை ஒளிக்குழம்பாய் [Hot & Dense Primordial Soup] இருந்தது. அந்த ஆற்றலில், அதி உஷ்ணத்தில் [4000 பில்லியன் டிகிரி] குவார்க்-குளுவான் பிழம்பு திரவக் குழம்புபோல் இயங்கியது ! பெரு வெடிப்பு நிகழ்ந்து, சுமார் மில்லியனில் ஒற்றைப் பின்ன வினாடிக்குப் பிறகு குவார்க்குகள், குளுவான்கள் இரண்டும் பின்னிய புரோட்டான்களும், நியூட்ரான்களும் பிறந்து தற்கால அணுக்கள் தோன்றின. முதல் மோதல்கள் அலிஸ் [ALICE] என்னும் அணு உடைப்பு காட்சி மானிகளில் [LHC – Large Hadron Collider Detectors] பதிவாயின.
பிரபஞ்ச பெரு வெடிப்புக்குப் பிறகு பிண்டத்தின் ஒவ்வொரு துகள் உருவாகும் போது, ஓர் எதிர்த்துகள் [Particle & Antiparticle] படைக்கப் படுகிறது. துகள் பௌதிகத்தில் எழும் ஒரு முக்கிய வினா, பௌதிக விதிகள் அனைத்தும் ஒரு தனித்துவச் சீரமைப்பைக் [Symmetry known as CPT (Charge, Parity, Time)] காட்டுகின்றனவா என்பது. அதன் அளவீடுகள் அணுக்கரு, எதிர் அணுக்கருக்கு இடையே [Between Nuclei & Antinuclei] ஓர் அடிப்படைச் சீரமைப்பு உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.
மார்செலோ காமைரோ முன்காஸ் [பேராசிரியர், பிரேசில் ஆய்வுக்குழு, CERN ALICE Experiment]
செர்ன் அணு உடைப்பு யந்திரம் பிரபஞ்ச சீரமைப்பை உறுதிப் படுத்துகிறது.
ஆகஸ்டு 17, 2015 ஆம் தேதி வந்துள்ள இயற்கைப் பௌதிக இதழில் [Nature Physics Journal] வெளியான அறிக்கை இது: செர்ன் அணு உடைப்பு யந்திரத்தில் துகளின் நிறை, மின்னேற்றத்தை அளந்து, இயற்கையில் அடிப்படைச் சீரமைப்பு இருப்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. அதை மெய்ப்படுத்திய பிரேசில் சாவ் பாலோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள், [Sao Paulo University (USP)] அந்த உறுதிப்பாட்டால் எந்த பிரபஞ்ச நியதி சொல்வது சரியானது என்பதை அறிய முடியும் என்று கூறுகிறார்.
பிரபஞ்ச பெரு வெடிப்புக்குப் பிறகு பிண்டத்தின் ஒவ்வொரு துகள் உருவாகும் போது, ஓர் எதிர்த்துகள் [Particle & Antiparticle] படைக்கப் படுகிறது. துகள் பௌதிகத்தில் எழும் ஒரு முக்கிய வினா, பௌதிக விதிகள் அனைத்தும் ஒரு தனித்துவச் சீரமைப்பைக் [Symmetry known as CPT (Charge, Parity, Time)] காட்டுகின்றனவா என்பது. அதன் அளவீடுகள் அணுக்கரு, எதிர் அணுக்கருக்கு இடையே [Between Nuclei & Antinuclei] ஓர் அடிப்படைச் சீரமைப்பு உள்ளதை உறுதிப்படுத்துகின்றன என்று கூறுகிறார், பேராசிரியர், பிரேசில் ஆய்வுக்குழு, [CERN ALICE Experiment] மார்செலோ காமைரோ முன்காஸ்.
மின்னேற்றம், ஒப்புமை, காலம் ஆகிய ஆய்வு அளப்பீடுகள் [Charge, Parity, Time] செர்ன் அணு உடைப்பி அலிஸ் [ALICE – A Large Ion Collider Experiment] கருவி மூலம் அறியப்பட்டவை. அக்கருவி கன அயனியைக் [Heavy Ion Detector] கண்டுபிடிப்பது. இந்த இயக்க வினை மூலம் பிண்டத்தை [Matter] அதி உன்னத உஷ்ணத்திலும், திணிவுகளிலும், [Extremely high temperature & densities] ஆய்வுகள் செய்யலாம்.

1969 இல் சந்திரனுக்குக் குறிப் பயணம் செய்த மகத்தான மனித முயற்சி போல் ஹிக்ஸ் போஸான் துகளைத் தேடிச் சென்றதும் உலக மாந்தர் கவனத்தைக் கவர்ந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்பொல்லோ விண்வெளிக் குறிப் பணிகள் பொதுமக்களை விஞ்ஞானத் தேடல் கண்டுபிடிப்புகளில் ஈர்த்தன. அடுத்த பிறவி விஞ்ஞானிகளுக்கும் புத்துணர்ச்சி ஊட்டி ஆர்வத்தைத் தூண்ட இந்தக் கடவுள் துகள் கண்டுபிடிப்பு நீடித்துச் செல்லும்.
பேராசிரியர் பீட்டர் நைட் (Professor Peter Knight, President of Institute of Physics, UK. )
ஹிக்ஸ் போஸான் துகள் கண்டுபிடிப்பு உயிரியல் விஞ்ஞானத்தில் “டி யென் ஏ” (DNA) மூலவி கண்டுபிடிப்புக்கு ஒப்பாகும். இது டியென்ஏ கண்டுபிடிப்பின் ஒரு பௌதிக வடிவம். நமது பிரபஞ்ச அமைப்புப் பின்னல் நாரைப் (Fabric of the Universe) புரிந்து கொள்ளும் முயற்சியின் போக்கில் புது தீரச் செயலுக்கு ஒரு பாதை உண்டாக்கும்.
பேராசிரியர் பீட்டர் நைட்.
கடவுள் துகள் கண்டுபிடிப்பு ஒரு மகத்தான சாதனை. 15 ஆண்டுகள் அகில நாடுகளின் கூட்டுறவில் மாபெரும் பரமாணு உடைப்பியைக் (Large Hadron Collider) கட்டி அமைத்ததின் பயனைப் பெற முடிந்தது. இந்த அறிவிப்பானது “துகள் பௌதிகத்தின்” நிலைத்துவ மாடல் (Standard Model of Particle Physics.) ஏற்பு உடையது என்பதை உறுதிப் படுத்தி உள்ளது.
பேராசிரியர் பீட்டர் நைட்.
“உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”
ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)
“செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”
ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)
“இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி வி¨சையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.
டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)
“பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ந்து பில்லியன்த் தசம விநாடியில் (Billionth of a Second after the Big Bang) தோன்றிய திரைக் காட்சியைக் கண்டு விட்டோம். இந்தப் புதிய கட்டம் “முதல் பௌதிகம்” என்று பெயர் அளிக்கப் படுகிறது ! இவற்றைப் போல் இன்னும் ஈராண்டுகள் செய்யப் போகும் பல பில்லியன் புரோட்டான் மோதல்களின் துவக்கக் கட்டம் இது.”
ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist)
“இது உலகத் தோற்றத்தைக் கூறும் முதற்பிரிவு (Genesis Chapter -1) விளக்கம் நோக்கி மனிதர் வைக்கும் மாபெரும் கால்தடம் ! செர்ன் உடைப்பி பிரபஞ்சத் தோற்றப் படைப்பு யந்திரம் (Genesis Machine) ! பிரபஞ்ச வரலற்றின் மாபெரும் மகத்தான காட்சியை மீண்டும் திரையிட்டுக் காட்ட செர்ன் உதவுகிறது ! புதிரான இந்த நுண்துகள்களின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் நாம் யாரென்னும் கருத்தை மாற்றி விடலாம் !”
மிஸியோ காக்கு, பௌதிக மேதை (Michio Kaku, New York)
“மேற்கட்ட செர்ன் சோதனையில் விரைந்து பாயப் போகும் எதிர் எதிர் ஒளிக்கற்றைகள் நேரிணைப்பு (Alignment of Beams) செய்யப் படவேண்டும். அது நிபுணருக்குப் பெரும் சவாலானது. அட்லாண்டிக் கடலின் அகண்ட இருபுறக் கரைகளி லிருந்து இரண்டு எதிர், எதிர் ஊசிகளை அனுப்பிக் கடல் நடுமையத்தில் அவற்றை மோத வைக்கும் சவாலைப் போலாகும்,”
ஸ்டீவ் மையர்ஸ் (Steve Myers, Director of CERN Accelerators & Technology)
“இந்தப் புதிய ஹிக்ஸ் போஸான் தேடல் விளைவுகள் டெவடிரான் விரைவாக்கியில் கிடைத்த ஏராளமான தகவல் இலக்கத்தாலும் (Tevatron Collision Data) அநேகப் பட்டப் படிப்பு நிபுணர் வடித்த கூரியக் கணித விதிகளாலும் (Smart Search Algorithms) கிடைத்தவை.”
ராபர்ட் ரோஸர் (Fermilab Co-Spokeperson, CDF & DZero Analysis Groups)
“ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியின் (Tevatron Collider) உற்பத்தியைத் தூண்டி உன்னத நிலைக்கு ஆய்வுகள் உயர்ந்துள்ளன. டெவடிரான் உடைப்பியின் சிறந்த சோதனை விளைவுகளுக்கு நாங்கள் நன்றி செலுத்து கிறோம். உலக நாடுகளின் CDF & DZero சோதனை ஆய்வுக் கூட்டாள விஞ்ஞானிகள் சாதித்த விளைவுகள் துடிப்புணர்ச்சி உண்டாக்குபவை. அவை ஹிக்கிஸ் போஸான் தேடல் ஆராய்ச்சியில் மகத்தான முன்னேற்றைக் காட்டியுள்ளன.”
