Blog

  • இலங்கையில் வன்முறையின் கோரத் தாண்டவம் – Ugly face of terror in Srilanka

    (இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பையும் இதற்குக் காரணமானவர்களையும் வல்லமை கனத்த இதயத்துடன் கண்டிக்கிறது. – அண்ணாகண்ணன், முதன்மை ஆசிரியர், வல்லமை)


    St.Sebastian's Church,Katuwapitiya,Negombo,Sri Lanka

    (St.Sebastian’s Church,Katuwapitiya,Negombo,Sri Lanka)

    சிவசேனை, மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆய நகரங்களில் நடைபெற்ற வன்முறைத் தாக்குதல்களைச் சைவ சமயத்தோர் ஏற்கார், கண்டிப்பர், புறந்தள்ளுவர்.

    வழிபாட்டிடங்களில் அன்பும் அறனும் அருளும் பெருக்கும் நாளில், பெரிய வெள்ளிக்கிழமையைத் தொடர்ந்த குருத்தோலை ஞாயிறன்று 21.04.2019 அன்று எம் அன்புக்கும் பாசத்துக்கும் மதிப்புக்கும் உரிய கிறித்தவ மக்கள் மனமுருகி வழிபாட்டில் ஈடுபட்டிருக்கையில் ஒன்றும் அறியா அப்பாவிகளை நூற்றுக் கணக்கில் காயமாக்கியும் பலரின் உயிர்களைப் பறித்தும் நிகழ்த்திய தாக்குதல்களைச் சைவ மக்கள் ஒரு பொழுதும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

    நெஞ்சார்ந்த இரங்கல்கள். துயரத்தில் பங்கு கொள்கிறோம். காயமுற்றோர் விரைந்து நலமுறச் சிவபெருமான் அருள்வாராக. வழிபடுகிறோம், வேண்டுகிறோம். இரங்குகிறோம்.

    Siva Senai, Maravanpulavu K. Sachithananthan

    Violent attacks in Colombo, Negombo and Batticaloa are not acceptable to the Saivaites of Sri Lanka. We condemn these attacks outright.

    We Saiva Tamils denounce any attack in any form in places of worship. Our Christian brothers to whom we have high respect, regard and unbounded love as fellow citizens of this land. The Easter Friday followed by resurrection Sunday 21.04.2019 are days for prayer worship and meditation. To attack on such pious and holy days to harm hundreds of innocent worshippers and to take the lives of many is condemnable. Saiva Tamil world does not accept such disastrous barbarous acts. 

    We Saivites express out heart felt condolences to the bereaved families. We pray for the early recovery of those injured. We pray Lord Shiva to shower his holiest blessings towards relief at a time of your hour of deep grief.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.2

    முனைவர் மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.2

    (அம்மானைப் பருவம்)

    உலகவியல் தத்துவக் கருத்து ஒன்றை மீனாட்சியம்மை, அம்மானையாடும் போது உண்டாகும்  அதிசயமான குறிப்புகளுக்கு ஏற்றிக் காட்டுவதும் புலவனாரின் கவிதைச் சிறப்பின் உயர்வைப் புலப்படுத்துகின்றது.

    அம்மானையாடும்போது மீனாட்சியம்மை கையில் பிடித்திருப்பது முத்துக்கள் பதித்த அல்லது பெருமுத்துக்களால் ஆன அம்மானைக் காய்களாகும். அவளுடைய தாமரை மலர் போன்ற சிவந்த கையில் பொருந்தும் போது அவை தாமும் சிவந்த நிறத்தைப் பெறுகின்றன. அன்னையின்  கருணை வெள்ளம் பெருகும் கடைக்கண் பார்வையால் கறுப்பு நிறம் பெற்றும் அவை விளங்குகின்றன. அவளுடைய நிலவு முகத்தில் தோன்றும் வெண்மையான பற்களின் நகைப்பினால் வெண்ணிறத்தையும் அடைகின்றன.

    சாத்வீகம் எனும் சத்துவம் வெண்மை நிறத்தினையும், இராட்சதம் என்னும் இராசதம் சிவப்பு நிறத்தினையும் தாமஸம் எனும் தாமதம் கறுப்பு நிறத்தினையும் குறிக்கும். சத்துவம், இராசதம், தாமதம் ஆகிய குணநலன்கள் ஒவ்வோர் உயிரின் அறிவிலும் வெவ்வேறு விகிதங்களில் கலந்திருக்கும். இக்குணங்களின் அடிப்படையிலேயே உயிர்களிடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. முக்குணங்களின் சேர்க்கையினால் உலகம் உருவானது என ஒரு கருத்தும் நிலவுகின்றது.

    சத்துவ குணமானது, அறத்தோடு பொருந்திய சிந்தனை, தன் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பது, எளிமையாக இருத்தல் முதலியனவாம்;

    இராசத குணமாவது, ஊக்கம், வீரம், தான தருமம், கல்வி, ஆசை, வேட்கை, தற்பெருமை, இறுமாப்பு இவற்றுடன் மற்றவர்களை இகழ்வது, பராக்கிரமம், இன்பப் பற்று  ஆகிய செயல்களைச் செய்ய வைக்கும்.

    தாமத குணமென்பது காமம், வெகுளி, மயக்கம், பேராசை, வரித்தம், மோகம், கவலை, அச்சம், சோம்பல் ஆகியவை பொருந்தி, பகட்டுக்காகச் செயல்கள் செய்தலையும், தாழ்வான எண்ணங்களையும் அதிகப்படுத்துகின்றது.

                                          ‘நல் தரள அம்மனையொர் சிற்குணத்தினை மூன்று

                                         நற்குணம் கதுவல் காட்ட…

    என்பன பாடல் அடிகள். இவை அம்மானையாடுதலுடன் எவ்வாறு பொருந்தும்?

    உயிர்களின் ஒப்பற்றதோர் அறிவினை மூன்று வகையாகிய இக்குணங்கள் பற்றியுள்ளன என்பதனையே ஒரே விதமான முத்து அம்மானைக் காய்கள் பல நிறங்களை அடைவது என்பது உணர்த்துகிறது எனக் குறிப்பிடுகிறார் புலவர்!  பிள்ளைத்தமிழ்ப் புலவர்கள் மேலும் பலரும் இக்கருத்தினை நயம்பட எடுத்தாண்டுள்ளனர்.

    அம்மை மீனாட்சியும் ஐயன் சிவபெருமானும் அடியார்க்கு எளியர் என்கிறார் குமரகுருபரர். அம்மை அப்பர் (உமையும் சிவனும்) ஆகிய இருவரும் ‘துவாதசாந்தம்’ என்னும் ஒப்பற்ற உயர்ந்த பெருவெளியில் பொருந்தி இருக்கின்றனர். உறங்காமல் உறங்கும் நிலையிலுள்ள உயர்ந்த தவஞானியர் ஆகிய மெய்யடியார்களே இதை உணர்ந்தவர்கள்; அவர்கள் இறைவன்-இறைவியிடம் தாம் கொண்ட பேரன்பினால் ஊன் மட்டுமின்றி எலும்பும் உருகுமாறு நெகிழ்ச்சி அடைகின்றனர்; நமக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருளை நினைத்த மாத்திரத்தில் வாயில் நீர் ஊறும் அல்லவா? அது போல, அவர்களுடைய எண்ணத்தில் உறைவதனால், உள்ளத்தில் கசிந்து பெருகுகின்ற தேன் மீனாட்சி அன்னை! அவளை,

                                                    ‘ஒருபெரு வெளிக்கே விழித்துறங் கும்தொண்டர்

                                                    உழுவலன்பு என்புருகநெக்கு

                                          அள்ளூற உள்ளே கசிந்தூறு பைந்தேறல்

                                                    அம்மானை ஆடியருளே,’

    எனப் பெருமிதம் பொங்கப் பாடுகிறார் புலவர் பெருமான். இத்தகைய பல வேதாந்த, சித்தாந்தத் தத்துவங்களை ஆங்காங்கே பாடல்களில் பதித்து வைத்துள்ளார்.

                                                    ஆகம் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்

                                                    அம்மானை ஆடியருளே!’

    என்ற சொற்களால் உமையொரு பாகனின் அர்த்தநாரீசுவர வடிவத்தையும் அழகுறப் போற்றுகிறார்.

    பராசக்தி எனும் அன்னை மூன்றுவித ஆன்மாக்களை இவ்வுலகபந்தம் நீங்குமாறு எடுத்தெடுத்து மேலே விடுவிக்கிறாள்; ஆயினும் அவை தத்தம் உலகப் பாசக் கட்டினால் திரும்பத் திரும்பக் கீழே உலகிற்கே வருகின்றன. அவளும் சளைக்காமல் அவற்றைப் பின்னும் எடுத்து மேலே விடுக்கிறாள். அன்னை அம்மானை ஆடுவதும் இது போன்றே உள்ளதாம். அவள் அவற்றை மேலே விடுவிக்க, அவை உலகத்தின் புவியீர்ப்பு விசையால் இழுபட்டுக் கீழே வருகின்றன. அவளும் சலியாது அவற்றைத் திரும்ப மேலே விடுப்பது மூவகை ஆன்மாக்களுக்கு அருள்வது போன்றதே என்கிறார் திருப்புக்கொளியூர் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழின் ஆசிரியர்.

                                          ‘புவனமெங்குந் தங்கி நிலவுமூ வுயிர்களைப்

                                          போந்தபந் தத்தினின்றுன்

                                   பொற்கமல நற்கரத் தான்மீ துயர்த்திடும்

                                          போதுமவை புக்கவுலகின்

                                   கவனவெம் மாயையிற் கட்டுண்டு வீழ்ந்திடும்

                                          காலமெல் லாமவற்றைக்

                                   கையினாற் றாங்கிநீ மீளவும் உயர்த்தும்

                                                    கருணையின் செய்கைபோலாம்

                                   நவமணி குயிற்றியொளிர் அம்மனை எடுத்துநீ

                                          நன்குபெற மேல்விடுதலும்,’

    என்பன பாடல் அடிகளாம்.

    (மூவகை ஆன்மாக்கள்:

    பிரளயாகலர்- இவர்கள் மாயயை நீத்தவர்கள்; பிரளய காலத்தில் வீடுபேற்றையடைவார்கள்.

    விஞ்ஞானகலர்- இவர்கள் ஆணவ மலம் மட்டுமே உள்ள ஆன்மாக்கள்.

    சகலர்- மற்ற அனைவரும் இதில் அடங்குவர்; மும்மலமும் உடைய உயிர்கள் இவை.)

    சோணாசல பாரதியார் இயற்றியுள்ள திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ், நயம் வாய்ந்ததும் அணியழகு ததும்புவதுமான பாடல்கள் பலவற்றைக் கொண்டிலங்குவது. காணப் போகும் பாடலில், மான் எனும் சொல், பின்வரு நிலையணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிள்ளைத்தமிழ் நூல் முழுவதும் இத்தகைய அருமையான பாடல்களைக் கண்டு களிக்கலாம்.

    ‘பிட்சாடனராக வந்து நமது மனைவியரைத் தம்மீது ஆசைகொண்டு அலையச் செய்தும், திருமாலை அழகான மோகினியாக்கி நம்முன் அனுப்பி நம்மையும் காமத்தில் ஆழ்த்திவைத்த இவனை (இச்சிவபெருமானை) நாம் அழித்திட வேண்டும்’ எனத் தாருகாவனத்து முனிவர்கள் சினம்கொண்டு அபிசார வேள்வி செய்து புலி முதலியவற்றை வரவழைத்துப் பெருமான் மீது ஏவினர் என்பது வரலாறு. அந்தப் பெருமானை- அவன் எப்படிப்பட்டவன்?- கொடிய மானை, யானையை உரித்துக் கையில் பிடித்துக் கொண்டவன்- அவனுடைய பிறையும் கொன்றையும் சூடிய சடையில் நீர்வடிவாகிய பெண் (கங்கை) அமர்ந்துள்ளாள்; அவள், “உங்கள் கண்மானை (மனையாளான உமையை) நீங்கள் மகிழச் செய்யுங்கள்; என்னை ஒருவராலும் அசைக்க இயலாது,” என்று செருக்குடன் இருக்கிறாள். இதனை அந்த உண்ணாமுலையம்மையாகிய பார்வதி தன் தோழியரிடம் கூறி, “அந்த கங்கையின் செருக்கை நீக்கி அவளைத் தானே அசைந்து ஒழுகும்படிச் செய்கிறேன் பாருங்கள்,” என்று மலர்மான் (மலர்மகள்), கலைமான் (மகள்) ஆகிய தோழிகளிடம் கண்சாடையாகக் கூறுகிறாளாம். அதாவது உமையான இவள் பொற்காய்களை வீசி அம்மானையாடினால் சிவபிரான் உவந்து தலையசைப்பாராம். அப்போது அவர் சடையிலுள்ள கங்கை தானே அசைந்து ஒழுகுவாளல்லவா?

                                          நம்மானை அனையாரை ஆசைநீ ரோடையில்

                                          நலித்துமான் மானைஏவி

                                   நம்மையும் அழித்தவனை நாம்அழித் திடுதும்என

                                          நல்தரு வனத்தர்ஓட்டும்

                                   …………………………………………………………

                                   கலைமானை மலர்மானை விழிமானி னால்சொல்லிக்

                                          கனகஅம் மனைவீசிஅவ்

                                   அம்மானை முடிஅசைப் பிக்கும் வித மெனஎம்அன்னை

                                          அம்மானை ஆடியருளே

                                   ………………………………………

    இசையுடன் பாடினால் இன்னுமே இனிக்கும் சந்தநயம் மிகுந்த பாடலிதுவாகும்.

    பிள்ளைத்தமிழின் அம்மானைப் பாடல்களின்படி பெண்மகவு விளையாடும் அம்மானைக் காய்கள் ஏதேனும் ஒரு சமயக் கருத்தினையோ, தத்துவத்தையோ, தொன்மத்தையோ, புலவரின் கற்பனையையோ தமிழின் அழகும் சேர விளக்கும் நயத்தைக் கண்டோம். அன்னை தெய்வம் அடியாருக்கு அருள்செய்த திறத்தையும் சில அம்மானைப் பாடல்கள் விளக்குகின்றன.

    அன்னையின் திருவுருவின் அழகிலாழ்ந்து, நாள்பொழுது அனைத்தையும் மறந்துவிட்ட அடியாராகிய அபிராமி பட்டர் அரசனிடம், “நாளை பௌர்ணமி” என்று கூறிவிடுகிறார். ஆனால் அதுவோ அமாவாசை தினம். தன் அடியாரின் சொல்லைக் காப்பாற்றித்தர வேண்டி அபிராமியம்மை தனது காதணிகளில் ஒன்றினை எடுத்து ஆகாயத்தில் வீசி அதனை நிலவுபோல் ஒளிரச் செய்கிறாள். இந்த அதியற்புதச் செயலை அம்மை அம்மானை ஆடியதாகக் கூறி மகிழ்கிறார் புலவர் நடேச கவுண்டர். ‘அபிராமிபட்டருக்கு அருளியது போன்று எம்மடியார் அனைவருக்கும் என்றும் எப்போதும் அருளுவோம்’ எனவும் அன்னை கூறுவதாகப் பாடியுள்ளமை உள்ளத்தை உருக்குவது.

                                    ‘விண்டதண் டாமரையின் மதுவுண்ட வண்டென

                                          விளங்குநின் பாத மலரின்

                                       விம்முபர மானந்த மதுநுகர்ந் தமுதகவி

                                          விள்ளுமபி ராமபட்டன்

                                   தண்டலை உறாமலம் மாசைநாள் விண்மீது

                                          தண்மதி உதிக்கு மாறு

                                       தழைசெவிக் குழைவீசு கருணைநாயகிநுன்

                                          சரணமடை புலவருய்யக்

                                   கொண்டுமதி வீசுவேம் எம்மிட மதிக்கென்ன

                                          குறைவென்று தேற்றல்போல….’

                                          (சீர்காழி திருநிலை நாயகி பிள்ளைத்தமிழ்- அம்மானைப் பருவம்)

    திரு உத்தரகோச மங்கை பிள்ளைத் தமிழின் அம்மானைப் பாடலொன்று இன்னும் சில அரிய கருத்துகளை நயம்பட உரைக்கின்றது. நயமான கருத்துகள் சிந்தனைக்கு விருந்தாகின்றன.

    ‘அன்னையே! மும்மாரியாய்ப் பொழியும் மழைபோன்று தேவர் மலர்மாரி, பொன்மாரி, சவ்வாது புழுகு இவற்றாலான நன்மாரி மூன்றனையும் சொரிய, புலவர் பெருமக்கள் சொல்மாரியான (சல்லாபம்) பாடல்களைச் சொரிந்து உன்னை வணங்குகின்றனர். நீ அணிந்துள்ள சிவந்த மலர்மாலைகளும் பொன்மாலைகளும்  உடுத்தியுள்ள சரிகைப்பட்டும் புரண்டாடுகின்றது அம்மையே! செவ்வானும் சிவந்த பவளமும் இணையாகாது எனும்படி உன் திருச்செவ்வாய் மலர்ந்து பாடல் பிறக்கின்றது. அனைத்து மாதரும் துதிசெய்து வணங்கும் பொன்மான் எனும் திருமகளும், கலைகளை எடுத்தியம்பும் மானாகிய சரசுவதியும் வந்து உன்னுடன் அம்மானை ஆடுகின்றனர். எம்மானாகிய சிவபிரானும், அவன் கையிலேந்திய அந்தவொரு மானும் உடன் நின்றாடுகின்றனர். இந்த மாநிலம் போற்றும் குகவேளாகிய முருகன் ‘அம்மா’ என அழைக்கும் நீ உனது இருகையாலும் எடுத்து அம்மானையாடுக,’ என வேண்டுவதாக அமைந்ததொரு பாடல்.

                                      தம்மாலி யன்றபடி மும்மாரி யென்றுமலர்

                                          தன்மாரி பொன்மாரியும்

                                       சவ்வா துடன்புழுகு நன்மாரி யும்புலவர்

                                          சல்லாப மென்றுசொரிய

                                   ………………………………………………..

                                   எம்மாத ரும்துதிசெய் பொன்மானு டன்கலைசொல்

                                          இம்மானும் வந்தாடவே

                                       எம்மானும் நின்றொருகை அம்மானும் நின்றாட

                                          இம்மாநி லம்சொல்குகவேள்

                                   அம்மாஎன அம்மாநீ சும்மா எடுத்திருகை

                                          அம்மானை ஆடியருளே

                                       ……………………………………………

    இதில் மாரி, மான், அம்மா ஆகிய சொற்களைப் பலமுறை வெவ்வேறு பொருட்களில் சிறப்புறக் கையாண்டு பாடலை நயமுற அமைத்துள்ளார் புலவர். சிறந்த இலக்கிய விருந்து படைக்கும் பாடல்.

    திருப்பெருந்துறை சிவயோக நாயகி பிள்ளைத் தமிழின் அம்மானைப் பருவப் பாடல் ஒன்றும் அன்னை தெய்வத்தின் எங்கும் நிறைந்த இயல்பை அழகுற விளக்குகிறது.

    ‘அன்னை பராசக்தியாகிய சிவயோக நாயகியே, ஆயிரம் ஊர், நாமம், வடிவுகள், ஆயிர விதமான ஆடல் புரிபவர், ஆயிரம் தோள்கள், ஈராயிரம் காதுகள், ஓராயிர முகங்களும் நாவுகளும் கொண்டவர், ஆயிரம் நீள்முடி, ஆயிரம் தாள், மாலயன் ஆயிர நாட்களாகத் தேடியும் அறியவொண்ணாதவர் ஆகிய விடையேறும் பெருமானாகிய சிவனாரின் இரு கண்களும் குளிர நீ அம்மானை ஆடுக! அவன் வடிவாகிய சிவசத்தியே! ஆளுடைய நாயகியே, அம்மானையாடுக!’ என வேண்டுகிறார்.

                                  ஆயிரமூ ருடையார் ஆயிர நாமமுள்ளார் ஆயிர மேனியனார்

                                              ஆயிர மாடலினார்

                                ஆயிர மாகியதோள் ஆயிர மாயிருகா தாயிர மானனமோ(டு)

                                                                                                                                                 (ஆனனம் – முகம்).

                                             ஆயிர நாவுடையார்

                               ஆயிர நீள்முடிதாள் ஆயிர மாலயனார் ஆயிர நாளளியர்

                                           ஆவிடையா ரிருகண்

                              ஆயிர முங்குளிர் ஆடுக வம்மானை

                                          ஆளுடைய நாயகியே ஆடுக வம்மானை.

    இப்பாடலுக்குப் பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு:

    இப்பாடலில் ஆயிரம் என்ற எண்ணுப் பெயர் வருமிடங்களில் ‘எண்ணற்ற’ என்று பொருள் கொண்டு நோக்கினால் பொருள் எளிதாகும். புருஷ சூக்தத்தின் தொடக்கமாகிய “ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்” எனும் வேத மந்திரத்தில் உள்ள ஆயிரத்தை அம்மைக்கு ஏற்றி ஆயிரம் ஊருடையார், பேருடையார், மேனியுடையார் என்று பாடியுள்ளார்.  இறைவனுக்கு இருவகைச் சத்தி கூறப்படும். ஒன்று சிவசத்தி. இது சிவனை விட்டுப் பிரியாத சத்தி. தாதான்மிய சத்தி எனப்படுமிது சித்து, சைதன்யம் என அறியப்படும். மற்றொன்று வேண்டும்போது பயன்படுத்திக்கொள்ளும் சத்தி. இது பரிக்கிரக சத்தி எனப்படும். இதுவே மாயை. பானைக்கு முதற்காரணம் அதன் அடிப்படை (material cause) மண். அதுபோல பிரபஞ்சத்துக்கு முதற்காரணம் மாயை. இறைவன் தன் சிவசத்தியினால் பிரபஞ்சத்தைப் படைத்து, அதில் சிவசத்தியினால் கலந்து நின்று சித்துப் பொருள்களுக்கு அறிவையும் சடப் பொருள்களுக்கு இயக்கத்தையும் தருகிறான். இவையனைத்தும் அம்மையின் செயல்களே. அதனால் அவளுக்கு மேனி ஆயிரம் என்றார். உருவுடைப் பொருள்களெல்லாம் சத்தியே; அம்மையே.   கூத்தன் பராசத்தியிடமாக  சுத்த மாயையாகிய ஞானாகாசத்தில் ஆடுகிறான். அம்மை வடிவாக அவன் செய்யும் ஐந்தொழில்  கூத்து, அவளுடைய கூத்தாகவே கூறப்படும். அன்னை ஆட்டத்திற்கு இந்தப் பிரபஞ்சக் கூத்து, உயிர்க்கூத்து மிகப் பொருத்தமாக உள்ளது.

    அனைத்துமே அழகான பாடல்கள். அன்னை தெய்வம் மயக்குறு மழலையாக இருப்பினும், அவளுடைய தெய்வத் தன்மையைப் பெருமையுற விளக்கும் இலக்கியச் சித்திரங்கள் இவை எனலாம்.

                                                    _______________________

    பார்வை நூல்கள்: 

    1. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    2. திருப்புக்கொளியூர் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ்- சி. சுப்பிரமணிய முதலியார்.
    3. திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்
    4. சீர்காழி திருநிலை நாயகி பிள்ளைத்தமிழ்- கவியரசு கு. நடேச கவுண்டர்
    5. திரு உத்தரகோச மங்கை பிள்ளைத்தமிழ்
    6. சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ்- தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு.

    Share
  • இதோ, நம் வேட்பாளர்!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண் , ஆஸ்திரேலியா

    தேர்தல்தேர்தல் தேர்தலென்று
    தெருவெல்லாம் திரிகிறார்
    ஆளைஆளை அணைத்துபடி
    அன்புமுத்தம் பொழிகிறார்
    நாளைவரும் நாளையெண்ணி
    நல்லகனவு காண்கிறார்
    நல்லதெதுவும் செய்துவிட
    நாளுமவர் நினைத்திடார்  !

    மாலை மரியாதையெல்லாம்
    வாங்கிவிடத் துடிக்கிறார்
    மக்கள்வாக்கை பெற்றுவிட
    மனதில்திட்டம்  தீட்டுறார்
    வேலைபெற்றுத் தருவதாக
    போலிவாக்கை விதைக்கிறார்
    வாழவெண்ணும் மக்கள்பற்றி
    மனதிலெண்ண மறுக்கிறார்  !

    ஆட்சிக்கதிரை ஏறிவிட
    அவர்மனது துடிக்குது
    அல்லல்படும் மனதுபற்றி
    அவர்நினைக்க மறுக்கிறார்
    அதிகசொத்து பதவியாசை
    அவரைசூழ்ந்து நிற்குது
    அவரின்காசை அனுபவித்தார்
    அவர்க்குத்துதி பாடுறார் !

    அறத்தைப்பற்றி நினைத்திடார்
    அக்கறையை விரும்பிடார்
    இருக்கும்வரை அரசியலால்
    எடுத்துச்சுருட்ட நினைக்கிறார்
    வாக்களிக்கும் மக்கள்தம்மை
    போக்குக்காட்டி ஏய்க்கிறார்
    வாக்குக்கொண்டு போகுமாறு
    வாக்களிப்போம் வாருங்கள் !

    படத்துக்கு நன்றி: http://www.mowval.in
    Share
  • இரமேஷ் அர்ஜூன் கவிதைகள்

    1

    என் வார்த்தைகளில் இருக்கும்
    வன்மங்களுக்கு
    ஆயுள் தண்டனை கொடுக்கிறேன்.
    ஆனால்
    அவை
    சுதந்திர தினம்
    தியாகிகள் தினம்
    அந்த தினம்
    இந்த தினம் என்று
    சிறப்பு விடுதலைப் பிரிவில்
    விடுதலை ஆகும்
    கைதிகளைப் போல்
    மீண்டு வந்துவிடுகின்றன
    திருந்திவிட்டேன் என்னும்
    போர்வையில்…

    2

    சாயங்கள் அற்ற
    மாய வாழ்வொன்றை நோக்கி
    நகர முற்படுகிறது
    ஆன்மா,

    சாயம் வெளுத்துப் போகாமல்
    காத்துக் கொள்ள
    போராடுகின்றது
    மனம்,

    இவற்றில்
    வெற்றி தோல்வி
    யாருக்கு?

    யாருக்காயினும்
    பெறுவது என்னவோ
    நாம் தான்.

    3

    வறண்ட பாலையின் நீட்சி
    நீளும் கானல் நீர்க்காடு
    கண்கள் காணாத ஒளி
    மெய் தீண்டாத தனிமை
    நிலவின் தகிப்பு
    இவற்றைக் கடக்க முயன்ற
    இறக்கைகள் அற்ற கதிர் ஒன்று
    என் இரவுகளைத் தீண்டாத
    பனித்துளிக்குள்
    மெல்ல தன்னைக் கரைத்துக்கொள்ள
    காத்துக் கிடக்கிறது

    4

    உச்சிப் பொழுதின்
    உக்கிரத்தை
    எளிதில் கடந்துபோன மனம்
    மனவெளியில் தேகம் குடித்து
    சிலிர்ப்பைக் கடக்க முடியா
    உக்கிரம்
    நெருப்பைக் கடந்து
    உறைபனியில்
    உயிர் வேகும் சுகம் தேடி
    தோற்றுப் போகிறது சவம்.

    5

    பனி மழையின் திரை கடந்து
    நிலவின்
    ஒளி கொள்ளும் இரவு

    இருண்மையின் வெறுமை கண்டு
    காரிருள் கிழித்து
    ஒலி கொண்டது கூகை

    நிசப்த அலைவரிசையில் நீந்தி
    இரவைக் கடக்கும்
    சில்வண்டினங்கள்

    இரவின் இருண்மை
    பேரழகு என்பதாய்க்
    காட்டிக் கொண்டிருக்கின்றது
    கனவுகளைக் கடன் கொடுக்கும்
    ஒளியற்ற கலைமண்டபம்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 32

    நாங்குநேரி  வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 32

    32. இன்னா செய்யாமை

    குறள் 311:

    சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்

    பெரிய சொத்து கெடைக்கும்னாலும் மத்தவங்களுக்கு கெடுதல் செய்ய நெனைய மாட்டாங்க சுத்த மனசுக்காரங்க.

    குறள் 312:

    கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்

    கோவப்பட்டு தீம செஞ்சவங்களுக்கும் பதிலுக்குக் கெடுதல் செய்யாம பொறுத்துக்கிடதுதான் குத்தமில்லாத மனசுக்காரங்களோட கொள்க.

    குறள் 313:

    செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
    உய்யா விழுமந் தரும்

    நாம சும்மா இருக்கையில வம்புக்கு இழுத்து தொந்தரவு செய்யுதவனுக்கு நாம கெடுதல் செஞ்சோம்னா , செஞ்ச பொறவு அது தப்ப முடியாத அளவு துன்பத்த குடுக்கும்.

    குறள் 314:

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்

    நமக்கு கெடுதல் செஞ்சவங்கள தண்டிக்கணும்னு நெனச்சா பதிலுக்கு அவங்க கூசுத அளவு நல்லத செய்யணும். பொறவு அவுங்க செஞ்ச கெடுதலயும் நாம செஞ்ச நல்லதயும் மறந்து போடணும்.

    குறள் 315:

    அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போற் போற்றாக் கடை

    மத்த உசிரு படுத துன்பத்த தன் துன்பம் போல நெனயாதவனுக்கு புத்தி இருந்து என்ன பிரயோசனம்?

    குறள் 316:

    இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
    வேண்டும் பிறன்கட் செயல்

    ஒருத்தன் இது கெடுதல செய்யும் னு வாழ்க்கைல அனுபவிச்சு அறிஞ்சத  மத்தவனுக்கு செய்யாம இருக்கணும்.

    குறள் 317:

    எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை

    எவ்வளவு சிறிசுன்னாலும்,  யாருக்குன்னாலும்,  எப்பம்னாலும் மனசார கெடுதல் செய்யாம இருக்குதது நல்லது.

    குறள் 318:

    தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
    மன்னுயிர்க் கின்னா செயல்

    இது தான் உசிருக்குத் துன்பத்த கொடுக்குததுனு புரிஞ்சுக்கிட்ட பொறவு அத மத்த உசிருக்கு செய்ய நெனக்குதது என்ன காரணத்தாலோ?

    குறள் 319:

    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
    பிற்பகல் தாமே வரும்

    காலையில ஒருத்தருக்கு கெடுதல் செஞ்சாம்னா, அவனுக்கு கருக்கல் ல கேடு தானா வந்து சேந்துக்கிடும்.

    குறள் 320:

    நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
    நோயின்மை வேண்டு பவர்

    செய்யுத எல்லா கெடுதலும் அத செஞ்சவன தான் வந்து சேரும். அதனால துன்பம் இல்லாம வாழ நெனக்கவன் மத்தவங்களுக்கு கெடுதல் செய்யக் கூடாது.

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • (Peer reviewed) கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு

    (Peer reviewed) கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு

    நடராஜன் ஸ்ரீதர்                 &         பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம்

    முதுஅறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வுத் துறை
    ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி
    தேவகோட்டை, தமிழ்நாடு

    natarajangravity@gmail.com      |          rathinam.chandramohan@gmail.com

    ========================================================================================

    கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு

    முன்னுரை

    இங்கு ஒரு கற்பனையான சூழ்நிலையை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளலாம். ராம் மற்றும் அவனுடைய நண்பர் முகில் இருவரும் தனித் தனி விண்வெளிக் கப்பல்களில் ஏறித் தொலைதூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்திற்குச் செல்வதற்காகப் பயணிக்கின்றனர். அவ்வாறு செல்லும்போது ராம், அவன் நண்பன் முகிலுக்குச் சிறிது கண்ணாமூச்சி விளையாட்டு காட்ட நினைக்கிறார். அதாவது அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது, சிறிது நேரம் முகிலை விட்டு தள்ளி மாயமாக மறைந்து நிற்க திட்டமிடுகிறார் ராம். இதற்காகத் தேர்ந்தெடுத்தது ஒரு கருந்துளையை.

    ராமின் மனத்தில் உதித்த திட்டம் என்னவென்றால், கருந்துளையானது அதை நோக்கி வரும் அனைத்துப் பொருட்களையும் உள்ளிழுத்துக் கொள்வது போல், அதிலிருந்து எந்த ஒளியையும் வெளியிடாதது போல், தாமும் கருந்துளையின் பின்னால் ஒளிந்து கொண்டால் தன்னில் இருந்து வரும் ஒளியைக் கருந்துளையானது வெளிவிடாது என்பதை ஒரு கணக்கீடாகக் கொண்டு கருந்துளைக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறான். ஆயினும் முகில், ராமின் இருப்பிடத்தை வெகு தொலைவிலிருந்து மிகச் சரியாகக் கணித்து அவனை அடைந்துவிடுகிறான். இதற்கு என்ன காரணம்? எவ்வாறு இது சாத்தியம்? என்பதை இக்கட்டுரை வாயிலாகக் காணலாம். மேலும்

    SageMath என்ற கணினி மென்பொருள் மூலம் வரையப்பட்ட படத்தினையும் மற்றும் சமீபத்தில் படம் பிடிக்கப்பட்ட கருந்துளையின் படத்தினையும்  இக்கட்டுரையின் விளக்கப் பகுதிகளில் காணலாம்.

    கருந்துளைகள்

    கருந்துளைகள் என்பவை சார்பியல் தத்துவத்தின் சமன்பாடுகளின் ஆய்வுக் கூடம் என்றே சொல்லலாம். கருந்துளையானது மிக அதிகமான ஈர்ப்பு வலிமையுடன் இருப்பதாலும், பிரபஞ்சத்தில் மற்றெந்தப் பொருட்களை விடவும் மிக அதிகமாகக் காலவெளியை வளைப்பதாலும், கருந்துளையானது ஆய்வாளர்களுக்கு எப்போதும் புதிராகவும் மற்றும் பல புதிய ஆய்வு முடிவுகளுக்கு வித்தாகவும் அமைகிறது. நியூட்டன் அவரது ஆய்வு முடிவுகளின்படி ஈர்ப்பு விசை என்பது, இரு பொருள்களுக்கு இடையே உள்ள விசை என்று தெரிவித்திருந்தார். பின்னாட்களில் இத்தத்துவத்தை ஐன்ஸ்டைன் தனது மாறுபட்ட ஈர்ப்பு விதிகளால் மாறுதல் செய்தார்.   ஒரு பொருளின் ஈர்ப்பு என்பது, அப்பொருள் அதைச் சுற்றியுள்ள காலவெளியை எவ்வளவு தூரம் வளைக்கும் என்பதைப் பொறுத்து முடிவு செய்யப்படுகிறது. அதிக நிறையுள்ள பொருள் அதைச் சுற்றிய காலவெளியை மிக அதிகமாகவும்,  குறைவான நிறையுள்ள பொருள் அதைச் சுற்றியுள்ள காலவெளியைக் குறைவாகவும் வளைக்கிறது. பொதுவாகக் காலவெளியின் வளைவே ஈர்ப்பின் தத்துவம் என்று புரிந்துகொள்ள முடியும்.

    கருந்துளைகளும் சுவார்ட்ஸ்சைல்டு ஆரமும்

    கருந்துளைகள் பொதுவாக மிகவும் அதிகமான ஈர்ப்பின் வலிமையைக் கொண்டதாக இருக்கும். எரிந்து முடிந்த ஒரு நட்சத்திரத்தின் ஆரமானது சுவார்ட்ஸ்சைல்டு ஆரம் அளவிற்குச் சுருங்கும் போது, அந்நட்சத்திரமானது கருந்துளையாக மாறிவிடுகிறது[1]. சுவார்ட்ஸ்சைல்டு ஆரம் என்பது அந்த நட்சத்திரத்தில் நிறைக்கு நேர்த்தகவில் இருக்கும். இதைக் கீழ்வரும் சமன்பாட்டின் மூலம் பெறலாம்.

            R= 2MG/c²

    சமன்பாட்டில் கண்ட ஆரத்தின் அளவு, வெவ்வேறு நிறை கொண்ட பொருட்களுக்கு வெவ்வேறு அளவில் மாறுபடும். உதாரணமாக [5],

    1. சூரியன்  – 3 கிலோமீட்டர்
    2. பூமி – 8.7 மில்லி மீட்டர்
    3. சந்திரன் – 0.11 மில்லி மீட்டர்
    4. வியாழன் – 2.2  மீட்டர்
    5. நியூட்ரான் நட்சத்திரம் – 4.2 கிலோமீட்டர்

    இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளவை, வெவ்வேறு வானியல் பொருட்களுக்கான சுவார்ட்ஸ்சைல்டு ஆரம் ஆகும். அதாவது இந்த ஆரத்தின் அளவிற்கு அப்பொருட்கள் சுருங்கும் போது அவை கருந்துளைகளாக மாறிவிடும். சுவார்ட்ஸ்சைல்டு ஆரத்திற்குக் கீழ் உருவாகும் கருந்துளை மிக அதிகமான ஈர்ப்பின் வலிமையுடனும், அதில் விழும் எந்த ஒரு பொருளையும் அதிலிருந்து தப்ப விடாத அளவுக்கு ஈர்ப்பின் வலிமையுடன் காணப்படும். மிக வேகமாகச் செல்லும் ஒளி கூட இக்கருந்துளையின் ஈர்ப்பு எல்லைக்குள் சென்று விட்ட பிறகு மறுபடி வெளியே தப்பிச் செல்ல முடியாது.

    ஈர்ப்புகாலவெளியின் வளைவு

    கருந்துளைகள் அதிகமான நிறையினைக் கொண்டிருப்பதனால் இவை காலவெளியை மிக அதிகமாக வளைக்கின்றன. இதைச் சுற்றி வரும் எப்பொருளும் அதிக முடுக்கத்துடன் இருந்தால் மட்டுமே இதன் ஈர்ப்பு விசைக்குள் விழுந்துவிடாமல் தப்பியோட முடியும். நமக்குத் தெரிந்த மிக அதிகமான வேகமுள்ள இயக்கமான ஒளியானது  கருந்துளையைச் சுற்றி வளைந்து செல்கிறது. இவ்வாறு ஒளியானது கருந்துளையைச் சுற்றி வளைந்து செல்வது ஈர்ப்பு ஆடி விளைவு (Gravitational Lensing Effect) என வரையறுக்கப்படுகிறது [2].

