Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    கீதை சொன்ன TREND அவனே குசேலன் FRIEND….

    இவன் சிரித்தால் இன்று தீபாவளி….

    N.S.கிருஷ்ணன்….N.S For நரகாசுரன் என்றபகைச்சுவையைப் போக்க வந்த நகைச்சுவை கிருஷ்ணன்….

    ”நல்லா சிரியன், நகைச்சுவை நாயகன்,
    நல்லா சிரியன் நூலுரைத்து(கீதை), -வில்லோனை,
    தேற்றிடும் சாக்கிலே, தேரேறும் தோழனவன்,
    நேற்றின்று நாளைக்கும் நட்பு”….கிரேசி மோகன்….

    Share
  • உயிரிறகு!

    பவள சங்கரி

    நட்பு என்பது இனிமையான பொறுப்பேயன்றி
    அருமையான வாய்ப்பன்று! – கலீல் கிப்ரான்

    frienship

    நாடிச்சென்று
    நயந்துகட்டும் வாய்ப்பின்றி
    அமைந்துவிடுகிறது
    சிறுவிதயங்களைப்
    பிணைக்குமந்த
    நட்பெனும்
    பொற்சரடுகள்
    கடந்ததை உணர்ந்ததாக
    வரப்போவதில் நம்பிக்கையாய்
    அன்றைய நிலையை
    அவ்வண்ணமே
    ஏற்றுக்கொள்ளல்.

    புரிதலே இதன் பொருள்
    புரிந்துணர்வு ஒப்பந்தமல்ல
    மன்னிப்பதே இதன் மகத்துவம்
    மறப்பதல்ல இதன் தத்துவம்
    பொற்சரடின் பிணைப்பு
    தளர்வடைந்தாலும்
    நிலைத்தேயிருப்பது

    பேசவும் கேட்கவும்
    உணர்ந்து
    இடுக்கண் களையவும்
    இயலாத
    பொற்சிகரமாயினும்
    வெற்றுமண்ணே இதன்முன்
    ஆயினும்
    அனைத்தும் உயிராய்
    உன்னத
    உணர்வாய் கனிவாய்
    கேடயமாய்
    சிறகுவிரிக்குமந்த
    பந்தம்
    நட்பெனும் மகரந்தம்!!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ஓவியத்திற்கேற்ற வெண்பா எழுதி காலைக் கடனை ஸாரி கேசவ்திரு ”மாலைக் கடனை” முடிக்காமல் முன்பு எழுதியதை அனுப்பி ஓபி அடித்து விட்ட உறுத்தல் கொண்டதால்….

    ”கைFULLஆ வெண்ணையொடு, கைவல்ய கண்ணனை,
    கைவல்ல கேசவ் கொடுக்கையில், -பொய்மல்கும்
    மண்நெய்க்(கு) அலைவதேன்! மானுடா , போய்மாட்டுப்
    பண்ணையில் கண்ணனைப் பார்”….கிரேசி மோகன்….

    Share
  • கலாம் உனக்கு சலாம்

    சத்தியமணி

    kalam

    கலமென்று விரைந்தாய்

    கலாமென்று உரைத்தாய்
    காலமென்று கரைந்தாய்
    காலார துயின்றாய்

    இருக்கின்ற போதுன்னை
    எத்தனை பேர் அறிந்தார்
    இல்லாதபோதுன்னை
    எத்தனை பேர் சுமந்தார்

    வழித் துணையாய் நிழலாக‌
    எத்தனை பேர் தொடர்ந்தார்
    தன்வழியில் எத்தனையோ
    தட‌மாற்றி மறைந்தார்

    புகைப்படம் உடன் எடுத்தோர்
    முகப்பதிவில் பகிர்ந்தார்
    புரியாமல் உடல் எடுத்தார் (அவர் என)
    புரிந்து நீ நகைத்தாய்

    மதமென்றும் இனமென்றும்
    உறவுரைத்து அணைத்தார்
    மதியாலே அவரெண்ணம்
    அறிந்துநீ அணைந்தாய்

    அடுத்துவரும் தலைமுறையும்
    ஆற்றல்பெற அலைந்தாய்
    அணுயுகமும் (ஏவு) கணைமுகமும்
    அவதியுற பிரிந்தாய்

    திசைகாட்டி உரையாற்றி
    முயற்சிபல புரிந்தாய்
    அசையாத பாரதத்தை
    முன்னேற்ற முனைந்தாய்

    பள்ளியின் வாசல்களை
    பாதங்களில் அடைந்தாய்
    பல்வேறு அறிவுரையால்
    ஆற்றல்மழை பொழிந்தாய்

     

    அரசியலில் கலக்காமல்
    அமுதமெனத் திகழ்ந்தாய்
    அலைகேசம் குலுங்கலுடன்
    அன்புகவி பகிர்ந்தாய்

    தீராதப் பிரிவுதுயர்
    தனைகொடுத்து பிரிந்தாய்
    திருந்தாத பாரதத்தில்
    இருந்து உயிர் துரந்தாய்

    வரலாறு வற்றாது
    உனைக் காட்டி வாழ்ந்தால்
    வரமுண்டு வளமுண்டு
    உனைப் போல வாழ்ந்தால்

    கலாம் உனக்கு சலாம்

    Share
  • காலத்துக்குக் காலம் உணர்வுகள் மாறுபடுமா?

    தஞ்சை வெ.கோபாலன்

                           11825115_1648443785371404_7891288417354296886_n

    முன்பு சென்னை மாகாணத்தைப் பிரித்துத் தெலுங்கு மொழி பேசுவோர் அதிகமுள்ள பகுதிகளை ஆந்திரப் பிரதேசம் என்று தனி மானிலமாகப் பிரிக்க வேண்டுமெங்கிற கோரிக்கையை வைத்து பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருந்தார். அப்போதைய ஆந்திரத் தலைவர்கள் டி.பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன்ற பெரியவர்கள் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்ததோடு பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதத்துக்குத் தூண்டி அவர் இறப்பதையும் பார்த்திருந்தனர். உடனே தெலுங்கு மக்கள் வசிக்கும் பகுதிகள் தீப்பற்றி எரிந்தன. ஆந்திரம் கேட்டதோடு “மதறாஸ் மனதே” என்கிற கோஷமும் வானைப் பிளந்தது. தமிழகத்திலிருந்து வடக்கே செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. தமிழர்கள் தாக்கப்பட்டனர். விளைவு, ஜவஹர்லால் நேரு மனமிரங்கி தனி ஆந்திரம் அமைக்க ஒப்புக்கொண்டார். இது வரலாறு. ஒரு தனிமனிதனின் உண்ணாவிரதம், அவர் இறப்பு, அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறை வெறியாட்டங்கள், மத்திய அரசு இறங்கி வந்து கோரிக்கையை அங்கீகரித்தது இவை அனைத்தையும் நம் காலத்தில் பார்த்த நிகழ்ச்சிகள்.

    ஆந்திரம் பிரிந்து போய் தனி மானிலம் ஆன பின்பு மலபார் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கேரளம் உருவானதும், தமிழ் பேசும் எஞ்சிய சென்னை மாகாண பகுதிகளுக்குத் தமிழ் நாடு என்று பெயரிட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சங்கரலிங்க நாடார் என்பவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அப்போது பெயர் மாற்றம் நிகழவில்லையாயினும் சி.என்.அண்ணாதுரை முதலமைச்சரான பின்பு தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

    1937இல் ராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சரான போது சேலம் ஜில்லா முழுவதும் முழு மது ஒழிப்பு அமுல் படுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்பட்டதைத் தொடர்ந்து 1947க்குப் பிறகு சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு அமுல் படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டது. 1947 ஆகஸ்ட் 15இல் நடந்த சுதந்திர தின பேரணிகளில் பெரிதும் மக்கள் கவனத்தைக் கவர்ந்த பகுதி, குடி ஒழிந்ததைக் கொண்டாடும் வகையில், சிலர் குடிகாரர்கள் போல் நடந்து கொண்டு, கையில் வடைக்கு பதில் தவக்களையைக் கடிப்பதுபோல் பாவனை செய்து, மனைவியை அடிக்கும் குடிகாரனை உருவக்கப்படுத்தி வேடமிட்டும் வந்தவர்களை மக்கள் பார்த்து மகிழ்ந்து கைதட்டி ஆர்ப்பரித்த காட்சிகளைக் கண்டிருக்கிறேன். மதுவிலக்கு மிகத் திறமையாகக் கையாளப்பட்டுதான் வந்தது. மதுவிலக்குப் போலீஸ் துறை தனித்து இயங்கியது. அது திறமையோடு இயங்கியதையும் பார்த்திருக்கிறேன்.

    திருட்டு குற்றம்தான்; கொலை செய்வதும் குற்றம்தான்; இந்தியன் தண்டனை சட்டம் பல்வேறு செயல்களைக் குற்றம் என்று சொல்கிறது. அப்படி சட்டம் சொன்னாலும், அந்தக் குற்றங்கள் ஆங்காங்கே சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அல்லவா? அதற்காக குற்றம் நடக்கிறது என்பதற்காகச் சட்டத்தை நீக்கவில்லையே. மதுவிலக்கு அமுலில் இருந்தபோதும், சில இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதும், திருட்டுத் தனமாக கள் இறக்கிக் குடிப்பதும் இருந்துகொண்டுதான் இருந்தன. அப்படிப்பட்டோரைப் பிடிக்கக் காவல்துறையும் இருந்தது. குடித்துவிட்டு வருபவன், குடிக்கக் கையில் சாராயம் எடுத்துச் செல்வது, சாராயம் திருட்டுத் தனமாகக் காய்ச்சுவது இவற்றைப் போலீஸ் தடுக்கத்தான் செய்தது. அப்படியும் குற்றங்கள் நடந்து கொண்டு இருந்தது. அதற்காக இந்த சட்டம் வேண்டாம், மக்கள் தாராளமாகக் குடிக்கட்டும், இந்த விற்பனையைத் தனியார் வசம் விட்டுவிட்டால் லாபம் அனைத்தும் தனியாருக்குப் போய்விடும் என்று அரசாங்கமே சாராய வியாபாரம் செய்யத் தனிப் பிரிவு ஏற்படுத்தி, அதன் மூலம் ஏராளமான ‘டாஸ்மாக்’ கடைகளைத் திறந்து, மக்களை, குடிகாரர்களை மட்டுமல்ல, மாணவர்களை, சிறுவர்களை, இளம் பெண்களை, வேலைக்குப் போகும் படித்த பெண்களை, இளைஞர்களை, முதியவர்களை, பொறுப்பற்ற மனிதர்களைக் குடிகாரர்களாக ஆக்கியப் பெருமை யாரைச் சாரும்? எண்ணிப் பார்ப்போம்.

    ராஜாஜி ஒரு நாள் விடியற்காலையில் காரில் புறப்பட்டு எங்கோ செல்கிறார். கடற்கரைசாலைக்குச் சென்று அங்கு நடை பயிற்சி செய்வார் என்று நினைத்தார்கள். ஆனால் அவரோ முக்கியமான நபர் ஒருவரைச் சந்தித்து, அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு, ஐயா! ஒரு தலைமுறை மற்ந்து போயிருக்கிற குடிப்பழக்கத்தை மீண்டும் கடைகளைத் திறந்து மக்களைக் கெடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சினார் என்கிறார்கள். ஆனால் அவரோ, அவர் சொற்களைக் கேட்காததோடு, அவர் வேறு விஷயமாய்த் தன்னைப் பார்த்தார் என்று விஷயத்தைத் திசைதிருப்பி விட்டுவிட்டார். அன்று பிடித்தது சனியன் தமிழ் நாட்டுக்கு. எங்கும் குடிகாரர்கள், சாலையில் எதிர்ப்படும் பத்துப் பேரில் எட்டு பேர் குடித்துவிட்டு வருகிறவர்கள். கண்கள் சிவந்து, உடை கசங்கி, நிலை தடுமாறி, வாய் குழறி, உடை மட்டும் நாகரிகமாக வரும் எத்தனை பேரை தினமும் பார்க்கிறோம். எத்தனை படிக்காத பெண்மணிகள் குடிகார கணவன் மார்களிடம் அடிபட்டு, உதைபட்டு, தான் சம்பாதிக்கும் காசையும் அவன் குடிப்பதற்காக இழந்துவிட்டு, தான் வேலை செய்யும் வீடுகளில் வந்து புலம்புவதைக் காண முடிகிறது. வெள்ளிக்கிழமை மாலையானால் போதும், குடிகாரக் கடைகளின் வாசலில்தான் எத்தனை விதமான ஆசாமிகள். படித்தவர்கள், காரில் வருபவர்கள், உழைப்பாளிகள், பிறருக்கு வாங்கிக் கொண்டு போக வந்திருக்கும் சிறுவர்கள், தாங்களே குடிப்பதற்காக நிற்கும் பையங்கள், பெண்கள், உழைக்கும் பெண்கள் இப்படி எத்தனை விதம்.

    ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் தினமும் குடித்துவிட்டு கண்களை மூடிய வண்ணம் தன் இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பும் காட்சியைப் பார்த்து வருகிறேன். அடிக்கடி அவர் யார் மீதாவது வண்டியை மோதிவிட்டு பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருப்பதையும் பார்த்து வருந்தியிருக்கிறேன். ஒரு முறை அவர் மூக்குக்கண்ணாடி தூர விழுந்து கிடந்ததை எடுத்து அவரிடம் கொடுத்த போது மூடிய கண்களோடு, என்னைக் கன்னத்தைத் தொட்டு நன்றி சொன்னதையும் மூக்கைப் பொத்திக் கொண்டு ஏற்றுக் கொண்டேன். இதுதான் இன்றைய தமிழ் நாடு.

    இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல, ஜூலை 31 அன்று கன்யாகுமரிக்கு அருகில் டெலிபோன் டவர் ஒன்றின் மீது ஏறி மதுவிலக்கைக் கொண்டு வரச்சொல்லி போராடிய காந்தியவாதி யொருவர் இறந்து போன கொடுமையையும் ஊடகங்கள் இடைவிடாது ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பொட்டி ஸ்ரீராமுலு இறப்பு நடந்த போது இருந்த எதிர் விளைவுகள் போலவே, சங்கரலிங்க நாடாரின் இறப்புக்கு இருந்த அனுதாபம் போலவே இந்த காந்தியவாதியின் இறப்புக்கு ஏன் ஏற்படவில்லை என்று நெடு நேரம் யோசித்ததில் புரிந்தது, நம்மில் பலர் மதுவிலக்கு வேண்டும் என்பதிலோ, அல்லது இந்தக் கோரிக்கைக்காக ஒரு நபர் தன் உயிரை இழந்தது குறித்தோ சற்றும் கவலைப்படவில்லை என்பது புரிந்தது. சின்ன அண்ணாமலை ஒரு பழமொழி சொல்வார்: “ஏற்கனவே பையனுக்கு தமிழே தள்ளாபுள்ளா, இதிலே ஆங்கிலம் தலைகீழ் பாடமாம்” என்பார். குடிப்பழக்கத்தை ஒழித்திட நம்மவர்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. இல்லாவிட்டால் ஒரு காந்தியவாதி மிக உயர்மான டவரில் ஏறி உயிர்விட்ட பின்பும் சற்றும் அயர்ந்து விடாமல் தங்கள் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மவர்களைப் பார்த்து வருந்துவதா? துக்கப்படுவதா? போராடத் துடிப்பதா? என்ன செய்வது? அதை முடிவு செய்யவாவது மனம் தெளிவாக இருக்க வேண்டுமல்லவா?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”அதனால் இதுவாய், இதனால் அதுவாய்,
    மதனால் மயங்கும் மனமே ,-முதலாம்,
    பதியாய் இருக்கும் ,பசுநேசன் பாதம்,
    கதியாய்க் கிடக்கக் களிப்பு”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    crazy1

    ”வாக்கிலே பாரதி வார்த்தைகள் வந்திட,
    நாக்கிலே நம்மாழ்வார் நின்றிட, -நோக்கிலே,
    ஆண்டாளின் பக்தி அகலா(து) இருந்திட,
    வேண்டினேன் கண்ணா வழங்கு….கிரேசி மோகன்….

    Share
  • யாக்கோபும் தூக்குதண்டனையும்!

    -சேசாத்திரி பாஸ்கர்

    யாக்கோப் தூக்கில் இட்டதற்கு எல்லோரும் எம்பி குதிக்கிறார்கள். சரி, இவர்களின் ஹுமன் ரைட்ஸ் இத்தனை வருஷம் என்ன செய்தது ? வன்முறையைத் தடுக்க முடிந்ததா ? இவர்கள் வன்மம் ஒரு பக்கம், இவர்கள் கோபம் ஒரு பக்கம். இத்தனை உயிர்களைப் பிரித்த இவர்களுக்கு மன்னிப்பு கொடுத்தால் மக்கள் அவனைக் கல்லடித்து கொன்று விடுவார்கள். நம் ’செகுலர்’ என்ற அன்புப் போர்வை இவர்கள் துப்பாக்கி வைத்து கொள்ளும் மறைவிடமா? சட்டத்திற்கு என்ன மரியாதை?தூக்கில் போட மாட்டார்கள் என்ற தைர்யம் தானே இவர்களை மேலும் மேலும் தப்பு செய்யச்சொல்கிறது?

    அட, மக்களைக் கொல்லும்போது ஒரு சின்ன புத்தி கூடவா எட்டி பார்கவில்லை?  இது தப்பு ஆச்சே என்று ஒரு நொடி கூட யோசிப்பு இல்லையா ? இதை எல்லாம் மீறி அவர் தவறு செத்தால் அவர் எந்த மன்னிப்புக்கும் அருகதை அற்றவராகி விடுகிறார். ஒரு காவல் துறையோ அல்லது அரசாங்க அதிகாரியோ தாக்கப்பட்டால் அதை தவிர்க்கச் சுட்டால் அது கொலையா? அது போல் பெரிய தப்புக்கு மரண தண்டனை அவசியம்.

    தூக்கில் போட்டால் சிலருக்கு வலிக்கிறது. அப்ப என்கவுன்ட்டர் தான் ஒரே வழியா? சரி… இவன் தூக்கு நம் கலாசாரத்திற்கு ஒத்து வாராது. நம் பூமி பரோபகார பூமி; சகிப்புக்குப் பேர் போனது. எத்தனை நாளைக்கு?

    இந்தத் தூக்கிலிடும் விஷயம் பக்கத்துக்கு நாடுகளுக்கான செய்தி. எவ்வளவோ விஷயத்தை நாம் மறக்கிறோம். இதையும் கொஞ்சம் கஷ்டப்பட்டு மறப்போம். கொசுவைத் தட்டும்போது பறக்கும்; மூட்டைப் பூச்சியை நசுக்கவில்லயா? தப்பு செய்ய எண்ணும் நமக்கும் இது ஒரு பாடம்! செத்து போனது பகத் சிங் அல்ல; கட்டபொம்மனும் அல்ல!

     

    Share
  • எங்கேயும் எப்போதும் சங்கீதம் அவர் பெயர்

    எஸ் வி வேணுகோபாலன்

    msv_2476658g
    “ஆபட்ஸ்பரி திருமண மண்டபம்” என்ற பெயரைக் கேட்டதுமே, எங்களுக்குச் சம்பந்தமே இல்லாத தி நகரின் மிகப் பெரிய ஜவுளிக்கடை இல்லத் திருமணத்திற்கு அண்ணன் தம்பிகள் நாங்கள் புறப்பட்ட எழுபதுகளின் காலம் மறக்க முடியாதது. இத்தனைக்கும் பத்திரிகை மேற்கு மாம்பலத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான – அந்தமானில் வர்த்தகம் செய்துவந்த ஒரு குடும்பத்துக்குத்தான் வந்திருந்தது. இருந்தால் என்ன, எப்படியோ அந்த அமர்க்களமான அழைப்பிதழ் எங்கள் கண்ணிலும் பட்டுவிட்டது. சென்னையின் பிரசித்தமான அந்த மண்டபத்தை நேரில் பார்த்துவிடுவது, தடபுடலாக இருக்கப் போகும் சாப்பாட்டை ஒரு பிடி பிடிப்பது இவை மட்டுமல்ல எங்கள் நோக்கம். வரவேற்பில் இசை விருந்து; எம் எஸ் விஸ்வநாதன் குழுவினர் என்று போட்டிருந்ததே மிகப் பெரிய காரணம். அடேங்கப்பா, அவ்வளவு பெரிய இசையமைப்பாளரை அருகே பார்த்துவிட முடியுமா, திரைப்படத்தில் வாசித்த அதே இசையை மேடையிலும் கேட்க முடியுமா, அப்படியானால் நமக்கு உயிராயிருக்கும் பாடகர்களும் அல்லவா வந்து இறங்குவார்கள்….அட்ரா சக்கை விடக் கூடாது என்ற தீர்மானத்தோடு போய் இறங்கினோம்……வாழ்நாள் மறக்க முடியாத இசை விருந்தை அருந்தினோம் அன்று!

    கச்சேரியின் தொடக்கத்தில், அந்தக் குள்ளமான மனிதர் இசைக் கருவிகளின் நடு நாயகமாக நின்றுகொண்டு இரண்டு கைகளிலும் சிட்டிகை போட்டு ஒன டூ த்ரீ சொல்லவும், டண்டன் டண்டன் டண்டன் டண்டன்…..ஆஹா…காதலிக்க நேரமில்லை படத்தின் நாளாம் நாளாம் திருநாளாம்….முழுக்க முழுக்க இசைக் கருவிகளின் வாசிப்பிலேயே கொடி கட்டிப் பறக்க, இந்த மனிதர் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் கொண்டே இருக்கவும், பாடல் முடியும்போது இரண்டு கைகளையும் குறுக்காகக் கொண்டுபோய் முடிச்சு போட்டு நிறுத்தவும் பாடல் நிறைவடையவும் அத்தனை துல்லியமாக எங்கள் கண் முன்னே நிகழ்ந்தது….வயலின் வாசிப்போரும், தபலாக்காரர்களும், பேண்ட் இசைப்போரும், புல்லாங்குழல் கலைஞரும், இன்னபிற வாத்தியக்காரர்களும் அவரது கண்ணோடு கண்ணினை நோக்கியவாறே தங்கள் இசைப்படகை அசாத்தியமாக செலுத்திக் கொண்டிருந்த காட்சி, ஓர் இசையமைப்பின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கண்டாற்போல் அத்தனை இன்பமாய் அமைந்தது.

    இசைக் கச்சேரிகளின்மீது பித்துப் பிடிக்க வைத்த அந்த ஒரு காட்சி, இசையமைப்பாளர் என்ற கலைஞர் குறித்த திணறடிக்கும் அனுபவமாகவே உள்ளிறங்கியது. அதன்பின் எந்தப் பாடலை வானொலியில் கேட்டாலும்கூட, மனத்திற்குள்ளே ஓர் இசைக்குழு மொத்தமாக மானசீகமான இயங்கி வாசிக்கத் தொடங்குவதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். எத்தனை நூறு பாடல்கள், எத்தனை எத்தனை இசைத்தட்டுகள், எத்தனை எத்தனை இசைக் கச்சேரிகள்….ஆனால் எம் எஸ் வி உள்ளிருந்து நெறிப் படுத்திக் கொண்டே இருக்கும் இசைதான் அவையனைத்தும்.

    மெட்டுக்குப் பாட்டோ, பாட்டுக்கு மெட்டோ, தனது கைகளில் வழங்கப்படும் ஒரு கவிதையை அதன் உயிர்மூச்சைத் தன்னுள் இழுத்துக் கொண்டு உயிர்த் துடிப்பான வகையில் அதன் நயங்கள் அனைத்தும் மின்னித் தெறிக்கத் தக்க பாடலாக உருமாற்றித் திருப்பிக் கொடுக்கும் ரசவாதத்தை எம் எஸ் வி ஓயாமல் செய்து கொண்டே இருந்தார். எத்தனை எத்தனை உணர்வுகள், என்னென்ன உணர்ச்சிகள், அவற்றின் பாவத்தை அப்படியே இசையில் நனைத்து வழங்க முடிந்தது அவருக்கு. ஒரே திரைப்படத்தில் முற்றிலும் முரண்பட்ட வெவ்வேறு காட்சிகளுக்கான பாடல்களுக்கான இசையை அத்தனை அபாரமாக கொண்டுவரத் தெரிந்த மேதை எம் எஸ் வி. தவப்புதல்வன் படத்தில், சிவாஜி கணேசன் கேபரே நடனத்திற்கு இசைத்துப் பாடுபவர். ராண்டார் கை மற்றும் வாலி கூட்டு உழைப்பில் தயாரான லவ் இஸ் ஃபைன் டார்லிங் என்று தொடங்கும் அந்தப் பாடலின் துள்ளாட்டம் ஒரு பக்கம். கிண்கிணி கிண்கிணி கிணி எனும் கிருஸ்துமஸ் தாத்தா பாடல் ஒரு சுவை என்றால், உலகின் முதலிசை தமிழிசையே என்ற போட்டிப் பாடல், பிறகு இசை கேட்டால் புவி அசைந்தாடும்….மிகவும் கொண்டாடப்படும் பாடல்.

    இரட்டையராக விஸ்வநாதன் – ராமமூர்த்தி கட்டியாண்ட இசைக் கோட்டையிலிருந்து ஆயிரத்தில் ஒருவனும், புதிய பறவையும் காலகாலத்திற்கும் பேசப்படும் பாடல்களைக் கொண்டவை. உன்னை நான் சந்தித்தேன் பாடலில் குழையும் பி சுசீலாவின் குரல், பார்த்த ஞாபகம் இல்லையோ என்று சீண்டிக் கேட்பதாக பரிணாமம் பெற வைத்த மேதைமை அவர்களுக்கு இருந்தது. ஓடும் மேகங்களே என்று தூதுவிட்ட டி எம் எஸ் குரலை, எங்கே நிம்மதி என்று அலறித் தவித்துத் தத்தளித்துக் கதற வைத்த திறமை அது. தனியே வந்தபிறகு, எம் எஸ் வியின் அடுத்த பரிமாணம் துலங்கத் தொடங்கியது. ரீ ரிகார்டிங் எனப்படும் பின்னணி இசையில், ஒலிச்சித்திரத்தை வானொலியில் கேட்கத் தொடங்கும்போதே, படம் முழுக்க பரவி விரவும் குறிப்பிட்ட இசைக்கோவை மூலம் அடையாளப்படுத்தும் அவரது லாவகம் அருமையானது. தங்கப்பதக்கம் படத்தில் பாத்திரங்களின் சிக்கலான சந்திப்புகளின் போதெல்லாம் இடம் பெறும் அந்த வயலின் இசை எப்போது ஒலிக்கும்போதும் கண்களில் நீரை வரவழைக்கத் தக்க உணர்ச்சி தூண்டுதளைச் செய்து கொண்டிருப்பது.

    எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று பல்லவியில் தொடங்கி சரணங்களில் பயணம் செய்யும் பாடலினூடே ஒலிக்கும் இசையின் சமன்பாடு உருக வைக்கவும், சிலிர்க்கச் செய்யவும், கொதிக்க வைக்கவும், கொதிநிலையைத் தணிக்கவுமாக என்னென்னவோ ஜால வித்தைகளைச் செய்து கொண்டிருக்கும் இசையமைப்பை எம் எஸ் வி எண்ணற்ற வகைகளில் பரிசோதனை செய்தபடி ரசிகர்களுக்குக் கொட்டிக் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். பல்லவியில் விடுபடும் சொற்கள் மீண்டும் சரணத்தில் கலந்து தழுவிக் கொள்ளும் இணைப்பு இசையில் தபலாக்களின் முடிச்சு தாவித் தழுவிக் கொண்டாட வைப்பதாயிருக்கும். கேள்வியின் நாயகனே (அபூர்வ ராகங்கள்) பாடலில் வயலினும், மிருதங்கமும் கதாபாத்திரங்களாகவே மாறி ஒரு முடிவற்ற உரையாடலை நடத்திக் கொண்டிருக்கும். மரோ சரித்ரா எனும் கே பாலசந்தர் அவர்களது தெலுங்குப் படத்தின் பாடல்களை தமிழ் ரசிகர்கள் அனாயாசமாக முணுமுணுக்க முடிந்ததில் எம் எஸ் வியின் இசை மிகப் பெரிய பங்கு வகித்தது. ‘ஏ திக பூவனு ஏ கொம்ம தேட்டினு கலிபிந்தி ஏவிந்த அனுபந்தமு’ பாடலும், ‘பலே பலே மகாடிவோய் பங்காரு நா சாமிவோய்’ பாடலும் காலத்தால் அழியாதவை.

    பாடலின் தொடக்கத்திலும், இடையேயும் வரும் ராக ஆலாபனை பாடலுக்கு கம்பீரம் சேர்ப்பது. தெய்வம் தந்த வீடு (ஜேசுதாஸ்-அவள் ஒரு தொடர்கதை), பூ மாலையில் ஓர் மல்லிகை (ஊட்டிவரை உறவு)….என்று மிகப் பெரிய பட்டியல் அது. சிரிப்பில் உண்டாகும் ராகங்களில் (டி எம் எஸ் – பி சுசீலா: எங்கிருந்தோ வந்தாள்) பாடலில் சிரிப்பையே ஸ்வரங்களில் கொண்டுவந்திருப்பார் எம் எஸ் வி. தானே படிய ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ (முத்தான முத்தல்லவோ) பாடலில் அவரது சிரிப்பும் சங்கீத சிரிப்பாக வந்திருக்கும். தமிழ்ப் புலமையும், பேரும் பெற்றிருந்த சம காலக் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி இருவரிடையேயும் தொழில்முறை நட்பும், தோழமை நேயமும் பாராட்டி கருத்தொற்றுமையோடு பல நூறு பாடல்களை உருவாக்கிய சாதனை அசாதாரணமானது. ஆனால் அந்தச் செருக்கு தலைகாட்டாத அவரது எளிமைதான் பாமர ரசிகர்களின் நெஞ்சில் அவரைக் குடியமர்த்தி இருப்பது.

    பாடகராக அவரது குரல் தனித்துவம் பெற்றிருந்தது. நீ இல்லாத இடமே இல்லை எனும் அல்லா அல்லா பாடல் ஒரு போதும் மறையாது எனில், கண்டதைச் சொல்லுகிறேன், சொல்லத்தான் நினைக்கிறேன், சம்போ சிவசம்போ, உனக்கென்ன குறைச்சல் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான முறையில் அமைந்தவை. உருவங்கள் மாறலாம் படத்தில் இடம் பெற்றிருந்த இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்திய திருநாயகா எனும் பாடல் மனித வாழ்வின் சொந்த விசாரணைக்கு ஏற்ற குரலில் ஒலிப்பது. எதற்கும் ஒரு காலம் உண்டு பாடல் (சிவகாமியின் செல்வன்) உருக்கம் மிகுந்த குரலில் ததும்புவது. நடிகராக அவர் அறியப்பட்ட சில படங்களில் அவரது தனி முத்திரை இருந்தது.

    தன்னோடு ரஷ்யப் பயணத்தில் உடன்வந்த எம் எஸ் வி, மாஸ்கோ ம்யூசியத்தில் குழந்தையைப்போல் இது என்ன, அது என்ன என்று அப்பாவியாகக் கேட்டு வந்தாராம்; பிறகு, அங்கிருந்த மிகப் பெரிய பியானோ கருவியைக் கண்டதும் சிறப்பு அனுமதி கேட்டுப் பெற்று எந்த சிரமமும் இன்றி அதை வாசித்துக் காட்டியபோது வழிகாட்டியாக வந்தவர்களும், ரஷ்யர்களும் அதிர்ந்து கொண்டாடியதை கண்ணதாசன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். மேதைமைக் குழந்தையாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் எம் எஸ் விஸ்வநாதன். பாடகர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தவர், கவிஞர்களின் சொற்களுக்கு அழியாத வடிவம் அளித்தவர், படங்கள் பேசப்படக் காரணமாக இருந்தவர், விருதுகளைக் கடந்த அங்கீகாரத்தோடு விடை பெற்றுச் சென்றிருக்கிறார்.

    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் என்பதே அவரது மூச்சுக் காற்றாக இருந்திருக்கிறது. அவர் மறையவில்லை. காற்றில் கலந்திருக்கிறது அவர் உயிரும் ஓர் இசைக் கோவையாக.

    ***************

    நன்றி : சினிமா எக்ஸ்பிரஸ் இதழ்

    Share
  • அடியாரும், ஆன்மீகமும் – 4 – பூசலாரும், ராமானுசரும்!

    பவள சங்கரி

    ஒருவரின் செயல்திட்பம் சரியாக அமைய வேண்டுமாயின் அவருக்கு நற்சிந்தைகளுடனான நிலையான மனத்திட்பம் அவசியமாகிறது. அந்த வகையில் அடியார்களின் மனத்திட்பத்தின் மகிமை பெரிதும் சிந்தித்து உணர்ந்து போற்றத்தக்கது. தாயுமானவரின், “காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட அதன்பிறகே ஓடுந் தொழிலாற் பயனுளதோ” என்ற பதத்தின் மூலமும் இதனை அறியலாம். ஆணித்தரமான அத்தாட்சிச் சாதனங்களைப் பெற்றுள்ள திருத்தொண்டர் புராண வரலாறுகளுள் முக்கியமானதாகக் கருதப்படுவது பூசலார் நாயனார் வரலாறு.

    G_T3_646

    பொருவருந்தண் டகநாட்டு நின்ற வூர்வாழ்
    பூசுரர்கோப் பூசலார் பந்தி யாலே
    யிருநிதியந் தேடியா லயமு மாக்கி
    யெழுந்தருளப் பண்ணுவதா வெண்ணுங் காலை
    யரனதனைக் காடவர்கோற் கருள மன்ன
    னந்நகர மணைந்தவ்வா றறிந்து தாழ
    விரவுமனக் கோயிலுற விருத்தி யங்கண்
    வேண்டுவகொண் டிறைஞ்சியருண் மேவி னாரே.

    apoosalar

    திருநின்றவூர் எனும் திருத்தலத்தில் வேதியர்கள் மரபிலே தோன்றியவரான பூசலார் நாயனார் என்பவர் சிறந்த சிவபக்தராகவும், அடியார் சேவையில் திளைத்து இருந்ததோடு ஆகம வேத, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்தவராகவும் இருந்தவர். இறைவன் மீதுகொண்ட ஆழ்ந்த பக்தியானல், அவருக்கு மிகப்பெரும் ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய ஏழ்மை நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. அறிந்தோரிடம் உதவி கேட்டும் பெற இயலாத நிலையில் பெரிதும் உளம் நொந்தார். பெருஞ்செல்வம் நிதியாகப் பெறுமளவிற்கு வாய்ப்பு அமையாத பூசலார் நாயனார், புறத்தே அமைக்க முடியாத பிரம்மாண்ட ஆலயத்தை அகத்தே அமைக்கும் மனத்திட்பம் பெற்றார். அதற்குத் தேவையான பொருட்களான, கருங்கல், மரம், சுண்ணாம்பு, மண், கருவி, கரணங்கள் என அனைத்தையும் மனத்திலே கொண்டு சேர்த்துக் கொண்டார். அடுத்து ஆலயம் அமைக்கும் பணி துவங்கியது. தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து, ஐம்புலன்களையும் கட்டுக்குள் நிறுத்தி, ஆகம முறைப்படி மனத்தினுள்ளே கோயில் எழுப்பத் தொடங்கினார். இரவு பகலாக கோயில் அமைப்பதைக் காட்டிலும் வேறு சிந்தையேதும் கொண்டாரில்லை. அகத்தே எழும்பிய ஆலயத்தில், ஆச்சாரப்பூர்வமாக, மூலவருக்கான தனியறை, கொடி மரம், அர்த்த மண்டபம் , மகா மண்டபம் , பிரம்மாண்டமான மதில்கள், திருக்குளம், திருக்கிணறு, யாகசாலை , அலங்கார மண்டபம், ராசகோபுரம் போன்ற அனைத்தையும் அற்புதமாக உருவாக்கி முடித்தார்.

    பூசலார் நாயனார் இத்தகைய மனக்கோயில் அமைத்த காலம், “காடவர் கோமான் கச்சிக் கற்றளி யெடுத்து முற்ற, மாடெலாஞ் சிவனுக்காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்த” காலம் என்கின்றனர் ஆன்றோர். ஆம், அதே காலகட்டத்தில், காஞ்சி மாநகரிலும், கி. பி. 685 – 720 வரை ஆண்ட பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்மன் என்ற அரசனால் மிகச் சிறந்த கட்டிடக்கலையுடன் பெரும் சிவாலயம் ஒன்று உருவாகிக்கொண்டிருந்தது. அதற்கான அனைத்து கட்டுமானப் பொருட்களும் பல்வேறு இடங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு, தேர்ந்த சிற்பிகள் மூலம் அற்புதமான சிற்பங்களும், ஏனைய கலைப்படைப்புகளும் உருவாகிவிட்ட நிலையில், கயிலைநாதனுக்கு தாம் எழுப்பியுள்ள அழகு நயம் வாய்ந்த கற்கோவிலுக்கு குடமுழுக்கு வைபவம் செய்யும் நாளைக் குறிக்க தேர்ந்த வேதியரை அழைத்தான் மன்னவன். அதற்கான நாளும் குறிக்கப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டு, மக்கள் ஆலயத் திறப்பு விழாவிற்காக ஆவலுடன் காத்திருந்தனர். விடிந்தால் குடமுழுக்கு நிகழ்ச்சி என்ற நிலையில், பல்லவ மன்னன் மனமெல்லாம் பூரிப்புடன் மஞ்சத்தில் கண்ணயர்ந்திருந்தான். அப்போது ஆழ்நித்திரையில் ஆண்டவனார் தோன்றி,

    நின்றவூர்ப் பூசல் அன்பன்
    நெடிதுநாள் நினைந்து செய்த
    நன்றுநீ டால யத்து நாளை
    நாம் புகுவோம் நீயிங்கு
    ஒன்றிய செயலை நாளை
    ஒழிந்துபின் கொள்வாய் என்று
    கொன்றைவார் சடையார் தொண்டர்
    கோயில் கொண்டருளப் போந்தார்.

    அதாவது, அன்பர் பூசலார் நீண்ட நாட்களாக நினைந்து உருவாக்கியுள்ள ஆலயத்திற்குள் நாளைப்புக முடிவெடுத்துள்ளோம். அதனால் உன் நிகழ்ச்சியை பின்னொரு நாளில் தள்ளி வைத்துக்கொள்வாயாக.. என்று சொல்லிப் போனார்.

    சங்கரனார் மேல் கொண்ட ஆழ்ந்த பக்தியினால் எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக பொன்னும், பொருளும் கொண்டு பேரரசனால் கட்டப்பட்ட கோயில் எந்த அளவிலும் இணையாகாது என்பதை உணரச் செய்தார்.

    சேக்கிழார் திருவாக்கில், “சாதனத்தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி நாதனுக் காலயஞ்செய் நலம்பெறு நன்னாட் கொண்டே ஆதரித் தாகமத்தா லடிநிலை பாரித்தன்பாற் காதலிற் கங்குற்போதுங் கண்படா தெடுக்க லுற்றார்” என்பதையும் அறியலாம்.

    நித்திரையிலிருந்து சட்டென விழித்த மன்னனுக்கு பேராச்சரியம். ஆண்டவன் வாக்கு பொய்யாகாதே. ஆயினும் தாம் எழுப்பியுள்ள ஆலயத்தைக்காட்டிலும் சிறந்ததொரு ஆலயம் எப்படி தன் கவனத்திற்கு வராமல் போனது என்று அதிசயித்தவாறு, உடனே அப்படிப்பட்ட ஆலயத்தைக் காண வேண்டும் என்று தேடிச் சென்றான் பல்லவ மன்னன். வழியில் கண்ட ஒரு விவசாயியிடம் இதுபற்றி விசாரித்தபோது, ‘இலுப்பை மரத்தடியில் பித்தர் ஒருவர் கோயில் கட்டுவதாக பிதற்றிக் கொண்டிருந்தார் , அவரைப் போய் கேளுங்கள்’ என்று சொன்னார். அவரைச் சென்று பார்த்த மன்னன் அதிர்ந்து போனான்.

    வேதியரை வீழ்ந்து வணங்கினான் வேந்தன். பின் பூசலாரின் எண்ணமும், அவர்தம் பக்தியின் ஆழமும் அறிந்த மன்னன், அவர் விருப்பப்படி ஆலயம் எழுப்பினான். இதயத்தில் கோவில் கொண்ட ஈசுவரருக்கு இருதயாலீசுவரர் என்ற திருநாமமும் அமைந்தது. பின்னர் மன்னர் காஞ்சி சென்று, தாம் அமைத்த கைலாசநாதர் ஆலயத்திற்கு மகிழ்ச்சியுடன் குடமுழுக்கு செய்வித்தார். வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைக் கொண்டுள்ள திருநின்றவூர் இருதயாலீசுவரர் சந்நிதியின் கருவறையில் ஈசன் இலிங்கத் திருமேனியின் அருகே பூசலார் நாயனாரின் திரு உருவமும் காட்சியளிப்பது சிறப்பு!

    ஈசனார் மீது பூசலார் நாயனார் கொண்ட மெய்யன்பு திருமந்திரத்தில், “ஈசன் அறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களைத் தேசுற்றறிந்து செயலற்றிருந்திடில் ஈசன்வந்தெம்மிடை ஈண்டி நின்றானே” என்பதற்கு ஈடாகும். கைலாசநாதர் கோயில் அதே காடவ மன்னன் அமைத்தது என்பதற்கு வரலாற்றுச் சான்றாக, கல்வெட்டுகளில், “அவன் அசரீரி கேட்டான். அவன் இக்கலியுகத்தில் அசரீரி கேட்டது வியப்பே இவன் கலியுகத்தின் வானொலி கேட்டான்” “அவன் சிறந்த சிவபக்தன்”, “ஆகமப்பிரியன்” என்னும் புகழாரங்களும் இருத்தல் பூசலார் நாயனார் திருத் தொண்டின் பெருமையை நிலைநாட்டுவதாம்.

    இதன் விளக்கமாக, ஐயன் வள்ளுவனின் குறள் காண்போம்;

    குறள் 665:

    வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்.

    தமது எண்ணம், செயல் திறன் ஆகியவற்றால் சிறப்புற்று மாட்சிமைப்பட்டோரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசரிடமும் சென்றடைந்து மதித்துப் போற்றப்படும்.

    குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் வண்ணம்….

    ramanujarஸ்ரீராமானுசர் ஒரு முறை உஞ்சவிருத்தி செய்தபடி தெரு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவோரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தடியில் சில குழந்தைகள் மணல் கோயில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். அக்குழந்தைகள் கட்டிக்கொண்டிருந்த ஆலயத்தில் கொடிமரம், அர்த்த மண்டபம், கருவறை, முன் மண்டபம், சுற்றுச் சுவர் போன்ற அனைத்தும், சிறு குச்சிகள், கோடுகள், பொடிக்கற்கள் போன்றவைகளால் உருவாக்கப்பட்டிருந்தது. அதோடு அந்த மரத்தின் இலையில், அதே மண்ணை வைத்து, பிரசாதமாக நைவேத்தியமும் வைத்து வழிபட்டனர். இதை கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமானுசருக்கு மெய் சிலிர்த்ததோடு அவர் கண்ணிமைக்காது நின்றிருந்தார். மூலவருடன் மிக விளையாட்டாக கட்டப்பட்டிருந்த கோவிலாக இருந்தாலும், அக்குழந்தைகளின் பக்தியில் எந்த குறைபாடும் இருக்கவில்லை. அதே ஆழ்ந்த பக்தியுடன், ராமானுசரிடம் நெருங்கி வந்த குழந்தைகள் அன்பொழுக, ‘சாமி இந்தாங்க உங்களுக்கும் பிரசாதம்’ என்று கொடுத்தனர். கள்ளங்கபடமில்லாத அக்குழந்தைகள் அளித்த பிரசாதத்தை தம் உஞ்சவிருத்தி சொம்பில் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். இறைவனை உள்ளத்தில் உணர்வுப்பூர்வமாகக் காணும் திருக்கோலமே உண்மையான இறைத் திருமேனி. உளமாற போற்றிப்பாடும் வார்த்தைகளே அவர்தம் திருநாமம். மகிழ்ச்சியால் பெரிதும் பூரிப்படைந்திருந்த ராமானுசர் அக்குழந்தைகளின் உருவத்தில் பெருமாளையேக் காண்கிறார்.

    தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
    தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், – தமருகந்து
    எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
    அவ்வண்ணம் அழியா னாம்.

    என்ற பொய்கையாழ்வார் பாசுரத்திற்கு விளக்கமாகவே இக்குழந்தைகளின் செயலைக் கண்டார் ராமானுசர்!

    நின்றவூர்ப் பூசல் அன்பன்
    நெடிதுநாள் நினைந்து செய்த
    நன்றுநீ டால யத்து நாளை
    நாம் புகுவோம் நீயிங்கு
    ஒன்றிய செயலை நாளை
    ஒழிந்துபின் கொள்வாய் என்று
    கொன்றைவார் சடையார் தொண்டர்
    கோயில் கொண்டருளப் போந்தார்.

    அதாவது, அன்பர் பூசலார் நீண்ட நாட்களாக நினைந்து உருவாக்கியுள்ள ஆலயத்திற்குள் நாளைப்புக
    முடிவெடுத்துள்ளோம். அதனால் உன் நிகழ்ச்சியை பின்னொரு நாளில் தள்ளி வைத்துக்கொள்வாயாக.. என்று சொல்லிப்
    போனார்.

    சங்கரனார் மேல் கொண்ட ஆழ்ந்த பக்தியினால் எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக பொன்னும், பொருளும் கொண்டு
    பேரரசனால் கட்டப்பட்ட கோயில் எந்த அளவிலும் இணையாகாது என்பதை உணரச் செய்தார்.

    சேக்கிழார் திருவாக்கில், “சாதனத்தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி நாதனுக் காலயஞ்செய் நலம்பெறு நன்னாட்
    கொண்டே ஆதரித் தாகமத்தா லடிநிலை பாரித்தன்பாற் காதலிற் கங்குற்போதுங் கண்படா தெடுக்க லுற்றார்”
    என்பதையும் அறியலாம்.

    நித்திரையிலிருந்து சட்டென விழித்த மன்னனுக்கு பேராச்சரியம். ஆண்டவன் வாக்கு பொய்யாகாதே. ஆயினும் தாம்
    எழுப்பியுள்ள ஆலயத்தைக்காட்டிலும் சிறந்ததொரு ஆலயம் எப்படி தன் கவனத்திற்கு வராமல் போனது என்று
    அதிசயித்தவாறு, உடனே அப்படிப்பட்ட ஆலயத்தைக் காண வேண்டும் என்று தேடிச் சென்றான் பல்லவ மன்னன். வழியில் கண்ட ஒரு விவசாயியிடம் இதுபற்றி விசாரித்தபோது, ‘இலுப்பை மரத்தடியில் பித்தர் ஒருவர் கோயில் கட்டுவதாக பிதற்றிக் கொண்டிருந்தார் , அவரைப் போய் கேளுங்கள்’ என்று சொன்னார். அவரைச் சென்று பார்த்த மன்னன் அதிர்ந்து போனான்.

    வேதியரை வீழ்ந்து வணங்கினான் வேந்தன். பின் பூசலாரின் எண்ணமும், அவர்தம் பக்தியின் ஆழமும் அறிந்த மன்னன், அவர் விருப்பப்படி ஆலயம் எழுப்பினான். இதயத்தில் கோவில் கொண்ட ஈசுவரருக்கு இருதயாலீசுவரர் என்ற திருநாமமும் அமைந்தது. பின்னர் மன்னர் காஞ்சி சென்று, தாம் அமைத்த கைலாசநாதர் ஆலயத்திற்கு மகிழ்ச்சியுடன் குடமுழுக்கு செய்வித்தார். வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைக் கொண்டுள்ள திருநின்றவூர் இருதயாலீசுவரர் சந்நிதியின் கருவறையில் ஈசன் இலிங்கத் திருமேனியின் அருகே பூசலார் நாயனாரின் திரு உருவமும் காட்சியளிப்பது சிறப்பு!

    ஈசனார் மீது பூசலார் நாயனார் கொண்ட மெய்யன்பு திருமந்திரத்தில், “ஈசன் அறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களைத் தேசுற்றறிந்து செயலற்றிருந்திடில் ஈசன்வந்தெம்மிடை ஈண்டி நின்றானே” என்பதற்கு ஈடாகும். கைலாசநாதர் கோயில் அதே காடவ மன்னன் அமைத்தது என்பதற்கு வரலாற்றுச் சான்றாக, கல்வெட்டுகளில், “அவன் அசரீரி கேட்டான். அவன் இக்கலியுகத்தில் அசரீரி கேட்டது வியப்பே இவன் கலியுகத்தின் வானொலி கேட்டான்” “அவன் சிறந்த சிவபக்தன்”, “ஆகமப்பிரியன்” என்னும் புகழாரங்களும் இருத்தல் பூசலார் நாயனார் திருத் தொண்டின் பெருமையை நிலைநாட்டுவதாம்.

    இதன் விளக்கமாக, ஐயன் வள்ளுவனின் குறள் காண்போம்;

    குறள் 665:

    வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்.

    தமது எண்ணம், செயல் திறன் ஆகியவற்றால் சிறப்புற்று மாட்சிமைப்பட்டோரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசரிடமும் சென்றடைந்து மதித்துப் போற்றப்படும்.

    குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் வண்ணம்….

    ஸ்ரீராமானுசர் ஒரு முறை உஞ்சவிருத்தி செய்தபடி தெரு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவோரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தடியில் சில குழந்தைகள் மணல் கோயில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். அக்குழந்தைகள் கட்டிக்கொண்டிருந்த ஆலயத்தில் கொடிமரம், அர்த்த மண்டபம், கருவறை, முன் மண்டபம், சுற்றுச் சுவர் போன்ற அனைத்தும், சிறு குச்சிகள், கோடுகள், பொடிக்கற்கள் போன்றவைகளால் உருவாக்கப்பட்டிருந்தது. அதோடு அந்த மரத்தின் இலையில், அதே மண்ணை வைத்து, பிரசாதமாக நைவேத்தியமும் வைத்து வழிபட்டனர். இதை கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமானுசருக்கு மெய் சிலிர்த்ததோடு அவர் கண்ணிமைக்காது நின்றிருந்தார். மூலவருடன் மிக விளையாட்டாக கட்டப்பட்டிருந்த கோவிலாக இருந்தாலும், அக்குழந்தைகளின் பக்தியில் எந்த குறைபாடும் இருக்கவில்லை. அதே ஆழ்ந்த பக்தியுடன், ராமானுசரிடம் நெருங்கி வந்த குழந்தைகள் அன்பொழுக, ‘சாமி இந்தாங்க உங்களுக்கும் பிரசாதம்’ என்று கொடுத்தனர். கள்ளங்கபடமில்லாத அக்குழந்தைகள் அளித்த பிரசாதத்தை தம் உஞ்சவிருத்தி சொம்பில் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். இறைவனை உள்ளத்தில் உணர்வுப்பூர்வமாகக் காணும் திருக்கோலமே உண்மையான இறைத் திருமேனி. உளமாற போற்றிப்பாடும் வார்த்தைகளே அவர்தம் திருநாமம். மகிழ்ச்சியால் பெரிதும் பூரிப்படைந்திருந்த ராமானுசர் அக்குழந்தைகளின் உருவத்தில் பெருமாளையேக் காண்கிறார்.

    தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
    தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், – தமருகந்து
    எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
    அவ்வண்ணம் அழியா னாம்.

    என்ற பொய்கையாழ்வார் பாசுரத்திற்கு விளக்கமாகவே இக்குழந்தைகளின் செயலைக் கண்டார் ராமானுசர்!

    Share
  • நியந்தாவின் வானவில்

    — கவிஜி.

    “நான் தான் பேசறேன்” இது தான் நீ என்னிடம் பேசிய முதல் வார்த்தை வாக்கியம். கவிதை…ம்ம்ம்… வேறு என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அது உண்மை. இப்போது நினைத்தாலும் அந்த ஒரு வாக்கியம் தரும் பேரின்பம். எனக்கு வேறு இலக்கியங்கள் தருவதில்லை என்றே நினைக்கின்றேன். நான் ஒரு பறவை என்பதை அன்று தான் முதன் முதலாக உணர்ந்தேன். வானத்தின் நயனங்கள் ஆனது உன் புருவ சுழிப்பு. உணர்தலில் உள்ளூர உத்சவம் நடத்தும். உண்மையில், உணர்தல் உன் சொல் என்பதை நாம் முதலில் சந்தித்த அந்த நீல நதிக்கரை இருபக்கமும் மறந்து நம்மையே கண் கொட்டி பார்த்ததே. அந்த பார்வையில் ஒரு சொல்லாகிப் போன நாம், நாம் சேர்ந்து எழுதாத புதுக் கவிதையின் மரபு உண்மையில் மை இல்லாத காகிதம் போல, பொய்மையில் வாய்மை எனப்படுவது உன் அருகாமை என்று நான் உள்ளூர வியந்து கிடந்தது. நாம் ஒன்றாக நடந்த அன்று தான்எத்தனை ஆச்சரியம் நீ. “இப்படியும் ஒரு பெண் இருப்பாளா?” என்று உன்னிடமே நான் வியந்து முயங்கிக் கிடந்திருக்கிறேன். அப்போதெல்லாம் நீ சொல்லும் மொழி நான் நினைத்தே பார்க்க முடியாத ஓவியம். அல்லது கிறுக்கல் (இந்த இரண்டில் நீ குழந்தையா, கவிதையா, என்பது தானே, நமக்கான சண்டை).