டெனிஸ் கோவர், (Dept of Energy Associate Director of Science for High Energy Physics)
“உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”
ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)
“செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (TimeMachine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”
ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)
“இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி விசையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.
டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)

செர்ன் விரைவாக்கி யந்திரம் உண்டாக்கிய புரட்சிகரமான மூலத்துகள் ஹிக்ஸ் போஸான்
சுமார் பதினாங்கு பில்லியன் ஆண்டுகட்கு முன்பு நேர்ந்ததாகக் கணிக்கும் பிரபஞ்சப் பெருவெடித் தோற்றத்தில் முதன்முதல் உதித்ததாக யூகிக்கபட்ட “ஹிக்ஸ் போஸானைப்” போன்ற ஒரு துகளைச் செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் புரோட்டான்களை மோத விட்டுக் கண்டு பிடித்திருப்பதாக பிரிட்டிஷ் துகள் பௌதிக விஞ்ஞானிகள் 2012 ஜூலை 5 ஆம் தேதி அறிவிப்பு செய்து ஒரு பரபரப்பை உண்டுபண்ணினார். அந்தத் துகளின் பெயர் : ஹிக்ஸ் போஸான் (Higgs Boson). அந்த அற்புதத் துகளை வடிவாக்கிய விரைவாக்கி யந்திரம் செர்ன் அல்லது “பரமாணு பெரு உடைப்பு யந்திரம்” (CERN or Large Hadron Collider) என்பது. கண்டுபிடித்த புதிய துகள், ஹிக்ஸ் போஸானின் பண்பாடுகள் கொண்டதற்கு மெய்யான சான்றுகள் கிடைத்துள்ளதாயினும் இந்தக் கண்டுபிடிப்பு ஆரம்ப நிலை செர்ன் ஆய்வு விளைவுகளை வைத்தே இப்போது அறிவிப்பு செய்யப் பட்டிருக்கிறது. கடவுள் துகளின் உறுதிப்பாடு பூரணமாக இன்னும் ஏராளமான விளைவுப் பதிவுகள் ஆராயப்பட நீண்ட காலம் ஆகலாம். புதுத் துகள் எந்த விதமான வடிவம் எடுத்தாலும் சரி, இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு அணுப் பிண்டத்தின் அடிப்படை அமைப்பு (Fundamental Structure of Matter) பற்றிய நமது பழைய அறிவு பேரளவில் உயர்ந்து முன்னேறப் போகிறது.
2012 ஜூலை ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த செர்ன் விரைவாக்கி ஆய்வு நிபுணர் நடத்திய “துகள் பௌதிகப் பேரவையில்” (Major Particle Physics Conference) பிரிட்டிஷ் துகள் விஞ்ஞானிகள் இந்த அரிய கண்டுபிடிப்பை முதன்முதல் வெளியிட்டனர். நீண்ட காலம் எதிர்பார்த்த ஹிக்ஸ் போஸான் துகள் உண்டாக்கிய செர்ன் அட்லாஸ், சி யெம் எஸ் சோதனைக் கருவி விளைவுகளை (ATLAS, CMS Experiments) அறிவித்தார். இரண்டு சோதனைக் கருவிகளின் விளவுகளும் 125 –126 GeV (Gega Electron Volt Energy) கெகா எலக்டிரான் ஓல்ட் சக்தியுள்ள துகளை உருவாக்கின. இந்த அறிவிப்பு முன்னோடி விளைவுகளை (Preliminary Results) வைத்துச் செய்யப் பட்டது. ஆனால் பூரண உறுதி அளிப்பதற்கு இன்னும் ஆராயப் பட வேண்டிய சோதனை விளைவுகள் ஏராளமாய் உள்ளன. விஞ்ஞானிகள் ஆயினும் ஹிக்ஸ் போஸான் பண்பாடு உள்ள ஓர் புதுத் துகளை நிச்சயம் செர்ன் விரைவாக்கி உண்டாக்கிய விட்டதாக உறுதியாக அறிவித்தார்கள். 2012 ஜூலை மாதக் கடைசியில் அனைத்து விளைவுகளும் ஆய்வு செய்யப் பட்டு முடிவான அறிவிப்பு செய்யப்படும் என்பது தெரிகிறது.
ஹிக்ஸ் போஸான் மூலத்துகள் கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் என்ன ?
இரண்டாம் உலகப் போரின் போது 1945 இல் நூற்றுக்கணக்கான அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் சோதனைத் தளத்தில் அணுவைப் பிளந்து தொடரியக்கத்தைக் கட்டுப் படுத்தி அணுசக்தியின் பேராற்றலை முதன்முதல் வெளிப்படுத்திய நிகழ்ச்சி, நூற்றுக் கணக்கான உலக விஞ்ஞானிகள் ஐரோப்பிய செர்ன் விரைவாக்கியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து பிரபஞ்ச தோற்றத்தின் கடவுள் துகளை உருவாக்கிக் கண்டுபிடித்ததற்கு நிகராகும். இப்போது செர்ன் விஞ்ஞானிகளின் குறிக்கோள் என்ன ? கண்டுபிடித்த ஹிக்ஸ் போஸான் துகளின் துல்லிய இயற்கைப் பண்புகளை ஆழ்ந்து அறிவது, அதனால் இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி விளக்கமாக அறிவது போன்ற புதிய விபரங்களே. அவ்விதம் பெற்ற துகளின் பண்பாடுகள் துகள் பௌதிகத்தில் இறுதியாக நிலைத்துவ மாடலில் நிரப்பப் பட வேண்டிய உட்கூறா (Missing Ingredient in the Standard Model of Particle Physics) என்பது தெளிவாக்கப் படும். அல்லது ஹிக்ஸ் போஸான் துகள் புரட்சி உண்டாக்கப் போகும் ஒரு புது அதிசயமா என்பது அறியப் படும்.
துகள் பௌதிகத்தின் நிலைத்துவ மாடல் என்ன சொல்கிறது ? நாம் தோன்றக் காரணமான மூலாதார துகள்கள், பிரபஞ்சத்தில் காணப்படும் அண்ட பிண்டங்கள் உண்டாக உதவிய அடைப்படைத் துகள்கள், அவற்றுடன் பின்னிப் பிணைந்து இயக்கி வரும் அகில விசைகள் (Forces of the Universe) ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது. பிரபஞ்சத்தில் அண்ட பிண்டங்களின் இருப்பு மொத்தத்தில் 4% மட்டுமே. தற்போது கண்டு பிடிக்கப் பட்ட கடவுள் துகள் 96% மர்மாக இருக்கும் பிரபஞ்ச மீதிப் புதிரை விடுவிக்க ஒரு பாலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஹிக்ஸ் போஸான் பற்றிய ஆணித்தரமான விளக்கம் வெளிவர இன்னும் செர்ன் சோதனை விளைவுகளை ஆராய நீண்ட காலம் ஆகும் என்று அறியப் படுகிறது.
ஹிக்ஸ் போஸானை முன்மொழிந்த பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ்
கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் அதை ஊகித்து விளக்கிய பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் பெயரைக் கொண்டது. 1964 இல் அவர் ராபர்ட் பிரௌட், பிரான்காய் எங்லெர்ட், டாம் கிப்பிள், ஹேகன், ஜெரால்டு குரல்னிக் ஆகியோரின் கருத்துக்களுடன் மூன்று வெளியீடுகள் வெளியிட்டார். அந்தக் கோட்பாடு ஹிக்ஸ் தளம், போஸான் சார்ந்த ஹிக்ஸ் யந்தரவியல் (Higgs Mechanism Related to Higgs Field & Boson) என்று அழைக்கப் பட்டது. ஹிக்ஸ் போஸான் ஒரு கனமான துகள் ஆனதால், அது செர்ன் விரைவாக்கியில் உருவானதும் உடனே சிதைந்து வேறு சிறு பரமாணுக்களாய் மாறுகிறது (It decays almost immediately into two jets ofhadrons and two electrons, visible as lines.) ஹிக்ஸ் போஸான் தேடல் செர்ன் விரைவாக்கியில் 2010 ஆண்டின் ஆரம்ப காலத்தில் துவங்கி, அமெரிக்காவின் ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் விரைவாக்கியில் 2011 ஆம் ஆண்டில் அது மூடுவது வரை ஆய்வு செய்யப் பட்டது.
பரமாணுகளுக்கு நிறை தருவது (Mass) இந்த ஹிக்ஸ் போஸான். ஹிக்ஸ் தளத்தின் ஈடுபாடே (Higgs Field Interaction) அடிப்படைத் துகள்களுக்கு நிறை கொடுக்க ஏதுவாகிறது. ஓர் அண்டத்தின் ஈர்ப்பு விசையே அதன் மீதுள்ள பொருளுக்கு எடை கொடுப்பது போல் அதைக் கருதலாம். ஈர்ப்பு விசை பூஜியமானால் பொருளுக்கும் எடை இல்லாது போகும். ஹிக்ஸ் துகள் ஒரு போஸான் துகள். அடிப்படைத் துகள் சில இந்திய விஞ்ஞானி சத்தியேந்தர நாத் போஸ் பெயரைத் தாங்கி உள்ளன. அவர் ஐன்ஸ்டைன் காலத்தில் அவருடன் விஞ்ஞானப் பணி செய்தவர். போஸன் துகள் ஒரு தனிப் பண்பு கொண்டது. அது அதைப் போன்று ஒத்திருக்கும் பற்பல துகள்களை ஒரே இடத்தில், ஒரே குவாண்டம் நிலையில் (Quantum State) வைத்திருக்க அனுமதிக்கும். மேலும் நிலைத்துவ மாடல் விதிப்படி ஹிக்ஸ் போஸானுக்கு சுழற்சி இல்லை, நேர், எதிர் மின்னேற்றங்கள் கிடையா. நிற ஏற்றமும் இல்லை. (No Intrinic Spin, No Electrical Charge, No Color Charge)
பூர்வீக மூலத் துகள் தேடலில் நெருங்கிச் சென்ற முதல் விரைவாக்கி யந்திரம்
வெகு விரைவில் உலகப் பெரும் விரைவாக்கி புதிய அடிப்படைத் துகளைக் கண்டுபிடிக்கத் துவங்கும் நிலைக்கு வந்து விட்டதென்று ஒரு பெரும் செர்ன் விஞ்ஞானி அறிவித்தார். செர்ன் யந்திரத்தின் சமீபத்திய இயக்க முன்னேற்றம் தொடர்ந்தால், விஞ்ஞானிகள் இவ்வாண்டு வேனிற் கால முடிவுக்குள் துகள் பௌதிகத்தில் (Particle Physics) புதியதோர் திருப்பத்தை உண்டாக்குவார் என்று தெரிந்தது. அவற்றுள் முதலில் கண்டுபிடிக்கப்பட இருப்பவை ஏற்கனவே உள்ளதாக ஊகிக்கபட்ட இரண்டு போஸான் துகள்கள் (Boson Particles). பத்து பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப் பட்டு ஆரம்பத்தில் ஹீலியம் கசிந்து பழுதுகள் நீக்கப் பட்டு முதன்முதல் 2009 நவம்பரில் செர்ன் விரைவாக்கி யந்திரம் செம்மையாக இயங்க ஆரம்பித்து பல பில்லியன் மோதல்களை உண்டாக்கி விட்டது. பிரென்ச்-சுவிஸ் எல்லையில் ஜெனிவாவுக்கு அருகில் 27 கி.மீ. விட்டமுள்ள வட்ட அடித்தளத்தில் இயங்கி வருகிறது செர்ன் விரைவாக்கி யந்திரம். அந்த உலகப் பெரும் விரைவாக்கி அணுவின் அடிப்படைத் துகள் “ஹிக்ஸ் போஸான்” என்பதை 1000 GeV (Gega-electron Volt) மின்னாற்றலில் காணலாம் என்று விஞ்ஞானிகளால் ஊகிக்கப் பட்டது.
புரோட்டான் நிறையைப் போல் ஆயிரம் மடங்கு பெரிதானது ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்னும் ஊகிப்பு அடிப்படைத் துகள். இந்த நிறை அளவீட்டில் முதலில் உதிக்கும் புதிய துகள்கள் ‘பிரதம W போஸான்கள்’ & ‘பிரதம Z போஸான்கள்’ (W Prime Bosons & Z Prime Bosons). இவை இரண்டும் கனமான போஸான்கள்.. மெலிந்த போஸான்கள் எனப்படும் ‘W போஸான்கள்’ & ‘Z போஸான்கள்’ (W Bosons & Z Bosons) நலிந்த இயக்கப்பாடுகளுக்குப் (Weak Interactions OR Weaker Nuclear Force) பொறுப்பானவை. நான்கு அடிப்படை இயக்கப்பாடுகள் : ஈர்ப்பியல் சக்தி, மின்காந்த சக்தி, வலுத்த அணுக்கருச் சக்தி, நலிந்த அணுக்கருச் சக்தி. (Four Fundamental Interactions of Nature: Gravitation, Electromagnetism, Strong Nuclear Force & Weaker Nuclear Force).
1980 இல் W போஸான் & Z போஸான் ஆகிய இரண்டும் 100 GeV (Gega-Electron Volt) சக்தியில் பழைய செர்ன் விரைவாக்கியில் கண்டு பிடிக்கப்பட்டன. நிறை மிகையான துகள்களைப் பதிவு செய்ய அதிக சக்தி வாய்ந்த தற்போதுள்ள விரைவாக்கி யந்திரம் செர்ன் போல அமைக்க வேண்டியதாயிற்று. ஒரு சில மாதங்களில் செர்னில் 1000 GeV மின்னாற்றல் உண்டாக்க முடியும் என்று ஆக்ஸ்·போர்டு பல்கலைக் கழகத்தின் துகள் பௌதிகவாதி டாக்டர் டோனி வைட்பர்க் கூறுகிறார். செர்ன் விரைவாக்கியில் இவ்வாண்டும், அடுத்த ஆண்டும் 3.5 TeV (Tetra- Electron Volt) மின்னாற்றலில் கணை மோதல்கள் நடத்தப் படும். செர்ன் பொறியியல் நிபுணர் படிப்படியாக மின்னாற்றலை மிகையாக்கி வருவார். 18 முதல் 24 மாதங்கள் நீடிக்கப் போகும் பில்லியன் கணக்கான செர்ன் விரைவாக்க மோதல்களின் விளைவுகளை ஆராய்வதற்குச் சில ஆண்டுகள் கூட ஆகலாம் ! கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மோதல்களின் எண்ணிக்கை (10^27) (10 to the power 27). இப்போது எண்ணிக்கை (10^29). இந்த வாரத் திட்டம் (ஜூன்–ஜூலை) மோதல்கள் எண்ணிக்கை : (10^30). செர்ன் விஞ்ஞானிகளின் குறிக்கோள் திட்ட எண்ணிக்கை : (10^34) மோதல்கள். இதுவரைப் புரோட்டான் வேகத்தை ஒளி வேகத்துக்கு ஒட்டி (99.99% ஒளிவேகம்) சக்தி ஆற்றலை 7 TeV அளவு உயர்த்தி உள்ளார். முடிவான குறிக்கோள் திட்ட ஆற்றல் : 14 TeV. செர்ன் விரைவாக்கியின் முழுத் தகுதிச் சக்தியில் விநாடிக்கு 600 மில்லியன் மோதல்கள் நிகழும். அப்போது டிரில்லியன் கணக்கில் புரோட்டான்கள் விரைவாக்கி வட்டக் குழலில் விநாடிக்கு 11245 தடவை சுற்றிவரும் !
விரைவாக்கியில் பெரு வெடிப்பு இயக்கம் நுண்துகள் உளவும் கருவிகள்
ஆறு முக்கிய கருவிகளின் பெயர்கள் இவை: (CMS, Atlas, Alice, LHCb, Totem & LHCf) அவை புரியும் பணிகள் என்ன ?
1. அட்லாஸ் உளவி (ATLAS Detector – A Toroidal LHC Apparatus) : 150 அடி (46 மீடர்) நீளமுள்ள இந்தக் கருவி எல்லாவற்றிலும் பெரியது. இரண்டு கருவிகள் உள்ளன. அவை பிண்ட ஆரம்பத்தைக் காணும். புதிய பௌதிகம், பிறப் பரிமாணம் (Extra Dimension) காணும்.
2. CMS Detectors (Compact Muon Solenoid) : இதுதான் ஹிக்கிஸ் போஸான்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் கருவி. கரும்பிண்டத்தின் இயற்கைப் பண்பாடையும் உளவும். இது பன்முக உளவுக்குக் கருவி (Multi-Purpose Detector)
3. ALICE (A Large Ion Collider Experiment) : இது திரவப் பிண்டத்தைக் கண்டுபிடிக்கும்.
(Liquid form of Matter called Quark-Gluon Plasma that existed shortly after the Big Bang)
4. LHCb (Large Hadron Collider Beauty) : பெரு வெடிப்பில் தோன்றிச் சரிபாதி இருக்கும் பிண்டம், எதிர்ப்பிண்டம் (Matter & Anti-Matter) ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது. இழந்து போன எதிர்ப்பிண்டத்துக்கு என்னவாயிற்று என்று உளவு செய்யும்.
5. LHCf (Large Hadron Collider Forward) விண்வெளியில் இயற்கையாக உண்டாகும் மின்னேற்றத் துகள்கள், அகிலக் கதிர்கள் (Charged Particles & Cosmic Rays) போலி இருப்பை ஏற்படுத்தும்.
6. Totem இது புரோட்டான்கள் எவ்விதம் சிதறும் என்று கண்டு அவற்றின் நிறையை அளக்கும்.
செர்ன் விரைவாக்கி என்ன முடிவுகளைக் கண்டுள்ளது ?
செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சத்தின் புதிர்களை விடுவிக்கும் நிலைக்கு நெருங்கி விட்டது என்று ஆங்கு பணி செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார். நுண்துகளுக்கு நிறை எதனால் ஏற்படுகிறது ? கடவுளின் துகள் எனப்படும் ‘ஹிக்ஸ் போஸான்’ நுண்துகளுக்கு நிறை அளிப்பது என்று முன்பே யூகிக்க பட்டதுதான். இப்போது செர்ன் விநாடிக்கு 10,000 மோதல்களை உண்டாக்குகிறது என்று பௌதிக விஞ்ஞானி ஆன்ரி கொலூட்வின் (Anderi Golutvin) குறிப்பிடுகிறார். விநாடிக்கு எத்தனை அளவு மோதல்கள் மிகையாகுமோ அத்தனை அளவு நெருக்கத்தில் “உச்ச சீரமைப்பு”, “பிண்டம்”, “ஹிக்ஸ் போஸான்” (Supersymmetry, Dark Matter, Higgs Boson) ஆகியவற்றை அடைகிறோம் என்று பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார். “செர்ன் விரைவாக்கியின் கருவி (LHCb) எதிர்ப் பிண்டத்தின் (Anti-Matter) இயற்கைப் பண்பாட்டை நுட்பமாய் நோக்கும். அதே கருவி சமீபத்தில் முதன்முதலாக “நளினி” “விபரீத அழகி” என்னும் இரண்டு பரமாணுக் களைக் (Sub-atomic Particles, Called : Charm & Strange Beauty) கண்டு பிடித்துள்ளது. “விபரீத அழகி” நுண்துகளை முதன்முதல் கண்டுபிடித்த எனது குழுவினர் பேருவகை அடைந்தனர்.
இயல் பிண்டத்தைப் (Normal Matter) போலின்றி மாறாக இயங்கும் எதிர்ப் பிண்டத்தை (Anti-Matter) அறிய நாங்கள் இந்த நுண்துகளை பயன்படுத்துவோம். ‘விபரீத அழகி’ நுண்துகளைப் பற்றி வேறு யாரும் அறியார். அதுவே செர்ன் விரைவாக்கி யந்திரத்தின் தனித்துவத்தைக் காட்டுகிறது.” என்று லிவர்பூல் பல்கலைக் கழக ஆய்வாளர், டாக்டர் தாரா ஸியர்ஸ் கூறினார். செர்ன் விரைவாக்கியின் சக்தியும், இயக்கமும் தயாராகி “ஹிக்ஸ் போஸான்” நுண்துகளைக் கண்டுபிடிக்க 2011 ஆண்டு ஆரம்ப மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டர் வைட்பர்க் கூறுகிறார்.
அணுகருவுக்குள் இருக்கும் புரோட்டான் மிகவும் சிக்கலான துகள். அதனுள் குவார்க்குகள், குளுவான் உள்ளன. இந்த வார முடிவில் விஞ்ஞானிகள் முதன்முதல் எதிர் எதிர் வரும் முத்திரட்சி உள்ள இரு புரோட்டான் கற்றைகளை (Two Beams Consisting Three Bunches of Protons) செர்ன் விரைவாக்கியில் மோத விட்டார். முதல் முறையாக செர்ன் படைப்புத் திறனில் இயங்கி இயல் அடர்த்தியில் (Normal Intensity) இம்மூன்று திரட்சிகளும் இருந்தன. ஆதாவது ஒவ்வொரு திரட்சியிலும் 100 பில்லியன் புரோட்டான்கள் உச்ச அளவில் ஏவப்பட்டன.
இப்போது பாதி அளவுத் தீவிரத் திறனில்தான் (7 TeV) செர்ன் இயங்கி யுள்ளது. ஒவ்வொரு கற்றையும் முழுத் திறமையில் (14 TeV) இயங்க 2013 ஆண்டில்தான் முடிவான சோதனையாக இருக்கும். முடிவான குறிக்கோள் திட்டம் 2808 திரட்சிகளை ஒரு கற்றைக்குள் உண்டாக்குவது. அது 2016 ஆண்டில்தான் நிகழும் என்று நம்பப் படுகிறது. புரோட்டான்கள் ஓடிச் சென்று மோதிக் கொள்ளும் வட்ட வளைக் குழலில் நான்கு பெரிய சோதனை நிகழ்த்திப் பிரபஞ்ச மர்மத்தின் புதிய பௌதிகப் படிக்க நான்கு கருவிகள் [Compact Muon Solenoid (CMS), (Atlas, Alice, LHCb] அமைக்கப் பட்டுள்ளன. இந்தக் கருவிகளின் விளைவுகளை ஆராயும் தலைமைத் திட்ட விஞ்ஞானி : டாக்டர் கொலூட்வின். கற்றையில் திரட்சிகள் கூடும் போது விஞ்ஞானிகள் ஒரு சிறு கருந்துளை (Mini Black Hole) தோன்றுவதை எதிர்பார்க்க லாம் ! “செர்ன் விரைவாக்கியில் கருந்துளைகளை நாங்கள் படைக்க முடிந்தால் அது பேருவகை அளிக்கும் எங்களுக்கு”, என்று பௌதிகப் பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார்.
இத்தாலிய விஞ்ஞானி வெளியிட்ட ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு வதந்தி
2010 ஜூலை 12 இல் இத்தாலியின் படோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிக விஞ்ஞானி தாமஸோ தோரிகோ (Tommaso Dorigo, University of Padova) இரண்டு மூலாதாரத் தகவல் வழியாக தன் காதில் விழுந்த வதந்திச் செய்தியைத் தன் வலை இதழில் குறிப்பிட்டு எழுதினார். அதாவது சிகாகோவில் இருக்கும் ·பெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியில் (Fermilab’s Tevatron Collider) செய்த சோதனையில் முதன் முதலாக உற்பத்தியான ஓர் “எளிய ஹிக்ஸ் போஸான்” துகளுக்குச் (Light Higgs Boson) சான்று உள்ளதை வெளியிடப் போவதாக அறிந்தாராம். இதை வெறும் வதந்தி என்று ஒதுக்கியவர் சிலர். அடுத்துக் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பைப் பற்றி ஃபெர்மி ஆய்வகத்தின் நிபுணரோ, செர்ன் விரைவாக்கி (CERN Accelerator) விஞ்ஞானிகளோ வெளியிடப் போவதைப் பலர் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் எவ்வித ஆதாரமின்றி, நிரூபணம் இல்லாமல் இப்படி ஒரு விஞ்ஞான வதந்தி ஒரு பெரும் இத்தாலிய பௌதிக நிபுணர் மூலம் வெளியானதில் சிறிதளவு மெய்ப்பாடும் இருக்கிறது.
பிரபஞ்சப் பெரு வெடிப்பு நிகழ்ந்து ஒரு சில விநாடிகளில் தோன்றிய கனநிறைத் துகள்களில் “ஹிக்ஸ் போஸான்” என்பது ஒன்று என்னும் அழுத்தமான யூகம் விஞ்ஞானிகளிடையே நிலவி யுள்ளது. அதனால் அது “கடவுள் துகள்” என்றும் பலரால் மதிக்கப் படுகிறது.
ஐரோப்பாவில் உலகப் பெரும் செர்ன் விரைவாக்கியிலும் புரோட்டான் கணைகளை ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் மோத விட்டு விஞ்ஞானிகள் இதே “ஹிக்ஸ் போஸானைக்” காணத்தான் துடித்துக் கொண்டிருக்கிறார். ஃபெர்மி ஆய்வக விஞ்ஞானிகள் “எளிய நிறை ஹிக்ஸ் போஸானை” முதன்முதலில் கண்டு விட்டார் என்னும் செய்தி செர்ன் விஞ்ஞானிகளுக்கு ஓர் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் !
ஆனால் ஃபெர்மி ஆய்வகம் தனது புதுக் கண்டுபிடிப்புப் பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பும் இதுவரைச் செய்ய வில்லை. எளிய நிறை ஹிக்ஸ் போஸானை ஃபெர்மி விஞ்ஞானிகள் டெவடிரான் விரைவாக்கிச் சோதனையில் உற்பத்தி செய்ததை மட்டும் மறுக்கவில்லை. ஆனால் ஹிக்ஸ் போஸான் உற்பத்திச் சோதனையில் தாமொரு முன்னேற்றைப் புரிந்துள்ளதாக அறிவித்தார். அதாவது 50-50 வாய்ப்பு முறையில் இந்த ஆண்டு (2010) முடிவுக்குள் அல்லது 2011 ஆண்டு துவக்கத்துக்குள் ஹிக்ஸ் போஸான் இருப்பை அழுத்தமாக வெளியிடத் தகுந்த அளவு தகவல் சான்றுகளோடு வருவோம் என்று அறிவித்தனர்.
ஃபெர்மி ஆய்வக டெவடிரான் உடைப்பியின் மகத்தான சாதனைகள்
1983 இல் சிகாகோ அருகில் (Batavia, Illinois, USA) 120 மில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப் பட்ட டெவடிரான் விரைவாக்கி (1994-1999) இல் 290 மில்லியன் டாலர் நிதிச் செலவில் அடுத்தடுத்து மேம்படுத்தப் பட்டது. 1995 இல் அதன் நிபுணர்கள் (CDF & DZero Experiment Collaborators) முதன்முதல் “மேல் குவார்க்” (Top Quark) அடிப்படைத் துகளை உற்பத்தி செய்து கண்டுபிடித்தார் ! அடுத்து 2007 இல் மேல் குவார்க்கின் நிறையை 1% துல்லிமத்தில் அளந்தார். 2006 ஆம் ஆண்டில் இருவித “சிக்மா பரியானைக்” (Two Types of Sigma Baryon) கண்டுபிடித்தார். 2007 ஆம் ஆண்டில் செய்த சோதனையில் (DZero Experiment) புதுவித பரியான் (Xi Baryon) ஒன்றைக் கண்டுபிடித்தார். 2008 இல் அதே சோதனையில் மீண்டும் வேறு வித பாரியானைக் (Double Strange Omega Baryon) கண்டுபிடித்தார்.
அமெரிக்க எரிசக்தித் துறையகத்தைச் சேர்ந்த ஃபெர்மி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் (US Dept of Energy, Fermilab Scientists) செய்த இரண்டு புரோட்டான் உடைப்புச் சோதனைகளில் (CDF & DZero Collider Experiments) கீழ்க்காணும் விளைவுகள் நிகழ்ந்தன. இந்தச் சோதனைகள் 158 முதல் 175 GeV/C2 வரை நிறையுள்ள ஹிக்ஸ் போஸான் துகள்களைத் தவிர்த்து விட்டன. துகள் பௌதிக நிலவர மாதிரிப்படி (Standard Model of Particle Physics) ஹிக்ஸ் போஸானின் நிறை 114 முதல் 185 GeV/C2 முடிய இடைப்பட்டு இருக்க வேண்டும். (ஒப்பீடாகச் சொல்லப் போனால் நிறை 100 GeV/C2 அளவு என்பது 107 மடங்கு புரோட்டான் நிறைக்குச் சமமாகும்). இந்த விஞ்ஞான விளைவுகள் யாவும் ஜூலை 22-28, 2010 தேதிகளில் பாரிசில் நடந்த அகில நாட்டு உயர் சக்திப் பௌதிகப் பேரவையில் (International Conference on High Energy Physics (ICHEP-2010) விவாதிக்கப் பட்டன. அப்போது இத்தாலிய விஞ்ஞானி எழுதிய ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு வதந்தி பொய்யானது என்று கூறப்பட்டது !