    மேலும் ஒளியானது கருந்துளையைச் சுற்றி வரும்போது ஒரு வளையம் போன்ற அமைப்பினை அங்கு உருவாக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்பு ஐன்ஸ்டைன் வளையம் எனவும் அழைக்கப்படுகிறது. சுவார்ட்ஸ்சைல்டு ஆரத்திலிருந்து மும்மடங்கு தொலைவு வரையான தொலைவை (3 R_s) மிகக் குறைந்த தொலைவாகக் கொண்டு, கருந்துளையின் அருகில் ஒரு பொருளானது அதன்  ஈர்ப்பினால் பிடிக்கப்படாமல் தப்பிச் செல்ல முடியும். இத்தொலைவுக்குக் குறைவாகச் செல்லும் பொருளானது கருந்துளையின் ஈர்ப்பு விசையினால் பாதிக்கப்பட்டுக் கருந்துளைக்குள் செல்லத் தொடங்கி விடும். ஒளிக்கு  இந்த மிகக் குறைந்த தொலைவானது சுவார்ட்ஸ்சைல்டு ஆரத்தில் ஒன்றரை மடங்குத் (1.5 R_s) தொலைவாக அமையும். ஒன்றுக்கொன்று இணையாகச் செல்லும் ஒளிக்கற்றைகள்  2.6 மடங்கு சுவார்ட்ஸ்சைல்டு ஆரத் தொலைவை (2.6 R_s) அடையும்போது அவை ஐன்ஸ்டீன் வளையங்களை உருவாக்குகின்றன [4].

    படம் : 1 SageMath  என்ற கணினி மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட, கருந்துளையைச் சுற்றி காலை வெளியானது அமைந்திருக்கும் படம்

    இப்படத்தில் கருந்துளையானது ஒளியினை வளைப்பதைக் காட்டுகிறது. அதாவது கருந்துளையை நோக்கி வரும் போட்டான்களானவை கருந்துளையைச்  சுற்றி ஒரு வளைவான பாதையில் பயணிக்கிறது. இவ்வாறாக ஒளி வளைந்து செல்வது கருந்துளையைச் சுற்றி ஒரு வளையம் போன்ற அமைப்பாகக் காணப்படுகிறது. இப்படமானது SageMath[3] என்ற கணினி மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்டது. இப்படம் உருவாக்குவதற்கு, பின்னணியில் மென்பொருளில் கணக்கீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    சமீபத்தில் வெளியான கருந்துளையின் புகைப்படம்

    சமீபத்தில் வெளியான கருந்துளையில் முதல் புகைப்படமும் இதே போன்றவொரு அமைப்பை வெளிப்படுத்துகிறது. விளம்பி ஆண்டு பங்குனி மாதம் 27ஆம் தேதி (10-4-2019) இந்த அரிய சாதனையானது சாத்தியமானது. இப்படமானது கருந்துளையின் நிழலை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு உருவாக்கியுள்ள  நிழலானது கிட்டத்தட்ட நமது சூரியக் குடும்பத்தை விட மிகப் பெரியதாக இருப்பதாகவும் இப்படம் காட்டுகிறது. M87 நட்சத்திரத் தொகுப்பில் இக்கருந்துளையானது படம் பிடிக்கப்பட்டுள்ளது. கருந்துளை Event Horizon Telescope என்ற தொலைநோக்கி அமைப்பின் கூட்டு முயற்சியால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 8 பெரிய தொலைநோக்கிகளின் உதவியுடன் இத்தரவுகள் பெறப்பட்டு ஆராய்ச்சியின் முடிவு உருவாக்கப்பட்டுள்ளது.

    உண்மையில் இந்த படமானது கருந்துளையின் நிகழ்வு எல்லையினை வெளிப்படுத்துகிறது. M87 நட்சத்திரக் கூட்டமானது மிகப் பெரியதாக இருப்பதால் அதைத் தொலைநோக்கியில் படம்பிடிப்பது எளிதாக இருக்கும். ஆனால் அதன் மையத்தில் அமைந்துள்ள கருந்துளையானது ஆய்வு செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். காரணம் M87 நட்சத்திரக் கூட்டத்துடன் ஒப்பிடுகையில் கருந்துளையின் பருமனானது மிகவும் சிறியதாக உள்ளது. பொதுவாகக் கருந்துளைக்கு வெகு தொலைவில் இருந்து அதன் நிகழ் வெல்லையை அடையும் ஒரு  பொருள், அக்கருந்துளையை விட்டுத் தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு அதன் ஈர்ப்பு விசைக்குள் சிக்கிக் கொள்ளும்.

    படம் 2: M87 என்ற நட்சத்திரத் தொகுதியில் நடுவே உள்ள கருந்துளை. இது கருந்துளையின் அமைப்பைப் பற்றிக் கிடைத்துள்ள முதல் புகைப்படம் ஆகும்.

    இக்கருந்துளையானது பூமியிலிருந்து 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது கிட்டத்தட்ட 100 மில்லியன் கிலோமீட்டர்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பரந்து விரிந்துள்ளது. நமது சூரியக் குடும்பத்தின் மொத்த குறுக்களவினை விடவும் இக்கருந்துளை மிகப் பெரியது. 6.5 பில்லியன் மடங்கு சூரியனை விட மிக அதிக நிறை கொண்டதாக இக்கருந்துளை உள்ளது. இவ்வாறு தொலைவுகளைக் கணக்கிடும்போது கருந்துளையைச் சுற்றி வரும் ஒளியானது சார்பியல் தத்துவ விதிகளின்படி சில நுணுக்கமான இயக்க அமைப்புகளுக்குள் சென்றுவிடுகிறது. சுவார்ட்ஸ்சைல்டு ஆரத் தொலைவின்  ஒன்றரை மடங்கு ஆரத்தினை விடச் சற்று அதிகமான தொலைவில் செல்லும்போது, ஒளியானது கருந்துளையை எப்போதும் சுற்றி வர ஆரம்பிக்கிறது.

    கருந்துளைக்குப் பின்னால்கற்பனைச் சூழல்

    இந்தத் தத்துவங்களை நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த  கற்பனையான  சூழலுக்குப் பயன்படுத்திப் பார்ப்போம். அதாவது வெகு தூரம் காலவெளியில் மேற்கொள்ளும் ஒரு பயணத்தில்,  கருந்துளை ஒன்றினருகில் வரும் இரு நண்பர்களில் ஒருவர் கருந்துளைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளத் திட்டமிடுகிறார்.  கருந்துளையின் ஈர்ப்பு விசைக்குள் அகப்படாத ஒரு பாதுகாப்பான தொலைவில்  ராம் தனது விண்கலத்தை மாறாத முடுக்கத்துடன் செலுத்துகிறார். இக்கருந்துளையின் எதிர்ப்பக்கத்தில் முகில் மாறாத முடுக்கத்துடன் தனது விண்கலத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது கேள்வி என்னவெனில் முகிலின் பார்வையிலிருந்து ராம் முற்றிலுமாக மறைக்கப்பட்டு விடுவாரா என்பதே. ஏனெனில் கருந்துளையானது ஒளியை முற்றிலுமாக உள்வாங்கி கொள்ளும். ஆனால் இக்கேள்விக்கு மாறுபட்ட பதில்களைச் சார்பியல் தத்துவம் முன்வைக்கிறது.

    ராம், முகிலின் பார்வையில் இருந்து மறைய, முகிலுக்கு எதிர்ப்பக்கத்தில் கருந்துளைக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார். ராமின் விண்கலத்திலிருந்து வரும் ஒளியானது கருந்துளையின் நிகழ்வெல்லையின் அருகில் குறுகிய தொலைவில் வளைந்து, கருந்துளையின் மறுபக்கத்தை வந்து சேரும். இவ்வாறு வரும் ஒளியானது ராமிற்குக் கிடைத்துவிடும். எனவே கருந்துளையின் பின்னால் ஒளிந்துள்ள முகிலை ராம் எளிதாக அடையாளம் கண்டுகொள்வார். எனவே கருந்துளைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் திட்டமானது தோல்வியினையே தழுவும்.

    முடிவுரை

    இந்த நிகழ்விற்குக் காரணம் கருந்துளையானது அதைச் சுற்றியுள்ள காலவெளியை மிக அதிகமாக வளைப்பதேயாகும். அதிக நிறை கொண்ட கருந்துளையானது மிக அதிகமாகக் காலவெளியை வளைக்கிறது. இதன் காரணமாக ஒளியானது அக்கருந்துளையைச் சுற்றிச் செல்லும். சமீபத்தில் கிடைத்த கருந்துளையின் முதல் படமும் இவ்வகையான நிகழ்வை உறுதி செய்கிறது. இவற்றின் மூலம் கருந்துளைக்குப் பின்னால் ஒரு கற்பனையான கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் போது விளையாட்டில் உள்ளவர்களுக்குத் தோல்வியே கிடைக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

    மேற்கோள்கள்

    1. Chandrasekhar, S., & Thorne, K. S. (1985). The mathematical theory of black holes.
    2. Weinberg, S. (1972). Gravitation and cosmology: principles and applications of the general theory of relativity.
    3. Stein, W. A., Abbott, T., & Abshoff, M. (2016). SageMath
    4. Hartle, J. B. (2003). Gravity: An introduction to Einstein’s general relativity.
    5. http://astronomy.swin.edu.au/cosmos/S/Schwarzschild+Radius Accecced 14-04-19
    ——————————————————————————————————————————————————————————
    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    ஆய்வாளர்கள் “விஞ்ஞானப் புனைவு” [Science Fiction] முறையில் தொடங்கி, சமீபத்தில் உலக வானியல் விஞ்ஞானிகள் எட்டு ரேடியோ விண்ணோக்கிகள் மூலம், வெகு தூரத்தில் உள்ள M87 ஒளிமந்தையை நோக்கி, அந்தக் காட்சிகளைச் சேமித்து, முதன்முதல்  வெளியிட்ட பூதப்பெரும் “கருந்துளைப்” படப்பிடிப்பைப் பற்றி எழுதி, “விஞ்ஞானப் புனைவு” போல் முடிக்கின்றனர்.

    இதில் புனைந்துள்ள கற்பனைக் காட்சி, மிகச் சவாலானதும் சாகசமானதும் ஆகும். கருந்துளையின் அளவுடன் ஒப்பிட, அதில் சிக்காமல் அதனைச் சுற்றிப் பயணிக்க முடியும் என்ற பார்வை மிகத் துணிச்சலானது. ஆனால், கருந்துளைக்கு முன் எது, பின் எது? நாம் பார்க்கும் கோணம் முன் என்றால், அதற்கு நேர் எதிர்ப் புறத்தில் பின் இருக்க வேண்டும். அப்படி, கருந்துளையின் ஆதி முனையைப் பற்றி இன்னும் மனிதன் கண்டறியவில்லை. உண்மையில் இங்கே கருந்துளையின் பக்கவாட்டில் இருவரும் பயணிக்கின்றனர். இருவருக்கும் இடையில் கருந்துளை இருக்கிறது. இதனைக் கருந்துளைக்குப் பின் எனச் சொல்வதை விட, கருந்துளையின் மற்றொரு புறத்தில் எனலாம். எனினும் இந்த முயற்சிக்குப் பாராட்டுகள்.

    ——————————————————————————————————————————————————————————
    Share
  • படக்கவிதைப் போட்டி  208-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பூமுகத்தில் அழுகை அரும்ப நின்றிருக்கும் மழலையைப் படம்பிடித்து வந்திருப்பவர் நித்தி ஆனந்த். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 208க்கு உகந்ததென்று தெரிந்தெடுத்துத் தந்திருப்பவர் சாந்தி மாரியப்பன். கலைஞருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றி!

    நானிலத்தில் உயர்ந்த செல்வம் மாண்புடைய மழலைச் செல்வமே ஆகும். மழலையர் அற்ற மணவாழ்க்கை மணமற்ற வாழ்க்கையாகவும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையாகவும் மாறிப்போய்விடுவதைக் காண்கின்றோம். அதனால்தான் புதிதாகப் பிறந்த குழந்தையை ’மகிழ்ச்சிப் பெட்டகம்’ என்று குறிக்கும் வகையில் ’Bundle of Joy’ என்பர் ஆங்கிலத்தில்.

    இங்கே ஒரு சிறுகுழந்தையின் முக வாட்டத்தையும் அக வருத்தத்தையும் பார்க்கும்போது நம்மையும் அது வேதனையில் வாடச் செய்கிறது; இவ்வாறு வருத்தமுற வைத்தது யார் எனத் தேடச் செய்கிறது.

    இக்குழந்தையின் வருத்தத்துக்குப் பொருத்தமான கவிதை மருந்துதரக் காத்திருக்கும் கவிஞர் குழாத்தை வாழ்த்தி வரவேற்கின்றேன்!

    *****

    ”அன்னை தந்தையின் அருந்துணையோடு, திறமையைத் தீயாய் வளர்த்து முன்னேறு!” என்று குழந்தைக்கு அறிவுரை கூறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    திறமை வளர்த்திடு…

    சின்னப் பெண்ணே அழவேண்டாம்
    சீறிப் பாய்ந்திடு கொடுமைகண்டு,
    அன்னை தந்தை தனைப்போல
    அருந்துணை யாரும் இல்லையம்மா,
    உன்னை நெருங்கும் அனைவரையும்
    ஒன்றா யெண்ணி நம்பிடாதே,
    தன்னைக் காத்துக் கொண்டிடவே
    திறமை வளர்த்திடு தீயெனவே…!

    *****

    என்னருமைப் பெற்றோரே! சிணுங்கும் கைப்பேசியைக் குழந்தையாய் அள்ளி அணைத்தது போதும்! உம் அன்புக்கு ஏங்கி நான் அழும் குரல் காதில் கேட்கவில்லையா? என்று குழந்தைக்குப் பரிந்து குரல்கொடுக்கிறார் திருமிகு. கே. அனிதா.

    என் அழுகுரல் கேட்கவில்லையா? என் பெற்றோர்களே!
    உங்கள் கையில் நான் இருக்கவேண்டும்!
    உங்கள் அன்பு எனக்குக் கிடைக்குமா என அழும் என் அழுகுரல் கேட்கவில்லையா?
    கைப்பேசி உங்கள் குழந்தைபோல கைக்குள் வைத்து மார்பினிலே படுக்கவைத்து அதன் அழுகுரல் கேட்டதும் கைக்குள் அணைத்து வைக்கின்றீர்களே!!!
    என் அழுகுரல் கேட்கவில்லையா???

    *****

    அழுகின்ற பிள்ளைக்குப் பால்கொடுக்கும் அன்னையை(யும்) ஆபாசமாகப் பார்க்கும் காம எண்ணத்தைப் புதைப்போம்! பிஞ்சின் நெஞ்சில் நஞ்சினை விதைக்காமல் நல்லதை விதைப்போம்! என்று காலத்திற்கேற்ற பொருளுரை புகல்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

    நம்பிக்கை

    அழுகின்ற பிள்ளைக்கு
    ஆறுதல் சொல்ல நினைத்தது மனம்
    வினாக்கள் எழுந்தன ஓராயிரம்
    வெந்த புண்ணில் வேலாய்ப் பாயும்
    வார்த்தைகளால்

    அழுகின்ற பிள்ளைக்கு
    அன்னை பசியென்று பால் கொடுக்க
    அதையும் ஆபாசமாய் பார்க்கும் கண்கள்

    அழுகின்ற பிள்ளையை
    அள்ளி அணைத்து
    ஆசையோடு கொஞ்சுவதிலும்
    நஞ்சைக் கலந்துவிட்ட நயவஞ்சகர்கள்

    தரணியெங்கும் தலைவிரித்தாடும் வன்கொடுமைகள்
    மீண்டும் மீண்டும் அதையே பேசி
    வடுவாய் மாற்றிடும் வாய்களுக்கு
    போட்டிடு ஒரு பூட்டு

    வினை விதைத்தவன்
    வினை அறுப்பான்!
    விட்டு விடு
    அழுகின்ற பிள்ளைக்கு
    ஆறுதல் சொல்ல
    இளம்பிஞ்சு நெஞ்சில்
    நஞ்சை விதைத்திடாதே!
    நல்லதை நினைத்து விதைத்திடுவோம்
    இவள் மனதில் நம்பிக்கையை!
    தீமைகள் மடிந்து
    புதிய பாரதம் உருவாகும்
    என்ற நம்பிக்கையை
    இவளுக்கு நாம் கொடுப்போம்!

    *****

    மழலையின் அழுகைக்கு மருந்தாய் நல்லுரைகளைக் கவிதைகளில் கலந்து தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    நேரமில்லை…!

    அவசர உலகில் வாழ்வதற்காய் உழைக்கும்
    அன்னை தந்தை இருவருக்கும் நேரமில்லை..!!

    சற்று மூச்சு விடவும் நேரமில்லை..
    சிறிதேனும் பேசிச் சிரிக்கவும் நேரமில்லை..!!

    நான் சொல்வதைக் கேட்க நேரமில்லை..
    நான் வெல்வதைப் பார்க்கவும் நேரமில்லை..!!

    எனக்கு அமுது அளிக்க நேரமில்லை..
    என்னிடம் அன்பு செலுத்தவும் நேரமில்லை.. !!

    எனைக் கொஞ்சி மகிழ நேரமில்லை..
    என்றன் கண்ணீர் துடைக்கவும் நேரமில்லை.. !!

    எனக்குக் கதைகள் சொல்ல நேரமில்லை..
    எனக்குக் கற்றுத் தரவும் நேரமில்லை.. !!

    எனக்கு முத்தம் தந்திட நேரமில்லை..
    என்னை உச்சி மோந்திடவும் நேரமில்லை..!!

    எதிர்காலக் கனவில் வாழும் அவர்கட்கு..
    என்றுமே நிகழ்காலத்தை நினைக்கவும் நேரமில்லை..!!

    ஆதலால்.. அழுகையோ சிரிப்போ.. அனைத்துமே
    ஆயாவின் அரவணைப்பில்.. குழந்தைகள் காப்பகத்தில்..!!

    நிகழ்காலத்தை நினைக்கவும், மகிழ்வோடு மழலையைக் கொஞ்சவும் நேரமின்றிப் பொருள்தேட உழைக்கும் பெற்றோரின் அருளையும் அன்பையும் வேண்டி நிற்கும் மழலையின் மனவுணர்வுகளை மாண்போடு காட்சிப்படுத்தியிருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 209

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும்  காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.04.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • முதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பு – விஞ்ஞானிகள் சாதனை

    சி. ஜெயபாரதன், B.E. (HONS), P. Eng. (Nuclear), Canada

    ++++++++++++++++++

    1. https://youtu.be/rcWKKqsCANs
    2. https://youtu.be/vzQT74nNGME
    3. https://www.bbc.co.uk/programmes/m00042l4
    4. https://www.bbc.co.uk/programmes/p0755t2s
    5. https://en.wikipedia.org/wiki/Black_hole
    6. https://youtu.be/OfMExgr_vzY
    7. https://www.bbc.com/news/science-environment-47873592

    +++++++++++++

    M87Image copyright

    DR JEAN LORRE/SCIENCE PHOTO LIBRARY

    Image caption Astronomers have suspected that the M87 galaxy has a supermassive black hole at its heart from false colour images such as this one. The dark centre is not a black hole but indicates that stars are densely packed and fast moving

    +++++++++++++++++++

    அகிலத்தின் மாயக் கருந்துளை
    அசுரத் திமிங்கலம்!
    உறங்கும் பூத உடும்புகள்!
    ஒளி விழுங்கி! விண்மீன் விழுங்கி!
    அண்டக் கல்லறை!
    ஒளிபுகா இருட்டறை!
    கண்ணுக்குத் தெரியாத புள்ளிப்
    பெருநிறை!
    பற்றி ஈர்க்கும் விசை மூலம் 
    பார்க்க முடியும்!
    படைப்பின் அற்புதம் ஒளிமந்தைகள்!
    நடுவில் உள்ள கருந்துளைப்
    படப் பிடிப்பு ஓர் அதிசய நிகழ்ச்சி!
    அபூர்வ நிகழ்ச்சி!
    ஒரு படம்  ஆயிரம் பதங்கட்குச் சமம்!
    எட்டு விண்ணோக்கி 
    கூட்டிணைப்பில்
    எடுத்த அபூர்வப் படப்பிடிப்பு இது!
    இருநூறு வானியல் உலக நிபுணர்
    இருபது ஆண்டுகள் உழைத்து
    இயற்கைப் படைப்பு ஒன்றைக் 
    கண்ணால் காண வைத்தது
    இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின்
    ஒரு பெரும் சாதனை!
    தனிப் பெரும் விஞ்ஞானச் சவால்,
    மனிதரின் மகத்துவம்!