    “ம்ம்ம்… நீங்களும் தான் எனக்கு பிடிச்ச மாதிரிஇருக்கீங்க” என்று நீ கூறும் நொடியில் நான் நீயாகவே மாறியதை நாம் முதல் முறை பிரிந்த போது தான் உணர்ந்தேன். பொதுவாக நீ பேசும் ஒவ்வொரு சொல்லிலும் கலந்திருக்கும் போதி மரத்தின் இலைகளின் பச்சை நரம்புகளை நான் பின்னிக் கொண்டே இருப்பேன் என்று உனக்கு தெரிந்த நாளில் “ம்ம்ம்…போங்க…” என்று சொல்வாயே, அதில் கலந்த மூச்சு காற்றை நான் வாசிக்கவில்லை. சுவாசிக்கிறேன்.

    அலைபேசியில் நீ ஆச்சரியம். நேரில் பார்க்கும் போது நீ முழு பரீட்சை. மிரண்டு அருகினில் வந்தேன் நீயும் அதையே கூறினாய். ஒருவரையொருவர் ஆழமாக பார்த்தோம் (இருவருமே நடிப்பில் பிரமாதம் இல்லையா). பின், அளவோடு பார்ப்பதாகக் காட்டிக் கொண்டோம். பின்னொரு நாளில் பேசிக் கொள்ளும் போது சொல்லி சிரித்தோம். செதுக்கிய பூங்காற்றை உன்னிடமே கொண்டாய். பாராங்கல், நான் கூட கட்சி மாறினேன் பூக்களுக்கு. உனது கண்களை கடன் கொடுப்பதே உன் வேலை என்பேன் “போங்க” என்பாய். “போடா சொல்” என்றால் “ம்ம்ம் …மாட்டேன் போ” என்பாய் அதில் எனைத் தின்பாய். எனை எப்போதுமே வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கின்றன உனது சொற்களும் உனது பற்களும். கூடவே உனது மௌன முற்களும். இதற்க்கெல்லாம் முன், அந்த கண்களின் கவிதை வட்டமென உருட்டல் மிரட்டல்.

    உனக்கு நினைவிருக்கிறதா நான் நினைத்த ஒன்றை நீ கூறினாய். நீ பார்த்த ஒன்றை நான் காட்டினேன். பின் இருவருமே ஒரே சொல்லை ஒரே நேரத்தில் ஒன்றாக கூறினோமே. நம் காதலை பரிமாறிக் கொண்ட மிக அற்புதமான தருணம் அது. அந்த தருணத்தில் “ஹே” என்று இருவருமே ஒரு கணம் திரும்பி முகம் பார்த்துக் கொண்டதில், கண்டிப்பாக நம் பூமி நின்று தான் சுற்றி இருக்கும். பட்டும் படாமல் கைகள் உரசி. விரல் பற்றிக் கொள்ளாமலே, தோளும் தோளும் உரசி, சிறகாக முடியாமலே தடுமாறிய நினைவுகளை பின் ஒரு நாளில் இருவருவுமே அவரவர் பார்வையில் விவரித்துக் கொண்டது புது திரைக்கதை யுக்தி. அது தீராக் காதலின் முக்தி.

    எத்தனை கடிதங்கள் எழுதிக் கொண்டோம். அத்தனையிலும் நிஜங்கள் மட்டுமே. நமக்கு முகமூடி தெரியாது. எழுதிய எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் நீ வண்ணங்களில் பூத்த மாயாஜாலங்கள் நிகழ்த்தினாய். நானும் பூக்கள் நட்டினேன் என்பது உன் அன்பின் வெளிப்பாட்டில் நான் புரிந்து கொண்டது. சின்ன சின்ன சண்டைகளில் நீ நிலவை உடைப்பாய். நான் நிலவாய் உடைவேன்நான். எரிமலையாய் வெடிப்பேன். நீ ஏறிந்த பின்னும்கிடைப்பாய். உன் கோபங்களில் நான் மெல்லிசை. என் கோபங்களில் நீ பன்னிசை. இசைகளின் கோர்வையில் நீ, நான் சங்கீத சங்கேதம். மௌனங்களில். நாம் நீரில்லா மீனைப் போல துடித்தே இருந்தோம் என்று பின் பேசிக் கொண்ட இரவுகளில் காதோரம் கிசு கிசுத்துக் கொள்வோம். நதியோரம் கனவுகளாய் வசீகரித்துக் கொள்வோம். இத்தனை காதலை உன்னிடமே நான் உணர்ந்தேன் தோழி. உன்னிடமே புரிந்தேன் தோழி. இப்போதும் ஒரு முறை சொல்லத் தோன்றுகிறது. இப்படி ஒரு பெண், நான் கடந்த பாதையில் இல்லை.இல்லவேயில்லை. மீண்டும் ஒரு முறை, இல்லவேயில்லை

    உன் பாதையில் நான் கடக்கவே இல்லை. நான் கடக்கவே முடியாத பாதை. நீ கடந்தாலும் கிடைக்காத தூரம். நீ கிடைத்தாலும் தூரமாய், இன்னும் தூரமாய். நீ உன் தேசத்து தூரிகைகளின் ரசனைக்கார மழைத் துளியின் வெடித்து விடாத குமிழ் நானாக இருக்கவே ஆசைப் படுகிறேன். நாம் அடிக்கடி கட்டிக் கொள்ளும் நதியை நான் சமைத்த ஒரு நாளில் தான் நீ புது கூழாங்கற்களை தூவினாய். கரையோரங்களில் பூக்கள் மட்டுமல்ல, செடிகளும் இருக்கட்டும் என்றாய். நாம் வளர்த்த மான் குட்டி ஒன்று நதியில் விழுந்த அன்று நீ அழுத அழுகைக்கு நான் அர்த்தம் தேடாமலே அணை கட்டினேன். நீர் பஞ்சம் வந்தாலும் பரவாயில்லை உன் விழியில் நீர் கொஞ்சம் கூட வேண்டாம் என்றேன். ஓடி வந்து கட்டிக் கொண்டாய். புது மான் போல முட்டிக் கொன்றாய்.

    முதல் சந்திப்பில் அந்த மலை உச்சியில் நாம் மட்டும் நின்றது நினைவிருக்கிறதா? நமக்காகவே வீசிய காற்றை நான் உன் தோழி என்று நினைத்தேன். நீ என் தோழன் என்று வெறுத்தாய் (உனக்குதான் என் தோழர்கள் பிடிக்காதே). ஒரு காட்டாற்றின் வேகத்தின் உன் சொல் பிரயோகம் மூச்சடைத்து நின்றேனே. நீ ஏதோ ஒரு புள்ளியில் என் அருகே வர, நான் மிகவும் கடினத்துடன் சற்று பின் சென்றேன். நினைவிருக்கிறதா? பின் சென்றது உன்னை பிடிக்காமல் அல்ல மிகவும் பிடிக்கும் என்பதால் தான். பிடித்த ஒன்றில் பிடிக்காத ஒன்றும் இல்லாமலே போக, பிடிக்காத ஒன்றும் பிடிக்கும் ஆச்சர்யம் உன் அருமையில் மட்டுமே. பிடித்தல் என்பதும் பிடிக்காது என்பதும் ஒன்றுமில்லாமல் போனது உன் தூரத்தில் நான் கண்ட பொய் என்று சொன்ன நிஜம். பூர்வகுடி இருப்பில் பூஜ்யம் சாத்தியம். சூனியம் காத்திருக்கும் கதவடைப்பில் கத்தரிப் பூ மழையில், முழு இரவு பனி. நீ எனக்கு நான் யார் என்று பிரிவுகள் சொல்வதில் சிறு சிறு மரணம் தான் எனக்கு.

    நம் நண்பனின் திருமணப் பந்தியில் உனக்காக அத்தனை நேரம் நான் காத்திருந்து கொஞ்சம் கோபமாகி, நான் மட்டும் சென்று சாப்பிட, எனக்கு சற்று பின் தான் நீ வந்தாய். நீ எனக்கு முன்னால் அமரும் சூழலில் எனைப் பார்த்து யாருக்கும் தெரியாமல் ஒரு புன்முறுவல் தந்தாயே அதை இந்த ஜென்மத்தில் நான் எப்படி மறக்க? மறக்கும் வியாதி இருந்தால் யாரிடமாவது கொஞ்சம் கடன் வாங்கி அனுப்பு. மறந்தாலாவது நான் மரிப்பேனா பார்க்கிறேன். நான் உன்னைப் பார்த்து பொய் கோபத்துடன் “போ” என்று ஜாடை செய்தது உனக்கு பிடித்ததென்று பின் ஒரு நாளில் குறுஞ்செய்தி ஒன்றில் சொல்லி இருந்தாய். மீண்டும் ஒரு முறை எனைக் கிள்ளிப் பார்க்கிறேன். உனக்கு எப்படி என்னைப் பிடித்தது என்று உன்னை முழுதாக பார்த்து முடிக்கவே எனக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது நியந்தா. தேன் கூட்டின் சரி பாதியென இரு கண்கள். அதில் கடலென தத்தளிக்கும் அலைகளின் தேடலை நான் மட்டுமே உணருகிறேன். உணருதலில் ஓஷோ சற்று இளைப்பாரட்டும், அல்லது புத்தனே வந்து இலை மறை காயாகட்டும். எல்லாம் தாண்டிய தியானம் நீ உனைச் சேரும் தனிமைக்குள் நான் மட்டுமே. பூதக் கண்ணாடி தரித்துபுன்னகை புரிவேன். மனச் சரிவில் மாட்டிக் கொண்ட பின்னாலும் நினைவுகளில் நீ சரிந்து கிடப்பது வரம். உன்னோடு துறவறம் கூட அறம்

    உனது கோபங்களின் தாபங்களை எனையன்றி யார் புரிவார். நீ வெறுத்தாலும் வெறித்தாலும் அங்கே வெற்றிடமாய் நான் மட்டுமே. நீ வரையும் ஓவியங்களில் நான் வண்ணமற்று போகிறேன். சில போது எண்ணமற்றும். வெளிகளின் தடத்தில் நீ வலைகளை வரைந்தாலும் நான் நிழலற்று வந்து மாட்டிக் கொள்ளும் நிறங்களின் காதலனாகிறேன். நமது பேச்சுகளை தீரா நதி என்று யாராவது சொல்லக் கூடும். தீர்ந்தாலும் நதி என்பது போலதான் நம் சண்டை நாட்களிலும், சண்டைக்கு பின் நான் பேசும் அலைபேசியில் முதலில் நீ பேசுவது இப்படித்தான் இருக்கும்.

    “என்ன சொல்லுங்க. உங்க கூடயெல்லாம் பேசறேன் பாருங்க என்ன சொல்லணும். உங்களுக்கு இன்னும் என்ன பத்தி தெரியல நான் ஒரு நாள் இல்லாம போவேன் அப்போ தான் யோசிப்பீங்க.”

    இப்போது யோசிக்கிறேன். நியந்தா உன்னை எப்படியெல்லாம் திட்டி இருக்கிறேன். அடித்திருக்கிறேன் ஒரு ஆணாதிக்க கவிதையாய் உன் மேல் படர்ந்திருக்கிறேன். நீ இருக்கும் போது உன் ரயில் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. இன்று நீ ஒற்றை ரயிலாய் வெகுதூரம் போன பின் தான் ஒற்றைப் பனைமர வலி தெரிகிறது. பேய் பிடித்த மரமாய் கள் உண்டு கிடக்கிறேன்.நீயும் தான் என்னை யாருமே சொல்லி திட்டாத வார்த்தைகளால் கொன்று இருக்கிறாய் இருந்தும். நான் பிழைத்துக் கிடப்பது அந்த ரயில் புன்னகையாலும், “ம்ம்ம்… பாப்பு உங்களயே நினைச்சிட்டு இருக்கா” என்று நீ சொல்லும் ததும்பளுக்காகவும்தான்.

    காட்டாற்று கடைக்கோடி துகள் என உன் அழுகை. நினைத்து நினைத்து நான் செய்யும் தொழுகை. நிஜமாலுமே நீ எனக்குள் நானே போட்டுக் கொண்ட சிலுவை. ஐயோ இதை மறந்து விட்டேனே, சிலுவை என்றதும்தான் மோதிரம் மாற்றி நாம் செய்து கொண்ட திருமணம் நினைவுக்கு வருகிறது. மோதிரம் மாற்றும் போது நீ சிரித்ததும் மாற்றி முடித்ததும் மெல்ல நீ அழுததும், எனக்குள் பதிந்து போன மாயக்கண்ணாடி. பாதரசம் போனாலும், பாதி ரசம் என்னை சுரண்டும் யாத்திர தேடல் அல்லவா அது! முகத்திரை கிழியாத போது யாத்திரைகள் சுலபமல்ல என்பதை நித்திரை கிழித்த கனவில் உன் முகம் கூறியதை நான் புலம் பெயர்ந்த ஆழ் மன வலியோடு உணர்ந்தேன். உணர உணர கிணறு தோண்டும் இல்லாமை, கல் மணல் என கொஞ்சம் நீரையும்தான் கண்ணீராக மாற்றும் தந்திரச் சூழலில் போய்க் கொண்டே இருக்க, தூரம்… தூரம்… இன்னும் கொஞ்சம் தூரம் பூமியின் மறுபக்கம் முகம் தெரிய அங்கும் நீ நான் நம் நிழலென நம் காதல்.