வியக்கத் தக்க முறையில் பூமியில் ஏற்படும் பூகம்பங்களை உளவி எச்சரிக்கை செய்துள்ளது டெவடிரான் விரைவாக்கி ! அதனுடைய அடித்தளக் காந்தங்கள் மிக்கக் கூர்மையானவை. ஆயிரக் கணக்கான மைல் தூரத்தில் மிகச் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதை உணர்ந்தறியும் வல்லமை படைத்தவை டெவடிரான் மின் காந்தங்கள் ! 2004 இல் இந்து மாக்கடலில் எழுந்த அசுரப் பூகம்பத்தையும், சுனாமியையும் உளவி அறிந்தது. மறுபடியும் சுமாத்ராவில் 2005 இல் நேர்ந்த கடல் பூகம்பம், 2007 இல் நியூ ஸீலாந்தில் கிஸ்போர்ன் நிலநடுக்கம் (Gisborne Earthquake), 2010 ஹெய்தி பூகம்பம், 2010 சில்லியின் நிலநடுக்கம் ஆகியவற்றை டெவடிரான் கண்டுபிடித்து அறிவித்தது.
ஃபெர்மி ஆய்வகத்தின் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு
இத்தாலிய விஞ்ஞானி பேராசிரியர் தாமஸோ தோரிகோ சொல்லிய தகவலை நம்பினால் அது “முச்சிக்மா முத்திரையாக” (Three Sigma Signature) எடுத்துக் கொள்ளப்படலாம். அதன் அர்த்தம் என்ன வென்றால் புள்ளி விபரப்படி 99.7% அந்தக் கூற்று மெய்யானது என்பதே. உலகக் கண்கள் ஐரோப்பாவின் செர்ன் பரமாணு உடைப்பி மீது விழுவதால், அதுதான் ஹிக்ஸ் போஸானை முதலில் கண்டுபிடிக்கும் என்னும் கருத்து இப்போது மாறி விட்டது. கடந்த 27 ஆண்டு களாக (1983-2010) அடுத்தடுத்து சிகாகோ டெவடிரான் செம்மையாக்கப் பட்டு மேன்மைப் படுத்தப் பட்டுள்ளது. ஃபெர்மி ஆய்வகம் டெவடிரான் விரைவாக்கி மூலம் ஒரு குவார்க்கையும், நான்கு வித பாரியான்களை இதுவரை உற்பத்தி செய்து நிரூபித்துள்ளது. எளிய ஹிக்ஸ் போஸான் ஒன்றை முதன் முதலில் உற்பத்தி செய்து காட்டி, ஃபெர்மி ஆய்வகம் அற்புதக் “கடவுள் துகளைக்” காணும் காலம் நெருங்கியது என்பதே இந்த இத்தாலிய விஞ்ஞானியின் தகவலுக்கு உறுதி அளிக்கிறது. ஹிக்ஸ் போஸான் துகளே கடைசித் துகளாக துகள் பௌதிகத்தின் நிலவர மாடலாகக் (The Standard Model of Particle Physics) கருதப் படுகிறது. கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டதால், நிலவர மாடல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி இல்லாவிட்டால் பழைய துகள் நியதிகள் மீளாய்வு செய்யப் படவேண்டும். 2012 ஜுலை 6 ஆம் தேதி செர்ன் விரைவாக்கி துகள் விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸான் போன்ற ஒரு கனத்துகளைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து இருக்கிறார். இது ஆரம்ப நிலை விளைவின் முடிவு மட்டுமே. இன்னும் ஏராளமான செர்ன் விரைவாக்கியின் சோதனை விளைவுகள் ஆராயப் பட வேண்டும். கண்டுபிடித்த துவக்க நிலை கடவுள் துகளின் தடத்தை வைத்து, அது ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்று துகள் விஞ்ஞானிகள் அழுத்தமாக நம்புகிறார்.
(தொடரும்)
தகவல்:
Picture Credits: Fermilab, Chicago, USA, CERN, Geneva Websites.,
1 CERN Large Hadron Collider – Particle Physics – A Giant Takes on Physics’ Biggest Question By : The New York Times (May 15, 2007)
2 CERN Fires up the New Atom Smasher to Near Big Bang By : Alexander Higgins [Sep 7, 2008]
3 World’s Largest Atom Smasher (CERN) Completion [March 26, 2008]
4. Time Magazine Report – The Moment [September 10, 2008] Geneva [Sep 22, 2008]
5 CERN Atom Smasher – Latest Wikipedia Report.
6 BBC News What Happened to the Big Bang Machine (Sep 20, 2008)
7 BBC News LHC Gets Colder than Deep Space By Paul Rincon (Oct 16, 2009)
8 BBC News Particle Beams Injected into LHC (Oct 26, 2009)
9 Rebirth of the LHC : The Search for the God Particle Resumes (Nov 2, 2009)
10 Second Chance of Large Hadron Collider To Deliver Universe’s Secrets By : Robin McKie, Geneva (Nov 1, 2009)
11. https://jayabarathan.
12 https://jayabarathan.
13 https://jayabarathan.
14 https://jayabarathan.
14(a) https://jayabarathan.
14(b) https://jayabarathan.
14(c) https://jayabarathan.
15 BBC News LHC High Energy Results Published By Jason Palmer (Feb 9, 2010)
16 BBC News : LHC Smashes Energy Record Again (March 19, 2010)
17 BBC News : God Particle Hunt Set to Start By Paul Rincon (March 23, 2010)
18 http://en.wikipedia.org/
19 BBC News : The Science of LHC By Paul Ricncon (Nov 20, 2009)
20 BBC News : Collider Sees High-Energy Success (March 30, 2010)
21 Large Hydron Atom Smasher Reaches Near Speed of Light (Daily Galaxy) March 31, 2010
22 Deep Thought – The Large Hadron Collider Could Prove the Existence of a Parallel Universe (Daily Galaxy 2009 Top Story) Jan 6, 2010
23 Atom Smasher Will Keep Revealing “The Beginning” (CTV News, Canada) March 30, 2010
24. Why the Large Hadron Collider (LHC) ? A Few Unanswered Questions
25. What Will the Large Hadron Collider (LHC) Reveal ? By : Steve Giddings Los Angeles Times(January 7, 2010)
26. Will the LHC Solve the Mystery of the Great Attractor ? By Casey Kazan, Daily Galaxy (Jan 11, 2010)
27 ABC News – Atom Smasher Closer to Big Bang By : Rachael Brown (March 31, 2010)
28 BBC News : LHC Particle Search Nearing By : Paul Rincon (May 17, 2010)
29 Space Daily – World’s Biggest Atom Smasher Gains Pace : CERN By : Staff Writers (June 28, 2010)
30 BBC News : LHC Smashes Beam Collision Record By Katia Moskvitch (June 28, 2010)
31 Telegraph, New Scientist – The Tevatron Accelerator – Competition with Large Hadron Collider Heats Up By Clay Dillow (July 12, 2010)
32 Fermilab Web / Space Daily Fermilab Experiments Narrow Allowed Mass Range for Higgs Boson (July 26, 2010)
32 (a) http://www.thinnai.com/
33. Wikipedia The Tevatron Collider, Fermilab (August 3, 2010)
34 New Scientist Magazine ” Who Will Find the God Particle First ?” (Will an old Faithful Find the Higgs ?) By : Rachel Coutland (July 24, 2010)
35. https://jayabarathan.
36. https://jayabarathan.
37 Daily Galaxy : News of the Century ? CERN to Announce its Findings on Higgs Boson Tomorrow (July 3, 2012)
38. Time & Space : CERN Experiments Observe Particle Consistent with Long-Sought Higgs Boson (July 5, 2012)
39. Time & Space : A New particle has been Discovered- Chances are, it is the Higgs Boson(July 5, 2012)
40. Time & Space : Higgs Boson Hunters Declare Victory – as Significant as DNA Discovery (July 5, 2012)
40 (a) http://motherboard.vice.com/
41. https://en.wikipedia.org/
42. http://www.dailygalaxy.com/
43. https://www.veooz.com/news/
44. http://www.iflscience.com/
45. http://www.
46. http://www.rt.com/news/
47. http://www.dailygalaxy.com/
48. http://www.dailygalaxy.com/
49. http://www.dailygalaxy.com/
50. http://portaltotheuniverse.
******************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) (November 26, 2015)
Preview YouTube video ALERT: CERN To Attempt ‘Big Bang’ – Top Scientists Issue Warnings
Preview YouTube video Experiment confirms fundamental symmetry in nature
Preview YouTube video THE CERN DECEPTION ~ THE EVIL OF DARK MATTER AND THE LHC 2015 [HD]
Preview YouTube video Particles and Antiparticles | Particle physics
கிரேசி மோகன்
———————————————–
நாதவிந்து கலாதீ நமோ நம மெட்டு
———————————————-
பொது
———
பெருமாள் திருப் புகழ்….