    +++++++++++++++++++++

     

    Drives

    Image caption: KATIE BOUMAN

    Katie Bouman is the MIT student who developed the algorithm that pieced together the data from the Event Horizon Telescopes. Without her contribution the project would not have been possible.

    +++++++++++++++++++++++++

    உலக விஞ்ஞானிகளின் ஒருபெரும் முதன்மைச் சாதனை

    இதுவரை கண்ணுக்குப் புலப்படாமல், பூதப் பெரும் ஈர்ப்பு விசையால் மட்டும் இருப்பதாகக் கருதப்படும்  கருந்துளையின் மெய்யான படத்தைப், பூமியில் தூரத்தில் உள்ள எட்டு ரேடியோ விண்ணோக்கிகள் கூர்ந்து படமெடுத்து, ஈன்ற பேரளவு தகவல் இலக்கத்தைச் [Data] 10 ஆண்டுகளாய்த் திரட்டிச், சுமார் 200 விஞ்ஞானிகள்  உறுதியாக வெளியிட்ட முதல் கருந்துளைப் படம்  இது.  மற்றும் பன்னாட்டு உலக விஞ்ஞானிகளின் உன்னத கூட்டு வெளியீடாக  மதிப்பிடப் படுகிறது.

    அந்த அசுரக் கருந்துளை பேரளவு நிறை கொண்டது.  6.5 பில்லியன் மடங்கு சூரியன் எடைக்குச் சமமானது.  அந்தக் கருந்துளை, பூமியிலிருந்து 55 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில், உள்ள M87 எனப்படும் ஒளிமந்தையின் [Galaxy M87]  மையத்தில் உள்ளது.

    Blackness of space with black marked as center of donut of orange and red gases

    The supermassive black hole at the core of supergiantelliptical galaxyMessier 87, with a mass ~7 billion times the Sun’s, as depicted in the first image released by the Event Horizon Telescope (10 April 2019).Visible are the crescent-shaped emission ring and central shadow, which are gravitationally magnified views of the black hole’s photon ring and the photon capture zone of its event horizon. The crescent shape arises from the black hole’s rotation and relativistic beaming; the shadow is about 2.6 times the diameter of the event horizon.
    ++++++++++++++++

    அந்தக் கருந்துளையைச் சுற்றி வட்டமாய் உள்ளப் பேரொளிமய வளையம், பேரளவு உஷ்ணமுள்ள வாயுப் பிளாஸ்மா [தீ வளையம்]. [Plasma Ring of Fire].  அந்த டோனட் வடிவத் தீவளையம் நிகழ்வுத் தொடுவான்  [Event Horizon] என்று குறிப்பிடப்படுகிறது.  அந்தத் தொடுவான் அகலம் 40 பில்லியன் கி.மீ. [24 பில்லியன் மைல்].  காலக்ஸி ஒளிமந்தையின் கருந்துளை, கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும்,  அதைச் சுற்றியுள்ள வாயுத் தீவளையத்தை  [நிகழ்வுத் தொடுவான்]  ரேடார் விண்ணோக்கிகள் மூலம் படமெடுக்க முடியும்.  அவ்விதம் உலகின் தூர எல்லைகளில் உள்ள [ஹவாயி, மெக்ஸிகோ, அரிசோனா, ஸ்பெயின், சில்லி, தென் துருவம்] எட்டு  ரேடார் விண்ணோக்கிகளின் கூட்டுப் படப்பிடிப்பே இந்த முதல் கருந்துளைப் படவெளியீடு. இது ஆங்கிலத்தில் “நிகழ்வுத் தொடுவான் விண்ணோக்கி கூட்டுப் படப்பிடிப்பு”   [ EHT – Event Horizon Telescopes Collaboration ]  என்று அழைக்கப்படுகிறது.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், 80 ஆண்டுகட்கு முன்பே  கண்ணுக்குத் தெரியாத இந்தக் கருந்துளை இருப்பைத் தனது “ஈர்ப்பியல் நியதி” அல்லது “பொது ஒப்பியல் நியதி   [Theory of Gravity]  OR [General Relativity] மூலம் முன்னறிவிப்பு செய்துள்ளார்.  இப்போது முதல் கருந்துளைப் படப்பிடிப்பு, படக்காட்சி ஐன்ஸ்டைன் கூற்றை, மீண்டும் மெய்ப்பித்து உள்ளது.

    +++++++++++++++++++++++++

    What is a black hole?

    • A black hole is a region of space from which nothing, not even light, can escape
    • Despite the name, they are not empty but instead consist of a huge amount of matter packed densely into a small area, giving it an immense gravitational pull
    • There is a region of space beyond the black hole called the event horizon. This is a “point of no return”, beyond which it is impossible to escape the gravitational effects of the black hole

    +++++++++++++++++++++++

    South Pole Telescope

    EHT [Event Horizon Telescope]

    EHT array

    Image caption : The eventual EHT [Event Horizon Telescopes]  array will have 12 widely spaced participating radio facilities.

    +++++++++++++++++

    Black Hole Team of Scientists

    Black Hole -2

    எங்கள் விண்ணோக்க ஆய்வுகளில் தீவிர எக்ஸ்-ரே சுரப்பிகள் இருப்பினைக் காட்டுவது, ஒருவேளைக் கருந்துளைகளுக்கு ஊட்டம் அளித்து உருவாக்குவதாகக் கருதப்படலாம். கருந்துளைகள் விண்மீன்களிலிருந்து விடுபடக் கதிர்வீச்சு அயனிகளுக்கு உதவும் புயல்களை உருவாக்கும்.  அதன்படி பிரபஞ்சம் ஒளி ஊடுருவும் தன்மை பெற கருந்துளைகள் உதவி இருக்கலாம்.

    ஒரு கருந்துளைக்குள் பிண்டம் விழும்போது, கருந்துளை சுழலத் துவங்கிறது. விரைவான சுழற்சி ஓரளவு பின்னப் பகுதிப் பிண்டத்தை வெளியேற்றும். கருந்துளைகள் எழுப்பும் காந்தப் புயல்கள் புறவூதா ஒளி வெளியேற விடுவிப்பு வழியை உண்டாக்கலாம்.

    – ஃபிளிப் காரட் [ பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம், பௌதிக வானியல் துறை, தலைமை ஆய்வாளர்]

    [youtube https://www.youtube.com/watch?v=4Arj1SBpEy0?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    கருந்துளை பற்றிய புதியதோர் கருத்தோட்டம்

    2016 மே மாதத்தில் ஐயோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் பௌதிகப் பேராசிரியர் ஃபிளிப் காரட் [Philip Kaaret] மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர், பூமியைச் சுற்றிவரும் சந்திரா விண்ணோக்கி மூலம், விண்மீன் உருவாக்கும் அரங்கத்தில், [Tol 1247-232] ஒற்றை எக்ஸ்-ரே சுரப்பி ஒளி வீச்சும், ஒளித் தணிப்பும் மாறி, மாறி வரக் கண்டனர். குழுவினர் அது விண்மீன் வடிவாக்கம் இல்லை என்று கருதுகிறார்.  நமது சூரியன் அதற்கு ஓர் உதாரணம்.  ஒளிவீச்சு மாற்றம் ஏற்பட அது கருந்துளை போல், ஓர் சிறு அண்டமாக இருக்க வேண்டும் என்று ஃபிளிப் காரட் கூறுகிறார்.

    [youtube https://www.youtube.com/watch?v=vzQT74nNGME?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    ஆனால் கருந்துளை போல் அசுர ஈர்ப்பு விசையால் அனைத்து அண்டங்களையும் இழுத்து விழுங்கும் போது, அது பிண்டத்தை வெளியாக்குமா என்னும் வினா எழுகிறது. உடன்பதில் அதற்கு, யாருக்கும் தெரியாது என்பதே. காரணம் கருந்துளை பற்றித் தனித்து அறிவது மிகக் கடினம். ஏனெனில் காலக்ஸி ஒளிமந்தையில் நடுவில் ஆழ்ந்து பதிக்கப் பட்டுள்ளது கருந்துளை. நெருங்கிவரும் ஒளி கூடத் தப்ப முடியாது.  சமீபத்தில் வானியல் நிபுணர் கூறும் விளக்கம் :  வெளித்தள்ளும் பிண்டத்தின் உந்துவிசை கருந்துளை சுழற்சி விசைக்கு ஊட்டம் அளிக்கிறது.

    [youtube https://www.youtube.com/watch?v=rcWKKqsCANs?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    பிரபஞ்சப் பெருவெடிப்புக்குப் பிறகு, நமது பிரபஞ்சம் அனைத்திலும் இருட்டடிப்பு நேர்ந்தது.   அந்த தீவிரக் கொந்தளிப்பு நிகழ்ச்சி, அகிலத்தைக் குலுக்கி, கலக்கி, கனல் வாயுப் புகை மூட்டம் ஒளியை மூடிவிட்டது.  அடுத்து ஒரு பில்லியன் ஆண்டுக்குப் பிறகு பிரபஞ்சம் விரிய ஆரம்பித்து ஒளி புகும்படி வசதியானது.  பிறகு விண்மீன்கள் நிறைந்த ஒளிமந்தை காலக்ஸிகள் தோன்றி பிரபஞ்சத்தை நிரப்பின. அதுவே நாமிருக்கும் இப்போதைய பிரபஞ்சம்.

    +++++++++++++++++++++

    A Black Hole

    கடவுள் எப்படி இந்த உலகைப் படைத்தது என்று நான் அறிய விரும்புகிறேன். இந்தக் கோட்பாடு அந்தக் கோட்பாடு என்பதைக் கேட்பதில் எனக்கு இச்சையில்லை. அந்தப் படைப்புக் கடவுளின் உள்ளக் கருத்துகளைத் தேட விழைகிறேன்; மற்றவை எல்லாம் அதன் விளக்கங்கள்தான்.

    -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (காலவெளிக்கு அப்பால் பிரபஞ்சங்கள்)

    (காலம் என்னும்) நான்காவது பரிமாணம் 1910 ஆண்டுகளில் பெரும்பாலும் புழங்கும் ஒரு வீட்டுச் சொல்லாக ஆகிவிட்டது. பிளாடோ, கந்தின் பூரண மெய்ப்பாடு (An Ideal Platonic or Kantian Reality) முதல் துவங்கி வானுலகும் உட்படத் தற்காலப் புதிரான விஞ்ஞானப் பிரச்சனைகள் அனைத்துக்கும் விடையாக எல்லாராலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.

    -பேராசிரியை டாக்டர் லிண்டர் ஹென்டர்ஸன் (கலையியல் விஞ்ஞானம்)

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ! ஆயினும் கருந்துளை கள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது. அப்போது கருந்துளை யின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    விண்வெளி விடைக் கைநூல் (The Handy Space Answer Book)

     

    Star Blast to form a Black Hole

    பிரபஞ்ச விஞ்ஞான மேதை ஸ்டீஃபென் ஹாக்கிங் 

    இருபது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுகளின் ஒப்பற்ற பௌதிக மேதையாகக் கடுமையான நோயில் காலந் தள்ளி 2016 இல் 74 வயதான ஸ்டீஃபென் ஹாக்கிங் விஞ்ஞான ஆற்றலில் கலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோ ருக்கு இணையாகக் கருதப்படும் பிரிட்டிஷ் விஞ்ஞானி ! விரிந்து செல்லும் பிரபஞ்சத்தின் தோற்றம், மறைவு [The Origin & Fate of the Universe], ஈர்ப்பியல்பின் கதிர்த்துகள் நியதி [Quantum Theory of Gravity], நிச்சயமற்ற நியதி [The Uncertainty Principle], அடிப்படைத் துகள்கள், [Elementary Particles], இயற்கையின் உந்துவிசை [The Force of Nature], பிரபஞ்சத்தின் கருங்துளைகள் [Black Holes], காலத்தின் ஒருதிசைப் போக்கு [The Arrow of Time], பௌதிகத்தின் ஐக்கியப்பாடு [The Unification of Physics] ஆகியவற்றில் தனது ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாக, எளிதாக எடுத்துக் கூறியவர். பிரமாண்டமான பிரபஞ்ச அண்டங்களின் இயக்க ஒழுக்கங்களையும், கண்ணுக்குப் புலப்படாத அடிப்படைத் துகள்களின் [Fundamental Particles] அமைப்பையும் ஒன்றாக விளக்கக் கூடிய “மகா ஐக்கிய நியதி” [Grand Unified Theory, (GUT)] ஒன்றை விஞ்ஞானிகள் என்றாவது ஒருநாள் உருவாக்க வேண்டும் என்று முற்பட்டு வந்தவரில் ஒருவர், ஸ்டீஃபென் ஹாக்கிங்!

    Computer Simulated Image of A Black Hole

    இங்கிலாந்தில் ஹாக்கிங் லுகாஸியன் கணிதப் பேராசிரியராக [Lucasian Professor of Mathematics] கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தவர். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக அதே பதவியில் அதே இடத்தில் அமர்ந்திருந்தவர், ஈர்ப்பாற்றலைக் கண்டுபிடித்த கணிதப் பௌதிக மேதை, ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1726), நோபெல் பரிசு பெற்றக் கணித மேதை பால் டிராக் [Paul Dirac (1902-1984)] என்பவரும் அதே இடத்தில் பின்னால் பதவி வகித்தவர்!

    பிரபஞ்சத்தின் கருந்துளை என்றால் என்ன ?

    1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார். ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள். அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் ! ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றி முப்பது ஆண்டுகள் கடந்தன !

    Stephen Hawking

    1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது. கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it). பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி). அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்.. அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி). ஆனால் ஒளிவேகத் துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது. அதாவது அருகில் ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டு போய் விழுங்கிவிடும்.

    Medal of Science to Hawking

    கண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் ? நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன ! அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு ! பெருத்த நிறையுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது ! ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ மாறிப் பின்தங்கி விடுகிறது.

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ! ஆயினும் கருந்துளைகள் தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது. அப்போது கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    Formation of a Black Hole

    அண்டவெளிக் கருந்துளைகள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆராய்ச்சிகள்

    1965-1970 இவற்றுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், பிரபஞ்ச வியலைப் [Cosmology] பற்றி  அறியப் புது கணித முறைகளைக் கையாண்டு, ஸ்டீஃபன் பொது ஒப்பியல் நியதியில்  [General Theory of Relativity] ஒற்றை முறைகேடுகளை [Singularities] ஆராய்ந்து வந்தார்.  அப்பணியில் அவருக்கு விஞ்ஞானி ராஜர் பென்ரோஸ் [Roger Penrose] கூட்டாளியாக  வேலை செய்தார். 1970 முதல் ஸ்டீஃபன் அண்ட வெளிக் கருந்துளைகளைப் [Black Holes] பற்றி  ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார்.  அப்போது அவர் கருந்துளை களின் ஓர் மகத்தான  ஒழுக்கப்பாடு குணத்தைக் [Property] கண்டு பிடித்தார்! ஒளி கருந்துளைக் கருகே செல்ல முடியாது! ஒளித் துகளை அவை விழுங்கி விடும்! ஆதலால் அங்கே காலம்  முடிவடைகிறது! கருந்துளையின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது! ஜெர்மன் விஞ்ஞானி  வெர்னர் ஹைஸன்பர்க் ஆக்கிய கதிர்த்துகள் நியதி [Quantum Theory], ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்  படைத்த பொது ஒப்பியல் நியதி இரண்டையும் பயன்படுத்திக் கருந்துளைகள் கதிர்வீச்சை  [Radiation] வெளி யேற்றுகின்றன என்று ஹாக்கிங் நிரூபித்துக் காட்டினார்!

    அந்த வெற்றியின் முடிவில் ஹாக்கிங் பொது ஒப்பியல் நியதியையும், கதிர்த்துகள்  நியதியையும் ஒன்றாக இணைக்க முற்பட்டு, பிரபஞ்ச இயக்கங்களை ஒருங்கே விளக்கக்  கூடிய ‘மகா ஐக்கிய நியதி ‘ [Grand Unified Theory, GUT] ஒன்றை உண்டாக்க முடியுமா என்று  முயன்றார்! மர்மமான கருந்துளைகளைப் பற்றிய விபரங்களை அறிய முடியாத  சமயத்தில், அவற்றைப் பற்றி ஆராய முற்பட்டார். 1971 இல் பிரபஞ்சப் படைப்பை  ஆராய்ந்து, பெரு வெடிப்புக்குப் [Big Bang] பிறகு ஒரு பில்லியன் டன் கனமான, ஆனால்  புரோட்டான் [Proton] அளவு வடிவில் மிகச் சிறிய பல அண்டங்கள், தோன்றி யிருக்க  வேண்டும் என்று எடுத்துக் கூறினார்! அவற்றை ‘மினிக் கருந்துளைகள்’ [Mini Black Holes] என்றார், ஹாக்கிங்! பொது ஒப்பியல் நியதியைப் பின்பற்றும், பிரம்மாண்டமான ஈர்ப்பியல்  கவர்ச்சியைக் கொண்ட இந்த மினிக் கருந்துளைகள் சிறியதாய் இருப்பதால், கதிர்த்துகள்  யந்திரவியல் நியதியும் [Laws of Quantum Mechanics] இவற்றுக்குப் பொருந்தும் என்று  ஹாக்கிங் கூறினார்! கதிர்த்துகள் நியதியின் விதிப்படி, கருந்துளைகள் சேமிப்புத் தீரும்  வரைப் பரமாணுக்களை [Subatomic Particles] வெளியேற்றி, முடிவில் வெடித்துச்  சிதைகின்றன என்று கண்டறிந்தார்! ஸ்டீஃபன் ஹாக்கிங் கண்ட இந்த அரிய விஞ்ஞான  முடிவு, கருந்துளைகளின் ஆயுட் கால வரலாற்றில் பூர்வீக வெப்ப யியக்கவியல் [Classical  Thermodynamics], கதிர்த்துகள் யந்திரவியல் [Quantum Mehanics] இரண்டுக்கும் தொடர்புள்ளது  என்று எடுத்துக் காட்டும் முக்கியத்துவம் பெற்றது!

    மேலும் ஒரு மகத்தான ஹாக்கிங் சாதனை 1983 இல் ஸான்டா பார்பராவைச் சேர்ந்த ஜிம்  ஹார்ட்டிலுடன் [Jim Hartle of Santa Barbara] ஆராய்ந்து அறிவித்த ‘விளிம்பற்ற கூறுபாடு’ [No  Boundary Proposal]! விண்வெளி, காலம் இரண்டும் வரையரை கொண்டவை [Space & Time are  finite]! ஆனால் அவற்றுக்கு எல்லையோ, விளிம்போ இருக்க முடியாது [They do not have any  boundary or edge]!

