நிலா முத்தம்!

-சித்ரப்ரியங்கா சுப்ரமணியன்

நில்லாமல் ஓடி வரத் தானே
நிலாப்பெண்ணே உனை அழைத்தும்,
நீண்ட இடைவெளி நம்மிருவருக்குள்!    moon and cloud

ஓ! அதிர்ஷ்டசாலி முகிலனோ?
சத்தம் இல்லாமல் வானில் தான்
முத்தப் பரிமாற்றம் நடக்கிறதோ?

விண்ணில் உள்ள வெண் நிலாவையும்
மண்ணில் உள்ள பெண் நிலாவையும்
முத்தமிடுவதில் சற்று சிக்கல்தான்!

ஆம்!
சத்தமின்றி இட்ட முத்தத்தால்
சித்தம் மெல்லத்தான் கலங்கிப்
பித்தனாய் நித்தம் உலவுவோர்
இப்பாரினில் எத்தனை பேர் தானடி!

முகிலனே!
நீயோ அதிர்ஷ்டசாலி!
பட்ட துயரை மழைநீராய்க்
கொட்டித் தீர்த்துக் கொள்கின்றாய்!
என் கண்ணில் நீரில்லை!

நீயோ அதிர்ஷ்டசாலி!
நானோ அவளால் ஆனேன்
உன்னிடம் இன்று கடனாளி!

 

 

Share

Comments

One response to “நிலா முத்தம்!”

  1. அழகான கற்பனை.. அருமையான எதுகையுடன் கூடிய வரிகள்..படித்ததும் மனதில் பதிந்த்து இனிமை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *