சந்தோஷம் என்றும் நம் பக்கம்!

-ரா. பார்த்தசாரதி 

சந்தோஷம் என்றும் நம் பக்கம்! 
சந்தோஷம் என்றாலே மனிதனுக்குப் பாதிபலம்!
அது இல்லையெனில்  மனிதனுக்கு ஏது  பலம்?
சந்தோஷம்  நாம்  வாழ்க்கையில் தேடுவது!
எப்பவும்  எல்லோர்  நெஞ்சுக்குள் நினைப்பது!
போதுமென்ற  மனம் இருந்தால் தானே வருவது!

சூரியனைக்  கண்டால்  தாமரை
சந்தோஷத்துடன்  மலர்ந்துதானே பழக்கம்?

கார்முகில்கள்  திரண்டு  வந்து
மழை தந்துதான்  பழக்கம்!

மழையைக்  கண்டால்  மயிலுக்கு
மகிழ்ச்சியுடன்  ஆடித்தான்  பழக்கம்!

காட்டில் உள்ள  குயிலுக்கோ
சந்தோஷத்துடன் கூவித்தான்  பழக்கம்!

கிடைத்ததை  மனதிற்கொண்டு  நடப்பவை
எல்லாம்  நன்மைக்கே  எனத் தெளிந்தால்
வாழ்வில்  சந்தோஷம்  என்றும் நம் பக்கம்!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *