Tag: இந்த வார வல்லமையாளர்

  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 16, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு “நீச்சல்காரன்” ராஜாராமன் அவர்கள்

    S. Raja Raman1

    தமிழ் இணையக் கல்விக்கழகமும், தமிழ் விக்கிப்பீடியாவும் கூட்டு முயற்சியாகத் தமிழ் விக்கிபீடியாவில் ‘தமிழக ஊராட்சிகள்’ பற்றிய கட்டுரைகளைச் சேர்த்து வரும்பணி நடந்து வருகிறது. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் தானியக்கமாக விக்கிபீடியாவில் பதிவிடப்பட்டுள்ளதுடன் (பார்க்க: https://ta.wikipedia.org/s/4u75) இன்னும் ஓரிரு வாரங்களில் இப்பணி நிறைவுறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணியில் முக்கியப் பங்கேற்று செயலாற்றி வருபவர் “நீச்சல்காரன்” என்னும் திருவாளர் சே. ராஜாராமன் அவர்கள். கணித்தமிழுக்காக அவர் தொடர்ந்து ஆற்றிவரும் தன்னார்வப்பணிகளைப் போற்றும் விதமாக நீச்சல்காரன் ராஜாராமன் அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்து பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    நீச்சல்காரன் வல்லமையின் வாசகர்களுக்கு அறிமுகமானவரே. இவரது, “கட்டற்ற மென்பொருள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு இடரா?“, “விளம்பரங்களுக்கு விலை போகிறோம்” என்ற கட்டுரைகளும், ‘மறுஜென்மம்‘ என்ற சிறுகதையும் வல்லமை மின்னிதழில் வெளிவந்துள்ளன. திண்ணை, சொல்வனம், சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, தமிழ் இந்து, முத்துக் கமலம் போன்ற மற்ற பிற இணைய இதழ்களிலும்; விஜயபாரதம் வார இதழ், வெற்றிநடை மாத இதழ், தமிழ் கம்ப்யூட்டர், அருவி காலாண்டிதழ் போன்ற அச்சுப் பதிப்பில் வெளியாகும் இதழ்களிலும் எழுதியுள்ளார்.

    S. Raja Raman

    நீச்சல்காரன் பல்துறையில் திறமைபெற்றவர் என்பதுடன் அவரது சமூக அக்கறை என்ற பண்பும் சேர்ந்ததால், தனது திறமைகளை ஆக்கபூர்வமாகத் தன்னார்வப் பணிகளில் செலுத்திவருகிறார். குறிப்பாகக் கணித்தமிழ் சார்ந்த பங்களிப்பினால் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கு உதவும் வகையில் ‘நாவி’ என்ற சந்திப்பிழை திருத்தியையும் (http://dev.neechalkaran.com/p/naavi.html), ‘வாணி’ என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தியையும் (http://vaani.neechalkaran.com/) உருவாக்கி தனது நீச்சல்காரன் இணையத்தளத்தில் அனைவரும் விலையின்றிப் பயன்பெறும் வண்ணம் வெளியிட்டுள்ளார். ஆங்கில எழுத்தின் உதவியுடன் ஒலிபெயர்ப்பில் தமிழை எழுதிப் பழகிய இக்கால எழுத்தாளர்களுக்கு நீச்சல்காரன் உருவாக்கிய பிழைதிருத்திகள் உதவிகரமானது என்பதைக் கூறத் தேவையில்லை. ஒற்றுப்பிழைகளுடன் எழுதும் பொழுது வலி மிகும், வலி மிகா இடங்களைப் பற்றிய பரிந்துரைகளையும், பிழைகளைச் சுட்டிகாட்டியும் உதவுகிறது நாவி-சந்திப்பிழை திருத்தி. அவசரகதியில் தட்டச்சும் பொழுது அதிகத் தட்டச்சுப் பிழைகளுடன் எழுதுபவர்களுக்கும், பிழைதிருத்துகையில் மேலோட்டமாகப் படித்துச் செல்லும் கூரிய பார்வை கொண்டிராதவருக்கும் வாணி – தமிழ் எழுத்துப்பிழை திருத்தி இன்றியமையாத மென்பொருள். சந்திப்பிழை திருத்தியைப் பயன்படுத்திப் பார்த்தவரும், விக்கிபீடியாவில் அதிகக் கட்டுரைகளைப் பதிவிட்டவருமான முனைவர் செங்கை பொதுவன் அவர்கள் இதனை எழுத்தாளர்களுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

    S. Raja Raman3

    கணினி சார்ந்த ஐயங்களைத் தீர்க்க உதவும் தகவல்களும் விளக்கங்களும் கொண்ட “மானிட்டர் உலகம்” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார் நீச்சல்காரன். ‘எதிர்நீச்சல்‘, ‘தமிழ்ப்புள்ளி‘  என்ற இணையதளங்களில், இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் பல பதிவு செய்து வருகிறார்.

    விக்கிபீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கட்டுரைகள் எழுதிவரும் நீச்சல்காரன், விக்கிபீடியாவின் தமிழ் அகராதியான விக்சனரியின் சொற்தொகுப்பிலும் உள்ளிடலிலும் பங்கேற்றுள்ளார். விக்கியில் கட்டுரைகளை விரிவாகப் படிப்பதற்கு வழிசெய்யும் பல்வேறு இணைப்புகளையும் சேர்க்கும் ஒரு தானியங்கியையும் இவர் வடிவமைத்துள்ளார், தமிழ் விக்கி பீடியாவில் இயங்கிவரும் முக்கியத் தானியங்கி இது.

    நீச்சல்பாட் -விக்கிப்பீடியா தொகுக்கும் தானியங்கி  
    தமிழ் அகராதித் தொகுப்பு
    இணையப்படிப்பகம்
    வலைப்பூ திரட்டி
    தமிழ் டிவிட்/கீச்சு திரட்டி  
    கோலசுரபி
    ஆடுபுலி ஆட்டம்
    தமிழ்ச் சொற்புதிர்  
    தமிழ் மாயயெழுத்து வழங்கி
    போன்ற மென்பொருள் செயலிகளையும் உருவாக்கி தமிழ் இணையப் பயனர்கள் பயன்பெற அளித்துள்ளார்.

    தமிழ் மாயயெழுத்து வழங்கியில் உருவாக்கிய வல்லமையாளர் என்ற சொல்லின் தோற்றம் கீழே …

    ──────o───────────────────────o─────╔╦╗──o───────o───────────o──
    ╔═╗║╔═╗║╔═╗║╔═╦╦╗║╔╗║║║╔╦╔═╦╦╔╦────╔╬╚╝─╔╦──╔╦─╔═╗║─╔╦─╔╦╔╦╔═╦╦╦
    ╠╗║║║─║║║─║║╠╗║║║║║║║║║║║╠╗║║║║────║╬╗─╔╬╬═╔╬╬═║─║║╔╬╬╗║║║║╠╗║║║
    ╚╝╚╝╚╝╚╝╚╝╚╝╚╝╚╝║╚╩╝╚╩╝║║╚╝║║║║────║║║─╚═╝─╚═╝─╚╝╚╝╚═╝╝║║║║╚╝╚╝║
    ──────────────────────────────╝─────╔╝────────────────────╝─────

    இருபத்தெட்டு வயதாகும் நீச்சல்காரன் மதுரை யாதவர் கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றவர். புனேவில் சிறிதுகாலம் பணியாற்றிய நீச்சல்காரன் தற்பொழுது சென்னையின் புகழ்பெற்ற பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமொன்றில் பிணையக் கட்டுமானத் துறையில் (network-infrastructure) பணிபுரிகிறார். தனது ஓய்வு நேரத்தில் இணையத் தமிழ் தொடர்பான தன்னார்வப்பணிகளைச் செய்து வருகிறார்.

    ஆங்கிலம் தவிர்த்த எந்தப் பிற மொழியின் கருவிகளுக்கும் வணிக அளவில் சந்தை இருக்கப்போவதில்லை, அதனால் கணித்தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்களின் வளர்ச்சியைத் தன்னார்வலர்கள், மொழி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசு மட்டுமே முன்னெடுக்க முடியும் என்று கருதும் நீச்சல்காரன், மொழி சார்ந்த நிறுவனம் மற்றும் அரசு ஆகியவற்றில் அவர் அங்கம் வகிப்பதில்லை என்பதால் தன்னார்வலராகத் தனது முயற்சிகளைத் தொடர விரும்புகிறார்.

    தமிழ் இலக்கணப் பிழை திருத்தியை உருவாக்கும் திட்டம், பிற இந்தியமொழிகளின் வரிவடிங்களையும் தமிழுக்கு மாற்றும் ஒரு மென்செயலியை உருவாக்கும் திட்டம், மொழிமாற்றி, அருஞ்சொல் பொருள்மாற்றி, எதிர்ச்சொல் மாற்றி என வேறு சில திட்டங்களையும் செயலாக்க விரும்பும் நீச்சல்காரன் ராஜாராமனின் திட்டங்கள் வெற்றி பெற வல்லமை குழுவினரின் வாழ்த்துகளையும், அவரது கணித்தமிழ் தன்னார்வப் பணிகளுக்குப் பாராட்டையும் தெரிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    படங்கள் உதவி:
    ஆங்கில மற்றும் தமிழ் இந்து நாளிதழ்

    தகவல்கள் பெற்ற இடங்கள்:
    [1] தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா!
    http://tamil.thehindu.com/society/lifestyle/தப்பில்லாமல்-தமிழ்-எழுதலாம்-தமிழா/article7565616.ece

    [2] நெட்டெழுத்து: இணைய ஊருக்கு உழைக்கும் நீச்சல்காரன்!
    http://tamil.thehindu.com/opinion/blogs/நெட்டெழுத்து-இணைய-ஊருக்கு-உழைக்கும்-நீச்சல்காரன்/article7184833.ece

    [3] Save yourself from sandhi errors – The Hindu
    http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/save-yourself-from-sandhi-errors/article5864196.ece

    [4] தமிழ் நீச்சலில் ஈடுபட்டு பல்வேறு தானியங்கிக் கருவிகளை உருவாகிவரும் நீச்சல்காரன் – ஜோதிஜி, திருப்பூர், வலைத்தமிழ்
    http://www.valaitamil.com/neechalkaaran-involved-in-technology-contribution_12048.html

    தொடர்புகொள்ள:
    neechalkaran@gmail.com
    http://neechalkaran.com

    https://www.facebook.com/neechalkaran
    https://plus.google.com/108891151460637064235/
    https://www.youtube.com/user/neechalkaran
    http://neechalkaran.blogspot.com/
    http://www.neechalkaran.com/p/author.html

    வலைப்பூவில்:
    மணல்வீடு – http://arts.neechalkaran.com/
    எதிர்நீச்சல் – http://tech.neechalkaran.com/
    முத்துக்குளியல் – http://opinion.neechalkaran.com/

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 9, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு பேராசிரியர்  முனைவர் நா. கண்ணன் அவர்கள்

    kannan

    இந்தியாவின் கொரிய துணைத் தூதரகமும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து “இந்திய – கொரிய கலாச்சார பரிமாற்றம்” என்ற தலைப்பிலான உலகளாவிய ஆய்வுக் கருத்தரங்கை சென்னையில் சென்றவாரம் (நவம்பர் 6, 2015 அன்று) நடத்தின. இக்கருத்தரங்கு நடைபெறத் துவக்கம் முதல் ஒரு வினையூக்கியாக இருந்தவர் பேராசிரியர் முனைவர் நா. கண்ணன் அவர்கள். அக்கருத்தரங்கில் “In search of an ancient relationship between Tamilnadu, India and Kaya Kingdom, Korea: Discovery, research, hopes and questions” என்ற தலைப்பில், “தமிழ் கொரியா ஆகிய இருமொழிகளுக்குமான உறவிற்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொரியாவின் அரசியாக இருந்தவர், இந்தியாவில் இருந்து சென்று கொரிய அரசரை மணந்து கொண்ட, பாண்டியநாட்டு இளவரசியான ஒரு தமிழ்மகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளது” என்ற கருதுகோளில் ஆய்வுரை வழங்கியுள்ளார். இருமொழிகளுக்கும் உள்ள உறவை ஆராயும் அவரது இத்தகைய ஆய்வு முயற்சியைப் பாராட்டும் விதமாக மலேசிய புத்ரா பலகலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் நா. கண்ணன் அவர்களை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டி மகிழ்கிறோம்.

    kannan3

    தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவரும், நிறுவனர்களில் ஒருவருமான முனைவர் நா. கண்ணன் (நாராயணன் கண்ணன்) அவர்கள், அந்த அறக்கட்டளையின் சார்பில் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளார். முனைவர் நா. கண்ணன் ஒரு அறிவியல் ஆய்வாளர். மதுரைப் பல்கலைக் கழகத்திலும் (Madurai Kamaraj University, India), ஜப்பானிலுள்ள எஹிமே பல்கலைக் கழகத்திலும் ( Ehime University, Japan) வேதியியல் ஆய்வில் ஈடுபட்டு இருமுறை முனைவர் பட்டங்கள் பெற்றவர். உயிர் வேதிமவியல், சூழலியல் ஆகியவற்றில் கொண்ட ஆர்வம் காரணமாக சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துவதால் உயிரினங்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய ஆய்வுகளை நடத்தி வருகிறார். ஜெர்மனியின் ‘கீல்’ பல்கலைக்கழகத்தில் (கடலாய்வு மையம்) இணைப்பேராசிரியராகவும், கொரியக் கடலாய்வு மையத்தில் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றிய முனைவர் நா. கண்ணன், தற்பொழுது மலேசியாவின் புத்ரா பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டாண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

    தமிழ் ஆர்வலரான முனைவர் நா. கண்ணன், தான் நிறுவிய தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) அமைப்பின் மூலம் தமிழ் மரபு சார் இலக்கிய, வரலாற்று, கலை வடிவங்களை எண்ணிம வடிவில் பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொண்ட முன்னோடிகளில் ஒருவர். மதுரைத்திட்டத்தில் ஐரோப்பிய ஒருங்கமைப்பாளராகவும், உத்தமம் அமைப்பின் (உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் – உத்தமம்/ International Forum for Information Technology in Tamil – INFITT) தொன்மை உறுப்பினராக, அதன் ஐரோப்பிய கிளையின் தலைவராகவும் செயல்பட்டு இருக்கிறார்.

    கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல் என படைப்புகள் பல உருவாக்கி தமிழிலக்கியப் பங்காற்றிய முனைவர் நா. கண்ணன் அவர்களது படைப்புகள் கணையாழி, சுபமங்களா, இந்தியா டுடே, குங்குமம் மற்றும் புகலிடப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. திசைகள் மின்னிதழ், இ-சங்கமம், சிஃபி டாட் காம் ஆகிய இதழ்களில் சில காலம் ஆசிரியர் குழுவில் பங்கேற்று தனது பங்களிப்பை அளித்துள்ளார். ‘உதிர் இலை காலம்’, ‘நிழல்வெளி மாந்தர்’ ஆகிய சிறுகதை நூல்களையும், ‘விலை போகும் நினைவுகள்’ என்ற குறும்புதினத்தையும், ‘பாசுர மடல்கள்’ என்ற படைப்புக்களை குறுந்தகடு வெளியீடாகவும் வெளியிட்டுள்ளார்.

    கொரியாவில் பணிபுரிந்த காலத்தில் கொரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டுணர்ந்து மேலும் ஆராயத் தலைப்பட்டார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பொது ஆண்டு 48 ஆண்டில், கொரியா நாட்டின் பண்டைக்கால ‘கயா’ அரசின் அரசர் ‘சுரோ’ (King Suro of Geumgwan Gaya) என்பவர், ‘ஹூவாங் ஹூ’ (Heo Hwang-ok) என்ற இளவரசியை மணந்தார். இந்த இளவரசி அரசரை மணம் புரிவதற்காக கப்பலில் வந்தவர். இவரது பெற்றோரின் கனவில் இளவரசியை அரசர் சுரோவுக்கு மணமுடிக்குமாறு அறிவித்த கடவுளின் கட்டளையை ஏற்று, அரசகுடும்பம் தனது இளவரசியைக் கப்பலில் ஏற்றி அனுப்பியது. இது போன்றே தனது மனைவி கப்பலில் வருவாள் என்ற தெய்வவாக்கு கிடைத்த அரசர் சுரோவும் கப்பலில் வந்த இளவரசி கூறியதை ஏற்று அவளை மணமுடித்தார் என்பதை பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘சம்குக்யுசா’ (Samguk Yusa) என்ற கொரிய நூல் கூறுகிறது. மேலும், அரசர் சுரோவை மணந்த இளவரசியே கயா அரசின் முதல் அரசி, இவர் தொலைதூரத்தில் இருந்து வந்தவர் என்றும், தனது கப்பலில் யாழ், தேயிலைச் செடி, புயலில் கப்பலை நிலைப் படுத்தும் கல்லடுக்குகள் ஆகியவற்றுடன், இரட்டை மீன் சின்னத்தைக் கொண்டுவந்தார் என்பதும், ஆயுக்த நாட்டின் அரசர் இளவரசியின் தந்தை என்று இளவரசி கூறினார் என்பதும் அந்த நூல் தரும் தகவல். இவரது பெயரின் பொருளான ‘மஞ்சள் நிற ரத்தினம்’ (yellow jade) என்பதைத் தனது கொரிய மொழியில் ஹூவாங் ஹூ என மொழிபெயர்த்து அரசர் அழைத்தார் என்பதும் அந்த நூல் தரும் தகவல்.

    நூல் குறிப்பிடும் இளவரசியின் தாயகத்தைத் தேட முற்பட்ட கொரிய மக்கள், ‘ஆயுக்தா’ என்பதனை இந்தியாவின் அயோத்தியுடனும் தொடர்புப்படுத்தி, அங்குக் காணப்படும் இரட்டை மீன் இதை உறுதிப்படுத்துவதாகவும் எண்ணி இந்தியா கொரியா என இருநாடுகளின் நல்லுறவைப் பேண நடவடிக்கைகள் எடுத்தனர். ஆனால், நூற்றுக்கணக்கான தமிழ் சொற்கள் அதே பொருளில் கொரிய மொழியில் உள்ளதாலும்; உழவு, நெசவு, மற்ற பிற அன்றாட நிகழ்வுகளில் காணும் ஒருசில கலாச்சார ஒற்றுமைகள் தமிழ்ப் பண்பாட்டை ஒத்திருப்பதாலும்; இரட்டை மீன் சின்னம் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கிய பாண்டிய மன்னர்களின் முத்திரையைக் காட்டுவதாலும் இந்த இளவரசி பாண்டிய இளவரசியாகவும், அவரது பெயர் ‘செம்பவளம்’ என்பதாக இருக்கக்கூடும் என்பது முனைவர் நா. கண்ணன் அவர்களது கருதுகோள். தமிழ்மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் குழுமத்தில் இவரது கருதுகோள் விவாதங்களுக்கு உட்பட்டு, அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் உதவியுடன், இந்தியாவின் கொரிய துணைத் தூதரகமும் இணைந்து “இந்திய – கொரிய கலாச்சார பரிமாற்றம்” என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்யும் நிலையை எட்டியது.

    kannan5

    சென்னைக்கான கொரிய துணைத் தூதர் திரு. கிம் கியாங்சூ அவர்கள் கொரிய மொழிக்கும் தமிழுக்கும் தொன்று தொட்டு உள்ள உறவை ஆய்வு செய்யவும், மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தக் கருத்தரங்கம் உதவும், இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சார உறவு இது போன்ற ஆய்வுக்கருத்தரங்குகள் மூலம் மேலும் வலுவுறும் என்ற கருத்தினை கருத்தரங்கில் தெரிவித்துள்ளார். இத்தகைய ஆய்வு முயற்சியை முன்னெடுத்த முனைவர் நா. கண்ணன் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி, அவரது கருதுகோள் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டு இருநாடுகளின்  நல்லுறவை வளர்க்க உதவ வேண்டும் என்று வல்லமை இதழின் குழுவினர் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    செய்தி உதவி:
    http://www.dinamani.com/tamilnadu/2015/11/06/திருக்குறள்-கொரிய-மொழியில்-/article3116563.ece

    தொடர்புக்கு:
    Prof. Dr. Narayanan Kannan
    Putra University, Malaysia, Putrajaya
    http://profile.upm.edu.my/drnkannan
    Tel: +49 431 65709280
    E-Mail: nkannan@gmail.com

    சமூக வலைத்தளங்களில்:
    https://plus.google.com/102872541469969435096/
    https://www.facebook.com/narayanan.kannan.37

    https://scholar.google.com/citations?user=TlpVWukAAAAJ&hl=en
    http://www.researchgate.net/profile/Narayanan_Kannan3
    http://www.tamilheritage.org/old/ec/ec.html#_kannan

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 2, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு பேராசிரியர் முனைவர்  டி. நாகராஜன் அவர்கள்

    nagarajansir

    வல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், தமிழில் எழுத்துரை – பேச்சுரை மாற்றிக்கான மென்பொருளை (Tamil text to speech software) உருவாக்கிய, எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியின் (SSN College of Engineering) தொலைத்தொடர்பு தொழில்நுட்பத் துறையின்(Department of Information Technology) தலைவரும், பேராசிரியருமான முனைவர் டி. நாகராஜன் அவர்கள்.

    முனைவர் டி. நாகராஜனும், அவருடைய தலைமையில் அவரது குழுவினரும் உருவாக்கியுள்ள “தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை” அவர் தமிழ் இணையக் கழகத்தில் இயக்கிக் காட்டினார். இந்த மென்பொருளின் செயல்பாட்டை பார்வையிட்ட, தமிழக அரசின் 2013 ஆண்டிற்கான கணித்தமிழ் விருதாளரும், மொழியியல் பேராசிரியருமான முனைவர் ந. தெய்வ சுந்தரம் அவர்கள், உண்மையில் மிக நன்றாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாகயிருந்தது. ஏறக்குறைய 100% சரியாக இயங்குகிறது … மேலும் சிறிது உழைத்தால், மொழியியல் ஆய்வாளர்களுடன் இணைந்து செயல்பட்டால், உச்சரிப்பில் இயல்புத் தன்மையை மேலும் மேம்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    முனைவர் டி. நாகராஜன் அவர்களின் தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை இயக்கி அதன் செயல்பாட்டை அறிய விரும்புபவர்கள் – http://www.ssn.edu.in/Speech_Lab/tts_demo.html – என்ற தளத்திற்குச் சென்று பயன்பெறலாம். கீழுள்ள படத்தில் காண்பித்துள்ளது போன்று 1. தங்களுக்குத் தேவையான தமிழ் மொழி தகவலைப் பதிவிட்டு, 2. மென்பொருளை இயக்கி (விருப்பமான குரலை – ஆண் குரலையோ, பெண் குரலையோ தேர்வு செய்யலாம்) 3. மென்பொருள் தமிழைப் படிப்பதைக் கேட்கலாம், 4. தேவையானால் அதனை ஒலிக்கோப்பாக தங்கள் கணினியில் சேமித்தும் பயன்பெறலாம்.

    dr nagarajan text to speech demo

    முனைவர் டி. நாகராஜன் அவர்கள் சென்னை ஐ.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 2004 ஆம் ஆண்டு கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் பட்ட ஆய்வில் பேச்சொலி மொழியை அடையாளம் காணும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பிறகு தனியார் நிறுவனம் ஒன்றின் ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்றுப் பணியாற்றிய பிறகு, கனடாவின் தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் முதுமுனைவராக (postdoctoral fellow at The National Institute of Scientific Research – INRS, Montreal, Canada) இரண்டு ஆண்டுகள் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அந்த ஆய்வில் தொடர் பேச்சொலியை அடையாளம் காணுவதையும், ஒலியை வகைப்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கண்டறியும் ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இரண்டாண்டு முதுமுனைவர் ஆய்விற்குப் பிறகு, சென்னை எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியின் பேராசிரியராக பணியில் இணைந்து இன்றுவரை ஆய்விலும், கற்பித்தலிலும், ஆய்வு மாணவர்களை நெறிப்படுத்துவதிலும் பங்கு பெற்று வருகிறார். கருத்தரங்கங்களிலும், ஆய்விதழ்களிலும் தனது ஆய்வுகளைப்பற்றி இதுவரை சுமார் 80 ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார். மேலும், இவர் தற்பொழுது ஈடுபட்டிருக்கும் ஆய்வுகளையும், இவரது ஆய்வுப்பணிகளைப் பற்றி விரிவாக இத்தளத்தில் – http://www.ssn.edu.in/?page_id=1483 – அறிந்து கொள்ளலாம்.

    கணினித் தமிழ் வளர்ச்சியில் முக்கியப் பங்கு பெரும் தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை உருவாக்கியுள்ளமைக்காக முனைவர் டி. நாகராஜன் அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளராக அவரைப் பாராட்டி மகிழ்கிறோம். அவரது ஆய்வுகள் மேலும் வெற்றி பெற வல்லமை இதழின் வாழ்த்துகள்

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Contact Info:
    Dr. T. Nagarajan,
    Professor & Head
    Department of Information Technology
    SSN College of Engineering
    Rajiv Gandhi Salai (Old Mahabalipuram Road)
    Kalavakkam- 603 110 (off. Chennai)

    Phone: 044 27469700 [HOD Extn: 217]
    Fax: 044 27469772
    Email: nagarajant@ssn.edu.in

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர் 26, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள்

    Chokkalingam L

    வல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை “சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்” திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள். லட்சிய ஆசிரியர் என்பவர் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தினமலர் நாளிதழ் வழங்கிய இந்த ஆண்டுக்கான லட்சிய ஆசிரியர் விருதையும், அத்துடன் மற்றுமொரு விருதாக, “அக்னி சிறகுகள் அறக்கட்டளை” வழங்கிய நல்லாசிரியர் விருதினையும் சென்ற வாரத்தில் பெற்ற திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், கல்வியில் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்தும் வகையில் அவர் ஆற்றிவரும் தொடர் முயற்சிகளுக்காக வல்லமை இதழ் சார்பில் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

    – அக்னி சிறகுகள் அறக்கட்டளை வழங்கிய நல்லாசிரியர் விருது
    – 2015 ஆண்டுக்கான தினமலர் லட்சிய ஆசிரியர் விருது
    – 2015 ஆண்டுக்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருது
    – கற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் தேர்வு
    – ஆனந்த விகடனில், கலாமின் காலடிச்சுவட்டில் களத்தில் 100 இளைஞரெனத் தேர்வு
    – சுட்டி விகடன் வழங்கிய கனவு ஆசிரியர் என்ற பாராட்டு
    – நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் ஆனந்த விகடன் குழுமம் இணைந்து செயல் பட உள்ள அறம் செய விரும்பு திட்டத்தில் சேவை செய்ய நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களால் தேர்வு,
    எனக் கடந்த ஆண்டில் மட்டும் இவர் பெற்ற பாராட்டு மற்றும் விருதுகளின் பட்டியல் வளர்கிறது. அந்த வரிசையில் வல்லமை இதழின் வல்லமையாளர் விருதும் சேர்கிறது.

    தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.சந்திர மோகன் அவர்கள் புதியதலைமுறை வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்காக தலைமை ஆசிரியர் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தல்
    தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.சந்திர மோகன் அவர்கள் புதியதலைமுறை வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்காக தலைமை ஆசிரியர் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தல்

    திரு. லெ. சொக்கலிங்கமும், இவரது ஆசிரியர் குழுவினரும் மாணவர்களின் கல்வியில் காட்டும் அக்கறை மற்றும் சிறப்புப் பயிற்சிகளினாலும், இவரது தலைமையிலும், வழிகாட்டுதலிலும், முயற்சிகளினாலும் இப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களையும் விஞ்சும் வண்ணம் பலபோட்டிகளில் வெற்றிபெற்று வருகிறார்கள். இப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறம் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணமிருக்கும் சாதனைகள், ஒப்பீட்டில் சிறப்புக் கவனிப்பிற்காக நடத்தப்படும் தனியார் பள்ளிகளில் எந்த வகையிலும் சளைத்ததாக இல்லை.

    – கல்வியை அதற்குரிய அனுபவத்தோடு கற்கும்போது, வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் அது மறக்காது
    – கல்வி கற்பது வகுப்பறைக்குள் மட்டுமல்ல, மாணவர்களின் கல்வியை வகுப்பறைக்குள்ளேயே முடக்கிவிடாமல், வகுப்பறைக்கு வெளியேயும் அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கத் தேவை இருக்கிறது

    என்ற தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியை வழி நடத்திச் செல்கிறார் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள்.

    அரசு உதவி பெறும் பள்ளியான தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, 1934 ம் ஆண்டு (இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும் முன்னரே) தேவகோட்டை மக்களின் கல்வி வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு துவங்கப்பட்டது. பின்தங்கிய சமுதாய மாணவர்களின் கல்வி, மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களின் கல்வி நலனுக்குக்காவும் துவக்கப்பட்ட பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    நேரடியாக சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவ சமுதாய இன மக்கள், ஊர் ஊராய் சென்று குறி சொல்லும், ஜோசியம் பார்க்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவர்கள், இலங்கை அகதிகள் முகாம் மாணவர்கள் என அனைவரையும் அவர்களின் அவர்களது இருப்பிடத்தில் நேரடியாகச் சந்தித்து இப்பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களைப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

    Chokkalingam Lakshmanan5

    கல்வி சார்ந்த நிறைய நிகழ்வுகளைப் பள்ளியிலும், களப்பயணமாக புத்தக திருவிழா, அஞ்சலகம், வங்கி, நூலகம், அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் என முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்று வெளியிலும் கற்றலின் அனுபவத்தைப் புதுமையாக்கி வருகின்றார்கள். திருக்குறள், அபிராமி அந்தாதி போன்ற இலக்கியங்கள் வகுப்பறைப் பாடங்களாக முடிந்துவிடாமல், இசையோடு கூடிய நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலமும் பயிற்றுவிக்கப்படுகிறது.

    தமிழக புள்ளியியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு இ .ஆ.ப., தேவகோட்டை உதவி கலெக்டர் சிதம்பரம், கணேசன், தமிழ்நாடு மின்சார துறை பொறியாளர் சந்திரசேகர், பொம்மலாட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனி, திருக்குறள் நடனம் சொல்லும் சுந்தர மகாலிங்கம், தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திருச்சி அண்ணா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ் கோவன் போன்ற பல்வேறு துறைகளின் வல்லுநர்களைப் பள்ளிக்கு அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதுடன், மாணவர்கள் அவர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெற்று தங்களது அறிவை விரிவாக்கிக் கொள்ளவும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் மாணவர்களும் தயக்கமின்றி கலந்துரையாடல்களில் பங்கு பெறுகிறார்கள்.

    மாதம் ஒரு தலைப்பின் கீழ், ஒவ்வொருவாரமும் மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, ஓவியம், மனக்கணக்கு, புதிர்கணக்கு, வாசிப்பு போன்று பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை நடத்தி பரிசு வழங்குவதுடன், ஒவ்வொரு மாதமும் பாடத்தில் வினாடி வினா போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்படுகின்றன. வெற்றி பெற்றோருக்கு வாய்ப்பு ஒருமுறை மட்டுமே என்ற திட்டத்தினால் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் மாணவர்களுக்கும் உணர்த்தப்படுகிறது.

    இது போன்ற தொடர் போட்டிகளும் பயிற்சிகளும் மாணவர்களை மேலும் பல போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கிறது. இதனால், ஊடகங்கள் நடத்தும் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் பலர் தன்னம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் பங்கேற்று சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெற்று வருகிறார்கள். அன்றாடங்காய்ச்சியான நிலையில் வாழும் குடும்பங்களின் மாணவர்களுக்காக விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களே தங்கள் மாணவர்களை மற்ற ஊர்களில் நடக்கும் போட்டிகளுக்கும் அழைத்துச் சென்று பங்கேற்க உதவி வருகிறார்கள்.

    Chokkalingam Lakshmanan1-2

    மத்திய அரசின் அஞ்சல் துறையின் ஓவியப் போட்டி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பேச்சுப் போட்டி, அறிவியல், பாடல் ஒப்புவித்தல், கலைநிகழ்ச்சி போட்டிகள், ஊடகங்கள் நடத்தும் கதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் என இப்பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்டுவது பல ஊடகச் செய்திகளாகவும் வெளிவருகின்றன.

                                   Chokkalingam Lakshmanan3aChokkalingam Lakshmanan3b

    தங்கள் பள்ளியின் கற்பித்தல் முறையை விளக்கும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், “மாணவர்கள் வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் கல்வி, வாழ்க்கையோடு தொடர்புடையது. வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியது. மாணவர்கள் ஏட்டுப் படிப்பிலேயே கூட்டுப் புழுக்களாய் சுருங்கிவிடாமல், முழுமையான அறிவு பெற்றவர்களாக வளர வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை அதில் பங்கேற்கச் செய்கிறோம். இதனால் மாணவர்களின் அறிவு, திறமை வளர்கிறது. அதுமட்டுமல்ல, பிறரிடம் பழகுவதற்கு அவர்கள் கூச்சப்படுவதில்லை” என்று தனது செய்தி ஒன்றில் குறிப்பிடுகிறார்.

    மாணவர்களின் கல்வியில் சிறந்த அக்கறை கொண்டு செயலாற்றும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________

    ஊடகங்களில் வெளியான சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி பற்றிய செய்திகள் ஒருசில:

    நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி 1ம் ஆண்டு நிறைவு பேச்சு போட்டியில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி

    வாசம் வீசும் வகுப்பறை! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109185

    கோணங்கள் கற்றல்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109196

    ஓட்டிக்கொண்டே படிக்கலாம்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109792

    புதிய உருவம் அறிவோம்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108797

    ஓவியத்தில் அறிவோம் இரட்டுற மொழிதல்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108783

    கல்வி… வகுப்பறைக்குள் மட்டுமல்ல! – தினமணி: 27 June 2015

    மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி – தினமணி: 31 May 2015

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் கற்பித்தலில் புதுமை – தினத்தந்தி நாளிதழின் இளைஞர் மலர்: 13 June 2015

    _______________________________________________________

    To Contact:
    Mr. L. Chokkalingam, M.Sc, M.Phil, B.Ed, PGDHRM, BLISc, DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai District
    TamilNadu
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    _______________________________________________________

    For more Info:
    Mr. Chokkalingam Lakshmanan
    https://www.facebook.com/chokka.lingam.5815
    https://plus.google.com/101382123602736134466/
    http://kalviyeselvam.blogspot.com/

    _______________________________________________________

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர் 19, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. சேசாத்திரி சிறீதரன்  அவர்கள்

    Seshadri Sridharan2

    வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி சிறீதரன் அவர்கள். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகள் செம்மொழி தகுதிச்சான்றினை இந்திய அரசிடம் இருந்து பெறும் பொருட்டு சமர்ப்பித்த கல்வெட்டுகளை இவர் மறுஆய்வு செய்துள்ளார். அதன் அடிப்படையில், மாற்றுக்கோணத்தைக் காட்டும் கட்டுரைகளை வல்லமை கூகுள் குழுமத்தில் (https://groups.google.com/forum/?fromgroups#!forum/vallamai) எழுதியதற்காக இவர் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

    கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள், 2000 ஆண்டு வாக்கில், அந்நாளில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படாமல் இருக்க நேர்ந்ததன் காரணத்தை விளக்க முற்பட்டபொழுது (Statement on the Status of Tamil as a Classical Language, Professor of Tamil at the University of California, Berkeley, April 11, 2000), இந்திய அரசியல் சூழ்நிலையும், தமிழுக்குச் செம்மொழி தகுதி வழங்கினால் பிற இந்திய மொழிகளும் தங்கள் மொழிக்காக வற்புறுத்தும் நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் என்று கீழ்வருமாறு தனது மடல் ஒன்றில் (http://southasia.berkeley.edu/tamil-classes) குறிப்பிட்டிருந்தார்…

    “In trying to discern why Tamil has not been recognized as a classical language, I can see only a political reason: there is a fear that if Tamil is selected as a classical language, other Indian languages may claim similar status. “

    இந்திய மொழிகளில் செம்மொழித்தகுதிகள் கொண்டவை தமிழும் சமஸ்கிருதமும் மட்டுமே என்பது பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் கருத்து. அவர் குறிப்பிட்ட “அரசியல்” என்ற காரணம் பின்னாளில் பொய்க்கவில்லை. தமிழுக்குச் செம்மொழி தகுதி அறிவிக்கப்பட்டதும், தமிழில் இருந்து கிளைத்த பிற திராவிட மொழிகளும் தங்கள் மொழிக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில் செம்மொழி தகுதி கேட்டு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கத் துவங்கின.

    இதைத் தொடர்ந்து, ஒரு மொழிக்கு செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றியது. அந்த நெறிமுறைகளின்படி, ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. இந்த வரைமுறைகளின் அடிப்படையில் இதுவரை தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    தங்கள் மொழியின் பழமைக்குச் சான்றாக கன்னட மொழியினர் “ஹல்மிடி” கல்வெட்டினையும், தெலுங்கு மொழியினர் “கலமல்லா” கல்வெட்டினையும் சமர்ப்பித்து தங்களது மொழிகளுக்குச் செம்மொழி தகுதியினைப் பெற்றனர்.

    இதற்கான சான்றுகளையும், அதன் மேல் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி அவர்கள் எழுப்பும் கேள்விகளையும் இனி சுருக்கமாக கீழே காணலாம் (கருத்துக்களை விளக்க இயன்றவரை அவர் எழுத்துகள் கையாளப்பட்டுள்ளன). அக்கட்டுரைகளின் முழு வடிவங்களையும் கீழ்காணும் சுட்டிகளின் வழி சென்று படிக்கலாம்.

    செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு
    https://groups.google.com/d/msg/vallamai/iLKZBO5bKsc/_WWdsK_qBQAJ

    செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு
    https://groups.google.com/d/msg/vallamai/GLpn2097IAw/mqMoWM1MAwAJ

    Seshadri Sridharan1

    கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர் வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின்கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன் மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவால் 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இதன் காலம் கி.பி. 450 என அறிஞர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காலம் குறித்து பல்வேறு அறிஞரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதில் பயிலும் மொழி முது பழங்கன்னடம் எனப்படுகிறது. கல்வெட்டில் காலக் குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை. கதம்பன் ககுஸ்தன் என்ற பெயர் இடம்பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டு இக்கல்வெட்டு கி.பி.450 இல் வடிக்கப்பட்டது என்று அறிஞர் முடிவு கொண்டு விட்டனர். இது ஒரு தவறான அணுகுமுறை, என்று கூறும் சேசாத்திரி,

    • இக்கல்வெட்டில் குறிப்பிடும் அரசன் அதே பெயரிலுள்ள பிற்காலத்தவர் என்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன
    • கல்வெட்டில் சமஸ்கிரதம் அதிகம் கலந்துள்ளது, ஆனால் தென்னகத்தில் சமற்கிருத மொழி 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகமானது என்பதால் கல்வெட்டின் காலம் கி.பி. 450 என்ற கருத்து அடிபட்டுப் போகிறது
    • கல்வெட்டில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவத புராணக் கருத்துகள் எடுத்தாளப்படுகிறது
    • அத்துடன் கல்வெட்டு குறிப்பிடும் பாவம், புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மக்களிடம் பரவியது
    • இக்கல்வெட்டில் காணப்படும் மாபாதகன், மாபாதகம் ஆகிய சொற்கள் இந்தக் கல்வெட்டின் காலத்தை கி.பி. 9 – 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு நடுவே அல்லது 11 ஆம் நூற்றாண்டில் வைக்கின்றது
    • கற்கோவில்கள் தென்னகத்தில் பரவிய காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில் என்பதால் அக்காலத்தியக் கல்வெட்டாகவே இக்கல்வெட்டு இருக்கும் வாய்ப்புள்ளது

    எனவே, மேற்கூறிய காரணங்களால் ஹல்மிடி கல்வெட்டு கன்னடத்திற்குச் செம்மொழி ஆவணமாகக் காட்டுவதற்கு பொருத்தமற்றதாக உள்ளது என்ற முடிவிற்கு இட்டுச்செல்கிறது எனக் கூறுகிறார்.

     

    அடுத்து, தெலுங்கு மொழியின் பழமைக்குச் சான்றாக, கடப்பை மாவட்டம் கமலாபுரம் வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு எழுத்தமைதியால் பழமையானது, கி.பி. 575 ஆம் நூற்றாண்டினது என்று முடிவு செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்குச் சான்று ஆவணமாகக் காட்டியுள்ளனர் தெலுங்கு மொழியினர். அக் கல்வெட்டுத் தொடர்பான சேசாத்திரியின் கருத்துகள்,

    • தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 10 ல் இக்கல்வெட்டின் காலம் குறித்தோ அல்லது எழுத்தமைதி மிகப் பழமையானது என்றோ எந்தக் குறிப்பும் இல்லை
    • கல்வெட்டிலும் காலக் குறிப்பு ஏதும் இல்லை
    • ரேனாட்டு சோழன் தனஞ்சயனின் மெய்க்கீர்த்திகளோ அல்லது ரைவணனின் அரச பின்னணிக் குறிப்புகளோ இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை ஆதலால் இது அரசர் வெட்டிய கல்வெட்டு அல்ல
    • எரிகல் முத்துராஜு புண்ணியகுமார என்ற பெயரில் இன்னொரு அரசனும் இருந்துள்ளான். ஆதலால் பிற்கால அரசர் சிலர் எரிகல் முத்துராஜு என்ற மூதாதையின் பெயரை தம் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள் என்று கருதுவதே சரி
    • கல்வெட்டு குறிக்கும் தனஞ்சயன், ரேவண் ஆகிய பெயர்கள் புராணப் பெயர்கள். தனஞ்சயன் என்ற பெயர் முதன் முதலாக கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசர் இயற்றப்பட்ட பாகவத புராணத்தில் தான் இடம் பெறுகிறது. அதற்கு முன்னம் இப்பெயர் பரவியிருக்க வாய்ப்பில்லை
    • பாறைகளைச் செதுக்கி கற்றளிகள் கட்டுவது தென்னிந்தியாவில் முதன்முதலாக 8 ஆம் நூற்றாண்டில் தான் ராசசிம்மப் பல்லவனால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்வெட்டு திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட கல்வெட்டு அல்ல மாறாகக் கற்கோவிலின் ஒரு தூணில் இருபக்கங்களில் வெட்டப்பட்ட கல்வெட்டு எனும்போது இது 6 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்க முடியாது 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கல்வெட்டாகத்தான் இருக்க முடியும்
    • மேலும், கல்வெட்டில் இழிந்த குலத்தோர் என்ற குறிப்பு இக்கல்வெட்டின் காலத்தை மேலும் பின்னுக்குத் தள்ளுகிறது. புராண இந்து மதம் பரவிய பின்பு 9 – 10 ஆம் நூற்றாண்டுகளில் தான் பிறப்பு வழி ஏற்றத் தாழ்வுகள் மக்கள் கருத்தில் வேரூன்றின. ஆகவே இக்கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டளவில் வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதவே இடம் தருகிறது

    எனவே, தெலுங்கைச் செம்மொழி என காட்டற்கு இக்கல்வெட்டிற்குச் சற்றும் தகுதி இல்லை. ஏனெனில் இதனினும் பழமையான தெலுங்கு நடுகல் கல்வெட்டுகள் உள்ளன என்பது கல்வெட்டு பற்றிய சேசாத்திரியின் கருத்து

    எனவே, இரு கல்வெட்டுகளும் அவை கூறப்படும் காலத்திற்கு பிற்காலத்தவை, இவை பிற்காலத்தில் கற்கோவில்கள் தோன்றிய பிறகு அவற்றின் பகுதிகள், இவை பிற்காலப் புராணக் கதைகளை கொண்டுள்ளன, பிற்காலத்திய அரசன் பெயர்கள் என்பது கருத்தில் கொள்ளப்படவில்லை, பிற்காலத்தில் மக்களிடம் புழக்கத்திற்கு வந்த கருத்தாக்கங்களை கொண்டுள்ளன என்ற காரணங்களைக் காட்டி, கல்வெட்டுகளின் கால நிர்ணயத்தின் மீது கேள்விகள் எழுப்பி அவற்றின் பழமையை நிராகரிக்கிறார் திரு. சேசாத்திரி.

    இவ்வாறு புதிய கோணங்களைக் காட்டி, கல்வெட்டு ஆவணச் சான்றுகளின் காலத்தைப் பற்றிய சிறப்பான கட்டுரைகளை வழங்கியதற்காக, திரு. சேசாத்திரி அவர்களை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர் 12, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு லட்சுமி  அவர்கள்

    2015 Winner - Lakshmi Moorthy2

    வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், அக்டோபர் 8, 2015 அன்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின், பெர்க்லி நகரில் நடைபெற்ற விழாவில், சீக்காலஜி என்ற கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் 2015 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அளவிலான சீக்காலஜி பரிசைப் பெற்ற மீனவர் திருமிகு லட்சுமி அவர்கள்.

    2015 Winner - Lakshmi Moorthy

    இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைக் கிராமம் சின்னப்பாலத்தைச் சேர்ந்த 46 அகவை நிரம்பிய மீனவர் லட்சுமி அவர்கள், கடந்த நாற்பதாண்டுகளாகக் கடற்பாசி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருபவர். மீனவச் சிறுமிகள் சிறுவயதிலிருந்தே கடற்பாசி சேகரிப்பில் பெற்றோர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இராமேஸ்வரம், பாம்பன், சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த 25 கிராமங்களின், சுமார் 2,000 த்திற்கும் மேற்பட்ட மீனவமகளிரின் வாழ்வாதாரம் மன்னார் வளைகுடாப்பகுதியில் மருக்கொழுந்து, கட்டக் கோரை, கஞ்சிப் பாசி, பக்கடா பாசி வகைகளை, நீரில் மூழ்கி, இரண்டு நிமிடங்களுக்கு மேல் மூச்சை அடக்கிச் சேகரித்து விற்று வருவது.

    மன்னார் வளைகுடா உயிர் கோளக் காப்பகத் தீவுகளான சிங்கில் தீவு, குருசடை தீவு, மணலி தீவு, மணலிபுட்டி தீவு ஆகியப் பகுதிகளில் பவளப்பாறைகளுடன், கடற்பாசிகளும் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு இவர்களால் சேகரிக்கப்படும் இவ்வகை கடற்பாசிகள் விண்வெளி வீரர்களுக்குத் தயாரிக்கப்படும் உணவு தயாரிப்பதில் அடிப்படைத் தேவையான உணவுப் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பல மீனவமகளிருக்கு வாழ்வாதாரமாக இருக்கும் கடற்பாசி சேகரிப்பு, 2002 ஆண்டிலிருந்து இந்திய அரசால், கடல்வளம் பாதுகாக்கும் நோக்கத்தைக் காரணம் காட்டி தடை செய்யப்பட்டது. ஆழ்ந்த ஆய்வின்றி, மீனவ மகளிரின் வாழ்வாதாரத்திற்கும் ஒரு மாற்றுவழி காட்டாது எடுத்த அவசர முடிவினால் மீனவ மகளிர் பாதிக்கப்பட்டனர். கடற்பாசி சேகரிக்க செல்லும் மீனவ மகளிரின் படகுகள், கையூட்டு பெற நினைக்கும் ஊழல் அரசு அதிகாரிகளால் கைப்பிடிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கில் அபராதங்களும் விதிக்கப்பட்டதுடன், மீனவமகளிரும் சில அரசு அதிகாரிகளால் மரியாதைக் குறைவாகவும் நடத்தப்பட்டனர்.

    லட்சுமி இவ்வாறு பாதிக்கப்பட்டோரை ஒருங்கிணைத்து, அவர்களது கோரிக்கையை அரசிடம் எடுத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்களது பாரம்பரிய கடற்பாசி சேகரிக்கும் முறை எவ்வாறு கடல்வளத்தைப் பாதிப்பதில்லை என்று கடல் ஆய்வாளர்களுக்கும், அரசுக்கும் எடுத்துக் கூறி, பாரம்பரிய முறையில் பாசி சேகரிக்கும் முறை குறித்து அவர்களுக்குக் கொடுத்த விளக்கங்களுக்குப் பிறகு, குறிப்பிட்ட காலங்களில் கடற்பாசி சேகரிக்கலாம் என்ற அனுமதியும், பணியை முறைப்படுத்தி பயோமெட்ரிக் அடையாள அட்டைகளும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. மீனவமகளிரின் வாழ்வாதாரத்தை மீட்க உதவியதுடன் இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு முயற்சிகளால் மன்னார்வளைகுடா கடல்வளப் பாதுகாப்பும் மேம்பட்டுள்ளது. லட்சுமியின் தன்னார்வப்பணி பரிந்துரைமூலம் சீக்காலஜி அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

    அரசு சாராத அறக்கட்டளை அமைப்பான சீக்காலஜி அமைப்பினால், 1992 ஆம் ஆண்டு முதல் கடல்சார்சுற்றுச்சூழல் மற்றும் கடல்வள பாதுகாப்பிற்காகவும், கலாச்சார பாதுகாப்பிற்காகவும் தனி நபருக்காக வழங்கப்படும் சீக்காலஜி விருதினைப் பெறும் முதல் இந்தியப்பெண்மணி லட்சுமி ஆவார். இவரது கடல்வள பாதுகாப்பு முயற்சிக்காகவும், மீனவ மகளிர் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பேற்று, மீனவ மகளிருக்கு வாழ்வாதாரப் பணியை மீட்டுத் தர இவர் மேற்கொண்ட நடவடிக்கைக்காகவும் இவர் சீக்காலஜி விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதையும், சான்றிதழையும், ஆறரை லட்சம் ரூபாய் (பத்தாயிரம் டாலர்) மதிப்புள்ள பரிசுத் தொகையையும் சீக்காலஜி அமைப்பின் நிறுவனர் டாக்டர் பால் ஆலன் காக்ஸ் அவர்கள் லட்சுமிக்கு வழங்கி அவரைச் சிறப்பித்தார்.

    2015 Winner - Lakshmi Moorthy1

    விருது மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை மீனவ குழந்தைகளின் கல்விக்கும், மீனவ மகளிர் கூட்டமைப்பு செயல்பாட்டிற்கும் வழங்கவிருக்கிறார் லட்சுமி. மீனவ மகளிரின் உழைப்பிற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்ததில் மகிழும் லட்சுமி, மீனவ மகளிர் சேகரிக்கும் பாசிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்தால் மீனவமகளிரின் வாழ்க்கை நிலை உயரும் எனக் கருதுகிறார்.

    திருமிகு லட்சுமியின் கடல்வள பாதுகாப்பு முயற்சிக்காகவும், மீனவ மகளிர் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பேற்று, மீனவ மகளிருக்கு வாழ்வாதாரப் பணியை மீட்டுத் தர இவர் மேற்கொண்ட நடவடிக்கைக்காகவும் இவரை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமை மின்னிதழ் குழுமத்தினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _____________________________________________________________________________________________

    தகவல் பெற்ற தளங்கள்:
    http://www.seacology.org/about/seacology-prize/
    http://tamil.thehindu.com/todays-paper/tp-tamilnadu/ராமேசுவரம்-மீனவப்-பெண்ணுக்கு-அமெரிக்க-கடல்சார்-விருது/article7743942.ece
    http://tamil.thehindu.com/society/women/முகம்-நூறு-கடல்பாசியால்-கிடைத்த-அமெரிக்க-விருது/article7620004.ece
    http://www.thehindu.com/news/national/tamil-nadu/seaweed-collector-wins-environment-award/article7613833.ece
    http://keelakaraitimes.com/award-ceremony-in-california/
    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=164786
    http://www.viduthalai.in/home/viduthalai/women/108353-2015-09-08-11-35-57.html
    http://news.webindia123.com/news/Articles/India/20151006/2695535.html
    http://keelakaraitimes.com/seacology-award/
    http://newstodaynet.com/tamil-nadu/tn-woman-gets-us-prize-protecting-sea-life

    படங்கள் பெற்ற தளங்கள்:
    http://www.seacology.org/about/seacology-prize/
    http://keelakaraitimes.com/award-ceremony-in-california/

    _____________________________________________________________________________________________

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர் 5, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு முனைவர் அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி அவர்கள்

    Arvind Thiruvengadam Padmavathy

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் ஆய்வுப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி (http://www.mae.cemr.wvu.edu/faculty/faculty-detail.php?id=1069&type=faculty) அவர்கள். வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த மோசடியை வெளியுலகிற்குக் காட்டிக் கொடுத்த ஆய்வறிக்கையை வெளியிட்டதற்காக இவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் முனைவர் அண்ணா கண்ணன் அவர்கள், அவருக்கு நன்றிகள் உரித்தாகிறது.

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம்நிலைப் பொறிமுறைப் பொறியியல்(B.E. Mechanical Engineering) பட்டம் பெற்ற அரவிந்த், அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். ஊர்திகளின் மாசுக்கட்டுப்பாட்டுச் சோதனைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இவரின் ஆய்வறிக்கை ஒன்றின் முடிவுகள், ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த குற்றத்தை வெளியுலகிற்குக் காட்டிக் கொடுத்தது. இதன் காரணமாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஊர்திகளில் மாசுக்கட்டுப்பாட்டுச் சோதனைகளின் பொழுது ஆய்வாளர்களை ஏமாற்றுவதற்காக ஊர்திகளில் பொருத்தியிருக்கும் மென்பொருள் பற்றி அமெரிக்க அரசு கண்டறிந்தது. அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (U.S. Environmental Protection Agency) வோல்க்ஸ்வேகன் நிறுவனம் மீது தொடுத்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட வோல்க்ஸ்வேகன் நிறுவனம், 11 மில்லியன் வண்டிகளில் மென்பொருள் நிறுவி, அரசை ஏமாற்றியதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

    இதன் விளைவாக வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகியுள்ளார், பதினெட்டு பில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தவிருக்கும் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் பற்றிய உண்மை தெரிந்தவுடன், பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இப்பொழுது பிற வாகன நிறுவனங்களும் எச்சரிக்கையடைந்துள்ளன.

    முனைவர் அரவிந்த் அவர்களின் ஆய்வும் அதன் காரணமாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் குற்றம் வெளிப்பட நேர்ந்த நிகழ்வுகள் பற்றிய மிகச் சுருக்கமாக அறிமுகம்.

    volks_scientist20151001

    மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மாற்று எரிபொருள் ஆய்வு மையம் (Center for Alternative Fuels, Engines and Emissions – CAFEE) ஊர்திகளின் மாசு கட்டுப்பாட்டு சோதனைகள் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு அத்துறையில் முன்னணி வகிக்கிறது. இந்த மையத்தில் ஒரு ஆய்வாளராகப் பணியாற்றும் முனைவர் அரவிந்துடன், மார்க் பேஷ்க், கிரிகரி தாம்ப்சன், டேனியல் கார்டர், ஹேமந்த் கப்பண்ணா (Marc Besch, Gregory Thompson, Daniel Carder, and Hemanth Kappanna) ஆகியோர் அடங்கிய ஐவர் குழு , கலிஃபோர்னியா மாநில அரசு அளித்த ஆய்வுநிதி பெற்று அந்த மாநிலத்தின், கண்டிப்பான சூழ்நிலை மாசுக்கட்டுப்பாடு விதிகளை ஊர்திகள் கடைப்பிடிக்கின்றனவா என்ற ஆய்வில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் இம்மாநிலத்தின் ஊர்திகள் மாநில அரசு விதிக்கும் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குள் இருந்தால் மட்டுமே அவற்றை இயக்க அனுமதி அளிக்கப்படும். அந்தச் சோதனைகளில், ஆய்வக சூழலில் கிடைக்கும் சோதனை முடிவுகள், வண்டிகள் சாலைகளில் இயக்கப்படும் பொழுதும் அதே அளவில் அமைந்துள்ளனவா என்ற சோதனையை மேற்கொண்டனர் இந்த ஆய்வுக் குழுவினர்.

    SONY DSC

    முனைவர் அரவிந்தும் துணை ஆய்வாளர் மார்க் பேஷ்க்கும், வோல்க்ஸ்வேகன் ஊர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்து, தங்கள் சோதனைக் கருவியை அதில் பொருத்தி, கலிஃபோர்னியாவில் இருந்து வாஷிங்டன் மாநிலம் வரை சுமார் 2,500 மைல்கள் ஓட்டி சோதனை செய்தனர். அப்பொழுது வெளிப்படும் நைட்ரஜன் ஆக்சைட்களின் (Nitrogen oxides – NOx) அளவு, அமெரிக்க அரசு அனுமதித்த குறைந்த அளவு விதிக்கும் மேலாகா 35 மடங்கு வரை அதிகம் இருப்பது தெரிய வந்தது. சோதனைக் கருவிகளின் குற்றமோ எனச் சந்தேகித்து ஆராய்ந்ததில், அதிலும் குறை இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. ஆய்வக சோதனையில் தேறிய ஊர்திகள் எவ்வாறு சாலைப்பயணத்தில் இதுபோன்ற மாறுபட்ட முடிவைக் கொடுக்க முடிகிறது என்பதைத் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கண்டறியாவிட்டாலும், தங்கள் முடிவை முனைவர் அரவிந்த் குழு ஆய்வறிக்கையாக வெளியிட்டது. இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது 2013 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில். இவர்களுக்கு நிதிவழங்கி ஆய்வை முன்னெடுத்த ‘இண்டர்நேஷனல் கவுன்சில் ஆன் கிளீன் டிரான்ஸ்போர்ட்டேஷன்’ (International Council on Clean Transportation) ஆய்வின் முடிவுகளை அமெரிக்க அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.

    newsshine-com news on Arvind Thiruvengadam Padmavathy

    இது போன்று தனிப்பட்ட பல்கலைக்கழக ஆய்வறிக்கைகளில் வோல்க்ஸ்வேகன் ஊர்திகள் அரசு நிர்ணயித்த மாசுக்கடுப்பாட்டு விதிகளை மீறுவதைக் கவனித்து வந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை அடைந்தது. இதற்கு முன்னரே 1973, 1998 ஆண்டுகளிலும் ஏமாற்று வேலைகள் செய்து வோல்க்ஸ்வேகன் பிடிபட்டிருந்தால், அரசு மேலும் ஆராயத் தொடங்கியது. முடிவில் ஆய்வக சோதனையில் ஊர்தியின் ஸ்டியரிங் வீல் அசையாமல் இருக்கும்பொழுது வண்டியின் இயந்திரம் மட்டும் தொடர்ந்து இயங்கினால், அது ஊர்தி சோதனைக்குள்ளாகும் நேரம் என மென்பொருள் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு மாசுக்கட்டுப்படுத்தும் பாகங்களை இயங்கச் செய்து நைட்ரஜன் ஆக்சைட்களின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் நிறுவனம் வண்டிகளை வடிவமைத்து வைத்திருக்கும் உண்மை வெளியாகியது. இது அரசை ஏமாற்றும் மிகப்பெரிய குற்றச் செயல் மட்டுமல்ல, சுற்றுப்புறச் சூழல் மீதும், மனித நலத்திலும் அக்கறையற்ற செயலும் ஆகும். மாசுநிறைந்த காற்றைச் சுவாசிக்கும் பொழுது ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் அதிகரிக்க வழிவகுக்கும்.

    ஏன் ஊர்தி சோதனைக்குள்ளாகும் பொழுது மட்டும் மாசுக்கட்டுப்பாடு திட்டம் இயங்க வேண்டும் என்ற கேள்விக்கு … வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் பேராசை என்பதே பதில். பெட்ரோலுக்குப் பதில் மாற்று எரிபொருளாக டீசல் பயன்படுத்தும் ஊர்திகளை அதிகரிக்கும் எண்ணம் சந்தையில் பரவலாகத் தோன்றியது. அமெரிக்கர்கள் விரும்பும் வண்ணம் பெரிய வண்டிகளையும், அதே சமயம், அமெரிக்க அரசு விதிகள்படி குறைந்த எரிபொருளில் அதிக மைல்கள் கொடுக்கும், டீசலில் ஓடும் வண்டிகளைத் தயாரித்து விற்றால் அமெரிக்க சந்தையைப் பிடித்துவிடலாம் என்பது வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் திட்டம். ஆனால் அமெரிக்க அரசு நிர்ணயித்த மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் வண்டி இயங்க நேர்ந்தால், குறைந்த எரிபொருளில் அதிக மைல்கள் ஓடாது. வண்டியை இயக்க அதிகம் செலவானால் ஊர்திகளும் விற்பனையாகாது. இதற்கு வழி, சரியான தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதாக இருக்கும். ஆனால் வோல்க்ஸ்வேகன் நிறுவனம், அதிக செலவைக் கூட்டி, ஊர்தியின் விலையை அதிகரிக்கச் செய்யும் முறையைத் தவிர்க்கும் நோக்கில் குறுக்கு வழியைக் கண்டுபிடித்தது. அரசு செய்யும் சோதனைகளில் ஆய்வாளர்களின் கண்களில் மண்ணைத்தூவும் வண்ணம் சோதனை நேரங்களில் மட்டும் வண்டிகள் மாசுக்கட்டுப்பாடு திட்டத்திற்கு ஏற்ப இயங்கும். பிற வேளைகளில், சாலைகளில் ஓட்டும்பொழுது வெளியாகும் நைட்ரஜன் ஆக்சைட்களின் அளவைக் கட்டுப்படுத்தும் முறை செயலிழந்து போகுமாறு வண்டிகளை இயக்க மென்பொருள் பொருத்தியது. அதனால் ஊர்தியும் குறைந்த எரிபொருளுக்கு அதிக தூரம் ஓடும். வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த இந்த மோசடி வெளியாகக் காரணமாக இருந்தது முனைவர் அரவிந்தின் ஆய்வறிக்கையே.

    மாசுக்கட்டுப்பாட்டைக் குறைப்தற்கும், ஏமாற்றும் நிறுவனத்தின் குற்றம் வெளிப்படவும் உதவியாக இருந்த ஆய்வினை செய்த 32 வயதாகும் முனைவர் அரவிந்த் அவர்களின் ஆய்வுப்பணியைப் பாராட்டி அவரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _____________________________________________________________________________________________

    வல்லமையாளர் முனைவர் அரவிந்தின் கட்டுரை:
    The routine study that led to the discovery of the VW scandal
    by Arvind Thiruvengadam Oct 01, 2015
    http://www.autocarpro.in/news-international/routine-study-led-discovery-huge-scandal-9408

    _____________________________________________________________________________________________

    Arvind Thiruvengadam:
    Research Assistant Professor
    Mechanical and Aerospace Engineering
    West Virginia University
    Morgantown, West Virginia 26506
    Email: arvind.thiruvengadam@mail.wvu.edu
    Phone: 304-293-0805
    http://www.mae.cemr.wvu.edu/faculty/faculty-detail.php?id=1069&type=faculty
    Google+ https://plus.google.com/103696045919648975153/
    Google.scholar. https://scholar.google.com/citations?user=yNpEEDAAAAAJ&hl=en
    Linkedin https://www.linkedin.com/pub/arvind-thiruvengadam/31/732/644

    _____________________________________________________________________________________________

    தகவல்களும் படங்களும் கொடுத்து உதவிய தளங்கள்:
    How a university lab helped unearth the VW emissions scandal
    http://www.autocarpro.in/news-international/university-lab-led-unearthing-vw-emission-scandal-9373#sthash.SEqL1nbL.dpuf

    As Volkswagen Pushed to Be No. 1, Ambitions Fueled a Scandal
    http://www.nytimes.com/2015/09/27/business/as-vw-pushed-to-be-no-1-ambitions-fueled-a-scandal.html?_r=0

    Unexpected VW emissions results catapult WVU researchers to fame
    http://www.newsshine.com/us-local-news/west-virginia/business/140060-unexpected-vw-emissions-results-catapult-wvu-researchers-to-fame.html

    The Indian-origin scientist who took a test drive, exposed VW
    http://www.hindustantimes.com/business/a-long-ride-by-a-tamilian-that-exposed-the-vw-emission-fraud/story-DNB9Px86mMb4Fout6QiokN.html

    The Chennai-Born Scientist Who Exposed The Volkswagen Scam
    http://www.outlookindia.com/blogs/post/the-chennaiborn-scientist-who-exposed-the-volkswagen-scam/3627/12

    _____________________________________________________________________________________________

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டம்பர் 28, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு கிரண் சேத்தி அவர்கள்

    Kiran Bir Sethi

    வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர் எனப் பாராட்டப்படுபவர் திருமிகு “கிரண் பிர் சேத்தி” (Kiran Bir Sethi) அவர்கள். தான் வாழும் சமூகத்தில் மாற்றம் விளைவிக்கும் தன்னார்வத் தொண்டர்களாகவும், அத்துடன் மாற்றம் கொண்டு வருபவர்களைக் கண்டறியும் வினையூக்கி (catalysts)களாகவும் விளங்கும் பலரை வல்லமை விருது கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் இடம் பெரும் ‘கிரண் சேத்தி’ அவர்கள் அகமதாபாத்தில் உள்ள ‘ரிவர்சைடு பள்ளி'(The Riverside School, Ahmedabad) யின் நிறுவனர் மற்றும் இயக்குநராக கல்விப்பணியில் மறுமலர்ச்சி செய்து வருகிறார். உலகளாவிய அளவில் நடத்தப்பெறும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ (Design for Change) என்ற திட்டத்தை, இந்தியாவில் இவர் அமைப்பு முன்னெடுத்து நடத்திவருகிறது. இந்த அமைப்பு நடத்தும் ‘புராஜக்ட் எக்ஸ்போ’ (Design for Change – DFC I CAN School Challeng) என்ற போட்டியை ஆண்டு தோறும் தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தி, சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கி வருகிறது. பள்ளி மாணவர்களை ஆய்வில் ஊக்குவிக்கும் இந்தச் செயல் ஓர் அருமையான முயற்சி. தேசிய அளவில், 8 வயதிலிருந்து 13 வயது வரை உள்ள பள்ளி (நடுநிலைப்பள்ளி வரை பயிலும்) மாணவர்களுக்காக நடக்கும் இந்தப்போட்டியில் ஆண்டுதோறும் பல பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்ட பங்கேற்கிறார்கள்.

    Design for Change World

    இந்த ஆண்டு கோவை ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கும் ஆர்வத்தில் “இயற்கை கிருமிநாசினி” தயாரித்து அதனைப் போட்டிக்கு சமர்பிக்கிறார்ககள். இவர்களின் இந்த முயற்சிக்காக ஏழாம் வகுப்பு மாணவர்களான நந்தகுமார், தனலட்சுமி, தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோரையும், அவர்களுக்கு ஊக்கமூட்டி உதவி வரும் பள்ளியின் கணித ஆசிரியர், சத்யபிரபா தேவி ஆகியோரையும் வல்லமை இதழ் சார்பில் பாராட்டுகிறோம். அன்றாடம் சுகாதாரத்திற்காக நாம் பயன்படுத்தும், ‘சோப்பு’, ‘ஷாம்பூ’ உள்ளிட்ட கிருமிநாசினி அனைத்தும் வேதிப் பொருட்களால் ஆனவை. இவற்றால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு தோல் நோய்களும் வருகின்றன. இவற்றைக் கணக்கில்கொண்டு இயற்கை முறையில், கிருமி நாசினி தயாரித்துள்ளதாக இம்மாணவர்கள் தமிழ் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளனர். செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை, வேப்பிலை, திருநீற்றுப்பத்து, கற்பூரவல்லி ஆகியவற்றைக் கலவையாக்கி, இயற்கை கிருமி நாசினி தயாரித்து; அத்துடன், இவை அதிக நாள் மக்கள் பயன்படுத்த வசதியாக, எலுமிச்சையையும் இயற்கை கிருமிநாசினியில் சேர்த்துள்ளார்கள். சுத்தமாக்குவதுடன் பாதிப்பும் தராத இவர்களது இயற்கை கிருமிநாசினியை சுற்றுவட்டாரப் பள்ளிகளிலும் பயன்படுத்த இவர்களே தயாரித்தும் வழங்கியுள்ளார்கள்.

    Tamil_News_large_1348855 (1)

    இந்தத் தமிழக மாணவர்களைப் போன்று ஆர்வமுள்ள மாணவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஆராய்ச்சிக் கோணத்தில் வளர்த்துவரும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ அமைப்பும், அதனை முன்னெடுத்து நடத்தி வரும் கிரண் சேத்தியின் பணியும் பாராட்டிற்குரியவை.

