Tag: ரா. பார்த்தசாரதி

  • பெயரிடப்படாத ஆண், பெண் உறவு

    ரா. பார்த்தசாரதி

     
    தர்ம சிந்தனை, நல்லெண்ணம் கொண்டு உதவுபவன்
    செய்யும் உதவிக்கு எந்த கைம்மாறும் எதிர்பாரான்.

    வேலைக்காரியின், மகள் படிப்பிற்கு ஏன் உதவவேண்டும்?
    கார் டிரைவரின் தாயாரின் மருத்துவத்திற்கு ஏன் உதவவேண்டும் ?
    மாதம் ஒரு முறை அநாதை குழந்தைகளுக்கு ஏன் உதவவேண்டும் ?
    இவர்கள் எனது பெயரிடப்படாத உறவுகள் என சொல்லவேண்டும்

    உறவுகளின் பெயர் இருந்தும், உறவு மறந்துபோகும் !
    பெயரே இல்லாத ஆண், பெண் உறவுகள் வந்து போகும் !

    பாசமும், பந்தமும், கொண்ட உறவுகள் நிலைக்குமா?
    நாம் செய்யும் நல்லவைகள் என்றாவது பிரதிபலிக்குமா!

    ஒழுக்கம் மாறாத அன்பும், பழகும் விதமே உறவின் எல்லை !
    இதனை அறிந்த மனித இனத்திற்கு என்றும் கவலை இல்லை !

    நான் நோய்வாய்பட்டு இருந்தேன் சில நாட்கள் !
    என்னை காண வந்ததே அந்த பெயரிடப்படாத உறவுகள் !

     

     

    Share
  • உறவும், நட்பும்!

    -ரா. பார்த்தசாரதி 

    மனிதனே! உறவையும் நட்பையும் உதறிவிடாதே!
    பழகும் விதத்தில் பழகினால் பகையும்  நட்பாகும்!
    மண்எனப்  பிரித்தால் மனிதம் என்றும் சாகும்!
    இனம்எனப் பிரித்தால் இனிமை இல்லாமல் போகும்!

    சொந்தம் என வாழ்ந்தால் என்றும் சுகமாகும்!
    மனிதநேயத்துடன்  வாழ்ந்தால் என்றும் நலமாகும்!
    பாசத்தையும் நேசத்தையும் பாலமாக அமைத்திடு!
    சாதி மத பேதத்தை வேரோடு அழித்திடு!

    வயதிற்கும் படிப்பிற்கும் என்றும் மரியாதை கொடுத்திடு!
    நட்பும் உறவும் உன் உடன்பிறப்பு  என நினைத்திடு!
    மன்னிக்கத் தெரிந்த மனிதனை நல்லவன் எனக் கருதிடு!
    கோபத்தையும் ஆணவத்தையும் அடக்கி உறவினைக் காத்திடு!

    Share
  • அன்புள்ள கணவா!

    -ரா. பார்த்தசாரதி

    அன்புள்ள  கணவா! உன் நெஞ்சில் நான்  நிறைந்திருந்தாலும்,
    என் பெண்ணுள்ளம் எதிரொலியாய்  இருந்தாலும்,
    நான் என்றும் நீ என்றும் இருவராக இருந்தாலும்,
    நான்  வேறு,  நீ வேறு யார் சொன்னாலும்,

    உந்தன் மனதினிலே நான்  என்றும்  இருந்தாலும்,
    சுகமும், துன்பமும் சரிபாதியாய்  இருந்தாலும்,
    பூவாகி, காயாகி, கனியாய்  இருந்தாலும்,
    நீயாகி, நானாகி, நாமாய் இருந்தாலும்,

    சுகம் சுகம் அது துன்பமான இன்பமாய் இருந்தாலும்,
    மனம், பேதை மனம் மாறாத சொந்தம் இருந்தாலும்,
    இனமாகிய பெண் உனக்கே உரிமையாய் இருந்தாலும்,
    அது பூப்போல மென்மையாய்ப் பூத்திருந்தாலும்,