“ஏழு கொண்டல வாடா நமோ நம
ஏளும் நஞ்சணை சேடா நமோ நம
ஏறும் அன்பர்கள் தோழா நமோ நம -குருபீஷ்மர்
ஆயி ரம்புகழ் நாமா நமோ நாம
தேச மெங்கிலும் ஆழ்வார் கள்பாடிய
ஆயி ரம்தொழு மாலே நமோ நம -கலிலேறி
வாழும் பண்டரி நாதா நமோ நம
ஏழை சங்கட தீர்வே நமோ நம
ஏழ்சு ரங்களின் ராகா நமோ -மஹனீயர்
ராயர் கும்பிடு மூலா நமோ நம
வாயு அஞ்சனை சேயார் சிநேகித
ராம சந்திர ராஜா நமோ நம -கலிதோறும்
ஊழில் உண்டுமிழ் சேயே நமோ நம
ஆதி யந்தமி லாதோய் நமோ நம
கேர ளம்குரு வாயூர் துலாபளு -சமனாகி
தீர அன்பர்கள் பாடா னபாடது
ஏறும் அம்பல கோபா லகோகுல
கேளி சம்பவ லீலா நமோ நம -இரணீயன்
வீழ கம்பமு லாநா ரகேசரி
மீன மந்தர மாமே ருகூர்மவ
ராக அந்தண மூணா னராமமு -ரளியூதி
பூமி மங்கையின் தாளா தபாரமும்
பாத கம்புரி கீழோர் கள்மேலுற
நேமி சங்குவில் வாளோ டுகோலணி -பெருமாளே”….
”உருவாய் அருவாய் உளதாய் இலதாய்,
வருவாய் தினம்நீ வரைகே சவனால்
தருவாய் உரைகீ தையைநீ இறைவா,
கறவை இனமாய் கழலே சரணம்’’….கிரேசி மோகன்….
முன்பு எப்பவோ எழுதியது….ரவி தனயனைப் பற்றி எழுதிய திருப்புகழ் பார்த்ததும், தாய் நினைவுக்கு வந்தாள்….திருமால் திருப்புகழ்….”தண்டையணி வெண்டையும் கிண்கிணிச தங்கையும்” அருண கிரியாரின் சந்தம்….
கிரேசி மோகன்
தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம்
தந்ததன தந்தனம் – தந்ததான
“சஞ்சலமொ ழிந்திடும் சிந்தைமவு னம்பெறும்
செங்கிரிய மர்ந்திடும்-வெங்கடேச
பின்புரம ணன்சொலும் அந்தர்முகம் சென்றிடும்
அன்பரின கந்தையுளம்-எந்தநாளும்
அஞ்சலென சென்றமரும் அந்தரிசி வன்பதம்
அந்தவழி சென்றிடும்-நெஞ்சுதாராய்
சங்கொடுசு ழன்றிடும் செந்திகிரி தண்டமும்
நந்தகிவில் தங்கிடும் -அங்கையோடு
பஞ்செனப டர்ந்திடும் செந்திருக ரம்தரும்
சங்கமசு கம்பெரும் -ரங்கநாதா
வந்திரணி யன்பலம் வென்றவனை கொன்றிடும்
கம்பமுறை சிங்கமுகம் -கொண்டமாலே
தஞ்சமென வந்துதன் செஞ்சரண்அ டைந்ததும்
தம்பிமுறை தந்திடும் -அஞ்சனாவின்
பஞ்சமுகம் கொண்டவன் இந்திரியம் வென்றவன்
அந்தஅனு மன்தொழும் -எம்பிரானே”….
‘பாம்புத் தலைமேலே நடமிடும் பாதத்தினைப் பணிவோம்
மாம்பழ வாயினிலே குழலிசை” பாரதியார்(டிஸெம்பர் 11 காலை 9 மணிக்கு பாரதியார் ஜதிப் பல்லக்கு திருவல்லிக் கேணியில்) பிறந்த நாள் ஒட்டி
அவரது பிரயோகங்களால் வெண்பா….
”தாம்புக் கயிறுற்று, தாயன்புக்(கு) உட்பட்ட
பாம்புத் தலைமேல் பரதமாடும், -மாம்பழவாய்,
கொண்டவன் வாசிப்பு, கீதையை மாட்டுக்கு;
விண்டவன் கேசவ்க்கு வாழ்த்து”….கிரேசி மோகன்…
– தேமொழி.
கவிதை மூலம் – ஷெல் சில்வர்ஸ்டீன்
மொழிபெயர்ப்பு – தேமொழி
நடைபாதையின் முடிவிலோர் இடமுண்டு
அங்கே சாலை துவங்கும் முன்
அங்கே வெண்மையாய் மென்மையாய் வளரும் புல்லுண்டு
அங்கே ஒளிவீசும் செங்கதிரவனுண்டு
அங்கே பறந்து ஓய்ந்த நிலாப்பறவை
இளைப்பாறத் துளசியின் குளிர்க்காற்றுமுண்டு
கரும்புகை வீசுமிடத்தை விட்டு நாம் சென்றுவிடுவோம்
வளைந்து நெளிந்து செல்லும் இருண்ட சாலைகளை விட்டு
தார்ச்சாலையின் குழிகளில் பூத்திருக்கும் மலர்களைவிட்டு
காலால் நிலமளப்பதுபோல் மெதுவே மிகமெதுவே நடந்து
வெள்ளைச் சுண்ணாம்பு அம்புக்குறிகளைத் தொடர்ந்து
நடைபாதை முடியுமிடம் நோக்கி நாம் செல்வோம்
ஆம் நிலமளப்பதுபோல் மெதுவே மிக மெதுவே நடப்போம்
வெள்ளைச் சுண்ணாம்பு அம்புக்குறி காட்டுமிடம் போவோம்
குழந்தைகளுக்காகக் குறிக்கப்பட்ட, குழந்தைகள் நன்கறியும்
நடைபாதை முடியுமிடம் நோக்கி நாம் செல்வோம்
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

– by Shel Silverstein
There is a place where the sidewalk ends
and before the street begins,
and there the grass grows soft and white,
and there the sun burns crimson bright,
and there the moon-bird rests from his flight
to cool in the peppermint wind.
Let us leave this place where the smoke blows black
and the dark street winds and bends.
Past the pits where the asphalt flowers grow
we shall walk with a walk that is measured and slow
and watch where the chalk-white arrows go
to the place where the sidewalk ends.
Yes we’ll walk with a walk that is measured and slow,
and we’ll go where the chalk-white arrows go,
for the children, they mark, and the children, they know,
the place where the sidewalk ends.
– புலவர் இரா. இராமமூர்த்தி.
செல்வம் பலவகைப்படும். ஒருவன் சேர்க்கும் செல்வம் பொன்னாகவோ, பல்வகைப் பொருளாகவோ, உறைவிடமாகவோ, உணவுப் பொருளாகவோ, நில புலங்களாகவோ இருக்கும். இக்காலத்தில் பற்பல வகைகளில் பணத்தை முதலீடு செய்து பெருஞ் செல்வமாகச் சேர்க்கின்றனர்! செல்வப்பெருக்கமே மக்களின் நோக்கமாகிவிட்டது. அச்செல்வத்தைச் சேர்ப்பவன் வந்ததைச் செலவு செய்ய மாட்டான்; வருவதை எண்ணி ஏங்கி யிருப்பான்; இதனைப் பரிமேலழகர் கடும்பற்றுள்ளம் என்பார்.
அறிவுடையாரால் கடியத்தக்க குற்றங்கள் காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் ஆகிய ஆறாம். இவற்றை அரிஷட்வர்க்கம் என்பர்! அதனை வடமொழியில் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் என்பர். இவற்றுள் லோபம் என்பது செலவு செய்யவேண்டிய செயலுக்குச் செலவிடாமல் பொருளின் மேல் மிகுதியான பற்று வைத்து இறுகப் பிடிப்பதாகும். இவ்வாறு இறுகப் பிடிப்பதால் வரும் செல்வம் நில்லாமல் நீங்கி விடும்! இதனைத் திருவள்ளுவர்,
“இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு !”(432)
“செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது இன்றிக் கெடும்!”(437)
என்ற குறட்பாக்களில் கூறுகிறார். இதற்கு உரை வகுத்த பரிமேலழகர் செயற்பால என்ற தொடருக்கு, பொருளால் பொருள் செய்தல் என்று பொருள் கூறுகிறார். செல்வத்தால் வரும் சிறப்புகள் பற்றி சிந்தாமணி,
“பொன்னின் ஆகும் பொருபடை, அப்படை
தன்னின் ஆகும் தரணி, தரணியிற்
பின்னை ஆகும் பெரும்பொருள் அப்பொருள்
துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே!”
என்ற பாடலில் விளக்குகிறது. அடுத்து இவறல் என்னும் பற்றுள்ளம் எல்லாக் குற்றங்களுக்கும் மேலாகி ஒருவனை அழித்தே விடும் என்பதைத் திருக்குறள்,
“பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று !”(438)
என்று பாடுகிறது. ஆகவே, ஒருவன் சேர்த்து வைக்கும் பெரும்பொருள், நன்மை செய்வதைவிடத் தீமையே செய்து கெடுக்கும் என்பது புலனாகின்றது! செல்வத்தைச் சேர்த்து வைக்க ஒருவன் செய்யும் முயற்சிகள் அவனுக்கு நன்மை தராமல் தீய முயற்சிகளாகி அவனை அழித்துவிடும்! இப்படி மிகமிக முயன்று, கெட்டபெயர் வாங்கிச் செல்வம் சேர்த்தலை விட, உள்ளதே போதும் என்று அடக்கத்துடன் வாழ்வதே நல்லது. இதனையே “செல்வம் என்பது சிந்தையின் நிறைவு” என்ற பழமொழியும், “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற பழகு மொழியும் குறிக்கின்றன. செல்வத்தை அளவின்றிச் சேர்ப்பதால் அடையும் துன்பமும், அதனைக் காப்பாற்றப் படும் துன்பமும் மனிதனின் மகிழ்ச்சியைக் கெடுத்து விடும்!
இப்படிக் கடும்பற்றுள்ளத்துடன் ஒருவன் சேர்க்கும் பெருஞ்செல்வம், சிறிய குறைகளைக் கருதாமல் வாழப் பழக்கும்! சற்றுப் பெரிய குற்றங்களைச் செய்வதில் ஈடுபாடு கொள்ளச் செய்யும்; செல்வச் செருக்கு, பிறர் துன்பத்தைப் பொருட்படுத்தாமல் ஒருவனை வாழச் செய்யும்! ஆகவே செல்வத்தைப் பெருக்குவதே நோக்கம் என வாழும் ஒருவன் தன் செயலின் விளைவாக அடுத்தவர் அடையும் துன்பத்தையும், அத்துன்ப மிகுதியினால் அழுவதையும், நேரில் கண்டும் காணாதவன் ஆகிவிடுகிறான்.
இங்கே திருவள்ளுவர் அரசனின் கொடுங்கோன்மை பற்றிக் கூறிய பாடல் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்! இது பொருட் பாலில் அரசனின் ஆட்சிக் குறைபாட்டைப் பற்றிச் சிந்திக்கும் பாட்டு. ஆனால் நாட்டை ஆளும் மன்னன் புறத்தில் தேசத்தை ஆள்வதை விட அகத்தில் ஆன்மாவை ஆளக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற அரிய செய்தியைக் கூறுகிறது! அந்தப் பாடல் என்னவென்றால்,
“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை!”(555)
என்ற பாட்டாகும்! நமக்குள், நம்மை இடித்துரைக்கும் மனச்சாட்சி ஒன்று உண்டு. இதனை வள்ளுவர் “தன்நெஞ்சு” என்பார். தன்னெஞ் சறிவது பொய்யற்க என்ற குறளில் தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்பார். மேலும் “உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் ” என்ற குறட்பா வில் உள்ளம் என்பது மனச்சாட்சியைக் குறிக்கிறது. அடுத்து “மனத்தொடு வாய்மை மொழியின்” என்ற குறட்பாவிலும் மனத்தோடு பொருந்த என்ற பொருள் உள்ளது. ஆகவே நம்முள்ளே இருந்து நம் நடவடிக்கைகளைக் கண்காணித்து, தவறுகளை இடித்துரைப்பது மனச்சாட்சி என்பது புலனாகிறது. அந்த மனச்சாட்சி நம் ஆன்மா ஐம்புலனாசைப்பட்டுத் தடுமாறும்போது, அல்லற்பட்டு ஆற்றாது தவிக்கிறது. இதனால் நம் தவறுகளை மனச்சாட்சி உணரும்போது அழுகிறது! கண்களில் கண்ணீர் பெருகுகிறது. அந்த ஆன்மா இறை நெறியில்ஈடுபடும் பொழுது மகிழ்கிறது; அப்போது ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது.
“உள்ளம் தளிர்ப்ப உரோமம் சிலிர்த்துரையும்
தள்ளவிழி நீரரும்பத் தன்மறந்தாள் – புள்ளலைக்கும்
தேந்தா மரைபுனல்சூழ் தில்லைத் திருநடம்செய்
பூந்தாம ரைத்தொழுத பொன்!”
என்ற பாடல் மகிழ்ச்சிக் கண்ணீரைக் குறிக்கிறது. இந்த இருவகை அழுகைகளில் நம் மனச்சாட்சி உறுத்தும் தவறுகளை நாம் புரியும் போது, வரும் அழுகை நம் மாசுகளைக் கழுவுகிறது.
இந்த அழுகை அடியார்கள் தம் மனத்தில் இருந்த பொய்முதலான பாதகங்களை எண்ணி அழுத அழுகை என்பதை மாணிக்க வாசகரின் வாழ்க்கை உணர்த்துகிறது. அவர் பாடுகிறார்,
“யானோ பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே “
இப்பாடலில் உள்ளம், அன்பு, உடல் ஆகிய பொய்களையே செல்வமாகக் கருதியிருந்த வலிமையான பாவம் என் அழுகையால் கரைந்து இறைவன் திருவருளைப் பெறலாமே என்கிறார். இப்போது கொடுங்கோன்மை என்ற அதிகாரத்தில் உள்ள குறட்பா! அந்த அதிகாரத் துக்குள் அமைந்துள்ள புறவயமான தீமையைக்கண்டு சமூகம் அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர், அந்தத் தீமையை அழிப்பது போலவே, அகவயமான பொய்முதலான தீமையைக்கண்டு அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அகம்பாவத்தினைக் கழுவி அழித்து இறையருளாகிய செங்கோன்மையை அளிக்கும் என்ற புதுப் பொருளைத் தருகிறது. இப்போது அந்தகக் குறட்பாவை அந்தக் கருத்துடன் படித்துப் பார்ப்போம்!
“அல்லற்பட் டாற்றா தழுதகண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை!”(555).
ஓர் இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன்னால் தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் நடந்த விவாதத்தில்,” திருக்குறளின் கொடுங்கோன்மை அதிகாரத்தில் உள்ள இந்தப் பாடலில் ஆன்மிகம் உண்டா?” என்று ஒருவர் கேட்ட வினாவுக்கு விடையாக அன்று இந்தக் கட்டுரை ஆசிரியர் உள்ளத்தில் தோன்றிய புதிய விளக்கமாகும்.
– சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்.
“என்ன பெரிசு ஒரே பாடாய்ப் படுத்தறே, ஓரமா ஒதுங்கிப் படுத்துக்கோப்பா” என்றும்
“இஞ்சை பாருங்கோ உங்களுக்கு வயசாயிப் போச்சுது, சும்மா இந்த இளசுகளோட போட்டி போடாம பேசாம சிவனேன்னு ஒரு மூலையில போய் இருங்கோவன்” என்றும்
கேட்கும் பேச்சுகள் …
இவையெல்லாம் எமது பின்புலங்களில் நாம் எங்காவது கேட்கும் வார்த்தைகள். நான் மேலே கூறிய உதாரணங்களிலிருந்து இவையெல்லாம், எமது நாடுகளுக்கேயுரிய ஒரு குறிப்பிட்ட பிரச்சனை என்று நான் கூறுவதாக யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இது சகல நாடுகளிலும், சகல கலாச்சாரங்களிலும் ஊறிப்போயிருக்கும் ஒரு விடயமாகும். அதாவது வயது எனும் காரணி ஒரு மனிதனின் வாழ்வை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதுவே இங்கே எழும் கேள்வியாகும். இந்தத் தாக்கத்தின் வடிவம் நிறவெறி, மதவெறி எந்த அளவிற்கு ஒரு சமூகத்தைப் பாதிக்கிறதோ அந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பது சமூக ஆராய்ச்சி வல்லுநர்களின் கருத்து.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் எம்மால் குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு உபயோகம் இருக்கிறது. அது வயது ஏற ஏற ஒவ்வொரு வடிவம் எடுக்கிறது. அந்த உபயோகத்தன்மையின் வடிவமும், அதன் முக்கியத்துவமும் சூழலுக்கேற்ப, சார்ந்திருக்கும் சமூகத்திற்கேற்ப மாறுதலடைகிறது. ஆனால், தன்னுடைய ஓய்வு நிலையை அண்மிக்கும் ஒருவனுடைய உபயோகத்தன்மை குறைகிறது என்பது பலருடைய பொதுப்படையான கருத்து என்பதே முக்கியமாக நான் இங்குக் குறிப்பிட விழைவது.
இப்படியான ஒரு நிலமை நடைமுறையில் இருக்கிறது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நிலைமை இருந்தாலும் அது சரியா? தவறா? என்பதுவே கேள்வியாகிறது.
சீ.ஏ.ஏ.டி.இ எனும் வயதுப்பாகுபாட்டிற்கு எதிரான ஒரு அமைப்பின் கணக்கெடுப்பின் படி, இந்த வயதானவர்கள் எனும் பட்டியல் அதாவது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் ஜனத்தொகையில் மூன்றிலொரு பங்கு இருக்கிறார்கள் எனக் கணிக்கப் படுகிறது. அதே அமைப்பின் மற்றொரு கணிப்பின் படி வயதானவர்கள் எனக் கணிக்கப்படுவோரில் 25% வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இரண்டரை மில்லியனுக்கு மேற்பட்ட வேலை செய்யக்கூடிய நிலையிலுள்ள 45க்கும் 65க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் வேலையற்று இருக்கிறார்கள் என்பதுவும் இவ்வமைப்பின் மற்றொரு கணிப்பாகும்.
சட்டரீதியாக வேலை செய்வதற்கு உட்பட்ட வயதிலுள்ளவர்கள் வயதானவர்கள் எனும் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுவதினால், அரசாங்கத்திற்கு 5.4 பில்லியன் பவுண்ட்ஸ் வேலையற்றோருக்கான உதவிப் பணத்திலும் 31 மில்லியன் பவுண்ட்ஸ் உற்பத்தி நஷ்டத்திலும் செலவாகிறது என்பதும் ஒரு கணிப்பாகிறது. வேலைவாய்ப்பு அற்றுப்போகும் தன்மை 59 வயதுடன் அதிகரிக்கின்றதாகக் கூறப்படுகின்றது. மேலே கூறப்பட்ட ஐக்கிய இராச்சியத்திற்கான சில வருடங்களுக்கு முன்னரான புள்ளி விபரங்களாகும். இந்தப் புள்ளி விபரங்கள் உலகின் மற்றபாகங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.
நான் இந்தப் புள்ளி விபரங்களைக் குறிப்பிட்டதன் காரணம் வயதுப்பாகுபாடு எனும் இந்த நிகழ்வு எப்படிப் பாதிக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே! ஒரு மனிதன் 20 வயதில் உத்தியோகம் எனும் நிலையை அடைக்கிறான் என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். சராசரி மனிதருடைய வாழ்வில் பிள்ளைகள் வளர்ந்து தமது அன்றாடத் தேவைகளைக் கவனிக்கும் நிலையிலிருக்கும் போது தாம் புரியும் பணியின் பால் செலுத்தக்கூடிய சிரத்தையின் விகிதம் அதிகமாக இருக்கும்.