    ஸ்டீஃபன் ஹாக்கிங் படைத்த நூல்கள், பெற்ற பாராட்டுகள்

    1973 இல் எல்லிஸுடன் [G.R.S Ellis] எழுதிய ‘விண்வெளிக் காலத்தின் பேரளவு அமைப்பு’  [The Large Scale Structure of Space Time], 1981 இல் எழுதிய ‘பிரம்மாண்ட விண்வெளி பெரு ஈர்ப்பியல்’ [Superspace & Supergravity], 1983 இல் எழுதிய ‘மிக இளைய பிரபஞ்சம்’ [The Very  Early Universe]. ஸ்டீஃபன் எழுதி 1988 இல் வெளியிட்ட ‘காலத்தின் ஒரு சுருக்க வரலாறு ‘ [A  Brief History of Time] சிறப்பு விற்பனை நூலாக பல மில்லியன் பிரதிகள் விற்கப் பட்டன! 1993  இல் எழுதிய ‘கருந்துளைகள், குழந்தை அகிலங்கள்’ [Black Holes & Baby Universes]. 1992 இல்  படாதிபதி எர்ரல் மாரிஸ் [Errol Morris] ஸ்டீஃபன் ஹாக்கிங் ‘வாழ்க்கையும் பணியும்’ என்னும்  தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்து, அவர் எழுதிய ‘காலத்தின் ஒரு சுருக்க வரலாறு’  என்னும் நூலுக்கு வடிவம் தந்துள்ளார்! மிக இளைய வாலிப வயதிலே ஸ்டீஃபன் F.R.S  [Fellow of Royal Society] பெற்று, 12 கெளரவப் பட்டங்களையும் இதுவரைப் பெற்றுள்ளார்.  அவர் 1989 இல் ‘மதிப்பு மிகு தீரர்’ [Champian of Honour], பெயர் எடுத்து, அமெரிக்காவின்  தேசிய விஞ்ஞானப் பேரவையில் [National Academy of Sciences] உறுப்பினர் ஆனார்!

    1991 மார்ச் 5 ஆம் தேதி இரவு 10:45 மணிக்கு ஹாக்கிங் வீடு திரும்பும் போது, சக்கர  நாற்காலியின் முன்னும் பின்னும் சிவப்பு விளக்குகள் மின்ன, அவர் வீதியைப் பாதி  கடந்து செல்கையில், வேகமாய் எதிர்த்து வந்த கார் வாகனம் ஒன்று எதிர்ப்பட பணிப் பெண் [நர்ஸ்] ‘அங்கே பாருங்கள்’ என்று அலறினாள்! ஆனால் ஸ்டீஃபன் தப்ப முடிய  வில்லை! வாகனம் வேகமாய்ச் சக்கர  நாற்காலியை மோதித் தள்ள, ஹாக்கிங் வீதியில்  குப்புற விழுந்தார்! அந்தக் கோர விபத்து சக்கர நாற்காலியைச் சிதைத்து, மின்கணனியை  உடைத்து, அவரது இடது கையையும் முறித்து விட்டது! தலையில் பல வெட்டுக்  காயங்களுடன் எப்படியோ ஹாக்கிங் உயிர் தப்பினார்! அவருக்குப் பதிமூன்று இடங்களில்  தலையில் தையல் போட வேண்டிய தாயிற்று! பலமுறைக் காப்பாற்றி விட்ட கடவுள்,  இந்த விபத்திலும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் பாதுகாத்து விட்டார்! சரியாக இரண்டு நாள்  கழித்து, ஹாக்கிங் வேலை செய்ய ஆய்வுக் கூடத்திற்குக் கிளம்பினார்!

    2018 ஆம் ஆண்டு மார்சு 13 ஆம் தேதி தனது 76 ஆம் வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங் காலமானார்.   ஹாக்கிங் கடும் நோயுடன் துன்புற்றாலும்,  சீக்கிரம் நடுத்தர வயதில் மரிப்பார் என்று எதிர்பார்த்தாலும், அவர் பல்லாண்டு காலம் வீல்சேரில் மௌனமாய் வாழ்ந்து விண்வெளித் தோற்றம், கருந்துளை, பெருவெடிப்பு விளக்க விஞ்ஞானத்தை விருத்தி செய்தார்.  காலவெளிக் கருந்துளை ஆய்வு, பிரபஞ்சத் தோற்ற விளக்கம் போன்ற புதிய விஞ்ஞான  ஆக்கத்திற்கு இதுவரை,  அவருக்கு  நோபெல் பரிசு கிடைக்காமல் போனது விஞ்ஞான உலகின் புறக்கணிப்பைக் காட்டுகிறது !

    ஆதாரங்கள்:

    1. A Brief History of Time, By: Gene Stone & Stephen Hawking [1992]
    2. Scientific Genius, By: Jim Glenn [1996]
    3. Stephen Hawking ‘s Universe, By: John Boslough [1889]
    4. A Brief History of Time, By: Stephen Hawking [1988]
    5.  http://www.vallamai.com/?p=54549 (பிரபஞ்ச விஞ்ஞான  மேதை டாக்டர் ஸ்டீ·பென் ஹாக்கிங்)
    6. https://jayabarathan.wordpress.com/2007/12/07/black-holes/ [பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள்  ! பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)]

    7.  http://www.biography.com/people/stephen-hawking-9331710
    8. http://en.wikipedia.org/wiki/Stephen_Hawking  (February  12, 2015)

    9. http://www.cbc.ca/news/world/stephen-hawking-dead-obituary-1.4575341 [March 13, 2018]

    10.  http://www.spacedaily.com/reports/Stephen_Hawking_a_brief_history_of_genius_999.html  [March 14, 2018]

    11. http://www.bbc.com/news/uk-43396008  [March 14, 2018]

    12. https://www.livescience.com/65185-what-is-black-hole-event-horizon.html?utm_source=llm-newsletter&utm_medium=email&utm_campaign=20190410-llm [April 9, 2019]

    13. https://www.bbc.com/news/science-environment-47873592 [ April 10, 2019]

    14. https://www.vox.com/science-and-health/2019/4/11/18306110/first-image-black-hole-eht-event-horizon-singularity  [April 11, 2019]

    15. https://www.sciencemag.org/news/2019/04/black-hole?utm_campaign=news_weekly_2019-04-12&et_rid=263416574&et_cid=2765249 [April 11, 2019]

    16 https://en.wikipedia.org/wiki/Black_hole [ April 13, 2019 ]

    17. https://science.nasa.gov/astrophysics/focus-areas/black-holes

    18. https://spaceplace.nasa.gov/black-holes/en/

    19. https://www.bbc.com/news/science-environment-47873592

    ***********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com

    ***********************

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 31

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    31.வெகுளாமை

    குறள் 301:

    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
    காக்கினென் காவாக்கா லென்

    எங்க தன் கோவம் பலிக்குமோ அங்க கோவப்படாம இருக்கவன் தான் கோவத்த கட்டுப்படுத்துதவன்.  எங்க பலிக்காதோ அங்க கோவத்த தடுத்தா என்ன? தடுக்காம விட்டாதான் என்ன?

    குறள் 302:

    செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
    இல்லதனின் தீய பிற

    நம்மள விட எளச்சவங்க கிட்ட கோவப்படுதது கெடுதல குடுக்கும். நம்மள விட பலசாலிகிட்ட கோவப்படுதது மாதிரி கேடும்  வேற இல்ல.

    குறள் 303:

    மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
    பிறத்தல் அதனான் வரும்

    யார் கிட்டயும் கோவப்படாம அத மறந்து விட்டுப்போடணும். ஏம்னா அதனால தீம தான் வெளையும்.

    குறள் 304:

    நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
    பகையும் உளவோ பிற

    மொகத்துல சிரிப்பாணியையும் மனசுக்குள்ளார சந்தோசத்தையும் கொல்லுத கோவத்த போல பகையாளி வேற உண்டா?

    குறள் 305:

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லுஞ் சினம்

    ஒருத்தன் தன்னயத்தானே காக்க நெனச்சாம்னா அவன் கோவம் வராம பாத்துக்கிடணும். இல்லன்னா கோவம் அவன கொன்னு போடும்.

    குறள் 306:

    சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்

    கோவம் அது இருக்கவன அழிக்குததோட அவனோட சொந்த பந்தத்தையும் சேத்து அழிச்சுப்போடும்.

    குறள் 307:

    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

    கையால ஓங்கி தரையில அடிச்சவனுக்கு அவன் கை தான் வலிக்கும் அப்டிதான் கோவப்படுதவங்களோட நெலமயும்.

    குறள் 308:

    இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
    புணரின் வெகுளாமை நன்று

    கொழுந்து விட்டு எரியுத தீ நம்ம மேல படுதது மாதிரி பெருந் தீமய ஒருத்தன் செஞ்சாலும்  கோவப்படாம இருக்க முடியும்னா அது நமக்கு நல்லது.

    குறள் 309:

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி யெனின்

    மனசுக்குள்ள கோவப்படாம இருக்கணும்னு நெனக்கவனுக்கு அவன் நெனச்சது எல்லாம் கெடச்சு போடும்.

    குறள் 310:

    இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை

    பெருங்கோவக்காரன் செத்தவனுக்கு சமானம்.  கோவமே படாதவங்க துறவிக்கு சமானம்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (293)

    சக்தி சக்திதாசன்

    அன்புள்ளம் கொண்டவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைக்கிறேன். இதோ 2019ஆம் ஆண்டு சித்திரைத் திருநாள் வந்துவிட்டது.  தமிழ்ப் புத்தாண்டு பிறந்துவிட்டது என்று குதூகலமாக வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்பவர்கள் ஒரு புறமும், இது தமிழர்களின் புத்தாண்டேயல்ல. தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளே. வேண்டுமானால் இதைச் சித்திரைத் திருநாள் என்று கொண்டாடுங்கள். ஆனால் இது தமிழர்களின் புத்தாண்டு அல்ல என்று வாதிடுவோர் ஒருபுறமாகவும் நின்று வாதாடும் ஒரு காலக் கட்டத்தில் நாம் இந்த நாளைக் கடந்து செல்கிறோம்.

    நான் எனது பால்ய பருவத்தைப் பின்னோக்கிப் பார்க்கிறேன். அப்போது நான் ஈழத்தின் வடபகுதியில் வாழ்ந்த காலம். அன்றைய காலக்கட்டங்களில் இத்தகைய விவாதங்கள் இத்துணை காரசாரமாக விவாதிக்கப்பட்டதா? என்பது பற்றி எனக்குச் சரியான தெளிவில்லை. ஆனால் இத்தனை அளவிற்கு ஓங்கி ஒலிக்கவில்லை என்பது எனது கருத்து. அன்று எனது பால்யப் பருவமாதலால் நிகழ்ந்த அந்த விவாதங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எனது அறிவு வளர்ந்திருக்கவில்லையா?  இல்லையானால் உண்மையாகவே இப்படியான தர்க்கங்களின் அளவு அந்நாட்களில் குறைவாக இருந்தனவா? இது இன்று என்னை நானே கேட்கும் கேள்விகள்.

    விவாதம் என்பது அறிவு வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதனை யாரும் மறுத்து விட முடியாது. ஆனால் அவ்விவாதங்களின் முறை அவற்றின் ஆக்கிரோஷம் எவ்வகையில் இருக்க வேண்டும்? இன்று சில சமூக வலைத்தளங்களின் குழுக்களில் நடக்கும் விவாதங்களைப் பார்க்கும் போது இத்தகைய விவாதங்கள் நடக்கக்கூடிய வகையில் அவற்றில் யாரும் கலந்து கொள்ளக்கூடிய வசதி இருக்கும் நிலையைக் கண்டு ஒருபுறம் உள்ளம் மகிழ்ந்தாலும் அங்கே இடம்பெறும் விவாதங்களின் தன்மை அதன் கருத்தினின்றும் விலகிச் செல்வதைப் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. கருத்துப் பேதத்தினால் ஆரம்பிக்கும் விவாதம் தனிநபர் தாக்குதல் எனும் அளவுக்கு விரிவாக்கம் பெற்று விடுகிறது. இது ஆரோக்கியமானது அல்ல .

    சமய, கலாச்சாரங்களின் அடிப்படையில் அனுசரிக்கப்படும் சடங்குகள்,  சம்பிரதாயங்கள் என்பன விஞ்ஞான நிரூபணங்களுக்கு அப்பாற்பட்டவை.  அவற்றிற்கான ஆதாரங்களைத் தேட முயல்வது தவறல்ல. ஆனால் ஆதாரத்தைத் தேடுகிறோம் எனும் நோக்கில் செயற்படும்போது தமது வாழ்க்கையின் அடித்தளமாக அச்சமய, கலாச்சார அடையாளங்களை நம்பியிருப்போரின் வாழ்வின் அத்திவாரங்களையே அசைக்க முற்படுகிறோம் என்பதை மறந்து விடலாகாது.  நம்பிக்கை என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட உரிமையாகும். அந்நம்பிக்கை அவர்களைச் சமுதாய ஒற்றுமைக்கும், சமூக முன்னேற்றத்துக்குமுரிய பாதையில் இட்டுச் செல்லுமானால் அது அற்புதமானது. ஆனால் அனைத்து வேளைகளிலும் அப்படி நடப்பதல்ல தாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிப்பதோ அன்றி எமக்கு நம்பிக்கையற்ற காரணத்தினால் நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கையை உடைக்க முற்படுவதோ சமூக வளர்ச்சிக்கான முன்னேற்றப் பாதையில் நம்மை இட்டுச் செல்லாது. ஆத்திகத்தின் இருப்பை நாத்திகம் எந்த அளவிற்கு உறுதிப் படுத்துகிறதோ நாத்திகத்தின் இருப்பை ஆத்திகமும் அந்த அளவிற்கு உறுதிப்படுத்துகிறது .

    எம்மைப் போலவே அடுத்தவரும் எனும் நினைப்பு உண்மையாக எப்போது எம்முள்ளத்தில் நிலை கொள்ளத் தொடங்குகிறதோ அப்போதுதான் மற்றவர்கள் உரிமையை மதிக்கும் தன்மை உண்மையாக உள்ளத்தில் ஏற்படும். இன்றைய உலகிற்கும் அன்றைய உலகிற்கும் வேறுபாடுகள் அதிகம். எதோ ஒரு நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு நிகழ்வு மற்ற ஒரு நாட்டினைச் சென்றடைவதற்கு எத்தனையோ வருடங்கள் எடுக்கலாம். ஆனால் இப்போதோ ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே சமூக வலைத்தளங்களினூடே உடனடியாகச் சர்வதேச அளவில் அந்நிகழ்வு விளம்பரப்படுத்தப் படுகிறது. அன்று வாழ்வின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக முழுமூச்சுடன் உலகனைத்தும் உழைத்துக் கொண்டிருந்தது. இன்று உலகின் ஒரு பாகம் அனைத்து வசதிகளுடனும், மற்றொரு பாகம் வறுமையின் அடித்தளத்திலும் உழன்று கொண்டிருக்கிறது.

    மதம், கலாச்சாரம் என்பன பொழுது போக்கு அம்சங்களாக மக்களை அலங்கரிக்கும் அலங்காரங்களாக ஒருபுறமும், இவற்றின் அடிப்படையின்றி அடுத்தவேளை உணவு கூட இன்றி அல்லல்படும் சமுதாயாமக மற்றொரு புறமும் உலகம் பிரிந்து கிடக்கிறது. இருப்பவர்கள் தம்மிடம் இருப்பவற்றைக் காப்பாற்றிக் கொள்ளும் கவசமாக இச்சமுதாய அடையாளங்களை உபயோகிப்பதையும், இல்லாதவர்கள் தம்மைக் காத்துக் கொள்ளும் ஆயுதங்களாக இவற்றை உபயோகிப்பதையும் காண்கிறோம். இன்றைய உலக அரங்கில் உலகளாவிய பரந்து பட்ட பார்வை குறுகிக் கொண்டே போகிறது. செல்வம் கொழிக்கும் நாடுகள் முன்னேற்றம் அடைந்துவரும் நாடுகளுக்குத் தாம் செய்து வரும் உதவிகளை நோக்கிக் கேள்விக்கணைகளைத் தொடுக்கும் காலமாகி விட்டது. உதவி எனும் பெயரில் தமது நாட்டு வளங்கள் சூறையாடப்படுக்கிறது எனும் அரசியல் வாதத்தை முன்வைக்கும் தேசியவாத அரசியல்வாதிகள் பல மேலைத்தேச நாடுகளில் பிரபலமடைந்து வருவதைக் காண்கிறோம்.

    இன்றைய பொருளாதார முன்னேற்றம் கண்ட நாடுகள் வெளிநாட்டவரின் வருகையினைக் கட்டுப்படுத்துவதையே தமது முதலாவது அரசியல் கொள்கையாகப் பிரகடனப்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகிறார்கள். இந்த வேளையிலே தான் மதம், கலாச்சாரம் என்பவற்றின் மீது தொடுக்கப்படும் தாக்கங்களின் தாத்பரியங்களைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். ஒரு மனிதனின் அடிப்படை நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவன் வாழ்க்கையின் கட்டமைப்பைச் சமூகக் கோட்பாடுகளின் விதிகளை மீறுவதற்கு முயற்சிப்பது இயற்கை. ஒரு சில மூர்க்கத்தனமானவர்களினால் நிகழ்த்தப்படும் மிலேச்சத் தனங்களை வைத்து ஒரு மொத்த சமூகத்தினரை கேவலப்படுத்துவது என்பது என்றுமே நியாயமாகாது.

    மனிதர்கள் பலவகைப்பட்டவர்கள். மலர்களில் எத்தனையோ நிறங்கள் இருப்பது எப்படி இயற்கையோ அதேபோல மனிதர்களிலும் பலவகையினர், பல குணாம்சங்களோடு இருப்பதும் இயற்கையே . மனிதனை, மனிதன் நிறம், இனம், மதம் எனும் எல்லைகளுக்கப்பால் மனிதனாகப் பார்ப்பது ஒன்றே இன்றைய உலகத்தின் அநியாயமான போர்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கும் என்பது உண்மை. ஒரு மனிதன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாகவோ, அன்றி எந்த மொழி பேசுபவனாகவோ அன்றி எந்த நிறத்தவனாகவோ இருந்தாலும் மனிதனுக்குரிய அடிப்படி உரிமைகளுடன் வாழ்வதற்கு உரிமையுடையவன். இழக்கும் தமது உரிமை களுக்காகப் போராடுவது என்றுமே தவறாகது. ஆனால் அப்போராட்டம் அடுத்தொருவனின் உரிமையைப் பறிப்பதாக அமைவதே தவறானது .

    தமிழர்களின் புத்தாண்டு தைத்திருநாளா? அன்றி சித்திரைத் திருநாளா? என்று நடக்கும் சர்ச்சைகளைக் கண்ணுற்றதன் விளவே என் மனத்தின் இந்த அலசல். யார் எதை எதற்காகக் கொண்டாடுகிறோம்? கொண்டாட்டம் என்பது உள்ளத்தின் மகிழ்விற்கேயன்றி அக்கொண்டாட்டத்தை உரிமை கோருவதற்கல்ல.  கொண்டாடுவோரின் கொண்டாட்டத்தில் பங்கு கொள்வோம் அல்லது ஓரமாக ஒதுங்கிக் கொள்வோம். ஒருவர் மனத்தை ஒருவர் நோகடிக்கும் செயல்களைத் தவிர்த்துக்கொள்வோம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.1

    முனைவர் மீனாட்சி பாலகணேஷ்  

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.1

    (அம்மானைப் பருவம்)

    வரிசைப்படுத்தப்பட்ட பிள்ளைத் தமிழின் பருவங்களின்படி, பெண்பால் பிள்ளைத் தமிழில் அம்மானைப் பருவம் எட்டவதாகச் சுட்டப்பட்டுள்ளது. இனி இத்தொடரில் நாம் காணப் போகும் அடுத்த சில பருவங்கள் பெண்மக்கள் அல்லது ஆண்மக்களுக்கே உரித்தானவையாகும். நயம்படப் பாடப்பட்ட இனிமையான பல பிள்ளைப் பருவங்களைக் காணப் போகிறோம்.

    மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் உரையாசிரியர், ‘பிள்ளையை நோக்கி மாதர்கள் முத்தம்மானை முதலிய அம்மானையை எடுத்தாடிட வேண்டும் எனக் கூறும் பருவமிது என அமைத்தனர்’ என்பார்.

    பெண்குழந்தைகளின் அம்மானை விளையாட்டென்பது ஒரு சிறப்பான விளையாட்டு. இது அவர்களுடைய நுண்ணறிவு எனும் புத்தி சாதுரியத்தினையும், வாக்கு வன்மையையும், பாடல்களைப் புனைந்து, இசையோடு பாடும் ஆற்றலையும், விரைந்து நொடிப்பொழுதினில் கண், கைகள், உடலசைவு ஆகியன ஒருமித்துச் செயல்படுதலையும் வளர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது என அறியலாம்.

    விறுவிறுப்பான அம்மானை விளையாட்டு, ‘துறு துறு’வென மூளைக்கும் வேலை கொடுப்பது! தமிழுக்கும் ஓர் அழகான இலக்கியம்!! மூன்று பெண்கள் அமர்ந்து பாடி, மூன்று அம்மானைகளைக் கொண்டு ஆடுவதால் இந்த விளையாட்டு ‘மூவர் அம்மானை’ எனவும் பெயர் பெற்றது. மூன்று பெண்கள் ஏதேனும் ஒரு செய்தியை அல்லது இறைவன்/ அரசன் பற்றிய கதையை அல்லது அவன் புகழை, வினா- விடையாக, அங்கதமாக, தூற்றுமறைத் துதியாக அல்லது விடுகதை போலப் பாடல்கள் புனைந்து பாடியவாறு அம்மானைக் காய்களை உயர வீசிப் பிடித்து விளையாடும் விளையாட்டே அம்மானை ஆகும்.

    பல சந்தர்ப்பங்களில் அம்மானை எனும் விளையாட்டினை விளையாடிய பெண்களால் புனைந்து பாடப்பட்டு வந்த பாடல்கள், ‘மூவர் அம்மானை’ எனும் பெயரில் தொகுக்கப்பட்டு 1861ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ஒரு நூலில் காணப்படுகின்றன. இவை பெண்கள் அம்மானை ஆடுவதாகக் கருதியோ, அம்மானை ஆடுவதற்காகவோ புலவர்களால் புனையப்பட்டனவாகவும் இருக்கலாம்.

    பண்டைக் காலம் தொட்டு, மனிதர்கள் வாழ்க்கையை ஒழுங்கான நாகரிகமான நெறியாகக் கடைப்பிடித்து வாழத் துவங்கிய காலத்திலிருந்து, உயர்ந்த சிந்தனைகளும் அதன் தொடர்பான சீரிய எண்ணங்களும் தோன்றி வளர்ந்தன. தமிழ்நாட்டில் ஒரு காலக்கட்டத்தில் சைவ, வைணவ சமயங்கள் வேகம் பெற்று வளர்ந்து உயர்ந்து உன்னத நிலையை அடைந்தபோது மாந்தர்களின் வாழ்வில்  பிறப்பு, இறப்பு, ஆடல், பாடல், விளையாடல், கல்வி, கேள்வி என்ற எல்லா நிகழ்வுகளிலும் இறைவனின் புகழ் ஒரு அங்கமாகவே இசைக்கப்பட்டது.  அங்கதமாக, விடுகதையாக, புராணங்களாக, பக்தி இலக்கியங்களாக இவை தழைத்து வளர்ந்து தனிச் சிறப்புப் பெற்றன. சிறப்பாக, மகளிர் தம்முடைய தினசரி நடவடிக்கைகளான நீராடல், பலவிதமான விளையாட்டுகளைப் பொழுது போக்காக விளையாடுதல் ஆகிய எல்லாவற்றிலும் இறைவன் தொடர்பான பாடல்களைப் பலவிதமாகப் பாடி மகிழ்ந்தனர்.

    இவற்றுள்  பாவை நோன்பு, அம்மானை ஆகிய பெண்களின் விளையாட்டுகள் தொடர்பான நயம் மிகுந்த வாய்மொழி இலக்கியங்கள் என்னும் பாடல்கள் பின்பு சமய இலக்கியங்களிலும் இடம் பெற்றன. அவற்றுள் ஒன்று தான் அம்மானை எனப்படுவது.

    அம்மானை என்பது சிறு பெண்கள் முதல் எல்லா வயதுப் பெண்களும் விரும்பி ஆடும் ஒரு விளையாட்டாகும். இதற்காகவே செல்வந்தர் வீடுகளில் அம்மானைக் காய்கள், பெருமுத்துக்கள், பவளம், மரகதம் முதலியவற்றாலும், பொன்னாலும் செய்யப்படும். மற்றபடி, வழுவழுப்பான மர உருண்டைகளும், உலர்ந்த உருண்டைக் காய்களும் இன்ன பிறவும் கூடப் பயன்படுத்தப்பட்டன.

    பாடலைப் பாடி ஆடுவதனால் இதுவொரு அழகான இலக்கியமாகவும், உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ் ஆகிய இலக்கியங்களில் ஓர் உறுப்பாகவும் அமைந்துள்ளது. மணிவாசகப் பெருந்தகையும் அம்மானைப் பாடல்களைப் பாடியாடும் பெண்கள் ஈசன் புகழை அழகுறப் பாடுவதாகப் பாடல்களை அமைத்துள்ளார்.

    அழகான, பொருள் நிறைந்த, இத்தகைய மூவர் அம்மானைப் பாடல்கள், கலம்பகம் எனும் நூல்களின் ஒரு அங்கமாக விளங்குகின்றன.  கலம்பகம் என்பதற்குக் கதம்பம் என்று பொருள் என்பார் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். பலவகைப் பாக்களால் இயற்றப் பெறுவதும் பலவகைப் பொருள்களைக் கொண்டதுமான ஒருவகைச் சிற்றிலக்கியமே கலம்பகம் எனப்படும். கலம்பகம் என்னும் சொல்லில் கலம் என்பது பன்னிரண்டையும் பகம் என்பது அதில் பாதியான ஆறினையும் குறிக்கும். ஆகவே பதினெட்டு உறுப்புகள் அமையப் பாடப் படுவது கலம்பகம் எனப்படும். அம்மானை என்பதும் இதில் ஒரு உறுப்பாக இடம் பெறும்.

    மூன்று பெண்களில் முதலாமவள் ஒரு பாட்டுடைத் தலைவனை மனத்தில் கொண்டு அவன் பற்றிய பொதுவான ஒரு செய்தியைக் கூறி அம்மானைக் காயை உயர வீசி ‘அம்மானை’ என்பாள்; இரண்டாவது பெண் அந்தச் செய்தியுடன் பொருந்திய ஒரு கேள்வியைக் கேட்டுக் காயை வீசி ‘அம்மானை’ என்பாள்; மூன்றாமவள் அதற்கு இரு பொருள் படும்படியான ஒரு சாமர்த்தியமான விடையைக் கூறிக் கொண்டே அம்மானையை வீசிப் பிடித்து ‘அம்மானை’ என்பாள். இதுவே அம்மானை விளையாடும் முறையாகும். காலம் செல்லச் செல்ல சில வேறுபாடுகளும் கொண்டு அம்மானை விளையாட்டு காணப்படுகிறது.

    திருப்பேரூர்க் கலம்பகத்தில் காணும் ஒரு அழகிய பாடல்:

    முதல் பெண் அம்மானை ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கிறாள்: புதிர் போடுவது போல ஒரு சேதியைக் கூறுகிறாள்: “பட்டிநாதன் எனப்படும் பேரூர் ஈசன், காட்டில் வேடனாக அலைகின்றவன்; கடலில் வலைவீசி மீன்பிடிப்பவன்; வயலில் பள்ளனாக இறங்கி வேலையும் செய்பவன், பார்த்தாயோ அம்மானே!” என அவனது திருவிளையாடல்களை (!) செய்தியாகக் கூறுகிறாள். தாள லயத்துடன் அம்மானையையும் உயரே வீசிப் பிடிக்கிறாள்.

                ‘காட்டிலே வேட்டுவன்பைங் கடலில் வலைவாணன்

                நாட்டிற்பள் ளன்பட்டி நாதன்கா ணம்மானை’

    அடுத்தவள் வேண்டுமென்றே குதர்க்கமாக, “அப்படியென்றால்  வேதம் ஓதும் அந்தணர்கள் அவனைத்  தம்வீட்டில் சேர்த்துக்கொள்ளும் பெருமை எப்படி ஆயிற்றோ அம்மா?” என வினவுகிறாள்.

                ‘நாட்டிலே பள்ளனெனில் நான்மறையோர் ஈங்கிவனை

              வீட்டிலே சேர்த்துகின்ற மேன்மையென்ன அம்மானை’

    அதற்கு மூன்றாமவள், “அந்தப் பெருமான் உலகியலுக்கு அப்பாற்பட்டவனடி அம்மானே! வீட்டுக்கும் உரியவனானவன் பார்!” என சாமர்த்தியமாக விடை கூறுகிறாள். “ஆமாம்! வீட்டின் உரிமையாளனைச் சேர்க்காமல் இருக்க இயலுமா?”எனும் பொருள் மறைந்து நிற்கிறதல்லவா?

                ‘வீட்டுக் குரிய விகிர்தன்கா ணம்மானை.’

    ‘பேரூரின் பட்டிநாதன் ஆகிய சிவபிரான் வேட்டுவனாகவும் (அருச்சுனனுக்கு வரமருளக் கொண்ட வேடம்), வலைவாணனாகவும் (திருவிளையாடல்), பள்ளனாகவும் (பேரூர்ப் புராணம்) எல்லாம் வந்தாலும், அவர்களிலிருந்து வேறுபட்டு வீடுபேற்றை (முத்தியை) அளிக்கவல்லவனாகவும் அல்லவோ திகழ்கிறான்,’ என்பது உட்பொருள்! பேரூர் முத்தித்தலம் ஆகும்! அப்பொருள் இதில் தொக்கிநிற்பது மிகுந்த அழகாக உள்ளது!

    ‘மானே! அம்மானே!’ எனும் பாடலுக்கேற்ற விளி அடுத்தடுத்த வரிகளில் வருவதனால் இவ்விளையாட்டு அம்மானை எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று எண்ணவும் இடமுள்ளது.

    பழங்காலந்தொட்டு வாய்மொழி இலக்கியமாகவே இருந்த இந்தப் பழமையான அம்மானை விளையாட்டை கி. பி. 2ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக எழுத்தில்- சிலப்பதிகாரத்தில் பதிவு செய்தவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தின் வாழ்த்துக் காதையில் இளங்கோவடிகள் ‘அம்மானை வரி’ என நான்கு பாடல்களைப் பாடியுள்ளார். இவை சோழ வம்சாவளி வழிவந்த மன்னர்களின் பெருமையை விளக்கிக் கூறி, அத்தகையதொரு சோழ மன்னனை அடைய விழையும் பெண்களின்  விருப்பமாகப் பாடப்படுகின்றன.

    இவற்றை இங்கு விளக்கியதன் காரணம், ஒரு மிகத் தொன்மையான தமிழ் மகளிர் விளையாட்டு, இலக்கியத்தின் மூலமாக எவ்வாறு பழந்தமிழர் வரலாற்றுச் செய்திகளையும், புராணங்களின் சிறப்பையும், அவற்றின் கவிதை நயத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது எனப் புரிந்து கொண்டு ரசிப்பதற்காகத்தான்!

    இவையும் மூவர் அம்மானை வகையைச் சேர்ந்தவை: மூன்று பெண்கள் கூடிப் புராணங்கள் புகழும் சோழ மன்னர்களின் பெருமையைப் பாடி வாழ்த்துகின்றனர்.

    முதல் பெண்: “மிக்க நீரைக் கொண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகினை ஆட்சி செய்து  விண்ணவர் கோனாகிய இந்திரனின் உயர்ந்த அரணைக் காத்தவன் யார் சொல்? அம்மானை!”

                வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்

               ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை!

    இரண்டாமவள்: “இந்திரனின் உயர்ந்த மதிலினைக் காத்த வலியோன், விண்ணில் அசைந்து கொண்டிருந்த மூன்று ஊர்களையும் அழித்த சோழ மன்னன் பாரடி, அம்மானை!”

                ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்

               தூங்கு எயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை!

    மூன்றாமவள் முத்தாய்ப்பாகக் கூறுகிறாள்: “அவ்வாறாயின், நாம் அந்தச் சோழனின் புகார் நகரத்தின் பெருமையைப் பாடுவோம் அம்மானை!”

                சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை!

               (வாழ்த்துக்காதை- வஞ்சிக் காண்டம்-16)

    இவர்கள் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனையும், மனுநீதிச் சோழனையும், சிபிச் சக்கரவர்த்தியையும், கரிகால் சோழனையும்,  வடவரை மேல் வேங்கைக் கொடியினைப் பொறித்த  சோழ மன்னனையும் பாடி, இவ்வாறெல்லாம் மங்கையர் அம்மானையைக் கையிலெடுத்துப் பாடுவதும் ஆடுவதும், அந்த ஆத்திமாலை சூடிய வேந்தனைத் தழுவிக் கூடிக் கொள்ளத்தான் எனக் கூறி மகிழ்கின்றனர்.

    இது தமிழ் மன்னர் புகழ் கூறும் அம்மானை!

    அம்மானை ஆடுவதுடன் அதற்கியைய இறைவன் பெருமையைப் பாடுவதையும் விரும்புகின்றனர் மாணிக்கவாசகர் காலத்துப் பெண்டிர்! தத்துவப் பொருள் செறிந்த இப்பாடல்கள், இறையனுபவத்தை உணர்ந்து விளக்கிக் களிக்கும் தொண்டர் கூற்றாக அமைகின்றன. இருபது இனிமையான பாடல்கள் உள்ளன- மூவர் அம்மானை எனக் கருத இயலவில்லை; மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளையாட இடமுண்டு எனப் பாடல்களைப் பயின்றாலே புரிந்து விடும். அம்மானை விளையாடும் பெண்களில் ஒவ்வொருத்தியும், ‘இவ்வாறு எனக்கு ஈசன் அருள் புரிந்தான்,’ எனக் கூறி அம்மானையை வீசி ஆடுகின்றாளாம். பக்தி ரசம் கசிந்துருகும் அமுதப் பாடல்கள்.

    அம்மானையாடும்போது காய்களை மேலே வீசி எறிந்து, ஒரு கையால் விரைந்து பிடித்து ஆட வேண்டும்; அப்பொழுது கையில் அணிந்துள்ள அழகிய வளையல்கள் ‘கல கல’ என ஒலி செய்கின்றனவாம்; பெண்களின் கண்களும் அம்மானை போகும் போக்கில் சென்று நோக்க வேண்டும் அல்லவோ? அப்போது தலையை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாய் இருப்பதால் காதில் அணிந்துள்ள மகரக் குழைகள் தாமும் சேர்ந்தாடுகின்றனவாம். இத்தனை வேகத்தில் தலை அசைவதால் மையை ஒத்த கருங்குழல் அவிழ்ந்து தோளிலும் கழுத்திலும் புரளுகின்றதாம்; கூந்தலில் சூடிய மலர்களில் இருந்து தேன் வழிந்து ஓடுகின்றது; அதனை உண்ண வரும் வண்டுகள் ரீங்காரமிட்டு ஒலிக்கின்றன.

                ‘கையார் வளைசிலம்பக் காதார் குழையாட

                மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்ப’

    இவ்வாறெல்லாம் ஆகும்படி தன்னை மறந்து இவள் யாரைப் பாடி ஆடுகிறாள்? எதனில் ஆழ்ந்து தன் நிலை மறந்தாள்?

    சிவந்த நிறத்து அண்ணல் அவன்- செய்யான்! வெண்மையான திருநீறு அணிந்தவன்; எல்லாத் தேவர்களும் அவனை வந்து கைகுவித்து (சேர்த்து) வணங்க, அவன் மட்டும் கைகளைக் குவிக்காமல் விரித்து, அபய வரத முத்திரை காட்டி அவர்களை அரவணைக்கிறான். ஆகவே சேர்ந்தறியாக் கையான்! எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்; அன்பர்கட்கு மெய்ப்பொருளாய் இருப்பவன்; அவன்பால் அன்பு கொள்ளாதவர்களுக்கு இருந்தும் இல்லாதவனாக இருக்கும் அறிவுப் பொருளை அவள் பாடுகிறாள்; மெய்மறக்கிறாள். ஆடுகிறாள்; தன் நிலையையும் மறந்தாள். அவன் தாளில் தலைப்பட்டாள்!

                ‘செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்

                கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

                மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை’

    அவன் யார்? எங்கு உள்ளான்? அவன் திரு ஐயாறு எனும் தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமான்; நாம் அவனைப் பாடி அம்மானை ஆடுதும்; அவனைப் பாடி ஆடுவோம் காணாய் பெண்ணே!

                ‘ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்!‘ (திரு அம்மானை-13)

    இறைவனிடத்தில் உள்ளம் சென்று விட்டதால் தன் நிலை, சுற்றுப்புறம் எல்லாம் மறந்து விடும் நிலையை அம்மானை ஆடும் பெண்ணின் கூற்றின் மூலம் நயம்பட உரைக்கிறார் மணிவாசகப் பெருந்தகை!

    இது நம்மை இறைவனோடு இணைக்கும் அம்மானை!

                _______________________________

    பிள்ளைத் தமிழின் அம்மானைப் பருவப் பாடல்களைக் காணலாம்.

    முதலாக, அம்மானை விளையாட்டைப் பெண்குழந்தை விளையாடுவதனை ஒரு பருவமாக்கிப் பாடியது எதனால் எனச் சிந்திக்கலாம். எவ்வாறு இது விளையாடப்படுகிறது என மேலே கண்டோம். ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் இவ்விளையாட்டுகள் அதன் உடலையும் உள்ளத்தையும் வலுப்படுத்தி, பொறிகளை ஒருமுகப்படுத்தச் செய்விக்கின்றன. ஆகவே அம்மானை, கழங்கு, பந்தாடுதல் ஆகிய விளையாட்டுகள் சிறுமியரின் வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாகும்.

    பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியத்தில் இவை வகிக்கும் பங்கு இன்னும் அதிகப்படியான ஒரு பரிமாணம் கொண்டதாகும். அன்னை தெய்வமான பராசக்தி மீதே வெகுவான பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்பட்டுள்ளன. அவளோ அகிலாண்ட கோடியீன்று அன்னையாகிப் பின்னும் கன்னியென மறைபேசும் ஆனந்தரூப மயிலாவாள். அவளுடைய பெருமைகளை எல்லாம் பகர்ந்திட இது இன்னுமொரு பரிசாகும். அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

    அரசிளங்குமரி தடாதகை, தோழியருடன் அரண்மனை நந்தவனத்தில் அம்மானை ஆடிக்கொண்டிருக்கிறாள். விறுவிறுப்பாக உடனாடும் தோழியர் அவள் கையால் பிடித்து ஆடுகின்ற  முத்தம்மானையைப் பற்றிப் பிடித்துத் திரும்ப வீசி இடமும் வலமுமாக அலைந்து நிமிர்வதற்குள் மீனாட்சியோ ஓராயிரம் அம்மானைகளை எடுத்து வீசுகிறாள். அவை வரிசைப்பட வானில் அணிவகுத்து நிற்கின்றனவாம். இதனை நாம் ‘காட்சி உறைந்துள்ளது’ (Frozen picture) எனக் கூறுவோம் அல்லவா? அதுபோன்று அவை நிற்பது எவ்வாறு உள்ளதெனக் குமரகுருபரனார் கற்பனை செய்கின்றார்: ‘அன்னையே! நீ பெற்றெடுத்த எல்லா அண்டங்களையும் எடுத்து வரிசையாக வானில் நிறுத்திவைத்து உலகத்தோருக்குக் காண்பிப்பது போல உள்ளது,’ என்கிறார். மேலும் மீனாட்சி ‘விறுவிறு’வென்று அம்மானை ஆடியபோழ்தில் நந்தவனத்து மலர்களில் மதுவுண்ணும் வண்டுகள் அலைபட்டு ஆர்த்து எழுகின்றன; அவ்வமயம்  பசிய மகரந்தப் பொடியானது பெரும் தூசியாகப் பரந்து உலகை இருளடையச் செய்கின்றது. அதனைக் கண்டு அமராவதியில் வாழும் தேவர்களும் அளகாபுரியில் வாழும் கின்னரர்களும் அம்மையின் சேனை திரும்பவும் ஒரு போருக்குப் புறப்பட்டு விட்டதோ என்று கலக்கம் கொள்கின்றனராம். இவ்வாறு அவர்களைக் கலக்கம் கொள்ளச் செய்யும் மதுராபுரித் தலைவியே! அம்மானை ஆடியருளுக! என வேண்டுபவர் அருமையான ஒரு கருத்தை அனாயாசமாகக் கூறிப் பாடலை நிறைவும் செய்துள்ளார்.

    மனமொத்த தம்பதியரை ‘ஈருடல் ஓருயிர்’ என்பார்கள். இங்கு அம்மை ஒருத்தியே ‘ஓருடல், ஓருயிர்’ ஆகிய புகழ் பெற்றவள். அத்தனின் உடலிலும் சரிபாதியை அவள் பெற்றதனால் அவளை ‘ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண்’ என்று சித்தரிக்கிறார் குமரகுருபரனார்.

                   தமரான நின்துணைச் சேடியரில் ஒருசிலர்

                                 தடக்கையின் எடுத்தாடுநின்

                  தரளஅம்மனைபிடித்து எதிர்வீசிவீசி இட

                                 சாரிவல சாரிதிரியா

              நிமிராமுன் அம்மனையொர்ஆயிரம் எடுத்தெறிய

                                 நிரைநிரைய வாய்க்ககனமேல்

                  நிற்கின்றது அம்மைநீ பெற்ற அகிலாண்டமும்

                                 நிரைத்துவைத் ததுகடுப்ப

              இமிரா வரிச்சுரும்பு ஆர்த்தெழப்பொழிலூடு

                                 எழுந்தபைந் தாதுலகெலாம்

                  இருள்செயச் செய்துநின்சேனாபராக மெனும்

                                 ஏக்கமள காபுரிக்கும்

              அமரா வதிக்கும்செய் மதுராபுரித்தலைவி

                                 அம்மானை ஆடியருளே

                  ஆகம் கலந்தொருவர் பாகம்பகிர்ந்தபெண்

                                 அம்மானை ஆடியருளே!

    முத்து, பவளம், மாணிக்கக் கற்களால் செய்த அம்மானைகளைக் கொண்டு அம்மை விளையாடுவது எப்படிப்பட்ட திருக்காட்சியாக உள்ளது! முத்தால் செய்த அம்மானையானது அம்மையின் தாமரை மலர் போன்ற கையில் பிடிக்கப்பட்டதால், அம்மலர்க்கையின் இனிய நறுமணத்தைக் கொண்டுள்ளது. செறிந்த கூந்தலில் சூடியுள்ள மலர்களை நாடும் வண்டுகள், அவளுடைய மைதீட்டப் பெற்ற கண்களாகிய வண்டுகளுடன் கூடி முயங்கி மயங்குகின்றன. தடாதகைப் பிராட்டி அம்மானையை மேல் வீசி எறிந்து பிடித்து ஆடும்போது மலர்களின் நறுமணம் கமழும் அவளுடைய கூந்தலில் அமர்ந்துள்ள வண்டுகளும் உடன் எழும்பிச் சென்று அந்த அம்மானையின் மேல் கருத்தாகச் சென்று மீளும் அவளுடைய விழிகளாகிய கருவண்டுகளுடன் கூடி முயங்கி மயங்குகின்றனவாம்!

    கொத்தான மாணிக்கத் திரளினால் செய்யப்பட்ட அம்மானையானது குயிலினது குரல் போன்றதும், குழலின் இனிய இசை போன்றதுமான அவளது குரலினிமைக்கு உருகி, குளிர்ச்சி பொருந்திய சிறிய துளிகளைச் சிந்துகின்றன.

    அம்மானையாடும் பெண்மக்கள், பாடலையும் பாடியவண்ணம் ஆடுவர் என்பதனைக் கண்டோம் அல்லவா? மீனாட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல; தனது குயிலைப் பழிக்கும் குரலில் பாடியபடி அம்மானையாடுகிறாள். அக்குரலின் இனிமைக்குருகி மாணிக்கத்தாலாகிய அந்த அம்மானைக் காய்கள் குளிர்ச்சி பொருந்திய பனித்துளிகளைச் சிந்துகின்றனவாம்.

                முத்தம் அழுத்திய அம்மனை கைம்மலர்

                                 முளரி மணங்கமழ

                       மொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின்

                                 முயங்கி மயங்கியிடக்

              கொத்து மணித்திரளிற் செயும் அம்மனை

                                 குயிலின் மிழற்றியநின்

                       குழலினிசைக் குருகிப் பனி தூங்கு

                                 குறுந்துளி சிந்தியிட……..

    பவளத்தாற் செய்யப்பட்ட அம்மானைகளோ, அவள் கையிலெடுத்து ஆடுவதால், அவளுடைய விரல்களாகிய பவளத் தளிரில் உருவாகின்ற சிறந்த செந்நிற ஒளியைக் கவர்ந்து வரப் போவதும் வருவதுமாகத் திரிகின்றனவாம்.

                வித்துரு மத்தில் இழைத்தவி நின்கை

                                 விரற்பவ ளத்தளிரின்

                       விளைதரும் ஒள்ளொளி திருடப் போவதும்

                                 மீள்வது மாய்த்திரிய….

    அன்னையின் அம்மானையாடலை மனக்கண்ணில் கண்டு இன்புற்றதனால் எழுந்த அரிய கருத்துகள் செறிந்த பாடல்கள் இவை எனலாம்.

                  ___________________________________________________________

    பார்வை நூல்கள்: 

    1. திருப்பேரூர்க் கலம்பகம்-  கவியரசு கு. நடேச கவுண்டர்
    2. சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்
    3. திருவம்மானை- மாணிக்கவாசகர்
    4. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    Share
  • சேக்கிழார்  பா நயம் – 33 (அயலோர்)

     திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    சேக்கிழார்  பா நயம் – 33 (அயலோர்)

    சேக்கிழார்  அருளிய திருத்தொண்டர் புராணத்தைக்  கற்போருக்கு  ஐயங்கள் ஓரிரண்டு தோன்றலாம். அவ்வையங்கள் எல்லாருக்கும் தோன்றுவனவே! கயிலையிலிருந்து  தென்திசையில்  தோன்றி வளர்ந்த சுந்தரரும், அங்கு  மலர்த்தொண்டு புரிந்த  கமலினியாரும்  அநிந்ததையாரும், தமிழகத்தில் பரவையாரும்  சங்கிலியாருமாய்த் தோன்றி, சிவத்தொண்டு  புரிந்து மீண்டும் சிவலோகம்   எய்தினர்.   இறைவனால்  தடுத்தாட்கொள்ளப்பெற்ற சுந்தரரோ, சடங்கவியார் மகளை விட்டு  நீங்கித்  தலந்தோறும்    பதிகப்  பாடல்கள் பாடியவாறே  சென்றார்! ‘‘அந்தச்   சுந்தரர் வாழ்க்கையின்  இடையில், அவரைத் திருமணம்  புரிந்து கொள்ளவிருந்த  சடங்கவி சிவாச்சாரியார் திருமகள் வாழ்க்கை  என்னவாயிற்று?’’  என்ற ஐயம் எல்லாருக்கும் உண்டாகும்!

    அவ்வாறு  கதைப்போக்கில் ஐயம் நிகழும்போது, உடனுக்குடன்  அதனைத் தீர்த்து வைத்து, நூலை  எழுதிச் செல்வது சிறந்த அறிஞர் பெருமக்களுக்கே  உரிய இலக்கியக் கடமை ஆகும். அவ்வகையில்  தமிழ் இலக்கியங்களில் நம்முன்  தோன்றிப் பின் மறைந்த கதை மாந்தர்கள் சிலரைப்  பற்றி விரிவாகவே எழுதலாம். அத்தகைய  கதை மாந்தர்களின்  நிலையை வேறெங்கேனும்  தேடிக் கண்டு பிடிக்கலாம்.

    இங்கே சுந்தரர், சடங்கவி பேதையைத் திருமணம் புரிந்துகொள்ள வந்த சிறப்பை அருகில்  நின்ற மகளிர்  புகழ்ந்தார்கள்.  வலிமை  மிக்க காளையைப் போன்று  விளங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அழகைப்  புகழ்ந்த போது, ‘’கண்கள் எண்ணிலாத வேண்டும்  காளையைக் காண!’’ என்றனர். மேலும் “பெண்களில்   உயர  நோன்றாள் சடங்கவி  பேதை’’ என்றனர். “சிவவேதியர்   குலப் பெண்களுள்  இவளே, பெரிதும்  உயர்வைப் பெறத்  தவம்  செய்தாள்!’’ என்று சற்று வேறுபட்ட வகையில் புகழ்ந்தனர்.

    இங்கே சுந்தரரின்  அழகும், ஒப்பனையும் மிக விரிவாகக் கூறப்பட்டன.   ஆனால், சடங்கவி சிவாச்சாரியாரின் மகள், பேதை என்பன  தவிர வேறு  வர்ணனைகள்  இல்லை. அவர் நோற்றார் என்பதே அவரது  சிறப்பாகக் கூறப்பெறுகிறது. அவள் சுந்தரரை அடைய  நோன்பு செய்திருக்கிறார். சிறந்த  சிவனடியாரை அடைதல்  மட்டுமே சைவப்  பெண்டிரின் நோக்கம் என்பதை,

    “எம்கொங்கை  நின்  அன்பர் அல்லார் தோள்  சேரற்க
     கங்குல் பகல்  எம்கண்   மற்றொன்றும்  காணற்க
     இங்கு இப்பரிசே  எமக்கு  எங்கோன்  நல்குதியேல்
     எங்கு எழின்  எஞ்ஞாயிறு  எமக்கு”

    என்று மணிவாசகர் கூறுகிறார்.  எந்தச் சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும் எமக்கு அதில் நாட்டமில்லை. அதாவது அடியார் உறவே சிவலோகம், மற்ற நிகழ்ச்சிகள் எம் தியானத்தைக் கலைக்க மாட்டா என்பது அதன் பொருள்.   அந்தப் பெருவாழ்வை  அடைவதையே, ‘பெண்களில் உயர’ என்ற தொடர் குறிக்கிறது. சுந்தரரைத் தம் வாழ்முதலாக  ஏற்றுக்கொண்ட சடங்கவி பேதை,  அவரைப் புறத்தார் பார்வையிலும், தம் அகத்திலும்  என்றும் நீங்காத நிலையைப்  பெற்றாள். திருமண நாளிலேயே , அதற்குரிய  சடங்குகள் நிகழாத  நிலை.  ‘‘சடங்கு அவி’’ நிலை. இதனையே சிவ வேதியன் மகளும் அடைந்தாள். அதனால்  உலகில் சிவநெறியை  உயர்த்தும் நாவலூரரை, தம் தனி நாதனாக ஏற்றுக்கொண்ட அவர், உள்ளும் புறமும் அவரையே நீங்காது நினைந்து, இணைந்து உணரும்  நெறியிலிருந்து வழுவாது  வாழ்ந்தார். இதனைச் சேக்கிழார்,

    “அன்றே  மணம்  அழியும் 
     செயலால்  நிகழ் புத்தூர் வரும்   சிவவேதியன்  மகளும்     
     உயர் நாவலர்  தனி நாதனை  ஒழியாது  உணர்  வழியில்
     பெயராது”

    எனப் பாடினார். ஆகவே சுந்தரர் வாக்குப் படியும்,

    “இம்மையே தரும்சோறும்கூறையும் ஏத்தலாம் இடர்  கெடலும்ஆம்
     அம்மையே  சிவ லோகம் ஆள்வதற்கு யாதும்  ஐயுறவு  இல்லையே!’’

    என்ற நிலையில் ’’உயர்சிவலோகமும் எளிதாம்வகை பெற்றாள்’’ என்று சேக்கிழார் பாடியதன் பொருளை நாம்  புரிந்துகொள்ளலாம். மற்றையோர் திருமணத் தடையோ, வாழ்க்கையில்  இடையூறோ  அடைந்தால் வெவ்வேறு வகையில் நோன்பு நோற்றுச்  சுவர்க்கம்    புகுவர்.   இதனைச்  சேக்கிழார்,

    “அயலார்  தவம்  முயல்வார்’’ என்று  குறிக்கிறார்.  ஆகவே சிவவேதியன் மகளான  சடங்கவி பேதை, பெண்களில்  உயர நோற்றாள்;  அதனால்  சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் என்ற சேக்கிழாரின்  வாக்கு, நமக்கு மனநிறைவு  அளிக்கிறது.  இனி முழுப் பாடலையும்  பயில்வோம்.

    “அயலார்தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
      செயலால் நிகழ் புத்தூர் வரு சிவவேதியன் மகளும்
      உயர்நாவலர்  தனிநாதனை  ஒழியாதுஉணர் வழியில்
      பொறாது உயர் சிவலோகமும் எளிதாம்வகை பெற்றார்”

    ‘இப்பாடலால் ஆசிரியர் இவ்வம்மையாரது பிற்சரிதங் கூறி முடித்துக் கொண்டதுமன்றி, ஏனையோரைப் போல, இவ்வம்மையார் தம் நாயகனை உடம்பு நாயகனாகக் கொள்ளாது தியானப் பொருளாகிய உயிர்நாதனாகக் கொண்டு ஒழுகினமையால் அவரையும் பிரியாது, பெறற்கரிய சிவலோக வழியும் பெற்றார் என்று இவரது வாழ்க்கையின் உயர்வையும் காட்டினார். இவ்வாழ்வு பெற உபகரித்து நின்றமையால் அம்மையாரை விட்டு நீங்கினார் என்ற சொல், நம்பிஆரூராரிடத்துச் சாராமையுங் காட்டியவாறு. திலகவதியம்மையார் சரிதமும் இங்கு வைத்து உணர்தற்பாலதாம். இவ்வுண்மைகளை உணராது, ஒரு கணவனிறப்பவும், அல்லது இருக்கவும், ஒன்றன்பின் ஒன்றாகப் பல மணங்களையும் நிகழ்த்தலாம் என்று கூவும் நவீன உணர்ச்சிக்காரர்கள் இச்சரிதங்களை உய்த்து ஓர்ந்து ஒழுகுவார்களாக.’

    என்ற  சிவக்கவிமணியார்  உரையையும்  இங்கே நாம் சிந்திப்போம். இவ்வகையில்  நம் மனத்துள் எழும் ஐயத்தை நீக்கி உரிய விளக்கத்தையும் அளித்த  சேக்கிழார் பெருமானின்  பா நயம்  போற்றுதற்கு  உரியது.

    ============= சே. பா ந. 33 === ========

    Share
  • பட்லூர் வாகீசுவரர் கோயில் – அனுலோம பாரசிவர் பற்றிய கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பட்லூர் வாகீசுவரர் கோயில்

    அனுலோமர், பிரதிலோமர் எனக் கலப்பினச் சாதி மக்கள் இரண்டு பெரும் பிரிவினராக முறைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு மனு தர்மம் சான்றாகக் காட்டப்படுகின்றது. அனுலோமர், உயர்சாதி தந்தைக்கும் தாழ்ந்த சாதி அன்னைக்கும் பிறந்தவர். இதாவது சத்திரிய உயர்சாதி ஆணுக்கும் வைசிய குல தாழ்ந்த சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர், அனுலோமர் எனப்பட்டனர்.  கராணி என்போர் வைசிய தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர். இது தந்தை வழிமுறை பிறங்கடையை அடையாளப்படுத்தி சொல்லப்படுகின்றது. தமிழ்க் கல்வெட்டுகளில் அனுலோமர் பாரசிவர், பஞ்ச கம்மாளர்கள், பதினெண் விஷயத்தார்கள் என்ற வாணிகக் குழுவில் உள்ள பலர், வணிகர்களாக அறியப்படுகின்றனர். பொற்கொல்லர் என்பாரும் இதில் ஒருவர்.

    அனுலோமர், பிரதிலோமர் என்ற வரைவிலக்கணப்படி தான் (definition) இச்சாதிகளில் உள்ள எல்லா ஆடவருடைய பெண்டிருடைய தாயும் தந்தையும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களா? என்றால் தெளிவான விடை இல்லை. இதாவது, ஒரு சாதியின் கலப்பு முன்னோர் என்றோ, எப்போதோ, ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நாட்டின் ஒரு மூலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வாறு சேர்ந்த கலப்புச் சாதியர் தானே ஒழிய, ஒவ்வொரு தலைமுறையின் தாயும் தந்தையும் கலப்புச் சாதியர் அல்லர் என்ற புரிதல் ஏற்பட்ட மாத்திரத்திலேயே இதன் பொருள் குளறுபடி எல்லோராலும் உணர முடிகின்றது. அவ்வகையில் அனுலோமர் பிரதிலோமர் என்போர் கலப்புச் சாதியார் அல்லர் என்பதே உண்மை.

    இதை எல்லாம் சாஸ்திரத்தில் மட்டுமே படித்து அறிந்திருந்த ஒரு சில முட்டாள் பிராமணர்கள், கல்வெட்டுகளில் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறித்துவிட்டனர். இவ்வாறு கல்வெட்டில் அனுலோமராக, பிரதிலோமராகக் குறிக்கப்பட்ட இச்சாதி மக்களுக்கு தாம் அவ்வாறான கலப்புச் சாதியர் என்பதே தெரியாது. தெரிந்திருந்தால் அதை ஏற்றிருக்க மாட்டார்கள், எதிர்த்திருப்பார்கள் என்பது தான் உண்மைக்கும் உண்மை. ஏனென்றால் அவர் தம் பெற்றோர் எல்லோரது பெற்றோரையும் போல ஒரே தொழிலைச் செய்கின்ற ஒரே சாதி மக்கள் தாம், கலப்புச் சாதியர் அல்லர்.