    உந்தன்  நிழலாக  நான் மாறும் நாள் வந்தாலும்,
    தேன் உண்ணும் வண்டாய் நீ இருந்தாலும்,
    தெம்மாங்கு பாட நீ நினைத்திருந்தாலும்,
    தொலைவில் இருந்தும் என் நெஞ்சத்தில் மறைந்திருந்தாலும்,

    கல்யாணம் முடிந்து காதல் மறைந்தாலும்,
    பழமையான காதல் நினைவுகள் மறக்காமல் இருந்தாலும்,
    நமது வாழ்க்கை எனும் ஓடம் ஓடிக்கொண்டிருந்தாலும்
    பொங்கும் நமது உள்ளமே வாழ்வின் புது வெள்ளமே!

                                       

    Share
  • சந்தோஷம் என்றும் நம் பக்கம்!

    -ரா. பார்த்தசாரதி 

    சந்தோஷம் என்றும் நம் பக்கம்! 
    சந்தோஷம் என்றாலே மனிதனுக்குப் பாதிபலம்!
    அது இல்லையெனில்  மனிதனுக்கு ஏது  பலம்?
    சந்தோஷம்  நாம்  வாழ்க்கையில் தேடுவது!
    எப்பவும்  எல்லோர்  நெஞ்சுக்குள் நினைப்பது!
    போதுமென்ற  மனம் இருந்தால் தானே வருவது!

    சூரியனைக்  கண்டால்  தாமரை
    சந்தோஷத்துடன்  மலர்ந்துதானே பழக்கம்?

    கார்முகில்கள்  திரண்டு  வந்து
    மழை தந்துதான்  பழக்கம்!

    மழையைக்  கண்டால்  மயிலுக்கு
    மகிழ்ச்சியுடன்  ஆடித்தான்  பழக்கம்!

    காட்டில் உள்ள  குயிலுக்கோ
    சந்தோஷத்துடன் கூவித்தான்  பழக்கம்!

    கிடைத்ததை  மனதிற்கொண்டு  நடப்பவை
    எல்லாம்  நன்மைக்கே  எனத் தெளிந்தால்
    வாழ்வில்  சந்தோஷம்  என்றும் நம் பக்கம்!

     

    Share
  • தந்தையர் தின விழா!

    -ரா.பார்த்தசாரதி

    Fathers-Day-Poster

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய  நாடு!
    அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்ற நாடு!
    தாயைவிடச் சிறந்த கோவில் இல்லை!
    தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை!

    தாயிடம் அன்பும்,  தந்தையிடம் அறிவும்,
    அவர்களால் கல்விமானாய் உலகில் திகழவும்,
    பணம் ஒன்றினால் பாகுபடுத்தத் தெரிந்தவனாய்,
    ஏன் பாசத்தை மட்டும் காட்டத் தயங்குகின்றாய்!

    அன்று அவர்கள் கொடுத்த முகவரிதான்
    இன்று உன்னை அடையாளம் காட்டுகின்றதே!
    பழையதை மறந்து, புதியதில் என்றும் திளைக்காதே!
    வந்த வழியினையும், பாதையினையும் என்றும் மறக்காதே!

    தந்தையே  உன்  பிறப்பிற்குக் காரணம்
    தந்தையே உன் அறிவிற்கு ஆதாரம்!
    பணம் என்றும் எட்டிப் பார்க்கும்
    பாசம்  என்றும்  பக்கத்தில் நிற்கும்!

    வாழ்க்கை முழுதும் குடும்பத்தின்  தூணாய்,
    உன் ஆண்மைக்கும், அறிவுக்கும் தூண்டுகோலாய்,
    உலாவி வரும்  தந்தையே   இடிதாங்கி!
    ஏன் எனில் நல்லது கெட்டதெல்லாம் அவர்மேலே!

    தந்தைக்கும் தாய்க்கும்  ஊன்றுகோலாய்  இருந்திடு!
    அவர்களே கண்கண்ட தெய்வமென  நினைத்திடு!
    தரணியில் என்றும் சிறந்து விளங்கிடு!
    எல்லோர்க்கும் நல்லவனாய்  என்றும் திகழ்ந்திடு!