    நம் சண்டையில் நம் குழந்தை, காதல், பாவம் அது அனாதையாக அழுது கொண்டிருப்பதை விரும்புகிறாயா? நியந்தா, நீ நான் அழுதாலே துடித்து போவாய். உனக்கு அன்பு காட்டத்தான் தெரியாதே தவிர அன்பின் உருவம் நீ. உனது காதலை உள் வாங்கவே கடவுளாக வேண்டும். நான் கடவுள்களின் மொத்தம் என்று நீயே கூறி இருக்கிறாய். கடவுளாய் இருப்பது எந்தனை வலி என்று தெரியுமா உனக்கு? கவிதையாய் இருப்பதை விட கவிஞனாக இருப்பதுதான் கஷ்டம். எழுத எழுத கவிதையாகி விடுவாய் எழுதாமல் விட்டால் கவிஞன் இல்லாமலே போவான். கடவுளும் அப்படியே. புதைக்க புதைக்க பீரிட்டு எழும் நம் காதலைப் போல,தொலைந்து காணாமல் போய் பின் கிடைக்கும். நம் பின்னிரவின் முத்தம் போல நம் அறையின் தீரா வெட்கமென ஒரு சுழல் கொண்ட வானவில் கலைதலாய் கடவுளும் இருந்து விடட்டும் என்பது எனது கவிதையின் சாரம். அல்லது உன் ஓவியத்தின் ஓரம்.

    உன் ரகசிய மொழிக்குள் நான் பகிரங்கமாய் காணாமல் போவது நீ அறிந்தும் அறியா கானல் நீரின் சூடு. மதில் தாண்டாத பூனைகளின் தேசத்தில் நான் புலி என்பதில் காடு எதற்கு? மிஞ்சிய யாவும் தான்சேனின் இசையென அழுகிறது. நம் மழை சொல்லும் தத்துவத்தில் நாம் குடையானோம். காற்று திசை அறியாத போது மழையாகவே ஆகிடுவோம் குடை வலிக்கிறது.

    குறும்பு புன்னகை உனது ரகசியக் கசிதலாக, அரும்பும் மானுடம் என்னை புசிக்கிறது தோழி. நீ தீர்வை சுமந்து கொண்டதில் பாரம் முழுக்க எனக்குபறக்க பறக்க திறக்கும் வாசலென உன் வானத்தில் நான் ஒரு எரிகல்லாகவாது இருந்து விட்டு போகிறேன். யாத்திர பாதைகளில் இருவர் பாதங்களும் ஒன்றாக தான் இருக்கும்.கால இடைவெளி என்பதை கண் கொண்டு கண்டது. நம் வாழ்வில் தான் பெண்ணே நமது பால்வீதியின் ஒரு முனை உன்னிடம் மறுமுனை என்னிடம் முனைகளின் ஆரம்பிப்பதும் இல்லை முடிவதும் இல்லை. ஒரு தூரம் இல்லையா.

    கடைசியாக நாம் போட்ட சண்டையில் உன்னை அதிகமாக அழ வைத்தேன். ஆனால், ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக நான் அழுவது உனக்கு தெரியாமல் இல்லை. நமக்குள் இருக்கும் எல்லாமே இது தான். நாம் ஒருவரையொருவர் உணர்த்த வேண்டியதே இல்லை. வெறும் மௌனம் கூட வேண்டாம். இருத்தல் வேண்டவே வேண்டாம். மரணத்தில் கூட புரிந்து கொள்ளும் காதல் நமக்கு வாய்த்திருக்கிறது. நியந்தா அது தான் தேவ மகத்துவம் மௌனக் கடலின் அசையாத அலை என்பது நம் தத்துவம்.

    வந்து விடு. ஒரு கடவுளாகவாவது. துடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறு மீனின் அலை உன் உள்ளங்கை சூடு.

    Share
  • மொழிப்பாடம் கற்பித்தலில் புதுமைப்போக்குகள்

    –மு​னைவர் சி.​சேதுராமன்.

    கற்றல் என்பது கற்பித்தலின் மூலமே நிறைவு பெறுகிறது. பள்ளிக் கல்வியில் சிறப்பிடம் பெற வேண்டிய பாடங்களுள் ஒன்று மொழிப்பாடம். மொழித் திறனைப் பெறுபவர் நடைமுறை வாழ்க்கையுடன் பொருந்தி வாழும் வல்லமையைப் பெறுவர். அம்மொழித் திறனை மாணவர்கள் பெறுவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மொழியாசிரியர்கள். ஆனால் மொழியாசிரியர்கள் என்றாலே பிறதுறை அறிவும் பயன்பாடும் அற்றவர்கள் என்ற எண்ணம் பரவலாக நிலவி வருகிறது. நவீன தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள, தொலைத் தொடர்புச் சாதனங்களின் ஆட்சிக்காலமான, அந்நிய மொழி மோகம் நிறைந்த இன்றைய சூழலில் மொழிப்பாடம் கற்பித்தல் என்பது மொழியாசிரியர்களை எதிர் நோக்கியுள்ள பெரிய சவாலாகும். இக்காலக் கட்டத்தில் மொழிப்பாடம் கற்பிக்க வேண்டிய முறைமைகளையும் மொழிப்பாடம் கற்பிப்பதில் உள்ள குறைபாடுகளையும் தொடர்ந்து ஆராய வேண்டியது தேவையாகிறது.

    நாப்பழக்கமே செந்தமிழ்:
    பொதுவாக இந்நூற்றாண்டைத் தொலைத் தொடர்பு யுகம் என்றழைக்கலாம். மாணவர்கள் சிலர் கணினியில் மூழ்கிப் போவதைப் போலவே தொலைக்காட்சியிலும் மூழ்கிப் போய் விடுகின்றனர். தொலைக்காட்சியின் உச்சரிப்புப் பிழைகள் மாணவர்களிடமும் பதிந்து விடுகின்றன, முக்கியமாக மாணவர்கள் விரும்பிப் பார்க்கும் சன் மியூசிக், ஜாக்பாட் (ஜாக்பாட்டில் கேள்வி என்பது பல ஆண்டுகளாக, கேல்வி என்றே உச்சரிக்கப்பட்டதைத் தமிழ் அறிந்தவர்கள் அறிவர்) முதலிய நிகழ்ச்சிகளில் ல, ள, ழ, ந, ன, ண, ர, ற ஆகிய எழுத்துகள் ஒலி வேறுபாடுகள் இன்றியோ அல்லது தவறாகவோதாம் பெரும்பாலும் ஒலிக்கப்படுகின்றன. புதிதாகப் படித்து முடித்து வரும் தமிழாசிரியர்களில் சிலரும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மொழியின் தனிச்சிறப்பே சிறப்பு ழகரம். இவ்வொலி இன்று தன் சீரிழந்து நிற்கிறது.

    “நுனிநா அணரி அண்ணம் வருட
    ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்” (தொல்.எழுத்து: 95)

    நுனி நாக்கு மேல்நோக்கி வளைந்து அண்ணத்தைத் தடவ ழகரம் பிறக்கிறது.

    “நாவிளிம்பு வீங்கி யண்பல் முதனுற
    ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
    லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்” (தொல்.எழுத்து: 96)

    நாக்கு மேல்வாய்ப் பல்லின் அடியில் அண்ணத்தைத் தொட்ட அளவில் லகரமும், அண்ணத்தை வருட ளகரமும் பிறக்கிறது.இவ் இலக்கணங்களை மனத்தில் நிறுத்திக் கொண்டு இவ்வொலிகளை உச்சரித்துப் பழகுதல் வேண்டும். மாணவரோ பிறரோ யாராகவிருப்பினும் செய்தித் தாளைப் படித்து அதனை ஒலிப்பேழையில் பதிவு செய்து, மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்கும்போது தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும். இப்பயிற்சியின் மூலம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதை உணர முடியும். இதற்காகவே

    “ஓடுற நரியில ஒரு நரி கிழநரி
    கிழநரி தலையில
    ஒரு முடி நரைமுடி.
    உருளுது பெறழுது தத்தளிக்குது தாளம் போடுது”

    என்னும், இது போன்ற நா நெகிழ் பயிற்சிகள் நம் முன்னோர்களால் முற்காலத்தில் கொடுக்கப்பட்டன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

    எழுத்தறியத் தீரும் இழிதகைமை:
    எண்களின் கூட்டு கணிதம் என்றும் எழுத்துக்களின் கூட்டு இலக்கணம் என்றும் கூறுவர். பண்டைய முறையில் உயிர் எழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் ஒலிக்கக் கற்பிக்கும்போது இரண்டு இரண்டு எழுத்துக்களாகச் சேர்த்துக் கூறுவர். (விதி விலக்கு ஐ, ஒள.

    அஆ   இஈ   உஊ   எஏ   ஒஓ
    க்ங்   ச்ஞ்   ட்ண்   த்ந்   ப்ம்   ய்ர்   ல்வ்   ழ்ள்   ற்ன்

    இவ்விணை எழுத்துகளை இன எழுத்துகள் என்பர். இவற்றுள் மெய்யெழுத்துக்களை ஒலிக்கப் பயிற்சி கொடுக்கும் போது இம்முறையில் எழுதியே பயிற்றுவித்தல் அவசியமாகும். மேலும் ண, ன, ந ஆகிய மூன்று எழுத்துகளையும் முறையே டண்ணகரம், தந்நகரம், றன்னகரம் என்றே கூறச் செய்தல் வேண்டும். இம்முறையில் பயிற்றுவித்தலால் ண் என்னும் எழுத்துதான் டகரத்தின் முன் வரும், ‘ந்’ என்னும் எழுத்தின் பின் ‘த’ தான் வரும் ‘ன்’ என்னும் எழுத்தின் பின் ‘ற்’ தான் வரும் என்பதையும் புரிந்து கொள்ளவும் நினைவில் நிறுத்தவும் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். மேலும் கற்பிக்க வேண்டிய முறையும் இதுவே. ஆனால் மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்கள் கூட மூன்று சுழி ண் இரண்டு சுழி ன் என்றுதான் கூறுகின்றனர். மாணவர்களின் இந்நிலைக்கு அவர்களுக்கு முறையாகக் கற்பிக்காமையே காரணம் எனலாம். “எழுத்தறியும் தீரும் இழிதகைமை” என்பார் சிவஞான முனிவர். எனவே மொழிப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் எழுத்துகளையும் அவற்றை ஒலிக்கும் முறைகளையும் அவற்றுக்கு வழங்கும் பெயர்களையும் அறிந்து முறையாகப் பயிற்றுவித்தால் மாணவர்களின் இவ் இழித் தகைமை நீங்கும். மொழிப்புலமை ஓங்கும்.

    இலக்கணமும் இன்சுவையே:
    ஆங்கில வழியில் பயில்வதே இன்றைய நாகரிகமாக உள்ளது.தமிழ்ப் பாடத்தை ஆர்வமின்றிப் பயில்வதும் அதிலும் இலக்கணப் பாடத்தைப் புறக்கணிக்கும் சூழலும் உருவாகி வருகிறது. கருத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது பேச்சும் எழுத்தும். மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை புரிவது இலக்கணமே. இலக்கணம் கற்பிக்கும் போது பழைய மரபுகளை மீறாமல் புதிய உத்திகளைப் பயன் படுத்தி ஆர்வத்தைத் தூண்டுவது கற்பித்தலில் தலையாய ஒன்றாகும்.

    “மனத்தி னெண்ணி மாசறத் தெளிந்து
    இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்” (தொல்.பொருள்: 656)

    என்பது தொல்காப்பியம். இலக்கண விதிகளை இலக்கிய வழிகளில் மட்டுமல்லாமல் உலகியல் வழிகளிலும் பொருத்திக் காட்டுதல் வேண்டும் என்பதையே ஆசிரியர்தொல்காப்பியர் “இனத்திற் சேர்த்தி” என்னும் தொடரால் உணர்த்துகிறார். கற்பித்தல் நிலையில் இலக்கணம் கற்பிக்க கரும்பலகையை மிகுதியும் பயன்படுத்துதல் வேண்டும். ஒப்புமைக் கூறுகளைக் கரும்பலகையில் எழுதிக் காட்டுதலும் ஐயப் பகுதிகளைத் தடை விடைகளைக் காட்டி தெளிவித்தலும் வேண்டும்.

    இலக்கணப் பாடத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் முக்கிய இடத்தைப் பெறுவது இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சி இலக்கணம் ஆகிய மூன்றும். பிற்காலத்தில் எந்நிலையிலும் இவ்விலக்கணங்கள் மாணவர்களுக்குப் பயன்படாது போயினும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுத் தரும் பகுதிகள் இவை. இப்பகுதியைக் கற்பிக்கும் ஆசிரியர் மூன்று அல்லது நான்கு மாணவர்களை ஒரே நேரத்தில் அழைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சொற்களைக் கொடுத்து, கரும்பலகையில் இலக்கணக் குறிப்பையும் உறுப்பிலக்கணத்தையும் எழுதச் சொல்லுதல் வேண்டும். உறுப்பிலக்கணம், இலக்கணக் குறிப்பு இரண்டையும் ஒரே நேரத்தில் எழுதச் சொல்லும் போது மாணவர்கள் இரண்டு இலக்கணங்களையும் ஒரே நேரத்தில் பயிற்சி பெறுவதுடன் பகுபத உறுப்பிலக்கணம் இலக்கணக் குறிப்பின் அடிப்படையிலேயே அமையும் என்பதையும் மாணவர்கள் அறிவர். இலக்கணக் குறிப்பு தொழில் பெயராகவிருப்பின் விகுதி, தல், அல், அம், ஐ, கை இவற்றுள் ஒன்றாக இருக்க வேண்டும், வியங்கோள் வினை முற்றாக இருப்பின் க, இய, இயர் என்னும் மூன்றில் ஒன்றாக அதன் விகுதி அமைதல் வேண்டும் முதலியவற்றை அறிந்து சொற்களைப் பகுப்பர். எனவே உறுப்பிலக்கணம் எழுதும்போது அதன் இலக்கணக் குறிப்பையும் எழுதச் சொல்லுதல் இன்றியமையாதது. சொற்களைப் பிரிக்கவும் சேர்க்கவும் பழகிக் கொண்டால் உயர்நிலை வகுப்புகளில் இலக்கிய வாசிப்பும் எளிதாக இருக்கும்.

    இலக்கணக் குறிப்பைப் பயிற்றுவிக்கும் போது மாணவர்களுக்கு அனுபவம் மிக்க பொருள்களின் அடிப்படையில் எடுத்துக்காட்டுகள் அமைந்திடின் ஆர்வம் மிகுவதுடன் மனத்தில் நிறுத்துவது எளிதாகிறது. சான்றாக உருவகத்தை விளக்க “என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே” (திரைப்பாடல்) முதலிய பாடல்களை மூலம் விளக்கலாம். “புதிய வானம் புதிய பூமி” என்பதில் வானம் X பூமி என்று வருவது முரண் தொடை என்றும் “ஓ ப்ரியா! ப்ரியா!” என்னும் பாடலில் ப்ரியாவை அழைப்பது விளி வேற்றுமை என்றும் “மலை மலை மலை மலே மலே” இப்பாடலில் இப்படி அடுக்கி வருவதுதான் அடுக்குத்தொடர் என்றும்,

    “சலசல சலசல இரட்டைக் கிளவி
    தகதக தகதகஇரட்டைக் கிளவி
    உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
    பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால்
    பொருளும் இல்லை
    இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ”

    இப்பாடல் வழி இரட்டைக்கிளவியின் விளக்கமும் தரலாம். ஆசிரியர் மனத்தின் எண்ணி மாசறத் தெளிந்து இவ்வுத்திகளைப் பயன் படுத்தி மாணவர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தால் இலக்கணப் பாடமும் இனிமையான அனுபவமாக அமையும். ஆனால் இம்முறையில் பயிற்றுவிக்கும் போது ஆசிரியருக்குத் தெளிவு இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு ஐயங்கள் எழாவண்ணம் பயிற்றுவிக்க இயலும். அதே சமயம் ஊடகங்களின் மொழிகளை உள்வாங்கிக் கற்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருத்தல் வேண்டும். ஊடகங்களுக்குரிய பண்பாட்டு நெறிகள் வகுப்பறைக்குள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

    இலக்கணப் பாடம் பயிற்றுதல் என்பது மொழியின் பயன்பாட்டை உணர்த்துவது என்பதாகும். நவீன காலத்துக்கும் முற்பட்ட காலத்தில் அமைந்த பயிற்றல் முறையினைச் சமூகச்சூழலும், வாழ்வியல் பாங்கும் முற்றிலும் மாறியுள்ள இக்காலத்தும் பின்பற்றுவதும் தமிழாசிரியர்கள் தங்களைக் காலத்திற்கு ஏற்ப தகவு அமைத்துக் கொள்ளாததையே காட்டும். எனவே சூழலுக்கு ஏற்ப மாறி மொழி வளம் பேணுதல் வேண்டும்.

    செவியுணவே சுவையுணவு:
    அறிவுக்கு விளக்கம் கொடுக்க வந்த திருவள்ளுவர் “தான் பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு” (குறள்-424) என்கிறார். ஆன்ற பெருமையைத் தரும் செவிக்கு உணவாகிய, கேள்விச் செல்வத்தைப் பெற மாணவர்கள் பெரிதும் விரும்ப வேண்டும். செவி வாயாக நெஞ்சு களனாகக் கேட்டு, கேட்டவற்றை விடாது உள்ளத்து அமைத்தல் வேண்டும். காட்சி வழிக் கற்றலுக்கு அடுத்த நிலையில் அதிகப்பலன் தருவது கேட்டல் வழிக் கற்றலில்தான். காட்சி, கேள்வி வழியில் 50 விழுக்காடு கற்றல்நடைபெறுகிறது என்றால் அதில் 11 விழுக்காடு கேட்டல் வழியில் நடை பெறுகிறது. (ஆய்வுத்தகவல்: உயர்நிலைத்தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள். ப.17) கல்வியாளர்களில் பெரும்பாலோர் விரிவுரை முறையையே சிறந்தது என்கின்றனர். இக்கேட்டலில் மானவர்கள் திறன் பெற்றுள்ளனரா என்பதை அறிய மேல்நிலை வகுப்புகளில் ‘கேட்டல் பேசுதல் திறனறி தேர்வு’ (Testing off Oral – Aural skills) நடத்தப்படுகிறது. இத்தேர்விற்கு ஆசிரியர் ஏதேனும் ஒரு பகுதியைப் படித்துக்காட்டி படித்தவற்றுள் சில வினாக்களை எழுப்பிச் சோதித்தல் வேண்டும். சிலர் பொதிகைத் தமிழ்க் கையேட்டில் உள்ளவற்றைப் படித்துக் காட்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மாணவர்களிடம் சலிப்பை ஏற்படுத்தி கேட்டல் திறனைக் குன்றச் செய்கிறது.

    மாற்றாகச் சான்றோர்களின் அல்லது தலைவர்களின் (சுதந்திர தின உரை, குடியரசு நாள் உரை, சமயச் சொற்பொழிவுகள்) வானொலி தொலைக்காட்சி உரைகளை ஒலிப்பேழையில் பதிவு செய்து ஒலிபரப்பி அவற்றில் வினாக்கள் கேட்கும் போது மாணவர்கள் புதிய அனுபவத்தால் ஆர்வத்துடன் விடை இறுப்பதுடன் கேட்டல் அனுபவமும் சுவையானதாக மாறுகிறது. அத்துடன் ஆசிரியர் நமக்காக அருமுயற்சிகள் எடுக்கிறார் என்று ஆசிரியர் மீது நன் மதிப்பும் ஏற்படுகிறது. “கல்வி என்பது எழுத்தறிவை மட்டுமே கொடுக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. அது மனிதனைச் சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் புரிந்து கொள்ள வைப்பதாகவும் பொறுமையை வளர்ப்பதாகவும் இருத்தல் வேண்டும்.” என்னும் அறிஞர் இராதா கிருட்டிணன் அவர்களின் கருத்துக்கு அரண் செய்வதாக அமையும்.

    இயக்குநர் ஆசிரியர்:
    முத்தமிழில் வைப்பு முறையால் கடைநிலைப் பட்டாலும் தொல்காப்பியரால் முதல் நிலையில் வைத்து எண்ணப் பெறுவது நாடக வழக்கு (தொல்.பொருள்: 56). இயற்றமிழ் கட்புலனுக்கும் இசைத்தமிழ் செவிப்புலனுக்கும் இன்பத்தை நல்குகின்றன. நாடகத்தமிழ் ஒன்றே கட்புலனுக்கும் செவிப்புலனுக்கும் ஒரு சேர இன்பத்தை நல்குகிறது. பள்ளிப்பாடத் திட்டத்தில் இளநிலை வகுப்பு முதல் உயர்நிலை வகுப்பு வரை எல்லா வகுப்புகளிலும் உரைநடைப் பகுதியில் நாடகம் ஒன்று அமைந்திருக்கும். இந்நாடகத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் நாடகத்தில் எத்தனை கதை மாந்தர்கள் உள்ளனரோ அத்தனை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் அவரவர்க்குரிய பாத்திரத்தை ஒப்படைத்து அவர்களை வகுப்பில் முன்பக்கம் பிற மாணவர்கள் பார்க்குமாறு நிற்க வைத்தல் வேண்டும். அவர்கள் படிக்க வேண்டிய பகுதியை ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்ளச் சொல்ல வேண்டும். மாணவர்கள் படிக்கும் போது குரல் மாற்றம், குரல் ஏற்றத்தாழ்வு, இடத்திற்கேற்ப சைகளை முதலியவற்றைச் செய்யுமாறு உற்சாகப் படுத்துதல் வேண்டும். அனைத்து மாணவர்களும் பங்கு பெறும் வகையில் நாடகம் பலமுறை நடத்தப் பெறுதல் வேண்டும். இம்முறையில் படிக்கும்(நடிக்கும்) மாணவர்கள் தாங்கள் நடிக்கும் கதை மாந்தராகவே மாறி விடுகின்றனர். அப்பாத்திரத்தின் பண்புகளையும் தம் பண்பாக மாற்றிக் கொள்கின்றனர். நாடகப் பாடம் நடத்தும் ஆசிரியர் ஓர் இயக்குநர் போலிருந்து கற்பிக்கும் போது மட்டுமே நாடகப்பாடம் செறிவுடையதாக அமையும்.(க. அறிவுடைநம்பி, தமிழ்வழி கற்றல் கற்பித்தல் புதிய உத்திகள்- ப:242) மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து எக்குழு நன்கு நடித்துக் காட்டுகிறது? என்று போட்டியும் வைக்கலாம். நன்கு நடித்தவர்களுக்கு சிறு சிறு பரிசுகள் அல்லது தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் கொடுத்து ஊக்குவிக்கலாம்.ஆனால் இம்முறைப் பயிற்றுவித்தலில் காலச்செலவு அதிகம். ஆசிரியரின் பணிச்சுமையும் கூடுதலாகிறது. இதனால் இவ்வாறு செய்யாமல் ஒரு சிலர் நாடகச் சுருக்கத்தைக் கூறி பாடத்தை முடித்து விடுகின்றனர். ஆனால் பாடம் பல ஆண்டுகட்குப் பின்னும் மாணவர் நெஞ்சில் மறவாமல் இருக்கும்.

    எதிர்காலப் புலன் வேண்டும்:
    “ஏடன்று கல்வி சிலர் எழுதும் பேசும்
    இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும்
    வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த
    விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்”
    (குலோத்துங்கன் கவிதைகள்: ப. 202)
    என்பது வா.செ.குழந்தைசாமியின் கல்விக் கொள்கை.

    நாளும் வளர்ந்து கொண்டிருக்கும் இத்தலைமுறை மாணவர்களின் எண்ணக்கரு உருவாக்கத்திலும் ஆளுமை வளர்ச்சியிலும் சமூகச் சூழலை விளங்கிக் கொள்வதிலும் மொழிப்பாடம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தொழில்மயம், நவீனமயம், உலகாயதமயம் போன்ற காரணிகளால் இன்றைய தலைமுறையினர் அறிவில் மூத்த தலைமுறையினர் என்றெண்ணும் அளவில் வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இன்றைய மாணவர்கள் மிகக் கவனமாகக் கையாள வேண்டிய கூரிய ஆயுதம் போன்றவர்கள். இவர்களுக்குப் புகட்டப்படுகின்ற கல்வி பதம் பார்த்து, பகுத்தறி சிந்தனையுடன் கற்கின்ற நிலையில் அமைய வேண்டும். 2001 ஆம் ஆண்டில் உறுதி செய்யப் பெற்ற தேசிய கல்வித் திட்டத்தின் படி அமைந்த 1986 ஆம் ஆண்டின் கல்விக் கொள்கை.
    1. இந்திய ஒருமைப்பாட்டு உணர்வு
    2. இந்திய அரசியல் சட்டத்தின்கீழ் கடமை ஆற்றல்
    3. சமூகத் தடைகளை அகற்றுதல்
    4. பொதுச் சொத்துகளைப் பாதுகாத்தல்
    5. ஆண் பெண் நிகர்மை
    6. நிகர்மை, சகோரத்துவம், குடியாட்சி
    7. இந்திய பொதுப் பண்பாட்டு மரபு
    8. சுற்றுச் சூழல் பாதுகாப்பு உணர்வு
    9. சிறுகுடும்ப கொள்கைப் பதிவு
    10.அறிவியல் மனப்பான்மை.
    ஆகிய பத்து அழுத்தமான பொருண்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது. (உயர்நிலைத் தமிழ் கற்பித்தலில் புதிய அணுகு முறைகள். ப.10) ஆனால் இளநிலை பாடத்திட்டத்தில் சூழ்ச்சியையும் வஞ்சகத்தையும் கற்றுக் கொடுக்கின்ற பாங்கில் பாடங்கள் அமைந்துள்ளன. (சொர்க்கத்தில் நரி, நான்காம் வகுப்பு தமிழ்ப் பாடநூல்) பழைய பாடத்திட்டத்தில் காகத்தை ஏமாற்றிய நரி; புதிய பாடத்திட்டத்தில் ஓநாயை ஏமாற்றுகிறது. பழைய மொந்தையில் புதிய கள். காகத்தை ஏமாற்றிய நரி நாம் ஒருவரை ஏமாற்றினால் நம்மை ஒருவர் ஏமாற்றுவார் என்ற அறத்தைப் புகன்றது. புதிய நரி தன்னலத்திற்காக ஓநாயை ஏமாற்றுகிறது. மேல்நிலை வகுப்புகளில் வீரச்சுவை கலிங்கத்துப் பரணி (மேல்நிலை முதலாமாண்டு) முதலிய பாடங்கள் வீரம் என்னும் பெயரில் வன்முறையைத் தூண்டுவனவாக உள்ளன. இவை போன்ற பாடங்களைக் கற்ற பின்பு அவற்றின்படி ஒழுக வேண்டிய மாணவர்களின் மனங்களில் வன்முறை எண்ணங்கள் துளிர் விடும் என்பதும் கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று. காலச்சூழலுக்கு ஏற்ப அமையாத பாடத்திட்டங்களும் கற்றல் கற்பித்தலில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இந்நிலையை,

    “உங்கள் புத்தகங்கள்
    கண்களைத் திறப்பதில்லை
    ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன”

    என்று வெகு நேர்த்தியாகக் கண்டிப்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். பாடத்திட்டம் காலத்திற்கேற்ப மாணவர்களை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செலுத்தும் எதிர்காலப் புலனுடன் அமைதல் வேண்டும். அதற்காகப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைப் பாடத்திட்டக் குழுவினர்க்குத் தொடர்ந்து அனுப்புதல் வேண்டும்.

