கடல் அன்னை!
-ரா.பார்த்தசாரதி
கடலும் சமுத்திரமும் ஒன்றே!
உலகமும் கடலால் சூழ்ந்திருப்பதும் தெரிந்த ஒன்றே!
கடலில் என்றும் அலைகள் ஓய்வதில்லை!
மனித வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் ஓய்வதில்லை!
உலகிற்கே மழைதந்து தாகம் தீர்க்கிறோமே!
உப்புத் தண்ணீரையும் குடிநீராய் மாற்றுகிறோமே!
என்றும் பல உயிர்கள் என்னுள் வாழ்கின்றதே!
தேவையற்ற கழிவுகளைச் செலுத்தி உயிர்கள் இறக்கின்றதே!
நதிகள் பிறந்தாலும் எங்களிடம் சேருகின்றதே!
நீ இறந்தாலும் உன் சாம்பல் என்னுள் கரையுதே!
நான் கோபம் அடைந்தால் சுனாமியாய்ச் சீறுவேன்!
கடலோர மக்களையும் பழி வாங்குவேன் !
சாகத் துணிந்தவனுக்கு நான் முழங்கால்அளவு!
என்னைப் பற்றி உனக்கே தெரியும் என்அளவு!
மனிதனே! என்னால் என்றும் உலகிற்கு நன்மையே!
மனிதனே! உன்னால் என்றும் எனக்குத் தீமையே!
என் அழிவு பிரளயத்தில்தான் முடியும்!
உன் அழிவு பொறாமை,பேராசையாலும் அமையும்!
உப்பு நீரையும் குடிநீராய் உனக்கு அளிக்கின்றேன்!
காலம் தவறாமல் மழை பெய்விக்கின்றேன்!
உன் வளர்ச்சிக்கும் வளமைக்கும் நான் உற்றதுணை!
என்னிடம் கருணைகொண்டு தாயென அணை!