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –ரா.பார்த்தசாரதி.

     

    என் பார்வையில் கண்ணதாசன்

     

    Kannadasanகவியரசு கண்ணதாசன், 1974ஆம் ஆண்டு , பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ் பேரவைக்கு தலைமை தாங்க வந்தார். வந்தவர், சற்று நேரம் கழித்து வந்தமையால், எனக்கென்று ஓர் தனிமதம், அதுவே தாமதம்.என்று கூறி கவிதை பாங்குடன் கூறி, கைதட்டல் பெற்றதை நினைத்துப்பார்த்தேன்.

    அன்று, கண்ணதாசன், நா.பார்த்தசாரதி ( தீபம் இதழ் ) மற்றும் புரட்சி எழுத்தாளர் ஜெயகாந்தன் மூவரும் ஒரே மேடையில் பேசினார்கள். எண்ணிப் பாருங்கள் எப்படியிருக்கும் என்று ! அரங்கமே களை கட்டியது. இடை, இடையே, பரிசு அளிப்பு விழவும் நடந்தது. தேனிர் இடைவேளை வந்தது. இருபத்தொரு வயதுடைய ஒரு கல்லூரி மாணவன் அவரிடம் தேனீர் கொடுத்துவிட்டு , ஐயா, கவியரசு அவர்களே, நான் பொது அறிவிற்கான பரிசினைதான் தாங்களிடம் பெற்றேன், கவிதைக்கு அல்ல என்றேன். உடனே கவியரசு , மாணவனே, பொது அறிவும், சமுதாய நோக்கும், கற்பனை திறனும்
    இருந்தால்தான் என்னை போன்றவர்கள் கவிதை எழுத முடியும்.!

    ஐயா, ஒரு சந்தேகம் ! தாங்கள் அத்திக்காய் , ஆலங்காய் வெண்ணிலவே என்ற பாடலில் ( பலே பாண்டியா திரைபடத்தில் ) பல காய்களை கொண்டு காய்ப்பது ஏன் ? காதலின், காதலி இடையே காய் வருவதன் காரணம் என்ன?

    அதற்கு புன்சிரிப்புடன், காதலன் வெண்ணிலவைப் பார்த்து என்னை வேண்டுமானாலும் காய் , என் காதலையும், காதலியையும் காயாதே என சுருங்கச் சொல்லி தெளிவித்தார். என்னே அவரது கவி நயம்.

    அன்று அவர் திறன் கண்டு, மெய்மறந்து நின்று, பரிசு பெற்ற அக்கல்லூரி மாணவனுக்கு அன்று வயது இருபத்தொன்று. ஆம், அன்று பரிசுபெற்ற மாணவன்தான் இன்று அகவை அருபத்தொன்று அடைந்த ரா.பார்த்தசாரதி, வல்லமையின் வாசகன்.

    Share
  • கடல் அன்னை!

    -ரா.பார்த்தசாரதி 

    கடலும் சமுத்திரமும் ஒன்றே!
    உலகமும் கடலால் சூழ்ந்திருப்பதும் தெரிந்த ஒன்றே!              sea

    கடலில் என்றும் அலைகள் ஓய்வதில்லை!
    மனித வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் ஓய்வதில்லை!

    உலகிற்கே மழைதந்து தாகம் தீர்க்கிறோமே!
    உப்புத் தண்ணீரையும்  குடிநீராய் மாற்றுகிறோமே!

    என்றும் பல உயிர்கள் என்னுள் வாழ்கின்றதே!
    தேவையற்ற கழிவுகளைச் செலுத்தி உயிர்கள் இறக்கின்றதே!

    நதிகள் பிறந்தாலும் எங்களிடம்  சேருகின்றதே!
    நீ  இறந்தாலும் உன் சாம்பல் என்னுள் கரையுதே!

    நான் கோபம் அடைந்தால்  சுனாமியாய்ச் சீறுவேன்!
    கடலோர  மக்களையும்  பழி வாங்குவேன் !

    சாகத் துணிந்தவனுக்கு நான் முழங்கால்அளவு!
    என்னைப்  பற்றி உனக்கே  தெரியும் என்அளவு!

    மனிதனே!  என்னால் என்றும்  உலகிற்கு  நன்மையே!
    மனிதனே! உன்னால் என்றும்  எனக்குத் தீமையே!

    என் அழிவு  பிரளயத்தில்தான் முடியும்!
    உன் அழிவு  பொறாமை,பேராசையாலும் அமையும்!

    உப்பு நீரையும்  குடிநீராய் உனக்கு அளிக்கின்றேன்!
    காலம்  தவறாமல் மழை  பெய்விக்கின்றேன்!

    உன் வளர்ச்சிக்கும் வளமைக்கும் நான் உற்றதுணை!
    என்னிடம் கருணைகொண்டு  தாயென  அணை!

    Share
  • தாயும் சேயும்!

    -ரா. பார்த்தசாரதி

    தாயே விளைநிலமாம், தந்தையே வித்தாம்,
    குலம் தழைக்கவந்த ஓர் சொத்தாம்!                                               vallamai image1

    பெண் முழுமை அடைவதும் தாய்மையாலே!
    தாயாக மாறுவதும் அந்தத் தாய்மையாலே!

    கருவறையில் உன்னை வைத்துப் பாதுகாத்தேன்!
    எனக்கென்று உண்ணாது உனக்காக உண்டேன்! 

    பிறந்த மேனியுடன் வெளியுலகில் வந்தாய்!
    தாய் தந்தையர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்தாய்!

    உனக்காகக் கண்விழித்துத் தூக்கத்தினை மறந்தேன்!
    உனக்காகப் பாசத்தையே பாலாகப் பொழிந்தேன்!

    எனது அணைப்பே உனக்கு அடைக்கலம்!
    எனது மடியே உனக்குத் தொட்டில்!

    உன் பசி, தூக்கத்தை அழுகையால் வெளிப்படுத்துகிறாய்!
    உன் கள்ளமில்லாச் சிரிப்பால் கவலைகள் போக்குகின்றாய்!

    தோளையே தூளியாக்கி உன்னைச் சுமக்கின்றேன்
    உன்னை வயிற்றில் சுமந்ததைவிடப் பாரமா?

    அன்னைக்கு ஆயிரம் பிரச்சனை இருப்பு! 
    உன்னைக் கட்டியணைப்பதில்தான் ஆனந்தக் களிப்பு!

    எங்கள் இல்வாழ்க்கையே உன் படைப்பு!
    எங்கள் வாழ்கையில் நீ ஒரு துடுப்பு!

    உன் வளமே எங்கள் சிறப்பு!
    உன் நினைவே பாசத்தின் பிணைப்பு!

    குழந்தையின் வளர்ப்பு, தந்தையின் கடமையே!
    அன்னையின் வார்த்தைகள் அன்பின் இனிமையே!

    அன்னையைப் போல ஒரு தெய்வம் இல்லை!
    திசை நான்கும் அன்னையைப் போல் எவருமில்லை!          

    Share
  • உலகச் சுற்றுச்சூழல் தினம்!

    -ரா. பார்த்தசாரதி

    சுற்றங்கள் சூழ வாழும் மனிதனே!
    சற்றே சுற்றுப்புறச்  சூழலைக்  கவனிக்காமல்  இருப்பது  ஏன்?            world-envernment-day-003
    பிற நாட்டினை மேற்கோள் காட்டும் நீ
    ஏன் உனது  நாட்டிற்குச்  செய்ய கழிவிரக்கம் கொள்கிறாய்?

    மனிதனே!   உன் சுற்றுப்புறச்  சூழலைப் பார்!
    இதற்கெல்லாம்  நாமேதான்  காரணம்
    வீட்டின் சுத்தம் நோயின்  ஓட்டம்!
    நாட்டின்  சுத்தம் சுகாதாரத்தின்  ஏற்றம்!

