மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++
நேற்றைய தினத்திலே
எனது துயரெல்லாம் வெகு தூரம்
போய் விட்டது !
இப்போ தவை மீண்டது போல்
தெரியுது எனக்கு !
நம்பிக் கிடக்கிறேன் இன்னும்
நேற்றைய தினத்துக்கு !
இப்போது
திடீரெனப் பாதி அளவு
வாடிக்கை
மானிடனாய்க் கூட
நானில்லை !
உடலுக்கு மேல் விழுகிறது
ஒற்றை நிழல் !
திடீரென நேற்றைய
தின நினைவு எனக்கு மீளுது !
எனக்குப் புரிய வில்லை,
என்னை விட்டு
ஏனவள் போனாள் என்று.
சொல்லாமலே சென்று விட்டாள் !
தவறாக ஏதோ நான்தான்
உளறி விட்டேன் !
நேற்றைய கூற்றுக்கு
இப்போது
வேதனைப் படுகிறேன் !
காதல் விளையாட் டெனக்கு வெகு
சாதாரண மாய் இருந்தது !
இப்போ தெனக்கு தேவை,
ஒளிந்து கொள்ள
ஓரிடம் !
நேற்றைய தினம் நினைவில்
நிழலாய்ச் சுற்றுது !
+++++++++++++++


Leave a Reply