இங்கேதான் ஒரு மனிதனின் உபயோகத்தன்மைக்கு ஓய்வுண்டா? அவனது அனுபவத்திற்கு வயதாவதுண்டா? எனும் கேள்விகள் ஓங்காரமாய் எழுகின்றன. இந்தப் பிரச்சனையை நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு அணுகுகிறோம்? இது என்றும் இருந்து வரும் ஒரு பிரச்சனை. அதுவும் இதற்கு தற்போது அதிக விளம்பரம் கொடுத்து, அரசாங்க அளவில் வயதுப்பாகுபாடு காட்டுவது சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டு அதைப்பற்றி பிரச்சாரமும் செய்யப்படுகிறது.
சில வருடங்களின் முன்னால் ஏன் இந்தப் பிரச்சனை இப்படி பெரிதாக்கப்படவில்ல? பின் ஏன் இப்போது என்னைப் போன்றவர்களின் கண்களில் இது தீவிரமாகத் தெரிகிறது? ஒருவேளை நானும் அந்த வயதானவன் எனும் பட்டியலின் வாசற்கதவைத் தட்டி நிற்பதால் எனது விழிப்புணர்ச்சி அதிகமாகியிருக்கிறதோ? இதற்கு இன்னொமொரு காரணமும் இருக்கலாம். இப்போதெல்லாம் மருத்துவ வசதிகள் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. மக்கள் தமது உடல்நலத்தில் அதிக கவனமெடுக்கிறார்கள். அதனால் சராசரி மனிதனின் வாழ்வுக்காலம் நீடிக்கப்படுகிறது.
இது எதற்கு வழிவகுக்கிறது என்றால் ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் (பென்ஷன்) முன்னைவிட அதிகாலத்திற்கு உயிர்வாழ்வதினால் அதிககாலத்திற்கு வழங்கப்படவேண்டியுள்ளது. அரசாங்கங்கள் அதற்காக தமது பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. சரி அரசாங்கம் எங்கே இருந்து தனது பணத்தைப் பெற்றுக் கொள்கின்றது? உழைக்கும் மக்கள் செலுத்தும் வரிப்பணமே அரசாங்கத்தின் அதிகப்படியான வருமானமாக இருக்கிறது.
இங்கேதான் புள்ளி விபரத்தை மீண்டும் உற்று நோக்க வேண்டி இருக்கிறது …
ஐக்கிய இராச்சியத்தைப் பொறுத்தவரையில் 1901ம் ஆண்டில் ஒரு ஓய்வூதியம் பெறுபவருக்கு 10 வரி செலுத்துவர் எனும் விகிதத்தில் இருந்தது. ஒரு பத்து ஆண்டுகளின் முன் அதாவது 2005ம் ஆண்டில் ஒரு ஓய்வூதியம் பெறுபவருக்கு 4 வரிப்பணம் செலுத்துவோர் எனும் விகிதத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் தொகை அதிகரித்து விட்டது. இதே விகிதத்தில் கணக்கிட்டால் 2050 ஆண்டளவில் ஒரு ஓய்வூதியம் பெறுவோருக்கு 2 வரிப்பணம் செலுத்துவோர் எனும் வகை ஓய்வூதியக்காரரின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்வதற்கான பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாகத்தான் இந்த வயதுப்பாகுபாட்டின் மூலம் வயதானவர்கள் என்போரை வேலையிலமர்த்தத் தயங்கும் நிறுவனங்களை அரசாங்கம் சாடத் தொடங்கியுள்ளது.
இங்கேதான் வயதானவர்கள் உபயோகமற்றவர்கள் என்று சமுதாயம் கணிக்கத் தொடங்குவதின் பிரதிபலிப்புகள்தான், இந்நிறுவனங்களின் தயக்கம் என்ற எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. ஒரு மனிதனுடைய உபயோகத்தன்மையை நிர்ணயிக்கும் உரிமையை யார் யாருக்குக் கொடுத்தது ?
உபயோகத்தன்மை என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது என்பதே உண்மை. 20 வயதில் சோம்பேறித்தனமாகவும் எதிலும் ஆர்வமில்லாமலும் இருக்கும் ஒரு இளைஞன் 50 வயதிலும் பெரும்பான்மையாக அதே குணாம்சங்களைத்தானே பிரதிபலிப்பான்? அதே போல 20 வயதில் மிகுந்த சுறுசுறுப்பும், ஆர்வமும் கொண்ட ஒரு இளைஞன் 50 வயதிலும் அப்படி இருப்பதுதானே சகஜம்.
இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை.
வயதானவர்களை ஒதுக்கி வைத்து அவர்களைக் காலத்தின் மாற்றத்திற்கு உட்படாதவர் என ஒதுக்கும் மனப்பான்மையையே அநேகமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. அப்படியானால் தான் புரிந்த பணியினாலும், மற்றைய வாழ்க்கைப் பாடங்களினாலும் அந்தப் பெரியவர் அடைந்த அனுபவத்திற்கு விலையில்லாமல் போகிறதா? வாழ்க்கையின் நடுப்பகுதி என்று கூறப்படும் 50களில் , தனது முழுக்கவனத்தையும் செலுத்தி தன்னுடைய அனுபவத்தின் அனுகூலத்தைத் தனது கம்பெனிக்குக் கொடுக்கக்கூடிய ஒருவர் தனது வயதின் நிமித்தம் அச்சந்தர்ப்பத்தை இழப்பது என்பது நியாயமாகுமா ?
அதேவேளை அனுபவம் உடையவர் என்பதனால் தொடர்ந்து 60களிலும், 70களிலும் வேலையைத் தன்னுடன் தக்க வைத்துக் கொண்டிருப்பதனால், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் தன்மைகள் குறைகின்றனவா? அன்றி அந்த இளைஞனோ, யுவதியோ ஒரு அனுபவமிக்க மூத்தவரின் அருகே பணிபுரியும் வாய்ப்புப் பெறும்போது அவரின் அனுபவங்களின் அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருக்கின்றதா?
பல கேள்விகள் பிறக்கும் வேளையிலே அவற்றிற்கான விடைகளைத் தேடி எமது அறிவை விசாலப்படுத்திக் கொள்வோம். அதேசமயம் வயதுப்பாகுபாடு எனும் காரணியால் ஒரு அனுபவமிக்கவரின் அனுபவத்தின் அனுகூலத்தைச் சமுதாயம் இழக்கின்ற நிலை வந்தால் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைக்கு எம்மை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் உபயோகத்தன்மைக்கு ஓய்வில்லை. அது பிரயோகிக்கப்படும் சூழல்களில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் அந்த உபயோகத்தன்மையின் உதவி நிச்சயம் சமுதாய வளர்ச்சிக்குத் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.
வயதானவர்கள் எனும் பெயர்சூட்டி பெரியோரைப் பீரோவில் வைத்து அழகு பார்க்கும் நிலைக்கு நாம் போய்விடக்கூடாது. சமுதாயம் செழிக்க சிந்தை விரிய வேண்டும். விவாதங்கள் ஆக்கபூர்வமான முறையில் வலுவாக நிகழ வேண்டும்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
(குறும்பா)
கோவிந்தன் நாமத்தைப் பாடுவமே
பாவுந்தும் பொருள்தன்னில் ஆடுவமே
. கோவிந்தன் ஆவிடையன்
. நாவுந்தக் காவிடையன்
நாவிந்தப் பேராழத் தேடுவமே. … 1
[காவிடையன் = காக்கும் இடையன்]
கண்ணனாக வந்துதித்த போதினிலே
கண்ணாயிரன் கருவத்தின் கோதறவே
. இந்திரனின் பூசையிலை
. இந்தமலை பூசையிலே
கண்ணனாணை கோபர்கள் காதினிலே. … 2
[கண்ணாயிரன் = ஆயிரம் கண்ணுடைய இந்திரன்; கோது = குற்றம்]
மழைவேந்தன் வெள்ளத்தால் தாக்கிடவே
குழல்வேந்தன் கோவர்த்தன் தூக்கிடவே
. கோவிந்திரன் நேர்வந்தான்
. கோவிந்தன் பேர்தந்தான்
விழைவேந்த கோவிந்தன் போக்கிடமே. … 3
கோவென்றே பூமியின்பேர் உற்றிடுமாம்
கோவிந்தன் பூமிதேடிப் பெற்றவவனாம்
. பன்றியாக ஆழ்கடலில்
. சென்றுபூமி மீட்டிடலில்
கோவிந்தன் பேர்வந்த கொற்றவனாம். … 4
கோவென்றால் புலனென்றும் பொருளுண்டே
கோவைந்தால் உள்ளத்தில் மருளுண்டே
. கோவைந்தும் கட்டுணவே
. கோவிந்தன் உட்டுணையே
நாவுந்தும் நாமத்தில் அருளுண்டே. … 5
[உட்டுணை = உள்துணை]
மலையேறும் போதினிலே கோவிந்தா
நிலையாகும் காதினிலே கோவிந்தா
. சங்கீர்த்தனம் கோவிந்தா
. சங்கரர்பா கோவிந்தா
தொலையாத பாவம்கொள் கோவிந்தா! … 6
[சங்கரர்பா கோவிந்தா = ஆதிசங்கரரின் ’பஜகோவிந்தம்’]
–ரமணி, 26/11/2015, கலி.10/08/5116
உதவி:
கோவிந்தன் என்ற சொற்பொருள்
https://ta.wikipedia.org/wiki/கோவிந்தன்_என்ற_சொற்பொருள்
purAnic encyclopedia: vETTam maNi
*****