    வீட்டிற்கு ஓர் மரம் தெருவிற்குப் பல மரம்!
    வீட்டினைச் சுத்தமாக்கு, நாட்டினைப் பசுமையுடன் வளமாக்கு!
    மனித வாழ்க்கையினைப் பொன்மயமாக்கு!
    நமது நாட்டினைப் பலவகையில் ஏற்றமுடையதாக்கு!

    நமக்கு நாமே  சூளுரை  எடுத்துக்கொள்வோமே!
    நமக்கு நாமே  தூய்மை எனும் விதையினை விதைத்துக்கொள்வோமே!
    நாட்டிலும்  பசுமைப் புரட்சி  ஓங்கப்   பாடுபடுவோமே!
    உலகச்  சுற்றுச்சூழல் தினத்தைப்  பயனுறச் செய்வோமே!

     

    Share
  • நயாகரா நதியே!

    -ரா. பார்த்தசாரதி 

    AmericanFalls

    நயாகராவே நீ  ஒரு  அருவியா?! நதியா?! நங்கையா?!

    நதியையும் நங்கையையும் பற்றி எழுதாத கவிஞன் இல்லை!
    நதியினைக்  காணவரும்  மனிதர்களும் ஜாதி மதம் பார்ப்பதில்லை! 

    இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே?
    மனிதன் படைத்த  கவிதை…நதியும், நங்கையும் தானே!   

    மேகம் போன்ற மேனியும் இளமைகொண்ட  நங்கைபோலே
    மலைமேடு பள்ளம்மூடி ஓடுகின்றாய்  நாணத்தினாலே!

    நதியே நீயும் ஒரு பெண்தானோ?
    அருவி  எனும்  கூந்தலையும் எழிலையும் காட்டுவதும்  ஏனோ?

    நதியே!  நீ அருவியாய்  நின்று  புன்முறுவல் பூக்கின்றாய்!
    நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேனருவியாய்  வீழ்கின்றாய்!

    நதியே  நீ  நடந்தால்  நங்கை!  குனிந்தால்  குமரியல்லவா!
    எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு தாய் அல்லவா!

    நதியே  நீ  அருவியாய் விழுந்து நதியாய் ஓடிக் கடலில் கலக்கின்றாய்!
    நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன் வாழ்வில்  கலக்கின்றாள்!

    நதியே நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்!
    நங்கையோ வாழ்க்கை எனும் நதியில் ஒளி பெறுகிறாள்!

    நதியே நீ உறவை நாடிக் கடலில் கலக்கின்றாய்!
    நங்கையோ ஓர்  உறவைத்  தேடி  மனதில் கலக்கின்றாள்!

    வெண்ணிற ஆடையணிந்து வானவில்லை  ஏந்தி நின்றாய்!
    நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய்!

    ஆம்,  நயாகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான்!       

     

    Share
  • ஒரு நாள் போதுமா?

    -ரா.பார்த்தசாரதி

    அன்பு ஊற்றுக்கு இன்று அடையாள  தினம்      mother-and-a-child                                  
    அதுவே அன்னையரை வாழ்த்தும் தினம்!                                                               
    அடுத்த தலைமுறை உருவாக்கிய அணங்கு
    அரும்பணி ஆற்றிய அன்னையெனும் தெய்வம்!

    மங்கலநாண் அணிந்த முதல் நாளாகச்
    சுற்றத்தையும் தன் வாரிசுகளையும் பேணும் பெண்ணாக,
    வித விதமான வினாக்களுக்கு விடையளிக்கும் தாயாக,
    கருக்கொண்ட நாளில் இருந்து தாயின் உருவமாக 

    ஐயிரண்டு திங்கள் அடிவயிற்றில் காத்து,
    சிசுவின் செல்ல உதைகளை நினைத்து,
    சுகமாய் உள்வாங்கித் தழும்புகள் பதிந்தாலும்,
    பிரசவத் துயருற்று, குருதியை பாலாகப் பொழிந்தாலும்,

    ஈன்று எடுத்த தாயை இருகரம் கூப்பி
    வணங்குதல் இயல்பே ஆனாலும் நாம்
    வணங்குவதற்கு ஒரு நாள் போதுமா?

     

    Share