நடைபாதையின் முடிவில் …

2

– தேமொழி.

நடைபாதையின் முடிவில் …

கவிதை மூலம் – ஷெல் சில்வர்ஸ்டீன்
மொழிபெயர்ப்பு – தேமொழி

 

நடைபாதையின் முடிவிலோர் இடமுண்டு
அங்கே சாலை துவங்கும் முன்
அங்கே வெண்மையாய் மென்மையாய் வளரும் புல்லுண்டு
அங்கே ஒளிவீசும் செங்கதிரவனுண்டு
அங்கே பறந்து ஓய்ந்த நிலாப்பறவை
இளைப்பாறத் துளசியின் குளிர்க்காற்றுமுண்டு

கரும்புகை வீசுமிடத்தை விட்டு நாம் சென்றுவிடுவோம்
வளைந்து நெளிந்து செல்லும் இருண்ட சாலைகளை விட்டு
தார்ச்சாலையின் குழிகளில் பூத்திருக்கும் மலர்களைவிட்டு
காலால் நிலமளப்பதுபோல் மெதுவே மிகமெதுவே நடந்து
வெள்ளைச் சுண்ணாம்பு அம்புக்குறிகளைத் தொடர்ந்து
நடைபாதை முடியுமிடம் நோக்கி நாம் செல்வோம்

ஆம் நிலமளப்பதுபோல் மெதுவே மிக மெதுவே நடப்போம்
வெள்ளைச் சுண்ணாம்பு அம்புக்குறி காட்டுமிடம் போவோம்
குழந்தைகளுக்காகக் குறிக்கப்பட்ட, குழந்தைகள் நன்கறியும்
நடைபாதை முடியுமிடம் நோக்கி நாம் செல்வோம்

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

Shel-Silverstein
Where The Sidewalk Ends

– by Shel Silverstein

 

There is a place where the sidewalk ends
and before the street begins,
and there the grass grows soft and white,
and there the sun burns crimson bright,
and there the moon-bird rests from his flight
to cool in the peppermint wind.

Let us leave this place where the smoke blows black
and the dark street winds and bends.
Past the pits where the asphalt flowers grow
we shall walk with a walk that is measured and slow
and watch where the chalk-white arrows go
to the place where the sidewalk ends.

Yes we’ll walk with a walk that is measured and slow,
and we’ll go where the chalk-white arrows go,
for the children, they mark, and the children, they know,
the place where the sidewalk ends.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நடைபாதையின் முடிவில் …

  1. அமெரிக்க கவிஞர். குழந்தைகளுக்காக நிறைய்ய எழுதி அவர்களின் இயல்பையும் மனங்களையும் அதில் பிரதிபலித்தவர். இவரிடம் உள்ள சிறப்பு இவரின் கவிதைக்கு இவரே ஓவியம் வரைவார். நல்ல கவிதையை மொழியாக்கம் செய்து தந்த தேமொழி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.