    கிரண் சேத்தியின் கல்வி மறுமலர்ச்சி முயற்சிகள் உலக அளவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக அளவில் ‘வர்கி அறக்கட்டளை’ (Varkey Foundation) சிறந்த ஆசிரியருக்கான விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதுக்கான (Global Teacher Prize in the Global Education & Skills Forum 2015) இறுதிப்பட்டியலில் ஆசிரியர் தொழிலுக்கு பெருமை தேடித்தந்தவர்களில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ளார் கிரண் சேத்தி. இந்தப் பரிசு, தங்களது தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, மிகச் சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியருக்கே வழங்கப்படும். ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவோர்க்காக வழங்கப்படும் இந்தப் பரிசு ஒப்பீட்டில் நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படக்கூடிய ஒன்று என்பதும், இதற்காக சுமார் 5000 ஆசிரியர்கள் வரை அனைத்துலக அளவில் பரிந்துரைக்கப்படுவர் என்பதும் இதன் சிறப்பு.

    Kiran Bir Sethi3

    Kiran Bir Sethi4

    Kiran Bir Sethi5

    Kiran Bir Sethi2

    பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்கும் கலையில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்றும், இவர் முதல் நாள் ஒரு ஆராய்ச்சியாளரின் பார்வையில் பாடம் சொல்லித் தரும் முயற்சியை மேற்கொண்டால், மறுநாள் ஒரு கலைஞராகவும், அதற்கும் அடுத்த நாள் ஒரு கதை சொல்லியாகவும் மாறி பாடம் நடத்தும் முறையைக் கடைப்பிடிப்பதாகவும் கூறும் கிரண் சேத்தி, மாணவர்களை இவ்வாறு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், அவர்கள் தாங்களே முயன்று வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

    தனது மகன் கல்வியில் எதிர்கொண்ட கட்டுப்பாடுகளையும் சவால்களையும் கண்ட பின்னர், அகமதாபாத்தில் ரிவர்சைட் பள்ளி என்ற பள்ளியைத் துவக்கி, 2001 ஆம் ஆண்டு முதல், மாணவர்களுக்குக் கல்வி வழங்கும் முறையை மாற்றி அமைப்பதில் அக்கறை காட்டி வருகிறார்.

    TED இந்தியாவின் சொற்பொழிவாளர், பல அயல்நாட்டுக் கருத்தரங்குகளில் சிறப்பு சொற்பொழிவாளர் என்ற வகையில் சமூக அளவில் மாற்றம் தர வேண்டிய கல்வியின் அவசியம் பற்றிய கருத்துகளை முன்னிறுத்தி வருகிறார். இவரது பள்ளியில் இவர் கடைபிடிக்கும் மாற்றம் நோக்கிய புதுமையான கல்விமுறை பாடத்திட்டங்களுக்காக 2009 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ‘கால் டு கான்சயின்ஸ்’ (Call to Conscience) விருது வழங்கிச் சிறப்பித்தது. ‘டிசைன் பார் சேஞ்ச்’ என்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியை முன்னெடுத்தது மட்டுமல்லாது, ‘அப்ரோச்’ (aProCh) என்ற அமைப்பைத் துவக்கி, நகரத்தைச் சிறுவர்களுக்கான பாதுகாப்பான இடமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டதற்காக 2008ம் ஆண்டின் அசோகா (Ashoka Fellow in 2008) விருதைப் பெற்றார். சமூகத்தில் கல்வியின் வழி இவர் மாற்றம் கொண்டு வரச் செய்யும் முயற்சிகளுக்காக இந்த ஆண்டு, ஏசியா சொசைட்டியின் ‘கேம் சேஞ்சர்’ விருதுக்காகவும் (Asia Society’s, 2015 Asia Game Changer of the Year) பரிந்துரைக்கப்பட்டார்.

    இந்திய மாணவர்களின் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ள கிரண் சேத்தியை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம், கிரணுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _____________________________________________________________________________________________

    கட்டுரைக்கான தகவல்களும் படங்களும் பெறப்பட்ட தளங்கள்:

    கட்டுரைக்குத் தகவல் தந்து உதவிய தளங்கள் (Resourses):
    http://www.globalteacherprize.org/
    http://asiasociety.org/asia-game-changers
    http://asiasociety.org/asia-game-changers/kiran-bir-sethi
    http://www.ted.com/speakers/kiran_sethi
    http://www.schoolriverside.com
    https://en.wikipedia.org/wiki/The_Riverside_School,_Ahmedabad

    The Importance of a Teacher in Society
    http://www.newindianexpress.com/education/The-Importance-of-a-Teacher-in-Society/2015/02/23/article2681963.ece

    இயற்கை முறையில் கிருமிநாசினி: அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1348855

    Info on DFC I CAN School Challenge – தகவல்:
    இணையதளம்: http://designforchangeindia.com/
    ஃபேஸ்புக்: https://www.facebook.com/designforchangeindia?fref=nf
    யூடியூப்: https://www.youtube.com/user/icandfc
    போட்டி மற்றும் போட்டியின் விதிமுறைகள்: http://www.dfcworld.com/file2015/asia_society_press.pdf
    மின்னஞ்சல்: india@dfcworld.com

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டம்பர் 21, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு முனைவர் பத்மாவதி அவர்கள்

    Padmavathy-a

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பத்மாவதி ஆனையப்பன் அவர்கள். இவரைக் குறிப்பிடும் செய்திகள் யாவும் “முனைவர் பத்மாவதி, தொல்லியல் ஆய்வாளர் (பணி ஓய்வு), சென்னை” என்றே குறிப்பிடுகின்றன. ஆனால் “தொல்லியல் பணிகளில்” இருந்தோ அல்லது “தொல்லியல் ஆய்வுகளில்” இருந்தோ ஓய்வு பெற்றதாக முனைவர் பத்மாவதியின் செயல்பாடுகள் இதுவரையில் குறிப்பதாக இல்லை. மாறாக இவர், வழக்கமான பணிஓய்வு பெற்றவர் வாழ்க்கைமுறையில் இருந்து வேறுபட்டு தொல்லியல் துறை வளர்ச்சியிலும், வரலாற்று ஆய்வுகளிலும், வரலாற்றுக் கல்வியிலும், தொல்லியல் துறையில் இளையதலைமுறையினரை உருவாக்குவதிலும் ஆர்வம் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஆதலினால், இவரை பணிஓய்வு பெற்றவர் என்று குறிப்பிடுவதும் பொருத்தமற்றதே. செப்டெம்பர் 6, 2015 அன்று ஓசூரில் நடைபெற்ற, “அறம் இலக்கிய அமைப்பு ஓசூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்” இணைந்து நடத்திய “மாமன்னர் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1001 ஆவது ஆண்டுவிழாவில்”, தொல்லியல் துறையில் ஆர்வமுடன் செயலாற்றும் இளையதலைமுறை ஆர்வலர்களுக்கு “தொல்லியல் முனைவோர்” விருது வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் பாராட்டிப் பேசியுள்ளார். தொல்லியல்துறையில் பத்மாவதியின் தொடர் பங்களிப்பைப் பாராட்டி அவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ அமைப்பின் நிறுவனர் முனைவர் சுபாஷிணி அவர்கள், முனைவர் சுபாஷிணிக்கு வல்லமைக்குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

    viruthu

    முனைவர் பத்மாவதி தொல்லியல் கல்வி சார்ந்த பயிலரங்குகளையும், கல்வெட்டுகளைப் படிக்க உதவும் கிரந்தம் பயிலரங்கங்களையும் தொடர்ந்து நடத்தி வருபவர். சமீபத்தில் இவர் பங்கேற்ற பயிலரங்கங்கள் குறித்த தகவல்கள் சிலவற்றை கீழே காண்க …

    ▪தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையம் நடத்திய கிரந்தம் பயிலரங்கில் பங்கேற்று, தமிழகக் கல்வெட்டுகளில் கிரந்த எழுத்து பயன்பாடு என்ற தலைப்பில் பல்லவர் கல்வெட்டுகளில் கிரந்தம் பற்றிய வகுப்பு, மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கும் பொருட்டு தஞ்சை பெரிய கோயிலில் நேரடி கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி

       Padmavathy6 Padmavathy5

    ▪நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி தமிழ்த்துறை நடத்திய பயிலரங்கில் கலந்துகொண்டு மாணவ மாணவியர்க்கு கிரந்தஎழுத்துக்கள் கற்பித்து பயிற்சி

    ▪காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தொல்லியல் இலக்கியச் சான்றுகளுடன் “தொண்டைமண்டல வரலாறு” பற்றிய சொற்பொழிவு

    ▪சென்னை சமூக ஆய்வுவட்டம் கூட்டத்தில் “களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும்” பற்றிய சொற்பொழிவு

    Padmavathy-b

    ▪தமிழக மூதறிஞர்கள் குழு நடத்தும் மாதாந்திர கலந்துரையாடலில் சென்ற ஜூலை மாதக் கூட்டத்தில், “தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் கூறும் முக்கியச் செய்திகள்” என்ற தலைப்பில் தமிழக வரலாற்றில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டு ஆதாரங்கள், தமிழர்களின் சங்ககாலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே இருப்பதற்கான தகவல் தரும் மீனாட்சிபுரம் கல்வெட்டு ஆகியன குறித்த சொற்பொழிவு

    ▪தமிழ் மரபு அறக்கட்டளையின் களஆய்வுகளில் பங்கேற்பு, தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவுகளுக்கு தகவல் அளித்து வரலாற்றுத் தகவல்கள் இணையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வழி பதிவாக்கம் பெற உதவுதல், தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராக வழிநடத்துதல் ஆகிய தொடர் பணிகளுடன்…

    “பனுவல் புத்தக நிலையம்” நடத்திவரும் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தில் (Archeological Tour ) பங்கேற்று வரலாறு மற்றும் தொல்லியல் கல்வி பயிற்சி அளிப்பது, கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் படி எடுக்கும் முறை பற்றிய பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு இதுவரை,
    பனுவல் ஒருநாள் வரலாற்று தொல்லியல் கல்விப் பயணம் திட்டம் வழியாக (1) மகாபலிபுரம், (2) காஞ்சிபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், (3) செஞ்சி ஆகிய இடங்களில் தொல்லியல்துறை கல்வி வளர்ச்சிக்காகப் பயிற்சிகள் அளித்துள்ளார்.

       காஞ்சிபுரம் கல்விச் சுற்றுலாவில்பனுவலின் செஞ்சி வரலாற்று பயணம்

    கார்த்திக் புகழேந்தி

    அடுத்து வரும் அக்டோபர் 4, 2015 அன்று பனுவல் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தில் திருக்கோவிலூரிலும், திருக்கோவிலூரைச் சுற்றியுள்ள பகுதிகளான திருவெண்ணைநல்லூர், கிராமம், ஜம்பையில் 1981 ல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட, கி. பி. 1 ஆம் நூற்றாண்டு சங்க காலத்தமிழ் எழுத்துக் கல்வெட்டு ஆகியவற்றைப் பற்றி மங்கை ராகவன் அவர்களுடன் இணைந்து பயிலரங்கம் வழங்க உள்ளார்.

    பணி ஓய்விற்குப் பிறகும் வரலாற்றுக் கல்வி, கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி, தொல்லியல் கல்வி ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு வழங்கி அவர்களை ஊக்குவித்துவரும் முனைவர் பத்மாவதி அவர்களின் பணிகளுக்காக அவரை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _____________________________________________________________________________________________

    கட்டுரைக்கான தகவல்களும் படங்களும் பெறப்பட்ட தளங்கள்:
    முனைவர் பத்மாவதியின் ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் – https://www.facebook.com/padmavathy.anaiappan
    பனுவல் ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் – https://www.facebook.com/panuval.thiruvanmiyur
    கார்த்திக் புகழேந்தி – https://www.facebook.com/gsrkteam
    காற்றில் எழுதியவன்… கார்த்திக் புகழேந்தி வலைப்பூ – http://writterpugal.blogspot.com/2015/05/blog-post.html
    தமிழ் மரபு அறக்கட்டளை – http://www.tamilheritage.org/old/ec/ec.html#_pathma

    வல்லமையாளர் பற்றிய மேலதிகத் தகவல்கள்:
    களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும், தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பத்மாவதி உரை
    http://samoogaaaivuvattam.blogspot.in/2014/12/blog-post.html

    கல்வி: முதுகலை தமிழ், முதுகலை கல்வெட்டு, தொல்லியல் பட்டயப்படிப்பு, முனைவர் ஆய்வு

    நூல்கள்:
    – சோழர் ஆட்சியில் அரசும் மதமும்
    – சைவத்தின் தோற்றம்
    – சோழர்கால சமயம்
    – அம்பாசமுத்திரம்

    ஆசிரியர்:
    – நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – I
    – நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – II
    – நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – III
    – திருவிழிமிழலை கல்வெட்டுகள்
    – திருவலஞ்சுழி கல்வெட்டுகள்
    – தாமரைப் பாக்கம் கல்வெட்டுகள்

    துணை ஆசிரியர்:
    – தொல்லியல் கருத்தரங்கம் தொகுதி – I
    – தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 2004
    – காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்
    – தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்
    – திருவாரூர் மாவட்டக் கல்வெட்டுகள்

    மின்னஞ்சல்: padma_tn@hotmail.com
    https://www.facebook.com/padmavathy.anaiappan

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டம்பர் 14, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திரு. ரவிக்குமார் அவர்கள்

    ravikkumar

    சென்ற ஆசிரியர் தின விழாவையொட்டி, தமிழ்நாட்டில் வெளிவரும் சிறந்த தமிழாய்விதழ்களில் ஒன்றான “மணற்கேணி ஆய்விதழ்” சார்பாக “நிகரி விருது” அளித்து, வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த ஆசிரியர்களாக, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களையும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் தலைமைஆசிரியர் துளசிதாசன் அவர்களையும் இனங்கண்டு பாராட்டிய திரு. ரவிக்குமார் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

    சமத்துவ ஆசிரியர் விருதுகளை வழங்கிய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன், “சமுதாய அக்கறையை மாணவர்களிடம் விதைப்பவரே உண்மையான ஆசிரியர்” என்று பாராட்டினார். சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கான மாறுதல்களைக் கொண்டுவர விரும்பினால் அதை இளைஞர்களிடம் இருந்தே துவக்க வேண்டும் எனச் சொன்ன அறிஞர்கள் பலர். “இளைய பாரதத்தினாய் வா வா வா” என்று எழுச்சியூட்டிப் பாடினார் பாரதி, அக்கொள்கையைக் கொண்ட மனிதருள் மாணிக்கம் ஜவஹர்லால் நேருவும் இக்கருத்தைக் குறிப்பிட்டே குழந்தைகளிடம் அன்பு செலுத்தினார், சிறுவர்களுக்கு கல்விக் கண் திறந்து இதனை முயற்சித்தார் கர்மவீரர் காமராசர், இளைஞர்களை கனவுகாணச் சொல்லி ஊக்குவித்தார் அப்துல் கலாம். அறிஞர் அனைவரும் முதிர்ந்த மூங்கில்களைக் காட்டிலும், விளையும் பச்சை மூங்கில்களை வளைப்பது சுலபம் என்பதை அறிந்து தங்கள் அறிவுரைகளை இளைஞர் குழுவிடம் எடுத்துச் சென்றனர்.

    அரசியல் களத்தில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஒரு அரசியல்வாதியைக் காட்டிலும், சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு சமூக சீர்திருத்தவாதியே துணிச்சல் மிக்கவர் என்றார் அம்பேத்கர். இந்நோக்கில் பள்ளி ஆசிரியர் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உணர்ந்து, வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த ஆசிரியர்களைப் பாராட்டி ஊக்குவித்து ஆசிரியர் தின நாளில் அவர்களைக் கௌரவித்து மணற்கேணி ஆய்விதழ் சார்பாக “நிகரி விருது” அளித்து வரும், மணற்கேணி இதழ் மற்றும் அதன் நிறுவனருமான திரு. ரவிக்குமார் அவர்களின் பணி பாராட்டிற்குரியது. விருதின் நோக்கம் குறித்து எழுத்தாளர் ரவிக்குமார் விழாவில் ஆற்றிய உரையில், “மதிப்பெண் மட்டுமே நோக்கமாகக் கொண்டு சென்று கொண்டிருக்கும் இன்றைய கல்வி முறையில், பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி வகுப்பறையைச் சமத்துவமாக நடத்துகிற ஆசிரியர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இதற்கான பிரக்ஞையுடன் கூடிய ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்,” என்றார்.

    இனி தொடர்வது, தமிழகம் நன்கறிந்த “மணற்கேணி திரு. ரவிக்குமார்” பற்றியும் அவரது “மணற்கேணி ஆய்விதழ்” பற்றியும், அதன் “நிகரி விருது” பற்றியும் ஒரு சிறு அறிமுகம்.

    எழுத்தாளர் திரு. ரவிக்குமார் ஒரு வழக்கறிஞர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். மேலும், சமூகப் பணியாளரும், மணற்கேணி பதிப்பகத்தின் நிறுவனரும், மணற்கேணி தமிழ் ஆய்விதழின் ஆசிரியருமான இவர் 1961 இல் சீர்காழி வட்டம், மாங்கணாம்பட்டு என்ற சிற்றூரில் துரைசாமி – கனகம்மாள் இணையரின் மகனாகப் பிறந்து, பள்ளி நாட்களிலேயே ஆசிரியர் மூலம் பகுத்தறிவு சிந்தனைப் பாதையில் நடக்கத் துவங்கியவர். அண்ணாமலை பல்கலைக்கழக நாட்களில் நக்சல்பாரி அரசியலிலும், முற்போக்கு மாணவர் சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டவர். பேராசிரியர் அ. மார்க்கஸ், பொ. வேலுசாமி அவர்களுடன் 1990 களில் இணைந்து நடத்திய “நிறப்பிரிகை இதழில்” இவர் வடித்த எழுத்துக்கள் மூலம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தி மக்களின் கவனத்தைக் கவர்ந்தார். தமிழகத்தின் தலித் அரசியலில், தலித் பண்பாட்டு எழுச்சியில், மனித உரிமை நடவடிக்கைகளில் இவர் காட்டிய ஈடுபாடு, பல ‘உண்மை அறியும் குழு’க்களை நிறுவவும், காவல்துறையினரின் அத்துமீறல்களை வெளிக்கொணரவும் உதவியது.