    இறுவாய்:
    “மாறாத பொருளெதுவும்
    வளர்வதில்லை
    வையத்தின் விதியிதற்கு
    மாற்றமில்லை” (வா.செ.குழந்தைசாமி)
    என்பார் அறிவியல் அறிஞர் கவிஞர் குலோத்துங்கன். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப கல்வியில் மாற்றம் ஏற்பட வேண்டும்.இலக்கியங்கள் நற்பண்புகளையும், மனித நேயத்தையும் வளர்ப்பனவாய் அமைதல் வேண்டும். இலக்கணம் வளர்ந்து வரும் சமுதாயத்தின் பயன்பாட்டுக்கு ஏற்ற வழி எளிமைப் படுத்தப்பட வேண்டும்.

    அனைத்துக்கும் மேலாகத் தமிழாசிரியர்கள் மொழிப்பாடம் கற்றுக் கொடுக்க என்றோ படித்தது போதும் என்னும் தம் நிலையில் இருந்து மாற வேண்டும். காலச்சூழலுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய நவீனப் போக்குகளை அறிந்து கொள்ளல் வேண்டும். நவீன எழுத்தாளர்களை ஓரளவேனும் அறிந்து கொள்ள வேண்டும். பிற மொழி இலக்கிய அறிவுடன் விளங்க வேண்டும். முக்கியமாக சற்றேனும் ஆங்கில இலக்கிய அறிவும் அவர்களுக்கு இருத்தல் அவசியமாகிறது. குறைந்த அளவு, பல்துறை சார்ந்த நுட்பங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமுடையவர்களாக இருத்தல் வேண்டும். தாம் பல் துறை வல்லாண்மையுடனும் பயிற்றுவித்தலில் புதுமைப் போக்கையும் ஆசிரியர்கள் கையாண்டால் மொழிப்பாடம் கற்பித்தல் உன்னத நிலையை அடையும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் வகுப்புகளை வெற்றுக் கட்டிடங்கள் மட்டும் கேட்கும் நிலை உருவாவது திண்ணம்.

    ______________________________________________
    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
    Malar.sethu@gmail.com

    Share
  • வளவன் கனவு – 9

    சு.கோதண்டராமன்

    பாடலிபுரம்*

     vallavan-kanavu11111

    உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்
    திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்
    எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்
    புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே

                                                                      -சம்பந்தர்

    மாணவர்களுக்கு அன்றைய பாடத்தை முடித்து வீட்டுக்கு அனுப்பி விட்டு, அவர்கள் கொண்டு வந்திருந்த உணவை உண்டார் ஜினசேனர். குண்டிகையிலிருந்து நீரை எடுத்துக் குடித்துவிட்டு நமோ அரிஹந்தானம் என்று சொல்லிக் கொண்டே தூணில் சாய்ந்து உட்கார்ந்தார். வயதாகிவிட்டது, அவரால் முன்பு போல இருக்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாள் இந்த உடம்பைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டுமோ, தெரியவில்லை. சல்லேகனம் (வடக்கிருந்து உயிர்நீத்தல்) செய்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு முன் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன.

    மாலை கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வந்தது. தூணில் சாய்ந்தபடியே சற்றுக் கண்ணயர்ந்தார். காலடிச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டார். நன்றாக இருட்டிவிட்டது. கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. யார் என்று கேட்டார். ‘நமோ அரிஹந்தானம், வணங்குகிறேன் மஹாமுனியே’ என்று பதில் வந்தது.

    “தர்மமித்ரரா, வாருங்கள். உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். யாத்திரை எல்லாம் எப்படி இருந்தது? தர்மம் நன்றாகப் ப்ரவர்த்திக்கிறதா?” என்று கேட்டார்.

    தர்மமித்ரர் படியேறிப் பள்ளிக்குள் வந்தார். மயிற் பீலியால் தரையைத் தடவிவிட்டுக் கையிலிருந்த தடுக்கையும் உறியுடன் கூடிய குண்டிகையையும் கீழே ஒரு புறமாக வைத்தார். பின் மஹாகுருவின் முன்பு உள்ள இடத்தையும் பீலியால் கூட்டிவிட்டு உட்கார்ந்தார்.

    “இந்தச் சோழதேசம் இனி நாம் வசிக்க ஏற்றதல்ல, மகா குருவே.”

    “ஏன், என்ன ஆயிற்று?”

    “காலம் கெட்டுப் போய்விட்டது. பெரியவர்கள் சொல்வதை சிறியவர்கள் கேட்பதில்லை. குரு சொன்னதைச் சீடர்கள் கேட்பதில்லை.”

    “இது எக்காலத்திலும் உள்ளது தானே, இப்பொழுது புதிதாக என்ன நடந்தது? சொல்லுங்கள்.”

    “யாத்திரை போயிருந்த இடத்தில் எல்லாம் கெட்ட செய்திகளாகவே காதில் விழுந்தன. மக்களுக்கு வர வர தர்மத்தின் மீது பிடிப்பு விட்டுப் போய்விட்டது. குருவையே எதிர்த்துக் கேள்வி கேட்கிறார்கள்.”

    “விவரமாகச் சொல்லுங்கள்.”

    “அதிகை என்ற ஊரில் பிட்சைக்குப் போயிருந்தேன். அங்கு பள்ளியில் தங்கியிருந்த சிரமணர் (சமணத் துறவி) ஒருவரும் வந்திருந்தார். ஒரு சிராவகர் (சமண இல்லறத்தார்) வீட்டின் முன் நின்றோம். எங்களைக் கண்டதும் அந்த வீட்டு அம்மாள் உள்ளே சென்று கஞ்சி கொண்டு வந்தார். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த அவரது கணவர் வந்தார். அவர் கையில் ஆட்டு மாமிசம் இருந்தது.

    “இது சிராவகர் வீடு என்றல்லவா நினைத்து வந்தோம்? நீங்கள் சிராவகர் இல்லையா?

    “சிராவகர்தான்.”

    “மாமிசம் சாப்பிடுவதுண்டா? அப்படியாயின் நாங்கள் இங்கே பிட்சை வாங்கக் கூடாது என்றேன்.

    “நீங்கள் எல்லோரும் ரகசியமாக மீன் பிடித்து உண்கிறீர்கள், அகிம்சை உபதேசம் எல்லாம் ஊருக்குத் தானா, உங்களுக்கு இல்லையா என்று கேட்டார்.

    “நாங்கள் மீன் பிடித்ததும் இல்லை, உண்டதும் இல்லையே என்றேன்.

    “நீங்கள் என்றால் உங்களைப் போன்ற சிரமணர்கள் என்று பொருள். பள்ளியில் தங்கும் சில சிரமணர்கள் அருகிலுள்ள வாய்க்காலில் மேலே வரும் மீன்களைக் கம்பால் அடித்துக் கொன்று தின்கிறார்கள். நானே என் கண்ணால் பார்த்தேன். இப்படிச் சில பேர் இந்த ஊருக்கு வந்து போயிருக்கிறார்கள் என்றார். நாங்கள் பிட்சை வாங்காமல் வந்துவிட்டோம்.”

    “அப்படிச் சிலர் இருப்பது பற்றி நானும் கேள்விப்பட்டேன். இவர்களால் நம் தர்மத்தின் பெயர் கெடுகிறது.”

    “இன்னொரு ஊரில் பள்ளியில் தங்கியிருந்தபோது நான்கு சிராவகர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் ஆசாரக் கோவையைப் பாடம் சொல்லவேண்டும் என்று கேட்டு ஓலைச்சுவடியுடன் வந்திருந்தார். நான் சொல்லிக் கொண்டிருந்தபோது ஒருவர் இந்த ஆசாரங்கள் எல்லாம் எதற்கு என்றார்.

    “ஏன், நாம் நல்ல கதி அடையத்தான் என்றேன்.

    “இறந்த பிறகு நாம் எங்கே போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா, நிர்வாணம் என்ற மோட்ச நிலை ஒன்று உண்டு என்பதை எப்படி நம்புவது, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

    “நாம் ஒவ்வொருவரும் அதை நேரடியாக அறியமுடியாது. நமக்காக ஜினர் தவம் செய்து ரத்தினம் போன்ற இந்த உண்மைகளைக் கண்டறிந்தார். அவரைப் பூரணமாக நம்புவதுதான் இதற்கெல்லாம் நிரூபணம் என்றேன்.

    “கடவுளை நேரடியாக அறியமுடியாது என்பதால் கடவுள் இல்லை என்கிறீர்கள். ஒருவர் தவம் செய்து அறிந்து கடவுள் உண்டு என்று சொல்கிறார். அவரைப் பூரணமாக நம்புவதற்கும் ஜினரை நம்புவதற்கும் என்ன வித்தியாசம், எல்லாமே நம்பிக்கைகள்தான்,  எது உண்மை என்றார். எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

    “ஜினரை நம்பினால் கடைத்தேறுவீர்கள். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழல்வீர்கள் என்றேன்.

    “அதற்கு அவர், எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இறைவனுக்கே ஆட்பட்டு இருப்போம். இறைவனிடம் அன்பு செய்வதாக இருந்தால் மீண்டும் பிறப்பது தவறல்ல என்று காரைக்கால் அம்மையார் கூறுகிறார். அவரும் எங்களைப் போலச் சிராவகியாக இருந்தவர்தான். உங்கள் வறட்டு வாதங்கள் எங்களுக்கு மன அமைதி தரவில்லை. என்றோ எங்கோ கிடைக்கப் போகிற முத்தி நிலைக்காக, இன்றைய வாழ்க்கையை இனிமை இல்லாத பாலைவனமாக ஆக்கிக் கொள்ள நாங்கள் சித்தமாக இல்லை என்றார்.”

    “கவலைப்பட வேண்டிய நிலைதான்.”

    “இன்னொரு ஊரில் பிட்சை எடுக்கும்போது, கிட்டே வராதே ஐயா, காலையில் கண் விழித்ததும் பல் கூட விளக்காமல் பிட்சைக்கு வந்து விட்டீர்கள். துர்நாற்றம் வீசுகிறது. மகாவீரர் உங்களைக் குளிக்க வேண்டாம் என்றா சொன்னார். உடம்புக்கு முக்கியத்துவம் கொடுக்காதே என்று அவர் சொன்னதற்கு இதுதான் பொருளா? இரண்டு வேளையும் வயிற்றுக்குக் கொட்டிக் கொள்கிறீர்களே, இது மட்டும் உடம்புக்கு முக்கியத்துவம் கொடுக்காத செயலா என்று கேட்டார்.

    “நாடு எங்கிலும் இது போன்று நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் வடதேசத்திலிருந்து வந்திருக்கின்ற சில பிராமணர்கள்தான். அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பட்டுப் போன வேதத்தை மீண்டும் துளிர்க்கச் செய்ய முயல்கிறார்கள்.”

    “தர்மமித்ரரே, நாம் தர்மத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுள்ளோம். இது போன்ற போக்கை முளையிலேயே கிள்ள வேண்டும். நீங்களும் இந்த மடத்தைச் சேர்ந்த மற்ற சிரமணர்களும் தீவிரமாகத் தர்மப் பிரசாரம் செய்யவேண்டும். ஒவ்வொரு சிராவகரையும் சந்தித்து தர்மத்தை வலியுறுத்த வேண்டும். முன்பு போல பிட்சை வாங்கி உண்டுவிட்டு பள்ளியில் படுத்து உறங்குவது கூடாது. வழியில் சந்திக்கும் அத்தனை சிரமணர்களிடமும் சொல்லுங்கள். நாம் இந்த முயற்சியில் வெற்றி பெறும் வரை நான் என் சல்லேகனத்தை ஒத்தி வைக்கிறேன்.”

    தர்மமித்ரர் சோழநாட்டில் சூறாவளிப் பயணம் செய்தார். சிராவகர்களிடம், “நமது சமயம் ஆபத்தில் இருக்கிறது. இதற்குக் காரணமான வடமர்களை விரட்டுங்கள்” என்றார். வடமருக்கு மான்யம் கொடுத்து வந்த நில உடமையாளர்களிடம் வந்து, “அரசருக்குக் கொடுக்க வேண்டிய வரியை இவர்களுக்குக் கொடுக்கிறீர்களே. இவர்கள் என்ன அரசருக்குச் சமமானவர்களா? இவர்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். அடிமைப்பட்ட அரசர்கள் கைகட்டி நின்று கப்பம் செலுத்துவது போல இவர்களுக்கு நீங்கள் உங்கள் தானியத்தைச் செலுத்துகிறீர்களே, இது தன்மானத்துக்கு இழுக்கு இல்லையா?” என்று உசுப்பிவிட்டார். சோழியப் பிராமணர்களையும் அவர் தன் வலையில் வீழ்த்தினர். “உங்களுக்கு வேலை செய்ததற்குத்தான் ஊதியம் கொடுக்கப்படுகிறது. வடமர்களுக்கோ ஒரு வேலையும் இல்லாமல் மிகுதியான மானியம் கொடுக்கப்படுகிறது” என்றார்.

    சோழநாடு ஒரு சமயப் போருக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது.

    ——- ——————————————- ———————————– —————————————

    *பாடலிபுரம் என்பது திருப்பாதிரிப்புலியூர் (இன்றைய கடலூர் புதுநகர்)

    Share