    ஆனால் இக்காலத்தே வரலாறு எழுதும் தொல்லியல் வல்லுநர்கள் பலர்,  இந்த உண்மையைச் சற்றும் எண்ணிப் பாராமல், கல்வெட்டில் தவறாகக் குறித்த பிராமணர்களைப் போல, இவர்களும் இதற்கு மதிப்பு (weightage) கொடுத்து சோழர் ஆட்சிக் காலத்தே வர்ண ஏற்றத் தாழ்வு, சாதி வேறுபாட்டுக் கொடுமை தலைவிரித்தாடியது, ஆதலால் சோழ ஆட்சி கேடுகெட்ட ஆட்சி என்று மதிப்பளிக்கின்றனர். இது இவர்கள் எந்த அளவிற்கு முட்டாள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிவிடுகின்றது.

    உண்மையில், ஊருக்கு ஊர் இடம் பெயருகின்ற ஆண்களில், குறிப்பாக, சத்திரியர், வணிகர் என்போர், மனக்கட்டுப்பாடு இல்லாமல் வேற்று சாதிப் பெண்கள் மூலம் கலப்புப் பிள்ளைகளுக்கு வழிகோலினர். அப்பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும் பிழைப்பிற்கு ஏதோ ஒரு தொழிலை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகின்றது. அந்நாளில் இந்நாளைப் போல் விரும்பிய தொழிலை ஒருவர் ஏற்றுச் செய்ய முடியாது. அத்தொழிலை ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் சாதி மக்கள் அதை எதிர்ப்பார்கள். இதைக் குற்றம் என்று மன்னனிடம் முறையிடுவார்கள். அப்படி ஒரு சூழல் வரும் போது மன்னன் புதிய கலப்பு சாதிக்கு ஒரு பெயரை வழங்கி ஏற்பிசைவு (recognize) தந்து பிழைப்பதற்கு இன்னின்ன தொழிலை மேற்கொள்ளலாம் என்ற உரிமையையும் தந்து பிணக்கைத் தீர்த்து வைக்கிறான்.

    இப்படித் தான் சாதிகளை மக்கள் உருவாக்கி விடுகிறார்கள் அதற்கு மன்னன் ஏற்பிசைவு மட்டும்தான் தருகிறான்.  மன்னன் வேண்டும் என்று எந்த ஒரு சாதியையும் உருவாக்குவதில்லை. ஆனால் வரலாறு எழுதுவோர், பழிபோடுவது என்னவோ மன்னன் மீது அல்லது பிராமணர் மீது தான். தமிழ்நாட்டில் தமிழ்ச் சமூகத்தில் வர்ணக் கோட்பாடு, மனு தர்மக் கோட்பாடு கல்வெட்டளவில் தான் இருந்தது. பலரும் உரைப்பது போல அது சமூகப் பிரச்சனையாக தலைவிரித்தாடியது இல்லை.

    பாரசிவர் என்பவர் பிராமணத் தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர் என்ற சாஸ்திரக் கூற்றின் படி அனுலோமப் பிரிவில் வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டுக் கோவில்களில் அம்மனுக்குப் பூசனை ஆற்றிய உவச்சர் மரபினர் ஆவர். இவர்கள் பல கோவில்களில் பிராமணருடன் பிராமணரல்லாத பூசகராக, காணி உரிமையோடு பணி புரிந்தது கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளது. ஈங்கு  நாலு கல்வெட்டில் அவர் பற்றிய குறிப்பு கீழே. 

    ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பட்லூர் அமைந்த வாகீசுவரர் கோயில் கருவறை தென்மேற்கு ஜகதி கல்வெட்டு:

    1. ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க ஸ்ரீ வீரராசேந்திர தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவதற்கெதிர் ஒன்பதாவது வ
    2. டகரை நாட்டு பட்டில் ஊரும் ஊராளிகளோம் எங்களூர் இந்நாயனார் வாகீஸ்வரமுடையாற்கு னாங்கள் ஏரி இட்டுக் குடத்தபடியாவ
    3. து பசுங்கண்ணித் தாழையோமுற்று இதில் நீர் பாஞ்ச நிலங்கண்டிட மெல்லாம் இறையின்றி ஏகபோகமாக இட்டு
    4. குடுத்தோம் வாகீசுரமுடையாற்கு. இக்கோயில் காணியுடைய பிராமணரில் பாலாசிரிய கோத்திரத்து பொ[ல்]லாத பிள்ளை ம
    5. கன் மாதேவ பட்டனும் இக்கோயிற் காணி உடைய உகச்சரில் பாரேசிவரில் பூமந்வந்நியான வீரபத்திர சக்கரவத்திய் இக்குளம்
    6. உழுது மூன்றிலொன்று னாயநாற்கு குடுப்பார்களாகவும் இவ்வேரியைக் கோயிற்றமந்னாதல் ஊராராதல் மாற்றுவாந் யாதொ
    7. ருவன் வழியேச்சமறுவாந். இது பன்மாஹேஸ்வர ரட்சை.

    ஊரும் – ஊரில் வாழ்வோர்; ஊராளிகளும் – ஊரைச் சேர்ந்த வெளியிடத்தில் வாழ்பவர்; ஏகபோகமாக – முழுஉரிமையாக; கோயில்காணி உடைய பிராமணர் – official priest; உவச்சர் – காளி, துர்க்கை பூசகர்; ஏரி – குளம்; கோயிற்றமன் – கோயில் பணி நிகழ்த்தும் பூசகர் மேற்பார்வை; ஊராராதல் – ஊரார் மேற்பார்வை; மாற்றுவான் – தனக்கு உரிமை மாற்றுவான்; ஏழு அச்சம் அறுவான் – ஏழுதலைமுறை இல்லாது ஒழிவான்; மாகேசுவரரர் – சிவனடியார்.

    விளக்கம்: கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 29+9 =38ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1244) போது வடகரைநாட்டில் அடங்கிய பட்டில் ஊரான இன்றைய பட்லூர் ஊரைச் சேர்ந்தவர்களும் அதில் வாழ்வோரும் சேர்ந்து தமது ஊர் இறைவரான வாகீசுவரருக்கு ஏரி ஒன்றைக் கட்டிக் கொடுத்தனர். அதற்குப் பசுங் கண்ணித்தாழை முற்று எனப் பெயரிட்டனர். இந்த ஏரியையும் அதன் நீர் பாயும் நிலத்தையும் வரியின்றி முழு உரிமையாக வாகீசுவர கோயில் இறைவர்க்கு கொடுத்தனர். இக்கோயில் காணியுடைய பிராமணர் பாலாசிரிய கோத்திரத்தில் பிறந்த பொல்லாப்பிள்ளையின் மகன் மாதேவ பட்டன், அதேபோல இக்கோயில் காணி கொண்ட அம்மன் கோயில் உவச்சன் ஆன பாரசிவரில் பூமன் வந்நியான வீரபத்திர சக்கரவர்த்தி ஆகிய இருவரும் இக்குளத்தின் நீரைக் கொண்டு உழுவித்து அதில் விளையும் பயிரில் மூன்றில் ஒன்றை இக் கோயில் இறைவனுக்கு கொடுக்க வேண்டும். இவ் ஏரி கோயில் மேறபார்வையில், ஊரார் மேற்பார்வையில்  இருப்பதைத் தடுத்துத் தம் சொந்த நலனுக்கு மாற்றிக் கொள்பவன் குலம் ஏழு தலைமுறைக்கு இல்லாததாகிப் போகும். சிவனடியார் இதை முறைமையைக் காக்க வேண்டும்.

    பொதுவாக, கோயிலுக்கு நிலம், விலங்கு, பொன் ஆகிவற்றைத் தான் கொடையாகத் தருவார்கள். அதைத் தவிர்த்து இந்த ஊர் மக்கள் நீர்ப் பாசனத்திற்கு வேண்டி ஏரி அமைத்துக் கொடுத்து உள்ளனர். நீரை எந்த நிலத்தில் பாய்ச்சிப் பயிர் செய்வது என்பதைக் குறிக்காமல் 3இல் 1 பங்கு விளைச்சலை மட்டும் இறைவனுக்குத் தப்பாமல் கொடுக்க வேண்டும் என்பது கேள்விக்கு இடம் அளிக்கின்றது.

    பார்வை நூல்:  ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக்.192

    ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பட்லூர் அமைந்த வாகீசுவரர் கோயில் தெற்கு கிழக்கு  பட்டிகைக் கல்வெட்டு:

    1. ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலம் சிறக்க கோவிராஜகேசரி பந்மராநத் திரிபுவனச் சக்கரவர்த்திகள் வீர ராசேந்திர தேவர்க்கு திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு 201 (21) எதிர் பத்தாவது ஆநிமாஸ முதலாக வடகரை பட்டில்லூராளிகளும் நடுவில் நித்யகண்ட சக்கரவத்திகளும் தேவர்க்கும் எம்மிலி _ _ _
    2. _ _ _ யாவது மேக்கடுக்கு கல்லுக்கு மறைக்கும் கிழக்கு  பிடாரியார் தேவதானத்துக்கு மேற்கும் தெற்கு இட்டேறிக்கு வடக்கும் இவ்வெல்லைக்குட்பட்ட நிலமும் இந்நாயனாற்கு பூசிக்கும் நம்பிமார் பட்டில் காணியாளருக்கும் மாணபோகத்துக்கும் பட்டில் காணியாள உவச்சரில் பாரேசிவர் பூமந் வந்நியாந வீரபத்திர சக்கரவத்திக்கு மாணபோகம் _ _ _ மேற்கு பிடாரியார் தேவதானத்துக்கு கிழக்கும் கிழக்கு இட்ட கல்லுக்கு மேற்கும் தெற்கு ஒழுகு கல்லிச்சிறு பொழிக்கு வடக்கும் _ _ _

    திருவெழுத்திட்டு – முடிசூடி; செல்லா நின்ற – நடப்பாண்டு, current year; திருநல்லி யாண்டு – ஆட்சி ஆண்டு; எதிர் – வருகின்ற, வந்த; நடுவில் – சூழ அமர்ந்து; பிடாரி – காளி, துர்க்கை போன்ற அம்மன்; இட்டேறி – வயல்கள் நடுவே செல்லும் வரப்புப் பாதை; நம்பிமார் – பிராமணர்; மாணபோகம் – மழைநம்பி பயிரிடுதல் அல்லது சாய்நிலத்தில் பயிரிடுதல் ; ஒழுகு – பாயும்

    விளக்கம்: கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 21+10 = 31 ஆம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி. 1237) ஆனி மாதம் முதலே பட்டில் ஊரைச் சேர்ந்தவர்களும் அவர்க்கு நடுவே நித்யகண்ட சக்கரவர்த்தியும் கொலுவிருக்க, தம்மால் இயன்ற கொடையான மேற்கில் அடுக்கிய கல்லுக்கு மறையிலும் கிழக்கில் பிடாரி  கோயில் தேவதானமும் தென்மேற்கில் இட்டேறிக்கு வடக்கும் என உள்ள நிலத்தை இக்கோயில் இறைவர்க்கு பூசனை ஆற்றும் பிராமணர்க்கு பட்டில் நிலமாகவும், மாணபோகமுள்ள பட்டில் நிலம் உள்ள இடத்தில் பாரசிவரான பூமன் வந்நியான  வீரபத்திர சக்கரவத்திக்கு மாணபோக நிலமும் தந்தனர். அந்நிலம் பிடாரி கோயிலுக்கு கிழக்கும், தெற்கே ஓடும் கல்லிச்சிறு குளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது என்று நில எல்லைகளை குறித்து உள்ளனர். மேலே உள்ள முதல் கல்வெட்டில் குறிக்கப்பட்ட பாரசிவ உவச்சரும் இவரே.

    பண்டு பரவலாக கோயில்களில் பிராமணப் பூசகரோடு பிராமணரல்லா பாரசிவ பூசகரும் பணியாற்றி உள்ளனர் எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்:  ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக்.190.

    கோயம்பத்தூர் மாவட்டம் அவினாசி வட்டம் அன்னூர் எனும் இடத்தில் அமைந்த மன்னீசர் கோவில் கல்வெட்டு:

    1. _ _ _ _ ம
    2. ண்டல முதலி துறையூரில் உவச்சக்காணியுடைய பராசிவன்
    3. வாச்சிய மாராயனுக்கு அந்நாள் வதிமுகம் கொடுத்து இவன் ஆளுடையார்
    4. திருமுருகன் பூண்டி நாயனார் கோயிலுக்கும் ஆளுடையார் _ _ _ _
    5. களில் உள்ள உவச்சக் காணிகளுக்கும் இக்கோயில்களில்
    6. கோயிற் காணிகளும் இவர்களுக்கு காணியாக கொடுத்தோம் சோழகுல மாணிக்க _ _ _

    வதிமுகம் – தங்க இடம் கொடுத்து உவச்சர் காணி – அம்மன்கோயில் பூசகருக்கு ஒதுக்கிய நிலம்

    விளக்கம்: 13 ஆம் நூற்றாண்டின் இக்கல்வெட்டில் வேந்தன் பெயரும், ஆட்சி ஆண்டும் குறிக்கப்படவில்லை. மண்டலமுதலி துறையூரில் உவச்சருக்கான காணியை உடைய பாரசிவன் வாச்சிய மாராயனுக்கு முன்னாளிலே தங்கு இடம் கொடுத்து இவன் தெய்வமான திருமுருகன் பூண்டி இறைவர் கோயிலுக்கும் கல்வெட்டில் சிதைந்துள்ள கோயில்களில் உள்ள உவச்சருக்கான காணிகளுக்கும் மற்றும் இக்கோயில்களின் காணிகளுக்கும் (வரிவிலக்கு தந்து) அவற்றை இவனுக்குக் காணியாக கொடுத்தேன் என்று சோழகுல மாணிக்கம் என்ற அரையன் தெரிவிக்கிறான்.

    பார்வை நூல்:  கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக். 82

    எளவானரைசூர் கோவில் கல்வெட்டு , திருக்கோவிலூர் வட்டம்:

    1. ஸ்வஸ்த்திசிரி கோச்சடைய பன்மாரான திரிபுவனச் சக்கரவத்திகள் சிரிசுந்தர பாண்டிய தேவற்கு
    2. யாண்டு 13- ஆவது எதிர் மூன்றாவது உடையார் ஊர்பாகங்கொண்டருளிய நாயனார்
    3. கோயில் தானத்தாரோம் இக்கோயில் பாரசிவற்கு விவாஸ்தாபத்திரம் பண்ணிக் குடுத்த பரிசாவது
    4. நலங்கிங்குகளுக்கு அனுதரிக்கும் இடத்து பாண்டி மண்டலம்,
    5. சோழ மண்டலம், மகத மண்டலம் இம்மண்டல்களிலும் பலதிருப்பதிகளில் செய்தபடியும் நடுவில்மண்டலத்தில் திருமுதுகுன்றமும்
    6. திருவாமாத்தூரும் திருவதிகை திருவெண்ணைநல்லூர் செய்த மரியாதை செய்யக்கடவராகவும்
    7. இப்படி செய்தோமாகில் சிவத்துரோகிகளும் இராசத்துரோகிகளுமாக கடவதாகவும்
    8. இப்படி சம்மதித்து விவஷ்த்தாபத்திரம் பண்ணிக் குடுத்தோம் பாரசிவற்கு தானத்தாரோம்.

    விவஸ்தா பத்திரம் – தீர்மான ஆவணம்; அனுதரிக்கும் – பின்பற்றும்; திருப்பதிகளில் – கோவில்களில்

    விளக்கம்: மதுரை சுந்தர பாண்டியனின் 13 + 3 =16 ஆவது ஆட்சி ஆண்டில் எளவனூர் இறைவர் கோயில் பொறுப்பாளர்களாகிய நாங்கள் இக்கோயிலில் திருப்பணி செய்யும் பாரசிவற்கு தீர்மான ஆவணம் செய்து கொடுத்ததாவது நலங்கிங்குகள் கடைபிடிக்கும் போது பாண்டி மண்டலம், சோழ மண்டலம், மகத மண்டலம் ஆகிய மண்டலங்களில் உள்ள பல கோவில்களில் செய்தபடியே நடுவில் மண்டலம் திருமுதுகுன்றமான விருத்தாசலம், திருவாமாத்தூர், திருவதிகை, திருவெண்ணை நல்லூர் ஆகிய ஊர்களில் செய்த மரியாதையை இந்த பாரசிவருக்கும் செய்யக்கடவராக அல்லாக்கால் சிவதுரோகிகள், இராசதுரோகிகள் போல்வார் ஆகுவராக. இப்படியாக கோவில் பொறுப்பாளர்கள் நாங்கள் இசைந்து பாரசிவருக்கு தீர்மான ஆவணம் செய்து கொடுத்தோம்.

    கோயில் பெயர்கள் சமஸ்கிருதம் ஆனது என்னவோதெலுங்கு நாயக்கர் ஆட்சியில் தான் என்பதை கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன.

    பார்வை நூல்:  தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (C.Era 300 – 1800), க.பன்னீர்செல்வம், 2018.  ARIEp 1938 B. No 492

    https://www.facebook.com/pg/ஶ்ரீ-வாகீஸ்வரர்-திருக்கோவில்-பட்லூர்-245845535884081/posts/

    Share
  • குறளின் கதிர்களாய்…(253)

    செண்பக ஜெகதீசன்

    கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற்
    புண்ணென் றுணரப் படும்.
    -திருக்குறள் -575 (கண்ணோட்டம்)

    புதுக் கவிதையில்…

    அணிகலன் கண்ணுக்குக்
    கண்ணோட்டம்,
    அது இல்லாத
    கண்ணது முகத்தில்
    புண்ணெனவே கருதப்படும்…!

    குறும்பாவில்…

    அணிகலனாய்க் கண்ணை
    அழகுபடுத்துவது கண்ணிறைந்த கண்ணோட்டமே,
    அது இலாதது கருதப்படும் புண்ணெனவே…!

    மரபுக் கவிதையில்…

    அணிகலன் ஆயிரம் போட்டாலும்
    அவற்றி லெல்லாம் சிறந்ததான
    அணியாய்க் கண்ணில் கண்ணோட்டமே
    அழகு படுத்திடும் அதிகமாயே,
    துணிந்தே அறிஞர் சொல்லிடுவர்
    தயையது இல்லாக் கண்ணதுதான்
    பிணியது வந்த உடம்பிலதுவோர்
    புண்ண தென்றே கருதலாமே…!

    லிமரைக்கூ..

    கண்ணோட்டம் உள்ளதுதான் கண்ணே
    அணிகலனாயது அழகினையூட்டும் கண்ணுக்கே,
    அஃதில்லாத கண்வெறும் புண்ணே…!

    கிராமிய பாணியில்…

    எரக்கமிருக்கணும் எரக்கமிருக்கணும்
    கண்ணுல எரக்கமிருக்கணும்,
    எப்பவுமே எரக்கமிருக்கணும்..
    நகநட்டு எதுவும் வேண்டாம்,
    கண்ணுக்கு நகையே
    கண்நெறஞ்ச கண்ணோட்டந்தான்..
    அது இல்லாத கண்ணயே
    எல்லாரும் புண்ணுன்னுதான்
    எண்ணுவாங்களே..
    அதால
    எரக்கமிருக்கணும் எரக்கமிருக்கணும்
    கண்ணுல எரக்கமிருக்கணும்,
    எப்பவுமே எரக்கமிருக்கணும்…!

    Share