    ‘தடா’ ஒழிப்பு, மரணதண்டனை ஒழிப்பு மாநாடு போன்றவற்றில் 1990 ஆண்டுகளில் முன்னணியில் செயல்பட்ட இவர்; ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கம்’, ‘மக்கள் கல்வி இயக்கம்’, ‘மனித உரிமை இயக்கம்’, ‘பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்’ எனப் பல சமுதாய இயக்கங்கள் உருவாக ஆலோசகராகப் பின்னணியில் இருந்தும் பங்களித்துள்ளார். ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ காவல்துறையின் அடக்குமுறைகளைச் சந்தித்த பொழுதும், இந்துத்துவ சக்திகளால் இஸ்லாமியர், கிறிஸ்துவர் பாதிக்க நேர்ந்த பொழுதும் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்துப் போராடியவர் திரு. ரவிக்குமார். காட்டு மன்னார் கோவில் சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற வாய்ப்பைத் தக்கவாறு பயன்படுத்தி, சமூகப்பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குப் பாடுபட்டதன் விளைவாக நரிக்குறவர்கள், புதிரை வண்ணார், பதிவுபெற்ற பாரம்பரிய மருத்துவர்கள், அரவாணிகள், நாட்டுப்புற கலைஞர்கள், வீட்டுப் பணியாளர்கள், நலவாரியங்களும் உருவாகின. அந்நாளைய முதல்வராக ஆட்சியில் இருந்த கலைஞரின் கான்கிரீட் வீடுகட்டும் திட்டத்திலும் பெரும் பங்கு வகித்தார். அவரது சமூகப்பணிகளுக்காக, ‘அண்ணா விருதை’ 2010 ஆம் ஆண்டில் பெற்றவர் திரு. ரவிக்குமார்.

    ravikkumar with kalaingar

    மணற்கேணி: தனித்துவம் பெற்ற மணற்கேணி இருமாத ஆய்விதழ் துவக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் எண்ணிக்கை முப்பதையும் தாண்டியுள்ளது.

    மணற்கேணி ஆய்விதழ் வழங்கும் நிகரி – சமத்துவ ஆசிரியர் விருது:
    நிகரி விருது – நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து பாராட்டுவது விருதின் நோக்கம்.

                         manarkaenimanarkaeni logo
    2013 ஆம் ஆண்டு பேராசிரியர் அ.ராமசாமி அவர்களும் , கடலூர் ஆசிரியர் த.பாலு அவர்களும் நிகரி விருதுகளைப் பெற்றனர்.
    2014 ஆம் ஆண்டு பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும் ‘ஆயிஷா’ இரா. நடராசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப்பட்டனர்.
    2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப் பட்டுள்ளனர்.

    Untitled

    “பள்ளிப் பருவம்” என்ற மணற்கேணி பதிப்பக நூலின் பதிப்புரையில், திரு. ரவிக்குமார் அவர்கள் ‘நிகரி’ விருது தோற்றுவித்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறார், “பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் பெற்றோர்கூடத் தம் பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறவேண்டும் என விரும்புகிற காலம் இது. அதனால்தான் ஆட்சியாளர்கள் ‘சமச்சீர் கல்வி’யைப் பற்றி அக்கறை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. சமூக, பொருளாதார பாகுபாடுகளைப் பள்ளிகளுக்குள் அனுமதித்துக்கொண்டு, அதைப்பற்றிக் கவலைப்படாமல், பாடத் திட்டங்களை மட்டும் ஒரேமாதிரியாக அமைத்துவிட்டால் கல்வியில் சமத்துவம் வந்துவிடும் எனக் கூறுவது கல்வியில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை மறைப்பதற்கானதொரு தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். தமிழ்நாட்டில், ‘சமச்சீர் கல்வி’ குறித்த கல்வியாளர்களின் பேச்சுகள்கூட பாடத் திட்டங்களைத் தாண்டிச் செல்லாதது நமது துரதிர்ஷ்டம். சமத்துவக் கல்வியை வலியுறுத்தும் நோக்கில் ‘நிகரி – சமத்துவ ஆசிரியர்’ விருதுகளை ஆண்டுதோறும் வழங்கிவிருக்கும் மணற்கேணி, கல்வி குறித்த நூல்கள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட இருக்கிறது. அதன் துவக்கமாக “பள்ளிப் பருவம்” என்ற நூல் அமைந்தது,” என்று குறிப்பிடுகிறார்.

    தமிழக கல்வி நிறுவனங்களில் நடைபெற்று , கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நாளேடுகளில் வெளியான சாதிவெறி நடவடிக்கைகள் பற்றிய ஒருசில சான்றுகளைக் குறிப்பிட்டு (http://manarkeni.blogspot.com/2014/09/blog-post.html), ஆதிதிராவிட / பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்காக எத்தனையோ முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தபோதிலும் பொதுவான கல்வியறிவு பெற்றோரின் சதவீதத்துக்கும் இந்தச் சமூகத்தினரில் கல்வி அறிவு பெற்றோரின் சதவீதத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதைக் காணமுடிகிறது. இதற்கு அரசாங்கமும் சமூகமும் சேர்ந்து பொறுப்பேற்கவேண்டும். ஏனெனில் அரசாங்கம் போடும் சட்டங்கள் சாதிய சமூகத்தின் முன்னால் செயலற்றுப் போய்விடுகின்றன. அவற்றைச் செயல்படவைக்கும் அரசியல் உறுதி இருந்தாலொழிய இந்த நிலையை மாற்ற முடியாது என்கிறார் திரு. ரவிக்குமார். எனவே இந்த மாறுதல் நோக்கிய முயற்சிக்கு செயல்வடிவம் கொடுத்து, சமத்துவத்தை ஊக்குவிக்க எடுத்த நடவைக்கையின்விளைவே ஆசிரியர்களுக்கான நிகரி விருது. இவர் இவ்வாறு சமூகத்தை மாற்றக்கூடிய நம்பிக்கையைத் தனது கவிதை ஒன்றிலும் வெளிப்படுத்துகிறார்.

    வானத்தை நோக்கி விட்டெறியும் கனவு
    சிலநேரம்
    இன்மையிலிருந்து இன்மையைநோக்கிப் பாயும்
    எரிகல்லாய் தடயமற்றுப் போகிறது
    சிலநேரம்
    மின்மினிப் பூச்சியாய் தலையைச் சுற்றி வருகிறது
    சிலநேரம் பனியாக மாறி இலைகளில் படிகிறது

    வானை நோக்கி விட்டெறியும் கனவு
    நட்சத்திரமாக மாறுவது
    எப்போதோதான் நடக்கும்.
    என்றபோதிலும் மனந்தளராதே
    உன் முன்னோர் எறிந்த கனவுதான் நிலவு
    சூரியனும்கூட அப்படியென்றுதான் சொல்கிறார்கள்

    தனது சமத்துவக் கனவிற்கு “நிகரி விருது” மூலம் செயல்வடிவம் கொடுத்து, தளரா நம்பிக்கையுடன் சமூகப்பணி செய்து வரும் திரு. ரவிக்குமார் அவர்களைப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _____________________________________________________________________________________________

    மேலதிகத் தகவல்களின் இணைப்பு …

    ரவிக்குமார் அவர்களின் படைப்புகள்:

    கட்டுரைத் தொகுப்புகள்: –
    1.கண்காணிப்பின் அரசியல், விடியல் பதிப்பகம், 1995
    2.கொதிப்பு உயர்ந்துவரும் , காலச்சுவடு, 2001
    3.கடக்க முடியாத நிழல்,காலச்சுவடு,2003
    4.மால்கம் எக்ஸ்,காலச்சுவடு,2003
    5.வன்முறை ஜனநாயகம், தலித் வெளியீடு, 2004
    6.சொன்னால் முடியும், விகடன்,2007
    7.இன்றும் நமதே, விகடன்,2008
    8.சூலகம், உயிர்மை, 2009
    9.கற்றனைத்தூறும், உயிர்மை, 2009
    10.பிறவழிப் பயணம், உயிர்மை,2010
    11.பாப் மார்லி, உயிர்மை, 2010
    12.அண்டை அயல் உலகம், உயிர்மை,2010
    13.ஆள்வதன் அரசியல், உயிர்மை, 2010
    14.தமிழராய் உணரும் தருணம், ஆழி பதிப்பகம், 2010
    15.துயரத்தின்மேல் படியும் துயரம், ஆழி பதிப்பகம்,2010
    16.காற்றின் பதியம், மணற்கேணி,2010
    17.கடல்கொள்ளும் தமிழ்நாடு,மணற்கேணி,2010
    18. மீளும் வரலாறு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,2010
    19.காணமுடியாக் கனவு, ஆழி பதிப்பகம், 2011
    20.சொல்லும் செயல், மணற்கேணி, 2011
    21.அ-சுரர்களின் அரசியல்,மணற்கேணி,2014

    கவிதை: –
    1.அவிழும் சொற்கள், உயிர்மை, 2009
    2.மழை மரம், க்ரியா,2010

    சிறுகதை: –
    1.கடல் கிணறு, மணற்கேணி,2014

    மொழிபெயர்ப்பு: –
    1.உரையாடல் தொடர்கிறது, விடியல்,1995
    2.கட்டிலில் கிடக்கும் மரணம்,மருதம்,2002
    3.வெளிச்சமும் தண்ணீர்மாதிரிதான்,தலித் ,2003
    4.பணிய மறுக்கும் பண்பாடு,காலச்சுவடு,2003
    5.வரலாறு என்னும் கதை, மணற்கேணி,2011
    6.வலசைப் பறவை, மணற்கேணி,2011
    7.அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்,மணற்கேணி,2011
    8.மாமிசம்,மணற்கேணி,2014
    9.அதிகாரத்தின் மூலக்கூறுகள், மணற்கேணி,2014
    10.வெள்ளை நிழல் படியாத வீடு, மணற்கேணி,2014
    11.குரல் என்பது மொழியின் விடியல்,மணற்கேணி,2014

    ஆங்கிலம்: –
    Venomous Touch,Samya,2010

    தொகுப்புகள்: –
    1.தலித் கலை இலக்கியம் அரசியல், தலித் கலைவிழாக்குழு,1996
    2.தலித் என்னும் தனித்துவம், தலித் வெளியீடு ,1998
    3.அயோத்திதாச பண்டிதர் சிந்தனைகள், 4 தொகுதிகள், தலித் சாகித்ய அகாடமி,1999
    4.ரெட்டைமலை ஸ்ரீனிவாசன், தலித் சாகித்ய அகாடமி , 1999
    5. தலித் காலம், தலித் வெளியீடு,1998
    6.மிகைநாடும் கலை,காலச்சுவடு,2003
    7.தொல்.திருமாவளவன் எழுத்துகள், 17 தொகுதிகள்,கரிசல்,2008
    8.ஒடுக்கப்பட்ட இந்துக்கள், கரிசல்,2008
    9.எங்கள் காலத்தில்தான் ஊழிநிகழ்ந்தது, மணற்கேணி,2010
    10.நூர்ந்தும் அவியா ஒளி,மணற்கேணி,2010
    11.சுவாமி சகஜானந்தா, மணற்கேணி,2010
    12.எல்.இளையபெருமாள், மணற்கேணி,2010
    13.பள்ளிப்பருவம், மணற்கேணி,2014
    14.நூல் ஏணி,மணற்கேணி,2014

    ஆங்கில தொகுப்புகள்: –
    1.We the Condemned, PUCL,1998
    2.Waking is another dream, Navayana,2011
    3.Tamil Dalit writing,Oxford,2012

    ***

    வல்லமையாளரின் தொடர்புக்கு:
    திரு. ரவிக்குமார்
    ஆசிரியர், மணற்கேணி
    எண் 2, நோபிள் மேன்ஷன்
    10, டாக்டர் நடேசன் சாலை
    திருவல்லிக்கேணி
    சென்னை 600005

    Manarkeni Publication
    B-1-4 Templeway Avenue
    East coast road
    Lawspet
    Pondicherry 605 008

    tamildalithistory@gmail.com
    adheedhan@gmail.com
    Mobile: 94430 33305

    http://manarkeni.blogspot.com/
    http://nirappirikai.blogspot.com/

    ***

    கட்டுரைக்கான செய்தி மற்றும் தகவல் பெற்ற இடங்கள்:
    செய்தி: சமுதாய அக்கறையை விதைப்பவரே உண்மையான ஆசிரியர்: துணைவேந்தர்
    http://www.dinamani.com/edition_trichy/trichy/2015/09/06/சமுதாய-அக்கறையை-விதைப்பவரே-/article3013434.ece

    நிறப்பிரிகை மற்றும் மணற்கேணி இணையதளங்கள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டம்பர் 7, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள்

    சங்கர் மகாதேவன் - 1

     

    சென்னை தியாகராய நகரில் உள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பு கடந்த வாரம் (ஆகஸ்ட் – 30) ஏழை எளிய குடும்ப் பெண்களுக்கு தையல், கணினி மற்றும் அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி அளித்து, அதற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கி, அதிகம் படித்திராத எளிய குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவியுள்ளது. இத்தகைய சமூகப்பணிகளுக்குத்  தூண்டுகோலாய் இருந்து வந்துள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனரும் மற்றும் அமைப்பின் அறங்காவலருமான திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்களின் சமூகப்பணியைப் பாராட்டி அவரை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

    இதுவரை நான்கிற்கும் மேலான தொழிற்பயிற்சி நிலையங்கள், பத்திற்கும் மேலான பள்ளிமாணவர்களுக்கான நலத்திட்டங்கள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உதவி, பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி என சமூகத் தொண்டு செய்துள்ளது “உதவும் உள்ளங்கள்” நிறுவனம். இந்த அமைப்பின் குழுவினர்கள், தன்னார்வலர்கள் பலரை ஒருங்கிணைத்தும், நன்கொடைகள் சேகரித்தும் தேவையுள்ளோர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். “உதவும் உள்ளங்கள்” சேவை நிறுவனத்தின் நிறுவனரான திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள் முன்னாள் வங்கி ஊழியர். இவர் 2000 ஆம் ஆண்டு உதவும் உள்ளங்கள் அமைப்பைத் தோற்றுவித்து தமது குழுவினர் துணையுடன் சமூகப்பணி செய்து வருகிறார். சமீபத்தில் வங்கிப்பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சமூகப்பணிக்கு முழுநேரத்தையும் செலவிட்டு வருகிறார்.

    சங்கர் மகாதேவன் - 2

    தற்பொழுது நானூற்றுக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்களை ஒருங்கிணைத்து, உதவும் உள்ளங்கள் அமைப்பு சமூகப்பணியாற்றி வருகிறது. உதவும் உள்ளங்களின் சேவைகள் பொதுவாகக் கல்வி உதவி, மருத்துவ உதவி, வாழ்வாதார தொழிற்பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் அடங்குகிறது.

    சங்கர் மகாதேவன் - 3
    மருத்துவ உதவி

    சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்துடனும், பாளையங்கோட்டையில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து திருல்வேலியில் புற்றுநோய்க்கான மருத்துவப்பணிகளிலும் உதவும் உள்ளங்கள் அமைப்பு பங்காற்றி வருகிறது. இதனால் புற்றுநோயினால் பாதிக்கப்பட பதினறாராயிரம் பேர் ஆரம்பக்கட்ட நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார்கள். தொழுநோயாளிகளுக்கு உதவித்தொகை என்று மருத்துவ உதவிகளும் உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

    சங்கர் மகாதேவன் - 5
    கல்வி உதவி

    சுனாமியில் பாழடைந்த பள்ளிகளுக்குக் கட்டிட சீரமைப்பு உதவி, கழிப்பறையற்ற பள்ளிகள் ஒருசிலவற்றிற்குக் கழிப்பறை கட்டும் உதவி, மாணவர்களுக்கு மேற்கல்வி பயில உதவித்தொகையளித்தல், தேவையான குழந்தைகளுக்கு காலையுணவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், பள்ளிப்பாடங்களில் பயிற்சி, நேர்முகத் தேர்வு பயிற்சி வகுப்புகள், அவர்கள் வேலைவாய்ப்புக்கு உதவி, பெண்களுக்குக் கணினி, தையல், அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி எனக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி உதவிகளும், உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

    சங்கர் மகாதேவன் - 4
    தொழிற்பயிற்சி

    இத்தகைய சமூகப்பணிகளுடன், 1998 ஆம் ஆண்டுமுதல், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளுக்கு “ஆனந்த தீபாவளி’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, சென்னையில் உள்ள 18 இல்லங்களைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு ஆகியவையும் பரிசாக வழங்குவதை உதவும் உள்ளங்கள் அமைப்பு செய்து வருகிறது.

    சங்கர் மகாதேவன்
    ஆனந்த தீபாவளி நிகழ்ச்சி

    இந்திய செஞ்சிலுவை அமைப்பு, இரத்த வங்கி, மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு ஆகியவற்றிலும் உறுப்பினராகத் தொடர்ந்து பங்களித்து வரும் திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள், துன்பத்தில் உழலும், உதவும் தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என்ற எளிய கொள்கையின் அடிப்படையில் உதவும் உள்ளங்கள் அமைப்பைத் துவக்கி, அதன் மூலம் இன்று பல்லாயிரம் மாணவர்களும், பெண்களும், நோயாளிகளும் பலன்பெறும் வண்ணம் சேவை அமைப்பினை வழி நடத்திச் செல்கிறார்.  அவரது சமூகப்பணியைப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்பு கொள்ள:
    Udhavum Ullangal
    No.77, 1st Main Road,
    C.I.T Nagar, Nandanam,
    Opp FIAT Car Showroom
    Chennai – 600 035
    Phone numbers:
    +91-44-24344743
    +91-9444194743

    Email: info@udhavumullangal.org.in, uu1sankar@gmail.com
    http://www.udhavumullangal.org.in/
    https://www.facebook.com/udhavumullangal

    தகவல்கள் மற்றும் படங்கள் உதவி:
    உதவும் உள்ளங்கள் வலைத்தளம்
    மற்றும் …
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1334519

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 31, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு அன்பு ஜெயா அவர்கள்

    Anbu Jeya

     

    வல்லமை இதழின் இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சிட்னி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திருவாளர் அன்பு ஜெயா அவர்கள். மருந்தாக்கியல் துறையில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவராயினும் தமிழின்பால் ஆர்வம் மிக்கவர். உயரதிகாரியாகப் பணியாற்றிய இவர் தனது பணி ஓய்விற்குப் பிறகு தான் பங்கேற்ற தமிழ் சார்ந்த தன்னார்வப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அந்த வரிசையில், சென்ற வாரம் (ஆகஸ்ட், 24 அன்று)மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்று, ஆஸ்திரேலியாவில் தமிழ் வளர்ச்சிப் பணிகள் பற்றிய சிறப்புரையாற்றினார். அயல்நாட்டில் தமிழ் வளர்க்கும் அரும்பணியை ஆற்றிவரும் திரு. அன்பு ஜெயா அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    சென்னையைச் சேர்ந்த முனைவர் அன்பு ஜெயா அவர்கள், மதுரை மருத்துவக் கல்லூரியிலும், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேலஸ் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றவர். இரண்டாம் மொழி கற்பித்தலில் பயிற்சி பெற்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிட்னி பாலர் மலர் தமிழ்ப்பள்ளிகளில் தன்னார்வலராகவும், அதன் மக்கள்தொடர்பு அதிகாரியாகவும், ஹோல்ஸ்வொர்த்தி கிளை தமிழ்ப்பள்ளியின் முதல்வராகவும் எனத் தொடர்ந்து பற்பல பொறுப்புகளை ஏற்றுத் தமிழ்ச்சேவை செய்து வருபவர். தற்பொழுது பாலர் மலர் தமிழ்ப்பள்ளி ஆலோசகராகவும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் கூட்டமைப்பின் புத்தகக் குழுவில் பங்கேற்று, பாடப்புத்தகங்கள் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

    “தமிழ் ஆஸ்திரேலியன்” மாதஇதழின் (http://www.tamilaustralian.com.au/) இணையாசிரியரான அன்பு ஜெயா அவர்கள், ஆஸ்திரேலியாவிலும், புலம்பெயர்ந்த தமிழர் வாழும் அயல்நாடுகளிலும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் நடத்தி வருகிறார். தமிழை இரண்டாம் பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு உதவியாகத் தனது இணையதளத்தில் (http://www.anbujaya.com/) பல பயிற்சிகளை தொகுத்து அளித்துள்ளார். தமிழ் பயிற்றுவிக்கும் அயலக பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இத்தளம் பெரிதும் உதவும் வகையில் அமைந்துள்ளது.

    வாரம் ஓரிரு மணிநேரங்களே தமிழ்கற்கும் சூழ்நிலையில் வளர்பவர் அயலகத்தில் வளரும் தமிழ்க்குடும்பங்களின் பிள்ளைகள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சிறுவர்களுக்குத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் பொழுது, தாயகத்தில் கற்பிக்கும் முறையில் இருந்து சற்று வேறுபட்ட உத்திகளைப் பயன்படுத்தவேண்டியத் தேவையுள்ளது. இத்தேவை குறித்தும், அதற்கு உதவும் உத்திகள் குறித்தும் “சிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்” என்று அன்பு ஜெயா விவரிக்கும் கட்டுரையும் இத்தளத்தில் இடம் பெறுகிறது. இக்கட்டுரையை அவர் மலேசியாவில் 2013 ஆம் ஆண்டு நடந்த 10 ஆவது உலகத்தமிழாசிரியர் மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார். மறு ஆண்டு, கோவையில் நடந்த “தாயகம் கடந்த தமிழ் 2014” எழுத்தாளர் மாநாட்டில், “ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் சமர்ப்பித்தார்.

    இந்த ஆண்டு, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற ஆஸ்திரேலியா பாலர் மலர் தமிழ்ப்பள்ளி ஆலோசகரான திரு. அன்பு ஜெயா அவர்கள்,

    Anbu Jeya Madhurai

    “ஆஸ்திரேலியாவில் தமிழர்களின் வளர்ச்சியும் தமிழ்மொழியின் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஆஸ்திரேலியாவில்தான் முதன்முதலில் தமிழ் வளர்ச்சிக்கான பன்மொழிக்கொள்கை கொண்டுவரப்பட்டது என்றும், தாய் மொழியைத் தவிர வேற்று மொழியொன்றை அறிந்துகொள்ள இத்திட்டம் வழிவகுக்கிறது என்றும் கூறினார். அந்த பாடத்திட்டத்திற்கேற்ப ஏழாம் வகுப்பு நூல்கள் உருவாக்கப்பட்டுவிட்டன என்றும், அடுத்த கட்டமாக எட்டாம் வகுப்புக்கான நூல்கள் உருவாகும் பணி தொடர உள்ளது என்றும் கூறினார். மேலும், திருக்குறள் நிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு மாணவர்களுக்குத் தமிழின் சிறப்பு உணர்த்தப்படுகிறது என்றும், மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசனைகளும் பெறப்பட்டு ஆஸ்திரேலியாவின் தமிழ்வளர்சிப் பணி தொடரும் எனவும் கலந்துரையாடலில் ஆஸ்திரேலியாவில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் தமிழ் வளர்ச்சிப்பணிகள் பற்றியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

    ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பேர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் உள்ளன. பன்மொழிச் சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ்மொழியில் சொல்வளம் பெற இத்தகைய வானொலிகள் பெரும் பங்காற்றுகின்றன. தமிழ் ஓசை, கலப்பை, தென்றல், மெல்லினம் போன்ற அச்சு இதழ்களும் ஆஸ்திரேலியாவில் வெளி வருகின்றன. தமிழ்க் கல்வியினைப் பொறுத்தவரை தமிழ் அமைப்புகள் சில சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழைக் கற்பிக்கின்றன போன்ற தகவல்களையும் வழங்கி ஆஸ்திரேலிய தமிழ்வளர்ச்சியின் நிலையை எடுத்துரைத்தார்.

    புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பங்களின் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகத் தொடர்ந்து கடந்த கால்நூற்றாண்டாகத் தன்னார்வப் பணியாற்றிவரும் வல்லமையாளர் அன்பு ஜெயா அவர்களைப் பாராட்டி அவர் பணிகள் சிறப்புறவும், அதனால் அயலகத் தமிழர்கள் பயன் பெறவும் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Contact Links:
    website: http://www.anbujaya.com/
    blog: தமிழ்ப் பந்தல்: http://tamilpandal.blogspot.com.au/
    facebook: https://www.facebook.com/anbu.jaya
    google.plus: https://plus.google.com/116850260359140513353/posts
    youtube: https://www.youtube.com/channel/UCAS3JlgjchEQxRMM8enxneQ
    http://tamilaustralian.com.au/magazine/?feb2014
    email: anbujaya2005@gmail.com
    Sources:
    http://epaper.dinamani.com/575841/Dinamani-Madurai/25-08-2015#page/1/1
    http://epaper.dinamalar.com/Gallery.aspx?id=25_08_2015_273_014_002&type=P&artUrl=25082015273014&eid=356
    http://www.dinamani.com/edition_madurai/madurai/2015/08/25/ஆஸ்திரேலியாவில்-தமிழ்ச்சொ/article2992538.ece

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 24, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  இயக்குநர் நந்தினி அவர்கள்

    Nan FAVFAV

    ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ என்ற தமிழின் முதல் எண்ணிம படக்கதை புதினத்தை (Tamil’s First Digital Graphic Novel ) மின்னூலாக வெளியிட்டமைக்காக இயக்குநர் நந்தினி அவர்கள் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுகிறார்.

    “திருதிரு துறுதுறு” படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநராக அறிமுகமாகிய நந்தினி, தமிழக திரைப்பட விளம்பரப்பட கல்வி நிலையத்தின் மாணவியும், 2003 ஆம் ஆண்டு அக்கல்வியில் தங்கப்பதக்கமும் பெற்றவர் (Gold Medalist (2003) from Film and Television Institute of Tamilnadu). இவர் மாணவராக இயக்கிய “ஓட்டம்” என்ற குறும்படத்திற்காக, சிறந்த மாணவ இயக்குநருக்கான தமிழக அரசின் விருதை, 2003 ஆண்டு தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களிடம் இருந்து பெற்றவர். இப்பொழுது ‘மேக் பிலீவ் ப்ரொடக்ஷன்’ (Make Believe Productions – www.makebelieveonline.com) என்ற நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் நிர்வாக பங்குதாரராக, பல விளம்பரப் படங்கள், வணிக நிறுவனங்களின் மக்கள்தொடர்பு படங்களை இயக்கி வருகிறார். இவரது “திருதிரு துறுதுறு” படமும் இந்தியாவிலேயே முதன்முதலாக டிஜிட்டலாகத் தயாரிக்கப்பட்டு, டிஜிட்டலாகவே வெளியிடப்பட்ட படம்.

    State Award small

    Nan FAVFAV6

    Nan FAVFAV5

    இந்தியா மற்றும் தமிழகத்தின் படக்கதை நூல்கள் யாவும் அயல்நாட்டுக் கதைகளின் மொழிபெயர்ப்பாகவும், சிறுவர்களுக்காகத் தயாரிக்கப்படுவதுமாகவே இருந்து வருவது வழக்கம். அப்போக்கில் இருந்து மாறுபட்டு இயக்குநர் நந்தினி அவர்கள் பெரியவர்களுக்காக கதை எழுதி, இயக்கி அதை எண்ணிம வடிவிலும் படக்கதையாக வெளியிட்டுள்ளார். இக்கதையை வெளியிட ஒன்றரை வருட உழைப்பினை இவரும் இவரது குழுவினரும் கொடுத்துள்ளனர். திரைப்படமாக இல்லாமல் படக்கதையாகவா? படக்கதைகள் படிப்பவர் அதிகம் இல்லையே, வழக்கமான காகித நூலாகவே வெளியிடலாமே என்பது போன்ற ஆர்வத்தை மட்டுப்படுத்தும் பல கருத்துக்களை எதிர்கொண்ட பொழுதும் தளராது இப்படத்தை உருவாக்கியுள்ளார் நந்தினி.

    மூக்குத்தி2

    முதலில் திரைக்கதையாக எழுதி உருவாக்கிய கதையை படக்கதை நூலாக வெளியிடலாம் என்று வெளியிட முடிவெடுத்தவர், திரைப்படமாக வந்தால் ஆண்டுக்கு 300 படங்கள் வெளியாகும் சூழ்நிலையில் இக்கதை தனித்து தெரிய வழியின்றி, அதிகப் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். கலைஞர்களின் திறமை ஊடகங்களின் கட்டுப்பாட்டிற்குள் அடங்காது. திரைப்படம், இசை, கலை, எழுத்து, எனப் பலதுறைகளிலும் ஆர்வமுள்ள கலைஞரான இவரால் எந்த ஊடகத்திலும் அவரது கற்பனையை வெளிப்படுத்த முடியும் என்று கூறும் நந்தினி, தனது எண்ணத்தில் கதை எவ்வாறு உருவாகியுள்ளது என்பதைக் கூற படக்கதையாகச் சொல்வது நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் கூறுகிறார்.

    புதிதாகத் திருமணமான காதலர்கள் வேலையின் காரணமாக வெளியூருக்குப் பயணமாகிறார்கள். அங்கு இளம் மனைவிக்குக் கிடைக்கும் சிவப்புக்கல் மூக்குத்தியும், அதற்குப் பிறகு அவள் எதிர்கொள்ளும் மர்ம நிகழ்ச்சிகளும், கொலைகளும், அவளது மாறான நடவடிக்கைகளின் காரணத்தை பற்றியும் அவளது கணவன் துப்பறிவதுதான் சிவப்புக்கல் மூக்குத்தியின் கதை.

    மூக்குத்தி3

    நந்தினி வெளியிட்டுள்ள சிவப்புக்கல் மூக்குத்தி படக்கதை புதினத்தைப் படிக்க விரும்புபவர், “எம் பி காமிக் ஸ்டூடியோ” (http://www.mbcomicstudio.com/#buy-skm) இணையதளத்தின் வழியாக, இந்திய விலை ₹ 249/அயல்நாட்டினர் விலை $ 3.99 க்கு அதை வாங்கலாம். இந்தப் படக்கதை புதினம் தமிழிலும் ஆங்கிலத்திலும் (‘Girl with a Red Nose Ring’) கிடைக்கிறது. மேலும் பிற மொழிகளிலும் வெளியிடத் திட்டமும் வைத்துள்ளார் நந்தினி.

    புதிய கதைகள், காதல், திகில், மர்மப்படங்கள் எனப் பல வகைப் பின்னணிகள் கொண்ட கதைகள், அத்துடன் அவற்றை எண்ணிம படக்கதைகளாக வெளியிடும் முயற்சிகளுக்கு வருங்காலத்தில் நல்ல வாய்ப்பிருக்கிறது என்றும், இம்முயற்சியில் எழுத்தையும், காட்சியையும் அழகியலோடு ஒன்றிணைக்க முடிவதால் தமிழ்ப் படங்களுக்கும் தமிழ்ப்படக் கதைகளுக்குமான இடைவெளி குறையும். இதனால் நல்ல படங்களை படக்கதைகளாகவும், நல்ல படக்கதைகளை திரைப்படங்களாகவும் எடுக்க முடியும் என்று கூறும் நந்தினியின் புதுமையான முயற்சிக்காக, அவரை நாம் வல்லமையாளர் என்று பாராட்டி வாழ்த்துவோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தகவல் பெற்ற தளங்கள்:
    தமிழ் நெட்டிசன்களை ‘நம்பும்’ நந்தினியின் டிஜிட்டல் காமிக்ஸ் நாவல் முயற்சி, க.சே.ரமணி பிரபா தேவி
    http://tamil.thehindu.com/opinion/blogs/தமிழ்-நெட்டிசன்களை-நம்பும்-நந்தினியின்-டிஜிட்டல்-காமிக்ஸ்-நாவல்-முயற்சி/article7503293.ece

    நந்தினியின் ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ – டிஜிட்டல் தமிழ் காமிக்ஸ்!
    http://www.inneram.com/opinions/readers/3372-sivappu-kal-mookkuthi.html

    Girl with a Red Nose Ring: Filmmaker speaks about her first digital Tamil graphic novel
    http://www.dnaindia.com/website/report-girl-with-a-red-nose-ring-filmmaker-speaks-about-her-first-digital-tamil-graphic-novel-2111282

    படம் உதவி: நந்தினியின் ஃபேஸ்புக் சமூக வலைத்தளம்
    _____________________________________________________________________________
    நந்தினியைப் பற்றிய மேலதிகத் தகவலுக்கும், தொடர்புக்கும்:
    https://www.facebook.com/sivappukalmookuthi/photos_stream
    http://mbcomicstudio.com
    http://makebelieveonline.com/about.html
    https://nandhinijs.wordpress.com/
    http://nandhinijs.blogspot.com
    https://www.facebook.com/nandhinijs

    https://plus.google.com/+NandhiniJS
    http://www.youtube.com/user/nanfilmmaker
    makebelieveonline@gmail.com
    _____________________________________________________________________________

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 17, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள் 

    Dr. Tessy Thomas profile

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகச் சிறப்பிக்கப்படுபவர் “இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி“(Missile Woman of India) எனவும், “அக்னிபுத்திரி” எனவும் அன்புடன் அழைக்கப்படும் “டாக்டர் டெஸ்ஸி தாமஸ்” அவர்கள். இவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான திரு. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

    வல்லமையாளர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள், பணியிடத்தில் “இந்தியாவின் ஏவுகணை மனிதர்” (Missile Man of India) என்றழைக்கப்பட்ட மறைந்த மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களைத் தனது வழிகாட்டியாக அடையும் பேறு பெற்றவர்.

    இந்தியாவில் ஏவுகணை திட்டப்பணி ஒன்றிற்குத் தலைமை தாங்கும் முதல் பெண் அறிவியலாளர் என்ற பெருமை கொண்ட டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள் பற்பல விருதுகளும், பாராட்டுகளும், கௌரவங்களும் பெற்றவர். கல்யாணி பல்கலைக் கழகமும், இந்துஸ்தான் பல்கலைக்கழகமும் (Kalyani University & Hindustan University) இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன. சென்ற வாரம் “ஸ்ரீ பத்மாவதி மகிள விஸ்வ வித்யாலயம்” (Sri Padmavati Mahila Viswa Vidyalayam -SPMVV) இப்பல்கலைக்கழகங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டு, தனது 16 வது பட்டமளிப்பு விழாவில் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

    Dr. Tessy Thomas

    இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றிய அக்னிபுத்திரி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் (Research and Development – R&D) ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளக்க உதவும் மிக முக்கியமான அளவீடுகளில் ஒன்று எனக் குறிப்பிட்டார், மேலும்…

    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப் பெண்களை ஊக்குவிக்க வேண்டும். இளைஞர்கள் எத்துறையைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் தரமான செயல்களிலும், ஆக்கபூர்வமான பணிகளிலும் ஈடுபட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும். இந்திய மக்களில் 60 விழுக்காட்டினர் 35 வயதிற்கும் குறைவானவர்கள் என்பதால், சிறந்த பயிற்சி பெற்ற மனிதவள மேம்பாட்டைப் பெற இந்தியாவிற்குத் திறன் இருக்கிறது. பட்டம் பெற்று பணியுலகத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் தாங்கள் ஏட்டில் கற்ற கல்வியைச் செயல்படுத்த முனைவதுடன், சிறந்த நூல்களையும் படித்து ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் புரிதலுடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்.

    நாட்டு மக்களுக்குத் தரமான கல்வி வளர்ச்சியை வழங்குவதில் விணையூக்கியாகச் செயல்படும் கல்விநிறுவனங்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. தற்கால உலக நடப்புகளில் ஆசிரியர்கள் அதிகக் கவனம் செலுத்தி அறிவதுடன், அதை மாணவர்களும் அறியச் செய்து அவர்களது திறமையை உயர்த்தத் தொடர்ந்து பாடுபட்டு மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். இக்காலத்தில் பெண்கல்வி அதிகரித்திருந்தாலும் தொடர்ந்து அவர்களது பங்களிப்பு அறிவியல் துறைகளிலும், தொழில்நுட்பப் பணிகளிலும் குறைவாகவே இருந்து வருவதால், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் வண்ணம் பெண்களை ஊக்குவிக்க வேண்டும்.

    உணர்வுசார் நுண்ணறிவுப் பயிற்சி, தொழில்நுட்ப வாய்ப்புகள், மேலாண்மை, வழிநடத்துதல், நிர்வாகத் திறன், வளாகத்தில் குழந்தை பராமரிப்பு வசதிகளை அவர்களுக்கு வழங்க எடுக்கப்படும் முயற்சிகள் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். எதிர்காலத்தில் மாணவர்கள் எத்துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் சிறந்து விளங்க முயலவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

    டாக்டர் டெஸ்ஸி தாமஸ் மேம்பட்ட அமைப்புகள் ஆய்வக இயக்குநர் (Director of Advanced Systems Laboratory – ASL), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் அக்னி – 5 ஏவுகணைக்கான திட்டப்பணி இயக்குநர் (Agni-V Project Director, Defence Research & Development Organization) ஆவார். ஐம்பது வயதைக் கடந்துள்ள அக்னிபுத்திரி கேரளத்தின் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தும்பா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கும் தளத்துக்கு அருகில் வளர்ந்தவர். சீறிப்பாய்ந்த ராக்கெட்கள் கொடுத்த ஆர்வத்தின் காரணமாக ஏவுகணைத் தொழில்நுட்பம் பற்றிக் கற்க விரும்பி அத்துறையைத் தேர்ந்தெடுத்தவர். திருச்சூரில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் (B.Tech) பட்டப்படிப்பை முடித்தார். புனேயில் உள்ள “போர்த்தளவாட தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில்” (Institute of Armament Technology, Pune, இது தற்காலத்தில், உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் / the Defence Institute of Advanced Technology என அழைக்கப்படுகிறது) ஏவுகணைக் கல்வியில் தொழில்நுட்ப முதுநிலைப் பட்டம் (M.Tech) பெற்றார்.

    நான் பணி புரியும் அறிவியல் தொழிநுட்பத்துறை பாலின பேதம் (Gender Discrimination) பற்றி அறியாதது என்று பி.பி.சி. நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டவர் அக்னிபுத்திரி. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளராக 1988 ஆண்டுமுதல் பணியாற்றி வரும் அக்னிபுத்திரி அக்னி-1 ஏவுகணையின் வடிவமைப்புப் பணிகளில் பங்கேற்றவர். தொடர்ந்து அக்னி-3 மற்றும் அக்னி-4 ஏவுகணைகளின் இணை திட்டப்பணி இயக்குநராகப் பணியாற்றினார். பிறகு 2009ஆம் ஆண்டு 5,000 கிமீ வீச்சுள்ள அக்னி-5 திட்டப்பணிக்குத் திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்று, ஏப்ரல் 2012 இல் இவரது தலைமையில் அக்னி-5 வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

    Dr. Tessy Thomas 0

    உலகில் ஏவுகணை தொழில்நுட்பப் பணியாற்றும் ஒருசிலரில் டெஸ்ஸி தாமஸ்ஸும் ஒருவர். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையில் தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறிய பெண்மணிக்கு டெஸ்ஸி தாமஸ் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சுங்கால் பாராட்டப்பட்டவர் அக்னிபுத்திரி. இந்தியாவைப் பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறச் செய்த அக்னிபுத்திரிக்கு லால்பகதூர் சாஸ்திரி-தேசிய விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் போரைத் தவிர்த்து இந்தியாவை அமைதிப்பாதைக்கு வழிவகுக்கும் ஒரு திட்டம் என்பதும், “இந்திய ஏவுகணைகள் அமைதிக்கான ஆயுதங்கள்” (weapons of peace) என்பதும் இவர் கருத்து. வெற்றியை அடைந்த பிறகு ஒருவர் எதிர்கொள்ளும் சவால், கிடைத்த வெற்றியின் களிப்பால் பெருமையில் திளைத்துவிடாமல், வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது என்பது அக்னி புத்திரி வழங்கும் அறிவுரை.

    Sastri-Award
    அக்னிபுத்திரி பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்க சில:
    = India Today Woman Summit & Awards 2009
    = Shastri Award 2012
    = CNN-IBN Indian of the Year 2012
    = JFW Women Achievers Award 2013
    = Maharana Udai Singh Award 2013
    = GR8! Women Awards 2014
    = Dr. Y. Nayudamma Memorial Award – 2014

    சேவையின் மறுவுருவமான அன்னை தெரசாவின் பெயரைச் சூட்டப்பட்டவர் டெஸ்ஸி தாமஸ். இந்திய பெண் அறிவியலாளர் அமைப்பு (The Indian Woman Scientists Association), “பணிபுரியும் ஏனைய பல பெண்களைப் போல இவரும் பணியின் கடமைகளையும், குடும்பப் பொறுப்பையும் கயிற்றின்மீது நடக்கும் வித்தைக்காரர் போன்று கவனமுடன் கையாண்டவர், அன்னையாகவும் அறிவியல் ஆய்வாளராகவும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். டெஸ்ஸி தாமஸ் பெண் அறிவியலார்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்கி அவர்கள் இரு உலகங்களிலும் தடம் பதித்து தங்கள் கனவுகளை வெற்றிகரமாக அடையத் தூண்டுதலாக அமைந்துள்ளவர்” என்று பாராட்டியுள்ளது. பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறையில் ஆர்வம் கொண்டு முன்னேற முன்மாதிரியாக விளங்கும் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களின் வல்லமையைப் பாராட்டுவதில் வல்லமை இதழும் பெருமை கொள்கிறது.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    இக்கட்டுரைக்கான தகவல் பெற்ற இடங்கள்:
    Need to encourage women in R&D: ASL Director, August 11, 2015, The Hindu
    http://www.thehindu.com/news/national/andhra-pradesh/need-to-encourage-women-in-rd-asl-director/article7523888.ece

    அக்னிபுத்திரி
    https://jayabarathan.wordpress.com/2012/04/28/agni-puthri/

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 10, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் 

    MBG- 28-4-17

    வல்லமை இதழின் எழுத்தாளர்களில் ஒருவராகத் தனது இலக்கியப்படைப்புகள் மூலம் வல்லமை வாசகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்துவரும் திருமதி மீனாட்சி பாலகணேஷ் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய இலக்கியங்களையும் அதில் வரும் காதலர்களையும் அறிமுகப்படுத்தி, இலக்கிய நயம் பாராட்டுதலையும், அக்காதலர்களின் காதலின் மேன்மையையும் ஒருங்கே வழங்கிவரும் “காதலின் பொன்வீதியில்” (http://tinyurl.com/kadhalin-ponveethiyil) என்ற கட்டுரைத்தொடருக்காக அவர் பாராட்டப் படுகிறார்.

    அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றிய மீனாட்சி பாலகணேஷ் அவர்கள், பணி ஓய்விற்குப் பிறகு தனது நெடுநாளையக் கனவான தமிழ் கற்பதில் ஆர்வம் கொண்டு தமிழில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளத் துவங்கியுள்ளார். தற்பொழுது தமிழ் இலக்கியக் கட்டுரைகளைப் பல இணையதளங்களிலும் எழுதி வருகிறார். இவரது பாடுதும் காண் அம்மானை, குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல், திருநடனம் ஆடினது எப்படியோ, கோபுலுவின் ஏகலைவி, காதலின் பொன்வீதியில் ஆகிய கட்டுரைகள் வல்லமை இதழில் வெளிவந்துள்ளன. சென்ற வாரத்தின் ‘காதலின் பொன்வீதியில்’ தொடரில் வாசவதத்தையும் உதயணனும் கொண்ட காதலை விவரித்து, “உதயணகுமார காவியம்”  நூல் வழங்கும் பாடல்களின் இலக்கியநயத்தோடு இணைத்து வழங்கியவிதம் சிறப்பானது.

    காதலின் பொன்வீதியில் என்ற தொடரை கீழ்வரும் அறிமுகத்துடன் தொடங்கினார் மீனாட்சி பாலகணேஷ் …

    காதல், காதல், காதல் இன்றேல்
    சாதல் சாதல் சாதல் – ( குயில் பாட்டு)

    என்றான் பாரதி, இதனை ஏன் இவ்வாறு கூறினான் என நான் பலமுறை யோசித்ததுண்டு. காதல் எனில் அன்பு, பக்தி, விருப்பம், ஆவல், வேட்கை, காமம் எனவெல்லாம் பொருள் கொள்ளலாம். இங்கு நாம் பார்க்கப் போவது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான அன்பு அல்லது காதல் என்பதனைப் பற்றித் தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் உணர்வை இயற்கை படைத்ததற்குக் காரணம் ஒரு இனம் அழிந்து விடாமல் தொடர்ந்து வளர ஏதுவாக இருப்பதற்கும், அதற்கான முதல் படியாக இருபாலரிடையும் அன்பு செழித்து வளர்வதற்காகவும்தான் எனலாம். ஆகவேதான் காதல் போயின் எல்லாம் போயிற்று, சாதல் ஒன்றே எஞ்சி நிற்பது என்றானோ பாரதி!

    இத்தகைய காதல் உணர்வு நூதனமானது. சிறிது சிந்தித்துப் பார்த்தால் இத்தனைப் புலவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் காதலைப் பற்றியே விதம் விதமாக ஏன் எழுதிக் குவித்துள்ளனர் என ஆராயலாம்! காதல் சம்பந்தமான உணர்வுகள் மனித குலத்துக்கு மட்டுமே உரிமையானதா என அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. காதல் சம்பந்தப்பட்ட அழகிய மென்மையான உணர்வுகள் பற்றி கற்ப கோடி காலங்களாக இருந்து வரும் இனிய நயங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் இதன் நோக்கம்.

    இந்தியத் தொன்மமாகிய இராமாயணக்கதையில் வரும் காதலர்களான இராமன் சீதையின் காதலைக் குறித்துக் கூறி, கம்பராமாயணத்தில் கம்பரின் வரிகளிலும் அக்காதலின் தன்மையை விவரிக்கிறார். ‘அண்ணலும் நோக்கி அவளும் நோக்கிய’ பிறகு, இராமனின் வடிவழகை, ஆண்மையின் கம்பீரத்தை, காதலின் கருணை நோக்கினை மீண்டும் கண்டு களிக்கச் சீதையின் உள்ளம் விழைகின்றது. இயலாமையினால் கடலெனக் குமுறிக் கொந்தளிக்கின்றது.

    விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இம்
    மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார்
    எண்ணுளே இருந்த போதும் யாவரென்று தேர்கிலேன்
    கண்ணுளே இருந்த போதும் என்கொல் காண்கி லாதவே.

    “மண்ணுள் இழிந்த விண்மேகம்” என வந்த இராமனின் வடிவழகை காண ஏங்கும் சீதையின் கனிந்துருகும் காதல் உள்ளத்தை மீனாட்சி உணர்த்தும் பாணி இலக்கிய வாசகர்களை மகிழ்விக்கக்கூடியது.

    மீனாட்சி பாலகணேஷ்

    இத்தொடரில் தொடர்ந்து …

    புலவர் புகழேந்தியார் யாத்த ‘நளவெண்பா’ வரிகளின் மூலம் நளன் – தமயந்தி காதலையும்,

    கவியரசர் தாகூர் படைப்பில் ஒரு புதிய கோணத்தில் அவர் அறிமுகப்படுத்திய சித்ராங்கதா – அர்ஜுனன் காதலையும்,

    அரசிளங்குமரி ருக்மிணி கிருஷ்ணனுக்கு காதல்கடிதமாக எழுதிய ஏழு ஸ்லோகங்களின் வழி ருக்மிணி – கிருஷ்ணன் காதலையும்,

    பெரியபுராண ஆசிரியரான சேக்கிழார் பெருமான் பாடல்களின்வழி சுந்தரர் – பரவை நாச்சியார் காதலையும்,

    ரூப்மதி இயற்றிய காதல் ரசம் சொட்டும் ஒரு தோஹாவின் மொழிபெயர்ப்பு மூலம் இளம் காதலர்கள் ரூப்மதி – பாஜ்பஹதூர் காதலையும்,

    காளிதாசரின் குமாரசம்பவம் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தின் பாடல்களின் துணைகொண்டு பார்வதி – பரமசிவன்  காதலையும்,

    கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தின் வரிகளின் வழி வள்ளி – முருகன்  காதலையும்,

    உதயணகுமார காவியம் பாடல்கள் மூலம் வாசவதத்தை – உதயணன்  காதலையும்,

    காதலின் பொன்வீதியில் உலாவரும் பொழுது நாமும் படித்துப் பரவசமடைந்தோம்.

    இலக்கியவிருந்து வழங்கும் இந்த அறிவியல் பின்புலம் கொண்ட மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் ஒரு பன்முகம் கொண்ட கலைஞர்.

    சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66) ஒன்றிற்கு ஓவியர் கோபுலு வரைந்த அழகிய படம் ஒன்றை அவர் போலவே வரைந்து கோபுலுவிடம் காட்டி, “எனது அருமை ஏகலைவி மீனாட்சிக்கு ஆசிகள்” என்று கோபுலுவிடம் கையொப்பமும், பாராட்டும், ஆசீர்வாதமும் பெற்றிருக்கிறார்.

    விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பசுபதேஸ்-
    த்வயாரப்தே வக்தும் சலித சிரஸா ஸாது வசனே
    ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம்
    நிஜாம் வீணாம் வாணீம் நிசுளயதி சோளேன நிப்ருதம்
    — சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66)

    அந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை தமிழ்ப் பாடலாகவும் மொழிபெயர்த்துள்ளார் மீனாட்சி பாலகணேஷ்.

    பல்லவி
    நாதன் பெருமைதனை நாத வீணையினில்
    வேதன் தலைவியவள் கீதம் இசைத்திடவே (நாதன்)

    அனுபல்லவி
    யாதும் இனிமையென யாழின் இனிமைகெட
    ஓதும் திருவாய்மொழி சாது என்றனையே (நாதன்)

    சரணம்
    இனிதென்று சிரமசைத்து இசைதன்னை நீ ரசிக்க
    இனிதன்று வீணையென இசைவாணி பரிதவிக்க
    இனியொன்றும் தோணாமல் உறையிட்டு மூடிவைக்க
    கனிவான நகைகாட்டி கருணைவெள்ளம் நீ பெருக்க (நாதன்)

    அத்துடன் நவராத்திரி கொலு பொம்மைகளைச் செய்வதில் திறமைசாலியான அவரது கைவண்ணத்தில் உருவான பொம்மைகளின் படங்களையும் வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் மீனாட்சி பாலகணேஷ்.

    மீனாட்சி பாலகணேஷ்2

    பலகலைகளிலும் சிறந்து விளங்கும் மீனாட்சி பாலகணேஷ் அவர்களின் நெடுநாள் கனவான தமிழில் முனைவர்பட்ட ஆராய்ச்சியை அவர் வெற்றியுடன் முடிக்கவும், தொடர்ந்து இலக்கியப்பணியாற்றவும் வல்லமைக் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share