இலக்கியம்கவிதைகள்

தந்தையர் தின விழா!

-ரா.பார்த்தசாரதி

Fathers-Day-Poster

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய  நாடு!
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்ற நாடு!
தாயைவிடச் சிறந்த கோவில் இல்லை!
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை!

தாயிடம் அன்பும்,  தந்தையிடம் அறிவும்,
அவர்களால் கல்விமானாய் உலகில் திகழவும்,
பணம் ஒன்றினால் பாகுபடுத்தத் தெரிந்தவனாய்,
ஏன் பாசத்தை மட்டும் காட்டத் தயங்குகின்றாய்!

அன்று அவர்கள் கொடுத்த முகவரிதான்
இன்று உன்னை அடையாளம் காட்டுகின்றதே!
பழையதை மறந்து, புதியதில் என்றும் திளைக்காதே!
வந்த வழியினையும், பாதையினையும் என்றும் மறக்காதே!

தந்தையே  உன்  பிறப்பிற்குக் காரணம்
தந்தையே உன் அறிவிற்கு ஆதாரம்!
பணம் என்றும் எட்டிப் பார்க்கும்
பாசம்  என்றும்  பக்கத்தில் நிற்கும்!

வாழ்க்கை முழுதும் குடும்பத்தின்  தூணாய்,
உன் ஆண்மைக்கும், அறிவுக்கும் தூண்டுகோலாய்,
உலாவி வரும்  தந்தையே   இடிதாங்கி!
ஏன் எனில் நல்லது கெட்டதெல்லாம் அவர்மேலே!

தந்தைக்கும் தாய்க்கும்  ஊன்றுகோலாய்  இருந்திடு!
அவர்களே கண்கண்ட தெய்வமென  நினைத்திடு!
தரணியில் என்றும் சிறந்து விளங்கிடு!
எல்லோர்க்கும் நல்லவனாய்  என்றும் திகழ்ந்திடு!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

  1. Please send your email I’d.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க